 |
V.Navarahinam |
ராதா மனோகர் : அடையாள அட்டை மசோதா !
1965 - 1969 ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியும் தமிழரசு கட்சியும் கூட்டணி ஆட்சி அமைத்தன!
அந்த ஆட்சியில்தான் முழு இலங்கை தமிழர்களையும் சந்தேக குடிமக்களாக்கும் அடையாள அட்டை மசோதாவை நிறைவேறியது. .
குறிப்பாக இந்திய வம்சாவளி மக்கள் மீது இந்த டட்லி செல்வா ஆட்சி தூக்கி போட்ட அடையாள அட்டை மசோதா பற்றி பொதுவெளியில் பெரிதாக பேசாமல் பார்த்து கொள்வதில் தமிழ் தேசியர்கள் இன்றுவரை வெற்றி பெற்று கொண்டே இருக்கின்றனர்!
இவர்களின் இலங்கை குடிமக்கள் அனைவருக்கும் அடையாள அட்டை என்ற திட்டம் மேலெழுந்தவாரியாக நல்ல திட்டம் போல்தான் தென்படும்..அன்று பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்திய வம்சாவளி மக்கள் குடியுரிமை அற்றவர்கள்.
அவர்களுக்கு அடையாள அட்டை கிடையாது
அடையாள அட்டை இல்லாத எவரையும் போலீசார் உடனே கைது செய்யலாம்!
மறு புறத்தில் குடியுரிமை அற்றவர்களுக்கு அடையாள அட்டை பெற முடியாது.