சனி, 25 செப்டம்பர், 2010

ஆயுதம் விற்றவர்கள் 72 ராணுவ அதிகாரிகள் ; சுப்ரீம் கோர்ட்டில்

புதுடில்லி: ராணுவத்தில் பணியாற்றும் அதிகாரிகள் 72 பேர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆயுதங்களை வெளியாட்களுக்கு விற்று காசாக்கியுள்ளனர். இது தொடர்பாக ராணுவ விசாரணை மைய அதிகாரிகள் விசாரித்து உண்மை நிலையை சுப்ரீம் கோர்ட்டில் ஒப்புதல் பிரமாணம் தாக்கல் செய்துள்ளனர். இந்த விஷயம் மிக சீரியஷான விஷயம் இப்படி நடந்திருக்கும் என எதிர்பார்க்கவில்லை என்று கோர்ட் ஆச்சரியம் தெரிவித்துள்ளது.
ராணுவ தளபதி மற்றும் மூன்று துணை ராணுவ தளபதிகளும் அடங்குவர். ராஜஸ்தான் மாநிலம் எல்லையோர மாவட்டத்தில் பணியாற்றும் நபர்கள் மற்றும் பூடானில் உள்ள இந்தியன் ஆர்மி டிரெய்னிங் டீமை சேர்ந்தவர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.

கர்னல் நீரஜ்ரானா 5 ஆயுதங்கள்,  லெப்டினன்ட் கர்னல் வி.எஸ்,. ரத்தோர் 17 ஆயுதம், லெப்டினன்ட் கர்னல் எஸ்.எஸ்.ரத்தோர், 5 ஆயுதம், பி.எஸ்., ஷெகாவத் 11 ஆயுதங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளது நிருபணமாகியுள்ளது. இவற்றில் 10 ராணுவ அதிகாரிகள் ஓய்வுபெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.25 ராணுவ அதிகாரிகள் பூடான் பகுதியில்உள்ள இந்தியன் ஆர்மி டிரெய்னிங் டீமில் பணிபுரிகின்றனர்.

35 அதிகாரிகள் மற்றும் ஒய்வு பெற்ற 10 அதிகாரிகளை விசாரைணைக்கு அழைக்கப்பட்டு ராணுவ சட்டத்தின்படி விசாரணை நடத்தப்படுவர் என சுப்ரீம் கோர்ட்டுக்கு உத்தரவாதம் அளித்துள்ளது ராணுவவிசாரணை மையம். பொது நல வழக்கை தாக்கல் செய்த சர்மா கூறுகையில் இந்த சட்டவிரோதமான செய்ல் தொடர்பான வழக்கை முக்கியவழக்காக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 
விஜய் - சென்னை,இந்தியா
2010-09-25 15:25:13 IST
இந்தியாவில் இதெல்லாம் பெரிய குற்றமா ? ஆட்சியாளர்கள் செய்த தவறுகளையா இவர்கள் செய்து விட்டனர்....
கண்ணன்.k - Aruppukkottai,இந்தியா
2010-09-25 14:45:52 IST
குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வேண்டாம். உரிமையற்ற அகதிகளாக நம் நாட்டில்தான் வாழவேண்டும். எந்தவித சொத்தும்,குடியுரிமையும் இல்லாமல் . நீர், இடம் , இல்லாமல் . இந்திய அன்னையின் கற்பை விற்ற கவோதிகள் உயிருடன் சாக வேண்டும் ....
கண்ணனுக்கு அண்ணன் - சவுதிஅரேபியா,இந்தியா
2010-09-25 14:32:58 IST
All military people from Top to Bottom, They steal India. How ? from Go-Down they sell all arms to Terrorist outfit and put godown underfire. Steal all important spare parts of Air craft and finally make accident and write in the log book as if spare parts changed. If any good Soldier found these things, kill him in his quarters and declare in public,he was dead while doing excersise or cleaning the weapons. Are you Indians, shame shame and hell should take all you people by making Eathquake or Flash Flood....
ramamurthi - dubai,இந்தியா
2010-09-25 14:29:15 IST
If it is true must be hanged all of them...
ANGEL - AlAin,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-25 14:23:54 IST
ராணுவத்தில் உள்ள சில மானம்கெட்டவர்கள் செய்கின்ற இது போன்ற இழி செயல்களால் நல்லவர்கள் மீதும் சந்தேகபட வேண்டியுள்ளது. ஓரு சொரனை இல்லாத அரசியல் கட்சி நாங்கள் தான் இந்தியாவையும், இந்து மக்களையும் காப்பாற்றுகிறோம் என பீற்றிக்கொள்ளும் இவர்களுக்கு இதுபோன்ற காரியங்கள் அவர்களுக்கு தெரியவில்லையா, இதை செய்தவர்கள் யார் என்பதை மடையர்கள் புரிந்து கொள்ளட்டும்!...
கார்த்தி கா மேல்மலையனூர் - மேல்மலையனூர்,இந்தியா
2010-09-25 14:20:05 IST
இந்தியன் எதற்கும் துணிந்தவன் என்பதையே காட்டுகிறது...
முக்குந்தன் - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-25 14:12:01 IST
இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்பில் அனைத்துமே ராணுவத்தில் பயன் படுத்தக்கூடியவை என்று பல முறையில் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்பதுதான் எதார்த்த உண்மை ....
muthukkumaraswamy - dubai,இந்தியா
2010-09-25 14:03:19 IST
கூடிய சீக்கிரம் இந்தியாவை இந்த அரசு மத்த நாட்டுக்கு வித்து காசாக்கி விடுவாங்க போல....
nalavirumpi - riyadth,சவுதி அரேபியா
2010-09-25 13:55:01 IST
நாம பேசி பேசி அழிந்து கொண்டு வருகிறோம். இவர்கள் ஆயுதங்களை வெளி நாட்டுக்கு விற்றார்களா அல்லது இந்திய எதிரிகளுக்கு விற்றர்களா .அல்லது நம் நாட்டு காவி திவிரவதிக்கழுகு. இவை அனைத்தும் நம் நாடு அழிவதற்கு வழிவகுக்கும். இவர்களை thugkilitawentum . அனைத்து சட்டங்களும் திருதபட வேண்டும் . அரசியல்,பொது, அனைத்திலும் இலைஞர்கள் வர வேண்டும் . அப்பத்தான் நம் நாடும் காப்பாத்தப்படும் ...............
tamilan - uae,இந்தியா
2010-09-25 13:43:51 IST
இவனுங்கள எல்லாம் நாடு கடத்தனும். திருட்டு பசங்க...
syed - riyadh,சவுதி அரேபியா
2010-09-25 13:25:56 IST
வெளங்கிடும் இந்தியா. நம் நாட்டில் எதுவும் செய்யலாம். தண்டனை ஒன்னும் இல்லை. இதைவிட கேவலம் ஒன்றும் இல்லை....
கிருஷ்ணா - Riyadh,சவுதி அரேபியா
2010-09-25 12:53:52 IST
லஞ்சம் கொடுத்து வேளையில் சேருவது ராணுவத்திலும் இருக்கிறது. அப்படி serubavargal நாட்டை எப்படி kaappar? மேல்மாட்டதில் மட்டும் alla, கீழ் நிலையில் உள்ள டிரைவர்கள்,ராணுவ ரேஷன் அதிகாரிகள், சிப்பாய்கள் என anaithu பிரிவினரும் தங்களால் ஆனா மட்டும் கொள்ளை அடிக்கின்றனர். ஒவ்வொரு ராணுவ வீரரும் oorukku வரும்போது பார்த்தல் தெரியும் avargal தாங்கள் பனி புரியும் idathil இருந்து என்ன என்ன பொருட்களை தூக்கி கிண்டு வந்தனர் என்பது. !!! இதில் இவர்களை தூக்கி வைத்து கொண்டாட்டம் வேறு...நாட்டை காக்கிறார்கள் என்று..... போங்கடா டேய் போய் பிள்ளை குட்டிகள padikka வச்ச லஞ்சம் குடுத்து வேலைக்கு சேர்த்துவிட்டு எப்படி லஞ்சம் vaangurathunu கத்து குடுங்கdaaa.......
கே seshadri - chennai,இந்தியா
2010-09-25 12:41:12 IST
The true citizens of India. Probe results may get extended to link with some political heads. Now a days no b(l)ody is honest to the services what they are selected for. It spread in all the field right from gvot, judiciary, defence .....etc. Shame for the nation and ther is no fool proof system to trace it at the earlier stages. The deal was going on for quite some time unnoticed. God only can save India from the clutches of these type of greedy....
கே.ஜீவிதன் - villupuram,இந்தியா
2010-09-25 12:39:30 IST
அரசியல்வாதி ஆயிற்று; காவல்துறை ஆயிற்று; நீதித்துறை ஆயிற்று; இப்போது ராணுவமும் ஊழலில்; கலாம் அவர்களே, நிஜமாக சொல்லுங்கள், இந்தியா வல்லரசாகுமா? வெறும் பகல் கனவுதானா?...
MARAKAYAR - riyadh,சவுதி அரேபியா
2010-09-25 12:38:45 IST
வேலியே பயிரை மேய்கின்றது. அரசாங்க பதவியில் இருக்கும் அதிகாரிகளை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் ,...
venkat - mahalapye,போஸ்ட்வானா
2010-09-25 12:07:34 IST
நம்ம நாடு எப்ப தண்டனையே உடனை செய்ய போகுது? இதை இழு இழு என இழுத்து கடைசியில் ஒன்னும் ஆக போவது இல்லை .விப்பவர்கள் தாரளமா தொழிலை செய்யலாம். இன்னும் 30, 40 வருடம் கழித்து தீர்ப்பு சொல்வார்கள் சோ டோன்ட் வொரி .எப்போ இந்தியன் வெக்கபட போறான்? நம்ம நீதிபதிகள் எப்போ மக்களோடு மக்களாக சிந்திப்பார்கள். நல்ல சம்பளம் பாதுகாப்பு பிறகு என்ன அவர்களுக்கு....
ராதா கிருஷ்ணன் - chennai,இந்தியா
2010-09-25 11:41:39 IST
நமது கல்வியில் இறை பக்தி , தேச பத்தி எள்ளளவும் இல்லை. அனைத்திலும் பணம் சம்பாதிக்கும் முறைகளே உள்ளன. எனவே அனைவரும் அனைத்திலும் பணம் சம்பதிக்கின்றனர். தப்பு முதலில் எங்கிருந்து ஆரம்பிகிறது என்பதை கண்டு கொண்டு முதலில் அதை நிவர்த்தி செய்யுங்கள், இல்லையெனில் இதுபோலே தவறுகள் தொடரும் ஜெய் ஹிந்து ....
2010-09-25 11:22:38 IST
அன்புள்ள பாவப்பட்ட இந்தியர்களே...!!! நம் நாடு எங்கே சென்றுகொண்டிருக்கிறது.. எவ்வளவு கீழ்த்தரமான செயல்களை செய்யமுடியுமோ அவ்வளவும் செய்தாயிற்று. எவருக்கு தெரியும் நம் இந்தியாவை யாரேனும்(அரசியல்வாதி / இராணுவ அதிகாரிகள்) வெளிநாட்டவருக்கு விற்றிருக்கலாம். i feel shame that we are having very worst goverments in central as well as state. i want to kill each one who is doing this kind of bull shit......
அரசிளங்குமரன் - Tanbaram,இந்தியா
2010-09-25 11:12:56 IST
என்ன அநியாயம். வேலியே பயிரை மேய்வதா? இராணுவ அதிகாரிகளே தேசதுரோக செயல்களுக்கு துணை போவதா ?? இவர்களை விசாரித்து குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கவேண்டும்.... ஆ .....ரத்தம் கொதிக்குதே . . ....
Kim - Tn,இந்தியா
2010-09-25 11:08:57 IST
ஹ ஹ ஹ ஹ ஹா எல்லோரும் நல்லt சிரிங்க. சிரிச்சுட்டு காரி துப்புங்க இவனுக மேல...
நௌஷாத் - மேலப்பாளையம்,இந்தியா
2010-09-25 11:01:32 IST
இது என்ன பெரிய செய்தி நம் நாட்டை சீனக்காரன் கொஞ்சம் கொஞ்சமாக அபகரிக்கிறான். அபாயம் மிகுந்த மின் கழிவுகளை பொடியாக்கி விமானத்தில் இருந்து தூவுகிறான். இந்திய அரசு, மிலிட்டரியிடம் கண்டுகொள்ளாதே என்றும் அந்த இடத்தை விட்டு நகருமாறும் கட்டளை இடுகிறது. வோட்டுக்காக காலம் காலமாய் பாகிஸ்தான், பாகிஸ்தான் தீவிரவாதம் என்று பேசியே ஏகப்பட்ட பகையை சம்பாதித்து விட்டோம். நம்மை சுற்றியும் நாலா புறமும் எதிரிகள். நம்மால் இனி பாகிஸ்தானையோ பங்கள்தேஷையோ ஸ்ரிலங்காவையோ நேபாளதையோ ஏன் பூடானைகூட மிரட்ட முடியாது. ஏன் என்றால் எல்லா நாட்டிலும் சீனாக்காரன் உள்ளான். இதை தான் முன்னர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் சொன்னார் நமக்கு உண்மையான எதிரி சீனாதான் என்று....

