சனி, 28 மார்ச், 2020

அவர்களை நாம் அனைவரும் கைவிட்டுவிட்டோம்!.. ஓரிரவில் அனாதையாக்கப்பட்டு விட்டனர்!

சாவித்திரி கண்ணன் : நெஞ்சம் பதறவைக்கிறது இவர்கள் நிலை!
யார் நமது பளபளக்கும் சாலைகளையெல்லாம் உருவாக்கினார்களோ,
யார் நமது நகரங்களின் வான்முட்டும் கட்டிடங்களும், நமது வீடுகளும் உருவாக காரணமானவர்களோ,
யார் நமது பசி தீர ஹோட்டல்களில் சமையல் வேலைகளும்,சர்வர் வேலைகளும் செய்து நமக்கு தொண்டாற்றினார்களோ…,
யார் நமது சொகுசான வாழ்க்கைக்கு அடிதளமாக இத்தனை ஆண்டுகாலம் பாடுபட்டார்களோ…அவர்களை நாம் அனைவரும் சேர்ந்து கைவிட்டுவிட்டோம்! அவர்கள் ஓரிரவில் அனாதையாக்கப்பட்டுவிட்டனர்!
எந்த முன்யோசனையும் இல்லை! திட்டமிடலும் இல்லை!
திடீர் ஊரடங்கு! பஸ்,ரயில் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்தும் முடக்கம்!
வேலை இல்லை, கூலியும் இல்லை என்றால் நாளும் வேலை செய்து பிழைப்பு நடத்தும் கோடானு கோடி ஏழை,எளிய மக்கள் அடுத்த வேலை சாப்பாட்டிற்கு என்ன செய்வார்கள்…? எங்கு தங்குவார்கள்..?
இவர்கள், ’’வீட்டைவிட்டு வெளியே வராதே’’ என்று சொன்னால், வீட்டில் முடங்கிவிட வேண்டும்.மாலை ஐந்து மணிக்கு கைத்தட்டென்றால் தட்ட வேண்டும்.
’’மூடு கடைகளை!’’ ’’போகாதே வேலைக்கு!’’ ’’நடக்காதே ரோட்டில்!’’ ’’முடங்கி கிட வீட்டிலே!’’

பிரம்ம குமாரிகள் ராஜயோகினி தாதி ஜானகி காலமானார்!.. பிரம்மா குமாரிகள் அமைப்பின் பகல் கொள்ளை ..

பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் தலைமையகம், ராஜஸ்தான் மாநிலத்தில்
உள்ள மவுண்ட் அபுவில் இயங்கி வருகிறது. இதன் தலைமை நிர்வாகி தாதி ஜானகிக்கு வயது 104. வயது மூப்பு காரணமாக சுவாசம் மற்றும் செரிமானக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்தார்.
 மவுண்ட் அபுவில் உள்ள ஒரு மருத்துவனையில் கடந்த இரு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தாா். இருப்பினும் அவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைக்காததால் நேற்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது. தாதி ஜானகி உலகளவில் ஆன்மிக ஸ்தாபனத்தை நடத்தி வந்தார்.
All Non Followers Beware Stay Away from bk’s …bk are maniacs and you ebenezer just behaved in a same manner that cults and fake people behave you just said “just leave us alone” so who dont like bk. have no right to speak there mind and criticise bk.. Like or leave us alone!! This is typical cult behavior… You are the most dangerous cult the worst people i have ever seen…
https://hiddendoctrine.wordpress.com/2010/01/29/about-brahma-kumaris/

Sivasankaran Saravanan பிரம்மகுமாரிகள் என்ற அமைப்பு வள்ளுவர்கோட்டத்தில் லிங்க தரிசன கண்காட்சி ஒன்றை நடத்துகிறார்கள். அதிலே பாரதத்தின் வரலாறாக சில பேனர்களை காட்சிக்கு வைத்துள்ளனர். நாராயணன், கிருஷ்ணருடன் தொடங்குகிற அந்த வரலாற்றில் பிராமணர்கள் கலைகள் நிறைந்தவராக உள்ளனர். ராமர் தான் சத்ரிய வம்சத்தை ஆரம்பித்து வைக்கிறார். சீதையுடன் ராம ராஜ்யம் நடத்துகிறார் . ராவண ராஜ்யத்தில் கொடுமைகள் நடக்கின்றன. அதைத்தொடர்ந்து கலியுகத்தில் கலையம்சம் ஏதுமற்ற சூத்திர சாதியினர் வருகிறார்கள். அதைத்தொடர்ந்து குற்றங்கள் பெருகுகின்றன! மகாபாரத வம்சத்தில் சிவனுடைய அன்பை பெற்ற பிராமணர்கள் தற்போது அமைதியை ஏற்படுத்திவருகிறார்கள்! அதுவும்போக சிவபரமாத்மா தான் ஏசு வாகவும், இப்ராகிமாகவும், புத்தராகவும் அவதரித்து முறையே கிறித்தவ, இஸ்லாமிய, பவுத்த மதங்களை பரப்புகிறார்..
;இலங்கையில் இந்த பிரம குமாரிகள் அமைப்பு  கிழக்கு மாகாணத்தில்  ஒரு இஸ்லாமிய வணக்கஸ் தலத்தை அபேஸ் பண்ணி  உள்ளது ...விபரங்கள்இதோ :

சுவாமிஜிகளுக்கு பணம், சௌகரியங்கள், அங்கீகாரம் எல்லாம் தேவைப்படுகிறது

Dhinakaran Chelliah : இந்தக் கதைக்கும் கொரோனா பீதியில் காணமற் போன சற்குரு,ஶ்ரீஶ்ரீ,நித்தி,பாபா,தேவ்,ராம்
யாருக்கும் தொடர்பில்லை!
ராமலிங்கம் எனது நெருங்கிய நண்பன்.எங்கள் இருவருக்கும் நிறைய விடயங்களில் உடன்பாடு உண்டு ஆன்மீகம் ஒன்றைத் தவிர.ஆன்மீகத் தேடலில் அவனது சமீபத்திய கண்டுபிடிப்பு "பூஜிய ஸ்ரீ கல்யாண் சுவாமிகள்".
பக்த கோடிகள் மத்தியில் சுவாமிஜி மிகவும் பிரபல்யமானவர்.அவரது ஆன்மீகச் சொற்பொழிவு,வேத பாராயணம்,
இதிகாச விளக்கவுரை,மந்திர உச்சாடனம்,பல மொழிகளில் அவர் எழுதிய ஆன்ம விசார நூல்கள் இவையனைத்தும் உலகமெங்கும் அவருக்கு
சிஷ்யர்களையும், பக்தர்களையும் தேடித் தந்தது.
சுவாமிஜி நடாத்திய "மந்திரம்" பயிற்சிப்
பட்டறைக்குச் சென்றதிலிருந்து ராமலிங்கம்
வெகு உற்சாகமாய் இருந்தான்.
எப்போது பார்த்தாலும் சுவாமிஜி பற்றித்தான் பேச்சு.அவர் செய்த அற்புதங்கள் பற்றி பெரிய பட்டியல் கொடுத்தான்.கொடிய நோய் உள்ளவர்கள்கூட நொடியில் குணமடைந்ததை
நேரில் பார்த்ததாய் கூறினான்.
சுவாமிஜியைச் சந்திக்கும் நாத்திகர்களும் கடவுள் பக்தியுள்ளவர்காக மாறிவிடுவார்களாம்.

சஞ்சீவ் பட்டுக்காகவும் கஃபீல் கானுக்காகவும் இந்திய நீதித்துறை வெட்கித் தலைகுனிந்து ...

‘அந்த வீட்டை நான் பார்வையிட்ட போது அதன்
சிதிலங்களிடையே, என் கண்ணில் பட்டது எரிந்து சாம்பலாகியிருந்த நிலையிலிருந்த
என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா தொகுதி. கொஞ்சம் பிழைத்திருந்த ஒரு புத்தகத்தை எடுத்து அட்டையைப் புரட்டினேன். உள்ளே ‘இஸான் ஜாஃப்ரி என்ற பெயர் மிக அழகிய கையெழுத்தில் எழுதப்படிருந்த விதத்திலேயே அந்த நபர் மீது
விருப்பங்கொண்டேன். கல்லூரிப் பருவத்தில் என்சைக்ளோபீடியா முழுவதையும் வாங்குவது என்பது எனது பெரிய கனவாக இருந்தது’
சில வருடங்களுக்கு முன் தெகல்காவில் இதைப் படித்தவுடன் இயல்பாகவே எழுதிய சஞ்சீவ் பட் மீது எனக்கு அன்பு பெருகியது. எனது கல்லூரிக் நாட்களில் மதுரை பாண்டியன் ஹோட்டல் அருகில் பல்கலைக்கழக படிப்பகமிருந்தது. எதோச்சையாக படிப்பகம் சென்ற என்னை அழகாக அடுக்கப்பட்டிருந்த என்சைக்ளோபீடியாதான் அதிகம் கவர்ந்தது. அதுவரை ரீடர்ஸ் டைஜஸ்ட் புத்தக விளம்பரத்தில்தான் என்சைக்ளோபீடியாவைப் பார்த்தது. பின்னர், எப்போது போனாலும் கலைக்களஞ்சியத்தை மட்டுமே புரட்டிக் கொண்டிருப்பேன்..

ஆயுதம் வாங்க நாம் போடும் பட்ஜெட் நம் உயிரை காக்க போவதில்லை!

Devi Somasundaram : பாதுகாப்பு என்பது அவசியமான ஒன்று தான்.ஆனால்
எதிரிகளிடம் இருந்து காக்க நாட்டில் மனிதர்கள் இருக்கனும். வெறும் நிலத்தை காத்து கொள்கிற நிலைக்கு நாம் ஆளாகிவிடக் கூடாது என்பதை இயற்கை நமக்கு உணர்த்தி செல்கிறது .
ஒரு பகுத்தறிவாளரா கொரானா ஏன் வந்தது என்பதை பரிணாம வளர்ச்சியில் இருந்தே ஏற்க முடியும் ..அவ்வகையில் அடுத்த காலங்களில் இது போன்ற கிருமிகள் உருவாகலாம் .. அப்படி கண்ணுக்கு தெரியாத எதிரியிடம் இருந்து நம்மை காக்க நாம் என்ன முக்கியத்துவம் தந்தோம் என்பதை கொரானா முகத்தில் அடித்து உணர்த்துகிறது .
ஆயுதம் வாங்க நாம் போடும் பட்ஜெட் நம் உயிரை காக்க போவதில்லை என்பதை அறிகிறோம்..நம் டாங்குகள், பீரங்கிகள், ஏவுகணைகள், போர் கருவிகள் எதுவும் தற்பொழுது நம்மை காக்கப் போவதில்லை .
வருமா, வராதா என்று தெரியாத war ,க்கு நாம் தந்த முக்கியத்துவத்தை நம் சுகாதார கட்டமைப்புக்கு தர தவறியதன் பலனை உலகம் இன்று அனுபவிக்கின்றது .

