LR Jagadheesan : பேசாப்பொருளை பேசத்துணிந்தேன்
இந்தியாவின் மதசிறுபான்மையினர் தொடர்பாக ஆர்எஸ்எஸ்/பாஜகவின் அடிப்படை கொள்கைக்கும் தமிழ்நாட்டின் மொழிவழி சிறுபான்மையினர் மற்றும் மதவழிசிறுபான்மையினர் தொடர்பிலான சீமானும் அவரது கட்சியும் முன்னெடுக்கும் அடிப்படை கொள்கைக்கும் என்ன பெரிய வேறுபாடு?
முந்தையது பாசிசமென்றால் பிந்தையதன் பெயர் என்ன?
முஸ்லீம்களுக்கென்று பாகிஸ்தான் பிரித்துக்கொடுத்தபின் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு எந்த தனி உரிமையும் கிடையாது/கூடாது, அப்படி கேட்பவர்கள் பாகிஸ்தானுக்குப்போங்கள் என்கிற கோஷத்துக்கும்;
மொழிவழி மாநிலங்கள் பிரிந்தபின் தமிழ்நாட்டின் பிறமொழியாளர்கள் அரசியல் உள்ளிட்ட அதிகாரங்கள் எதிலும் பங்கேற்கக்கூடாது அப்படி கோருபவர்கள் ஆந்திராவுக்கு செல்லுங்கள் என்றும் இஸ்லாம் கிறிஸ்தவம் உள்ளிட்ட மாற்றுமதத்தவர்கள் முழுமையான தமிழர்கள் அல்ல என்றும் கூறும் சீமான் கட்சியின் அறிவிக்கப்பட்ட கொள்கைக்கும்
என்ன பெரிய வேறுபாடு?
சனி, 15 ஜூன், 2024
பாஜகவின் “கரசேவையை”த்தான் sick சீமான் செய்துகொண்டிருக்கிறார். அதுவும் சொந்த ஆதாயத்துக்காக!
நீட் சீட்டை 50 முதல் 70 லட்சங்களுக்கு விற்கிறது 2 கர்நாடக மருத்துவ கல்லூரிகள்
James Vasanthan : (சமூக ஊடகத்தில் வந்த அதிர்ச்சியூட்டும் தகவல்)
கர்நாடகாவில் இரண்டு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன!
ஒரு ஏஜண்ட் ஒருவரை அமர்த்திக் கொள்கிறார்கள்! அவர் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா செல்கிறார்! அங்கிருந்து மருத்துவம் முதலாமாண்டு அல்லது இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்கள் சுமார் 300 பேர்களை அழைத்து வருகிறார்!
அவர்களை நீட் பரீட்சை எழுத வைக்கிறார்!
அவர்களும் ரேங்க் வாங்கி பாஸ் ஆகிறார்கள்!
அவர்கள் கௌன்சிலிங்க் எங்கு வேண்டுமென்றால் சித்தார்த்தா காலேஜையே சொல்கிறார்கள்!
முதல் ரவுண்ட் கவுன்சிலிங் வருகிறார்கள்!
அதற்கு ரெக்கார்ட் வெரிபிகேஷன் இல்லை என்பதால் நீட் மார்க்கை கொடுத்து சீட் பெறுகிறார்கள்!
பின் சேராமல் விடுகிறார்கள்! இதற்கு அவர்களுக்கு பைன் எதுவும் இல்லை!
தமிழ்நாட்டு உள் விவகாரங்களில் தலையிடலாமா? இலங்கை உள் விவகாரங்களில் தலையிடலாமா?
Sundaram : திராவிட எதிர்ப்பு அரசியலை இணையத்தில் முன்னெடுத்து பரப்புரை செய்வதையே முழு நேர வேலையாகக் கொண்டிருப்பவர்கள் 99%பேர் இலங்கைத் தமிழர்... (புலம்பெயர்ந்தோர் மட்டுமன்றி இலங்கை வாழ் தமிழர்களும்)
ஏன் இந்த நிலைமை?
தமிழ்நாட்டு அரசியலில் இவர்களுக்கு என்ன அக்கறை?
இது இன்னொரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடும் செயல் இல்லையா?