ஆஸ்கர் போட்டிக்கு அமீர்கான் தயாரித்த 'பீப்ளி லைவ்' தேர்வு

அமீர்கான் தயாரித்து சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பீப்ளி லைவ் இந்திப் படம், இந்தியாவின் சார்பில் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகியுள்ளது.

சமீபத்தில் பிரதமர் மன்மோகன்சிங், பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோர் பார்த்து ரசித்த படம் இந்த பீப்ளி லைவ். இந்தியாவின் அடிமட்ட விவசாயிகளின் அவலத்தைச் சொன்ன படம் இது. ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு இந்திய திரைப்பட சம்மேளனம் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றிய விவரங்களை சென்னை பிலிம்சேம்பரில் நேற்று இரவு நடந்த கூட்டத்தில், ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை கமிட்டி தலைவர் கே.எஸ்.சேதுமாதவன் வெளியிட்டார்.

சிங்கத்தையும் பரிசீலித்த கமிட்டி:

மேலும் அவர் கூறுகையில், "ஆஸ்கர் விருதுக்கான வெளிநாட்டு பட பிரிவுக்காக சிங்கம், அங்காடி தெரு, மதராச பட்டினம், விண்ணைத்தாண்டி வருவாயா, பா (இந்தி), பீப்லி லைவ் (இந்தி), பழசிராஜா (மலையாளம்) உள்பட மொத்தம் 27 படங்கள் பரிசீலிக்கப்பட்டன.

இறுதியில், இந்திய விவசாயிகளின் அவலநிலையை மிக யதார்த்தமாகவும், நகைச்சுவையாகவும் சித்தரித்து இருந்த பீப்லி லைவ் (இந்தி) படம், ஆஸ்கர் போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டது...,'' என்றார்.

அப்போது இந்திய திரைப்பட சம்மேளன தலைவர் எல்.சுரேஷ், பட அதிபர்-இயக்குநர் ரவி கொட்டாரக்கரா, பிலிம்சேம்பர் செயலாளர் கே.எஸ்.சீனிவாசன், இயக்குநர்கள் எஸ்.கிருஷ்ணசாமி, ஏ.எஸ்.பிரகாசம், மனோஜ்குமார், பட அதிபர் காட்ரகட்ட பிரசாத், பாடல் ஆசிரியர் மற்றும் இயக்குநர் கங்கை அமரன் ஆகியோர் உடனிருந்தனர்.

400 வாகனங்கள் தெற்கில் களவாடப்பட்டு வன்னிக்குக் கொண்டு செல்லப்பட்டுத்

முள்ளிவாய்க்காலில் கைவிடப்பட்டுள்ளப்படவுள்ளன.
தெற்கில் களவாடப்பட்டு வன்னிக்குக் கொண்டு செல்லப்பட்டுத் தற்போது கைவிடப்பட்ட நிலையில் உள்ள வாகனங்களின் உரிமையாளர்களைக் கண்டறிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இறுதி யுத்தத்தின் போது கைவிடப்பட்ட வாகனங்களுள், தெற்கிலிருந்து களவாடிச் செல்லப்பட்ட பெருமளவு வாகனங்கள் உள்ளதாகவும், அவை போலி ஆவணங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் முல்லைத்தீவு 59 ஆம் படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி கேணல் ஆரியசிங்க தெரிவித்தார்.
இந்த வாகனங்கள் மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்த அவர், இதனால், சிலர் வேறு நபர்களுக்குச் சொந்தமான வாகனங்களைச் சொந்தமாக்க முயற்சிப்பதாகவும், மற்றவர்களின் சொத்துக்களைக் கைப்பற்ற முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவிற்கு முல்லைத்தீவில் இந்தத் தகவல்களைக் கூறிய கேணல் ஆசிரியசிங்க, முள்ளிவாய் க்காலில் கைவிடப்பட்டுள்ள வாகனங்க ளைக் காட்சிப்படுத்துவதற்கு ஐந்து இட ங்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறு கைவிடப்பட்ட சுமார் 400 வாகனங்களைக் கொண்டு வந்திருப்பதாகத் தெரிவித்த அவர் அவற்றை மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்கள அதி காரிகள் மற்றும் அரசாங்க அதிபர் உள்ளிட்டோர் முன்னிலையில் உரியவர்களுக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Delhi 2010:சாப்பாட்டுக்கே வழியில்லாத கோடிக்கணக்கான ஏழைகள் அடுத்த வேளைக்கு என்ன செய்வது

கற்க வேண்டிய புதிய பாடம்...
அருண் நேரு
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளும் அதனுடன் சம்பந்தப்பட்ட செய்திகளும் மற்ற எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டன என்றால் மிகையில்லை. இந்த விளையாட்டுக்காக மிகக் குறுகிய காலத்தில் செய்யப்பட்ட பல சாதனைகளை எல்லாம் மறக்கும் அளவுக்கு, இந்த ஏற்பாடுகளில் உள்ள குறைகளும் சில அசம்பாவிதச் சம்பவங்களும் பெரிதாகப் பேசப்படுகின்றன. தலைநிமிர்ந்து பூரிக்க வேண்டிய நாம் தலைக்குனிவுடன் பேச வேண்டிய சோகத்துக்கு ஆளாகியிருக்கிறோம்.

 புதுதில்லியில் மிகப்பெரிய விமான நிலையத்தையும் மெட்ரோ ரயில் என்கிற நவீன ரயில் போக்குவரத்தையும் சர்வதேச தரத்தில், குறிப்பிட்ட காலத்தில் நிர்மாணித்திருக்கிறோம். கட்டிலில் நாய் படுத்திருப்பதையும் கக்கூஸ் கழுவப்படாததையும் விளையாட்டரங்கின் ஒட்டுக்கூரையிலிருந்து 2 அட்டைகள் பெயர்ந்து விழுந்ததையும் பெரிதாகப் பேசி நம்முடைய மானத்தை வாங்குகின்றனர் நாக்கிலே நரம்பில்லாதவர்கள். இந்தக் கோளாறுகளுக்கெல்லாம் பொதுப்பணித்துறைதான் காரணம், இல்லையில்லை தில்லி மாநில அரசுதான் காரணம், விளையாட்டுத் துறைதான் காரணம், விளையாட்டுப் போட்டி அமைப்புக்குழுதான் காரணம் என்றெல்லாம் மாற்றிமாற்றி பழி சுமத்தப்படுகிறது.
 உண்மை என்னவென்றால், தில்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை 2010-ல் நடத்துவது என்று 2003-லேயே தீர்மானித்துவிட்டு 2008 வரையில் எதுவுமே செய்யப்படவில்லை. இந்த வேலைகள் எல்லாம் மத்திய அமைச்சர்கள் குழுவிடம் விடப்பட்டது.

 இதை யார் செய்வது, எப்படிச் செய்வது என்று அமைச்சர்கள் தங்களுக்குள் சச்சரவு செய்துகொண்டிருந்த நேரத்தில் அவை தொடர்பான கோப்புகள் தூங்கிக்கொண்டிருந்தன.

 திடீரென விழித்துக் கொண்ட அரசு, போட்டிக்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு சம்பந்தப்பட்ட துறைகளைக் கேட்டுக்கொண்ட பிறகு, கறைபடிந்த நிர்வாக அமைப்பின் மூலம் காரியங்களைச் செய்யத் தொடங்கினர். முடிவெடுக்கத் திணறும் அமைச்சர்களின் மெத்தனங்களால் அடுத்தடுத்து தவறுகளாகவே நடக்கின்றன. இத்தனைக்குப் பிறகும் எல்லாம் நன்றாகவே இருக்கிறது, எதிலும் குறை இல்லை என்ற பதிலையே அரசிடமிருந்து நாம் எதிர்பார்க்க முடியும்.

 சாப்பாட்டுக்கே வழியில்லாத கோடிக்கணக்கான ஏழைகள் அடுத்த வேளைக்கு என்ன செய்வது என்று கையைப் பிசைந்துகொண்டிருக்கும் வேளையில் அரசுக்கு நெருக்கமான இடத்தில் இருக்கும் சிலர் கோடிக்கணக்கான ரூபாய்களைத் தண்ணீராகச் செலவழித்துக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. இந்த நிலையில் மெஹ்ரூலியில் விளையாட்டு வீரர்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட விடுதிகளில் உள்ள கட்டில்களில் தெரு நாய்கள் நிம்மதியாகப் படுத்து ஓய்வெடுப்பதில் வியப்பு என்ன இருக்க முடியும்? மெஹ்ரூலிப் பகுதியில் தெரு நாய்கள் மட்டும் அல்ல மட்டக் குதிரைகள் என்று அழைக்கப்படும் கழுதைகள், மாடுகள், ஏராளமான குரங்குகள் எப்போதும் சுற்றிக்கொண்டே இருக்கும். வயதாகிவிட்ட ஒரு ஒட்டகம்கூட கவனிப்பாரில்லாமல் அங்குமிங்கும் இரைதேடி அலைந்துகொண்டே இருக்கும்.

 தில்லிக்கு அருகிலேயே இருந்தாலும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள கிராமங்கள் படும் இன்னல்கள் அனைத்தும் இந்த கிராமத்துக்கும் உண்டு. இவையெல்லாம் நாம் அறியாததா? பத்திரிகைகளில் புகைப்படங்களுடன் செய்தி வரும்போது மட்டும் ஏதோ புதிதாக இதையெல்லாம் கேள்விப்படுவதைப்போல நாம் ஏன் நடிக்க வேண்டும்?

எது எப்படியோ, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை முறையாகச் செய்யாமல், ஊழலுக்கும் தரம் குறைந்த வேலைகளுக்கும் மிகவும் இடம் அளித்துவிட்டோம். இதனால் அரசுக்கு கெட்ட பெயரும் பெருத்த அவமானமும் சர்வதேச அளவில் ஏற்பட்டுவிட்டது. எதைச் சொன்னாலும் மக்கள் நம்பிவிடுவார்கள் என்று மட்டும் ஆள்வோர்கள் நினைக்கக்கூடாது.

 99% வேலைகளை முடித்துவிட்ட நிலையில் சில குடியிருப்புகளில் குழாய்களில் தண்ணீர் வரவில்லை, கதவுகளைப் பொருத்தவில்லை, பாத்ரூம்கள்  கழுவப்படவில்லை என்பதற்காக நமக்கு அவமானம் ஏற்பட்டுவிடக்கூடாது. எஞ்சிய பணிகளை போர்க்கால அடிப்படையில் தரமாக செய்து முடிக்க வேண்டும்.