கொரோனா வைரஸ்: 27,000 பேர் உலக அளவில் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ்: 27,000 பேர் உயிரிழப்பு!மின்னம்பலம் : கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 6 லட்சத்தை தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 27,000த்தை தாண்டியுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவியுள்ளது. 180 நாடுகளைப் பாதித்துள்ளது. சீனாவில் இதன் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் 104,256 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,704 ஆக உள்ளது. நேற்று முதல் இன்று வரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியைப் பொறுத்தவரை கொரோனா பரவலைத் தடுக்க முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது.
அங்கு 86,498 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9,134 பேர் பலியாகியுள்ளனர். நேற்று ஒருநாள் மட்டும் 969 பேர் உயிரிழந்தனர். ஸ்பெயினில் நேற்று ஒரே நாளில் மட்டும் 773 பேர் உயிரிழந்தனர். இறப்பு எண்ணிக்கை 5,138 ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயினில் 65,719 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் சீனா மருத்துவமனை .. கொரோனாவுக்கு உடனடி சிகிச்சை! சீனா அறிவிப்பு

கொரோனா பாதுகாப்பு பணியில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க இந்தியாவில் உடனடி மருத்துவமனை - சீனா அறிவிப்புமாலைமலர் :கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க இந்தியாவிலும் உடனடி மருத்துவமனை கட்டிக்கொடுக்க தயார் என சீனா அறிவித்துள்ளது. சீனாவில் 10 நாளில் கட்டப்பட்ட கொரோனா சிகிச்சை மருத்துவமனை பீஜிங சீனாவில் முதன் முதலில் வுகான் நகரில் தான் கொரோனா நோய் பரவியது. அங்கு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நிலைமை சென்றதும் அவசர அவசரமாக புதிய மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டன.
இவ்வாறு வுகான் நகரில் சீன ரெயில்வே கட்டுமான கழகம் 10 நாளில் மிகப்பெரிய மருத்துவமனை ஒன்றை கட்டி முடித்தது. இதில் 1600 படுக்கைகள் இருந்தன.
இப்போது இதேபோன்ற மருத்துவமனையை இந்தியாவிலும் கட்டிக் கொடுக்க தயாராக இருப்பதாக சீனா கூறியுள்ளது.
சீன ரெயில்வே கட்டுமான கழக அதிகாரி ஒருவர் வெளியிட்ட தகவலை மேற்கோள்காட்டி சீனாவில் இருந்து வெளிவரும் அரசு பத்திரிகையான ‘குளோபல் டைம்ஸ்’ இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
ஆனால் இந்தியா கேட்டுக் கொண்டால் மட்டுமே இவ்வாறு மருத்துவமனை கட்டிக் கொடுக்க முடியும். அதற்கான சப்ளை பொருட்கள் தடையின்றி கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அந்த அதிகாரி கூறியிருக்கிறார்.

அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று? பலத்த சந்தேகம் ,,, உள்துறை அமைச்சரை காணவில்லை..

Is this true ? Home minister Amit Shah has contracted Coronavirus. Last week he had gone to Italy , and did not get it tested after coming back causing further infection...
மின்னம்பலம : கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி 906 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர்
உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலம் கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனாவால் கேரளாவில் உயிரிழந்த முதல் நபர் இவர் ஆவார்.
கொரோனா வைரசால் உயிரிழப்பு மட்டுமின்றி நாட்டில் பல்வேறு தாக்கங்களும் ஏற்பட்டு வருகின்றன. பல்வேறு மாநிலங்களிலும் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். குழந்தைகளுடன் பல நூறு கிலோமீட்டரையும் பொருட்படுத்தாமல் சொந்த ஊருக்குக் கிளம்பும் தொழிலாளர்களையும் காண முடிகிறது.

தமிழகத்தில் 41 பேருக்கு கரோனா... தீவிர கண்காணிப்பில் 10 மாவட்டங்கள்... சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி

Coronation for 41 in Tamil Nadu-Interview with Health Secretary Beela Rajeshநக்கீரன் -கலைமோகன் : சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் இருமல் பிரச்சனையுடன் யாரும் இருக்கிறார்களா என்று கண்காணிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 41 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்தவர்கள், வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் தொடர்பான தகவல்களை தொடர்ந்து பெற்று வருகிறோம். இதனால் தனிமைப்படுத்தப்படுவோர்கள்  எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. அதேபோல் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்த ஆய்வும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி கொரோனா வார்டில் ஒரே நாளில் 3 பேர்கள் உயிரிழப்பு .. பிந்திய செய்தி

தினத்தந்தி : கன்னியாகுமரியில் அரசு கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. இதில், கன்னியாகுமரி, கோடிமுனை பகுதியை சேர்ந்த 40 வயது நபர் கடந்த 26ந்தேதி மரணம் அடைந்து உள்ளார்.
அவருக்கு ஏற்கனவே மூளைக்காய்ச்சல் மற்றும் கல்லீரல் பாதிப்பு இருந்தது என கூறப்பட்டது. தொடர்ந்து இந்த வார்டில் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கேரளாவில் வேலை பார்த்து, திரும்பி வந்த 66 வயதான மீனவருக்கு காய்ச்சல் இருந்ததால், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அவர் இன்று உயிரிழந்தார். சவுதி அரேபியாவில் இருந்து கடந்த 13ந்தேதி ஊர் திரும்பி இருந்த இவருடைய மகன், ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் உள்ளார்.
அதே வார்டில் இருந்த 2 வயது குழந்தை மற்றும் 24 வயது இளைஞரும் இன்று உயிரிழந்தனர். 3 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகளும் இன்னும் வெளிவரவில்லை.
இந்நிலையில், குமரி மருத்துவமனையின், கொரோனா வார்டில் உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, ஏற்கனவே இங்கு உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டது. கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் கொரோனா வார்டில் இன்று ஒரே நாளில் 3 பேர் உள்பட 6 பேர் வரை உயிரிழந்து உள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் 2,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி தவிப்பதாக தகவல்...

இலங்கையில் 2,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி தவிப்பதாக தகவல்...zeenews.india.com/tamil : கொரோனா வைரஸ் வெடிப்பை தொடர்ந்து அரசாங்கம் விதித்த முழுஅடைப்பு உத்தரவால் இலங்கையில் சிக்கித் தவிக்கும் 16,900 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் 2,000-க்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 கொரோனா வைரஸ் வெடிப்பை தொடர்ந்து அரசாங்கம் விதித்த முழுஅடைப்பு உத்தரவால் இலங்கையில் சிக்கித் தவிக்கும் 16,900 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் 2,000-க்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை இலங்கை வெளியிட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள், அங்கு சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் 2,439 பேர் இந்தியர்களே என தெரிவிக்கின்றன. அதேவேளையில் சீனர்கள் 2,167-பேர் சிக்கி தவிக்கின்றனர் எனவும் இலங்கை சுற்றுலா மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக எந்தவொரு நாட்டிலிருந்தும் பட்டய விமானங்களை இங்கு தரையிறக்கவும், விடுமுறை நாட்களில் அல்லது வேலை நோக்கங்களுக்காக நாட்டில் சிக்கித் தவிக்கும் குடிமக்களை வெளியேற்றவும் இலங்கை அனுமதிக்கும் என்று அறிவித்த ஒரு நாள் கழித்து இந்த தரவு வெளியிடப்பட்டுள்ளது.

IMF உலகப் பொருளாதாரம் வீழ்ந்துகொண்டிருக்கிறது: ஐ.எம்.எஃப் அறிவிப்பு!

உலகப் பொருளாதாரம் வீழ்ந்துகொண்டிருக்கிறது: ஐ.எம்.எஃப் அறிவிப்பு!மின்னம்பலம் : கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பல நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்கா எதையும் எதிர்த்துப் போராடும் என்று கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று இரவு, “மூடப்பட்ட  வென் டிலேட்டர் நிறுவனங்கள் மீண்டும் தங்கள் உற்பத்தியைத்  தொடங்குங்கள்... ம்... வேகமாக’ என்று அவசர ட்விட் செய்துள்ளார். ஏனெனில்  அமெரிக்கா கொரோனாவால் கடுமையான பாதிப்புகளை சந்தித்து  வருகிறது.  அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துவிட்டது. இதனால்தான் டிரம்ப் இப்படி வெண்டிலேட்டர் நிறுவனங்களை வேகப்படுத்தியிருக்கிறார்.
இந்நிலையில்,  “நாம் கடுமையான பொருளாதாரப் பின்னடைவுக்குள் நுழைந்துள்ளோம்” என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கூறியுள்ளார்.  நேற்று (மார்ச் 27) ஆன் லைன் மூலம் உரையாற்றிய  சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, “கொரோனா வைரஸ் தொற்று உலகப் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்துள்ளது,

காபூல் குருத்வாராவில் தாக்குதல் நடத்தியவான் கேரளாவை சேர்ந்த முஹ்சின் திரிகாரிபூர்


காபூல் குருத்வாராவில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி கேரளாவை சேர்ந்தவன் தினத்தந்தி :  காபூல் குருத்வாராவில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி கேரளாவை சேர்ந்தவன் என இந்திய உளவுத்துறை தெரிவித்து உள்ளது. புதுடெல்லி ; ஆப்கானிஸ்தான் தலைகர் காபூல் சீக்கிய குருத்வாரா ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர். 150க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் 4 தீவிரவாதிகள் ஈடுபட்டனர். அதில் ஒருவன் அபு காலித் அல் இந்தி. கொல்லப்பட்ட பயங்கரவாதியின் பெயர் அபு காலித் அல் இந்தி என்றும் கோரசன் மாகாணத்தை சேர்ந்த ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர் (ஐ.எஸ்.கே.பி) என்றும் அடையாளம் காணப்பட்டு உள்ளார், உண்மையில் அவர் ஒரு இந்தியர் ஆவார். இவர் கேரள மாநிலத்தில் இருந்து சென்று ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து உள்ளார். இதனை இந்திய புலனாய்வு அமைப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன. சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் பாகிஸ்தானியர்களால் தீவிரவாதியாக்கப்பட்டார்.

பால் வாங்க சென்ற கணவர்”.. அடித்து கொன்ற போலீஸ்.. – கதறும் மனைவி..!


