சனி, 12 நவம்பர், 2016

மோடி என்ன பெரிய பருப்பா ? மக்கள் கருத்துக்கள் !

இவங்க எல்லாம் எங்க காம்பவுண்ட சேர்ந்தவங்க (இருந்தவர்களில் முஸ்லிமும் அடக்கம்). எங்க நிலைமைய பாத்துட்டு அவங்க அடையாள அட்டைய பயன்படுத்தி எனக்கு 52 ஆயிரம் பணம் எடுத்து கொடுத்துருக்காங்க.காசேதான் கடவுளப்பா
அந்தக் கடவுளுக்கும் அது தெரியுமப்பா…
 
...காசுதான் எல்லாமுன்னு அந்த கடவுளுக்கே தெரியும் போது மோடிக்கு தெரியாம இருக்குன்னா அவரு எப்பேர்பட்ட முட்டாளா இருந்துருக்கனும். நியாயமா பாத்தா மோடி மேலதான் இந்த கோபம் வந்துருக்கனும். நமக்கு மட்டும்தான் இந்த கோபம் வருதோன்னு தோணவே வங்கிக்கு வந்தவங்கக்கிட்டையும் பேசி பாத்தேன்.; இவங்க எல்லாம் எங்க காம்பவுண்ட சேர்ந்தவங்க (இருந்தவர்களில் முஸ்லிமும் அடக்கம்). எங்க நிலைமைய பாத்துட்டு அவங்க அடையாள அட்டைய பயன்படுத்தி எனக்கு 52 ஆயிரம் பணம் எடுத்து கொடுத்துருக்காங்க.
சென்னையோட முக்கியமான இடத்துல இருக்கும் அந்த ஸ்டேட் பேங்கு வாசல்ல புதுசா மாத்துன பணத்தோட பத்துபேர் நின்னாங்க. அவங்கள்ட்ட பேசுனோம்.

மோடி அறிவிக்கும் முன்னரே பணத்தை மாற்றிய பா.ஜ.க முதலைகள் !


“கட்சிகாரங்களுக்கு தகவல் சொல்லி முன்னாடியே அவங்க பணத்தை மாத்திருப்பாங்கப்பா. நாமதான் கஷ்டப்படனும்”
ஐநூறு, ஆயிரம் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்த மறுநாள் அதன் பாதிப்புகள் குறித்து கேட்டபோது மளிகை கடை அண்ணாச்சி ஒருவர் கூறியது பா.ஜ.க-வின் பஞ்சாப் தலைவர்களில் சஞ்சீவ் கம்போஜ் அவரது டிவிட்டர் பக்கத்தில் புது நோட்டையே காட்டிவிட்டார். நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆனால் ஆர்.எஸ்.எஸ் ஊடக பிரச்சாரகர்கள் உள்ளிட்டு பலரும் மோடியின் ரூபாய் நோட்டு அறிவிப்பை மிக இரகசியமாக  செயல்படுத்தப்பட்ட துல்லிய தாக்குதல் என்று வருணித்தார்கள். நடுத்தரவர்க்கமும் இப்படி தான் நினைத்திருந்தார்கள். தற்போது அண்ணாச்சி தன் அனுபவத்தில் கூறியது சரிதான் என்பதை உறுதி செய்யும்விதமாக ரூபாய் நோட்டு விவகாரத்தில் நடந்திருக்கும் ஊழலை அம்பலப்படுத்தியிருக்கிறார்

செல்வாக்கான வணிகர்கள் வங்கிகளில் பின்வழியாக பணத்தை மொத்தமாக பெற்று செல்கின்றனர் .


பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக புதிய ரூபாய் தாள்களை வரிசையில் நின்று வாங்காமல், வங்கியில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி பெரிய வணிக நிறுவனங்கள் பின்வழியாக மொத்தமாக வாங்கிச் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளில் மணிக்கணக்கில் மக்கள் தவம் கிடக்கின்றனர். ஒரு நபருக்கு 4000 ரூபாய் வரை மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. அதுவும் பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, ரேசன் கார்டு, பார்ஸ்போர்ட், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அடையாள அட்டை மற்றும் அரசு ஊழியர்களின் அடையாள அட்டை போன்ற ஏதேனும் ஒன்றின் ஒரிஜினலை வங்கி கேஷியரிடம் காண்பித்த பிறகே, புதிய ரூபாய் தாள்கள் வழங்கப்படுகின்றன. குடும்ப செலவுக்கும், அன்றாட தேவைகளுக்காகவும் கையிலிருக்கும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் கால்கடுக்க காத்திருக்கின்றனர்.

500,1000 ரூபாய் விவகாரம் இரு வாரங்களுக்கு முன்பே பாஜகவினருக்கு தெரியும். ஆதாரம் இதோ!

Journalist broke story about currency demonetisation a fortnight back கான்பூர்: பிரதமர் மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக் ரகசியத்தை தெரிந்து கொண்டு அவர் அறிவிப்பதற்கு 2 வாரங்களுக்கு முன்பே ஒரு பத்திரிகையாளர் செய்தி வெளியிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் பிரஜேஷ் துபே. தைனிக் ஜாக்ரன் இந்தி நாளிதழில் பணியாற்றி வருகிறார். கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டு புதிதாக 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படும் என கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதியே செய்தி வெளியிட்டுள்ளார். 2000 ரூபாய் நோட்டுகள் குறித்து பிரதமர் மோடியே நவம்பர் 8ம் தேதி இரவு 8 மணி 20 நிமிடங்களுக்கு தான் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் பிரஜேஷ் 13 நாட்களுக்கு முன்பே மோடியின் ரகசியத்தை ஊர், உலகிற்கு எல்லாம் தெரிவித்துவிட்டார்.
நம்பத் தகுந்த நபர்களிடம் இருந்து தனக்கு தகவல் கிடைத்து செய்தி வெளியிட்டதாகவும், அந்த நபர்களின் பெயர்களை தெரிவிப்பது பத்திரிகை தர்மம் அல்ல என்றும் பிரஜேஷ் தெரிவித்துள்ளார்.

அழகிரி கலைஞர் சந்திப்பு ..தஞ்சை, அரவக்குறிச்சி,திருப்பரங்குன்றம் இடைதேர்தல் பற்றியும் பேசினார்கள்

ஒவ்வாமை காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் திமுக தலைவர் கருணாநிதி வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். அண்மையில் மு.க.அழகிரி, மூன்று முறை கோபாலபுரம் வந்து கருணாநிதியை நேரில் சந்தித்து உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார். நேற்று (11/11/2016) மீண்டும் கோபாலபுரம் வந்த அழகிரி, கருணாநிதியை சந்தித்து பேசினார். அண்மையில் வெளிநாடு சென்றிருந்த மு.க.அழகிரி, நேற்று சென்னை திரும்பினார். பின்னர் உடனடியாக, கோபாலபுரம் சென்ற அழகிரி, அங்கு கருணாநிதியை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். அதோடு, குடும்ப விஷயங்கள் குறித்தும் பேசிவிட்டு, தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நிலவரம் குறித்தும் பேசி ஆலோசனை செய்தார். மேலும், மூன்று தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் தனது ஆதரவாளர்கள் யாரும் திமுக வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட மாட்டார்கள் என்று கருணாநிதியிடம் உறுதியளித்திருக்கிறார்.

மைக்கல் குன்ஹா கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு!