 பொதுப்பணித்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டியும் விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ். கில்லும் இரவு பகல் பாராமல் விளையாட்டு கிராமத்திலேயே முகாமிட்டு எல்லாப்  பணிகளையும் நேரடியாக மேற்பார்வை செய்து முடித்தாலும் தவறில்லை.

நம்முடைய கட்டுப்பாட்டிலேயே இல்லாத இயற்கையும் சேர்ந்து சதி செய்து தில்லி மாநகரமே வரலாறு காணாத மழையாலும் வெள்ளத்தாலும் தத்தளிக்கிறது. திட்டமிட்டபடி வேலைகள் நடக்காததற்கு இதுவும் முக்கிய காரணம். வட இந்தியாவின் பல மாநிலங்களில் இப்போது காணப்படும் மழையாலும் வெள்ளத்தாலும் ஏராளமான கிராமங்களும் பெரு நகரங்களும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

 இந்தக் கட்டுரையை எழுதும் இந்த நேரம் தில்லியில் நல்ல வெயில் அடிக்கிறது. இனி வரும் நாள்களில் மழை குறைந்து வெயில் அடித்து நிலைமை மேம்படும் என்று நம்பலாம். இந்த நேரத்தில் மழையாலும் வெள்ளத்தாலும் பாதிப்பு அடைந்தோருக்கு நம்முடைய அனுதாபங்கள்.

 விளையாட்டு கிராமத்தைச் சுத்தப்படுத்தி விளையாட்டுக்கு தயார் செய்யட்டும், விளையாட்டும் நல்லபடியாக நடந்தேறட்டும். இந்தப் போட்டிகளிலிருந்து விலகுவது என்ற முடிவுக்கு வராமல் எல்லா நாடுகளும் எல்லா வீரர்களும் இதில் பங்கேற்றுப் பரவசம் அடையட்டும் என்று பிரார்த்தனை செய்வோம்.

 இந்த நாட்டுக்குள்ள நல்ல பெயரை ஒரு சிலர் சேர்ந்து கெடுப்பதற்கு நாம் அனுமதித்துவிடக்கூடாது. இந்தக் கோளாறுகளுக்கெல்லாம் யார் காரணம் என்று அரசியல்ரீதியாக விவாதிக்க இது தருணம் அல்ல; ஆனால் இதற்கான பொறுப்பு முழுக்க முழுக்க நாட்டின் அரசியல் தலைமையையே சாரும்.  

 கடந்த பத்தாண்டுகளில் நம் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம் 8% அல்லது அதற்கும் மேலாகவே இருந்து வருகிறது என்ற சாதனைகளையெல்லாம் இந்த விளையாட்டுப் போட்டிக் குளறுபடிகள் மறக்கச் செய்துவிட்டதே என்று நினைக்கும்போது கோபம் அதிகரிக்கவே செய்கிறது.

இந்த வளர்ச்சியை அடைய நம் முன்னோர்கள் எத்தகைய அடித்தளங்களை நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள்? சர்வதேச அளவில் தொழில் முதலீட்டுக்கு உற்ற நாடாக இருக்கிறோம் என்பதால்தான் பல வெளிநாட்டு நிறுவனங்கள் நம்மைத் தேடி வருகின்றன; நம் நாட்டவர்கள் திறமையானவர்கள் என்பது எல்லா துறைகளிலும் சர்வதேச அளவில் இப்போது நிரூபிக்கப்பட்டு வருகிறது.
 இந்தப் பின்னணியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளைப் பார்ப்போம். 2008 வரை காத்திராமல் 2006-லேயே தொடங்கியிருந்தால் விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்குவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே எல்லாம் தயாராக இருந்திருக்கும். எனவே இந்த அவமானத்தை நாம் அனைவரும் தாங்க வேண்டிய அவசியமே இல்லை. எனவே இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை தேவை, அது அதிகாரபீடத்தின் உச்சியில் இருப்பவர்களிடமிருந்து தொடங்கப்பட வேண்டும்.

 இந்தப் பாடத்தை நாம் எப்போதும் மறக்கக்கூடாது. இனி இப்படியொரு அவமானம் நம் நாட்டுக்கு எப்போதுமே ஏற்படக்கூடாது.
-Dinamani -

Douglas'sஅமைச்சுப் பொறுப்பைப் பிரதியமைச்சர் சத்தியப் பிரமாணம் செய்து ஏற்றுக்கொண்டுள்ளார்

யாழ்ப்பாணம் தனிநாடா? ரவி கருணாநாயக்கவின் சந்தேகம்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் சென்றதற்காக பிரதியமைச்சர் அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்துள்ளார். அவ்வாறெனில் யாழ்ப்பாணம் ஒரு தனிநாடாவென ஐ.தே.க. எம்.பி. ரவி கருணாநாயக்க சபாநாயகரிடம் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை எழுப்பப்பட்ட ஒழுங்குப் பிரச்சினையொன்றின்போதே ரவி கருணாநாயக்க இவ்வாறு கேள்வியெழுப்பினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது;ஒரு அமைச்சர் வெளிநாடுசெல்லும்போதுதான் அவரின் அமைச்சுப் பொறுப்புக்குப் பிரதியமைச்சர் நியமிக்கப்படுவதும் அவர் சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்பதும் வழமை. ஆனால், பாரம்பரியக் கைத்தொழில்கள்,சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் சென்றதற்காக அவரின் அமைச்சுப் பொறுப்பைப் பிரதியமைச்சர் சத்தியப் பிரமாணம் செய்து ஏற்றுக்கொண்டுள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா அமெரிக்கா செல்லவுள்ளதாலே இப்பதவிப் பிரமாணம் எனக் கூறப்பட்டது. ஆனால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமெரிக்கா செல்லவில்லை. யாழ்ப்பாணம் தான் சென்றார். அவ்வாறானால் யாழ்ப்பாணம் ஒரு தனிநாடா? அரசாங்கம் யாழ்ப்பாணத்தைத் தனிநாடாக ஏற்றுக்கொண்டுவிட்டதா? என்பது தொடர்பில் சபாநாயகர் தெளிவுபடுத்த வேண்டும். அத்துடன், இன்று ஒரு அமைச்சுக்கு இரு அமைச்சர்கள் உள்ளனர். இதில் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரா அல்லது அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள பிரதியமைச்சர் அமைச்சரா என்பதையும் கூற வேண்டும் என்றார்.இதற்குப் பதிலளித்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ. இது தொடர்பில் தனக்கு எந்தவித அறிவிப்புகளும் வரவில்லை என்று கூறினார்

42 நிவாரணக் கிராமங்கள் மூடப்பட்டன


வட பகுதியில் அமைக்க்பட்டிருந்த 47 நிவாரணக் கிராமங்களில் 42 நிவாரணக் கிராமங்கள் இதுவரையில் மூடப்பட்டுள்ளதாக வடக்கு மீள்குடியேற்றத்திற்குப் பொறுப்பான மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்தார். யுத்தம் உக்கிரமடைந்த கடந்த 2009ஆம் ஆண்டில் அரசாங்கம், 3 லட்சம் மக்களின் நன்மைக்கென இந்த நிவாரணக் கிராமங்களை அமைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் போது இடம்பெயர்ந்தவர்களில் 2 லட்சத்து 65 ஆயிரம் பேர் இதுவரை மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கான சகல நிவாரணங்களும் வழங்கப்பட்டு வருவதாகவும் கமல் குணரட்ன கூறியுள்ளார். மேலும் இடம்பெய்ர்ந்து நிவாரணக் கிராமங்களில் வசிக்கும் எஞ்சியுள்ள மக்களை இந்த வருட இறுதிக்குள் மீள்குடியமர்த்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இன்னும் 27 ஆயிரம் அகதிகள் மீள்குடியமர்த்தப்படவுள்ளதாகவும், அவர்களில் 10 ஆயிரம் பேர் நிவாரண கிராமங்களில் வசித்து வருவதாகவும் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.

பெண்களிடம் வழிப்பறிக் கொள்ளை! யாழ்.தமிழர் சென்னையில் கைது


by teavadai.wordpress.com
இந்தியாவின் சென்னை புறநகரில் பெண்களிடம் கத்தியை காட்டி வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நடுத்தர வயது உடைய யாழ்ப்பாண தமிழர் ஒருவர் மடிப்பாக்கம் பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் தனிப்படை அமைத்துப் பிடிக்கப்பட்டுள்ளார்.
43 வயது உடைய ஜெயசிங்கம் என்பவரே கைது செய்யப்பட்டவர் ஆவார்.  சென்னையை அடுத்த மடிப்பாக்கம், பழவந்தாங்கல், நங்கநல்லூர் போன்ற பகுதிகளில் தனியாக செல்லும் பெண்களிடம் கத்தியை காட்டி  ஒருவர் வழிப்பறி செய்கின்றார் என்று புறநகர்ப் பொலிஸாருக்கு புகார்கள் வந்தன.
இவ்வழிப்பறி கொள்ளைக்காரனைப் பிடிக்க புறநகர் பொலிஸ் ஆணையாளர் எஸ்.ஆர்.ஜாங்கிட் உத்தரவின் பேரில், பரங்கிமலை துணை ஆணையாளர் வரதராஜன் மேற்பார்வையில், மடிப்பாக்கம் உதவி ஆணையாளர் கலியதீர்த்தன் தலைமையில், மடிப்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் குமாரவேலுவையும் உள்ளடக்கியதாக தனிப்படை அமைக்கப்பட்டது.
இத்தனிப்படையினர் புழுதிவாக்கம் பாலாஜி நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிள் ஒன்றில் வேகமாக வந்த நடுத்தர வயதுக்காரர் ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகக் கொண்ட ஜெயசிங்கம் என்கிற இந்நபர் கடந்த சில நாட்களாக ஆதம்பாக்கம், நங்கநல்லூர், மடிப்பாக்கம், உள்ளகரம் போன்ற பகுதிகளில் தனியாக சென்ற பெண்களிடம் கத்தியை காட்டி வழிப்பறி செய்தமையை ஒப்புக்கொண்டார். இவர் ஏற்கனவே ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் திருட்டுக்களில் ஈடுபட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்து உள்ளார்.
இவரால் வழிப்பறி கொள்ளை செய்யப்பட்ட சுமார் 4 இலட்சம் இந்திய ரூபாய் மதிப்புள்ள 25 பவுன் தங்க நகைகள் இவரின் உடைமையில் இருந்து மீட்கப்பட்டன. பின்னர் ஜெயசிங்கம் ஆலந்தூர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

உடலை விட்டுப் பிரிந்த பின்னர், காண, கேட்க, பேச, புரிந்து கொள்ள முடிகிறது

உடலை விட்டு வெளியேறும் ஆத்மா
மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்கள். அவை Out of body experiences (OBE) என்ற பெயரில் பல்வேறு நாடுகளில் ஆராயப்பட்டு வருகின்றன. முதலில் 1960 களில் டாக்டர் சார்லஸ் டார்ட் (Dr. Chares Tart) என்பவர் இது குறித்து நம்பத்தகுந்த ஆராய்ச்சிகள் செய்து சிலருக்கு அந்த சக்தி உள்ளது என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார். 
உண்மையாக உடலை விட்டு வெளியே சென்றதாக நம்பப்பட்ட மனிதர்களின் அனுபவங்களைக் கேட்ட போது பலரும் மூன்று விஷயங்களை ஒருமித்து சொன்னார்கள். உடலை விட்டு வெளியேறிய பின்பும் எதோ ஒரு அபூர்வ சக்தியையும், சில அதிர்வலைகளயும் தாங்கள் உணர்ந்ததாகச் சொன்னார்கள். விசித்திரமான பலத்த சத்தங்களைக் கேட்டதாகச் சொன்னார்கள். தங்கள் உடல்களையும் மற்றவர்களையும் தெளிவாகக் காண முடிந்ததாகச் சொன்னார்கள்.

