சனி, 18 பிப்ரவரி, 2017

நடிகர் சூரியா : இப்போது மிக்சர் சாப்பிட்டுக்கொண்டு இருப்பது நாம்தான் நண்பர்களே !

"Suriya Sivakumar" இப்போது மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பது நாம் தான் நண்பர்களே.... 
சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் நெருக்கடியான அரசியல் சூழல் குறித்து நடிகர் சூர்யா அதிரடி கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். திமுகவினர் செய்த கடும் அமளிக்கு பிறகு அவர்களை வெளியேற்றிவிட்டு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு 122 அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்தனர். எதிராக 11 வாக்குகள் மட்டும் பதிவானதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆனதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பலரும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எடப்பாடி வெற்றி செல்லாது!? சபை மரபு மீறப்பட்டுள்ளது! ஆட்சி கலைக்க கவர்னர் ....

நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் ஒரு முறை கொண்டு வந்து, தோல்வி அடைந்தால் அடுத்து முறை நம்பிக்கை வாக்கெடுப்பு 6மாதம் கழித்து தான் மீண்டும் கொண்டு வரமுடியும். ஆனால், இன்று தமிழக சட்டசபையில் காலை 11 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வந்தார். தி.மு.க.,உட்பட எதிர் கட்சிகள் ரகசியவாக்கெடுப்பு நடத்தவேண்டும் கோரிக்கை விடுத்தனர். அதற்கு இடையில், சபையில் முதல் பிளாக் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் 65பேர் எழுந்து நின்று வாக்களித்தனர். அதில் 5பேர் எழுந்து நிற்காமல் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதற்கு சபாநாயகர் எதிர்ப்பு தெரிவித்தால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது. அதை தொடர்ந்து சபை ஒத்திவைக்கப்பட்டது. அத்துடன் நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வி அடைந்து விட்டது என்பது தான் மரபு. அடுத்து ஒரு மணிநேரம் கழித்து துவங்கிய சபையிலும் அமளி ஏற்பட்டு மீண்டும் சபை தள்ளி வைக்கப்பட்டது.

டான் அசோக்,: வீரமணி அய்யாவுக்கு : முடிந்தவரை கொள்ளை அடிப்போம் என்று ஆட்சியை களவாடியதை எப்படி ஏற்றுகொள்ள முடியும்?

donashok:  ஆசிரியர் வீரமணி அவர்களுக்கு,
சமீபகாலமாக உங்கள் அறிக்கைகளை படித்து வேதனையுற்ற நான், சட்டமன்றத்தில் நடத்த அமளிகள் குறித்த தங்கள் அறிக்கையை படித்து
மிகவும் எரிச்சலுற்றேன். சசிகலா முதல்வராக வாய்ப்பிருந்தபோது நீங்கள் அவரை ஆதரித்ததில் இருந்த காரணத்தை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்றாலும், புரிந்துகொள்ள முடிந்தது. ஓ.பி.எஸ் பாஜகவின் கைப்பாவை என்பதை காரணமாக வைத்தும், மாநில உரிமையில் மத்திய அரசின் தலையீடு என்பது பேராபத்து என்பதை வைத்தும் உங்களின் சசிகலா ஆதரவு அமைந்திருக்கிறது என்பதை பல திமுகவினர் புரிந்துகொள்ளவில்லை என்றாலும் கூட, ஒரு திராவிட இயக்க ஆதரவாளனாக நான் முற்றிலும் புரிந்தே இருந்தேன். ஆனால் காட்சிகள் மாறிவிட்டது. தனது சட்டமன்ற உறுப்பினர்களை சசிகலா தரப்பு நடத்திய விதம் மக்களின் வெறுப்பை ஏகமனதாக சம்பாதித்திருக்கிறது. மக்களின் எதிர்ப்பு என்பது நாளுக்கு நாள் வலுத்து ஆட்சியாளர்கள் மீது உச்சகட்ட வெறுப்புணர்ச்சி கொண்டிருக்கிறார்கள்.  கண்ணையும் காதையும் வாயையும் கரன்சிகளால் மூடிகொண்டிருக்கும்  ஆட்சியை  ஒழித்துக்கட்ட வேண்டாமா?

ஜனநாயக விரோத வாக்கெடுப்பு : ஓ.பி.எஸ். சீற்றம்!


குரல் வாக்கெடுப்பின்மூலம் 122 எம்.எல்.ஏ.,க்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்து தீர்மானத்தை வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள். ஆனால் இந்தத் தீர்மானத்தில் எதிர்க்கட்சிகள் எதுவும் பங்கேற்கவில்லை. திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும், முஸ்லீம் லீக் சட்மன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். ஓ.பி.எஸ். அணியினர் 11 பேரும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள்.

ஸ்டாலினுக்கு போட்டியாக களமிறங்கிய கமல்: உங்கள் தொகுதிக்கு வரும் எம்.எல்.ஏ-க்களுக்கு தகுந்த முறையில் வரவேற்பைக் கொடுங்கள்!

கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழர்கள் இனிமேலாவது சோத்துல உப்புப் போட்டு தின்னுங்க..ரோஷம் இல்லா பிறவிக்கு மரணவாசல் ஆகசிறப்பே என்று  எழுதியிருக்கிறார்.
ஸ்டாலின் சட்டப்பேரவையில் சிக்ஸர்களாக அடித்து ஆடி டிரெண்டாகிக்கொண்டிருந்த அதே சமயம், இந்தப்பக்கம் கமல்ஹாசன் தொடர் ட்வீட்களால் ஸ்டாலினுக்கு கடும்போட்டியினை டிரெண்டிங் பக்கத்தில் உருவாக்கிக்கொண்டிருந்ததைப் பற்றித்தான் இங்கு பார்க்கப்போகிறோம்.
சட்டப்பேரவை முதல்முறையாக ஒத்திவைக்கப்பட்டு 1 மணிக்கு மீண்டும் தொடங்கப்பட்டபோது ஸ்டாலின் டிரெண்டிங்கில் இடம்பெற்றார். திமுக, சட்டசபைக்குள் நடந்துகொண்ட விதம் தீயாகப் பரவியது. அதேசமயம் ட்விட்டரில் கமல், வீரமணி ஐயாவுடன் கலந்துபேசாமல் திராவிடர் கழகம் இந்த நேரத்தில் மக்களுக்காக தைரியமாக இறங்கிப்போராடவேண்டும் என்பதை எல்லா திராவிடர்களுக்கும் வலியுறுத்துகிறேன் என்று ஒரு ட்வீட்டைப் பதிவு செய்து ஆரம்பித்துவைத்தார். அந்த ட்வீட்டிலும் சிலர், நான் கங்குலியன், நான் தோனியியன் என்று காமெடி செய்தாலும் ரீ ட்வீட்டும், ஸ்கிரீன்ஷாட்டும் என கமல் பெயர் டிரெண்டிங்கில் ஏறியது.

சட்டசபை காவலர்கள் வேடத்தில் போலீஸ் அராஜகம் !

அவைக் காவலர்கள் வேடத்தில் காவல்துறையினர் வந்து எங்களை அப்புறப்படுத்தினர் என்று திமுக சொல்லி வரும் குற்றச்சாட்டுக்கு சான்று. அம்பத்தூர் துணை ஆணையர் சுதாகர் ஐபிஎஸ், சபைக் காவலர் சீருடையில். இப்படித்தான் இன்று திமுக எம்எல்ஏக்கள் அகற்றப்பட்டனர்.