.sathiyam.tv : இந்தியா முழுவதும் கொரோனா நோய் பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவை மீறி வெளியே வரும் பலரையும் போலீசார் கண்டித்தும் கெஞ்சியும் வீட்டிற்கு அனுப்பும் பல வீடியோக்கள் நேற்றிலிருந்து சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே செல்லலாம் என அரசு உத்தரவிட்டிருக்கும் நிலையிலும் காவல்துறையினரால் பலர் தாக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் பால் வாங்குவதற்காக வீட்டைவிட்டு வெளியே வந்த 32 வயது இளைஞர் ஒருவர் போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். அதற்குப் பிறகு அவர் மரணமடைந்துள்ளார்.
அவரது குடும்பத்தினர் போலீசார் தாக்கியதால் ஏற்பட்ட காயங்கள்தான் அவரது மரணத்திற்குக் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

‘கொரோனா வைரசை எதிர்த்து போரிட ஒன்றுபடுவோம்’ - டிரம்புக்கு சீன அதிபர் ஜின்பிங் அழைப்பு

‘கொரோனா வைரசை எதிர்த்து போரிட ஒன்றுபடுவோம்’ - டிரம்புக்கு சீன அதிபர் ஜின்பிங் அழைப்பு தினத்தந்தி : அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் சீன அதிபர் ஜின்பிங் தொலைபேசியில் பேசினார். கொரோனா வைரசை எதிர்த்து ஒன்றுபட்டு போரிடுவோம் என அவர் அழைப்பு விடுத்தார். பீஜிங், சீனாவில் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந் தேதி முதன்முதலாக கொரோனா வைரஸ் உருவானது. ஆனால் அது பற்றிய பாதிப்பு, வீரியம் குறித்த தகவல்களை சீனா, உலகத்துடன் பகிர்ந்து கொள்ளவில்லை; மாறாக இதுபற்றிய தகவல்களை வெளியிட்டவர்களை தண்டித்தது என்றெல்லாம் புகார் எழுந்தது. இதில் சீனாவை அமெரிக்கா சாடியது. இந்த வைரஸ் பரவியதில், சீனா வெளிப்படையாக நடந்து கொள்ளாததால்தான் இன்றைக்கு உலகமே அதற்கான விலையை கொடுத்துக் கொண்டிருக்கிறது என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பரபரப்பு கருத்து வெளியிட்டார்.

CAA, NPR, NCR இல் காட்டிய முனைப்பு கொரோனாவில் காட்டவில்லை ..

வளன்பிச்சைவளன் : கண் கெட்ட பிறகு சூரிய நமஸகாரம்  CAA திருத்த சட்டத்தை அமல் படுத்துவதில் பிடிவாதம் காட்டிய  பாஜக அரசு கொரோனா  CAA  போராட்டத்தை  தடுக்க பிரார்தனை மூலம் கொண்டு வந்துள்ளோம் என்கிற கொடூர மனநிலை கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா பற்றி செய்திகள் பிறகு சீனாவில் தீவிர பாதிப்பு என்று செய்திகள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெளிவந்தன.
காற்றில் பரவும் தன்மை கொண்ட இக் கொடிய வைரஸ் பற்றி பாஜக மோடி அரசு பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை அவர்கள் கவனம் இந்துராஷ்டிரம் அமைப்பது.
தங்கள் கனவுத் திட்டத்தை நிறைவேற்ற CAA சட்டத்தை தங்கள் எண்ணம் போல் திருத்த அடிமை அதிமுக அரசு, வழக்கிற்கு விலை போன ப மா க அன்புமணி துணை கொண்டு நிறைவேற்றியது.
மக்களை கூறுபோடும் இம்முயற்சியை மாணவர்கள் எதிர்த்து போராட அவர்களை காவல்துறை உதவியுடன் கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து நாடு கிளர்ந்து எழ நாட்டின் பல்வேறு பகுதிகளில் CAA எதிர்ப்பு போராட்டம் உருப்பெற பாஜக தன் கனவு இந்துராஷ்டிர விற்கு எதிரானதாக கருதி ஒடுக்க முயன்றது.
எந்த சூழலிலும் CAA திரும்பப் பெறமாட்டாது என பாஜக அரசு தன் முழு கவனத்தையும் NPR, NCR ஐ அமுல் படுத்துவதில் கண்பட்டை அணிந்த குதிரை போல் ஒரே நோக்கம் என மூர்க்கமாக இந்த CAA எதிர் போராட்ட ங்களை ஒடுக்க மட்டுமே சிந்தித்தது.

வெள்ளி, 27 மார்ச், 2020

இத்தாலியில் 101 வயது தாத்தா கொரோனாவில் இருந்து மீண்டு வந்தார்.

இத்தாலியில் 101 வயது தாத்தா கொரோனாவில் இருந்து மீண்டு வந்தார்...tamil.cdn.zeenews.com/: கொரோனா வைரஸ் நாவல் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை தொற்றி உலகம் முழுவதும் 24,000-க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்றுள்ளது.
இதில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இத்தாலியும் ஒன்றாகும், மேலும் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இந்த சூழ்நிலையில், இத்தாலியின் ரிமினியில் 101 வயதான ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளார். Mr. P என அடையாளம் காணப்பட்டுள்ள அவர், தற்போது குடும்பத்தினருடன் வீட்டிற்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரிமினியின் துணை மேயர் குளோரியா லிசி கருத்துப்படி, Mr. P கடந்த 1919-ல் பிறந்தார், கொரோனா வைரஸுக்கு நேர்மறை தொற்று முடிவு பெற்ற பின்னர் கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நடிகர் டாக்டர் சேதுராமன் திடீர் மரணம்.. கண்ணா லட்டு தின்ன ஆசையாவில் அறிமுகம்

sethuraman-passed-away.hindutamil.in : நடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மறைவால் திரையுலக பிரபலங்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் சேதுராமன். அந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் தொடர்ச்சியாக 'வாலிப ராஜா', 'சக்க போடு போடு ராஜா' மற்றும் '50/50' உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பராவார்.
நேற்று (மார்ச் 26) இரவு சென்னையில் வீட்டில் இருக்கும் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அருகிலிருந்த மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அங்குச் சிகிச்சை பலனின்றி இரவு 8:30 மணியளவில் அவருடைய உயிர் பிரிந்தது. இவருக்கு வயது 37. 2016-ம் ஆண்டு தான் இவருக்கும் உமையாளுக்கும் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் ஒரு மகள் இருக்கிறார்.

புதிதாக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்களை நியமிக்க முதல்வர் உத்தரவு


மாலைமலர் : தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 530 மருத்துவர்கள், 1,000 செவிலியர்களை நியமனம் செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். புதிதாக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்களை நியமிக்க முதல்வர் உத்தரவு !
சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து இன்று சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 530 மருத்துவர்கள், 1,000 செவிலியர்கள், 1,508 ஆய்வக டெக்னீசியன்களை நியமனம் செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக காலியிடங்களை நிரப்பவும், மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்படும் நபர்கள் 3 நாளில் பணியில் சேரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. புதிதாக 200 ஆம்புலன்ஸ்களை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்

நாளை முதல் ராமாயணம்: விரைவில் மகாபாரதம் .. சந்தடி சாக்கில் ஆர் எஸ் எஸ் பிரசாரம்.

மீம்ஸ் . தினகரன் செல்லையா
Muthu Selvan : சந்தடி சாக்கில் சங்கிகளின் வஞ்சக வலக்காரம். அரசின் தொலைக்காட்சிகளில் மீண்டும் மகாபாரதம், இராமாயணத் தொடர்களை வழங்கிடச் சூழ்ச்சித் திட்டம். *historical drama-epic series" என இவற்றுக்கு வரலாற்றுச் சாயம் பூசுவதைக் கவனியுங்கள்.
வெப்துனியா :நாளை முதல் ராமாயணம்: விரைவில் மகாபாரதம் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக முதல் முறையாக உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். குறிப்பாக இந்தியாவில் 130 கோடி மக்களும் வீட்டிலேயே உள்ளனர் என்பது இதுவரை வரலாற்றில் இல்லாத ஒன்று. இந்த நிலையில் வீட்டில் முடங்கி கிடக்கும் பொதுமக்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு தொலைக்காட்சி தான். செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் தான் தற்போது மக்களுக்கு பொழுது போக்காக உள்ளது

கொரோனாவுக்கு ஆல்கஹோல் குடித்த 300 ஈரானியர்கள் உயிரிழப்பு


வெப்துனியா :கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பலியாகி வரும் நிலையில் இந்த மரணத்தை எப்படி தடுத்து நிறுத்துவது என்று உலகெங்கும் இருக்கும் அரசுகள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் இரவுபகலாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்த வதந்தியை உண்மை என நம்பி ஈரான் நாட்டில் 300 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
செய்தியை படித்த நூற்றுக்கணக்கானோர் மெத்தனால் கலந்த ஆல்கஹாலை குடித்துள்ளனர். இதனையடுத்து அனைவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஆல்கஹால் குடித்த 300 பேர் மரணம் அடைந்துவிட்டதாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களில் பலர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிர்ச்சி தரும் செய்திகள் வெளியாகியுள்ளது.

ஸ்பெயினில் 24 மணிநேரத்தில் 769 உயிரிழப்புக்கள்

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 769 பேர் இறந்துள்ளனர் என்று அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பு தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் அதிகபட்ச மரணங்கள் நடந்தது இதுதான். அதற்கு முந்தைய நாள் 655 பேர் இறந்தனர். இதுவரை ஸ்பெயின் நாட்டில் 4,858 பேர் கோவிட்-19 தொற்றால் இறந்துள்ளனர். இதுவரை 64,059 பேர் பாதிக்கப்பட்டுள்ள அந்த நாட்டில் 9,357 பேர் குணமடைந்துள்ளன

BBC நேரலை : கொரோனா: தற்காலிக பிணவறையாக விமான நிலையத்தை பயன்படுத்த முடிவு

கேரளாவில் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று
தென் இந்திய மாநிலமான கேரளாவில் புதிதாக 39 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. காஸர்கோடில் 34 பேரும், கன்னூரில் இருவரும், திருச்சூர், கோழிக்கோடு மற்றும் கொள்ளம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 176ஆக உயர்ந்துள்ளது. இதில் 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்காலிக பிணவறையாக விமான நிலையத்தை பயன்படுத்த முடிவு
கொரோனா வைரஸ் பாதிப்பு பிரிட்டனில் மிகவும் மோசமான சூழலை அடையும் நிலை ஏற்பட்டால், பிர்மிங்ஹாம் விமான நிலையத்தை, 12,000 உடல்களை வைக்கும் வசதியுள்ள தற்காலிக பிணவறையாகப் பயன்படுத்த பிரிட்டன் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
ஒரு சரக்கு பெட்டகம் மற்றும் இரு முனையங்களை கொண்ட இந்த விமான நிலையத்தில், மோசமான சூழல் ஏற்பட்டால் ஆரம்ப நிலையில் 2,500 உடல்கள் வைக்கப்படும்.
"அந்த விமான நிலையத்தை பிணவறையாகப் பயன்படுத்த உண்மையில் நாங்கள் விரும்பவில்லை. எனினும், எதற்கும் தயாராக இருக்கிறோம்," என்று சேன்ட்வெல் கவுன்சிலின் துணை தலைவர் வாசிம் அலி தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு காலவரையின்றி ஒத்திவைப்பு. கரோனா எதிரொலி..

நக்கீரன் :உலக அளவில் 190 நாடுகளில் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ள
கரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் நூற்றுக்கணக்கானோரை பாதித்துள்ளது. இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக நீட்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய மனிதவளத்துறை மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான அட்மிட் கார்டுகள் இன்று வழங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் இந்தத் தேர்வானது ரத்து செய்யப்படுவதாக மனித மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.
 பல்வேறு மாநிலங்களில் பிளஸ் 2 தேர்வுகள் முடியாத நிலையில், மே 3ஆம் தேதி நடைபெறவிருந்த நீட்தேர்வு ஆனது தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல காலவரம்பின்றி எந்தவித தேதியும் குறிப்பிடப்படாமல் நீட்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

விவசாயிகள் மீது தடியடி! சந்தையில் இருந்து திரும்பும் போது போலீஸ் அடாவடி! காய்கறிகள் விலை உயரும்


rnakkheeran.in - எஸ்.பி. சேகர் : > விளைந்த காய்கறிகளை சந்தைகளுக்கு சென்று கொடுத்துவிட்டு திரும்பும் விவாயிகள் மீது போலீசார் தடியடி நடத்துவதால் தமிழக விவசாய சங்கங்கள் அதிரடி தீர்மானம் நிறை வேற்றியுள்ளன.  இதனால், காய்கறிகள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் சங்கம், தற்சார்பு விவசாயிகள் சங்கம்,  தமிழ் விவசாயிகள் சங்கம், அகில இந்திய மக்கள் சேவை இயக்கம் ஒன்றிணைந்து தமிழக அரசுக்கு கேள்விகள் எழுப்பி தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. அதில்,  ‘’தமிழக அரசே, காய்கறிகள் அத்தியாவசிய பொருட்களில் உள்ளதா? இல்லையா? நேற்று மட்டும் தமிழகம் முழுவதும் இருக்கும் தினசரி காய்கறி சந்தைக்கு காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரும் போது மட்டும் உழவர்களை  அனுமதித்துவிட்டு, அவர்கள் திரும்பி செல்லும்போது காவல்துறையினர் தடியடியை பரிசாக கொடுத்து அனுப்பியுள்ளார்கள்.

ஊரடங்கு உத்தரவு: உணவின்றி 135 கிலோமீட்டர் நடந்தே ஊருக்குச் சென்ற வாலிபர்!

Surviving on Just Water, Maha Labourer Walks 135 km to Reach His Village After Coronavirus Lockdown He managed to catch the last train from Pune to Nagpur, but as the government later enforced restrictions on all sorts of travel, he got stranded in Nagpur.
ஊரடங்கு உத்தரவு: உணவின்றி 135 கிலோமீட்டர் நடந்தே ஊருக்குச் சென்ற வாலிபர்!மின்னம்பலம் : மகாராஷ்டிரா மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவால் சாப்பிட உணவுகூட இல்லாமல் 135 கிலோமீட்டர் நடந்தே தினக்கூலி வாலிபர் ஒருவர் சொந்த ஊரை அடைந்துள்ளார்.
இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவை மகாராஷ்டிரா அரசு கடுமையாகப் பின்பற்றி வருகிறது. வாகனங்கள் ஏதும் ஓடாததால் அங்குள்ள மக்கள் மற்ற இடங்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சந்த்ராபுர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான தினக்கூலி வாலிபர் நாக்பூரில் பணிபுரிந்து வந்துள்ளார்.
தற்போது வேலை இல்லாததால் சொந்த மாவட்டத்துக்குச் செல்ல முடிவு செய்தார். வாகனம் ஏதும் இல்லாததால் நடந்தே சொந்த ஊரை அடைய வேண்டும் என எண்ணி நடக்க ஆரம்பித்தார். சுமார் 135 கிலோமீட்டர் தூரம் கடைகள் எதுவும் இல்லாததால் சாப்பிடுவதற்கு உணவின்றி நடந்தே சொந்த ஊரை அடைந்துள்ளார்.

கொரோனா: மத்திய அரசு செய்யத் தவறியதும் செய்ய வேண்டியதும்!


கொரோனா: ஒன்றிய அரசு செய்யத் தவறியதும் செய்ய வேண்டியதும்!
மின்னம்பலம் :  கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பொது சுகாதார அவசரநிலையைச் சமாளிக்க ஒன்றிய அரசைவிட மாநில அரசுகள்தான் துரிதமாகச் செயல்பட்டு குறிப்பிடத்தக்க முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளன. அதிலும் கேரளம் மற்றும் ஒடிசா மாநில அரசுகள் இதுபோன்ற நெருக்கடி நேரத்தில்
அரசு இயந்திரம் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்துள்ளன. ஆனால், இந்த நெருக்கடியின் தீவிரம் தெளிவான பின்பும், எவ்வகைத் திட்டமிடலும் இல்லாமல் ஊரடங்கு உத்தரவு போடுவதும், மக்கள் வீட்டிலிருந்துகொண்டு Physical Distancing-ஐ கடைப்பிடிப்பதோடு
மற்றவர்களுக்கும் உதவ வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கைகூப்பி வேண்டிக் கொண்டதையும் தவிர, ஒன்றிய அரசு தன்னுடைய மிகப்பெரிய பொறுப்புகளை உணர்ந்து செயல்படத் தொடங்கவில்லை.
கொரோனாவுக்கு எதிரான போராட்டம் ஒரு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியாக விஸ்வரூபம் எடுக்கக் காத்திருக்கிறது. கொரோனா பரவுவதைத் தடுக்க மக்கள் நடமாட்டத்தையும் ஒன்று கூடுவதையும் தடுக்கும் நோக்கத்தோடு போடப்பட்டுள்ள 21 நாட்களுக்கான ஊரடங்கு உத்தரவு, இந்தியப் பொருளாதாரத்தை அசைத்துப்பார்க்கப் போகிறது.

உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு 24 ஆயிரத்தை தாண்டியது

தினத்தந்தி : வாஷிங்டன், சீனாவில் உருவான உயிர்கொல்லியான கொரோனா வைரஸ் உலக நாடுகளில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்த கொடிய வைரசால் தினந்தோறும் மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிகின்றனர். இதனால் உலக அளவில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் சுமார் 3 ஆயிரம் பேர் இந்த கொடிய நோயால் பலியாகினர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதே போல் நேற்று ஒரே நாளில் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனா ஒரு கடவுள் அவதாரமாம் டாக்டர் கமலா செல்வராஜ் அருள்வாக்கு ..வீடியோ

என்னதான் படிச்சு டாக்டராகி இருந்தாலும் . என்னதான் தொலைக்காட்சிகளில் ஓயாமல் முற்போக்கு வகுப்பு எடுத்தாலும் ... பாப்பாத்தி பாப்பாத்திதான் .
உலகத்தின் எல்லா கண்றாவியையும் மதத்தின் மேலே ஏற்றும் கோயில் வியாபார புத்தி .
கடவுள் என்று இவர் சொல்வது இவர்களின் பாரம்பரிய கோயில் வியாபார வசூலுக்குத்தான் .
இதையெல்லாம் இவர் ரூம் போட்டு சிந்தித்து செய்ய தேவை இல்லை .. அது இவர்களின் கைபர் ஜீன்லையே இருக்கிறது .. அது பாட்டுக்கு தானே வரும்.
இவர் செயற்கை கருத்தரிப்பு நிபுணி என்று பார்ப்பன ஊடங்களால் ஓவர் பில்டப் கொடுக்க படுபவர்
குழந்தை கருத்தரிப்பையும் கடவுள்கிட்டே விட்டுட வேண்டியதுதானே ?
அதில் மட்டும் என்ன செயற்கை புடலங்காய் தேவை இருக்கிறது இந்த அம்மணிக்கு? 

திராவிட பெருநிலப்பரப்பின் மக்களை கொன்றவர்களை அவதாரங்கள் என்பதுதான் பார்ப்பனீயம் .. 
இன்று டாக்டர் கமலா செல்வராஜ் (பார்ப்பனர் . நடிகர் ஜெமினி கணேசனின் மகள்)
 கொரோனைவை அவதாரம் என்று கூறுவது ஒரு தற்செயலாக வழுக்கி விழுந்த வார்த்தை அல்ல! 
பெரும்பாலும் மண்ணின் மைந்தர்களை வகை தொகை இல்லாமல் கொன்ற ஆதிக்க வாதிகளை அவதாரங்கள் என்பார்கள் 
அடுத்த வகை அவதாரங்கள் என்பது பார்ப்பனீயத்தால் கொலை செய்யப்பட்ட பரீட்சித்து மகராஜா போன்றவர்களையும் அவதாரங்கள் என்று கூறி அவர்களை விழுங்கி செரித்து விடுவார்கள். 
அவதாரங்கள் என்பது பார்ப்பனீயத்தின் கதாநாயகர்கள். 

இலங்கை வடமாகாண ஊரடங்கு நேர பொது சேவைகள் .. ஆளுநர் திருமதி சார்ல்ஸ் அறிவிப்பு

velippadai.com  : உள்ளூர் பலசரக்கு கடைகள் பொது மக்களின் தேவைகளுக்காக தொடர்ந்து திறந்து நடாத்துவதற்காக அனுமதி வழங்கபட்டுள்ளது. சுற்று
வட்டாரத்தில் உள்ள மக்கள் வாகனங்களை பயன்படுத்தாது நடந்து சென்று தமக்கு தேவையான பொருள்களை வாங்குவதற்கு அனுமதியளிக்கபட்டுள்ளது என்று வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பில் ஆளுநரின் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வடமாகாண ஆளுநர் செயலகத்தில் யாழ் மாவட்ட கட்டளை தளபதி, யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர், யாழ் மாவட்டச் செயலாளர், மற்றும் ஏனைய அரச உயர் அதிகாரிகள் ஆகியோரின் பங்குபற்றலில் இன்று கலந்துரையாடல் இடம்பெற்றது.
ஊரடங்கு நேரத்தில் பொதுமக்களுக்கான சேவைகள் கிடைப்பதற்கான நடை முறைகள் தொடர்பில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நேரத்தில் பொதுமக்களிற்கான சேவைகள் கிடைப்பதற்கான நடைமுறைகள்
பலசரக்கு பொருள்கள்
உள்ளூர் பலசரக்கு கடைகள் பொது மக்களின் தேவைகளுக்காக தொடர்ந்து திறந்து நடாத்துவதற்காக அனுமதி வழங்கபட்டுள்ளது.

ஒரு பார்ப்பனரின் வளர்ச்சி அவரின் சமுகத்துக்கே வளர்ச்சியாகிறது .. ஆனால் ஏனைய ஜாதி தனி நபர்களின் வளர்ச்சியோ ?

Devi Somasundaram : தனி நபரும் பொது சமூகமும் .
ஒரு தனி நபர் வளர்ச்சி, பொது சமூக வளர்ச்சி இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றது. ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதும் ஆகும்.
இது என்ன இரண்டு புறமும் என்று நினைக்கலாம்..ஆம் இரண்டு புறமும் தான்.
ஒரு முதலாளியின் தனிபட்ட வளர்ச்சி முதலாளிவர்க்க நலனை பாதுகாக்கும் வகையில் அது வர்க்க வளர்ச்சியும் ஆகும்..ஆனால் ஒரு தொழிலாளியின் தனிபட்ட வளர்ச்சி வர்க்க பாதுகாப்பாக இருக்க முடியாது என்ற வகையில் அது பொது சமூக வளர்ச்சி ஆகாது .
தனி நபர் வளர்ச்சி வர்க்க வளர்ச்சியா இரு வேறு மாறுபட்ட பலனை தருவது ..
இன்னும் தெளிவாக சொல்வதென்றால் ஒரு பிராமணரின் வளர்ச்சி பிராமணிய வளர்ச்சியோடு தொடர்புடையது .. அவர் தனி நபரா தன்னை முன்னிறுத்தி கொள்வதால் அவர் சமூகம் மொத்தமா வ்ளரும் ..
ஆனால் பாப்பனரல்லாத ஒடுக்கப்பட்ட சமூகத்தில் ( இதில் ஒடுக்கப்பட்ட என்பது பாப்பனரல்லாத மீதி மொத்த சமூகத்தையும் குறிக்கும் ) ஒரு தனி நபரின் வளர்ச்சி ஒடுக்கப்பட்ட சமூக வளர்ச்சியாக இருக்க வாய்ப்பில்லை .அதற்கான காரணம் பலவாக இருக்கலாம்
இன்னும் எளிமையா சொல்கிறேன் ..சோ ராமசாமி என்ற தனி நபர் தன்னை முன்னிலைபடுத்தி அதாவது தனி நபரை முன்னிலை படுத்தி செய்யும் அரசியல் அவர் சார்ந்த சமூக வளர்ச்சியோடு தொடர்புடையது ..அதுவே ஒரு ஆதித்தனாரோ, குமார மங்களமோ தன்னை முன்னிலை படுத்தும் போது அது அவர்க்கு மட்டுமான வளர்ச்சியாக மட்டுமே இருக்கும் .

வியாழன், 26 மார்ச், 2020

கொரோனாவை கட்டுப்படுத்த ரூ.370 லட்சம் கோடி வழங்க ஜி20 நாடுகள் முடிவு

dinakaran :வாஷிங்டன்: கொரோனாவை கட்டுப்படுத்த 5 டிரில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் ரூ.370 லட்சம் கோடி) வழங்க ஜி20 நாடுகள் முடிவு செய்துள்ளது. உலக நாடுகளுக்கு வழங்க ஜி20 மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, பின்ரான்ஸ்ம் ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஜி-20யில் உள்ளன.

ஏப்ரல்-மே மாதத்தில் உச்சநிலை அடையும்: தமிழ்நாட்டில் 1 லட்சம் பேரை கொரோனா தாக்கும் அபாயம்

மாலைமலர் : வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் உச்சநிலையை அடையும் என்றும் தமிழ்நாட்டில் 1 லட்சம் பேர் வரை தாக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல்-மே மாதத்தில் உச்சநிலை அடையும்: தமிழ்நாட்டில் 1 லட்சம் பேரை கொரோனா தாக்கும் அபாயம் கொரோனா வைரஸ் புதுடெல்லி: இந்தியாவில் கோரோனா நோய் தாக்குதல் எப்படி இருக்கும் என்று நோய் இயக்கம் பொருளாதார கொள்கை என்ற அமைப்பு அமெரிக்காவின் ஜாம்ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பட்டியல் ஒன்றை தயாரித்து உள்ளது
அதாவது இப்போது ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள மக்கள் தொகை, ஆரம்ப கட்டத்தில் நோய் தாக்கியவர்கள் எண்ணிக்கை போன்ற விவரங்களை கணக்கிட்டு அதன் அடிப்படையில் புள்ளி விவரம் முறையில் இந்த பட்டியலை உருவாக்கி இருக்கிறார்கள்.
அதில், வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நோய் தாக்குதல் உச்சநிலையை அடையும் என்று கூறியிருக்கிறார்கள். 3 கோடியே 90 லட்சம் மக்கள் கொண்ட தெலுங்கானாவில் 39 பேருக்கும், 12 கோடியே 60 லட்சம் மக்கள் தொகை கொண்ட மகாராஷ்டிராவில் 107 பேருக்கும், 8 கோடியே 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் 18 பேருக்கும் நோய் தாக்கி உள்ளது.
இதேபோல ஒவ்வொரு மாநிலத்திலும் தாக்கியுள்ள புள்ளி விவரங்கள் அடிப்படையில் இந்த கணக்கீட்டை உருவாக்கி உள்ளனர்.

ஜவஹர்லால் நேரு என்ன செய்தார் இந்தியாவுக்கு?

Muralidharan Kasi Viswanathan : தி லீஃப்லெட் இணைய தளத்தில் Nehru in the age of Coronavirus என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு எப்படி இந்தியாவை ஒரு அறிவியல் சிந்தனையின் அடிப்படையிலான ஒரு தேசமாகக் கட்டமைக்க விரும்பினார்; அதற்காக என்னவெல்லாம் முயற்சிகளை மேற்கொண்டா் என்று சொல்வதுதான் அந்தக் கட்டுரை.
அந்தக் கட்டுரையின் முக்கியமான அம்சங்களைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.
1. நோய்கள், ஏழ்மை, துயரங்களில் இருந்து அறிவியல் விடுவிக்குமென நேரு நம்பினார். ஒரு தேசத்தை சிறப்பாகக் கட்டமைப்பதில் அறிவியலின் முக்கியத்துவத்தை அவர் உணர்ந்திருந்தார்.
2. நேருவின் அறிவியல் மீதான ஆர்வம் அவர் கேம்ப்ரிட்ஜில் படித்த காலத்திலேயே உருவாகிவிட்டது. அவர் காலத்தின் முக்கியமான விஞ்ஞானிகளான ஜேம்ஸ் ஜீன்ஸ், ஆர்தர் எடிங்டன் போன்றவர்களுடன் அவருக்கு நல்ல நெருக்கமிருந்தது.
3. நேரு பிரதமரானவுடன் இந்தியாவில் அறிவியல் கட்டமைப்பை இருவிதங்களில் உருவாக்க நினைத்தார். முதலில் மேலை நாடுகளில் இருப்பதைப் போன்ற அமைப்புகளை உருவாக்குவது. 1949ல் மாஸச்சூஸட்ஸ் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜிக்கு அவர் மேற்கொண்ட விஜயமே, இந்தியாவில் முதல் ஐந்து ஐஐடிக்களை உருவாக்க காரணமாக அமைந்தது. அவை, காரக்பூர் (1950), பாம்பே (1958), மெட்ராஸ் (1959), கான்பூர் (1959), தில்லி (1961).

BBC : கொரோனா வைரஸ்: உயிரிழப்பு எண்ணிக்கை 22,000-ஐ கடந்தது - Coronavirus World update

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் பத்தாயிரம் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் பதிவாகும் அதிகபட்ச எண்ணிக்கை இதுதான். இதன் மூலம், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66,132 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1031 ஆகவும் அதிகரித்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு தெரிவிக்கிறது.
இதே சூழ்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22,030 என்னும் புதிய உச்சத்தை தொட்டிருப்பதை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு காட்டுகிறது.
அதிகபட்சமாக இத்தாலியில் 7,503 பேரும் ஸ்பெயினில் 4,089 பேரும் இந்த நோய்த்தொற்று முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனாவில் 3,169 பேரும் உயிரிழந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுத்தளம் கூறுகிறது.
நோய்த்தொற்றை பொறுத்தவரை, அதிகபட்சமாக சீனாவில் 81,782 பேரும், இத்தாலியில் 74,386 பேரும் அமெரிக்காவில் 69,197 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் 4000-ஐ கடந்த பலி எண்ணிக்கை
ஸ்பெயினில் இப்போதைய நிலவரப்படி இன்று ஒரு கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 665ஆக உள்ளது
இதனால் இதுவரை ஸ்பெயினில் கோவிட்-19 தொற்றால் இறந்துள்ளவர்களின் எண்ணிக்கை 4,089 ஆகியுள்ளது.

டாக்டர்களை உதைப்பவர்கள், லாண்ட் ரோவரில் வலம் வருபவர்கள் மீதெல்லாம் எல்லாம் உங்க லத்தி பாயாது.


