சனி, 16 நவம்பர், 2013

அழகு அறிவு திறமை பிரியாமணி ...


‘பருத்திவீரன்’ படம் மூலம் தேசிய விருது பெற்ற அவர் தொடர்ந்து தமிழில் மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் படங்களில் நடித்தார். தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்தார். ஆனாலும் நயன்தாரா, அனுஷ்கா, காஜல் அகர்வால், ஹன்சிகா போன்றோரின் படங்கள் போல் அவர் படங்கள் பெரிதாக ஓடவில்லை. சமீபத்தில் நடித்த கன்னட, தெலுங்கு படங்களும்
கைகொடுக்கவில்லை.
பிரியாமணி நல்ல கதைகள், திறமையான டைரக்டர்கள் பெரிய ஹீரோக்களை தேர்வு செய்து நடிக்காததே சரிவுக்கு காரணம் என்கின்றனர். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஓரிரு படங்களை தேர்வு செய்து நடித்தார். அனுஷ்காவின் அருந்ததி போல் தனக்கு இப்படங்கள் பெயர் வாங்கி தரும் என எதிர்பார்த்தார். அது நடக்கவில்லை.
சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் குத்தாட்டம் போட்டு மேலும் இமேஜை இறக்கி கொண்டார். இனிமேல் கதைகளை கவனமாக தேர்வு செய்து நடித்தால் மட்டுமே சினிமாவில் நிலைக்க முடியும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார்.maalaimalar.com

SMS மூலம் இரண்டே நிமிடங்களில் மணி ஆர்டர் பணம் பெறலாம்

சென்னை: தபால் நிலையங்களில் மணி ஆர்டர் அனுப்பினால், எஸ்.எம்.எஸ். மூலம் 2 நிமிடங்களில் பணத்தை பெற்றுக்கொள்ளும் முறை தமிழகத்தில் அமலுக்கு வருகிறது. தபால் நிலையங்களில் மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பினால், அந்த பணம் உரியருக்கு சென்றடைய சில நாட்கள் ஆகிவிடும் நிலை இருந்தது. இதனால் மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்புவதை பொதுமக்கள் குறைத்துக் கொண்டனர். எஸ்.எம்.எஸ். மணியார்டர் அமல்! 2 நிமிடத்தில் பணம் பெறலாம்!!

ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடித்த இந்திய நடிகர் திடீர் தற்கொலை Actor Goutam paul bhattacharjee

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperலண்டன்:ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்த இந்திய வம்சாவளி நடிகர், இங்கிலாந்தில் வங்கி கடனை திரும்ப செலுத்த முடியாமல் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டார்.இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் கவுதம் பவுல் பட்டாச்சார்ஜி (53). இவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மனைவி எம்மா மெக்குடன் வசித்தார். டிவி நாடகங்களிலும், திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கினார். டேனியல் கிரைக் ஜேம்ஸ் பாண்டாக நடித்து 2006ல் வெளியான கேசினோ ராயல் படத்தில் டாக்டர் வேடத்தில் கவுதம் நடித்தார். அதன்பிறகு ஈஸ்ட் என்டர்ஸ் உள்பட பல்வேறு ஹாலிவுட் படங்களில் நடித்தார்.

சீனாவில் இரண்டாவது குழந்தை பெற்றுகொள்ள அனுமதிக்கப்படும் !

பீஜிங்:உலக மக்கள் தொகை யில் சீனா முதல் இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சீனாவில் 185 மில்லியன் பேர் (13.7 சதவீதம்) 60 வயதிற்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். 2015ல் முதியவர்கள் எண்ணிக்கை 221 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 51 மில்லியன் முதியவர்கள் கவனிக்க ஆள் இல்லாமல் வறுமையில் வாடுகிறார்கள். மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனாவில் கடந்த 1970 முதல் ஒரு குழந்தை குடும்ப கட்டுப்பாடு திட்டம் கொண்டு வரப்பட்டது. கிராமப்புறங்களில் தம்பதிக்கு பிறகும் முதல் குழந்தை பெண்ணாக இருந்தால் 2வது குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதன் பிறகு கிராமப்புற, நகர்புற தம்பதி யாரும் ஒரு குழந்தைக்கு மேல் பெற்று கொள்ள கூடாது என்று தடை விதிக்கப்பட்டது.தற்போது முதியவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் ஒரு குழந்தை திட்டத்தை கைவிட அரசு முடிவு செய்துள்ளது.

ஸ்ரீ வித்யாவை கொள்ளை அடித்த சினிமா அரசியல்வாதி கணேஷ்குமார் அவரது சிகிச்சைக்கு கூட பணம் கொடுக்க மறுத்துவிட்டான் ! டாக்டர் அதிர்ச்சி தகவல்



சென்னை:கேன்சரால் பாதிக்கப்பட்டு இறந்த ஸ்ரீவித்யாவின் மருத்துவ செலவுக்கு அவர் சம்பாதித்த பணத்தை தர அறக்கட்டளை மறுத்தது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் டாக்டர். இறுதி நாட்களில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவனந்தபுரத்திலுள்ள
கேன்சர் சென்டர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் ஸ்ரீவித்யா. அவரை நேரில் சந்திக்க பல நடிகர், நடிகைகள் முயன்றும் யாருக்கும் அனுமதி தர மறுத்த ஸ்ரீவித்யா, தன்னுடன் பல படங்களில் ஜோடியாக நடித்த கமலை மட்டும் நேரில் சந்திக்க அனுமதி தந்தார். இதற்கிடையில் தான் சம்பாதித்த சொத்து முழுவதையும் அறக்கட்டளைக்கு மாற்றினார் ஸ்ரீவித்யா. அவரது சிகிச்சை செலவுக்கு
அறக்கட்டளையிடம் பணம் கேட்டபோது தர மறுத்துவிட்டனர். இதுபற்றி ஸ்ரீவித்யாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கிருஷ்ணன் நாயர் கூறும்போது, ‘ஸ்ரீவித்யாவுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டிருந்தது. இதை ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றப்பட்டிருப்பார். தனது சொத்துக்களை அறக்கட்டளைக்கு எழுதி வைத்தார் ஸ்ரீவித்யா. அவர்களிடம் சிகிச்சைக்காக நிதியுதவி கேட்டபோது தர இயலாத நிலை உள்ளதாக தெரிவித்தனர். மருந்து நிறுவனம் ஒன்றுதான் சலுகை விலையில் ஸ்ரீவித்யாவுக்கு மருந்துகளை வழங்கியது என்றார்

பழம் பெரும் காங்கிரஸ் வாதியும் அமைச்சருமான பாலகிருஷ்ணா பிள்ளை பெரும் ஊழலில் சிக்கி ஜெயில் சென்றவர் .இவரின் மகன் மலையாள சினிமா நடிகனாகி பின்பு அரசியலில் அமைச்சரும் ஆகிவிட்டார், இவர்தான் ஸ்ரீ வித்தியாவின் சொத்துக்களை இன்றுவரை கையளிக்காமல் அனுபவித்து வருகிறார்,

சிநேகா கர்ப்பம்... புதிய படங்கள் ஒப்புக் கொள்வதை நிறுத்தியுள்ளார்.

சென்னை: திருமணமான பின்னும் பரபரப்பாக படங்கள், விளம்பரங்கள், நகைக்கடை திறப்புகள் என ஓடிக் கொண்டிருந்த நடிகை சிநேகா, இப்போது கர்ப்பமாக உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. விரும்புகிறேன் (படம் வெளியான கணக்குப்படி ஆனந்தம்) படம் மூலம் அறிமுகமான ;சிநேகா, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக பத்தாண்டுகளுக்கு மேல் தொடர்ந்தார். டந்த ஆண்டு நடிகர் பிரசன்னாவை அவர் காதலித்து திருமணம் செய்தார். திருமணத்துக்குப் பிறகும் அவர் நடிப்பைத் தொடர்ந்தார். ஹரிதாஸ் படம் அவர் திருமணத்தின்போது ஒப்புக் கொள்ளப்பட்டு, திருமணத்துக்குப் பின் வெளியாகு நல்ல பாராட்டுகளைப் பெற்றது.
இதுவரை தான் ஒப்புக் கொண்ட படங்களின் வெளிப்புறப் படப்பிடிப்புகளுக்கு போய் வந்த சிநேகா, கர்ப்பம் காரணமாக இப்போது வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார்.