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டு சிறைத்தண்டனை வழங்கிய சொத்துக்குவிப்பு வழக்கின் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா கர்நாடக மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக பணி நியமனம் செய்யப்பட்டார்.
1985ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் மங்களூரு நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞராக தன் பணியை தொடங்கிய குன்ஹா, 2002ஆம் ஆண்டில் நீதிபதிகள் தேர்வில் வெற்றி பெற்று பெல்காம் நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார். 2004ஆம் ஆண்டில் குன்ஹா, ஹூப்ளி மாவட்ட நீதிபதியாக இருந்தபோது ஹூப்ளி இத்கா மைதான கொடியேற்றிய வழக்கு தொடர்பாக அப்போதைய மத்தியப்பிரதேச முதலைமைச்சர் உமாபாரதிக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்தார். இதனால் உமாபாரதி முதலமைச்சர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது 2009இல் கார்வா மாவட்ட நீதிபதியாக அமர்த்தப்பட்டார். பின்னர் பெங்களூரு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி ஆனார்.

முதல்வரால் இயற்கையாக சுவாசிக்க முடியவில்லை! ஆண்டவனே உந்தன் பாதங்களை நாம் கண்ணீரால் ..

கடந்த 50 நாட்களுக்கும் மேலாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் தனி வார்டுக்கு, அதாவது வி.ஐ.பி வார்டுக்கு மாற்றப்பட்டார் என்னும் நிலையில் மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
கடுமையான நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல்வரை சுவாசிக்க அவரது தொண்டையில் ஆபரேஷன் செய்து சுவாசக்குழாய்க்குள் செயற்கை சுவாசக்குழாய் பொருத்தி ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. ட்ரஸ்கியாஸ்டமி என்னும் முறையின் மூலம் அளிக்கப்படும் இந்த சிகிச்சை ஒரு உயிர்காக்கும் சிகிச்சையாகும். மாதக்கணக்காக இந்த சிகிச்சையே தொடர்ந்து வந்தநிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் அவரை செயற்கை சுவாசக்கருவியின் உதவியின்றி இயற்கையாக சுவாசிக்க வைக்கும் முயற்சிகளை மருத்துவர்கள் முன்னெடுத்தார்கள்.

அருண் ஜெட்லி : நிலமை சரியாக 3 வாரம் ஆகலாம்! ம்ம்ம் அப்போலோகாரனும் இதைத்தானே சொன்னான்/

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததிலிருந்து, இந்தியா முழுவதும் நிதி நெருக்கடியும் பணப் பரிவர்த்தனையில் மாபெரும் முடக்கமும் ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில், இன்று மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேலுடன் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆலோசனை நடத்தியிருக்கிறார். அதன்பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். “நாட்டில் கறுப்புப் பணத்தை ஒழிக்க மத்திய அரசு மாபெரும் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் ஆரம்பத்தில் சில நாட்களுக்கு சில சிரமங்கள் ஏற்படத்தான் செய்யும். நாட்டில் நிலவும் பணப் பரிவர்த்தனை மற்றும் நிதி நெருக்கடியை மத்திய அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளின் ஊழியர்கள் காலை முதல் இரவு வரை பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

மோடி ஒழித்தது யாரை? வறியமக்களின் சேமிப்பை குலைத்துவிட்டார்... அடித்தட்டு மக்களை தெருவுக்கு துரத்தி விட்டார்


கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகக்கூறி மோடி, கடந்த 8ஆம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். அன்றிலிருந்து இன்று நாடுமுழுக்க மக்களிடம் எழுந்த பதட்டம் இன்னும் அடங்கவில்லை. தங்களிடம் இருக்கும் சில ஆயிரம் ரூபாய்களை மாற்ற மக்கள் வங்கிகளுக்கும் ஏ.டி.எம். மையங்களுக்கும் படையெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், சில்லறை தட்டுப்பாட்டால் சின்னச்சின்ன செலவுகள்கூட செய்ய முடியவில்லை. பெருந்தொகை இல்லாத காரணத்தால் திருமணங்கள், சடங்குகள் உள்ளிட்ட சுபகாரியங்களை நடத்த முடியாமல் மக்கள் திண்டாடி வருகிறார்கள். காலையில் வங்கிகள் திறந்த சில மணி நேரங்களில் பணம் தீர்ந்துவிடுவதால் மக்கள் ஏமாற்றமடைகின்றனர். ஏ.டி.எம். நிலையங்களோ அதைவிட மோசம். எப்போது பணம் நிரப்புகிறார்கள் என்றே தெரியவில்லை. ஆனால் நிரப்பியதும் தீர்ந்துவிடுகிறது. இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை ஏ.டி.எம். மெஷின்களில் நிரப்ப முடியவில்லை. காரணம் ATM CASH LOADER CASETTE-இல் அது பொருந்தவில்லையாம். இனி, புதிய CASETTE-கள் வந்தபின்தான் அது சாத்தியமாம். 500 ரூபாய் நோட்டுகள் இன்னும் புழக்கத்துக்கு வராதநிலையில் வெறும் நூறு ரூபாய்களை நிரப்பியே ஏ.டி.எம்-கள் ஓடுகின்றன. ஆனால் ஏ.டி.எம்-களுக்குத் தேவையான நூறு ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அனுப்பாதநிலையில் இது இன்னுமொரு நெருக்கடியாக உருவாகியுள்ளது.

ஸ்டேட் பாங்கை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்.. உபி...பரிவர்த்தனை நிறுத்தப்பட்டதால் மக்கள் கோபம்

மொராதாபாத்: உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தின் கத்கார் என்ற
இடத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியை உள்ளூர் பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். 4  மணிக்கு வங்கியில் பரிவர்த்தணைகள் நிறுத்தப்பட்டதால் கோபமடைந்த மக்கள் வங்கியில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.dinakaran.com

உபியில் வாக்காளர்களுக்கு கருப்பு பணம் தாராளமாக விநியோகம் ..

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடி யின் அறிவிப்பை,
உ.பி. அரசியல் வாதிகள் முறியடித்துள்ளனர். இவர்கள் தேர்தலுக்காக வைத் திருந்த கறுப்புப் பணத்தை உடனே தங்கள் தொகுதிகளில் விநியோகித்துள்ளனர்.
உ.பி.யில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இத் தேர்தலில் செலவிடுவதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருந்தனர். இந்நிலையில் பிரதமர் மோடியின் திடீர் அறிவிப்புக்கு மறுநாள் கிழக்கு மற்றும் மேற்கு உ.பி.யில் அரசியல்வாதிகள் சிலர் தங்கள் தொகுதிவாசிகளிடம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை விநி யோகித்துள்ளனர். இவற்றை குறி பிட்ட நபரிடம் ரூ.5000 முதல் 15,000 வரை என அளித்துள்ள னர். இவர்கள் தங்கள் பகுதிவாசி களுடன் இப்பணத்தை பகிர்ந்து கொண்டதாக தகவல் வெளியாகி யுள்ளது.

கெஜ்ரிவால்:பிரமாண்ட ஊழல் ...3 மாதங்களில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் வங்கிகளில் டெபாசிட் செயப்பட்டுள்ளது !

மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது: அரவிநித் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு
கடந்த மூன்று மாதங்களில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு அதிக தொகையை வங்கிகளில் திடீரென செலுத்தியது யார் என டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ரூபாய் 500, 1000 செல்லாது என அறிவித்ததில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.நக்கீரன்.இன்

புதிய நோட்டுகளில் தேவ நகரி எழுத்துகள்.. அது என்ன மொழி? :சமஸ்கிருதத்துக்கு எழுத்துவடிவம் கிடையாது 6 ஆம் நூற்றாண்டில் தேவநாகரி எழுத்து பாவனைக்கு வந்தது

இளங்கோ சிவன்: தேவநாகரி எழுத்தில் புதிய ரூபாய் நோட்டுகளில் எண்கள்
அச்சடிக்கப்பட்டுள்ளன என்று சொல்லப்படுகிறது. அது என்ன தேவ நாகரி எழுத்து. தேவர்கள் எப்பொழுது எழுத்தை கண்டுபிடித்தார்கள். சரி இல்லையெனில் ஏன் அந்த எழுத்துக்கு அவ்வாறு பெயர் கொடுக்கப்பட்டது.
கி.பி. 6 ஆம் நூற்றாண்டிலிருந்து இந்தியாவின் வடபகுதியில் சமஸ்கிருத மொழியை எழுத வழங்கப்பட்ட ஒரு வகை எழுத்துகளை நாகரி என்பர். இதை ‘தேவநாகரி’ என்றும் அழைப்பர். கி.பி 8க்குப் பிறகே இவ்வெழுத்து வடபுலப்பகுதியில் சிறப்பு பெற்றது. தமிழகத்திலும் இவ்வெழுத்து புழக்கத்தில் இருந்தது.
சமஸ்கிருதம் எப்பொழுது எழுதப்பட்டது என்று பார்த்தால் அதற்கு எழுத்துவடிவமே இல்லை என்பதே உண்மை. இதனாலேயே அது எழுதாக் கிளவி என்று கூறப்பட்டது. இன்று நாம் சமஸ்கிருதத்தை தேவநாகரி என்றும், கிரந்தம் என்றும் இரண்டு எழுத்து வடிவில் எழுதிப் படிக்கிறோம். இது இரவல் வாங்கியது! சமஸ்கிருதத்திற்குச் சொந்தமில்லாதது.

வெளியேற்றப்பட்ட கட்ஜு: நீதிமன்றத்தில் நடந்தது என்ன? .. ஊழல் நிறைந்த நீதிபதிகள் ..சௌமியாவுக்கு நீதி கிடைக்காது !.


முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி,
உச்சநீதிமன்றத்தில் இருந்து காவலர்களால வெளியேற்றப்பட்டது
வழக்கறிஞர்களிடையேயும், சமூக ஆர்வலர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.
நேற்று அடர்நீல நிற கோட் ஷூட்டும் சிகப்பு நிற டையும் கட்டிய நிலையில் கம்பீரமாக முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன் ஆஜரானார்.
2011ஆம் ஆண்டு கேரள மாநிலத்தைச் சேர்ந்த சவுமியா என்ற பெண் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது விருதாச்சலத்தைச் சார்ந்த கோவிந்தசாமி என்பவரால் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்பட்டது.

கெஜ்ரிவால்: நோட்டு செல்லாது.. பாஜக-வினருக்கு ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும்...


ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாமல் போகும் என்பது பாஜக-வுக்கும் அவர்களது நண்பர்களுக்கும் முன்னதாகவே தெரியும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையில் அடுத்த கட்டமாக, ரூ.500, ரூ.1000 நோட்டுகளை புழக்கத்திலிருந்து திரும்பப்பெறுவதாகவும் மக்கள், தங்களிடமுள்ள இந்த ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக புதிய நோட்டுகளை அஞ்சல் நிலையங்கள், வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் பிரதமர் அறிவித்தார்.
இது, பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்களை அளித்தாலும், நாட்டு நலன் கருதி பல்வேறு தரப்பினரும் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.  (அது ராஜதந்திரமுங்கோ . அவிங்க லாபத்துக்கு எதுவும் பண்ணலாம் விபசாரம் உள்பட .. மனு சாஸ்திரத்தில்...?)

15-20 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் சூப்பர் பவர்: ராஜ்நாத்சிங் ( ஆளுக்கு ஒரு பிளேன் வச்சிருப்பாய்ங்க)

லக்னோ: அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளில் இந்தியா பொருளாதாரத்தில் சூப்பர்
பவராக மாறும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.  உ.பி., மாநிலம் லக்னோவில் நடைபெற்ற வர்த்தகர்கள் சங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையால் இந்தியா 15 முதல் 20 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் சூப்பர் பவராக மாறும். உலக பொருளாதாரத்தில் இந்தியா வேகமான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.9 சதவீதமாக உள்ளது. அடுத்து வரும் ஆண்டுகளில் இவை இரட்டை எண் இலக்கை அடையும் என்ற நம்பிக்கை உள்ளது.    இவருக்கு இந்தியாவே அதானியும் அம்பானியும் தானே.... குஜராத் கும்பல் என்னவெல்லாம் பேசி மக்களை ஏமாற்றுது பாரு...

ராமேஸ்வரம் மீன் வியாபாரம் நின்றது ... ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ...மீனவர்கள் வேலை நிறுத்தம்.

ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் ஒழிப்பு காரணமாக ராமேசுவரத்தில் மீன்களை கொள்முதல் செய்ய வியாபாரிகள் வரவில்லை. இதனால் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட ராமேசுவரம் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். ராமேசுவரம் துறைமுகப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகள் ராமேசுவரம்:; ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கடல்பகுதியில் இருந்து ஒரு நாளைக்கு 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 3000 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர். மேலும், மீன்களை தரம் பிரிப்பது, பதப்படுத்துவது, சுமை தூக்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 10,000 மீனவத் தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள்.

கனிமொழி MP : மீதேன் திட்டம் ரத்து செய்யப்படுவது ஆறுதலை தருகிறது

"மீத்தேன் திட்டம் ரத்து: மத்திய அரசின் நடவடிக்கை ஆறுதலை தருகிறது - இது குறித்து கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
“காவிரி டெல்டாவில் மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்திருப்பதாக வெளியான தகவல் மகிழ்ச்சியைத் தருகிறது. மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்பட்டதை வரவேற்கிறேன். இத்திட்டத்தின் விளைவாக காவிரி டெல்டா விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி பாராளுமன்றத்தில் வலியுறுத்தி மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்படவேண்டும் என்று குரல் கொடுத்துள்ளேன். மேலும் டெல்டா விவசாயிகளின் வலிமையான போராட்டமும் மத்திய அரசின் இந்த முடிவுக்குக் காரணமாக அமைந்திருக்கிறது.கர்நாடகம் தமிழகத்துக்கு உரிய காவிரி தண்ணீரை தராமல் தொடர்ந்து முரண்டு பிடித்து, அதன் மூலம் டெல்டா விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில் மீத்தேன் திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு முடிவெடுத்துள்ளது ஆறுதலை தருகிறது. மீத்தேன் திட்டத்துக்கு எதிராக போராடிய விவசாய அமைப்புப் பிரதிநிதிகளை டெல்லி அழைத்துச் சென்று பெட்ரோலிய மந்திரியை சந்திக்க வைத்து மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்படவேண்டும் என்று போராடியவர் கனிமொழி என்பது குறிப்பிடத்தக்கது

அ.தி.மு.க.,வினரிடம் ரூ.50, ரூ.100 தாராளம் :டாஸ்மாக் மற்றும் அரசு நிறுவனங்கள் வசூல் வாரி சுருட்டல்!

கரூர்: மூன்று தொகுதி தேர்தல் பணப்பட்டு வாடாவுக்காக, அரசுத்துறை நிறுவனங்களில், வசூலான, 50, 100 ரூபாய் நோட்டுகளை, அ.தி.மு.க.,வினர் வாங்கி பதுக்கியதாக புகார் எழுந்து உள்ளது. திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு தேர்தல் நடப்பதால், பணப் பட்டுவாடா உள்ளிட்ட செலவுகளை சரிகட்ட, பிரதமர் மோடியின் நடவடிக்கையால் ஆளுங்கட்சியினர் திண்டாடினர். கடந்த, 8ல், நள்ளிரவு முதல், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, மத்திய அரசு அறிவித்ததால், சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டது. தேர்தல் செலவுக்காக, 100, 50 ரூபாய் கிடைக்காமல், அ.தி.மு.க., பொறுப் பாளர்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர். இதற்கிடையே, நேற்று முதல், அ.தி.மு.க., தரப்பில், 100, 50 ரூபாய் நோட்டுகள் தாராளமாக பட்டு வாடாசெய்யப்படுகிறது. தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், நோட்டுகள் இல்லாமல் தடுமாறும் நிலையில், அ.தி.மு.க.,வினருக்கு மட்டும் எப்படி கிடைக்கிறது என, அவர்கள் புலம்பி வருகின்றனர்.

