சனி, 3 செப்டம்பர், 2011

2 years old stood steadily in front of Death Gujarat


எங்களது படுக்கை விரிப்புகளை உதறிப்பாருங்கள் பாலியல் தொழிலாளி

ஜெர்மனியில் பாலியல் தொழில் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடும் நைட் கிளப்புகள் மற்றும் விபச்சார விடுதிகளிடமிருந்து அதற்காக வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்…. கிளப்புகளுக்கோ விடுதிகளுக்கோ செல்லாமல் தெரு ஓரங்களில் விபச்சாரம் செய்பவர்களிடம், வரியை எப்படி வசூல் செய்வது என்று யோசித்து– அதற்கென ஒரு திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது ஜெர்மனின் பான் நகர நிர்வாகம்.
பான் நகரில் இரவு 8.15 முதல் அதிகாலை 6 மணி வரை விபசாரம் செய்ய சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டு உள்ளது. இந்த நேரத்தில் தெரு ஓரங்களில் விபச்சாரத்தில் ஈடுபடும் பாலியல் தொழிலாளிகள் வரி செலுத்துவதற்காக செக்ஸ் வரி மெஷின்கள் பொருத்தப்படும். விபசாரம் பரவலாக நடக்கும் சாலைகளில், இந்த மெஷின்கள் வைக்கப்பட்டிருக்கும். இதில் 400 ரூபாய் செலுத்தி பாலியல் தொழிலாளர்கள் ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.
அந்த ரசீதை வைத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட நபர் அன்று இரவு முழுவதும் பாலியல் தொழில் செய்யலாம். போலீசார் பிடிக்கும்போது அவர் இந்த ரசீதை வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவருக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, அவர் மீண்டும் இந்தத் தொழில் செய்வதற்குத் தடையும் விதிக்கப்படும். பான் நகரில் மட்டும் சுமாராக 200-க்கும் அதிகமான அங்கீகரிக்கப்பட்ட பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர்.
உலகின் மிகப் பழமையான தொழில் எனப்படும் பாலியல் தொழிலுக்கு வரி வசூலிக்க, உலக நாடுகளிலேயே முதன் முறையாக ஜெர்மனியில்தான் வரி வசூலிக்கும் மெஷின் பொருத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
செக்ஸ் தொழிலுக்கே முறையாக வரி செலுத்தும் ஜெர்மனியை…. எந்தத் தொழிலாக இருந்தாலும் வரி ஏய்ப்புச் செய்யத் துடிக்கிற இந்தியா கொஞ்சம் கவனிக்கட்டும்!
இது குறித்து — இந்தத் தொழிலில் தொடர்புடையவரும், ரெட் லைட்டர்ஸ் புரட்டெக்சன் கவுன்சிலைச் சேர்ந்தவருமான பம்பாய் துவாரகாவின் கருத்து….
“வரவேற்க வேண்டிய திட்டம். பயந்து பயந்து தொழில் செய்யவேண்டிய தொல்லை இல்லை. சட்டபூர்வமான அங்கீகாரம் கிடைக்கிறது. வரி செலுத்துவோர் பட்டியலிலும் அவர்கள் வந்துவிடுகிறார்கள். இந்தியாவிலும் இதைச் செய்ய வேண்டும். இங்கு மட்டும் எதுவுமே நடக்காத மாதிரி பொய் முகமூடி அணிந்துகொண்டு புத்தர் வேஷம் போட்டு அலைவதால் நமக்குத்தான் நஷ்டம். வருமானத்துக்கு வருமானமும் வரும். குற்றங்களும் சமுதாயத்தில் குறையும்….
எந்த ஊரில் இந்தத் தொழில் இல்லாமல் இருக்கிறது? இங்கிருக்கிற 100 கோடிப் பேரும் ராமன்கள்தானா? மும்பைக்கு வந்து பாருங்கள்… தெரியும். அவ்வளவு ஏன்? சென்னையிலிருக்கும் என் நண்பர்களே சொல்லிக் கேட்டிருக்கிறேன்… இரவு பத்துமணிக்கு மேல் எல்லாமே கிடைக்குமென்று. பிறகு எதற்கு இந்த வேஷம்?
எங்களது படுக்கை விரிப்புகளை உதறிப்பாருங்கள்… முக்கியத் தலைவர்கள் எத்தனை பேருடைய முகவரிகள் சிதறுகிறது என்று…..”
போதுமடா சாமி !

Sun Tv இல்லாமல் கேபிள் இல்லை.ஜெயா மோதல் சன்னுக்கு லாபமாக போகிறது..

சன் டிவிக்கு கொண்டாட்டம்..அம்மாவுக்கு திண்டாட்டம்

அரசு கேபிள் எனும் முகமூடி அணிந்து சண்டிவியை துடைத்து எறிந்துவிட்டார் ஜெயலலிதா.அரசு கேபிள் என்பதே சண்டிவியை ஒழிக்கத்தானோ என தோன்றுகிறது.விஜய் டிவி,ராஜ்டிவி,சன் குழுமம் அனைத்தும் பே சேனல் ஆக்கப்பட்டதில்,இப்போது அவை அனைத்தும் அரசு கேபிளில் மிஸ்ஸிங்.ஒரு நாள் நாதஸ்வரம்,அரசி பார்க்கலைன்னா நம்ம வீட்டு பெண்களுக்கு இடி விழுந்தா மாதிரி சோகமா இருப்பாங்க..இதுல இனிமே அது எதுவும் கிடையாதுன்னா சுத்தம்.நேத்தே ரிசல்ட் தெரிஞ்சிருச்சு.டிஷ் இருக்கும் வீடுகளுக்கு சென்று நாதஸ்வரம் பார்த்துவிட்டு வந்தார்கள்..காலையில் வசூலுக்கு வந்த கேபிள் காரனை எப்போ சன் டிவி வரும் என துளைத்து எடுத்தார்கள்.இதைத்தான் சன் டிவி எதிர்பார்க்கிறது...சன் இல்லாமல் கேபிள் இல்லை...அப்படி வேணும்னா இவ்வளவு கொடுன்னு கேட்பார்கள்.


.சரி சன் டிவிக்கு நஷ்டம் வராதா..இதையெல்லாம் முன்பே எதிர்பார்த்துதான் டிஷ் ஆண்டனா சிஸ்டத்துக்கு மாறினார்கள்.ஒரு ஊரில் குறைந்த பட்சம் 500 டிஷ்களாகவாது இருக்கும் ஏற்கனவே கேபிள் குறைந்து,டிஷ் அதிகமாகிவிட்ட காலத்தில் அரசு கேபிள் மூலம் முற்றிலும் கேபிள் தொழிலை சன் வசம் ஒப்படைக்கபோகிறார் ஜெ..எப்படி தெரியுமா.ஒரு வாரம் சன் இல்லாமல் புலம்பும் மக்கள் 2000 போனா போகுது.ஒரு சன் டிஷ் வாங்கலாம் என முடிவெடுத்தால் தீர்ந்தது கதை..ஏழை எளிய மக்கள்,சேமிப்பு இந்த ஜல்லியெல்லாம் சன் சீரியல் முன்னால் எடுபடாது..50 ரூபா மிச்சத்துக்கு வருசம் பூரா ஜெயா டிவியே பார்க்க முடியுமா என கொதிப்பார்கள்..

அரசு கேபிள் மூலம் சன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தினால்,முன்பு இருந்ததை கட்டணத்தை இரு மடங்காக்குவார்கள்.பேச்சுவார்த்தைக்கே வர மாட்டார்கள்.இனி ஒயர் மூலம் டிவி பார்க்கும் வழக்கம் குறையும்.டிஷ் வேகமாக பரவுகிறது.அரசு கேபிள் எனும் ஓட்டை பஸ்ஸை செட்டில் போட்டுவிட்டு,அரசு டிஷ் கொண்டு வந்தால் இன்னும் நல்லது.கேபிள் காரர்கள் நலனை பார்த்தால் சன் டிவி கொள்ளையை நிறுத்த முடியாது..இதே அரசு கேபிள் இன்னும் ஒரு மாதம் சன் டிவி இல்லாமல் தொடர்ந்தால் கேபிள் காரர்களே போராட்டம் நடத்துவார்கள்.ஆமாம் வாடிக்கையாளர்கள் எல்லாம் டிஷ்க்கு மாறினால்..அவர்கள் என்ன செய்வார்கள்..? டி.ஆர்.பி ரேட்டிங் குறைந்தாலும் பரவாயில்லை..விளம்பரம் குறைந்தாலும் பரவாயில்லை..டிஷ் வாடிக்கையாளர்கள் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அரசு கேபிள் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழையாமல் சன் சண்டித்தனம் செய்யும்.சன்..ஜெயா மோதல் சன்னுக்கு லாபமாக போகிறது..

மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக திருவிழா
'Madurai Puthaga Thiruvizha 2011' Book fair at Madurai - Tamilnadu News Headlines in Tamil


தென்னிந்திய பதிப்பாளர் சங்கம் சார்பாக மதுரையில் 10 நாள் புத்தக திருவிழா நடைபெறுகிறது. மதுரை தமுக்கம் மைதானத்தில் 02.09.2011 அன்று முதல் 11.09.2011 அன்று வரை நடைபெறும் இந்த புத்தக திருவிழாவில், சுமார் 1 கோடி புத்தகங்கள் விற்பனைக்கு வந்துள்ளது. 10 கோடி ரூபாய் விற்பனை ஆகும் என்று பதிப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இலக்கியம், கதை, கட்டுரைகள், நாவல், ஆன்மீகம், விஞ்ஞானம், மற்றும் அரசியல், மருத்துவம், சமையல் குறிப்புகள், உட்பட பல்வேறு பிரிவுகளில் பயனுள்ள் நூல்கள் வாசகர்களுக்கு விருந்தாக வைக்கப்பட்டுள்ளன.
காலை 11 முதல் இரவு 10 வரை நடைபெறும் இந்த புத்தக திருவிழாவை, நல்லி குப்புசாமி 02.09.2011 அன்று காலை திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமை உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக தமிழறிஞர் தமிழ் அண்ணல் கலந்துகொண்டார். புத்தகத்திருவிழா தொடங்கிய முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் பெருமளவில் வந்திருந்து பயனுள்ள புத்தகங்களை ஆவலுடன் வாங்கிச் செல்கின்றனர்.
கிட்டத்தட்ட 500 க்கும் மேற்பட்ட பதிப்பகத்தார்கள் தங்களது அரங்குகளை அமைத்திருக்கின்றனர். ரூபாய் 35 முதல் 5000 வரையிலான விலையில் பல்வேறு புத்தகங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. அவை தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளுக்கான பாடல்கள், யோகா கற்றுத்தரும் குறுந்தகடுகளும் கண்காட்சியில் கிடைக்கும். கோவை தகிதா பதிப்பகத்தின் நூல்கள் அரங்கு எண் 15ல் அமைந்துள்ள வாசல் பதிப்பகத்தாரின் அரங்கில் கிடைக்கும்

மத்திய கிழக்கு பெண்கள் சடலமாக இலங்கை திரும்புகின்றனர்

A woman shouts in front of the Saudi Arabia embassy during a protest against the torture of L.T. Ariyawathi, who worked as a maid in Saudi Arabia, in Colombo . A Saudi couple tortured Ariyawathi after she complained of a too heavy workload by hammering 24 nails into her hands, legs and forehead, officials said on Thursday. The message reads, " The steps that has been taken are not appropriate". REUTERS/Dinuka Liyanawatte
மத்திய கிழக்கிற்கு வீட்டுப் பணிப் பெண்களாக வேலை வாய்ப்பு பெற்றுச் செல்லும் இலங்கைப் பெண்களில் பலர் சடலங்களாக நாடு திரும்புவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மத்திய கிழக்கிற்கு வேலை வாய்ப்புப் பெற்றுச் செல்லும் பெண்களில் 100 பேர் வருடம்தோறும் சடலமாக நாடு திரும்புகின்றனர் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
இயற்கை விபத்துக்கள், கொலை, தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் இவ்வாறு பெண்கள் உயிரிழப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
2009ம் ஆண்டில் 153 பெண்களின் சடலங்களும், 2010ம் ஆண்டில் 218 சடலங்களும் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

வன்னியில் கடும் வரட்சி; குடிநீருக்கு தட்டுப்பாடு

 வன்னியின் பல பகுதிகளிலும் கடும் வரட்சி நிலவி வருவதால் குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் அங்குள்ள மக்கள் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.கோடைக்கால வரட்சியின் காரணமாக கிணறுகளில் நீர் வற்றியுள்ளது. இதனால் நீருள்ள ஆழமான கிணறுகளை நோக்கி மக்கள் தொலைதூரம் செல்ல வேண்டியுள்ளது. அத்துடன் பெளசர் மூலமான குடிநீர் விநியோகத்திலும் குறைபாடுகள் நிலவுகின்றன. தட்டுவன்கொட்டி, தருமபுரம், பூநகரி, வெள்ளாங்குளம், வலைப்பாடு, முழங்காவில், முட்கொம்பன், அக்கராயன், ஆனை விழுந்தான் ஆகிய பகுதிகளிலுள்ள மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். சில பகுதிகளில் மக்களுக்கான குடிநீர் விநியோகத்தை பிரதேச செயலகங்களும் படையினரும் மேற்கொண்டு வருகின்றனர். எனினும் மக்களுக்கான குடிநீர்ப் பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

வீரபாண்டி ஆறுமுகம் 5ம் தேதி விடுதலையாகிறார்!