ராதா மனோகர் : நீங்கள் கூறுவது உண்மைதான்
இதில் மறுபக்கத்தையும் பார்க்கவேண்டும்
இந்த நிமிடம் வரை தமிழ்நாட்டில் உள்ள பல அரசியல் கட்சிகள் ஊடகங்கள் பல பெரிய பிரமுகர்கள் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் பாரதூரமாக தலையிடுகிறார்களே?
அதையும் கொஞ்சம் நிறுத்தவேண்டும்
வெள்ளி, 14 ஜூன், 2024
ATM-இல் பணம் எடுக்க இனி அதிக செலவாகும்: கட்டணம் உயர்கிறது!
zeenews.india.com - Sripriya Sambathkumar : ATM Withdrawal Charges: நாட்டில் டிஜிட்டல் பண பரிமாற்றம் வேகமாக அதிகரித்து வருகின்றது.
எனினும், இன்னும் ரொக்க பயன்பாடும் இருந்துகொண்டு தான் இருக்கின்றது.
பணத்தை அதிக அளவில் வீட்டில் வைத்துக்கொள்ளாமல், அவ்வப்போது ஏடிஎம் -களில் பணத்தை மக்கள் எடுத்துக்கொள்கிறார்கள்.
ஏடிஎம் இயந்திரத்திலிருந்து அடிக்கடி பணம் எடுக்கும் நபரா நீங்கள்? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
நிர்ணயிக்கப்பட்ட இலவச வரம்பிற்கு மேல் ஏடிஎம் -இல் இருந்து பணம் எடுத்தால், இனி அதற்கு அதிகக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
இது ஏடிஎம் பயனர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சியான செய்தியாக வந்துள்ளது. இந்த மாற்றத்திற்கான காரணம் என்ன? இதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பிரியங்கா காந்தி வயநாட்டில் போட்டியிட வாய்ப்புள்ளது !
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும், உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டார்.
தேர்தல் முடிவுகளின் படி, வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி 6,47,445 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதேபோல், ரேபரேலி தொகுதியில் 6,68,649 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார்.
மதன் மோகன் - பல மதன மோகன ட்யூன்களின் சொந்தக்காரர் - Madan Mohan
Janarthanan KB : சில நண்பர்களுடன் சேர்ந்து மிக மிகச் சிரமப்பட்டு தான் தயாரித்த,
தானே இசையமைத்த படத்தை தன் தந்தைக்கு போட்டுக் காட்டுகிறார் அந்த இளைஞர்.
(தந்தையோ Filmistan பட நிறுவனத்தில் பார்ட்னர். இருந்தாலும் நடிக்கவும் இசையமைக்கவும் ஆசைப்பட்ட தன் மகனுக்கு எந்த ஆதரவும் தராமல் ஒதுக்கியிருந்தார்.)
படம் முடிந்ததும் ஏதும் சொல்லாமல் எழுந்து காருக்கு போய்விட்டார் தந்தை.
மகன் சென்று பார்த்தால் அழுது கொண்டிருக்கிறார்:
‘உன் திறமையை நான் மதிக்காமல் போய் விட்டேனே!’ அந்த மகன்...
சமீபத்தில் நடந்த ஒரு தேர்ந்தெடுப்பில் இதுவரை வந்த காதல் பாடல்களில் மிகச் சிறந்தது என்று முடிவானது ‘Woh Kaun Thi?’ படத்தில் வரும் “Lag Jaa Gale” அந்த இசையமைப்பாளர்...
வியாழன், 13 ஜூன், 2024
140 தொகுதிகளில் மறுவாக்கு தேவை ! EVM மோசடியால் ஆட்சியை பிடித்த பாஜக
140 தொகுதிகளில் மறுவாக்கு தேவை !
இ வி எம் மோசடியால் ஆட்சியை பிடித்த மோசடி பாஜக
பாடல்கள் மீது இளையராஜா எந்த உரிமையும் கோரமுடியாது.. AR ரஹ்மான் போல அவர் ஒப்பந்தம் போடல: எக்கோ வாதம்!
பதிப்புரிமை தொடர்பாக தயாரிப்பாளர்களுடன் எந்தவித ஒப்பந்தமும் செய்து கொள்ளாத இளையராஜா, பாடல்கள் மீது எந்த உரிமையும் கோர முடியாது. சம்பளம் கொடுத்து இசை சேவையை பெறும் தயாரிப்பாளர்தான் முதல் காப்புரிமை உரிமையாளராகிறார் என எக்கோ நிறுவனம் வாதங்களை அடுக்கியுள்ளது.
