சனி, 8 ஜூலை, 2017

பார்ப்பன பெண்களின் உரிமையும் திராவிடமும் ,,, ஆமாம் நான் பாப்பாத்தி தான்!

kirubamunusamy: "ஆமாம் நான் பாப்பாத்தி தான், இப்ப என்ன அதுக்கு?" என்று
பார்ப்பனப் பெண்கள் திராவிடத்தை திட்டும் ஒவ்வொரு முறையும், அவர்கள் மீது கோபம் வருவதை விடவும், எப்படி இன்னமும் தங்களின் சுய வரலாறு குறித்த விழிப்புணர்வில்லாமல் அடிமைகளாக வைத்திருக்கிறார்கள் என்பதையெண்ணி பரிதாபமே தோன்றுகிறது.
கணவனை இழந்த பெண்களை உடன்கட்டை ஏற்றும் வழக்கமும், பின்னாட்களில் காவி புடவையுடுத்த வலியுறுத்தி மொட்டை அடிக்கும் வழக்கமும் பார்ப்பனர்களிடையே தான் இருந்தது. குழந்தைத் திருமணம் பரவலாக இருந்ததும், கைம்பெண் மறுமணம் மறுக்கப்பட்டதும் பார்ப்பன சமூகத்தில் தான். ஏன், குறிப்பிட்ட சில குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை மட்டும் தேவதாசி என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தியதும் பார்ப்பன சமூகம் தான்.
ஆனால், இப்படியான கொடுமைகளுக்கெதிராக குரல் கொடுத்து, சமூக வேறுப்பாடின்றி பார்ப்பன பெண்களின் விடுதலைக்கும், முன்னேற்றத்திற்கும் பெரும் காரணமாக இருந்தது திராவிடம் என்றால் அது மிகையல்ல.
நான் சிறுபிள்ளையாக இருந்த போது கூட 'மொட்டை பாப்பாத்தி' என்ற சொல்லாடலைக் கேட்டிருக்கிறேன். ஆனால், இந்த சொல்லாடல் இன்று வழக்கொழிந்து போயிருக்கிறதென்றால் அதற்கு முக்கிய காரணம் திராவிடம். கோயில், வேண்டுதல் என்ற பெயரில் மற்ற சமூகப் பெண்கள் மொட்டையடித்துக் கொள்வார்களே ஒழிய, பார்ப்பனப் பெண்கள் ஒருபோதும் மொட்டை அடித்துக்கொள்ள மாட்டார்கள் என்பதன் பின்னணி இதுவே!
விதவைகள் என்ற பெயரில் பெண்களின் எதிர்காலத்தை சிதைத்துவந்த கொடுமைகளை எதிர்த்து விதவைகள் நிலைமை, மறுமணம் தவறல்ல என்பன குறித்து பல கூட்டங்களை நடத்தி பார்ப்பனர்களின் வசவுக்கு ஆளானது திராவிடம்.

சீன Vs இந்தியா .... இனி இஸ்ரேல் ஆயுதம் வாங்கி சமாளிக்க போறாய்ங்க ... இராஜதந்திரமாம் விகடன் நம்பிக்கை

மீண்டும் இந்தியா-சீனா யுத்தம் வருமா என்ற கேள்வியைக் கிளறியுள்ளது பூடான்-சீன எல்லையில் டோக்லாம் பீடபூமி பகுதியில் கிட்டத்தட்ட 20 நாட்களுக்கும் மேலாக நிலவும் பதற்றம். பூடானிலிருந்து இந்தியா படைகளைத் திரும்பப் பெறவேண்டும் அல்லது போருக்கு ஆயத்தமாக இருக்கவேண்டும் என வெளிப்படையாகவே எச்சரித்திருக்கிறது சீனா....
;பூடான் எல்லையில் சீனா அமைக்கும் சாலையால் இந்தியா பதறுகிறது.பூடானின் நான்கு திசைகளிலான எல்லையில்தான் இந்தியாவின் அருணாசலப் பிரதேசம், சிக்கிம், மேற்குவங்கம் போன்றவை வருகின்றன. அதன் வடஎல்லையில் சீனா இருக்கிறது. சீனாவுக்கும் பூடானுக்கும் நல்லுறவு இல்லாத நிலையில்... பூடானின் பாதுகாப்பை பல்லாண்டுகளாக இந்தியாதான் பூர்த்திசெய்துவருகிறது.

கதிராமங்கலம் போராட்டம்: கலங்கி நிற்கும் கைதானவர்களின் குடும்பம்!

கதிராமங்கலம் போராட்டம்: கலங்கி நிற்கும் கைதானவர்களின் குடும்பம்!
மின்னம்பலம் : கதிராமங்கலத்திலிருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் நிரந்தரமாக வெளியேற வேண்டும் என்று போராடியவர்களில் 10 பேர் கைதாகி சிறையிலுள்ளனர். இதனால், அவர்களுடைய குடும்பத்தினர் ஆதரவின்றி சோகத்தில் கலங்கி நிற்கின்றனர்.
தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் பல்வேறு இடங்களில் கச்சா எண்ணெய் துரப்பணக் கிணறு அமைத்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்திலும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் கச்சா எண்ணெய் துரப்பணக் கிணறு அமைந்துள்ளது. அங்கே எடுக்கும் கச்சா எண்ணெய் பூமியில் குழாய்கள் புதைத்து அதன் மூலம் குத்தாலத்தில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

சத்திரபதி சிவாஜியை விஷம் வைத்து கொன்ற பார்பனர்கள் வரலாறு .... வீரசிவாஜியும் ஆரியப் பகைவர்களும்


By Krishnavel T S  சத்ரபதி சிவாஜியின் - தெரியாத பக்கங்கள்
சத்ரபதி சிவாஜி என்ற மாபெரும் மராட்டிய மன்னனை நாம் எல்லோரும் அறிவோம், ஆனால் அவன் தன உடன் வைத்திருந்த பார்பனரால், பட்ட துன்பம் நிறைய பேர் அறிந்திருக்கமாட்டார்கள்.
1627-ல் பிறந்து 1680--ல் இறந்தவர் சிவாஜி, 52 வயது வரையே வாழ்ந்த அவரின் வாழ்க்கை ஒரு விறுவிறுப்பான திரைப் படத்துக்கு ஒப்பானது. அவரது முழு பெயர் சிவாஜி ராஜே போன்ஸ்லே
அவரது சிறு வயது காலம், வறுமை என்று சொல்ல முடியாது என்றாலும், தந்தை இல்லாமல் வளரவேண்டிய சூழ்நிலை. அவரது தந்தை சாஹாஜி ராஜே போன்ஸ்லே, அஹமதுநகர் சுல்தானின் கீழ், பூனே மற்றும் சுபே ஆகிய இரண்டு நகரத்துக்கு ஜாகிர்தாராக (ஜமீன்தாருக்கு ஒரு படி மேலே) இருந்தார். சுல்தானிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில், பதவி இழந்து, பீஜாப்பூர் சுல்தானிடம், பின்னர் சேர்ந்தார், பின்னர் இஸ்லாத்துக்கு மதம் மாறி சுல்த்தானின் தங்கையை மணந்து, பெங்களூரில் கர்நாடகத்தின், பீஜாப்பூர் சுல்த்தானின் ஜாகிர்தாராக பணியாற்றி இஸ்லாமியராகவே மறைந்தார்.
சிவாஜி பிறந்த முதல் 4-5 வருடங்கள், அவர் தந்தை, பதவி இழந்து அலைந்து கொண்டிருந்த காலம், பின்னரும் அவர் தந்தை, பூனேவில் தாங்கமுடியாமல், நிரந்தரமாக, பீஜாப்பூரில் இருக்கவேண்டிய சூழல், பின்னர் அவர் தன குடும்பத்தை பார்க்க வரவேயில்லை.

ஆரியன் உறவாடி கெடுப்பவன் தான். ..

திராவிடர்கள் ஆரியனை கோமாளியாக பார்த்துதான் சேர்த்தார்கள். அவன் நடவடிக்கை எல்லாம் வித்தியாசமாகவும் கேலிக்குரியதாகவும்தான் இருந்தன. அவன் எத்தனை விஷம் கொண்டவன் என்பதை திராவிடர்கள் அறிந்திருக்கவில்லை. தான் நகைக்கப்பட்டாலும் அவன் பெரிதாய் அலட்டி கொள்ளவில்லை. நாடோடியாக அலைந்தவனுக்கு நாடடைவது மட்டும்தான் நோக்கம். இன்றை போலவே அன்றும் சரி இனி எப்போதும் சரி ஆரியன் உறவாடி கெடுப்பவன் தான்.
எஸ்.வி.சேகர் புண்ணியத்தில் இந்துத்துவாவை கிழித்து தொங்கவிட்டு விட்டோம். ரசனைக்காக குறும்பதிவுகளாகவும் நகைச்சுவையை சுமக்கும் ஒற்றை வரிகளாகவும் பதிவேற்றியதால், உண்மை சுருங்கி தெரிவதாக ஓர் உணர்வு. அதற்காக கொஞ்சம் விலாவரியான பதிவு. இந்துத்துவம் என நாம் குறிப்பிடுவதெல்லாம் ஆரியத்துவத்தையே. ஆரியனை மட்டும்தான் குறி வைக்கிறோம். இந்துகளை அல்ல என விளங்கி கொள்ளுதல் வேண்டும். ஏன் என கேட்கலாம். மதமும், கடவுளும் பெருந்தொகை மக்களுக்கு நம்பிக்கை சார்ந்த விஷயமாக மாறி விட்டிருக்கிறது. கொந்தளிப்பான மனநிலைகளை கையாள முடியாதவர்களுக்கு கடவுள்தான் சமூக மருத்துவம். அது தரும் தீர்வு சரியா என்றால் இல்லைதான். ஆனால் கடவுளை இல்லாமலாக்கும் மனநிலையை உறுதிப்படுத்தும் இடத்தில் சமூகச்சூழல் இல்லை. ஆனாலும் அதையும் அடைய வேண்டும். பல ஊர்களில் அடிபட்டு விரட்டப்பட்டு ஆரியன் கடைசியாக சிந்து நதியை வந்து அடைகிறான். அங்கு ஒரு பிரம்மாண்ட நகர நாகரிகம் அழிவின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறது. கிராமங்கள் மீள்கின்றன.