சேலம்: முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வரும் திங்கள்கிழமை கோவை சிறையிலிருந்து விடுதலையாகவுள்ளார்.
வீரபாண்டி ஆறுமுகம் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் வீரபாண்டி ஆறுமுகம் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த நீதிபதிகள் வீரபாண்டி ஆறுமுகத்தை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க கடந்த 30ம் தேதி உத்தரவிட்டனர். ஆனால் நீதிமன்றத்துக்கு ஒரு வாரம் விடுமுறை என்பதால் வீரபாண்டி ஆறுமுகம் சிறையில் இருந்து உடனடியாக விடுதலையாக இயலவில்லை.
வரும் 5ம் தேதி தான் நீதிமன்றம் திறக்கப்படுகிறது. அன்று சேலம் நீதிமன்றத்தில் வீரபாண்டி ஆறுமுகம் ஜாமீனில் வெளியே வர அவரது வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்வர்.

இதை மாஜிஸ்திரேட் விசாரித்து, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வீரபாண்டி ஆறுமுகம் ஜாமீனில் செல்ல உத்தரவிடுவார். இதனால் வரும் திங்கள்கிழமை வீரபாண்டி ஆறுமுகம் விடுதலையாவார் என்று தெரிகிறது.

இதற்கிடையே ஒரு மாதமாக சிறையில் உள்ள அவருக்கு உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ளதாக திமுகவினர் தெரிவித்துள்ளனர்.

மகன் நிச்சயதார்த்தத்துக்காக பரோலில் சென்ற நேரு:
இந் நிலையில் மகன் திருமண நிச்சயதார்த்தத்துக்காக பரோலில் சென்ற திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீண்டும் சிறைக்குத் திரும்பினார்
நேரு நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனது மகன் அருண் திருமண நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்வதற்காக அவர் நேற்று முன்தினம் பரோலில் வெளியே சென்றார்.
நேற்று குறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற அருணின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டுவிட்டு, மாலையே சிறைக்குத் திரும்பினார்.

புலிகள் எனப் பெயரை வைத்துக்கொண்டு பூனைகள் போல் பதுங்குகின்றனர். சு.சுவாமி

ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் விவகாரம் இந்தியாவிலே அரசியல் ஆக்கப்பட்டுள்ளதா என்ற தலைப்புடன் அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்று நடாத்திய நேரடி விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய டாக்டர் சுப்பரமணிய சுவாமி இவ்விடயம் அரசியலாக்கப்படவில்லை எனவும் தூக்குத்தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறிப்பிட்ட விடயத்தில் கருணை கோருவது மானங்கெட்டசெயல் எனவும் புலிகள் என தம்மை தெரிவித்துக்கொள்வோர் ரஜீவ் காந்தியை கொலை செய்தால் அதில் நியாயமிருந்தால் வெளிப்படையாக தெரிவிக்கவேண்டியதுதானே, அதைவிடுத்து பூனைகள் மாதிரி பதுங்கி கொண்டு கருணை மனுக்கோருவது வெட்கம்கெட்டசெயல் எனவும் தெரிவித்தூள்ளார்.

மஞ்சள் கோட்டினை பயன்படுத்தாது வீதியை கடப்பவர்ளை கைது செய்ய நடவடிக்கை

போக்குவரத்து விதிமுறைப்படி வீதியினை கடப்பதற்கு மஞ்சள் கோட்டினை பயன்படுத்தாதவர்களை கைது செய்ய நாடு பூராகவும் போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.


போக்குவரத்துக்கு வாகனப் போக்குவரத்துக்கு இடைஞ்சல்கள் ஏற்படுவதுடன் விபத்துக்களும் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

தனுஷ்கோடி வழியாக புதிய பாதையில் சேது சமுத்திர திட்டம்?

Sethusamudram Project
ராமேஸ்வரம்: சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் அமைப்பது குறித்து ஆர்.கே.பச்செளரி தலைமையிலான மத்திய அரசுக் குழுவினர் ராமேஸ்வரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

சுற்றுச்சூழல் மாற்றம் குறித்த சர்வதேச அரசுக் குழுமத்தின் இந்தியப் பிரிவின் தலைவரான பச்செளரி மற்றும் அதிகாரிகள் தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆய்வை நடத்தினர்.

சேது சமுத்திரத் திட்டத்தால் ஆதாம் பாலம்-ராமர் பாலம் சேதப்படுத்தப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்தத் திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
இதையடுத்து பச்செளரி தலைமையிலான குழுவை மத்திய அரசு அமைத்து. இந்தக் குழிவினர் நேற்று ரகசியமாக ராமேஸ்வரம் வந்தனர்.

தனுஷ்கோடி சென்ற அவர்கள் அங்கு தயாராக நிறுத்தப்பட்டிருந்த படகில் 3ம் எண் தீடைக்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் நான்காம் தீடை, ஆதாம் பாலம், கோதண்டராமர் கோவில் பகுதிகளையும் அவர்கள் கருவிகள் மூலம் ஆய்வு செய்தனர்.
பின்னர் மண்டபத்தில் கடலோரப் பாதுகாப்புப் படையினருடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
ராமர் பாலம் வழியாக சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, தனுஷ்கோடி வழியாக இத் திட்டத்தை நிறைவேற்ற மாற்றுப் பாதையை பச்செளரி குழு ஆய்வு செய்ததாகத் தெரிகிறது. தனுஷ்கோடி அருகே தரைப்பகுதியைத் தோண்டி மன்னார் வளைகுடாவுக்கும், பாக் ஜலசந்திக்கும் இடையே கப்பல்கள் செல்லும் அளவுக்கு கடலை ஆளப்படுத்தலாம் என்று இந்தக் குழு கருதுவதாகத் தெரிகிறது.

இது குறித்த அறிக்கையை விரைவில் அவர்கள் மத்திய அரசிடம் தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அங்கவீனர்கள் என்ற போர்வையில் அதி பயங்கரமான புலிகள் வெளியேற்றம்.

புனர்வாழ்வளிக்கப்பட்டு வெளியேறும் முன்னாள் புலிகளுள் வலது குறைந்த நிலைக்கு ஆளான ஆபத்தான புலிகள் பலர் வெளியேறியுள்ளமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 20 வருடங்களுக்கு மேலாக புலிகள் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்த இவர்கள் அங்கவீனர்களுக்கென வழங்கப்பட்ட சலுகைகளை பயன்படுத்தி நளுவிச் சென்றுள்ளனர்.

இவ்வாறு வெளியேறியவர்களில் 2003 ஆம் ஆண்டு வில்பத்து வனப்பூங்காவில் வைத்து இராணுவ உயர் அதிகாரியுடைய வாகனத்தின் மீது குண்டுத்தாக்குதல் மேற்கொண்ட புலித் தலைவர் ஒருவரும் கண்டி தலதா மாளிகை மீத தாக்குதல் நடத்த வந்த பயங்கரவாதி ஒருவரும் பார்வை இழந்தவர் என்று வழங்கிய சான்றிதழின் அடிப்படையில் வெளியேறியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு புனர்வாழ்வு முகாம்களில் காணப்படும் அங்கவீனர்களை விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மிகவிரைவில் வவுனியாவில் வைத்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

புலி உறுப்பினர்களை சமூகத்துடன் இணைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக பலாத்காரமாக புலிகள் இயக்கத்திற்குச் சேர்த்துக் கொள்ளப்பட்ட உறுப்பினர்களும் சிறுவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதன் இரண்டாவது கட்டமாக வலது குறைந்தவர்களும் வயதானவர்களும் விடுவிக்கப்படுகின்றனர்.

'நய வஞ்சகர் ப.சிதம்பரம்!' - ஹஸாரே மோசமான தாக்கு

மத்திய உள்துறை அமைச்சர் ப சிதம்பரத்தை 'நய வஞ்சகர்' என்று மோசமாகத் தாக்கிப் பேசியுள்ளார் அன்னா ஹஸாரே.

வலுவான லோக்பால் சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி டெல்லியில் 12 நாட்களாக ஹஸாரே உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

இதற்கு நாடு முழுவதும் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பின. குறிப்பாக ஹஸாரே பாராளுமன்றத்தையும் அரசையும் மிரட்ட மக்கள் ஆதரவைப் பயன்படுத்துவதாக குற்றம்சாட்டப்பட்டது.

அதற்கேற்ப இப்போது, மத்திய அரசு, அமைச்சரவை, பிரதமர் என நாட்டின் உயர் அமைப்புகள் மற்றும் பதவியில் உள்ளோரை மிக மோசமாக, ஒரு அரசியல்வாதியைப் போல விமர்சித்துப் பேசி வருகிறார் ஹஸாரே.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹசாரே, தனது சொந்த ஊரான மராட்டிய மாநிலம் ராலேகான் சித்திக்கு நேற்று சென்றார். அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அந்த ஊர் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற அவர் பேசுகையில், "ஆங்கிலேய ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகள் கழிந்தும் எந்த மாற்றமும் இல்லை. வெள்ளையர்கள் இடத்தை கறுப்பர்கள் பிடித்து விட்டனர். டெல்லியில் நடத்திய உண்ணாவிரதம் போலவே, அடுத்தடுத்து தொடர் அதிர்ச்சிகளை நாம் அளித்தால் மட்டுமே ஊழலற்ற இந்தியாவை கொண்டு வர முடியும். காந்தி தொப்பியை அணிந்தால் மட்டும் போதாது. ஊழலை ஒழிக்க இளைஞர்கள் கரம் கோர்க்க வேண்டும்.

வஞ்சக எண்ணம் கொண்ட கூட்டத்தினர் இந்த அரசில் (மத்திய அரசு) பிரதான இடம் வகிக்கின்றனர். என்னை உண்ணாவிரதம் இருக்க விடாமல் தடுக்க டெல்லியில் உள்ள அனைத்து மைதானங்களிலும் தடை உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்தது. அதன் பிறகு, ஜே.பி.பூங்காவில் அனுமதி அளித்தபோது ஏராளமான நிபந்தனைகளை விதித்தது. அதை நான் ஏற்கவில்லை.

ப.சிதம்பரம் மீது புகார்

உடனே, அதிகாலை நேரத்தில் வீட்டில் இருந்த என்னை டெல்லி போலீசார் பிடித்துச் சென்றனர். நான் காரணம் கேட்டபோது, 'பொது அமைதிக்கு நான் குந்தகம் விளைவித்ததாக கூறினார்கள். ஆனால், 2 மணி நேரத்தில் என்னை விடுதலை செய்தனர். இரண்டு மணி நேரத்தில் அப்படி என்ன மாற்றம் நடந்து விட்டது? என்னை ஜாமீன் கேட்குமாறு கூறினார்கள். நான் மறுத்து விட்டேன். சிறையில் இருந்து வெளியேறுமாறு தெரிவித்தார்கள்.

உண்ணாவிரதத்துக்கு அனுமதி அளிக்காததால் நான் சிறைத்துறை டி.ஐ.ஜி அலுவலகத்திலேயே தங்கி விட்டேன். அங்கேயே 3 நாள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தேன்.

அரசில் உள்ள வஞ்சகர்களில் குறிப்பிடத்தக்கவர், ப.சிதம்பரம். இவர் நயவஞ்சகர். தொடர்ந்து தொல்லைகள் கொடுக்கும் நபராக அவர் இருக்கிறார்.

பலசரக்கு கடை மாதிரி உள்ளது மத்திய அரசு

மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசானது, பலசரக்கு கடை போல உள்ளது. கடுமையான லோக்பால் சட்டத்தை கொண்டு வருவதில் மத்திய அரசுக்கு ஆர்வம் இல்லை. நம்பிக்கை துரோகம் செய்து வருகிறது. நம்முடைய சமீபத்திய போராட்டத்தால் சிறிது வளைந்து கொடுத்திருக்கிறது.

நாடு முழுவதும் ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இது ஆரம்பம் மட்டுமே. நாம் செல்ல வேண்டிய பாதை இன்னும் நீண்ட தூரம் உள்ளது. ஊழலை முற்றிலுமாக ஒழிப்பதற்கு இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகள் வரை ஆகலாம். அந்த முயற்சிக்காக, நாம் அனைவரும் சிறை செல்ல தயாராக இருப்போம்," என்றார் ஹஸாரே.

ஏற்கெனவே பாராளுமன்றத்தில் உள்ள 150 பேர் கிரிமினல்கள் என்றும், இப்போது பாராளுமன்றத்தில் உள்ள எம்பிக்களை மீண்டும் தேர்வு செய்யக்கூடாது என்றும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார் ஹஸாரே என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியை 14 வயது மாணவனை நிர்வாணமாக்கி அடித்ததால் மாணவன் தற்கொலை

ஆசிரியை   மாணவனை நிர்வாணமாக்கி அடித்து உதைத்ததால் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை சென்னை : ஆசிரியை அவமானப்படுத்தியதால் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, பொதுமக்கள் மறியல், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை டி.பி.சத்திரம் டி.பிளாக்கை சேர்ந்தவர் மோகன் (40), ஆட்டோ டிரைவர். கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கடந்த மாதம் 14ம் தேதி ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருந்ததாவது:

என்னுடைய மகன் ராகுல் (14), புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள இஎல்எம் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்தான். கடந்த மாதம் 12ம் தேதி, ஆசிரியை நித்யாவின் செல்போன் தொலைந்து விட்டதால் என் மகன் உள்பட 9 மாணவர்களை ஆசிரியை விசாரித்தார். ஒரு மாணவன், ராகுல் மெமரி கார்டு வைத்திருந்ததாக ஆசிரியையிடம் கூறியிருக்கிறான். ஆத்திரம் அடைந்த ஆசிரியை, ராகுலை தனி அறையில் அடைத்து வைத்து நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்து மிரட்டியிருக்கிறார்.

