சனி, 26 அக்டோபர், 2013

தமிழகத்தில் கூட்டணிகள் மாறுது ! காரணங்கள் தேடும் கட்சிகளும் கழகங்களும்

தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் கழகங்களும் மட்டுமல்லாமல் பேரவைகள் மற்றும் ஜாதி சங்கங்களும் யார் யாரோடு கூட்டு சேரலாம் சேர்ந்தால் என்ன கிடைக்கும் ? என்று நித்திரை இல்லாமல் கூட்டல் கழித்தல் கணக்குகள் போட்ட வண்ணமே உள்ளன, அதிமுக பாஜக வுடனா ? காங்கிரசுடனா? அல்லது மூன்றாவது நாலாவது அணிகளுடனா தனியாகவா என்று எல்லா ஆப்ஷனையும் திறந்து வைத்து கொண்டிருக்கிறது , இதில் ஒன்றும் வியப்படைவதற்கு இல்லை , சொத்து குவிப்பு வழக்கு ஒன்றே அதன் முதல் பிரையோறேட்டி , அடுத்து ஜால்றாக்களால் உசுப்பி விடப்பட்ட பிரதமர் பதவி ஆசையும் அடிக்கடி எட்டி பார்க்கிறது . கூட்டணி மாறுதல்களில் அனேகமாக அதிர்ச்சி அல்லது நம்ப கஷ்டமான கணக்கு திமுக காங்கிரஸ் இடையே உள்ளது போல்தான் தெரிகிறது, கலைஞர் காங்கிரசை மன்னிக்க வில்லை ,ஆனால் அதை வெளிகாட்டி கொள்ளாமல் இதர கட்சிகளுடன் தனது பேரம் பேசும் கிராக்கியை தக்க வைத்து கொண்டிருப்பதாக தெரிகிறது, தமிழ்நாட்டில் காங்கிரசை திமுக தவிர்ந்த எல்லா கட்சிகளும் வறுத்து எடுக்கின்றன, ஆனால் உண்மையில் காங்கிரசுக்கு எப்படியாவது கடும் பாடம் புகட்ட திமுக தயாராகிறது, அனேகமாக காங்கிரஸ் முதல் தடவையாக தமிழ்நாட்டில் ஜீரோ எடுக்க போகிறது ,
பக்கா சினிமா அரசியல் பண்ணும் விஜயகாந்தின்  பவுண்டேசன் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டம் கண்டுவருவதை அவரே புரிந்து கொண்டதுதான் ரொம்ப விசேஷம் ,
அரசியல் வெற்றியை விட  ஏதாவது நல்ல பதவிகள் மாநிலத்திலும் மத்தியிலும் கிடைத்தால் சேமம் என்ற நிலைக்கு கப்பித்தான் வந்துவிட்டார்,
அதனால் பாமகவுக்கு ஒரு புதிய போட்டி கிடைத்திருக்கு ,

சமூக வலைதளங்களில் பிரசாரம்... தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடுகள்

டெல்லி: லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிடுவோர் சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்வதற்கான கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவு தொடர்பாக தேர்தல் ஆணையம் ஏற்கனவே கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. வேட்பாளர்கள் தங்கள் பிரசாரத்துக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்துவது தொடர்பாக இப்போது மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. சமூக வலைதளங்களில் பிரசாரம்... தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு இதுதொடர்பாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தலைமை தேர்தல் அதிகாரிகள் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு பெற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.

பயணி தவறவிட்ட 5 லட்சத்தை ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் ஜெயேஷ் பாட்டீல்

Jayesh Patil, 27, ferried a middle-aged woman and her child to Naigaon station. The woman was in a hurry to board the train. As she hopped out of the auto, she forgot to take the bag containing 10 tola gold chain, 2.5 tola chain and three gold rings and her cell phone which are collectively worth Rs5 lakh. “The woman was in a hurry as she wanted to reach the venue of her sister’s marriage in Mumbai. As I left the station, her cell phone began to ring. Then, I noticed the bag. I opened it to find the phone and the jewellery,” said Patil. The woman realised on the platform that she had left behind her bag. She panicked and then went to a public telephone booth and dialled her cell phone number. When the phone started ringing, Patil saw the forgotten bag. He opened the bag and picked up the call. He told the woman to collect the bag from Naigaon auto stand. “My parents taught me to earn in a respectable manner. I teach the same to my kids,” he added.
மகாராஷ்டிராவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர், பெண் பயணி விட்டுச்சென்ற தங்க நகைகள் வைத்திருந்த பையை திரும்ப ஒப்படைத்தார். வசாய் அடுத்த நைகாவ் பகுதியைச் சேர்ந்தனர் ஜெயேஷ் பாட்டீல் (27), ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம், நடுத்தர வயது கொண்ட பெண் தனது குழந்தையுடன், வசாய் அடுத்த நைகாவ் ரயில் நிலையத்துக்கு ஆட்டோவில் சவாரி செய்தார். நைகாவ் ரயில் நிலையம் அருகே வந்ததும் ரயிலை பிடிக்கும் அவசரத்தில், அந்த பெண் தனது கைப்பையை ஆட்டோவிலேயே விட்டுவிட்டு சென்று விட்டார். அந்த பையில் 10 சவரன் நகை, 2.5 சவரன் செயின், 3 தங்க மோதிரங்கள் மற்றும் செல்போன் ஒன்றும் இருந்தது. அவற்றின் மொத்த மதிப்பு ^5 லட்சம். அந்த பெண் பயணி கீழே இறங்கியதும், ஆட்டோவை கிளப்பினார் டிரைவர். சிறிது தூரம் சென்றதும் பையில் இருந்த செல்போன் ஒலித்தது. டிரைவர் ஜெயேஷ் திரும்பி பார்த்தபோது, பின்புற இருக்கையில் பை ஒன்று இருந்தது. அதை திறந்து பார்த்தபோது, நகைகளும் செல்போனும் இருந்தது.

உண்மையில் தேர்தல் போட்டி காங்கிரசுக்கும் RSS க்கும் இடையில் தான் ! ஜெயராம் ரமேஷ்

பாராளுமன்ற தேர்தலில் காங்.–பா.ஜ.க. இடையே போட்டி இல்லை: காங்.–ஆர்.எஸ்.எஸ். போட்டி; ஜெயராம் ரமேஷ்
2014 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே போட்டி இல்லை. காங்கிரசுக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் தான் போட்டி உள்ளது என்று ஜெயராம் ரமேஷ் கூறினார்.
மத்திய கிராமப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், பெங்களூர் குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–5 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்தவிடாமல் பா.ஜனதாவினர் முடக்கியதே இது காலதாமதமாக அமல்படுத்தப்படுவதற்கு காரணம் ஆகும். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல் உள்ளிட்டவற்றை மறைப்பதற்காக மத கலவர தடுப்பு சட்டத்தை கொண்டு வர முயற்சி செய்யவில்லை.
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் நேரடி மோதல் இல்லை. மத்திய பிரதேசம், சத்தீஸ்கார், ஜார்க்கண்ட், இமாச்சலபிரதேசம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில் மட்டும் நேரடி போட்டி உள்ளது. மற்ற மாநிலங்களில் எல்லாம் மாநில கட்சிகள் தான் உள்ளன. அந்த மாநிலங்கள் அனைத்திலும் பா.ஜனதா இல்லை. எனவே தேசிய அளவில் எல்லா கட்சிகளுடனும் மோதும் ஒரே கட்சி காங்கிரஸ் தான்.

காங்கிரசுக்கு 60 ஆண்டுகள் கொடுத்தீர்கள் ‘‘எங்களுக்கு 60 மாதங்கள் தாருங்கள் ! மோடி பச்சையாகவே பங்கு கேட்கிறார் !

ஜான்சி :உ.பி.யில் நடந்த பொதுக்கூட்டத்தில், ‘‘காங்கிரசுக்கு 60 ஆண்டுகள் கொடுத்தீர்கள். எங்களுக்கு 60 மாதங்கள் தாருங்கள். உங்கள் தலையெழுத்தை மாற்றிக்காட்டுவோம்’’ என்று நரேந்திரமோடி சூளுரைத்தார்.
கஜானா மீது கை வைக்க முடியாது
பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி நாடு முழுவதும் பயணம் செய்து, பாராளுமன்றத் தேர்தலுக்காக ஆதரவு திரட்டி வருகிறார். உத்தரபிரதேச மாநிலம், பந்தல்காண்ட் பகுதியில் நடந்த கட்சியின் ‘வெற்றி முழக்கம்’ பொதுக்கூட்டத்தில் நரேந்திரமோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
நான் பிரதமர் ஆக இருக்க விரும்பவில்லை(அடேங்கப்பா நம்புறோம் நம்புறோம்)
அப்போதுதான் நாட்டின் கஜானா மீது யாரும் கை வைக்க முடியாது.
ஏழைகளின் கண்ணீர் துடைப்பேன்
இங்கே அரசியல் ஆதாயத்துக்காக நான் கண்ணீர் சிந்த விரும்பவில்லை. நான் ஏழை மக்களின் கண்ணீரைத் துடைக்கத்தான் இங்கே இருக்கிறேன்.

பள்ளி சிறார்களிடம் தீபாவளி வசூல் வேட்டையில் இறங்கியுள்ள ஆசிரியர்கள்

கோவையில் சில தனியார் பள்ளிகளில் தீபாவளி பண்டிகையை காரணம் காட்டி, ஆசிரியர் அல்லாத பள்ளி ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதாக
கூறி "ஜோராக' நன்கொடை வசூலிக்கப்பட்டு வருகிறது; பள்ளிகளில் நோட்டீஸ் விநியோகித்து கட்டண வசூல் செய்வது, பெற்றோர் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.ஆண்டு முழுவதும் தங்களுக்காக சேவை செய்பவர்களுக்கு, தீபாவளி பண்டிகை நேரத்தில் அன்பளிப்பு வழங்குவதை பலரும் கடமையாக செய்து வருகின்றனர். இந்த அன்பளிப்பு முறையை கோவையில் உள்ள சில தனியார் பள்ளிகள், தீபாவளி நன்கொடை என்ற பெயரில் ஜோராக "வசூல் வேட்டை' நடத்தி வருகின்றன. இதற்கென்று பள்ளிகள் தனியாக நோட்டீஸ் அடித்து மாணவர்களிடம் வசூலித்து வருகின்றன. குறிப்பிட்ட நோட்டீசில், " அன்பு பெற்றோர்களே!...உங்கள் மகன் படிக்கும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், தீபாவளி பண்டிகையை தங்களது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாட, தாராளமாக நன்கொடை தாருங்கள். குறைந்தது 250 ரூபாய் அளிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.   வயிற்றை கட்டி வாயை கட்டி பெற்றோர்கள் படிக்க வைக்கின்றனர்.இதில் இது வேற ..