மங்கள்யான்' சுற்றுவட்டப் பாதை அதிகரிக்கும் பணி வெற்றிகரமாக நிறைவு

ஸ்ரீஹரிகோட்டா: செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட ‘மங்கள்யான்' விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதையை அதிகரிக்கும் பணி முற்றிலும் நிறைவடைந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி-25 ராக்கெட் மூலம் ‘மங்கள்யான்' விண்கலம் நவம்பர்- 5 அன்று பிற்பகல் 2.38 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது. 'மங்கள்யான்' சுற்றுவட்டப் பாதை அதிகரிக்கும் பணி வெற்றிகரமாக நிறைவு இதனைத் தொடர்ந்து கடந்த 7- ஆம் தேதியன்று மங்கள்யான் விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை முதல் முறையாக அதிகரிக்கப்பட்டது.

ஏற்காடு இடைத்தேர்தல் அதிமுக– திமுக நேரடி போட்டி! சரோஜாவா? மாறனா ?

ஏற்காடு இடைத்தேர்தல் வேட்புமனுத்தாக்கல் முடிந்தது: அதிமுக– திமுக நேரடி போட்டி சேலம்: ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலையுடன் முடிவடைந்தது வருகிற 18-ந் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது. ஏற்காடு தொகுதி அ.தி. மு.க. எம்.எல்.ஏ. பெருமாள் மரணம் அடைந்ததையடுத்து அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜா, தி.மு.க.வேட்பாளர் மாறன் உள்ளிட்ட 27 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். தேமுதிக வேட்பாளரை அறிவிக்கவில்லை. இதனால் ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் இருமுனைப் போட்டி உருவாகியுள்ளது.

சச்சினுக்கு பாரதரத்னா விருது ! வரும் தேர்தலில் காங்கிரசுக்கு அவர் ஆதரவு ?


கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ்- க்கும்  பாரத ரத்னா விருது அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் விருது பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விளையாட்டு வீரருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். அறிவியல் துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்ததுக்காக விஞ்ஞானி ராவ்&க்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிக்கு எதிரான பெண் வக்கீல் செக்ஸ் புகார் போலீஸ் விசாரணை தொடங்கியது

புதுடெல்லி, நீதிபதி மீதான பெண் வக்கீலின் செக்ஸ் புகாரில் புதிய திருப்பமாக, சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதிக்கு எதிராக போலீஸ் விசாரணை தொடங்கி உள்ளது. பெண் வக்கீல் செக்ஸ் புகார் ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிக்கு எதிராக, இளம் பெண் ஒருவர் கூறிய செக்ஸ் புகார் நாடு தழுவிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தகவல் வெளியானதும், சுப்ரீம் கோர்ட்டு தானே முன்வந்து, அந்த புகார் குறித்து விசாரிப்பதற்காக 3 நீதிபதிகள் கொண்ட குழு ஒன்றை அமைத்தது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.சதாசிவம் அமைத்துள்ள இந்த விசாரணை குழுவில் நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, எச்.எல்.தத்து, ரஞ்சன் பி.தேசாய் ஆகிய மூன்று பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு உடனடியாக தனது பணியை தொடங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. போலீசில் பரபரப்பு புகார்
செக்ஸ் புகார் கூறிய பெண் வக்கீல், திங்கட்கிழமை (18–ந் தேதி) 3 நீதிபதிகள் குழு முன்பாக ஆஜராகி வாக்குமூலம் கொடுக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

வெள்ளி, 15 நவம்பர், 2013

Obamacare தலைவராக கர்நாடகா டாக்டர் மூர்த்தி ஒபாமாவினால் நியமிக்கப்பட உள்ளார் !

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மருத்துவ சட்டத்தை நடைமுறை படுத்தும் குழுவுக்கு தலைவராக அமெரிக்காவின் தலைசிறந்த அறுவை சிகிச்சை நிபுணரான இந்தியர் விவேக் எச். மூர்த்தி இருந்து வருகிறார்.  நிபுணரான விவேக் எச். மூர்த்தியை அமெரிக்காவின் மிக உயரிய நிர்வாக பதவிக்கு இந்தியரான மூர்த்தியை ஒபாமா நியமிக்க திட்டமிட்டிருப்பதாக நேற்று அறிவித்தார். இவரது பரிந்துரையை செனட் சபை ஏற்குமானால், அமெரிக்க வரலாற்றிலேயே மிகச்சிறிய வயதில் தலைமை அறுவை சிகிச்சை நிபுணரான பெருமைக்குரியவராக மூர்த்தி விளங்குவார்.ஹார்வார்டு மருத்துகல்லூரியில் மருத்துவம் பயின்ற அவர், தற்போதைய சர்ஜன் ஜெனரலான உள்ள ரெஜினா பெஞ்சமின் என்பவருக்கு பதிலாக பொறுப்பேற்பார். அமெரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவராகவும், இணை நிறுவனராகவும் உள்ள மூர்த்தி, ஹார்வார்டு மருத்துவ நிறுவனத்தின் மருந்தியல் பிரிவின் மருத்துவர் மற்றும் பயிற்றுவிப்பாளராகவும் இருந்து வருகிறார். இங்கிலாந்தில் பிறந்து அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறிய இவரின் பூர்விகம் கர்நாடகாவில் உள்ள மாண்டியா மாவட்டமாகும்
ஒபாமாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்க இந்திய மருத்துவ சங்கத்தினர் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

5 மாநில தேர்தல் நேரத்தில் ராகுல் கிரிகெட்டு பார்த்து கொண்டிருக்கிறார் ! மேட்டு குடி கலாச்சாரம்

டெல்லி: லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் 5 மாநில சட்டசபைக்கான பிரசாரத்தை ஓரம்கட்டி வைத்துவிட்டு மும்பையில் சச்சின் டெண்டுல்கர் ஆடிய கடைசி டெஸ்ட் போட்டியை கண்டு ரசித்தார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. டெல்லி, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் களைகட்டி வருகிறது. சத்தீஸ்கரில் முதல் கட்ட வாக்குப் பதிவு முடிந்து 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சத்தீஸ்கரில் நேற்று ஒரேநாளில் பல இடங்களில் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரசாரம் செய்தார். அப்போது ராகுல் காந்தியை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார் மோடி. சத்தீஸ்கர் மாநில அரசுக்கு ஒதுக்கிய நிதி என்ன உங்கள் மாமா வீட்டில் இருந்தா வருகிறது? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

பாரதிராஜா: எந்த ஹீரோவும் உண்மை பேசுவதில்லை.

விஷால் தயாரித்து நடித்திருக்கும் படம் ‘பாண்டிய நாடு‘. இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதையொட்டி நேற்று பட குழுவினர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பாரதிராஜா கூறியதாவது: ‘பாண்டிய நாடு படத்தில் என்னை விஷால் தந்தையாக நடிக்கவேண்டும் என்று சுசீந்திரன் கேட்டபோது முதலில் மறுத்துவிட்டேன். பிறகு சுசீந்திரன் மீதுள்ள மரியாதை காரணமாக நடிக்க ஒப்புக்கொண்டேன். அதற்கு நல்ல பாராட்டு கிடைத்தது. கல்யாணசுந்தரமாக வாழ்ந்திருக்கிறார் என்று விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அப்பாவாக நான்தானே நடித்திருக்கிறேன். வேறு பெயரை போட்டிருக்கிறார்களே என்று ஷாக் ஆனேன். பிறகுதான் அதுதான் படத்தில் எனது கதாபாத்திரத்தின் பெயர் என்று தெரிந்தது. கதாபாத்திரத்தின் பெயர்கூட தெரியாமல் சுசீந்திரன் சொன்னபடி நடித்தேன்.

Chennai அபார்ட்மென்ட் 14 கோடி முதல் ரூ 18 கோடி வரை ! இவ்வளவு ஏற்றத்தாழ்வு எதனால் வந்தது ?