உடலில் காயத்துடன் ராகுல் அழுதபடியே வீட்டுக்கு வந்தான். நாங்கள் விசாரித்த போது, ராகுல் விஷயத்தை கூறினான். மேலும் நாங்கள் வீட்டில் இல்லாதபோது எலி மருந்தை குடித்து விட்டான்.  அவனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். கடந்த 14ம் தேதி ராகுல் இறந்துவிட்டான்.  உடனே பள்ளி நிர்வாகம் என்னை அழைத்து ரூ.5 லட்சம் தருகிறோம். நீங்கள் போலீசில் புகார் செய்ய வேண்டாம் என்றனர்.

எனது மகனின் சாவுக்கு காரணமான ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியிருந்தார். கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காததால், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மோகன் புகார் செய்தார். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் ராகுலின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை சேர்ந்தவர்கள் நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டனர். புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் பவானீஸ்வரி, உதவி கமிஷனர் லாயிட் சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியம், முத்துக்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசாரின் சமரச முயற்சிக்கு பின் மக்கள் மறியல் கைவிடப்பட்டது. இஎல்எம் மேல்நிலைப் பள்ளி தாளாளர் விபி சார்லஸ், ஏற்கெனவே நில மோசடி புகாரில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தூக்குத் தண்டனை 11 வருடங்களாக நிறைவேற்றப்படாமல் இருந்ததற்கு தி.மு.க.வே காரணம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு 11 ஆண்டுகளாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாமல் இருப்பதற்குத் தி.மு.கதான் காரணம் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஒரு குற்றவாளியான நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை மட்டும் ஆயுள் தண்டனையாக குறைக்கலாம் என்றும் மற்ற மூவரின் கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும் 2000ம் ஆண்டில் தி.மு.க ஆட்சியில் தான் முடிவெடுக்கப்பட்டது என்று முதல்வர் ஜெயலலிதா பேரவையில் குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கு கருணாநிதி அளித்துள்ள பதில்: நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்ததற்குத் தி.மு.க தான் காரணம் என்பதை முதல்வர் ஜெயலலிதா தன்னை அறியாமலேயே ஒப்புக் கொண்டிருக்கிறார். மற்ற மூவரின் கருணை மனுக்களையும் 2000ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசுக்குத் தமிழக அரசு அனுப்பி வைத்தது என்றும் சொல்லியிருக்கிறார். மத்திய அரசுக்கு அந்தக் கருணை மனுக்களை அனுப்பி வைத்ததன் காரணமாகத்தான் 11 ஆண்டுகளாக அவர்களது தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பதை இதன் மூலம் முதல்வர் ஜெயலலிதா வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஸ்ரீ ல சு கட்சியின் 60வது தேசிய மாநாடு!இணைந்து நின்று நாம் முன்னேறுவோம்படம்: சுதத்மலவீர
இணைந்து நின்று நாம் முன்னேறுவோம்; சுதந்திரக்கட்சி உலகில் எந்தவொரு கட்சிக்கும் சளைத்ததல்ல – ஜனாதிபதி நாட்டு மக்களின் ஆதரவு இருக்கும்வரை எத்தகைய சக்திகளாலும் எம்மைத் தோற்கடிக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது கடந்த 60 வருடகால வரலாற்றைப் பாடமாகக் கொண்டு எதிர்வரும் 60 வருடத்திலும் வெற்றிகரமாக முன்செல்லும் என தெரிவித்த ஜனாதிபதி, சகல அரசியல் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு சகல இன, மத மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவை செய்யும் கட்சியாக எதிர்காலத்திலும் செயற்படும் எனவும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு வெளிப்படையான கட்சி. எச் சந்தர்ப்பத்திலும் நாட்டையும் மக்களையும் காட்டிக்கொடுக் காத மக்கள் கட்சியாக தொடர்ந்தும் பலம்பெற்று வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர்கொள்வதே எமது கொள்கை

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா லக்பிம ஆங்கிலப் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் அதிகாரப் பகிர்வு, உதயன் செய்தி ஆசிரியர் மீதான தாக்குதல் என்பன பற்றி கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகங்களுக்கு தமிழ் அமைச்சர் ஒருவர் தெரிவிக்கும் கருத்துக்களை தமிழ் மக்கள் அறிந்து கொள்வதற்காக அந்தப் பேட்டியின் மொழியாக்கம் இங்கு தரப்படுகிறது.
ஊடகங்களில் இருந்தே ஆரம்பிப்போம். யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளர்கள் பயத்துடனேயே வாழ்கிறார்கள். உங்கள் வழியில் குறுக்கிடும் எவரையும் விட்டுவைக்காத ஒரு பயங்கரமான ஆள் நீங்கள் என்று யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளர்கள் பலர் கருதுகிறார்கள்…
இந்தக் குற்றச்சாட்டுக்களில் ஒன்றும் நிரூபிக்கப்படவில்லை. அவை உண்மையாக இருந்தால் யாழ்ப்பாணத்தில் எந்தவொரு பத்திரிகையும் இருக்கப்போவதில்லை. புலிகள் இருந்தபோது அவர்கள் ஊடகங்களை ஒடுக்கினார்கள். ஆனால், நாங்கள் அதை எப்போதும் செய்ததில்லை. இனிமேலும் செய்யமாட்டோம்.

Anna Hazare தெள்ளியதோர் முடிச்சவிழ்க்கி காங்கிரஸையே குழப்பியடித்தார்.


  • “ரிலையன்சோடு பாத்து நடந்துக்கங்க!” – பிரணாப் முகர்ஜி

    ரிலையன்ஸ், சஹாரா உள்ளிட்ட கார்பப்ரேட் நிறுவனங்களின் முறைகேடுகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் ‘பார்த்து பக்குவமாக’ நடந்து கொள்ளுமாறு நிதியமைச்சர் பிரணாப் அழுத்தம் கொடுத்துள்ளார்.
    .....
    ஆக, இங்கே ஊழல் என்பதன் பிறப்பிடம் என்பது கார்ப்பெரேட் தரகு முதலாளிகள் தான் என்பது இந்த விவகாரத்திலும், இதற்கு முன் வெளியான அநேகமான ஊழல்களிலும் வெளிப்படையாகவே தெரிகிறது. எதார்த்தம் இவ்வாறு இருக்க, அண்ணாவின் ஊழல் எதிர்ப்பு கோஷங்கள் அனைத்திலும் இந்த பகல் கொள்ளை கும்பலை மிகுந்த கவனத்துடன் தவிர்க்கிறார். இந்த நன்றிக் கடனுக்காகத் தான் அண்ணாவின் தம்பிகள் கண்டுபிடித்துள்ள மிஸ்டுகால் புரட்சிக்கும் எஸ்.எம்.எஸ் புரட்சிக்கும் ரிலையன்ஸ் தயங்காமல் ஸ்பான்சர் செய்கிறது.

பொலிஸ் அதிகாரி மரணம்!லிப்டில் சிக்கியவர்களை மீட்க முயன்ற வத்தளை

வத்தளை ஹெரவலப்பிட்டியவிலுள்ள சுப்பர் மார்க்கட்டில் லிப்டில் சிக்கியவர்களை மீட்க முயன்ற பொலிஸ் அதிகாரி  மரணம்!

வத்தளை ஹெரவலப்பிட்டியவிலுள்ள சுப்பர் மார்க்கட்டில் லிப்டினுள் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த நால்வரைக் காப்பாற்றும் மனிதாபிமான முயற்சியில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

42 வயதான லலித் ஜானக அன்ரனி என்ற கடமையுணர்வுள்ள இந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது கால்தவறி அந்த லிப்ட் செல்லும் இடைவெளிக்குள் சென்று கீழே விழுந்து படுகாயம் அடைந்த நிலையில் ராகம ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அவர் மரணமடைந்தார்.

இரண்டு மாடிகளுக்கு நடுவில் இருந்த லிப்டில் சிக்கிக் கொண்ட போதே அதில் இருந்த ஒரு பெண்ணையும் மேலும் மூவரையும் காப்பாற்றி வெளியில் எடுப்பதற்கு எடுத்த முயற்சியே அந்த பொலிஸ் உத்தியோகத்தரின் உயிரை பலி கொண்டது.

இந்தப் பொலிஸ் உத்தியோகத்தர் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய இழுவைப் படகுகள் வந்து அறுத்துக்கொண்டு போகும்

jaffna fishermanஇலங்கையின் வடமுனை மீனவர்கள் ஆழ்கடலில் எதிர்நோக்கும் சவால்கள்
“நாங்கள் கொண்டுபோய் வலையைப் போட்டால் இந்திய இழுவைப் படகுகள் வந்து அறுத்துக்கொண்டு போகும். முன்பெண்டால் நாங்கள் கடலுக்குப் போகும்போது வலையைப் போட்டுவிட்டு நித்திரைகொள்ளுவம். இப்போது நித்திரைகொள்ள ஏலாது. இந்திய இழுவைப் படகுகள் எந்தநேரத்திலும் வரலாம். அதனால் நாங்கள் கவனமாக இருப்போம்.
 இலங்கையின் வட முனைக் கடற்பகுதி கடல்வளம் செறிந்து காணப்படுகிறது. அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் முழுவதும் பெரும்பாலும் அக்கடலையே நம்பித்தான் இருக்கிறது.
இருள் சூழ்ந்த கடலின் நடுவே இரவு முழுவதும் நிலவையும் நட்சத்திரங்களையும் துணையாகக்கொண்டு விடிவெள்ளியின் வருகையில் திசைபார்த்து ஆபத்தான ஆழ்கடலில் அன்றாட உணவுக்காக உழைக்கும் மக்கள் கூட்டம் வாழும் பருத்தித்துறையின் முனைப்பகுதிக்கு மாலை வேளை ஒன்றில் நாம் சென்றிருந்தோம்.
மாலை வேளையாதலால் கடலுக்குச் செல்லத் தயாராகிக்கொண்டிருந்தார்கள் மீனவர்கள். இரவின் மடியில்; உழைத்த உழைப்பின் களைப்பு உடலில் தெரிந்தது.
ஒவ்வொரு விடியலையும் மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கும் இவர்கள் ஒவ்வொரு இரவிலும் சமீபகாலமாக எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் குறித்து கூற வேண்டிய தேவை அவர்களுக்கிருந்தது. அதுபற்றி அவர்களுடன் உரையாடும் வாய்ப்பு எமக்குக் கிடைத்தது.
இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகள், அதற்காக தமிழகத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் என அண்மைக்காலமாக பிரச்சினைகள் உருவாகியவண்ணமே உள்ளன.
இந்நிலையில், உண்மையாகவே இலங்கையின் வடமுனைப் பகுதியில் நடப்பது என்ன என்பது பற்றி அறிந்துகொள்வதற்காக நாம் அவர்களுடன் தொடர்ந்து உரையாடினோம். முனைப் பகுதியைச் சேர்ந்த துரை (வயது 55), இரத்தினம் (வயது 59) ஆகிய இருவரும் இயந்திரப் படகில் கடலுக்கு எம்மை அழைத்துச் சென்று சுதந்திரமாக கருத்துக்களைத் தெரிவித்தார்கள்.
“நாங்கள் கொண்டுபோய் வலையைப் போட்டால் இந்திய இழுவைப் படகுகள் வந்து அறுத்துக்கொண்டு போகும். முன்பெண்டால் நாங்கள் கடலுக்குப் போகும்போது வலையைப் போட்டுவிட்டு நித்திரைகொள்ளுவம். இப்போது நித்திரைகொள்ள ஏலாது. இந்திய இழுவைப் படகுகள் எந்தநேரத்திலும் வரலாம். அதனால் நாங்கள் கவனமாக இருப்போம்.
கடல் எல்லைப் பிரச்சினையும் இருக்கிறது. இந்திய - இலங்கை கடல் எல்லை எதுவென நேவிக்காரருக்குத்தான் தெரியும். இந்தியன் நேவிக்கும் தெரியும். எங்களிட்ட ரேடார் கிடையாது. அதனால எல்லையை கண்டுபிடிக்கிறதில சிக்கல் இருக்குது.
ஆனாலும் நாங்கள் இந்தியன் கடல் எல்லைக்குள்ள போறதில்ல. இந்திய மீனவர்கள் தான் எங்கட எல்லைக்குள்ள வருவினம்.கடந்த வாரம் என்ர எட்டு வலைகள் இழுவைப் படகு வந்ததால அறுந்துப்போச்சுது. ஒரு துண்டு 12 ஆயிரம் ரூபா. இந்திய மீனவர்களால பல லட்சம் ரூபா பெறுமதியான வலைகளை இழந்தவர்களும் இருக்கினம்;. இது காலங்காலமாக நடக்கும் சம்பவங்கள்.
இந்திய மீனவர்கள் எங்களைத் தாக்குவது உண்டு. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான படகுகளில் வருவினம். எங்களது வலைகளை அறுத்துக்கொண்டு செல்வார்கள். அப்படியான சந்தர்ப்பங்களில் வாக்குவாதம் ஏற்பட்டதுமுண்டு.
சிலநேரங்களில் அவர்கள் எங்களைத் தாக்குவார்கள். தாக்குதல் சம்பவங்கள் தொடர்வதை தாங்க முடியாமல் நாம் குழுவாக சென்று அவர்களுடைய படகுகளை இழுத்து வந்து எமது கரையில் கட்டி வைத்த சந்தர்ப்பமும் இருக்குது.
இப்போது கொஞ்ச நாட்களாக கடல்வளம் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஒரு போர்ட்டில் கிட்டத்தட்ட 60 அல்லது 70 கிலோ மீன்கள் கொண்டுவருவம். இப்போது ஆறு அல்லது ஏழு கிலோ கரைக்குக் கொண்டுவருவதே சிரமமாக இருக்கிறது. அதோட இந்தக் கொஞ்ச நாட்களாக கடலில் ஒருவகை பாசி உருவாகியுள்ளது” என இருவரும் தமது அனுபவங்களையும் தற்போதைய நிலைவரங்களையும் எமக்குக் கூறினார்கள்.
ஆம்! இவர்கள் கூறும் விடயங்களைக் கேட்கும்போது எமக்கு பல்வேறு வகையிலும் சிந்திக்கத் தோன்றியது.
முனைப்பகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை உரியவர்கள் நேரடியாக ஆராயத் தவறுகின்றமையும் அடிக்கடி நிகழும் அசாதாரண சூழ்நிலைகளால் ஏற்படும் தாக்கங்கள் குறித்தும் மீனவர்கள் சுட்டிக்காட்டினர்.
இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள தேசிய கடற்றொழில், நீரியல் வளக் கொள்கைக் கோவையில், ‘கரையோர கடற்றொழில் துறையில் பாரம்பரிய மீனவனுக்குள்ள உரிமைகளை உறுதிப்படுத்துதல்’ எனும் கருப்பொருள் 8ஆவது அங்கமாக இடம்பெற்றுள்ளது. எனினும் நடைமுறையில் இது சாத்தியமாகிறதா?
அந்த கொள்கைக் கோவையின் 12 ஆவது பிரிவு இவ்வாறு கூறுகிறது, ‘ கடற்றொழில் வளங்களை அனுமதியின்றி அறுவடை செய்வதைத் தவிர்ப்பதற்காக கடற்றொழிலாளர்களின் பங்களிப்புடன் தேடுதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை விருத்தி செய்தலும் மேற்பார்வை நடவடிக்கைக்கான பிரிவு ஒன்றை ஸ்தாபித்தலும்’.
இதன்பிரகாரம் மீனவர்களுக்குரிய வசதிகள் செய்துகொடுக்கப்பட்டிருக்கின்றனவா என்பதும் கேள்விக்குறியே.
இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக உள்நுழைதல் விடயத்தில் அவர்களுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின்போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்பது ஆராயப்பட வேண்டும்.
ஆக! கடல் அன்னையை நம்பிக் காலம் முழுவதும் ஆபத்தான தொழிலோடு ஜீவனோபாயம் நடத்திவரும் இந்த மீனவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுதல் அவசியமாகும்.
இலங்கை அரசாங்கம் இதற்குரிய தீர்வுகளைக் காலம் கடத்தாமல் முன்வைக்க வேண்டும். இல்லாவிடின் குறையோ நிறையோ இயற்கையையே நம்பி வாழும் இவர்களுடைய கவலைமிகுந்த வாழ்க்கைக்கு கட்டாயம் பொறுப்புக் கூறவேண்டிவரும் என்பதே உண்மை.
வீரகேசரி