அதானி குழுமம் 10,422 கோடி ரூபாய்க்கு பென்னா சிமெண்ட்-ஐ வாங்குகிறது
மாலை மலர் : அதானி குழுமம் பெரும்பாலான தொழில்களை நடத்தி வருகிறது. கட்டுமான தொழிலில் முக்கிய பங்கு வகிக்கும் சிமெண்ட் நிறுவனத்தையும் நடத்தி வருகிறது. அம்புஜா சிமெண்ட் நிறுவனம் அதானி குழுமத்தை சேர்ந்ததாகும்.
இந்த நிலையில் அதானி குழுமத்தின் அம்புஜா சிமெண்ட், ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு விளங்கும் பென்னா சிமெண்ட் நிறுவனத்தை 10,422 கோடி ரூபாய்க்கு வாங்க இருக்கிறது. பென்னா சிமெண்ட் நிறுவனம் வருடத்திற்கு 14 மில்லியன் டன் சிமெண்ட் உற்பத்தி திறன் கொண்டது.
மோதி அமைச்சரவையில் உள்ள 20 அரசியல் வாரிசுகளின் குடும்ப பின்னணி
BBC News : பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய அமைச்சரவையில் சுமார் 20 வாரிசுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் 20 அமைச்சர்களின் பெயர் பட்டியலை வெளியிட்ட ராகுல் காந்தி "பல தலைமுறைகளின் பாரம்பரிய மிக்க போராட்டம், சேவை, தியாகம் ஆகியவற்றை 'குடும்ப அரசியல்' என்று சொன்னவர்கள்,
தற்போது தங்களது விருப்பத்திற்கேற்ப அதிகாரத்தை 'வாரிசுகளுக்கு' வழங்கியுள்ளனர். சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள இந்த வேறுபாட்டைத்தான் நரேந்திர மோதி என்கிறோம்." என ராகுல் காந்தி கருத்து பதிவிட்டுள்ளார். ராகுல்
காந்தி வெளியிட்ட பட்டியலின்படி தற்போது கேபினட் அமைச்சரவையில் ஒரு
முன்னாள் பிரதமரின் மகன், ஒரு முன்னாள் பிரதமரின் பேரன், மூன்று முன்னாள்
முதல் அமைச்சர்களின் மகன்கள், ஐந்து முன்னாள் மத்திய அமைச்சர்களின் மகன்கள்
உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
புதன், 12 ஜூன், 2024
தமிழிசையை பொதுவெளியில் அவமான படுத்திய அமித் ஷா! சென்னை விமான நிலையத்தில் ஊடகங்களை தவிர்த்தார்
tamil.oneindia.com - Shyamsundar : சென்னை: சென்னை விமான நிலையத்தில் இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நடந்து கொண்ட விதம் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
Flash back video :
பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கும் மோதல் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு பாஜகவில் உட்கட்சி மோதல் தொடர்பாக பாஜக தேசிய மேலிடம் அறிக்கை கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலை மற்றும் தமிழிசை இடையே ஏற்பட்டுள்ள மோதல் குறித்து பாஜக நிலைக்குழு உறுப்பினரான பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோரிடம் கட்சி மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் அறிக்கை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிபர் விக்ரமசிங்கே : இலங்கையின் எதிர்காலத்திற்கு அதிபர் தேர்தல் முக்கியமானது!
மாலை மலர் : இந்தியாவின் அண்டை நாடான இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தத்தளித்தது. தற்போது அதில் இருந்து மெல்லமெல்ல மீண்டு வருகிறது. அதிபராக இருக்கும் விக்ரமசிங்கே மறுசீரமைப்பு செய்வதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதனால் அதிபர் தேர்தல் பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என விக்ரமசிங்கே கட்சி பரிந்துரை செய்தது. ஆனால், எதிர்க்கட்சிகள் இது சட்ட அரசியலமைப்புக்கு எதிரானது எனத் தெரிவித்தது.
தேர்தல் ஆணையமும் செப்டம்பர் 17-ந்தேதி முதல் அக்டோபர் 16-ந்தேதி வரைக்குள் தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிவித்தது.