ஆடம்பர சொகுசு குடியிருப்புகள்சென்னையில் கட்டப்பட்டு வரும் மிக விலை உயர்ந்த அடுக்கு மாடியில் ஒரு குடியிருப்பின் விலை என்ன தெரியுமா? ரூ 14 கோடி முதல் ரூ 18 கோடி வரை. உங்கள் வங்கிக் கணக்கில் இப்படி கொஞ்சம் பணம் உபரியாக இருந்தால், இந்த குடியிருப்புகளில் ஒன்றை வாங்குவதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்? நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் முதல் பக்க விளம்பரத்தில் தரப்பட்டுள்ள தொடர்பு எண்ணுக்கு உங்கள் தனிச் செயலரை தொலைபேச சொல்ல வேண்டும்.

ஆடம்பர சொகுசு குடியிருப்புகள் (மாதிரி)
விளம்பரத்தின் முதல் சில வரிகளிலேயே விலையை குறிப்பிடுவதன் மூலம், ஒரு சில ஆயிரங்கள் அல்லது ஒரு சில லட்சங்கள் வரை சம்பாதிப்பவர்கள் இதற்கு மேல் படிக்கக் கூட தேவையில்லை என்று சொல்லி விடுகிறார்கள், கோடிகளில்  புரளும் அதி உன்னத குடிமக்கள் மட்டும் தொடர்ந்து படிக்கலாம்.
இவ்வளவு விலை கொடுக்க அப்படி என்னதான் இருக்கிறது இந்த வீடுகளில்? என்ற கேள்விக்கும் விடை விளம்பரத்திலேயே தரப்பட்டுள்ளது.
  • அமைச்சர்களும், நீதிபதிகளும், தொழில் அதிபர்களும் வசிக்கும் ராஜா அண்ணாமலை புரத்தில் கிரீன்வேஸ் சாலையில் கட்டப்பட்டது, பிளாட்டினம் தரச் சான்றிதழும், கிரைசில் 6 நட்சத்திர சான்றிதழும் பெற்றது.

ஃபேஸ்புக் மூலம் மங்கள்யானை தொடரும் 2 லட்சம் பேர்

நவ.10-ஃபேஸ் புக் சமூக வலை தளம் மூலம் இஸ்ரோ வின் மங்கள்யான் விண்கலத் தை 2 லட்சம் பேர் பின் தொடர்ந்து தகவல்களை ஆர்வத்துடன் அறிந்து வருகின்றனர்.
தொடங்கப்பட்ட இரண்டே வாரத்தில் இந்த சமூக வலைதளப் பக்கத்துக்கு கிடைத்த வரவேற்பு இஸ்ரோ அதி காரிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
செவ்வாய் கோளுக்கு விண்கலத்தை அனுப்பும் திட்டம் தொடர்பான தக வல்களை அவ்வப்போது வழங்குவதற்காக ஃபேஸ் புக் பக்கத்தை அக்டோபர் 22ஆம் தேதி இஸ்ரோ தொடங்கியது.
இந்த பக்கத்தை வெள்ளிக்கிழமை (நவ.8) வரை 2 லட்சத்து 7 ஆயி ரத்து 173 பேர் பின்தொ டர்ந்து வருகின்றனர். இதுவரை 1 லட்சத்து 71 ஆயிரத்து 704 பேர், இத்திட்டம் தொடர்பான தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

ஆசாரம் சாமியார் மூன்று சிறுவர்களை கொன்று ஆசிரமத்தில் புதைத்தார் ! அல்ல அந்த எலும்புக்கூடுகள் மயானத்தில் கண்டெடுத்தது ! ரொம்ப நம்புறோம் சாமி

ஆசாராமை கொலை வழக்கில் சிக்க வைக்க சதி: ஜம்மு ஆசிரம முன்னாள் நிர்வாகி கைது
ஜம்மு ஆசிரம வளாகத்தில் மனித எலும்புக் கூடுகளை புதைத்து வைத்து, ஆசாராம் பாபுவை கொலை வழக்கில் சிக்க வைக்க சதி செய்ததாக அந்த ஆசிரமத்தின் முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
பாலியல் பலாத்கார வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாமியார் ஆசாராம் பாபுவின் ஆசிரமம் ஒன்று, ஜம்மு பகவதி நகரில் உள்ளது. இந்த ஆசிரமத்தின் நிர்வாகியாக இருந்த போலோநாத், கடந்த மாதம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ""சாமியார் ஆசாராம்பாபு 3 குழந்தைகளை கொலை செய்து, அவர்களின் உடல்களை ஆசிரம வளாகத்தில் புதைத்து வைத்திருப்பதாக'' தெரிவித்தார்.

450 குடும்பங்களிடம் 13 ஆயிரம் பவுன் நகைகளை அபேஸ் செய்த பாத்திமா கும்பல் சரண்

ரூ.30 கோடி நகை மோசடியில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்ட கும்பகோணம் பெண் டி.ஜி.பி. அலுவலகத்தில் சரணடைந்தார். தன் கணவரை கடத்தி விட்டதாகவும், தன் மீதான குற்றச்சாட்டுகள் அவதூறானவை என்றும் அவர் கூறியுள்ளார்.
நகைக் கடன்
கும்பகோணம் இந்திரா நகரை சேர்ந்தவர் பாத்திமா நாச்சியா. இவருடைய கணவர் தமிமுன் அன்சாரி. இவர்கள் இருவரும் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தங்க நகைகளுக்கு வட்டி இல்லாமல் கடன் கொடுப்பதாக கூறினர்.
இதைத்தொடர்ந்து பலர் இவர்களிடம் நகைகளை கொடுத்து பணம் வாங்கினர். இந்தநிலையில், ‘எங்கள் தொழிலில் பங்குதாரராக சேர்ந்தால் லாபத்தில் பங்கு கொடுக்கப்படும் என்றும், நீங்கள் கொடுக்கும் தங்க நகைகளின் அளவுக்கு ஏற்ப பணம் வழங்கப்படும்’ என்ற புதிய திட்டத்தையும் பாத்திமா அறிமுகம் செய்தார்.

திமுக மைனரிடியாக இருந்து செய்த சாதனைகளை அதிமுக மெஜாரிட்டி யாக இருந்து குட்டிசுவராக்குகிறது

துக்கையாண்டிக்குத் தொல்லை தொடருமா? :
கலைஞர் கேள்வி - பதில்
கேள்வி:- அ.தி.மு.க. ஆட்சியில் அன்றாடம் இந்த ஆட்சியினருக்கு நீதிமன்றக் கண்டனங்கள்,அவமதிப்பு வழக்குகள் என்பது தொடர் கதையாக இருந்து கொண்டிருக்கிறதே?
கலைஞர் :- ஆமாம், இரண்டு நாட்களில் வந்த செய்திகளை மட்டும் பார்த்தால், மக்கள் நலப்பணியாளர்கள் பற்றிய வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அணில்தவே, தீபக்மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு; கூடுதல் டி.ஜி.பி., துக்கையாண்டி ஐ.பி.எஸ். அவர்களுக்கு மத்திய தீர்ப்பாயத்தின் நீதிபதி வெங்கட்ராவ் மற்றும் உறுப்பினர் பிரபாகர் ஆகியோர் அளித்த ஆணை; “டைம்ஸ் ஆப் இந்தியா” பத்திரிகை மீது போக்குவரத்துத் துறை அமைச்சர் தொடுத்த அவதூறு வழக்கின்மீது, நீதிபதி கே.கே. சசிதரன் அளித்த தீர்ப்பில், “அரசுப் பதவிகளில் இருப்ப வர்கள், தங்களைப் பற்றிய குறைகள் கூறப்படு வதற்கு இடம் கொடுக்க வேண்டும்.

Volvo Busகளை பார்த்து பயப்படும் பயணிகள் ! அடுத்தடுத்து தீவிபத்து !

ஹாவேரி: அதிக கட்டணம், அதிக வேகம், அதிநவீன சொகுசு வசதிகளுடன் கூடிய, "வால்வோ ஏசி' பஸ்கள் தொடர்ந்து, தீ விபத்தில் சிக்கி, அப்பாவி பயணிகளின் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோவதால், அந்த பஸ்களில் பயணம் செய்ய, மக்களிடம் பீதி ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன், 45 பேர் உயிரை பலி கொண்ட, ஆம்னி பஸ் விபத்தின் சோகம் மறைவதற்குள், கர்நாடகாவில் நேற்று மீண்டும் நிகழ்ந்த விபத்தில், எட்டு பேர் இறந்தனர்.
கடந்த மாதம், 30ம் தேதி, கர்நாடகா தலைநகர், பெங்களூருவில் இருந்து, ஆந்திரா தலைநகர், ஐதராபாத் சென்ற, "ஜப்பார் டிராவல்ஸ்' என்ற, தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான, வால்வோ ஆம்னி பஸ், ஆந்திராவின் மெகபூப்நகர் அருகே விபத்துக்கு உள்ளானது. 120 கி.மீ., வேகத்தில் சென்று கொண்டிருந்த அந்த பஸ், சாலையோர பாலத்தில் மோதி தீப்பிடித்ததில், டிரைவர், கண்டக்டர் தவிர்த்து, பஸ்சில் இருந்த, 45 பேரும் தீயில் கருகி, உருத்தெரியாமல் இறந்தனர்.

வியாழன், 14 நவம்பர், 2013

Azim Premji 8000 கோடி நன்கொடை கொடுத்தார்! ஷிவ் நாடார் 3000 கோடி நன்கொடை கொடுத்து இரண்டாவது இடத்தில

மும்பை: இந்தியர்களிலேயே அதிக அளவில் கொடை அளித்திருப்பவர்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் விப்ரோ நிறுவன தலைவர் ஆசிம் பிரேம்ஜிதான். அவர் கடந்த ஆண்டு ரூ. 8000 கோடி தானமாக அளித்துள்ளாராம். சீனாவைச் சேர்ந்த ஹுருன் ரிப்போர்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள ஹுருன் இந்தியா வள்ளல்கள் பட்டியலில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இப்படி ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது இந்த நிறுவனம். இதில் முதலிடம் பிரேம்ஜிக்குக் கிடைத்துள்ளது. இந்திய நன்கொடையாளர்களில் பெரும்பாலானவர்கள் கல்விக்குத்தான் அதிக அளவில் நன்கொடை அளிக்கிறார்களாம். கல்விக்கு மட்டும் இந்திய நன்கொடையாளர்கள் கடந்த ஆண்டு ரூ. 12,200 கோடியை அளித்துள்ளனர்.
சமூக வளர்ச்சிக்கு ரூ. 1210 கோடியும், சுகாதாரத்திற்கு ரூ. 1065 கோடியும், ஊரக வளர்ச்சிக்கு ரூ. 565 கோடியும், சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு ரூ. 170 கோடியும், விவசாத்திற்கு ரூ. 40 கோடியும் தானமாக அளிக்கப்பட்டுள்ளன
எச்சிஎல் குழுமத் தலைவர் ஷிவ் நாடார், இந்திய நன்கொடையாளர்களில் 2வது இடத்தைப் பிடித்துள்ளார். அவரது நன்கொடைப் பங்கு ரூ. 3000 கோடியாகும்

ஏற்காட்டில் விஜயகாந்த் ஏன் ஒதுங்கி நிற்கிறார் ? வாக்கு வங்கி கரைந்த வண்டவாளம் ?

சென்னை: ஏற்காடு இடைத் தேர்தலில் திமுக, அதிமுக போட்டியிடுகிறது. மற்ற கட்சிகள் ஒதுங்கியுள்ளன. கடந்த காலங்களில் எந்தத் தேர்தலிலும் விடாமல் போட்டியிடும் தேமுதிக, இந்த முறை பெருத்த அமைதி காத்து வருகிறது. இதற்கான காரணம் புரியாமல் தவிப்புக்குள்ளாகியுள்ளனர் அக்கட்சியினர். வழக்கமாக இடைத் தேர்தல் வந்தால் தேமுதிக தனது வேலைகளை ஆரம்பித்து வேட்பாளரையும் இறுதி செய்து அறிவித்து விடும். ஆனால் இந்த முறை இதுவரை எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடாமல் பெருத்த அமைதி காத்து வருகிறார் விஜயகாந்த். அதேசமயம், சேலம் மாவட்ட தேமுதிக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தியுள்ளார். போட்டியிடலாமா அல்லது ஒதுங்கியிருக்கலாமா என்று அவர் கேட்டதாக கூறப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்காடு தொகுதியில் தேமுதிகவுக்கு 12,000 ஓட்டுக்கள் வரை கிடைத்தது.

ஜாதிசங்கங்களின் ஆதரவோடு பாமக பாஜகவுடன் சங்கமம் ! புதிய தலைமுறை பச்ச முத்துவின் அரசியல் ஆசை !

சென்னை: லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அணியில் பாட்டாளி மக்கள் கட்சியும் இடம்பெற இருக்கிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. திராவிட கட்சிகளுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. ஈழப் பிரச்சனையில் காங்கிரஸின் நடவடிக்கைகளால் அந்த கட்சியையும் பாமக ஆதரிக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து சாதி சங்கங்களையும் ஒன்றிணைத்து சமூக ஜனநாயகக் கூட்டணியை உருவாக்கியிருக்கிறது பாமக. அத்துடன் வேட்பாளர்களையும் கூட பாமக அறிவித்திருக்கிறது.  பச்சமுத்து பாமகவின் இந்த அணியில் இடம்பெற்றிருப்பது இந்திய ஜனநாயகக் கட்சி. இந்த கட்சி லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைப்போம் என்று ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்துவிட்டது. அண்மையில் சமூக ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சாதி சங்க தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும் புதிய தலைமுறை குழும உரிமையாளருமான பச்சமுத்து, பாரதிய ஜனதா அணியில் இடம்பெறுவதன் மூலம் கூடுதல் வாக்குகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 40 யானைகள்: ரயில் மோதி 6 யானைகள் பலி

கொல்கத்தா: சுமார் 40 யானைகள் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது, எதிர்பாராத விதமாக அவற்றின் மீது ரயில் மோதியதில் 6 யானைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியாயின. மேலும், காயமடைந்த யானைகளுக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி பகுதியில் இருந்து 55 கி.மீ துரத்தில் உள்ளது சல்சா வனப்பகுதி. இப்பகுதி வழியாக நேற்று மாலை 5.45 மணிக்கு 40 யானைகள் சென்று கொண்டிருந்தன. அப்போது அப்பகுதியில் உள்ள தண்டவாளத்தில் அசாமின் திப்ருகருக்கு விரைவு ரயில் ஒன்று கடந்து சென்றது.  எதிர்பாராத விதமாக ரயில் வந்த வேளையில் யானைகள் தண்டவாளத்தை கடக்க முயற்சித்துள்ளது. இதில், ரயில் மோதி 6 யானைகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயின. விபத்தில் சிக்கி மேலும் பல யானைகளுக்கு காயங்கள் ஏற்பட்டது.

சிபிஐ இயக்குநருக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க மத்திய அரசு எதிர்ப்பு !

இது தொடர்பாக தனது நிலையை விளக்கி உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை 23 பக்க பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
அதன் விவரம் வருமாறு:
சிபிஐ இயக்குநருக்கு மத்திய அரசுத் துறையின் செயலர் அந்தஸ்தையோ, அதற்கு நிகரான அதிகாரத்தையோ வழங்க முடியாது. சிபிஐ சுதந்திரமாகச் செயல்படும் அமைப்பு என்பதை அரசு ஏற்கிறது. ஆனால், அந்த அமைப்பு அரசின் அங்கமான காவல் அலுவலகமாகத்தான் இருக்க வேண்டும். எனவே, சிபிஐ இயக்குநருக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கினால் அதேபோன்ற அதிகாரத்தை மற்ற காவல் அமைப்புகளின் தலைவர்கள் கோரவும் வாய்ப்புள்ளது.

சத்யம் தொலைக்காட்சி முள்ளிவாய்க்கால் நினைமுற்ற சிக்கலில் ! இரவோடு இரவாக டிவி அதிபர் வீட்டில் போலீஸ் !

