சினிமாவில் நடித்த போது லேடி சூப்பர் ஸ்டார் என்று பட்டப் பெயரோடு வலம் வந்தவர் விஜயசாந்தி. அரசியலுக்கு வந்த பிறகு அவருக்குக் கிடைத்திருக்கும் பட்டம் 'தெலுங்கானா துரோகி'!
தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ. சீதக்கா, விஜயசாந்தியை தெலுங்கானா துரோகி என்று கூறியுள்ளார்.
ஹைதராபாதில் நிருபர்களிடம் பேசிய சீதக்கா விஜயசாந்தியை காய்ச்சித் தள்ளிவிட்டார். அவர் கூறியது:
தெலுங்கானா கட்சி எம்.பி.யான நடிகை விஜயசாந்தி சமீபகாலமாக தன்னை தெலுங்கானா பெண் என்று கூறிக் கொள்கிறார். உண்மையில் அவர் கடலோர ஆந்திராவைச் சேர்ந்தவர்.
தெலுங்கானா பகுதியில் அரசியல் நடத்த வேண்டும் என்பதற்காகவே தன்னை தெலுங்கானா பெண் என்று பொய் பிரசாரம் செய்து வருகிறார்.
விஜயசாந்தியை நியாயமாக தெலுங்கானா துரோகி என்றுதான் அழைக்க வேண்டும். சினிமாவில் வேஷம் போட்டது போல அரசியலிலும் பல வேஷங்கள் போட்டு வருகிறார். ஆனால் அவை ஒன்றும் எடுபடவில்லை.
அவரும் அவரது கட்சியினரும் மக்களை ஏமாற்றம் வகையில்தான் போராடி வருகிறார்கள். தனி மாநிலம் அமைப்பதற்கான முயற்சியில் அவர்கள் இறங்கவில்லை. இது எங்களுக்கு நன்றாக தெரியும். விரைவில் தெலுங்கானா மக்களும் இதை புரிந்து கொள்வார்கள்..." என்றார்.
சனி, 14 ஆகஸ்ட், 2010
செயல்வழி கற்றல் உருவானது எப்படி? புரட்சி அல்ல இது: பரிணாம வளர்ச்சி

இந்த மாற்றத்தை, கல்விப் புரட்சி என்று கூறக் கூடாது; பள்ளி கல்வியின் பரிணாம வளர்ச்சி என்றே கூற வேண்டும்! செயல்வழிக் கற்றல் திட்ட சீர்திருத்தம், கற்பித்தலில் தொடங்கி கற்றல் வரை, பல முக்கிய படிகளை தாண்டி வந்துள்ளது. பாரம்பரிய வகுப்புகள், கற்பிக்கும் சூழ்நிலையில் அமைந்திருக்கும். ஒரு ஆசிரியர் அதிகாரத்துடன் பாடம் நடத்தி கொண்டிருப்பார். அவர் நடத்தும் பாடத்தை, மாணவர்கள், பயத்துடன், சந்தேகங்களை நிவர்த்தி செய்ய முடியாத வகையில் கேட்டு கொண்டிருப்பர். செயல்வழிக் கல்வித் திட்ட வகுப்பு, கற்றலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சூழ்நிலையில் அமைந்துள்ளது. இங்கு, மாணவன் தான் ஹீரோ; தன் சொந்த முயற்சியில் பாடங்களைக் கற்றுக் கொள்ள அவனுக்கு முழு அதிகாரம் உண்டு. கற்கும் முறையில் அவனுக்கு உதவுவது மட்டுமே ஆசிரியர் பணி. இது, மிகவும் நுட்பமான, ஆனால், குறிப்பிடத்தக்க மாற்றம். இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது? ஒரே நாளில் நிகழ்ந்ததா? இதற்கு யார் யாரெல்லாம் பொறுப்பு? இது குறித்து வரலாற்றை ஆராய்ந்து பார்க்கும் போது, இது புரட்சியல்ல; நூறு ஆண்டுகளாக முயன்று அடித்தளம் போட்டு, அதன் காரணமாக உருவான பரிணாம வளர்ச்சி என்பதை நாம் உணர்வோம்.
வளர்ந்து கொண்டிருக்கும் மரம், மண்ணுக்கு அடியில் தன் வேரை பரப்பி, பலமான அடித்தளம் அமைக்கும்; பலமான வேர் அமையும் போது தான், மரமும் செழிக்கும். நம் கண் முன் தெரிவது, மண்ணுக்கு மேல் உள்ள மரம் தான்; பலமாக அமைந்துள்ள வேரை, யாரும் காண்பதில்லை. எனவே, இந்த செயல்வழி கற்றல் திட்டத்தை உருவாக்க காரணமாக அமைந்த, சில முக்கிய வேர்கள் குறித்து நாம் இப்போது பார்ப்போம். கற்பிக்கும் அதிகார மையங்கள், கல்வி இயக்கங்கள் மற்றும் நிர்வாக/ அரசியல் அதிகார மையங்கள் என மூன்று பிரிவாக, இந்த வேர்களை பிரித்து, அறிந்து கொள்வோம். இதில் ஒவ்வொரு பிரிவும், பரிணாம வளர்ச்சி குறித்த வரலாறு சொல்லும்.
கற்பிக்கும் மையங்களின் பரிணாம வளர்ச்சி: எல்லாவற்றையும் கற்றுக் கொள்ளும் வகையிலான பரிணாமத்துடன் குழந்தைகள் பிறக்கின்றன; இயற்கை விஞ்ஞானத்தில் இதற்கான ஆதாரம் உண்டு. பள்ளியில் நுழைவதற்கு முன் தாய்மொழியை அவர்கள் கற்று விடுகின்றனர். அப்போது, பள்ளி என்பது எந்த சூழலில் அமைய வேண்டும்? குழந்தைகளிடையே இயற்கையாக அமைந்துள்ள கற்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் அமைய வேண்டும் அல்லவா? குழந்தைகளை மையமாகக் கொண்ட கற்கும் சூழலை, 1907ல் முதன் முதலாக ஏற்படுத்தியவர், இத்தாலியை சேர்ந்த மரியா மாண்டிசொரி. "கற்பது என்பது, மனிதன் தன்னிச்சையாக மேற்கொள்ளும் நடவடிக்கை. வார்த்தைகளை கொண்டு மட்டும் கல்வியை அடைய முடியாது; அனுபவத்தால் அறிந்து கொள்வது தான் கல்வி' என்று அவர் நம்பினார்.
அவருடைய பள்ளியில், பல விதமான கருவிகள் மற்றும் கைவேலைகள் மூலம், சுற்றுச்சூழலுடன் ஒருங்கிணைந்து, குழந்தைகள் தாங்களாகவே பாடம் கற்றனர். இந்தியாவில், பிரிட்டன் நிர்வாகத்தால் துவக்கப்பட்ட, பிரதான கல்வி அமைப்பின் பொருத்தமற்ற முறையை, மகாத்மா காந்தி அடையாளம் கண்டார். 1937ல், அடிப்படை கல்வி தத்துவத்தை அவர் பரிந்துரைத்தார். கல்வி குறித்த அவரது அடிப்படை தத்துவம் என்னவெனில், செயல்முறையை அடிப்படையாக கொண்ட கல்வி; அந்த கல்வி உறுதியானதாக, ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்க வேண்டும்; தொடர்பில்லாமல், தனியாக இருக்க கூடாது; அந்த கல்வியும் தாய்மொழியிலேயே அமைய வேண்டும்; குழந்தையின் சமூக, கலாசார சூழலோடு ஒருங்கிணைந்ததாக அமைய வேண்டும் என்பது தான்.
காந்தியின் தத்துவமும், மான்டிசொரி கல்வி முறையும் ஒரே கொள்கையை அடிப்படையாக கொண்டவையாக இருந்தன. 1939ல், தியாசாபிக்கல் சொசைட்டிக்கு, மாண்டிசொரி அழைக்கப்பட்டார். இரண்டாம் உலக போர் காரணமாக, அவர் இங்கு ஏழு ஆண்டுகள் தங்க நேர்ந்தது. அப்போது அவர், 16 பயிற்சி வகுப்புகள் நடத்தினார். மான்டிசொரி இயக்கத்தை இந்தியாவில் வேரூன்ற செய்தார். ஆந்திராவில், 1926, ரிஷி வேலி பள்ளி துவக்கப்பட்டது. ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கல்வி தத்துவத்தின் அடிப்படையில், கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன் இந்தியா (கே.எப்.ஐ.,) அமைப்பால் இந்த பள்ளி துவக்கப்பட்டது. தொழில்நுட்பத் திறனை அடிப்படையாக கொண்ட கல்வி முறையுடன் கூடிய மனித உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே, இந்த தத்துவத்தின் அடிப்படை. போட்டிச்சூழல் அற்ற, மாணவர்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவர் கற்றுக் கொள்ளும் கூட்டுக் கற்றல் முறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. எனவே, 1947ல் நாம் சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே, மாண்டிசொரி, காந்தி, ஜே.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பரிந்துரைத்த, செயல்வழி கல்வி முறையை, இந்தியாவின் தென் மாநிலங்கள் பின்பற்றத் துவங்கி விட்டன.
இரண்டாம் உலகப் போரின் போது, டேவிட் ஹார்ஸ்பர்க் என்ற ஆங்கிலேயர், இந்தியாவில் ராணுவ அதிகாரியாக பணியாற்றினார். அவருக்கு பள்ளி கல்வி மீது ஈர்ப்பு ஏற்பட்டது. ரிஷி வேலி பள்ளியில் சில ஆண்டு காலங்கள் தங்கினார். பின், ஆந்திராவிலேயே, 1972ல், நீல் பாக் என்ற பள்ளியை துவக்கினார். குழந்தைகள் தாங்கள் விரும்பிய பாடத்தை தேர்ந்தெடுத்து படிப்பதற்கும், செயல்வழி கல்விக்கும், இந்த பள்ளி முக்கியத்துவம் கொடுத்தது. ஒவ்வொரு மாணவரும் வித்தியாசமான முறையிலும், வித்தியாசமான நடையிலும் கல்வி பயில, இந்த பள்ளி அனுமதி அளித்தது. ஆசிரியர்களுக்கென, உறைவிட பயிற்சியும் நீல் பாக் பள்ளியில் அளிக்கப்பட்டது. இந்தியாவில் தற்போதுள்ள முன்னணி கல்வியாளர்கள் பலர், இப்பள்ளியில் ஆசிரியர்களாக பயிற்சி பெற்றவர்கள் தான். பழைய புத்தக படிப்பு முறையை விட, செயல்வழி கல்வி முறை தான், கிராமப்புற மாணவர்களுக்கு சிறந்தது என்பதை, நீல் பாக் பள்ளியின் அனுபவத்தின் மூலம் உணர முடிந்தது. பின், நீல் பாக் பள்ளியை, ரிஷி வேலி கிராம கல்வி மையம் எடுத்து நடத்த துவங்கியது. ஆந்திரா, மதனப் பள்ளியில் உள்ள கிராம பள்ளிகளுடன் இணைந்து செயல்படத் துவங்கியது. 1990 முதல் கிராமப்புற மாணவர்களுக்கும் பள்ளி கல்வி கிடைக்கும் வகையிலான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்த கல்வி முறை, ஆந்திராவில் உள்ள அரசு பள்ளிகளிலும் பரிசோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது. 20ம் நூற்றாண்டில் இறுதியில், கர்நாடகாவிலும் இம்முறை பின்பற்றப்பட்டது. மாணவர்களை மையமாக வைத்து நடத்தப்படும் இந்த கல்வி முறை, பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அனைத்து பகுதிகளிலும் அல்லாமல், இங்கொன்றும், அங்கொன்றுமாகவே செயல்படுத்தப்பட்டது. அரசு பள்ளியோ, தனியார் பள்ளியோ இந்த நடைமுறையை தங்கள் பள்ளிகளில் அறிமுகப்படுத்த முன் வரவில்லை.
தமிழகத்தின் பள்ளிக் கல்வி இயக்க வரலாறு: தமிழக்தில் முதன்முறையாக, பெரிய அளவில் துவக்கப்பட்டது வயது வந்தோர் கல்வி திட்டம் தான். 1970 - 80 ஆண்டுகளில் அறிவொளி இயக்கம் என்ற அமைப்பால், இது உருப்பெற்றது. எனவே, அவர்களுக்கு ஆர்வம் ஏற்படும் வகையிலும், எளிதில் உணர்ந்து கொள்ளும் வகையிலும், கற்பித்தல் முறையை கையாள்வது, இந்த திட்டத்தின் அவசியம் ஆனது. ஆசிரியர்களும், மாணவர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றும் வகையில் கிராம திட்டங்களையும், அறிவொளி இயக்கம் செயல்படுத்தியது. தமிழகத்தில், 80 -90 ஆண்டுகளில் உருவான அடுத்த பெரிய கல்வி இயக்கம், மக்களின் அறிவியல் இயக்கம் தான். கேரள சாஸ்திரீய சஹஸ்த பரிஷத் மற்றும் தமிழ்நாடு அறிவியல் அமைப்பு (டி.என்.எஸ்.எப்.,) ஆகியவை இணைந்து ஆடல், பாடல், நாடகம் ஆகியவற்றின் மூலம் அறிவியல் கல்வியை போதித்தன. அறிவியல் கொள்கைகளை, செயல்வழி கல்வி மூலம் விளக்கும் நடைமுறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்த இரண்டு இயக்கங்களுமே, தானாக முன்வந்து செயல்படும் வகையில் அமைந்தன; ஆசிரியர், தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்களை ஒருங்கிணைத்து, தங்கள் திட்டங்களை செயல்படுத்தின. இந்த இயக்கங்களுக்கு, மாநிலத்தின் அரசியல் மற்றும் தொழிலதிபர்களின் ஆதரவும் கிடைத்தது
கற்பித்தல் முறையில் மாற்றங்களும், கல்வி சீர்திருத்தமும் ஒருங்கிணைந்தது எப்படி? கற்பித்தல் முறையில் நடத்தப்பட்ட தனித்தனி பரிசோதனைகளால் தமிழகத்தில் கல்வி சூழலில் தேக்கம் ஏற்பட்டு, கல்வி இயக்கங்களும் பெருகிய நிலையில், பிரதான கல்வி சூழலில், குறிப்பிடத்தக்க மாற்றம் உருவாக்க வேண்டிய நேரம் வந்தது. ஆனால், இந்த அடிப்படை மாற்றத்தை உருவாக்க, சிறந்த அறிஞர் தேவைப்பட்டார். அதற்கான சிறந்த உதாரணமாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி விஜயகுமார் கிடைத்தது, தமிழகத்தின் அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். சமூக மாற்றத்துக்கு, சீர்மிகுந்த பள்ளி கல்வி அவசியம் என்பதை, அவர் அனுபவமாக உணர்ந்திருந்தார். முதல்வரின் தனிச் செயலர், மாவட்ட கலெக்டர் உட்பட பல பதவிகள் வகித்த அவர், பள்ளி கல்வியில் தனி ஈடுபாடு காட்டினார்.
கடந்த 90ல் வேலூரில் கலெக்டராக இருந்த போது, பள்ளி செல்ல வேண்டிய வயதை அடைந்த நிறைய குழந்தைகள், வயது வந்தோர் கல்வித் திட்டத்தின் கீழ் பாடம் பயில்வதை அறிந்தார். அவர்கள் அனைவரும், அருகிலுள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் என்பதையும் அறிந்தார். இக்குழந்தைகளை பள்ளிக்கு மீண்டும் ஈர்க்க, "யுனிசெப்' ஆதரவுடன், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மற்றும் ஆதரவு திட்டம் (கிளாஸ்) ஒன்றை துவங்கினார். வேலூரை சேர்ந்த சண்முகம், பிச்சையா உட்பட சிறந்த ஆசிரியர்களையும் இத்திட்டத்தோடு இணைத்துக் கொண்டார். இவர்கள் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமல்ல; தமிழ்நாடு மாணவர் அமைப்பு மற்றும் அறிவொளி இயக்கம் ஆகியவற்றின் தொண்டர்களும் கூட; கற்பித்தலில் உள்ள பல முறைகளை அறிந்தவர்கள். "கிளாஸ்' திட்டம் அரசு பள்ளி வளாகத்திலேயே நடத்தப்பட்டது. ஆடல், பாடல் போன்ற செயல்வழிகள் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டன. இதை நேரில் கண்ட அரசு பள்ளி மாணவர்களும், இதனால் ஈர்க்கப்பட்டனர். விளைவு, இவர்களுக்கான ஆசிரியர்களும், இது போன்ற கற்பித்தல் பயிற்சியை எடுத்து கொள்ள வேண்டிய சூழல் உருவாயிற்று.
இது தான், "மகிழ்ச்சியுடன் கற்கும் முறை' தமிழகத்தில் உருவாக காரணம் ஆயிற்று. ஆனால், இந்த திட்டத்தின் மூலம் ஆசிரியர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்க முடிந்தது. வகுப்பறையையோ, பாடத் திட்டத்தையோ மாற்ற முடியவில்லை. இதனால், இந்த முறைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டது. "கிளாஸ்' திட்டத்தின் மூலம் பாடம் நடத்தியவர்கள், ரிஷி வேலி பள்ளிக்கும் சென்று, கற்பிக்கும் நடைமுறைகளை கற்று கொண்டனர். செயல்வழிக் கல்வி சூழலை உருவாக்கும் ஆசிரியர்கள், முதல் அக்கல்வி முறையை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், பெரும்பாலான ஆசிரியர் பயிற்சி திட்டங்கள், கற்பித்தல் அடிப்படையில் அமைந்தவையாகவும், இப்பயிற்சியை பெறுபவர்கள், செவிவழி அறிவை பெறுபவர்களாகவே மட்டும் இருந்தனர். தமிழக பள்ளி கல்வித் துறையின் கூடுதல் செயலராக இருந்த விஜயகுமார், இந்த முரண்பாட்டை நன்கு புரிந்து கொண்டார்.
சென்னையில் உள்ள ஆசிரியர் தொழிற்பயிற்சி நிறுவனமான "ஸ்கூல்ஸ்கேப்' நிறுவனர் ஆமுக்தா மஹாபாத்ராவின் உதவியுடன், செயல்வழி மற்றும் பங்கெடுப்பு முறையிலான ஆசிரியர் பயிற்சி முறை ஒன்று உருவாக்கப்பட்டது. ஆமுக்தா மஹாபாத்ரா, முன்பு நீல் பாக் பள்ளியில், டேவிட் ஹார்ஸ்பர்கிடம் நேரடி பயிற்சி பெற்றவர். தொடர்ந்து, சென்னை கார்ப்பரேஷன் கமிஷனராக விஜயகுமார் பணியமர்த்தப்பட்டது, பள்ளிகளில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் வாய்ப்பை அமைத்து கொடுத்தது. 300 பள்ளிகளில் மாற்றம் கொண்டு வர தீர்மானித்தார். ரிஷி வேலி பள்ளிக்கு சென்று, அங்குள்ள பயிற்சி முறைகளை கண்டறிந்து, அவற் றை தமிழகத்தில் செயல்படுத்த தீர்மானித்தார். மேலிருந்து கீழ் என்ற அணுகுமுறையை கைவிட்டு, அடிப்படை மாற்றத்தையே செயல்வழித் திட்டம் போலச் செயல்படுத்தினார். சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தன்னார்வ ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து, 13 பள்ளிகளில் பரிசோதனை அடிப்படையில், செயல்வழிக் கல்வியை அறிமுகப்படுத்தினார். இப்போது இத்திட்டம், செயல்வழிக் கல்வி திட்டம் (ஆக்டிவிட்டி பேஸ்டு லேர்னிங்) என்றழைக்கப்படுகிறது. விஜயகுமாரால் தேர்ந்தெடுக்கப்பட்ட 13 பள்ளி ஆசிரியர்களும், ரிஷி வேலி பள்ளிக்கு சென்றனர். அங்கு நடைமுறையில் உள்ள கற்பித்தல் முறையை பயின்று திரும்பினர். மிகுந்த போராட்டங்களுக்கிடையில், இக்கல்வி முறையை தங்கள் பள்ளிகளில் அறிமுகப்படுத்தினர்.
சென்னை, சைதாப்பேட்டையில் அமைந்துள்ள மாந்தோப்பு பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி என்பவர், இத்திட்டத்தில் திருப்தி அடையவில்லை. விஜயகுமாருடன் வாக்குவாதம் செய்தார். பள்ளியில் இத்திட்டத்தை அமல்படுத்தி, இத்திட்டம் ஏன் வெற்றிகரமாக செயல்படாது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்து, தன்னிடம் தெரிவிக்குமாறு, விஜயகுமார் பணித்தார். இதை சவாலாக ஏற்ற அந்த ஆசிரியை, இத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அவர் எதிர்பாராத வகையில், இத்திட்டம் மாபெரும் வெற்றி கண்டது. உற்சாகம் அடைந்த விஜயகுமார், சென்னை கார்ப்பரேஷன் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், செயல்வழிக் கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்த தயாரானார். இதற்கான உபகரணங்களை தயார் செய்ய, இந்த 13 பள்ளி ஆசிரியர்களும் பணிக்கப்பட்டனர். பள்ளி ஆசிரியர்களின் திறமை மீது, விஜயகுமாருக்கு அபார நம்பிக்கை உண்டு. பள்ளி கல்வி அமைப்பின், மிக முக்கியமான அங்கம் ஆசிரியர்கள் தான் என்பதை அவர் உணர்ந்திருந்தார். இந்த மறுமலர்ச்சியில், இவர்களின் பங்கு மிக முக்கியமானதாக விளங்க வேண்டுமென விரும்பினார். இவர்களை உற்சாகப்படுத்த, அரசு துறையில் உள்ள அனைத்து உயரதிகாரிகளையும் அழைத்து, இவர்களின் திறமையான செயல்பாடு குறித்து காட்டினார். இதனால் ஆசிரியர்கள் பெருமை அடைந்ததோடு, பள்ளி கல்வி மறுமலர்ச்சிக்கான சொந்தக்காரர்கள் என்ற கவுரவமும் கிடைத்தது.
இதையடுத்து, சென்னை கார்ப்பரேஷன் பள்ளிகள் அனைத்திலும், இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. விஜயகுமாரின் திறமையா அல்லது விதியா என தெரியவில்லை; மத்திய அரசின், அனைவருக்கும் கல்வி திட்டமான, "சர்வ சிக்ஷா அபியான்' திட்டத்தின் தமிழக திட்ட இயக்குனராக விஜயகுமாரே பணியமர்த்தப்பட்டுள்ளார். செயல்வழிக் கல்வி திட்டத்தை மாநிலம் முழுதும் அமல்படுத்தக் கூடிய அனைத்து சாதனங்களும் தயார் செய்த விஜயகுமார், வேலூர் முதல் சென்னை உட்பட ஆசிரியர் குழுவையும் கைவசம் வைத்துள்ளார். கல்வியாளர்கள் ஆமுக்தா மஹாபாத்ரா, அனந்தலட்சுமி போன்றோருடன் பணி செய்யும் திறனையும் கொண்டிருக்கிறார். இதோடு, கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன் அமைப்பின் பள்ளியான, "தி ஸ்கூல்' ஆசிரியர்களையும் துணைக்கு அழைத்திருக்கிறார். "சர்வ சிக்ஷா அபியான்' திட்டத்தின் துணை இயக்குனர்கள் லதா, கண்ணப்பன், இளங்கோவன் ஆகியோர், பள்ளி கல்வி மீது அதீத ஆர்வம் கொண்டவர்கள்; திறமையாக செயல்படக் கூடியவர்கள். ஆலோசனைக்கென, வேலூரிலிருந்து சண்முகம், பச்சையப்பன், சென்னை கார்ப்பரேஷன் கல்வி அதிகாரியான மாலதி, ஆசிரியர் பள்ளி கல்வி இயக்குனரக அதிகாரி ரத்னவேல் ஆகியோரும் உள்ளனர்.
கற்பிக்கும் அனுபவம், கல்வி கோட்பாடு மற்றும் நிர்வாக அனுபவம் ஆகியவை இந்த அணியின் பலம். இந்த மறுமலர்ச்சி திட்டம் நல்ல முறையில் வெற்றி பெற, இவர்களின் அனுபவமும், முயற்சியும் இன்றியமையாதவை. புதிய முறையை அமல்படுத்த, மாடல் பள்ளிகள் தேர்தெடுக்கப்பட்டன. பின், ஆரம்ப பள்ளி அனைத்திலும் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டு விட்டது. பயிற்சி பெற்ற 13 பள்ளி ஆசிரியர்களின் போன் எண்கள், மாநிலம் முழுவதும் உள்ள ஆசிரியர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளன. அரசியல்வாதிகள் ஆதரவு இல்லையெனில், இத்திட்டம் நிறைவேறி இருக்காது. தமிழக கட்சிகள் அனைத்தும் இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
தற்போதைய பள்ளி கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, ஒரு பள்ளிக்கு சென்றார்; அங்கு மாணவர்கள் பயிலும் விதத்தை கண்டு ஆச்சரியமடைந்தார். விடுதலை சிறுத்தை அமைப்பை சேர்ந்த ரவிகுமார் எம்.எல்.ஏ., இத்திட்டம் அடிப்படை சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறினார். குறுகிய காலத்தில், அரசியல் மற்றும் நிர்வாகத் துறைகளின் ஒத்துழைப்பினால், பள்ளிகளில் மிகப்பெரிய மாறுதலை உருவாக்க முடிந்தது. துவக்க நிலையில் உள்ள இத்திட்டத்தை வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு குழப்பமாகவே தோன்றும். ஆழமாக பார்க்கும் போது, ஆசிரியர்களின் கருத்துக்களின் அடிப்படையில் அமையும், சக்தி வாய்ந்த, ஆரோக்கியமான திட்டம் இது என்பது விளங்கும். தொடர் மதிப்பீடுகளும், கண்காணிப்புகளும் இத்திட்டத்திற்கு இன்றியமையாதவை. அதிகார வர்க்கத்தின் மூலம், அரசு செயல்பாட்டிலேயே மாற்றம் கொண்டு வந்துள்ள, அபூர்வ திட்டம் இது. இத்தகைய மறுமலர்ச்சியின் வரலாற்று பின்னணியையும், திட்டத்தின் தற்போதைய செயல்பாட்டையும் பார்க்கும் போது, பள்ளி கல்வியில் ஏற்பட்ட புரட்சி என்று சொல்வதை விட, பரிணாம வளர்ச்சி என்று சொல்வதே பொருத்தம்!
கி. இராமச்சந்திரன், கல்வி ஆராய்ச்சியாளர்
இது ரொம்ப சந்தோசமான முன்னேற்றம். இதற்காக உழைத்த நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் கோடி நன்றிகள். ஊர் கூடி தேர் இழுத்தா ஓடிடும் தேரு என்பது தெளிவு. இந்த குழந்தைகளுக்காக நான் மிகவும் சந்தோசபடுகிறேன். ஸ்கூல்க்கு போக மாட்டேன்னு மூக்கு ஒழுக்கிக்கிட்டே கிழிஞ்சு போன டவுசரோட ஓடி போன அந்த நாட்கள். ஸ்கூல்க்கு போவது என்றாலே தூக்கு மேடைக்கு போறா மாறி இருக்கும். பத்து காசு கொடுப்பாங்க. இன்டர்வல்ல முட்டாய் வாங்கி திங்க. அப்புறம்தான் போவேன். கண்ணம்மா டீச்சர் ரொம்ப நல்லவங்க. அடிக்கவே மாட்டாங்க. ஆனா இந்த இந்திரா டீச்சர் இருந்தாங்களே. நகோயா. சனியன் காலபுடிச்சா மாறி தொடைய புடிச்சு திருகும் பாரு, ஸ்ஸ்ஸ் அப்பாஆஆஆஆ டவுசர்ல ஒன்னுக்கே வந்திடும். இது தெரியாம எங்க நைனா வேற ஸ்கூல்க்கு வந்து, டீச்சர் இவன் சரியா படிக்கலேன்னா கண்ண மட்டும் விட்டுட்டு தோல பூரா உரிச்சு எடுங்கன்னு கொளுத்தி போட்டுட்டு போய்டுவாரு. யெம்மா அந்த ஸ்கூல முடிக்கிறதுக்குள்ள நான் பட்டபாடு. ஜாலியா இருங்க பொடுசுங்களே. நல்லா படிங்க....
பாலா - usa,இந்தியா
2010-08-14 00:51:34 IST
if there is any such change, it is really need to be appreciated. But what I see in the Television when they judge the children while singing, or taking quiz etc., I see no such change. They still behave like 19th century old Indian student....
செல்வன் - சென்னை,இந்தியா
2010-08-14 00:31:09 IST
Very nice and well researched article. Kudos to Dinamalar. We want more such articles on ABL (activity based learning) to be published for the benefit of the readers they should know how our government and local body runs institutions are better than the private schools. ABL is yet to be implemented by private schools. Only DD-Pothigai used to telecast about ABL and features atleast one school per week in their educational programme. None of the private channels discuss about ABL in any of their Educational Programme telecasts(which is anyway less than 5% of what is telecast by Prasar Bharathi). Magazine like your should educate public more on ABL so that our future generation will benefit and we bring good citizens....
மண்டபம் முகாமில் அகதிகள் வெளியேற தடை
சுதந்திர தின விழாயையொட்டி மண்டபம் முகாமில் இருந்து அகதிகள் வெளியேற காவல்துறை தடை விதித்துள்ளது.
இந்தியாவின் 64வது சுதந்திர தினவிழாவினை சீர்குலைக்க தீவிரவாதிகள் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதையடுத்து முக்கிய நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளான மண்டபம் கடற்கரை ஓரங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மண்டபம் முகாமில் தங்கியுள்ள அகதிகள் சுதந்திர தினவிழா நடைபெறும் நேரங்களில் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு கடற்கரை பகுதி முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்தில் ஈடுபட்டனர். இதனால் அகதி முகாம்களில் உள்ள மக்கள் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர்.
வெள்ளைக் கொடியுடன் எதிரியின் கையில் சரணடையவே புறப்பட்டனர் என்று புலிகளே கூறுகின்றனர்
www.soodram.com. (பகுதி 5 சாகரன்)
இறுதிக்கட்டப் போரில் நடேசன், புலித் தேவன் போன்றவர்கள் சயனைற் அருந்தி தற்கொலை செய்யவில்லை மாறாக வெள்ளைக் கொடியுடன் எதிரியின் கையில் சரணடையவே புறப்பட்டனர் என்று புலிகளே கூறுகின்றனர். எதிரியின் கையில் உயிருடன் பிடிபடுவதில்லை என்பது என்னவாயிற்று. எல்லாவற்றிற்கும் மேலாக புலித் தலைவன் பிரபாகரன் சயனைற் அருந்தவில்லை. மாறாக இலங்கை அரசிடம் சரணடைந்தான் எப்பதே அவர்களின் இறுக்கமான சயனைற் தற்கொலைக் கட்டுப்பாடு. சயனைற் தற்கொலைக் கட்டுப்பாட்டில் புலிகள் உறுதியாக இருந்திருந்தால் இன்று இராணுவத்தின் விசேட முகாங்களில் 10,000 மேற்பட்ட புலிகள் அடைந்திருக்கமாட்டார்கள். மாறாக மயானங்கள்தான் நிறைந்திருக்கும்.
மீண்டும் சொல்கின்றோம் எமக்கு சயனைற் தற்கொலையில் உடன்பாடு இல்லை. நாம் வாழ்வதற்காக போராடும் வாழ்வை நேசிக்கும் மக்கள் போராளிகள். இதில் நாம் சில வேளைகளில் மரணத்தை தழுவலாம். ஆனால் சாவை வலிந்து ஏற்கும் மனநோயாளிகள் அல்ல. இன்று உலகின் பலபாகங்களிலும் மட்டக்களப்பு சிறை உடைப்பில் இருந்து மீண்ட பல புலி உறுப்பினர்கள் அன்றொருநாள் சயனைற்றை உட்கொண்டிருந்தால் இன்று மனித உரிமை மீறல் போர்க் குற்றங்கள் என்று தொடர்ந்தும் தமது பிழைப்புக்களை நடாத்திக் கொண்டு இருக்க முடியாது.
புலிகளின் தோல்வியை எவ்வாறு தவிர்த்திருக்கலாம். இது சற்றுக்கடினமான விடயம்தான் தமிழர் தரப்பில் பன்முகப்படுதப்பட்ட தலைமை என்ற சிந்தனை என்று இல்லாமல் போனதோ அன்றே புலிகளின் தோல்விக்கு அத்திவாரம் போட்டாகிவிட்டது.
புலிகளை ஆதரிப்பதல் மாத்திரம் அல்ல புலிகளை எதிர்பதிலும் ஒரு வகை ஏகபோகமே நிலவி வந்தது. அதுதான் புலிகளின் விழ்ச்சிக்கு பின் இன்று வரை தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஜனநாயக முற்போக்கு சக்திகள் பலம் பெறமுடியவில்லை. இந்நிலை நீடித்தால் மீண்டும் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு ஏகபோக சிந்தனையும் செயற்பாடும் மீண்டும் வலுப் பெறும்....... இதன் போக்கில் மீண்டும் ஒரு முள்ளிவாய்கால் நிகழ்வு இனிமேலும் நடைபெற மாட்டாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
புலிகள் ஒரு மிகவும் கட்டுப்பாடான இயக்கம் என்பது வெளித் தோற்றத்திற்கு காட்டப்பட்ட ஒரு மாயை. சயனைற் தற்கொலையில் எமக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும் புலித்தலைவர் உட்பட சகல உறுப்பினர்களும் மாலைபோல் கழுத்தில் அணிந்திருந்வொன்று சயனைற் குப்பிகள். இது சீலனில் ஆரம்பித்து அருணா வரைக்கும், இலங்கை - இந்திய ஒப்பந்தக் காலத்தில் குமரப்பா புலேந்திரன் போன்ற முக்கிய புலி உறுப்பினர்கள் வரைக்கும் மக்களுக்க 'படம்' காட்டும் பொருளாக மட்டும் பாவிக்கப்பட்டது. இதனாலேயே இவர்கள் இலங்கை இராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்டார்கள். யாரும் சயனைற்றை பயன்படுத்தவில்லை. பலாலி இலங்கை இராணுவ முகாமில் காவலில் வைத்திருந்த குமரப்பா, புலேந்திரன் கோஷ்டிக்கு பின்பு தலைவர் பாலசிங்கம் ஊடாக சயனைற்றை கொடுத்தனுப்பி கொன்றார் என்பதே உண்மைநிலை. இதனைக் காரணம் காட்டியே புலிகள் இந்திய இராணுவத்தின் மீதம் வலிந்த தமது தாக்குதலை ஆரம்பித்தனர் என்பது இதனுடன் கூடிய நிகழ்வு.

10 மாணவிகள் மயக்கம் ஆசிரியர் தண்டனை தோப்பு கரணம் போட்ட
ஆந்திர மாநிலம் ஆதிலா பாத்மாவட்டம் கேய்லாபூர் கிராமத்தில் ஆதிவாசி ஆசிரம அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு உடற்பயிற்சி ஆசிரியராக இருப்பவர் ராமு. இவர் மிகவும் கண்டிப்பானவர்.
இப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் தினமும் 5 மணி முதல் 6 மணி வரை உடற் பயிற்சி செய்வது வழக்கம்.
நேற்று உடற்பயிற்சிக்கு 40 மாணவிகள் 5 நிமிடம் தாமத மாக வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த ராமு அவர்களை 600 தோப்பு கரணம் போடுமாறு கூறினார்.
நீண்ட நேரம் தோப்பு கரணம் போட்டதால் 10 மாணவிகள் மயங்கி கீழே விழுந்தனர். 30 பேர் மிகவும் சோர்வடைந்தனர். அவர் களால் எழுந்து நடக்க முடிய வில்லை.
இதையடுத்து 40 பேரையும் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு வீணா, சுவாதி, ரத்னமாலா, அனிதா உள்பட 10 மாணவிகளுக்கு அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். 30 பேருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.
இதையறிந்ததும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஆஸ்பத்திரி சென்று மாணவிகளை பார்த்து ஆறுதல் கூறினர். மாவட்ட கல்வி அதிகாரி, ஆசிரியர் ராமுவை சஸ்பெண்டு செய்தார். தலைமை ஆசிரியருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பினார்.
சில நாட்களுக்கு முன்பு வாரங்கல் மாவட்டத்தில் தலைமை ஆசிரியை ஒருவர் மாணவ-மாணவிகளுக்கு விறகு கட்டையால் சூடு போட்டார். இதேபோல் ஆசிரியர் ராமுவும் மாணவி களை நீண்டநேரம் தோப்பு கரணம் போட வைத்து சித்ரவதை செய்துள்ளார். இதற்கு மாணவ- மாணவி களின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Saturday, August 14,2010 04:21 PM, இரட்சகன் said: முதலில் ஆசிரியர்களுக்கு மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று பாடம் எடுக்கவேண்டும் |
Saturday, August 14,2010 01:47 PM, rrr said: இந்த **** தூக்குல போடணும் |
அடித்துப் பிடித்து நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்த புது நடிகைகள்!
தமிழ் சினிமாவில் நடிகர் - நடிகையாக நடிக்க வேண்டுமானால் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் முதலில் உறுப்பினராக வேண்டும்.
ஆனால் சமீப காலமாக நடிகர் சங்கத்தில் பல நடிகர், நடிகைகள் உறுப்பினராகாமல் உள்ளனர். சங்கத்தில் இல்லாமலேயே படங்களில் இவர்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு நடிகர் சங்கம் நாளை (15-ந் தேதி) வரை கெடு விதித்தது. சங்கத்தில் உறுப்பினராகாதவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் என்றும் எச்சரித்தது.
தயாரிப்பாளர் சங்கத்திலும் உறுப்பினராக சேராதவர்களை ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருவர், ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் சமீபத்தில் ரிலீசான ராவணன் போன்ற தமிழ்படங்களில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராய். ரஜினியுடன் அவர் நடித்துள்ள எந்திரன் விரைவில் ரிலீஸாக உள்ளது.
எனவே ஐஸ்வர்யா ராய் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என்று சங்கப் பொதுச் செயலாளர் ராதாரவி வற்புறுத்தினார். இந்த நிலையில் கெடுவுக்கு முன்பாகவே புதுமுக நடிகர்- நடிகைகள் பலர் உறுப்பினராக சேர்ந்துள்ளனர்.
அங்காடித் தெரு நாயகன் மகேஷ், களவாணி நாயகன் விமல் ஆகியோர் உறுப்பினராகியுள்ளார்கள். ஜெனிலியா, ஹன்சிகா, சமீரா ரெட்டி, ஓவியா போன்றோரும் அடித்துப் பிடித்துக் கொண்டு உறுப்பினராகிவிட்டனர்.