சபாநாயகர் அண்ணன் பொரி உருண்டையார், இன்று மீண்டும் மீண்டும் தான் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவன். என்னை அவமானப்படுத்தி விட்டார்கள் என்று பேசியது, அவரது பாரபட்சமான நடவடிக்கைகளை மூடி மறைத்து, இதை ஒரு சாதிப் பிரச்சினையாக்க மட்டுமே. இத்தனை நாட்கள் அவை நடந்தபோது, யாராவது அவரை இழிவு படுத்தினார்களா என்ன ? பொரி உருண்டையார் இப்படி ஒரு மலிவான உத்தியை கையாண்டதன் மூலம், தான் எத்தனை கேவலமான பிறவி என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.  முகநூல் பதிவு ராஜா
Sumee Suma பத்து பதினஞ்சு நாளா MLA க்களை ஆடுமாடுகளை போல் அடைத்து வைத்து, சரக்கு வாங்கி கொடுத்து, ரெகார்ட் டான்ஸ் காட்டி , ஓப்பன் வாக்கெடுப்பு நடத்துவது தான் ஜனநாயகமாடா வென்றுகளா....!!!

ஜல்லிகட்டு ?... அந்த பயம் ? ஸ்டாலின் அரை மணித்தியாலத்தில் கைது செய்த மர்மம்..

சென்னை: மெரினாவில் உண்ணாவிரதம் அமர்ந்த அரை மணி நேரத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தின் மைய புள்ளியாக இருந்தது மெரினா கடற்கரை. அந்த போராட்டம் மாநிலம் முழுக்க, பரவி அரசுக்கு எதிராக பெரும் போராட்டமாக வெடித்தது. இந்நிலையில், சட்டசபையிலிருந்து இன்று ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். ஸ்டாலின் சட்டை கிழிந்திருந்தது. போலீசாரின் பூட்ஸ் கால்களால் தான் தாக்கப்பட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து சட்டசபை அமளி குறித்து புகார் செய்த ஸ்டாலின் பிறகு யாரும் எதிர்பார்க்காத வகையில் மெரினா கடற்கரைக்கு பயணித்தார். அங்குள்ள காந்தி சிலை அருகே ஸ்டாலின் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். உடனடியாக சென்னையின் பல பகுதிகளில் இருந்தும் திமுகவினர் மெரினா நோக்கி விரைந்தனர்.
திமுக ஆதரவு ஊடகங்கள், தமிழகம் முழுக்க ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மக்கள் தெருவிற்கு வந்ததை போல, சட்டசபையில் நடந்த அடிதடிக்கு எதிராகவும் மக்கள் வெளியே வர வேண்டும் என்று, அழைப்பு விடுத்தன. மாநிலம் முழுக்க ஆங்காங்கு திமுகவினர் எதிர்ப்பு போராட்டங்களை ஆரம்பித்தனர். வன்முறை வெடித்தது. எனவே, போராட்டம் பரவும் என்று அஞ்சியது எடப்பாடி பழனிச்சாமி. மற்றொரு ஜல்லிக்கட்டு போராட்டம் வெடித்துவிடுமோ, இதை காரணமாக வைத்து ஆட்சி கலைந்துவிடுமோ என்ற நடுக்கத்தால், அரை மணி நேரத்தில் ஸ்டாலினை கைது செய்ய உத்தரவு பறந்தது.

தமிழகமெங்கும் வெடித்தது .. மக்கள் போராட்டம் .. வீதிக்கு வந்த மக்கள் !


;இதனையடுத்து எதிர்க்கட்சிகள் இல்லாமல் வாக்கெடுப்பை நடத்தி எடப்பாடி
பழனிச்சாமி வெற்றி பெற்றதாக அறிவித்தார் சபாநாயகர். இதனை கண்டித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் மெரினாவில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர். இந்நிலையில் இப்படிப்பட்ட சூழலில் நம்பிக்கை வக்கெடுப்பை நடத்தி வெற்றி பெற்றதாக அறிவித்துக்கொண்ட அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 ஸ்டாலின் தாக்கப்பட்டதை எதிர்த்து கடலூரில் அரசு பஸ் கண்ணாடி
உடைக்கப்பட்டது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது. அரியலூர் மாவட்டம் செந்துறையில் அரசை கண்டித்து சாலை மறியல் நடைபெறுகிறது. நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 100 க்கும் மேற்ப்பட்ட திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தரவக்கோட்டையில் அதிமுக அலுவலகம் மீது பொதுமக்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் திமுகவினர் சபாநாயகர் தனபால் உருவபொம்மையை செருப்பால் அடித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

DissolveTNGovt.. சட்டவிரோத வாக்கெடுப்பு ? மக்கள் கொந்தளிப்பு !

சென்னை: எடப்பாடி பழனிச்சாமி அரசு
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றாலும் தமிழக மக்களிடம் தோல்வியடைந்து விட்டது. எனவே ஆளுநர் அரசை கலைக்க வேண்டும் என்று
சமூகவலைத்தளங்களில் மக்கள் பதிவிட்டு வருகின்றனர். தமிழக அரசியல் களம் கடும் போர்களமாக மாறியுள்ளது. ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என பிளவு பட்டுள்ளது. ஓபிஎஸ்க்கு ஆதரவாக 11 எம்எல்ஏக்கள் உள்ளனர். சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் ரிசார்ட்டில் அடைக்கப்பட்டனர். 10 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு வியாழக்கிழமையன்று தமிழக முதல்வராக பதவியேற்றார் எடப்பாடி பழனிச்சாமி.

சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கு கோரினார். திமுக, காங்கிரஸ் உறுப்பினர் சபையில் இல்லாத நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக 122 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த 11 எம்எல்ஏக்கள் அவருக்கு எதிராக வாக்களித்தனர்.

சட்டசபை வாக்கெடுப்பு திருப்தி இல்லையேல் .. மீண்டும் வாக்கெடுப்பு ? குடியரசு தலைவர் ஆட்சி ? ஸ்டாலின் ஆளுநர் சந்திப்பு

சென்னை: சட்டசபையில் பெரும் அமளி மற்றும் எதிர்க்கட்சியினரை வெளியேற்றிவிட்டு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி வென்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். இருந்தபோதும் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு முறை மீது திருப்தி ஏற்படாவிட்டால் மீண்டும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட முடியும். சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால் இதை சபாநாயகர் தனபால் ஏற்கவில்லை. இதனால் சட்டசபையில் அமளி ஏற்பட்டது. ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் தாக்கப்பட்டு குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர். அப்போது ஸ்டாலினின் சட்டை கிழிக்கப்பட்டது. இது தொடர்பாக கிழிந்த சட்டையுடனேயே ஆளுநர் வித்யாசகர் ராவை ஸ்டாலின் நேரில் சந்தித்து முறையிட்டார். இதன் பின்னர் சென்னை மெரினா கடற்கரையில் ஸ்டாலின் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.

மெரினாவில் அறப்போராட்டம் ... ஸ்டாலின் கைது( படங்கள்

மெரினா போராட்டத்திற்கு முகநூலில் ஸ்டாலின் விடுத்த அழைப்பு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு: ’’இன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள். தமிழகத்தை ஆளும் மக்கள் விரோத அரசு அகற்றப்படவேண்டும். இதனை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே அமைதி வழியில் அறப்போராட்டம் தொடங்குகிறது. ஜனநாயக விரோத அரசை அகற்ற நினைப்போர் அனைவரும் திரளவேண்டுகிறேன்.’’