தொலைக்காட்சி விவாதத்தில் விபரீதம் உண்டாக்கிய நேயர் : டிவி அதிபர் வீட்டில் போலீஸ் நுழைந்தது சத்யம் தொலைக்காட்சியில் இன்று இரவு ‘’சத்யம் - அது சாத்தியம்’’நிகழ்ச்சி 8.10 மணியில் இருந்து 8.30 மணி வரை சென்றது.  முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அகற்றியது சரியா? தவறா? என்ற விவாதம் நடந்தது.  இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் சார்பில் விஜயதாரணி எம்.எல்.ஏ.,  பாஜக மாநில பொருளாளர் சேகர் ஆகியோர் பங்கேற்று விவாதம் செய்துகொண்டிருந்தனர்.நிகழ்ச்சியின் இடையே பொதுமக்களிடம் இருந்து தொலைபேசி வழியாக கருத்துக்கள் பெறப்பட்டுக் கொண்டிருந்தது.   அப்போது  தமிழ்தாசன் என்ற நேயர், தன்னை மதிமுக பிரமுகர் என்று அறிமுகப்படுத் திக்கொண்டு பேச ஆரம்பித்தார்.அவர்,  ‘’முள்ளிவாய்க்கால் முற்றம் வைப்பது தமிழர்களின் கடமை.  இதைப்பற்றி பேச காங்கிரசுக்கும், முதல் வருக்கும் என்ன தகுதி உள்ளது? என்று கேட்டதாக சொல்லப்படுகிறது.  அப்போது, விஜயதாரணி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, தமிழ்தாசன் என்ற குரலுக்கு சொந்தக்காரர் மிகவும் தவறான வார்த்தை களால் விஜயதாரணியையும், முதல்வர் ஜெயலலிதாவையும் திட்ட ஆரம்பித்துவிட்டதாக தெரிகிறது.இதையடுத்து விஜயதாரணி, ஆவேசமடைந்து தமிழ்தாசனை உடனே கைது செய்ய வேண்டும் என்று சத்தம் எழுப்பினார்.  சத்யம் டிவி நிறுவனத்தையும் எச்சரித்தார். 

வீட்டைவிட மோசம் என் பள்ளி ! அமெரிக்கா சென்றபோதுதான் தெரிந்தது மனிதவாழ்க்கை மகிழ்ச்சிகள் கொண்டது

என் பெற்றோர் மீது எனக்கு மரியாதையும் நன்றியும் உண்டு. அவர்களை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் அவர்களுடன் அரைமணிநேரம் என்னால் பேசிக்கொண்டிருக்க முடியாது. இருபத்திரண்டுவருடம் படி படி என்று மட்டுமே சொன்ன இரண்டு வயோதிகர்கள் அவர்கள். அவ்வளவுதான். அவர்களை நான் நேசிக்கவேண்டும் என்றால் அவர்களை எனக்கு தெரிந்திருக்கவேண்டும். அவர்களின் மனம் எனக்குப்புரிந்திருக்கவேண்டும். எனக்கு அவர்கள் அன்னியர்கள்போல தெரிகிறார்கள்’
சமீபத்தில் ஒரு மின்னஞ்சல் வந்தது. வழக்கம்போல வாசகர் எழுதியதல்ல, வாசகரின் தந்தை எழுதியது. தன்னை அறிமுகம் செய்துகொண்டார் அவர். மத்திய அரசில் ஆரம்பநிலை அதிகாரியாக இருந்தவர். இரண்டாம்நிலை அதிகாரியாக ஓய்வு பெற்றார். இரு பிள்ளைகள். இருவருமே நன்றாகப்படித்து அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலுமாக வேலைபார்க்கிறார்கள். இவர் திருச்சியில் மனைவியுடன் வாழ்கிறார்.
அவரது பிரச்சினை தனிமைதான். மனைவிக்கு கடுமையான கீல்வாதம். ஆகவே குளிர்நாடுகளில் சென்று வாழமுடியாது. அவருக்கு ஆஸ்துமாபிரச்சினை உண்டு. பிள்ளைகள் வெளிநாடுகளில் குடும்பத்துடன் வாழ்கிறார்கள். அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைகூட ஊருக்கு வருவதில்லை என்பதே அவரது மனக்குறை. வந்தால் அதிகபட்சம் ஐந்துநாட்கள். உடனே கிளம்பிவிடுகிறார்கள்.

டாஸ்மாக் காட்சிகளுக்கு நடிகைகள் கடும் கண்டனம் ! காமடி என்ற பெயரில் பாலியல் வக்கிரம் ! சந்தானம் ?

டாஸ்மாக் காட்சிகள்  :நடிகைகள் தேவயானி, சோனா கண்டனம் மெய்யழகி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. டிரெய்லரை பட அதிபர் ஆர்.பி.சவுத்ரி வெளியிட, டைரக்டர்கள் சங்க தலைவர் விக்ரமன் பெற்றுக்கொண்டார்.விழாவில் நடிகை தேவயானி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியபோது,  ‘‘இந்த மாதிரி தரமான கதையம்சம் கொண்ட படங்கள் அபூர்வமாகவே வருகின்றன. மிக நீண்ட நாட்கள் கழித்து ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி எனக்கு ஏற்பட்டது. இப்போது வரும் பெரும்பாலான படங்களில் காமெடி என்ற பெயரில் பெண்களை கேலி–கிண்டல் செய்கிறார்கள். மச்சி, மச்சான் என்று வசனக்காட்சிகள் வருகின்றன. பெரும்பாலான படங்களில் குடிகாரர்களின் ‘டாஸ்மாக்’ காட்சிகள் இடம் பெறுகின்றன. பெரிய படம் சின்ன படம் என்று வேறுபாடு பார்க்கக்கூடாது. தரமான கதையம்சம் கொண்ட படங்களே பெரிய படங்கள்’’என்றூ பேசினார்.அடுத்து பேச வந்த நடிகை சோனா, ‘‘சமீபகாலமாக சில படங்களை பார்க்கவே பயமாக இருக்கிறது. அந்த அளவுக்கு பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம் பெறுகின்றன. ‘டாஸ்மாக்’ காட்சிகள் இல்லாத படங்களே இல்லை’’ என்று கூறினார். nakkheeran.in

தாலிக்கு தங்கம் ஒரு புறம்! தாலி பறிபோக மதுவுக்கு ஏற்பாடு மறுபுறம் ! டாஸ்மாக் தீபாவளி விற்பனை அரசு இலக்கை தாண்டியது !

தீபாவளியை முன்னிட்டு, அரசு நிர்ணயித்த, 150 கோடி ரூபாய் இலக்கையும் தாண்டி, 154 கோடி ரூபாய்க்கு, 'சரக்கு' விற்பனையாகி, அரசு கஜானா நிறைந்துள்ளது. அன்று, குடித்து, கும்மாளமிட்ட ஐந்து இளைஞர்கள், கடலில் மூழ்கி இறந்துள்ளனர்; மூன்று மாணவர்கள், மதுபோதையில், கார் ஓட்டி, விபத்தில் மரித்துள்ளனர்.இவை, தலைநகர் சென்னையில் நடந்தவை. மற்ற நகரங்களிலும், மது அரக்கன் தன் அகோரப் பசிக்கு, பலி வாங்க தவறவில்லை. இத்தனை உயிர்களை, காவு கொடுத்து தான், அரசு கருவூலத்தை, நிரப்ப வேண்டுமா? தவறான வழியில் சம்பாதித்து, பிள்ளைகளுக்கு, பால் சோறு ஊட்டும் தாய்க்கு இருக்கும் மரியாதையை விட, நேர்மையாக உழைத்து, அரை வயிற்றுக் கஞ்சி ஊற்றி காக்கும், தாய்க்கே, மரியாதையும், மதிப்பும் அதிகம்.

ஏற்காட்டில் அமைச்சர்கள் வாகனங்களுக்கு சோதனை இல்லை ! எங்கே போய்விட்டார் பிரவீன் குமார் ? போயஸ் கார்டனுக்கா ?

சேலம்:"ஏற்காடு இடைத்தேர்தலை ஒட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள, சோதனை சாவடிகளில், பாரபட்சமின்றி எல்லோரது வாகனங்களையும், சோதனைக்கு உட்படுத்திய பிறகே அனுப்பி வைக்க வேண்டும்' என, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. ஆனால், சேலம். உடையாப்பட்டி செக்போஸ்டில், அணிவகுத்து வந்த அமைச்சர்களின் கார்களை, நேற்று, சோதனை செய்யாமலேயே அனுப்பி வைத்த கூத்து அரங்கேறியது. ஆனால், போலீஸார் சல்யூட் அடிக்காமல் அனுப்புகின்றனர் என, அ.தி.மு.க.,வினர் கமெடி செய்தனர்.ஏற்காடு இடைத்தேர்தல், டிச.,4ல் நடப்பதால், சேலம் மாவட்டத்தின் ஒட்டுமொத்த அரசு எந்திரமும், அதிகாரிகளும், தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டு வளையத்தில் கொண்டு வந்து, நடத்தை விதிகள் அமல்படுத்தப்படுகிறது. சட்டத்தின் ஆட்சி இல்லை அம்மாவின் ஆட்சி ...எனது அரசு..... நான் ஆணையிடுகிறேன் ..நான் நான் எனது எனது ,,,....

