மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இழப்பு தமிழக
மக்களின் மனதில் நீங்கா துயரத்தை அளித்துள்ளது. மேலும், சமூக
வலைத்தளங்களில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பும் வகையில் அவரின் இறப்பு
அமைந்துள்ளது.
இந்நிலையில், ஜெயலலிதாவின் பல்லாயிரக் கணக்காண சொத்துகளைப்பற்றி அறிந்திராத நிலையில் அவற்றின் விவரத்தை தற்போதும் பார்ப்போம்.
ரொம்ப நீளமா இருக்கு..! பொறுமையாக படிக்கவும்..
1. சென்னை போயஸ் தோட்டம்- கதவிலக்கம் 36 ல் பத்து கிரவுண்டு 330 சதுர அடி நிலமும், கட்டடமும்
3. ஐதராபாத் ஸ்ரீநகர் அலுவலர் காலனியில் 651.18 சதுர மீட்டர் கட்டடம்.
3. ஐதராபாத் அருகே ஜிடிமெட்லா மற்றும்
பஷீராபாத் கிராமங்களில் இரண்டு பண்ணை வீடுகள், பணியாளர்களுக்கான வீடுகள்,
மற்றும் திராட்சை தோட்டம் (11.35 ஏக்கர்)
4. ஆந்திரப் பிரதேசம் மேச்சால் வட்டம், பஷீராபாத் கிராமத்தில் சர்வே எண்.93/3 ல் 3.15 ஏக்கர் நிலம்.
5. செய்யாறு கிராமம், சர்வே எண். 366/2, 5, 6 ல் விவசாய நிலம் 3.4 ஏக்கர் நிலம்.
6. சென்னை பட்டம்மாள் தெரு, கதவிலக்கம் 19இல் நிலமும், கட்டடமும்.
7. சென்னை, சந்தோம், அந்து தெரு, ஆர்.ஆர்.அடுக்குமாடி குடியிருப்பில், குடியிருப்பு எண் 7.
8. சென்னை, அண்ணா சாலையில், 602 ஆம் இலக்கத்தில் கடை எண். 14
9. சென்னை, நுங்கம்பாக்கம், காதர்
நவாஸ்கான் சாலை, ஆர். எஸ். எண். 58/5, கதவிலக்கம் எண். 14 ல் மொத்தம் 11
கிரவுண்ட், 736 சதுர அடி நிலத்தில் பிரிக்கப்படாத பங்கு.
10. சென்னை, செயின்ட் மேரீஸ் சாலை, கதவிலக்கம் 213 – பி- இல் நிலமும் கட்டடமும். (1.206 சதுர அடி)
11. சென்னை, அண்ணா சாலை, எண் 602 இல் 180
சதுர அடி, கடை எண் 18; எண். 54/42656 இல் 17 கிரவுண்ட் பிரிவினை
செய்யப்படாத நிலத்தில் பங்கு மற்றும் ஆர்.எஸ். எண். 3/10 மற்றும் 3/11
ஆகியவற்றில் மைலாப்பூர் கிராமத்தில் 1,756 சதுர அடி நிலம்.