சனி, 22 மார்ச், 2014

இலியானா: கணவராக தேர்வு செய்ய கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகணும்

என் வருங்கால கணவர் இப்படித்தான் இருக்க வேண்டும்‘ என்று தனது எண்ணத்தை வெளியிட்டார் இலியானா.விஜய்யுடன் ‘நண்பன்‘ மற்றும் ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் இலியானா. தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். ‘மைன் தேரா ஹீரோ‘ என்ற படத்தில் வருண் தவான் ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இலியானா தனது கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று கூறினார். அவர் கூறியதாவது:
வருணுடன் நடிக்கும்போது அவருடனான கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது. அவர் ரொம்ப அழகு. பக்குவமானவர். ஒரு பெண்ணிடம் என்ன பேச வேண்டும் என்பதை அறிந்தவர். அவரது குணம் கொண்ட ஒருவரைத்தான் எனது கணவராக ஏற்பேன். ஏற்கனவே ரன்பிர் கபூர் மற்றும் சாஹித் ஆகியோருடன் நான் நடித்திருக்கிறேன். அவர்களையெல்லாம்விட வருண் தவானுடன் நடித்தபோதுதான் கெமிஸ்ட்ரி ரொம்பவே வித்தியாசமாக இருந்தது. இவ்வாறு இலியானா கூறினார். - tamilmurasu.org

சவுக்கு இணையத்தளம் மீது மகாலட்சுமி புகார் ! Savukku Threatened me and Demanded 50 Lakhs ?


பா.ஜனதாவில் ஒலிம்பிக் ஊழல் சுரேஷ் கல்மாடி சேருகிறார்

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக இருந்தவர் சுரேஷ் கல்மாடி, காங்கிரஸ் எம்.பி. ஆன இவர் புனே தொகுதியில் மீண்டும் போட்டியிட அனுமதி கேட்டார். ஆனால் காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல் வழக்கில் சம்பந்தப் பட்டிருப்பதால் பாராளு மன்ற தேர்தலில் போட்டியிட அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
மேலும், அவரது மனைவிக்கும் போட்டியிட ‘சீட்’ ஒதுக்கப்படவில்லை. இந்த நிலையில் புனே தொகுதி விஷ்வஜீத் கதம் என்பவருக்கு ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதனால் கடும் ஆத்திரம் அடைந்த சுரேஷ் கல்மாடி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர தீர்மானித்துள்ளார். இத்தகவலை அவரே தெரிவித்தார்.

பா.ஜனதாவில் இருந்து ஜஸ்வந்த்சிங் விலகல்? போலி பாஜக" உருவாகிவிட்டது.. ஜஸ்வந்த்சிங் கடும் தாக்கு!


டெல்லி: லோக்சபா தேர்தலில் தமக்கு சீட் தராததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதாவை விட்டு வெளியேற அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த்சிங் முடிவு செய்துள்ளார். தற்போது "போலியான பாஜக" என்று உருவாகிவிட்டதாகவும் ஜஸ்வந்த்சிங் சாடியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங் தொகுதி எம்.பி.யாக இருப்பவர் ஜஸ்வந்த்சிங். தற்போதைய லோக்சபா தேர்தலில் தமது சொந்த மாநிலமான ராஜஸ்தானின் பார்மர் தொகுதியில் போட்டியிட ஜஸ்வந்த்சிங் விருப்பம் தெரிவித்திருந்தார்.
ஆனால் ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தராஜே சிந்தியா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் தமக்கு சீட் தராவிட்டால் பால்மரில் சுயேட்சையாக போட்டியிடுவேன் என்றும் ஜஸ்வந்த்சிங் மிரட்டல் விடுத்திருந்தார். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஜஸ்வந்த்சிங் கேட்ட பால்மர் தொகுதிக்கு கேணல். சோனாராம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜஸ்வந்த்சிங் சுயேட்சையாக களமிறங்குவதில் உறுதியாக இருக்கிறார். மேலும் பாஜகவின் இந்த நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை அக்கட்சியிலிருந்து விலகும் கடிதத்தையும் அனுப்பவும் ஜஸ்வந்த்சிங் முடிவு செய்துள்ளார். இதனிடையே செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்த ஜஸ்வந்த்சிங், பாரதிய ஜனதா கட்சி இப்போது இரு பிரிவுகளாகிவிட்டது. ஒரிஜனல் பாஜக, போலி பாஜக என இரு பிரிவுகளாக இருக்கிறது. இப்போது இந்த இரு பிரிவுகளுக்கும் இடையேதான் பிரச்சனை. என்னைப் பொறுத்தவரையில் உண்மையான பாஜகவுக்காக நான் போராடுகிறேன். மக்கள்தான் யார் உண்மையான பாஜக என்பதை தீர்மானிப்பர் என்று கொந்தளித்திருக்கிறார்.
tamil.oneindia.in

ஏன் மோடியிடம் ஊடகங்கள் பயப்படுகின்றன ? கேள்வி கேட்காமல் பம்மும் அர்னாப் கோஸ்வாமி: கேஜ்ரிவால் தாக்கு


டெல்லி: குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியிடம் மற்ற தலைவர்களிடம் கேட்பது போல் கேள்வி எதுவும் கேட்காமல் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் அர்னாப் கோஸ்வாமி பம்முகிறார் என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் சாடியுள்ளார். ஏ.பி.பி தொலைக்காட்சிக்கு ஆம் ஆத்மியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: பல ஊடகங்கள் பணம் பெற்றுக் கொண்டு செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. இத்தகைய ஊடகங்கள் ஒருபோதும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை கேள்விக்குள்ளாக்குவதில்லை. குஜராத்தில் வேளாண்வளர்ச்சி அதிகம் என்பது பொய். இந்த பொய் குறித்து மோடியிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்புவது கிடையாது. மோடி பேசுவதை முதல் பக்கத்தில் போட்டுவிட்டு அவர் மீதான புகார்கள், அவரது தவறுகளை எங்கோ ஒரு இடத்தில் கண்ணுக்கு தெரியாமல் போடுகின்றன இந்த ஊடகங்கள். டைம்ஸ் நவ் அர்னாப் கோஸ்வாமி, இளம்பெண் வேவு பார்க்கப்பட்ட விவகாரத்தில், நீங்கள் ராஜினாமா செய்வீர்களா? இல்லையா? என்று இந்த தேசம் அறிந்து கொள்ள விரும்புகிறது என மோடியிடம் கேட்பாரா? ஏன் இதுவரை மோடியிடம் இத்தகைய கேள்வி எழுப்பப்படவில்லை? குஜராத்தில் விவசாயிகள் மிக மோசமாக நடத்தப்படுகிற நிலையில் அவர்களின் பாதுகாவலனாக எப்படி மோடி இருக்க முடியும்? இவ்வாறு கேஜ்ரிவால் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
tamil.oneindia.in 

வைகோ :யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா என்று மாற்றுவோம்! மதிமுகவை இனி மடையார் திமுக என்று மாத்துவோம்

சென்னை: பா.ஜ., தலைமையிலான தே.ஜ.,கூட்டணியில் இடம்பெற்றுள்ள ம.தி.மு.க., கட்சி இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையில் இந்தியா என்பது ' ஐக்கிய இந்திய மாநிலங்கள்' என்று பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்துவோம் என்றும், ஈழத்தமிழர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து தனித்தமிழகத்திற்கு பொது ஓட்டெடுப்பு நடத்த வலியுறுத்தப்படும் என்றும் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கை வெளியிட்டு நிருபர்களிடம் பேசிய இக்கட்சியின் பொது செயலர் வைகோ நிருபர்களிடம் பேசுகையில்; எல்லையற்ற மகிழ்ச்சி பெற்றேன்: பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி மகத்தான வெற்றி பெறும். நான் ஒன்றாம் தேதி சந்தித்த போது நாடெங்கும் நரேந்திர மோடி அலை வீசுகிறது. பா.ஜ., கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்என்று கூறியுள்ளேன்.

முதலில் இவரின் சொல்கேட்டு அழிந்தவர்கள் பட்டியலை கொஞ்சம் திரும்பி பார்ப்பது நல்லது !எனக்கு ஒரு சந்​தேகம். அதாவது ஆந்திரா இரண்டாக பிரிந்துவிட்டது. ​வெஸ்ட்​பெங்கால இரண்டாக பிரிவதற்கு முயற்ச்சி ந​டை​பெறுகிறது. இது​போல் பல்​வேறு மாநிலங்களில் பிரிவி​னை ​​கோரிக்​கை அங்கு இருக்கும் இரண்டாம் தர அரசியல் வாதிகள் முயற்சி ​மேற்​கொண்டிருக்கிறார்கள். இதுஇல்லாமல் ஒவ்​​வொரு மாநிலத்திலும் நீர்பங்கீடு பிரச்ச​னை த​லைவிரித்து ஆடுகிறது. நி​லை​மை இவ்வாறிருக்க நீங்கள யு​​​​​னை​டெட் ஸ்​டேடஸ் ஆப் இந்தியா என்று ​சொல்வது ​போகாத ஊருக்கு வழி ​தேடுவது​போல் உள்ளது.

வாரிசு அரசியலை வளர்க்கும் மக்களவைத் தேர்தல்:


  • நம் நாட்டில் வாரிசு அரசியலை தொடங்கி வைத்த பெருமை காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. இந்த வழக்கம் கிட்டத்தட்ட எல்லா தேசிய, பிராந்திய கட்சிகளுக்கும் தற்போது பரவிவிட்டது. வரும் மக்களவை தேர்தலில் வழக்கம்போல் வாரிசுகள் பலர் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர்.
    நேரு குடும்பத்தின் வாரிசுகளான சோனியாவும் ராகுலும் காங்கிரஸ் சார்பிலும், மேனாகாவும் அவரது மகன் வருணும் பாரதிய ஜனதா சார்பிலும் உ.பி.யில் வேட்பாளர்களாக உள்ளனர். ராஜஸ்தானில் அம்மாநில முதல்வர் வசுந்தரா ராஜேயின் மகன் துஷ்யந்த்சிங் பாஜக சார்பில் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.

சோனியாவின் பாஸ்போர்ட் நகலை ஒப்படைக்க நியூயார்க் கோர்ட் உத்தரவு

நியுயார்க்: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமெரிக்காவில் இருந்தாரா இல்லையா என்பதை ஆராய, அவரது பாஸ்போர்ட் நகலை ஒப்படைக்க வேண்டும் என்று நியூயார்க் நகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 84ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி, சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதை தொடர்ந்து டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் மூண்டது. நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இந்த கலவர வழக்கில் சிக்கிய காங்கிரஸ் தலைவர்களை பாதுகாக்க சோனியா நடவடிக்கை எடுத்தார் என்று கூறி, கடந்த ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகர கோர்ட்டில், சீக்கிய அமைப்பு மனித உரிமை மீறல் வழக்கை தொடர்ந்தது. அதை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு சோனியாவுக்கு சம்மன் அனுப்ப கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது.

கலைஞர் : தி.மு.க வில் குஷ்பு புறக்கணிக்கப்படவில்லை ! ஒருவழியா நிலைமை புரிஞ்சிடுச்சு ?

'சென்னை: 'தி.மு.க.,வுக்கு ஆதரவாக, நடிகை குஷ்பு பிரசாரம் செய்யும் சுற்றுப்பயண விவரம், ஓரிரு நாளில் வெளி வரும்' என, தி.மு.க., தலைவர், கருணாநிதி கூறியுள்ளார். அவரது அறிக்கை: தி.மு.க.,வில், குஷ்பு புறக்கணிக்கப்படவில்லை; அவர், தேர்தல் பிரசாரத்திற்கு செல்லவும் தடை விதிக்கப்படவில்லை. கட்சியின் முன்னணிப் பேச்சாளர்கள் அனைவரும், என் சுற்றுப்பயணம் வெளி வருவதற்காக காத்திருந்தனர். காரணம், எந்த தேதியில் நான், எந்த ஊரில் கலந்து கொள்கிறேன் என்பதைப் பொறுத்து, அவர்களுடைய நிகழ்ச்சிகளை வகுத்துக் கொள்வதற்காக தான் தாமதம். தற்போது, என் சுற்றுப்பயணம் உறுதிபடுத்தப்பட்டுள்ளதால், அவர்களின் சுற்றுப்பயணங்கள் தலைமை நிலையத்தால் வகுக்கப்பட்டு வருகின்றன. ஓரிரு நாட்களில் அவை வெளிவந்து விடும். இவ்வாறு,   கலைஞர்  கருணாநிதி கூறியுள்ளார். dinamalar .com  அய்யா கலைஞர் அவர்களே எப்படித்தான் பார்த்தாலும் பாரம்பரிய திமுக தொண்டனுக்கு இருக்க வேண்டிய போர் குணம் இனமான உணர்வு சுயமரியாதை பண்பு பகுத்தறிவு கொள்கை போன்றவற்றில் கனிமொழியிடம் ஸ்டாலினை கொஞ்சம் பாடம் கத்துக்க சொல்லுங்க , அட குஷ்பூ கூட அடிப்படை திமுக தொண்டனுக்கு இருக்க கூடிய பண்புகளுடன் உள்ளாரே , ஸ்டாலினுக்கு தனது தகுதி இன்மை புரிகிறது , அதான் அழகிரி கனிமொழி குஷ்பூ என்று சுயம் உள்ள எல்லோரையும் ஓரங்கட்ட பார்க்கிறார் ?

வெள்ளி, 21 மார்ச், 2014

பிராமின்ஸ் ஒன்லி’ வீடு வாடகை கும்பலைச் சேர்ந்த பாஜக-வின் ஆவி எழுப்பும் தேர்தல் கூட்டம் – நேரலை

இரண்டு நாட்களுக்கு முன்பு, சென்னை எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட்டை கடந்து செல்லும் போது உள்ளே ஏதோ பொதுக்கூட்டம் நடப்பது போல மேடையும், விளக்குகளும் தென்படவே, தேர்தல் திருவிழாவில் நாமும் கலந்து கொள்வோம் என்ற கடமை உணர்வோடு மார்க்கெட் சாலைக்குள் நுழைந்தேன். சாலை முனையில் போலீஸ் வண்டிகளும், காக்கிகளும் நிறைய தென்பட்டன.
காக்கிகள் அளவுக்கு கூட அங்கே மக்கள் இல்லை. கட்சிக் கூட்டம் ஒன்று நடப்பதாக அறிகுறியே இல்லாமல் மக்களும், கடைகளும் இயங்கிக் கொண்டிருந்தனர். இத்தகைய அமோக ஆதரவு கொண்ட கட்சி எது?
தொலைக்காட்சிகளில் நமது காதுகளை ஹை டெசிபலில் பஞ்சர் போடும் தமிழிசை சவுந்தரராஜனும், வானதி சீனிவாசனும் மேடையில் தென்பட்ட போதே இது பாஜகவின் ஆவி எழுப்பும் கூட்டம் என்று புரிந்தது.

ஜெயாவின் சொத்து குவிப்பு வழக்கு இறுதி வாதம் ஆரம்பம்


ஜெயலலிதா மீதான சொத்து  குவிப்பு வழக்கு! இறுதி வாதத்தை தொடங்கினார் அரசு தரப்பு வழக்கறிஞர்!
ஜெயலலிதா மீதான சொத்கு குவிப்பு வழக்கு விசாரணை, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹா முன்னிலையில் 21.03.2014 வெள்ளிக்கிழமை நடந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் இறுதி வாதத்தை தொடங்கினார்.
கடந்த 7ஆம் தேதி தொடங்க வேண்டிய இறுதிவாதம், பவானி சிங் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று காரணம் காட்டியதால் காலதாமதமானது. இதனால் பவானிசிங்கிற்கு இரண்டு நாள் தலா ரூபாய் 65 ஆயிரம் அபராதமாக நீதிபதி விதித்தார். இதனை எதிர்த்து பவானிசிங் பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனு நீதிபதி சத்தியநாராயணா முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை பெங்களூரு உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. nakkheeran.in


239 பயணிகளை பத்திரமாக மீட்க விமான கடத்தல்காரர்களுடன் மலேசிய அரசு ரகசிய பேச்சு?

ஜார்ஜ் டவுன்: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கடந்த 8ம் தேதி பீஜிங் சென்ற விமானம் மாயமான பிறகு பலரும் பலவித சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், விமான கம்ப்யூட்டரில் நன்கு தொழில்நுட்பம் தெரிந்த யாரோ, விமான பாதையை மாற்றி பதிவு செய்துள்ளனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதற்கேற்ப விமான பைலட் அகமது ஜகாரியின் வீட்டில் சோதனை செய்த போது, விமானம் ஓட்ட பயிற்சி பெறும் சிமுலேட்டர் கருவியில் சில தகவல்கள் அழிக்கப்பட்டிருப்பது தெரிந்தது.
அழிக்கப்பட்ட அந்த தகவல்களை, அமெரிக்க உளவு பிரிவு எப்.பி.ஐ. உதவியுடன் மலேசிய அதிகாரிகள் இப்போது மீட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மர்மம் நீடிக்கும் நிலையில் உண்மையில் நடந்தது என்ன என்பதை தெரிவிக்கும்படி மலேசிய அரசை சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

கார்த்தி சிதம்பரம்: சிதம்பரம் மகன் என்பதால் என்னை ஒதுக்கி விடாதீர்கள் !அடடா என்ன ஒரு ஒப்புதல் வாக்குமூலம் ?

சென்னை : மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் என்பதால் என்னை ஒதுக்கி விடாதீர்கள் என லோக்சபா தேர்தலில் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கார்த்திிதம்பரம்ெரிவித்துள்ளார்.வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் தொண்டர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.வாரிசு அரசியல் : இந்திய அரசியலில் மற்றொரு வாரிசு அரசியலின் ஆரம்பமாக மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ளார். காங்கிரஸ் நேற்று (மார்ச் 20) வெளியிட்டுள்ள 4வது வேட்பாளர் பட்டியலில் சிதம்பரத்திற்கு பதில் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சிவகங்கை தொகுதியில் போட்டியிட சீட் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மற்ற மூத்த தலைவர்களைப் போல் தானும் லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும், தனக்கு பதில் தனது தொகுதியான சிவகங்கையில் போட்டியிட தனது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் அளிக்க வேண்டும் எனவும் சிதம்பரம் கேட்டுக் கொண்டதால், காங்கிரஸ் மேலிடம் கார்த்திக்கு சீட் அளித்துள்ளது.
ஒரு சொந்த சர்டிபிகேட் மாதிரி அல்லவா இருக்கிறது.சிதம்பரம் மகன் என்பதால் தள்ளி வைக்கப்பட வேண்டியது ஏன் என்பதையும் சொல்லி விட்டால் மிக நன்று.      

தாரை தப்பட்டை ! வரலட்சுமியை பாடாய் படுத்தும் பாலா !

சசிகுமார், வரலட்சுமியை தனது படத்துக்காக கடுமையான பயிற்சிகளை அளித்து பெண்டு நிமிர்த்துகிறார் பாலா. ‘பரதேசி படத்தையடுத்து பாலா இயக்கும் புதிய படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடிக்கிறார். கரகாட்ட கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு ‘தாரை தப்பட்டை‘  என பெயரிடப்படுகிறது. ‘போடா போடி‘ படத்தில் நடித்த வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். வெஸ்டர்ன் நடனத்தில் தேர்ச்சி பெற்ற வரலட்சுமிக்கு கரகாட்டம் ஆடிய அனுபவம் கிடையாது. பாலா படத்துக்காக அதை முறைப்படி கற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தஞ்சையை சேர்ந்த கரகாட்ட கலைஞர்கள் குழு அவருக்கு பயிற்சி அளிக்கிறது. காலையில் தொடங்கி மாலைவரை வரலட்சுமிக்கு பயிற்சி தருவதால் அவருக்கு கடும் சோர்வு ஏற்பட்டுள்ளதாம். மேலும் வேடத்துக்கு ஏற்ப உடல் எடையை குறைப்பதற்காக உணவு கட்டுப்பாடும் மேற்கொண்டிருக்கிறார்.

ஸ்ருதிஹாசனின் தெலுங்குப்பட போஸ்டர் கிழிப்பு ! ஆபாசமாம் ?


நடிகை ஸ்ருதிஹாசன் அல்லி அர்ஜூனாவுடன் நடித்துள்ள ரேஸ் குரோம் படத்தில் படுகவர்ச்சியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் விளம்பரத்திற்காக ஐதராபாத் உட்பட ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
வானத்தை நிறுத்திவிட்டு இந்த போஸ்டர்களை கண்ட வாகன ஓட்டிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து சில மனித உரிமை ஆர்வலர்கள் ஆபாச போஸ்டர்கள் ஒட்டபட்ட இடங்களில்  போராட்டம் நடத்தியதாதவும், இதனை கண்ட போலீஸார் போஸ்டர்களை கிழித்து எரிந்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இது போன்ற போஸ்டர்களை ஒட்ட கூடாது என்று அந்த படநிறுவனத்திற்கு போலீஸார் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது dinamani.com/

இந்த MODI குஜராத் இந்தியா முழுவதும் பரவுவதுதான் ஆரோக்கியமான ஜனநாயகமா?


27.2.2002 புதன் அன்று காலை 7.20 மணிக்கு அயோத்தியிலிருந்து வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் கோத்ரா ரயில் நிலையத்தில் நின்றது. அதில் பயணம் செய்த கரசேவகர்கள் ரயில் நிலையத்தில் கலாட்டா செய்ததால் அவர்கள் பயணம் செய்த ரயில் பெட்டி பொது மக்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. அந்தப் பெட்டியில் பயணம் செய்த 26 பெண்கள், 15 குழந்தைகள் உட்பட 58 பேர் எரிந்து சாம்பலாகி விட்டனர்.

இதனைத் தொடர்ந்து குஜராத்தில் நடந்த கலவரத்தில் ஒரு சில மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர்! முதல் அமைச்சர் மோடி அந்தக் கலவரத்தை இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில் மிகவும் ஆணவமாக - பேசினார் நியூட்டன் விதிகளின்படி ஒவ்வொரு விளைவிற்கும் எதிர் விளைவு உண்டு என்று இனப்படுகொலைக்கு அறிவியல் விளக்கம் கொடுத்தார் முதல் அமைச்சர் நரேந்திர மோடி!
கலவரத்தையொட்டி சிறுபான்மை மக்களுக்கு அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களைக்கூட குழந்தைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் என்று வக்கிரப் புத்தியோடு வர்ணித்தார்!
12 ஆண்டுகளுக்குப் பிறகு (2014இல்) பிரதமர் வேட்பாளராக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் நிறுத்தப்பட்டுள்ள நரேந்திர மோடியை நோக்கி  முன்பு குஜராத்தில் (2002-இல்) நடைபெற்ற திட்டமிட்ட இன ஒழிப்பு படுகொலைபற்றி இப்போது நீங்கள் இதுபற்றி என்ன கூறுகிறீர்கள்?  வருத்தம் தெரிவிப்பீர்களா? என்ற கேள்விக்கு,
ஒரு நல்ல சிமெண்ட் சாலையில் வேகமாகக் கார் செல்லும்போது, ஒரு நாய்க்குட்டி அடிபட்டு விட்டது என்றால், பின் சீட்டில் உட்கார்ந்திருக்கிற எனக்கு சிறிது வருத்தம் ஏற்படத்தானே செய் யும்? என்று கூறிய பதில் - மனிதா பிமானமோ, செத்தவர்களுக்காக வருந் தும் நிலையோ கூட ஏற்படாத  - இரக்கமற்ற ஆணவத் தின் குரல் அல்லவா?
இந்த குஜராத் இந்தியா முழுவதும் பரவுவதுதான் ஆரோக்கியமான ஜனநாயகமா?
இவரை உயர்த்திப் பிடிக்க தமிழ்நாட்டுத் தமிழர் இன உணர்வாளர்களாக தங்களைக் காட்டிக் கொள்ளும் கட்சிகள் ஓடலாமா? கூட்டணி என்ன கொள்கைக் கூட்டணியா? அல்லது வெறும் சீட்டணியா?
சிந்தியுங்கள் வாக்காளர்களே!
- சர்ச்லைட்
viduthalai.in

ஒன்றாம் வகுப்புக்கே 1.25 லட்சம் ரூபாய் வசூல் ! மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.,) கீழ் இயங்கி வரும் பள்ளிகளில்,

தமிழகம் முழுவதும், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.,) கீழ் இயங்கி வரும் பள்ளிகளில், 2014 - 15ம் ஆண்டு மாணவர் சேர்க்கை, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முன்னணி சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், முதல் வகுப்பிற்கு, 1.25 லட்சம் ரூபாய், கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தடுக்க வேண்டிய, சி.பி.எஸ்.இ., அதிகாரிகளும், கட்டண நிர்ணய குழு அலுவலர்களும், வேடிக்கை பார்த்து வருகின்றனர்.மாணவர் சேர்க்கை: தமிழகத்தில், 450 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உள்ளன. அனைத்துப் பள்ளிகளிலும், வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, தீவிரமாக நடந்து வருகிறது. 'ஏப்ரல், மே மாதங்களில் தான், மாணவர் சேர்க்கை பணிகளை செய்ய வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளபோதும், அதைப்பற்றி கவலைப்படாமல், மாணவர் சேர்க்கை நடக்கிறது. சென்னை மற்றும் புறநகர்களில் உள்ள, பெரிய, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், எல்.கே.ஜி., அல்லது முதல் வகுப்பு கட்டணமாக, 1.25 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

தென்மாவட்ட தி.மு.க., வேட்பாளர்கள் கலக்கம்? விழாக்களில் அழகிரி !