மேலும் பல நடிகர்- நடிகைகள் உறுப்பினராகச் சேர்ந்த வண்ணம் உள்ளனர். சனிக்கிழமையன்று பல நடிகர்கள் சங்க வளாகத்துக்கு வந்து காத்திருந்து விண்ணப்ப படிவங்கள் வாங்கிச் சென்றுள்ளனர். அவற்றை பூர்த்தி செய்து நாளை சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இதுவரை ஐஸ்வர்யா ராய் உறுப்பினராக சேரவில்லை. அவருக்காக யாரும் விண்ணப்பப் படிவம் வாங்கியாதாகவும் தெரியவில்லை. சங்கத்தில் உறுப்பினர் ஆகாதவர்கள் பெயர் பட்டியல் நாளை மறுநாள் (16-ந் தேதி) தயார் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் சங்க வட்டாரத்தில் இன்று கூறப்பட்டது.

ஜாதிவாரி சென்ஸஸ்: குலை நடுங்கிப் போயுள்ள சமூகநீதி எதிர்ப்பு சக்திகள்-வீரமணி
சென்னை: ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருப்பது நியாயமானதே என்பது உலகுக்கு புலப்பட்டுவிடும் என்பதால் தான் சமூகநீதி எதிர்ப்பு சக்திகள் குலை நடுங்கிப் போய், குதறிப் பாய முயல்கின்றன என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டின் 69 சதவீத இட ஒதுக்கீடு, தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் அளிக்கப்படுவதற்கு 9வது அட்டவணை பாதுகாப்புடன் உள்ள சட்டத்தை எதிர்த்து, சென்னையில் உள்ள பார்ப்பனர்- முன்னேறிய ஜாதியினரின் அமைப்பு ஒன்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது 1994ம் ஆண்டுமுதல்.
இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ‘ஸ்டே’ என்ற தடையாணை எதுவும் தராமல், இச்சட்டம் நீடிக்கும், ஆனால் முன்பு 50 விழுக்காடு திறந்த போட்டியில் இருந்தால் எவ்வளவு இடம் அவர்களுக்குக் கிடைக்குமோ அதற்கேற்ப கூடுதலான இடங்களை வழங்க வேண்டும் என்று ஓர் ஆணை பிறப்பித்தது. இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அந்த அமைப்பு உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று இதுபோன்ற ஓர் ஆணையைப் பெற்றது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆணை கூட, கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையை மட்டும் பொருந்தக் கூடியதாக மட்டுமே இருந்தது; வேலை வாய்ப்பைப் பொறுத்தவரை அது வழமைபோல் 69 சதவிகிதமாக நீடித்து வந்தது!.
கடந்த 3 வாரங்களுக்கு முன் தலைமை நீதிபதி மற்றும் இருவர் அடங்கிய பெஞ்ச் இச்சட்டம் அடுத்த ஆண்டிற்குள் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலக் குழுவின் ஆய்வின் பின் இதற்குரிய சதவிகித அளவு பற்றிய அவ்வாணையத்தின் பரிந்துரைக்கேற்ப முடிவு செய்யலாம் என்றெல்லாம் திட்டவட்டமான ஓர் ஆணையை இடைக்கால ஆணையாக தந்துள்ளது மிகவும் சரியான சமூக நீதியை ஒட்டிய ஆணையாகும்.
இதுகண்டு வழக்குப் போட்ட அமைப்பும், பார்ப்பன- முன்னேறிய ஜாதியினரும் ‘ஆகாயத்துக்கும், பூமிக்குமாகக் குதித்து’ தங்களது எரிச்சலைக் கொட்டித் தீர்த்துள்ளனர்.
இது போதாது என்று இந்த ஆணையை மறு ஆய்வு செய்யவேண்டும் என்று வழக்கு போட்டிருக்கிறார்கள்.
சமூகநீதி ஒடுக்கப்பட்டோருக்குக் கிட்டிவிடக் கூடாது என்பதை எவ்வளவு வெறியுடன் பார்ப்பனரும், அவர்தம் தாசானுதாசர்களாக உள்ள சில பார்ப்பனரல்லாத முன்னேறிய ஜாதியினரும் நடந்து கொள்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அவர்களது நடவடிக்கை அமைந்துள்ளது அல்லவா?.
உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு ஓர் இடைக்கால ஆணை.
இந்திரா சகானி- மண்டல் ஆணைய வழக்கில் 9 நீதிபதிகள் தந்த தீர்ப்பில் 50 விழுக்காட்டிற்குமேல் போகக்கூடாது என்பது பொதுவானது என்றாலும், அதற்கு விதிவிலக்குகள் இருக்கலாம்; மேலும் கூடுதலான இட ஒதுக்கீடு தேவை என்றால், அதற்குரிய போதிய நியாயங்கள் வாதங்கள் நிலைமைகள் இருந்தால் தரலாம் என்று கூறப்பட்டிருப்பதாலும், தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, மலைவாழ்
மக்களின் தொகை ஏறத்தாழ 85 விழுக்காட்டிற்கு மேல் உள்ளதால், அதனைச் சுட்டிக்காட்டிட, ஓர் ஆதாரபூர்வப் பணியை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் செய்ய ஆணையிட்டதோடு, அரசியல் சட்டத்தின் 15(4), (5), 16(4) ஆகிய பிரிவுகளின்படிதான் அந்த இடைக்கால ஆணையை அண்மையில் உச்சநீதிமன்றம் வழங்கியது!.
இதுவே ஏதோ இறுதி தீர்ப்புபோல குலை நடுங்கி, குதறிப் பாய சமூகநீதி எதிர்ப்பு சக்திகள் ஏன் முனைய வேண்டும்?.
“ஜாதிவாரி கணக்கெடுப்பு 1931க்குப் பிறகு நடைபெறாதபோது நீங்கள் தன்னிச்சையாக உங்கள் விருப்பம்போல 69 சதவிகிதம் கொடுத்தது எப்படி சரி என்றுதானே இதே விஜயன்கள் இதற்கு முன்பு பலமுறை கேட்டனர்?.
இப்போது உண்மை உலகறியச் செய்யும் வகையில் புள்ளி விவரங்களில் ஜாதி வாரி கணக்கெடுப்பில், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மலைவாழ் மக்கள் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருப்பது நியாயங்கள்தானே என்று எவருக்கும் புலப்படுவது உறுதியாகிவிடும் என்ற அச்சம்தானே இவர்களை இப்படி அலறி அலறி ஓடச் செய்கிறது!.
தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி சொல்லும் ஒரு பழமொழி நம் நினைவுக்கு வருகிறது.“எனக்குப் பைத்தியம் தீர்ந்துவிட்டது; அந்த உலக்கையைக் கொண்டு வா நான் அதைக் கோவணமாகக் கட்டிக் கொள்ளுகிறேன்! என்றானாம் ஒரு “பிரகளிபதி!’’ அதுபோன்ற இப்படிப்பட்ட முயற்சியில் ஈடுபடுகிறார்கள் போலும்!.நாடும் நல்லவர்களும், இவர்களைத் தூக்கிப் பிடிக்கும் ஏடுகளும், ஊடகங்களும் இனியாவது வர்களைப் புரிந்து கொள்ளுவார்களா?
சமூக நீதிக் கொடியை தமிழ்நாட்டில் இறக்கிவிட எவராலும் முடியாது. அது செந்நீராலும், கண்ணீராலும், வியர்வையாலும் ஏற்றப்பட்ட (சமூகநீதி) கொடியாகும் என்று கூறியுள்ளார் வீரமணி.

தமிழ் கட்சிகளின் அரங்கம் இன்று காலை முதன்முறையாக மட்டக்களப்பில் கூடியது
ஒன்பது தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பான தமிழ் கட்சிகளின் அரங்கம் இன்று காலை முதன்முறையாக மட்டக்களப்பில் கூடியுள்ளது. மட்டக்களப்பு ஆளுநர் விடுதியில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இவ்அரங்கம் கூடியுள்ளது. தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் வீ.ஆனந்தசங்கரி, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், தமிழ் தேசிய விடுதலை கூட்டணி தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் உட்பட புளொட், ஈபிஆர்எல்எப், டெலோ உட்பட 9 தமிழ் கட்சிகளின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் உள்ளுர் தலைவர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர் இங்கு குறிப்பிடத்தக்கது
தமிழ்ப்பெண்கள் புலிப்போராளிகளினால் இறுதியுத்தத்தின் போது பாலியல் வன்முறைக்கு ?
புலிகள் தமிழ்ப்பெண்களை யுத்தஇறுதிக்காலத்தில் பாலியல் வன்முறைக்குட்படுத்தினர்
August 13, 2010 by teavadai
புலிகள் தமிழ்ப்பெண்களை யுத்தஇறுதிக்காலத்தில் பாலியல் வன்முறைக்குட்படுத்தினர்
புலிகள் உச்சத்தில் இருந்தபோது தூக்கிவைத்து கொண்டாடியவர்கள் தற்போது எல்லாப்பழிகளும் புலிகளுக்கே என சொல்லி வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன் லண்டனின் தேசம் நெற் ஒழுங்கு செய்த கூட்டமொன்றில் உரையாற்றிய முன்னால் புலி ஆதரவாளரான வாசு சொன்ன செய்தியொன்று ஆச்சரியப்பட வைத்தது மட்டுமல்ல கோபத்தையும் உண்டாக்கியது.
வாசுதேவன் அண்மையில் இலங்கைக்கு சென்று வந்தவர். அவர் அங்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்திருந்தார். தமிழ்ப்பெண்கள் புலிப்போராளிகளினால் இறுதியுத்தத்தின் போது பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார். ஆமிக்காரன் வந்தால் இதைத்தான் செய்வான். அதை நாங்கள் செய்தால் என்ன தப்பு எனக் கூறி இந்த வன்முறையை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இத்தகைய வாக்குமூலங்களை இத்தகைய கூட்டங்களில் தெரிவிப்பதோடு நின்றுவிடாது எழுத்து வடிவில் வெளிவரவும் வேண்டும். வாசு போன்றவர்கள் கடந்த காலங்களில் புலிகளுக்கான ஆதரவு நிலைப்பாட்டில் இயங்கியவர். ரி.பி.சி வானொலியின் அரசியல் நிகழ்ச்சிகளில் முன்னொருகாலத்தில் பங்கெடுத்தவர். பின்பு ரி.பி.சி வானொலிக்கெதிராக செயற்பட்டவர். அவர் தற்போது மேற்படி கூட்டங்களில் புலிகள் தொடர்பான விமர்சனங்களை வைப்பது வரவேற்க்தக்கதாகும்
புலிகளின் தவறுகளுக்கு புலிகளின் ஆதரவாளர்களும் பொறுப்பானவர்கள். அதற்கான பிராயசித்தம் அவர்களே மேற்கொள்ளவேண்டும். தமிழ்மக்களின் இன்றைய மோசமான நிலமைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமைப்பாட்டில் இருந்து புலிபிரமுகர்களும் ஆதரவாளர்களும் தவறக் கூடாது.
தேசம்நெற் கூட்டத்தில் முன்னால் பலி ஆதரவாளரான வாசு தகவல்
புலம்பெயர்நாடுகளில் இருந்து அண்மையில் இலங்கைக்குப்போய் வந்தவர்களில் முள்ளிவாய்க்கால் யுத்தம்வரை புலிகளின் ஆதரவாளர்களாகவும் தற்போது இலங்கை அரசின் ஆதரவாளர்களாகவும் மாறியிருக்கும் பலர் அவ்வப்போது நடைபெறும் கூட்டங்களில் சொல்கின்ற விடயங்களை கேட்கும் வாய்ப்பு கிடைக்கிறது.புலிகள் உச்சத்தில் இருந்தபோது தூக்கிவைத்து கொண்டாடியவர்கள் தற்போது எல்லாப்பழிகளும் புலிகளுக்கே என சொல்லி வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன் லண்டனின் தேசம் நெற் ஒழுங்கு செய்த கூட்டமொன்றில் உரையாற்றிய முன்னால் புலி ஆதரவாளரான வாசு சொன்ன செய்தியொன்று ஆச்சரியப்பட வைத்தது மட்டுமல்ல கோபத்தையும் உண்டாக்கியது.
வாசுதேவன் அண்மையில் இலங்கைக்கு சென்று வந்தவர். அவர் அங்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்திருந்தார். தமிழ்ப்பெண்கள் புலிப்போராளிகளினால் இறுதியுத்தத்தின் போது பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார். ஆமிக்காரன் வந்தால் இதைத்தான் செய்வான். அதை நாங்கள் செய்தால் என்ன தப்பு எனக் கூறி இந்த வன்முறையை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இத்தகைய வாக்குமூலங்களை இத்தகைய கூட்டங்களில் தெரிவிப்பதோடு நின்றுவிடாது எழுத்து வடிவில் வெளிவரவும் வேண்டும். வாசு போன்றவர்கள் கடந்த காலங்களில் புலிகளுக்கான ஆதரவு நிலைப்பாட்டில் இயங்கியவர். ரி.பி.சி வானொலியின் அரசியல் நிகழ்ச்சிகளில் முன்னொருகாலத்தில் பங்கெடுத்தவர். பின்பு ரி.பி.சி வானொலிக்கெதிராக செயற்பட்டவர். அவர் தற்போது மேற்படி கூட்டங்களில் புலிகள் தொடர்பான விமர்சனங்களை வைப்பது வரவேற்க்தக்கதாகும்
புலிகளின் தவறுகளுக்கு புலிகளின் ஆதரவாளர்களும் பொறுப்பானவர்கள். அதற்கான பிராயசித்தம் அவர்களே மேற்கொள்ளவேண்டும். தமிழ்மக்களின் இன்றைய மோசமான நிலமைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமைப்பாட்டில் இருந்து புலிபிரமுகர்களும் ஆதரவாளர்களும் தவறக் கூடாது.