சன் டிவியும் திமுகவும்- திமுகவிற்கு எதிரான, காலம் காலமாக நடக்கும் சதி!
Kandasamy Mariyappan : சன் டிவியும் திமுகவும்......
சன் குழுமத்திற்கும் திமுகவிற்கும் என்ன சம்பந்தம் உள்ளது?
பல பொது மக்களிடம் உரையாடும் பொழுது, 1990 முதல் மத்தியில் அதிகாரத்தில் இருந்து கொண்டு, சன் டிவி தவிர வேறு யாரையும் தொலைக்காட்சி ஆரம்பிக்க விடாமல் செய்து,
பல லட்சக்கணக்கான கோடிகளை சேர்த்த திமுக, கொரோனா நிவாரண நிதியாக ஒரு 100 கோடி கொடுத்தா என்ன என்று கேட்கின்றனர்.
இதைத்தான் திமுகவிற்கு எதிரான, காலம் காலமாக நடக்கும் சதி என்று கூறுகிறேன்.
முதலில் தமிழ்நாட்டில் தொழில் செய்யும் பல நிறுவனங்களைப் போன்று... சன் குழுமமும் பணம் கொடுப்பது... அவர்களது விருப்பம்.
அதேபோன்று... பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக கட்சிகள் நிவாரண பணம் கொடுப்பது போன்று திமுக பணம் கொடுப்பது அவர்கள் விருப்பம்.
அடுத்து,
1. சன் டிவி ஆரம்பித்த வருடம் ஏப்ரல், 1993.
உலகின் முதல் எக்சிட் போல் பங்குச்சந்தை ஊழல்..? இந்திய முதலீட்டாளர்களின் தலையில் துண்டு..?!!
tamil.goodreturns.in - Prasanna Venkatesh : இந்தியப் பங்குச்சந்தை கடைசிக் கட்ட வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் முதல், கடந்த வார வெள்ளிக்கிழமை வரை அதிகப்படியான தடுமாற்றத்தைப் பதிவு செய்தது. சென்செக்ஸ் ஓரே நாளில் டபுள் மடங்கு உயர்ந்தது முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் சென்செக்ஸ் 6100 புள்ளிகள் சரிவது வரையில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களைத் திக்குமுக்காட வைத்தது.
இந்த நிலையில் உலகின் முதல் எக்சிட் போல் பங்குச்சந்தை ஊழல் இந்தியாவில் நடித்துள்ளது என பிரவீன் சக்ரவர்த்தி டெக்கான் ஹெரால்டு பத்திரிக்கையில் எழுதியுள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மட்டும் அல்லாமல் ராகுல் காந்தியால் நியமிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் டேட்டா அனலிட்டிக்ஸ் துறையின் தலைவர் ஆவார்.
9 மாடுகளைக் கொன்ற சாயப்பட்டறை? குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருந்த விவசாயி!
minnambalam.com - Kavi : கரூரில் அடுத்தடுத்து 9 மாடுகளை இழந்த விவசாய தம்பதியினர், தங்களது மாடுகள் இறப்புக்கு அருகில் உள்ள சாயப்பட்டறையில் இருந்து வெளியேறும் நச்சுக்கழிவுதான் காரணம் என்று குற்றம்சாட்டுகின்றனர்.
கரூர் திருமாநிலையூரில் வசித்து வருபவர் வேலுசாமி. இவரது மனைவி ஜாஸ்மின். விவசாய குடும்பத்தை சேர்ந்த இந்த தம்பதியினர் மாடுகள் வளர்த்து அதன் மூலம் வரும் பணத்தை வைத்து வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
எத்தியோப்பிய ஏதிலிகயுடன் சென்ற படகு கவிழ்ந்து 38 பேர் பலி!
thesamnet : யேமன் கடற்பரப்பில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்தனர்.