செத்த மொழி சமஸ்கிருதத்தை உயிர்ப்பிக்க மக்களின் பணம் ... வாழும் மொழி செம்மொழியை அழிக்க கங்கணம்

prakash.jp. : செத்த மொழியான, உபயோகமற்ற, பயனற்ற மொழியான சம்ஸ்கிருததுக்கு மத்திய அரசு நூற்றுகணக்கான கோடி ரூபாய்கள் ஒதுக்கி, தன்னாட்சி அதிகாரத்துடன் ஆராய்ச்சி நிறுவனம் அமைத்துள்ள நிலையில், செம்மொழியான, இணையத்தில் அதிகம் புழங்கும் மொழியாக உயிர்ப்புடன் உள்ள தமிழ் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை மூட, மத்திய பிஜேபி மோடி அரசு சதி.....//
தமிழ் மொழியை தேசிய மொழியாக்க, மத்திய ஆட்சி மொழியாக்க, சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்க எவ்வித முயற்சியும் எடுக்காத மத்திய பா.ஜ.க., அரசு, இந்தியாவின் பல தேசிய இனமொழிகளைப் பின்னுக்குத் தள்ளி, சமஸ்கிருதத்தையும் - இந்தியையும் மட்டும் பிடித்துத் தொங்கிக் கொண்டு, செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை ஒரு பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இணைத்து, தமிழுக்கு இருக்கும் தன்னாட்சி அந்தஸ்தை சீர்குலைக்க முயற்சி செய்வது, தமிழக மக்களின் தூய உணர்வை கொச்சைப்படுத்துவது மட்டுமல்ல, தமிழறிஞர்களின் நெஞ்சத்தில் ஈட்டி கொண்டு கீறும் செயலுமாகும்.

ஆமா உன் நாட்டோட பேர் என்ன சொல்லுயா நான் டூர் வரனும் மோடி- உலகம் சுற்றும் பிரதமர்

சமுக ஊடங்களில் மோடியின் வெளிநாட்டு சுற்றுலாக்கள் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது 
Anbu Razan நாட்டு மக்கள் பிரதமர் பதவியில் இருக்கும் ஒன்றை, இவ்வளவு
இழிவாக, கேவலமாக,பார்ப்பதை, இது வரை உலகம் கண்டதில்லை. இனியும் காணப்போவதில்லை.

 Jensil Franklin Jose 😡😡மிகவும் கோபம் சார்ந்த பதிவு😡😡 oppo இது சைனா(China)எதிரி நம் எல்லையில்,நம் வீரர் களிடம் அடிக்க வாடா தே....
 மவனே என்று (திபெத் இந்திய எல்லையில் போன வாரம் நேருக்குநேர் நின்று) மார்தட்டும் சீன நாட்டின் மிக முன்னோடியான தயாரிப்பு
இந்த பெயரை (name) நம் நாட்டின் வீரர்கள் சட்டையில் அணிந்து இருக்கின்றார்கள் இதன் அர்த்தம் என்ன???? பாரத தேசத்தை இப்போதைய நிர்வாகம் மற்றும் இந்திய நடுவண் அரசு
p;இந்திய பிரதமன் ; விளையாட்டுதுறை அனைத்தும் சேர்ந்து இந்தியாவை சீனனிடம்(china) #அடகுவைத்ததா????? இல்லை #கூட்டிகோடுக்குறதா???? த்தூஊஊஊஊ
முகநூல் ADMKFALLS

சுதா சிங் ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் !

புவனேஸ்வர்: ஆசிய தடகளம்போட்டியில் இந்திய வீராங்கனை சுதா சிங் 3
ஆயிரம் மீட்டர் தடை தாண்டுதலில் தங்கபதக்கம் வென்றார் .ஓடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று (ஜூலை 8) நடைபெற்ற போட்டியில் பெண்களுக்கான 3000 மீ., 'ஸ்டீபிள்சேஸ்' ஓட்டப்பந்தய பைனலில் இந்தியா சார்பில் சுதா சிங், பருல் சவுத்தரி பங்கேற்றனர். இதில் பந்தய துாரத்தை 9 நிமிடம், 59.47 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்த சுதா சிங், தங்கம் வென்றார். 4-வது தங்கம் உ.பி.,யை சேர்ந்த இவர், 2010ல் சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றிருந்தார்.

சீனா எச்சரிக்கை : இந்தியாவில் உள்ள சீனர்கள் அவதானமாக இருக்கவும் ...


Veera Kumar பீஜிங்: இந்திய-சீன எல்லையியல் போர் பீதி நிலவி வரும் நிலையில், இந்தியாவிலுள்ள சீனர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு சீனா அறிவுரை வழங்கியுள்ளது. இந்தியாவிலுள்ள தனது நாட்டு குடிமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் சீனா ஒரு பயண ஆலோசனை வழங்கியுள்ளது. இந்தியாவில் உள்ள சீன குடிமக்கள் தங்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் உள்ளூர் பாதுகாப்பு நிலைமைக்கு மிகுந்த கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. டெல்லியிலுள்ள சீன தூதரகம் இதை அறிவித்துள்ளது. பெய்ஜிங்கிலுள்ள இந்திய தூதரகம் இந்தியாவிற்கு, வருகை தரும் சீன சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 2003ல் 21,152 என்ற அளவில் இருந்ததாகவும், 2013 இல் அதுவே 2 லட்சத்திற்கும் அதிகமானதாக கூடிவிட்டதாகவும் கூறுகிறது. இந்தியாவில் உள்ள பல நிறுவனங்கள் சீன நாட்டவர்களை பணியாட்களாக நியமித்துள்ளன. குறிப்பாக ஹோட்டல் தொழிலில் இவர்கள் அதிகம் உள்ளனர். இந்தியாவும், சீனாவும் எல்லைப் பகுதியில் ராணுவத்தினரை அதிகரித்துள்ளது. பூட்டான் மக்கள் விடுதலைப் படைகள் இந்தியாவின் 'கோழி கழுத்து' சந்திக்கு நெருக்கமான இடத்தில் ஒரு சாலையை உருவாக்குவதை இந்திய ராணுவம் எதிர்த்தது. சீனாவின் சாலை கட்டுமானத்தை நிறுத்த பூட்டான் சார்பில் ஜூன் 16 அன்று இந்திய ராணுவத்தினர் களமிறங்கினர். கோழி கழுத்து சந்திப்பு என்பது, இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து விட கிழக்கு மாநிலங்களை இணைக்கும் பகுதியாகும். tamiloneindia

காஷ்மீரில் நிலநடுக்கம் 5-2 ரிச்டர் அளவில் 5.2 Magnitude Earthquake Near India-Pak Border In Jammu And Kashmir

New Delhi: A medium intensity earthquake measuring 5.2 on the Richter scale jolted the India-Pakistan border region in Jammu and Kashmir today. The earthquake occurred at 3:42 pm at a depth of 10 km, the National Centre for Seismology of the India Meteorological Department said. There were no immediate reports of loss of life or property. Jammu and Kashmir is one of the regions that witness high seismological activities.
ஜம்மு காஷ்மீர், ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் இன்று மாலை 3.43 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகி உள்ளதாக டெல்லியில் உள்ள தேசிய புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாக வில்லை.dalythanthi

மாயாவதி : மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக மக்கள் ஏமாற்றி வருகிறது

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்துவரும் பாஜக அரசு, மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசு, மக்களை பிளவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. எனவே அவர்கள் சாதி மற்றும் மத ரீதியாக மக்களை பிரிக்கும் வகையில் கலவரங்களை ஏற்படுத்தி வருகிறார்கள்.
மத்தியிலும் மாநிலத்திலும் மக்களை ஏமாற்றி வருகிறது: பா.ஜ.க மீது மாயாவதி குற்றச்சாட்டு லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான மாயாவதி, பா.ஜ.க. அரசை கடுமையாக விமர்சனம் செய்து இன்று அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை அழிக்கும் நடவடிக்கையில் பா.ஜ.க. அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்த முயற்சியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆதரவுடன் பா.ஜ.க செயல்படுகிறது. பகுஜன் சமாஜ் பற்றி அவர்கள் அவதூறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். எங்களுக்கு விடப்பட்டுள்ள இந்த மிரட்டலை சவாலாக எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

எடப்பாடியின் பெண்கள் குழந்தைகள் போராட்டம் பாஷன் என்ற பேச்சுக்கு கடும் கண்டனம்

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது குறுக்கிட்டுப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் தேவையற்றவை; இத்தகைய போராட்டங்களை பெண்கள் மற்றும் குழந்தைகளை வைத்து நடத்துவது ஃபேஷனாகி விட்டது என்று குற்றஞ்சாற்றியுள்ளார். இவ்வாறு மகளிர் போராட்டத்தை கொச்சைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திருப்பூர் சாமளாபுரம் பகுதியில் திறக்கப்பட்ட மதுக்கடைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டம் குறித்து சட்டப்பேரவையில் விளக்கமளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறிய கருத்துக்களில் பெரும்பாலானவை இட்டுக்கட்டிய பொய்கள் ஆகும்.

அதிபர் ட்ரம்ப் போலந்து அதிபரின் மனைவியிடம்...

Gajalakshmi வார்சா : மரியாதை நிமித்தமான சந்திப்பின் போது போலந்து இதனால் கையை நீட்டி காத்திருந்த ட்ரம்ப் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. சரியான பதிலடி அகடாவின் இந்த செயலை சரியான மட்டையடி என்று டுவிட்டரில் பலரும் பகிர்ந்ததால் இந்த வீடியோ வைரலானது.
அதிபரின் மனைவி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை சட்டை செய்யாதது போல் மெலனியா ட்ரம்ப்பிற்கு கைகுலுக்கிய சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தன்னுடைய மனைவியும் அமெரிக்காவின் முதல் பெண்ணுமான மெலனியா ட்ரம்ப்புடன் போலந்து தலைநகர் வார்சா சென்றுள்ளார். அங்கு பத்திரிக்கையாளர்களுக்காக அதிகாரப்பூர்வ புகைப்படம் எடுக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அதிபர் ட்ரம்ப் போலந்து அதிபர் டூடாவுடன் முதலில் கை குலுக்கியுள்ளார். இதனையடுத்து போலந்து முதல் பெண்ணும் போலந்து அதிபரின் மனைவியுமான அகடா கொர்ஹாசர் டூடாவிற்கு கை குலுக்குவதற்காக தனது வலது கையை நீட்டியுள்ளார். ஆனால் அதை கவனிக்காத அகடா நேராக மெலனியா ட்ரம்ப்பிற்கு கைகுலுக்கியுள்ளார்.

திருப்தி லட்டுக்கு வரி கிடாது .... சானிடரி நாப்கினுக்கு 12 வீத வரி

திருமலை அன்னமயபவனில் பக்தர்களிடம் தொலைபேசி மூலம் குறைகள்
கேட்கும் நிகழ்ச்சி  நடந்தது. இதில், திருமலை – திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் கலந்துகொண்டு பேசுகையில், ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சாமி தரிசனம் செய்யவரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் லட்டுகள்மீது ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படாது. தங்க டாலர்கள்மீது 3 சதவிகிதமும், ஆயிரம் ரூபாயில் இருந்து 2,500 ரூபாய்வரை உள்ள தங்கும் விடுதிக்கு 12 சதவிகிதமும், 2,500 ரூபாய்க்கு மேற்பட்ட தங்கும் விடுதிகளுக்கு 18 சதவிகிதமும் ஜி.எஸ்.டி. விதிக்கப்படும். பக்தர்களுக்கு விரைவாகத் தங்கும் விடுதிகள் பெறுவதற்கு திருமலையில் உள்ள மத்திய வரவேற்பு அலுவலகத்தில் 10 கவுன்டர்கள் தொடங்கப்பட்டுள்ளன. இது, 12–ம் தேதி முதல் அமலுக்கு வரும்'' என்றார்.விகடன்

பசுமை விகடன் பச்சை பொய்களை விற்கிறதா? நம்மாழ்வார் .. ஜாக்கி வாசுதேவ் , நித்தியானந்தா போன்ற டுபாக்குரகளை...

Sivasankaran Saravanan :ஜக்கி வாசுதேவ், நித்தியானந்தா, செந்தமிழன் என டுபாக்கூர் ஆட்களை தனது பத்திரிகை மூலமாக மார்க்கெட்டிங் செய்து வளர்த்துவிடுகிற மிகப்பெரிய சமூக தீங்கை நம் மக்களிடையே பரப்புவதில் விகடனின் பங்கு அளப்பரியது ..! பேஸ்புக்கில் எழுதிய இரண்டு நபர்களுக்காக மெனக்கெட்டு பசுமைவிகடன் ஒரு கட்டுரை வெளியிட்டு மாட்டுமூத்திரத்தின் பெருமையை பேசியிருக்கிறது. பசுமை விகடனை ஆணித்தரமான உண்மைகளோடு பிரித்து மேய்கிறார் விவசாய நிபுணர்
RS Prabu அன்புள்ள பசுமை விகடன் ஜூனியர் கோவணாண்டிக்கு,
அடியேனின் அநேக நமஸ்காரங்கள். 10.7.2017 தேதியிட்ட பசுமை விகடன் இதழில் தங்களின் சாடல் கட்டுரையை கண்டேன். நம்மாழ்வார் ஐயாவை இணையத்தில் கேள்விகேட்டு கண்டபடி சிலர் விமர்சிப்பதாகவும் அதற்கு பதில் தரும்படியாக கட்டுரை வரைந்திருந்ததையும் மேலும் அந்த இதழில் வந்திருந்த பல கட்டுரைகளையும் வாசித்து இன்புற்றேன். நம்மாழ்வார் ஐயாவின் நாமம்தொட்டு இயற்கை விவசாயத்தையும், கார்ப்பரேட் சதிகளையும் தமிழக மக்களுக்கு புரியவைத்துவரும் பசுமை விகடனை நான் பெரும்பாலும் தொடுவதில்லை. நண்பர் ஒருவர் இந்த சுவாரசியமான சாடல் கட்டுரையை வாசிக்கும்படி கேட்டுக்கொண்டதால் வாங்கவேண்டியதாகிவிட்டது.

இஸ்ரேலுக்கு மோடி - தமிழ் அரசன் தமிழ் வட்டெழுத்தில் இஸ்ரேல் யூதர்களுக்கு அளித்த பட்டயம் ...

The document records a royal grant to the Jewish chief Joseph Rabban of the rights of Ancuvannam along
with the 72 proprietary rights enjoyed by high-ranking nobles of Chera kingdom. It is engraved on two small, rectangular copper-plates. The second side of the second plate is blank. A hole for the ring on which the plates must have been strung, is visible on the impression of each plate.[citation needed] The inscriptions on the plates are in archaic Tamil written using the vatteluttu alphabet.[3] Grantha letters are used in a number of Sanskṛit words and for the foreign word "Issuppu
மோடி இசுரேல் அதிபரை சந்தித்தபோது யூத-தொடர்பை குறிப்பதாக இரு செப்பேடுகளை தந்துள்ளார்.
முதல் பட்டயம்..
ஈராயிரம் வருடங்களுக்கு முன் யூத தலைவர் ஜோசப் ரப்பானிக்கு சேரமான் பெருமாள் எனும் தமிழ் அரசன் சிறப்பு சலுகை அளித்த தமிழில் எழுதப்பட்ட செப்பு பட்டயம்..
இதை முட்டாள் மோடி சொல்வது, யூத தலைவர் ஜோசப் ரப்பானிக்கு 'இந்து அரசர்' சேரமான் பெருமாள் அளித்த பட்டயமாம்.
இரண்டாவது பட்டயம்..
ஈராயிரம் வருடங்களுக்கு முன் யூத மக்களுக்கு சிறப்பு உரிமைகள் வழங்கிய தமிழ் ஆட்சியாளனின் தமிழ் செப்பு பட்டயம்..
இதை முட்டாள் மோடி சொல்வது யூத மக்களுக்கு இந்து ஆட்சியாளர் அளித்த பட்டயமாம்.

வெள்ளி, 7 ஜூலை, 2017

8 ஆம் வகுப்பு வரி கட்டாய தேர்ச்சி முறை ... முதலாம் இரண்டாம் தலைமுறையின் கல்விக்கு அடுத்த அடி

Kalai Mathi அகர்தலா: அடுத்த கல்வி ஆண்டு முதல் 8 ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆல் பாஸ் திட்டத்தால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக மாநில அரசுகள் முறையிட்டதை தொடர்ந்து மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. கல்வி உரிமைச்சட்டம் - 2009 படி 8 ஆம் வகுப்பு வரை எந்த மாணவ, மாணவியை பெயில் ஆக்கக்கூடாது. இதனால் நாடு முழுவதும் 8ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவ மாணவிகள் கட்டாய தேர்ச்சி செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வரும் கல்வி ஆண்டு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே தெரிவித்துள்ளார். திரிபுரா மாநிலம் அகர்தலாவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மத்திய அரசின் கட்டாய தேர்ச்சி திட்டத்தால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக மாநில அரசுகள் குற்றம்சாட்டி வருவதாக அவர் கூறினார். இதனை முன்னிட்ட கல்வி உரிமை சட்டத்தில் இருந்து, அடுத்த கல்வி ஆண்டு முதல் ஆல் பாஸ் திட்டத்தை வாபஸ் பெறுவது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். மத்திய அரசின் இந்த முடிவால் அடுத்த ஆண்டு முதல் 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்படுகிறது tamiloneindia

மோடி - சீன அதிபர் சந்திப்பு .. ஜெர்மனியில் ..

மின்னம்பலம் : ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு இன்றும் (7.7.2017), நாளையும் ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜெர்மனி சென்றுள்ளார். இந்த மாநாட்டுக்கு இடையே அவர் பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசுகிறார். மேலும் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்களையும் சந்திக்கிறார். எனவே சீன அதிபரையும் மோடி சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதைத் திட்டவட்டமாக மறுத்தது சீனா. காரணம், சிக்கிம் எல்லையில், பூட்டானுக்கு சொந்தமான பகுதியில் சீனா சாலை அமைக்க முயன்றது. இதனை இந்திய ராணுவம் தடுத்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஜெர்மனியில் நடக்கும் ஜி20 மாநாட்டில் அதிபர் ஜிங்பிங் - பிரதமர் மோடி சந்திப்பு நடக்கும் சூழல் இல்லை என சீனா அறிவித்திருந்தது.

ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் மைக்ரோசாஃப்ட் !

ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் மைக்ரோசாஃப்ட் !மின்னம்பலம் :மென்பொருள் தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய நிறுவனமாக விளங்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கை மூலம் ஆயிரக்கணக்கான பணியாளர்களை வெளியேற்ற உள்ளதை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த செய்தியை ஏஎஃப்பி செய்தி நிறுவனம் இன்று ஜூலை 7ம் தேதி வெளியிட்டுள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உலகம் முழுவதும் கணினி மற்றும் மொபைல் போன்களுக்கான மென்பொருள்களை உருவாக்கி வழங்கி வருகிறது. உலகில் 162 நாடுகளில் கிளைபரப்பியுள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்தியாவிலும் செயல்பட்டுவருகிறது. இந்தியாவில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, அஹமதாபாத், பெங்களூரு, சென்னை, ஐதராபாத், கொச்சி, பூனே ஆகிய 9 நகரங்களில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உள்ளது. இதில் டெல்லி குர்கானில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மென்பொருள் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் தலைமையகமாக செயல்படுகிறது.

செம்மொழி தன்னாட்சி அமைப்பை சிதைக்கும் முயற்சியில் சங்பரிவார் ஆட்சி!

மின்னம்பலம் : செம்மொழியாம் தமிழ் மொழிக்கான மேம்பாட்டு ஆய்வுகள் நடத்துவதற்காக
தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட்டு வரும், செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தை அதிகாரமற்ற அமைப்பாக மாற்ற மத்திய அரசு முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.
 கனிமொழி
தலைவர் கலைஞர் அவர்களின் முயற்சியால் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டது செம்மொழித் தமிழாய்வு மையம். இதை திருவாரூருக்கு மாற்றி அங்கு இயங்கும் மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கின்ற முயற்சி 'செம்மொழி தமிழாய்வு மையத்தின்' தனித்தன்மையைக் குலைக்கும் முயற்சி. இதை அவர்கள் நிச்சயமாகக் கைவிட வேண்டும். தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் எதிரான இதை மத்திய அரசு கைவிட வேண்டும்!.
 பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
இந்தியாவில் இந்தி, சமஸ்கிருதம் தவிர்த்த பிற மொழிகள் சார்ந்த நிறுவனங்கள் அனைத்தையும் அந்தந்த மாநிலங்களில் உள்ள நடுவண் பல்கலைக்கழகங்களுடன் இணைக்கும் முயற்சியில் நடுவண் அரசு ஈடுபட்டிருக்கிறது. திட்ட ஆணையத்திற்கு மாற்றாக உருவாக்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பு தான் இதற்கான பரிந்துரையை நடுவண் அரசுக்கு வழங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி : திருமுருகன் காந்தி தடை செய்யப்பட்ட இடத்தில போராடினார்!

மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உள்ளிட்ட சிலரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது தமிழக அரசு. இலங்கையில் இறுதி போரில் உயிரிழந்தவர்களுக்கு நினைவேந்தல் செய்ய மெரினாவுக்கு சென்ற திருமுருகன் காந்தி உள்ளிட்டவரை தமிழக காவல்துறை குண்டன்ர் சட்டத்தின் கீழ் கைது செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அஞ்சலி செலுத்த சென்றவர் மீது ஏன் குண்டர் சட்டத்தை ஏவ வேண்டும் என பல அரசியல் கட்சியினர் குரல் எழுப்பி அவரை விடுதலை செய்ய வலியுறுத்தினர். ஆனால் தமிழக அரசு தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரது விடுதலையை தடுத்தனர். இந்நிலையில் சட்டசபையில் நேற்று காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, திமுக எம்.எல்.ஏ அன்பழகன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஏன் கைது செய்யப்பட்டார் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தடை செய்யப்பட்ட இடம் என்று தெரிந்தும் அங்கு போராடியதால் தான் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார். மேலும் திருமுருகன் காந்தியை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே காவல் துறையினர் கைது செய்தனர் என்றார். வெப்துனியா

கோகிலா - கிளாரிந்தா ஆன கதை ! எரியும் சிதையில் இருந்து மீண்ட பார்ப்பன பெண் !

கிளாரிந்தா அம்மையார் (1746-1806) : 18ஆம் நூற்றாண்டின் மத்தியில் CAPT.HARRY LYTTLETON என்ற ஆங்கில அதிகாரி தஞ்சாவூரில் பணிபுரிந்த அந்த நாட்களில் கணவன் இறந்த பின் மனைவி உடன்கட்டை ஏறும் "சதி" என்ற வழக்கம் இருந்துள்ளது. அம்மாதிரியான ஒரு கொடுமையான சம்பவம் நடைபெறுவதிலிருந்து ஒரு பிராமண பெண்ணை அந்த ஆங்கில அதிகாரி காப்பாற்றி பாளையங்கோட்டைக்கு அழைத்து வந்துள்ளார். அந்த பெண் பின்பு கிறிஸ்தவ சமய பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். அவரது நினைவிடம் அமைக்கப்பட்ட இடத்திலேயே அவர் பெயரில் சிற்றாலயம் கட்டப்பட்டு "ROYAL CLARINDA" என்று அழைக்கப்படுகிறது. — at Clarinda Church Palayamkottai.
Palai Karthik: கோகிலா .கிளாரிந்தா ஆன கதை ! (இது ஒரு திருநெல்வேலி சீமையில் இடம்பெற்ற வரலாறு ) எரியும் சிதையில் இருந்து ஒரு பார்ப்பன பெண்ணை  கதாநாயகன் மாதிரி அவளை புயலென குதிரையில் வந்து காப்பாற்றி தூக்கி சென்றவன் ஹென்றி லிட்டில்டன் என்ற கிழக்கிந்தியக்கம்பெனி படையின் ராணுவ அதிகாரி.
ஒரு இளம்பெண்ணை உயிரோடு எரிக்கிறார்களே என்ற மனிதாபிமானத்தோடு தான் அவன் காப்பாற்றி தனது வீட்டிற்கு அழைத்து சென்றான். கோகிலாவின் உறவினர்கள் கொதித்து எழுந்தார்கள். அவளை சமூக புறக்கணிப்பு செய்தார்கள்.
இருவருக்கும் காதல் ஏற்பட்டது. . ஆனால், அன்றைய பாதிரியார் ச்வார்ட்சு அவளுக்கு ஞானஸ்நானம் கொடுக்க மறுத்தார்.

சமாச்சாரம்) கோகிலா மராட்டிய ராஜ வம்சத்தை சேர்ந்த பிராமணப்பெண் தஞ்சாவூரில் 1770 இல் மகாராஷ்டிர மன்னர்களின் ஆட்சி இருந்த காலம். கோகிலாவின் கணவன் தஞ்சை அரண்மனையில் முக்கிய அதிகாரி. என்ன நேரமோ..அவன் திடுதிப்பென்று செத்துப் போனான். அக்கால வழக்கப்படி கோகிலாவை உடன்கட்டை ஏற செய்ய ஏற்பாடுகள் நடந்தன. கோகிலாவோ இளம் வயது. சிதையில் தீமூட்டி அவளை உள்ளே தள்ளியபோது, நம்ம தமிழ்ப் பட க

லாலுவுக்கு சொந்தமான 12 இடங்களில் (பாஜகவின்) சி பி ஐ திடீர் சோதனை .... குடியரசு தலைவர் தேர்தல்....

பாட்னா : கடந்த 2006ல் ஓட்டலுக்கு டெண்டர் விட்டதில் முறைகேடு நடந்த
புகாரில் லாலு பிரசாத் யாதவ் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் லாலுவுக்கு சொந்தமான 12 இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. ரெய்டு: பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ், மத்திய ரயில்வேதுறை அமைச்சராக கடந்த 2006ம் ஆண்டு பதவி வகித்தபோது ராஞ்சி, மற்றும் புரி நகரங்களில் ஹோட்டல்கள் அமைப்பதற்கான அனுமதியை தவறுதலாக பயன்படுத்தியதாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், டில்லி, பாட்னா, ராஞ்சி, புரி மற்றும் குர்கான் பகுதிகளில் லாலுவிற்கு சொந்தமான 12 இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறது. தினமலர்

உபியில் பாஜக குண்டர்களை வெளுத்து காயப்போட்ட்ட பெண் போலீஸ் அதிகாரி ...விடியோ


Pirai Kannan: போக்கிரி படத்துல ஒரு வசனம் வரும் …„
" இங்க இருக்குற போலீஸ் காரன் எல்லாம் இன்னைக்கு உனக்கு சலாம் போடலாம்!
ஒருநாள் நேர்மையான திமிரான ஒரு போலீஸை பார்ப்ப, அப்போ உன்னை அறியாமல் ஒன்னுக்கு போயிடுவே " ன்னு
இப்போதைக்கு அதே நிலையில தான் ஒட்டு மொத்த பாஜக தலைமையும் கடந்த சில மணி நேரமா ஒன்னுக்கு போய் கிட்டு இருக்கானுக!
போன வாரம்,ஒரு வீடியோ பார்த்திருப்பீங்க ...
உ.பி -யில் ஒரு பெண் காவல்துறை அதிகாரி (DSP) தன்னை சுத்தி நின்னு கேள்வி கேக்குற கூட்டத்துக்கு 'தைரியமா பதில் சொல்லுவாங்க "!
நான் முதன்முறையா ஒரு காவல்துறை அதிகாரி திமிரா பேசுறதை சந்தோசமா பார்த்தது அப்போ தான்!
அந்த Conversation இதான்,
பொரி உருண்டைகள் :- நீங்க, ஒரு கட்சி காரனை எப்டி நிப்பாட்டலாம்?
DSP :- அவர் helmet போடலை யாரா இருந்தாலும் Rules ஒன்னுதான்!
பொரி உருண்டை :- நீங்க 200₹ லஞ்சம் கேட்டீங்களாமே? நாங்க கேஸ் குடுப்போம்!
DSP :- நான் கேட்டதை நீ பார்த்தியா? அபராதம் எவ்வளவோ அதை கட்டிட்டு ரசீது வாங்கீட்டு போ!

பாஜக திமுகவை குறி வைத்து இரகசிய நகர்வு?

ஆபரேஷன் ஸ்டாலின் - டெல்லியின் ரகசிய மூவ்!
பாஜக-வின் பலமே தனக்கு எதிரான கட்சிகளை ஓரணியில் சேரவிடாமல் தடுத்துப் பிரித்துவைப்பதுதான். இதை உடைத்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வுக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் ஒன்றுசேர வேண்டும் என்று சமீபத்தில் லாலு பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் லாலு சொன்ன பாஜக-வைப் பற்றிய முதல் இலக்கணம் தமிழ்நாட்டுக்கும் பொருந்தும் என்று டெல்லி வட்டாரத்தில் இருந்து சில தகவல்கள் நமக்குக் கிடைக்க அதுபற்றி விசாரித்தோம்.
“கடந்த ஜூன் 3ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளும் அவரது சட்டப்பேரவை வைர விழாவும் சென்னையில் கொண்டாடப்பட்டது. இதில் தேசிய அளவிலான தலைவர்களை திமுக அழைத்து நடத்தியது. இந்த விழா மூலமாக எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைவு இந்திய அளவில் சாத்தியம் என்ற கருத்துரு உருவானது.

மாறுகிறது நிதிஷ்குமார் நிலைப்பாடு!

மாறுகிறது நிதிஷ்குமார் நிலைப்பாடு!
மின்னம்பலம் : பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை விமர்சிப்பதை நிறுத்தும்படி அம்மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டிருக்கிறார்.
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணியின் சார்பில் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் முதல்வராக இருக்கிறார். குடியரசுத் தலைவர் தேர்தலில் அவர் பாஜக-வின் வேட்பாளரான ராம்நாத் கோவிந்த்தை ஆதரிப்பதாக முடிவெடுத்ததும் காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதிலும் குறிப்பாக பீகார் மாநில காங்கிரஸ் கட்சியினர் நிதிஷ்குமாரைக் கடுமையான வார்த்தைகளால் திட்டி வருகின்றனர்.

டெல்லி கல்லூரிகள்: கட் ஆஃப் எவ்வளவு தெரியுமா?

டெல்லி கல்லூரிகள்: கட் ஆஃப் எவ்வளவு தெரியுமா?அண்மையில் டெல்லி பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாவது கட் ஆஃப் மதிப்பெண்ணை வெளியிட்டது. அதில், பி.ஏ. (ஹானர்ஸ்) சைக்காலஜி படிப்பில் சேர 98.25 சதவிகித மதிப்பெண் கட் ஆஃப் மதிப்பெண் என்பது மாணவர்களை ஆச்சர்யத்தில் மலைக்க வைத்துள்ளது.
டெல்லி பல்கலைக்கழகத்தின்கீழ் பல கல்லூரிகள் இயங்கி வருகின்றன. டெல்லி பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் கல்லூரிகளில் பல துறைகளில் இளங்கலை பட்டப்படிப்புகள் நடத்தப்படுகிறது. அதன்படி, டெல்லி பல்கலையில் இளங்கலை பட்டப்படிப்பில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுகிறது. அதன்படி ஜூலை 30ஆம் தேதி டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாவது கட் ஆஃப் மதிப்பெண் அறிவிக்கப்பட்டது. இந்த கட் ஆஃப் மதிப்பெண் மாணவர்களையும் கல்வியாளர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

போலீஸ் குடும்பத்தினர் போராட்டம்!

 mபோலீஸ் குடும்பத்தினர் போராட்டம்!பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓய்வுபெற்ற காவல்துறையினர் மற்றும் காவல்துறை குடும்பத்தினர் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டனர்.
ஜூலை 6ஆம் தேதி, சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது. இந்த நேரத்தில் ஆட்சியாளர்களின் கவனத்தைப் பெறும் வகையில் காவல்துறை குடும்பத்தினர் மற்றும் ஓய்வுபெற்ற காவல்துறை சங்கத்தினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து மனு கொடுக்கப் போவதாகவும், காவல்துறையினரின் குடும்பத்தினர் மெரினாவில் இருந்து கோட்டைக்கு, பேரணியாகச் சென்று மனு கொடுப்பார்கள், இதில் போலீஸாரும் கலந்து கொள்வார்கள் என்றும் கடந்த சில நாள்களாகவே சமூக வலைதளங்களில் அவர்கள் அறிவித்து வந்தனர். இதனால், ஜூலை 6ஆம் தேதி தலைமைச் செயலகம் வளாகத்தில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

பேருந்தில் பாஜக பிரமுகர் வன்புணர்வு ... வேலை வாங்கி தருவதாக கூட்டி சென்று விடியோ அம்பலம்


மும்பை: ஓடும் பேருந்தில் பாஜக பிரமுகர் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த  காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தை சேர்ந்தவர் பாஜக நிர்வாகி ரவிந்திர பவந்தடே. இவர் சந்திராபூர் கடந்த 27ஆம் தேதி பகுதியில் பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பேருந்தில் பயணம் செய்த இளம்பெண் ஒருவரிடம் அவர் தகாத முறையில் நடந்து கொண்டார்.ஓடும் பேருந்தில் சில்மிஷம் மேலும் அந்த பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாகவும் திருமணம் செய்துகொள்வதாகவும் கூறிய அவர் அதற்கு அந்தப் பெண் தன்னுடன் வரவேண்டும் என்றும் கட்டாயப்படுத்தியுள்ளார். இந்தக்காட்சிகள் அனைத்தும் பேருந்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஆதாரமான சிசிடிவி காட்சிகள் பாஜக பிரமுகரின் இந்த செயலால் மனமுடைந்த அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது புகாருக்கு ஆதாரமாக சிசிடிவி காட்சிகளையும் அந்த பெண் வழங்கியுள்ளார்.< ஒருவாரத்திற்கு பின்பு கைது ஆனால் மகாராஷ்டிராவில் பாஜக ஆளும் கட்சியாக இருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க மறுத்ததாக கூறப்பட்டது.

நீட் தேர்வுக்கு எதிராக ! திருமாவளவன் ஆர்ப்பாட்டம்... 12-ல் தமிழகமெங்கும் ,,

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்
விடுத்துள்ள அறிக்கை:’திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி  தலைமையில் செயல்படும் ‘சனநாயக உரிமைகள் பாதுகாப்பு கூட்டமைப்பின்’ சார்பில் ‘நீட்’ நுழைவுத் தேர்வு குறித்து, கடந்த 04.07.2017 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், மமக, இ.யூ.மு.லீக், எஸ்டிபிஐ உள்ளிட்ட ஏராளமான கட்சிகள் பங்கேற்றன.அக்கூட்டத்தில், ‘நீட்’ நுழைவுத்தேர்வு சமூகநீதிக்கு எதிராகவும், மாநில உரிமைகளைப் பறிப்பதாகவும் உள்ளது என்று முடிவு செய்யப்பட்டது.  எனவே, ‘நீட்’ நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்கக்கோரி தமிழக அரசு இயற்றியுள்ள சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் இதுவரை ஒப்புதல் அளிக்காதது குறித்து அக்கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

வியாழன், 6 ஜூலை, 2017

இந்துத்துவாவை கொத்து புரோட்டா போடும் தமிழ் ஃபேஸ்புக் !


எஸ்.வி.சேகருக்கு மட்டுமல்ல, இந்துத்துவத்திற்கும் போதாத காலமிது. மயிலாப்பூர் மாமாக்களின் அரட்டைகளை வைத்து சபா நாடகம் என்றொரு மொக்கை பூமியில் துட்டு பார்த்த சேகர் அம்மா கட்சியில் இருந்து கடைசியில் தனது தாய்க்கட்சியான பாஜகவில் சேர்ந்தாலும் சேர்ந்தார். பிறகென்ன, தமிழக பாஜகவை வச்சு செய்வதற்கு அன்னார் பெரும்பாடு படுகிறார்.
அவரால் எளிமையான அண்ணாச்சி என்று புகழப்பட்ட தாது மணற்கொள்ளையர் வைகுண்டராசன், மல்லையா – ஜெயாவின் சாராய ஆலைகள், அதானியின் புறம்போக்கு வளைப்புக்கள், பாஜக தலைவர்களின் கசமுசா சமாச்சாரங்கள் போன்ற பதக்கங்களை குத்தியிருக்கும் சேகர், இவ்வகை ஊழல்களை வைத்து திராவிடம் என்றால் என்ன என்று விளக்கியிருந்தார். அதில் திராவிட இயக்கத்தின் பெயரில் ஓட்டுக் கட்சி ஊழல்களை பட்டியலிட்டிருந்தார். இந்த ஊழலில் இந்திய அளவில் முதலிடத்தில் இருப்பதே பாஜகதான் என்பது அந்த முகரக்கட்டைக்கு தெரியவில்லை.

தோழர் பத்மாவை போலி மோதலில் கொல்ல முயற்சியா ? PRPC கண்டனம்

மாவோயிஸ்ட் அமைப்பின் உறுப்பினர் என்று சொல்லி திருமதி.பத்மா
போலி மோதல் எனக் கொல்ல முயற்சியா?  தமிழக அரசின் பதில் என்ன?
வன்மையான கண்டனம்! உடனே விடுதலை செய்!
க/பெ.விவேக் அவர்களைத்  துப்பாக்கி முனையில் கடத்திய ஆந்திர போலீசார்!
மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர் என்று சொல்லி திருமதி பத்மா என்பவரை கடந்த  03.07.2017 அன்று ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஈங்கூர் இரயில் நிலையத்தில் வைத்து ஆந்திர மாநில நக்சல் தடுப்புப் பிரிவு போலீசார் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கடத்தப்பட்ட திருமதி.பத்மா அவர்களின் கணவர் திரு.விவேக் தெரிவித்துள்ளார்.சமூக வலைத்தளங்களில் பலரும் கடத்தலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். சில பத்திரிக்கைகளில் திருமதி பத்மா கைது எனச் செய்தி வந்துள்ளது. ஆனால் தமிழக போலீசார் கைதை மறுத்துள்ளனர். இக்கடத்தல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு நீதிப்பேராணையும்,ஆந்திர மாநில மனித உரிமை ஆணையத்தில் புகாரும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடத்தப்பட்டு சுமார் 72 மணிநேரம் ஆகியும், எந்தத் தகவலும் இல்லை.

புதுச்சேரி .. பறிபோகும் மாநில சுயாட்சி உரிமைகள் .. கிரண்பேடியின் அடாவடி

அருண் நெடுஞ்செழியன்: மேற்கு வங்காள மாநிலம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், பாஜக ஆளுநர்கள் தங்களின் ஆட்டத்தை நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருகின்றனர். மத்திய பாஜக அதிகார மையத்திற்கும் பாஜக அல்லாத மாநில அதிகார மையத்திற்குகமான மோதல் நாளுக்கு நால் தீவிரப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமிக்கும் ஆளுனர் கிரண் பேடிக்குமான மோதலும், மேற்கு வாங்க முதல்வர் மம்தாவிற்கு திரிபாதிக்குமான மோதலும் வேகமாக வெளிப்பட்டு வருகின்றன.
புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் வருகிற சில நாட்களில் ஆளுனர் கிரண் பேடியின் செயல்பாடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்கள்.
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பேனர்ஜி, ஆளுநர் தன்னை தொலைபேசியில் மிரட்டுவதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

நீதித்துறையில் புரையோடி இருக்கும் சாதி மனோபாவம்!

சுகந்தி நாச்சியாள்: பாரத நாட்டின் ஜனாதிபதியாக ஒரு தலித் முன்னிறுத்தப்பட்ட நிலையில் தான் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த நீதிபதி, தலித் வகுப்பைச் சேர்ந்த நீதிபதி சி.எஸ் கர்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் தரமுடியாதுன்னு அடம்பிடிக்குது. அப்படி ஜாமீன் தரமுடியாது சொல்ற நீதிபதிகளின் உடம்பின் குறுக்கே நூல் உள்ளது.
ஜாமீன் கொடுக்கக் கூடாத அளவுக்கு நீதிபதி கர்ணன் என்ன செய்தார்? ‘யோவ், நீதிபதிகளா, நீதி கொடுக்க பொட்டிபொட்டியா பணம் வாங்கலாமா’ன்னு ஆதிக்கசாதி நீதிபதிகளைப் பார்த்து கேள்வி கேட்டுட்டார். அதுவும் அவங்க டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்த அறைக்கே சென்று காட்டுக் கூச்சல் எழுப்பியிருக்கார். அதுதான் விஷயம்… ஒரு தலித் எங்கள பார்த்து குறை சொல்லலாமான்னு ஈகோ பிச்சுகிச்சு. அதனால ஜாமீன் கூட கொடுக்காம ஓடி ஓடி, விரட்டி விரட்டி கைது செஞ்சாச்சு… இனி என்ன நடக்கும்? சிறையில் தள்ளுவார்கள்.
இது நீதித்துறையில் புரையோடி இருக்கும் சாதி மனோபாவத்தைக் காட்டுகிறது. ‘நீ என்ன படிச்சு…எத்தன பெரிய ஆளாவும் இரு. ஆனா எங்கள எதிர்த்தா ஆண்டாண்டா நாங்க ஆண்டுகிட்டு வர்ற எங்க பவரைக் காண்பிப்போம்னு துரத்துறாங்க. இதன்மூலம் மற்ற தலித்துகளுக்கு ‘கீப் கொயட்’ன்னு எச்சரிக்கை விடுக்குது…யாரு? உச்சநீதிமன்றம்.

பெங்களூரு .. லெஸ்பியன் திருமணம் செய்தமையால் வேலை நீக்கம் செய்த gozfo.com

first lesbian ‘wedding’ in Bengaluru, a 25-year-old woman tied the knot with a 21-year-old at a temple in Koramangala.
பெங்களூருவில் ஒரு பெண் லெஸ்பியன் திருமணம் செய்துகொண்டதாக டிவியில் செய்தி வெளியானதையடுத்து, அந்த பெண் வேலை செய்துவந்த நிறுவனம் அவரை பணி நீக்கம் செய்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பெண் பெங்களூருவில் உள்ள ஒரு கோயிலில் சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லாத லெஸ்பியன் திருமணம் செய்துகொண்டார் என்று ஊடகங்களில் செய்தி வெளியான பிறகு அவர் வேலை செய்து வந்த நிறுவனத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த செய்தி பெங்களூரு மிரர் செய்தித்தாளில் இன்று ஜூலை 6ம் தேதி வெளியாகியுள்ளது.
பெங்களூருவில் புதுப்பிக்கத்தக்க மற்றும் பழைய பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் www.gozfo.com என்ற இணையதள நிறுவனத்தில் லெஸ்பியன் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படும் அந்த பெண் வேலை செய்துவந்துள்ளார்.
பெங்களூரு மிரர் செய்தித்தாள் நேற்று ஜூலை 5ம் தேதி வெளியிட்ட செய்தியில், 25 வயது மற்றும் 21 வயது கொண்ட 2 தூரத்து உறவுப் பெண்களுக்கு பெங்களூரு கோரமங்கலாவில் உள்ள ஒரு கோயிலில் திருமணவிழா ஏற்பாடு செய்யப்பட்டது என்று கூறியுள்ளது. இதில் என்ன பிரச்னை என்றால், இந்தியாவில் ஒருபால் உறவு திருமணங்கள் சட்டப் பூர்வமான திருமணங்கள் கிடையாது.

அயோத்தியில் கற்கள் குவிகிறது ... லாரிகள் மூலம் விஸ்வ ஹிந்து பரிஷத் குண்டர்கள் ஏற்பாடு!

அயோத்தியில் குவியும் கற்கள்!
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக லாரிகள் மூலம் கற்களை கொண்டுவந்து விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு குவித்துவருகிறது.
உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் 1992 டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி விஸ்வ இந்து பரிஷத் தலைமையிலான பல்வேறு இந்து அமைப்புகளின் கரசேவர்களால் இடிக்கப்பட்டது. அந்த இடத்தில் ராமர் கோயில் இருந்ததாகவும், அதை இடித்துவிட்டு பாபர் மசூதி கட்டப்பட்டதாகவும் தொடர்ந்து சொல்லி வருகின்றனர் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர்.
பாபர் மசூதி-ராமர் கோயில் பிரச்சனையில், சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள நிலை அப்படியே பாதுகாக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இந்த இடத்தில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்று விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காகக் கடந்த ஜூன் 19ம் தேதி இரண்டு டிரக்குகளில் கற்கள் கொண்டு செல்லப்பட்டு அப்பகுதியில் குவிக்கப்பட்டது. தற்போது மேலும் மூன்று டிரக்குகளில் கற்கள் கொண்டு செல்லப்பட்டு குவிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில வாரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட டிரக்குகளில் கற்கள் கொண்டு வந்து குவிக்கப்படும் என்று விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது.

மோடி- சீன அதிபர் சந்திப்பு கிடையாது என சீனா அறிவிப்பு!


ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் இந்திய பிரதமர் மோடியும் சீன அதிபர் ஷின் ஜிங்பிங்கும் சந்திப்பதாக இருந்த நிலையில் இந்தச் சந்திப்புக்கு வாய்ப்பு இல்லை என்று சீனா அறிவித்துள்ளது.
ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் ஜி20 மாநாடு நாளை (ஜூலை 7ம் தேதி) தொடங்குகிறது. இதில் கலந்து கொள்வதற்காக இஸ்ரேல் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி, இன்று இரவு ஹம்பர்க் வருகிறார். இதில் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஹின் ஜிங்பிங்கும் சந்தித்து பேசுவார்கள் என்று கூறப்பட்டது. இந்நிலையில், இரு நாட்டுத் தலைவர்கள் சந்திப்பு திட்டமிட்டபடி நடக்காது எனச் சீனா அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தற்போது சூழல் சரியானதாக இல்லை. கடந்த 19 நாட்களாக இரு நாடுகளிடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இந்தியா எல்லை தாண்டி ஊடுருவதை நிறுத்தி கொள்ள வேண்டும். தற்போது சூழல் சரியில்லாததால் இரு நாட்டுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விகடன் : ராமஜெயம் கொலைக்கு மூன்று காரணங்களைச் சொல்லும் முதல்வர் பழனிசாமி!

தி.மு.க முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் படுகொலைக்கான மூன்று காரணங்களைச் சொல்லி விளக்கம் அளித்துள்ளார் முதல்வர் பழனிசாமி.
தமிழக சட்டப்பேரவையில் இன்று ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணை குறித்து முதல்வர் பழனிசாமி அளித்த விளக்கத்தில், "திருச்சி, தில்லை நகரைச் சேர்ந்த லதா ராமஜெயம் என்பவர், 29.3.2012 அன்று, அதிகாலை 5 மணிக்கு நடைப்பயிற்சிக்கு சென்ற தனது கணவரும், முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பியுமான ராமஜெயம் வீடு திரும்பவில்லையெனவும், அவர் கடத்தப்பட்டிருக்கலாம் எனவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறும் கோரி அன்றைய தினம் காலை 11.45 மணிக்கு புகார் அளித்ததன் பேரில், தில்லைநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அன்றைய தினம் சுமார் 11.30 மணியளவில், திருச்சி-கல்லணை சாலையில் உள்ள பொன்னுரங்கபுரம் என்ற இடத்துக்கு அருகில், ராமஜெயத்தின் உடல் காயங்களுடன் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது. இதுதொடர்பாக, திம்மராயபுரம் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், திருவரங்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

திரையரங்க வேலை நிறுத்தம் முடிவு ... 28 ஜி எஸ் டி கட்டணம் வசூலிக்கப்படும் ...

திரையரங்க உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்! கேளிக்கை வரிக்கு எதிராக திரையரங்க உரிமையாளர்கள் நடத்தி வந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. கடந்த திங்கட்கிழமை முதல் நடைபெற்று வந்த திரையரங்க உரிமையாளர்கள் போராட்டம் இன்று மாலை அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது. தலைமை செயலகத்தில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் சினிமா வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன், போராட்டத்திற்கு ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றி. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளோம். தியேட்டர் உரிமையாளர்களின் சிரமங்களை அமைச்சர்கள் புரிந்து கொண்டனர். நாளை காலை முதல் தியேட்டர்கள் வழக்கம் போல் இயங்கும். வழக்கமான டிக்கெட் கட்டணமே இருக்கும். வழக்கமான கட்டணம் மற்றும் 28 சதவீதம் ஜிஎஸ்டி மட்டுமே வசூலிக்கப்படும். திரைத்துறையினர் சார்பில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். தொடர்ந்து பேச அரசு தரப்பில் ஒரு குழுவும், திரை துறையினர் சார்பில் ஒரு குழுவும் அமைக்கப்படும். ஒரு நாளுக்கு ரூ.20 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார். நக்கீரன்

அமெரிக்காவில் ரஜினி ... காஸினோ கிளப்பில் ... ஓஹோ இதுதான் சரியான சிஸ்டமோ?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் பரிசோதனை செய்ய கடந்த வாரம்
அமெரிக்கா சென்றார். அவருக்கு உதவியாக அவரது மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யாவும் உடன் சென்றுள்ளார். உடல் பரிசோதனை நேரம் போக மீதி நேரம் அவர் நண்பர்களுடன் உரையாடுதல், அரசியல் ஆலோசனை செய்தல் உள்ளிட்ட பல விஷயங்களில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றார். ; இந்த நிலையில் ரஜினிகாந்த் ஒரு கிளப்பில் கேசினோ விளையாடி கொண்டிருப்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையதளத்தில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மை இன்னும் உறுதி செய்யப்படவில்லை இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய நாம் தமிழர் கட்சியின் சீமான், 'நாங்கள் மக்களுக்காக போராடிக்கொண்டிருக்கின்றோம், ரஜினியோ அமெரிக்காவில் கேசினோ விளையாடி கொண்டிருக்கின்றார். அது முதலாளிகளின் விளையாட்டு, எனவே அதை பற்றி நான் ஒன்றும் சொல்ல முடியாது' என்று கூறியுள்ளார். webdunia

மோடி அரசின் சானிடரி நாப்கின் துரோகம் .. இலவசமாகவே வழங்கவேண்டும் .. அநியாய வரி !

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் எதிரிகள் கூட இன்றுவரை பாராட்டும் இலவச சானிடரி நாப்கின் திட்டமும் விரைவில் நீர்த்து போகச்செய்யும் முயற்சிகளை மோடியின் அதிமுக அரசு மேற்கொள்ளும்?  . Hariharasuthan Thangavelu சாமியார்கள் அரசும், சானிட்டரி நாப்கின் துரோகமும் :
GST வரி விதிப்பு நல்லதா கெட்டதா என்ற முடிவு தெரிய இன்னும் சிலகாலம் ஆகும் என்றாலும் பொருட்களுக்கான வரி நிர்ணயம் செய்ததில் ஒரு வரலாற்று கேனத்தனத்தை மத்திய அரசு நிகழ்த்தியுள்ளது என சர்வ நிச்சயமாக இப்போதே கூறலாம். 
பூஜை சாமான்கள், பிரசாதங்கள், காந்தி தொப்பி என வாழ்வாதாரத்துக்கு இன்றியமையாத பொருட்களுக்கு வரிவிலக்கு அளித்த அரசு, பெண்கள் மாதவிலக்கின் போது பயன்படுத்த கூடிய சானிட்டரி நாப்கின்களுக்கு 12% வரி விதித்துள்ளது, ஏற்கனவே சந்தையில் 150 முதல் 200 வரை ஏக விலையில் விற்று கொண்டிருந்த நாப்கின்கள் இதன் மூலம் 20 ரூபாய் முதல் 25 வரை மேலும் விலையேற்றம் அடைந்துள்ளது.
என்னடா 20 ரூபாய் விலையேற்றியதில் பெண்கள் வாழ்க்கை அழிந்து விட போகிறதா என நினைத்து விடாதீர்கள், நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களை தான் இந்த விலையேற்றத்தின் பாதிப்பு அதிக அளவில் இருக்கும், ஒவ்வொரு கிராமப்புற பள்ளிகளிலும் மாதத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் வகுப்பிற்கு வராத எத்தனையோ மாணவிகளும் மாதம் 200 ரூபாய் செலவு செய்து தனக்கு சானிட்டரி நாப்கின்கள் வாங்க முடியாத எத்தனையோ பெண்களும் இன்றும் உள்ளனர்.

சாதி ஒழிந்தால் இந்தியா வல்லரசாகும்... சாதி தொடர்ந்தால் இருக்கிற தகுதியும்......

Shalin Maria Lawrence :(Hidden Figures தொடர்ச்சி)  அமெரிக்காவின் கறுப்பின பாகுபாடு
கொடுமைகள் பற்றி உலகம் அறியாதது அல்ல . ஆனால் ...தன் நாடு ,முன்னேற்றம் என்று வந்த பொழுது காலம் காலமாக தாங்கள் தொடர்ந்து வரும் பழக்கங்களையும் ,சமூதாய கட்டமைப்புகளையும் ,இன வெறுப்புகளையும் ஒரே நாளில் ,ஒரே நொடியில் நொறுக்கி தள்ளுகிறார்கள் அமெரிக்கர்கள் . அவர்களை பொறுத்தவரை நாடு முன்னேற வேண்டும் அதற்க்கு தடையாக இருக்கும் எதுவாக இருப்பினும் ,அது இனவெறி என்றால் கூட அதை தூக்கி போட்டு செல்ல வேண்டும் என்பது .
இதற்கு பெயர்தான் நாட்டு பற்று / Nationalism /Patriotism .
ஆனால் இந்தியாவிலோ இயற்கையில் இல்லாத ஜாதி என்கிற ஒரு செயற்கை விஷயத்தை வைத்து கொண்டு ,மதம் என்கிற விஷ செடியை வளர்க்க அப்பாவிகளின் ரத்தத்தை ஊற்றி அதற்க்கு நாட்டுப்பற்று என்று பெயர் வைத்து கொண்டிருக்கிறாரகள் . நாடு எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை நாங்கள் மற்ற சமூகத்தை வளர விட மாட்டோம் அவர்கள் வாழ்வுநிலையை மாற்ற மாட்டோம் என்கிற வெறி இன்று அதிகம் இந்தியர்களிடையே காண படுகிறது . இது எப்படி நாடு பற்றாகும் ? தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை கடந்து நாட்டை தொழில் ,விவசாயம் ,அறிவியல் என்று முன்னிலையில் எடுத்து செல்லும் மனம் இந்தியர்களுக்கு இல்லை .

ஆங்கிலேயர்கள் தந்த உரிமைகளும் மரியாதையும் இன்று பறிக்கப்பட்டு விட்டன

வெள்ளைக்காரன் தமிழகத்தை ஆண்ட பொது..... தமிழ்நாட்டில் ....
காடுகள் செழிப்பாக வளர்ந்தன..
ஆறுகள் பாய்ந்தோடியது
கனிமங்கள் பாதுகாப்பாக இருந்தன..
விவசாயம்...கிராமிய கைத் தொழில்கள் செழித்திருந்தன
பள்ளிகள் திறந்து கல்வி அளித்தான்
நல்ல மருத்துவம் கொடுத்தான்...
சாதி மத சண்டைகள் இல்லை..
தமிழ் வளர்ந்தது..
புலவர்கள் அரிய இலக்கிய படைப்புகளை வழங்கினார்கள்
தமிழின பண்பாடு கலாச்சாரம் நமது தனித்துவ அடையாளங்கள் நன்கு பாதுகாக்கப்பட்டன..
மக்கள் வறுமை இருப்பினும் செம்மையாக நிம்மதியாக வாழ்ந்து வந்தார்கள்....
ஆனால்...
.சுதந்தரம் என்ற பெயரில் ...நாட்டை வளப்படுத்துவதாக சொல்லிக்கொண்டுவந்த தேசபக்தர்கள் ஆட்சில்
காடுகள் கண்ணவில்லை
ஆறுகள் வறண்டு பாலைவனமாகிவிட்டது...
விவசாயம் பிற கைத்தொழில்கள் அடியோடு செத்துவிட்டன..
தமிழ்நாட்டின் அத்துணை இயற்கை வளங்களும் கொள்ளைபோய்விட்டன
தமிழை காணோம்...

“2ஜி வழக்கில் வரும் தீர்ப்பு தமிழகத்துக்கே நல்ல செய்தியாக இருக்கும்.... எச்ச .ராஜா

மின்னம்பலம் :இந்திய அரசியல் வரலாற்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி
அலைக்கற்றை முறைகேடு தொடர்பான வழக்கில் வரும் ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படலாம் என்று டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக திமுக-வைச் சேர்ந்த ஆ.ராசா பதவி வகித்தார். அப்போது தொலைத் தொடர்பு உரிமமான 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகவும், இதனால் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் கணக்குத் தணிக்கை குழுவின் அறிக்கையில் சொல்லப்பட, அது பூதாகரமாக வெடித்தது.
2009இல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அதன் விசாரணை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் எட்டு ஆண்டுகளாக நடைபெற்றது. இந்த வழக்கை நீதிபதி ஓ.பி.சைனி விசாரித்து வருகிறார்.

பிக் பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்.. மனுஷ்ய புத்திரன்

பிக் பாஸ் நிகழ்ச்சியொன்றில்
நான் நுழைந்து
மூன்று வருடங்கள்
கழிந்து விட்டன
எண்ணற்ற மர்ம சம்பவங்கள்
இந்த வீட்டில் நடந்துகொண்டிருக்கின்றன
எல்லாவற்றையும்
பிக் பாஸ் கண்காணிக்கிறார்
அதன் எடிட் செய்யப்பட்ட
சில வினோதங்களை
நீங்களும் காண்கிறீர்கள்
பிக் பாஸிற்கு
தெரியாதது என்று ஒன்றுமில்லை
நான் ஒரு காண்டம் வாங்கினாலும்
அது பிக் பாஸிற்கு தெரிந்துதான்
வாங்க வேண்டும்
எனது கிரெடிட் கார்ட் எண்
என் ஆதார் அட்டையோடு இணைக்கப்பட்டிருக்கிறது
அதில் என் விழிப்படலத்தின் ரேகைகள்
பதியப்பட்டிருக்கின்றன

புதுவையில் பாஜகவை பின்கதவால் நுழைத்த ஆளுநர் கிரண் பேடி

Gajalakshmi சென்னை : புதுவை சட்டப்பேரவைக்கு 3 நியமன உறுப்பினர்கள்
நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அளித்து உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி சட்டமன்றத்துக்கு 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்துக் கொள்ளலாம். ஆனால் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைந்து ஓராண்டுக்கு மேலாகியும் அந்த பதவிகளை நிரப்ப யாருடைய பெயரையும் அரசு சிபாரிசு செய்யவில்லை. இதைத்தொடர்ந்து நியமன எம்.எல்.ஏ. பதவி இடங்களை நிரப்ப மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன்படி பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், கல்வியாளர் செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக தேர்வு செய்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பினை வெளியிட்டது. நியமன எம்எல்ஏக்கள் பதவியேற்பு மத்திய அரசின் இந்த நடவடிக்கை புதுச்சேரி ஆளும் கட்சிக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தினகரனை அவமானப்படுத்திய குடியரசு தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்


விரைவில் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் அதிமுகவின் மூன்று
அணிகளும் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பதாக அறிவித்தது. இந்நிலையில் கடந்த வாரம் பாஜக ஜனாதிபதி வேட்பாளர் சென்னை வந்து அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏக்களை சந்தித்தார். அதிமுக ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி, தினகரன் அணி என மூன்றாக பிரிந்திருந்தாலும் பாஜக தரப்பு ஜனாதிபதி தேர்தலில் எடப்பாடி அணி மற்றும் ஓபிஎஸ் அணியிடம் மட்டும் தான் ஆதரவு கேட்டது. தினகரன் தரப்பை புறக்கணித்தது. இதனையடுத்து எடப்பாடி, ஓபிஎஸ் தரப்பு தங்கள் ஆதரவை வரிசையாக அறிவிக்க, தினகரன் தரப்பு தானாக முன்வந்து தங்கள் ஆதரவை பாஜகவுக்கு வாலண்டியராக தெரிவித்தது. இந்நிலையில் கடந்த வாரம் சென்னை வந்த பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் முதலில் ஓபிஎஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு சென்று ஆதரவு எம்பி, எம்எல்ஏக்களை சந்தித்து பின்னர் எடப்பாடி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு சென்று எம்பி, எம்எல்ஏக்களை சந்தித்தார். ஆனால் தினகரனை சந்திக்கவில்லை.

GST- Lyca -- தமிழ்ப் படங்களை தயாரிக்க மறுக்கும் லைகா!