முன்னாள் மத்திய அமைச்சர், அழகிரியுடன், யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது' என, தி.மு.க., மேலிடம் எச்சரிக்கை விடுத்த பின்னும், அழகிரியை தேடி வரும், கட்சி தொண்டர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில், ராஜபாளையம், முதுகுளத்தூர், தஞ்சாவூர், ஆரணி என, பல இடங்களில், தன் ஆதரவாளர்கள் வீட்டு, காது குத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள அழகிரி, அங்கு வரும், தி.மு.க., அதிருப்தியாளர்களிடம், தேர்தலில், சில வேட்பாளர்களுக்கு எதிராக, உள்குத்து வேலைகள் செய்வது தொடர்பான ஆலோசனை வழங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. 'தி.மு.க.,விலிருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியுடன், கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. அதை மீறினால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, நேற்று முன் தினம், தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்

தமிழகத்திற்கான வேட்பாளர்கள் பட்டியல்: அகில இந்திய காங்கிரஸ் அறிவிப்பு
வரும் ஏப்ரல் 24ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. புதுச்சேரியில் நாராணசாமி போட்டியிடுகிறார். 39 தொகுதிகளை கொண்ட தமிழகத்தில் 30 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் - அருள் அன்பரசு
காஞ்சிபுரம் - விஸ்வநாதன்
திருப்பூர் - ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஆரணி - விஷ்ணுபிரசாத்
திண்டுக்கல் - என்.எஸ்.வி..சித்தன்
திருச்சி - சாருபாலா
கடலூர் - கே.எஸ்.அழகிரி

வியாழன், 20 மார்ச், 2014

ஜெயலலிதாவை யாரோ தவறாக வழி நடத்துகிறர்களாமே? அறிவில்லாத தற்குறியை யாராவது வழிநடத்த முடியுமா ??

யாருடைய கருத்தையும் கேட்காமல், மற்றவர்களுக்கு ஒரு கருத்து இருக்கிறது என்பதை பரிசீலித்தும் பார்க்காமல் தான்தோன்றித்தனமாக, தன்னகங்காரத்தில் ஊறித் திளைத்த ஜெயலலிதாவை எவர் தவறாக வழி நடத்த முடியும்?
ஆரம்பம் முதல், போயஸ் தோட்டத்தின் கதவை மூடும் கடைசி நேரம் வரை, இடது, வலது கம்யூனிஸ்டுகளை அவமானப்படுத்தி கூட்டணியில் இருந்து வெளியேற்றினார் ‘புரட்சி’த் தலைவி. தமிழக கிளைமாக்சில் வீரம் காட்டும் போலீசு போல அப்போதாவது சொரணையுடன் கொதிப்பார்கள் என்று பார்த்தால், ‘அம்மா, நீங்கப் போய் இப்படி செஞ்சுட்டீங்களே’ என்று பயபக்தியுடன் மன்றாடுகின்றனர் போலிகள். கோவில் யானைகளை முகாம் அமைத்து சித்திரவதை செய்வது, வாஸ்து சாஸ்துவுக்காக கண்ணகி சிலையை இடிப்பது, கூட்டணி உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகளுக்கு ஜோசியம் பார்ப்பது எல்லாம் ஜெயாவை தவறாக வழிநடத்தி வந்தவையா என்ன?

திருப்பதி 4 நாட்களாக பரவிய காட்டுத் தீ,விமானப் படையின் முயற்சியால் கட்டுபடுத்த பட்டுள்ளது


திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் தொடர்ந்து 4 நாட்களாக பரவிய காட்டுத் தீ, இந்திய விமானப்படை வீரர்களின் உதவியோடு தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை திருமலை சேஷாசலம் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ வேகமாக பரவி கோருட்லா, காகுலகொண்டா உள்ளிட்ட காட்டுப் பகுதியில் உள்ள பல ஏக்கர் மரங்கள் தீயில் கருகின.
வனத்துறை அதிகாரிகள், தேவஸ்தான ஊழியர்கள், தீயணைப்பு படையினர் ஆகியோர் இந்த காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். இந்த பணியில் சுமார் 300 ஊழியர்கள் 10 டேங்கர்களுடன் தீயை அணைக்க போராடினர். காற்று பலமாக வீசியதால் தீ வேகமாக பரவியது. இதனால் நிலைமையை சமாளிப்பது பெரும் சவாலாக இருந்தது.

BJP கூட்டணியில் தேமுதிக-14, பாமக-8, பாஜக-8, மதிமுக 7 தொகுதிகளில் போட்டி- ராஜ்நாத்சிங் அறிவிப்பு!!


தமிழக பாரதிய ஜனதா கூட்டணியில் தேமுதிக 14, பா.ம.க. 8, பா.ஜ.க. 8, ம.தி.மு.க.7 தொகுதிகளில் போட்டியிடும் என்று பாஜகவின் தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். லோக்சபா தேர்தலுக்கான பாஜக கூட்டணியில் மதிமுக, தேமுதிக, பாமக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை இணைந்துள்ளன. இந்த கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டு இழுபறி தமிழக தேர்தல் அரசியல் வரலாற்றிலேயே இல்லாதவகையில் உச்சபட்சமான குழப்பமாக இருந்தது.
இதனால் பாரதிய ஜனதா கூட்டணி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று..நாளை என பல மாதங்களாக இழுபறியாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் ஒருவழியாக பல அதிருப்திகளுக்கு மத்தியில் பாஜக கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு முடிந்துள்ளது.

TRS சந்திரசேகரராவ் :.சீமாந்த்ராவுக்கு சொட்டு தண்ணீர் தரமாட்டோம் ! அரசு அலுவலகங்களில் வேலை செய்யவிடமாட்டோம் சீமாந்த்ரா போகவேண்டியதுதான்

சீமாந்திராவுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கொடுக்க மாட்டோம்: சந்திரசேகரராவ்
ஆந்திர பாராளுமன்றம், சட்டசபைக்கு 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. தெலுங்கானாவில் வருகிற 30–ந் தேதியும், சீமாந்திராவில் ஏப்ரல் 7–ந் தேதியும் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. 16–ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதன் பின் மாநில பிரிவினை முறையாக அறிவிக்கப்படும் ஜுன் 1–ந் தேதி தெலுங்கானா உதயமாகும் என்று உள்துறை செயலாளர் அனில் கோஸ்வாமி தெரிவித்தார். இதற்கிடையே தெலுங்கானா உதயமானதும் சீமாந்திராவுக்கு எங்கள் நீர்த்தேக்கத்தில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்று தெலுங்கானா ராஷ்ட்ரிய சமதி தலைவர் சந்திரசேகரராவ் மிரட்டி உள்ளார்.> ஜதராபாத்தில் நேற்று தெலுங்குதேசம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் அக்கட்சியில் இருந்து விலகி சந்திரசேகரராவ் முன்னிலையில் அக்கட்சியில் சேர்ந்தார்கள். அவர்கள் மத்தியில் சந்திரசேகரராவ் பேசியபோது,  ’’தெலுங்கானா மாநிலம் உதயமானதும் இங்குள்ள நீர்த்தேக்கங்களில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட சீமாந்திராவுக்கு தர மாட்டோம். எங்கள் தேவை போக எஞ்சிய தண்ணீரைத் தான் விடுவிப்போம். இப்படியே போனால் சீக்கிரம் இன்னொரு சோமாலியா போல ஆக்கிடுவேல !  உன்னைய நம்பின தெலுங்கனுக்கு நீ சரியான ஆப்பு தான் அடிக்கற ,ஆனா அது புரியாம உன்னைய வரலாற்று புருஷன் ரேஞ்சுக்கு காவடி எடுக்கிராகல.ரொம்பதான் துள்ளாதீக சீக்கிரம் அல்லாரும் அல்லாட போரீக!

தயாளு அம்மாளுக்கு அமுலாக்கல் பிரிவு உத்தரவு ! மார்ச் 28 தேதி ஆஜாராக வேண்டும்

CHENNAI: The Enforcement Directorate, has summoned Dayalu Karunanidhi, wife of DMK patriarch M Karunanidhi, in connection with transactions at Kalaignar TV, under the Prevention of Money Laundering Act. Kamal Singh at the directorate of Enforcement had issued the summons on March 18. Dayalu Ammal has been asked to be present at the ED's Delhi office on March 28 at 12 noon either in person or through her authorized representative.

ஜெயலலிதா சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீது 1991 மற்றும் 1992 ஆம் ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்யாததால் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது,  வரும் ஏப்ரல் 3ந் தேதி நடக்கும் நீதிமன்ற விசாரணைக்கு ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. முன்னதாக இந்த வழக்கை 4 மாதங்களில் முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.nakkheeran.in/

Azhagiri Stalin ! பிளவுபட்ட திமுக மீண்டும் இணைய வாய்ப்பு உண்டா ? வெற்றி வாய்ப்பு மிகவும் பாதிக்கக்கூடும் ?


திமுக தென் மண்டல முன்னாள் அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரியுடன் தொடர்புடைய 20 மாவட்டங்களைச் சேர்ந்த திமுக-வின் முக்கிய நிர்வாகிகள் பட்டியலை திமுக தயாரித்துள்ளது. தேர்தல் நேரத்தில் கட்சி உடைந்துவிடாமல் தடுப்பதற்காகவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஒழுங்கு நடவடிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட திமுக தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரியின் பிறந்த நாள் விழாவில், திமுக எம்.பி.,க்கள் ஜே.கே.ரித்தீஷ், நெப்போலியன், கே.பி.ராமலிங்கம் பங்கேற்றனர். இந்நிலையில், மு.க.அழகிரி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்குச் சென்று, தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். சென்னை பெரம்பூரிலுள்ள வட சென்னை திமுக முன்னாள் செயலாளர் வி.எஸ்.பாபு, பல்லாவரத்தில் பம்மல் நல்லதம்பி, கே.கே.நகரில் கருணாகரன், தேனியில் ஆர்.பி.ஈஸ்வரனின் ஆதரவாளர்கள் என, பல்வேறு மாவட்டங்களில் அழகிரி தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார்.

பரிதி இளம்வழுதி : இன்று அழகிரி... நாளை கருணாநிதி ! இப்போது ஸ்டாலின் திமுகதான் உள்ளது

ஸ்டாலினால் வஞ்சிக்கப்பட்டு, திமுகவிலிருந்து வெளியேறக்கூடிய சூழல் எனக்கு உருவாக்கப்பட்டது. நேற்று நீ, இன்று நான், நாளை யாரோ என்பதுபோல, நேற்று நான் (பரிதி), இன்று அழகிரி, நாளை கருணாநிதி. திமுகவின் கைப்பாவையாக கருணாநிதி மாறிவிட்டதாக அழகிரி கூறுகிறார். நாசூக்காகச் சொல்ல வேண்டும் என்பதற்காக அழகிரி இப்படிச் சொல்கிறார். ஆனால் உண்மையில் அண்ணா உருவாக்கிய திமுகவோ, கருணாநிதி வளர்த்த திமுகவோ, ஒத்து ஊதும் அன்பழகன் வளர்த்த திமுகவோ இப்போது இல்லை. ஸ்டாலின் திமுகதான் உள்ளது. அதன் கைப்பாவையாகத்தான் கருணாநிதி உள்ளார்.
திமுகவை எதிர்த்து முதல் முறையாகப் பிரசாரம் செய்கிறீர்கள். களநிலவரம் எப்படி உள்ளது?
முதல்வர் ஜெயலலிதாவின் அமைதி, வளம், வளர்ச்சி என்ற மூன்று தாரக மந்திரங்கள் மக்கள் மனதில் ஆழப் பதிந்துள்ளது. 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும்.
மு.க.ஸ்டாலினுடனான பிரச்னையால் திமுகவிலிருந்து நீங்கள் வெளியேறினீர்கள். இப்போது அழகிரியும் வெளியேற்றப்பட்டுள்ளாரே?
ஸ்டாலினால் வஞ்சிக்கப்பட்டு, திமுகவிலிருந்து வெளியேறக்கூடிய சூழல் எனக்கு உருவாக்கப்பட்டது. நேற்று நீ, இன்று நான், நாளை யாரோ என்பதுபோல, நேற்று நான் (பரிதி), இன்று அழகிரி, நாளை கருணாநிதி. திமுகவின் கைப்பாவையாக கருணாநிதி மாறிவிட்டதாக அழகிரி கூறுகிறார். நாசூக்காகச் சொல்ல வேண்டும் என்பதற்காக அழகிரி இப்படிச் சொல்கிறார். ஆனால் உண்மையில் அண்ணா உருவாக்கிய திமுகவோ, கருணாநிதி வளர்த்த திமுகவோ, ஒத்து ஊதும் அன்பழகன் வளர்த்த திமுகவோ இப்போது இல்லை. ஸ்டாலின் திமுகதான் உள்ளது.

பாஜக கூட்டணி இந்தியாவை வீழ்ச்சிப் பாதையில்தான் அழைத்துச் செல்லும் ! தடுக்கவேண்டியது நம் கடமை!