அமைச்சர் வீரமணி : அம்மாவுக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் இருக்கதா? இன்றைக்கு 100 கோடி என்பது சாதாரணம்.

அரசு அதிகாரி முத்துகுமாரசாமி கொலை வழக்கில் எங்க அம்மாவுக்கு
தெரியாம எதுவும் நடக்காது என்று timesofindia இடம் சொன்ன அன்றைய வாக்குமூல ஸ்பெசலிஸ்ட் .,கொலை குற்றம்சாட்டப்பட்ட Accused 1 அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது சார்ஜ்சீட் கூட போடாமல் ஜெயலலிதா அன்றைக்கு விடுவித்த தெம்பில் ... இன்றைக்கு 100 கோடி சொத்து என்பது சர்வசாதாரணம்........ எங்க நகரத்தலைவர் அமுதாவுக்கு நூறு கோடி சொத்து இருக்கு...... பாலசுப்ரமணி, மதியழகன்னு எல்லாருக்கும் பல கோடி சொத்து இருக்கு...... எங்களுக்கே இருக்கும் போது அம்மாவுக்கு ஆயிரகணக்கான கோடிகளில் சொத்து இருக்கக் கூடாதா.......என்று குடியாத்தம் ., வேலூர் #அதிமுக சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தில் #சொன்னவர் : மாண்புமிகு அமைச்சர் கே.சி.வீரமணி நண்டு கொளுத்தால் வலையில் தங்காது : #பழமொழி அம்மா அமைச்சர்கள் கோடிகளில் புரளும் வேளையில் நாக்கு தங்காது முகநூல் பதிவு சவேரா

வெள்ளி, 11 நவம்பர், 2016

ரூ.500, ரூ.1000 செல்லாது என்பதை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல் லாது என மத்திய நிதி அமைச்ச கம்
வெளியிட்டுள்ள அறிவிப் பாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்தியன் நேஷனல் லீக் மாநில பொதுச் செயலர் எம்.சீனிஅகமது உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் வாதிடும்போது, “முன்னேற்பாடு நடவடிக்கைகள் இல்லாமல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் பொதுமக்கள் சிரமத் துக்கு ஆளாகியுள்ளனர். புதிதாக 2000 ரூபாய் நோட்டு வெளியிட்டி ருப்பது இந்திய ரிசர்வ் வங்கி சட்டத் துக்கு விரோதமானது” என்றார். 

ஒரே நாளில் 3 லட்சத்துக்கு அதிகமானோர் மோடியின் முகநூலில் இருந்து விலகினர்.

நாடு முழுவதிலும் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக
பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி திடீர் அறிவிப்பு வெளியிட்டார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பிற்கு கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை என பலர் வரவேற்பு தெரிவித்திருந்தனர். அதேசமயம் கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. ஆனால் நடுத்தர வர்க்க மக்கள் மகிழ்ந்ததாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில் இந்த அறிவிப்பால் அதிருப்தி அடைந்த 3 லட்சத்துக்கு அதிகமானோர் ட்விட்டர் பக்கத்தில் மோடியை அன்ஃபாலோ செய்துள்ளனர். 2 கோடிக்கும் அதிகமானோர் மோடியை பிந்தொடர்ந்தாலும் ஒரே நாளில் 3 லட்சத்து 18 ஆயிரம் பேர் பின்வாங்கியது மோடி அரசின் முடிவுக்குக் கிடைத்த பின்னடைவாகவே கருதலாம். thetimestamil.com

சாதாரண மக்களுக்கு பொருளாதார அவசர நிலை; கருப்புப் பணக் குற்றவாளிகளுக்கு புதிய வாய்ப்புகள்

dipankar-batacதிபங்கர் பட்டாச்சார்யா
“தேசியப் பாதுகாப்பு“ குறித்தும் “பொறுப்பான ஊடகச் செயல்பாடு“ குறித்தும் NDTVக்கு பாடம் கற்பிப்பதற்காக, அந்தத் தொலைக்காட்சி ஒலிபரப்பை நிறுத்த வேண்டும் என்பதற்காகக் குறிக்கப்பட்ட நாள் நவம்பர் 9. நாடு முழுவதும் இந்த அறிவிக்கப்படாத அரசியல் நெருக்கடி நிலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தது. அரசு பின்வாங்கி தடையை நிறுத்திவைக்கும்படி ஆனது. மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டபோது நரேந்திர மோடி, ‘பொருளாதார அவசர நிலைக்கு‘ சற்றும் குறையாத ஒன்றுபற்றி அறிவிப்பு விடுத்திருக்கிறார். நவம்பர் 8 நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவை ஆகிப் போகின. ஒரே மரண அடியில், ரூபாய் 14 லட்சம் கோடி ரூபாய், அதாவது பணச் சுழற்சியின் பண மதிப்பில் 86 சதம், பயனற்றது ஆகிப் போனது.

ரூ.5.5 லட்சம் பணத்தை டெபாசிட் செய்ய சென்ற கேரள அரசு ஊழியர் கூட்ட நெரிசலில் சிக்கி சாவு

Man with Rs 5.5 lakh cash falls to death in Kerala
கன்னூர்: கேரள மாநிலம் திருவாங்கூர் பகுதியில் ரூ.5.5 லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்ய சென்ற நபர் நெரிசலில் சிக்கி மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பினராயி பகுதியை சேர்ந்த 48 வயதாகும் உன்னி, மின்வாரிய ஊழியராகும். இவர் தன்னிடமுள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் அடங்கிய சுமார் ரூ.5.5 லட்சத்துடன், திருவாங்கூர் நகரிலுள்ள திருவாங்கூர் ஸ்டேட் வங்கிக்கு சென்றுள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கிய அவர் 2வது மாடியிலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேபோல கேரளா மற்றும் மும்பையில் தலா ஒரு முதியவர், கியூவில் நின்று பணத்தை மாற்ற சென்றபோது, மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.tamiloneindia.com

பேராசிரியை நந்தினி சுந்தர் மீது கொலை வழக்கு – பா.ஜ.க பாசிசம் !