யாழ். குடாநாட்டில் 24 மணி நேரம் பொலிஸ் ரோந்து

யாழ்ப்பாண குடாநாட்டில் 24 மணி நேரமும் பொலிஸாரை ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் தலைமையக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் சிக்காரோ தெரிவித்தார். யாழ். பொலிஸ் நிலையத் தில் நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையைக் கருத்தில் கொண்டு 24 மணி நேரமும் பொலிஸ் ரோந்து ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக அவர் கூறினார். பொலிஸ் பொதுமக்கள் உறவு பேணப்பட்டு வருகிறது. மக்களுக்கு உதவி புரிவதே பொலிஸாரின் பாரிய பொறுப்பாகும் என்றார். ஜீப் வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கர வண்டிகளில் பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் எனவும் அவர் கூறினார்

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

லஞ்ச ஊழல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சிக்குகின்றனர் வருமான வரி ஏய்ப்பு


சென்னை : வருமான வரித்துறை அதிகாரி ரவீந்தரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. வரி ஏய்ப்பு மற்றும் லஞ்ச ஊழல் விவகாரத்தில் பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் எவரான் எஜூகேஷனல் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் ரூ.116 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்திருந்ததை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனால், வருமான வரித்துறை கம்பெனிகள் பிரிவு கூடுதல் கமிஷனர் அண்டாசு ரவீந்தரிடம் எவரான் நிறுவன அதிகாரிகள் அணுகி, வரி மோசடியில் பணத்தை குறைத்து மதிப்பிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

‘ரூ.116 கோடி வரி ஏய்ப்புக்கு குறைந்தது ரூ.40 கோடி அபராதம் விதிக்க வேண்டும். அதற்கு பதில் ரூ.5 கோடி கொடுத்தால் வருமான வரியை குறைத்து போடுகிறேன்’ என்று ரவீந்தர் கூறியுள்ளார். ஒரு ஆடிட்டர் மூலம் ரூ.50 லட்சம் பேரம் பேசப்பட்டது. அந்த பணத்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள ரவீந்தரின் வீட்டில் கொடுத்தபோது, சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக ரவீந்தர், எவரான் நிறுவன உரிமையாளர் கிஷோர்குமார், ஹவாலா புரோக்கர் உத்தம் சந்த் போரா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ரூ.1.08 கோடி ரொக்கம், 2 கிலோ 300 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மும்பையில் ரவீந்தருக்கு 2 காதலிகள் இருப்பது தெரியவந்தது. அவர்களது வீட்டில் சோதனை நடத்தியபோது ஏராளமான ஆவணங்கள் சிக்கின. சமீபத்தில் சென்னையில் தொடர் சோதனையில் சிக்கிய ஒரு ஜவுளிக்கடைக்கும் ரவீந்தர், மறைமுகமாக உதவி செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் இதுபோல பல கம்பெனிகளுக்கு தனது அதிகாரத்தை பயன்படுத்தி, பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பை ரத்து செய்துள்ளார். அபராத தொகையையும் ரத்து செய்துள்ளார். அதற்காக லட்சக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார். இதனால் அரசுக்கு வர வேண்டிய பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இது தொடர்பான ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். எவரான் நிறுவன உரிமையாளருக்கு பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் நெருங்கிய நட்பு இருந்துள்ளது. அவர்களும், வருமான வரியை குறைக்கும்படி ரவீந்தருக்கு பரிந்துரை செய்துள்ளனர். இதுகுறித்த தகவல்களும் சிபிஐக்கு கிடைத்துள்ளது.

எனவே, சிறையில் இருக்கும் ரவீந்தர், கிஷோர்குமார், உத்தம் சந்த் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கோர்ட்டுக்கு 5 நாட்கள் விடுமுறை என்பதால் திங்கள்கிழமை 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க கோரும் மனுவை சிபிஐ கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர். ரவீந்தரிடம் நடத்தப்படும் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரி ஏய்ப்பு கம்பெனிகளுக்கு உதவிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் சிக்குவார்கள் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன

piaggio citroen கார் தொழிற்சாலை குஜராத் மாநிலத்திற்கு சென்றது

ஆமதாபாத்: பிரான்சின் பி.எஸ்.ஏ பாஜியோ சிட்ரான் நிறுவனம், குஜராத்தில் 4,000 கோடி ரூபாய் முதலீட்டில் கார் தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்துள்ளது. சென்னைக்கு அருகில், கார் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டிருந்த இந்நிறுவனத்தின் திடீர் மனமாற்றம், தமிழக அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இரு மாதங்களுக்கு முன்பு, பாஜியோ சிட்ரான் நிறுவனத்தின் உயரதிகாரிகள் குழு, தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, சென்னையில் கார் தொழிற்சாலை அமைப்பது குறித்து, பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது, கார் தொழிற்சாலை அமைப்பதற்கான நில ஒதுக்கீடு உள்ளிட்ட, அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து கொடுக்க தயாராக உள்ளதாக முதல்வர் தெரிவித்தார். இதையடுத்து, சென்னை அருகே கார் தொழிற்சாலை அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழக முதல்வரை சந்தித்த மறுநாளே, இந்நிறுவனத்தின் உயரதிகாரிகள் குழு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை சந்தித்து, அம்மாநிலத்தில் கார் தொழிற்சாலை அமைப்பது குறித்தும், பேச்சுவார்த்தை நடத்தியது.

இது தொடர்பாக, இந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகம், குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கார் தொழிற்சாலை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், கடந்த இரு மாதங்களாக, பாஜியோ கார் தொழிற்சாலை, எங்கு அமையும் என்பது புரியாத புதிராக இருந்தது. இந்நிலையில், இந்நிறுவனம், குஜராத்தின் சனந்த் தொழிற்பேட்டையில் அதன் கார் தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக, குஜராத் அரசுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வகையில், தமிழகத்தின் வாய்ப்பை, குஜராத் அரசு தட்டிப் பறித்து விட்டதாக, இத்துறையை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். சனந்தில் ஏற்கனவே டாட்டா நிறுவனம் அதன் "நானோ' கார் தொழிற்சாலையை அமைத்துள்ளது. போர்டு மோட்டார்ஸ் நிறுவனமும், 5,000 கோடி ரூபாய் முதலீட்டில், அங்கு கார் தொழிற்சாலை அமைக்க உள்ளது என்பது, குறிப்பிடத்தக்கது

இம்மாதிரி நடக்கவில்லை என்றால் தான் ஆச்சரியம். தமிழகத்தில் தொழிற்சாலை வந்தால் என்ன? வராவிட்டால் என்ன? காரியம் நடக்கணுமா, பொட்டி குடு. அதுவும், பிக் மம்மி, லிட்டில் மம்மி, கூட்டணி எதிர்கட்சி ஜால்ரா தலைவர், என்று எத்தனை பேருக்கு பொட்டி கொடுக்கணும்? அதெல்லாம் இல்லாம தமிழ்நாட்டுல வேலை நடக்குமா? அப்படியே இந்த மாதிரி தொழில்வாய்ப்புகள் தட்டிபோனாலும், மக்கள் பெரிதாக கவலைப்பட போவதில்லை. அவர்களை திசை திருப்ப இருக்கவே இருக்கிறது கருணாநிதி மீது வசைமாரி. திமுக மீது ஊழல் வழக்குகள் என்று. இந்த நாடகங்களை எத்தனை முறை பார்த்தாலும் மக்களுக்கு அலுக்கவும் போவதில்லை. கேட்க வேண்டிய எதிர்கட்சிஜால்ரா தலைவர் ஐந்தாண்டுகள் வாயே திறக்க போவதில்லை. அவருக்குத்தான் நோகாமல் கட்டிங் வந்து விடுகிறதே. அது போதுமே. பத்திரிகைகள்? அவர்களுக்கு இதெல்லாம் ஒரு செய்தியே அல்ல. தினமலர் மட்டும் ஐயோ வாய்ப்பு போய் விட்டதே என்று அங்கலாய்க்கும். அப்போது கூட கண்டிக்க முடியாது. முதல்வரை விமரிசித்தால் என்ன நடக்கும் என்பது எதிர்கட்சி தலைவருக்கே தெரிந்ததால் தான் ஆறு மாசம் வாய்தா வாங்கி இருக்கிறார்.இந்த வாய்தா மேலும் தொடரும்.அப்படியிருக்க பத்திரிகைகள் என்ன செய்யும்?பாவம்.மக்கள். அவர்களுக்கு இதற்கெல்லாம் ஏது நேரம்? அப்படியே யாராவது கேட்டு விட்டால் அவர் திமுக காரர் என்று வலுக்கட்டாயமாக திமுகவில் சேர்க்கப்படுவார். எதற்கு வீண் வம்பு? இப்படியே ஐந்து வருஷமும் புலம்பி விட்டு போவோம் அது தான் நல்லது.

அசின் - ஜெனிலியாவின் குழாயடி சண்டை!


அசின், ஜெனிலியா இடையே நிலவி வரும் பனிபோர் தற்போது குழாயடி சண்டை லெவலுக்கு இறங்கியுள்ளதாம்.

தமிழில் சூர்யா ஜோதிகா நடிப்பில் வெளியான காக்க காக்க இந்தியல் ரீமேக் செய்யப்பட்டது. அதில் ஜான் ஆபிரகாம்  ஜெனிலியா நடித்துள்ளனர். இதன் தெலுங்கு ரீமேக்கில் அசின் நடித்துள்ளார். சமீபத்தில் இந்தி ரீமேக்கான காக்க காக்க ஆடியோ விழா நடந்தது.
இந்த விழாவில் கலந்து கொண்ட அசின், ஜெனிலியாவின் நடிப்பை பலவாறாக விமர்சனம் செய்ய, கடுப்பான் ஜெனிலியா, தமிழ் காக்க காக்க படத்தில் ஜோதிகா அபாரமாக நடித்திருந்தார். அதில் அவர் ரொம்ப அழகாக இருந்தார்.