மேட்டூர் தங்கவேல்
இந்தியா சுதந்தரம் பெற்ற நாள் தொடங்கி இதுவரை எந்தக் கட்சியும் பிரதமர் வேட்பாளரை தேர்தலுக்கு முன்பே அறிவித்து வாக்குகள் சேகரித்ததில்லை. ஒரு ஜனநாயகத்தில் இதுதான் பொதுவான நடைமுறை. தங்கள் பிரதம மந்திரி யார் என்பதை வாக்களிக்கும் மக்கள்தான் தேர்ந்தெடுக்கவேண்டும். அதுதான் சரியான முறையும்கூட.
அதனாலேயே காங்கிரஸ் தனது பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமல் தொகுதிக்கான வேட்பாளரை மட்டும் அறிவித்து தேர்தல்களைச் சந்தித்திருக்கிறது. இப்போதும் அதைத்தான் செய்திருக்கிறது.
ஆனால் பாஜக அந்த முறையை மாற்றி ஒரு சர்வாதிகார தேசத்தில் நடப்பது போன்று பிரதமர் வேட்பாளாரை முன்னிறுத்தி வாக்கு கேட்டு வருகிறது. மக்கள்மீது அக்கறையில்லாத, மக்களாட்சியின்மீது அக்கறையில்லாத ஒரு கட்சியால்தான் இப்படிச் செய்யமுடியும்.
இதுவரை பதவி வகித்த எந்தப் பிரதமர் மீதும் கலவரங்களுக்குத் துணை போனதற்கான வழக்கு பதிவு செய்யப்படவில்லை.

அழகிரியின் பனங்காட்டு நரிகளை பார்த்து பதுங்குமா.. Stalin தி.மு.க.?


மதுரையில் மார்ச் 17-ம் தேதி தனது ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனை நடத்திய முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, தென் மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிரான அம்புகளைத் தொடுத்துள்ளதில் தி.மு.க. தலைமை ஆடிப்போனது.
இதனால், அழகிரியுடன் தி.மு.க. தொண்டர்கள் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது.
தி.மு.க.வின் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த அழகிரி ஜனவரி 24-ம் தேதி அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டார். தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சேரவிருந்த நிலையில், அதன் தலைவர் விஜயகாந்துக்கு எதிராக கூறிய கருத்துகளாலும், மாவட்டச் செயலாளர் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யக் காரணமாக இருந்ததாலும், அழகிரி நீக்கப்பட்டார் என கூறப்பட்டது.

சேலம் கிடைக்காவிட்டால் சுயேச்சையாக போட்டி.. பாமக அருள் அதிரடி அறிவிப்பு


சேலம் தொகுதி பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அருள், தனக்கு சேலம் தொகுதியை பாஜக தராவிட்டால் அங்கு சுயேச்சையாகப் போட்டியிடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். சேலம் தொகுதி தொடர்பாக பாமக மற்றும் தேமுதிக இடையே கடும் மோதல் நிலவுகிறது. முதலில் இந்தத் தொகுதியை தேமுதிக கேட்கவே இல்லை என்று கூறுகிறார்கள். அதேசமயம், இத்தொகுதியில், தனது மச்சான் சுதீஷை நிறுத்தவும் விஜயகாந்த் விருப்பம் கொண்டிருந்தார். இதையடுத்து பாஜக, சேலத்தை தேமுதிகவுக்கு ஒதுக்கியது. இதனால் பாமக அதிர்ச்சி அடைந்தது. காரணம், அங்கு ஏற்கனவே அது அருளை வேட்பாளராக அறிவித்திருந்தது. அருளே வேட்பாளராக நீடிப்பார், சேலத்தை விட்டுத் தர மாட்டோம் என்று பாமக திட்டவட்டமாக கூறி விட்டது. இதனால் தேமுதிக நிலை மோசமானது. இப்போது இதை கெளரவப் பிரச்சினையாக பார்க்கிறது தேமுதிக.

இந்த பூச்சாண்டிக்கெல்லாம் பயப்பட மாட்டோம்.. அழகிரி எச்சரிக்கை


மதுரை: நானும், எனது ஆதரவாளர்களும், தொண்டர்களும் பனங்காட்டு நரிகள். சலசலப்புக்கும், பூச்சாண்டி மிரட்டலுக்கெல்லாம் அஞ்ச மாட்டோம் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் மு.க.அழகிரி தன்னுடன் பேசக் கூடாது, தொடர்பு கொள்ளக் கூடாது, மீறினால் நடவடிக்கை பாயும் என்று திமுகவினரை எச்சரித்து நேற்று அன்பழகன் அறிக்கை விட்டிருந்தார். இதுகுறித்து செய்தியாளர்களை அழைத்துப் பதிலடி கொடுத்தார் அழகிரி. அப்போது அவர் கூறுகையில், என்னுடைய ஆதரவாளர்களும், தொண்டர்களும் பனங்காட்டு நரிக்கூட்டத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் யாருக்கும் பயப்பட மாட்டார்கள். பணத்திற்கும் ஆசைப்படமாட்டார்கள். பாசத்திற்கு கட்டுப்பட்டவர்கள். திமுகவில் அங்கம் வகிப்பவர்கள் பதவி ஆசைபிடித்தவர்கள். அவர்கள் தான் பணத்திற்காக எதுவும் செய்யக்கூடியவர்கள். எனவே அவர்களின் பூச்சாண்டிக்கெல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம் என்றார் அழகிரி அதிரடியாக.
tamil.oneindia.in

அழகிரியிடம் சமாதானம் பேசிய ரஜினி... அழகிரி அமைதி காப்பதன் பின்னணி!

திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டதால்தான் முக அழகிரியை தன் வீட்டுக்கு அழைத்து ரஜினி சமரசம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் போயஸ் கார்டன் சென்று சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்துப் பேசினார் அழகிரி. இந்த சந்திப்பு அரசியல் உலகில் பரபரப்பைக் கிளப்பியது. காரணம் அதற்கு முன்புதான் பிரதமர் மன்மோகன் சிங்கை டெல்லியில் சந்தித்திருந்
அழகிரியிடம் ரஜினி என்ன பேசியிருப்பார் என பலரும் மண்டையைப் பிய்த்துக் கொண்டனர். ஆனால் அழகிரியோ நாங்கள் அரசியல் பேசவில்லை. ஒரு அண்ணன் தம்பி சந்திப்பு மாதிரி இது அமைந்தது. ரஜினியும் அப்படித்தான் சொன்னார். அவரிடம் பேசிவிட்டு வந்த பிறகுதான் மனசு நிம்மதியாக இருந்தது, என முக அழகிரி தன் ஆதரவாளர்களிடம் பேசினார்.
ஆனால் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவரே கருணாநிதிதான் என்ற ரீதியில் இப்போது தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியைத் தொடர்பு கொண்ட கருணாநிதி, 'அழகிரியை எப்படியாவது சமாதனப்படுத்துங்கள். நீங்கள் சொன்னால் அவர் கேட்பார். தேர்தல் முடிந்ததும் நானே அழகிரி - ஸ்டாலின் பிரச்சினையைத் தீர்த்து வைக்கிறேன்,' என்று ஒரு பிரமுகர் மூலம் ரஜினியிடம் கேட்டுக் கொண்டாராம்.
பொதுவாக அழகிரியை கூல் பண்ணும் வேலை பொதுச் செயலாளர் அன்பழகன், ஆற்காடு வீராச்சாமி அல்லது தாயார் தயாளு அம்மாள் ஆகியோர்தான் இத்தனை காலமும் செய்து வந்தார்களாம். இப்போது மூவருமே வயோதிகத்தால் பாதிக்கப்பட்டு பேசும் நிலையில் இல்லையாம். அதனால் அவர்களின் பொறுப்பை ரஜினிக்கு தந்திருக்கிறார் கருணாநிதி.
கருணாநிதியுடன் நல்ல நட்பில் உள்ள ரஜினி இதற்கு ஒப்புக் கொண்டதோடு, அழகிரியை வீட்டுக்கு வருமாறு அழைத்தாராம். உடனே டெல்லியிலிருந்து தன் மகன் துரை தயாநிதி, நண்பர் கேபி ராமலிங்கத்தோடு போயஸ் கார்டனுக்கு வந்தார் அழகிரி.
அவர்களை அன்போடு வரவேற்று உபசரித்த ரஜினி, "அப்பா பேசினார். 'அழகிரியின் ஆதங்கமும் கோபமும் புரிகிறது. அவரை எம்.பி.தேர்தல் முடியும் வரை அமைதியாக இருக்கச் சொல்லுங்கள். அதன்பிறகு நான் ஸ்டாலினிடம் பேசி ஒரு நல்ல முடிவிற்கு வருகிறேன்' என்று சொல்லியிருக்கிறார்.

அன்புமணிக்கு பதவி முக்கியம் பாமகவுக்கு மாம்பழசின்னம் முக்கியம் ! Dilemma ?

அன்புமணியா, அல்போன்ஸா மாம்பழமா? என்ற, தேர்வு கேள்வி தான் பா.ம.க., திக்கி திணறி, கூட்டணிக்கு குடைச்சல் கொடுத்ததற்கு காரணம் என, தெரிகிறது.அன்புமணிக்கும் - குரு + ராமதாசுக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள் மற்றும் பா.ம.க.,வின் மாம்பழ சின்னத்திற்கான போராட்டம் குறித்தெல்லாம் பல்வேறு கால கட்டங்களில், 'தினமலர்' நாளிதழ் பதிவு செய்து உள்ளது.இந்த கேள்விகள் எழுந்து சில மாதங்களாகியும், உயர்ந்த மருத்துவ படிப்பு படித்தவர்களால் இதை தீர்க்க முடியவில்லையா என்ற எண்ணம், பல்வேறு தரப்பினருக்கு எழுந்து உள்ளது.சமீபத்தில் பொறுமைக்கு புதிய அளவுகோலான பா.ஜ.,வே, 'கூட்டணியில் இருக்கிறார்களா, இல்ைலயா என்று அவர்களை தான் கேட்க வேண்டும்' என்று, கூறி வருகிறது.தீர்வு கிடைக்காததற்கு என்ன காரணம் என, அறிந்து கொள்ள, முதலில் அன்புமணி மற்றும் அல்போன்சா பிரச்னைகளை சுருக்கமாக பார்க்கலாம்.இவர் மத்திய அமைச்சராக இருந்து, ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. 'டென்னிஸ் பயிற்சியில் எத்தனை காலம் தான் கடத்துவது. இலங்கை பிரச்னையை சொல்லி, ராஜினாமா செய்ததில் அவசரப்பட்டு விட்டோமோ' என, இவருக்கு தோன்றி இருக்கலாம்.

Malaysia எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகீம் மாயமான மலேசிய விமானத்தின் பைலட்டுடன் நேரடி தொடர்பு ?

Malaysian opposition leader Anwar Ibrahim says has rubbished suggestions the pilot of MH370 may have diverted the plane as a political act ...வாஷிங்டன்: காணாமல்போன மலேசிய விமானத்தின் பைலட்டுடன்  தனக்கு தொடர்பு உள்ளது என்பதை, சிறையில் இருக்கும் அந்நாட்டு  எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகீம் ஒப்புக் கொண்டுள்ளார். கடந்த 8ம்  தேதி காணாமல் போன மலேசிய விமானத்தின் விமானி ஜஹாரி அகமது  ஷாவுக்கும், அந்நாட்டு சிறையில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் அன்வர்  இப்ராகீமுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது.  விமானம் காணாமல் போனதற்கு முதல் நாளும், சிறைக்கு சென்று  அன்வரை, ஜஹாரி சந்தித்து பேசியதாகவும் கூறப்பட்டது. ஆனால்,  ஜஹாரிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அன்வர் மறுத்து  வந்தார்.அவரது புகைப்படத்தை பார்த்த பின்னர், கட்சி கூட்டங்களில்  அவரை பார்த்ததாக அன்வர் கூறினார்.

புதன், 19 மார்ச், 2014

குஷ்புவையும் கனிமொழியையும் திமுக பிரசாரத்துக்கு அழைக்கிராங்கோ !

திமுக தலைமை தன்னை பிரசாரத்திற்கு அழைக்காததால் அப்செட் ஆகியிருந்ததாக கூறப்பட்ட நடிகை குஷ்பு பிரசாரத்தில் ஈடுபடப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் முதல் வாரத்திலிரு்ந்து அவர் பிரசாரம் செய்வார் என்றும் தகவல்கள் வருகின்றன. குஷ்பு அப்செட்டாக உள்ளார், வேறு கட்சியில் சேர முனைகிறார் என்று எப்படி உறுதிப்படுத்த முடியாத செய்திகள் வந்ததோ, அதேபோல இந்த செய்தியும் வந்துள்ளது. வழக்கம்போல வெண்ணை திரண்டு வரும்போது தாளி உடையும் வாய்ப்பு அதிகரிப்பதை உணர்ந்த கலைஞர் பெரும்பாடு பட்டு குஷ்புவை சமதானப்படுதுள்ளதாக வெவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள் . குஷ்பு ஏப்ரல் முதல் வாரத்தில் பிரசாரம் தொடங்குவார் என்றும் அவருக்காக பிரசார வேன் தயாராகி வருவதாகவும் இந்த செய்தி கூறுகிறது.