வினவு :ப
ழங்குடி மக்களின் மீதான அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் டெல்லி பல்கலைகழக பேராசிரியை நந்தினி சுந்தர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளது சத்தீஸ்கர் அரசு. அவருடன் சேர்த்து ஜே.என்.யூ பல்கலைகழக பேராசிரியை அர்ச்சனா பிரசாத், சமூக செயற்பாட்டாளர் விநித் திவாரி, சி.பி.ஐ கட்சியின் மாநிலத்தலைவர் பரடே ஆகியோர் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளது சத்தீஸ்கர் அரசு.
பழங்குடிமக்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றிவிட்டு கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பதற்கு உருவாக்கப்பட்ட சால்வாஜூடும் என்ற கொலைகார கூலிப்படையை அம்பலப்படுத்தியவர் நந்தினி சுந்தர். இவர் தொடுத்த வழக்கில் தான் சல்வா ஜூடும் எனும் அரசின் கூலிப்படையையும், சிறப்பு காவல் படை என்ற பெயரில் பழங்குடியினரை கூலிப்படையாக பயன்படுத்தப்படுவதை கலைக்க உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

ஜப்பானில் மோடி :கருப்பு பணம் பற்றி கழிவறையிலிருந்து சிந்தித்தபோது கணநேரத்தில் தோன்றியதுதான் இந்த மகா சிந்தனை

MODI 1
ட்டு போட்ட மக்களிடம் நோட்டு செல்லாது, கொஞ்சம் சிரமம்தான் என்று வாழ்த்து தெரிவித்த கையோடு ஜப்பானுக்கு விமானமேறிவிட்டார் திருவாளர் மோடி. அவருக்கோ, அவரது கூட்டத்திற்கோ செல்லாத நோட்டெல்லாம் பிரச்சினையில்லை. கார்டு வைத்துக் கொண்டோ இல்லை அதிகாரத்தை காட்டிக் கொண்டோ அடிப்படை மற்றும் ஆடம்பரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக அரசு பயங்கரமாக பல்வேறு முறைகளில் யோசித்திருக்காதா, இதெல்லாம் பிரச்சினையா என்று பட்டையுடன் சின்னத்திரையில் தோன்றும் காவிக்கறை சமூக ஆர்வலர்கள் எக்காளம் செய்கிறார்கள்.

நடிகை சபர்னா தற்கொலை ..சொந்த பந்தம் தொடரில் நடித்தவர்!

TV Actress Sabarna commits Suicide TV Actress Sabarna commits Suicide சென்னை: சொந்த பந்தம் டிவி சீரியல் நடிகை சபர்ணா மதுராவயலில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, சன்டிவியில் சீரியல்களில் நடித்தவர் சபர்ணா. சொந்த பந்தம் தொடரில் வில்லியாக நடித்து பிரபலமடைந்த சபர்ணாவிற்கு சினிமா வாய்ப்புகள் வரவே சீரியலில் நடிப்பதில் இருந்து விலகினார். கோவையைச் சேர்ந்தவர் சபர்ணா, இவர் படிக்காதவன், பிரிவோம் சந்திப்போம், காளை, பூஜை உள்பட பல திரைப்படங்களில் ஹீரோயின் தோழியாக நடித்துள்ளார். காதலில் விழுந்த அவருக்கு காதல் தோல்வி ஏற்பட்டதாக அவரே ஒருமுறை பேட்டியில் கூறியுள்ளார்.

சென்னையில் 100 குறும்படங்கள் திரையிடல்!

minnambalam.com :தமிழ் சினிமாவின் நூற்றாண்டைக் கொண்டாடும் விதமாக, தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமைகளுடனான விவாதம், பயிற்சி பட்டறை, சுயாதீன திரைப்படங்கள் திரையிடல் என ஆக்கப்பூர்வமான பல பணிகளை மேற்கொண்டு வருகிறது **தமிழ்ஸ்டுடியோ** என்ற மாற்று சினிமாவுக்கான இயக்கம். தொடர்ச்சியாகத் தமிழில் வெளிவந்த **100 குறும்படங்களை திரையிடும் நிகழ்வு** வரும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வடபழனியில் உள்ள **ப்யூர் சினிமா புத்தக்கடையில்** நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா கடந்த மாதம் நடைபெற்றது. அவ்விழாவில் எடிட்டர் பி.லெனின் இயக்கிய தமிழின் மிக முக்கிய குறும்படமான **நாக் அவுட்** உள்ளிட்ட நான்கு குறும்படங்கள் திரையிடப்பட்டன.

புது ரூபாய் நோட்டுகள் மாற்றம் - 6 பேர் உயிரிழப்பு! மேலும் பலர் கவலைக்கிடம்..

மோடி அறிவித்த ரூபாய் நோட்டு திடீர் அறிவிப்பால் நாடே அலைமோதுகிறது. இந்நிலையில், புதிய ரூபாய் நோட்டுகளை மாற்ற செல்லும் மக்கள் அதிர்ச்சியில் உயிரிழந்து வருகின்றனர். இரண்டு நாட்களில் ஆறு பேர் இறந்துள்ளனர்.
கடந்த 8-ஆம் தேதி இரவு பிரதமர் மோடி ’இரவு முதல் 500 மற்றும் 1000 ருபாய் நோட்டுகள் செல்லாது’ என திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து, வங்கிகள் மற்றும் ஏடிஎம் மூலம் புதிய ரூபாய் நோட்டுகள் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பொதுமக்கள் ஏடிஎம் மற்றும் வங்கிகளுக்கு சென்று பல மணிநேரம் கூட்ட நெரிசலில் நின்று பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகின்றனர். இதில், மக்களுக்கு சரியாக பணம் கிடைக்கவில்லை என்றாலும் கூட்ட நெரிசலால் அதிகளவு பாதிப்பு ஏற்படுகிறது.

தினக்கூலிகளுக்கு எதிரான போர்: ஆய்வாளர்கள் கருத்து!


minnambalam.com : கடந்த 8ஆம் தேதி செவ்வாய் இரவு மத்திய அரசு, ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. ‘கறுப்புப்பணத்தை முடக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை’ என்று அரசு மீண்டும் மீண்டும் சொன்னாலும் இந்தப் பொருளாதார நடவடிக்கை என்ன விதமான பின் விளைவுகளை இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும். இதன் சாதக, பாதகங்கள் என்ன என்பதை அலசுகிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
சி.பி.சந்திரசேகர், பொருளாதார பேராசிரியர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புது டெல்லி:
இந்திய பிரதமர், ஆச்சர்யமளிக்கும் விதமாக ரூபாய் 500, 1000 தாள்கள் இனி செல்லுபடியாகாது என அறிவித்திருக்கிறார். இந்த முறையை அமல்படுத்த, ஏ.டி.எம்-கள் இரண்டு நாட்களும், வங்கிகள் இரு நாட்களும் மூடப்படும். இது பயங்கரவாதிகளுக்கான நிதி உதவி, கறுப்புப்பணம், சமூக விரோத செயல்களுக்கு கறுப்புப்பணம் பயன்படுத்தப்படுவது போன்ற காரியங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையாக சொல்லப்படுகிறது. இது உண்மையோ இல்லையோ… ஆனால், இது நிச்சயம் பொருளாதார இயங்கு முறையில் பிரச்னையை உருவாக்கும்.

புதிய ரூபாயில் சம்ஸ்கிருத எண்கள்: பின்வாசல் வழியே இந்தி! கொல்லைப்புற வழியாக நுழையும் பார்ப்பனீயம்!

> கவின் ஆதித்யன் மற்றும் சஹில் மாதூர்
கடந்த செவ்வாய் (8.11.16) இரவு பிரதமர் நரேந்திர மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்று அறிவித்த நிமிடத்திலிருந்து இதுவரை இதுகுறித்து அளவுக்கதிகமாக எழுதியாயிற்று, விவாதித்தாயிற்று. ஆனாலும், புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டு மட்டும் எப்படியோ ஆய்வாளர்களிடமிருந்தும் விமர்சனர்களிடமிருந்தும் தப்பிவிட்டது. அறிவிப்பு வெளியான கணம் முதல் மக்கள் நூறு ரூபாய் நோட்டுகளை மீட்கவும், தங்களிடம் உள்ள ரூபாய் ஆயிரம் மற்றும் ஐநூறு நோட்டுகளை செலுத்திவிடவும் ஏடிஎம்களை நோக்கி ஓடுகிறார்கள். அரசின் இந்த முடிவின் தாக்கங்கள் குறித்து விவாதிக்கிறார்கள். இந்த ஒட்டுமொத்த பிரச்னையையும் சமூக வலைதளங்கள் ஏளனப் புன்னகையோடு நையாண்டி செய்தது. அரசியல்வாதிகள் சிலர் புகழ்ந்தார்கள், சிலர் விமர்சித்தார்கள். ஆனால், புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை மட்டும் கவனிக்கத் தவறிவிட்டார்கள். அது... புதிய ரூபாய் நோட்டில் இடம்பெற்றுள்ள தேவநாகரி எண்கள்.