ஆனால், தெலுங்கு ரீமேக்கில் அசின் ஒரே சொதப்பல், ஓவர் ஆக்டிங் பண்ணி கதாபாத்திரத்தையே கெடுத்துவிட்டார். ஜோதிகாவை காப்பியடித்திருக்கிறார். அதையும் சரியாக செய்யவில்லை. அசின் இனிமேலாவது நடிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என விளாசி தள்ளிவிட்டார் ஜெனிலியா.


ஒரே நாளில் ரூ. 22 கோடி வசூல்!சல்மான் கான் நடித்த 'பாடிகார்ட்

t;


சல்மான் கான், கரீனா கபூர் நடிப்பில் வெளியாகியுள்ள பாடிகார்ட் படம் திரையிட்ட முதல் நாளிலேயே ரூ. 22 கோடியை வாரியுள்ளது. இதுவரை இந்தித் திரையுலகில் படைக்கப்பட்டிருந்த முதல் நாள் வசூல் சாதனையையும் முறியடித்துள்ளது பாடிகார்ட்.

மலையாளத்தில் வெளியான பாடிகார்ட் படம் பின்னர் தமிழில் காவலன் என்ற பெயரில் விஜய் நடித்து வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இப்போது இது இந்திக்கும் அதே பெயரில் போயுள்ளது. இந்தியில் சல்மான் கான், கரீனா கபூர் நடித்துள்ளனர்.

ரம்ஜான் பண்டிகையின்போது திரைக்கு வந்த பாடிகார்ட் வசூலில் சாதனை படைக்க ஆரம்பித்துள்ளதாம். படம் சூப்பர் ஹிட் ஆகியிருப்பதால் சல்மான் கான் குஷியாகியுள்ளார். அவரது குஷிக்கு எக்ஸ்டிரா காரணமும் உண்டு. கடந்த 2009ல் ரம்ஜான் பண்டிகையின்போது அவர் நடித்த வான்டட் படம் வெளியாகி ஹிட் ஆனது. 2010ல் தபங் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இதுவும் ரம்ஜானுக்குத்தான் வெளியானது. இப்போது தொடர்ச்சியாக 3வது முறையாக ரம்ஜான் பண்டிகையன்று வெளியான பாடிகார்ட் பெரும் வசூலை வார ஆரம்பித்திருப்பதால் சல்மான் தரப்பு மகிழ்ச்சியடைந்துள்ளது.

இந்த ரூ. 22 கோடி என்பது உள்ளூர் வசூல் மட்டுமே. உலகளாவிய வசூல் இன்னும் கணக்கிடப்படவில்லை.

பாடிகார்ட் குறித்து ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி ப்ரீத்தி சஹானி கூறுகையில், மிகப் பிரமாதமான வரவேற்பு படத்துக்குக் கிடைத்துள்ளது. முதல் நாளில் ரூ. 20 கோடி கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் கூடுதலாகவே கிடைத்துள்ளது. முதல் நாள் வசூல் சாதனையில் இது ஒரு மைல் கல் என்றார்.

ரூ. 60 கோடியில் இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 2600 பிரின்டுகளும், வெளிநாடுகளில் 325 பிரிண்ட்களும் போட்டுள்ளனர்.

மலையாள பாடிகார்டை இயக்கிய சித்திக் இப்படத்தையும் இயக்கியுள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சல்மான் கானின் மைத்துனர் அதுல் அக்னிஹோத்ரி தயாரித்துள்ளார். முதல் வாரத்தில் பாடிகார்ட் ரூ. 100 கோடி வசூலை அள்ளும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் வெளியான ஒரிஜினல் பாடிகார்ட் படம் சுமாராகத்தான் போனது என்பது நினைவிருக்கலாம். ஆனால் தமிழிலிலும், இந்தியிலும் இப்படம் மெகா ஹிட் ஆகியுள்ளது

ஆசிரியை அடித்ததால் மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறி போராட்டம்


மாணவர்களை அடிக்கும் காட்டுமிராண்டித்தனம் இன்னும் நமது நாடுகளில் இருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம்.

சென்னை: ஆசிரியை அடித்ததால் 10ம் வகுப்பு மாணவன் பூச்சி மருந்து குடித்துத் தற்கொலை செய்து கொண்டதாக கூறி பெற்றோரும், உறவினரும் சென்னையி்ல சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை புரசைவாக்கத்தில் இஎல்எம் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பத்தாம் வகுப்பு படித்து வந்தவர் ஜான்சன். இவர் பூச்சி மருந்து குடித்துத் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு அவர் படித்து வந்த பள்ளி ஆசிரியை நித்யாதான் காரணம் என்று கூறி இன்று பள்ளி முன்பு பெற்றோரும், உறவினர்களும் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து ஜான்சனின் தாயார் அன்னபுஷ்பம் கூறுகையில், எனது மகன் ஆசிரியை நித்யாவின் செல்போனை திருடி விட்டதாக கூறி குற்றம் சுமத்தியுள்ளனர். பின்னர் ஆசிரியை நித்யாவும், ஆசிரியர் ரஞ்சித் என்பவரும் பள்ளி மாடியில் வைத்து சரமாரியாக அடித்துள்ளனர். மேலும், 3 மணி நேரம் முட்டி போட வைத்துள்ளனர்.

இதனால் மனம் உடைந்த எனது மகன் வீட்டுக்கு வந்ததும் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்துக் குடித்து விட்டான். ஆசிரியை நித்யா, ஆசிரியர் ரஞ்சித்தான் எனது மகனின் சாவுக்குக் காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

ஆனால் ஆசிரியர்கள் அடித்ததால் மாணவன் ஜான்சன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது.

ரெய்டு' நடத்தி மிரட்டி நடிகைகளை வளைத்துப் போட்ட வருமான வரி அதிகாரி ரவீந்திரா


சென்னை: ரெய்டு நடத்தி மிரட்டி, பல நடிகைகளை வருமான வரித்துறை உதவி ஆணையர் ரவீந்திரா வளைத்துப் போட்டுள்ளதாக சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளது.
3 நாட்களுக்கு முன்பு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மேல் முறையீட்டு உதவி ஆணையர் ரவீந்திரா ரூ. 50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார். அவருடன் எவரான் எஜுகேஷன் நிறுவனம் என்ற ஆன்லைன் கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிஷோர் குமார், உத்தம் சந்த் ஆகியோரும் சிக்கினர்.

ரவீந்திராவிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரவீந்திரா லஞ்சம் மூலம் பெருமளவில் சம்பாதித்துக் குவித்து வைத்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தியாவின் 18 நகரங்களில் உள்ள முக்கிய பொழுது போக்குக் கிளப்களில் இவர் உறுப்பினராக உள்ளார். இதன் மூலம் கேளிக்கை நிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்று லட்சக்கணக்கில் பணத்தைத் தண்ணீராக வாரியிறைத்து செலவிட்டு வந்துள்ளார்.

தொழில் நிறுவனங்கள், நடிகர், நடிகைகள் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தித்தான் இவ்வாறு லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக பல நடிகைகளை இவர் ரெய்டு மூலம் வளைத்துப் போட்டுள்ளார்.

தன் கீழ் உள்ள அதிகாரிகளை ஏவி விட்டு ரெய்டு என்ற பெயரில் நடிகைகளை மிரட்டி தனக்குப் பணிய வைத்ததாக கூறப்படுகிறது. சென்னை, பெங்களூர், ஹைதராபாத்தில் உள்ள பல நடிகைகளை இவர் இப்படி ரெய்டுமூலம் வளைத்துள்ளாராம்.

மேலும் சரவணா ஸ்டோர், சரவணா செல்வரத்தினம் உள்ளிட்ட சென்னை நகரின் முக்கிய வணிக நிறுவனங்களிலும் பெருமளவில் வரி ஏய்ப்புகளை நடக்க அனுமதித்து பெருமளவில் பணம் சம்பாதித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இதேபோல கைதான கிஷோர் குமாரும் மிகப் பெரிய மோசடிக்காரராக இருக்கிறார். இவரது நிறுவனம் ஆன்லைன் மூலம் பாடங்களைக் கற்றுத் தரும் நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிறுவனம் கிட்டத்தட்ட ரூ. 116 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது. இதை சரி செய்யத்தான் ரூ. 50 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளனர். அதை வாங்கியபோதுதான் ரவீந்திராவும், மற்ற இருவரும் சிக்கினர்.

எவரான் நிறுவனத்துடன் பத்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதையும் சிபிஐ கண்டுபிடித்துள்ளது. இவர்களி்ல இருவர் பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் ஆவர். இவர்களில் ஐந்து பேர் தற்போதும் பணியில் இருந்து வருகின்றனர். இவர்கள் பகுதி நேரமாக இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனராம். இதற்காக வருடத்திற்கு ரூ. 50லட்சம் வரை சம்பளமாக பெறுகிறார்களாம் இவர்கள்.

எவரான் மோசடியும், ரவீந்திராவின் மோசடியும் மிகப் பெரிய அளவில் இருப்பதால் சிபிஐ அதிர்ச்சி அடைந்துள்ளது. இவர்கள் இருவரையும் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தும்போது அவர்களின் மோசடிகள் முழுமையாக அம்பலமாகும் என்று எதிர்பார்க்கிறது சிபிஐ.

Charge Adele Balasingham for Child murder: SL Tamils in UK

Sri Lankan Tamils living in the UK together with Sinhala organizations have prepared a petition to urge British authorities to charge Adele Balasingham,wife of late LTTE Theoretician Anton Balasingham for being directly involved in the suicide incidents of LTTE child combatants by garlanding them with cyanide capsules within the territory of Sri Lanka.
Reports from London received this morning stated the petition noted that Adele had directly aided and abetted in committing murder of children of another country while living in Britain during that period.A video clip that captured the moment in Wanni,Northern Sri Lanka, where Adele tied the knot of the first cyanide capsule around the neck of a 12 year old female child combatant is being attached as direct evidence to prove her involvement.

99 கிலோமீற்றர் காபர்ட் பாதை நிர்மாணிப்பு பணிகள் பூர்த்தி (காணொளி)பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ்வின் வழிகாட்டலில் உலக வங்கியின் 3000 மில்லியன் ரூபாய் செலவில் திருக்கொண்டியாமடு முதல் அக்கரைப்பற்று வரையான 99 கிலோமீற்றர் வரையான காபர்ட் பாதை நிர்மாணிப்பு பணிகள் பூர்த்தியடைந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து தற்போது பாதையை அழகுபடுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படடுள்ளன.
இந்நிலையில், பாதையின் நடுவே நவீன மின்விளக்குகளை பொருத்தும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்படடுள்ளன.

இதன் முதற்கட்டமாக காத்தான்குடி நகரசபை பிரிவிலும் மட்டக்களப்பு மாநகர சபை பிரிவிலும் தற்போது மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் இடம் பெற்றுவருகின்றன.
வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

காத்தான்குடி பிரதான வீதியின் நடுவே 112 வீதியோர மின்விளக்குள் பொருத்தப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாநகர சபைபிரிவில் 56 மின்விளக்குகளும் பொருத்தப்பட்டுவருகின்றன.
இத்திட்டத்திற்கென வீதி அபிவிருத்தி அதிகாரசபை பல மில்லியன் ரூபாய் செலவிட்டு வருகின்றது.

5879 (Elephants) யானைகள் இலங்கையில் வாழ்கின்றன


இலங்கையில் தற்போது 5879 யானைகள் காணப்படுவதாக வனஜீவராசிகள் திணைக்களம் சற்றுமுன்னர் தெரிவித்துள்ளது.
பத்தரமுல்லை வனஜீவராசிகள் பராமரிப்பு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

யானைக் குட்டிகள் 1108, தந்தத்துடன் கூடிய யானைகள் 122ம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் காணப்படும் யானைகள் குறித்த கணக்கெடுப்பு கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது

அதியுயர் பாதுகாப்பு வலயமும் ரத்து-கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்!

அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகள் அமுலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதற்கு அமைய அதியுயர் பாதுகாப்பு வலயமும் ரத்து-கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்!


அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகள் அமுலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதற்கு அமைய அதியுயர் பாதுகாப்பு வலயமும் ரத்தாவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.சிங்கள நாளேடு ஒன்றுக்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

அதியுயர் பாதுகாப்பு வலயத்தை நடைமுறைப்படுத்தும் அவசியம் இல்லையென்று தெரிவித்துள்ள கோத்தபாய ராஜபக்ச, ஆகையால் அதற்கான புதிய கட்டளை அமுலுக்குக் கொண்டு வருவதற்கான அவசியம் எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 4 புதிய கட்டளைகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச'வினால் விதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகள் அமைப்பு மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடைகளைத் தொடர்ந்தும் அமுலில் வைத்திருக்கவும் தடுப்புக் காவலில் இருக்கும் புலி உறுப்பினர்கள் மற்றும் சந்தேக நபர்களைத் தொடர்ந்தும் தடுத்து வைத்துக் கொள்ளவும் ஜனாதிபதியினால் இந்தக் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டிருப்பதாக சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச'வுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 27 ஆவது சரத்தின் கீழ் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்தப் புதிய கட்டளைகள் விதிக்கப்பட்டிருப்பதாகவும் சட்டமா அதிபர் கூறியுள்ளார்.

அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகள் நேற்று வியாழக்கிழமை முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும்வகையில் ரத்துச் செய்யப்பட்டுள்ளமையால் இந்த புதிய கட்டளைகளை விதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டதாக மொஹான் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

புலிகள் அமைப்பு மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இரண்டும் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக பெயரிடப்பட்டிருப்பதும் புலி சந்தேக நபர்கள் சிறை வைக்கப்பட்டிருப்பதும் அதேபோல் முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்படுவதும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் தான் என்பதால் அந்த ஒழுங்கு விதிகள் ரத்தாகும் அதேநேரம், அதற்குப் பதிலாக புதிய சட்டம் தேவைப்பட்டதாகவும் சட்ட மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சோனியாகாந்திக்கு ராஜீவ்காந்தி கொலையாளி மகள் உருக்கமான கடிதம்!

தூக்கு தண்டனையில் இருந்து என் தந்தையை காப்பாற்றுங்கள்: சோனியாகாந்திக்கு (ராஜீவ்காந்தி கொலையாளி)முருகன் மகள் உருக்கமான கடிதம்!


தூக்கு தண்டனையில் இருந்து என் தந்தையை காப்பாற்றுங்கள்: சோனியாகாந்திக்கு (ராஜீவ்காந்தி கொலையாளி)முருகன் மகள் உருக்கமான கடிதம்!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன் ஆயுள் தண்டனை பெற்ற நளினி ஆகியோருக்கு ஹரித்ரா என்ற மகள் இருக்கிறார்.
வேலூர் சிறையில் பிறந்த இவள் சில காலம் பாட்டியின் பராமரிப்பில் இலங்கையில் வளர்ந்தார். தற்போது 19 வயதாகும் ஹரித்ரா, லண்டனில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

முருகனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை கோர்ட்டு தடையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் ஹரித்ரா காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
நான் சிறையில் பிறந்தது எனது துரதிர்ஷ்டமாகும். பெற்றோரின் பராமரிப்பு, அன்பு, உபசரிப்பு எதுவுமே கிடைக்காமல் வளர்ந்து விட்டேன். இந்திய வரலாற்றில் ராஜீவ்காந்தியின் படுகொலை மிகவும் பயங்கரமானது, சோகமானது.
என்றைக்காவது ஒரு நாள் எனது பெற்றோருடன் சேர்ந்து உணவு சாப்பிடுவேன். எனது தந்தையின் மடியில் தலை வைத்து படுத்து உறங்குவேன் என்ற கனவு எனக்கு எப்போதும் இருந்து வருகிறது.

எனது வாழ்வில் இந்த கனவு நிறைவேற வேண்டும் என்று விரும்புகிறேன். தங்களின் இரக்கமும், கருணையும் இல்லையென்றால், இதில் எதுவுமே நிறைவேறாது.
எனவே, கருணை வைத்து எனது தந்தையை காப்பாற்றுங்கள். தந்தை என்னிடம் வர உதவுங்கள். ஒரு ரட்சகராக இதை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஹரித்ரா குறிப்பிட்டுள்ளார்.

No corporal punishment

By Sandun A Jayasekera
Laws will be introduced to make it a punishable offence to give corporal punishment at schools, children’s homes or at prisons, government sources said yesterday. A Women Empowerment and Child Welfare Ministry official said the laws would prevent prison authorities from treating prisoners in a manner that violated their rights. He said the November 2001 Education Ministry circular which requested teachers and principals not to use corporal punishment on errant students as a means of disciplining them had not brought the expected results.
The ministry official said in many instances parents had lodged police complaints and even resorted to legal action against school authorities for punishing their children and added that parents and school authorities had clashed on several occasions on this matter.
The prime mover of this exercise is The Save the Children organization which has activated the process to abolish corporal punishment in Sri Lanka as a global obligation and in keeping with international conventions and laws.
The Save the Children is in constant contact with the government institutions that have a direct bearing on the subject and on drafting necessary legislation.
Save the Children representative Menaca Kalyanaratne said parents hit and humiliate children when they are tired or stressed out or believing it was a way to discipline their children.  But Hitting, humiliating and other violent methods harm children physically, lower the children’s self-confidence, make them feel fearful and depressed, encourage them to be aggressive, create anger and resentment damaging the parent-child relationship“Physical and humiliating punishment do not teach children what we want them to learn. It is as simple as that,” she said.
Ms. Kalyanaratne said positive discipline was an approach to teaching that guides children’s behaviour, while respecting their right to a safe environment, protection from violence and participation in their learning. “If positive discipline is not sufficient to control children they can be disciplined by using other methods such as preventing them from watching TV,” she said.

சாமியார்கள் இந்தியாவின் சுவிஸ் வங்கிகள் corporate சாமியார்களும் தரகர்களாக மாறி

சமீபத்தில் ஓஷோவின் புனே ஆஸ்ரமத்தோடு முன்பு தொடர்பில் இருந்த ஒரு நண்பரைச் சந்தித்தேன். அவர் ஓஷோவின் இறுதி நாட்கள் பற்றி நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். ‘ஓஷோ மிகவும்   தனிமைப்படுத்தப்பட்டவராகவும் மன உளைச்சலுடனும் இருந்தார். ஆஸ்ரமத்தின் பெருமதிப்பிலான சொத்துக்களைக் கைப்பற்ற உடனிருந்த சிலரால் அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. அவருக்கு உண்மையிலேயே நெருக்கமாக இருந்த ஒரு சிலரே கடைசியில் அவருக்குத் துணையாக இருந்தனர்’ என்றெல்லாம் அவர் சொல்லிக்கொண்டிருந்தார். பேச்சு இந்தியாவில் உள்ள பல புகழ்பெற்ற ஆஸ்ரமங்கள் பற்றித் திரும்பியது. ‘இந்த ஆஸ்ரமங்களின் ஆன்மீக அனுபவத்திற்கும் போதைப் பொருள் உபயோகத்திற்கும் உள்ள தொடர்புகளை நாம் கவனமாக ஆராய வேண்டும். வெளிநாட்டுப் பக்தர்களின் ஏராளமான வருகைக்கும் இந்த போதைப்பொருள் உபயோகத்திற்கும் சம்பந்தமிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் சர்வ தேச போதைப் பொருள் வர்த்தகத்தோடு சில ஆஸ்ரமங்கள்  தொடர்புகொண்டிருக்கின்றன. அவற்றிடம் சேரும் பணம் வெறுமனே பக்தர்களின் காணிக்கையால் வருகிறது என்பது நம்ப முடியாத கட்டுக் கதை’ என்றார் அவர்.
சமீபத்தில் ஒரு கடவுளின் சொத்து மதிப்பும் ஒரு ஆன்மீக குருவின் சொத்து மதிப்பும் இந்தியாவில் பரபரப்பான செய்திகளாகியிருக்கின்றன.
மேலும் கடந்த சில நாட்களில் பஸ்களிலும் லாரிகளிலும் கடத்தப்படும் சாய் பாபாவின் பணம் லட்சக்கணக்கில் கட்டுக்கட்டாக கைப்பற்றப்படும் செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. ஆள் ஆளுக்குக் கையில் கிடைத்த பண மூட்டைகளைத் தூக்கிக்கொண்டு ஓடிய வண்ணம் இருக்கிறார்கள். சாய்பாபாவின் அரண்மனை ரகசியங்கள் அவரது வாழ்நாளைப் போலவே மறைவிற்குப் பின்னும் ஒருபோதும் வெளியே வரப்போவதில்லை.
இரண்டாவதாக, பாபா ராம்தேவ். ஆன்மீகக் குருவான அவர் ஒரு அரசியல் போராளியாக மாற முயற்சித்தபோது காங்கிரஸ் அவரை வெகு சுலபமாகக் கையாண்டது. அன்னா ஹஸாரே போன்ற, இழப்பதற்கு ஏதுமில்லாத எளிய மனிதர்களைக் கையாள்வதுதான் மிகவும் கடினமானது. ஆனால் ராம்தேவ் நள்ளிரவில் மூட்டை கட்டப்பட்டார். அவர் கூட்டிய கூட்டம் எந்தத் தயக்கமும் இன்றி கலைக்கப்பட்டது. தினமும் யாராவது ஒரு காங்கிரஸ் தலைவர் ராம் தேவைத் ‘திருடன்’ என்று வர்ணிக்கிறார். ராம் தேவ் தனது சொத்து மதிப்பை அறிவிக்க நிர்ப்பந்திக்கப்பட்டார். 1100 கோடி ரூபாய் பணம் வைத்திருக்கும் ஒரு ஆள் கறுப்புப் பணத்தையும் ஊழலையும் ஒழிக்கப் போகிறாரா என்று சராசரி இந்தியர்கள் குழம்பிப் போனார்கள். ராம்தேவின் ஊழல் எதிர்ப்பு சாகசம் ஒரு வாரத்தில் துடைத்தெறியப்பட்டது. கங்கையைச் சுத்தப்படுத்தக் கோரி 114 நாட்கள் உண்னாவிரதம் இருந்த சுவாமி நிகமானந்தா உயிர் விட்ட அதே மருத்துவமனையில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வேண்டு கோளை ஏற்று ராம்தேவ் தன் உண்ணா விரதத்தை முடித்துக்கொண்டார். ஒரு யோகா மாஸ்டர் 1100 கோடி ரூபாய் தொழிலதிபராக எப்படி மாறினார் என்ற ரகசியத்தை நாம் ஒருபோதும் அறிய முடியாது.
இந்தியாவில் கார்ப்பரேட் சாமியார்கள், பெருமுதலாளிகள், அதிகாரவர்க்கத்தினர் ஆகிய மூவரும்  நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள். அரசியல் மற்றும் சமூக பீடங்களின் உயர்மட்டங்களில் இருப்பவர்கள் ஏன் சாமியார்கள் காலில் விழுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வது கடினமானதல்ல. நவீன குருமார்கள் இன்று சர்வதேச அளவிலான தரகர்களாக மாறிவிட்டனர். பல்வேறு நிழல் நடவடிக்கைகளில் அவர்களுக்கு இருக்கும் தொடர்புகள் அவ்வப்போது வெளிவந்து பிறகு மறைந்துவிடுகின்றன. கடந்த பத்தாண்டுகளில் கார்ப்பரேட் சாமியார்கள் சேர்த்த சொத்து மதிப்பு என்பது ஒரு பெரிய வர்த்தக நிறுவனத்திற்குக்  கூட சாத்தியமில்லாதது. உண்மையில் கார்ப்பரேட் சாமியார்கள் இந்தியாவின் ஸ்விஸ் வங்கிகளாகச் செயல்பட்டு வருகிறார்கள் என்பதுதான் உண்மை. அரசியல்வாதிகள், பெருமுதலாளிகளின் பணம் பெருமளவில் அங்கே முடக்கப்படுகிறது. இந்திய சட்டங்கள் ஆசிரமங்களுக்கு வரும் பணத்திற்கு வரி விலக்கு அளிப்பது மட்டுமல்ல, அவற்றைக் கேள்விக்கு அப்பாற்பட்டதாகவும் கருதுகின்றன. இதுதான் இந்த திடீர் செல்வத்தின் ஊற்றுக் கண்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயேந்திரரை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஏன் கைது செய்தார் என்பது இன்றுவரை புரியாத புதிர். அவர்மீது சுமத்தப்பட்ட குற்றங்களைத் தாண்டி வேறு காரணங்கள் உள்ளன என்பது பகிரங்கமான ரகசியமாக இருந்தது. அவை பண விவகாரங்களாக இருக்கலாம் என்று பரவலாகவே விவாதிக்கப்பட்டது. பிரேமானந்தாவுக்கும் ஒரு நிழல் அரசியல்வாதிக்குமான பணப் பிரச்சினைகளே அவர் மாட்டிவிடப்பட்டதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. மத்திய அமைச்சர் ஒருவர் நித்யானந்தாவிடம் பெருமளவிலான பணத்தைப் பதுக்கி வைத்திருந்ததாக பேச்சு அடிபட்டது. சில மாதங்களுக்கு முன்பு பங்காரு அடிகளாரின் ஆசிரமத்தில் நடந்த சோதனை அவருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்றும் கூறப்பட்டது.
கார்ப்பரேட் சாமியார்கள் நடத்தும் யோகா வகுப்புகள் மற்றும் மருத்துவ உதவி முகாம்களைப் பற்றிப் புகழ்ந்து பேசுவதன் வாயிலாக இந்த சாமியார்கள் எத்தகைய சமூக அபாயங்களாக மாறி வருகிறார்கள் என்பதைப் பார்க்கத் தவறுகிறோம். ஏழைகளுக்கு சில இலவசப் பொருள்களைக் கொடுத்துவிட்டு தேசத்தையே கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளுக்கும்,  மக்களுக்கு எளிய மூச்சுப் பயிற்சியை சொல்லிக் கொடுத்து விட்டு பல்லாயிரம் கோடி ரூபாயை விழுங்கும் கார்ப்பரேட் சாமியார்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
ராம்தேவின் சமீபத்திய நாடகம் கார்ப்பரேட் சாமியார்கள் எடுக்க விரும்பும் புதிய அவதாரத்தையே முன்னுணர்த்துகின்றன. இதுவரை மறைமுக அரசியல் நடவடிக்கைகளின் தரகர்களாகவும் பினாமிகளாகவும் இருந்த அவர்கள் இப்போது நேரடி அரசியலுக்கு வர விரும்புகிறார்கள். பணபலம், ஊடக பலம், மக்கள் செல்வாக்கு ஆகிய மூன்றும் கொண்ட அவர்களுக்கு அரசியல் கனவுகள் உருவாவது மிகவும் இயல்பானதே. ஆனால் ராம்தேவ் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினால்  வாடகைக்கு அமர்த்தப்பட்டவர். அடுத்தடுத்த ஊழல் புயல்களினால் காங்கிரஸ் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது. இன்றைய அரசாங்கத்தைப்போல ஊழலும் செயலின்மையும் கொண்ட பிறி தொரு அரசு இந்திய வரலாற்றிலேயே இருந்ததில்லை. ஆனால் பி.ஜே.பி. வகுப்புவாத கொள்கையினால் ஏற்கனவே தனது தேசிய அடையாளத்தை இழந்து சிதைந்து போயிருக்கிறது. காங்கிரசிற்கு எதிராக பி.ஜே.பியை அதன் வகுப்புவாத அடையாளத்தை மறைத்து மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு வலுவான மாற்று அடையாளம் தேவை. ராம்தேவை அத்தகைய ஒரு அடையாளமாக மாற்றவே ஆர்.எஸ்.எஸ். விரும்பியது. அன்னா ஹஸாரே உருவாக்கிய ஊழல் எதிர்ப்பியக்கத்தை ராம்தேவ் மூலமாக ஹைஜாக் செய்யலாம் என்ற அதன் கனவு எதிர் பாராதவிதமாகப் பிசுபிசுத்துப்போய் விட்டது. ராம்தேவ் ஒரு போராளி அல்ல. கார்ப்பரேட் முதலாளி. அவரால் பசி தாங்க முடியாது. அவர் போலீஸைக் கண்டதும் மேடையில் இருந்து குதித்துப் பெண் வேடமிட்டுத் தப்பி ஓட ஆரம்பித்துவிட்டார்.
www.uyirmmai.com

