திங்கள், 16 டிசம்பர், 2024

விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் மட்டும்தான் இனி விதை வாங்க முடியும் -- அரசு ஆணை?

 RS Prabu  :  தமிழ்நாட்டு விவசாயிகள் பன்னாட்டு நிறுவனங்களிடமும், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் மட்டும்தான் இனி வரும் காலத்தில் விதை வாங்கி  விவசாயம் செய்ய வேண்டும் என்பது அரசு ஆணையாக வெளியிடப்பட்டுள்ளது.
வேளாண்மைத்துறை கடந்த மாதம் வெளியிட்ட அரசாணை எண் 249 இதை உறுதி செய்துள்ளது.
இந்த அரசாணை பெரும் கார்ப்பரேட்  நிறுவனங்கள் போட்டியின்றி ஏகபோகமாக விதை வியாபாரம்  செய்வதற்கும், தமிழ்நாட்டு விவசாயிகள் கலப்பின விதைகளுக்காக அவர்களை  நிரந்தரமாகச் சார்ந்திருக்கச் செய்வதோடு மட்டுமல்லாது சிறுகுறு நிறுவனங்களை மொத்தமாக விதை வணிகத்தில் இருந்து வெளியேறவும்  கட்டாயப்படுத்துகிறது.
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் நூலுக்கு case study ஆக இது அமைவது துயரம் என்பதோடு திமுக ஆட்சியில் இப்படி ஒரு அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது ஆகப்பெரும் அவலம்.
இதன் பின்னணியையும் இந்த அரசாணையின் நோக்கத்தையும் கொஞ்சம் விலாவரியாக அலசுவோம்.

சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் முடிவுகள்... முழு விவரம்!

 minnambalam.com - Selvam  : சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தலில் நீதிக்கான கூட்டணி சார்பில் போட்டியிட்ட 11 வேட்பாளர்களில் 10 வேட்பாளர்கள் இன்று (டிசம்பர் 15) வெற்றி பெற்றுள்ளனர்.
பத்திரிகையாளர் நலனை காப்பதை நோக்கமாகக் கொண்டு கடந்த 1972-ஆம் ஆண்டு சென்னை பத்திரிகையாளர் மன்றம் உருவாக்கப்பட்டது.  சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு கடைசியாக கடந்த 1999-ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது.
கடந்த 25 ஆண்டுகளாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில், பதிவுத்துறை சட்டத்தின்படி தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலில் நீதிக்கான கூட்டணி, ஒற்றுமை அணி, மாற்றத்திற்கான அணி என மூன்று அணிகள் களத்தில் இருந்தனர்.

ஞாயிறு, 15 டிசம்பர், 2024

ஆதவ் அர்ஜூனா விசிக்காவில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.

 தினமலர் : அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜூனா பேசிய பேச்சுகளால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அவரின் பேச்சு விடுதலை சிறுத்தைகள், தி.மு.க., இடையே பெரும் உரசலை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் முன்னணி நிர்வாகிகள் இடையேயும் கருத்து முரண்கள் எழுந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து ஆதவ் அர்ஜூனாவை ஆறு மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தாயை கைம்பெண் என்று ஒதுக்கியதால் ஜெயலலிதா மீது கோபம் கொண்ட இவிகேஸ் இளங்கோவன்

May be an image of 2 people

Karuppu Neelakandan :   நாவலர் நெடுஞ்செழியன் இறந்த பிறகு நடந்த அதிமுக பொதுக்குழுவொன்றில் முன்வரிசையில் அமர்ந்திருந்த விசாலாட்சி அம்மையாரும் இளங்கோவனின் தாயாருமான  சுலோச்சனா சம்பத் அவர்களும் 'விதவைகள் முகத்தில் நேரடியாக விழிப்பதை தவிருங்கள்' என ஜோசியக்காரனின் ஆலோசனையின் அவசரமாக ஜெயலலிதா பார்வைக்கு தெரியாத அளவிற்கு மூத்த உறுப்பினர்கள் என்றும் பாராமல் இருவரும்  பின்னிருக்கைக்கு விரட்டியடிக்கப்பட்டனர் என்ற செய்தியை தாயின் வாயிலாகத்தான் அறிந்திருப்பார் என்று நினைக்கிறேன் அதற்கடுத்த வாரங்களில்  காங்கிரஸ் பொதுக்கூட்டங்களிலும் பத்திரிகையாளர் கூட்டங்களில் ஜெயலலிதாவை வைத்து வெளுவெளுவென வெளுத்துக்கட்டினார்.

தமிழ்நாட்டில் 5,000 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Kalaignar Seithigal - Prem Kumar :  தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (14.12.2024) தாம்பரம் சென்னைக் கிறித்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் 45,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள எம்.சி.சி - எம்.ஆர்.ஃஎப் புத்தாக்க (இன்னோவேசன்) பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்டார்.  
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :- “இந்த வளாகம் என்னால் மறக்கமுடியாத ஒரு வளாகமாகும். இந்த வளாகம் என் மனதிற்கு மிக நெருக்கமானதாகும். நான் அமெரிக்கா செல்வதற்காக 1996 இல் இந்த வளாகத்தில்தான்  எனது TOEFL நுழைவுத் தேர்வுகளை எழுதினேன். எனவே இந்த வளாகத்தை இன்னும் நினைவில் வைத்திருக்கின்றேன்.

இளங்கோவன் மறைவு... அஞ்சலி செலுத்த தமிழகம் வரும் ராகுல்

minnambalam.com - Selvam  :  இளங்கோவன் மறைவு… அஞ்சலி செலுத்த தமிழகம் வரும் ராகுல்
காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று (டிசம்பர் 14) காலமானார்.
சென்னை மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.