தேசிய கல்விக் கொள்கை - அதிமுக, திமுக கடும் எதிர்ப்பு!


மின்னம்பலம்.காம் : புதிய தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக நிபுணர் குழு அளித்துள்ள அறிக்கையின் பல்வேறு அம்சங்களுக்கு அதிமுக, திமுக கட்சிகளின் சார்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அமைச்சரவை முன்னாள் செயலர் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் தயாரித்துள்ள அறிக்கை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளை அறியும் கூட்டம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற அதிமுக குழு தலைவரும், திருவள்ளூர் தொகுதி மக்களவை உறுப்பினருமான டாக்டர் வேணுகோபால், மாநிலங்களவை திமுக உறுப்பினர்கள் திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கலந்து கொண்டு பேசியபோது கூறியதாவது… பி.வேணுகோபால் (அதிமுக): “மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் பல முரண்பாடுகள் உள்ளன.

தமிழக முதல்வரின் அப்போலோ இன்றைய எபிசொட்

ஜெயலலிதாவின் உடல்நிலை விஷயத்தில் சசிகலா இப்போதைக்கு எந்த ரிஸ்க்கையும் எடுக்க விரும்பவில்லை' என அப்பல்லோவில் நடப்பதைப் பற்றி நம்மிடம் மனம் திறந்தார் அ.தி.மு.க.வின் முக்கியமான தலைவர் ஒருவர்.""ஜெ. உத்தரவுகளை பிறப்பிக்கிறார் என நாங்கள் கீறல் விழுந்த ரிக்கார்டு போல சொல்லி வந்ததெல்லாம் உண்மையில்லை. ஜெ.வுக்கு நுரையீரலில் வலுவான தொற்று கெட்ட சளியாக நீர் கோர்த்து இதயப் பகுதிகளில் பாய்ந்தது உண்மை. நுரையீரலிலும் இதயத்தின் தசை பகுதிகளி லும் உருவான நோய்த்தொற்று மிக மோசமாக ஜெ.வை பாதித்தது. அவருக்கு இதயத்துடிப்பை வேகமாக்கும் பேஸ்மேக்கரும், தொண்டையின் இடது பாகத்தின் வழியாக டிராக்கோஸ்டமி எனும் மூச்சுக்குழாய் பொருத்தப்பட்டு... அதன் வழியே வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாசக்கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டதும் உண்மை.மிகுந்த வலியைத் தரும் தொண்டை, மூச்சுக் குழாய்களை ஜெ. தனது இடது கையால் அகற்றக்கூடும் என்பதற்காக மயக்க மருந்துகளால் அவரது இடது கை முழுவதுமாக செயலிழக்க வைக்கப்பட்டது. முழுவதும் மயக்க நிலையிலேயே வைக்கப்பட்டிருந்த ஜெ.வுக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்டு பேல் மூன்று விதமான நோய் எதிர்ப்பு மருந்துகளை தனித்தனியாகக் கொடுத்தார்.

தமிழ் சினிமா ஹீரோக்களோட சம்பளம் பாலிவுட் ரேஞ்சுக்கு இருப்ப தற்கு காரணமே கறுப்பு பணம்தான்

ஹலோ தலைவரே, நேத்து ராத்திரியே, உங்களைத் தொடர்புகொள்ள நினைச்சேன்.  ஆனா, பாக்கெட்ல இருந்த ஒத்தை ஐநூறுரூபா நோட்டை மாத்துற துக்கே, பெரும்பாடு பட வேண்டிய தாயிடுச்சு.''’
""தமிழ்நாடு உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்தியாவே அப்படித்தான்ப்பா தவியா தவிச்சிது. 500 ரூபா, 1000 ரூபா நோட்டுக்கள் செல்லாதுன்னு அதிரடி அறிவிப்பு வெளியானதால்,  தமிழக மக்கள் அன்னைக்கு இரவு பூராவும் அதிர்ச்சியோட அலைபாய்ஞ்சாங்க. அந்த நேரத்தில், மாநில அரசுத் தரப்பிலிருந்து நடவடிக்கையும் இல்லை. மக்களுக்கு ஆறுதலா ஒரு அறிக்கையும்கூட வரலையே?''’""இதுதொடர்பா கோட்டையில் விசாரிச்சேங்க தலைவரே, டெல்லியில் 8-ந் தேதி மாலையில் கூடிய மத்திய மந்திரிசபைக் கூட்டத்தில்தான், மோடியின் இந்த அதிரடி கரன்ஸிப் பாலிஸி, பாஸாகியிருக்கு. கூட்டம் முடிஞ்சதுமே, மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளரான சக்தி கந்ததாஸ், வெளியில் வந்து, தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகனராவைத் தொடர்புகொண்டு, இதுபற்றித் தகவல் சொல்லி யிருக்கார்.

மோடியை புகழ்வதால் ரஜினி, புனிதர் ஆகிவிட்டாரா?' -சீறும் சீமான்

புதிய ரூபாய் நோட்டுகளைப் பெறுவதற்காக, வங்கிகளில் கூட்டம் அலைமோதுகிறது. ' பணத்தை மாற்ற முடியாமல் ஏழை மக்கள் வங்கி வாசல்களில் திண்டாடுகின்றனர். எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் சென்றுவிட்டார் பிரதமர் மோடி' எனக் கொதிக்கிறார் சீமான்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய 500 ரூபாய் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்குள் வந்துவிட்டன. ' வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் செயல்படும்' என அரசு அறிவித்துள்ளது. 'பழைய நோட்டுகள் செல்லாது' என்ற அறிவிப்பின் அச்சத்தில் இருந்து மக்கள் இன்னமும் மீளவில்லை. " நாடு முழுவதும் மக்கள் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் ஜப்பான் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார் பிரதமர் மோடி. அம்பானியும் அதானியுமா வங்கியில் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்?" எனக் கொந்தளிக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். தொடர்ந்து நம்மிடம்,
" புதிய ரூபாய் நோட்டுகளில் சமஸ்கிருதம் இடம்பிடித்திருக்கிறது. காந்தி படம் நடுவில் வந்திருக்கிறது. கூடவே பின்பக்கத்தில் காவிக் கொடியைப் பதித்துவிட்டார்கள். இதைத் தவிர வேறு என்ன சாதனை நிகழ்ந்துவிட்டது?

ரூபாய் நோட்டுக்கள் அறிவிப்பை ரிசேர்வ் வங்கி ஆளுனர்தான் வெளியிட முடியும், மோடிக்கு அந்த அதிகாரம் இல்லை .. RTI மூலம் வழக்கறிஞர் கேள்வி.