சுமார் 250 பேருடன் பயணித்த இப்படகு, சீரற்ற காலநிலை காரணமாக கவிழ்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
படகில் இருந்தவர்கள் எத்தியோப்பிய ஏதிலிகள் என தெரியவந்துள்ளது. விபத்தில் காணாமல் போன நூற்றிற்கும் மேற்பட்டவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதுவரையில் 78 பேர் வரை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செவ்வாய், 11 ஜூன், 2024
கர்நாடகாவை சேர்ந்தவருக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதவியா? தமிழ்நாட்டில் எதிர்ப்பு
காங்கிரஸ் கட்சி அவரை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான மூன்றாவது அமைச்சரவை சமீபத்தில் பதவியேற்றது. அந்த அமைச்சரவையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
இதில் ஒருவராக கர்நாடக மாநில பா.ஜ.கவின் மூத்தத் தலைவர்களின் ஒருவரான வீ. சோமன்னா நீர்வளத் துறை இணை (ஜல்சக்தி) அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
நீர்வளத் துறை அமைச்சராக சி.ஆர். பாடீல் நியமிக்கப்பட்டிருந்தாலும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் இந்தத் துறையின் இணையமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது.
சோனியா, மம்தா வரிசையில் கனிமொழி: திமுக நாடாளுமன்ற நிர்வாகிகள் தேர்வு பின்னணி!
மின்னம்பலம் -Aara : திமுக நாடாளுமன்ற கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை ஜூன் 10ஆம் தேதி அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
இதன்படி திமுகவின் மக்களவை- மாநிலங்களவை ஆகிய இரு அவைகளையும் சேர்த்து நாடாளுமன்ற குழு தலைவராக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
திமுக மக்களவை குழு தலைவராக ஏற்கனவே பதவி வகித்த டி. ஆர். பாலு மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களவை குழு துணை தலைவராக தயாநிதி மாறனும், மக்களவை குழு கொறடாவாக ஆ ராசாவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
வயாக்ரா மாத்திரை ஞாபக மறதிக்கும் மருந்தாகுமாம்! ஆய்வு முடிவு!
மாலை மலர் : ஆண்களின் விறைப்புத்தன்மைக்கு பயன்படுத்தப்படும் பிரபலமான மருந்தான வாயாகரா குறித்த சுவாரஸ்யமான ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. சில்தெனாபில் (Sildenafil) என்ற மருத்துவப் பெயருடைய இந்த மருந்தை தயாரிக்கும் நிறுவனத்தின் பெயரான வாயாகராவே மருந்தின் பெயராக வெகுஜனத்தின் மத்தியில் அறியப்படுகிறது.
வயாகரா உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து ரத்த நாளங்களின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.
இதனால் ரத்த நாளங்கள் தளர்வதால் மனித மூளையில் உள்ள திசுக்கள் பாதிக்கப்பட்டு அதனால் ஏற்படும் வாஸ்குலார் டிமென்ஷியா (Vascular Dementia) என்று கூறப்படும் நியாபக மறதி நோய் ஏற்படும் அபாயம் குறைகிறது என்றும் நியாபக மறதிக்கு வயகரா சிறந்த தீர்வாக இருக்கும் என்றும் அமெரிக்காவில் உள்ள பிரபல ஆக்ஸ்போர்ட் பலக்லைக்கழகத்தில் சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
நடுவானில் ஆலங்கட்டி மழையில் சிக்கிய விமானம் ! முன்பகுதி பலத்த சேதம் !
வீரகேசரி : ஒஸ்திரியா விமானச் சேவைக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320-200 என்ற விமானத்தின் முன்பகுதி மற்றும் ஜன்னல்கள் ஆலங்கட்டி மழையால் பலத்த சேதமடைந்துள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) இந்த விமானம் ஸ்பெயினின் பால்மா டி மெலியோர்காவிலிருந்து ஒஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவிற்கு 173 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் பயணித்துள்ளது.
அப்போது, இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழையில் விமானம் சிக்கியுள்ளது.
இதன்போது, விமானத்தின் முன்பகுதி ஆலங்கட்டி மழையால் நொறுங்கி பலத்த சேதம் அடைந்ததோடு, விமானி அறையின் மேற்பகுதி வளைந்ததோடு, ஜன்னல்களிலுள்ள கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளன.
திமுக நாடாளுமன்ற குழுத் தலைவராகக் கனிமொழி எம்.பி. நியமனம்!
நக்கீரன் : ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும்,
இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது.
இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது.
அதே சமயம் தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மொத்தம் உள்ள 39 இடங்களையும் வென்றுள்ளது.
புதுச்சேரியின் ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது.
