minnambalam.com - Mathi : நாகப்பட்டினத்தில் தவெக முன்னாள் நிர்வாகி பூபாலன் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வழக்கில், 137 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் மதிப்பு ரூ.100 கோடிக்கும் அதிகம் என்றும் மத்திய நிதி அமைச்சகம் இன்று (அக்டோபர் 18-ந் தேதி) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகக் கடலோரப் பகுதிகளில் அண்மைக்காலத்தில் நடந்த மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று எனவும் தெரிவித்துள்ளது.
ஞாயிறு, 18 அக்டோபர், 2026
அனோஜன் “நமது நபி” என்று ஒருபோதும் கூறவில்லை! அனோஜனை மீட்ட சட்டத்தரணிகள் கூறும் உண்மைக் கதை!
BREAKING NEWS: அனோஜன் “நமது நபி” என்று ஒருபோதும் கூறவில்லை! அனோஜனை மீட்ட சட்டத்தரணிகள் கூறும் உண்மைக் கதை!
27 வயதான இலங்கை இளைஞர் ஒருவரின் வாழ்க்கை, சில வினாடிகளுக்கு முன்பு அவர் தற்செயலாக எழுதிய ஒரு முகநூல் பதிவிற்கும், பத்து நிமிடங்கள் கழித்து அவர் நீக்கிய காணொளி மன்னிப்பிற்கும் இடையில் சிக்கித் தவித்தது. சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த அனோஜன் சிவராசாவுக்கு நாட்டின் மேல்முறையீட்டு நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை, இலங்கையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் தூதர்கள் குழுவின் மாபெரும் நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்த வாரம் சவூதி உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
பிரான்ஸ் பற்றி எரிகிறது! வந்தேறி குடிகளின் வன்முறை
மின்னம்பலம் மதி : பிரான்ஸில் கல்வி சீர்திருத்தம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து நேற்று (அக்டோபர் 17-ந் தேதி) நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. பல நகரங்களில் வாகனங்கள், அரசு கட்டிடங்களுக்குத் தீ வைக்கப்பட்டது. 143 ஆண்டுகள் பழமையான நகராட்சி கட்டிடம் தீக்கிரையானது. இந்த வன்முறைகள் தொடர்பாக சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரான்ஸில் கடந்த சில வாரங்களாக மாணவர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் அரசுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றன. கல்வி நிறுவனங்களில் நிலவும் பிரச்சனைகள், விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை அதிகரிப்பு, பொதுச் சேவைகளுக்கான நிதி குறைப்பு ஆகியவற்றுக்கு எதிராக இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
யாழ்ப்பாணத்தை முதலில் வாழ தகுதியான ஊராக மாற்றுங்கள்! சுற்றுலா தானாக தேடி வரும்.
Ketharanathan Saravanan : யாழ்ப்பாணத்தில் சுற்றுலா வளர்கிறதா? இல்லை, சுற்றுலா என்ற பெயரில் ஊரை ஏமாற்றுகிறார்களா?
யாழ்ப்பாணத்தில் சுற்றுலா வளர வேண்டும் தான். ஆனால் சுற்றுலா என்றால் என்ன என்று தெரியாத ஒரு கூட்டம், சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் செய்யும் கோமாளித்தனங்களை பார்க்கும் போது வாந்தி வருகிறது.
வெளிநாட்டிலிருந்து ஒருவன் யாழ்ப்பாணத்துக்கு வருகிறான் என்றால், அவனுக்கு நாம் என்ன கொடுக்கிறோம்? இதை யோசித்தீர்களா?
1. ஒரு மனிதன் நிம்மதியாக நடக்க முடியாத ஊர்:
யாழ்ப்பாணத்தில் ஒரு வெளிநாட்டு பயணி இரவு 7 மணிக்கு மேல் நல்லூரில் இருந்து மணிக்கூட்டு வீதி வரை நடந்து வர முடியுமா? முடியாது.