தற்போது புழக்கத்தில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனவும் கையில் உள்ள அந்த பணத்தை வங்கியில் கொடுத்து புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் பெறலாம் என பிரதமர் மோடி 8-ஆம் தேதி இரவு அறிவித்தார்.இந்த அறிவிப்புக்கு வரவேற்பும், எதிர்ப்பும் சேர்ந்தே வருகின்றன. பிரதமர் மோடியின் இந்த திடீர் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் போதிய கால அவகாசம் தரவில்லை என குற்றம் சாட்டினர்.";மேலும் இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கியின் கவர்னர் தான் அறிவிக்க முடியும், பிரதமர் மோடி இதனை அறிவித்தது முறையல்ல என விமர்சிக்கப்பட்டது. இதனையடுத்து நெல்லையில் உள்ள பிரம்மா என்ற வழக்கறிஞர் ஆர்.டி.ஐ. மூலம் பல்வேறு கேள்விகளை கேட்டு, பிரதமர் மோடிக்கு குடைச்சலை ஏற்படுத்தியுள்ளார்.";;அதன் விவரம் கீழே:- ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் எந்த அடிப்படையில், எந்த சட்டத்தின் கீழ் அறிவித்துள்ளார் என்பதன் விவரம் தர வேண்டும். ரூபாய் நோட்டுக்களானது ரிசர்வ் வங்கி கவர்னரால் கையொப்பமிட்டு நாட்டு மக்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு வழங்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் அறிவிப்பதற்கு எந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டது அதன் விவரம் தர வேண்டும்.<

வங்கியில் உள்ள லாக்கர்கள்தான் மோடியின் அடுத்த குறி! 600 கிராமுக்கு மேல் நகைகள் இருந்தால் வரி அறவிடப்படும் ?

மூன்று சாவிகள் கருப்புப் பண ஒழிப்பில் அடுத்த கட்டமாக பேங்க் லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்படும் நகைகள் 600 கிராமுக்கு மேல் இருந்தால், அதற்கு முறையான ஆவணங்கள் காண்பிக்கப்பட வேண்டும். இல்லையெனில் வரி விதிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
600 கிராமுக்கு மேல் நகை இருந்தால் வரி டெல்லி: 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்து ஒரே இரவில் அனைவரையும் அதிர வைத்து விட்ட பிரதமர் நரேந்திர மோடி அடுத்தடுத்த அதிரடிக்குத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஒரே இரவில் அதிரடியாக 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி அதிரடியாக வெளியிட்ட அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் பீதியை கிளப்பி யுள்ளது. இது முதல் கட்டம் என்றும் கருப்புப் பணம் ஒழிப்புதொடர்பாக மோடி மேலும் பல திட்டங்களை வைத்துள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது. அந்த வகையில் கருப்புப் பண ஒழிப்பில் அடுத்த கட்டமாக பேங்க் லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்படும் நகைகள் 600 கிராமுக்கு மேல் இருந்தால், அதற்கு முறையான ஆவணங்கள் காண்பிக்கப்பட வேண்டும். இல்லையெனில் வரி விதிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில்.. ஜெர்மன் தூதரகத்தில் தலீபான் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல்


மாசார் ஐ சரீப்,   ஆப்கானிஸ்தானில் உள்ள ஜெர்மன் நாட்டுத் தூதரகம் மீது நிகழ்த்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் , 2 பேர் பலியாகினர். ஜெர்மன் தூதரகத்தின் சுற்றுச்சுவர் மீது வெடி குண்டு நிரப்பிய காரை மோதச்செய்து பயங்கரவாதிகள் இந்த தாக்குதல் சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர். தாக்குதல் நடத்தியதும் அருகாமையில் உள்ள கட்டிடங்களின் ஜன்னல்கள் சேதம் அடைந்தன. இந்த தாக்குதலில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 32 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஆப்கான் பாதுகாப்பு படை ஹெலிகாப்டர் மூலமாகவும் வாகனங்கள் மூலமாகவும் விரைந்து வந்து சம்பவ இடத்தை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்திற்கு ஜெர்மனி கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் ஆப்கானிஸ்தான் வடக்கே உள்ள குண்டூஸ் மாகாணத்தில் செயல்பட்டுவந்த தலிபான் முகாம்கள் மீது அமெரிக்க படைகள் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், 30-க்கும் அதிகமான தலிபான்கள் கொல்லப்பட்டாகக் கூறப்பட்டது. இதற்கு பழி வாங்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தலீபான்கள் தெரிவித்துள்ளனர் dailythanthi.com

டொனால்ட் ட்ரம்ப் எனது ஜனாதிபதி அல்ல போராட்டம் வெடித்தது Not my president- Anti-Trump protests across America


அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக குடியரசுக் கட்சியில் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நியூயோர்க் உட்டபட 7 நகரங்களில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன டொனால்ட் ட்ரம்ப்பின் வெற்றிக்கு எதிராக ஒன்று திரண்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அவருக்கெதிரான வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியவாறும் அமெரிக்க கொடியை எரித்தும் ட்ரம்பின் கொடும்பாவியை எரித்தும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். நியூயோர்க், சிக்காக்கோ, போர்ட்லாண்ட், பொஸ்டன், பிலடெல்பியா, நியூஒர்லியன்ஸ், சியாட்டல் ஆகிய நகரங்களில் ட்ரம்ப்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன இதேவேளை, வெள்ளை மாளிகைக்கு முன்னாள் மொழுகுவர்த்திகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரார்கள் தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தியுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டங்கள் யாவும் பேஸ்புக், இன்ஸ்டகிராம் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ரூபாய் நோட்டு... மக்கள் ஆதரவுக்கு (?) பிரதமர் நன்றி..

புதுடில்லி: பிரதமர் மோடி வெளியிட்ட செய்தி: ரூபாய் நோட்டு வாபஸ்
குறித்து, மக்கள் தங்களது நன்றியை வங்கி அதிகாரிகளிடம் தெரிவிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மக்கள் பொறுமையாகவும், வரிசையாகவும் நின்று பழைய நோட்டுக்களை மாற்றி வருகின்றனர். பழைய பணத்தை மாற்றவும், பணத்தை திரும்ப பெறவும் பொது மக்கள் மூத்த குடிமக்களுக்கு உதவி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மக்கள் தங்களது சிரமத்தை பொறுத்துக்கொண்டு பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுவது கேட்கும் போது, உற்சாகமளிக்கிறது. ஊழல் இல்லாத இந்தியா வளர்ச்சியின் பலன்கள் நாட்டின் அனைத்து மக்களுக்கும் கிடைக்க அரசு அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என உறுதியளிக்கின்றேன் எனக்கூறியுள்ளார்.

ஏ.டி.எம்.,கள் இன்று முதல் செயல்படும்

புதுடில்லி : புதிய ரூபாய் நோட்டுகள் நிரம்பும் பணி நிறைவடைந்து இன்று முதல் ஏ.டி.எம்.,கள் செயல்பாடுக்கு வருகின்றன. அத்துடன் ஏ.டி.எம்., மையங்களில் 50 ரூபாய் நோட்டுகளையும் பெறலாம் என வங்கிகள் அறிவித்துள்ளன. பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து, புதிய ரூபாய் நோட்டுகளை நிரப்புவதற்காக கடந்த இரு நாட்களாக ஏ.டி.எம்.,கள் மூடப்பட்டன. இதைத் தொடர்ந்து ஏடிஎம் இயந்திரங்களில் புதிய ரூ.2,000, ரூ.500 நோட்டுகளை நிரப்பும் பணி வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து அனைத்து ஏ.டி.எம்., சேவை மையங்களும் இன்று காலை 10 மணி முதல் செயல்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் இன்று முதல் பொதுமக்கள் ஏ.டி.எம்., மையங்களில் 50 ரூபாய் நோட்டுகளையும் எடுக்கலாம் என வங்கிகள் தெரிவித்துள்ளன.dinamalar.com

ஆயிரக்கணக்கான சினிமா கலைஞர்கள் பணமின்றி கண்ணீர்!