ஆதாரபூர்வமான மரண விளிம்பு அனுபவ ஆராய்ச்சிகளின் மூலம் உடலை விட்டு வெளியேறியவுடன் மனிதனால் கண்களின் உதவியில்லாமலேயே காண முடிகிறது, காதுகளின் உதவியில்லாமலேயே கேட்க முடிகிறது, மொழியின் உதவியில்லாமலேயே பேச முடிகிறது என்பதை தெளிவாக நாம் அறிந்தோம். அந்த ஆராய்ச்சிகளில் பங்கு கொண்ட மனிதர்கள் மகான்கள் அல்ல, அபூர்வ சக்தியாளர்கள் அல்ல, வாழ்ந்த காலத்தில் ஆழ்மன சக்திகளில் நாட்டம் கொண்டவர்களும் அல்ல. நாம் நம் வாழ்க்கையில் அடிக்கடி சந்திக்க முடிந்த சாதாரண மனிதர்கள். ஆனாலும் அவர்களால் கூட உடலை விட்டுப் பிரிந்த பின்னர், காண, கேட்க, பேச, புரிந்து கொள்ள முடிகிறது என்பது தான் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய செய்தி. மரண விளிம்பு அனுபவமல்லாத பிற உடலை விட்டு வெளியேறிய அனுபவ ஆராய்ச்சிகள் கூட இதையே தான் உறுதிபடுத்துகின்றன என்பதையும் பார்த்தோம். 
ஆழ்மன சக்திகள் மனிதனுக்கு இயல்பானவை. மேல்மட்ட மன நிலையிலேயே மேற்போக்காய் வாழ்ந்து பழகிய மனிதன் ஆழத்தில் புதைந்து இருக்கும் தன் இயல்பான சக்திகளை அறியாமலேயே வாழ்கின்றான். ஐம்புலன்கள் வழியாகவே எதையும் அறிந்து பழகி விட்ட அவனுக்கு பயன்படுத்தாமல் இருக்கின்ற ஆழ்மன சக்திகள் மேல்மட்ட மனநிலைக்கு அற்புதங்களாகவே தெரிகின்றன.

ஆழ்மன சக்தியைப் பயன்படுத்தி நோய்களைக் குணமாக்க முடியும், தூரத்தில் இருப்பவர்களுக்கு செய்தியை அனுப்பவும் பெறவும் முடியும், தொடாமலேயே பொருள்களைப் பாதிக்க முடியும், உடல் மீது முழுக் கட்டுப்பாடு வைத்துக் கொள்ள முடியும், மற்றவர்கள் எண்ணங்களில் ஆதிக்கம் செலுத்த முடியும், கடந்த கால, நிகழ் கால, எதிர் கால நிகழ்ச்சிகளை அறிய முடியும், உடலை விட்டு வெளியேறி சஞ்சரிக்க முடியும்.

ஆழ்மன சக்தியை அடையத் தடையாக இருப்பவை அவநம்பிக்கையும், அவசரமும், அமைதியின்மையும். அவற்றை விலக்கினால் ஒழிய ஆழ்மன சக்திகள் சாத்தியப்படுவது கஷ்டம்.

ஆழ்மன சக்திகள் கைகூடுவது மேல்மன சலசலப்புகள் குறைந்து ஆழ்மன எல்லைக்குள் நுழையும் போது தான். கிட்டத்தட்ட எல்லா ஆழமன சாதனையாளர்களும் அப்படிச் சென்றே அற்புத சக்திகளைக் காட்டி இருக்கிறார்கள். மேல்மனதின் பரபரப்பும், சலசலப்பும் குறைந்து ஆழ்மன எல்லைக்குச் செல்ல தியானம் மிகவும் உதவுகிறது. தியானத்தில் மனதை லயிக்கச் செய்து பழக்குவது ஆழ்மன சக்தியை உணரவும், பயன்படுத்தவும் மிக முக்கிய பயிற்சியாகும். தியானத்தின் மூலம் ஆல்ஃபா, தீட்டா அலைகள் கொண்ட அமைதியான மனநிலைக்குச் சென்றால் எல்லா உண்மைகளை உணரவும் முடியும், சக்திகளைப் பெறவும் முடியும்.

நாம் அடுத்த பயிற்சிக்குச் செல்லும் முன் இதை எல்லாம் மனதில் மீண்டும் ஒரு முறை வலியுறுத்திக் கொள்வது நல்லது. அடுத்த பயிற்சிக்குச் செல்வோமா?மேலும் ஆழமாகப் பயணிப்போம்.....(தொடரும்)- என்.கணேசன்
www.enganeshan.blogspot.com

30 க்கும் மேற்பட்டப் படங்கள் எந்திரனால் தியேட்டர் கிடைக்காமல் காத்திருக்கின்றனவாம்.

எந்திரனால் வந்த நெருக்கடி... 


        ‘உற்சவம் வரும்வரை சாமியும் கருவறையில்தான், தேரும் தெருவரைதான்’ என்ற நிலையில் உள்ளனவாம் தற்போது வெளியாகவிருக்கும் சில தமிழ்ப் படங்கள். 

‘எந்திரன்’ இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர் உட்பட உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் அக்டோபர் 1ல் வெளியாகிறது. 

அந்தவகையில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் அமெரிக்காவில் வெளியாகும் முதல் இந்திய திரைப்படம் என்றப் பெருமையை பெற்றுள்ளது எந்திரன். 

உலகமெங்கும் எதிர்பார்த்த ஒரு படம் வெளியாகிறது என்ற சந்தோஷம் ஒருபக்கம் இருந்தாலும், எந்திரன் வெளியாவதில் சில வருத்தங்களும் இல்லாமல் இல்லை.

பொதுவாகவே, எந்த ஒரு பெரிய நடிகர்களின் படம் வெளியாகிறது என்றால், அந்தப் படம் வெளியாவதற்கு முன்போ, அல்லது வெளியான சிலதினங்களுக்குப் பின்போதான் சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாகும். இது வழக்கம்தான். என்றாலும், மற்ற மொழிப் படங்களைவிட தமிழ் படங்களுக்கு இந்த நெருக்கடி ரொம்பவே அதிகம்தான்.அதிலும் எந்திரன் படவெளியீட்டா பாதிப்புக்கு உள்ளாகும் படங்கள் கொஞ்சம் ஏராளம்தானாம்...

ஆரம்பத்தில் எந்திரன் எப்போது வெளியாகும் என்பது எவருக்கும் தெரியாத மர்ம நாவலாக இருந்து வந்தது. அந்தா இந்தா என்று செப்படம்பர் 24ந் தேதி எந்திரன் ரிலீஸ் என எந்திரன் படக்குழு முதலில் வெளியிட்டது. ஆனால் அதன்பிறகு வந்த சில தகவல்கள் எந்திரன் ரிலீஸ் தேதியை கன்னீத்தீவு கதையாக நீட்டித்துக்கொண்டிருந்தன. எப்படியோ ஒருவழியாக அக்டோபர் 1ல் எந்திரன் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாகவே இப்போது தெரிவிக்கப்பட்டுவிட்டது. 

செப்படம்பர் 24ந் தேதி வெளியாக வேண்டிய எந்திரன், அக்டோபர் 1ந்தேதி வரை தள்ளிப்போனதற்கான காரணமும் கொஞ்சம் காரசாரமாகவே உள்ளது.

ஆர்யா - நயன்தாரா நடித்த ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்துக்காகத்தான் எந்திரன் ரிலீஸ் தள்ளிப்போடப்பட்டதாக சினிமாவட்டாரங்களில் கிசுகிசுக்கபட்டும் வருகிறது. ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் தயாரிப்பாளர் சிவஸ்ரீ சீனிவாசன். ஆனாலும், உலகமெங்கும் படத்தை வெளியிட்டிருப்பது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் தரப்புக்கும், சன் பிக்சர்ஸ் தரப்புக்கும் நடந்த ஒருவாரகால பேச்சுவார்த்தையின் பலன்தான் எந்திரன் ரிலீஸின் காலதாமதம். (ஓ... பாஸுக்கு வழிவிட்டதா மாஸு)


என்னதான் எந்திரன் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து, இப்போது பெற்றுவரும் வெற்றிக்கு கெடுவைத்துவிடுமே என்று வருத்தப்பட்டு வருகிறதாம் பாஸு டீம். இந்தப் படத்திற்கு ஏற்பட்ட நிலைதான் சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படங்களுக்கும்.

வெளியான படங்களைவிட வெளியாகப்போகும் படங்களுக்கும் அதேகதிதான். சிக்கு புக்கு, ஈசல், வ குவாட்டர் கட்டிங், சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி, உள்ளம் தள்ளாடுதே, பட்டாபட்டி 50 - 50 மற்றும்  தனுஷ் நடித்த ஆடுகளம், சீடன் உட்பட 30 க்கும் மேற்பட்டப் படங்கள் எந்திரனால் தியேட்டர் கிடைக்காமல் காத்திருக்கின்றனவாம். 
 
எவ்வளவு பெரிய ஹீரோக்களின் படங்களையும் ஜீரோ ஆக்கிய சின்னப் பட்ஜெட் படங்களும் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் கணக்கின்றி உள்ளன. எண்பதுகளில் எடுத்து கொண்டால்...‘கரகாட்டக்காரன்’ படம் அப்போது வெளியான முன்னணி ஹீரோக்களின் படங்கள் அத்தனையையும் ஓரங்கட்டியது. 

ஏன்...! ரஜினிகாந்தின் ‘படையப்பா’ படம் வெளியான போது,  புது முகங்கள் மட்டுமே நடித்த ‘மோனிஷா என் மோனோலிஷா’படம் வெளியாகி ஹிட்டும் ஆனது.

அதைவிட கடந்த ஆண்டுகளில் வெளியான சுப்பிரமணியபுரம், வெண்ணிலா கபடிக்குழு, பசங்க, நாடோடிகள், ஈரம் போன்றப் படங்கள் பெரிய அளவில் விளம்பரங்கள் ஏதுமில்லாமலே அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களே தராத வெற்றியை மிகப்பெரிய அளவில் பெற்றன. பெரிய படம், சின்னப் படம் என்பது எல்லாம் பட்ஜெட்டில்தான். படத்தின் வெற்றியில் இல்லை...

என்னதான் மாஸ் படங்களுக்கு ஆரம்பத்தில் மவுசு இருந்தாலும், தரமான படங்கள்  மட்டும்தான் மக்கள் மனதில் இருக்கும்...

கமல் - பாலா கடவுள் சர்ச்சையின் சலசலப்பில் ‘மைனா’

 


       மைனா பட இசைவெளியீட்டு விழாவில் கமல், இயக்குனர் பாலாவின் வருகை ஹைலைட்டாக அமைந்தது. அதே போல அவர்கள் இருவரின் காரசாரமான பேச்சுக்களும் விழாவை பரபரப்பாக்கியது. அவர்கள் பேசிய போது ஆத்திகமும் நாத்திகமும் வானளாவ சிறகடித்தது என்றே கூறனும்.

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை அமைத்துக் கொண்ட இயக்குனர்களில் ஒருவர்தான் பிரபு சாலமன். கிங், கொக்கி, லீ, லாடம் என்று ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட புதுமையான கருத்துக்களை சொல்லியிருப்பார். இப்போதும் அவர் இயக்கியிருக்கும் ‘மைனா’படமும் சினிமாவில் புதிய மைல்கல் என்று புகழப்பட்டு வருகிறது.

மைனா படத்தின் சிறப்புக்காககவே உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் கல்பாத்தி எஸ் அகோரத்தின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து திரையிடுகின்றன. இதில் புதுமுகம் விதார்த் கதாநாயகன். இவர் கூத்துப்பட்டறை மாணவன். அமலாபால் என்ற அனகா (‘சிந்து சமவெளி’ புகழ் அனகாவேதான்) இதில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.  ஒருவகையில் இவரும்கூட புதுமுகம்தான். சிந்து சமவெளிக்கு முன்பே இதில்தான் நடித்தார் அனகா. தயாரிப்பு ஜான் மேக்ஸ். 
 