கொதிக்கிறார் மணிப்பூர் இரும்புப் பெண் அன்னா உண்ணாவிரதம் செயற்கையான போராட்டம்

  இம்பால் : ‘அன்னா ஹசாரே உண்ணாவிரதம் செயற்கையான போராட்டம் ’என்று மணிப்பூர் மக்களுக்காக ராணுவத்துடன் போராடி வரும் மணிப்பூர் இரும்புப் பெண்மணி விமர்சித்துள்ளார்.   அன்னா ஹசாரே நடத்திய ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு பெரும் ஆதரவு இருந்தது. 13 நாள் உண்ணாவிரத போராட்டத்துக்கு அரசு பணிந்து, நாடாளுமன்றத்தில் விசேஷ தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவரின் ஜன் லோக்பால்  பரிசீலனைக்கு ஏற்கப்பட்டது.

  அன்னாவின் உண்ணாவிரத போராட்டத்தின் வெற்றியை கொண்டாடும் வேளையில், மணிப்பூரில் ஒரு பெண் அந்த மாநில மக்களுக்காக கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் வெறும் திரவ உணவுடன் பட்டினிப்போராட்டம் நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பெண்ணின் பெயர் இரோம் சர்மிளா. மணிப்பூர் மக்களின் நலனுக்காக, ராணுவத்தின் அட்டகாசத்தை  எதிர்த்து குரல் கொடுப்பதில்  முன்னணியில் உள்ளவர் இவர். மணிப்பூரில் பிரிவினைவாதத்தை ஒழிக்க பாதுகாப்பு படைக்கு சிறப்பு அதிகாரங்கள் அளித்தது மத்திய அரசு.

இதுதொடர்பாக சட்டம் உள்ளது. இந்த சட்டத்தை பயன்படுத்தி, ராணுவ வீரர்கள் யாரும், சாதாரண மக்களை கைது செய்யலாம்; பிரிவினைவாதி என்று சொல்லி தண்டனை வாங்கி தரலாம்.  இதுபோலவே, பெண்களை செக்ஸ் ரீதியாக சித்ரவதை செய்வதும் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், இரோம் சர்மிளா, தொடர்ந்து போராடி வருகிறார். அவர் 3765வது நாளாக பட்டினி கிடந்து வருகிறார்.

அவர் இப்போது நீதிமன்ற காவலில் உள்ளார். ஆண்டுக்கணக்கில் பாதுகாப்பு படையினர் அவரை காவலில் வைத்துள்ளனர்.  அவரை அன்னாவின் ஆதரவாளர்கள் சிலர் அணுகி, நீங்களும் அன்னாவின் உண்ணாவிரதத்தில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டனர். ஆனால், சர்மிளாவால் போக முடியவில்லை. அன்னாவின் உண்ணாவிரதத்தை பிரபலப்படுத்திய நிலையில், இவரின் 11 ஆண்டு கால பட்டினிப்போராட்டம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

  கடந்த சில மாதம் முன், டெல்லியில் ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பதாக கூறி, யோகா குரு ராம் தேவ் உண்ணாவிரதம் இருந்தார்.  அவரை குண்டுக்கட்டாக போலீசார் அப்புறப்படுத்தினர். இந்த பரபரப்புக்கு இடையே, ஓசைப்படாமல் ஹரித்வாரில் நிகமானந்தா என்ற ஒரு 38 வயதான சாமியார், கங்கை தூய்மைக்காக 68 நாள் உண்ணாவிரதம் இருந்து சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். அவர் இறந்த பின்புதான் மீடியாக்களின் வெளிச்சமே அவர் பக்கம் திரும்பியது.

 இதுபோல, அன்னாவின் உண்ணாவிரதத்துக்கு பின்புதான் மணிப்பூர் இரும்புப்பெண் 11 ஆண்டாக உண்ணாவிரதம் இருந்த  விவரம் மீடியாக்களின் கவனத்துக்கு வந்துள்ளது.  அவரை அணுகி கேட்டபோது, ‘மணிப்பூரில் உள்ள மக்களின் நிலை பற்றி வெளி மாநிலங்களில் பலருக்கும் தெரியவில்லை. பாதுகாப்புபடையினர் நடத்தும் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 2004 ம் ஆண்டு வந்து சிறப்பு சட்டத்தை ரத்து செய்வதாக உறுதி அளித்தார். ஆனால், இதுவரை  அவர் வாய்திறக்கவே இல்லை’ என்று இரோம் வருத்தப்பட்டார்.

  அன்னாவின் போராட்டம் பற்றி கூறுகையில், ‘அவர் போராட்டம் செயற்கை தனமானது. என்னையும் கூப்பிட்டனர். ஆனால், நீதிமன்ற காவலில் உள்ள நான்  எப்படி போக முடியும்? அவர் இங்கு வந்து  எங்களுடன் போராடினால் வரவேற்பேன்’ என்றும் இரோம் தெரிவித்தார்.

நாங்க பில் கட்டறோம்

 அன்னா ஹசாரே, டெல்லி குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் டிஸ்சார்ஜ் ஆகிறார் என்றவுடன், ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில், ‘உங்கள் மருத்துவ செலவை ஏற்கிறோம்’ என்று நூற்றுக்கணக்கான பேர் வேண்டுகோள் விட்டிருந்தனர். ஏற்கனவே, அன்னாவை உண்ணாவிரத மேடையில் கவனித்து டாக்டர் டிரெஹானுடைய மருத்துவமனையில்தான் அன்னா சிகிச்சை பெற்றார். அவர் அன்னாவிடம் எந்த கட்டணமும் வாங்கவில்லை.

 காஷ்மீர் வாருங்கள் அன்னா

காஷ்மீரில் வந்து போராட்டம் செய்யும்படி அன்னாவுக்கு காஷ்மீர் மிதவாத ஹுரியத் அமைப்பின் தலைவர் மிர்வியாஸ் பரூக் அழைப்பு விடுத்துள்ளார்.  காஷ்மீர் மனித உரிமை கமிஷன் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், அடையாளம் தெரியாத 2 ஆயிரம் பேரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு படையிடம் விசாரித்தபோது, அவர்கள் தீவிரவாதிகள் என்று கூறியுள்ளனர்’ என்று கூறியிருந்தது.  இதை சுட்டிக்காட்டிய மிர்வியாஸ், ‘அ‘னா எங்களின் கோரிக்கையை ஏற்று, இப்படி அப்பாவிகள் கொல்லப்படுவதை தட்டிக்கேட்க எங்களுடன் போராட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

தயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை என சிபிஐ தகவல்

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறனுக்கு எதிராக இதுவரை ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்று சிபிஐ தெரிவித்துள்ளது. அதேசமயம், பாஜக ஆட்சிக்காலத்தில் தொலைத் தொடர்புத்துறையைக் கவனித்து வந்த அருண் ஷோரி மற்றும் நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங் ஆகியோரை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அது கோரியுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை தொடர்பான அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது. அதில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தயாநிதி மாறனுக்கு எதிரான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

அதே சமயம், எஸ்ஸார் நிறுவனத்திற்கு எதிராக ஆதாரங்கள் இருப்பதாக அது தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது தொலைத் தொடர்புயைக் கவனித்தவரான அருண் ஷோரி மற்றும் அப்போதைய நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங் ஆகியோரிடம் விசாரணை நடத்தவிரும்புவதாக அது தெரிவித்துள்ளது.

ஏர் செல் நிறுவன முன்னாள் தலைவர் சிவசங்கரனை மிரட்டி மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திடம் ஏர்செல்லை விற்குமாறு தயாநிதி மாறன் மிரட்டினார். அதைத் தொடர்ந்து மேக்சிஸ் நிறுவனம் வசம் ஏர்செல் வந்த பின்னர் அதி வேகமாக அந்த நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் லைசன்ஸை தயாநிதி மாறன் ஒதுக்கினார் என்பது குற்றச்சாட்டு. இதன் பேரில்தான் தயாநிதி மாறன் பதவி விலகினார்.

இதற்கு ஆதாரம் இருப்பதாகவும் முன்பு சிபிஐ கூறியிருந்தது. ஆனால் தற்போது இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் சிபிஐ கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிபிஐ ஆதாரம் இருப்பதாக கூறியதைத் தொடர்ந்துதான் தயாநிதி மாறனை கட்டாயப்படுத்தி பதவி விலகச் செய்தது காங்கிரஸ் கட்சி என்பது நினைவிருக்கலாம்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் இதுவரை 2 குற்றச்சாட்டுக்களைத் தாக்கல் செய்துள்ளது சிபிஐ. இந்த வழக்கில் இதுவரை முன்னாள் அமைச்சர் ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய 9 நிறுவனங்களில் தற்போது எஸ்ஸார் குழுமம் மீது தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் சிபிஐ கூறியுள்ளது. அந்த நிறுவனத்திற்கு எதிரான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் அது கூறியுள்ளது.

எஸ்ஸார் குழுமத்தின் சார்பில் உருவாக்கப்பட்ட லூப் நிறுவனம்தான் 2008ம் ஆண்டு ஸ்பெக்ட்ரம் லைசன்ஸ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசன வாயில் வைத்து இலங்கையிலிருந்து தங்கக் கட்டி கடத்திய பெண் கைது

தூத்துக்குடி: இலங்கையில் இருந்து தூத்துக்குடிக்கு ஆசனவாயில் மறைத்து தங்க கட்டிகளை கடத்தி வந்த பெண்ணை வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இலங்கையிலிருந்து ஒரு பெண் தங்க கட்டிகளை தூத்துக்குடிக்கு கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. நேற்று காலை கொழும்பில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் வந்த பயணிகள் கப்பலில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். சந்தேகத்தின் பேரில் இரு பெண்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் ஒருவர் திருச்சி ஐயப்பன் நகரை சேர்ந்த சந்திரலிங்கம் மனைவி கோடீஸ்வரி என்பதும் அவருடன் வந்தவர் கொழும்புவை சேர்ந்த செல்வநாயகம் மனைவி பார்வதம் என்பதும் தெரிய வந்தது. இருவரின் உடமைகளையும் அதிகாரிகள் சோதனையிட்டனர். ஆனால் ஓன்றும் சிக்கவில்லை. இதையடுத்து கோடீஸ்வரியை பெண் அதிகாரிகள் மூலம் சோதனையிட்டனர். அப்போது ஆசன வாயில் அவர் 7 தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

பின்னர் அவரை தூத்துக்குடி அழைத்து வந்து ஒரு தனியார் மருத்துவமனையில் எக்ஸ்ரே மூலம் சோதனை செய்தபோது அவரது உடலில் மேலும் 4 தங்க கட்டிகள் இருந்ததை கண்டுபிடித்து அகற்றினர்.

தலா 116 கிராம் வீதம் மொத்தம் ஒரு கிலோ எடையுள்ள 276 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கோடீஸ்வரியை அதிகாரிகள் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

பர்வதத்தை சோதனையிட்டதில் ஓன்றும் சிக்காததால் அவரை விடுவித்தனர். தங்க கட்டிகள் கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்திய கடற்படை கப்பலைவழிமறித்த சீன போர்க் கப்பல்

லண்டன்:வியட்னாம் கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த இந்திய கடற்படை கப்பலை சீனப் போர்க் கப்பல் வழிமறித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதை இந்தியா மறுத்துள்ளது.தென் சீனக் கடல் முழுமையும் தனக்குத் தான் சொந்தம் என, சீனா உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால், இக்கடற்பகுதியில் அமைந்துள்ள வியட்னாம், மலேசியா, புருனே மற்றும் தைவான் நாடுகள் தங்களுக்கும் அதில் உரிமை உள்ளது என வாதாடி வருகின்றன.அரிய கடல் வளம் நிறைந்த இப்பகுதியில் சீனா தனது கடற்படை கப்பல்களை ரோந்து விடுவதன் மூலம், தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க தொடர்ந்து முயல்கிறது.
இந்நிலையில், கடந்த ஜூலை 19ம் தேதி முதல் 28ம் தேதி வரையில், வியட்னாம் துறைமுகத்திற்கு இந்திய கடற்படைக்குச் சொந்தமான "ஐ.என்.எஸ்., ஐராவத்' என்ற கப்பல், நட்பு ரீதியில் பயணம் மேற்கொண்டது.கடந்த ஜூலை 22ம் தேதி, வியட்னாமின் "நாட்ராங்' துறைமுகத்தில் இருந்து "ஹை போங்' துறைமுகத்திற்கு "ஐராவத்' சென்றது. அப்போது வழியில், அடையாளம் தெரியாத சீனப் போர்க் கப்பல் ஒன்று, "ஐராவத்'தை வழி மறித்ததாக, பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து வெளிவரும் "பினான்சியல் டைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.மேலும், "ஐராவத்' வியட்னாமுக்கு வந்ததை அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் ஒப்புக் கொண்டதாகவும், நடந்த சம்பவம் குறித்து தகவல் எதுவும் கிடைக்கவில்லையென அந்த அமைச்சகம் கூறியதாகவும் அப்பத்திரிகை தெரிவித்திருந்தது.

