ஹலோ
தலைவரே, நேத்து ராத்திரியே, உங்களைத் தொடர்புகொள்ள நினைச்சேன். ஆனா,
பாக்கெட்ல இருந்த ஒத்தை ஐநூறுரூபா நோட்டை மாத்துற துக்கே, பெரும்பாடு பட
வேண்டிய தாயிடுச்சு.''’
""தமிழ்நாடு உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்தியாவே அப்படித்தான்ப்பா தவியா தவிச்சிது. 500 ரூபா, 1000 ரூபா நோட்டுக்கள் செல்லாதுன்னு அதிரடி அறிவிப்பு வெளியானதால், தமிழக மக்கள் அன்னைக்கு இரவு பூராவும் அதிர்ச்சியோட அலைபாய்ஞ்சாங்க. அந்த நேரத்தில், மாநில அரசுத் தரப்பிலிருந்து நடவடிக்கையும் இல்லை. மக்களுக்கு ஆறுதலா ஒரு அறிக்கையும்கூட வரலையே?''’""இதுதொடர்பா கோட்டையில் விசாரிச்சேங்க தலைவரே, டெல்லியில் 8-ந் தேதி மாலையில் கூடிய மத்திய மந்திரிசபைக் கூட்டத்தில்தான், மோடியின் இந்த அதிரடி கரன்ஸிப் பாலிஸி, பாஸாகியிருக்கு. கூட்டம் முடிஞ்சதுமே, மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளரான சக்தி கந்ததாஸ், வெளியில் வந்து, தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகனராவைத் தொடர்புகொண்டு, இதுபற்றித் தகவல் சொல்லி யிருக்கார்.
தலைமைச் செயலாளர் உடனே நிதித் துறைச் செயலாளர் சண்முகத்திடம் தகவலைப் பாஸ் பண்ணிட்டு, அதை அப்பல்லோ வில் இருந்த சசிகலாவின் கவனத்துக்கும் கொண்டுபோயிருக்கார். சசிகலா இது பத்தி முதல்வரின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன்கிட்டயும், முதல்வரின் செயலாளரான வெங்கட்ரமணன் கிட்டயும் டிஸ்கஷன் செஞ்சிருக்கார்.''""டிஸ்கஷன் சரி.. நடவடிக்கை?''""இது சம்பந்தமா அறிக்கை கொடுப்பதற்காக நிதித்துறையையும், முதல்வரின் இலாகாக்களையும் கவனிச்சிக்கிட்டிருக்கும் ஓ.பி.எஸ்.சை தொடர்புகொள்ள முயற்சி செஞ்சாங்க. அவரோட போன் ரீச் ஆகலை. அதனால் அவர் எங்கே இருக்காருன்னு தேட ஆரம்பிச்சாங்க. அவர் சென்னையிலும் இல்லை, பெரியகுளம் வீட்டிலும் இல்லைன்னு தெரிஞ்சிது. இடைத் தேர்தல் வேலைபார்க்க, பொறுப் பாளர்ங்கிற முறையில் திருப்பரங்குன்றம் போயிருப்பாரான்னு விசாரித்தா, ஓ.பி.எஸ். அங்கும் இல்லையாம். இதற்கிடையில், மும்பையில் இருந்த தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ், தலைமைச் செயலாளர் ராம மோகனராவைத் தொடர்பு கொண்டு, மாநில அரசின் சார்பில், தமிழக மக்களின் பதட்டத்தைப் போக்கும்விதமா, நிலைமையை விளக்கி, ஓர் அறிக்கை கொடுக்கச் சொல்லுங்கன்னு உத்தரவு போட் டார். இதன்பிறகும் ஓ.பி.எஸ்.சைத் தொடர்புகொள்ளப் போராடி னார்கள். 9-ந் தேதி மதியம் வரையும் அவரைத் தொடர்பு கொள்ள முடியாததால், அரசின் சார்பிலான விளக்க அறிக்கை எதுவும் வெளிவரவே இல்லை. ஓ.பி.எஸ். பர்சனல் வேலையில் பிஸியா இருந்தாராம்.''’""பர்சனல் வேலையா? அதுசரி, மக்கள்கிட்டே ஒரு சில 500, 1000 ரூபாய் தாள்தான் இருக்கும். அதிகாரத்தில் இருப் பவங்ககிட்டதானே அதிகமா இருக்கும். மக்களைவிட அவங்க தானே மோடி அறிவிப்பால் அதிர்ச்சி அடைஞ்சிருப்பாங்க.?’''""ஆமாங்க தலைவரே.. கடந்த 5 வருசத்தில் அமைச்சர்களும், வலுவான துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் ஏராளமா ’வருவாய்’ பார்த்தாங்க. அதில் கணக்கில் காட்டமுடியாத, 500-ம் 1000-முமா எக்கச்சக்கம் இருக்கும். மோடியோட அறிவிப்பு வந்த கொஞ்ச நேரத்திலேயே அவங்கவங்களும் தங்கள் ஆடிட்டர்களை அவசரமா தொடர்புகொண்டு, இது சம் பந்தமா கவலையோட டிஸ்கஸ் ஆரம்பிச்சிட்டாங்க. ஆடிட் டர்கள் தரப்போ, மார்ச் வரை அவகாசம் இருக்குது. அதற்குள், ஒரு ரூட்டைப் பிடிச்சிடலாம்ன்னு ஆறுதல் சொல்லியிருக்குது.. அதே நேரம், மத்திய புலனாய்வுத் துறையோ அமைச்சர்கள்-அதிகாரிகள் வட்டாரத்து ஆடிட்டர்கள் தரப்பை கண்காணிச்சி, அவர்கள் உதவியோட, கரன்ஸிப் புதையல்களை மறைக்கத் துடிக்கும் பெரும்புள்ளிகள் யார் யார்னு, பட்டியல் எடுக்கும் வேலையையும் ஆரம்பிச்சிடிச்சாம்.''’