யுகபாரதியின் வரிகளில், டி.இமானின் பிரமாதமான இசைச் சேர்ப்பில் உருவான ‘மைனா’ பாடல்கள் வெளியீடு சத்தியம் திரையரங்கில் செப்டம்பர் 23ந் தேதி(நேற்று) மாலை நடைபெற்றது.

இவ்விழாவில் கமல், இயக்குனர் பாலா, கார்த்தி, கரண், ஷாம், சிபிராஜ், யுகபாரதி மற்றும் மைனா படக்குழுவினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பாடல் குறுந்தகடை கமலஹாசன் வெளியிட, அதை பாலா பெற்றுக்கொள்ள சிறபாக நடந்தது  இசைவெளியீடு. இதில் இருவரும் பேசியது இன்னும் சிறப்போ சிறப்பு. 

மைனா படம் பற்றி பேசிய யுகபாரதி, “மைனா படம் மிகப் பெரிய வெற்றிப்பெறும். இவ்விழாவில் பேசுவதற்கு குறிப்பெடுத்து கொண்டு வரவில்லை. என்றாலும் பிரபு சாலமன் பற்றி நினைக்கும் போது ஈரோடு தமிழன்பனின் ஒரு கவிதையை மட்டும் குறிப்பாக சொல்ல வேண்டும் என தோன்றுகிறது. 

“பத்துமுறை கால் இடறி விழுத்தவனுக்கு 
பூமித்தாய் முத்தமிட்டு சொன்னாள்-  
நீ ஒன்பது முறை விழுந்து எழுந்தவன் என்று”

அப்படித்தான் பிரபு சாலமனும். இதுவரை அவர் எத்தானையோ தோல்விகளை கண்டிருந்தாலும், இந்தப் படத்தில் அவர் நிமிர்ந்து எழுந்து விடுவார்.

‘கர்த்தர் கைவிட்டதும் இல்லை, விட்டு விலகுவதும் இல்லை’ என்று பிரபு சாலமன் அடிக்கடிக் கூறுவார். அதைப் போலவே இந்தப் படத்தின் வெற்றியில் அவரை கர்த்தர் கைவிடமாட்டார்” என்றார் யுகபாரதி.

இவர் இப்படிக் கூறியதுதான் விழாவின் பரபரப்புக்கு அடிப்படையாக அமைந்தது. 

இவரை தொடர்ந்து பேசவந்த பாலா தொடங்கும் போதே ஒருவித வேகத்தோடு பேசத்தொடங்கினார், “ இவ்விழாவில் கர்த்தர் என்ற ஒருவார்த்தை அடிபட்டது. அந்த வார்த்தையை கேட்டவுடன் எனது மூளைக்குள் சுளீர் என்றிருந்தது.


‘புத்தியுள்ளவனுக்கு எந்த கடவுளின் ஆசியும் தேவையில்லை’ என்று படபடவென பொறிந்தார் பாலா.(அப்போது ‘அகம் பிரமாஸ்மி’ என்ற வார்த்தை சத்தமாக முழங்குவது போலிருந்தது.)

மேலும் பேசிய பாலா, “இந்தப் படத்தை பார்த்து ரொம்பவே ஆச்சர்யப்பட்டேன். பிரபு சாலமனை ஆரத்தழுவிக் கொள்ளனும், பாராட்டி முத்தம் தரணும் என்பதைத் எல்லாம் தாண்டி, அவர் மீது ஒரு பெரிய மரியாதை ஏற்பட்டுள்ளது. 

இமானின் இசை பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. இமானின் அப்பா, ‘தன் மகனைப் பற்றி யாரும் பேசமாட்டார்களா’ என்று வருத்தப் படுகிறாரோ என்று நினைக்கிறேன். இமனை பற்றி நாங்கள் பேசவேண்டியதில்லை. படம் வெளிவந்த பிறகு மக்கள் பேசுவார்கள். அந்த அளவிற்கு அற்புதமாக இருக்கு அவரின் இசை.

இதில் நடித்தவர்கள் எல்லோரும் புது முகங்கள்தான். ஆனால் 100 படங்களுக்கு மேல் நடித்த அனுபம் பெற்றவர்கள் பேல சிறப்பாக நடித்துள்ளார்கள்” என்று பாராட்டினார் பாலா. 

அவரைத் தொடர்ந்து பேசவந்த பிரபு சாலமன்,'தேங்ஸ் சீஸஸ்' என்றுதான் ஆரம்பித்தார். இப்படி சொன்னவுடன் பாலாவை பார்த்து,“மன்னிச்சுடுங்க பாலா. இது என் நம்பிக்கை.

 காடு, மலை என்று நடந்த இந்தப் படப்பிடிப்பின் போது பல இக்கட்டான சூழ்நிலைகளில் எல்லாம் தெய்வாதீனமாக எதிர்பாராத பல நல்ல விஷயங்கள் நடந்தன. 

இந்தப் படம் இந்த அளவிற்கு வந்திருப்பதற்கு காரணம் தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ்தான். அவருக்கும், இந்தப் படத்தை வழங்கும் உதயநிதி மற்றும் கல்பாத்தி எஸ் அகோரம் ஆகியோருக்கும் நான் நன்றி என்று மட்டும் கூறுவதைவிட வாழ்நாள் முழுவதும் வணக்கம் செய்வேன் எனபது தான் பொருத்தமாக இருக்கும்” என்றார்.

கடைசியாக பேசவந்த கமல், “ இந்தப் படம் சாலமனுக்கு முதல் வெற்றிப்படமாக இருக்கும். அதற்கு காரணம் அவர் நம்பும் கர்த்தராகவோ, இல்லை பாலா நம்பும் மனித அறிவாகவோ இருக்கலாம். 


இந்த நேரத்தில் பாலாவுக்கு ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன் ‘அடக்கி வாசிக்கவும் பாலா’. ஏன்னா நாளைக்கு அயோத்தி பிரச்சனைக்கு தீர்ப்பு சொல்லப் போறாங்க. 

அயோத்தி பிரச்சனையில் தீர்ப்பு சொல்லவிருக்கும் இந்த நேரத்திலும், கடவுள் பற்றி தமிழ் நாட்டில் தைரியமாக பேசுகிறோம் என்றால், அதற்கு யார் காரணம் என்று பாலாவுக்கு அருகில் இருக்கும் உதயநிதிக்கு தெரியும். என்று ஒரு பீடிகை போட்டார் கமல். அவர் சூசகமாக சொன்னாலும், அங்கிருந்த அனைவருக்கும் தெரிந்தது அது யார் என்று.(நமக்கும்தான்...)

உதயநிதி பேசும்போது ‘மைனா’ படத்தை பார்த்துவிட்டு ரெண்டு நாளா தூங்கவில்லை என்றார். ஆனால் நான் நிம்மதியாக தூங்கினேன்.

இப்படி ஒரு தரமான படங்கள் வரும்போது தான் உண்மையான சினிமாக் கலைஞன் மிகவும் சந்தோஷப்படுகிறான். இது போன்ற நல்லப் படங்களுக்கு, என்னதான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பாலா போன்றவர்களின் ஆசிர்வாதமும் உண்டு. (என்று கூறி கண்சிமிட்டியபடி) இப்படி எல்லாத்தையும் தமாசாதான் எடுத்துக்கனும் என்றார் கமல்.

கடவுள் பற்றி என்னோட கருத்து என்று சொன்னால், ‘கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது. கடவுள் மட்டும் கண்டால் கல்லே தெரியாது. தடுக்கி விழுந்திடுவோம்.எதற்குமே நமக்கு பகுத்தறிவு வேண்டும். இப்படி தனது கருத்தை  வழக்கமான தனது பாணியில் வலுவாக பதிவு செய்தார் கமல். (தசாவதாரம் படத்தின் முடிவில் ‘கடவுள் இல்லை என்று கூறவில்லை... இருந்தால் நல்லா இருக்கும் என்கிறேன்’ என்றவர்தானே அவர்)

எந்த ஒரு விழாவிலும் நான் இவ்வளவு நேரம் பேசியதில்லை. ‘அவர் சொன்னதையே வலிமொழிகிறேன். இதை பற்றி ஏற்கனவே எல்லாரும் சொல்லிட்டாங்க. இதில் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை’ என்று அடுத்தவர்கள் மீது பொறுப்பை ஒப்படைத்து விடுவேன்.

அப்படிப்பட்ட நான் இந்த விழாவில் இவ்வளவு நேரம் பேசுறேன் என்றால் அதற்கு காரணாம் மைனா படம் தான். இது போன்ற சின்னப் படங்களை எல்லாம் என்னுடைய சொத்தப் படமாகத்தான் கருதுவேன். ஏனெனில் நானும் இது போன்ற சின்னப் படங்களில் இருந்து வந்தவன்தான். 

இசை, ஒளிப்பதிவு, நடிப்பு என்று அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கும்  ‘மைனா’ படம்... அப்படி ஓடும், இப்படி ஓடும் என்று கட்டியம் கூறுவோ,ஜோசியம் கூறுவோ மாட்டேன்.அது மக்களின் கையில் இருக்கு. 

படம் நன்றாக ஓடுவதற்கு ரசிகர்கள்தான் காரணம். என்னோட ஆசை எல்லாம் இது போன்ற நல்லப் படங்கள் நிச்சயம் வெற்றிப்பெற வேண்டும் என்பதுதான். 

தரக்குறைவான படங்களை திட்டி தூற்றுங்கள். தரமான படங்களை பாராட்டி போற்றுங்கள். தூற்றலையும், போற்றலையும் மறந்து விட்டால், நாம் தரம் குறைந்து விடுவோம்.

இந்தப் படம் மிகப் பெரிய வெற்றிபெறும். அப்போது இன்னும் தலை நிமிர்வுடன் பேசுவேன். என்று மிகச்சிறப்பாக பேசினார் கமலஹாசன்.

இப்படி அனைவரும் மைனா படத்தைப் பற்றிய புகழ்ந்து பேசியதை கேட்டவுடன் படத்தை இப்போதே பார்த்தாகவேண்டும் என்ற பேராசை ஏற்படுகிறது. ஆனால் அதற்கு எந்திரன் ஆரவாரம் முடியும் வரை பொறுத்திருக்க வேண்டுமே. எந்திரன் படம் வெளிவந்த சில வாரங்களுக்கு பிறகே மைனா சிறகுவிரிக்கிறது.

பேராதனை பல்கலைகழக மாணவர் ஆர்ப்பாட்டம்.

பேராதனை பல்கலைகழகத்தின் சகல பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் இன்று பகல் 12 மணி தொடக்கம் 1 மணிவரை பேராதனை பூங்கா முன்னுள்ள கலகா சந்தியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்க பேராதனை பல்கலைகழக சட்டதுறைக்கான கட்டிடத்தினை திறந்து வைக்க வருகை தந்த பொழுது மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

சவப்பெட்டியை தூக்கி சென்றது தொடர்பான வழக்கில் மாணவர்கள் 4 பேருக்கு கண்டி நீதிமன்றத்தில் 14 நாட்கள் விளக்கமறியல் வழங்கப்பட்டமைக்கு எதிராகவே இன்று இந்த ஆர்ப்பாட்டத்தினை நடத்தினர். பேராதனை பல்கலைகழக மாணவர் சங்க தலைவர் மற்றும் கலைபீட மாணவர் சங்க தலைவரும் இவ்வழக்கில் உள்ளடங்கியுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டகாரர்கள் கண்டி கொழும்பு பிரதான வீதியை தடை செய்து ஆர்ப்பாட்டம் செய்தமையால் போக்குவரத்து தடை ஏற்பட்டு பொலிஸார் ஸ்தலத்துக்கு வந்து போக்குவரத்தை சீர் செய்தனர். இவ்வார்ப்பாட்டத்தில் கிட்டத்தட்ட 1000 மாணவர்கள் பங்குபற்றினர்.

