ஞாயிறு, 12 ஜூலை, 2026

தமிழக இடதுசாரிகளின் புதிய கள்ளக்காதலி தவேக

 Amudhan R P : இடதுசாரி ஆதரவாளர்கள் சிலர் தவெகவிற்கு தங்கள் கட்சிகள் கொடுக்கும் ஆதரவை நியாயப்படுத்த, திமுக ஒரு முதலாளித்துவக் கட்சி, அது மக்கள் நலத்திட்டங்களை மட்டுமே நம்பியிருந்தது, அதன் பாஜக எதிர்ப்பு உறுதியானதல்ல என்று பரப்பிவருகின்றனர்.
இதை அதிகாரப் பூர்வமாக சண்முகம் தான் தொடங்கிவைத்தார்.
திமுகவை முதலாளித்துவக்கட்சி என்று சொல்லி அதை வசையாகப் பயன்படுத்தி வருகிறார் அவர்.
அமெரிக்காவில் ‘கம்யூனிஸ்ட் ‘ என்பது எப்படி ஒரு வசைச்சொல்லோ, அந்தப் பொருளில்  திட்டி வருகிறார்கள்.
திமுக ஒரு முதலாளித்துவக் கட்சி தான். இன்னும் சொல்லப் போனால் அது லிபரல் டெமாக்ரெடிக் கட்சி என்று தான் வகைப்படுத்தமுடியும்.
ஆனால் அது சண்முகம் போன்றோர் சொல்கிறபடி வெறும் நலத்திட்ட அரசை மட்டுமா நடத்தியது?