மணல்மாபியா வைகுண்டராஜனின் கொண்டாத்தில் செபஸ்டியன்

வைகுண்டராஜன் மகன் திருமண வரவேற்புவீழ்ந்துவிடாத வீரம்; மண்டியிடாத மானம்” என்று எதுகை மோனையுடன் பஞ்ச் டயலாக் பேசி முஷ்டியை முறுக்குகிறார் சீமான். கருணாநிதிக்கு எதிராக காது ஜவ்வு கிழிய கத்தும் சீமான், ஜெயலலிதா பெயரைச் சொன்னதும், மிஸ்ஸுக்குப் பயப்படும் பள்ளிக்கூட சிறுவன் மாதிரி பம்முகிறார். ஜெயலலிதா மட்டுமல்ல… இந்தப் பட்டியலில் பலர் உண்டு. சமீபத்திய உதாரணம், தன் திருமணத்தின்போது மனைவி சகிதமாக சசிகலாவின் கணவர் நடராஜன் காலில் விழுந்தார் சீமான். ஒரு ஊழல் பேர்வழியின் காலில், ‘மண்டியிடாத மானம்’ வீழ்ந்து வணங்கி ஆசிர்வாதம் பெற்றது கண்கொள்ளாக் காட்சிதான். இவர்தான் மூச்சுக்கு முந்நூறு தரம் தன்னை பெரியாரின் பேரன் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்.
நடராஜன் என்ற நபர் தமிழ்நாட்டில் என்னவாக இருக்கிறார்? ஏதாவது அரசியல் கட்சி வைத்திருக்கிறாரா? தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறாரா? அமைச்சராக, எம்.எல்.ஏ.வாக, வார்டு கவுன்சிலராக இருக்கிறாரா? ஏதாவது தொழில் செய்கிறாரா? தொழிலதிபரா? எதுவும் இல்லை. பி.ஆர்.ஓ. வேலைப் பார்த்து வெளியே வந்தவர், அதே பி.ஆர்.ஓ. வேலையை அரசியலில் பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த ‘தமிழ்நாட்டு நீரா ராடியா’ குவித்து வைத்திருக்கும் ஊழல் சொத்துகளுக்கு எந்தக் கணக்கு வழக்கும் இல்லை.
மன்னார்குடி மாபியா தமிழன் நடராஜன் காலில் விழும் செந்தமிழன் சீமான்

விரைவில் 24 மணி நேர சீரான மின்சாரம்* சட்டசபையில் ஜெ., உறுதி ! நல்ல காலம் வருது ! டமுகடிப்பான் டியாலோ !

சென்னை:”தொழில் கூடங்கள், விவசாயம் மற்றும் வீட்டு இணைப்புகள் என, அனைவருக்கும், 24 மணி நேரமும் சீரான மின்சாரம் கிடைக்கும் சூழலை, மிக விரைவில் உருவாக்கிக் காட்டுவோம்,'' என, முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்தார்.கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,க்கள் பாலபாரதி, ஆறுமுகம் ஆகியார் தமிழக மின் நிலைமை குறித்து, சட்டசபையில் நேற்று கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு பதில் அளித்து, முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:அ.தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்து, கடந்த இரு ஆண்டுகளில், மேட்டூர் அனல் மின் திட்டத்தில், 600 மெகாவாட் திட்டம் விரைந்து முடிக்கப்பட்டதால், 500 மெகவாட் மின்சாரம் தற்போது கிடைக்கிறது. அதேபோல், வடசென்னை அனல் மின் திட்டத்தின், இரண்டாவது அலகும் விரைந்து முடிக்கப்பட்டு, 300 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. விரைவில், இந்த உற்பத்தி, 600 மெகாவாட்டை எட்டும்.
வல்லூர் மின் திட்டம் முடிக்கப்பட்டு, 1,700 மெகாவாட் கிடைக்கிறது. -

ராயன் : Singapore,சிங்கப்பூர் அம்மா நேற்று சட்ட சபையில் தனது சாதனை என்று கூவியது எல்லாம் முக்கால் வாசி தாத்தா ஆட்சியில் அவரால் செய்யப்பட்டவை.. எங்க கொட நாட்டுலேயா மம்மி 24 மணி நேரமும் மின்சாரம்...தைரியம் இருந்தால் மினி பஸ்ஸில் ரெட்டை இல்லை போட்டு சட்டத்துக்கு புறம்பாக கேவலமாக விளம்பரம் செய்து இருப்பதை சட்ட சபையில் விவாதித்து இருக்க வேண்டும்.. அதற்கு திராணி இல்லை...

வெள்ளி, 25 அக்டோபர், 2013

நடிகை ஷகீலா சுயசரிதை எழுதுகிறார் ! மோகன்லால் மம்மூட்டியின் தில்லு முல்லுகள் வெளிச்சத்திற்கு வரும் ?

கவர்ச்சி நடிகை ஷகிலா தனது வாழ்க்கையை சுயசரிதையாக எழுதுகிறார்.
இதனால் மலையாள நடிகர்கள், இயக்குனர்கள் பலர் கலக்கத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷகிலா 1980, 90-களில் மலையாள பட உலகில் முன்னணி கவர்ச்சி நடிகையாக இருந்தார். இவர் நடித்த பல படங்கள் வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்கும் வகையில் 'ஏ' சான்றிதழ் பெற்று வந்தன. தாராள ஆடை குறைப்பு செய்து மலையாள ரசிகர்களை கிறங்கடித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். ஷகிலா படங்கள் ஓடும் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. மம்முட்டி, மோகன்லால் படங்களை வசூலில் ஷகிலா படங்கள் பின்னுக்கு தள்ளின. இதனால் ஷகிலாவுக்கு எதிரான சதிவலைகள் பின்னப்பட்டு மலையாள படங்களில் இருந்து ஓரம் கட்டப்பட்டார். தற்போது தமிழில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார். தனது வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சியான சம்பவங்களையும், கசப்பான நிகழ்வுகளையும் சுயசரிதையில் எழுத இருக்கிறார். சினிமாவின் இருட்டு பக்கங்களையும், புத்தகத்தில் உள்ளது உள்ளபடி கொண்டு வருகிறார். சுயசரிதை புத்தகத்தை விழா நடத்தி வெளியிட திட்டமிட்டுள்ளார். சுயசரிதை எழுதுவதால் புது படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை ஒதுக்கிவிட்டார் cinema.maalaimalar.com

ராஜீவ் கொலை தொடர்பாக கமலுக்கு பெரும் சங்கடம் இருக்கிறது

நான் தெனாலி படத்தை எடுத்தேன். அதுவும் ஒரு இலங்கை குறித்த படம் தான். அது ஒரு பக்கத்தை சொல்கிறது. ஆனால் மறு பக்கம் தான் 'மெட்ராஸ் கஃபே' ஆகும். ஆனால் அதனை வெளியிட முடியவில்லை. நான் அதுபோன்று இலங்கையில் மறுபக்கம் குறித்து ஒரு படத்தை எடுக்க நினைத்தாலும் கூட அது என்னால் முடியாது. இங்கே கருத்து சுதந்திரம் என்பது கிடையாது என்று நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். இவர் அடிக்கடி பாவிக்கும் அந்த "மறு பக்கம்" என்ன என்று உங்களுக்கு சிலவேளை புரியாமல் இருக்கலாம். அதாவது இலங்கையில் தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளைப் பற்றி படமாக எடுக்கலாம். ஆனால் மறுபக்கம்(புலிகள் புரிந்த போரை) பற்றி ஏதாவது படம் எடுத்தால் அதற்கு சுதந்திரம் இல்லை என்று சொல்லாமல் சொல்லியுள்ளார் கமல்.  இவர் நாசுக்காகக் குறிப்பிடுவது புலிகள் செய்த போரை மட்டுமல்ல. அவர்கள் கொலைசெய்ததாகக் கூறப்படும் மனிதர்களையும் சேர்த்து தான் குறிப்பிடுகிறார்.

உலகின் மிக விலை உயர்ந்த ஆடம்பர பொருட்களையே மோடி பயன்படுத்துவார் !

நரேந்திர மோடியை கட்டியமைக்கும் பிராண்டுகள் – புல்காரி, மோவாடோ, மோன்ட்பிளாங்க், மற்றும் மோடி குர்த்தாக்கள்.
நான் ஏழ்மையில் பிறந்தவன், வறுமை என்னவென்று தெரியும்?” என்று முழங்குகிறார் மோடி. ஆனால், 80% மக்கள் ஒரு நாளுக்கு ரூ 20-க்கும் குறைவான பணத்தில் வாழும் இந்தியாவின் பிரதமராகத் துடிக்கும் மோடி, உடுத்தும் ஆடைகள் முதல், போட்டுக் கொள்ளும் கண்ணாடி, எழுத பயன்படுத்தும் பேனா, கையில் கட்டும் கைக்கடிகாரம் வரை ஐரோப்பிய பிராண்டுகளையும், விலை உயர்ந்த மேட்டுக் குடி மக்களுக்கான ஆடைகளையும் பயன்படுத்துகிறார்.

ஸ்ரீ நரேந்திர மோடியை உருவாக்கும் பிராண்டுகள்- டாக்டர் விக்ரம்

மூக வலைத் தளங்களில் நமோ என்று அறியப்படும் ஸ்ரீ நரேந்திர மோடி அவரளவில் ஒரு மாபெரும் பிராண்டாக உள்ளார். ஆனால், அவருக்கு விருப்பமான பிராண்டுகள் என்னென்ன என்று தெரியுமா?
ஸ்வர்னிம் சங்குல்
மோடியின் ரூ 150 கோடி அலுவலகம்.
மோடிக்கு பிடித்தமான கைக்கடிகாரம் மோவாடோ. 1881-ல் சுவிட்சர்லாந்தில் உருவாக்கப்பட்ட மோவாடோ பிராண்ட் பின்னர் கியூப யூதர் குடும்பம் ஒன்றினால் வாங்கப்பட்டது. மோவாடோ பிராண்டின் உரிமையாளர்கள் தற்போது அமெரிக்காவின் நியூஜெர்சியிலுள்ள பாரமஸ் என்ற இடத்தில் செயல்படுகின்றனர்.
பேனாக்களைப் பொறுத்த வரை ஐரோப்பாவின் மிக உயர்ந்த சிகரத்தின் பெயரால் அழைக்கப்படும் மோன்ட்பிளாங்க் பேனாக்கள்தான் ஸ்ரீ மோடிக்கு விருப்பமானவை.