எந்திரன் ஆந்திரா ரூ 33 கோடி, கர்நாடகா ரூ 9.5 கோடி!
ரஜினியின் எந்திரன் (ரோபோ) படத்தின் ஆந்திர உரிமை இறுதியாக ரூ 33 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.
கர்நாடகத்தில் நேரடி தமிழ்ப் படமாகவே வெளியாகும் எந்திரனுக்கு ரூ 9.5 கோடி விற்பனை உரிமை விலையாகத் தரப்பட்டுள்ளது.
இந்த இரு மாநிலங்களிலுமே, எந்திரன் விற்பனை புதிய சரித்திரம் படைத்துள்ளது.
ஆந்திராவில் இந்தப் படம் ரூ 30 கோடிக்கு விற்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அது மோசடியாகத் தயாரிக்கப்பட்ட பத்திரம் மூலம் சிலர் செய்த சதி என சன் பிக்சர்ஸ் அறிவித்து சம்பந்தப்பட்டவர்களை சிறைக்கு அனுப்பியது.
இப்போது சன் பிக்ஸர்ஸ், ரோபோ தெலுங்குப் பட உரிமையை ரூ 33 கோடிக்கு விற்பனை செய்துள்ளது.
கர்நாடக மாநில உரிமைக்கு ரூ 10 கோடி வரை சன் பிக்சர்ஸ் கேட்டு வந்தது. இறுதியில் ரூ 9.5 கோடிக்கு முடிந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தமிழ்ப் படம் ஒன்று இந்த விலைக்கு விற்கப்படுவது இதுவே முதல்முறை. அந்த மாநிலத்தைப் பொறுத்தவரை ஒரிஜினல் கன்னடப் படத்தின் பட்ஜெட்டே இதில் மூன்றில் ஒரு பங்கு கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
ரோபோ இந்திப் பட உரிமை விலை பற்றி இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. இதன் ஆடியோவை மட்டும் வீனஸ் ரெக்கார்ட்ஸ் மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது. இன்று சனிக்கிழமை இரவு மும்பையில் ரோபோ ஆடியோவை வெளியிடுகிறார் அமிதாப் பச்சன்.

மீள் குடியேறும் மக்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு 50 000 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது
இடம்பெயர்ந்த முகாம்களிலிருந்து மீள் குடியேறும் மக்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு உயர்த்தப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
மீள் குடியேறுவோருக்கு இதுவரையில் 25 000 ரூபா வழங்கப்பட்டதுடன் எதிர்வரும் காலங்களில் அந்தத் தொகை 50 000 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளது.
மெனிக்பாம் இடம்பெயர் முகாமிலிருந்து சொந்த இடங்களில் மீள் குடியேறுவதற்கு முன்வரும் குடும்பங்களுக்கு கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.
அரசாங்க மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களினால் இந்தக் கொடுப்பனவு தொகை வழங்கும் நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.
ஏற்கனவே மீள் குடியேறியவர்களுக்கும் இந்தக் கொடுப்பனவு தொகை வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி இடம்பெயர் முகாமிலிருந்து மீள் குடியேறுவதற்கு செல்லும் குடும்பங்களுக்கு 50 000 ரூபா பணமும் 16 கூரைத் தகடுகளும் ஆறு மாத காலத்திற்கான உலர் உணவுப் பொருட்களும் விவசாய மற்றும் சமையலறை உபகரணங்களும் வழங்கப்படவுள்ளன

அடுத்த சுற்றுக்கு கலைஞர் அய்யா....ரெடி.....மலிவு விலை மளிகை ரூ.25:..
வெளிமார்க்கெட்டில் மளிகை பொருட்கள் விலை அதிகரித்ததால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதைத் தடுக்க தமிழக அரசு கடந்த 2008ல் ரேஷன்கடையில் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய உத்தரவிட்டது. அதன்படி மிளகாய் தூள் 250 கி., மல்லி 250 கி., கடலைப்பருப்பு 75 கி., மஞ்சள் 50 கி., சீரகம் 50 கி., வெந்தயம், கடுகு, சோம்பு, மிளகு தலா 25 கி., பட்டை, லவங்கம் 10 கி.,என 10 வித மளிகை பொருட்கள், தனித் தனி பாக்கெட்களில் அடைக்கப் பட்டு ரேஷன்கடைக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப் பட்டன. மொத்தம் 71.30 ரூபாய் அடக்கவிலை கொண்ட பத்து மளிகை பொருட்களை, மக்கள் நலன் கருதி அரசு 21.30 ரூபாய் தள்ளுபடி செய்து, 50 ரூபாய்க்கு விற்பனை செய்தது. ஆரம்பத்தில் ரேஷன்கடையில் விற்பனை செய்யப்பட்ட மளிகை பொருட் கள் தரமானதாக இருந்ததால், கார்டுதாரர்கள் போட்டி, போட்டு வாங்கினர்.
ஆரம்பத்தில், பிரபலமான சமையல் பொருள் உற்பத்தி நிறுவனம் தயார் செய்த மளிகை பொருட்கள் பாக்கெட்டில் அடைத்து விற்பனைக்கு வந்தது. கார்டுதாரர்களும் ஆர்வத்தோடு வாங்கினர். அதன் பின்னர், மளிகை பொருட்கள் தரம் குறைவாக இருப்பதாக கூறி பலர் 50 ரூபாய் மளிகை பொருள் வாங்குவதை தவிர்த்தனர். எனினும், ரேஷன் கடைகளில் மூன்றாண்டுகளாக 50 ரூபாய் மளிகை பொருள் விற்பனை செய்யப்பட்டது. குறிப்பிட்ட கார்டுதாரர்கள் தொடர்ந்து மளிகை பொருட்கள் வாங்கினர். இந்நிலையில், ரேஷனுக்கு சப்ளை செய்த மளிகை பொருள் பாக்கெட்டுகளை, ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் இருப்பு வைக்காமல் விற்று தீர்க்க வேண் டும் என, விற்பனையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், விற்பனையாளர்கள் மளிகை பொருள் பாக்கெட்டுகளை விரைவாக விற்று வருகின்றனர்.
பாக்கெட்டுகள் விற்று தீர்ந்தவுடன், ரேஷன் கடைகளுக்கு 25 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களை சப்ளை செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர். கலெக்டர்கள் மாநாடு முடிந்ததும், இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. அடுத் தாண்டு, சட்டசபை தேர்தல் நடந்து முடியும் வரை, ரேஷனில் இந்த மலிவு விலை மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படும்.

Rajeesh - Ooty,இந்தியா
2010-08-14 14:33:41 IST
ஒன்னு இலவசமா குடுங்க இல்லேன்னா மலிவா குடுங்க. மலிவா குடுத்தா தரமும் மலிவா இருக்கும்ன்னு யாருக்கு தெரியும்? அப்புறம் இந்திய பொருட்கள் தரமில்லைன்னு எல்லோரும் சொல்லட்டும். தமிழனை பிச்சைக்காரனாவே வெச்சிடுங்க என்ன?...
Ebinezer - Mumbai,இந்தியா
2010-08-14 14:02:31 IST
good...
xxx - Australia,இந்தியா
2010-08-14 13:57:45 IST
People are stupid and admitting this type of peple to rule Tamilnadu....
உண்மை விளம்பி - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-08-14 13:51:31 IST
இலவசம் கொடுத்து நாட்டு மக்களையும் கஜானாவையும் காலி செய்ய கலைஞர் முடிவு செய்து விட்டார். அடுத்து வரும் ஆட்சியாளர்கள் கன்னா-பின்னா என்று வரி விதிக்க இது வழி வகுக்கும்!...
ஹே ராம் - பெங்களூரு,இந்தியா
2010-08-14 13:06:23 IST
கொடுக்கிற கலைஞர் தெய்வம் கூரையை பிச்சிகின்னு கொடுக்கபோகிறது .. வோட்டு போட உள்ள அனைவரும் கொடுப்பதை எல்லாம் வாங்கி கொள்ள தயார் .. அனைவரும் வீட்டின் கதவுகளை திறந்தே வைத்திருக்கவும் .. எப்போது எது கிடைக்குமோ !!...
appavi - salem,இந்தியா
2010-08-14 13:02:15 IST
நல்லா நடக்குதுடா அரசாங்கம் ... கடைசியில தமிழ்நாட்டு காரன் கோமனத்தோட அலைவான்... அப்ப சொல்லுவானுங்க மானிய விலையில் கோமணம்... நாம எல்லோரும் வாங்கிட்டு ஒரு கைய முன்னாடியும் இன்னொரு கைய பின்னாடியும் மூடிக்கிட்டு போலாம்......
ராஜேஷ்குமார் - திருச்சி,இந்தியா
2010-08-14 11:29:54 IST
இந்த ADMK காரங்களுக்கு ரொம்ப பழக்கப்பட்ட ஒரு சில வார்த்தைகள் "ஊழல், கொள்ளை, டிஸ்மிஸ் பண்ணு" இவைகள் மட்டும்தானா? அதைத்தவிர தமிழில் பல நல்ல வார்த்தைகளும் நல்ல சிந்தனைகளும் உள்ளன....
சி.ராமசாமி - tup,இந்தியா
2010-08-14 10:04:38 IST
இலவசம். மலிவு விலை அடுத்த சுற்றுக்கு கலைஞர் அய்யா....ரெடி.......
சூர்யா - சென்னை,இந்தியா
2010-08-14 08:16:28 IST
ஊழல் ஊழல்...
உ.மெய்யன்பன் - chennai,இந்தியா
2010-08-14 07:49:52 IST
50 ரூபா பாக்கெட்டில் மிளகை பொடியில் செம்மன் இருந்ததால் தான் பிறகு யாரும் வாங்க வில்லை.நல்ல பொருளை விலை சற்று அதிகமா இருந்தாலும் வாங்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். எனவே மலிவு என்பதை விட நல்ல பொருளை சொல்வது போல கொடுங்கள்...
ஆArumainathan - kanchi,இந்தியா
2010-08-14 07:43:25 IST
சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்று ஆகிவிட்டது துவரம் பருப்புக்கு பதிலாக அதே போல இருக்கிற மைசூர் பருப்பை போடுகிறார்கள் மைசூர் பருப்பு வெளிமர்கட் விலை ரூபாய் 35 ஆனால் ரேசன் கடையில் 40...
raki - Hiroshima,ஜப்பான்
2010-08-14 07:19:13 IST
Everything is OK, but I don't understand why all the government supplies or the schemes like noon meal should carry the name or picture of the then CMs. It is not from their own pocket money. I wonder, if there is any law to contrl this. I am tired of seeing this old man and the fat lady in every government supplies....
ராஜேஷ் கருப்பையா - சவுதிஜுபைல்,இந்தியா
2010-08-14 07:06:44 IST
மலிவு விலையில் ஆணுறை கொடுக்க வேண்டியது தானே. அதையெல்லாம் விட்டு விட்டு தேவை இல்லாத வேலை செய்கிறார்கள், ஒரு நல்ல ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை முதல்வன் படம் பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டும், ஆட்சி நல்ல இருந்ந்தால் நாங்கள் ஏன் வெளிநாட்டிற்கு வந்து வேலை பார்க்கிறோம் இந்தியன் அந்நியனாக...
.க.செல்வம் - devakoottai,இந்தியா
2010-08-14 07:02:47 IST
யார் ஆட்சிக்கு வந்தாலும் நா இதை செஞ்சேன் அதை செஞ்சேன்னு அள்ளி விடுவிங்க , அதை ஒங்களோட சாதனை பட்டியல்ல (வெக்கமே இல்லாம ) சேத்துப்பிங்க , இது என்ன ஒங்க அப்பனோட பணமா? அரசாங்க கஜானாவுல எவ்வளவு இருப்பு இருக்கு ? கடந்தேன் இருக்கு , எல்லாமே இல்லவசமா கெடைகனும்முன்னு எதிபார்க்கிற மக்கள், மக்களை ஏமாத்தி பொழைக்கிற அரசியல்வாதி , குடிப்பழக்கத்திற்கு அடிமையான இளந்தாரிபயலுக , இருக்கிற நாடு???????????????????????????????????...
செந்தில் - மெம்பிஸ்,யூ.எஸ்.ஏ
2010-08-14 04:31:01 IST
வெரி nice...
குமார் - coimbatore,இந்தியா
2010-08-14 04:26:51 IST
அரசு கேபிள் டிவி அடக்கமாகச் செயல்படுகிறதா அல்லது அடக்கம் செய்யப்பட்டுவிட்டதா? ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேலாக வரவு செலவு திட்டத்தை கையாளும் வல்லமை கொண்ட மாநில அரசால் துவங்கப்பெற்ற அரசு கேபிள் டி.வி அடக்கி வாசிக்க வேண்டிய நிலை யாரால் உருவாக்கப்பட்டது? நீதி நேர்மையின் அடிப்படையில் தமிழகத்தில் ஆட்சி நடைபெறுமேயானால் ஒளிவு மறைவின்றி அரசு கேபிள் டி.வி துவக்கப்பட்ட நோக்கம், இன்றைய நிலை உட்பட அனைத்தையும் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்...
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-08-14 02:43:11 IST
ஹலோ, என்னங்க கவர்மென்ட் இது? விடியகாலைல பூளை கண்ணோட ஒருத்தன் எந்திரிச்சு, வாய் கொப்புளிச்சு, பல்லு விளக்கி, சோத்த தின்னு, டாஸ்மாக் ல போய் கட்டிங் போட்டுட்டு, ஊரு மேஞ்சிட்டு, திரும்ப ஒரு கட்டிங்க போட்டுட்டு, கால் பின்ன பின்ன ஊட்டுக்கு வந்து, இலவச டி.வி பாத்துட்டு, இலவச அரிசிய போட்டு, அரசு மளிகை சாமான போட்டு தின்னு புட்டு, தூங்கி, மறுபடி பூளை கண்ணோட எந்திரிச்சு, வாய் கொப்புளிச்சு... ஏங்க இதெல்லாம் ஒரு வாழ்க்கையா? இதுக்கா ஒரு அரசாங்கம் வெச்சு இருக்கோம். இப்படி ஒவ்வொன்னையும் நோகாம அரசாங்கமே கொடுக்கணும்னு எதிர்பார்த்தா எப்படிங்க நாடு முன்னேறும். நாட்டுக்குள்ள மக்கள் மாடுமாறி உழைக்கனும், வரி கட்டனும், பொண்டாட்டி புள்ளைங்க கூட சந்தோசமா இருக்கணும். அரசாங்கம் மக்கள் உழைக்கவும், நல்லா இருக்கவும் வழி வகைகளை ஏற்படுத்தி கொடுக்கணும். அதுக்குதானங்க அரசாங்கம். அதுக்குன்னு இப்படியா? ஓட்டு விழாது... ஓட்டு விழாது... ஆட்சி போய்டும் ன்னு இப்படியே பண்ணிட்டு இருந்தா வருங்கால சந்ததிங்க எல்லாம் எப்படிங்க நல்லா பொழைக்கும். என்னமோ போங்க இந்த ஓட்டுக்கு வேண்டி இப்படி ஏமாத்தியே சாவடிங்க எல்லோரையும். விட்டா தமிழக அரசின் பேன்சி ஸ்டோர், பழைய பேப்பர்கடை, தயிர்மண்டி, இஸ்திரி நிலையம், முடி திருத்தகம், டீ கடை இதெல்லாம் கூட ஆரம்பிச்சு இலவசமா சர்விஸ் பண்ணுவாங்க போல இருக்கு. நல்லா இருக்குடா உங்க அரசாங்கம்....
கே.ராஜசேகரன் - chennai,இந்தியா
2010-08-14 02:42:22 IST
சட்டசபை தேர்தலுக்குள் இன்னும் என்னென்ன கூத்துகள் நடக்குமோ? பொரி உருண்டை,கமர்கட் போன்ற பொருட்களையும்
கமர்கட் போன்ற பொருட்களையும் மானிய விலையில் கொடுப்பார்கள் yena.எந்த அளவுக்கு அவமானபடுத்தினாலும் அவமானபடாத மாதிரி நடிப்பதில் தமிழனுக்கு நிகர் யாருமில்லைஅனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-முதல்வர் ி அறிவுரை
சென்னை: மூச்சுப் பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியம் சீர்படும். அதை அனைவரும் செய்து பார்க்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் வேதாத்திரி மகரிஷி நூற்றாண்டு மற்றும் சிறப்பு அஞ்சல்தலை வெளியீட்டு விழா நடைபெற்றது. முதல்வர் கருணாநிதி வேதாத்திரி மகரிஷி உருவம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசா பெற்றுக்கொண்டார்.
விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது...
உடல் பயிற்சி, மூச்சுப் பயிச்சி, மனவள பயிற்சி ஆகியவற்றின் மூலம் மக்கள் உடல்நலத்தை பேணி பாதுகாக்க வேண்டும். உடல்நலத்தை பாதுகாத்து நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து சமுதாயத்துக்கும், நாட்டுக்கும் பாடுபட வேண்டும்.
எல்லோரும் மூச்சு பயிற்சி செய்ய வேண்டும். நானும் மூச்சு பயிற்சி செய்கிறேன். எனக்கு தேசிகாச்சாரியார் இதனை கற்றுக்கொடுத்தார். அவர் சூரிய வணக்கம் உள்ளிட்டவைகளை வட மொழியில் சொல்லிக்கொடுத்தார். நான் தமிழில்தான் இதனை சொல்லி செய்கிறேன். மனிதர் உள்ளே கடவுள் இருக்கிறார் அப்படியானால், மனிதர் உள்ளத்தில்தான் கடவுள் இருக்கிறார். சித்தர் சிவபாக்கியம் நட்ட கல்லும் பேசுமோ என்று நாத்திகம் பேசும்படியான வரியை கூறி அடுத்த வரியில் நாதன் உள் இருக்கையிலே என்கிறார் என்றார் கருணாநிதி.

பதிவு செய்தவர்: நன்றி
பதிவு செய்தது: 14 Aug 2010 6:04 pm
நல்ல விஷயம் . இப்படி பட்ட காரியத்தை செய்யவும்.
பதிவு செய்தவர்: கமெண்ட் குறித்து
பதிவு செய்தது: 14 Aug 2010 5:47 pm
ஒரு நாளைக்கு ஒரு கமெண்ட் தான் அனுமதியா? அப்படியென்றால் மாடரேட்டர் அதை அறிவிப்பாக செய்ய்யலமே. எதற்காக நாங்கள் மாய்ந்துகொண்டு அடிப்பதும், அது தோன்றாமல் இருப்பதும். it will discourage us to visit your site. news is not a dearer commodity nowadays.
யார் பற்ற வைத்தாலும் தீ பற்றும்: கனிமொழி
விருதுநகரில் தனியார் நர்சிங் கல்லூரி திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த கல்லூரி திறப்பு விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவை குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்குமாறு கே.கே.எஸ்.எஸ்.ஆரிடம் கல்லூரி நிர்வாகி சாவி. நாகராஜன் மெழுகுவர்த்தியை கொடுத்தார். இது பெண்கள் விவகாரம் என கே.கே.எஸ்.எஸ்.ஆர். விலகி கொண்டதுடன், இதை பெருமையாக மேடையில் சொன்னார்.
பின்னர் விழாவில் பேசிய கனிமொழி, அண்ணன் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பேச்சை நான் எப்போதும் மதிப்பேன். ஆனால் இன்று அவரது பேச்சை கண்டிக்கிறேன். கல்லூரி நிர்வாகி சாவி நாகராஜன் குத்துவிளக்கேற்ற சொன்னதற்கு, இது பெண்கள் விவகாரம் என்று ஒதுக்கிக்கொண்டீர்கள்.
யார் பற்ற வைத்தாலும் தீ பற்றும். இதில் ஆண், பெண் என்ற பேதம் கிடையாது. குத்துவிளக்கை பெண்கள் பற்ற வைத்தால்தான் பற்றுமா? அதுவும் சிவகாசி அருகில் இருந்து கொண்டு அண்ணன் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இப்படி பேசலாமா என்று கனிமொழி நகைச்சுவையுடன் பேச, கூட்டத்தில் இருந்து கே.கே.எஸ்.ஆர். உள்பட அனைவரும் கைதட்டி சிரித்தனர்.
ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான இராணுவ நீதிமன்ற தீர்ப்பை ஜனாதிபதி அங்கீகரித்துள்ளதாக இராணுவப்
ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான முதலாவது இராணுவ நீதிமன்ற தீர்ப்பை ஜனாதிபதி அங்கீகரித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் கேணல் துமிந்த கமகே தெரிவித்துள்ளார்.
ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ சேவையிலிருந்துகொண்டே அரசியலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி முதலாவது இராணுவ நீதிமன்ற விசாரணை நடைபெற்றது.
இதில் பொன்சேகா குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டதுடன் ஜனாதிபதியின் அங்கீகாரம் பெற்றபின் ஜெனரல் சரத் பொன்சேகாவின் இராணுவ தரநிலை வாபஸ் பெறப்படும் என இராணுவ நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இதை ஜனாதிபதி அங்கீகரித்துள்ளார்

கனேடிய கரையோர கப்பலின் கப்டன் கைது?்
சண் சீ கப்பல் கனேடிய பாதுகாப்பு பிரிவினரின் கடும் பாதுகாப்புடன் பிரிட்டிஸ் கொலம்பிய துறைமுகத்தில்! கப்பல் கப்டன் கைது?
பிரிட்டிஸ் கொலம்பிய துறைமுகத்தை நோக்கி கொண்டு செல்லப்பட்ட மேற்படி கப்பல் இன்று காலை 6:;00 மணிக்கு பிரிட்டிஸ் கொலம்பியா துறைமுகத்தை அடைந்துள்ளது. 500 சட்டவிரோத குடிவரவாளர்கள், பயங்கரவாதிகளுடன் சென்ற மேற்படி கப்பலின் கப்டன் கனேடிய பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன
கிளிநொச்சியை அல்லது மாங்குளத்தைநிர்வாக நகராக மாற்றும் முயற்சி கைவிடப்பட்டுள்ளது சர்வதேச கவனத்தை ஈர்த்து விடும்
வடமாகாண பணிகளை முன்னெடுப்பதற்காக கிளிநொச்சியை அல்லது மாங்குளத்தை முக்கிய நகர்களாக மாற்றுவதற்கு அரசாங்கம் முன்னர் மேற்கொண்டு வந்த நடவடிக்கைகளில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன. |
வடமாகாணத்திற்கான நிர்வாக அலுவலகங்கள் யாவும் தற்போது திருகோணமலையிலேயே இயங்கி வருகின்றன. இந்தநிலையில் அந்த கட்டமைப்பை கிளிநொச்சிக்கு மாற்ற வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரஸ்ரீ மேற்கொண்ட நடவடிக்கையை ஜனாதிபதி இடைநிறுத்தியுள்ளார். பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் விருப்பத்தின் பேரிலேயே இந்த உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்தார் என தெரிவிக்கப்படுகிறது. எனினும் தாம் முன்வைத்த யோசனையை ஜனாதிபதி திரும்பப் பெற்றுள்ளமைக்கு பாதுகாப்பு பிரச்சினையா? காரணம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அதனை விட அழிந்துபோயுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்து விடும் இது தமக்கு எதிரான சக்திகளின் சர்வதேச பிரசாரத்திற்கு பயன்படுத்தக்கூடும் என்ற சந்தேகமே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
15 வருடங்களில் 37 ஆயிரம் இலங்கையர்களுக்கு கனடா அகதி அந்தஸ்து
கடந்த 15 வருடங்களில் 37 ஆயிரம் இலங்கையர்களுக்கு கனடா அகதி அந்தஸ்து வழங்கி உள்ளது என்று இலங்கைக்கான முன்னாள் கனேடிய உயர்ஸ்தானிகர் மார்ட்டின் கொலிக்கொட் இத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது, உலகிலேயே மிகவும் இலகுவான முறையில் அகதிகள் புகலிடம் பெறக்கூடிய இடமாக கனடா இருந்து வருகிறது. ஆகவேதான் புகலிடம் கோரி வரும் ஈழத் தமிழர்கள் கனடாவை வந்தடைகின்றமையை மிகவும் விருப்பத்துக்கு உரிய தெரிவாகக் கண்டுள்ளார்கள்.
கனடா மிகவும் மனிதாபிமானம் உடைய நாடு. ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்ற போது கனடாவில்தான் மிக அதிகமான அளவில் அகதிகளுக்கு அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டு வருகின்றது. கனடாவை வந்தடைந்து அரசியல் தஞ்சம் கோருவோரில் 50 சதவீதம் ஆனவர்களுக்கு அகதி அந்தஸ்து கிடைத்து விடும். ஆனால் ஏனைய நாடுகளில் 15 சதவீதம்தான் இதற்கான வாய்ப்பு இருக்கின்றது.
எனவே கனடாவுக்கு வருபவர்கள் அரசியல் தஞ்சம் பெறுகின்றமைக்கான வாய்ப்புக்கள் ஏராளம். உதாரணமாக அகதி அந்தஸ்து கோரி 2003ஆம் ஆண்டு பிரித்தானியா சென்றிருந்த ஈழத் தமிழரில் 2 சதவீதத்தினருக்குத்தான் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டிருக்கிறது. அதே போல ஜேர்மனியில் 4 சதவீதமானோருக்குத்தான் அரசியல் தஞ்சம் வழங்கப் பட்டிருக்கின்றது.
ஆனால் கனடாவில் 76 சதவீதமானோருக்கு அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டு இருக்கின்றது. எனவே கனடா இந்த அகதிகளுக்கு பொன் முட்டை இடும் வாத்து மாதிரியாகும். அத்துடன் அகதிகள் என்று சொல்லி வருபவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை மேற்கொள்ள அரச செலவில் சட்டத்தரணிகளின் சேவை பெற்றுக் கொடுக்கப்படுகிறது.
அதே போல இலவச சுகாதார நலன்புரி சேவைகள் வழங்கப்படுகின்றன. ஈழத் தமிழர்கள் கனடாவுக்கு வருகை தருகின்றமையை பெரிதும் விரும்புகின்றமைக்கு இன்னொரு பிரதான காரணியும் உண்டு. பல வருடங்களாக கனடாவில் கணிசமான தொகையில் ஈழத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள்
சிலர்தான் எதிர்க்கிறார்கள். என் மீது அவதூறுகள் பரப்பப்படுகின்றன. குறிப்பிட்ட சிலர்தான்
இலங்கை சென்றதால் சர்ச்சையில் சிக்கிய நடிகை அசின் ரகசியமாக சென்னை வந்தார். மலையாளத்தில் ஹிட்டான பாடிகார்ட் படம் தமிழில் ரீமேக் ஆகிறது. சித்திக் இயக்குகிறார். இதில் விஜய், அசின் ஜோடியாக நடிக்கின்றனர்.
இப்படத்தின் இறுதிகட்டப் பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இதில் நடிப்பதற்காகவே அசின் கடந்த திங்கட்கிழமை அன்று வந்தார்.
கிழக்குகடற்கரை சாலையில் ஒரு பங்களாவில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தார். அசம் பாவிதங்கள் நிகழாமல் தடுக்க பங்களா வெளியே போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர்.
இன்று எண்ணூரில் படப்பிடிப்பு நடந்தது. அங்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நடிகர் நடிகைகள் இலங்கை செல்லக் கூடாது என்று திரைப்பட சங்கங்கள் தடை விதித்துள்ளன.
இந்த தடையை மீறி அசின் இந்தியில் தயாராகும் ரெடி படப்பிடிப்புக்காக இலங்கை சென்றார். இலங்கை அதிபர் ராஜபக்சே மனைவியுடன் தமிழர் பகுதிகளில் சுற்றுப் பயணமும் செய்தார். அவர் இலங்கை செல்லக் கூடாது என்று ஏற்கனவே திரைப்பட சங்கங்களும் நாம் தமிழர் இயக்கமும் வற்புறுத்தின. அதை மீறி சென்றதால் எதிர்ப்பு வலுத்தது.கடந்த மாதம் சென்னையில் கூடிய நடிகர் சங்க பொதுக்குழுவில் அசினுக்கு ராதாரவி, சத்யராஜ் போன்றோர் கண்டனம் தெரிவித்தனர். அசின் நடிகர் சங்கத்தில் ஆஜராகி மன்னிப்பு கேட்க வேண்டும், என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் அசின் இலங்கை சென்ற விவகாரம் குறித்து திரைப்பட சங்கங்களின் கூட்டுக்குழு கூடி விரைவில் முடிவு செய்யும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராமநாராயணன் கூறி உள்ளார்.இலங்கை சென்ற விவகாரம் நடிகர் சங்கத்தின் கண்டனம் போன்றவை குறித்து அசினிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
இலங்கை பயணத்தை சிலர்தான் எதிர்க்கிறார்கள். என் மீது அவதூறுகள் பரப்பப்படுகின்றன. குறிப்பிட்ட சிலர்தான் இதுபோன்ற செய்திகளை பரப்புகிறார்கள். ஏற்கனவே இந்தி படப்பிடிப்புக்காக மும்பை போனதும் நான் அங்கேயே தங்கிவிட முடிவெடுத்து விட்டதாக வதந்திகள் கிளப்பினர். தொழில் விஷயமாகத்தான் அங்கு போனேன்.
மலையாளத்தில் இருந்து தமிழ் படங்களுக்கு வந்ததும் சென்னையில் தங்கினேன். அதுபோல் இந்திப்படங்களில் நடிப்பதால் மும்பைக்கு போனேன்.
தமிழ் படங்களில் நடிக்க மறுப்பதாக வரும் தகவல்களிலும் உண்மையல்ல. சித்திக் இயக்கும் தமிழ் படத்தில் தற்போது நடித்துக்கொண்டு இருக்கிறேன். இந்த படத்தின் கதை மூன்று வருடங்களுக்கு முன்பே எனக்குத் தெரியும்.
சல்மான்கான் ஜோடியாக ரெடி இந்திபடத்தில் நடிக்கிறேன். சல்மான்கான் ஜாலியாக பழகக்கூடியவர். அவருடன் நடிப்பது சிறந்த அனுபவம்.
கொச்சின் ஐ.பி.எல். கிரிக்கெட் அணிக்கு விளம்பர தூதுவராக இருப்பது பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எனக்கு விளையாட்டு ரொம்ப பிடிக்கும் என்றார்.

ஆட்சேபம, வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களை புத்தளம் வாக்காளர் இடாப்பில் பதியும் நடவடிக்கைக்கு
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து தற்காலிகமாக தங்கியுள்ள முஸ்லிம்களை புத்தளம் வாக்காளர் இடாப்பில் பதியும் நடவடிக்கைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சேபம் வெளியிட்டுள்ளது.1991ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளினால் வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதாகவும்இ அவர்களே இன்று புத்தளத்தில் தற்காலிமாக தங்கியிருப்பதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் சீமெந்து வீடுகளை கட்டியிருக்கும் முஸ்லிம்கள் நிரந்தரமாக புத்தளத்தில் வதிவதாக தேர்தல் செயலகம் மதிப்பீடு செய்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் எம்.ரீ.ஹசன் அலி தெரிவித்துள்ளார். மேலதிக தேர்தல் ஆணையாளர் பீ.எம். சிறிவர்தனவினால் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவிற்கு வடக்கு இடம்பெயர் முஸ்லிம்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
லிஃப்ட் கதவு திறந்தபோது கீழே விழுந்தது அவனுடைய உயிரற்ற உடல்
கதையல்ல...எச்சரிக்கை!
அவனுக்கு வயது 22. மாநிறம். . அதிர்ந்து பேசமாட்டான். மிக அமைதியானவன். சொந்த ஊர் என்னவோ திருவண்ணாமலைதான். ஆனால் வசிப்பது வறுமைக்கோட்டுக்குகீழே. அவனுடைய தந்தை. தேர்ந்த நெசவாளி. அவருக்கு உதவியாய் அவனது அம்மா. கல்லூரி செல்லும் வயதில் ஒரு தங்கை. அவனுடைய தந்தை என்னமோ ஸ்ரீபெரும்புதூர் ஜாம்பவான்களுக்கு அடிபணியாதவர்தான். ஆனால் அவன் பணிந்துபோக தயாராகயிருந்தான். வறுமைக்கோடு. எப்பாடுபட்டேனும் இந்த கோட்டிலிருந்து விலகி தன் குடும்பத்தை ஒரு நல்ல நிலைமைக்குக் கொண்டுவந்துவிட வேண்டும் என்கிற வெறி.
பெரும் முயற்சிக்குப் பின்னர், துபாயில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் அவனுக்கு வேலை கிடைத்தது. மாதச் சம்பளம் ரூ.10000. பிறந்தது முதல், அதிகபட்சம் இரண்டு நாட்களுக்கு மேல் தன் பெற்றோரை பிரிந்ததில்லை அவன். பணியில் சேர்ந்த பின் 2 வருடத்துக்கு ஒரு முறைதான் வீட்டுக்குப் போக முடிந்தது. இந்த பிரிவு அவனை வருத்தமடையச் செய்தாலும், தன் குடும்பம் நல்ல பொருளாதார நிலைமைக்கு உயர இது அவசியம் என்று கருதி தன்னைத் தானே தேற்றிக்கொண்டான்.
பணம்..பணம்..பணம்..இது ஒன்றே முக்கியம். குடும்பத்தின் வறுமை ஒழிய தன் கவனம் முழுதும் பணம் சம்பாதிப்பதிலேயே இருக்க வேண்டும் என்பது அவனுடைய லட்சியம், வெறி, சித்தாந்தம், கொள்கை, கோட்பாடு எல்லாமே. காலை 6:30 மணிக்கு அவனுடைய ஷிஃப்ட் துவங்கும். ஆறு மணிக்கு முன்னே அலுவலகத்துக்குச் சென்றுவிடுவான்.
அன்று திங்கள் கிழமை. பனி விலகாத காலை நேரம். ஆறாவது தளத்தில் உள்ளது அலுவலகம். தரைத் தளத்தில் லிஃப்ட்டினுள் நுழைந்து 6ஐ அழுத்தினான். ஆறாம் தளம் சென்றடைந்தவுடன் லிஃப்ட் கதவு திறந்தபோது கீழே விழுந்தது அவனுடைய உயிரற்ற உடல்!
அங்கிருந்த செக்யூரிட்டிகள் அவனுடைய டீமுக்கு தகவல் அளித்து அவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர் மறுநொடியே சொன்னார், "ஸாரி ஹி ஈஸ் நோ மோர்". 'டெட் ஆன் அரைவல்' என்று ரிப்போர்ட்டில் பதிவு செய்தார்.
பின்னர் அவனுக்கு நெருங்கிய நண்பர்களிடம் விசாரித்தபோது தெரியவந்தது. அவனுக்கு புகை, குடி என்று எந்த பழக்கமும் இல்லை. ஒவ்வொரு மாதமும் அவனுக்கென்று ரூ.3000 எடுத்துக்கொண்டு மீதி பணத்தை தன் குடும்பத்துக்கு அனுப்பிவிடுவான். அந்த 3500ல் போக்குவரத்து, அலைபேசி, உணவு ஆகியவற்றிற்கான செலவுகள் அடங்கும். செலவைக் கட்டுப்படுத்த அவன் மேற்கொண்ட ஒரு முடிவு..தினமும் காலை உணவைத் தவிர்த்து ஒரு நாளைக்கு இரு வேளை மட்டுமே உண்ணுவது.
இந்த பழக்கம் வெகு நாட்களாய்த் தொடர்ந்து உடலுக்குள் வாயு உருவாகி அது இதயத்திற்குச் செல்லும் குழாயை பாதித்து......22 வயதில் மாரடைப்பு! இது ஏதோ கற்பனையாக எழுதப்பட்ட வரி அல்ல. அவனுடைய உணவு பழக்கத்தை அவன் நண்பர்கள் கூறக்கேட்டு அறிந்த பின் மருத்துவர் சொன்னது.
பணம் ஒன்றையே பிராதனமாகக் கருதி பரபரவென பறந்துகொண்டிருக்கும் இந்த யுகத்தில், நம்மில் பெரும்பாலானோர் காலை உணவைத் தவிர்த்துவிடுகிறோம்/குறைத்துவிடுகிறோம். பெரும்பாலும் நாம் சொல்லும் காரணம்.."டைம் இல்ல". சாப்பிடுவதற்குக் கூட நேரமில்லாமல் அப்படி என்ன கிழித்துவிடப் போகிறோம்?
இதற்கு மேல் இதைப்பற்றி நீங்களே சொல்லுங்கள்!
பி.கு: நானும் இந்த மடத்தனமான காரணத்தைக் காட்டி பல நாட்கள் காலை உணவைத் தவிர்த்திருக்கிறேன். அவன் மரணம்...எனக்கொரு பாடம். அன்றிலிருந்து என்னுடைய காலை உணவு நேரம் 8 அல்லது 8:30க்குள்
Infosys, மனித வள மேம்பாட்டு மேனேஜர் மனைவியை கொன்றதாக
மனைவியை கொன்றதாக இன்போஸிஸ் மேனேஜர் கைது
பெங்களூரூவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனமான இன்போஸிஸ் கம்பெனியின் மனித வள மேம்பாட்டு பிரிவில் மேனேஜராக பணிபுரிந்து வருபவர் சதீஷ்குப்தா. இவரது மனைவி பிரியங்கா இவர்ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் ஆர்பிஐ லே அவுட் பகுதியில் வசித்து வந்தனர். இந்நிலையில் மனைவியை கொலை செய்ததாக பெங்களூரூ போலீசார் சதீஷை கைது செய்துள்ளனர். கொலைக்கு ஆதாரமாக அவர் பயன்படுத்தி வந்த செல்போனையும் கைப்பற்றி மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.
நக்சலைட்கள்?600 டன் வெடிபொருட்களுடன் வந்த 61 லாரிகள் மாயம்
600 டன் வெடிபொருட்களுடன் வந்த 61 லாரிகள் மாயம்-நக்சலைட்கள் கடத்தலா
சாகர்: 600 டன் வெடிபொருட்கள் ஏற்றப்பட்ட 61 லாரிகளைக் காணவில்லை. இதனால் மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றை நக்சலைட்கள் கடத்தியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் உள்ள அரசு வெடிபொருள் கிட்டங்கியிலிருந்து இந்த வெடிபொருட்கள் ஏற்றிய லாரிகள் மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள கணேஷ் எக்ஸ்புளோசிவ்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டன.
மொத்தம் 61 லாரிகளில் 600 டன்னுக்கும் மேற்பட்ட வெடிபொருட்கள் அதில் இருந்தன. ஆனால் இதுவரை ஒரு லாரி கூட வந்து சேரவில்லையாம்.