""ஏற்கனவே மாஜி மந்திரிகள், மத்திய அரசின் கிடுக்கிப்பிடியில் சிக்கியிருக்காங்களே?''’ ""உண்மை. மாஜி மந்திரிகளில் பலர் ஏற்கனவே மத்திய அரசின் கண்காணிப்பு வளையத்தில்தான் இருக்காங்க. இந்தக் கண்காணிப்பு, சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு கரூர் அய்யம்பாளையம் அன்புநாதன் சிக்கினப்பவே ஆரம்பிச்சிடுச்சி. இந்த அன்புநாதன் தரப்பு, அரசுக்குக் கட்டவேண்டிய வரிபாக்கி மட்டுமே 4 ஆயிரம் கோடி ரூபாய்ன்னு அதிகாரிகள் தரப்பு அதிரவைக்கிது. அன்புநாதன் விவகாரத்திலும், திருப்பூரில் பிடிபட்ட 570 கோடி ரூபாய் கண்டெய்னர் விவகாரத்திலும், இந்நாள், முன்னாள் அமைச்சர்கள் மட்டுமல்ல, கார்டன்வரை அதன் வேர்கள் போவதை, மத்திய அரசு கண்டுபிடிச்சிருக்கு.'' ""ஆமாப்பா.. இது சம்பந்தமா நத்தம் விசுவநாதன், சைதை துரைசாமி, வைத்தி லிங்கம்ன்னு ஆளும்கட்சிப் புள்ளிகள் பலரும், மத்திய அமலாக்கப்பிரிவின் விசாரணைப் பிடியில் இருப்பதை உரிய ஆதாரங்களோட, நக்கீரன் தொடர்ந்து கவர் ஸ்டோரிகள் மூலம் அம்பலப்படுத்துச்சு.''’""அதுமட்டுமா? இதன் தொடர்ச்சியா, ஜெ. செப்டம்பர் 22-ந் தேதி இரவு, அப்பல்லோவில் அட்மிட் செய்யப்படு வதற்கு முன், ஜெ.’வை டெல்லியில் இருந்து தொடர்புகொண்ட மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, இது தொடர்பான, மத்திய அரசின் கோப தாபங்களை எதிரொலிச்சதை, அப்போதே நாம பேச, அது நம்ம நக்கீரன் ராங்-கால் பகுதியில் வெளியாச்சு. அந்த அன்புநாதன் விவகாரத்திலும், 570 கோடி கண்டெய்னர் விவகாரத்திலும் பிரதானமா இருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் கரன் ஸிக் கட்டுகள், மோடியின் இப்போதைய அதிரடி கரன்ஸி பாலிஸியை, வேகப்படுத்திய முக்கிய காரணங்களில் ஒன்றுன்னு அடிச்சிச் சொல்றாங்க டெல்லி வாலாக்கள்.''""ஓ.. மோடியின் நடவடிக் கைக்கு தூண்டுகோலே தமிழக அமைச்சர்கள்-அதிகாரிகளோட பண விளையாட்டுதானா?''""ஆமாங்க தலைவரே.. ஒரு சில புத்திசாலி மந்திரிகள் மட்டும்தான், தங்களின் அதிகப்படியான வருவாயை, வெளிநாடுகளிலும் இங்கும் சைலண்ட்டா முதலீடாக்கிட றாங்க. மத்த மந்திரிகள், அதையெல்லாம் கரன்ஸிக் கட்டுகளாவே வச்சிக்கிட்டு, அதில் ஒரு பகுதியை, தேர்தல் களம், கட்சி நிகழ்ச்சி, பால்குடப் பிரார்த் தனைகள்ன்னு அள்ளிவிடறாங்க. மிச்சத்தை பண்ணை வீடுகளிலும் குடோன்களிலும் மூட்டை கட்டி வச்சிக்கிறாங்க. சமயம் பார்த்து வெயிட்டா முதலீடு செய்யலாம்ங்கிறதுதான் அவங்க கணக்கு. எல்லா மாநிலங்களிலும், கமிஷன் இருந்தாலும், அதையெல்லாம் விட அதிகப்படியா நம்ம தமிழகத்தில்தான், 30 பர்சண்ட் கமிஷன்ங்கிறது கட்டாய நடைமுறையா இருக்கு. அதனால் கவுன்சிலர்கள்ல ஆரம்பிச்சி, அமைச்சர்கள் வரை 500 ரூபாய், 1000 ரூபாய் கட்டுக்களில்தான் புரண்டுக்கிட்டு