அவரைப் போலவே அமெரிக்கர்கள் அனைவரையும் அவரால் பணக்காரராக்க முடியுமா?.
ட்ரம்ப் தனது பேச்சுகளில் கூறியது என்ன?
"நான்
ஆட்சிக்கு வந்தால் முக்கியமாக அமெரிக்க சட்டத் தொகுப்பில் வரிகள் தொடர்பான
அனைத்து அம்சங்களும் முழுதும் பழுது பார்க்கப்படும்" என்று ட்ரம்ப்
தெரிவித்தார். இதுதவிர, "நாப்தா, ஒபாமா கேர் உள்ளிட்ட ஜனநாயகக் கட்சி
கொண்டு வந்த பெரும்பான்மையான திட்டங்களை முற்றிலுமாக மாற்றவோ அல்லது அதில்
மாற்றம் கொண்டுவரவோ நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இவை
இரண்டுமே ஜனநாயகக் கட்சியின் மீது, மக்களை பெரும் விமர்சனம் செய்ய
வைத்தது. மறுபக்கம் அமெரிக்காவில் குடியேறும் பெரும்பாலான வெளிநாட்டவர்களை
திருப்பி அனுப்புவதற்கான சட்டத் திருத்தங்களைக் கொண்டு வரப்போவதாகவும்
அறிவித்தார். இது அமெரிக்காவில் மெக்சிகன் மக்களை குறிவைத்தே செய்யப்பட்ட
நிற அரசியல் என்றாலும், அமெரிக்காவின் பொருளாதார பலம் பெரும்பாலும் அங்கு
வாழும் பிற நாட்டவர்களால்தான் அதிகரித்து இருக்கிறது. அதனால், தேர்தல்
நெருங்க நெருங்க குடியேற்றம் தொடர்பான தனது கருத்துகளை குறைத்துக்
கொண்டார். ஆனால் ட்ரம்ப், அதிபர் மாளிகை அலுவலகத்துக்கு வந்தால் இவை
அனைத்தையும் நினைவில் வைத்திருப்பாரா? என்பது ஒரு வருட
செயல்பாட்டுக்குப் பிறகுதான் தெரிய வரும்.
ட்ரம்ப்-ன்
இந்த திட்டங்களும் விமர்சனங்களும் அவருக்கு கட்சிக்குள்ளேயே நிறைய
விமர்சனங்களை பெற்றுத் தந்தது. உச்சக்கட்டமாக வாடிகன் போப் கூட
ட்ரம்ப்-க்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் அளவுக்கு அவரது திட்டங்கள் சில
நேரங்களில் சாமர்த்தியமானதாகவும் சில நேரங்களில் சாத்தியமா? என்னும்
கேள்விக்குறியுடனும் இருந்தன.
அமெரிக்க பொருளாதாரம் என்னவாகும்?
குடியேற்றத்தின்
மீது டிரம்ப்-ன் பார்வை இருக்கும் நிலையில், தனிப்பட்ட முறையில் அவருக்கே
அது பெரும் இழப்பாக அமையும். அமெரிக்காவுக்கு அதைவிடப் பெரிய இழப்பாக
இருக்கும். அரசுக்கு இதனால் 400 பில்லியன் டாலர் முதல் 600 பில்லியன் டாலர்
வரை செலவாகும். பணியாளர்கள் எண்ணிக்கையை 11 மில்லியன் அளவுக்கு
குறைக்கும். உற்பத்தியை 1.6 ட்ரில்லியன் டாலர் வரை குறைக்கும். இதிலிருந்து
மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப 20 வருடங்கள் ஆகும். ஆனால் "அமெரிக்காவை
18 மாதங்களில் பழைய நிலைக்கு கொண்டு வருவேன்" என்று தெரிவித்திருக்கிறார்
ட்ரம்ப்.
எனினும், "டிரம்ப்-ன் வெற்றியால்,
அமெரிக்கர்கள் நிச்சயம் ஒரு பெரும் பொருளாதாரச் சரிவை சந்திக்கத் தயாராக
இருக்க வேண்டும்" என்கிறார்கள் அமெரிக்கப் பொருளாதார வல்லுநர்கள். குறைந்த
கூலியில் பணியமர்த்தக் கிடைக்கும் குடியேற்ற ஊழியர்கள் இல்லாத நிலையை இது
உருவாக்கும். அத்தகைய நிலையில் விவசாயம், தச்சு உள்ளிட்ட வேலைகளை இது
பாதிக்கும். இதனால் பண்ணைகளுக்கான வரத்து குறையும் அப்படியே உணவு
விலையேற்றமும் இருக்கும். அடிப்படை பொருளாதார வீக்கம் மிகஎளிதாக நம் கண்
முன் நிகழும். இதற்கு ட்ரம்புக்கு வாக்களித்தவர்களே ஆதரவாக இருக்க
மாட்டார்கள். அவர் கட்சியே கூட இதற்கு எதிராகத்தான் இருக்கிறது. முறையற்ற
குடியேற்றமோ அல்லது முறையில்லாத குடியேற்றமோ, அவர்களுக்காக தொடங்கப்பட்ட
அமெரிக்கத் தொழில்களும் இதனால் பாதிக்கப்படும். முறையான குடியேற்றங்களுக்கு
அளிக்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பின் எண்ணிக்கையும் குறைக்கப்படும்
என்பதுதான் ட்ரம்ப்-ன் திட்டங்களின் உச்சம். இதன்படி, ஹெச்-1பி
விசாக்களுக்கான சம்பள நியதிகள் அதிகரிக்கப்படும். அதனால் அமெரிக்க
கம்பெனிகள் உள்நாட்டினருக்கே வேலை தரும் நிலைக்குச் செல்லும். ஆனால், இது
சில கம்பெனிகளுக்கே உதவியாக இருக்கும் ட்ரம்பின் பிஸினஸ் தொடங்கி அத்தனை
பேருக்குமே இது பெரும் பிரச்னையாக எழும்.
வரிகளின் மீதான் ட்ரம்பின் ட்ரம்ப்கார்டுகள்
பொருளாதார
வல்லுநர்கள் பெரிதும் எதிர்நோக்குவது ட்ரம்பின் வரிகள் தொடர்பான
திட்டங்களைத்தான். அவரது திட்டங்கள் புதிய தொழில் தொடங்க இருப்பவர்களுக்கு
பெரிதும் உதவியாக இருக்கும். அதுவும் தொழில் வரிகளின் மீதான 15% எனப்படும்
உச்சபட்ச வரையறை சுயதொழில் செய்வோருக்கு மகிழ்ச்சி தரும் திட்டமாக
இருக்கும். ஆனால், இவரது வரி தொடர்பான திட்டங்கள், அரசுக்கு நிச்சயம்
வருவாய் பற்றாக்குறையை ஏற்படுத்தும். அது அமெரிக்காவின் வருடாந்திர
பட்ஜெட்டில் நிச்சயம் அவர் சொன்ன அதே நீர்க்குமிழி போல பிரதிபலிக்கும்.
இவரது திட்டங்களைப் பொறுத்தவரை, அமெரிக்காவின் தனிநபர் தொழிலாளர்களுக்கு
மகிழ்ச்சிகரமான செய்தி. ஆனால் அதே தனிநபர் தொழிலாளர்கள் எண்ணிக்கை,
பணியாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் மிகமிகக் குறைவு. அடிப்படையில்
வர்த்தகப் பெரும்புள்ளியான ட்ரம்ப், தனக்கான தொழில்வளர்ச்சித் திட்டங்களை
அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்காக முன்னிலைப் படுத்தியிருக்கிறாரா?
என்னும் சந்தேகமும் எழுந்துள்ளது.
1916-ல்
உலகப் போர் காலகட்டத்தில் பிரிட்டனின் பொருளாதாரச் சர்வாதிகாரத்தை
நெறித்துத் தள்ளிவிட்டு, உயர்ந்ததுதான் அமெரிக்க வல்லரசு. எதிர்பாராவிதமாக
வல்லரசின் வேர் துளிர்த்ததன் நூறாவது ஆண்டு இவ்வருடம். ஏகாதிபத்தியம்
நிலைத்திருக்க ட்ரம்ப்கார்டாக ட்ரம்ப் இருப்பாரா? அல்லது மற்றொரு வல்லரசு
உருவாகக் காரணமாக இருப்பாரா?
வாழ்த்துகள்! சுயபரிசோதனை முயற்சியில் இறங்கியிருக்கும் அமெரிக்க மக்களுக்கும், நம்பர் 45. டொனால்டு டிரம்ப்-க்கும். ஐஷ்வர்யா vikatan.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக