மாலைமலர் : மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளை தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சந்தித்து கலந்துரையாடல் செய்ய திட்டமிட்டார்.
நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 100 மாணவ-மாணவிகள் மற்றும் அவரது பெற்றோர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து மாணவ-மாணவிகள் வந்திருந்தனர். மாணவர்கள் தனியாகவும் பெற்றோர்கள் தனியாகவும் இருக்கையில் அமர வைக்கப்பட்டனர். அவர்களிடம் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல் நடத்தினார்.
சனி, 12 ஆகஸ்ட், 2023
நீட் விலக்கு மசோதாவில் எந்த காலத்திலும் கையெழுத்து போடமாட்டேன்"- மாணவர்கள் மத்தியில் கவர்னர் பேச்சு
நான்குநேரியில் பட்டியல் சாதிச் சிறுவனின் உடம்பில் அரிவாளைக்கொண்டு எழுதியிருக்கிறார்கள்.
Annamalai Arulmozhi : தமிழ்நாட்டில் நாங்குநேரியில் பள்ளியில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மறவர் ஜாதிச்சிறுவர்கள் சிலர் சேர்ந்து தங்கள் ஜாதிப்பெருமையை, தங்கள் வகுப்பில்
‘படிக்கும்’ ஒரு பட்டியல் சாதிச் சிறுவனின் உடம்பில் அரிவாளைக்கொண்டு எழுதியிருக்கிறார்கள். அந்தச்சிறுவனின் தங்கை தடுக்கவந்ததால் அந்தச்சிறுமியையும் வெட்டியிருக்கிறார்கள். இந்தக்கொடுமையைக் கண்ட அவர்களின் உறவினர் ஒருவர் மாரடைப்பால் இறந்து விட்டார்.
சத்துணவுப் பணியாளரான தாயின் வளர்ப்பில் அண்ணனும் தங்கையும் நன்றாகப் படித்து வருகிறார்கள் என்பதே பலரை பொறாமைப்பட வைக்கும். உடன்படிக்கும் மாணவன் மீது அன்பும் நட்பும் கொள்ள வேண்டிய பள்ளிச் சிறுவர்கள் மனதில் ஜாதித் திமிரையும், வசதி வாய்ப்பு இல்லாத, அதிலும் சாதியால் எளியவர்களை வதைக்கும் கொடுமனத்தையும் உருவாக்குபவர்களே இவ்வழக்கின் முதல் குற்றவாளிகளாக வேண்டும்.
கோயில் திருவிழாக்களில் அலகு குத்துதல் மற்றும் துலாக் காவடி எடுத்தவர்கள் ...சீழ் பிடித்து ஆபத்தை
Dr.Muttiah Kathiravetpillai Muruganandan : சாணி மிதிச்ச செருப்பை முதுகிலை வைச்சிட்டாங்களோ?
இப்பிடி அப்பிக்கிடக்கு? யோசிக்க வைக்குதோ?
தெய்வ குற்றமாகிவிடும் கவனம்!!
சென்ற வாரம் குறைந்து பத்துப் பேராவது இத்தகைய காயங்களுடன் சிகிச்சைக்காக வந்திருந்தார்கள்!
"நான் குடுத்த மூளையை சரியாக பயன்படுத்தாதற்காக நான் குடுத்த தண்டனை" என்று கடவுள் உங்களை தண்டிச்சிருக்கிறார் போலை என நான் சொன்னதும்,
அவர்களில் பலர் ஒன்றும் புரியாது விழித்தார்கள்.!
முதுகில் மாத்திரமின்றி கெண்டை தசைகளிலும் (calf muscles) , இத்தகைய சீழ் பிடித்த காயங்கள்!
சீழ் பிடிக்கும் வேதனை மட்டுமின்றி ஏற்புநோய் வந்து முக்தியடையும் வாய்ப்புக்களும் குறைவில்லை!