இருந்தாங்க. சில பேர் மெத்தையிலேயே பணக்கட்டுகளை வச்சித் தைச்சிருக்காங்க. மந்திரிகளோடும் ஆளுங்கட்சி காண்ட்ராக்டர்களோடும் அரசு அதிகாரிகளும் கூட்டணியில் இருப்பதால், அவங்ககிட்டயும் கரன்ஸி ஏகத்துக்கும் புழங்குது. இந்தப் பணத்தை எல்லாம், இவங்க வட்டிக்கு விடறாங்க. கந்து வட்டியைத் தடுக்க முதன்முதலில் சட்டம் போட்டதே, நம்ம தமிழ்நாடுதான். அப்படி சட்டம்போட்ட ஜெ.வின் கட்சிக்காரர்களும் பினாமி களுமே, ரொம்பவும் கெத்தா சினிமாவில், கந்துவட்டி, மீட்டர் வட்டிக்கு, பணத்தை அள்ளிவிடறாங்க.''’""தமிழ் சினிமா ஹீரோக்களோட சம்பளம் பாலிவுட் ரேஞ்சுக்கு இருப்ப தற்கு காரணமே, அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் பினாமிகள் மூலமா தாறுமாறா அள்ளியிறைக்கிற பணம்தான்னு கோலிவுட் வட்டாரம் சொல்லுதே!''""இப்படி எக்கச்சக்க பணம் கறுப்பும் வெள்ளையுமா சினிமாத் துறையில் புரண்டுக்கிட்டி ருக்கு. இதோட, மந்திரிகள், மாஜி மந்திரிகள் உள்ளிட்ட அரசியல் புள்ளிகள் பலரும், அங்கங்கே மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரின்னு கட்டிவச்சி, கேபிடேசன் பீஸ்ன்னு வாரிக் குவிச்சிக்கிட்டு இருக்காங்க. இப்படி கணக்கில் வராத இவங்களோட கரன்ஸி விவகாரத்தில், அரசியல், சினிமா, கல்வி, வட்டி பிஸ்னஸ்ன்னு எல்லாமே ஒண்ணோட ஒண்ணு லிங் உள்ளதா இருக்கு. பணத்தை விதைச்சி, பணத்தை அறுவடை பண்ணிக்கிட்டிருந்த ஆளுங்கட்சிக் கூடாரமே மோடியோட அதிரடியால பதறிக்கிடக்குது. போயஸ் கார்டன் வரைக்கும் இந்தப் பதட்டம் தெரியுது. சக்தி கந்ததாஸ் அங்கே இருந்தும் சில நாட்களுக்கு முன்னாடியே நமக்கு தகவல் தெரி யாமல் போனது எப்படி? அம்பானிக்கும் அதானிக் கும் மோடி அரசு சொல்லாமல் இருந்திருக்குமா? டிசம்பர் 31-க்குள்ளே எல்லாத்தையும் சரிபண்ணி வைக்கணும்னு சசிகலா தரப்பு பதறுதாம்.''""அவங்கதான் ஏற்கனவே பதறிப்போய், கண்டெய்னர்களில் எல்லாத்தையும் வெளியில் கொண்டு போறதை, "ராத்திரி நேரம்.. கார்டன் கண்டெய்னர்கள் ரகசிய பயணம்'னு நம்ம நக்கீரன் கவர் ஸ்டோரியே வெளியிட்டிருந்ததே?''""தி.மு.க ஏரியாவும் பேயறைஞ்ச மாதிரி திகில்ல இருக்கு. அதைப் பற்றி நான் சொல் றேன். 2011-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட வேகத்திலேயே, ஒரு சில மாஜி மந்திரிகள் வேற வேற இடங்கள்ல செட்டில் பண்ணிட்டாங்க. வெளிப்படையா தொழில் நிறுவனங்களை நடத்தற, ஒருசிலர் கையில், கட்சி செலவுக்காகவும் மற்ற செலவுக்காகவும் ஹாட் கேஷ் இருக்குது. சமீபத்தில் முன்னாள் மத்திய இணையமைச்சரின் மெடிக்கல் காலேஜ் ரெய்டில் 600 கோடி ரூபாய் அளவுக்கு மாட்டினிச்சி. அதனால மடியிலே கனமா இருக்கிற தி.மு.க புள்ளிகள் திடுக்கிட்டுப் போயிருக் காங்க.'' நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக