சனி, 4 மே, 2019

அமேசன் போட்டியில் 5 இலட்சம் பெற்ற நூல் ! ..தீவிர இலக்கியத்தை மீறி வணிகரீதி எழுத்துக்கென வெற்றிடம் உள்ளது .. வெற்றி பெற்ற சென் பாலன்

Sen Balan : சற்றே நீண்ட.... நன்றி
மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அமேசான் கிண்டில் pen to publish 2018 போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. எனது "பரங்கிமலை இரயில் நிலையம்" புத்தகம் முதல் பரிசாக ரூபாய் ஐந்து இலட்சம் வென்றுள்ளது.

கல்தோன்றி மண் தோன்றா காலத்தில் இருந்து இருக்கும் தமிழ் மொழியின்
எழுத்துலகில் "முதல் பரிசு - ஐந்து இலட்சம்" எனும் மெகா அறிவிப்புடன் இதுவரை எந்த எழுத்துப் போட்டியும் வந்ததில்லை என்று தான் நினைக்கிறேன். இதுவரை நான் கண்ட, சிறுகதை / பெருங்கதை / குறுங்கதைப் போட்டிகள் எல்லாம் "முத்திரைக் கதைகள்; முதல் பரிசு பத்தாயிரம்" எனும் அளவில் தான் வந்துள்ளன. ஒரு கதைக்கு பத்தாயிரம் வந்ததே எழுத்துலகின் ஆரோக்கியமான சூழல் என்றெல்லாம் பேசப்பட்டது. ஏனெனில் இங்கு நம் கதைகளை பிரசுரிக்க நாம் தான் பணம் தரவேண்டும் என்ற நிலைமை. எனக்குத் தெரிந்து விகடன் மட்டும் தான் ஓரளவு மதிப்பாக வெளியில் சொல்லக்கூடிய அளவு சன்மானம் தருபவர்கள். ‌

இஸ்லாமிய தீவிரவாதிகள் குர்ரானில் இருந்தே கொலைகளுக்கான நியாயத்தைக் கற்பிக்கிறார்கள்?

 This guy is a failed Taliban suicide bomber with a hilarious story. When he was apprehended, authorities discovered a titanium blast shield covering his genitals. When asked about this, he explained that he wanted to keep the family jewels safe for the 72 virgins waiting for him in paradise.
A story like this is almost too good to be true, from a comedic perspective, so I did a search on a few Arabic news sites using Google to translate for me. Seems legit.
It’s truly amazing the sort of crazy shit religion can make you believe. scarface200ngblog.wordpress.com

Kishokar stanislas முகநூலில் எழுதியிருக்கும் காத்திரமான பதிவு...
சில வருடங்களுக்கு முன்னர் இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதி ஒருவனை அமேரிக்க கூட்டுப் படைகள் கைது செய்கின்றன. அவன் ஒரு தற்கொலை தீவிரவாதி. அவன் இஸ்லாத்தைப் பின்பற்றுகிறவன். அவன் இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாத இயக்கம் ஒன்றைச் சேர்ந்தவன். தற்கொலைக் குண்டுகளை உடம்பில் கட்டியிருக்கும் அவனது ஆணுறுப்பை இரும்பாலான கவசத்தால் மறைத்திருக்கிறான். காரணம் கேட்டதற்கு "குர்ரானில் சொல்லப்பட்டிருக்கிறபடி தற்கொலை செய்து ஜிஹாதியாக மரணிக்கப்போகிற தனக்கு சொர்க்கத்தில் அல்லாவால் அருளப்படவிருக்குற எழுபத்தியிரண்டு கன்னிப் பெண்களையும் புணருவதற்காக தனது ஆண்குறியைப் பாதுகாப்பதற்காக அப்படிச் செய்தேன்" என்றிருக்கிறான்.

திப்பு சுல்தான்". நினைவு நாள் (மே-4) இன்று. நினைவு கூறுவோம்.

திப்பு சுல்தான் மலபாா் பகுதில் பெண்கள் மேலாடையின்றி இருந்த பழக்கத்தையும். ஒரே பெண்ணை பல ஆண்கள் மணந்துகொள்ளும் பழக்கத்தையும் தடுத்தாா், நரபலியையும் தேவதாசி முறையும் ஒழித்தாா். மதஒற்றுமையையும், மதுவிலக்கையும் இருகண்ணாக பாவித்தார். "துரோகத்தால் வீழ்ந்த வீரமும் தேசபக்தியும்" ஆஞ்சி சாமய்யா, திருமால் ராவ் இவர்களின் துரோகத்தால் "பெங்களூர்" கைநழுப்போனது
mahalaxmi : . 250 வருட ஆசிய வரலாற்றில் வாளேந்தி அப்போா்கலத்திலேயே வீரமரணம் அடைந்த ஒரே மாமன்னன் "ஷஹித் திப்பு சுல்தான்". நினைவு நாள் (மே-4) இன்று. நினைவு கூறுவோம்.
திப்புவின் வரலாற்றிலிருந்து சில:-
பிறப்பு:- 20 : 4 : 1750
இறப்பு: - 4 : 5 : 1799
போா்களங்களில்: -
உலக வரலாற்றில் ஏவுகனையை முதன் முதலில், நான்காம் மைசூர் போாில் பயன்படுத்தினாா்,
அதன் உதிாிப்பாகங்கள் இன்றும் லண்டனில் ஹூல்விச் கிராமத்தில் ராக்கெட் ஏவுகனை பயிற்சியாளா்களுக்கு காட்சிப்பொருளாக வைக்கப்பட்டுள்ளது.
திப்புவின் ராணுவம் : -
3,20,000 போா்வீரா்களும், தனிப்பட்ட இராணுவமும், போலீசும், 9,00 யானைகளும், 6,000 ஒட்டகங்களும், 25,000அரபிக்குதிரைகளும், 4,00000 மாடுகளும், 3,00000 துப்பாக்கிகளும், 2,20,400 வாட்களும், 929 பீரங்கிகளும் ஏராளமான வெடிமருந்து குவியல்களும் இருந்தன.
திப்புவின் கப்பற்படை: -

புலிகள் காலத்தில் கூட இப்படியான அச்சுறுத்தலை எதிர்கொள்ளவில்லை” -

BBC :விக்கினேஸ்வரன் கஜீபன் -பிபிசி தமிழுக்காக : தமிழீழ விடுதலை புலிகளால் வட மாகாணத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டிருந்தாலும் அவர்கள் காலத்தில் இப்படியான ஓர் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவில்லை என்கின்றனர் வடக்கு முஸ்லிம் மக்கள். கடந்த 21ஆம் தேதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர் முஸ்லிம் சமூகத்தினர் எதிர்கொண்டுள்ள இன்னல்கள் தொடர்பில் தனது ஆதங்கத்தினை பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொள்கிறார் வணிகரும், யாழ் முஸ்லிம் பேரவையின் தலைவருமான முகமட் தாகீர்.
யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் வசிக்கும் முகமட் தாகீர் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி, மீளவும் 1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் மக்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தபோது முதலாவதாக வருகை தந்தவருமாவார்.>தமிழீழ விடுதலை புலிகள் தமது போரட்டத்தில் வெல்வதற்கு சில வழிமுறைகளை கையாண்டனர். அவர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக யாழ் மாவட்டத்திலிருந்து ஒட்டுமொத்த முஸ்லிம்களை வெளியேற்றினாலும் விடுதலைப்புலிகள் எமது மதம் சார்ந்த விடயங்களில் தலையிடவில்லை.
முஸ்லிம் பெண்களின் ஆடைகளுக்கும் விடுதலைப் புலிகள் தடை போட்டதில்லை என்கிறார் முகமட் தாகீர்.

அக்னி நட்சத்திரம் ஆரம்பம்; வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்... வெளியே செல்ல வேண்டாம்

nakkheeran.in - paramasivam- ramkumar :வெயிலின் உட்சபட்ச நகரமான அக்னி நட்சத்திரம் இன்று காலை துவங்கியது.
நெல்லை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் கடந்த பிப்ரவரி மாதமே அதிகரிக்க தொடங்கிவிட்டது.
தற்போது மார்ச் முடிந்து ஏப்ரலில் அதன் வீரியம் 102 டிகிரியானது. தற்போது மே மாத ஆரம்பத்தில் உஷ்ணம் 103 டிகிரி என்று உயர்ந்திருக்கிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாலை வரை வெயிலின் உஷ்ணம் இருந்ததால் மக்கள் கடும் சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சூறாவளிக் காற்றுடன் மழை பெய்ததால் மாலை நேரத்தில் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறைந்தது. இருப்பினும் புழுக்கம் இரவிலும் நீடித்தது. ஆனாலும் மே மாத தொடக்க தினத்திலிருந்தே வெயில் கொளுத்தத் தொடங்கியது. இதனிடையே கத்திரி வெயில் எனப்படுகிற அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியுள்ளது.

கேஜ்ரிவால் டெல்லி தமிழக மாணவர்களுக்கு எதிராக பிரசாரம் .. கூடவே நடிகர் பிரகாஷ் ராஜ் பிரசாரம் வீடியோ

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி பல்கலை கழகத்தில் தமிழ் மாணவர்களை மட்டும் குறிப்பாக சுட்டி காட்டி .தமிழ் மாணவர்கள் 500 பேர் படிக்கிறார்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தால் எதிர்காலத்தில் இதற்கு முற்று புள்ளி வைப்பேன் என்று ஆடியோ பிரசாரத்தில் கூறி வருகிறார். அவருக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ் தீவிரமாக பிரசாரம் செய்வது கவனிக்க படவேண்டியது அவசியம் .

மின்னம்பலம் : ஆம் ஆத்மிக்கு ஆதரவாக பிரகாஷ் ராஜ் பிரச்சாரம்!ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக டெல்லியில் பிரச்சாரம் செய்யவுள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். இன்று (மே 4) டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளும், பிரகாஷ் ராஜும் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய பிரகாஷ் ராஜ், “அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ளேன். மற்றவர்களுடன் ஒப்பிடுகையில், மாற்றத்தை நோக்கி ஆம் ஆத்மி கட்சி போராடிக்கொண்டு இருக்கிறது. இத்தகைய கட்சிக்கும், அதன் வேட்பாளர்களுக்கும் நான் ஆதரவளிக்க விரும்புகிறேன்.

காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் காலமான நாளின்று:

Mahalaxmi : காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் காலமான நாளின்று:
காயிதே மில்லத் அனைத்துக் கட்சியினரும் மதிக்கத்தக்க தலைவராக விளங்கினார். இந்திரா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, ஜாகீர் உசேன், ஈ.வெ.ரா. பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் கட்சிப் பாகுபாடின்றி நட்புறவு கொண்டிருந்தார்.
1945 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஆனார்.
1948ஆம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
1946 முதல் 52 ஆம் ஆண்டு வரை பழைய சென்னை மாகாண சட்ட சபை உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.
1952 ஆம் ஆண்டு முதல் 58 ஆம் ஆண்டு வரை டெல்லி மேல் சபை உறுப்பினராகப் பதவி வகித்தார்.
1962, 1967, 1971 தேர்தல்களில் கேரளா, மஞ்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குச் சென்றார்.
1967ல் நடைபெற்ற சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைக் கைப்பற்ற முக்கியப் பங்காற்றினார்.
*இதே மே 5ல் மறைவு* :

வருமானவரி துறைமீது வழக்கு பதிவு .. லாட்டர் மாட்டினின் உதவியாளர் பழனிசாமி மரணம் ..