வீடியோவில் பதிவான அதிமுக வாள் வீச்சு சாகசம் ! அமைதி பூங்காவின் அழகு பாரீர் !

  மதுரை மேலூரைச் சேர்ந்த அ.தி.மு க பிரமுகர் பாஸ்கரன். இவர் அதிமுகவில் அம்மா பேரவை என்ற அணி தோன்றுவதற்கு முக்கியமானவர்களில் ஒருவர் இவர் மீது கட்சியில் பல்வேறு அதிருப்திகள் இருந்து வந்ததால் அக்கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டவர்.
இந்நிலையில், கடந்த 11 ஆம் தேதி இரவு 8.50க்கு உணவு அருந்திவிட்டு தன் மனைவி மகன் மற்றும் நண்பர் பாண்டியுடன் போர்டிகோவில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தபொழுது உள்ளே அரிவாளுடன் புகுந்த மர்ம நபர், பாஸ்கரனை வெட்ட முயன்றார்.

புதன், 13 நவம்பர், 2013

சரிகாவின் சுயசரிதையை கமல் ஏன் தடுக்கிறார் ? ஊருக்கு உபதேசம் உனக்கு இல்லையடி சரியா ?

சென்னை:சரிகா சுயசரிதை எழுதி வெளியிடுவதற்கு அனுமதி மறுத்துள்ளார் கமல்ஹாசன். கமல், ரஜினியின் திரையுலக வாழ்க்கை பற்றி பல்வேறு புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் தங்கள் வாழ்க்கை பற்றி இருவருமே சுயசரிதை எழுதியதில்லை. கமலிடம் இருந்து பிரிந்து மும்பையில் தனிமையில் வாழ்கிறார் அவரது மனைவி சரிகா. மகள்கள் ஸ்ருதி, அக்ஷரா தனித்தனி வீடுகளில் வசிக்கின்றனர். இந்நிலையில் சரிகாவிடம் சுயசரிதை புத்தகம் எழுதும்படி பதிப்பகத்தார் சிலர் அணுகினர். அதற்கு அவரும் சம்மதம் தெரிவிக்கும் வகையில் பேசி வருகிறார். இதையறிந்த கமல், சரிகா சுயசரிதை எழுதுவதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். கமலுடைய சினிமா வாழ்க்கை சாதனை நிறைந்ததாக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்னைகள் இருப்பதால் அதை வெளியுலகுக்கு தெரிவிக்க அவர் விரும்பவில்லையாம். இந்த விவகாரங்களால் மகள்களின் வாழ்க்கை பாதிக்கபடக்கூடும். எனவே இதற்கு அனுமதி தர முடியாது என்று சரிகாவுக்கு கமல் தரப்பிலிருந்து மறுப்பும், எதிர்ப்பும் வந்திருக்கிறதாம். இதனால் சுயசரிதை எழுதும் திட்டத்தை சரிகா கைவிடுவாரா அல்லது எழுதுவாரா என்பது விரைவில் தெரிந்துவிடும் என்கிறார்கள் சரிகாவுக்கு நெருங்கியவர்கள். -.tamilmurasu.org

நடிகை அஞ்சலி : சித்தி என் வீட்டை அபகரித்துக் கொண்டார்: சித்தி பாரதி தேவி மீது நடிகை வழக்கு

சென்னை: சென்னையில் தனக்கு சொந்தமாக உள்ள வீட்டை தனது சித்தி பாரதி தேவி அபகரித்துக் கொண்டதாக நடிகை அஞ்சலி வழக்கு தொடர்ந்துள்ளார். இயக்குனர் சற்குணம் தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் நடிகை அஞ்சலிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் எந்த நேரமும் கைதாகலாம் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் அஞ்சலி நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது< சென்னை வளரசவாக்கத்தில் எனக்கு சொந்தமான வீடு உள்ளது. அந்த வீட்டை எனது சித்தி பாரதி தேவி மற்றும் சூரியபாபு ஆகியோர் அபகரித்துக் கொண்டனர். அந்த வீட்டுக்கு என்னால் போக முடியவில்லை. எனது வீட்டை அபகரித்த பாரதி தேவி உள்ளிட்டோர் மீது வளசரவாக்கம் போலீசில் புகார் செய்தேன். ஆனால் போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே என் புகார் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வளசரவாக்கம் போலீசுக்கு நீதிமன்றம் உத்தர விட வேண்டும்.

புத்தகயா கோவிலுக்கு மேற்கூரை அமைக்க 300 கிலோ தங்கம் வந்தது: தாய்லாந்து கமாண்டோ படை பாதுகாப்பு

பீகார் மாநிலம் புத்த கயா நகரில் உள்ள பழமைவாய்ந்த மகாபோதி கோவிலுக்கு தங்கத்தினால் மேற்கூரை அமைக்கப்படுகிறது. கோபுரம் முழுவதும் தங்கத் தகடுகளால் மூடுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக தாய்லாந்தில் இருந்து பக்தர்கள் 289 கிலோ தங்கம் நன்கொடையாக வழங்கியுள்ளனர். இந்த தங்கம் 13 பெட்டிகளில் அடைக்கப்பட்டு சிறப்பு விமானம் மூலம் பாங்காக்கில் இருந்து புத்த கயாவுக்கு கொண்டு வரப்பட்டது. அந்த தங்கத்துடன் தாய்லாந்தில் இருந்து தொழில்நுட்ப நிபுணர் குழுவும், கமாண்டோ படையினரும் வந்துள்ளனர். பலத்த பாதுகாப்புடன் தொழில்நுட்ப நிபுணர்கள், தங்கத் தகடுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கத்திற்கு பாதுகாப்பாக கமாண்டோ படையினர் கோவில் வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டுள்ளனர். உள்ளூர் நிர்வாகமும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

பலாத்காரத்தை சட்டத்தால் தடுக்க முடியலைன்னா.. என்ஜாய் பண்ணலாமே - சிபிஐ இயக்குநர்

டெல்லி: கிரிக்கெட் பெட்டிங்கை சட்டப்பூர்வமாக்குவதற்கு ஒப்பீட்டு உவமையாக பலாத்காரத்தை சட்டத்தால் தடுக்க முடியவில்லை எனில் அதை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கலாம் என சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் கலந்து கொண்ட கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், பெட்டிங்கை சட்டப்பூர்வமாக்குவது தொடர்பாக பேசியிருந்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்கா, நமது நாட்டின் பல மாநிலங்களில் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுகிறது. விடுமுறைக்கால ஓய்வு விடுதிகளில் சூதாட்டம் அனுமதிக்கப்பட்டுள்ளது. பலாத்காரத்தை சட்டத்தால் தடுக்க முடியலைன்னா.. என்ஜாய் பண்ணலாமே - சிபிஐ இயக்குநர் பேச்சால் சர்ச்சை

Mumbai Campa Cola கட்டிடத்தை இடிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை



கேம்பகோலா குடியிருப்புகளை இடிக்க தடைமும்பையில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கேம்பகோலா குடியிருப்புகளை இடிப்பதற்கு மே 31ம் தேதி வரை தடை விதித்து உச்ச நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியாகும் செய்திகளைப் பார்த்து, உச்ச நீதிமன்றம் தானே முன் வந்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.கேம்பகோலா குடியிருப்புவாசிகளின் கடும் எதிர்ப்பை மீறி, மாவட்ட நிர்வாகம் இன்று வளாகத்தின் சுற்றுச் சுவரை இடித்து வந்த நிலையில், மே 31ம் தேதி வரை இந்த குடியிருப்புகளை இடிக்க தடை விதித்து, அதில் வசித்து வருவோர் வீடுகளை காலி செய்ய மேலும் 7 மாத காலம் அவகாசம் அளித்து உத்தரவு பிறப்பித் துள்ளது உச்ச நீதிமன்றம்.தங்களது குடியிருப்புகள் இடிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அந்த குடியிருப்பு வாசிகள் நடத்தும் போராட்டத்தை செய்தித் தாள்கள் வழியாக பார்த்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அங்கு வசிப்போர், தங்களது வீடுகளை காலி செய்ய மேலும் 7 மாத காலம் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளனர் nakkheeran.in