மாணவர்கள் மீது சோ கட்டவிழ்க்கும் பயங்கரவாதம் ! ஜேப்பியார் ஏசி சண்முகம் பச்சமுத்து s a ராஜா vit விசுவநாதன் இன்னும் பல நினச்சாலே வாந்தி !

சோசோவைப் பொறுத்தவரை சட்டம் என்பது வெகு மக்களுக்கானது; அவர்களை ஒட்டச் சுரண்டும் போது அவர்கள் தங்கள் எதிர்ப்பை காட்டாமல் இருக்க உபயோகிக்கப்படுத்த வேண்டிய ஆயுதம். 
ன்ஃப்ன்ட் ஜீசஸ் கல்லூரி முதல்வர் கொலையை ஒட்டி மாணவ சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள அரசு மற்றும் ஊடக பயங்கரவாதம் அதன் எல்லா எல்லைகளையும் தாண்டியிருக்கிறது. துக்ளக்  23.10.2013 இதழின் ’கட்டுப்பாடு தேவை’ என்ற தலையங்கம் இந்த பயங்கரவாதத்தின் உச்சக்கட்டம். வாசகர்களின்  பார்வைக்கு அதன் முக்கியமான பகுதியை கீழே கொடுக்கிறோம்.

நடிகை சரிதாவின் Ex கணவர் முகேஷ் பிரபல நடன ஆசிரியை தேவிகாவை திருமணம் செய்தார்

நடிகை சரிதாவை விவாகரத்து செய்து பிரிந்த நடிகர் முகேஷ் 2–ம் திருமணம்
செய்து கொண்டார். முகேஷ் மலையாளத்தில் முன்னணி நடிகராக உள்ளார். தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவருக்கு 53 வயது ஆகிறது. முகேஷுக்கும், நடிகை சரிதாவுக்கும் 1989–ல் திருமணம் நடந்தது. சந்தோஷமாக குடும்பம் நடத்திய இவர்களுக்குள் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் தனித்தனியாக பிரிந்தனர். பின்னர் கோர்ட்டில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார்கள். 2007–ல் விவாகரத்து கிடைத்தது. இவர்களுக்கு இரு குழந்தைகள் இருக்கிறார்கள். அதன் பிறகு முகேஷுக்கும் கேரளாவில் பிரபல நடன ஆசிரியையாக உள்ள தேவிகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. தேவிகா மோகினியாட்டம், கதக்களி, குச்சிபுடி நடனத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.

அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் ஒன்று சீந்துவார் இன்றி ஒரு சதத்திற்கு விலையானது ? உண்மை !

 The U.S. Navy's first supercarrier, the now-decommissioned USS Forrestal (AVT-59), has been sold for one cent to Texas-based All Star Metals 
ஒரு சதம் (பைசா) பணத்தை வைத்து இந்தியாவில் எதுவும் வாங்க முடியாது.
அமெரிக்கா, கனடாவில் ஒரு சதத்தை penny என்பார்கள். கடைக்கு போனால், அங்கேயும் எதுவும் வாங்க முடியாது. ஆனால், அமெரிக்க கடற்படை தலைமைச் செயலகத்துக்கு 1 அமெரிக்க சதத்துடன் போனால், ஒரு கப்பலை வாங்கலாம்.
காகிதக் கப்பல் அல்ல, நிஜ கப்பல். அதுவும் சாதா கப்பல் அல்ல. அமெரிக்க வரலாற்றில் இடம் பெற்றுள்ள விமானம் தாங்கி கப்பல். அமெரிக்க கடற்படைக்காக கட்டப்பட்ட முதலாவது supercarrier இதுதான். பெயர் யு.எஸ்.எஸ். பாரஸ்ட்டல்.
இந்த கப்பல் தற்போது ஓய்வு பெற்றுள்ள நிலையில், இதை வெளிநாட்டு கடற்படைகளுக்கு விற்றுவிட முயற்சிகள் நடந்தன. எந்த நாடும் வாங்க முன்வரவில்லை. சரி. இனாமாக கொடுக்கலாம் என்று முயற்சி செய்து பார்த்தார்கள். யுத்த நினைவுச் சின்னங்களை வைத்திருக்கும் பொருட்களை மியூசியங்களை கேட்டுப் பார்த்தார்கள்.
ஊகும். பெற்றுக்கொள்ள யாரும் முன்வரவில்லை.

மீண்டும் ஆங்கில படங்களை காப்பி அல்ல அல்ல இன்ஸ்பிரேஷன் வருகிறது !

சென்னை:வெளிநாட்டு படங்களை காப்பி அடிக்கும் டிரெண்ட் மீண்டும்
அதிகரித்துள்ளது.தமிழ் சினிமாவில் வெளிநாட்டு படங்களை காப்பி அடித்து படம் உருவாக்குவது அந்த காலத்திலிருந்தே இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் இந்த டிரெண்ட் அதிகரித்தது. இதற்கு மீடியா டார்ச் அடித்ததும் சற்று குறைந்தது. இப்போது மீண்டும் வெளிநாட்டு படங்களை சீன் பை சீன் காப்பி அடிக்கும் போக்கு அதிகரித்துள்ளது. சமீபத்த¤ல் வெளியாகி மீடியாவின் ஏகோபித்த பாராட்டுகளை அள்ளியது ஒரு படம். இதுபோன்ற ஒரு படம் இந்தியாவில் உருவாகவே இல்லை என்ற ரேஞ்சுக்கு விமர்சகர்கள் பாராட்டி தள்ளினர். ஆனால் அந்த படம் அட்டாக் அட் கேஸ் ஸ்டேஷன் கொரியன் படத்தின் சீன் பை சீன் உருவல் என்பது தெரியவந்தது. இதேபோல் வெளிச்சத்தில் படம் எடுக்காத இயக்குனரின் படமும் சமீபத்தில் வெளியானது. இந்த படம் ஒரு கொரியன் படம், தி பர்ஜர்ஸ் ஆங்கில படம் ஆகியவற்றின் காப்பி என்பது வெட்ட வெளிச்சமானது. தீபாவளிக்கு வெளியாகப்போகும் ஒரு படமும் இந்த ரகம்தானாம் - tamilmurasu.org

ஏற்காடு இடைத்தேர்தலை சீரியசாக எடுக்கிறது தி.மு.க! அழகான ஏற்காட்டில் அதிமுகவை அசைக்க முடிவு ? Why இந்த கொலைவெறி ?

தி.மு.க., ஏற்காடு இடைத்தேர்தலை மிக சீரியசாகதான் எடுத்துள்ளது. தி.மு.க.
தலைவர் கருணாநிதி நேற்று திடீர் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை சென்னை அறிவாலயத்தில் நடத்தியிருக்கிறார். இந்த திடீர் ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் வியூகங்களை வகுக்க, வட மாவட்டங்களை சேர்ந்த சில மாவட்டச் செயலர்கள் மட்டும் அழைக்கப்பட்டிருந்தனர்.
ஏற்காடு இடைத்தேர்தல் டிசம்பர் 4-ம் தேதி நடைபெறவுள்ளது. அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜாவுக்கும், தி.மு.க. வேட்பாளர் மாறன் ஆகியோர் மத்தியில் நேரடி போட்டி நிலவுகிறது. ஆளுங்கட்சியின் தேர்தல் பணிகள் உச்ச அளவில் இருக்கும் என்று கூறத் தேவையில்லை. அதற்கு இணையாக, தி.மு.க.வும் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே தி.மு.க. தலைமையின் உத்தரவு.

தங்கையின் காதலனின் ஆண் உறுப்பை அறுத்த அண்ணன் ! இந்த அண்ணன்மாரின் இருண்ட பக்கங்களை கொஞ்சம் ஆராய வேண்டும் !

பேராவூரணி:தஞ்சை மாவட்டம் பேராவூரணி அடுத்த சின்னதெற்கு காடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் சிவா. புதுக்கோட்டை மாவட்டம் திருவாப்பாடி கிராமத்தில் விஏஓ. இதே கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (28). திருச்சிற்றம்பலம் கிராமத்தில் கிராம உதவியாளர். சத்தியமூர்த்தியும், விஏஓ சிவாவின் தங்கையும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். நர்சிங் படித்துள்ள அந்த பெண், வெளிநாடு சென்று வேலை பார்த்து வருகிறார். சத்தியமூர்த்தியுடன் போனில் பேசி காதலை வளர்த்து வந்தார். இந்நிலையில், தங்கைக்கு திருமணம் செய்வதற்கு சிவா ஏற்பாடு செய்து வந்தார். இதுபற்றி சத்தியமூர்த்தி, காதலிக்கு தகவல் தெரிவித்து உள்ளார். அதற்கு அவர் விரைவில் ஊருக்கு வருவதாகவும், அப்போது நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் காதலனிடம் கூறியுள்ளார். மேலும் திருமண செலவுகளுக்காக பணமும் அனுப்பி உள்ளார். இதுபற்றி சிவாவுக்கு தெரிந்ததும் அதிர்ச்சியடைந்தார்.

தாம்பரம், துரைப்பாக்கம், திருவொற்றியூரில் ஒரேநாளில் 4 கோயிலில் கொள்ளைகள்! அட கடவுளே இதைதான் பராசக்தியில் கோவில் கொள்ளையர்களின்கூடாரம் ........