இதுகுறித்து, இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் கூறியதாவது:சீனப் போர்க் கப்பல் இந்தியக் கப்பலை இடைமறிக்கவில்லை. சம்பவம் நடந்த 22ம் தேதி, தென் சீனக் கடலில், வியட்னாம் துறைமுகத்தில் இருந்து 45 கடல் மைல் தொலைவில் இந்தியக் கப்பல் நின்று கொண்டிருந்தபோது, "நீங்கள் சீனக் கடல் எல்லைக்குள் வந்து விட்டீர்கள்' என ஒரு சீனக் கடற்படையிடம் இருந்து ரேடியோ தொடர்பு வந்தது. ஆனால், இந்தியக் கப்பல் அருகிலோ அல்லது சற்று தொலைவிலோ எந்த ஒரு கப்பலும் காணக் கிடைக்கவில்லை.எனினும், தென் சீனக் கடல் உள்ளிட்ட சர்வதேசக் கடற்பகுதிகளில் ஒப்புக் கொள்ளப்பட்ட சர்வதேச சட்டப்படி, பிற நாட்டுக் கப்பல்கள் வந்து செல்வதற்கான சுதந்திரம் பேணப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.இவ்வாறு விஷ்ணு பிரகாஷ் தெரிவித்தார்.

இந்தியர்கள் அல்லாத தமிழர்கள் யாழ்ப்பாணத்திற்கு செல்ல வேண்டும்: சுப்ரமணிய சுவாமி

இந்தியாவில் உள்ள தமிழர்கள் தாங்கள் முதலில் இந்தியர்கள் இல்லை என்றால் அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு செல்ல வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி தனது ருவிற்றர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நாம் அனைவரும் முதலில் இந்தியர்கள். இரண்டாவதாகத் தான் தமிழர்கள். வைகோ தெலுங்கில் இருந்து வந்தவர்.
இந்தியாவில் உள்ள தமிழர்கள் தாங்கள் முதலில் இந்தியர்கள் இல்லை என்றால் அவர்கள் யாழ்ப்பாணத்துக்குச் செல்ல வேண்டும் என சுப்ரமணிய சுவாமி தெரிவித்தார்.
தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவை தீர்மானம் கூறுகிறது.
தமிழர்களின் உணர்வுகள் இது என்றால் இந்தியர்களின் உணர்வுகள் எப்படி இருக்கும்? என அவர் கேள்வி எழுப்பினார்.

தியேட்டர்களில் திருவிழாக்கோலம் மங்காத்தாவுக்கு அமோக வரவேற்பு


சென்னை : சன் பிக்சர்ஸ் வெளியிட்ட ‘மங்காத்தா’ படம், திரையிட்ட இடமெல்லாம் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. அஜீத், த்ரிஷா, அர்ஜுன் நடித்துள்ள படம் ‘மங்காத்தா’. வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். அஜீத்தின் 50&வது படமான இது, நேற்று முன்தினம், உலகம் முழுவதும் வெளியானது. கிளவுட் நைன் மூவீஸ் தயாரித்த இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக வெளியிட்டுள்ளது.

இந்த படம், தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களால் பெரும் வரவேற்பை பெற்று திரையுலகினரை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. அஜீத் நடித்த படத்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய வரவேற்பு இந்தப் படத்துக்கு கிடைத்துள்ளது. தமிழக தியேட்டர்களில் திருவிழா போன்று மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ரசிகர்கள் வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுத்து படம் பார்த்து வருகிறார்கள். பெரிய நகரங்கள் மட்டுமல்லாது சிறிய நகர தியேட்டர்களில் கூட ரசிகர்கள் கூட்டம் அலை மோதுவதால் போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி வருகிறார்கள். பல தியேட்டர் அதிபர்கள் போலீஸ் பாதுகாப்பை கேட்டுப் பெற்றுள்ளனர். அஜீத் ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் இந்தப் படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

சென்னையில் உள்ள மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் ஒரு வாரத்துக்கான டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது. ‘‘எனக்கு தெரிந்து, அஜீத் படத்துக்கு இதுவரை இல்லாத வகையில் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. சென்னையில் எல்லா தியேட்டர்களிலும் கலெக்ஷன் சூப்பராக உள்ளது. தியேட்டர் அதிபராக, என்னையும் கலெக்ஷனில் ‘மங்காத்தா’ சந்தோஷப்படுத்திக் கொண்டிருக்கிறது’’ என்கிறார்  திரையரங்க உரிமையாளர் சம்மேளனத் தலைவர் அபிராமி ராமநாதன்.

உரையாடல் மனங்களைத் திறந்து உறவை ஆழமாக்கும்


மனித உறவுகள் மென்மையானவை!

மனித வாழ்வுக்கு உரம் சேர்ப்பது உறவு. நெருக்கமாக இருக்க வேண்டிய உறவுகளெல்லாம் இப்போது விரிசல் கண்டு வருகின்றன. இரு வழிப் பாதையாக இருக்க வேண்டிய உரையாடல் ஏனோ பல நேரங்களில் ஒரு வழிப்பாதையாகி விடுகிறது.
உரையாடல் மனங்களைத் திறந்து உறவை ஆழமாக்கும். பலருக்கு உரையாடல் என்றால் என்ன என்கிற தெளிவு கிடையாது. பல குடும்பங்களில் அது பெரும்பாலும் உரையாடலாக இருப்பதில்லை. மாறாக, தங்களது கருத்துக்களையும் எண்ணங்களையும் பிறர் மீது திணிக்கின்ற யுத்த களமாகவே அமைந்து விடுகிறது.
பலர் உரையாடல் என்கிற பெயரில் வாதாடுகின்றனர். அப்படியே உரையாடினாலும் மற்றவர்களைவிட தாங்கள் பெரியவர்கள், மேலானவர்கள், அதிகம் தெரிந்தவர்கள் என்பதை எடுத்துக் காட்டுவதற்கான தருணமாக உரையாடலைப் பயன்படுத்துகின்றனர். இதனால் இருக்கின்ற உறவுகளையும் இழந்து விடுகின்றனர்.
உரையாடலின் போது நாமே ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது. நம்முடைய பிரச்சினைகளையே பேசிக்கொண்டிருக்கக் கூடாது. மற்றவர்களைக் குத்திக் காட்டி பேசக் கூடாது. எதிரியிடத்திலும் கூட கருணைமிக்க கண்ணியமான வார்த்தை களைப் பயன்படுத்தினால் அவர்களின் கோபமும் எதிர்ப்பும் மறைந்து உறவு மலரும்.

அந்தமான் முரசு தீவுகளின் முதல் தமிழ் செய்தி 43 வது ஆண்டு விழா

அந்தமான் முரசு

அந்தமான் நிகோபார் தீவுகளின் முதல் தமிழ் செய்தி ஏடான ”அந்தமான் முரசு” தனது 43 வது ஆண்டு விழாவைக் கடந்த 30.08.11 அன்று கொண்டாடியது. தினசரி செய்தி ஏடாக வெளிவந்த ”அந்தமான் முரசு” நிர்வாகக் காரணங்களால் வார இதழாக மாற்றம் பெற்றது. இந்த அந்தமான் முரசு செய்தி ஏடு தெய்வத்திரு. சுப. சுப்ரமணியன் அவர்களால் தொடங்கப்பெற்று தற்போது அவரது திருமகனார் திரு. சுப. கரிகால்வளவன் அவர்களால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.தெய்வத்திரு சுப. சுப்பிரமணியன் அவர்கள் தீவுகளில் தமிழர் மேம்பாட்டிற்காகவும், அவர்கள் தம் உரிமைகளை மீட்டெடுக்கவும் போராட்டங்கள் பல புரிந்தவர். இன்று தீவுகளில் தமிழர்கள் உன்னத நிலையில் இருப்பதற்கும், வாணிபம், அரசுப்பணிகளில் வெற்றியுடன் உலாவருவதற்கும் துணை புரிந்த பெருமக்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.தந்தை விட்டுச்சென்ற பணியினை தமையன் செவ்வனே செய்துவருகிறார். தமிழர் நலனுக்காகக் குரல் கொடுக்கிறார். தீவுகளின் மொத்த மக்கள் தொகை சுமார் 3,79,000. இவர்களில் தமிழர்கள் சுமார் 1,00,000 பேர். மொத்தத்தமிழர்களும் ஆதரவு கொடுக்கும் பட்சத்தில் இந்த செய்தித்தாளை அந்தமான் முரசு ஆசிரியர் திறம்பட செயல் படுத்த இயலும். மற்ற மாநிலங்களைப்போல் அல்லாமல் இங்கு தமிழ் வழிக்கல்வி இருக்கிறது. முக்கிய பூமியில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தூரத்தில் அமைந்துள்ள ஒரு தீவில் தமிழர்கள் இந்தியர் என்ற உணர்வுடன்,ஒருமைப்பாட்டுடன் வாழ்ந்து வந்தாலும், தாய்த்தமிழை தமிழன் என்ற உணர்வோடு பேணுவதும் அவசியமாகிறது. தமிழ் இதழ்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது நம்து தார்மீகக்கடமையாகிறது. அதோடு மட்டுமல்லாது தமிழர் மேம்பாட்டிற்காக உழைத்த அன்னார் தெய்வத்திரு.சுப.சுப்ரமணியன் ஐயா அவர்களுக்கு நாம் காட்டும் நன்றியும் ஆகும் என்பது எனது தனிப்பட்ட, தாழ்மையான கருத்து.

அந்தமான் முரசு செய்தித்தாள் இன்னும் பல நூற்றாண்டுகளைக் கடந்து வெற்றி நடை போட வேண்டுமென வாழ்த்துகிறோம், வணங்குகிறோம்.

இலங்கையில் Facebook தொடர்பில் 1100 முறைப்பாடுகள்

இலங்கையில் பேஸ்புக் வலையமைப்பில் இடம்பெறும் குற்றங்கள் தொடர்பில் 1100 முறைப்பாடுகள்
சமூக வலையமைப்புகளில் பரவலாகப் பேசப்படும் பேஸ்புக் இணையத்தளத்தில் இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பில் 1100 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணனி பயன்பாட்டாளர்களின் அவசர உதவி மற்றும் பொறுப்புகளுக்கான குழுவின் பிரதான பொறியியலாளர் ரோஹன பள்ளியகுருகே வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார். இணையத்தளங்களில் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்கள் குறித்து கருத்து தெரிவித்த அவர் சைபர் க்ரைம் எனப்படும் இணையத்தளக் குற்றங்களின் அதிகரிப்பு தொடர்பில் உரிய நடவடிக்கைள் எடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். "பேஸ்புக் கணக்குகளை முடக்குதல், தனி நபர்களால் தரவேற்றப்படும் படங்களை தவறான முறையில் பயன்படுத்துதல், தனி நபர்களின் பெயர்களை குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்துதல், பலவந்தமாகப் பணம் பெறுதல் போன்ற சம்பவங்கள் இலங்கையில் அதிகரித்து வருகின்றன. எமக்கு நாளாந்தம் முறைப்பாடுகள் கிடைக்கின்றன. தற்போது பேஸ்புக் வலையமைப்பில் உருவாக்கப்பட்டுவரும் 'கிறீஸ் மனிதன்' கணக்குகளை இடைநிறுத்துவதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்" என அவர் மேலும் தெரிவித்தார்

கோண்டாவில் மர்ம மனிதனுக்கு 15 ஆம் திகதி வரை விளக்கமறியல்

யாழ். கோண்டாவில் தில்லையம்பதி சிவகாமி அம்மன் ஆலயப் பகுதியில் நேற்று பொதுமக்களினால் பிடிக்கப்பட்ட இனம் தெரியாத மர்ம மனிதனை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நிதிமன்ற நீதிபதி ஏ.ஏ ஆனந்தராஜா உத்தரவிட்டுள்ளார். இவர் ஒரு மனநோயாளி என பொலிஸார் நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்ததும் நீதிமன்ற கலரியில் நின்ற மக்கள் பெரும் சத்ததுடன் சிரித்து ஆரவாரித்தனர். அத்தோடு பொலிஸார் பெய்யுரைக்கின்றனர் என கோண்டாவில் மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நீதிவான் மர்ம மனிதனை தகுந்த மனேதத்துவ நிபுணர்களிடம் காட்டி வைத்திய அறிக்கை சமர்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்