2ஜி அலைக்கற்றை ஊழலில் தி.மு.க.வை தொடர்புபடுத்தி பேசுவதை, ஜெயலலிதா நிறுத்திக் கொள்ள வேண்டும்!


அலைக்கற்றை ஊழலில் ஈடுபட்டதாக தி.மு.க.வை பற்றி பேசுவதை முதல்�அமைச்சர் ஜெயலலிதா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சியில் கடந்த 2 நாட்களுக்கும் முன்பு முதலமைச்சர் ஜெயலலிதா, மத்திய அரசில் அங்கம் வகித்தபோது தமிழ்நாட்டிற்கே தலைக்குனிவை ஏற்படுத்தும் வகையில் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அலைக்கற்றை இமாலய ஊழலை முன்னின்று நடத்திய கட்சி தி.மு.க. என்று அவருக்கே உரிய பாணியில் தம் மீது பழி சுமத்தியிருக்கிறார். அலைக்கற்றை பற்றிய வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. விசாரணை தான் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.
மேலும், குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா உள்ளிட்டோர், ஜெயலலிதாவைப்போல வாய்தா வாங்காமல், விசாரணைக்கு முறையாக ஒத்துழைத்து வருகிறார்கள். ஆனால் ஜெயலலிதா கலந்து கொள்ளும் ஒவ்வொரு தேர்தல் பிரசார கூட்டங்களிலும் தி.மு.க. ஊழல் புரிந்ததாக வேண்டுமென்றே திட்டமிட்டு குற்றஞ்சாட்டி வருகிறார் என்று தெரிவித்தார். tamilantelevision.com

இந்திய கம்யூ. கூட்டம்: தா.பாண்டியனுக்கு எதிராக நிர்வாகிகள் ஆவேசம்

பாண்டியனுக்கு எதிராக தோழர்கள் ஆவேசத்துடன் கருத்துக்கள கூறினார்.கம்யுனிஸ்டுகளின் அரசியல் இருப்பை குழிதோண்டி புதைத்து விட்டு எல்லாவற்றிற்கும் மனம் போன போக்கில் நரம்பில்லா நாக்கால் வாயில் வந்ததை ...
மார்ச். 19–பாராளுமன்ற தேர்தலில் இடது சாரி கட்சிகள் தலா 9 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகின்றன.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வட சென்னை, கோவை, மதுரை கன்னியாகுமரி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், விழுப்புரம், தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த 9 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலையும் அந்த கட்சி அறிவித்துவிட்டது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி தென்காசி, நாகப்பட்டினம், திருப்பூர், சிவகங்கை, தர்மபுரி, கடலூர், திருவள்ளூர், தூத்துக்குடி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இதற்கான வேட்பாளர்களை முடிவு செய்வதற்காக இந்திய கம்யூனிஸ்டின் மாநில நிர்வாக குழு கூட்டம் சிந்தாதிரிப்பேட்டையில் அந்த கட்சி அலுவலகத்தில் இன்று காலை நடந்தது.

அழகிரியுடன் தொடர்பு வைத்தால் DMK ஒழுங்கு நடவடிக்கை ! அப்ப குஷ்பூவுடன் ?

சென்னை: திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள மு.க. அழகிரியுடன் தொடர்பு வைத்தால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் என்று திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலர் க. அன்பழகன் எச்சரித்துள்ளார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார் அவரது சகோதரர் மு.க. அழகிரி. இதனைத் தொடர்ந்து மு.க. அழகிரி ஆதரவாளர்கள், திமுகவில் இருந்து முதல் கட்டமாக நீக்கப்பட்டனர். பின்னர் தென் மண்டல அமைப்புச் செயலரான மு.க. அழகிரியும் தற்காலிகமாக திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் தமது ஆதரவாளர்களை சந்திக்கிறேன் என்று கூறிக் கொண்டு திமுக நிர்வாகிகளை வீடு தேடி சென்று மு.க. அழகிரி பார்த்து வருகிறார். அண்மையில் பிரதமர் மன்மோகன்சிங், நடிகர் ரஜினிகாந்த், மதிமுக பொதுச்செயலர் வைகோ என பலரையும் சந்தித்து வருகிறார் மு.க. அழகிரி. இந்நிலையில் மதுரை திமுக வேட்பாளர் வேலுச்சாமி, மு.க. அழகிரியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்பேன் என்றும் கூறியிருந்தார்.

ஆசைப்பட்டதை அடைந்த ஜெயம் ரவி!

ஜெயம் ரவி அடுத்தப் படத்தை தன் அண்ணன் ஜெயம் ராஜாவின்
இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். தொடர்ந்து தன் தம்பி ஜெயம் ரவியை வைத்தே படங்களை இயக்கி வந்தார் ஜெயம் ராஜா. தன் தம்பி மற்ற இயக்குனர் படங்களில் நடிக்க வாய்ப்பு வர. விஜய் நடிப்பில் வேலாயுதம் படத்தை இயக்கி வெற்றியும் கண்டார் ஜெயம் ராஜா.ஜெயம், எம்.குமரன் S/O மகாலஷ்மி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தில்லாங்கடி, வேலாயுதம் என ஜெயம் ராஜா இயக்கிய அத்தனை படங்களும் ரீமேக் படங்கள் என்பதால் திமிழ் சினிமா வட்டாரத்தில் அவரை ரீமேக் ராஜா என்றும் அழைப்பதுண்டு.

சூட்கேஸ் (பணம்)​ பற்றாக்குறையால் வேட்பாளர்கள் பாதிப்பு

தேர்தலில் ஜெயித்த பின் ஓட்டம் பிடிப்பது தான் தே.மு.தி.க.,வினரின் வழக்கமாக இருந்தது. ஆனால், நேற்று முன்தினம், தே.மு.தி.க.,வின் நாமக்கல் வேட்பாளரே ஓட்டம் பிடித்தது, புதுமையை ஏற்படுத்தியது. இதே போல், மேலும் சிலர் ஓட்டம்பிடிக்க வாய்பபு உள்ளதாகவும், அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.நேற்று முன்தினம், தேர்தல் பிரசாரத்திற்காக, விஜயகாந்த் நாமக்கல் சென்ற போது, அந்த தொகுதிக்கான தே.மு.தி.க., வேட்பாளர் மகேஸ்வரன் பிரசாரத்திற்கு வராததால், விஜயகாந்த் அதிர்ச்சி அடைந்தார். மகேஸ்வரனோ, மூளையில் வைரஸ் காய்ச்சல் என, சொல்லி மருத்துவமனையில் படுத்துக்கொண்டு, தான் போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்தார்.தீர விசாரித்தபோது, மூளையில் வைரஸ் காய்ச்சல் பிரச்னையை விட, அவருக்கு 'வைட்டமின் ப' பற்றாக்குறை தான் முக்கிய பிரச்னை என, தெரியவந்தது.பொதுவாக. தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சியின் வேட்பாளர்களுக்கு, எங்கிருந்தோ பிரச்சாரத்திற்கு தேவையான கோடிகள் வந்துவிடும். அந்தந்த தொகுதி தொழிலதிபர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பெருந்தனக்காரர்கள், நல்லெண்ணத்தோடு, நன்கொடை வழங்குவர் அல்லது செலவுகளை ஏற்றுக்கொள்வர். சமயத்தில், கட்சி தலைவர் பிரதமராவதில் முனைப்பு காட்டினால், கட்சியே செலவும் செய்யும். தி்றமை உள்ளவன் மூன்று கோடி முதல் வைத்து முன்னூறு கோடி சம்பாதி்க்கிறான்.

யாழ்ப்பாண தமிழை சரளமாக பேசும் ஜேர்மனிய பெண்மணி


தமிழர்கள், மொழியை பொறுத்த மட்டில் ரெண்டும் கெட்டான்களாக இருக்கும் வேளையில் ஒரு வெள்ளைக்கார  பெண்மணி தமிழை, அதுவும் இலங்கை தமிழை, சரளமாக  பேசுவது பாலைவனத்தில் மழை பெய்தது போல் இருக்கிறது.
தமிழை ஆங்கிலத்தில் எழுதும் தமிழர்கள் இதை பார்த்தாவது வெட்கப் படுவார்களா?
மெய் சிலிர்க்கிறது. தமிழ் வளரும் என்பதற்கு இந்த பெண் ஒரு உதாரணம். வாழ்க உங்களது தமிழ் ஆற்றல். உங்கள் புகழ் மென் மேலும் பெருக வாழ்த்துகிறேன். ஜேர்மன் தமிழிச்சி வாழ்க வளர்க.

மம்தா : Congress ஊழல், BJP மதவாதம், Marxists அழிவு !

காங்கிரஸ் ஊழல் கட்சி, பா.ஜனதா மதவாத கட்சி, மார்க்சிஸ்ட் அழிவு தரும் அரசியலை நடத்துகிறது: மம்தா
மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி பாய்லனில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு தொண்டர்களிடையே உரையாற்றினார்.
அப்போது, பா.ஜனதா அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பே மோடிதான் பிரதமர் என்று சிலர் கூறிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. அவர்களுக்கு எங்கே மெஜாரிட்டி கிடைக்கும்? நாட்கள் செல்லச் செல்ல அவர்களின் கணிப்பு பிசுபிசுத்துப்போகும். மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அவர்களின் செல்வாக்கு மிக குறைவாகவே உள்ளது.

பா.ஜ.க. கூட்டணியில் இழுபறி நிலை ! சகல வாரிசுகளுக்கும் பதவி தொண்டர்களுக்கு துண்டு மட்டுமே !


தொகுதி பங்கீட்டில் பா.ம.க. முரண்டு பிடிப்பதால், பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் வேட்பாளரை அறிவிக்க முடியாமல் தவித்து வருகின்றன. கூட்டணி இறுதி அறிவிப்புக்காக காத்திருக்கின்றன.
பா.ம.க. இடம்பெறுமா?
தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், தே.மு.தி.க., ம.தி.மு.க., புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. பா.ம.க.வும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் முன்பே, பா.ம.க. 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. இதனால், அதில் 8 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டு வருகிறது. ஆனால், பா.ஜ.க. தரப்பில், நீங்கள் வேட்பாளர்கள் அறிவித்ததில் 5 தொகுதிகளை அப்படியே தருகிறோம். மீதமுள்ள 3 தொகுதிகளை எங்கள் விருப்பப்படி தருவோம் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறிவருகிறது.

நாகராஜ் : பணத்துக்காக வாழ்றதில்லிங்க;வாழ்றதுக்குதாங்க பணம் ! jeyamohan


kethetheel
ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகில் வாணியம்பாடி செல்லும்சாலையோரத்தில்இருக்கிறது ஏலகிரி ஓட்டல். அங்குச்சாப்பிட்டுவிட்டுச் சிலர் பணம்கொடுக்காமல் வணக்கம் மட்டும் தெரிவித்து விட்டுச் செல்கின்றனர்.
கல்லாவில் இருந்தவரும்காசு கேட்பதில்லை. பணத்துக்குப்பதில் வணக்கம் செலுத்தினால்போதுமா? விசாரித்தபோதுதான்மேலே தொங்கிக்கொண்டிருந்த சிலேட்டுப் பலகைகளைக்காட்டினார். விஷயம் புரிந்தது. ‘முதியோர், ஊனமுற்றோர்களுக்கு காலை 8 முதல் 11மணி வரை இலவச உணவு’ (100 பேர்வரை), ‘பால் வாங்கப்பணமில்லையென்றால்குழந்தைகளுக்கு இலவசமாகப் பால்’, ‘வாரம் 100மாணவர்களுக்கு இலவசமாகபேனா அல்லது பென்சில்’, ‘1 முதல் 8ம்வகுப்பு வரையிலானமாணவர்களுக்கு காலை முதல்மாலை வரை பாதி விலையில் உணவு’ இந்த அறிவுப்புகள்சிலேட்டுப் பலகைகளில் சாக்பீஸால்
எழுதப்பட்டிருந்தன.
ஆச்சரியத்துடன் கேட்டால்,“பணத்துக்காக வாழ்றதில்லிங்க;வாழ்றதுக்குதாங்க பணம்” பெரியதத்துவத்தை எளிதாகச் சொல்கிறார்இந்த ஓட்டலின் உரிமையாளர் நாகராஜ்.

செவ்வாய், 18 மார்ச், 2014

யுவகிருஷ்ணா: டிஜிட்டல் பார்ப்பனீயம்’ தீண்டாமை சத்தியமாக இங்கே நிலவுகிறது.