தாம்பரம், அக். 24-தாம்பரம் மற்றும் துரைப் பாக்கத்தில் ஒரே நாளில் 4 கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் கிரீடம் உள்பட 20 கிலோ வெள்ளி பொருட்களை  கொள்ளையடித்துச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு தாம்பரம்
மேற்கு தாம்பரம் பழைய ஸ்டேட் வங்கி காலனியில் ஆர்டிஓ அலுவலகம் எதிரே அருள் தந்த விநாயகர் ஆலயம் உள்ளது. இந்தக் கோயிலில் பட்டம்மாள் (70) என்பவர், தினமும் சுத்தம் செய்து தீபம் ஏற்றுவது வழக்கமாம்.
நேற்று காலை கோயிலைத் திறக்க பட்டம் மாள் வந்தபோது கோயிலின் பூட்டு உடைக் கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே கோயில் நிர்வாகி கிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தார்.
தாம்பரம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கோயில் உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப் பட்டு பணமும், விநாயகருக்கு பூஜை காலங்களில் பயன்படுத்துவதற்காக வைத்திருந்த வெள்ளி கிரீடம் உள்பட 21 கிலோ வெள்ளி பொருட் களையும் கொள்ளையடித்துச் சென்றது தெரிந்தது.

6 கோடி நஷ்டஈடு! தவறான சிகிச்சையால் இறந்த பெண் குடும்பத்திற்கு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு !


தவறான சிகிச்சையால்
பெண் உயிரிழந்தது தொடர்பாக, அப்பெண்ணின்
கணவருக்கு ரூ. 5.96 கோடி நஷ்டஈடு வழங்குமாறு, சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனைக்கும், மருத்துவர்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மருத்துவ சிகிச்சையில் அலட்சியம் காரணமாக நேரும் மரணத்திற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்ற இந்தத் தீர்ப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
வழக்கு விவரம்: அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் வசிப்பவர் வெளிநாடு வாழ் இந்தியரான குணால் சஹா, எய்ட்ஸ் நோய் ஆராய்ச்சியாளர். இவரது மனைவி அனுராதாவும் குழந்தைநல உளவியல் ஆலோசகர். கோடை விடுமுறைக்காக, அனுராதா 1998, மார்ச் மாதம் சொந்த ஊரான கொல்கத்தா வந்திருந்தார்.
÷அப்போது அவருக்கு தோலில் தடிமானம் ஏற்பட்டது. அதற்காக டாக்டர் சுகுமார் முகர்ஜியிடம் 1998, ஏப்ரல் 25-இல் சிகிச்சை பெற்றார். டாக்டர் "டெபோமெட்ரால்' என்ற ஊசி மருந்தை அனுராதாவுக்கு தினசரி இருமுறை என்ற வகையில் செலுத்தினார். ஆனால் ஊசிபோட்ட பிறகு அனுராதாவின் உடல்நிலை மோசமடைந்தது. இதற்காக டாக்டர் சுகுமார் முகர்ஜி பணிபுரியும் ஏஎம்ஆர்ஐ மருத்துவமனையிலேயே மே 11-இல் அனுராதா சேர்க்கப்பட்டார்.

அசுரர் வாரம்: பார்ப்பனியப் பண்பாட்டு ஒடுக்குமுறையை எதிர்த்த கலாச்சார விழா.


டந்த மாதம் ஐதராபாத்தின் ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகளுக்கான பல்கலைக்கழகத்தில் (English and Foreign Languages University) நடைபெற்ற ’அசுரர் வாரம்’ என்ற விழாவினைப் பற்றிய செய்தி வினவில் வந்தது. அங்கே படித்து கொண்டிருக்கும் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள்  இவ்விழா தொடர்பாகவும், அதன் பின்னான வழக்குத் தொடர்பாகவும் விளக்கி எழுதியுள்ள பதிவை வெளியிடுகிறோம்.

ந்தியாவில் உயர் கல்வி என்பது சுதந்திரமான, பாரபட்சமற்ற, நடுநிலைமையான ஆய்வுகளுக்கான வெளி என்று பொதுவாக நம்ப வைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் பொதுப் புத்தியில் உறைந்திருக்கின்ற இந்த கருத்தாக்கம் பார்ப்பனிய செயல்பாட்டின் நுண்ணிய வடிவம் தான் என்பதை உயர்கல்வி நிறுவனங்களின் தற்போதைய நிகழ்வுகள் வெட்ட வெளிச்சமாக்குகின்றன. சாதிய, பொருளாதார ஏற்றுத் தாழ்வுகளை எல்லாம் கடந்ததாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்கின்ற இந்திய உயர்கல்வி, தன் செயல்பாட்டு முறைமைகளில் பார்ப்பனியத்தின் விழுமியங்களை மிகத் துல்லியமாக நடைமுறைப்படுத்தும் சேவகன் தான் என்பதை அண்மையில் ஐதராபாத்தில் அமைந்துள்ள ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகளுக்கான பல்கலைக்கழகத்தில் (English and Foreign Languages University) நடைபெற்ற ’அசுரர் வாரம்’ (Asura Week) என்னும் விழாவும், அது சார்ந்த நிகழ்வுகளும் உறுதிப்படுத்துகின்றன.

கலைஞர் மூன்றாவது அணிக்கு வலு சேர்க்கிறார் ?

சென்னை: நாட்டின் நன்மைக்காக, எந்த அணி அமைந்தாலும், அந்த அணியை நான் வரவேற்கிறேன்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார், சென்னையில் அவரது பேட்டி: "இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா கலந்து கொள்ளக் கூடாது' என, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதை வரவேற்கிறேன். ஏற்காடு இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு செல்ல இன்னும் முடிவெடுக்கவில்லை. அரசு போக்குவரத்து பஸ்களில் எல்லாம், இரட்டை இலை சின்னம் பெரிதாக பொறிக்கப்பட்டது பெரும் தவறு. இம்மாதம், 30ம் தேதி டில்லியில் மூன்றாவது அணி கூடுகின்ற கூட்டத்தில், தி.மு.க., கலந்து கொள்ள இதுவரையில் அழைப்பு வரவில்லை. காங்கிரஸ் - பா.ஜ., தவிர்த்த அந்த மூன்றாவது அணி, நாட்டின் நன்மைக்காக, எந்த அணி அமைந்தாலும் அந்த அணியை நான் வரவேற்கிறேன். மூன்றாவது அணி அமைக்கும் கூட்டத்திற்கு என்னை அழைத்தால், அதைப்பற்றி எங்கள் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடி கலந்து பேசி முடிவெடுக்கும். இவ்வாறு  கூறியுள்ளார்.

தமிழகத்தின் முதல் தமிழ் பிராமி சமணர் பாறை: கிரானைட் கும்பலால் வெடிவைத்து தகர்ப்பு ?

திருநெல்வேலி: நெல்லை அருகே, 2000 ஆண்டுகள் பழமையான, 'சமணர்
படுகை' கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. 'கிரானைட்' கற்களுக்காக, பாறையை வெடிவைத்து தகர்த்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி அருகே உள்ளது மருகால்தலை. இங்குள்ள பாறைக் குன்று ஒன்றில், சமணர்கள், 2000 ஆண்டுகளுக்கு முன்பே தங்கியதன் அடையாளமாக, 'சமணர் படுகை' கள் உள்ளன. இதை, 1906ம் ஆண்டில், எல்.ஏ.கேமைட் என்ற ஆங்கிலேய தொல்லியலார் கண்டறிந்தார். தமிழகத்தில் முதன்முறையாக, 'தமிழ் பிராமி' இங்குதான் கண்டுபிடிக்கப்பட்டது
காவலாளி கிடையாது: இங்குள்ள பாறை, யானையின் உடல்பகுதி போல வளைந்திருக்கும். அதன் தென்திசையில், மழை பெய்தாலும் தண்ணீர் புகாதபடி, தங்குமிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் படுகைகளும், பாறைகளில் தண்ணீர் சேமிக்கும் குழிகளும் உள்ளன. அந்த பாறையின் மேல் பகுதியில், 'வெண்காசிபன் கொடுபித கல்கஞ்சனம்' என்ற, 'தமிழ் பிராமி' எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. இதன் பொருள், 'காசியில் இருந்து வந்த மாணவர்' அல்லது, 'வெண்காசிபன் என்ற மாணவர்' சமணர்களுக்காக ஏற்படுத்திய படுகை என்பதாகும். தென்மாவட்டங்களில், சமணர் படுகைகள், பள்ளிகள் இருந்தாலும் தொல்லியல் ஆய்வில், மருகால்தலை பழமையானதாகும்.

வியாழன், 24 அக்டோபர், 2013

உலகம் தட்டையானது என்ற நம்பிக்கை மிகவும் சுகமானது

I love to disturb people, because only by disturbing them can I make them think. They have stopped thinking for centuries. Nobody has been there to disturb them. People have been consoling them. I am not going to console anybody, because the more you console them, the more retarded they remain.osho.

அறிஞர்களை அல்லது வழிகாட்டிகளை இரண்டு விதமாக பிரிக்கலாம் ,
நமக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி நம்மை ஒரு சௌகரியமான மன நிலைக்கு இட்டு செல்பவர்கள் ஒரு வகை ,
அதாவது  நமது Comfort  Zone எனப்படும் மிக சுகமான ஒரு மன நிலையில் எம்மை ஆறுதல் படுத்தும் வழிகாட்டிகள் இவர்களாவர்,

அடுத்த வகையான வழிகாட்டிகள் நம்மை மிகவும் தொந்தரவு செய்யும் மனிதர்களாவர் ,
நாம் நீண்ட நாட்களாக சுமந்து  கொண்டிருக்கும் சுகமான நம்பிக்கைகளை அல்லது கோட்பாடுகளை உடைத்து நம்மை மிகவும் குழப்பத்திற்கு உள்ளாக்கி  விடுவார்கள் ! தீவிரமாக யோசிக்க வைத்துவிடுவார்கள் !
இவ்வகையான மனிதர்கள் நமது நிம்மதியையும் சிலவேளைகளில் தொலைத்துவிடுவார்கள் ,
Ignorance is Bliss அதாவது அறியாமையே ஆனந்தம் என்பது போல நாம் மிகவும் சரியான பாதையில் செல்வதாக எண்ணி கொண்டிருக்கையில் இந்த Disturb வழிகாட்டிகள் எமது கனவு சொர்க்கத்தை தகர்த்து விடுவார்கள்.