covai lottery martin company cashier suicide case - லாட்டரி மார்டின் நிறுவன காசாளர் தற்கொலை விவகாரம்: வருமான வரித்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!tamil.indianexpress.com : கோவை லாட்டரி அதிபர் மார்ட்டின் ஊழியர் உயிரிழந்த சம்பவத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள்மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் சம்பந்தப்பட்ட இடங்களில், கடந்த 5 நாட்களாக வருமான வரித் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மார்ட்டினின் நிறுவனத்தில் காசாளராகப் பணியாற்றி வந்த பழனிச்சாமியின் சடலம் வெள்ளியங்காடு குட்டையில் இருந்து மீட்கப்பட்டது. அவரது உடல் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், கொலை வழக்காக பதிவு செய்ய வலியுறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருமான வரித்துறை அதிகாரிகள் கொடுத்த தொல்லையால் தான் தனது தந்தை உயிரிழந்ததாக, பழனிச்சாமியின் மகன் ரோகின் குமார் புகார் கூறியிருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் காரமடை போலீஸார், வருமான வரித் துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதிக்கு ரோகின் குமார் அளித்துள்ள மனுவில், “நான் கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறேன். எனது தந்தை பழனிச்சாமி, மார்ட்டின் குரூப் ஆஃப் நிறுவனத்தின், ஃப்யூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தில் 25 ஆண்டுகளாக காசாளராகப் பணியாற்றிவந்தார்.

Agri Nest பொள்ளாச்சியில் ஒரு பெண் உட்பட163 இளைஞர்கள்... விதவிதமான போதை வஸ்துகள்!- சொகுசு விடுதி... மிரண்ட எஸ்.பி.

பொள்ளாச்சி போதை பயங்கரம் 163 இளைஞர்கள் கைதுபொள்ளாச்சி போதை பயங்கரம் 163 இளைஞர்கள் கைதுvikatan.com - punniyamoorthy-m : பொள்ளாச்சியை அடுத்த சேத்துமடைப் பகுதியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் 163 இளைஞர்கள் விதவிதமான போதை வஸ்துகளை உட்கொண்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. பொள்ளாச்சியை அடுத்துள்ள சேத்துமடை அண்ணா நகர் பகுதியில் கணேஷ் என்பவரது தோட்டத்தில்  `அக்ரி நெஸ்ட்' என்ற சொகுசு விடுதி செயல்பட்டு வருகிறது. அங்கே அப்படி ஒரு சொகுசு விடுதி இருக்கிறது என்பதே சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்குத் தெரியாத அளவுக்கு இருந்துள்ளது. ஆன்-லைன் புக்கிங் மூலம் அந்த சொகுசு விடுதியைக் கண்டடைந்து ஏராளமான இளசுகள் குத்தாட்டம், கும்மாளம் போடுவது வாடிக்கையாக இருந்திருக்கிறது. 
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் விதவிதமான போதை வஸ்துகளை உட்கொண்டுவிட்டு பெரும் ரகளையில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்தத்  தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் சிலர், இதுகுறித்து ஆனைமலை போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து, உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த ஆனைமலை போலீஸார், அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருந்த போதை நிலையைக் கண்டு அதிர்ந்து போனார்கள். அவர்கள் உடனடியாக கோவை எஸ்.பி சுஜித்குமாருக்கு தகவல் அளித்தனர்.

உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த இயலாது - உச்ச நீதிமன்றில் தமிழக அரசு தகவல்

மாலைமலர் :உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த இயலாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
புதுடெல்லி: தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக் காலம் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் முடிவடைந்தது. எனவே மீண்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அப்போது தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கு தேர்தலில் இட இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை விதித்து உத்தரவிட்டது.
அதன் பின்னர் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் வார்டு வரையறை செய்து வருவதாகவும், அதன் பின்னர் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதுபோன்ற காரணங்களால் தேர்தல் தொடர்ந்து தள்ளிப் போனது. தனி அதிகாரிகளின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. சமீபத்தில் வழக்கு தொடர்ந்தது.

21 எதிர்க்கட்சிகளின் சீராய்வு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

தீக்கதிர்  : புதுதில்லி: வாக்கு ஒப்புகைச் சீட்டில் பதிவான வாக்குகளில் 50
சதவீத வாக்குகளை மின்னணு வாக்கு எந்திரத்துடன் ஒப்பிட்டு சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி, 21 எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், ஒவ்வொரு தொகுதி யிலும் 50 சதவீத வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி தெலுங்கு தேசம் கட்சி தலைமையில் 21 எதிர்க்கட்சிகள் சார்பில், உச்சநீதிமன்றத்தில் மார்ச் 14-ஆம் தேதியன்று மனு தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ராஷ்ட்ரீய லோக் தளம், லோக் தாந்திரிக் ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அதில் இடம்பெற்றிருந்தன.

சென்னையில் இலங்கை குண்டுவெடிப்பு ஆர்ப்பாட்டம்!

மின்னம்பலம்: இலங்கை குண்டுவெடிப்பில் கிறிஸ்துவர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்தும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிராகவும் சென்னையில் நேற்று (மே 3) முஸ்லீம் அமைப்பான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இலங்கை குண்டுவெடிப்பு: சென்னையில் ஆர்ப்பாட்டம்!
இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் முக்கிய ஹோட்டல்களில் குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்டன. இதில் 259 பேர் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு தெரிவித்தது. இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பு ஏற்றது. இதற்கிடையே இந்த தாக்குதலுக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துக்கும் தொடர்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியானது. இதற்குத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மறுப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் இலங்கையில் நிகழ்த்தப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நேற்று (மே 3) நடத்தியுள்ளது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத். இந்த ஆர்ப்பாட்டத்தில் பதாகைகளுடன் சிறுவர்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

3ஆம் கட்ட தேர்தலுக்கு பிந்தைய ஆய்வு... யாருக்கு வெற்றி?

மின்னம்பலம் : மக்களவைத் தேர்தலில் எந்தெந்த கட்சிகள் எந்தெந்த மாநிலத்தில் எவ்வளவு தொகுதிகளைக் கைப்பற்றும் என்று 3 கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் வெளியாகியுள்ள சமூகப் பொருளாதாரம் மற்றும் அரசியல் ஆய்வுகளுக்கான மையம் (CSEPR) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

17ஆவது மக்களவையைத் தேர்ந்தெடுக்க 7 கட்டங்களாக நடைபெறும் பொதுத்தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 29ஆம் தேதி வரையில் 4 கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்துள்ளன. மே 6ஆம் தேதி 5ஆம் கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. மே 19ஆம் தேதி இறுதிகட்ட வாக்குப்பதிவும், மே 23ஆம் தேதி முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளன. இனி நடக்கப்போகும் 3 கட்டத் தேர்தலிலும் இந்தி பேசும் மக்கள் வாழ்கிற மாநிலங்களில் வருகிற மக்களவைத் தொகுதிகளே அதிகளவில் உள்ளன. இதனால் அடுத்த 3 கட்ட தேர்தலும் பாஜக- காங்கிரஸ் இடையிலான நேரடிப் போட்டியைக் கொண்ட தேர்தலாகவே இருக்கும்.
இந்நிலையில் முதல் 3 கட்ட வாக்குப்பதிவுக்கு பிந்தைய வெற்றி வாய்ப்புகள் குறித்த ஆய்வறிக்கையை சமூகப் பொருளாதாரம் மற்றும் அரசியல் ஆய்வுகளுக்கான மையம் (CSEPR) வெளியிட்டுள்ளது. அரசியல் சாராத இந்த நிறுவனமானது பல்வகைப்பட்ட சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. தேசிய அளவில் பதிவு செய்யப்பட்ட சுயாதீன ஆராய்ச்சி நிறுவனமாகவும் உள்ளது.

இலங்கை தாக்குதல்களை நடத்திய அந்த ஒன்பது பேர் படங்கள்

தாக்குதல்களை நடத்திய அந்த ஒன்பது பேர்…
வீரகேசரி : தாக்குதல்களை நடத்திய அந்த ஒன்பது பேர்… ஈஸ்டர் நாளன்று கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பில் தாக்குதல்களை நடத்திய ஒன்பது தற்கொலைக் குண்டுதாரிகளின் முழுமையான விபரங்களையும் சிறிலங்கா காவல்துறை வெளியிட்டுள்ளது. சஹ்ரான் காசிம் அல்லது சஹ்ரான் ஹஸ்மி தலைமையிலேயே குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இவரது குடும்பத்தினரும் தாக்குதல்களிலும், தாக்குதல்களை ஒருங்கிணைப்பதிலும் ஈடுபட்டுள்ளனர்.
ஷங்ரி-லா விடுதியில் சஹ்ரான் காசிம் குண்டுத் தாக்குதலை நடத்தியிருந்தார். சஹ்ரானின் மனைவியும் மகளும், சாய்ந்தமருதுவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். சாய்ந்தமருது மறைவிடத்தில் குண்டைவெடிக்கச் செய்து உயிரிழந்தவர்களில், சஹ்ரானின் தந்தை மற்றும் ரில்வான், செய்னி ஆகிய இரண்டு சகோதரர்களும் அடங்கியுள்ளனர்.
சஹ்ரானின் சாரதியான, ஆதாம் லெப்பை கபூர், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓடிஷா ..10 ஆயிரம் கிராமங்கள் அடியோடு பாதிப்பு .. சூறையாடியது ‘பானி’ புயல்

ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன 10 ஆயிரம் கிராமங்கள் அடியோடு பாதிப்பு ஒடிசாவை சூறையாடியது ‘பானி’ புயல்தினத்தந்தி : ‘பானி’ புயல் நேற்று ஒடிசாவை சூறையாடியது. புயல் கரையை கடந்த போது பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. புவனேசுவரம், சென்னை அருகே வங்க கடலில் உருவாகி, தமிழ்நாட்டை தாக்கும் என்ற பதற்றத்தை ஏற்படுத்திய ‘பானி’ புயல் திடீரென பாதை மாறியது. அது தீவிர புயலாக மாறி, வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து ஒடிசா நோக்கி சென்றது. இந்த புயல் நேற்று முன்தினம் ஆந்திராவில் கடலோர மாவட்டங்களில் பலத்த மழையை கொடுத்தது. பெரும் சூறாவளி காற்றும் வீசியது. நேற்றும் இது தொடர்ந்தது. ஸ்ரீகாகுளத்தில் அபாய எச்சரிக்கை (‘ரெட் அலர்ட்’) விடப்பட்டது. அங்கு 20 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு, 126 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர் 2014-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவை தாக்க வந்த புயல்களில், இது தீவிரமானது என வகைப்படுத்தப்பட்டது. ஒடிசா நோக்கி சென்ற ‘பானி’ புயலால் நேற்று அங்கு பலத்த மழை பெய்தது. பூரி, குர்தா, புவனேசுவரம், ஜெகத்சிங்பூர் என மாநிலம் முழுவதும் இடைவிடாது கன மழை பெய்தது. கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!'.. .. பொதுத்துறை நிறுவனங்களில் 10 வீதம் தமிழர்களுக்கு .. 90 வீதம் வடமாநிலத்தவர்க்ககே !

`2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள்vikatan.com - bhuvaneswari-k : திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் 1,765 பேர் பயிற்சிக்கு அழைக்கப்பட்டதில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 300 பேரைத் தேர்வு செய்துள்ளனர். ஆனால், தமிழர்களில் ஒருவரைக்கூடத் தேர்வு  செய்யவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள்"
தெற்கு ரயில்வே - மத்திய அரசுத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, ரயில்வே  துறையில் தமிழர்கள் முற்றிலுமாகப்
புறக்கணிக்கப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது. அதில், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் 1,765 பேர் பயிற்சிக்கு அழைக்கப்பட்டதில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 300 பேரைத் தேர்வு செய்துள்ளனர். ஆனால், தமிழர்களில் ஒருவரைக்கூடத் தேர்வு செய்யவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக ரயில்வே துறையில் 2,600 பணியிடங்களில் 2,300 பேர் வட மாநிலத்தவர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அதேபோன்று தபால் துறையிலும் தமிழர்களைத் தவிர்த்துவிட்டு, வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களைத் தேர்வு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, மாநிலத்தில் உள்ள 18 பொதுத்துறை நிறுவனங்களில் இங்குள்ளவர்களுக்கு 10 சதவிகிதம் பணியும், அதேநேரத்தில் வட மாநிலத்தவர்களுக்கு 90 சதவிகித பணியும் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மத்திய அரசின் இந்தப் போக்கைக் கண்டித்து இன்று பொன்மலையில் தமிழ்த் தேசிய பேரியக்கத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

பார்ப்பனர்கள் ஏன் ஆங்கிலேயரை வெறுத்தார்கள் ?