ஆம் இவை எல்லாம் கோவில் திருவிழாக்களில் நேர்த்திக் கடனுக்காக துலாக் காவடி ஆடியவர்கள்.
"நல்லதைச் செய், மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காதே, நேர்மையாக நட கபட நடவடிக்கைகளில் ஈடுபடாதே"
இதைத் தானே கடவுள் விரும்புவார்>?
அதை விடுத்து இத்தகைய மூட நடவடிக்கைகளில் ஈடு பட்டால் தண்டனைதானே குடுப்பார்.
அதைத்தான் கொடுத்திருக்கிறார்!
அமெரிக்கா: ஹவாய் காட்டுத்தீயில் காணாமல் போன 1000 பேர், 55 பேர் பலி - என்ன நடக்கிறது?
bbc.com : அமெரிக்கா: ஹவாய் காட்டுத்தீயில் காணாமல் போன 1000 பேர், 55 பேர் பலி - என்ன நடக்கிறது?
பிபிசியிடம் பேசிய விக்ஸே ஃபோன்ஸேலின்கம், கரையை காட்டுத்தீ முற்றிலுமாக ஆக்கிரமித்த நேரத்தில் கடல்நீருக்குள் குதித்து தப்ப முயன்றவர்களில் அவரது குடும்பமும் ஒன்று எனக் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் ஒன்றான மாவியில் பற்றி எரிந்து வரும் தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. பல நூற்றுக்கணக்கானோர் மாயமானதாக அறிவிக்கப்பட்டு, அவர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்துப் பேசிய ஆளுனர் ஜோஷ் கிரீன், "ஹவாய் வரலாற்றிலேயே இது மிக மோசமான இயற்கைப் பேரழிவாக இருக்கிறது," என்றார்.
காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் செல்வதை தவிர வேறு வழியில்லை - அமைச்சர் துரைமுருகன் அறிக்கை
மாலை மலர் : சென்னை காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. அப்போது, தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு முழுமையான அளவில் தண்ணீர் திறக்கவில்லை. காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர்.
தமிழகத்திற்கு 9ம் தேதிவரை 37.9 டிஎம்சி தண்ணீர் கர்நாடக அரசு தரவேண்டும் என்றும், இந்த தண்ணீரை திறந்துவிட உத்தரவிடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
ஆனால் இந்த கோரிக்கையை கர்நாடக அரசு ஏற்கவில்லை. இதனால் தமிழக அதிகாரிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்தக் கூட்டத்தின் முடிவில் தமிழகத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டது. தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023
நாங்குனேரியில் சகமானவரை 6 மாணவர்கள் சேர்ந்து அரிவாள் வெட்டு .. வன்கொடுமை பகுதியாக அறிவிக்கவேண்டும் - திருமாவளவன்
minnambalam.com - christopher :; ”சக மாணவரை 6 மாணவர்கள் சேர்ந்து அரிவாளால் வெட்டிய சம்பவத்தை அடுத்து அப்பகுதியை வன்கொடுமைப் பகுதியாக அறிவிக்க வேண்டும்” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நெல்லையில், சக மாணவர் மற்றும் அவரது தங்கையை ஆறு மாணவர்கள் சேர்ந்து சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “நாங்குநேரி பெருந்தெரு ஆதிராவிடர் குடியிருப்பிற்குள் ஆயுதங்களோடு புகுந்து பனிரெண்டாம் வகுப்பு மாணவன் சின்னதுரை மற்றும் அவனது தமக்கை சந்திராதேவி ஆகியோர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் சின்னதுரையுடன் படிக்கும் மாணவர்கள்தான் என்பது இளந்தலைமுறையினர் எவ்வாறு இங்கே வளர்க்கப்படுகின்றனர் என்பதை உணர்த்துகிறது.
வவுனியாவில் அதிக வெப்பம் பதிவு ! யாழில் வெப்பத்தினால் முதியவர் உயிரிழப்பு
வீரகேசரி : கடந்த 24 மணித்தியாலங்களில் அதிக வெப்பமான வானிலை வவுனியா மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
இதன்படி, வவுனியா மாவட்டத்தில் 37.7 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் குறைந்த வெப்பநிலையாக நுவரெலியா மாவட்டத்தில் 12.6 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் அதிகளவான மழைவீழ்ச்சி மொனராகலை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
இதன்படி, மொனராகலை மாவட்டத்தில் 63.7 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மரணத்தை தள்ளிப்போட தினமும் பல அடிகள் நடக்க வேண்டும் - ஆய்வு போலந்து
மாலை மலர் : எந்த வயதினரும் செய்யக்கூடிய உடற்பயிற்சி நடைபயிற்சியாகும்.
சிறந்த ஆரோக்கியத்தை தரும் உடற்பயிற்சியாக பின்பற்றப்பட்டு வருகிறது.
வார்சா:
எந்த வயதினரும் செய்யக்கூடிய உடற்பயிற்சி நடைபயிற்சியாகும். ஓடுவதன் மூலம் உருவாகும் காயங்களை நடைப்பயிற்சியில் தவிர்க்க முடியும். நாம் நடக்கும் போது ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கின்றோம். இதனால் நமக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
நடைபயிற்சி குறைந்த அழுத்தத்தை எலும்புகளுக்கும் தசைகளுக்கும் கொடுப்பதால், சிறந்த ஆரோக்கியத்தை தரும் உடற்பயிற்சியாக பின்பற்றப்பட்டு வருகிறது.
யாழ்ப்பாணத்தில் மலையாளிகளின் குடியேற்றம்! போத்துகேசரின் (நில பதிவு பத்திரங்கள்) தோம்புகளின் அடிப்படை
Sinnakuddy Mithu : யாழ்ப்பாணத்தில் மலையாளிகளின் குடியேற்றம் நடந்தது என போத்துகேசரின் தோம்புகளின் அடிப்படையில் நிறுவ முற்படுகிறார் இந்த கட்டுரையாளர்
மலையாளத்திலுள்ள முக்கிய சாதிகள் இருபத் தேளுள் பதினான்கு சாதிகள் யாழ்ப்பாணத்திற் குடி யேறியிருக்கின்றன என்பது போத்துக்கேயர் எழுதி வைத்த தோம்புகளால் அறியக் கிடக்கின்றது
(2). தோம்புகளின் அடிப்படையில் இங்குவந்து குடியேறிய சகல மக்களுள் மலையாளத்தவர்கள் 48% குடியேறியுள்ளார்கள் என்று ஊகிக்கலாம்.
மலையாளிகள் வந்து குடியேறிய இடங்களுக்குத் தங்கள் பெயரையோ, தங்கள் சாதிப் பெயரையோ, தங்கள் ஊரின் பெயரையோ. தங்கள் நாட்டின் பெயரையோ, அல்லது அரசன் பெயரையோ ஏதாவதொன்றை வைத்துள்ளனர்.
8. (A) மலையாளச் சாதிகளும் குடியேறிய இடங்களும்
(1) குறும்பர் - குறும்பாவத்தை (சுதுமலை), குரும்பசிட்டி (ஏழாலை). (2) முக்குவன் - முக்குவிச்சி ஒல்லை
( (இணுவில்).
(3) நாயர் -பத்திநாயன் வயல் (மல்லாகம்).
வியாழன், 10 ஆகஸ்ட், 2023
‛‛9 மணி’’.. ஆமாவா.. இல்லையா! செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரிப்பது எப்படி? பரபர தகவல்
tamil.oneindia.com - Nantha Kumar R : சென்னை: அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருதவாக மோசடி செய்த புகாரில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று 4வது நாளாக விசாரணை நடக்க உள்ள நிலையில் அதுபற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆய்த்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது.
புதன், 9 ஆகஸ்ட், 2023
நந்தினி சகோதரிகள் திமுக ஆட்சியில் 20 தடைவைகள் கைது! இப்போது ஆர்.எஸ்.எஸை எதிர்த்ததற்காக சிறையில்!
சாவித்திரி கண்ணன் : நம்மை போல சராசரியான வாழ்க்கை வாழ்பவர்களல்ல இவர்கள்! சதாசர்வ காலமும் பல்வேறு அநீதிகளை தட்டிக் கேட்டு, களம் காணும் போராட்டக்காரர்கள்!
திமுக ஆட்சியில் இது வரை 20 க்கும் மேற்பட்ட முறைகள் கைதாகியுள்ள சகோதரிகள், தற்போது ஆர்.எஸ்.எஸை எதிர்த்ததற்காக ஜீலை 10 முதல் சிறையில் உள்ளதன் பின்னணி என்ன..?
நாமெல்லாம் ஒரு அநீதியான செய்தியைப் படித்தால் மனம் கொதிப்போம்.
ஒத்த கருத்துள்ள நண்பர்களோடு பகிர்ந்து கொண்டோ அல்லது முகநூலில் எழுதியோ மனதை ஆற்றுப்படுத்துவோம்.
என்னைப் போன்ற பத்திரிகையாளர்கள் அது குறித்த தகவல்களை திரட்டி, உண்மைத் தன்மையை மக்களுக்கு எடுத்துரைப்போம்.
ஆனால், ஆனந்தன், நந்தினி, நிரஞ்சனா ஆகியோர் சம்பந்தப்பட்ட அதிகார மையத்தை நோக்கி நேரடியாக களம் கண்டு போராடுவார்கள்! சிறை செல்வார்கள்!
கடந்த 12 ஆண்டு கால போராட்ட வாழ்க்கையில் இது வரை நந்தினி நூறு முறைக்கும் மேலாக கைது செய்யப்பட்டு சிறை சென்றுள்ளார்.
பத்து லட்சம் கோடி.. பேங்க்கில் கடன் பெற்றுக் கொண்டு நாட்டை விட்டே ஓடிப்போன.. 28 பேர்களின் பட்டியல்
Madhan Mrm : 10,000000000000 (பத்து லட்சம் கோடி..) பேங்க்கில் கடன் பெற்றுக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு, நாட்டை விட்டே ஓடிப்போன..
28 பேரில்..முஸ்லீம்கள், கிறித்தவர்கள் ஒருவர் கூட இல்லை.
முக்கியமாய் ஒரு தமிழனும் இல்லை!
நேர்மையாக உழைத்து சம்பாதித்து வங்கியில் போட்ட இந்தியர்களின் பணத்தை திருடிய 28 தொழிலதிபர்கள்..*
1) விஜய் மல்லையா
2) மெஹுல்சோக்ஷி
3) நீரவ் மோடி
4) நிஷான் மோடி
5) புபேஷ் பெய்டியா
6) ஆஷிஷ்
7) சன்னி கல்லாரா
மணிப்பூரில் பாரத மாதாவை கொன்று விட்டீர்கள்”.. மக்களவையில் கொதித்தெழுந்த ராகுல் காந்தி MP - முழு பேச்சு
கலைஞர் செய்திகள் - Lenin : நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மணிப்பூர் விவகாரத்தில் மோடி அரசு பேச வேண்டும் என வலியுறுத்த இந்தியா கூட்டணி கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதம் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றும் விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இன்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பேசும் போது பா.ஜ.கவினர் குறுக்கிட்டு கூச்சல் குழப்பம் செய்தனர். அப்போது ராகுல் காந்தி, "பா.ஜ.கவினர் பயப்படத் தேவையில்லை. இன்று நான் அதானியைப் பற்றிப் பேச மாட்டேன். எனவே பா.ஜ.கவினர் அஞ்ச வேண்டாம்" என தெரிவித்தார்.
செந்தில் பாலாஜிக்கு மருத்துவ பரிசோதனைக்கிடையே தொடரும் அமலாக்கத்துறை விசாரணை
minnambalam.com - christopher : மருத்துவ பரிசோதனைக்கிடையே தொடரும் அமலாக்கத்துறை விசாரணை!
சட்டவிரோத பணப் பறிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அதனைத்தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டு இருந்தது.
நீதிமன்ற உத்தரவுப்படி நேற்றிரவு 8.30 மணிக்கு மேல் புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்தனர்.
சிறைத்துறை விதிகளின் படி கஸ்டடியில் செல்லும் கைதி சாப்பிட்டு இருக்க வேண்டும் என்பதால் சிறையிலேயே வழங்கப்பட்ட 4 இட்லியை அமைச்சர் செந்தில் பாலாஜி சாப்பிட்டார்.
செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023
காவல்துறையில் 'காவி'! ஈரோடு புத்தக கண்காட்சியில் எழுந்த சர்ச்சை.. கொதித்தெழுந்த ஆசிரியர் கி.வீரமணி
tamil.oneindia.com - Halley Karthik : ஈரோடு: ஈரோடு புத்தக கண்காட்சியில் இந்துத்துவத்தை விமர்சிக்கும் புத்தகங்களை விற்பனை செய்யக்கூடாது என காவல்துறையினர் மிரட்டியுள்ளதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் குற்றம்சாட்டியிருந்தது.
இந்நிலையில், "போலீசில் உள்ள காவி ஆடுகள் கண்டறியப்பட வேண்டும்" என்று திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கீ.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் வீரப்பன்சத்திரம் சி.என்.கல்லூரி வளாகத்தில் தமிழக அரசு மற்றும் மக்கள் சிந்தனை பேரவை சார்பில், நடத்தப்படும் ஈரோடு புத்தக காட்சி கடந்து 4ம் தேதி தொடங்கியது.
இந்த புத்தக காட்சியை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன். எம்பிக்கள் அந்தியூர் செல்வராஜ், கணேசமூர்த்தி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. ஹரிபத்மனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க பரிந்துரை! பின்னணி
tamil.oneindia.com -Nantha Kumar R : சென்னை: சென்னை கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதான பேராசிரியர் ஹரிபத்மனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற ஓய்வு நீதிபதி கண்ணன் தலைமையிலான விசாரணை குழு அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் நாட்டியக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தன.
உதவி பேராசிரியர் ஹரிபத்மன், உதவியாளர்கள் சாய்கிருஷ்ணன், சஞ்ஜித் லால், ஸ்ரீநாத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். தேசிய மகளிர் ஆணையம், மாநில மகளிர் ஆணையம் விசாரணையை தொடங்கியது. ஹரிபத்மன் உள்ளிட்டவர்கள் தலைமறைவாகினர்.
செந்தில் பாலாஜியை காவலில் எடுத்த அமலாக்கத் துறை!
புழல் சிறையில் இருந்து அமலாக்கத் துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
சட்டவிரோத பணபரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் கடந்த ஜுன் 14ஆம் தேதி அதிகாலை செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
அவரை காவலில் எடுக்க நீண்ட சட்ட போராட்டத்துக்கு பின் இன்று உச்ச நீதிமன்றம் அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கியது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தொடர்ந்து அமலாக்கத் துறை, செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு விசாரணை நீதிமன்றமான சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
: டெல்லி அரசின் அதிகாரங்களை குறைக்கும் அவசர சட்டம் மாநிலங்கள் அவையிலும் நிறைவேறியது
மாலை மலர் : டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசாங்கத்தின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.
இந்த அவசர சட்டத்திற்கு மாற்றாக டெல்லி அரசு நிர்வாக சட்டத்திருத்த மசோதாவை (டெல்லி சேவைகள் மசோதா) மத்திய அரசு, பாராளுமன்ற மக்களவையில் கடந்த 3ம் தேதி தாக்கல் செய்து நிறைவேற்றியது.
இன்று மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது.
எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்தன.
விவாதத்திற்கு பதிலளித்து பேசிய உள்துறை மந்திரி அமித் ஷா, டெல்லி சேவைகள் மசோதா உச்ச நீதிமன்ற தீர்ப்பை எந்த வகையிலும் மீறவில்லை என்றும், ஊழலை தடுப்பதே மசோதாவின் நோக்கம் என்றும் கூறினார்.
ஹரியானா - : முஸ்லிம்களின் கட்டடங்களை இடிக்கும் 'அரசாங்க புல்டோசர்கள்' - கள நிலவரம்
பத்து பேர் கொண்ட குடும்பத்துக்கு வாழ்வளித்து வந்த முடிதிருத்தும் கடையை புல்டோசர் மூலம் மாவட்ட நிர்வாகம் இடித்துவிட்டதாக சமன்லால் கூறினார்
கடந்த ஜூலை மாதம் 31ஆம் தேதியன்று, பஜ்ரங்தள் அமைப்பு ஹரியானாவின் நூஹ் என்ற இடத்தில் ஒரு மத யாத்திரைக்கு ஏற்பாடு செய்தது.
இந்த யாத்திரையில் ஆயிரக்கணக்கான பஜ்ரங்தள தொண்டர்களும் பக்தர்களும் கலந்து கொண்டனர்.
நூஹ் நகரில் உள்ள கோவிலில் இருந்து யாத்திரை சென்றபோது, சிறிது நேரத்தில் கல் வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் தொடங்கின.
நகரின் தெருக்களிலும் கோவிலுக்கு வெளியேயும் ஒரு கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
திங்கள், 7 ஆகஸ்ட், 2023
பிடிஆர் ஆடியோ வழக்கு தள்ளுபடி |: மனுதாரருக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்!
மின்னம்பலம் - christopher : பிடிஆர் ஆடியோ வழக்கு: மனுதாரருக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்!
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோவை வைத்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் குடும்பத்தை விசாரிக்கக்கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 7) தள்ளுபடி செய்துள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதியமைச்சராக இருந்தபோது அவர் பேசியதாக ஆடியோ ஒன்று கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
அந்த ஆடியோவில் உதயநிதி ஸ்டாலினும், சபரீசனும் 2 ஆண்டுகளில் அதிகமாக பணம் சம்பாதித்துள்ளனர். தோராயமாக ரூ.30 ஆயிரம் கோடி இருக்கும் என கூறியது போல் வெளியாகியிருந்தது.
ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவி
தினமணி : ராகுல் காந்தியின் தகுதிநீக்கத்தை ரத்து செய்து அவருக்கு மீண்டும் எம்.பி. பதவியை மக்களவைத் செயலகம் வழங்கியுள்ளது.
பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த மாா்ச் 23-ஆம் தேதி சூரத் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
அதனடிப்படையில், மக்களவை உறுப்பினா் பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் ராகுல் காந்தியின் இரண்டு ஆண்டு கால சிறைத்தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று(வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டது.
இன்று காலை அவசரமாக கார்கே அலுவலகத்தில் கூடும் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள்.. ராஜ்ய சபா வியூகம்
tamil.oneindia.com - Vignesh Selvaraj : டெல்லி: 'இந்தியா' கூட்டணியின் தலைவர்கள் இன்று (திங்கட்கிழமை) காலை நாடாளுமன்றத்தில் உள்ள ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் அலுவலகத்தில் கூடி முக்கிய வியூகம் வகுக்க உள்ளனர்.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லி உயரதிகாரிகள் நியமன அவசரச் சட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டு வந்தது. அதிகாரிகள் நியமனம், பணி மாறுதல் ஆகியவை தொடர்பான அதிகாரத்தை மீண்டும் ஆளுநரிடமே வழங்கும் வகையில் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதை எதிர்த்து ஆம் ஆத்மி அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023
புலிகளின் துணுக்காய் வதைமுகாம் பற்றிய நேரடி சாட்சியம்! சுகன் கனகசபை
புலிகளின் துணுக்காய் வதைமுகாம் |
Suhan Kanagasabai : இப்படியாக புலிகளின் வதைமுகாங்களில் 2009 மே 17 வரை 6000 பேருக்குமேல் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள் .