கனவு சொர்க்கத்தை கலைக்கும் காரியத்தை செய்யும் அறிஞர்களை மனித சமுதாயம் அவ்வளவு நிம்மதியாக இருக்க விட்டதில்லை ,
டார்வின், கலிலியோ, கோர்ப்பனிக்கஸ், சோக்கிரட்டீஸ் மற்றும் ஏராளமான Disturb காரரை மனித குல வரலாறு கண்டிருக்கிறது ,

சுவிஸ் வங்கியில் 50 ஆயிரம் கோடி : ஹசன் அலியின் கறுப்பு பணம் மீண்டு வருமா ?

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹசன் அலி. குதிரைப்பண்ணை
நடத்துவதுடன், ரியல் எஸ்டேட் உள்பட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டார். அவர் வரிஏய்ப்பு செய்துள்ளதாக புகார் எழுந்தது.   அதன்பேரில், கடந்த 2007–ம் ஆண்டு அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். >அப்போது, சுவிட்சர்லாந்தில் ஜூரிச் நகரில் உள்ள யு.பி.எஸ். வங்கியில் ஹசன் அலி ரகசிய கணக்கு வைத்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். 800 கோடி டாலர் (சுமார் ரூ.50 ஆயிரம் கோடி) கறுப்பு பணத்தை அவர் போட்டு வைத்திருப்பது தொடர்பான ஆவணங்களை கைப்பற்றினர்.
ஆனால், இந்தியாவில் அவர் தாக்கல் செய்த வருமானவரி கணக்கில் இந்த விவரத்தை குறிப்பிடவில்லை. மேலும், சுவிஸ் வங்கி அதிகாரிகளின் உதவியுடன், போலி வருமானவரி கணக்கை தாக்கல் செய்ததாகவும் தெரிய வந்தது.

செம்மீன் புகழ் ஹிந்தி பாடகர் மன்னாடே காலமானார் ! மானசமயிலின் வரு


இந்திய திரையுலகின் பிரபல பாடகர் மன்னா டே 94-வது வயதில் பெங்களூரில் இன்று வியாழக்கிழமை காலமானார்.
திரைப்படங்களில் பாடியதன் மூலம் லட்சக் கணக்கான ரசிகர்களை இவர் கொண்டிருந்தார்.
இந்தி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிப் படங்களிலும் சுமார் நாலாயிரம் பாடல்களை பாடியுள்ள மன்னா டே, கிட்டத்தட்ட 7 தசாப்தங்களாக இந்தி திரையுலகில் பிரபலம் பெற்ற பாடகராக விளங்கினார்.
தனது வசீகரக் குரலால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்த ஒரு இசை மேதையின் மரணம் நாட்டுக்கு பேரிழப்பு என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அனுதாபம் தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய இசையில் பயிற்சி பெற்ற மன்னா டே 1942-ம் ஆண்டில் தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார்.
இவரது திரையிசைப் பாடல் ஆல்பங்கள் தலைமுறைகள் தாண்டி அதிகளவில் விற்றுத்தீர்த்து சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

16 வயது சிறுமி பாலியல் வன்முறை வழக்கில் கேரளா MP குரியன் விடுதலை !

40க்கும் மேற்பட்டவரால் பலாத்காரம் செய்யப்பட்ட
சூரியநெல்லி சிறுமி விவகாரம் : பி ஜே குரியன் மீதான வழக்கு தள்ளுபடி

கேரள மாநிலம் இடுக்கியை அடுத்த சூரியநெல்லி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் கடந்த 1996–ம் ஆண்டு கடத்தப்பட்டு 40–க்கும் மேற்பட்டவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.சிறுமியை கற்பழித்தவர்களில் அரசியல் பிரமுகர்கள், முக்கிய தலைவர்களும் உண்டு என்றும் அப்போது குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பாக இப்போது டெல்லி மேல்சபை தலைவராக இருக்கும் பி.ஜே. குரியனுக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு உண்டு என்று கூறப்பட்டது.இதை மறுத்த குரியனை இந்த வழக்கில் இருந்து சுப்ரீம் கோர்ட் விடுவித்தது. அதன் பிறகு சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான தர்மராஜன் என்பவர் பத்திரிகைகளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பு பேட்டி அளித்தார்அதில், குரியன் இருந்த விருந்தினர் மாளிகைக்கு சிறுமியை காரில் அழைத்துச் சென்றதாகவும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததில் குரியனுக்கும் தொடர்பு உண்டு என்றும் கூறினார். இதனால் இந்த வழக்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியும் இந்த வழக்கில் குரியனையும் சேர்க்கக்கோரி பீர்மேடு, தொடுபுழா கோர்ட்டுகளில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகளை பீர்மேடு, தொடுபுழா கோர்ட்டுகள் தள்ளுபடி செய்தது.
இனி குரியன் சேட்டனை யார் தட்டி கேட்பது ?

அரசு மருத்துவமனையில் ஓராண்டில் 42 குழந்தைகள் கடத்தல்: ஹைகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

மதுரை: தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த ஓராண்டில் 42 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த ஜூன் 15 ஆம் தேதி குழந்தை ஒன்று காணாமல் போன வழக்கில், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் காவல்துறை தலைவர் ராமானுஜம் ஆகியோர் சார்பில் தனித்தனியாக விளக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டன. அதில், கடந்த ஓராண்டில் அரசு மருத்துவமனைகளில் இருந்து 42 குழந்தைகள் காணாமல் போயிருப்பதாகவும், அதில் 27 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தை குறித்த விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள குழந்தைகளை கண்டறிய சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
tamil.oneindia.in

தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை மறைத்த சாப்ட்வேர் எஞ்சினியர்


ஹைதராபாத்தில் 2 டிரைவர்களால் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை யாரிடமும் சொல்லாமல் மறைத்து விட்டார் சம்பந்தப்பட்ட சாப்ட்வேர் என்ஜீனியர் என்று தெரிய வந்துள்ளது. 22 வயதான அந்தப் பெண், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை வெளியில் சொல்லத் தயங்கியும், அஞ்சியும் அதை ரகசியமாக வைத்திருந்திருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது. ஹைதராபாத் போலீஸாரின் விசாரணையில் இது தெரிய வந்துள்ளது.
கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் காரிலும், வனப்பகுதியிலுமாக அந்தப் பெண், இரண்டு டிரைவர்களிடமும் சிக்கி சீரழிந்துள்ளார்.
குற்றச் செயலில் ஈடுபட்ட சதீஷ், வெங்கேஸ்வரலு ஆகிய இரு டிரைவர்களும் கைது செய்யப்பட்டு விட்டனர்.
ஆனால் அந்தப் பெண் போலீஸில் கொடுத்த புகார்தான் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள நடிகர் நடிகைகள் மீது இசையமைப்பாளர் மகன் பாய்ச்சல்

திருவனந்தபுரம்: முதுபெரும் இசைஅமைப்பாளர் கே.ராகவன் இறுதிசடங்கில் மலையாள நடிகர்கள்,
இயக்குனர்கள் யாரும் பங்கேற்காமல் புறக்கணித்ததை
இசை அமைப்பாளர் மகன் கண்டித்துள்ளார்.மலையாளத்தில் 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்தவர் கே.ராகவன் (99). கடந்த ஞாயிற்றுக்கிழமை இறந்தார். அவரது மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த மலையாள நடிகர்கள் ஒருவர்கூட வரவில்லை. இதை அவரது மகன் கண்டித்துள்ளார். இது பற்றி ராகவனின் மகன் முரளிதரன் கூறியது: என் தந்தைக்கு 99 வயது. பழம்பெரும் இசை அமைப்பாளரான அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்த மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட மலையாள நடிகர்களோ, இயக்குனர்களோ ஒருவர்கூட வரவில்லை. இது எங்கள் குடும்பத்தினருக்கு மிகுந்த வருத்தம் அளித்திருக்கிறது.
இதுபோன்ற அவமரியாதை என் தந்தைக்கு ஏற்பட்டிருக்கக்கூடாது. இது மன்னிக்க முடியாத போக்கு. மாநில அரசு அவரது உடலுக்கு இறுதி மரியாதை அளித்தது. ஏராளமான அரசியல்வாதிகள் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அந்த உணர்வு திரையுலகினரிடம் இல்லாமல்போனது ஏன் என்று தெரியவில்லை. - tamilmurasu.org

திருவண்ணாமலையில் கந்துவட்டி கொடுமையால் குடும்பமே லாட்ஜில் தற்கொலை

திருவண்ணாமலை: புதுக்கோட்டை மறைமலை நகரை சேர்ந்தவர் சேகர் (57). அவரது மனைவி ஹேமமாலினி (55). இருவரும் அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வந்தனர். இவர் களது மகன் பிரனேஷ்வரன்(17).இந்நிலையில், சேகர் தனது மனைவி மற்றும் மகனுடன் நேற்று அதிகாலை 3 மணிக்கு திருவண்ணாமலை வந்தார். பஸ் நிலையம் அருகேயுள்ள ஒரு லாட்ஜில் தங்கினர்.காலை 9 மணி வரை சேகர் தங்கியிருந்த அறை கதவு திறக்கவில்லை. மேலும், அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதை லாட்ஜ் ஊழியர்கள் கவனித்தனர். அதைத் தொட ர்ந்து, அறை கதவை தட்டினர். ஆனால் அறையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. கதவையும் திறக்கவில்லை.சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து மாற்று சாவி மூலம் அறையை திறந்தனர்.உள்ளே கட்டிலில் படுத்த நிலையில் சேகர், ஹேமமாலினி ஆகியோர் இறந்து கிடந்தனர். பிரனேஷ்வரன் உயிருக்கு போராடி கொண்டிருந் தார்.

மோடிக்கு விழுந்த மரண அடி ! தங்கம் தோண்டும் உபி சாமியார் கொடுத்ததுதான் ரொம்ப விசேஷம் !