கோர்ட்டு பிடிவாரண்டு ! நடிகை அஞ்சலி சரண் அடைகிறார் ! மாதம் 50 ஆயிரம் ஜீவனாம்சம் கேட்கிறார் அவரின் சித்தி ! களஞ்சியம் பல லட்சங்கள் கேட்கிறார் ! வேறு யார் யாருக்கு எவ்வளவு வேணுமோ கேட்டுக்கோங்க

 நடிகை அஞ்சலி சென்னையில் உள்ள சித்தி வீட்டில் இருந்து வெளியேறி ஐதராபாத்தில் குடியேறியுள்ளார். சித்தியும், டைரக்டர் களஞ்சியமும் தன்னை கொடுமை படுத்தியதாக பரபரப்பு புகாரும் கூறினார். தமிழ் படங்களுக்கு முழுக்கு போட்டு விட்டு தெலுங்கு படங்களில் மட்டும் தற்போது நடித்து வருகிறார். இந்த நிலையில் அஞ்சலி மீது டைரக்டர் களஞ்சியம் சைதாப்பேட்டை கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். போலீசிலும் புகார் அளித்தார். களஞ்சியம் இயக்கிய ‘ஊர் சுற்றி புராணம்’ படத்தில்தான் அஞ்சலி கடைசியாக நடித்து வந்தார். இந்த படத்தில் அஞ்சலி தொடர்ந்து நடிக்காததால் பாதியில் நிற்கிறது. களஞ்சியத்தின் அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகுமாறு அஞ்சலிக்கு கோர்ட்டு பல தடவை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அவர் வரவில்லை. இதையடுத்து கடந்த 29–ந் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது நேரில் ஆஜராகாத அஞ்சலிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தர விட்டார். இதனால் அஞ்சலி அதிர்ச்சியாகியுள்ளார். பிடிவாரண்டு குறித்து வக்கீல்களுடன் அவர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. கோர்ட்டில் சரண் அடைந்து பிடிவாரண்டை ரத்து செய்யும்படி கோர அவர் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. எந்த நேரத்திலும் கோர்ட்டில் அவர் சரண் அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் அஞ்சலி சித்தி பாரதிதேவியும் குடும்ப நல கோர்ட்டில் மாதம் தோறும் அஞ்சலி ரூ.50 ஆயிரம் ஜீவனாம்சமாக தர வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கும் விரைவில் விசாரணைக்கு வருகிறது

சி பி அய் மீது கனிமொழி நஷ்ட ஈடு கோரவேண்டும் ! அரசியல் விரோதமா ஜாதி / திராவிட விரோதமா ?

3854625319_2bd6942499_b


”கனிமொழி தரப்புல என்ன சொல்றாங்க.. ? ”

 கலைஞர் டிவியின் நிதி ஆலோசகர் ராஜேந்திரனோட வாக்குமூலத்தின்படி, கனிமொழிக்கும் 200 கோடி கடன் வாங்கின கலைஞர் டிவி மீட்டிங்குக்கும் சம்பந்தம் இல்லன்னு ஏற்கனவே ராஜேந்திரன் சொல்லியிருந்தார்.  இப்போ, இந்த வழக்கில் சாட்சியம் சொன்ன, இந்த வழக்கின் உதவிப் புலனாய்வு அதிகாரி எஸ்.பி.சின்ஹா, 200 கோடி வாங்கணும்னு முடிவெடுத்த கலைஞர் டிவியின் போர்டு மீட்டிங்கில் கனிமொழி கலந்து கொள்ளவில்லை, தயாளு மற்றும் சரத்குமார் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர் னு சாட்சி சொல்லியிருக்கார்.  இது கனிமொழியை இந்த வழக்குல இருந்து முழுமையா விடுவிக்கும். அதனாலதான் இத்தனை மகிழ்ச்சியா இருக்காங்க... ”
”சரி தம்பி... 13.02.2009 அன்னைக்கு நடந்த போர்டு மீட்டிங்கில் கனிமொழி கலந்து கொள்ளலைன்றது இன்னைக்குத்தான் சிபிஐக்கு புதுசா தெரிஞ்சுச்சா ? ”
”அண்ணே... கலைஞர் டிவியோட போர்டு மீட்டிங்குகள் தொடர்பான மினிட் புக், புலனாய்வு அதிகாரியால 18.03.2011 அன்னைக்கு பறிமுதல் பண்ணப்பட்டுச்சு.. அந்த புத்தகத்தைப் பார்த்தாலே அந்தக் கூட்டத்துல கலந்துக்கிட்டது தயாளுவும், சரத்குமாரும் மட்டும்தான்னு தெளிவா தெரியும்.”

செல்வராகவனின் இரண்டாம் உலகம் ! எனக்கு பெருமையாக இருக்கிறது - அனுஷ்கா! உண்மையில் மிக பெரிய எதிர்பார்ப்பு

பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய ஆர்யா “ இரண்டாம் உலகம் திரைப்படத்தைப் பற்றி செல்வராகவன் சொன்ன அனைத்தும் எனக்கு பிடித்திருந்தது. இந்த படம் தமிழ் சினிமாவில் புது முயற்சியாக இருக்கும். செல்வராகவன் விவரித்த பிரம்மாண்டத்தை பட்ஜட் பிரச்சனை வராமல் திரைப்படமாக நினைத்த மாதிரி எப்படி எடுக்கப் போகிறார்? ஒரு நடிகன் என்பதை விட ஒரு ரசிகனாக அத்தனை விஷயங்களையும் ஒரே படத்தில் செல்வராகவன் எப்படி சொல்லப்போகிறார்? என்ற கேள்வியும், படத்தைப் பார்க்கும் ஆர்வமும் எனக்கு அதிகமாக இருந்தது. நான் இன்னும் படம் பார்க்கவில்லை. இரண்டாம் உலகம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு ஒரு விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று கூறினார்.

தகவல் அறியும் உரிமை சட்டம் திருப்பதி தேவஸ்தானத்துக்கு இல்லையாமே ? அப்படி போடு !

திருமலை: திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பாபி ராஜு அளித்த பேட்டி:மும்பையில் ஏழுமலையான் கோயில் கட்டுவதற்காக, 200 கோடி மதிப்புள்ள 8 ஏக்கர் நிலத்தை பக்தர் ஒருவர் தானமாக வழங்குவதோடு, தேவஸ்தானம் சார்பில் அங்கு கோ யில் கட்டுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதற்கு 200 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கும் நீங்கள், 10 கோடி செலவு செய்து கோயில் கட்டிக் கொள்ளலாமே என்று தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு, அவர் கோயில் கட்டுவதற்கான செலவை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதை திருப்பதி தேவஸ்தானம்தான் நிர்வகிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண் டார்.  ஏனுங்க  மக்களின் பணத்தில் இயங்கும் பொது ஸ்தாபனம் மக்களுக்கு பதில் சொல்ல  பயப்படுவது ஏன் ?

திமுகவுக்கு டெபாசிட் கிடைக்க கூடாது ! தமிழ்நாட்டின் முக்கிய பிரச்னை இதுதான் : ஜெயலலிதா

ஏற்காடு சட்டசபை இடைத்தேர்தலில், வெற்றி மட்டும் இலக்கல்ல; எதிர்த்து போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர் உட்பட, அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்' என, அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு, அக்கட்சி தலைமை, உத்தரவு பிறப்பித்து உள்ளது.ஏற்காடு சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட பெருமாள், பதிவான ஓட்டுகளில், 58.06 சதவீதம் பெற்று வெற்றி பெற்றார்.அவரது மறைவைத் தொடர்ந்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல், இம்மாதம், 9ம் தேதி துவங்கியது. தி.மு.க., சார்பில், மாறன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க., சார்பில், மறைந்த எம்.எல்.ஏ., பெருமாளின் மனைவி சரோஜா நிறுத்தப்பட்டு உள்ளார்.லோக்சபா தேர்தலுக்கு, முன்மாதிரி தேர்தலாக, ஏற்காடு சட்டசபை இடைத்தேர்தல் கருதப்படுவதால், அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும், வெற்றிக்கு முட்டி மோதுகின்றன. இரண்டு கட்சிகளின் பணபலம் மற்றும் ஆள்பலத்திற்கு ஈடு கொடுக்க முடியாததால், மற்ற கட்சிகள் ஒதுங்கிக் கொண்டன.  மொத்ததில மக்களுக்கு நல்லது பண்ண மாட்டீங்க , 62 பேர்  33 அமைச்சர்களும் ஏற்காட்டில் இருந்தா தமிழ் நாட்டை காப்பாத்துறது யாருப்பா...