500, 1000 நோட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் தமிழ்சினிமா
படப்படிப்புகள் ரத்து செய்யப்பட்டதால், சினிமாவை நம்பி பிழைப்பு நடத்திவந்த பல ஆயிரம் தொழிலாளிகள் கையில்  காசு இல்லாமல் கதறும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஏராளமானோர் தங்கள் கைகளில் பணத்தை வைத்துக் கொண்டு, செலவழிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். ஒரு பக்கம் பல்வேறு துறையினரும் தங்கள் வேலையாட்களுக்கு பணத்தை கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த விவகாரம் சினிமா துறையினரையும் பாதித்துள்ளது. ஏற்கனவே தியேட்டர் பக்கம் கூட்டம் இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நிறைய படப்பிடிப்புகளும் பாதித்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.படப்பிடிப்பில் கலந்து கொள்ளும், தொழிலாளர்களுக்கு, தினக் கூலிதான் வழங்கப்படும். அதற்கு கண்டிப்பாக 100 ரூபாய் நோட்டுகள் வேண்டும். மேலும், செலவுகளை சமாளிக்க பணம் வேண்டும். ஆனால், இருப்பதோ செல்லாத 500 மற்றும் 1000 நோட்டுகள்தான்.

உலகம் அழிவை நோக்கி செல்கிறதா? ஸ்பெயின் பூர்வகுடி கூறும் செய்திகள்

இது இறுதி எச்சரிக்கை… ” எதிர்வரும் அழிவை உங்கள் காதுகளுக்கு கடத்த முயன்றோம். நீங்கள் செவிசாய்க்கவில்லை. கண்களில் தான் பார்க்க விரும்புகிறீர்கள்.
நிலம் அழிந்து, ஊர் உடைந்து, இனம் இழந்து, உயிர் துறந்து, கடல் கலந்து, நீர் நிறைந்து வரக் கூடிய பேரழிவைக் கண்களால் காணப் போகிறீர்கள்…”  18,000 அடி உயர மலை உச்சியில் உட்கார்ந்து அவர் சொல்லுவதை, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறார் மொழிபெயர்ப்பாளர்.
அவர் கண்களில் அத்தனை பயம். சொன்னவர், அமைதியாக எழுந்து அங்கு பச்சை பசுமை, காய்ந்த மஞ்சளாக மாறிக் கிடக்கும் செடிகளை தடவியபடி நடக்கிறார்.
ஸ்பெயின் நாட்டின் கடற்கரையொட்டி இருக்கும் சியரா நிவேடா (SIERRA NEVADA) பகுதியின்  டே சேந்த மார்டா ( de SANTA MARTA) மலைப் பகுதி.
பல ஆயிரம் வருடங்களாக இங்கு வசித்து வரும் பூர்வகுடிகளான “கோகி” (KOGI) மனித சமுதாயத்துக்கு ஒரு முக்கிய செய்தியை தெரிவிக்கிறார்கள்.

BJP தலைமையகத்தை முற்றுகையிட்ட மக்கள் அதிகாரம் !

HRPC___poster__101116
PP-Protest-(2)மோடியின் கருப்பு பண ஒழிப்பு மோசடி நாடகத்தை எதிர்த்து மக்கள் அதிகாரம் முற்றுகை போராட்டத்தை அறிவித்திருந்தது. மோடியின் கட்சியான பா.ஜ.கவின் தமிழக தலைமை அலுவலகம் சென்னை தி.நகரில் உள்ளது. அதை நோக்கி இன்று காலை (10.11.2016) 11.30 மணியளவில் மக்கள் அதிகாரம் தோழர்கள் முழக்கத்துடன் பேரணியாகச் சென்றனர். கமலாலயம் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் போலிசார் தயாரிப்புடன் இருந்தனர். உடனே சாலையில் மக்கள் அதிகாரம் தோழர்கள் மறியல் செய்தனர். இதனதால் போலீசார் செய்வதறியாது திகைத்தனர்.இந்தியாவின் 90 விழுக்காடு முதலீடுகள் பல வகைகளிலும் இரண்டு சதவீத பணக்காரர்களின் கையில்தான் உள்ளன. அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் தரகு முதலாளிகள் கருப்பு பணத்தை 500, 1000 ரூபாய் நோட்டுகளாக வைத்திருப்பதில்லை. இந்தியாவின் 90 விழுக்காடு முதலீடுகள் பல வகைகளிலும் இரண்டு சதவீத பணக்காரர்களின் கையில்தான் உள்ளன. அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் தரகு முதலாளிகள் கருப்பு பணத்தை 500, 1000 ரூபாய் நோட்டுகளாக வைத்திருப்பதில்லை.

டொனால்ட் ட்ரம்ப் இலங்கை தமிழர் சந்திரன் ரத்தினத்தின் ஹாலிவூட் படத்தில் நடித்து இருக்கிறார்


fotorcreatedஇலங்கையின் பிரபல திரைப்பட தயாரிப்பாளரான சந்தரன் ரத்னம் என்பவரினால் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தில், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Ghosts Can’t Do It திரைப்படத்தில் டொனால்ட் ட்ரம்ப் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
Ghosts Can’t Do It திரைப்படத்தின் நடிகராக அறிமுகமானதாக இலங்கையின் பிரபல திரைப்பட தயாரிப்பாளரான சந்தரன் ரத்னம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது,
நான் மற்றும் போ டெரிக் (Bo Derek) தயாரித்த Ghosts Can’t Do It திரைப்படத்தின் நடிகராக செயற்பட்டுள்ளார். எங்களுக்கு சிறந்த வர்த்தகர் ஒருவரே அவசியமாக இருந்தார்.

90 சதவீத இந்தியர்கள் முட்டாள்களே: மார்கண்டேய கட்ஜு

ரூபாய் 500 மற்றும் 1,000 நோட்டுகளை திரும்பபெறும் அரசின் நடவடிக்கையை
ஓய்வுபெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து முகநூலில் பதிவிட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி கட்ஜு, இன்றைய பணவீக்கத்தில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் பெரும்பாலானவர்களிடம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், பழைய ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் முறை குறித்து விமர்சித்துள்ள அவர், பெரும்பாலான கிராமங்களில் வங்கிகள் மற்றும் அஞ்சலகங்கள் இல்லை. அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துள்ள நிலையில் நம்பிக்கையிழந்த இந்த அரசின் ஸ்டண்டே 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு. அரசின் இந்த அறிவிப்பை பெரும்பாலான மக்கள் வரவேற்பதில் இருந்தே 90 சதவீத இந்தியர்கள் முட்டாள்களே என்ற தனது முந்தைய கருத்து உறுதியாகியுள்ளதாகவும் கட்ஜு பதிவிட்டுள்ளார். thetimestamil.com

வியாழன், 10 நவம்பர், 2016

புதிய ரூபாய் தாள்களில் இந்தி திணிப்பா? - தமிழ் அமைப்பு ஆவேசம் !

more hindhi words dumb on put in new currencyசென்னை: இந்தியா இந்திக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் எனில் மற்ற மொழிகளை எல்லாம் இரண்டாம் தர மொழிகளாக இந்திய அரசு பாவிக்கிறதா என தமிழர் பண்பாட்டு நடுவம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழர் பண்பாட்டு நடுவம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசு தற்போது வெளியிட்டுள்ள புதிய 500 மற்றும் 2000 ரூபாய் தாள்களில் பல மாற்றங்களை செய்துள்ளது . இதுவரை இல்லாதவாறு இந்த ரூபாய் தாள்களில் இந்தி (தேவநாகிரி) எண்களை புகுத்தி உள்ளது. மேலும் 'தூய்மை இந்தியா' திட்டத்தின் செய்தியையும் இந்தியில் மட்டுமே அச்சிட்டுள்ளது. இதற்கு எந்த ஆங்கில மொழிப் பெயர்ப்பையும் அச்சிடவில்லை. இந்தியா என்பது பல மொழிகள் பேசும் தேசிய இனங்களின் கூட்டமைப்பு.