122 பேர் ஆதரவு: பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்கவைத்தார் எடப்பாடி பழனிச்சாமி

கடும் அமளியினால் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட அவை மீண்டும் 3 மணிக்கு கூடியது. எதிர்க்கட்சியினர் இல்லாமல் வாக்கெடுப்பு துவங்கியது. இரண்டு முறை பிரச்சனை ஏற்பட்டதால் குரல் அடிப்படையில் வாக்கெடுப்பு நடத்தாமல் எண்ணிக்கை அடிப்படையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமிக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். எடப்பாடிக்கு எதிராக ஓபிஎஸ் உட்பட அவரது ஆதரவாளர்கள் 11 பேர் வாக்களித்தானர். பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்கவைத்துக்கொண்டார் எடப்பாடி கே.பழனிச்சாமி. நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

அடித்து,உதைத்து, சட்டையை கிழித்து எங்களை வெளியேற்றினர் : ஸ்டாலின் ஆவேசம் தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஏற்பட்ட அமளியினால் 2 முறை பேரவை ஒத்திவைக்கப்பட்டது. 3 வது முறையாக 3 மணிக்கு அவை தொடங்குவதற்குள் திமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். ‘’என் சட்டையை கிழித்துவிட்டனர். நான் எங்கு சென்று முறையிடுவேன்’’ என்று சபாநாயகர் கூறியதால், திமுகவின குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.இதையடுத்து பேரவையில் தரையில் அமர்ந்து ஸ்டாலின் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பேரவைக்குள் தர்ணாவில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் சட்டை களையப்பட்ட நிலையில் குண்டுக்கட்டாக சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டார். சட்டை பட்டன்கள் களையப்பட்ட நிலையில், தலை முடி களைந்த நிலையில் வெளியே வந்த ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’சபாநாயகர் வேண்டுமென்றே சட்டையை கிழித்துக்கொண்டார். தெரிந்தோ, தெரியாமலோ நடந்த தவறுக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். எங்களை குண்டுக்கட்டாக தூக்கி அடித்து, ஷூ கால்களால் உதைத்து சட்டையை கிழித்து வெளியேற்றினர். இந்த செயலுக்கு நியாயம் கேட்டு ஆளுநரிடம் முறையிடப்போகிறோம்’’ என்று தெரிவித்தார் நக்கீரன் eran

சசிகலா தமிழக ஜெயிலுக்கு மாற்றம்? : அண்ணா பிறந்த நாளில் விடுதலை ?

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை பெற்று வருகிறார் சசிகலா. சென்னை சிறைக்கு மாற முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சசிகலாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தமிழக உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் இந்த மாறுதல் முயற்சியானது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் சசிகலா மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருகிறது. இதற்குப் பின்னால், தமிழக சிறையில் இருந்தால்தான் தமிழக அரசியலை கட்டுப்படுத்த முடியும். அது மட்டுமின்றி அத்தனை வசதிகளையும் கேட்டுப் பெற்றுக் கொள்ளமுடியும். சிறையை ஹோட்டல் போல மாற்றக் கூட அனுமதி கிடைக்கும். நன்னடத்தையை காரணம் காட்டி வெளியே வரவும் வாய்ப்புகள் உண்டு அதே போல அரசியல் நிகழ்வுகளை கர்நாடக சிறையில் இருந்து கொண்டு கட்டுப்படுத்துவது கடினமான செயல். கர்நாடக நீதிமன்றத்தில் தனக்கு சலுகைகளுக்காக போராட வேண்டியிருக்கும் என்பது உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.லவ்டே

சட்டசபையில் இதுவரை இடம்பெற கலவரம் தொகுப்பு

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. மொத்தம் 124 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தமக்கு இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தாலும் மயிலாப்பூர் நட்ராஜ், கோவை வடக்கு அருண்குமார் ஆகியோர் ஆதரவு இல்லை என அறிவித்துவிட்டனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமியின் பலம் 122 ஆக குறைந்துள்ளது.

சபையில் எனக்கு நேர்ந்த கொடுமையை எங்கே போய் சொல்வது- சபாநாயகர்
சட்டசபை மீண்டும் கூடியது
திமுக எம்.எல்.ஏக்களிடம் இருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டார் தனபால்
வேட்டியை மடித்துக் கட்டி ரகளையில் ஈடுபட்டனர் திமுக எம்.எல்.ஏக்கள்
சபாநாயகர் தனபாலை பிடித்து இழுத்து திமுகவினர் ரகளை< சபாநாயகர் இருக்கையில் ரெங்கநாதன் எம்.எல்.ஏ.வும் அமர்ந்து அட்டகாசம்
தலைமை செயலகம் செல்லுகள் சாலைகள் திடீரென மூடப்பட்டன
தலைமை செயலகம் செல்லும் சாலையில் போக்குவாரத்து நிறுத்தம்
சட்டசபைக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் மூடல், போக்குவரத்து நிறுத்தம்
சட்டசபை சற்று நேரத்தில் மீண்டும் கூட உள்ளது

தமிழக சட்டசபை நிகழ்வுகள் எதிர்பாராதது- கபில்சிபல்
அனைத்து தரப்பும் சபாநாயகர் முடிவை ஏற்க வேண்டும்
சட்டசபைக்கு வெளியே சிறப்பு அதிரடிப்படையினர் குவிப்பு

பன்னீர்செல்வம் அணிக்கு தற்போது 16 எம்எல்ஏக்கள் ஆதரவு

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் இன்று கூடியது. இதனைத்தொடர்ந்து, எதிர்க்கட்சியினர் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்த சபாநாயகரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மைக், மேஜைகள் அடித்து நொறுக்கப்பட்டன. சபாநாயகர் மேஜை மீது ஏறி அமர்ந்து சேதப்படுத்தி பெரும் அமளியில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டனர். இதனையடுத்து, சபாநாயகர் அவையிலிருந்து வெளியேறினார். சட்டப்பேரவைக்கூட்டம் ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைச் செயலாளர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார். இந்நிலையில், பன்னீர்செலவம் அணியில் 10 பேராக இருந்த எம்எல்ஏக்கள் தற்போது 16 எம்எல்ஏக்கள் ஆதரவு என தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இன்னும் சில எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் எனத் தெரிகிறது லியாவ்டே

சட்டசபையில் கலவரம் ... 355 பாயும்? தாமரை கனி போன்ற ஸ்டன்ட் நடிகர்கள் இல்லையே?

Troll Mafia s · நடப்பது மானியக் கோரிக்கை அல்ல! நம்பிக்கை வாக்கெடுப்பு! அதில் அனைவருக்கும் உரிமையுண்டு இல்லையேல் உரிமைமீறல் ஆகிவிடும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள விடாது.. எதிர்ப்போரை வெளியேற்றி ஆதரிப்போரை மட்டும் வைத்து நடத்தினால், Article 355 பாயும் கூச்சலோ...குழப்பமோ.. அதைச் சமாளித்து எப்படியேனும் வாக்கெடுப்பு நடத்திக் காட்டுவதே பேரவைத் தலைவரின் திறன்! வாக்குச் சாவடியில், பொது மக்களை வெளியேற்றி, வாக்கெடுப்பு நடத்த முடியாது.. அதுபோலவே பேரவை வாக்கெடுப்பும்!
Stanley Rajan · முகம் துடைத்டுவிட்டு, குடிநீர் குடித்துவிட்டு சற்று ஆசுவாசபடுத்திய பிரேக் முடிந்து மறுபடியும் கோதாவுற்குள் வந்தாயிற்று ஆட்டம் விறுவிறுப்பாக செல்கின்றது இந்த ரவுண்டில் முதல் குத்து யாரிடம் இருந்து வரும் என தமிழகமே ஆவலாய் இருக்கின்றது சே.. தாமரைகனி, வீரபாண்டி ஆறுமுகம் இந்த நேரம் இல்லாமல் போனது நமது துரதிருஷ்டம் ஆனால் என்ன? பல அனுபவசாலிகள் உள்ளேதான் இருக்கின்றார்கள் அந்த 130 பேரையும் ரிசார்ட் அனுப்புவதற்கு பதிலாக "இறுதிசுற்று" மாதவன் போல ஒருவரிடம் அனுப்பியிருக்கலாமோ என சசிகலா தரப்பு யோசித்து கொண்டிருக்கலாம்...முகநூல் பதிவு