இணையத்தளங்களில் ’பார்ப்பனீயம்’ பற்றி பேசினால் பார்ப்பனத் தோழர்கள் கோபித்துக் கொள்கிறார்கள். ‘பூணூல் எதிர்ப்பு’ தவிர்த்து உங்களிடம் வேறு ஆயுதமே இல்லையா என்று கொதித்தெழுகிறார்கள். 1998ல் தொடங்கி ’டயல்அப் மோடம்’ காலத்திலிருந்து இணையத்தில் புழங்குகிறேன். சமூகத்தில் இப்போது வெளிப்படையாக காட்டிக்கொள்ள முடியாத பார்ப்பனர்களின் சாதிப்பற்றை இணையத்தில் மறைமுகமாகவேனும் வெளிப்படுத்துவதை, இந்த பதினாறு ஆண்டுகளாக உணர்ந்திருக்கிறேன். இந்த டிஜிட்டல் பார்ப்பனீயத்தை யாரேனும் சுட்டிக் காட்டும்போது அவர்களுக்கு ‘சுர்’ரென்று கோபம் எழுவது இயல்புதான்.

1) குழு சேர்ந்து பார்ப்பனரல்லாதவர்களை கிண்டல் செய்வது. முதல் தலைமுறையாக கல்விகற்று இணையத்துக்கு வருபவர்களை நக்கல் அடித்து துரத்தி அடிப்பது. பிறப்பு, வளர்ப்பு குறித்த inferiority complex ஏற்படுத்துவது.
2) இடஒதுக்கீடு போன்ற விவாதங்கள் வரும்போது ‘தகுதி’ பேசுவது. தகுதி என்பது பூணூலா என்று பதில் கேள்வி கேட்டால், ‘அய்யய்யோ... சாதிவெறி புடிச்சவன்’ என்று கூப்பாடு இடுவது.

போலி Encounter கொலை வழக்கு: மோடிக்கு எதிராக புதிய சிடி ஆதாரம்



கடந்த 2004 ஆம் ஆண்டு கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் உட்பட நான்கு பேர் எண்கவுண்டரில் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் மோடியை கொல்ல சதிதிட்டம் தீட்டியதால் இந்த எண்கவுண்டர் நடந்ததாக கூறப்பட்டது.;இது குறித்து விசாரணை நடத்திய சிபிஐ இஷ்ரத் ஜகான் உள்ளிட்டோர் போலி எண்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மேலும் சம்பவத்தில் பாண்டே,சிங்கால் உள்ளிட்ட இரணடு போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டது.இந்நிலையில் சிங்கால் ஒரு சிடி ஆதாரத்தை சிபிஐயிடம் வழங்கியுள்ளார். அந்த ஆடியோ சிடி 70 நிமிடம் பதியப்பட்டுள்ளது. அதில் மோடியின் தனி செயலாளரான ஜி.சி. முர்மு, ஏ கே சர்மா உள்ளிட்ட அமைச்சர்கள் எண்கவுண்டர் வழக்கு குறித்து பேசுவது போல் அமைந்துள்ளது.  இதன் அடிப்படையில் புதியதாக சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது.

உங்க பின்னாலேயே வாரோம்: ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகியின் பேச்சால் கண் கலங்கிய அழகிரி

தயாமகாலில் நடைபெற்ற ஆதரவாளர்கள் கருத்து கேட்புக் கூட்டத்தில் பேசும் அழகிரி"தயாமகாலில் நடைபெற்ற ஆதரவாளர்கள் கருத்து கேட்புக் கூட்டத்தில் பேசும் அழகிரி" ; தயாமகாலில் நடைபெற்ற ஆதரவாளர்கள் கருத்து கேட்புக் கூட்டத்தில் பேசும் அழகிரி மதுரை சத்யசாய் நகரில் உள்ள தயாமகாலில் திங்கள்கிழமை நடைபெற்ற மு.க.அழகிரி ஆதரவாளர்கள் கருத்து கேட்புக் கூட்டத்தில், யாரும் எதிர்பாராத அளவுக்கு ஆதரவாளர்கள் வந்திருந்தனர். தென்மாவட்ட நிர்வாகிகள் அதிகமாகவும், வடமாவட்ட நிர்வாகிகள் குறைவாகவும் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், விரும்பியவர்கள் எல்லாம் பேச வாய்ப்பு கொடுத்தார் அழகிரி. ஆட்டோ டிரைவருக்குக்கூட பேச வாய்ப்புத் தரப்பட்டது.
ஜலீல் என்பவர் பேசுகையில், தலைமை உங்களைத்தேடி வரணும்ணே. நீங்க எந்த வியூகம் வகுத்தாலும் உழைக்கத் தயார் என்றார்.

திமுகவிலிருந்து நகரும் குஷ்பு… ஸ்டாலினின் அழிச்சாட்டியத்திற்கு எல்லையில்லை ? தேசிய கட்சியில் இணைய முடிவு?

சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் உள்ள குஷ்பு, திமுக முகாமில் இருந்து விலக முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை குஷ்பு திமுகவின் நட்சத்திர பிரச்சார பேச்சாளர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்தார். தென்சென்னை லோக்சபா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் குஷ்பு. ஆனால் ஸ்டாலின் லாபியின் அது கிடைக்காமல் போய்விட்டது.
போட்டியிட சீட் கிடைக்காத வருத்தத்தில் இருந்தாலும், பிரச்சாரம் செய்ய தயாராகவே இருந்தார் குஷ்பு.
ஏப்ரல் முதல்வாரத்தில் இருந்து பிரச்சாரத்திற்கு தயாராக இருப்பதாக குஷ்புவே பேட்டி கொடுத்தார். அப்படியிருந்தும் திமுக தரப்பில் இருந்து பிரச்சாரத்திற்கு அழைப்பு எதுவும் வரவே இல்லையாம்.
இனியும் இங்கிருந்தால் ஓரங்கட்டிவிடுவார்கள் என்று நினைத்த குஷ்பு டெல்லியில் கடந்த சிலநாட்களாக முகாமிட்டுருக்கிறார்.
தனது அரசியல் வாழ்க்கையை அஸ்தமிக்கச் செய்துவிடுவார்கள் என்று நினைத்த குஷ்பு, புதிய அரசியல் பாதையைத் தேடி, டெல்லியில் முகாமிட்டுள்ளாராம். கலைஞர் ஸ்டாலினுக்கு சரியாத்தான் பேரு வச்சாரு கொடுங்கோலன் சர்வாதிகாரி ஸ்டாலினின் பேர்! என்ன பொருத்தம் இந்த பேர் பொருத்தம் !  அந்த ஸ்டாலினும் டிராஸ்க்கி போன்ற ஜனநாயக மிதவாதிகளை தேடி தேடி அழித்து கட்சியை தன கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ரஷியாவை ஒரு வழியாக்கினார் . திமுகவை இனி யார்தான் காப்பாறுவார் ? உண்மைதொண்டன் கண்ணீர் வடிக்கிறான் ,

அமீருக்கு ஜோடியாக ஸ்ரேயா !

சென்னை:பாலா இயக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த ஸ்ரேயாவுக்கு அமீர் கைகொடுக்க உள்ளார்.‘பரதேசி படத்தையடுத்து பாலா இயக்கும் படம் ‘கரகாட்டம். இதில் ஹீரோயினாக ஸ்ரேயா நடிப்பதாக கூறப்பட்டது. இதற்காக ஸ்ரேயாவை வைத்து போட்டோ ஷூட்டும் நடத்தப்பட்டது. கிராமத்து வேடத்துக்கு பொருந்தமாட்டார் என்பதால் அவருக்கு பதிலாக வரலட்சுமியை தேர்வு செய்தார். பாலா படம் தனக்கு திருப்பு முனையாக இருக்கும் என்று எதிர்பார்த்த ஸ்ரேயா ஏமாற்றம் அடைந்தார். அவரது கவலையை போக்கும் விதமாக அமீர் தனது படத்தில் நடிக்க ஸ்ரேயாவை அழைத்திருக்கிறாராம். இயக்குனர் சரண் உதவியாளர் கார்த்திக் இப்படத்தை இயக்க உள்ளார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. அமீர் படம் என்றாலே வருடக்கணக்கில் ஷூட்டிங் நடக்குமே என்ற பேச்சு இருக்கிறது. அந்த பேச்சை மாற்றும் விதமாக இப்படம் இருக்குமாம். வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் பெப்சி அமைப்பின் தேர்தல் நடக்க உள்ளது. அது முடிந்தபிறகு ஜூலையில் ஷூட்டிங் தொடங்கி செப்டம்பர் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அமீர் தரப்பு தெரிவிக்கிறது. இதில்தான் அமீருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்க உள்ளாராம்.tamilmurasu.org

புதன் கிரகம் சுருங்குகிறது : ஆய்வில் அதிர்ச்சி ?

சூரியனைச் சுற்றி வரும் 9 கோள்களில் முதல் கோளாகவும், மிகச் சிறிய கோளாகவும் விளங்கும் புதன் கிரகம், கடந்த 4 கோடி ஆண்டுகளில் 8.6 மைல் அளவுக்கு அதன் விட்டம் சுருங்கி உள்ளதாக நாசாவின் ஆராய்ச்சிகளில் தெரிய வந்துள்ளது.
பாறைகளால் ஆன புதன் கிரகத்தில் பகல் மூன்று மாதமும், இரவு மூன்று மாதமும் இருக்கும். புதன் கிரகத்தில் பகலில் வெயில் 400 டிகிரி செல்சியசில் இருக்கும். இரவாக உள்ள பகுதியில் குளிர் ஆளைக் கொன்று விடும். மைனஸ் 173 டிகிரியாக இருக்கும். புதன் கிரகத்தில் செடி, கொடி, மரம என எதுவும் இல்லை. எந்த உயிரினமும் வாழும் சூழ்நிலையும் இல்லை. இதனால புதன் திசை சுருங்காதுன்னு பெரியவா சொல்றா !ஆனாலும் புதன் ஆதிக்ககாரர் அதாங்க ஐந்தாம் நம்பர் காரங்களுக்கு  ஆயுசு சுருங்குமோன்னு நேக்கு தெரியல்லை எதுக்கும் லோக்கல் கோயிலுக்கு அல்லது சாஸ்திரிக்கு கொஞ்சம் துட்டு கொடுத்தா தேவல!

வைகோவும் தன்னிச்சையாக வேட்பாளர் அறிமுகம் ? இன்று மாலை தெரிந்துவிடும்.

வைகோ இன்று முடிவு ஏடுக்கலாம்! “நாமும் நம்ம தொகுதிகளை அறிவித்து விடலாமா?” "  பா.ஜ.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவு இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில்,  அதிலுள்ள கட்சிகள், தத்தமது இஷ்டத்துக்கு தமக்கான தொகுதிகளையும், அவற்றின் வேட்பாளர்களையும் அறிவித்துக்கொண்டே போகின்றனர். இதனால் கடும் பாதிப்பை சந்தித்திருப்பது ம.தி.மு.க. தான். காரணம் இந்த கட்சிக்கு இன்னும் இட ஒதுக்கீடு முறையாக அறிவிக்கப்படாத காரணத்தினால், எவ்வித தேர்தல் பணியும் தொடங்க முடியாத நிலையில் இருந்து வருகிறது.
மற்ற கட்சிகள்போல அடாவடியாக களத்தில் இறங்கலாம் என்றாலோ, வைகோ, அரசியல் நாகரீகம் பார்ப்பவர். அடாவடி அரசியலில் நம்பிக்கையற்றவர். அடடே இவரு அரசியல் நாகரீகம் பார்ப்பவராமே ? எந்த பிடியாவில கண்டு பிடிச்சீங்க ?

டிராபிக் ராமசாமி தேர்தல் சின்னம் வழக்கு: ஐகோர்ட்டில் தள்ளுபடி


சென்னை ஐகோர்ட்டில் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில், ‘‘இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நிரந்தர தேர்தல் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சிகள் தங்களது சின்னத்தை பொது இடங்களில் நிரந்தரமாக வைக்கின்றனர். அதன் மூலம் சுயேச்சை வேட்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே அரசியல் கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் ஒதுக்காமல் தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் புதிய சின்னங்கள் ஒதுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 11 மற்றும் 15–ந்தேதிகளில் கோரிக்கை மனு அனுப்பினேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை’’ என கூறியிருந்தார்.

டைரக்டர் சுந்தர் சி முதலியாரா... வேளாளரா? திமுக கோபத்துல குஷ்பு அதிமுக பக்கம் போகப் போறாங்களா?