இதுகுறித்து வெடிபொருட்களை அனுப்பி வைத்த ராஜஸ்தான் எக்ஸ்புளோசிவ்ஸ் அன்ட் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் உபாத்யாய் கூறுகையில், உரிய உரிமங்ககளுடன் வந்த லாரிகளில்தான் இந்த வெடிபொருட்களை ஏற்றி அனுப்பி வைத்தோம். ஆனால் தற்போது ஒரு லாரி கூட வந்து சேரவில்லை என எங்களுக்குத் தகவல் வந்துள்ளது. ஆனால் இதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்றார்.
இந்த லாரிகள் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை படிப்படியாக அனுப்பி வைக்கப்பட்டவையாகும். அதில் டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் அடக்கம்.
இதில் அதிர்ச்சியூட்டும் செய்தி
என்னவென்றால் சம்பந்தப்பட்ட கணேஷ் கெமிக்கல்ஸ் நிறுவனம் தற்போது பூட்டப்பட்டுள்ளது. அதன் உரிமமும் கடந்த மார்ச் மாதமே முடிவடைந்து விட்டதாம். பிறகு எப்படி இத்தனை டன் வெடிபொருட்களை அந்த நிறுவனத்திற்கு அனுப்பினர் என்பது தெரியவில்லை.
கணேஷ் வெடிபொருள் நிறுவனத்தின் உரிமையாளர்களும் தலைமறைவாக உள்ளனர். இதனால் பாதுகாப்புப் படையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவர்கள் வெடிபொருட்களை நக்சலைட்கள் அல்லது தீவிரவாதிகள்
கையில் ஒப்படைத்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கடந்த 2008ம் ஆண்டு சூரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட டெட்டனேட்டர்கள், இதே தோல்பூர் பேக்டரியிலிருந்துதான் டெலிவரி செய்யப்பட்டது என்பதால் 600 டன் வெடிபொருள் மாயமான சம்பவம்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாகர்: 600 டன் வெடிபொருட்கள் ஏற்றப்பட்ட 61 லாரிகளைக் காணவில்லை. இதனால் மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றை நக்சலைட்கள் கடத்தியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் உள்ள அரசு வெடிபொருள் கிட்டங்கியிலிருந்து இந்த வெடிபொருட்கள் ஏற்றிய லாரிகள் மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள கணேஷ் எக்ஸ்புளோசிவ்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டன.
மொத்தம் 61 லாரிகளில் 600 டன்னுக்கும் மேற்பட்ட வெடிபொருட்கள் அதில் இருந்தன. ஆனால் இதுவரை ஒரு லாரி கூட வந்து சேரவில்லையாம்.
இதுகுறித்து வெடிபொருட்களை அனுப்பி வைத்த ராஜஸ்தான் எக்ஸ்புளோசிவ்ஸ் அன்ட் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் உபாத்யாய் கூறுகையில், உரிய உரிமங்ககளுடன் வந்த லாரிகளில்தான் இந்த வெடிபொருட்களை ஏற்றி அனுப்பி வைத்தோம். ஆனால் தற்போது ஒரு லாரி கூட வந்து சேரவில்லை என எங்களுக்குத் தகவல் வந்துள்ளது. ஆனால் இதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்றார்.
இந்த லாரிகள் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை படிப்படியாக அனுப்பி வைக்கப்பட்டவையாகும். அதில் டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் அடக்கம்.
இதில் அதிர்ச்சியூட்டும் செய்தி
கணேஷ் வெடிபொருள் நிறுவனத்தின் உரிமையாளர்களும் தலைமறைவாக உள்ளனர். இதனால் பாதுகாப்புப் படையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவர்கள் வெடிபொருட்களை நக்சலைட்கள் அல்லது தீவிரவாதிகள்
கடந்த 2008ம் ஆண்டு சூரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட டெட்டனேட்டர்கள், இதே தோல்பூர் பேக்டரியிலிருந்துதான் டெலிவரி செய்யப்பட்டது என்பதால் 600 டன் வெடிபொருள் மாயமான சம்பவம்
பதிவு செய்தவர்: ராஜா
பதிவு செய்தது: 14 Aug 2010 3:02 am
குண்டு ஒண்ணு வெக்கப் போறோம், 62 லாரி குண்டு பல வெக்கப் போறோம். வேட்குண்டு என்றால் எமது இனம் எமது இனம் என்றால் வெடிகுண்டு. நாங்கள் நாங்கள் உள்ள தேசத்தை விட மதத்தை அதிகமாக நேசிக்கிறோம். ஆகையால் தான் எம்மதத்தவரான எதிரி நாட்டுக்கு குடை பிடிக்கிறோம்.
குமரன் பத்மநாதனுக்கு அரசாங்கம் காட்டும் மன்னிப்பு் ஏற்றுக்கொள்ளமுடியாதவை.ஆனந்தசங்கரி
கே.பி நடத்தப்படும் முறை ஏற்றுக்கொள்ளப்படமுடியாதவை
- வி. ஆனந்தசங்கரி
தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளும் இடம்பெயர்ந்த மக்களும் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் தலைவர் குமரன் பத்மநாதனுக்கு (கே.பி.) அரசாங்கம் காட்டும் மன்னிப்பும் கே.பியை நடத்தும் முறையும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி கூறியுள்ளார். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமித்தபோதே வி.ஆனந்தசங்கரி இவ்வாறு கூறினார். 10,500 இளைஞர்கள் இன்னும் புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஆனந்தசங்கரி, எமது பிள்ளைகளான அவர்கள் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருப்பது குற்றச்செயல் எனவும் விமர்சித்தார்.
கே.பி. யிலும் அவரின் ஆதரவாளர்களிலும் அரசாங்கம் தங்கியிருப்பது குறித்தும் ஆனந்தசங்கரி எச்சரித்தார். இலங்கையின் அபிவிருத்திக்காக அவர் முதலீடு செய்யப்போவதாகக் கூறப்படும் பணம் சட்டவிரோதமான, பாவக் காரியமான முறையில் திரட்டப்பட்டதாகும். அப்பணத்தை அபிவிருத்திக்குப் பயன்படுத்தவதன் மூலம் மேற்படி பாவத்தில் இந்நாடு பங்கு வகிக்க வேண்டுமென நான் எண்ண வில்லை என அவர் கூறினார். யாழ். மாவட்டத்திலுள்ள மக்களின் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள மக்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வி. ஆனந்தசங்கரி கூறினார்.

அகதிகள,கனேடிய மக்கள் ஆத்திரமடைந்துள்ளதாக கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர
இலங்கையில் இருந்து 500க்கும் அதிகமான அகதிகள் கனடாவின் வன்குவார் நோக்கி வந்துள்ள நிலையில் கனேடிய விக்டோரிய மாநிலத்தின் பொது மக்கள் ஆத்திரமடைந்துள்ளதாக கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கெயித் மார்ட்டின் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பல்வேறு முறைப்பாட்டு தொலைபேசி அழைப்புகள் தமக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அதிக அளவிலான தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது காரியாலய தொலைபேசிகளை குரல் பதிவு (வொய்ஸ் மெயில்) முறையில் செயற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் கனடாவுக்கு வருவதையிட்டு விக்டோரியா மாநில மக்கள் விருப்பம் கொள்ளவில்லை எனவும், ஏற்கனவே சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் தமிழர்களுக்கு அரசாங்கத்தினால் பொது சேவைகள் வழங்கப்படுவது தமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என விக்டோரிய மாநில மக்கள் கருதுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில் முன்னர் 200 அகிதிகள் என கூறப்பட்ட அகதிகளின் எண்ணிக்கை தற்போது 500 என்பதை ஒட்டாவா நிர்வாகம் உறுதி செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் பாரிய எண்ணிக்கையிலான மக்கள் தொடர்பில் ஒரேடியாக நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் அவர்களில் பலரை வந்தவழியிலேயே திருப்பு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

வடக்கு கிழக்கு கடற்பரப்பில் தென்பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டார்கள் - அமைச்சர்
வடக்கு கிழக்கு கடற்பரப்பில் தென்பகுதி மீனவர்கள் ஒருபோதும் மீன்பிடிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் இது பற்றி நீங்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் இவ்விடயத்தில் எமது ஜனாதிபதியும் உறுதியாகவுள்ளார் என கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
வலைப்பாடு பகுதியில் பூநகரி பிரதேச மீனவர்களுடனான சந்திப்பு வலைப்பாடு புனித அன்னம்மாள் பங்குத் தந்தை சில்வெஸ்ரார் அடிகளார் தலைமையில் நேற்றைய தினம் (12) நடைபெற்ற நிகழ்விலே உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் உரையாற்றுகையில் இங்குள்ள மக்கள் 30 வருட கொடிய யுத்தத்தினால் பாரிய அழிவுகளைச் சந்தித்துள்ளனர். அவர்கள் எல்லாவற்றையும் இழந்த நிலையி;ல் உள்ளனர். ஏன்னாலான உதவிகளை இவர்களுக்கு வழங்கத் தயாராக இருக்கிறேன் எனவும் இவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கூறினார்
மீனவக் குடும்பங்களுக்கு வீட்டுத் திட்ட வசதியும் இவர்களுக்கு ஒரு ஐஸ் தொழிற்சாலை ஒன்றும் செய்து கொடுக்க வேண்டுமென அப்பிரதேச மக்கள் சார்பாக அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமாரின் அழைப்பின் பேரில் வலைப்பாட்டுக்கு விஜயம் செய்த அமைச்சர் ராஜித சேனாரட்ன அவர்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ள ஐஸ் சேமிப்பு களஞ்சியத்தின் நிர்மான வேலைகளை பார்வையிட்ட பின் அப்பகுதி மீனவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த ஐஸ் சேமிப்பு களஞ்சியம் கௌரவ பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே வருகையின் போது தங்களால் விடப்பட்ட கோரிக்கையின் அடிப்படையிலேயே நிர்மானிக்கப்படுகிறது எனவும் இங்கு வடக்கு பிராந்தியத்தின் கடல்களில் மீன்பிடிப்பதற்கு அப்பிரதேச மீனவர்களுக்கு உரிமையுண்டு இங்கு வேறு எவரும் அத்துமீறி மீன்பிடிப்பதற்கு ஒரு போதும் கடற்றொழில் அமைச்சு அனுமதிக்காது என உறுதியாக கூறினார்.
ஆனந்தசங்கர, 10 ஆயிரம் பேரும் எமது அப்பாவி பிள்ளைகள்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்டுவரும் 10,000 பேரையும் விடுவிக்க வேண்டும்
அத்துடன் வடக்கில் மக்களின் சுதந்திரமான இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்து வதற்காக அங்கு சிவில் நிர் வாகத்தை முழுமையாக ஏற் படுத்த வேண்டுமென்றும் அவர் வலி யுறுத்தினார். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழுவின் பகிரங்க அமர்வில் ஆனந்தசங்கரி நேற்று சாட்சியமளித்தார். குழுவின் தலைவர் - முன்னாள் சட்ட மா அதிபர் சீ.ஆர்.டி. சில்வா தலைமையில் நடைபெற்ற
விசாரணையில் சுமார் 45 நிமிடம் சாட்சியமளித்த கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி, குழுவின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.
“தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் பேரும் எமது அப்பாவி பிள்ளைகள். அவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டு இந்த நிலைக்கு ஆளாகியுள்ளார்களே தவிர எந்தக் குற்றமும் அறியாதவர்கள். அவர்கள் உடலால் சரணடைந்திருந்தாலும் அவர்கள் உணர்வால் சரணடையவில்லை. அவர்கள் அப்பாவிகள். அவர்களைப் பெற்றோரிடம் ஒப்படைத்தால், அவர்கள் சமூகமயப் படுத்துவார்கள்.
யுத்தம் முடிவடைந்திருக்கும் நிலையில் எமது மக்கள் சுதந்திரமாக அவர்களின் சொந்த மண்ணில் வாழ வேண்டும். இது எமது நாடு. எமது மண். நாம் இந்த நாட்டையே நேசிக்றோம். நான் இந்த நாட்டையே பிரதிநிதித்துவப் படுத்துகிறேன்.
வடக்கில் முழுமையாக சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும். மக்கள் சுதந்திரமாக வாழும் சூழல் ஏற்படாத வரை நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. எமது பிரச்சினை 50 வருடம் பழைமை வாய்ந்தது. இன்னமும் தீர்வு காணப்படவில்லை” என்று குறிப்பிட்ட ஆனந்த சங்கரி பாதிக்கப்பட்டவர் களுக்கு குறிப்பிட்ட தொகை நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மொழிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தமிழ், சிங்கள மொழிகளைப் பாடசாலை மட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என்றதுடன் ஆங்கிலக் கல்வியைப் போதிப்பதற்காக இந்தியா விலிருந்து ஆசிரியர்களைத் தருவிக்கலாம் என்றும் யோசனை தெரிவித்தார்.
ஆணைக்குழுவின் முன் நேற்று சாட்சியமளித்த எஸ். எல். குணசேகர, “புலிகள் இயக்கத்திற்கும் ஜே. வி. பி. யினருக்கும் வேறுபாடு கிடையாது. இவர்களும் வன்முறையில் ஈடுபட்டார்கள். ஆனால், இரு அமைப்புக்களின் ஒழுங்கு நடைமுறையே மாறுபட்டிருந்தது” என்று சுட்டிக்காட்டினார். ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்றும் நாளையும் வவுனியாவில் நடைபெறும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)