ஆட்சிக்கு எதிரான மக்களின் மன நிலையை திமுக பிரதி பலிக்கிறது

சென்னை:  இன்று நடைபெறுவது அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு. இதில் வெற்றி பெற்றால் சசிகலா தரப்பும், தோல்வியடைந்தால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும். எனவே அந்த இரு தரப்பும் அதிகப்படியான அக்கறை எடுத்து செயல்பட்டது, எதிர்பார்க்கப்பட்டதே. ஆனால் திமுகவினர் சட்டசபைக்குள் மிகப்பெரும் அமளியை கட்டவிழ்த்துவிட்டது ஏன் என்பதே கேள்வி. இந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் மனநிலை மாறியுள்ளதை திமுக நன்கு புரிந்து வைத்துள்ளது. கடந்த தேர்தல் நீதியான முறையில் நடக்கவில்லை என்று திமுக கூறி வரும் நிலையில் இந்த நிகழ்வை பார்க்க வேண்டி இருக்கறது . சுமார் 40 லட்சம் கள்ள ஓட்டுக்களை சகல தொகுதிகளிலும் பதிவு செய்ததும்,  தேர்தல் வாக்கு எண்ணப்படும் பொழுதே பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததை எல்லாம் திமுக மறக்க வில்லை என்பதை இப்போது நடக்கும் சம்பவங்கள் தெரிவிக்கின்றன
நியாயமற்ற முறையில் ஆட்சியை பிடித்த அதிமுகவை பழிதீர்க்க ஆரம்பித்து விட்டது என்பது தெளிவாக தெரிகிறது.
 ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலில் மக்களை சந்திக்க வர வேண்டும் என்பதே பெருவாரியான மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது. இதை உணர்ந்து கொண்ட திமுக அமளியில் ஈடுபட்டால் கூட மக்களின் கோபம் நம் மீது திரும்பாது என கணக்கு போட்டதாக கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றால் எடப்பாடி அணியிலிருந்தும் அவருக்கு எதிராக ஓட்டுக்கள் விழ வாய்ப்புள்ளது, எனவே ஆட்சி கலைந்து தேர்தலை சந்திக்கலாம் என்பதே திமுகவின் திட்டம்.

சபையில் தமிழ் படம் ஓடும்னு பாத்தா தெலுங்குப் படம் ஓடிக்கிட்டு இருக்கு

Stanley Rajan · அய்யயோ ஆம்புலன்ஸ் சட்டமன்றம் செல்கின்றதாம் நாம் கணித்தது இப்படி எல்லாம் நடக்கின்றதா? முந்தைய பதிவில்தான் எழுதினோம், ஆம்புலன்ஸ் கூட செல்லும் நிலைவரலாம் என, அதற்குள் வந்தே விட்டதா? எப்படி நம்மால் முன்னமே சொல்ல முடிந்தது?? எமோஷனல் ஏகாம்பரம் விவேக் போல என்னை நொக்கி நானே ஒரு வியப்பான பார்வை பார்த்து கொண்டிருக்கின்றேன்.. அப்படியானால் குஷ்பூ தமிழக காங்கிரஸ் தலைவராகிவிடுவாரா? ஆகட்டும் ஆகட்டும்... முகநூல் பதிவு

Nelson Xavier Rofl Moment. சட்டப் பேரவையில இருந்து ஒருத்தரை வெளில தூக்கிட்டு வந்து ஆம்புலன்ஸ்ல ஏத்துனாங்க. காட்சிகளை வர்ணிச்சிகிட்டே வந்த Hariharan SA, "அவர் யாரு எந்த கட்சின்னு தெரியலைன்னு" சொல்லிட்டு இருந்தாரு. ஸ்டூடியோல இருந்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி சொல்றாரு, "மயக்கம் தெளியாததை பார்த்தா கூவத்தூர் ரெசார்ட்ல இருந்தவர் மாதிரி தெரியுது  முகநூல் பதிவு

செய்தியாளர் மாடத்தில் ‘‘ஒலிபெருக்கி இடைநிறுத்தம் பத்திரிக்கையாளர்கள் ஆவேசம்!

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னிட்டு பலத்த கெடுபிடிகள் உள்ளதாக கூறப்படுகிறது. பத்திரிகையாளர்கள் செல்போன்களை அவைக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. புகைப்பட பத்திரிகையாளர்கள் வழக்கத்திற்கு மாறாக வேறு மாடத்தில் அமரச் செய்யப்பட்டனர். இந்நிலையில் வாக்கெடுப்பு தொடங்கும் முன்பாக ஆளும் கட்சி ஆதரவு எம்.எல்.ஏக்கள், ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நடுவே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது திடீரென பத்திரிகையாளர்கள் அமர்ந்திருந்த மாடத்தில் ஒலிபெருக்கி வசதி கட்டானது. இதனால் அவை உறுப்பினர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை பத்திரிகையாளர்கள் தெரிந்து கொள்ள முடியவில்லை என்று ஆவேசமாக கூறியுள்ளதாக தெரிய வருகிறது. லைவ்டே

Assembly postponed ..சபாயாகர் ஓட்டம் .. மைக்குகள் உடைக்கப்பட்டன .. நாற்காலிகள் வீசப்பட்டன

சட்டப் பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்கட்சியின் அமளியால் அவை 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. சட்டபேரவையில் அமளியால் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு மைக் உடைக்கப்பட்டு, இருக்கை சேதப்படுத்தப்பட்டது. இதனால், சபாநாயகர் சட்டபேரவையில் இருந்து வெளியேறினார். காவல்துறையினர், சபாநாயகரை பாதுகாப்பாக அறைக்கு அழைத்து சென்றனர். மேலும், சட்டபேரவை செயலாளர் ஜமாலுதீன் இருக்கையும் சேதப்படுத்தப்பட்டது. இதனால் அவரும் பேரவையில் இருந்து வெளியேறினார். உறுப்பினர்களின் ரகளையால், சட்டபேரவை பகல் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
ISROவை மிஞ்சியது தமிழக சட்டசபை, ஒரே நேரத்தில் 105 நாற்காளிகள் வின்னில் ஏவப்பட்டன
வேண்டும்... வேண்டும்... ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என ஓபிஎஸ் அணி, எதிர்க்கட்சியினர் சபாநாயகரை முற்றுகையிட்டு கோஷம் .... # பழக்க தோஷத்தில் ..வேண்டும்... வேண்டும்... ஜல்லிக்கட்டு வேண்டும்னு சொல்லிடாதிங்க....

எம் எல் ஏக்கள் சுதந்திரமாக வாக்களிக்க குடியரசு தலைவர் ஆட்சி... மூத்த வக்கீல் ஆச்சாரியா

Sr. Adcovate Acharya seeks Governor Rule for 3 month in TN பெங்களூரு: தமிழக சட்டசபையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எம்எல்ஏக்கள் சுதந்திரமாக வாக்களிக்க வேண்டுமானால் ஜனாதிபதி ஆட்சி இருந்திருக்க வேண்டும் என்ற மூத்த வக்கீல் ஆச்சார்யா கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் சசிகலா அணி ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்து அரசியல் களத்தில் அன்றாடம் ஒரு பரபரப்பு காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இதன் ஒரு கட்டமாக இன்று தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் மேலும், தமிழக எம்எல்ஏக்கள் சுயமாக சிந்தித்து நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க ஜனாதிபதி ஆட்சி அவசியம் என குறிப்பிட்டுள்ள ஆச்சார்யா, தற்போதைய சூழலில் எம்எல்ஏக்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் நிலை தமிழகத்தில் இல்லை என்றும் கூறியுள்ளார்.

பீட்டர் அல்போன்ஸ் ;கறிக்கடைக்கு அழைத்து வரப்படும் பிராய்லர் கோழிகள் போல.. சட்ட சபைக்கு எம் எல் ஏக்கள்

பேரவையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கூச்சல் குழப்பம்
துணை ராணுவபடை தலைமைசெயலகம் விரைந்தது👮👮👮 மேலும் 5எம்எல்ஏக்கள் ஓபிஎஸ்க்கு ஆதரவு👉 ரகசிய வாக்கெடுப்பு நடத்த காங், திமுக சார்பில் வலியுறுத்தல்✊✊ இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கூடாது காங், திமுக திட்டவட்டம்!

Mathava Raj · “உற்பத்தி செய்யப்பட்டு நேரே கறிக்கடைக்கு அழைத்து வரப்படும் பிராய்லர் கோழிகள் போல கூவாத்தூரில் இருந்து எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்கு அழைத்து வரப்பட்டு இருக்கின்றனர்” – பீட்டர் அல்போன்ஸ் சன் டிவியில். மனுஷன் ரொம்ப உன்னிப்பாய் கவனித்திருக்கிறாரே…..!  முகநூல் பதிவுகள்

துணை ராணுவம் விரைந்தது எடப்பாடி பழனிசாமி வாக்கெடுப்பில் தோற்றால் .. குடியரசு தலைவர் ஆட்சி ?

மக்கள் கருத்தை கேட்ட பின்பே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் . பன்னீர்செல்வம் கோரிக்கை . சபாநாயகர் நிராகரித்தார் .  இன்றே வாக்கெடுப்பு நடத்த பன்னேர்செல்வம் எதிர்ப்பு .சட்ட சபை வளாக பாதுகாப்புக்கு துணை இராணுவம் விரைந்தது
இன்று சட்டபேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி தோற்றால், தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலாகும் நிலை உருவாகியுள்ளது. முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி தனது பெம்பான்மையை நிரூபிக்க , சட்டசபையில் இன்னும் சிறிது நேரத்தில் நம்பிக்கை வாக்குக்கு எடப்பாடி கோருவார். அவர் தனக்கு ஆதரவாக 124 எம்.எல்.ஏக்கள் இருப்பதாக கூறியிருந்தார். ஆனால் தற்போது எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 122 குறைந்துள்ளது. மேலும், எதிர்க்கட்சியான திமுகவும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸும் எடப்பாடிக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளனர். அதனால் இந்த எண்ணிக்கை மேலும் குறையவும் வாய்ப்புள்ளது. ஒருவேளை, எடப்பாடி பழனிச்சாமியால் பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் போனால், திமுகவுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்படும். திமுக இந்த வாய்ப்பை நிராகரிக்கும் பட்சத்தில், தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும் நிலை உருவாகும். இதேபோல கடந்த 1991ல் திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. லைவ்டே

மதுசூதனன் அதிரடி அறிவிப்பு ; எடப்பாடி பழனிசாமி , தினகரன் , வளர்மதி , தம்பிதுரை கூண்டோடு அதிமுகவில் இருந்து நீக்கம்!

Markandey Katju · The proceedings inside the Tamil Nadu Legislative Assembly are not being shown on TV. In my opinion this is totally undemocratic. In a democracy, it is the people who are supreme, and the MLAs are only the representatives of the people. Hence the people have a right to see how their representatives are behaving inside the Assembly. For this reason the proceedings inside the Assembly Hall should definitely be telecast
அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா அணியினருக்கு இடையேயான மோதல், நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.மதுசூதனன் ஒவ்வொருவரையும் அதிரடியாக நீக்கி வருகிறார். Madhusuthanan இந்நிலையில், அ.தி.மு.க.வில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீக்கப்படுவதாக மதுசூதனன் அறிவித்துள்ளார்.கட்சியில் இல்லாத ஒருவர் முதல்வராக இருக்க வழி இல்லை.இதையும் தேர்தல் ஆணையம் பார்வைக்கு கொண்டு போகிறார் மைத்ரேயன்.
மேலும், மக்களவை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, சி.விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், பா. வளர்மதி ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளதாக மதுசூதனன் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே இன்று காலை, சசிகலா, டி.டி.வி. தினகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கியதாக மதுசூதனன் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது லைவ்டே

ஸ்டாலின் ஆவேசம்! கடும் அமளி! ! ரகசிய வாக்கெடுப்புக்கு சபாநாயகர் தனபால் மறுப்பு

தமிழகத்தின் அரசியல் நிலவரம் நொடிக்கு நொடி பரபரப்பான சூழலை கொண்டுள்ளது. முதல்வராக பதவி ஏற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டு இருந்தார். எனவே இன்று பெரும்பான்மையை நிரூபிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதன்படி இன்று சிறப்பு பேரவை கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். ஆனால் ரகசிய வாக்கெடுப்புக்கு சபாநாயகர் தனபால் மறுத்து விட்டார்.

சட்டப்பேரவையில் தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. இதற்காக அதிமுக, திமுகவை சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களும் சட்டமன்றத்தில் கூடியுள்ளனர். இந்நிலையில் பழனிச்சாமி ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் போலீஸ் பாதுகாப்புடன் சட்டப்பேரவைக்கு அழைத்து வரப்பட்டனர். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். எம்.எல்.ஏ.க்கள் என்ன கொலை குற்றவாளிகளாக அவர்களை கைதிகள் போல் போலீசார் கண்காணிப்பில் அழைத்து வருகின்றனர் என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் திமுக, அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே வாக்குவாதத்தால் சட்டப்பேரவையில் கடும் அமளி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. laivde

திருநாவுக்கரசருக்கு .... தமிழகத்தின் மிகப்பெரிய வரலாற்று அழிவுக்கு நீங்கள் ஒரு காரணம்.... மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்

kavinnnn? திருநாவுக்கரசருக்கு சில விஷயங்களை நினைவுப்படுத்தவேண்டிய கடமை இருக்கிறது
1. உங்க பெயர் ‘திருநாவுக்கரசு’ இல்லை, ‘திருநாவுக்கரசர்’ என்று மாத்தியாச்சு. நீங்களேதான் மாத்திக்கிட்டீங்க
2. நீங்க இப்போ அறந்தாங்கி எம்.எல்.ஏ. இல்லை. தமிழக அமைச்சரும் இல்லை.
3. உங்க கூட அரசியலில் இருந்த எஸ்.டி.எஸ்., நாவலர் எல்லாம் இப்போ உலகத்திலேயே இல்லை. கொஞ்சம் கண்விழிச்சுப் பாருங்க
5. நீங்க அதிமுகவில் இல்லை. காங்கிரஸில் இருக்கீங்க.. நடுவில் பாஜகவுக்கும் போனீங்க. இப்போ காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரா இருக்கீங்க.
6. இது எண்பதுகள் இல்லை. 2017 ஆயிடுச்சு.
7. நீங்க ஜெ அணியில் இல்லை. சொல்லப்போனா ஜெ.வே இல்லை.
சட்டமன்றம் கூடப்போகுது..முழிச்சுக்கோங்க..  முகநூல் பதிவு

சட்டசபையில் கடும் அமளி ..செம்மலை அதிமுக கட்சி கொறடாவாக அறிவிக்கப்பட்டார் ..


ADMK Presidium Chairman ; Treasurer nominates Chemmalai as the Party Whip wef 16/2/17 -
Speaker receives formal communication by fax p; ! - Mafoi Pandiarajan

போலீசாருடன் ஸ்டாலின் வாக்குவாதம்.. திமுகவினர் கார்களை தடுத்த போலீஸ்!

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் மீது சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு வந்தனர். அப்போது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் காரை பேரவைக்குள் செல்ல அனுமதிக்க போலீசார் தடுத்தனர். இதனால் மு.க.ஸ்டாலின் காவல்துறையினருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டார். மேலும் சில திமுகவினரின் கார்களை போலீசார் தடுத்தனர். அவர்களுக்காகவும் ஸ்டாலின் வாக்குவாத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நக்கீரன்

கூவத்தூர் விடுதியில் அதிருப்தி எம்எல்ஏக்கள் தனியாக பிரிப்பு? - தம்பிதுரை சமாதான பேச்சு

தமிழக முதல்வராக பதவியேற் றுள்ள எடப்பாடி பழனிசாமி, சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் தெரிவித்துள்ளதால், கூவத்தூர் விடுதியில் அதிருப்தி எம்எல்ஏக் களை, தனியாக பிரித்து அவர் களைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அதிருப்தி எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் யாருக்கு வாக்களிப்பார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அருண்குமார் எம் எல் ஏ:: அதிமுகவில் சசி குடும்பம் புகுந்துள்ளது அதனால் வெளியேறினேன் .. கோவை வடக்கு

MLA Arun Kumar oppose Sasikala family in ADMK கோவை: 10 நாட்களாக கூவத்தூரில் மற்ற அதிமுக எம்எல்ஏக்களுடன் இருந்த கோவை வடக்கு எம்எல்ஏ அருண்குமார் அங்கிருந்து வெளியேறி சொந்த ஊருக்கு புறப்பட்டார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அருண்குமார் பேசியதாவது:
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு, பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா என யாரும் அவர்களுடைய குடும்பத்தை கட்சிக்குள் நுழைக்கவில்லை. எம்ஜிஆரால் ஆரம்பிக்கப்பட்ட அதிமுக, ஜெயலலிதாவில் வழி நடத்திய அதிமுகவில் தற்போது ஒரு குடும்பம் புகுந்துள்ளது. அதனை எதிர்த்து நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். பணம், பதவி, புகழ் எனக்கு முக்கியமல்ல. மக்கள் பணியே எனக்கு முக்கியம் என்ற அடிப்படையில் எம்ஜிஆரின் தொண்டனாகிய நான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். அங்கிருந்து வெளியேறிய பின்னர் ஓபிஎஸ்ஸை நான் சந்திக்கவில்லை. எனக்கு அணியெல்லாம் ஒன்றும் இல்லை. சின்னம் இரட்டை இலை. அதிமுக கட்சி இதுதான் எனக்கு முக்கியம். சசிகலாவை எதிர்க்கிறோம் அவ்வளவுதான். கட்சியில் இந்த முடிவு மாற்றப்பட வேண்டியது அவசியம்.

கூவத்தூரில் இருந்து அதிமுக எம்எல்ஏக்களை அழைத்து ( இழுத்து ) வரும் காட்சி படங்கள் !

<முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் மீது சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தற்போது வரை எடப்பாடி பழனிச்சாமிக்கு 122 உறுப்பினர்களும், ஒ.பன்னீர்செல்வத்துக்கு 11 உறுப்பினர்களும் ஆதரவு அளித்துள்ளனர். காலை 10.30 மணிக்கு ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு புறப்படுகின்றனர். இதனிடையே நேற்று மாலை கோவை வடக்கு அதிமுக எம்எல்ஏ அருண்குமார் தப்பித்துள்ளார். அவர் வாக்கெடுப்பை புறக்கணிப்பதாக கூறி சென்றுவிட்டார். இதனால் மேலும் சிலர் தங்கள் அணிக்கு சாதகமாக இருப்பார் என பன்னிர்செல்வம் அணியினர் கருதினர். கூவத்தூரில் இருந்து எம்எல்ஏக்கள் புறப்பட்டதால் அவர்களுடை செல்போன் இயக்க தொடங்கியது. மேலும் 10 எம்எல்ஏக்கள் கிடைத்தால் போதும் என்று பன்னீர்செல்வம் தரப்பினர் கருதுகின்றனர்.

அதிமுக எம் எல் ஏக்களின் தொலைபேசி எண்களும் ஈமெயில் முகவரியும் ... தொடர்பு கொள்ளுங்கள் மக்களே!

அஇஅதிமுக MLA அனைவரின் தொலைபேசி எண்களும் e-mail முகவரியும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்கள் கருத்துக்களை MLA அனைவருக்கும் message அனுப்புங்கள். அவசியம் பொது மக்கள் தங்கள் கருத்துக்களை sms அல்லது E-mail செய்யுங்கள்
01. கும்மிடிப்பூண்டி விஜயகுமார் 94452 79999 mlagummidipoondi@tn.gov.in
02. பொன்னேரி பாலமுருகன் 93826 98074 mlaponneri@tn.gov.in
03. திருத்தணி நரசிம்மன் 94433 86356 mlatiruttani@tn.gov.in
04. பூந்தமல்லி , ஏழுமலை 96006 27999, 97509 76555 mlapoonamallee@tn.gov.in
05. மதுரவாயல் அமைச்சர் பெஞ்சமின் 9884 995440 mlamaduravoyal@tn.gov.in
06. அம்பத்தூர் அலெக்சாண்டர் 98410 33211 mlaambattur@tn.gov.in
07. பெரம்பூர் வெற்றிவேல் 98417 21234 mlaperambur@tn.gov.in
08. ராயபுரம் அமைச்சர் ஜெயக்குமார் 92821 02950 mlaroyapuram@tn.gov.in
09. விருகம்பாக்கம் விருகைரவி 93837 70505 mlavirugambakkam@tn.gov.in
10. தி.நகர் சத்யநாராயணன் 98410 26424 mlathiyagarayanagar@tn.gov.in
11. மைலாப்பூர் ஆர்.நடராஜ் 98404 84411 mlamylapore@tn.gov.in
12. ஸ்ரீபெரும்புதூர் பழனி 98843 53649 mlasriperumbudur@tn.gov.in
13. திருப்போரூர் கோதண்டபாணி 94443 55368 mlathiruporur@tn.gov.in
14. அரக்கோணம் ரவி 98430 25123 mlaarakkonam@tn.gov.in
15. சோழிங்கநல்லூர் பார்த்திபன் 98401 33673, 94434 38016, 04172-262281, 262222 mlasholingur@tn.gov.in
16. கீழ்வைதினன்குப்பம் லோகநாதன் 97512 32311 mlakilvaithinankuppam@tn.gov.in
17. குடியாத்தம் ஜெயந்தி பத்மநாபன் 9884928936 mlagudiyattam@tn.gov.in
18. வாணியாம்பாடி அமைச்சர் நிலோபர் கபீல் 94433 29062, 044- 26423726 mlavaniyambadi@tn.gov.in
19. ஆம்பூர் பாலசுப்ரமணி 98948 33033 mlaambur@tn.gov.in