1990 முதல் 2009 வரை புலிகள் (மிருகங்களின்) ஆட்சியில்……
நடந்த வன்கொடுமைகள்!
அந்தோணி!
பகுதி 1
யூதர்களை கிற்லர் எப்படிக் கொடுமைப் படுத்தினார் என்பது உலகம் முழுவதும் அறியப்பட்டது. புகைப்படங்களாக, திரைப்படங்களாக உலகமக்கள் கண்டு மிரண்டனர். யூதர்கள் மீது இரக்கம் கொண்டனர். ஆனால் தமிழீழம் என்ற சொல்லின் பின்னால் மறைந்திருந்த மிருகங்களான மிருகம்கள் (புலிகள்) எங்கள் இனத்தவரை எப்படியெல்லாம் கொடுமைக்கு உள்ளாக்கினர் என்பது வெளியுலகுக்குத் தெரியாது. இந்த மிருகம்கள் எங்கள் இனத்தை நசுக்கி அதன் இரத்தத்தினை உறிஞ்சிய வரலாற்றினை எங்கள் மக்களுக்கு எடுத்துரைக்க மிருகம்களே வழி கோலியுள
புலிகள் பற்றியஉண்மைத் தகவல்களை வெளியிட நாம் அவர்களாலேயே தள்ளப்பட்டுள்ளோம். இங்கே வரும் புலிகள் என்ற சொல்லுக்குப் பதிலாக நாம் மிருகம்கள் என்று குறிப்பிட்டுள்ளோம். கீழே வரும் தகவல்களில் மிருகம்கள் என்ற பதத்தினை புலிகள் என்று எடுத்துக்கொள்ளவும். நாசிகளின் கொடுமைகளை விட மிருகம்கள் செய்த கொடுமைகள் பயங்கரமானது.
திராவிட இயக்கங்களின் இலவசங்களால் பாய்ச்சல் வேகத்தில் முன்னேறிய தமிழ்நாடு .. புள்ளிவிபரங்கள்
tamil.goodreturns.in 'இலவசங்கள்' மூலம் தமிழ்நாட்டுக்கு என்ன பலன்..? தமிழ்நாட்டின் பொருளாதாரத்திற்கு எப்படி உதவியது..?!
தமிழ்நாடு அரசு வழங்கும் இலவசங்கள் குறித்து பொருளாதார வல்லுநரும், ஸ்கைமேன் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான கே ராஜேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் முக்கியமான பதிவை பதிவிட்டு உள்ளார்.
தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள இலவசங்கள் மீது ஒரு பொருளாதாரப் பார்வையை கே ராஜேஷ் முன்வைத்துள்ளார். இவருடைய பதிவை இதுவரையில் 18,100 பேர் பார்த்துள்ளனர்.
"இலவசங்கள் தேவை" என்று ஒரு சாரார் (சமூகநீதிக் கொள்கையாளர்கள்) அதை ஆதரிக்க, "இலவசங்கள் தேவையில்லை" என்று எதிர்க் குரல்களும் கேக்கவே செய்கின்றன. அரசியல் மற்றும் சமூக நீதிப் பார்வையோடு பார்க்கையில், மக்கள் நலனுக்காகவும், அவர்களது விடுதலைக்காகவும், இது மிக முக்கியத் தேவை என்பதே நிதர்சனம். இந்த இலவசங்கள் செய்தது என்னவென்று சற்றே பொருளாதாரக் கண்ணாடி கொண்டு பார்ப்போமா?
மதிய உணவுத் திட்டம் - தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதை 1925 முதல் தொடங்கப்பட்ட மதிய உணவுத் திட்டம் தான் இதன் ஆரம்பப் புள்ளி. அதன் பின்னர், முதல்வராக இருந்த காமராஜர் அவர்கள், இதனை மாநிலம் முழுவதற்கும் செயல்படுத்த, அதற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த கலைஞர், ஆயிரக்கணக்கான பள்ளிகளுக்கு விரிவு படுத்தினார்.
உத்தர பிரதேச அரசு மருத்துவமனையில் 80 கர்ப்பிணி பெண்களுக்கு H I V எய்ட்ஸ் நோய்
மாலை மலர் : உத்திரபிரதேச மாநிலம் மீரட் அரசு மருத்துவமனையில் 80 கர்ப்பிணி பெண்களுக்கு எச்ஐவி கண்டறியப்பட்டுள்ளது.
அனைவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சையளித்து கண்காணித்து வருவதாக மீரட் அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த 16 மாதங்களில் 80க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ரயில் விபத்து : 25 பேர் உயிரிழப்பு , 50 க்கும் அதிகமானோர் காயம் !
இந்து தமிழ் : பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50 க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து 275 கிலோமீற்றர் தொலைவில் இந்த ரயில் விபத்து இடம்பெற்றுள்ளது.
கராச்சியில் இருந்து ராவல்பிண்டிக்கு சென்ற ஹசரா எக்ஸ்பிரஸ் ரயில் ஷஹசாத்பூர் மற்றும் நவப்ஷாஸ் பகுதிகளுக்கு இடையே உள்ள சஹரா ரயில் நிலையத்திற்கு அருகே திடீரென்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
தடம் புரண்டதில் ரயிலின் 10 பெட்டிகள் கவிழ்ந்தன. இதன்போது இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 50பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் பாகிஸ்தானிய செய்திகள் தெரிவிக்கின்றன.
மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாமெ
பாஜக-அதிமுக இடையே மோதல்.. யாத்திரையை கைவிட்டு இன்று டெல்லி செல்லும் அண்ணாமலை
tamil.oneindia.com - Nantha Kumar R : சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‛என் மண், என் மக்கள்' என்ற பெயரில் பாதயாத்திரை நடத்தி வருகிறார். மதுரை மாவட்டத்தில் தற்போது யாத்திரை நடக்கும் நிலையில் இன்று அவர் திடீரென டெல்லி புறப்பட்டு செல்லும் நிலையில் பின்னணியில் உள்ள விபரம் வெளியாகி உள்ளது.
அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெல்லும் முனைப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரையை தொடங்கி உள்ளார். ‛‛என் மண் என் மக்கள்'' எந்த பெயரில் கடந்த மாதம் 28ம் தேதி ராமேஸ்வரத்தில் அவர் பாதயாத்திரை தொடங்கினார்.
இலங்கை மத்தள விமான நிலையத்தால் பல்லாயிரக்கோடி நஷ்டம்
2017 முதல் 2022 வரையிலான 5 ஆண்டு காலப்பகுதியில் மத்தள சர்வதேச விமான நிலையத்தின் மொத்த நட்டம் 4,281 கோடி ரூபாய் என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தள ராஜபக்ச விமான நிலையத்திற்கு கடந்த வருடம் மாத்திரம் 2,221 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனத்தின் கணக்காய்வுகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் செயற்பட ஆரம்பித்த 2017ஆம் ஆண்டு தொடக்கம் 2022ஆம் ஆண்டு வரையான 05 வருடங்களில் ஏற்பட்ட மொத்த நட்டம் 4,281 கோடி ரூபா என தேசிய கணக்காய்வு அலுவலகம் நடத்திய கணக்காய்வில் தெரியவந்துள்ளது.