சோபன் சர்க்காரின் சீடர் ஓம்ஜி பிரதமர் வேட்பாளராக உங்கள் பிம்பத்தை கட்டமைக்க பல கோடி ரூபாய் செலவழிக்கிறீர்களே? அது அனைத்தும் வெள்ளைப் பணமா, கருப்புப் பணமா என்று கணக்கு காட்ட முடியுமா”? மோடி தனக்கு இணையாக மல்லுக் கட்டக் கூடிய அந்த இந்துத்துவ தீவிரவாதியின் கிடுக்குப்பிடியில் சிக்கிக் கொள்ளப் போகிறோம் என்று  எதிர்பார்த்திருக்கவில்லை. 
ந்தியா ‘வல்லரசா’க வேண்டும் என்பதில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கும், உ.பி சாமியார் சோபன் சர்க்காருக்கும் இரு வேறு கருத்து இல்லை. அதனால் அவர்களுக்கிடையே ஏற்பட்ட ஒரு சிறிய கருத்து வேறுபாடு சுமுகமாக முடித்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
ராஜா ராம் பக்ஸ் கோட்டை
உத்தர பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த தௌண்டியா கேரா கோட்டையில் 1,000 டன் தங்கம் இருப்பதாக 19-ம் நூற்றாண்டில் அந்த கோட்டையை ஆண்டு வந்த ராஜா ராம் பக்ஸ், சாமியார் சோபன் சர்க்காரின் கனவில் வந்து சொல்லியிருக்கிறார். “அது கனவு இல்லை, இறந்து போன ராஜாவின் ஆன்மாவுடனான உரையாடல்” என்கிறார் சோபன் சர்க்கார். மேலும், ஃபதேபூரில் உள்ள ஆதம் நகரில் 2,500 டன் தங்கம் உள்ளதாகவும், கான்பூரில் மூன்று இடங்களில் தங்கம் இருப்பதாகவும் சோபன் சர்க்கார் தெரிவித்திருக்கிறார். இந்திய அரசுக்கு 21,000 டன் தங்கத்தை வழங்குவதன் மூலம் இந்தியாவை வல்லரசாக்குவதுதான் தன் நோக்கம் என்றும் கூறியிருக்கிறார்.

குமுதம் வெளியிட்ட ஆதிசங்கரனின் வரலாறு ! ஹரிபோட்டர் பாணியில் எழுதப்பட்ட ஒரு அம்புலி மாமா புராணம் ! மொத்தமும் கப்சா !

இவ்வளவு வேகமாக படிக்க முடிகிற ஒரு ஆன்மீக புத்தகத்தை ப்ரியா கல்யாணராமன் மாதிரியான ஒரு மரணமசாலா ரைட்டரால்தான் எழுதமுடியும். ஹாரிபாட்டர்,லார்ட்ஆஃப்தி ரிங்ஸையெல்லாம் மிஞ்சும் சாகசமும் ஃபேன்டஸியும் ஏகப்பட்ட தத்துவங்களும் நிறைந்த ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் நூல் ‘’ஜகத்குரு’’. குமுதம் ஜங்கசனிலும் பின்பு குமுதம் பக்தியிலும் நூறுவாரங்கள் வெளியான தொடர் இது. இதை இப்போது புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள். 600 பக்க நூலை ஏக்தம்மில் படித்துமுடித்துவிடலாம். காலடியில் பிறந்து… அங்கிருந்து புறப்பட்டு இந்தியா முழுக்க சுற்றி திரிந்து வெவ்வேறு விதமாக பிரிந்துகிடந்த ஷண் மார்க்கங்களையும் திரட்டி இந்துமதம் என்கிற ஒரே கூரையின் கீழ்கொண்டுவந்த வரலாறுதான் இந்த ஜெகத்குரு. அவருடைய அந்த நீண்ட பயணத்தில் வெவ்வேறு விதமான மனிதர்களை சந்திக்கிறார். சிலரோடு வாதம் செய்து தோற்கடித்து தன்னுடைய அத்வைத கருத்தை ஏற்க வைக்கிறார். நிறைய இந்துசமய நூல்களுக்கு விளக்கவுரை எழுதுகிறார்.. கடைசியில் காஞ்சியில் வந்து காஞ்சிகாமகோடி பீடத்தை நிருவிவிட்டு முக்தியடைகிறார்.  கூடவே காஞ்சி ஜெயேந்திரரின் காம லீலைகள்  மற்றும் கொலையையும்  சேர்த்திருந்தா ரொம்ப நன்னா இருந்திருக்குமே ?

தமிழின் சிறந்த இலக்கியங்களை வடநாட்டவர்தான் களவாடிச் சென்றுள்ளனர்

thanthieதினத்தந்தியின் சாட்டையடி!

ன்றைய தினத்தந்தி நாளிதழில் புத்தக மதிப்புரை பகுதியில் தமிழறிஞர் தமிழண்ணல் எழுதிய ‘இரா. நாகசாமியின் பழுதடைந்த கண்ணாடியும், பார்வைக் கோளாறுகளும்’ என்ற நூல்  இடம் பெற்றிருக்கிறது.
அதில் ஒவ்வொரு வார்த்தையும் உணர்வோடு பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இதுதான் அது :
“தொல்லியல் ஆராய்ச்சியாளரான இரா. நாகசாமி, ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். ‘தமிழையும், சமஸ்கிருதத்தையும் காட்டும் கண்ணாடி’ (THE MIRROR TAMIL AND SANSKRIT) என்பது அந்த நூலின் பெயர்.
தமிழ் தனித்தன்மையுடன் வளரவில்லை என்றும் சமஸ்கிருத சொற்களைக் கடன் வாங்கியே வளர்ந்தது என்றும் இந்த நூலில் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுவில் வடமொழியை உயர்த்தியும், தமிழை தாழ்த்தியும் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வண்ணம், தமிழறிஞர் தமிழண்ணல் “இரா. நாகசாமியின் பழுதடைந்த கண்ணாடியும், பார்வைக் கோளாறுகளும்” என்ற தலைப்பில் சிறந்த புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

பாலியலில் வறண்ட சமூகம் ! பாலியல் குற்றங்களின் பின்னணியில் இருப்பது ????

எல்லா உணர்ச்சிகளும் தூண்டப்பட்டுவிட்டது, ஆனால் இந்த சமூகத்தின் உணர்ச்சிகளுக்கு வடிகால்தான் இல்லை. இதை எப்படி தனிமனிதனின் பிரச்சினை என்று ஒதுக்குவது?
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பாக எங்கள் ஊரில் வீட்டுக்கு வீடு பஞ்சாயத்து போர்ட் தண்ணீர் குழாய் இருக்காது. இரண்டு வீதிகளுக்கு சேர்த்து ஒரு பொதுக் குழாய் இருக்கும். அதில் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறைதான் தண்ணீர் வரும். அதுவும் ஒரு மணி நேரமோ அல்லது இரண்டு மணி நேரமோ தான். அந்தச் சமயங்களில் பெரும்பாலும் சண்டை நடக்கும். பெண்கள் பின்னியெடுத்துவிடுவார்கள். சண்டை என்றால் சாதாரணச் சண்டை இல்லை. கிட்டத்தட்ட செவி வழிப் புணர்ச்சி- சிறு திருத்தம்- அது செவி வழி வன்புணர்ச்சி. நாறடித்துவிடுவார்கள். சண்டையை வேடிக்கை பார்ப்பவர்களுக்கு அது வெறும் ஒரு குடம் தண்ணீர் பிரச்சினைதான். ஆனால் அந்தப் பெண்களைப் பொறுத்தவரைக்கும் அது தண்ணீர் பிரச்சினையே இல்லை. ஈகோ சார்ந்த போராட்டம்; யார் பெரியவள் என்ற போட்டி; தனது அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் நிலை நாட்டக் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பு. மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வார்கள்.

பயங்கரவாதிகளுக்கு கல்லறை உரிமை இல்லை. - ஹத்துருசிங்க

எல்.ரி.ரி.ஈ போன்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் கல்லறைகள் மற்றும் நினைவுத் தூபிகள்க்கு எந்த ஜனநாயக நாடும் அனுமதிக்காது என்று யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க நேற்று கூறியுள்ளார். இந்த விடய த்தைப் பொறுத்த மட்டில், தன்னைச் சூழவுள்ள வர்களைப் பற்றி நன்கு அறிந்தவரான, கற்றவரான முன்னால் உயர் நீதிமன்ற நீதியரசர் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனின் நிலைப்பாடானது, த.தே.கூ நிலைப்பாட்டில் இருந்து முற்றிலும் வேறுபட்டது என்று அவர் மேலும் குறிப்பிட்டார். அமெரிக்காவால் அல்-கொய்தாவின் தலைவர் ஒசாமா பின்லேடன் பிடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டபோது, அவரது உடல் எங்கேயென்று யாரும் கேட்கவில்லை. அது பசுபிக் மாகடலில் ஆழ்த்தப்பட்டுவிட்டது என்று அமெரிக்கா கூறியது. அவருக்கான கல்லறை அல்லது நினைவுச் சின்னம் பற்றி யாரும் பேசவில்லை.

புதன், 23 அக்டோபர், 2013

ராகுல் காந்திக்கு Victim Syndrom பாதிப்பு உள்ளதா ? இப்ப போயி பாட்டி மரணம் அம்மா பாவம் எல்லாம் பேசுகிறார் ?

பாட்டி, தந்தை போன்று நானும் ஒருநாள் கொல்லப்படலாம், ஆனால் அதுபற்றி எனக்கு கவலை இல்லை’’ என்று ராஜஸ்தான் தேர்தல் பிரசார
கூட்டத்தில் ராகுல் காந்தி ஆவேசமாக பேசினார்.
காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, சில தினங்களாக பொதுக்கூட்டங்களில் உணர்ச்சிப் பூர்வமாக பேசி வருகிறார். வேறு
வழியின்றி ராகுல் அவ்வாறு பேசுவதற்கு தள்ளப்பட்டுள்ளார் என்று பா.ஜனதா கட்சியின் தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:- ராகுல் தனது பாட்டி சுட்டுக்கொல்லப்பட்டது, அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாதது குறித்து பேசியிருக்கிறார் என்பது மிகவும் துரதிர்ஷ்டமானது. மக்களின் வாக்குகளை கவர அவர் உணர்ச்சிப் பூர்வமாக பேசி வருகிறார். நாட்டிற்கு நன்றாக தெரிந்த காந்தி குடும்பத்தின் தியாகங்களைப் பற்றி மீண்டும் புகழ் பாடுவதை காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி தனது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக வைத்துள்ளார்.   கடந்த காலத்தை பற்றிய ராகுல் காந்தியின் உணர்ச்சிப் பூர்வமான பேச்சுக்களும், சுய புராணங்களும் இன்றைய காலத்து இளைஞர்களிடம் எடுபடாது. அவர்கள் வருங்கால இந்தியாவை படைக்கும் வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள்.
  maalaimalar.com

மாறன் பிறதேர்ஸின் தலைக்கு மேலே வெள்ளம் ! பலநாள் களவுகள் எல்லாம் பிடிபடும் நேரமிது !

முதல் 2007 வரை தயாநிதிமாறன்  தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.  அவரது பிரத்யேக் பயன்பாட்டிற்காக 323 அதிநவீன தொலைபேசி இணைப்புகள் அளிக்கப்பட்டன.   ஆனால் இந்த தொலைபேசி இணைப்புகளை தனது சகோதரர் கலாநிதிமாறன்  நடத்தி வரும் சன் டிவி பயன்பாட்டிற்காக தயாநிதிமாறன்  ஒப்படைத்துவிட்டார்.  இது அதிகார துஷ்பிரயோகமாகும்.
இதனால் அரசுக்கு  ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பு 440  கோடியாகும் என்று  மதிப்பிடப்பட்டுள்ளது.  இது தொடர்பாக பிரபல ஆடிட்டர் குருமூர்த்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.  சிபிஐ அதிகாரிகள் இந்த விவகாரத்தில் மெத்தனமாக செயல்பட்டனர்.   உச்சநீதிமன்றம்  கண்டித்ததை தொடர்ந்து இந்த வழக்கு சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.தயாநிதிமாறனின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு பிஎஸ்.என்.எல் அதிகாரிகள் கே.பிரம்மநாதன், எம்.பி.வேலு சாமி ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர்.   இந்த அதிகாரிகள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.நீதிபதி முன்னிலையில், வெகு விரைவில் குற்ற்ப்பதிவு நிகழ்த்தப்படும் என்று உறுதியாக தெரிகிறது.   சிபிஐ அதிகாரிகள் இதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.  இதனால் கலாநிதிமாறனுக்கும், தயாநிதிமாறனுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மாறன் சகோதரர்கள்  மற்றொரு பிரச்சனையிலும் மாட்டிக்கொண்டுள்ளனர்.     சென்னையைச்சேர்ந்த பிர பல தொழிலதிபர்  சிவசங்கரன் ஏர்செல் நிறுவனத்தை நடத்தி வந்தபோது,  அவருக்கு அலைபேசி சேவை உரிமம் அளிக்காமல் தயாநிதிமாறன் இழுத்தடித்தார்.  மலேசிய தொழிலதிபரான அனந்ந்தகிருஷ்ணனின் மேக்ஸிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல்லின்  பெரும்பாலான பங்குகளை விற்க வேண்டுமென்று  தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்துவந்தார்.கடும் மன உளைச்சலுக்கு ஆளான சிவசங்கரன் தனது தொழி நிறுவனத்தை அனந்தகிருஷ்ணனிடம் விற்றார்.  இதற்கு பிரதி உபகாரமாக சன் நெட்வொர்க்கில் அனந்தகிருஷ்ணன் முதலீடு செய்தார்.   சன் நெட் வொர்க் பங்குகளை வாங்க சந்தை மதிப்பை விட அதிக தொகையை  அனந்தகிருஷ்ணன் கொடுத்துள்ளார்.   இவ்விவகாரம் குறித்தும்  சிபிஐ அதிகாரிகள் முனைப்புக்காட்டி வருகிறார்கள்.மலேசியாவில்  இருந்து சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.   இன்னும் சில தகவல்களை பெறும் முயற்சியில் சிபிஐ அதிகாரிகள்  ஈடுபட்டுள்ளனர்.  இந்த வழக்கையும் விரைவுபடுத்த சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளதால்  இருதலைக் கொள்ளி எறும்புகளாக மாறன் சகோதரர்கள் தவிக்கிறார்கள்  nakkheeran.in

தலாய் லாமாவை நாடு கடத்த மன்மோகன்சிங்கிடம் சீனா கோரிக்கை ? இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பிரச்சனைக்கு லாமாவே காரணம் !


பீஜிங்: சீனாவின் கட்டுப்பாட்டில் திபெத் உள்ளது. திபெத்தின் புத்த துறவி தலாய்லாமா அந்நாட்டு விடுதலைக்காக போராடினார். கடந்த 1959ம் ஆண்டு போராட்டத்தின் போது அவரை சீன ராணுவம், கைது செய்ய முயன்ற போது அவர் தப்பியோடி வந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அது முதல் அவர் இந்தியாவிலேயே வசித்து வருகிறார்.  இந்நிலையில், இந்திய பிரதமர் மன்மோகன்சிங் தனது ரஷ்ய பயணத்தை முடித்து கொண்டு நேற்று சீனாவுக்கு 3 நாள் பயணமாக பீஜிங் வந்து சேர்ந்தார்.

அரவிந்தர் ஆசிரம பாலியல் புகார் விசாரணையை தொடங்கிய புதிய நீதிபதி குழு

பாலியல் புகார்: அரவிந்தர் ஆசிரமத்தில் விசாரணையை தொடங்கிய புதிய நீதிபதி குழு புதுச்சேரி: பாலியல் புகார் எழுந்துள்ள புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி விசுவநாத அய்யர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவினர் இன்று விசாரணை மேற்கொண்டனர். புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமம் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலியல் புகார் உள்பட பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. இது குறித்து சப்-கலெக்டர் விசாரணை நடத்தினார். அவர் விசாரணை நடத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரம நிர்வாகிகள் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து அரவிந்தர் ஆசிரமம் மீது கூறப்படும் புகார் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ராமன் தலைமையில் விசாரணை கமிஷனை உயர்நீதிமன்றம் அமைத்து உத்தரவிட்டது. அந்த விசாரணை குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவை வந்தனர்.

வருகிறார் வைகை புயல் ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன் !

காமெடிப் புயல் வடிவேலு மீண்டும் அசத்தலாக தமிழ் சினிமாவில் தன் அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிக்கிறார். ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படத்தில் அவரது நகைச்சுவை கெட்டப் படங்களை முதல் முறையாக பத்திரிகைகளுக்கு அனுப்பியுள்ளார் பிஆர்ஓ. அந்தப் படங்களில் வடிவேலுவின் முகபாவங்களைப் பார்க்கும்போதே நம் உதடுகள் சிரிப்பில் தானாக விரிகின்றன.
புதுப் பொலிவுடன்..
‘ந்தா வந்துட்டாருய்யா நம்ம வைகை காமெடிப் புயல்…’ என்று சொல்ல வைக்கும் அளவுக்கு புதுப் பொலிவுடன் காட்சி தருகிறார் வடிவேலு.

மீனாட்சி தீக்ஷித்
படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் மீனாட்சி தீக்ஷித். இந்த வேடத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் பார்வதி ஓமணக்குட்டன். ஆனால் அவரை நடிக்கவிடாமல் யாரோ சதி செய்துவிட்டதாக வடிவேலுவே கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
3 ஆண்டுகளுக்குப் பிறகு…
விஜய்யுடன் நடித்த காவலன் படத்துக்குப் பிறகு வேறு புதிய படங்களில் நடிக்கவில்லை. அதற்குப் பிறகு வெளியான மம்பட்டியான், மறுபடியும் ஒரு காதல் போன்றவை அவர் ரொம்ப நாளைக்கு முன்பு ஒப்புக் கொண்டு நடித்தவை. எனவே கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் இடைவெளிவிட்டு இந்தப் படத்தில் நடிக்கிறார் வடிவேலு.

இடி, மின்னல் நேரங்களில் டிவி, மிக்ஸி, கணினி, போனை பயன்படுத்தாதீர்கள்

இடி மற்றும் மின்னல் நேரங்களில், டி.வி., மிக்ஸி, கிரைண்டர், கணினி மற்றும் தொலைபேசியை பயன்படுத்தாதீர்கள் என்று தமிழ்நாடு அரசு தலைமை மின் ஆய்வாளர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பருவமழை, புயல் மற்றும் வெள்ளம் ஏற்படும் காலங்களில் மின்சார பாதுகாப்பிற்கு பொதுமக்கள் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதன் விவரம் வருமாறு:-
வீடுகளில் உள்ள மெயின் சுவிட்ச் போர்டுகளில், ஈ.எல்.சி.பி. என்னும் மின் கசிவு தடுக்கும் கருவியை பொருத்தி மின்கசிவினால் ஏற்படும் விபத்தை தவிர்த்திடுங்கள். உடைந்த சுவிட்ச் மற்றும் பிளக்குகளை மாற்றி விடுங்கள். டி.வி. ஆண்டனா, கேபிள் டி.வி. வயர்களை மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லாதீர்கள். மின் கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்தக்கூடாது. அதன்மீது விளம்பர பலகைகளை கட்டக்கூடாது. மழைக்காலங்களில் மின் மாற்றிகள்(டிரான்ஸ்பார்மர்கள்), மின்கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள், ஸ்டே வயர்கள் ஆகியவற்றின் அருகில் செல்ல வேண்டாம்.

மழை நீரில் மிதக்கும் தீவுதிடல் பட்டாசு கடைகள் ! யாருக்கு தீபாவளி ? டெண்டர் எடுத்தவர்கள் கண்ணீர் !சென்னை : தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கடைகள் தண்ணீரில் மிதக்கின்றன. டெண்டர் எடுத்த நிறுவனம் கடைக்கு ரூ.1.5 லட்சம் கேட்பதால் வியாபாரிகள் தயக்கம் காட்டுகிறார்கள். சென்னையில் கடந்த 2 ஆண்டாக தீவுத்திடலில் மட்டும்தான் பட்டாசுகள் விற்கப்படுகின்றன. இந்த ஆண்டும் தீவுத்திடலில்தான் பட்டாசு கடைகள் வைக்கப்படுகின்றன.ஆனால் இப்போது பட்டாசு கடையுடன் துணிக்கடை, ஓட்டல், சுவீட்ஸ் கடைகள் திறக்கவும் ஏற்பாடு நடந்து வருகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பாரிமுனையில் உள்ள 120 பட்டாசு கடை வியாபாரிகளுக்கு தீவுத்திடலில் கடை வைக்க இந்த ஆண்டு அனுமதி கொடுக்கவில்லை. அதற்கு பதிலாக மொத்தமாக தீவுத்திடலில் கடை வைத்துக்கொள்ள பொள்ளாச்சியை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவருக்கு சுமார் ரூ.1 கோடிக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் போராளிகள் ஏன் தமிழ் சமுகத்தால் ஒதுக்கப்படுகிறார்கள் ?