விடுதி எம்எல்ஏக்கள் செல்போன் இயங்கியதால் ஒ.பி.எஸ். அணியினர் மகிழ்ச்சி

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் மீது சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதற்காக கடந்த 10 நாட்களாக சென்னை அருகே கூவத்தூர் கோல்டன் பே ரெசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏக்களை அமைச்சர்கள் தங்களது கார்களில் சட்டப்பேரவைக்கு அழைத்து வருகின்றனர். தற்போது எம்எல்ஏக்களிடம் அவர்களது செல்பேன் கொடுக்கப்பட்டுவிட்டது. அவர்கள் அதனை ஆன் செய்துள்ளனர். இதனால் ஒ.பன்னீர்செல்வம் தரப்பினர் அவர்களை தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. தற்போதுவரை பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கு 11 எம்எல்ஏக்கள் உள்ளனர். மேலும் 10 எம்எல்ஏக்கள் கிடைத்தால் போதும் என்று அவர்கள் கருதுகின்றனர். நேற்று இரவு கூவத்தூர் ரெசார்ட்டில் போடப்பட்டிருந்த பலத்த பாதுகாப்பையும் மீறி கோவை வடக்கு அதிமுக எம்எல்ஏ அருண்குமார் தப்பித்து வாக்கெடுப்பை புறக்கணிப்பதாக கூறி கோவை பெரியநாயக்கம் பாளையத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றுவிட்டார். இதேபோல் மேலும் சிலர் சசிகலா தரப்புக்கு எதிராக இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர் ஒ.பன்னீர்செல்வம் அணியினர்.நக்கீரன்

அதிமுக கொறடா ராஜேந்திரன் உத்தரவு செல்லாது : மாஃபா பாண்டியராஜன்!

அதிமுக கொறடா ராஜேந்திரனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அவைத்தலைவர் மதுசூதனன் நீக்கி விட்டார். என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசு கொறடா என்று யாரையும் இதுவரைக்கும் நியமிக்கவில்லை எனவே அனைத்து எம்.எல்.ஏக்களும் யாருக்கும் பயப்பட தேவையில்லை. சட்டப்பேரவையில் தாங்கள் விரும்பியவர்களுக்கு வாக்களிக்கலாம் எம்.எல்.ஏ பதவியை யாரும் பறிக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். லைவ்டே

கலைஞர் இன்று சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பாரா?


Karunanidhi to participate in tomorrow floor test?
சென்னை: சட்டசபையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறார். அவர் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார்.< இதனால் திமுகவின் செயல் தலைவராக மு.க. ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தமிழக அரசியல் களம் பல்வேறு திருப்பங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

Ex வானாளாவியவர் உபயம் : :மதுசூதனன் எல்லாரையும் கட்சி விட்டு நீக்கும் வானளாவிய பார்முலா?

ஓஹோ கதை அப்படி போவுதா? எல்லாரையும் விலைக்கு வாக்குனவங்க, ஒரு முக்கியமான மூளைய மிஸ் பண்ணிட்டாங்க.
அது தான் நிறைய வேலை கொடுக்குது.
இங்க எம்.எல்.ஏக்கள் புடிக்கறதுக்கு ஓ.பி.எஸ் உரையாற்றிக்கிட்டு இருக்கும் போதே, மைத்ரேயன் எம்.பி தலைமையில் ஒரு குரூப் டெல்லியில் புகார் கொடுத்துக்கிட்டு இருந்தது.
ஆட்சியே கிடைக்குமான்னே தெரியல, அதுக்குள்ள கட்சிய பிடிக்க டெல்லி போய் நிக்கிறாங்களேன்னு சிலர் நினைச்சிருக்கலாம். இன்னைக்கு சசிகலாவுக்கு தேர்தல் கமிஷன்ல இருந்து ஓலை வந்துடுச்சி. இதுக்கு பின்னாடி அந்த மைண்ட் தான்.
ஓ.பி.எஸ் போர்கொடி தூக்க ஆரம்பிச்சதுல இருந்தே சசி நீக்கல் விளையாட்ட ஆரம்பிச்சாச்சி. ஒ.பி.எஸ்ஸுக்கு ஆதரவு கொடுக்க, கொடுக்க அவர்களை பார்த்து அம்பயர் மாதிரி கைய தூக்கிக்கிட்டே இருந்தாங்க சசி, 'அவுட்'.
இதுக்குப் போட்டியா மதுசூதனன் அவைத்தலைவருங்கிற கெத்ல, சசி அண்ட் கோவை நீக்கினார். அப்புறம் இன்னைக்கு மதுசூதனன் மானாவாரியா எல்லாரையும் கட்சிய விட்டு நீக்கிக்கிட்டு இருக்காரு. பலருக்கும் அது காமெடியா தான் இருக்கும். அதுக்கு பின்னாடியும் திட்டம் இருக்கு.
இன்னைக்கு காலைல சபாநாயகர சந்திச்சு ஓ.பி.எஸ் அணி மனு கொடுத்தது, "ரகசிய வாக்கெடுப்பு வேணும்னு". இருக்கறது 10 எம்.எல்.ஏ,இதுல இந்த வேல தேவையான்னு பரவலான கேள்வி. அப்புறம் மாஃபா பாண்டியராஜன் ஒரு பேட்டிக் கொடுத்தார். "கொறடா எங்களுக்கு உத்தரவு போட முடியாது. ஏன்னா, புது மந்திரிசபை அமைச்சப்ப , புதுசா கொறடா போடல, அவரே செல்ல மாட்டாரு". அந்த மூளையோட ஐடியா தான் இது.

கூவத்தூர் முதல் கோட்டை வரை போலீஸ் குவிப்பு

சென்னை: சட்டசபையில், முதல்வர் இடைப்பாடி பழனிசாமி, இன்று(சனிக்கிழமை) நம்பிக்கை ஓட்டெடுப்பு கோருவதால், கூவத்துாரில் இருந்து கோட்டை வரை, 1,000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.சசிகலா ஆதரவாளர்களாக கருதப்படும், 124 எம்.எல்.ஏ.,க்கள், சென்னையை அடுத்த கூவத்துார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும், இன்று(பிப்.,18) காலை அங்கிருந்து கோட்டைக்கு பஸ்களில் அழைத்து வரப்பட உள்ளனர். அப்போது, மர்ம நபர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்பதால், கூவத்துாரில் இருந்து கோட்டை வரை, 1,000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கோட்டையிலும், கோட்டையை சுற்றியும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. காமராஜர் சாலையில், வாகன சோதனை கடுமையாக்கப்பட்டு உள்ளது.

பன்னீர்செல்வம் :குடும்ப ஆட்சிக்கு துணைபோகாதீர்: அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு வேண்டுகோள்

தமிழக சட்டசபையில் இன்று சசிகலா; ஆதரவாளரான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கிறது. இதனையொட்டி சென்னையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிட்ம் பேசிய ஒ.பன்னீர்செல்வம், குடும்ப ஆட்சி இருக்கக்கூடாது என்பது ஜெயலலிதாவின் கொள்கை. அவரது கொள்கைக்கு புறம்பாக குடும்ப ஆட்சிக்கு உறுதுணையாக நீங்கள் (சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்) இருக்கலாமா? இது ஜெயலலிதாவுக்கும், தமிழக மக்களுக்கும் செய்யும் துரோகம் இல்லையா? ஜெயலலிதா ஆட்சி தொடரவேண்டும் என்று உங்களை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய வேண்டுகோளை ஏற்று மயிலாப்பூர் எம்.எல்.ஏ. நட்ராஜ் மனம்மாறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சட்டசபையில் நாளை (இன்று) நம்பிக்கை கோரும் தீர்மானத்தின்போது அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். ஜெயலலிதாவின் உண்மை தொண்டனாக இருந்து சுதந்திரமாக சிந்தித்து ஜெயலலிதாவை ஒருமுறை நினைத்துப்பார்த்து வாக்களிக்க வேண்டும்.

செங்கோட்டையன் ; எங்கள் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது! பள்ளி கல்வி துறை அமைச்சர்...

சட்டசபையில் இன்று நடைபெறும் நம்பிக்கை
வாக்கெடுப்பில் எங்களின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
No one can stop our success, said Sengottaiyanதமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மை பலத்தை இன்று சட்டசபையில் நிரூபிக்க உள்ளது. இதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று சட்டசபையில் நடைபெறுகிறது. எடப்பாடி பழனிச்சாமிக்கு 124 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளதாக ஆளுநரிடம் அளித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு 10 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது. இதனிடையே மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நடராஜ் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதனிடையே அதிமுகவின் கொள்கை எதிராக செயல்பட்டதால் சசிகலா அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மதுசூதனன் அறிவித்துள்ளார்.

P.K.Mahanandia.. காதலியை தேடி சைக்கிளில் (3600 Km) சுவீடன் சென்ற ஒரிசா ஓவிய கலைஞன் !


My tribe worshiped the forces of nature – fire, air, water - we did not personify them. My blues are the real sky; my greens are the nature as she is. To my motherland’s people, the sun is the highest God, the God of creation and life. The faces? Faces fascinate me. In every face there are a million different faces, a million different expressions. I want to penetrate this mystery – why are there all these expressions? What is the true nature of man? Art can reveal it to us
Karthikeyan Fastura : காதலை விட ஒருவருக்கு சக்தி தருவது எதுவும் இல்லை.
PK மகாநந்தியாவின் காதல் மிகச்சிறந்த உதாரணம்
நந்தியா இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாநிலத்தில், பின்தங்கிய சாதியடுக்கில், வறுமையான குடும்பத்தில் பிறந்த ஓவிய கலைஞன். முக்கிதக்கி ஒரிசாவின் கள்ளிக்கோட்டை அரசு கலைகல்லூரியில் ஓவியம்,கைவினை படிப்பை முடிக்கிறான். பிறகு டில்லி பல்கலைகழகத்தில் படிக்க இடம் கிடைக்கிறது. தங்குவதற்கு தேவையான பணம் போதவில்லை, தெருவோரம், பஸ் நிலையம் என்று கிடைத்த இடத்தில் தங்குகிறான். கன்னாட் பிளேஸ்ஸில் இருக்கும் நீருற்றின் அருகில் உட்கார்ந்து படம் வரைவான். அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு தனது கல்விப்பயணத்தை தொடர்கிறான்.
அப்போது சர்லேட் வான் ஸ்கெட்வின் என்ற ஸ்பெயின் சீமாட்டியை டில்லியில் சந்திக்கிறான். அந்த பெண் இவனிடம் தன்னை ஓவியமாக வரைய வேண்டுகிறாள்.
இருவரும் காதல்வயப்படுகிறார்கள். டில்லியில் ஒருமாதம் தங்கள் காதல் ஓவியத்தை தீட்டுகிறார்கள். அவளுக்கு பயணத்திட்டம் முடிகிறது. ஸ்பெயின் திரும்புகிறாள்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு 78 எம் எல் ஏக்களில் மட்டும்தான் நம்பிக்கை உள்ளதாம்!
DMK , Congress , ML : 98
OPS : 11
ADMK MLAs not Supported Sasikala not in Kovathur : 6
New found Rebel in Koovathur : 40 Net Total : 155
All Roads goes to ouster of #EPS a #42hrsCM regime

செய்திகள் #EPS மகிழ்ச்சி தருபவையாக இல்லை. 78 core supporters only

1988 ஹிஸ்டரி திரும்பி #admk #அடிதடி ஏற்பட்டு ஜனாதிபதி ஆட்சி வருமா?

ராஜேந்திரன் கொறடா #Sasikala பக்கம் தன்பால் சபாநாயகர் #OPS பக்கம்

117 க்கு 1 குறைஞ்சாலும் போச்சாம் .. 23 ஷார்ட் ஆம் .. #அய்யாசாமி ஹாப்பி அண்ணாச்சி  முகநூல் செய்திகள் /ஊகங்கள் ?

கூவத்தூர் விடுதி உளவுத்துறை வாச்சிங் ! குதிரை பேரம் ரிகார்டிங் ! எம் எல் ஏ வீடுகளுக்கு ரெயிட் ஆயத்தம்?

saravana.kumaran.Ops அணி மிக தெளிவாய் காய் நகர்த்தி கொண்டிருக்கிறது. 5 நாட்கள் எடுத்த கூவந்துர் MLA மீட்பு போராட்டம் தோல்வி அடைந்ததாக நாம் கருதிக்கொண்டிருக்கிறோம் ஆனால் அது உண்மை அல்ல எதிரியை ஒரு வட்டத்தில் அடைத்து அவர்களின் குதிரை பேரம் குறிக்கப்பட்ட நிலையில் கண்காணிக்க படுகிறது. ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆம் நன்றாக கவனியுங்கள் 3 தினத்திற்கு முன் ஒரு ஆம்புலன்ஸ் சென்றது நினைவு உங்களுக்கு இருக்கலாம். அதில் என்ன போனது என்பது முதல் அணைத்து வாகன பரிவர்த்தனைகளும் கவனமாக மத்திய அமலாக்க துறை மற்றும் உளவு படை கண்காணிப்பில் வந்து 5 தினங்கள் ஆகிவிட்டது. இவர்கள் செய்யும் வேலைகள் அனைத்தும் பதிவுசெய்யப்பட்டு விட்டது. பதிவு செய்த தகவல்கள் அனைத்தும் வெளிய எடுக்க போலீஸார் அணிவகுப்புமூலம் MLA களை கவனத்தை திருப்பி வெளிக்கொணரப்பட்ட பின் தான் ஆளுநர் எடப்பாடிக்கு அழைப்புவிடுத்தார் நாளை நம்பிக்கை வாக்கு நடக்கவிருக்கும் நிலையில் எடப்பாடி ஜெயித்தால் கூட அந்த அணிக்கு பின்விளைவுகள் மிக மிக மோசமாக இருக்க போகிறது .அது எப்படி தெரியுமா இவர்கள் பணபரிவர்த்தனைகள் எல்லாம் உற்பத்தி இடம் முதல்கொண்டு தெரிய வரும்வகையில் வலைவிசப்பட்டுவிட்டது. MLA களின் சந்தோசம் 3 நாட்கள்கூட நிற்கப்போவது இல்லை. சிபிஐ அமலகபிரிவு வருமனவரித்துறை IT ஆகியவை இந்த ஒப்பேரஷனில் கூட்டாக களம் இறங்கி விட்டதை பிரதமர் நேரடியாக கவனித்து வரும் நிலையில் சிக்க போவது MLA கள் மட்டும் அல்ல அவர்கள்சேர்த்து வைத்த அனைத்தையும் பறிக்க போவது உறுதி.