செவ்வாய், 12 நவம்பர், 2013

Ex சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மீது இளம்பெண் வக்கீல் செக்ஸ் புகார் புகாரை விசாரிக்க 3 நீதிபதிகள் குழு அமைப்பு

சமீபத்தில் ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மீது இளம் பெண் வக்கீல் ஒருவர் பாலியல் புகார் கூறி உள்ளார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இளம்பெண் வக்கீல்
கொல்கத்தாவில் உள்ள தேசிய நீதித்துறை அறிவியல் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு சட்டப்படிப்பு படித்து பட்டம் பெற்றவர், அந்த பெண் வக்கீல். தற்போது அவர் இயற்கை நீதி, சமூகங்கள்–சுற்றுச்சூழலுக்கான வக்கீல்கள் அமைப்பில் பணியாற்றி வருகிறார்.
தான் சுப்ரீம் கோர்ட்டில் பயிற்சி பெற்றபோது மூத்த நீதிபதி ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பரபரப்பு புகார் கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:–
நான் பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். குளிர்கால விடுமுறையின்போது, டெல்லியில் நான் பயிற்சி பெற்று வந்தேன். நான் என் கடைசி செமஸ்டருக்கு முந்தைய செமஸ்டரின் போது, சமீபத்தில் ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியின் உதவியை நாடிச்சென்றேன்.
பரிசு, செக்ஸ் தொல்லை

குத்துவிளக்கு : இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் பிரபலமான தமிழ் படம்


அன்றைய காலத்து தகவல்கள் பலவும் இத்திரைப்படத்தில் காணக்கூடியதாக இருக்கிறது, இத்திரைப்படத்தை youtube இல் பதிவு செய்தவர்களை பாராட்ட வேண்டும்

அழகிரி ஏன் ஒதுங்கினார் ? அதனால் மேலிடம் அதிர்ச்சி ! மீண்டும் தேடி வருகிறது பொறுப்பு ?


IMG-20131110-WA001”டிசம்பர் 1ம் தேதி நடக்க இருக்கிற பொதுக்குழுவில், அழகிரிக்கு அதிர்ஷ்டம் அடிச்சாலும் அடிக்கும்.  வழக்கமா, ஓரங்கட்டப்படும் போதெல்லாம் மோதல் போக்கை கடைபிடிக்கும் அழகிரி, கிட்டத்தட்ட அரசியலை விட்டே ஒதுங்கும் நிலையில் இருப்பது, கருணாநிதிக்கே பெரிய அதிர்ச்சியா இருக்கு. அவர் அழகிரியிடமிருந்து இப்படி ஒரு முடிவை எதிர்ப்பார்க்கல.  மேலும், தென் மாவட்டங்களில் அழகிரி கட்டுப்பாட்டில் இல்லாதது, பல்வேறு சிக்கல்களை உருவாக்கியிருக்கு.  பல மாவட்டங்களில் தலைமை சொல்வதை செயல்படுத்தாமல் இருக்கும் சம்பவங்கள் அதிகமாயிட்டே இருக்கு.  அதனால, அழகிரிக்கு ஒரு முக்கிய பொறுப்பு கொடுக்கலாம்னு தலைவர்  நினைக்கிறாரு..  அதனால விரைவில்,  அழகிரி புதிய அவதாரம் எடுப்பதற்கான வாய்ப்புகள் நெறைய்ய இருக்கு.. ”சவுக்கு டாட் கம்

Mall களுக்கு நுழைவுகட்டணம் வரப்போகிறதா ? பெருகுகிறதா ‘மால்’ கலாச்சாரம்?

‘ஷாப்பிங்’ செய்ய ரங்கநாதன் தெருவிலும், டவுன்ஹால் ரோட்டிலும் லோலோவென்று அலைந்துக்கொண்டிருந்த தமிழர்கள், இப்போது குஷியாக மால்மாலாக திரிகிறார்கள். சமீபத்தில் சென்னையில் துவக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய மால் அது. சுமார் இருபத்தைந்து லட்சம் சதுர அடி பரப்பில், சென்னை மாநகருக்குள் ஒரு குட்டி ஹைடெக்நகரமாக உருவாகியிருக்கிறது. சாதாரண துணிக்கடையில் தொடங்கி, ஐந்து நட்சத்திர ஓட்டல் வரை ஒரே வளாகத்தில் அமைந்து இருக்கிறது. திருவிழா போல ஜெகஜ்ஜோதியாக அந்த மால் அமைந்திருக்கும் பகுதியே ஜொலிக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் கூடி, அங்கே ஏதோ மாநாடு நடப்பதைப் போன்ற தோற்றம் ஏற்படுகிறது.

தாது மணல் கொள்ளையும் தினத்தந்தியும் ! ஜாதி ! சர்வ வல்லமை உள்ள ஜாதி அபிமானம் அல்லது வெறி

???????????????????????????????

தாது மணல்: தினத்தந்தியின் ‘துணிவு’ம் தமிழர்களின் துயரமும்; ‘ஆண்டவரே.. கடவுளே..!’

 தூத்துக்குடி மாவட்ட மீனவ மக்கள் அணு உலைக்கு எதிராக தங்கள் முழு கவனத்தையும் செலுத்தி, சமரசமின்றி போரடிக் கொண்டிருக்கும்போது, மீனவர் காலுக்கடியில் குழிபறிப்பது போல். கடல் மணலை, களவாடி விற்றிருக்கிறது ஒரு கும்பல்.
கூடங்குளம் அணு உலை செயல்பட்டால், எப்படி முதலில் மீனவர்களே அதிகம் பாதிக்கப்படுவா்களோ, அதற்கு நிகழ்கால உதாரணம்போல், தாது மணல் கொள்ளையால் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டவர்கள் மீனவ மக்களே.
தமிழகத்தில் மிக அதிகமாக புற்றுநோயால் பாதிக்கப்படுகிறவர்கள் கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட கடற்கரை மக்களே. புற்றுநோயால் மீனவர்கள் தாக்கப்பட்டதற்கு, தாது மணலை தோண்டி எடுப்பதால் அதிலிருந்து எழுகிற கதிவீச்சே காரணம் என்கிறார்கள் சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள்.

France விவசாயிகள் போராட்டம் ! சுற்று சூழல் வரிக்கு எதிராக பிரிதானி மாகாணம் போர்க்கொடி !

பிரான்ஸ் விவசாயிகள் போராட்டம்
வம்பர் 2-ம் தேதி சனிக்கிழமை அன்று பிரான்சில் உள்ள பிரித்தானியா பகுதி மக்கள் சுமார் 30 ஆயிரம் பேர், அரசு விதித்திருக்கும் சிறப்பு சாலை வரிக்கு (சுற்றுச் சூழல் வரி) எதிராகவும், பெருகி வரும் விலைவாசி உயர்வு, வேலை இல்லாத் திண்டாட்டத்தை எதிர்த்தும் எழுச்சி மிகு போராட்டத்தை நடத்தினர். மக்களின்  போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் வரியை நிறுத்திக் கொள்வதாக பிரான்சு அரசு அறிவித்துள்ளது.
பிரான்சு நாட்டின் வடபகுதியில் உள்ள பிரித்தானியாவின் பெரும்பான்மை மக்கள் விவசாயிகள். விவசாய விளை பொருட்களை பிரான்சின் பிற பகுதிகளுக்கு விற்பதும், ஏற்றுமதியும் தான் இவர்களின் மிக முக்கிய வருமானம்.