Muralidharan Pb : அதில் பாருங்கள்
அயல்நாட்டிலிருந்து வியாதி கொண்டுவந்தவர்கள்,
வியாதி வைத்துக்கொண்டே எம்.பி, எம்.எல் வுக்கு தானம் வழங்கிய கனிக்கா கபூர் எலைட் வகையறாக்கள்,
வெளியே வரவேண்டாம் கூட வேண்டாம் என்று சொல்லியும் தட்டு தட்டு என தட்டை தட்டி கோ கொரோனா கோ என்று கத்தியவர்கள்,
மருத்துவர்களுக்கு வீடு கொடுக்க முடியாது காலி செய்யுங்கள் என்று சொன்னவர்கள்,
டாக்டர்களை உதைப்பவர்கள்,
லாண்ட் ரோவர் காரில் வலம் வருபவர்கள்,
இவர்கள் மேல் மேலே லத்தி பாயாது.
பாயவே பாயாது.
தண்டனை தேவை தான். ஆனால் இங்கே யாவருக்கும் சமமான தண்டனை தான் இருக்கிறதா?யார் வந்தாலும் லத்தி மண்டையப் பிளக்கும் என்றால் வாங்கள் அடிவாங்கி சமத்துவம் காண்போம். அடி என்ன, சட்டத்தை மீறினால் சாவு என்றாலும் சேர்ந்து வாங்குவோம். ஆனால் மேலே சொன்ன privileged , elite அல்லது ஒருவித sophisticated அமைப்புக்குள் போய் அமர்ந்துகொண்டவர்கள் மேல் நம் மேல் பாய்கிற அரச பயங்கரவாதம் பாயாது.
ஆவடி- இந்து காலேஜ் ட்ரெயினில் கத்தி வைத்து ஃபுட் போர்ட் அடிக்கும் மாணவன் மீது அடிவிழும்.

கொரோனாவுக்கு அமெரிக்காவில் ஒரே நாளில் 247 பேர் உயிரிழப்பு


அமெரிக்கா: கொரோனாவுக்கு அமெரிக்காவில் ஒரே நாளில் 247 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பரியானோர் எண்ணிக்கை 1027-ஆக அதிகரித்துள்ளது.

மே மாதத்திற்குள் இந்தியாவில் 13 லட்சம் கொரோனா வைரஸ் பாதிப்பு....?

மே மாதத்திற்குள்  இந்தியாவில் 13 லட்சம் கொரோனா வைரஸ் வழக்குகள் வெளிவரக்கூடும்...zeenews.india.com - சிவா முருகேசன் :
புது டெல்லி: உலகெங்கிலும் உள்ள நாடுகளில் கொரோனா வைரஸ் பெரும் அழிவை ஏற்படுத்தி  வருகிறது. இந்த கொடிய வைரஸ் தொற்றுக்கு இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 562 கொரோனா தொற்று  பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் இந்த தொற்றுநோயால் 9 பேர் இறந்துள்ளனர். கொரோனாவில் அதிகரித்து வரும் தொற்றுநோயைத் தடுக்க மத்திய-மாநில அரசாங்கத்தால் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக நாட்டில் 21 நாள் தனிமைப்படுத்துதல் (Lockdown) அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒருபக்கம் பல தடுப்பு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், சர்வதேச விஞ்ஞானிகள் குழுவின் அறிக்கை பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மே இரண்டாவது வாரத்தில் 1.3 மில்லியன் கொரோனா வழக்குகள் இந்தியாவில் ஏற்படலாம் என்று கணித்துள்ளது.

கொரோனா: ஸ்பெயினில் 24 மணிநேரத்தில் 738 பேர் உயிரிழப்பு .. உலகம் முழுவதும் உயிரிழப்பு எண்ணிக்கை 21,000

Coronavirus: Spain overtakes China in deaths tamil.oneindia.com - mathivanan-maran : மாட்ரிட்: கொரோனா தொற்று நோயால் ஸ்பெயினில் 24 மணிநேரத்தில் 738 பேர் பலியாகி உள்ளனர். உலக நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21,000 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவில் கொரோனா தொற்று நோய் 3,285 மனித உயிர்களை விழுங்கியது. இப்போது உலக நாடுகளில் படுவேகமாக பரவி பல்லாயிரக்கணக்கான உயிர்களை குடித்து வருகிறது.
சீனாவுக்கு அடுத்ததாக இத்தாலியில்தான் கொரோனாவின் கொடூர தாக்கம் இருந்து வருகிறது. இத்தாலியில் ஒவ்வொரு நாளும் பல நூறு உயிர்கள் பலியாகி வருகின்றன. இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 683 பேர் பலியாகினர். இதனையடுத்து இத்தாலியில் மட்டும் உயிரிழப்பு எண்ணிக்கை 7,503 ஆக அதிகரித்துள்ளது. தற்போது இத்தாலியைவிட ஸ்பெயினில் திடீரென கொரோனாவால் பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஸ்பெயினில் 24 மணிநேரத்தில் 738 பேர் மரணித்துள்ளனர். மொத்தம் ஸ்பெயினில் 3,434 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகளில் சீனாவை விட ஸ்பெயினில் அதிகம். உலகளாவிய அளவில் இத்தாலிக்கு அடுத்ததாக ஸ்பெயினில் அதிக மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

மோடியின் இந்தி பேச்சு ... ஏழைகளை கைகழுவிய டெல்லி அரசு

Annamalai Arulmozhi : உங்களில் நிறைய பேர் நேற்று ‘நமது பிரதமர்’ ‘நாட்டு மக்களுக்கு ‘ தொலைக்காட்சியில் ஆற்றிய உரையை பார்க்கவில்லை
அல்லது கேட்கவில்லை , கேட்டாலும் புரியவில்லை , புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை ( நமக்குப் புரியவேண்டும் என்ற கவலை பிரதமருக்கும் இல்லை .. அதனால்தான் ஒரு அரைமணிநேர உரையை அவர் இந்தியில் மட்டுமே ஆற்றினார் )என்பதை நான் எப்படித்தெரிந்து கொண்டேன் தெரியுமா ?
‘லஷ்மன் ரேக்கா ‘ அதாவது ‘இலட்சுமணன் கோடு ‘ என்ற சொல்லை எனது நேற்றைய பதிவில் பயன்படுத்தியிருந்தேன். அதைப்பற்றிய பலவித கருத்துக்களை பின்னூட்டத்தில் பார்த்தேன்.
இலட்சுமணக் கோடு என்பது இராமாயணக் கதையில் மாயமானைப் பிடிப்பதற்காகப் போன இராமன் ஆபத்தில் சிக்கியது போல இலட்சுமனா காப்பாற்று என்ற குரல் கேட்க (அதுவும் மாயமானாக வந்த மாரீசனின் வேலைதான்) அய்யோ இலட்சுமனா அவருக்கு ஆபத்து .. ஓடிப்போய் காப்பாற்று என்று சீதை பதற, இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்றுணர்ந்த இலட்சுமணன் சற்று தயங்க அவரை சீதை சந்தேகப்பட்டுத் தவறாகப்பேச, வருத்தப்பட்ட இலட்சுமணன் சீதை இருந்த குடிலை சுற்றி தன் அம்பால் தரையில் கீறி ஒரு கோடு போட்டார். என்ன நடந்தாலும் இந்த கோட்டைத்தாண்டி வெளியே வராதீர்கள் என்று கண்டிப்பாக அறிவுறுத்துகிறார் . “ நான் போகிறேன் , கோட்டைத் தாண்டி விடாதீர்கள் “ என்று எச்சரித்து விட்டுப் போகிறார். அதன்பிறகுதான் இராவணன் சந்நியாசி வேடத்தில் வந்து பிச்சை கேட்க வீட்டுக்கு உள்ளிருந்து பிச்சை போடக்கூடாது என்ற சாஸ்திரத்தின் படி வெளியே போய் சாப்பாடு போடுகிறார்.

தூய்மை பணியாளரை அடித்து சாக்கடையில் தள்ளி ...


திருப்பதிசாய் : சென்னையில், தூய்மைப் பெண் பணியாளரை அடித்து உதைத்து சாக்கடையில் தள்ளிய மிருகங்கள்.
சோழிங்கநல்லூர் பகுதியில் பெண் தூய்மைப் பணியாளர் ஒருவர் குப்பைகளை அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த ஒருவர், குப்பைகளை சரியாக சுத்தம் செய்யுமாறு பெண் பணியாளருக்கு கட்டளையிட்டிருக்கிறார். இதனால்,
அந்த நபருக்கும் பெண் பணியாளருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில், அந்த நபரும் அவரது மனைவியும் சேர்ந்து தூய்மைப் பணியாளரை அடித்து உதைத்து, அசிங்கமான வார்த்தைகளால் திட்டி சாக்கடையில் தள்ளிவிட்டுள்ளனர்.
தகவல் அறிந்த நமது செய்தியாளர், சோழிங்கநல்லூர் மண்டலம் 15 செயற்பொறியாளர் சுந்தரராஜை செல்போனில் அழைத்து புகார் கூறியபோது, அலட்சியமாக அழைப்பை துண்டித்துவிட்டார்.

இத்தாலி .. நேற்று 427 மரணம் இன்று 627 மரணம்

சுவிஸ் தமிழ் தகவல் மையம் : இத்தாலி
இடிந்து நொறுங்கி கொண்டிருக்கிறது!
அது அந்நாட்டு மக்களிடம் சரணடைந்தாக அறிவித்து விட்டது!
அந்த நாட்டின் பிரதமர் சொல்கிறார்!
நிலைமை நம் கட்டுப்பாட்டை மீறிவிட்டது!
கொரோனா வைரஸ் நம்மை கொன்று புதைக்கிறது!
நாம் வானத்தை பார்த்தவாறு நிற்பதைத்தவிர வேறு வழியில்லை!
நேற்று 427 மரணம்
இன்று 627 மரணம்
இப்படியே 6000 மரணங்களை தொட்டுவிட்டது!
நாளை தெரியவில்லை.
இத்தாலி மொத்தமாக தோற்றுப்போய் நிற்கிறது-
ஒரு தொற்று நோயிடம்...
எம் இந்திய மக்களே...
இப்பொழுது நினைத்து பாருங்கள் நாம் என்ன செய்ய வேண்டுமென...
அரசாங்கம் சொல்லும் வழிமுறைகளை பின்பற்றியே ஆகவேண்டும்!
இல்லையெனில் நாம் மரணத்திடம் மண்டியிடவேண்டியிருக்கும்..
வாழ்வா சாவா முடிவுகள் உங்கள் கையில்!
இதோ பாருங்கள் ராணுவ வண்டியில் பிண ஊர்வலத்தை...
நெஞ்சம் பதறுகிறது.<

அரசு மருத்துவர்களை ஏமாற்றும் எடப்பாடி - விஜயபாஸ்கர் காம்போ

சாவித்திரி கண்ணன் : ’’இதுல சந்தோசப்படறதுக்கு ஒன்னுமே இல்ல…! இது எங்களைக் கொண்டு
செய்யப்படும்  ஒரு அரசியல் ஸ்டண்ட் அவ்வளவு தான்..’’ என்றனர் அரசு மருத்துவர்கள் சிலர்!
சுகாதாரத்துறையில் பணியாற்றும் டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவத்துறை பணியாளர்கள் அனைவருக்கும் ஒருமாதச் சம்பளம் கூடுதலாக வழங்கப்படும் என்ற முதல்வர் அறிவிப்புக்குத் தான் இந்த ரியாக்ஷன்…!32 ஆண்டுகளாக தமிழக அரசு டாக்டர்கள் பிரச்சினைகள் பற்றி எழுதிவருகிறவன் என்ற வகையில் இந்த வார்த்தைகளுக்கு பின் இருந்த வலி என்னை ரொம்பவே வருத்தியது…!
கொரோனா பிரச்சினையையடுத்து அரசு மருத்துவர்கள் இரவு,பகல்பாராமல் கூடுதல் பங்களிப்பை சமூகப் பொறுப்புடன் செய்து வருகிறார்கள்.
அமைச்சர்விஜயபாஸ்கர்,நாளொருமேனியும்,பொழுதொரு வண்ணமுமாக மீடியாக்களுக்கு முன்னால், ஒரு ஹீரோ போல பேசமுடிகிறது என்றால், அதற்கு பின்ணணியில் தமிழக மருத்துவத்துறையில் உள்ள டாக்டர்கள், நர்ஸ் உள்ளிட்ட சுகாதாரப்பணியாளர்களின் அபார அர்ப்பணிப்பே காரணம்!
ஆனால், இதை யார் ஒத்துக் கொண்டாலும் அமைச்சர் ஒத்துக்கொள்ளமாட்டார்! அவருக்கு அரசு மருத்துவர்கள் என்றாலே எட்டிக்காய் தான்!
அவர் எப்போதுமே தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைகளின் செல்லப்பிள்ளை! அவர் சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பேற்றது முதல் அவர்களுக்கான விசுவாசத்தை வெளிப்படுத்துவதையே தன் ஜென்ம சாபல்யமாகக் கருதுகிறார்.

அயோத்தியில் ராமர் சிலையை புது கோவில் இடத்தில் வைத்து இன்று பூஜை ... லாக்டவுனுக்கு இடையே கூத்து

Mathivanan Maran -tamil.oneindia.com : அயோத்தி: அயோத்தியில் பாபர் மசூதியை
இடித்து வைத்த ராமர் சிலையை 27 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த இடத்தில் இருந்து எடுத்து புதிய கோவில் கட்டும் இடத்தில் பிரதிஷ்டை செய்து பூஜை நடத்தப்பட்டது. இதில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். கொரோனா தாக்கத்தால் நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14-ந் தேதி வரை இது நடைமுறையில் இருக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்த 21 நாட்களும் அனைவரும் வீடுகளில்தான் இருக்க வேண்டும்; வீட்டை விட்டு வெளியே வருவதையே மறந்துவிட வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து நள்ளிரவு முதல் நாடு முழுவதும் லாக்டவுன் நடைமுறைக்கு வந்தது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் லாக்டவுனை போலீசார் தீவிரமாக அமல்படுத்தியும் வருகின்றனர்.

ஜெர்மனியில் 35,000 க்கும் அதிகமானோர் பாதிப்பு இறப்புகள்: 206 -

Mavai S Srikantha : சுருக்கமாக மிக முக்கியமான விஷயங்கள்: இதுவரை 25.03.2020
ஜெர்மனியில் உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கை: 35,000 க்கும் அதிகமானோர் (இறப்புகள்: 206) - ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்
ஐரோப்பாவில், இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகியவை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன: இத்தாலியில் 69,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் (இறப்புகள்: 6,820) மற்றும் ஸ்பெயினில் 47,000 க்கும் அதிகமானோர் (இறப்புகள்: 3,434) - ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்
கூட்டாட்சி மாநிலங்கள் விரிவான தொடர்பு தடைகளை அறிமுகப்படுத்துகின்றன
கொரோனா விதிகளை மீறியதற்காக அபராதங்களின் பட்டியலை என்.ஆர்.டபிள்யூ ( NRW ) மாநிலம் வெளியிட்டது
156 பில்லியன் யூரோக்களின் புதிய கடன்களுடன் வரலாற்றில், பல பில்லியன் டாலர் உதவித் தொகையை பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டு, முடிவாகிறது.
ஜேர்மனியில் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த அனைத்தும் நிறுத்தப்பட்டிருக்கின்றன..
பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள்,
உணவு விடுதிகள், தொழிற்சாலைகள்,
அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன,

புதன், 25 மார்ச், 2020

சிதம்பரத்தின் 10 அவசர கோரிக்கைகள் 21 நாள் ஊரடங்கு .. மக்களின் வாழ்வாதாரத்திற்கு என்ன வழி?

ப.சிதம்பரம் அவர்களின் டிவிட்டர் பதிவு .
 நாடு முழுதும் 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏழை எளிய மக்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு செய்ய வேண்டிய 10 கடமைகள் இதோ:
1. பிரதமர் கிசான் திட்டத்தில் தரும் உதவித் தொகையை ரூ 12,000 ஆக உயர்த்தி உடன் வழங்க வேண்டும்.
2. குத்தகை விவசாயிகளின் பட்டியல்களை மாநில அரசுகளிடமிருந்து பெற்று ஒவ்வொரு குத்தகை விவசாயின் குடும்பத்திற்கும் ரூ 12,000 உடன் வழங்க வேண்டும்.
3. மகாத்மா காந்தி வேலைத் திட்டத்தில் பதிவு செய்துள்ள ஒவ்வொருவருக்கும்
ரூ 3,000 உடன் வழங்க வேண்டும்.
4. ஜன் தன் திட்டம் அதனை ஒத்த முந்தைய திட்டங்களில் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகள் (நகர்ப் புற வங்கிக் கிளைகளில் மட்டும்) ஒவ்வொன்றுக்கும் ரூ 3,000 உடன் வழங்க வேண்டும்.
5. ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 10 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக உடன் வழங்க வேண்டும்.
6. ஏதாவது ஒரு சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள தொழில் உரிமையாளர் அனைவரும் தற்போதுள்ள வேலைகளயோ ஊதியத்தையோ குறைக்கக் கூடாது என்று கட்டளையிட்டு அவர்கள் தருகின்ற ஊதியத்தை அரசு 30 நாட்களுக்குள் ஈடு செய்ய வேண்டும்.
7. மேற்கூறிய இனங்களில் அடங்காதவர்களுக்கு, ஒவ்வொரு வார்டிலும் ஒன்றியத்திலும் பதிவு அலுவலகம் திறந்து அத்தகைய ஏழைகளைப் பதிவு செய்து ஒவ்வொருவருக்கும் வங்கிக் கணக்கு திறந்து அக்கணக்கில் ரூ 3,000 உடன் வழங்க வேண்டும்.
8. எல்லா வகையான வரிகளையும் கட்டுவதற்கு இறுதி நாளை 30-6-2020 க்கு ஒத்தி வைக்க வேண்டும்.

பினராயியே 20,000கோடி ஒதுக்கும்போது.. இந்தியா முழுமைக்கும்.. மோடி அறிவித்த 15,000கோடி எப்படி போதும்?

Hemavandhana - tamil.oneindia.com ;  சென்னை: பக்கத்து மாநிலம் கேரளாவில் 20 ஆயிரம் கோடி ரூபாய் கொரோனா தொற்று பாதிப்புக்காக பினராயி விஜயன் ஒதுக்கியுள்ளார்.. ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சேர்த்து மருத்துவ வசதிகளை மேம்படுத்த வெறும் 15 ஆயிரம் கோடியைதான் பிரதமர் ஒதுக்கி உள்ளார். இது எப்படி நமக்கு போதுமானதாக இருக்கும்? பிரதமர் அறிவித்த 15 ஆயிரம் கோடியை வைத்து கொண்டு என்ன செய்வது? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. 
 4 நாட்களுக்கு முன்பு திருமாவளவன் ஒரு பேட்டி தந்திருந்தார்.. "இந்தியாவைப் போலவே வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் கனடா, ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதமர்கள் இதேபோல் டிவியில் உரையாற்றும் போதும் நாட்டு மக்களுக்கு அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ள பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளையும் விவரித்தார்கள். அதற்காக அரசு நிதி ஒதுக்கியுள்ள தொகை எவ்வளவு என்பதைத் தெரிவித்துள்ளார்கள். ஆனால் எந்த ஒரு அறிவிப்பையும் நம்முடைய பிரதமர் மோடி செய்யவில்லை... கேரள முதல்வர் பினராயி விஜயன் வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ள 20 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து ஒரு அவசரக் கால திட்டத்தை அறிவித்திருக்கிறார்.

கலைஞர் கட்டிய கொரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவ மனை

Thangam Thenarasu : தலைவர் கலைஞர் எழுப்பிய சட்டப்பேரவைக் கூடம்
உள்ளடக்கிய தலைமைச் செயலகப் புதிய கட்டடம் தற்போது 300 படுக்கைகளுடனான கொரொனா சிகிச்சை மருத்துவமனையாக இயங்குகிறது என்ற செய்தியைப் பலரும் பகிர்ந்திருந்தார்கள்.
அவரது வீட்டையே மருத்துவமனையாக்கிட வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்த அவர் இன்றிருந்தால், தான் எழுப்பிய இந்த மாபெரும் கட்டடம் இன்று நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றும் கொரொனா சிகிச்சை மருத்துவமனையாக மாறி இருப்பதில் மகிழ்ச்சியே அடைந்திருப்பார்.
ஒரு நாள் திடீரென என்னிடத்தில் கேட்டார்.
“ என்னய்யா, மேலே இருக்கும் தளங்களில் எல்லாம் வேலை முடிஞ்சிருச்சா?”
“ முடிஞ்சிருச்சுங்கய்யா.. சில சின்ன வேலைகள் தான் பாக்கி”.
சம்பிரதாயமாகச் சொன்னேன்.
“ சரி, அப்போ வா! போய்ப் பார்க்கலாம்”
“ இல்லீங்க அய்யா, ஒரே தூசி..சுத்தம் பண்ணிட்டு நாளைக்குப் போகலாம்”
“ தூசிதானே..முகக்கவசம் போட்டுக்கிட்டா போச்சு.. வாய்யா”
யார் சொல்லியும் கேட்காமல் பிடிவாதமாக மேல் தளத்தைப் பார்வையிடக் கிளம்பிவிட்டார்.
அவர்தான் கலைஞர்!
அப்படி அவர் பார்த்து பார்த்துக் கட்டியது தான் கொரானா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையாக இன்று உயிர் காக்க உதவுகின்றது

இந்தியாவில் சீனா , இத்தாலி அளவிற்கு வேகமாக பரவவில்லயா?

Karthikeyan Fastura : தெரிந்த ஒரு மருத்துவரிடம் பேசியதன் சுருக்கம்
இந்தியாவில் சீனா அளவிற்கோ, இத்தாலி அளவிற்கோ வேகமாக பரவவில்லையே ஏன் ?
" தெரியல. ஆனால் எங்கள் யூகம் பெரியம்மை, தட்டம்மைக்கு ஊசி போடாத ஆட்கள் இந்தியாவில் குறைவு. போலியோவை முற்றிலுமாக துடைத்து எறிந்துவிட்டோம். இந்த தடுப்பூசிகள் நம் உடலின் ஆன்டிபாடி செல்களில் ஒரு ப்ரோக்ராம் எழுதிவைக்கும். அதாவது இப்படியான நோய்கள் பரவினால் அதை தாக்கும் நடைமுறைகள் இவை என. ஒருவேளை அந்த ப்ரோக்ராம் இந்த வைரஸை கொல்லவும் உதவியிருக்கலாம். ஏனென்றால் பெரியம்மையை விட கொடுமையான வியாதி இருக்க முடியாது. அதையே தடுக்கும் போது இது ஒன்றுமில்லை என்று தோன்றுகிறது. ஆனால் இதை ஆராய்ச்சி செய்யாமல் உறுதி செய்ய முடியாது. இன்னும் யார் யாருக்கு பாதிக்கப்பட்டதோ அவர்களது சிறுவயது மருத்துவ ரெக்கார்ட் வரை பார்க்க வேண்டியிருக்கிறது. யார் யாருக்கெல்லாம் பாதிப்படைய வாய்ப்பிருந்தும் பாதிக்கவில்லை என்று ஒரு பெரிய டேட்டா சேர்க்கப்பட்டு வருகிறது. இந்த டேட்டாவை வைத்து மருத்துவ ஆராய்ச்சி கழகங்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

கொரோனா கொல்வதற்கு முன்பாக பட்டினி எங்களைக் கொன்றுவிடும் - இந்திய துயரம் - Coronavirus In India

BBC  : கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு
அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தினக்கூலித் தொழிலாளர்களுக்கு அது சாதாரண விஷயமல்ல.  நொய்டாவில் உள்ள லேபர் சவுக் பகுதி, எப்போதும் நூற்றுக்கணக்கான ஆட்கள் கட்டட வேலைக்காக
நின்றுகொண்டிருக்கும் ஒரு இடம். நான்கு சாலைகள் சந்திக்கும் டெல்லியின் புறநகர்ப் பகுதியான இது. கட்டட கான்ட்ராக்டர்கள் தொழிலாளர்களைத் தேர்வுசெய்வதற்காக இங்குதான் வருவார்கள்.
ஞாயிற்றுக்கிழமையன்று ஊரடங்கு போடப்பட்டிருந்த வேளையில் நான் அங்கு சென்றபோது அந்தப் பகுதியே அமைதியாக இருந்தது. எதுவும் அசையவில்லை. பரபரப்பாகவே இருக்கும் அப்படி ஒரு பகுதியில், பறவைகளின் சத்தத்தைக் கேட்க முடியுமென யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
பிறகு, அங்கு ஒரு மூலையில் சில ஆண்கள் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தேன். சற்று பாதுகாப்பான தூரத்தில் நின்றபடி, "ஊரடங்கை அனுசரிக்கவில்லையா?" என்று கேட்டேன்.

கொரோனா: மருத்துவர்களை விரட்டியடிக்கும் வீட்டு உரிமையாளர்கள்!

Kiruba Munusamy : · Is it legally permissible for the Karnataka government to publish the names of people under home quarantine? Already doctors have been evicted from the rental houses. An air hostess and her mother were humiliated and accused of bringing Corona to the neighbourhood. Governments should prove their efforts by containing COVID-19, flattening the curve of positive cases, providing basic necessities and ensuring safety. Not by publishing names.
கொரோனா: மருத்துவர்களை விரட்டியடிக்கும் வீட்டு உரிமையாளர்கள்!
மின்னம்பலம் : கொரோனா அச்சத்தால் தங்கள் வீட்டில் குடியிருக்கும் மருத்துவர்களை வீட்டைக் காலி செய்யுமாறு கூறி வருகின்றனர் தெலங்கானாவில் உள்ள வீட்டு உரிமையாளர்கள்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா கொடூரத்திலிருந்து மக்களைக் காப்பவர்களாக உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் நேரம் காலம் பார்க்காமல் இரவு பகலாக வேலை செய்து வருகின்றனர். பலர் தங்கள் குடும்பங்களைவிட்டு மருத்துவமனையிலேயே தங்கி நோயாளிகளைக் காத்து வருகிறார்கள். கொரோனா வைரஸ் தங்களுக்கும் பரவும், எப்போதும் வேண்டுமானாலும் தங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதை அறிந்தே அவர்கள் வேலை செய்கின்றனர்.
இந்த நிலையில், இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் கொரோனா அச்சத்தால் வாடகை வீடுகளில் இருக்கும் மருத்துவர்களை வீட்டு உரிமையாளர்கள் வலுக்கட்டாயமாக வெளியேறச் சொல்லும் அவலம் அரங்கேறி வருகிறது. தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் உள்ள எம்.ஜி.எம் என்ற மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார்.

ஏப்ரல் 14 வரை அனைத்து ரயில்களும் ரத்து! சரக்கு ரயில்கள் மட்டுமே ஓடும்

ஏப்ரல் 14 வரை ரயில்களும் ரத்து!மின்னம்பலம் : கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் அதன் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஏப்ரல் 14 வரை ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது
அதன்படி, பயணிகள் ரயில்கள், அதிக தொலைவு செல்லும் ரயில்கள் மற்றும், புறநகர் பயணிகள் ரயில்கள் என அனைத்தும் ரயில்களும் 14 ஆம் தேதி வரை இயங்காது. முன்னதாக மார்ச் 31 ஆம் தேதி வரை ரயில்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த காலக்கெடு இன்று நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏதும் இருக்காது என மத்திய மாநில அரசுகள் அறிவித்திருந்த நிலையில், பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டாலும் நாடு முழுவதும் பால்,தானியங்கள், பழங்கள் உள்ளிட்ட முக்கிய பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில்களுக்குத் தடை ஏதும் இல்லை.
மேலும் ரயில்களில் பணிபுரியும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வண்ணம் ஊதியம் வழங்கப்படுமெனவும் இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
-பவித்ரா குமரேசன்</

இந்தியாவில் கரோனா பாதிப்பு 600ஐ தாண்டியது!

நக்கீரன் :சீனாவில் வுஹான் மாகணத்தில் கரோனா வைரஸ் 180 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  உலகளவில் கரோனா பாதிப்பினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கரோனாவுக்கு இதுவரை முறையான மருந்து கண்டுபிடிக்கப்படாததால், பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் அதிவேகமாக இறங்கியுள்ளன.  இந்நிலையில் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 562லிருந்து 606 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். ரேசன் கடைகளில் ஏப்ரல் மாத பொருட்கள் விலையின்றி வழங்க ஏற்பாடு.

கொரோனாவுக்கு எதிராக போராட விழித்திரு... விலகி இரு... வீட்டில் இரு....: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரை  மாலைமலர்:"  கொரோனாவுக்கு எதிராக போராட விழித்திரு... விலகி இரு... வீட்டில் இரு....: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரை இன்று தமிழக மக்களுக்கு உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாதி, மதம், இனம் வேறுபாடு இன்றி கொரோனாவை விரட்டியடிக்க உறுதி ஏற்போம் என்று தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதலமைச்சராக இல்லாமல் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன்.
21 நாள் ஊடரங்கு என்பது விடுமுறை அல்ல. உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் அரசின் உத்தரவு. சாதி, மதம், இனம் வேறுபாடு இன்றி கொரோனாவை விரட்டியடிக்க உறுதி ஏற்போம்.
கொரோனாவை ஒழிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 தமிழக அரசு சார்பில் ரூ. 3850 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 10,518 படுக்கைகள் தயாராக உள்ளன. மக்களின் ஒவ்வொருவடைய ஒத்துழைப்பும் அவசியம்.

தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி

தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி மாலைமலர் :  கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை:< கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்திற்கு பின்னரும் நிலைமை எப்படி இருக்கும் கணிக்க முடியாத சூழல் உள்ளது. இதன் காரணமாக பள்ளிகளில் திட்டமிட்டபடி தேர்வை நடத்துவது சிரமம்.
இந்நிலையில், தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வுகள் இன்றி தேர்ச்சி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதேபோல் புதுச்சேரி மற்றும் உத்தர பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

ஸ்டாலின் : 21 நாள் ஊரடங்கு உத்தரவை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்"


நக்கீரன் : கரோனா வைரஸ் 175 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 500 பேரை தாண்டியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியா முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனா வைரஸூன் கொடூரத்தை தடுக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்கு உத்தரவை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். நோய் பரவாமல் தடுக்க மாற்றுவழி இல்லை என்பதை நாட்டு மக்கள் உணர்ந்து இதைக் கடைப்பிடிக்க வேண்டும். தன்னையும் காத்து நாட்டையும் காப்போம்" என தெரிவித்துள்ளார்.&

கொரோனா சிகிச்சைக்கு 7 கோடி வழங்கிய இலங்கை வர்த்தகர் தம்மிக பெரேரா

Jeevan Prasad : தம்மிக்க பெரேராவிடமிருந்து IDH க்கு வழங்கப்பட்ட 7 கோடி பெறுமதியான பரிசு!
நாட்டின் முதல் தர பில்லியனரான தம்மிகா பெரேரா, வைரஸ் பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தனது தனிப்பட்ட செல்வத்திலிருந்து ரூ .7 பில்லியனை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
அந்த தொகையில், ஐ.டி.எச் ஏற்கனவே மருத்துவமனையில் ஒரு தீவிர சிகிச்சை பிரிவை நிறுவியுள்ளது.
கோவிட் வைரஸ் தொற்று காரணமாக சுவாசக் கோளாறு உள்ள
நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஆறு படுக்கைகள் வழங்கப்பட்டுள்ளன, இதன் சிறப்பு என்னவென்றால், இந்த படுக்கைகள் இலங்கையில் கிடைக்கவில்லை. இந்த படுக்கைகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய தம்மிகா பெரேரா தனது தனிப்பட்ட தொடர்புகளைப் பயன்படுத்தினார்.
இதனால் 400 நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் ஐ.சி.யுவில் வைத்து சிகிச்சையளிக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.
திரு தம்மிக பெரேரா இந்த வசதிகளை இரண்டு நாட்களுக்குள் நிறுவ நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டத்தக்கது.