மின்னம்பலம் : விஜய்யின் கத்தி திரைப்படத்தில் தொடங்கிய லைகாவின் பயணம் தற்போது
2.0 திரைப்படத்தின்மூலம் டாப் கியரில் சென்றுகொண்டிருக்கிறது. 2.0-வுக்குப் பிறகு உதயநிதியின் இப்படை வெல்லும், விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடிக்கும் கரு ஆகிய இரண்டு திரைப்படங்களில் லைகாவின் கைவசம் உள்ளன. இந்நிலையில் லைகா தமிழ்ப்படங்களைத் தயாரிக்கமாட்டோம் என அறிவித்திருப்பது தமிழ் சினிமாவில் இன்றைய பரபரப்பை உருவாக்கிவிட்டது. லைக்காவின் சார்பில் 3D டிஜிட்டல் மீட்டிங் இன்று காலை(05.07.2017) ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் 3D திரையரங்குகள் தமிழகத்தில் அதிகளவில் உருவாகவேண்டிய அவசியத்தைப்பற்றி பலரும் கலந்துகொண்டு பேசினார்கள். தற்போதைய தமிழ்த் திரையுலக சூழ்நிலை நல்ல நிலையில் இல்லாததால், அதைப்பற்றிய விவாதமும் அரங்கேறியது. அப்போது பேசிய லைகா புரொடக்‌ஷன் நிறுவனத்தின் Creative Head ராஜு மஹாலிங்கம் பேசுகையில் நாங்கள் 2.0 திரைப்படத்துக்கு 400 கோடி செலவு செய்திருக்கிறோம்.

மோடியின் டீக்கடை சுற்றுலா தலமாகிறது ... மோடியின் டீக்கடை என்பதே பச்சை பொய்.... ஒரு போதும் எந்த தொழிலும் மோடி செய்திருக்கவில்லை.

வாத்நகரின் இரயில்வே நிலையத்தைப்t; புனரமைத்து சுற்றுலாத் தலமாக்குவது திட்டம்.மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையைச் (Archaeological Survey of India) சேர்ந்த அதிகாரிகளும் குஜராத் மாநிலம் வாத்நகருக்கு கடந்த ஞாயிறன்று விஜயம் செய்துள்ளனர்.  வாத்நகரின் இரயில்வே நிலையத்தைப் புனரமைத்து சுற்றுலாத் தலமாக்குவது திட்டம். மேலும் வாத்நகரை சுற்றுலாத் தளமாக்குவதற்கு சுமார் 100 கோடி மதிப்பீட்டில் திட்டம் ஒன்று தயாராக உள்ளதாகவும், முதற்கட்டமாக 8 கோடி ரூபாயை மாநில சுற்றுலாத்துறை ஒதுக்கியிருப்பதாகவும் அகமதாபாத் மண்டல ரயில்வே மேலாளர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
வாத்நகருக்கும், அந்நகரத்தின் இரயில்வே நிலையத்திற்கும் அப்படி என்ன சிறப்பு? வேறொன்றுமில்லை, மோடியின் அவதாரம் நிகழ்ந்த வரலாற்றுச் சிறப்பை வாத்நகரும் அவர் தேனீர் விற்ற கடையை அந்நகரின் இரயில்வே நிலையமும் கொண்டிருக்கின்றன. மேற்படி தேனீர் கடையை அதன் பழமை மாறாமல் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு புனரமைக்கப் போவதாக அதிகாரிகள் நெக்குருகுகின்றனர்... ஒரு அரசியல் குண்டா நாட்டு தலைவர் ஆனால் என்னவெல்லாம் நடக்கும் என்பது இதுதான் .

சென்னையில் ஹரூண் கைது ! ஜூனைத் கானைக் கொன்றவர்கள் கைதில்லை !

ஓடும் ரயிலில் கொல்லப்பட்ட சிறுவன் ஜூனைத் ரியானாவைச் சேர்ந்த 15 வயதுச் சிறுவன் ஜுனைத் கான், கடந்த ஜூன் 22 அன்று  இந்துமதவெறியர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டது யாருக்கும் மறந்திருக்காது. இரம்ஜான் பண்டிகைக்கு பொருட்களை வாங்கிக் கொண்டு தனது தம்பிகளோடு இரயிலில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் ஜூனைத் கான். அப்போது அங்கு வந்த இந்துமதவெறிக் கிரிமினல் கும்பல், அவரையும் அவரது சகோதரர்களையும் மாட்டுக்கறி திண்ணும் தேசதுரோகிகள் எனக் கூறிக் கடுமையாகத் தாக்கியது. இறங்க வேண்டிய இடத்தில் அவர்களை இறங்க விடாமல் தடுத்து, மீறி இறங்க முயன்ற ஜுனைத் கானைக் கத்தியால் குத்தி கொலை செய்தது அக்கும்பல்.
பிரதமர் மோடியோ, ஹரியானா முதல்வர் கட்டாரோ, வேறு எந்த பாஜக தலைவரோ இச்சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்கு இது குறித்து வாய் திறக்கவேயில்லை. நாடு முழுவதும் இது குறித்துப் பல்வேறு கண்டனக் குரல்கள் குவியத் துவங்கியவுடன், ஒரு வாரம் கழித்து பிரதமர் மோடி மொன்னையான ஒரு கண்டன உரையை நிகழ்த்தினார். அவர் எச்சில் ஈரம் காய்வதற்குள் ஜார்கண்டில் பசுவின் பெயரால் மற்றொரு கொலை நடந்து முடிந்திருந்தது.

கதிராமங்கலம் போராட்டத்தில் போலீசு அட்டூழியங்கள் !


வினவு :போலீசு துரத்துகையில் ஓடிய குணசுந்தரியை இழுத்து தள்ளிவிட்டு அவரது கால்களிலேயே குண்டாந்தடியைக் கொண்டு அடித்து அவரது கால்களை முறித்திருக்கிறது போலீசு
மிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தை முழுக்க தரிசாக்கும் வண்ணம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை, நெடுவாசல் மற்றும் கதிராமங்கலத்தில் மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் மட்டுமல்ல முழு தமிழக மக்களுமே கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஏற்கனவே அமைத்திருந்த எண்ணெய்க் குழாயின் மோசமான தரத்தின் காரணமாக கடந்த 30.06.2017 அன்று கதிராமங்கலம் வனதுர்கை கோவில் பகுதியில் ஐந்தாறு இடங்களில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, எண்ணெய் வெளியேறியுள்ளது. வெளியேறிய எண்ணெய் அங்குள்ள வயல்வெளிப்பகுதியில் படர்ந்து வயல்வெளியை நாசபடுத்தியதோடு, அங்கிருக்கும் குடிநீர் கிண்றுகளுக்கும் பரவி, அங்கு கிடைக்கும் நிலத்தடி நீர் வரை முழுமையாக எண்ணெய் பரவியுள்ளது.

புதன், 5 ஜூலை, 2017

Nasa மூன்று கறுப்பின பெண்களின் உதவியோடுதான் முதல் விண்வெளி பயணம் ...

Shalin Maria Larwrence :  Hidden figures என்றொரு ஆங்கில படம்
.உண்மை சம்பவங்களை கதையாக
கொண்டது .
1961 அமெரிக்காவில் கறுப்பின மக்களின் உரிமை போராட்டம் (Civil rights war ) உச்சக்கட்டத்தில் இருந்த நேரம் . கறுப்பின வெறுப்பும் உச்சத்தில் இருந்த நேரம் மூன்று கறுப்பின பெண்கள் நாசாவில் சேருகிறார்கள் .
வரலாறில் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் யார் வல்லரசு என்று தீவிரமாக "விண்வெளி பந்தயம்" நடந்து கொண்டிருக்கும் காலம் அது . ரஷ்யா விண்வெளிக்கு மனிதனோடு விண்கலத்தை அனுப்பி வெற்றி கண்டிருந்த நேரம் .அமெரிக்காவின் முயற்சிகள் தொடர் தோல்வியில் முடிகிறது .
அந்த மூன்று கறுப்பின பெண்களில்
ஒருத்தி கணித மேதை -கேத்தரின்
ஒருத்தி பொறியியல் அறிவாளி -மேரி
இன்னொருத்தி computers என்று அழைக்கப்படும் வானியல் கணக்குகளை கையாலேயே போடும் கறுப்பின பெண்களுக்கு சூப்பர்வைசர் -டாரத்தி .
அமெரிக்காவின் ஆள் தாங்கிய விண்வெளி பயணத்தை வெற்றி ஆக்குவதற்கு கேத்தரின் மற்றும் மேரியின் உதவி தேவை படுகிறது . முழுதும் வெள்ளையர்கள் இருக்கும் குழுக்களில் அவர்கள் இணைக்கப்படுகிறார்கள் .
அந்த குழுக்களிலேயே அவர்கள் சிறந்து விளங்குகிறாரகள் .வெள்ளையர்களை விட எல்லா விதத்திலேயும் அவர்கள் தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் .

ஆண்களுக்கு இருக்கும் பாலியல் சுதந்திரம் பெண்களுக்கு இருப்பதில்லை

Lulu Deva Jamla :*கற்பு-உதாசீனம்-பெண்மை*
பெண்மையை பேதையாய் பதுமையாய் மென்மையாய் சித்தரிக்க ஆணாதிக்க சமூகம் உபயோகிக்கும் அத்தனை அணிகலன்களையும் தூக்கி எறிந்து தன் பிறப்பை உணரும் வீரப்பெண்மையே என்னைப் பொறுத்தவரையில் உண்மையான பெண்மை!
வீரப்பெண்மணிகள் தூக்கியெறிய வேண்டிய முதல் காப்பு "புனிதம்" என்ற பெயரில் காக்கப்படும் "கற்பு".
கற்பு என்ற வார்த்தையிலேயே ஒரு முரண்பாடு உண்டு.. கற்பு என்பது வெறும் பெண்ணுறுப்பில் மட்டுமே இருப்பது போல் இந்த ஆணாதிக்கச் சமூதாயம் சித்தரித்து வைத்திருக்கிறது. கற்பு என்ற ஒன்று கற்பனையே என்னைப்பொறுத்த வரை! அப்படி ஒன்று இருக்கிறது என்பீர்களாயின் ஆணோ பெண்ணோ இரு பாலினர்க்கும் எல்லா உறுப்புகளிலும் கற்பு இருக்கிறது என்பேன். பெண் உடலால் உறவு கொண்டால் அது கற்பு இழப்பது என்று கூறி அவளை வதைக்கும் ஆண் வர்க்கம் தன் கண்ணாலேயோ உடலாலோ கற்பை இழப்பது மட்டும் எப்படி தப்பில்லாமல் போகும்?