திங்கள், 10 ஜூன், 2024
என்.டி.ராமராவின் மகள் புரந்தேஸ்வரி பாராளுமன்ற சபாநாயகர் ஆகிறார் ( சந்திரபாபு நாயுடுவின் மைத்துனி)
maalaimalar.: திருப்பதி: தேசிய ஜனநாயக கூட்டணி பிரதமராக நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகள் நேற்று பதவி ஏற்றனர்.
சந்திரபாபு நாயுடு தனது கட்சிக்கு 5 மந்திரி பதவியும், 1 சபாநாயகர் பதவியும் வழங்க வேண்டும் என பா.ஜ.க.விடம் வலியுறுத்தி வந்தார்.
ஆனால் தெலுங்கு தேசம் கட்சிக்கு 2 மந்திரி பதவிகளை பா.ஜ.க. வழங்கியது. சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியதின்படி. அவரது மனைவியின் சகோதரியும் பா.ஜ.க. மாநில தலைவரான புரந்தேஸ்வரிக்கு சபாநாயகர் பதவி வழங்க பா.ஜ.க. மேலிடம் முடிவு செய்துள்ளது.
சந்திரபாபு நாயுடு நாளை மறுநாள் முதல் மந்திரியாக பதவி ஏற்று கொள்கிறார். அவரது பதவி ஏற்பு விழாவிற்கு பிறகு புரந்தேஸ்வரி இன்னும் சில நாட்களில் சபாநாயகராக பதவியேற்பார் என கூறப்படுகிறது.
கச்சத்தீவு' நாடகம் அம்பலம்- மோடியின் பதவியேற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி - காங்கிரஸ்
மாலை மலர் : காங்கிரஸ் ஆட்சியின்போது இலங்கைக்கு கச்சதீவை தாரைவார்த்ததாக தேர்தலுக்கு முன்பாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருந்தார். அப்போது, கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாக வெடித்தது..
கச்சத்தீவு விவகாரம் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் போட்டியிட்ட அணைத்து இடங்களிலும் பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்தது. 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், பாஜகவின் கட்சத்தீவு சர்ச்சை தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
NDA Cabinet Ministers தெற்கில் இருந்து 13 பேர்.. 7 பெண்கள்..
மாலை மலர் : மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றிய நிலையில்
கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது.
என்.டி.ஏ புதிய எம்.பி.க்கள் கூட்டத்தில் அக்கூட்டணியின் பாராளுமன்ற தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து நேற்று (ஜூன் 9) இரவு 7.15 மணிளவில் பிரதமராக மோடி 3-வது முறையாகப் பதவியேற்றுள்ளார். அவருடன் 72 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
கூட்டணி கட்சிகளின் தயவில் பாஜக மீண்டும் ஆட்சியமைத்துள்ளதால் புதிய அமைச்சரவை குறித்த எதிர்பார்ப்புகள் ஆரமபம் முதலே உச்சத்தில் இருந்தது. அதிகபட்சமாக 78 முதல் 82 அமைச்சர்கள் வரை ஒரு அமைச்சரவையில் இடம்பெறலாம் என்று இருக்கும் சூழலில் தற்போது அமைத்துள்ள அமைச்சரவையில் 72 பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
தமிழர்களால் மறக்கப்பட்ட தமிழர்கள்! அரசியல் வாதிகளினால் கண்டுகொள்ளப்படாதவர்கள்!
தேசம் நெட் :நம்மில் ஒருத்தராக இருந்தாலும் மாற்றுத்திறனாளிகளை
நமது சமூகத்தில் ஏதோ வலுவிழந்தவர்களாகவே பார்க்கும் போக்கு அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை.
அவர்களுக்கான அங்கீகாரமும் இல்லை.
அது போல அடிப்படையில் அவர்களுக்கு வழங்கவேண்டிய உரிமைகள் கூட வழங்கப்படுவதில்லை. தமிழ்தேசியம் பேசி தம் வாக்கு வங்கியை நிறைத்துக்கொள்ளும் தமிழ்தேசிய அரசியல்வாதிகள் தேர்தல் வாக்குறுதிகளில் கூட மாற்றுத்திறனாளிகள் பற்றி பேச தயாரில்லை.
இந்த நிலையில் நமது சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் நிலை தொடர்பிலும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் தேசம் ஜெயபாலன் மேற்கொண்ட உரையாடல்.