இலங்கையில் யுத்தம் 2009-ம் ஆண்டு மே மாதம்
முடிந்தது. இப்போது 4 ஆண்டுகளின் பின், அங்கு நிலவும் சூழ்நிலை பற்றிய தகவல்களில், மிக குறைந்த அளவு தகவல்கள்தான் வெளியே மீடியாக்களில் வெளியாகின்றன. பல தகவல்கள் வெளியாகாமலேயே போய்விடுகின்றன.
rehab-centres-20131021-1இதற்கு காரணம், 30 ஆண்டு கால யுத்தம் முடிவுக்கு வந்தபின், அதனால் ஏற்பட்ட மாற்றங்களை ஒரு மீடியா டீமின் 10 நாள் டூரில் முழுமையாக கவர் பண்ணிவிட முடியாது. லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆயிரக் கணக்கான விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளும் உள்ளனர். இவர்களில் பெரிய சதவீதமானவர்கள் தடுப்பு முகாம்கள், மற்றும் புனர்வாழ்வு முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டனர். தற்போதும் பல முன்னாள் போராளிகள், விடுதலை தேதியை எதிர்நோக்கி, புனர்வாழ்வு முகாம்களில் உள்ளனர். விடுவிக்கப்பட்டவர்கள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் பெரும்பாலும் வசிக்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக கிழக்கு மாகாணத்திலும், மிக சொற்ப அளவில் நாட்டின் மற்றைய பகுதிகளிலும் உள்ளனர்.

சாமியார்களின் புருடாக்களை நம்பி தங்கம் தோண்டும் நாளைய வல்லரசு ! வீரமணி கண்டனம் !

  • சாமியார் ஒருவர் கிளப்பிய புருடாவை நம்பி தங்கம் கிடைக்கும் என்று  பூமியைத் தோண்டும் வேலையில் ஈடுபடுவதா?
  • மத்திய அரசு இதற்குத் துணை போகலாமா?
அரசமைப்புச் சட்டம் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கக்கூறும்
இலட்சணம் இதுதானா? நாடு எங்கே போகிறது?
மூடநம்பிக்கை முதுகெலும்பை முறிக்கும் தமிழர் தலைவரின் அறிக்கை
ஏதோ ஒரு சாமியார் பூமிக்குள் தங்கம் இருக்கிறது என்று அவிழ்த்துவிட்ட புருடாவை  நம்பி தொல்பொருள் துறை பூமியைத் தோண்டுவதும் உச்சநீதிமன்றம் இதற்குத் துணை போவதும் சரியானது தானா? அரசமைப்புச் சட்டம் கூறும், விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கக் கூறும் இலட்சணம் இதுதானா? நாடு எங்கே போகிறது? என்ற வினாவை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்; அறிக்கை வருமாறு:

பேராசிரியை கொலை: வேலைக்கார பெண் கள்ளக்காதலனுடன் கைது!

திருப்போரூர் அருகே உள்ளதையூரில் கேளம்பாக்கம் - பழைய மால்லபுரம் சாலையில் 8 தளங்களை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இதில் இ-3 பிளாக்கில் வசித்து வந்தவர் எப்சிபாய் (59). முன்னாள் கல்லூரி பேராசிரியை.இவர் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள சாராள் தக்கர் கல்லூரியில் பணியாற்றி பின்னர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு தனது மகன் கிப்ட்சன் (24) உடன் தையூர் விஜயசாந்தி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். கிப்ட்சன் மறைமலைநகரில் உள்ள மந்திரா சிட்டியில் தொழில்நுட்ப வல்லுனராக வேலை பார்த்து வருகிறார்.கடந்த 17ந் தேதி இரவு வழக்கம்போல வேலைமுடித்து கிப்ட்சன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு லேசாக திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பேராசிரியை எப்சிபாய் கொலை செய்யப்பட்டு ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்க வளையல்கள், 5 சவரன் தங்க சங்கலி மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம்¢ ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

செவ்வாய், 22 அக்டோபர், 2013

நான் மலாலா! தாலிபன் பயங்கரவாதிகளுக்கு வீரம் என்றால் என்னவென்று கற்று கொடுத்து கொண்டிருக்கும் சிறுமி

உலகம் முழுவதும் விற்பனையில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது... தலிபான் தீவிரவாதிகளால் தாக்குதலுக்குள்ளாகி, உயிர் பிழைத்திருக்கும் பாகிஸ்தான் சிறுமி மலாலா எழுதி வெளியிட்டிருக்கும் 'ஐ ஆம் மலாலா’ (I AM MALALA) எனும் சுயசரிதை. அதன் விறுவிறுப்பான சில பக்கங்களை புரட்டுவோமா>நள்ளிரவில்
உருவாக்கப்பட்ட ஒரு தேசத்தில் இருந்து வந்தவள் நான். ஒரு நண்பகலுக்குப் பின், ஏறத்தாழ மரணம் அடைந்தேன். எல்லாவற்றையும் புரட்டிப் போட்ட அந்த நாள், செவ்வாய்க்கிழமை, 9 அக்டோபர் 2012.
எங்கள் பள்ளிக்கூட பேருந்து, அந்த ராணுவச் சாவடியை கடந்து, வெறிச்சோடிக் கிடந்த கிரிக்கெட் மைதானத்தை வட்டமடித்துத் திரும்பியபோது... திடீரென்று நிறுத்தப்பட்டது. இடதுபுறம், எங்கள் ஸ்வாட் மாகாணத்தின் முதல் நிதி அமைச்சர் ஷெர் முகமது கான் சமாதி. வலதுபுறம், தின்பண்ட தொழிற்சாலை ஒன்று.

வெளிறிய சட்டையும் இளம்தாடியுமாக ஓர் இளைஞன், பேருந்தை நெருங்கி...

''சில குழந்தைகளைப் பற்றி தகவல் வேண்டும்’' என்றான்.

கனடாவில் கத்திக்குத்திற்கு இலக்காகி தமிழ் மாணவர் பலி ! தமிழ் மாணவர்களிடையே நடந்த மோதல் ! யாதும் ஊரே ?

fswwwwsssகனடாவில் இரு மாணவ குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் தமிழ் மாணவர் ஒருவர் கத்திக் குத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கனடாவின் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தின் வின்ட்சர் வளாகமருகே இரு மாணவர் குழுக்களுக்கிடையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மேதலிலேயே குறித்த மாணவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவர் ரொறொன்ரோவிலிருந்து கல்விகற்பதற்காக வந்த கௌதம் (கெவின்) குகதாசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளைஇ குறித்த மாணவர் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தின் வின்ட்சர் வளாகத்தின் அருகே வசித்து வந்ததையும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் வின்ட்சர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
.athirady.com/

புருனையில் கடும் இஸ்லாமிய சட்டம் அல்லாவின் கருணையால் வருகிறதாம் ! சுல்தான் அறிவிப்பு !

கடந்த ஆறு நூற்றாண்டுகளாக முழுமையாக
மன்னராட்சியின் கீழ் இருக்கும் புரூனேயின் இப்போதைய மன்னராக இருப்பவர் சுல்தான் ஹசனல்
போல்கியா(67) ஆவார். இவர் இன்று முதல் அந்த நாட்டில் கடுமையான ஷரியா தண்டனைச் சட்டங்கள் பின்பற்றப்படும் என்று அறிவித்துள்ளார்.< ‘கடந்த 1996ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சட்டங்கள் இஸ்லாமிய பழைமைவாதத்தைக் குறிப்பவை ஆகும். இன்று அறிமுகப்படுத்தப்படும் இந்த சட்டங்கள் இன்னும் ஆறு மாதத்திற்குள் முழுமையாக அமலுக்கு கொண்டு வரப்படும்’ என்றும் அவர் தெரிவித்தார். இந்த சட்டத்தின்படி, விபச்சாரம், கொலை போன்ற குற்றங்களுக்கு கல்லால் அடித்து மரண தண்டனை வழங்குதல், திருட்டுக் குற்றங்களுக்கு மூட்டுகளை முறித்தல், கருக்கலைப்பு, மது அருந்துதல் உள்ளிட்ட பல்வேறு வகையான குற்றங்களுக்கு சவுக்கடி மூலம் தண்டனை வழங்குதல் போன்ற கொடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட வழக்குகளைப் பொறுத்து தண்டனைகள் நிர்ணயிக்கப்படலாம். இந்த தண்டனைகள் இஸ்லாமியர்களுக்கு மட்டும் பொருந்தும் என்று தெரிவித்துள்ள அரசர், அல்லாவின் கருணையால் இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டு அவருக்குரிய கடமைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன என்று கூறியுள்ளார்.

விஜய்: ஐயோ ஐயோ நான் ரசிகர்களுடன் அரசியல் பேசவில்லை ! ம்ம் அந்த பயம்...புரிகிறது

அரசியல் பற்றி ரசிகர்களுடன் ஆலோசனை நடத்தவில்லை: நடிகர் விஜய் அறிக்கை
அரசியல் பற்றி ரசிகர்களுடன் ஆலோசனை நடத்தவில்லை என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சமீபத்தில் நான் கேரளாவில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து அரசியல் சம்மந்தமாக ஆலோசனையில் ஈடுபட்டதாக செய்தி வெளியானது. இதை படித்து ரசிகர்களும், பொதுமக்களும், மீடியா நண்பர்களும் குழப்பம் அடைந்துள்ளார்கள்.
நான், கடந்த இரண்டு மாதமாக ஐதராபாத்தில் ஜில்லா படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறேன். கேரளாவிற்கே நான் செல்லவில்லை. அப்படியிருக்க இப்படியொரு தவறான செய்தியால் ரசிகர்கள் மட்டுமின்றி நானும் குழப்பம் அடைந்தேன்.
நான் இப்போது வருடத்திற்கு இரண்டு படங்கள் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இரவு பகலாக உழைத்து வருகிறேன். எனது வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் பக்க பலமாகவும் இருப்பது பத்திரிகை நண்பர்கள்தான். ஆகவே தயவு செய்து உண்மை இல்லாத செய்திகளை வெளியிட்டு ரசிகர்களுக்கும், மக்களுக்கும் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது