சனி, 30 ஜனவரி, 2016

குறைந்த விலையில் ரோபோட்டிக் செயற்கை கை...கோவை மாணவன் சாதனை

tamil roboticவிகடன்,com : மனித உடலில் ஏற்படும் எத்தனையோ, குறைபாடுகளுக்கும், நோய்களுக்கும் தீர்வாக இருப்பது மருத்துவத்துறையின் முன்னேற்றமும், அறிவியலின் வளர்ச்சியும்தான். இரண்டும் பெரிதும் வளர்ந்துவிட்ட, இந்த 20 ம் நூற்றாண்டிலும் கூட, இவை எல்லோரையும் சென்றடைவதில்லை. அதற்கு முக்கியக்காரணமாக இருப்பது, பணம். இதனால் பல உயர் சிகிச்சைகளும், கருவிகளும் இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாட்டில் அனைவருக்கும் கிடைப்பதில்லை. குறிப்பாக விபத்தில் கை, கால்களை இழந்தவர்கள் நம்பியிருப்பது செயற்கை உறுப்புகளைத்தான். செயற்கை கை, செயற்கை கால் போன்றவைதான் இவர்களுக்கான விலை குறைந்த தீர்வு. செயற்கை கை பொருத்துபவர்களால் அதனை இயக்க முடியாது. அழகுக்காக மட்டுமே அந்தப்பகுதி இருக்கும். இயங்கும் தன்மையுடைய செயற்கை கைகளைப்பொருத்த வேண்டுமானால் அதன் விலை மிக அதிகம்.

வடிவேலுவின் புதிய படம் நலன் குமாரசாமி இயக்கத்தில்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு ‘தெனாலிராமன்’ என்னும் படத்தில்
கதாநாயகனாக நடித்தார். இப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அதன் பிறகு ‘எலி’ படத்தில் நடித்தார். இப்படமும் எதிர்பார்த்த படி வெற்றியடையவில்லை. இதன்பின் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த வடிவேலு, மீண்டும் நடிக்க திட்டமிட்டு இயக்குனர்களிடம் கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறாராம். இந்நிலையில், வடிவேலு அடுத்ததாக சூதுகவ்வும் படத்தை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நலன் குமாரசாமி தற்போது ‘காதலும் கடந்து போகும்’ என்னும் படத்தை இயக்கியிருக்கிறார். இதில் விஜய் சேதுபதி, மடோனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சட்டசபை தேர்தல் முடிவு கருத்துக்கணிப்புகள் சரியா? உளவுத்துறை போலீசார் சர்வே..

கம்பம்: 'அவசர அசைன்மென்ட்' என்ற பெயரில் தமிழக அரசு உளவுத்துறை போலீசிற்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக சமீபத்தில் வெளியான கருத்துக் கணிப்புக்கள் சரியா அல்லது திட்டமிட்டு தயாரிக்கப்பட்டதா என்பதை கண்டறிய மக்களிடம் 'சர்வே' செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. கூட்டணி வியூகங்கள் வகுக்கப்படுகின்றன.  மழை ஜெயலலிதாவின் ஆணவ போக்கையும் மெத்தனபோக்கையும் மக்கள் மீது அக்கறையின்மையும் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. தவிர நிர்வாகத்தின் சீர்கேடும் திறமையின்மையும் வெளிப்பட்டு விட்டது . மழை ஒரு துறை சார்ந்ததாக இருந்த போதிலும் ஜெயலலிதாவின் நிர்வாக திறமையின்மையும் சீர்கேடும் இப்படி தான் மற்ற துறைகளிலும் இருக்கிறது என்று மக்கள் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள் . கல்வி துறையின் சீர்கேடு வெளியே வர ஆரம்பித்து விட்டது .ஆக பொய் சொல்பவருக்கு ஆட்சி நிலைக்காது என்று புரியும் நாள் வந்துவிட்டது. ஜெயலலிதாவிற்கு பயம் வந்துவிட்டது.

அதிமுக அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டி? சிங்கம் சிங்கிளாகத்தான் வரும்......

அதிமுக தேர்தல் பணியாற்றும்படி, கட்சி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து,
ஆனால், அ.தி.மு.க., சார்பில், அதிகாரப்பூர்வமாக எந்த கட்சியுடனும், இன்னமும் கூட்டணி பேச்சுவார்த்தை துவக்கப்படவில்லை. முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், '234 தொகுதிகளிலும், அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டும்' எனக் கூறியிருப்பது, அ.தி.மு.க., கூட்டணி கனவில் மிதக்கும் கட்சிகளுக்கு, கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.கடந்த லோக்சபா தேர்தலின்போது, அ.தி.மு.க., தனித்து போட்டியிடும் என, முதல் ஆளாக, முதல்வர் ஜெயலலிதா, கட்சி பொதுக்குழுவில் அறிவித்தார்.ஆனால், டிச., 31ம் தேதி நடந்த பொதுக் குழுவில், வரும் சட்டசபை தேர்தலுக்கு தனித்து போட்டி என, ஜெயலலிதா அறிவிக்கவில்லை. 'தேர்தல் நெருக்கத்தில், சூழ்நிலைக்கு ஏற்ப, சரியான முடிவை எடுப்பேன்' என, அறிவித்தார். இது, சிறிய கட்சிகளிடம், உற்சாகத்தை ஏற்படுத்தியது. 'அ.தி.மு.க., கூட்டணி அமைக்கும்; அதில் இணையலாம்' என, சிறிய கட்சிகளின் தலைவர்கள் மனக்கோட்டை கட்டினர். சிங்கம் சிங்கம்னு அசிங்கம் ஆகாம இருந்தா சரி  

Chennai பெயர் மாற்றம்: பெருநகர சென்னை மாநகராட்சி'யாக ஜெயலலிதா அறிவிப்பு....நியுமொரோலாஜி ...

முதல்வர் அறிவிப்புக்குப் பிறகு, அதிகாரபூர்வ வலைதளத்தில் உடனடியாக திருத்தப்பட்ட சென்னை மாநாகராட்சியின் பெயர்.சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். முதல்வர் அறிவிப்புக்குப் பிறகு, அதிகாரபூர்வ வலைதளத்தில் உடனடியாக திருத்தப்பட்ட சென்னை மாநாகராட்சியின் பெயர். சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும் 31 அம்மா உணவகங்கள் திறப்பு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 42 உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சியினை 'பெருநகர சென்னை மாநகராட்சி' என அறிவித்து முதல்வர் துவக்கி வைத்தார்.இருந்து பாருங்க தமிழ்நாடு பெயரும்  பெருந்தமிழ்நாடு அல்லது   தமிழம்மா நாடு ன்னு மாத்துங்கன்னு கூவபோராய்ங்க

தேமுதிக- 113; பாமக- 70; பாஜக- 51.... சு.சாமி விஜயகாந்த் கூட்டணி?

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கு ஓரிரு மாதங்கள் உள்ள நிலையில் திரைமறைவு கூட்டணி பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. திமுகவுடன் கூட்டணி சேருமா என்று எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக, தனித்தே நின்றுவிடுமா என கேள்வியை எழுப்பிய பாமக ஆகிய கட்சிகளை தம்முடைய தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே மீண்டும் கொண்டு வருவதற்கான அத்தனை முயற்சிகளிலும் பாஜக முழு வீச்சுடன் இறங்கியுள்ளது. தேமுதிகவுக்கு 113, பாமகவுக்கு 70, பாஜகவுக்கு 51 என்கிற பார்முலா அடிப்படையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை தக்க வைத்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை பாஜக நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக, திமுக தலைமையிலான கூட்டணிகளில் பெரிய கட்சிகள் எதுவும் இதுவரை இணையவில்லை.

பழ. கருப்பையாவின் வீடு மீது நள்ளிரவில் தாக்குதல்

தாக்குதல் நடத்தப்படலாம் என்று பழ. கருப்பையா பேட்டி அளித்தும் முன்னெச்சரிக்கை எடுக்காதது ஏன்?: ஸ்டாலின் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முகனூல் பதிவு: ’
’ பழ. கருப்பையா அவர்களின் வீடு மீது நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த செய்தி அறிந்து அவரை இன்று காலை தொலை பேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தேன்.கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான இந்த காட்டுமிராண்டித் தனமான தாக்குதலுக்கு என் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கொலை வெறித் தாக்குதல் அதிமுக அரசின் சகிப்புத்தன்மையன்ற போக்கையும், மாற்றுக் கருத்துக்களை நசுக்கும் எதேச்சாதிகார மனப்போக்கையும் காட்டுகிறது.

சகாயம்:தேர்தல் அரசியலை தாண்டி சமுகத்தை நோக்கி செல்லவேண்டும்

முற்றுப்புள்ளி வைத்த சகாயம்!சகாயத்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து சமூக வலைதளத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் ஒரு தரப்பினர் சில மாதங்களாகவே பிரசாரம் செய்து வருகிறார்கள். ஆனால், அதற்கு சகாயம் எந்தப் பதிலும் சொல்லாமல் மெளனமாக இருந்து வந்தார். கடந்த 26-ம் தேதி திருச்சியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் வயல் கூட்டம் நடந்தது. அதற்கு சகாயம் வந்திருந்தார். முன்னதாக பேசிய கவிஞர் நந்தலாலா, “இந்த கூட்டத்துக்கு வருகை தந்துள்ள சகாயம் ஐ.பி.எஸ் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். சிறிது இடைவெளிவிட்டு, ‘‘இந்தியன் பப்ளிக் சர்வீஸ் என்று வைத்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லி கைதட்டல் வாங்கினார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய சகாயம், இதுவரை தன்னைப் பற்றி வந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோலப் பேசினார்.

Vikatan:மிஸ்டர் கழுகு: நடுக்கத்தில் மாஜி மந்திரிகள்!>கருணாநிதி வாங்கிய சீக்ரெட் கையெழுத்து

ழுகார் உள்ளே நுழைந்ததும், 2014-ம் ஆண்டு டிசம்பர் ஜூ.வி. இதழ் ஃபைலைக் கேட்டு வாங்கிப் புரட்ட ஆரம்பித்தார். ‘கருணாநிதி வீழ்த்திய ஸ்டாலின் தளபதிகள்’ என்ற அட்டைப் படத்தைப் பார்த்ததும் சிரித்தபடியே உள்ளே புகுந்தார்! ‘‘அப்போது நான் கொடுத்த செய்திகளுக்கு இப்போது வேலை வந்துள்ளது. தி.மு.க-வின் இப்போதைய மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் பேயறைந்ததுபோல ஆகிவருகிறார்கள். அவர்களுக்கு இந்தத் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்குமா என்பதுதான் இப்போதைய திகிலுக்குக் காரணம்!”

வெள்ளி, 29 ஜனவரி, 2016

சவுதி அரேபியா மசூதியில் குண்டு வெடிப்பு

சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மஹசென் நகரில் இருக்கும் இமாம் ரிடா ஷியா பிரிவு மசூதிக்கு இன்று மதியம் ஜும்மா தொழுகையில் பங்கேற்க பலர் வந்துள்ளனர். அப்போது மசூதியில் மனிதகுண்டு வெடித்துச் சிதறியது. இந்த சம்பவத்தில் 3 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. 10 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். மசூதியில் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. மசூதியில் குண்டு வெடித்தது, துப்பாக்கிச்சூடு நடந்தது தொடர்பான வீடியோக்கள் டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளன.dailythanthi.com

எல்லாம் தெரிந்தே அதிமுகவில் சேர்ந்த பழ கருப்பையாவுக்கு இப்போ என்னதான் பிரச்சனை? பாண்டே கேள்வி?

rangaraj pandey அம்மாவும், அ.தி.மு.கவும் ஊழல் திலகங்கள் என்று தெரிந்தே அதில் சேர்ந்து பின்னர் ஆதாயம் கிடைக்கவில்லை என்று விலகிய பழ.கருப்பையா தற்போது அ.தி.மு.க எதிர்ப்பு போராளியாக சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறார். தந்தி டி.வி பாண்டே இந்த பழ கருப்பையாவிடம் நடத்திய நேர்காணல் குறித்து தோழர் வில்லவன் அவரது ஃபேஸ்புக்கில் தொடர்ச்சியாக சில நிலைத்தகவல்களை வெளியிட்டிருந்தார். அதில் அவரது தவறான கருத்து குறித்து வினவு சார்பில் தெரிவித்த கருத்துக்கள் இங்கே தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன.
விவாதிப்பவர்கள் ஏன் பாண்டேயிடம் சமநிலை இழக்கிறார்கள்? – வில்லவன் பாண்டே எழுப்புவதைவிட சிக்கலான கேள்விகளை மற்ற தொலைக்காட்சி நெறியாளர்கள் எழுப்புகிறார்கள். பாண்டே மிகவும் பழைய மற்றும் ஒரே பொருள் கொண்ட கேள்விகளைத்தான் திரும்பத்திரும்ப எழுப்புகிறார். ஆனாலும் மற்ற நெறியாளர்களிடம் உண்டாகாத பதட்டம் மற்றும் தடுமாற்றம் பாண்டேயிடம் பேசுவோரிடம் தென்படுகிறது.

பழ.கருப்பையா ஏன் இப்படி காய்ச்சி எடுக்கிறார்? நக்கீரன் விடியோ தொகுப்பு


ஹேமமாலினி மும்பையில் சதுர மீட்டர் நிலம் வெறும் 35 ரூபாய்க்கு வாங்கிய கெட்டிக்காரி...அடுத்த டான்சி ராணி


For Hema Malini, land in Mumbai costs Rs 35 per square ... மும்பை : பாஜ எம்பி
ஹேமமாலினி மீது நில முறைகேடு குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. பாஜ எம்பியும் பிரபல நடிகையுமான ஹேமமாலினி தான் தொடங்க இருக்கும் நடன பள்ளிக்காக விதிமுறைகளை மீறி நிலத்தை பெற்றுள்ளதாக தகவல் அறியும் உரிமை மனு மூலம் பெறப்பட்ட தகவலையடுத்து சமூக ஆர்வலர் குற்றம் சாட்டியுள்ளார். மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அனில் கல்காலி தகவல் அறியும் உரிமை மூலம் பெறப்பட்ட தகவலில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மும்பையி–்ன் மைய பகுதியான அந்தேரியில் நடன பள்ளி ஒன்றை தொடங்குவதற்காக நடிகை ஹேமமாலினிக்கு 2000 சதுர மீட்டர் நிலத்தை மகாராஷ்டிரா அரசு ஒதுக்கியுள்ளது. பல கோடி மதிப்புள்ள நிலத்தை வெறும் ரூ.70 ஆயிரத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என அதில் தெரியவந்துள்ளது.

ஜப்பானில் வங்கிகள் கையிருப்பில் உள்ள பணத்துக்கு வட்டியை மத்தியவங்கி வசூலிக்கும்....அப்படி போடு....

Japan's Central Bank Votes for Negative Interest Rates ... receiving money for their deposits, must pay to keep their money at the central bank. ஜப்பானில் முதல் முறையாக எதிர் வட்டிவிகிதம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், வர்த்தக வங்கிகள் தங்கள் இருப்பில் பணம் வைத்திருந்தால் அதற்கு -0.1 சதவீதம் என்ற அளவில் ஜப்பானின் மத்திய வங்கி கட்டணம் வசூலிக்கும்.
இதனால், வங்கிகள் பணம் சேமிப்பதைக் கைவிட்டுவிட்டு, கடன் கொடுக்க ஆரம்பிக்கும் என மத்திய வங்கி கருதுகிறது.
இதனால், வளர்ச்சியின்றி இருக்கும் பொருளாதாரத்திற்கு உத்வேகம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 மாணவிகள் மரணம் திட்டமிட்டு நடந்த கொலை: எஸ்.வி.எஸ்.கல்லூரி தாளாளர் வாசுகி வாக்குமூலம்!

கள்ளக்குறிச்சி: எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவிகள் 3 பேர் மரணம் திட்டமிட்ட கொலை என்று அக்கல்லூரியின் தாளாளர் வாசுகி திடுக்கிடும்  வாக்குமூலம் அளித்துள்ளார் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி- சேலம் சாலையில் உள்ள பங்காரம் கிராமத்தில் எஸ்.வி.எஸ். இயற்கை மற்றும் யோகா சித்த மருத்துவக் கல்லூரி உள்ளது. இக்கல்லுரியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும்,கல்வி பயில எதுவாக  அடிப்படை வசதிகள் அமைத்துத் தரப்படவில்லை என்றும் கூறி கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தார்கள்.அதில் எந்தப் பயனும் இல்லை.

பழ.கருப்பையா: ஆடு மாடுகளை போல கட்சியில் இருப்பவர்களை மேய்த்துக்கொண்டு....அம்மா அம்மா அம்மா...வேறென்ன..

vikatan.com : மேசையைத் தட்டலாம்...கமிஷன் வாங்கலாம்... ஊரை அடித்து உலையில் போடலாம்!”அ.தி.மு.க எம்.எல்.ஏ-வின் ஒப்புதல் வாக்குமூலம்நா.சிபிச்சக்கரவர்த்தி, படம்: கே.ராஜசேகரன் ‘துக்ளக்' பத்திரிகையின் ஆண்டு விழா மேடையில், சோ முன்னிலையில் பல கட்சிப் பிரமுகர்கள் அமர்ந்திருக்க, ‘தமிழகத்தில் இன்று மந்திரியும் தலைமைச் செயலாளரும் கூட்டுச்சேர்ந்து கொள்ளை அடிக்கும் நிலை வந்துவிட்டது. அமைச்சர்கள் என்றால், அடாவடித்தனம் வந்துவிடுகிறது; ஐந்தாறு பி.ஏ-க்கள் வைத்துக்கொள்கிறார்கள். சால்வை எடுக்கக்கூட ஒரு பி.ஏ தேவைப்படுகிறது’ எனப் பேசி அதிரவைத்தார் துறைமுகம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ பழ.கருப்பையா.ஓர் ஆளும் கட்சி எம்.எல்.ஏ., இவ்வளவு வெளிப்படையாகப் பேசுவது ஆச்சர்யம்.  பழ.கருப்பையாவைச் சந்திக்கப்போனால், அதைவிடப் பல மடங்கு ஆச்சர்யங்களையும் அதிர்ச்சிகளையும் தருகிறார்...

எல்லைகாந்தியின் 125-வது ஆண்டு மறந்துவிட்டதா ? Khan Abdul Ghaffar Khan 1890 – 1988


கான் அப்துல் கஃபார் கானின் 125-வது ஆண்டு இது. தன்னுடைய வாழ்நாளில் 27 ஆண்டுகளைச் சிறையில் கழித்தவர். அதில் 14 ஆண்டுகள், இந்தியச் சுதந்திரப் போராட்டப் பின்னணியில் அவர் அனுபவித்தவை. ஒரு லட்சம் பஷ்தூனியர்கள் அணிவகுத்த அஹிம்சைப் படையை உருவாக்கியவர். இந்தியப் பிரிவினையின்போது, “எங்களை ஓநாய்களிடம்  வீசியெறிந்துவிட்டீர்கள்” என்று காந்தியிடம் கூறிவிட்டு, கலங்கிய கண்களுடன் விடைபெற்றவர். இந்தியாவில் ஒரு இடத்திலேனும் இந்த ஆண்டு கான் நினைவுகூரப்பட்டதாகத் தெரியவில்லை. அரசியல் அடையாள நிமித்தமாகவேனும் நேருவின் 125-வது ஆண்டைக் கொண்டாடிய காங்கிரஸ் கட்சி, கானை முற்றிலுமாகவே கைகழுவிவிட்டது. சரி, இந்திய முஸ்லிம்களே மறந்துவிட்ட ஒரு மாமனிதரை காங்கிரஸ் மறந்ததில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? ஆனால், இன்றைக்கு இந்திய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வளிப்பவராக கான் இருக்க முடியும். writersamas.blogspot.in/ சமஸ்

Amnesty விருதைப் பெறும் முதல் இந்தியர்/ தமிழர் ஹென்றி டிபேன் Henri Tiphagne for Amnesty human rights award

Indian activist Henri Tiphagne selected for Amnesty human rights award
ஹென்றி திபேன் | கோப்புப் படம் இந்தியாவில் மனித உரிமைக்காக போராடி வரும் வழக்கறிஞரும் தமிழருமான ஹென்றி திபேன், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (ஜெர்மனி) அமைப்பின் 8-வது மனித உரிமை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரூ.7.3 லட்சம் ரொக்க பரிசுத் தொகை அடங்கிய இந்த விருது, ஜெர்மனியின் பெர்லின் நகரில் உள்ள மேக்சிம் கோர்கி திரையரங்கில் வரும் ஏப்ரல் 25-ம் தேதி நடைபெறும் விழாவில் வழங்கப்படும். இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் இவர்தான்.
இதுகுறித்து அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (ஜெர்மனி) அமைப்பின் இயக்குநர் செல்மின் லிஸ்கான் கூறும்போது, “ஹென்றி திபேனும் அவரது நிறுவனமான மக்கள் கண்காணிப்பகமும் (பீப்புள்’ஸ் வாட்ச்) பல்வேறு தடைகள், அடக்குமுறைகளைக் கடந்து இந்தியாவில் மனித உரிமையை நிலைநாட்டுவதற்காக போராடி வருகின்றன.

நேருவைப்-பற்றிய-5-கட்டுக்கதைகள் தமிழ்.ஹிந்து.com

நேரு பற்றி நம்மிடையே உலவும் நம்பிக்கைகள் எந்தளவுக்கு உண்மையானவை ஜவாஹர்லால் நேருவின் நினைவு வாரத்தை முன்னிட்டு, அவரைப் பற்றி இதுவரை உருவாகியிருக்கும் கட்டுக் கதைகள் சிலவற்றைப் பற்றிப் பார்க்கலாம்:
கட்டுக்கதை 1: வாரிசு அரசியலை நேரு ஊக்குவித்தார்
நேருவின் மகள், பேரன் ஆகியோர் இந்தியாவின் பிரதமர்களாக இருந்த காரணத்தாலும் அவருடைய பேரனின் மனைவி அந்தப் பதவியை அடைவார் என்ற நிலை இருந்த காரணத்தாலும் நேருவின் கொள்ளுப்பேரன் வாரிசுரிமை அடிப்படையில் காங்கிரஸில் முன்னிறுத்தப்படும் காரணத்தாலும்தான் இப்படியொரு கட்டுக்கதை உருவாகியிருக்கிறது.

Air India 329 பேர் உயிரிழக்க காரணமான சீக்கிய பயங்கரவாதி விடுதலை: கனடா அரசு நடவடிக்கை


- Inderjit Singh Reyat, the lone person convicted for the 1985 Air India Kanishka bombing that killed all 329 people on board, was today released ஏர் இந்தியா விமானத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்து 329 பேரை கொன்ற வழக்கில், குற்றவாளி இந்தர்ஜித் சிங் ரேயாத் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். சீக்கியர் படுகொலையைக் கண்டித்து, 1985 ஆம் ஆண்டு கனடாவிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நடுவானில் பறந்தபோது, குண்டு வெடித்து அதில் பயணம் செய்த 329 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கவர்ச்சி நடனம்..கர்நாடக ஜெயிலில் குடியரசு தினம் படு ஜோர்


கர்நாடக மாநிலம் பிஜபூர் சிறைச்சாலையில், குடியரசு தினத்தையொட்டி கைதிகளின் முன்னிலையில் நடத்தப்பட்ட இளம்பெண்களின் ஆபாச நடன நிகழ்ச்சி அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த கலை நிகழ்ச்சிகளில் கவர்ச்சி நடன நிகழ்சியும் இடம் பெற்றிருந்தது. சிறைச் சாலை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில்,  கைதிகள்  யாரும் எதிர்பாராத வண்ணம், கவர்ச்சி ஆடையில் இளம்பெண் தோன்றி குத்தாட்டம் போட்டார். அப்போது கைதிகள் அனைவரும் அரவாரம் செய்தனர்.;இந்த நடனத்தை பார்த்த போலீஸ் அதிகாரிகள் சிலர்,  ரூபாய் தாள்களை அந்த கவர்ச்சி நடனப் பெண்மணி மீது வீசி ஆரவாரம் செய்தனர். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.>இந்த ஆபாச நடன நிகழ்ச்சி,  மாநில அமைச்சர் மற்றும் காவல்துறை இயக்குனர் உள்ளிட்ட சிறைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 28 ஜனவரி, 2016

நடிகை கல்பனாவின் இறுதி யாத்திரையில் திரை உலகம்

சரிதா நாயர் கேரளா முதலமைச்சர் மீது சரமாரி ஊழல் குற்றச்சாட்டு.....உம்மன் சாண்டி திணறல்...


சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி கேரள பெண் தொழில் அதிபர் சரிதாநாயர், அவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோடிக்கணக்கில் பண மோசடி செய்ததாக பரபரப்பு புகார் கூறப்பட்டது. இதை தொடர்ந்து நடந்த விசாரணையில் சரிதாநாயர், பிஜு ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்துள்ளனர். உம்மன்சாண்டி மந்திரி சபையில் உள்ள சில மந்திரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் சரிதாநாயருக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதை தொடர்ந்து இந்த மோசடி புகார் பற்றி நீதிபதி சிவராஜன் தலைமையிலான கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை கமிஷன் முன்பு முதல்–மந்திரி உம்மன்சாண்டி ஆஜராகி 14 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார்.

உலகின் மிக நீண்ட விமான பயணம்.....18 மணி நேர விமானபயணம்? Qatar Airways

சில மணி நேரத்திற்குள் நாடு விட்டு நாடு செல்வதற்குத்தான் விமானப் தோஹா- ஆக்லாந்து இடையே விமான சேவை துவக்கப்பட்டால் அந்த விமானம் 9,034 மைல் தூரத்தை 18 மணி நேரம் 34 நிமிடங்களில் கடக்கும். மேலும், வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் இது ஒரு சாதனை பயணமாக இருக்கும் என கத்தார் ஏர்வேஸ் தலைமை நிர்வாக அதிகாரி அக்பர் அல் பேக்கர் தெரிவித்துள்ளார்.

ஜாதி சங்கங்கள் தேர்தல் வசூலுக்கு தயாராகின்றன....

தேர்தலில் மல்லுக்கட்ட தயாராகி வரும் பிரதான கட்சிகள் மத்தியில், 'கல்லா  
கட்டும்' திட்டத்துடன், தமிழக ஜாதி அமைப்புகள் ஜோராக களம் இறங்கி உள்ளன. மாநாடுகள் நடத்தி, தீவிர வசூல் வேட்டை நடத்தவும், ஓட்டுக்காக வளைக்க விரும்பும் கட்சிகளுடன் பேரம் பேசவும் காத்திருக்கின்றன. தேர்தல் களம் காணும் முன், தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், கட்சியின் பலத்தை வெளிப்படுத்தவும், பிரதான கட்சிகள், மாநாடு நடத்துவது வழக்கம். சிறிய கட்சிகள், 'சீட்' பேரத்துக்காக, மாநாடுகளை நடத்தி, கூட்டத்தைக் கூட்டுவது உண்டு.இப்போது, ஜாதி கட்சிகளும் அதை பின்பற்றத் துவங்கி விட்டன. ஒவ்வொரு பகுதியிலும், சில ஜாதிகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். அப்பகுதிகளில், தங்கள் ஜாதிக்கு பிரதிநிதித்துவம் பெறவும், யாருக்கு ஆதரவு என்பதை வெளிப்படுத்தவும், மாநாடுகளை நடத்துகின்றன.சாதி அமைப்புக்கள் நடத்த பணம் வேண்டும் 'அதை இந்த தேர்தல் நேரத்தில் தான்  கட்சிகளை மிரட்டி சம்பாதிக்கலாம்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சென்னை, கோவை உட்பட 20 நகரங்கள்.. இது முதல் பட்டியலே

ஸ்மார்ட் நகரங்களின் முக்கிய அம்சங்கள் திட்டமிடப்படாத பகுதிகளில் திட்டமிட்ட கட்டிடங்கள் அமைத்தல். அனைவருக்கு வீடு கிடைப்பதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவது பல்வேறு வகையான போக்குவரத்து வாய்ப்புக்களை உருவாக்கித் தருதல் நகரத்தில் நெருக்கடியை குறைப்பது, காற்று மாசைத் தடுப்பது, வாகனம் செல்லும் சாலைகளை உருவாக்குவது அல்லது புதுப்பிப்பது மட்டுமின்றி நடந்து செல்வோருக்கான பாதைகள் அமைக்கப்பட்ட நிர்வாகம் தொடர்புடைய பணிகள் நடைதூரத்தில் கிடைக்கச் செய்தல். திறந்தவெளிகளை பாதுகாத்தல் மற்றும் உருவாக்குதல் - பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் உருவாக்கப்பட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்படும். குறைந்த செலவிலும் மக்களுடன் நட்பாக இருக்கும் வகையில் நிர்வாகத்தை அளித்தல் - ஆன்லைன் சேவைகளை அதிகரித்தல் உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளில் துடிப்பான தீர்வுகளை அளித்தல். நகரத்திற்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தல்

திருமாவளவன் பாம்பு பேச்சு : கலைஞர் - ஜெயலலிதாவை மனதில் வைத்து பேசவில்லை!

26-01-2016 அன்று மதுரையில் நடந்த மக்கள் நலக்
கூட்டணியின் 'மாற்றுஅரசியல் எழுச்சி மாநாட்டில்' நான் உரையாற்றும் போது, "மாற்று அரசியல்" என்றால் என்ன என்பதை எளிதில் உணர்த்தும் வகையில் சில உவமைகளைக் கூறினேன். அதாவது,ஆள்மாற்றம், கட்சிமாற்றம் போன்ற மாற்றங்கள் மட்டுமே மாற்று அரசியல் ஆகாது; மாறாக, அடிப்படையில், கையாளும் கொள்கை- கோட்பாடு மற்றும் செயல்திட்டங்களில் நிகழும் மாற்றமே உண்மையான மாற்று அரசியல் என்பதை விளக்கினேன் .
;ஊழலுக்கு மாற்று இன்னொரு ஊழலாக இருக்க முடியாது! கள்ளச் சாராயத்துக்கு மாற்று நல்ல சாராயம் என்னும் பெயரிலான அரசு சாராயமாக இருக்க முடியாது! அதேபோல ஊழல், மது போன்றவற்றுக்கு மாற்று சாதிவெறியாகவோ மதவெறியாகவோ இருக்க முடியாது.

யார் இந்த பெரு.வெங்கடேசன்?- எஸ்விஎஸ் கல்லூரியில் நுழைந்தது எப்படி?

எஸ்விஎஸ் சித்தா மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேர் தற்கொலை வழக்கு தொடர்பாக,  நீதிமன்றத்தில் சரணடைந்த பெரு.வெங்கடேசன், கல்லூரியில் ‘தாதா’ போல் செயல்பட்டு வந்ததாக காவல்துறையினர் விசாரணையில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே பங்காரம் கிராமத்தில் உள்ள எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து,  கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வந்த மாணவிகள் மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகியோர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

புதன், 27 ஜனவரி, 2016

பழ .கருப்பையா அதிமுகவில் இருந்து நீக்கம்...மந்திரிங்க கொள்ளை அடிக்கிறாய்ங்க...

இவர் துக்ளக் ஆண்டுவிழாவில் பேசும் பொழுது:   மந்திரிங்க அதிகாரிங்களோட சேர்ந்து கொள்ளை அடிக்கிறாங்க .  யாராவது நல்லவனை கண்டா நாடாள வா நாடாளா
 வா என்று கூப்பிடுறாய்ங்க ...அவ்வளவு நொந்து போயி இருக்காங்க என்று பலவாறு அதிமுக ஆட்சிக்கு அர்ச்சனை செய்தார் .ஏற்கனவே இவர் கட்சி மாற முடிவெடுத்துதான் இப்படி பேசினார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ. பழ.கருப்பையா கட்சியில் இருந்து
நீக்கப்பட்டுள்ளார்.  கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து  பதவியில் இருந்தும் பழ.கருப்பையாவை நீக்கி உத்தரவிட்டுள்ளார் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா. இவரோடு  இனி எந்த அதிமுககாரனும் பேசகூடாதுன்னு இதய தெய்வம் புருடா தலைவி அறிவிச்சிருக்காங்க. இது ஒரு  கட்சியா ? மாபியா இயக்கங்கள் அல்லது  ஒரு நக்சல்பாரி மற்றும் தீவிரவாத  இயக்கங்களில்தான் இதுபோன்ற பரஸ்பரம் சந்தேக சாம்ராஜ்யம் நடக்கும்.... 

வாசன் திமுகவுக்கு அல்லது அதிமுக கூட்டணிக்கு செல்கிறார்......பதவி வேணுமே?

அணி சேர அழைப்பு விடுத்து, எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள் நலக் கூட்டணிக்கு, த.மா.கா., தலைவர் வாசன், 'டாட்டா' காட்டி உள்ளார். பிரதான கட்சிகளான, தி.மு.க., அல்லது அ.தி.மு.க.,வுடன் சேரப் போவதாக, சூசகமாக தெரிவித்துள்ளார்.அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு மாற்றாக, மக்கள் நலக் கூட்டணியை, ம.தி.மு.க., கம்யூனிஸ்ட்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் இணைந்து உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டணியில், தே.மு.தி.க., - த.மா.கா.,வை இடம்பெற வைக்க, மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் விரும்பினர். இதற்காக, விஜயகாந்தையும், வாசனையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.கடந்த சில நாட்களுக்கு முன், சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா., அலுவலகத்திற்கு, வைகோ உள்ளிட்ட மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் சென்று, 'அ.தி.மு.க., - தி.மு.க.,வை வீழ்த்தியாக வேண்டும்; அதற்காக, நாங்கள் ஏற்படுத்திய மக்கள் நலக் கூட்டணியில், நீங்களும் சேர வேண்டும்' என, அழைப்பு விடுத்தனர்.

சசிகலா சட்டசபை தேர்தலில் போட்டி....

சென்னை: சட்டசபை தேர்தலில் சசிகலா போட்டியிட்டு தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக போயஸ் தோட்டத்து வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜாதக கட்டங்களில் கிரகங்களின் சேர்க்கை சரியாக அமைந்து சசிக்கு சாதகமாக இருப்பதால், வரும் சட்டசபை தேர்தலில், அவர் போட்டியிட்டால், வெற்றி நிச்சயம் என, ஜோதிடர் கூறியுள்ளனராம். இதனால் குஷியான சசிகலாவின் உறவினர்கள் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் ஸ்ரீரங்கம், ஆர்.கே.நகர், திருப்போரூர் உள்ளிட்ட தொகுதிகளில் எது மிகவும் சாதகமாக இருக்கும் என கணிக்கும் பணியில், களம் இறங்கி உள்ளனராம். அதே நேரத்தில் அதிமுகவில் இருந்து ஒதுங்கியிருக்கும் டி.டி.வி.தினகரனை கட்சி பதவிக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகிறார். சசியின் இந்த முயற்சிக்கு எதிராக தினகரன் குறித்து தவறான விவரங்களை ஓ.பன்னீர் செல்வமும், வைத்திலிங்கமும், ஜெயலலிதாவிடம் போட்டு கொடுப்பதாகவும் 

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் :விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்போம்:

நெல்லை மாவட்டம் அம்பையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற
பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நெல்லை வந்தார். அவர் நெல்லையில் உள்ள ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
வருகிற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட ஓரிரு நாட்களில் விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளன. பொது தொகுதியில் போட்டியிட ரூ.5 ஆயிரமும், பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான தொகுதியில் போட்டியிட ரூ.2,500 விருப்ப மனு கட்டணமாக பெறப்படும். ஒரு வாரம் வரையிலும் விருப்ப மனுக்கள் பெறப்படும்.

சரத்குமார் கட்சியில் இருந்து எர்ணாவூர் நாராயணன் எம்.எல்.ஏ நீக்கம்

சென்னை, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உள்பட 7 முக்கிய நிர்வாகிகள் பாரதீய ஜனதாவில் இன்று இணைந்தனர்.  இந்த நிகழ்வு கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், சமத்துவ மக்கள் கட்சியில் பொதுச்செயலாளர் பொறுப்பு வகித்து வந்த கரு.நாகராஜன், தலைமை நிலையச்செயலாளர் பதவியிலிருந்த ஐஸ் அவுஸ் தியாகு, மாவட்டச்செயலாளர்கள் பொறுப்பிலிருந்த ராஜா, பிரசாத் உள்ளிட்டவர்கள் தத்தம் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்படுகிறார்கள்.

சொன்னதும் செய்ததும்...Flashback....savukkuonline.com

AIADMK leader Jayaram Jayalalitha greets the audience during her swearing-in-ceremony as the Chief Minister of Tamil Nadu state in Chennai, India, Saturday, May 23, 2015. An appeals court acquitted the powerful politician in southern India of corruption charges earlier this month, clearing the way for her to return to public office. She was forced last year to step down as the highest elected official in Tamil Nadu after a Bangalore court in September convicted her of possessing wealth disproportionate to her income and sentenced her to four years in prison. (R. Senthil Kumar/ Press Trust of India via AP)தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் அதிமுக அரசுக்கு எதிராக எதிர்ப்பு அலை வீசிக் கொண்டு வருகிறது.  முடங்கிப் போன நிர்வாகம், பெருகிய ஊழல், செயல்படாத அரசு, தலைகாட்டாத முதல்வர் என்று அனைத்துத் துறைகளிலும் அதிமுக அரசு பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு தேர்தலை சந்தித்தபோது, மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி வழங்கினார் ஜெயலலிதா.    கடந்த வாரம் சட்டப்பேரவையில் பேசுகையில், “அரசில் 36 துறைகள் உள்ளன. 5 ஆண்டுகளில் ஒவ்வொரு துறையிலும் செய்யப்பட்டுள்ள சாதனைகளையும் சொல்ல வேண்டுமானால் 36 நாட்கள் பதில் வழங்க வேண்டும். அவற்றை ஒன்றரை மணி நேரத்தில் சொல்லும் அளவுக்கு சுருக்கி, பார்த்து பார்த்து இந்த பதிலுரை தயாரிக்கப்பட்டுள்ளது. எங்கள் செயல்பாடுகள், திட்டங்கள் எல்லாம் மக்களுக்காகத்தான்.

திருபாய் அம்பானிக்கு பத்மவிபூஷன்....இந்திய தொழிலதிபர்களின் ஆன்மாவுக்கு செலுத்தும் மரியாதை: முகேஷ் அம்பானி


நாட்டின் மிக உயரிய விருதாக கருதப்படும் பத்ம விருதுகள், ஒவ்வொரு  துறையிலும், சிறப்பான பங்களிப்பை அளிக்கும் பிரபலங்களுக்கு, வழங்கி மத்திய அரசு கவுரவிக்கிறது. மறைந்த தொழிலதிபர் திருபாய் அம்பானி, நடிகர் ரஜினிகாந்த் உட்பட 10 பேருக்கு பத்ம விபூஷண் விருது நேற்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தனது தந்தையும் ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனருமான மறைந்த திருபாய் அம்பானிக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டதற்கு அவரது மகனும்; தொழிலதிபருமான முகேஷ் அம்பானி நன்றி தெரிவித்தார். எப்படியாவது நாட்டின் சட்டத்தையும் அதிகார வர்கத்தையும் லஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கி  ஊரை அடித்து உலையில் போட்டு நாட்டிலேயே மிகப்பெரிய பணக்காரனாக வந்தால் நாட்டின்  மிக பெரிய விருது கிடைக்கும்  .....விபரமாக அறிவதற்கு reliancestarts.blogspot.com

கடத்தப்பட்ட 359 யானைத் தந்தங்கள் இலங்கையில் அழிப்பு


இலங்கை வழியாக துபாய்க்குக் கடத்திச் செல்லப்படவிருந்த நிலையில்
கைப்பற்றப்பட்ட 359 யானைத் தந்தங்களை இலங்கை சுங்க அதிகாரிகள் இன்று அழிக்கத் தொடங்கினர்.காலி முகத் திடலில் இந்தத் தந்த அழிப்பு நடவடிக்கைகள் தொடங்கின.
தந்தங்களை அழிக்க ஒரு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. அழிக்கப்பட்ட தந்தங்கள் பின்னர் எரிக்கப்படுவதற்காக, ஒரு சிமெண்ட் தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லப்படவிருக்கின்றன.

சனி கோயிலுக்குள் நுழைய முயன்ற பெண்கள் கைது


தடையை மீறி சனி பகவான் கோயிலுக்குள் நுழைய முயன்ற பெண்கள் கைது மகராஷ்டிரம் மாநிலம் அகமத்நகரில் அமைந்துள்ள பழமையான சனிப் பகவான் கோயிலுக்குள் நுழைய முயன்ற 350 பெண்கள் கைது செய்யப்பட்டனர். அகமதுநகர் மாவட்டம், சனி ஷிங்கனபூர் கிராமத்தில் உள்ளது சனி பகவான் கோயில். இங்கு ஐந்து அடி உயரத்தில் கருங்கல்லால் ஆன சனி பகவான் சிலை மேற்கூரையில்லாத நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலுக்குள் பெண்கள் சென்று வழிபடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 'பூமாதா படை' என்ற பெயரில் தொடங்கப்பட்ட ஒரு பெண்கள் அமைப்பு, கோயிலுக்குள் சென்று வழிபடுவது என தீர்மானித்தது.

செவ்வாய், 26 ஜனவரி, 2016

அழகிரி திமுகவில் வரும் ஜனவரி 30ம் தேதி முதல் மீண்டும்.........

http://articles.economictimes.indiatimes.com  CHENNAI: The mood is upbeat among Madurai-based supporters of ousted DMK leader and DMK Chief M Karunanidhi's elder son Azhagiri. Talks within the DMK camp about a possible Azhagiri return have given a new found hope to the supporters of the estranged son. Azhagiri supporters think they will have a greater role in the forthcoming Tamil Nadu assembly elections if the DMK family comes together.சென்னை: திமுகவில் இருந்து கடந்த 2014ம் ஆண்டு நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி வரும் ஜனவரி 30ம் தேதியன்று மீண்டும் கட்சியில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளும் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட அழகிரியை மீண்டும் கட்சிக்குள் இணைக்கும் பணியும் ஒருபுறம் சத்தமில்லாமல் நடந்து வருகிறது. முன்னாள் மத்திய அமைச்சருக்கு நெருக்கமான வட்டாரங்கள் சொல்வது என்னவென்றால், எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், ஜனவரி 30ம் தேதி அதாவது அழகிரியின் பிறந்தநாளன்று அவர் திமுகவில் மீண்டும் இணைந்து அதற்கான போஸ்டர்களும் ஒட்டப்படும் என்பதாக உள்ளது.

சனி கோவிலுக்குள் பெண்கள் அனுமதி போராட்டம் Helicopter on stand by for women who plan to enter temple tomorrowமகாராஷ்ட்டிர சனி கோயிலில் நுழைய முயன்ற பெண்கள் Women Activists Attempt to Barge into Shani Temple


நாக்பூர் : மகாராஷ்ட்டிராவில் சனி பகவான் கோயிலுக்குள் பெண்கள் அமைப்பினர் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது .மகாராஷ்ட்டிர மாநிலம் அகம்மதுநகர் மாவட்ட சிங்னாபூரில் புகழ்பெற்ற சனி பகவான்கோயில் உள்ளது. இங்கு புனித இடத்தில் வழிபாடு செய்ய பெண்கள் அமைப்பினர் உரிமை கோரி வருகின்றனர். இதனை வலியுறுத்தி இன்று ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர் . ஆனால் அகம்மதுநகர் பகுதியில் வாழும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் இதனால் கோயிலில் இருந்து 100 கிமீட்டர் தொலைவில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். கோயில் ஆதரவாளர்களான பெண்கள், ஆண்கள் இந்த அமைப்பினருக்கு எதிர்ப்பு தெரிவித்து திரண்டதால் மோதிக்கொள்ளும் நிலை உருவானது. இதனால் இங்கு பரபரப்பு நிலவுகிறது .கோயிலுக்குள் நுழையாமல் திரும்ப மாட்டோம் என அடம் பிடித்துள்ளனர் .இதனால் இப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் . தினமலர்.com

பள்ளிகள் ஹோம் ஒர்க் கோ - எஜுகேஷன் கூடாது...சமஸ்கிருதம் ..புதிய கல்வி கொள்கை.....ஆலோச்ச்சனா RSS..

பி ஜே பி யை தேர்ந்தெடுத்த கொடுமைக்கு தலையில் அடிச்சுக்கிறதை தவிர வேறு என்ன செய்வது என்று நினைக்கிறார்கள். அவர்கள் தான் பி ஜே பி யின் அனைத்து மக்கள விரோத செயல்களுக்கும் காவடி தூக்கி ஜால்ரா தட்டி வலிக்காத மாதிரியே நடிக்கிறார்கள், எவ்வளவு நாள்களுக்கு இது முடியும் தெரியவில்லை. சமச்சீர் கல்வி முறை என்றால் என்னவென்றே தெரியாமலே எதிர்த்த முட்டாள் கூட்டம் இது பற்றி என்ன சொல்லப் போகிறது? காலை ஏழரை முதல் மாலை ஏழரை வரை ஸ்கூலா? அப்போ காலை டிபன்? 6 மணிக்கேவா? வீட்டுப் பாடம் கிடையாதா? என்ன எழவுடா இது? நல்லகாலம் நம்ம பாசனக ஸ்கூல் முடிச்சாச்சு என்று தன்னலத்துடன் நினைத்துக் கொண்டு, ஊருக்கு, "ஆகா அற்ப்புதமான திட்டம், செயல்படுத்தனும், நல்லது" என்று அள்ளிவிடவேண்டியது தானே.
புதுடில்லி :புதிய கல்விக் கொள்கையை உருவாக்க, தேவையான ஆலோசனைகளை அளிக்கும்படி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு, பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தது ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கல்விப் பிரிவான வித்யா பாரதி, பல்வேறு ஆலோசனைகள் அளித்துள்ளது; அதன் முக்கிய அம்சங்கள்:* காலை, 7:30 மணி முதல், மாலை, 7:30 மணி வரை, 12 மணி நேரம் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்* வெளிநாட்டு மொழிகளுக்குபதிலாக, சமஸ்கிருதம் கற்றுத் தர வேண்டும்* சிறிய வயதில், மாணவர்கள், மிகவும் எளிதாக மொழிகளை கற்றுக் கொள்ள முடியும். அதன்படி, தாய்மொழி, சமஸ்கிருதம், ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகள் கற்றுத் தரப்பட வேண்டும்*

எஸ்.வி.எஸ். கல்லூரிக்கு சாதகமாக செயல்பட்ட அதிகாரிகள்: அதிர்ச்சி ரிப்போர்ட்

கள்ளக்குறிச்சி சித்த மருத்துவ கல்லூரியை தொடங்கிய சுப்பிரமணியன்
நெல்லை சித்த மருத்துவ கல்லூரியில் படித்தவர். அவருடைய சொந்த ஊர் சின்னசேலம் அருகே உள்ள பால்ராம்பட்டு.கள்ளக்குறிச்சி காந்தி ரோட்டில் சித்த மருத்துவ ஆஸ்பத்திரி நடத்தி வந்தார். அவரது மனைவியும், கல்லூரி தாளாளருமான வாசுகியின் சொந்த ஊர் கள்ளக்குறிச்சி அருகே உள்ள செல்லம்பட்டு. இவர் லேப் டெக்னீசியன் மருத்துவ தொழில்நுட்ப கல்வி படித்து இருந்தார். டாக்டர் சுப்பிரமணியன் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்தார். அப்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.;
1998–ம் ஆண்டு சுப்பிரமணியன் ஒரு சாதராண கூரை கட்டிடத்தில் சித்த மருத்துவ கல்லூரியை தொடங்கினார். 2006–ம் ஆண்டு தமிழக அரசிடம் அனுமதி வாங்கி இப்போதுள்ள சித்த மருத்துவ கல்லூரியை முறைப்படி நடத்தி வந்தார்

சென்னை :செல்போன் வெடித்து கணவன் மனைவி பலி; மகன் உயிர் ஊசல்சென்னையில் பரிதாபம்

செல்போன் வெடித்ததில் ஏற்பட்ட தீயில் கருகி தம்பதிகள் இருவர் உயிரிழந்தனர். மேலும் அவர்களின் மகன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். இந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.>சென்னை வியாசர்பாடி பி.வி.காலணியில் வசிப்பவர் ராஜேந்திரன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரும், அவரின் மனைவி ராணி மற்றும் மகன் தினேஷ் ஆகியோர் ஜனவரி 24ஆம் தேதி இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர்.
ராஜேந்திரன், அதிகாலை 5 மணிக்கு விழிக்க வேண்டும் என்பதற்காக, தனது மொபைலில் அலாரம் செட் செய்துள்ளார். அதன் பின் செல்போனை, தனது படுக்கையறை அருகிலேயே சார்ஜ் போட்டுவிட்டு அப்படியே தூங்கிவிட்டார்."

கேரளா : பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் 6 பேர் கைது

திருவனந்தபுரம், கொச்சி துறைமுகநகர் கோட்டை பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு தம்பதி வாடகைக்கு வீடு எடுத்து குடி வந்தனர்.இவர்களை அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலர் மிரட்டி வந்தனர். இதுபற்றி அந்த பெண்ணின் கணவர், நண்பர்களிடம் கூறி அழுதார். அவர்கள் அந்த பெண்ணின் கணவரை போலீஸ் உயர் அதிகாரிகளிடம் அழைத்துச் சென்றனர். போலீசாரிடம் அந்த பெண்ணின் கணவர் அளித்த புகாரில், வாலிபர் கள் வீடு புகுந்து தன்னை தாக்கி வெளியே அனுப்பி விட்டு மனைவியை கூட்டாக சேர்ந்து கற்பழித்து விட்டதாக கூறி இருந்தார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த புகாரை ரகசியமாக விசாரித்தனர். இதில், கொச்சி துறைமுக நகர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிபவரின் மகன் இஜாஸ் (வயது 19) தலைமையில் அவரது நண்பர்கள் அல்தாப் (20), அமல், ஜான் பிரிட்டோ (19), கிறிஸ்டி (18), கிளிப்டன் (18), சஜித் (20) ஆகிய 7 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

ஜெயமோகன் பத்மஸ்ரீ பட்டம் வாங்கல்லியாம்....இவரு ஏன் வாங்கலைன்னு யாரு அழுதா? இமேஜ் போகிடுமாம்....

பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்தது ஏன்?எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கம் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தனக்கு அளிக்கப்படவிருந்த பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது இணையதளத்தில் அவர் அளித்துள்ள விளக்கம்:இன்று ( 24.1.2016) மாலை ஆறரை மணிக்கு டெல்லியில் இருந்து கலாச்சாரத்துறை உயரதிகாரியான சௌகான் என்பவர் அழைத்தார். எனக்கு வரும் குடியரசுதினத்தில் பத்மஸ்ரீ அளிக்கப்படவிருப்பதாக அறிவித்தார்.நான் ஒருமாதம் முன்னரே அதை அறிந்திருந்தேன். சென்னையிலிருந்து என் நெடுங்கால நண்பரும் மொழிபெயர்ப்பாளருமான காவல்துறை உயரதிகாரி கூப்பிட்டு பத்ம விருதுகளுக்கான நுண்ணோக்குப் பட்டியலில் என் பெயர் இருப்பதாகச் சொன்னார். இந்த சுயமோகன் நேர்மையாக சுருக்கமாக கூறுவதற்கு பதிலாக சுத்தி  சுத்தி வேல மெனக்கெட்டு நாலு பந்திக்கு  காவடி ஆடியிருக்க தேவையில்லை...அவ்வளவு போலித்தனம்...அத்தனையும் சுத்த பொய்...  

தனுஷ் ஹாலிவூட் படத்தில் நடிக்கிறார்


மர்ஜன் சட்ரபி என்ற இரானியன்-பிரெஞ்சு The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard என்கிற நாவலை மர்ஜன் சட்ரபி படமாக இயக்குகிறார். அந்த கதையில் வரும் மந்திரவாதி கேரக்டரில் தனுஷ் நடிக்கிறார். தனுஷை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்தது குறித்து மர்ஜன் சட்ரபி “பல இந்திய படங்களைப் பார்த்தபோது தனுஷ் எனது சிறந்த தேர்வாக அமைந்தார். அவரது அறிவும், கில்லர் சிரிப்பும், ஒரு கதாபாத்திரத்தின் உள்ளே தன்னை இணைத்துகொண்டு நடிக்கும் திறமையும் அவர் தான் சிறந்த தேர்வு என்ற நம்பிக்கையை எனக்கு கொடுத்தது” என்று கூறியிருக்கிறார்

பிரகாஷ்ராஜ் :நானும் ஒரு ஜீரோ பட்ஜெட் விவசாயி’

மனம் திறக்கும் பிரகாஷ்ராஜ்! ச.சந்திரமௌலி
10-ம் ஆண்டு சிறப்பிதழ் இயற்கைக்கு முன்ன நாமெல்லாம் ரொம்பவும் சின்னவங்கதான். பூமியோட ஆயுள் ரொம்பவும் அதிகம். நமக்கு ஒரு நொடி மாதிரிதான் பூமிக்கு 100 வருஷம். டைனோஸரையே இயற்கை பாத்துடுச்சு, அதனால இயற்கையை நாம காப்பாத்துறோம்ங்கிற கர்வம் வரவே கூடாது. ஏன்னா.. அது நம்மளோட கடமை. நாம நல்லா இருக்கணும்னா இயற்கையோட ஒன்றித்தான் ஆகணும். மரங்கள் வளர்த்துதான் ஆகணும். தண்ணீர் சேமிச்சுதான் ஆகணும்.

திங்கள், 25 ஜனவரி, 2016

எங்களது சாவில் மற்ற மாணவருக்கு தீர்வு கிடைக்கட்டும்...ஏழைகளுக்கு சாவு....கொள்ளையர்களுக்கு வாழ்வு...இதுதான் நடக்கிறது

villupuram suicide 2 (1)
வினவு.com :நாட்டைப் பீடித்திருக்கும் பார்ப்பன பாசிசம் ரோகித் வெமுலாக்களை சூறையாடித் தீர்த்திருக்கும் பொழுது, தனியார்மயத்தின் நுகத்தடிக்கு விழுப்புரம் கள்ளக்குறிச்சி கல்லூரி மாணவிகள் மூன்று பேர் காவு கொடுக்கப்பட்டிருக்கின்றனர்.
கடந்து ஐந்து மாதங்களுக்கும் மேலாக எஸ்.வி.எஸ் யோகா மருத்துவக் கல்லூரியின் அநியாய கட்டணக் கொள்ளையை எதிர்த்து போராடி வந்த அக்கல்லூரியின் மானவிகளான சரண்யா (வயது 18), பிரியங்கா (வயது 18), மோனிசா (வயது 19) ஆகிய மூன்று பேர் 22-01-2016 அன்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கின்றனர்.

மூன்று மாணவிகளில் ஒருவரின் சடலத்தை பாதுகாக்கும்படி நீதிமன்றம் உத்தரவு


இறந்து காணப்பட்ட மாணவிகள் மூன்று பேர் தமிழ்நாட்டின் விழுப்புரம்
மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி அருகே உள்ள யோகா மற்றும் நேச்சுரோபதி தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரி அருகே கிணற்றில் விழுந்து இறந்து காணப்பட்ட மூன்று மாணவிகளில் ஒருவரான மோனிஷாவின் சடலத்தைப் பாதுகாக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் இன்று திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது. மாணவி மோனிஷாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறியுள்ள அவரது தந்தை, சென்னை மருத்துவக் குழுவினரைக் கொண்டு மீண்டுமொருமுறை உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

நேதாஜியை போர் குற்றவாளி என்று குறிப்பிடும் நேருவின் கடிதம்

நேதாஜியை போர் குற்றவாளி என்று குறிப்பிடும் நேருவின் கடிதம் போலியானது: ஆம் ஆத்மிநேதாஜியை போர் குற்றவாளி என்று குறிப்பிடும் நேருவின் கடிதம் போலியானது என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. சுதந்திரப் போராட்ட தலைவர் நேதாஜி தொடர்பான 100 ரகசிய ஆவணங்களை பிரதமர் மோடி சமீபத்தில் டெல்லியில் வெளியிட்டார். இந்த ஆவணம் ஒன்றில் 1945-ம் ஆண்டு இங்கிலாந்து பிரதமர் பதவி வகித்த கிளமெண்ட் அட்லிக்கு காங்கிரஸ் சார்பில் மறைந்த பிரதமர் ஜவகர்லால் நேரு எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்றும் இடம்பெற்று இருந்தது

நடிகை கல்பனா மாரடைப்பால் மரணம்....

சின்ன வீடு 'கல்பனா என்றால்தான் தமிழகத்தில் பலருக்கும் தெரியும். தனது . கடந்த சில ஆண்டுகளாக கல்பனாவுக்கு இதய வால்வு பிரச்னை இருந்து வந்துள்ளது. கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனையில், அதற்கு தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்துள்ளார். மருந்து மாத்திரைகளும் சாப்பிட்டு வந்துள்ளார். அத்துடன் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும் அவருக்கு செய்யப்பட்டுள்ளது. தனக்கு உடலில் இவ்வளவு வியாதிகள், வலிகள் இருந்தாலும் அதனை சூட்டிங் ஸ்பாட்களில் கல்பனா காட்டிக் கொண்டதே இல்லையாம். படத்தில் எப்படி கலகலப்பாக வருவாரோ... அது போலவே நிஜத்திலும் பழகி வந்துள்ளார். ஒரு போதும் தனக்குள்ள பிரச்னையை அடுத்தவர்களிடம் சொன்னது கிடையாதாம். தனக்கிருந்த நோய்களை சீரியசாகவும் எடுத்துக் கொண்டது கிடையாம்.ஒரு வேளை ஹோட்டல் அறையில் துணைக்கு யாராவது இருந்திருந்தால் கூட மாரடைப்பு ஏற்பட்டவுடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்க முடியும்.

கல்லூரி மாணவியை அடித்து கொன்ற பள்ளி மாணவர்கள்...திருட்டை காட்டி கொடுத்ததால்....

புதுக்கோட்டை; அருகே உள்ள  உய்யகுடிபட்டி  கிரா மத்தை சேர்ந்தவர்  முருகேசன். இவரது  மனைவி  மல்லிகா.இவர்களது மகள் கோகிலா (வயது 20). அங்குள்ள தனி யார்  கல்லூரியில்  பி.எஸ்சி. இரண்டாம்  ஆண்டு படித்து வந்தார். > நேற்று மதியம் கோகிலா  அவரது  வீட்டின்  பின்புறம் உள்ள வயல் பகுதிக்கு சென்றார்.   அதன்பிறகு   அவர் வீடு திரும்பவில்லை. நீண்ட நேரமாகியும் வராததால் அவரது பெற்றோர் வயலுக்கு சென்று   பார்த்தனர்.  அப்போது அங்கு கோகிலா தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்த தகவல் அறிந்ததும்    திருக்கோகர்ணம் போலீசார்  சம்பவ  இடத்திற்கு சென்று   பார்வையிட்டனர்.  அப்போது கோகிலா இறந்து கிடந்த இடம் அருகே பெரிய கல் ஒன்று கிடந்தது. இதனால் மர்ம  நபர்கள்  கோகிலாவை கல்லால் தாக்கி கொலை செய் தது  தெரியவந்தது.  இதை யடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  புதுக் கோட்டை   அரசு  ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

அண்ணா பல்கலை என்ஜினீயரிங் மாணவி உயிரிழப்பில் சந்தேகம் என புகார்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் ஏராளமான மாணவ–மாணவிகள் தங்கி இருந்து படித்து வருகிறார்கள். இங்கு திருவாரூரை சேர்ந்த சண்முகப்ரிதா (19) என்ற மாணவியும் பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்தார். பி.டெக் 2–ம் ஆண்டு படித்து வந்த இவர் பல்கலைக்கழக விடுதியில் 2–வது மாடியில் அறை எண். 203–ல் தங்கி இருந்தார். இவருடன் மதுமிதா, பிருந்தா, கார்த்திகா என்ற மாணவிகளும் தங்கி உள்ளனர். நேற்று இரவு 10.40 மணி அளவில் சண்முகப்ரிதா தனது அறையை விட்டு வெளியில் வந்து வராண்டாவில் நின்றபடியே செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சண்முகப்ரிதா மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடல் சிதறி சம்பவ இடத்திலேயே சண்முகப்ரிதா பரிதாபமாக உயிரிழந்தார்.

பத்மஸ்ரீ பத்மபூஷன் பத்மவிபூஷன் பட்டியல் அறிவிப்பு..ரஜினி, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், அம்பானி.....

இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் இரண்டாவது உயரிய சிவிலியன்
விருதான பத்ம விபூஷன் விருது, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் தொடர்பான அறிவிப்பு இன்று திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. பத்ம விபூஷன் விருது பெறுவோர் பட்டியலில், நடிகர் ரஜினிகாந்த், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் ஜக்மோகன், தொழிலதிபர் மற்றும் பத்திரிகையாளர் ராமோஜி ராவ், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், முன்னாள் இந்திய கணக்கு தணிக்கையாளர் வினோத் ராய், குச்சிப்புடி நடனக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான மறைந்த திருபாய் அம்பானி, அடையார் கான்சர் இன்ஸ்டியூட்டின் தலைவர் டாக்டர் வி, சாந்தா உள்ளிட்டோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதுவுல முக்காவாசி பேர் இந்த குரங்கின் தகுதிக்கு ஈடாவார்களா?

ஞாயிறு, 24 ஜனவரி, 2016

வைகோ :மதிமுகவை அழிக்க நினைத்தால் தோல்விதான் கிடைக்கும்...

மதிமுகவை அழிக்க நினைப்பவர் களுக்கு தோல்விதான் கிடைக்கும்’’ என
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.
தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற மதிமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:
தொண்டர்களின் தியாகத்தால் 22 ஆண்டுகளாக மதிமுக வீறு நடை போட்டு வருகிறது. ஊழல்வாதிகளின் கையில் தமிழகம் சிக்கித் தவிக்கிறது. 22 ஆண்டுகளாக தங்களது சொந்த பணத்தை செலவு செய்து மதிமுகவை காவல் தெய்வங்களாக காத்து வருகிறீர்கள்.  அழிக்க விடமாட்டேன் நானே படைத்தல் காத்தல் அழிப்பேன் எல்லாம் பண்ணுவேன் என்று இந்த அழிச்சாட்டியம் பண்ணிறாரே? சீக்கிரம் பண்ணி தொலையுங்க... 

சவீதா கல்வி நிறுவனங்களில் மீண்டும் சி.பி.ஐ.ரெய்டு.. ரூ. 5 கோடி சிக்கியது l

சென்னை: வருங்கால வைப்பு நிதித் தொகையில் முறைகேடு செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக சவீதா கல்வி நிறுவனம், கல்லூரி தலைவர் வீடு, அலுவலகம் மற்றும் நிர்வாகிகளின் வீடு என 18 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது கல்லூரியில் உள்ள லாக்கரில் இருந்த ரூ. 5 கோடியை சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை பூந்தமல்லி அருகே தண்டலத்தில் மருத்துவக் கல்லூரி உள்பட பல கல்லூரிகளை நடத்தி வருகிறது சவீதா கல்வி குழுமம். இந்நிலையில், அந்த நிறுவனம் தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களுக்கு செலுத்த வேண்டிய வருங்கால வைப்பு நிதி தொகையை செலுத்தாமல் கோடிக் கணக்கில் முறைகேடு செய்ததாக சி.பி.ஐ.க்கு புகார்கள் வந்தது. Raid in Saveetha college இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வந்தது.

இந்தியாவும் பிரான்ஸ் இணைந்து தீவிரவாத்திற்கு எதிராக போராடும்: பிரதமர் மோடி

இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க மூன்று நாள் பயணமாக வந்துள்ள
பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே இன்று பிற்பகல் அரியானா மாநில தலைநகரான சண்டிகரை வந்தடைந்தார்.
அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு நடந்த  இந்தியா- பிரான்ஸ் தொழில் அதிபர்கள் மாநாட்டில் ஹாலண்டேயும், மோடியும் கலந்து கொண்டார்கள்.
இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி தொழில் செய்வதற்கு ஏற்ற நாடாக இந்தியாவை உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தியாவில் முதலீடு செய்வதற்கு இதுவே சரியான நேரம். எனவே இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

அமெரிக்கா: கொலை வழக்கில் சீக்கியருக்கு 82 ஆண்டு சிறை

சான்பிரான்சிஸ்கோ, அமெரிக்காவில் சேக்ரமென்டோ நகரில் உள்ள
விளையாட்டு வளாகத்தில் 2008–ம் ஆண்டு, ஆகஸ்டு 31–ந்தேதி ஒரு திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவின்போது பரம்ஜித்சிங் (வயது 26), சாகிப்ஜித் சிங் என்னும் இரு சீக்கியர்களை அமன்தீப் சிங் தாமி, குர்பிரீத் சிங் கோசல் ஆகிய இரு சீக்கியர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் பரம்ஜித் சிங் கொல்லப்பட்டார். சாகிப்ஜித் சிங் காயங்களுடன் உயிர் தப்பினார்.  திருவிழா கூட்டத்தை பயன்படுத்தி அமன்தீப் சிங் தாமி தப்பி விட்டார். குர்பிரீத் சிங் கோசல் பொதுமக்களிடம் சிக்கி, போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.  தப்பிய அமன்தீப் சிங் தாமி, இந்தியாவுக்கு வந்து விட்டார். அவர் பஞ்சாப்பில் 2013–ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

தலித் கிட்னியா விற்கவும் முடியாத பனாரஸ்...IIT தலித் மாணவர் கிட்னியை கூட விற்று படிப்பை தொடர....

ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக ஆய்வு மாணவரான
ரோகித்தின் இதனால், மருத்துவ செலவு மற்றும் கல்விக்காக வாங்கிய பணம் என்று மொத்தம் 2.7 லட்ச ரூபாய் கடன் சேர்ந்து விட்டது. இருந்தாலும் படிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்தார் மகேஷ்.
 இந்தியாவின் பிரசித்தி பெற்ற கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் நடத்தப்படும் விதம் குறித்த விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், ரோகித்தைப் போலவே, தலித் என்கிற ஒரே காரணத்தால் பல்வேறு நெருக்கடிகளால் துரத்தப்பட்டு, தனது கிட்னியைக் கூட விற்க முடியாமல் அவதிப்பட்ட ஒரு ஐ.ஐ.டி மாணவரின் வாழ்க்கை இது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் (IIT-BHU) ஐ.ஐ.டி கல்வி நிறுவனத்தில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவர்தான் மகேஷ் பால்மீகி(19),

விழுப்புரம் S.V.S கல்லூரி 3 மாணவிகள் கொலை? எஸ்.வி.எஸ் சித்த மருத்துவ கல்லூரி மாணவிகள் தற்கொலை அல்ல....

மாணவி சரண்யாவின் உடல் பிரேத பரிசோதனை விழுப்புரம் மாவட்டம்
எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக்கல்லூரியின் மாணவிகள் 3 பேர் மரண மடைந்துள்ளனர். அவர்களின் உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. மூன்று பேருக்கும் ஒரே மாதிரியாக பின் மண்டையில் அடிப்பட்டு ரத்தம் வழிந்திருப்பது கொலையா என்ற சந்தேகத்தை கிளப்புகிறது என்று மாணவிகளின் உறவினர்கள் புகார் தெரிவித்திருக்கும் நிலையில், கல்லூரி முதல்வரை கைது செய்யும் வரை மாணவிகளின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப அனுமதிக்க மாட்டோம் என்று பொதுமக்கள் போராடிக்கொண்டிருந்த நிலையில், மாணவி சரண்யாவின் உடல் தற்போது பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் லட்சுமி தகவல் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.nakkheeran,in  இது கொலையாக இருக்க கூடும் என்றே கருதவேண்டி உள்ளது . இந்த கல்லூரி நிர்வாகம் எப்படிபட்டது என்பதை ஏற்கனவே வினவு இணையம் தெளிவாக பல மாதங்களுக்கு முன்பே அறியத்தந்தது .அடிப்படை வசதி கூட இல்லாத இந்த கல்லூரிக்கு அனுமதி கொடுத்த  அன்றைய மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாசை எந்த  பட்டியலில் முதல் குற்றவாளியாக சேர்க்கவேண்டும்?

கனடா பள்ளியில் துப்பாக்கிச்சூடு:5 பேர் உயிரிழப்பு, பலர் காயம்

கனடா நாட்டின் பள்ளிக்கூடம் ஒன்றுக்குள் மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கனடாவின் மேற்கு மாகாணமான சஸ்கசவன் பகுதியில் உள்ள பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தியது அங்கு பயிலும் மாணவனாக அல்லது முன்னாள் மாணவனாக இருக்கலாம் என முதல்கட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது. பள்ளிக்குள் நுழைந்த மாணவன் திடீரென கண்மூடித்தனமாக சுட்டதாகவும், உடனடியாக மாணவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதை சுவிட்சர்லாந்தில் பயணம் மேற்கொண்டுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூதேயூ உறுதிப்படுத்தினார்.puthiyathalaimurai.com

குழந்தைகள் ஐபேடை மிகவும் விரும்புகிறார்களா?..கற்பனைத்திறன், சுய சிந்தனை இல்லாத மனம் ஊனமுற்ற அரைகுறை

உலகத்தின் மாபெரும் ஸ்மார்ட் போன் நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் மறைந்த முன்னாள் அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸிடம் ஒரு பத்திரிக்கையாளர் ஒரு முறை கேட்டார், “உங்கள் குழந்தைகள் ஐபேடை மிகவும் விரும்புகிறார்களா?”
அதற்கு ஜாப்ஸ் கூறினார், “அவர்கள் இது வரை அதை உபயோகித்ததில்லை. அவர்கள் எவ்வளவு தகவல் தொழில்நுட்ப சாதனங்களை உபயோகிக்கிறார்கள் என்பதை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம்.”
அமெரிக்காவின் சிலிகான் வேலியில், பல என்ஜினீர்களும் சாஃப்ட்வெர் நிபுணர்களும், தங்கள் குழந்தைகளை ஐ பேட், ஐ போன், ஆண்ட்ராய்டு போன், டேப்லெட், லேப்டாப் போன்ற நவீன தகவல் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்த விடுவதில்லை. தங்கள் குழந்தைகளை கம்ப்யூட்டர்கள் இல்லாத பழைய கை முறைக் கல்வியை போதிக்கும் பள்ளிக்கூடங்களில் சேர்க்கிறார்கள்.

ஸ்டாலின்: கருத்துகணிப்பு விமர்சனம் செய்யமாட்டோம்...மக்கள் மாற்றத்துக்கு தயாராகி...

ஜெயலலிதா சொல்லியிருப்பது சிறந்த நகைச்சுவையான செய்தி: ஸ்டாலின் பேட்டி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினோம் என்று ஜெயலலிதா சொல்லியிருப்பது சிறந்த நகைச்சுவையான செய்தி' என்று நாகர்கோவிலில் தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் கூறினார். நாகர்கோவில் அருகே முன்னாள் எம்.பி., சங்கரலிங்கம் மறைந்ததை தொடர்ந்து அவரது வீட்டுக்கு சென்ற திமுக பொருளாளர் அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்தாரிடம் ஆறுதல் கூறினார. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், கலைஞர் கொடுத்த உறுதிமொழியை தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் நிறைவேற்றுவோம்.
 தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னேறியுள்ளது என்று ஜெயலலிதா சொல்லியுள்ளார். ஆனால் மக்கள் சொல்லவில்லை. கருத்துக்கணிப்பில் தி.மு.க., வை பொறுத்த வரை சாதகமாக இருந்தாலும், பாதகமாக இருந்தாலும் வரவேற்க மாட்டோம். விமர்சனமும் செய்ய மாட்டோம்.

ரஜினியின் சுப்பர் ஸ்டார் அந்தஸ்தை அஜீத் தட்டி பறித்துவிட்டார்.....லயோலா கருத்து கணிப்பு

பொதுவாகவே லயோலா கல்லூரி கருத்துக்கணிப்புகள் துல்லியமாக இருக்கும் என்பது கடந்த கால கால்குலேஷன். அரசியல் ஏரியாவில் மட்டுமே இப்படி கருத்துக்கணிப்புகள் நடத்தி புளியை கரைத்து வந்த அக்கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம், இந்த முறை அப்படியே சினிமாவையும் கொஞ்சம் டச் பண்ணியதுதான் குய்யோ முய்யோ! “இப்படி வச்சு செஞ்சுட்டாரே…” என்று ராஜநாயகம் குறித்து அதிகம் மனம் வருந்தப் போவது கமல் ரசிகர்கள்தான். ஏனென்றால் நாலாவது இடத்தில் இருக்கிறார் உலக நாயகன்.
விஜய் ரசிகர்களுக்குதான் பலத்த அதிர்ச்சி. அரசியல்வாதிகளும், நடுநிலைவாதிகளும், பொதுமக்களும், ரசிகர்களும் எப்போதும் தலை மேல் வைத்துக் கொண்டாடிக் கொண்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினி மயிரிழையில் ஒரு ஸ்டெப் கீழே இறங்கிவிட்டார்.

விஜயதரணி :என்னை அங்கீகரிக்கும் கட்சியில் இருப்பேன்....அதிமுகவின் புதிய கொபசே......என்ன கொடுமையடா?

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் சட்டசபை வளாகத்தில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ விஜயதாரணி மனு கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டின் சட்டசபை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் புதன்கிழமை தொடங்கியது. மூன்று நாள் நடைபெற்ற கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. சட்டசபை கூட்டம் முடிந்ததும் முதல்வர் ஜெயலலிதா வெளியில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.  அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி முதல்வர் ஜெயலலிதாவிடம் சென்று ஒரு மனுவை கொடுத்தார்.பிறகு உங்களை தனியாக சந்தித்து பேச விரும்புகிறேன் என்று விஜயதரணி கூறினார். அதற்கு முதல்வர் ஜெயலலிதா சிரித்துக் கொண்டே சரி, பார்க்கிறேன் என்று தெரிவித்தார்.  சபாஷ் சரியான போட்டி....கூத்து நடக்கட்டும்...நாட்டுக்கு ரொம்ப தேவை பாருங்க 

கள்ளகுறிச்சி: 3 மாணவிகள் தற்கொலை ! கல்லூரி மோசடி...பணத்தை கொள்ளையடித்துவிட்டு நடுரோட்டில் விட்ட கல்லூரி

விழுப்புரம்மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே கல்லூரி மாணவிகள் 3 பேர்
கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.தற்கொலை செய்து கொண்ட சென்னையை சேர்ந்த தமிழரசன் மகள் மோனிஷா (19), காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த ஏழுமலை மகள் சரண்யா(19), திருவாரூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகள் பிரியங்கா (19) ஆகிய 3 பேரும், பங்காரத்தில் எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தனர். இந்த கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லை என்று அக்கல்லூரின் அங்கீகாரம் திடீரென ரத்து செய்யப்பட்டது. தற்கொலை செய்து கொண்ட மாணவிகள் 3 பேர் உள்பட 50க்கும் மேற்பட்ட மாணவிகள் தலா ரூபாய் 2 லட்சம் கட்டி படித்து வந்தனர். பணம் கட்டி ஏமாற்றம் அடைந்த விரத்தியில் 3 மாணவிகளும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.  இந்த உப்புமா மருத்துவ கல்லூரி பற்றி விபரமாக அறிய  www.vinavu.com/2015/10/09/svs-medical-college-of-yoga-and-naturopathy-in-kallakurichi-fleece-students/