கை, கால்களை கட்டி பெண்ணை கொன்று ரோட்டில் பிணம் வீச்சு: நேரில் பார்த்த இன்னொரு பெண் அதிர்ச்சியில் பலி

குழந்தையுடன் பெண்ணை காரில் கடத்திய கும்பல் அந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்து ரோட்டில் பிணத்தை வீசியது. காரிலிருந்த குழந்தையையும் வீசி விட்டு சென்றது. இந்த காட்சிகளை நேரில் பார்த்த ஒரு பெண் அதிர்ச்சியில் பலியானார்.
பரபரப்பான இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஒரு சுமோகார் வேகமாக சென்றது. செங்கமலையம்மன் கோவில் அருகே அந்தகார் வரும்போது காரிலிருந்த கும்பல் கதறி அழுதபடி இருந்த ஒரு பெண் குழந்தையை ரோட்டில் தூக்கி வீசியது. சற்று தள்ளி ஒரு பெண்ணையும் தூக்கி வீசினர்.
இந்த காட்சியை நேரில் பார்த்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து விட்டு போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர்.   கன்னிவாடி போலீசார் விரைந்து வந்து காயங்களுடன் கிடந்த அந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சற்று தள்ளி கிடந்த பெண் அருகே சென்ற போது அந்த பெண் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. பின்பக்கம் கைகளும், கால்களும் கட்டப்பட்ட நிலையில் அந்த பெண் உடல் கிடந்தது. கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்டு இருந்தது.   உடல் முழுவதும் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.
யாரோ ‘மர்ம’ ஆசாமிகள் குழந்தையுடன் அந்த பெண்ணை காரில் கடத்தி வந்து கொடூரமாக இந்த கொலையை செய்து பிணத்தை ரோட்டில் வீசி விட்டு சென்றுள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெண்ணையும், குழந்தையையும் காரில் இருந்து வீசியதை நேரில் பார்த்த மலையாண்டிபுரத்தை சேர்ந்தலட்சுமி (வயது32) என்ற பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.   அவரை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.   ஆனால் போகும் வழியிலேயே அவர் இறந்து விட்டார்

முன்னாள் புலிகளிடம் கருணாவின் ஆயுதக்கிடங்குகள் தொடர்பாக விசாரணை.

மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் புலிகள் இராணுவப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுவதாகவும் அவர்களிடம் கருணாவின் ஆயுதக்கிடங்குகள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரியவருகின்றது.

புலிகளியக்கத்திலிருந்து பிரிந்து வந்த கருணா அவ்வியக்கத்தின் மட்டு அம்பாறை கட்டமைப்பைக் கலைத்து உறுப்பினர்களை தமது வீடுகளுக்கு தப்பிச் செல்லுமாறு அறிவுறுத்தியிருந்தார். அவ்வாறு புலிகளியக்கத்தை விட்டு வெளியேறிய பலர் வெளிநாடுகளிக்கு தப்பிச் சென்றிருந்தனர். தற்போது நாட்டில் சமாதானம் தோன்றியுள்ளதாக கூறப்படும் நிலையில் , நாடு திரும்பும் முன்னாள் புலிகள் விசாரணைகளுக்கு உட்படுத்ப்படுவதாக கிழக்கு மாகாண தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனடிப்படையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் மலேசியாவிலிருந்து நாடு திரும்பியிருந்த கிரான் பிரதேசத்தை சேர்ந்த பகிரதன் எனும் இயக்கப்பெயரையுடைய இளைஞன் ஒருவன் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு , விசாரணைகளின்போது கருணாவின் ஆயுதக்கிடங்குகள் தொடர்பாக கேட்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். பகிரதன் புலிகளியக்கத்திலிருந்தபோது கருணாவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் என தெரியவருகின்றது.


கருணா அரசுடன் இணைந்திருந்தாலும் அவரிடம் ரகசிய ஆயுதக்கிடங்குகள் இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவது பல கோணங்களில் நோக்கப்படுகின்றது.

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

TNA picnics. இன்றுவரை தமது தொகுதிக்கு விஜயம் மேற்கொள்ளாத சம்பந்தன்

பிரபாகரனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்னும் பெயரில் உருவாக்கப்பட்ட புலிக்கூட்டமைப்பினர் பிரபாகரனின் கட்டளைகளை தலைமேல் சுமந்தநிலையில் இடம்பெற்ற இரு பாராளுமன்றத் தேர்தல்களில் 2001ம் ஆண்டு முதல் 08.04.2010 வரை 15, 24 உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை தமதாக்கிக்கொண்டு தமக்கான வசதி வாய்ப்புக்கள் அனைத்தினையும்
இலங்கை மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் வழமான வாழ்க்கையை தமதாக்கினர். பின்னர் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் 14 ஆசனங்களைக் கைப்பற்றியவர்கள் இன்று ஆட்சியிலமர்ந்துள்ள அரசாங்கத்தின் செல்லாக்காசுகளாக செயலற்று ஆளுக்கொரு அறிக்கையும், பிரதேசத்திற்கொரு தலைவருமாக பின்னிப் பிணைகின்றனர்.
இந்நிலையில் புலிக்கூட்டமைப்பினதிருமலை மாவட்ட எம். பி. இரா. சம்பந்தன் மூன்று மாத காலத்திற்கு சபைக்கு சமுகமளிக்காதிருப்பதற்கான விடுமுறை பிரேரணைக்கு பாராளும ன்றம் நேற்று அங்கீகாரம் வழங்கியது. தமிழரசுக் கட்சியின் பாராளு மன்ற உறுப்பினரான எம். ஏ. சுமந்திரன் சபாநாயகரின் அனுமதியைப் பெற்று இப்பிரேரணையை சபைக்குக் கொண்டு வந்தார். இச்சமயமே பாராளுமன்றம் இப்பிரேரணைக்கு அனுமதி வழங்கியது.
பொதுத் தேர்தல் முடிவடைந்ததும் தமிழகத்திற்குசென்ற சம்பந்தன் இன்றுவரை தமது தொகுதிக்கு விஜயம் மேற்கொள்ளாத நிலையிலேயே தொடர்ந்தும் ஓய்வெடுப்பதற்காக தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ளார்
பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பிற்பகல் 1.00 மணிக்குக் கூடியது. சபை அமர்வின் வழமையான ஆரம்ப நிகழ்வைத் தொடர்ந்து சுமந்தி ரன் எம். பி. இப்பிரேரணையை சபையின் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்கமைய பாராளுமன்றம் அதற்கான அனுமதியினை வழங்கியுள்ளது.

ஐஸ் வைக்கும் ஒபாமா:இந்தியா வருகை எதிரொலி-பல கூடை ஐஸ்

இந்தியர்களுக்கான வேலைவாய்ப்புகளுக்கு உலை வைக்கும் வகையில், அமெரிக்காவில் ஏகப்பட்ட நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கும் அதிபர் பராக் ஒபாமா, இந்தியா வருகையையொட்டி இந்தியா மாதிரி வருமா என்று புகழாரம் சூட்டி ஐஸ் வைத்துள்ளார்.

அதிபரான பின்னர் முதல் முறையாக இந்தியாவுக்கு வருகிறார் ஒபாமா. இந்த நிலையில், ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நியூயார்க் சென்றுள்ளார். அங்கு அவர் நேச்சுரல் ஹிஸ்டரி அருங்காட்சியகத்தில் ஒபாமாவை சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து கிருஷ்ணா கூறுகையில், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தான் நவம்பரில் இந்தியா வர மிகவும் ஆவலுடன் இருப்பதாக தெரிவித்தார் என்றார்.

இதற்கிடையே, ஐ.நா. கூட்டத்தில் பேசிய ஒபாமா இந்தியாவை வெகுவாகப் புகழ்ந்து பேசி ஐஸ் வைத்தார்.

ஒபாமா பேசுகையில், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடானா இந்தியாவில், ஜனநாயகம் மேலும் தழைத்தோங்கி வளர்ந்து வருகிறது. காலணி ஆதிக்கத்திலிருந்து மீண்டு சிறப்பான நிலையை நோக்கி வந்துள்ளது இந்தியா.

அமைதியான முறையில் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றிய இந்தியாவுக்கு செல்வதில் பெருமைப்படுகிறேன். பல கோடி மக்கள், பல இன மக்கள் குழுக்கள் இணைந்து வாழும் இந்தியாவுக்கு விஜயம் செய்வது பெருமையாக இருக்கிறது என்றார் ஒபாமா.

தொடர்ந்து பேசிய ஒபாமா, இந்தோனேசியாவையும், அதன் ஜனநாயகத்தையும் வெகுவாகப் பாராட்டினார்.

அதேபோல நான் இந்தோனேசியாவுக்கும் செல்லவுள்ளேன். உலகிலேயே மிகப் பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேசியா, மிகச் சிறந்த ஜனநாயக நாடாகவும் திகழ்கிறது என்றார்.

அமெரிக்க வேலை வாய்ப்புகள் அமெரிக்கர்களுக்கே போக வேண்டும். இந்தியாவுக்கும், சீனாவுக்கும் அவுட்சோர்சிங் வாய்ப்புகளை அளிக்கக் கூடாது, அப்படி அளித்தால், வரிச் சலுகைகள் ரத்து என்பது உள்பட பல்வேறு கெடுபிடிகளை அமெரிக்க அரசு கடைப்பிடித்து வருகிறது. சமீபத்தில் விசா நடைமுறையிலும் இந்தியர்களுக்கு ஆப்பு வைக்க இறங்கியுள்ளது.

இந்தியர்களும், சீனர்களும் நம்மை முந்தப் பார்க்கிறார்கள். எனவே அவர்களை வீழ்த்தும் வகையில் அமெரிக்கர்கள் நன்றாகப் படிக்க வேண்டும் என்றும் ஒபாமா அடிக்கடி பேசி வருகிறார்.

இந்த நிலையில், இந்தியாவுக்கு வரப் போவதையொட்டி இந்தியாவைப் போல ஒரு நாடு உண்டா என்று பேசி ஐஸ் வைத்துள்ளார் ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது.
பதிவு செய்தவர்: நம்ப முடியலையே
பதிவு செய்தது: 24 Sep 2010 6:56 pm
உலகிலேயே மிகப் பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேசியா மிகச் சிறந்த ஜனநாயக நாடாகவும் திகழ்கிறது என்றார். சன்னி சீயா சூப்பி அஹமாதி என்று பிரச்சினை எது வரவில்லையா ? இந்தோனேசியா தீவிரவாதம் என்று கூகுல் செய்து பார்கிறேன்

பதிவு செய்தவர்: MAS
பதிவு செய்தது: 24 Sep 2010 6:06 pm
Can any one Compare '' OBAMA and OSAMA''?
பதிவு செய்தவர்: Raj
பதிவு செய்தது: 24 Sep 2010 7:41 pm
Osama - CIA Agent Obama - Israel Agent

பதிவு செய்தவர்: குத்து
பதிவு செய்தது: 24 Sep 2010 5:59 pm
இந்தியாவில் இருப்பது ஜனநாயகம்னா .... அப்ப ஜனநாயகத்திற்கு பெயரை மாற்றி விட்டார்களா ....

பதிவு செய்தவர்: உலகத்தமிழினம்
பதிவு செய்தது: 24 Sep 2010 5:25 pm
இந்தியகுடிமக்களைக் கொன்றுகுவிக்கும் சிங்களகடற்படையை கண்டித்த சீமானை சிறையில் தள்ளியதும் ஜனநாயகமா? ஒபாமா நீயும் கருணாநிதியிடம் துட்டு ஏதும் வேண்டிவிட்டாயா?

பதிவு செய்தவர்: மார்கண்டேயன்
பதிவு செய்தது: 24 Sep 2010 5:01 pm
ஜன நாயகம் என்பது தேர்தலில் மட்டும் அல்ல அந்த நாட்டின் ஒவ்வொரு அசைவிலும் இருக்க வேண்டும், இங்கு தான் ஒரு விளையாட்டு போட்டிய கூட நடத்த வக்கு இல்லை, இவனுங்க ஜன நாயக சக்தி, து

பதிவு செய்தவர்: மந்திர்
பதிவு செய்தது: 24 Sep 2010 4:30 pm
எப்படியோ மீண்டும் எங்களை அ.டி.மை நாடாக எங்கள் தலைவர்கள் மூலம் மாற்ற பார்கிறீர்கள். என்ன முன்று பிரிடிஷ்காரனிடம் இப்போ அமெரிக்க காரனிடம். பொருளாதாரம் தொழில்நுட்பம் என்ற போர்வையில் மாட்டிகொண்டோமோ என்று தெரிகிறது.

பதிவு செய்தவர்: மல்லைய
பதிவு செய்தது: 24 Sep 2010 4:29 pm
எப்படியோ மீண்டும் எங்களை அடிமை நாடாக எங்கள் தலைவர்கள் மூலம் மாற்ற பார்கிறீர்கள். என்ன முன்று பிரிடிஷ்காரனிடம் இப்போ அமெரிக்க காரனிடம். பொருளாதாரம் தொழில்நுட்பம் என்ற போர்வையில் மாட்டிகொண்டோமோ என்று தெரிகிறது.

பதிவு செய்தவர்: புலம்
பதிவு செய்தது: 24 Sep 2010 4:27 pm
கிழிந்தது போ.

பதிவு செய்தவர்: என்னடா மீடியா இது
பதிவு செய்தது: 24 Sep 2010 4:20 pm
அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் பொருளாதார குறைவினால் ஆயிரக்கணக்கான பெரும் கம்பெனிகள், வங்கிகள், மூடப்பட்டன, இப்போது ஆள் குறைப்பு செய்கிறது அமெரிக்க அரசு. இதையும் கூட அரசியலாக்க வேண்டுமா?
பதிவு செய்தவர்: அதானே
பதிவு செய்தது: 24 Sep 2010 4:28 pm
இந்தியாவ முந்தணும் சீனாவ முந்தணும்னு ஆட்களை குறைப்பதற்கு கவுரமா சொல்றார் ஒபாமா. ஒரு வேலை இந்தியாவில் கடன் கேட்க வர்றாரோ?

பதிவு செய்தவர்: இந்தியன்
பதிவு செய்தது: 24 Sep 2010 4:14 pm
எங்கள வச்சி காமெடி கிமடி பண்ணலேய ???

அரசு நிர்ணயித்த விலைக்கு மட்டுமே எந்திரன் டிக்கெட் விற்பனை-ரஜினி வேண்டுகோள்!

'ஒருவரைக் கவிழ்க்க விரோதிகள் கூட தேவையில்லை... உடனிருப்பவர்களே போதும்' என்று தனது படங்களில் வசனம் வைத்தவர் ரஜினி.
அதனால்தானோ என்னமோ, சில விஷயங்களில் தனக்கு எதிராக விமர்சனங்கள் வரும் என்று தெரிந்தும் கூட, மனதில் பட்டதை பளிச்சென்று வெளிக்காட்டும் விதமாய் முடிவெடுப்பார்.

குசேலன் படத்தை குறைந்த விலைக்குத்தான் விற்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதை சாய்மிராவும் பாலச்சந்தரும் புறக்கணித்ததால் எத்தனை மோசமான பின் விளைவுகளை ரஜினி சந்திக்க வேண்டி வந்தது!

எந்திரன் வெளியாகும் இந்தத் தருணத்தில், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு ரஜினி தரப்பிலிருந்து வைக்கப்பட்டுள்ள வேண்டுகோள்... "அரசு நிர்ணயித்துள்ள டிக்கெட் விலையை மட்டுமே வசூலிக்க வேண்டும், கூடுதல் விலை வைத்து விற்க வேண்டாம்...," என்பதுதான்.

இதனை வாய் மொழி வேண்டுகோளாகவே ரஜினி முன்வைத்துள்ளார். சென்னையைப் பொறுத்தவரை, இதுவரை டிக்கெட் புக்கிங் ஆரம்பித்துள்ள திரையரங்குகள் அரசு நிர்ணயித்துள்ள ரூ 100 மற்றும் 120 -ஐ மட்டுமே பெற்றுக் கொண்டு முன்பதிவு கூப்பனை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

படம் வெளியான பிறகும் இந்த நிலை தொடர்ந்தால், அநாவசிய விமர்சனங்களைத் தவிர்க்கலாம். மற்ற தியேட்டர்காரர்கள் ரஜினியின் அட்வைஸைக் கேட்பார்களா... அல்லது கூடும் கூட்டத்தைப் பார்த்து மனசு மாறி இஷ்டத்துக்கும் ஏற்றி விடுவார்களா... பார்க்கலாம்!
பதிவு செய்தது: 24 Sep 2010 5:48 pm
சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க பா .... rating பாத்து தான் படம் பாக்கணும்

ஏ.ஆர்.முருகதாஸ்: மிரளவைக்கும் ஒரு படம், என் 'ஏழாம் அறிவு'!" - எனர்ஜியோடு பேசுகிறார் இயக்குநர்

சினிமாவில் டெக்னாலஜி வளர்ந்துட்டே இருக்கு. ஒரு பக்கம், கேனான் 5டி ஸ்டில்கேமராவில் படம் எடுக்குறாங்க. இன்னொரு பக்கம், 'அவதார்' பண்டோரான்னு ஒரு தனி கிரகத்தையே உருவாக்குறாங்க!
சில படங்களோட கதையே புதுசா இருக்கும். 'அட! இப்படியும் யோசிக்க முடியுமா?'ன்னு ஆச்சர்யப் படவைக்கும். டெக்னாலஜி, கதை இரண்டிலும் மிரளவைக்கும் ஒரு படம், என் 'ஏழாம் அறிவு'!" - எனர்ஜியோடு பேசுகிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.
"கஜினிக்கு அடுத்து சூர்யாவுடன் மீண்டும் கூட்டணி... பெரிய எதிர்பார்ப்பு இருக்கே?"
"கதை, திரைக்கதையைவிட அந்த எதிர்பார்ப்புதான் எங்களுக்குப் பெரிய சவால். கதைக்காகப் பல மாதங்கள் வேலை பார்த்தேன். இந்தியாவில் இதுவரைக்கும் யாரும் சொல்லாத கதை இது. இது ஒரு பீரியட் ஃபிலிம். சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட். 'கஜினி'யில் சூர்யா கேரக்டர் வித்தியாசமா இருக்கும். இதில் ரொம்பப் புதுசா இருக்கும். உணர்வுகளும் கலையும் மொழிகளுக்கு அப்பாற்பட்டவை. அழகா ஒரு படம் எடுத்து, எல்லா மொழி ரசிகர்களையும் ரசிக்கவைக்கணும்கிறது என் கனவு. அது 'ஏழாம் அறிவு' மூலமா நிறைவேறும்னு நினைக்கிறேன். படத்தை இந்தி, தெலுங்கிலும் டப் பண்ணி ரிலீஸ் பண்றோம். படத்தில் இன்னொரு விசேஷமும் இருக்கு. இந்தச் சமூகம் ஏன் இப்படி இருக்குன்னு நமக்குச் சில கோபம் இருக்குமே... அந்தக் கோபமும், அதற்கான பதிலும் படத்தில் உண்டு. அது அரசியல் கிடையாது. விழிப்பு உணர்வுன்னு வெச்சுக் கலாம்!"
"கஜினியில் பார்த்த சூர்யா இப்போ எப்படி இருக்கார்?"
"முன்னாடி சூர்யா கடுமையா உழைப்பார். ஆனா, திட்டம் எதுவும் இருக்காது. இப்பவும் அதே உழைப் பைத் தர்றார். ஆனா, பக்கா பிளானிங்கோடு இருக்கார். ஒரு விஷயத்தை எப்படி ஆரம்பிக்கணும், அதை எப்படி முடிக்கணும்னு கச்சிதமா திட்டம் போட்டு வேலை பார்க்கிறார். 'கஜினி' சமயம், தமிழ் சினிமாவில் தனக்குன்னு ஓர் இடத்தைப் பிடிக்கணும்னு வெறித்தனமா உழைச்சார். அந்த இடத்தைப் பிடிச்சுட்டார். இப்போ அந்த இடத்தைத் தக்கவைக்கவும், இன்னும் ஒரு படி மேலே போகவும் உழைக்க ஆரம்பிச்சிருக்கார். இந்த உழைப்பும் அர்ப்பணிப்பும் அவரை இன்னும் பெரிய இடங்களுக்குக் கூட்டிப் போகும்!"
"ஸ்ருதிஹாசன் தமிழுக்கு செட் ஆகிட்டாங்களா?"
"ஸ்ருதிக்கு இது முதல் தமிழ்ப் படம். உடனடியா எல்லா விஷயங்களையும் பிக்கப் பண்ணிடுறாங்க. அவங்களுக்கு, யானைன்னா அவ்ளோ பயம். ஒரு காட்சியில், சூர்யாவும் ஸ்ருதியும் யானை மேல் ஏறி வரணும். 'சின்ன வயசுல யானை தும்பிக்கையை வெச்சு என் தலையில் தொட்டதுக்கே மயங்கி விழுந்துட்டேன்'னு பயந்தாங்க ஸ்ருதி. 'ரெண்டு நாள்தான் டயம். சீக்கிரம் யானையோட ஃப்ரெண்ட் ஆகிருங்க'ன்னு சொன்னதும், யானைப்பாகன் கிட்டே டிப்ஸ் கேட்டு, யானையோட தும்பிக்கையைத் தொட்டு, தடவிக் கட்டிப்பிடிச்சு நல்ல ஃப்ரெண்ட் ஆகிட்டாங்க. இதே மாதிரி, ஒவ்வொரு காட்சியிலும் எங்க வேகத்துக்கு ஈடு கொடுத்து வர்றாங்க. சினிமா தவிரவும், அவங்க அப்பாபோலவே நிறைய விஷயங் கள் தெரிஞ்சுவெச்சிருக்காங்க. ஒரு தடவை, கமல் சார்கிட்டே பேசிட்டு இருந்தப்போ, ஒரு மணி நேரத்தில் மூணு ஸ்கிரிப்ட் சொன்னார். எனக்குப் பயங்கர ஆச்சர்யம். ஆனா, ஸ்ருதி அதையும் தாண்டிருவாங்களோன்னு தோணுது. ஒரு காட்சியோ, வசனமோ சொன்னா, 'சார், இந்தப் புத்தகத்துல அதைப்பத்தி விவரமா எழுதி இருக்காங்க', 'இந்தப் படத்தில் அப்படி ஒரு பிரமாதமான ஸீன் வெச்சிருக்காங்க'ன்னு நாலஞ்சு ரெஃபரன்ஸ் தருவாங்க. அவ்ளோ, தெரிஞ்சுவெச்சிருக்காங்க. தமிழ் சினிமாவில் ஸ்ருதிக்கு நிச்சயம் பெரிய இடம் காத்திருக்கு!"
"தயாரிப்பாளர் ஆகிட்டீங்களே?"
"எனக்கே அது ஆச்சர்யம்தான். 'ஸ்லம்டாக் மில்லியனர்' முடிஞ்ச தும், ட்வென்டியத் செஞ்சுரி பாக்ஸ் நிறுவனம் என்னை ஒரு படம் இயக்கித் தரச் சொன்னாங்க. 'இப்போதைக்கு முடியாது'ன்னு சொன்னதும் எங்களுக்காக படத்தைத் தயாரிங்கன்னு கேட்டாங்க. உண்மையில், அந்த வேலையில் எனக்கு விருப்பம் இல்லை. அவங்களைத் தட்டிக்கழிக்க, நிறைய நிபந்தனைகள் விதிச்சேன். ஆச்சர்யமா எல்லாத்துக்கும் 'ஓ.கே' சொல்லிட்டாங்க. முதல் படத்தை என் அசிஸ்டென்ட் சரவணன் இயக்குகிறார். இரண்டு காதலுக்கு இடையே நடக்கும் சாதாரண கதைக்கு அழகான திரைக்கதை அமைச்சிருக்கார் சரவணன். அது, அடுத்த வருஷத்தின் மிகச் சிறந்த படமா அமையும்னு நம்பிக்கை இருக்கு!"
"அடுத்தது இந்திப் படமா?""யெஸ்!
'நாம சேர்ந்து இன்னொரு படம் பண்ணுவோம்'னு அமீர் கான் சொன்னார். 'இல்லை சார், 'கஜினி' நல்ல படம்னாலும் உங்களை வெச்சுத்தான் ஓப்பனிங்கே கிடைச்சது. நீங்க இல்லாம நான் இந்தியில் ஒரு படம் ஹிட் கொடுக்கணும். அதுதான் டைரக்டரா எனக்குப் பெருமை. அதுக்கு அப்புறம் சேர்ந்து பண்ணலாம்'னு சொன்னேன். 'நல்ல விஷயம். எந்த உதவின்னாலும் கேளுங்க'ன்னு சொன்னார். அதுதான் அமீர் கான். இடையில், அக்ஷய்குமாரை வெச்சுப் படம் பண்ண ஒரு வாய்ப்பு வந்தது. 'ஏழாம் அறிவு' அநேகமா அடுத்த மார்ச் மாசத்துக்குள் வெளியாகும். அதற்கடுத்து, அக்ஷய் குமாரை வெச்சு ஒரு ஆக்ஷன் படம் பண்ணப்போறேன். அடுத்து, சின்ன பட்ஜெட் படம் பத்தியும் யோசிக்கணும்!"
"இந்தி, தமிழ் இரண்டிலும் எது பெஸ்ட்?"
"தமிழ் சினிமாவில் எப்பவுமே கிரியேட்டிவிட்டிக்குப் பஞ்சம் கிடையாது. நல்ல படங்கள் தொடர்ந்து வந்துட்டே இருக்கு. இந்தியில் அந்த அளவுக்கு நல்ல படங்கள் வெளிவருவது இல்லை. ஆனால், 'த்ரீ இடியட்ஸ்' மாதிரி ஒரே ஒரு 'எக்சலன்ட் ஃபிலிம்' கொடுத்து எல்லோரையும் திரும்பிப் பார்க்கவெச்சுடுவாங்க. வருடம் முழுக்க வெளி வந்த நல்ல தமிழ்ப் படங்களின் பெயர்களைத் தட்டிட்டுப் போயிடுவாங்க. 'ரங்க் தே பஸந்தி', 'தாரே ஜமீன் பர்', 'த்ரீ இடியட்ஸ்' இப்போது 'பீப்ளி லைவ்'னு நம்ம நான்கு வருட நல்ல சினிமாக்களை நான்கே சினிமாக்களில் முந்திடுறாங்க. தமிழ்லயும் எக்சலன்ட் சினிமாக்கள் வர ஆரம்பிச்சுட்டா, நாமதான் இந்திய சினிமா!"
"அவ்வளவு பெரிய இடத்தில் இருக்கும் அமீர்கானும், ஷாரூக்கானும் ஈகோ யுத்தத்தில் மும்முரமா இருக்காங்களே?"
"பல மாநில சினிமாக்களில் இருக்கும் மோசமான விஷயம் இதுதான். இங்கே ஆரம்ப காலத்தில் இருந்தே ரஜினி சாரும், கமல் சாரும் நட்பு உணர்வோடு இருந்தாங்க. அந்த நட்பைத் தங்களுடைய ரசிகர்களுக்கும் சொல்லிக்கொடுத்தாங்க. அதனால், இங்கே ஈகோ சண்டை எதுவும் வரலை. கொஞ்ச நாளைக்கு முன்னாடி சில நடிகர்களின் ரசிகர்கள் சண்டை போட்டாங்க. இப்போ அதுவும் இல்லை. இது உண்மையிலேயே ஆரோக்கியமான விஷயம். தமிழைத் தவிர, மற்ற மொழி ஹீரோக்கள் அத்தனை பேருக்கும் ஈகோ உண்டு. இந்த விஷயத்தில் தமிழ் சினிமாவைப் பார்த்து மற்ற ஹீரோக்கள் கற்றுக்கொள்ள வேண்டும்!" 

46 கோடி லஞ்சம் கொடுத்த இந்தியா.காமன்வெல்த் போட்டியை நடத்த

டில்லியில் காமன்வெல்த் போட்டியை நடத்துவதற்கான உரிமையை பெற, 72 நாடுகளுக்கு சுமார் ரூ. 46 கோடி இந்தியா லஞ்சமாக கொடுத்த, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
டில்லியில் வரும் அக்டோபரில்(3-14) காமன்வெல்த் போட்டி நடக்க உள்ளது. இதற்கான பணிகளில் பெரும் ஊழல் நடந்துள்ளது. மைதானங்கள் மற்றும் விளையாட்டு கிராமம் முழுமையாக தயா ராகாததால், பெரும் பிரச்னை எழுந்துள் ளது. இந்தச் சூழலில் போட்டியை நடத்துவதற்கான உரிமையை பெற, இந்தியா லஞ்சம் கொடுத்த விபரத்தை ஆஸ்திரேலிய பத்திரிகை "தி டெய்லி டெலிகிராப்' அம்பலப்படுத்தியுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி: காமன்வெல்த் விளையாட்டை 2010ல் நடத்துவதற்கான நாட்டை தேர்வு செய்வதற்கான ஓட்டெடுப்பு கடந்த 2003ல் ஜமைக்காவில் நடந்தது. அப்போது இந்தியா(டில்லி) மற்றும் கனடா(ஹாமில்டன்) இடையே கடும் போட்டி நிலவியது. இதில், மற்ற நாடுகளின் ஆதரவை பெற, அவற்றுக்கு தலா ரூ. 32 லட்சம், லஞ்சமாக கொடுக்க கனடா முன் வந்தது. ஆனால், இந்தியா சார்பில் 72 உறுப்பு நாடுகளுக்கு பயிற்சி திட்ட உதவி என்ற பெயரில், இரண்டு மடங்காக தலா ரூ. 64 லட்சம் கொடுக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக ரூ. 46 கோடி செலவு செய்தது. இத்தொகையை பெற்ற சிறிய நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக ஓட்டளித்தன. இறுதியில் இந்தியா, கனடாவை 46-22 என்ற கணக்கில் வீழ்த்தி, போட்டியை நடத்துவதற்கான உரிமையை பெற்றது. இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறந்துபோன உண்மை என்னவென்றால் மிகவும் கொடூரமான, நன்கு திட்டமிட்டு

பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்தி புதிய பரிமாணங்களை எட்டுவோம் - ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஜனாதிபதி உரை
இலங்கைக்கு எதிரான சவால்களை நாம் இனங்கண்டுள்ளோம். அதில் பாரிய சவாலாக இருப்பது எமது கடந்த காலத்தில் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதாகும். இந்நிலையில் அதற்காக இவ்வருட முற்பகுதியில் கற்றுணர்ந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அது பொறுப்புத் தன்மையுடனான கொள்கைக்கு முற்றிலும் உட்பட்டது என்று ஜனாதி பதி மஹிந்த ராஜாபக்ஷ நேற்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் உரையாற்றிய போது கூறினார். ஐ. நா. பொதுசபை கூட்டத் தோடரில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது:-
எனது இரண்டாவது பதவிக் காலம் முதலாவது பதவிக் காலத்தை விட பெரிதும் மாறுபட்டது. 2005 ஆம் ஆண்டு நான் முதலில் தெரிவு செய்யப்பட்ட போது எனது நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து மீட்பதாக வாக்குறுதி வழங்கினேன். அதை நிறைவேற்றியுள்ளேன். சில காலத்துக்கு முன் அங்கு கனவாக மட்டுமே இருந்த சமாதானம் இப்போது அங்கு நனவாகியுள்ளது. எனது இரண்டாவது பதவிக் காலத்தில் சமாதானம் மற்றும் சபீட்சத்தை ஸ்திரப்படுத்துவதுடன் பயங்கரவாதம் மீண்டும் ஒருமுறை தலைதூக்க இடமளிக்கமாட்டேன் என்ற வாக்குறுதியை எனது மக்களுக்கு வழங்குகிறேன்.
விரைவிலேயே மறந்துபோன உண்மை என்னவென்றால் மிகவும் கொடூரமான, நன்கு திட்டமிட்டு செயற்பட்ட சிறந்த நிதி உதவியை பெற்று, நன்றாக இயங்கிய ஒரு பயங்கரவாத இயக்கத்தை நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்பதாகும். இது ஏனைய நாடுகளிலும் தனது வலையை விரிக்கக் கூடியதாக இருந்தது என்பதை மறந்துவிடக் கூடாது.
மேற்கு நாடுகள் அண்மைக் காலத்தில் அனுபவித்துவரும் பயங்கரவாதத்தின் கொடூரத்தை இலங்கை மக்கள் சுமார் 30 வருடங்கள் அனுபவித்து வந்துள்ளனர். சுமார் ஒரு லட்சம் பேர் அதில் உயிரிழ ந்தனர். அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் இலங்கை ஜனாதிபதி ஒருவரும் முன்னோக்க தரிசனத்துடன் கூடிய ஒரு இந்தியத் தலைவரும் நூற்றுக்கணக்காக புத்திஜீவிகளும் அரசியல்வாதிகளும் அடங்குகின்றனர்.
வழி தவறிப் போன சிலருக்கு நான் சொல்ல வேண்டியது என்னவென்றால் பிரிவினைவாதம், குரோதம், மற்றும் வன்முறைக்கு துணை போகாதீர்கள். அதற்கு மாறாக எம்முடன் கைகோர்த்துக் கொள்ளுங்கள், பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்திய வண்ணம் புதிய பரிமாணங்களை நாம் எட்ட முடியும்.

கிழக்கு முதல்வருடன் தமிழரசுக்கட்சி சி. இராஜதுரை


மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி. இராஜதுரை கிழக்கு மாகாண முதலமைச்சரின் சேவை நலனைப் பாராட்டி அவருக்குப் பொன்னாடை போற்றிக் கௌரவித்தார். புதன்கிழமை மட்டக்களப்பில் அவரது வீட்டில் முதலமைச்சர் சநத்திரகாந்தனைச் சந்தித்து பேசுகையில், "கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கான கட்சி என்ற அடிப்படையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பல சேவைகளைப் புரிந்து வருகிறது. மக்களின் நலனில் அக்கறை கொள்கின்ற ஒரு கட்சியாகவும் இது செயற்படுகிறது. எனது ஆதரவு த.ம.வி.பு. கட்சிக்கு என்றும் உண்டு. மேலும் பல சேவைகளை எமது மக்களுக்காக ஆற்ற வேண்டி இருக்கின்றது. அதற்கு த.ம.வி.பு. கட்சியுடனான உறவு வலு சேர்க்கும் என நான் நம்புகிறேன்" என்றார். ___
தற்போது இந்தியாவில் உல்லாசம் காணும் புலிகளின் வாரிசு காத்தமுத்து காசியானந்தன  அந்தக் காலத்தில்  முன்னுக்க கொண்டு வர யாழ்பாண மேல்லதட்டு வர்க்க தமிழ் தலைமைகள் இராஜதுரையை ஓரம் கட்டியது யாவருக்கும் நினைவில் இருக்கும். இதனைத் தொடர்ந்து இராஜதுரையும் அரசுடன் இணைந்து செயற்படும் நிலைக்கு வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டதும் இங்கு நினைவு கூரத்தக்கது. பின்னொரு காலத்தில் இதே தலைமையை புலிகள் விருந்தோம்பலுக்கு சென்று சுட்டக் கொன்றது. இது புலிகளின் ஆதிக்க காலத்தில் நிகழ்ந்த துரோகம்.