சென்னை: நேற்று
முழுக்க சினிமா பத்திரிகையாளர்கள் மற்றும் பிஆர்ஓக்களிடையே கேட்கப்பட்ட கேள்விதான் இது. கேட்டவர்கள்... தமிழக போலீசின் உளவுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள். சிலர் தங்களுக்குத் தெரிந்ததை சொல்லி வைத்தார்கள். சிலர் அவர் முதலியார்தான் என்றார்கள். இன்னும் சிலர் இல்லையில்லை வேளாளர்தான், நல்லா தெரியும் என்றார்கள்.
உங்களுக்குத் தெரியுமாண்ணே?' ஆனால் யாருமே எதற்காக இந்தக் கேள்வி என திருப்பிக் கேட்கவில்லை. அந்தக் கேள்வியை தங்கள் நண்பர்கள் குழுவுக்குள் கேட்டுக் கொண்டார்கள். எதுவுக்கு இயக்குநர் சுந்தர் சி சாதி பத்தி கேட்கிறார்கள் போலீசார்? திமுகவுல சீட் கிடைக்காத கோபத்துல குஷ்பு அதிமுக பக்கம் போகப் போறாங்களா... அல்லது சுந்தர் சி வேற ஏதாவது கட்சிக்காக பிரச்சாரம் பண்ணப் போறாரா? -இப்படியெல்லாம் பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது. நமக்குத் தெரிந்த ஒரு போலீஸ் அதிகாரியிடம் இதுகுறித்து விசாரித்தபோது, 'எங்களுக்கும் என்ன காரணம்னு தெரியாதுங்க. மேலிடத்துல விசாரிச்சு ரிப்போர் தரச் சொன்னாங்க.. பத்திரிகைகாரங்களுக்கு நல்லா அவரைப் பத்தி தெரியுமேன்னு விசாரிச்சோம், அவ்வளவுதான்,' என்றார்.( சுந்தர் சி செங்குந்த முதலியார் ​)
tamil.oneindia.in

ரேடாரில் சிக்காமல் இருக்க, 5,000 அடி உயரத்தில் பறந்த மலேசிய விமானம்

கோலாலம்பூர் : சீனாவுக்கு புறப்பட்ட, மலேசிய ஏர்லைன்ஸ் விமானம், ரேடார் சிக்ன லில் சிக்காமலிருக்க, 5,000 அடி உயரத்தில் தாழ பறந்ததாக கூறப்படுவதால், கடத்தல் சந்தேகம் நீடிக்கிறது. தொடர்பு துண்டிப்பு:மலேசியாவின், கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து, இம்மாதம், 7ம் தேதி, இரவு, 239 பேருடன், சீனாவுக்கு புறப்பட்ட விமானம், வியட்நாம் எல்லையில் நுழைந்த போது, தரைகட்டுப்பாட்டு தளத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த விமானத்தில் சென்னையை சேர்ந்த, சந்திரிகா சர்மா உள்ளிட்ட, ஐந்து இந்தியர்களும், கனடா நாட்டில் வசிக்கும், தமிழர் முக்தேஷ் மற்றும் அவரது மனைவி ஜானா உள்ளிட்டோர் பயணித்தனர்.விமானம் மறைந்து, 10 நாட்களாகி விட்டது. இதுவரை எந்த தகவலும் இல்லை. இந்த விமானத்தை பற்றிய கட்டுக்கதைகள் தான் வந்து கொண்டிருக்கின்றன.

பிரசாத் கலர் லேப் மூடப்பட்டது ! படச்சுருளுக்கு ஓர் இரங்கற்பா ! டிஜிட்டல் திரைப்படங் கள் அதிகமாக உருவாக்கப்படுகின்றன !


ஒளிப்பதிவு செய்யப்பட்ட படச்சுருளைத் திரையில் ஓடும் வகையில் புராஸஸிங் செய்து வந்தது பிரசாத் பிலிம் லேபரட்டரி. இந்தியாவில் படச்சுருள் படங்களுக்கான காலம் முடிவுக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து இது மூடப்பட்டது. சினிமா தொடங்கிய காலம் முதல் இருந்துவந்த பழக்கம் மாறியதால் இதுவரையான ஏற்றத்தாழ்வுகளுடன் கூடிய வாழ்வின் பாதையும் மாறிவிட்டது.
'ஆதாமிண்ட மகன் அபு'சமீப காலமாக டிஜிட்டல் திரைப்படங் கள் அதிகமாக உருவாக்கப்படுகின்றன. ஆனால் இந்தியாவின் பெரிய பிலிம் லேபரட்டரியான பிரசாத் கலர் லேப் தனது இயக்கத்தைக் கொஞ்சம் கொஞ் சமாக நிறுத்தத் தொடங்கியபோது பிலிமில் படமெடுக்கும் காலம் முடிவுக்கு வருகிறது என்னும் யதார்த்தம் நம்மைத் தாக்கியது. படச்சுருளை கேமராவில் மாட்டிப் படப்பிடிப்புக்குச் சென்று படமாக்குவார்கள். பின்னர் லேபில், கையுறை அணிந்த கைகளால் அந்தச் சுருளைக் கழுவி நெகட்டிவாகவும் பாஸிட்டிவாகவும் மாற்றுவார்கள். படச்சுருளைத் தனித்தனி காட்சிப் பிம்பங்களாக வெட்டுவார்கள். தேவையான காட்சிக் கோவையை உருவாக்குவார்கள். லேபின் இருட்டறைக் கொடியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிம்பங்கள் அடங்கிய சுருள் ஒரு புறம் தொங்கிக் கொண்டிருக்கும். மறுபுறம் தேவையற்ற பிழையான பிம்பங்கள் அடங்கிய படச்சுருள் கிடக்கும். பின்னர் படச்சுருளில் ஒலி ஏற்றப்படும். தேவையான வண்ண மாற்ற வேலையும் நடைபெறும். இறுதி யாகத் திரையிடும் நிலையிலான படச்சுருள்கள் ரீல் பெட்டியில் அடுக்கப் பட்டுத் திரையரங்குக்கு அனுப்பப்படும். சுருண்டு கிடந்த படச்சுருள் புரொஜக்டரின் வழியே நொடிக்கு 24 பிம்பங்களாக ஓடும்போது கண்ணெதிரே திரையில் சினிமா எனும் மாயலோகம் பரவும். படச்சுருளில் சினிமா உருவாக்கப்பட்ட இந்த நூறாண்டுக் கதை முடிவுக்கு வரும் காட்சியின் பிம்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நம் கண்ணிலிருந்து மறைந்து ஞாபக அடுக்குகளில் தங்கத் தொடங்கின.

"179 பயணிகளுடன் இறக்கையை இழந்தும் பத்திரமாக தரையிறங்கிய அமெரிக்க விமானம்"

அமெரிக்காவின் ஆர்லண்டோ நகரில் இருந்து அட்லாண்டாவுக்கு டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நேற்று 179 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. நடு வானில் பறந்து கொண்டிருந்த போது அந்த விமானத்தின் இறக்கையின் பெரும்பகுதி தனியாக கழன்று கீழே விழுந்தது. இதை அறிந்து கொண்ட விமானி, வெகு சாமர்த்தியமாக விமானத்தை ஓட்டியபடி, அட்லாண்டா விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டார். நடந்த சம்பவத்தை விளக்கிக் கூறி, தனது விமானம் அவசரமாக தரையிறங்க அனுமதி வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து, பரபரப்படைந்த அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு, ஓடுபாதையை காலியாக்கி, அந்த விமானம் அவசரமாக தரையிறங்க அனுமதி அளித்தனர்.
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஓடுபாதையின் ஓரத்தில் ஆம்புலன்சையும், தீயணைப்பு வாகனத்தையும் தயார் நிலையில் நிறுத்தி வைத்தனர். ஒரு இறக்கையை இழந்து மூளியாக வந்த விமானத்தை இரவு 7.30 மணியளவில் திறமையாக தரையிறக்கிய அந்த விமானி, பயணிகள் இறங்கும் இடத்தில் பத்திரமாக நிறுத்தியதும் விமான நிலைய ஊழியர்கள் அனைவரும் கையொலி எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
அவரது சாதுர்யத்தால் 179 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 6 பேரின் உயிர் தப்பியது. பறக்கும் போது அந்த விமானத்தின் இறக்கை கழன்று விழுந்தது எப்படி? என்பது தொடர்பாக டெல்டா ஏர்லைன்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். .maalaimalar.com/

மாயமான மலேசிய விமான மர்மத்தில் திருப்பம்: இதோ இதுதான் தெளிவான விளக்கம்!

மாயமான மலேசிய விமானத்தில் இருந்து தரைக்கு வந்த “ஆல் ரைட், குட்நைட்” என்ற இறுதி சொற்கள் கூறப்படுவதற்கு முன்னரே, விமானத்தில் முதல் செட் ட்ரான்ஸ்மிஷன் டிவைஸ் செயலிழக்க வைக்கப்பட்டு விட்டது என்பதை, புலனாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். இது ஒரு பெரிய திருப்பம்தான் என இன்று காலை எழுதியிருந்தோம்.
“இதை சற்றே விளக்கமாக எழுத வேண்டும். அதே நேரத்தில் டெக்னிகலான இந்த விஷயத்தை அனைவருக்கும் புரியும் விதத்திலும் எழுத வேண்டும். சிறிது நேரம் கொடுங்கள்..” எனவும் குறிப்பிட்டிருந்தோம். இதோ, இந்த விவகாரத்தை எளிமையாக கொடுத்திருக்கிறோம்.
“ஆல் ரைட், குட்நைட்” என்ற இறுதி சொற்கள் கூறப்படுவதற்கு முன்னரே, விமானத்தில் முதல் செட் ட்ரான்ஸ்மிஷன் டிவைஸ் செயலிழக்க வைக்கப்பட்டு விட்டது என்று குறிப்பிடப்படுவது, விமானத்தின் ACARS (Aircraft Communications Addressing and Reporting System) என்பதைதான்.
இது, விமானி, தரையுடன் பேசும் தொடர்பு சாதனம் அல்ல. இந்த ACARS, விமானத்தின் மெயின்டெனன்ஸ் தொடர்பான தரவுகளை தரைக்கு அனுப்பும் சிஸ்டம்.
விமானத்தின் காக்பிட்டில், இரு விமானிகளுக்கும் நடுவே, எதிரேயுள்ள பானலில், அவர்கள் தரையுடன் பேசும் தொடர்பு சாதனத்துக்கான (ரேடியோ) சுவிட்ச் உள்ளது. இதை ஆஃப் செய்துவிட்டால், விமானத்தின் காக்பிட்டில் இருப்பவர்கள் பேசுவது தரைக்கு கேட்காது. தரையில் இருந்து சொல்வது, இவர்களுக்கு கேட்காது.

வியாபாரிகள் ரூ.10 லட்சம் எடுத்துச் செல்லலாம்: தேர்தல் கமிஷன் அனுமதி

சென்னை: வியாபாரிகள், உரிய ஆவணங் களுடன், 10 லட்சம் ரூபாய் வரை, கொண்டு செல்ல அனுமதிக்கும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர் களுக்கும், தேர்தல் கமிஷன் சார்பில், கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க, தேர்தல் கமிஷன், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சட்டசபை தொகுதி வாரியாக, பறக்கும் படை மற்றும் தணிக்கை குழு அமைக்கப்பட்டு, அதிரடி சோதனைகள் நடத்தப்படுகின்றன. இச்சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்படும் பணம், நகை, சேலை, போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

டாக்டர் கிருஷ்ணசாமி : எங்களை வெளியேற்றியதால் வலதுகரத்தை இழந்ததாக ஜெ., உணருவார்'


 கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அணியில் இடம் பெற்ற புதிய தமிழகம், இரு இடங்களில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க., உறவு கசந்து விட்டதால், இந்த தேர்தலில், தி.மு.க., அணியில், புதிய தமிழகம் இடம் பெற்று, தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறது. அணி மாற்றம் மற்றும் தேர்தல் நிலவரம் குறித்து, தென் மாவட்டங்களின் தலித் சமூகத்தவரின் கட்சியாக கருதப்படும் புதிய தமிழகத்தின் நிறுவனர், தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி: >ஓட்டப்பிடாரத்தில் எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி என்ன சாதித்தார்? ஏன் எம்.பி.,யாக விரும்புகிறார்? ஆட்சியில் யார், எந்த கட்சி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், எம்.எல்.ஏ., வலுவானவாஆக இருந்தால், தொகுதியை வளப்படுத்தலாம்.என் எம்.எல்.ஏ., தொகுதி நிதி அனைத்து தரப்பிற்கும் போய் சேர்ந்துள்ளது. இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப் பட்டதை தடுத்து நிறுத்தி உள்ளேன். மணல் கொள்ளையை தடுத்துள்ளேன்.நிலத்தடி நீரை, தனியார் நிறுவனங்கள் உறிஞ்சிய போது, ஐகோர்ட்டில் நானே வழக்கு தொடர்ந்ததுடன், நேரில் ஆஜராகி வாதாடி தடுத்து நிறுத்தி உள்ளேன்.

திங்கள், 17 மார்ச், 2014

வடிவேலு பேக்கரி VS தா.பா. பேக்கரி

துரதிருஷ்டவசமாக அம்மா இப்போது நாயைக் கொஞ்சும் மூடில் இல்லை
என்பதால் அவர்கள் கனத்த இதயத்தோடும் கண்ணீரோடும் விடைபெற வேண்டியதாயிற்று.மகிழ்ச்சியாக இணைந்தோம். மகிழ்ச்சியாக பிரிவோம்” என்று சொன்னாராம் ஓ.பன்னீர் செல்வம்.  மம்மியை இந்துமதவெறி எதிர்ப்பாளராக்கி அழகு பார்க்க வேண்டும் என்பது இந்த இடதுசாரிகளின் வாழ்நாள் இலட்சியம்.

 ”சேர்ந்திருப்பதாக அவர்கள்தான் சொன்னார்கள், அதுபோல பிரிவையும் அவர்களே அறிவிக்கட்டும். அதுவரை நாங்கள் அவர்களுடன்தான் இருப்போம்” என்கிறார் தா.பா (தா.பாண்டியன்). இதில் சம்மந்தப்பட்ட பெயர்களை நீக்கினால் இது ஏதோ கைவிடப்பட்ட காதலிக்கும் ஏமாற்றிய காதலனுக்கும் இடையேயான உரையாடலைப் போல இருக்கும். போதும் போதாததற்கு ”அவர்கள் வந்தால் ஏற்றுக்கொள்ளத் தயார்” என வாழ்வு கொடுக்கும் பாத்திரத்தை ஏற்றிருந்தார் கருணாநிதி. நாம் பன்னெடுங்காலமாக புராணத்திலும், நாடகத்திலும், சினிமாவிலும் பார்த்து வந்த கற்புநெறி தவறா காதலிகளின் கதையை நினைவுபடுத்துகிறது இன்றைய ‘கம்யூனிஸ்ட்’ கட்சிகளின் நிலை.

அதனை இன்னும் உறுதி செய்யும் விதமாக, ஏமாற்றப்பட்டாலும் தனித்து வாழ்வோமேயன்றி இன்னொருவனை ஏற்கமாட்டோம் எனும் பதிவிரதா தர்மத்தை கடைபிடித்திருக்கின்றன இரண்டு ‘கம்யூனிஸ்ட்’ கட்சிகளும்.

அழகிரியின் Politcs ? ஸ்டாலின் கோஷ்டிக்கு வலியோ வலி நிரந்தர வலி !

தி.மு.க.வினரால் பெரிதும்  எதிர்பார்க்கப்பட்ட அழகிரியின் மதுரை மந்திராலோசனையில் இன்று என்ன நடந்தது?  ‘புதுக் கட்சி தொடங்குவார்’, ‘தி.மு.க.வுக்கு எதிராக போர் முரசு ஒலிப்பார்’ என்றெல்லாம்  கடந்த சில தினங்களாக அடிபட்டுக்கொண்டிருந்த பலத்த வதந்திகள் போல எதுவுமே நடக்கவில்லை!
ஆனால், தந்திரமான நகர்வு ஒன்றை மேற்கொண்டிருக்கிறார் என்றே தெரிகிறது. தி.மு.க.வுடன் ‘நேரடி மோலை’விட  தற்போது அழகிரி எடுத்துள்ள ஸ்டான்ட் அவருக்கு பலன் தரக்கூடியது.
ஆதரவாளர் மத்தியில் பேசிய அழகிரி, “தற்போது தி.மு.க., கருணாநிதி கட்டுப்பாட்டில் இல்லை. ஏதோ ஒரு நெருக்கடி அவருக்கு இருந்து வருகிறது. என்ன நெருக்கடி என்று கேட்டால் அவர் சொல்ல மறுக்கிறார். இதனால் கட்சியையும், கருணாநிதியையும் காப்பாற்றுவதே நமது முதல் கடமையாக இருக்க வேண்டும்” என்பதையே தமது பேச்சின் ஹைலைட்டாக கூறினார் என்று தெரிகிறது.
தற்போது தி.மு.க., கருணாநிதி கட்டுப்பாட்டில் இல்லை. ஏதோ ஒரு நெருக்கடி அவருக்கு இருந்து வருகிறது. என்ன நெருக்கடி என்று கேட்டால் அவர் சொல்ல மறுக்கிறார். இதனால் கட்சியையும், கருணாநிதியையும் காப்பாற்றுவதே நமது முதல் கடமையாக இருக்க வேண்டும்.

Capton நாதிராவை மணக்க திட்டமிட்ட மாயமான விமானத்தின் பைலட்


கோலாலம்பூர்: மாயமான விமானத்தின் இணை விமானியான ஃபரிக் அப்துல் ஹமீது தனது காதலியான விமானி நாதிராவை திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தாராம். மாயமான மலேசிய விமானத்தின் இணை விமானி ஃபரிக் அப்துல் ஹமீது(27). அவர் மலேசிய ஏர்லைன்ஸின் மூத்த விமானி ஒருவரின் மகளான கேப்டன் நாதிரா ரம்லியை(26) காதலித்து வருகிறார். நாதிரா ஏர்ஏசியா ஏர்லைன்ஸில் விமானியாக உள்ளார். மலேசியா ஏர்லைன்ஸில் கடந்த 2007ம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் ஹமீது கடந்த 9 ஆண்டுகளாக நாதிராவை காதலித்து வருகிறார். இந்நிலையில் அவர் நாதிராவை திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஹமீது சென்ற விமானம் மாயமானதை அடுத்து அவரது தாய்க்கு ஆதரவாக இருக்க ஏர் ஏசியா நாதிராவுக்கு ஒரு மாதம் விடுப்பு அளித்துள்ளது. நாதிரா தற்போது ஹமீதின் தாயாருடன் கோலாலம்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி உள்ளார். ஹமீதும், நாதிராவும் லாங்கவி விமான பயிற்சி பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். விமானம் மாயமானதற்கு விமானி அல்லது விமானிகள் தான் காரணம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது tamil.oneindia.in

அழகிரி : தனிக்கட்சி தொடங்க மாட்டேன் ! ஸ்டாலின் நிம்மதி போச்சுடா ? அண்ணன் விளையாடுகிறார் !


தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட தென்மண்டல அமைப்பு செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான மு.க.அழகிரி எம்.பி. அதிரடி நடவடிக்கையால் அரசியலை கலக்கி வந்தார். சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் மன்மோகன்சிங், பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங் ஆகியோரை சந்தித்து பேசினார்.

அதற்கு முன்னதாக மதுரை விமான நிலையத்தில் வைகோவை சந்தித்து பேசினார். சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். இதனால் மு.க.அழகிரி என்ன முடிவு எடுக்கபோகிறார்? என்ன செய்யப்போகிறார்? என்ற பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் "கலைஞர் தி.மு.க." என்ற பெயரில் மதுரையில் பல பகுதிகளில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் சுவரொட்டி ஒட்டி இருந்தனர். கட்சியும் ரெடி, கொடியும் ரெடி கலைஞர் தி.மு.க. பொதுச்செயலாளரே என்ற வாசகத்துடன் மு.க.அழகிரி நடந்து வருவதுபோல அந்த போஸ்டர்கள் காணப்பட்டன. இதனால் மு.க.அழகிரி தனிக்கட்சி தொடங்குவார் என கூறப்பட்டது.

Unpredictable Azhagiri திட்டமிடுகிறார், ஆலோசிக்கிறார் அழகிரியை யாரும் இலகுவில் கணிக்க முடியாது


மதுரை: கலைஞர் திமுக, ஆதரவாளர்களுடன் சந்திப்பு, ரஜினிகாந்த், மன்மோகன் சிங், ராஜ்நாத் சிங், வைகோ சந்திப்பு என அடுத்தடுத்து அதிரிபுதிரியாக மு.க.அழகிரி செயல்பட்டு வந்தாலும் இப்போதைக்கு அவர் புதிய கட்சி தொடங்கும் மூடிலேயே இல்லை என்று உள் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் தேரத்ல் முடிவு வரும் வரை காத்திருப்பது உறுதி. காரணம், திமுக வேட்பாளர்களை முழுக்க முழுக்க மு.க.ஸ்டாலின்தான் தேர்வு செய்துள்ளார். அதில் பல குழப்பங்கள், தவறுகள், சலசலப்புகள் உள்ளதாக அழகிரி திடமாக நம்புகிறார்.குறிப்பாக தென் மாவட்ட வேட்பாளர்கள் யாருமே வெல்ல மாட்டார்கள் என்று திட்டவட்டமாக கூறி வருகிறாராம் அழகிரி. இதற்கு முன்பு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது நடந்த இடைத் தேர்தல்களில் 90 சதவீத வேட்பாளர்கள் அழகிரியின் திட்டத்தை வைத்துத்தான் வென்றார்கள். ஆனால் ஸ்டாலினால் அப்படியெல்லாம் திட்டம் போட முடியாது. அவரது பிரசாரம் எடுபடாது, ஜெயலலிதாவுக்கு முன்பு ஸ்டாலினால் தாக்குப் பிடிக்க முடியாது. மேலும் தேமுதிக, பாஜக கூட்டணி வேறு வாக்குகளைப் பிரிக்கும். எனவே திமுகவுக்கு நிச்சய் பெரும் தோல்வி நிச்சயம் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம் அழகிரி. எனவே தேர்தல் முடிவுக்குப் பின்னர் பாரீர், ஸ்டாலின் தலைமையில் திமுகவுக்கு ஏற்பட்ட கதியைப் பாரீர். அதுவே நான் பணியாற்றிய இடைத் தேர்தல்களில் ஒரு தோல்வி கூட கிடைக்காமல் வெல்ல வைத்தேனே என்று கூறி மீண்டும் பழைய செல்வாக்குடன் திமுகவுக்குள் நுழையவே அவர் முயற்சிக்கக் காத்திருக்கிறார் என்கிறார்கள் அதேசமயம், தென் மாவட்டத்தில் திமுக வேட்பாளர்கள் அத்தன பேரையும் தோற்கடிக்க தீவிரமாக வேலை செய்யப் போகிறாராம் அழகிரி. அதற்குத்தான் தற்போது பல மும்முரமான வேலைகளில் அவர் ஈடுபட்டிருப்பதாக சொல்கிறார்கள். இதை எப்படிச் செய்வது என்பது குறித்துத்தான் தற்போது திட்டமிடுகிறார், ஆலோசனை நடத்துகிறார் என்கிறார்கள். அழகிரி குறித்து அதிகம் தெரிந்தவர்கள் சொல்லும் ஒரே வார்த்தை- அழகிரியைக் கணிக்க முடியாது.
tamil.oneindia.i சிக் யாரும் இலகுவில் 

நாமக்கல் தே.மு.தி.க..வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகினர்.பணத்தை வைத்து இன்னமும் கீழே வேலை செய்யவும் மம்மி ரெடி..


நாமக்கல் தொகுதியில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் இன்று பிரசாரம் செய்யவிருந்த நிலையில் இங்கு நிறுத்தப்பட்டுள்ள இந்த கட்சியின் வேட்பாளர் தனக்கு உடல்நலம் சரியில்லை என்ற காரணத்தை காட்டி போட்டியில் இருந்து விலகி கொள்வதாக கட்சி தலைமைக்கு தெரிவித்துள்ளார். இதனால் இந்த கட்சிக்கு மாற்று வேட்பாளரை அறிவிக்க வேண்டிய நிலைக்கு தே.மு.தி.க, தள்ளப்பட்டுள்ளது.
விஜயகாந்த் இன்று நாமக்கல், ஈரோடு , கரூர் தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார். மாலை 3 மணிக்கு நாமக்கல்லில் பிராசாரம் செய்வார் என கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்நிலையில் இங்கு அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் மகேஸ்வரன் தனக்கு உடல் நிலை சரியில்லை, மருத்துவமனையில் பல்வேறு சோதனைகள் செய்ய வேண்டியுள்ளது. என கூறி நேற்று மாலையில் கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மூச்சு திணறல் தொந்தரவு இருப்பதாக தெரிகிறது.  ஐந்து வருசத்தில் நீ சம்பாதிப்பதை நான் ஒரே நாளில் தந்தால் நீ வெளியே போயிருவியா? மம்மியின் மந்திரக் கோல் செய்யும் தந்திரம்.. பணத்தை வைத்து இன்னமும் கீழே வேலை செய்யவும் மம்மி ரெடி..

சாமியார் ஆசாரம் பாபுவிற்கு எதிரான சாட்சிகள் மீது ஆசிட் வீச்சு


சாமியார் ஆசாராம்பாபுவிற்கு எதிரான பாலியல் வழக்கின் சாட்சிகள் இருவர் மீது சூரத்தில் மர்ம நபர்கள் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
தினேஷ் பவாச்சந்தானி(39)  எனபவர் கற்பழிப்பு வழக்கில் சாமியார் ஆசராம் பாபுவிற்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளார். இந்த நிலையில்  ராயல் ரெசிடன்ஸி பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற அவர் மீது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர்  ஆசிட் வீசி தாக்குதல் நடத்தி  தப்பி சென்று விட்டனர். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, ஆசாரம் பாபுவிற்கு எதிராக சாட்சியம் அளித்த இருவர் மீது இருவர் மீது தாக்குதல் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
சாட்சியங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது பற்றி போலீசாரிடம் கேட்ட போது, பெரும்பாலான சாட்சியங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் இந்த மூன்று பேரும் போலீஸ் பாதுகாப்பை ஏற்க மறுத்து விட்டனர் என்றும் தெரிவித்தார்.dailythanthi.com/