Tamilini : தாழ்த்தப்பட்டவர்கள் என்று இந்து மதத்தால் சொல்லப்படுபவர்கள் யார்..???
சுமார் 4000 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் தமிழ் நாக அரச வம்சத்தினர் சிறப்பாக ஆட்சி செய்து வந்தனர்....
நாக வம்சத்தினர் காலத்தில் தான் ஹரப்பா, சிந்து சமவெளி ,நகரங்கள் உருவாக்கப்பட்டு..செழிப்பாக இருந்தது.
அப்போது வந்த வெளிறிய ஆரியர்கள்
இங்கு நிரந்தரமாக குடியேற வேண்டும் என ஆசைப்பட்டு
நாக அரசர்களிடம் பணியில் அமர்ந்து சூழ்ச்சி செய்து அரசர்களிடையே பிரிவினையை உருவாக்கி
வெள்ளையர்கள் போல் பிரித்தாளும் கொள்கையை கடைபிடித்து சில ராஜ்யங்களை கைப்பற்றினர்.
பிறகு வேதங்களை சொல்லி, அரசர்களிடம் , நாங்கள் கடவுள் பாஷை தெரிந்தவர்கள் என சொல்லி பாப்பனர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது..
பசு மாடுகள், குதிரைகள் போன்ற விலங்குகளை யாக குண்டத்தில் போட்டு யாகம் வளர்த்தனர்
ரிக் வேதங்களில் மாட்டு இறைச்சியை எவ்வாறு சமைத்து உன்ன வேண்டும் என்று கூட குறிப்பிடப்பட்டுள்ளது.
மாட்டு இறைச்சியை முதலில் அதிகமாக உண்டவர்கள் ஆரியர்களும்,
அரசர்களும் தான்..
பிறகு நர பலி, பல்வேறு யாகம்,
சடங்குகளை திணித்து அரசர்களை, மக்களை அடிமை படுத்தி ,
அரசவைகளில் அலோசகர்களாக இருந்து மறைமுகமாக ஆட்சி செய்தனர்.
பிறகு வரணாசிரமத்தை நிறுவி பிராமணன், சத்ரியன்,வைசியன், சூத்திரன் போன்ற பிரிவுகளை உருவாக்கினான்.

வெள்ளி, 3 மே, 2019

தமிழகத்தில் படை எடுக்கும் வடமாநில வாக்காளர்கள் / தொழிலாளர்கள் .. காலனியாகிறது தமிழகம் .. சமுகவலையில்...


LR Jagadheesan : தமிழ்நாட்டு அரசுப்பணிகளில் தமிழ்நாட்டவர்; தமிழ் நாட்டில் வாழ்ந்து தமிழ் மொழியை படித்தவர்களுக்கே முழு உரிமை. தமிழ்நாட்டில் இயங்கும் மத்திய அரசுப்பணிகளில் தமிழ்நாட்டவருக்கு முன்னுரிமை அல்லது குறிப்பிட்ட விகிதாசார பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்பதே இந்தியா போன்ற பல்லின; பன்மொழி மக்கள் சேர்ந்து வாழும் மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டவரின் நியாயமான கோரிக்கையாக இருக்க முடியும்.
தனியார் துறை வேலை வாய்ப்புகளை இப்போதைக்கு இந்த விவாதத்துக்குள் கொண்டுவராமல் இருப்பதே சரி. ஏனெனில் மற்ற மாநிலத்தவர் தமிழ்நாட்டுக்குள் வருவதைப்போலவே; வாழ்வதைப்போலவே ஏராளமான தமிழ்நாட்டவர் வேறு மாநிலங்களுக்கு செல்வதும் வாழ்வதும் இயல்பான ஒன்று. உதாரணமாக மும்பையில் சாலையில் இட்லி விற்கும் தமிழ்நாட்டு இளைஞர்கள் தான் ”most eligible bachelors in town” என்று சிரித்தபடியே சொன்னார் மும்பை நண்பர் ஒருவர். அதுவே யதார்த்தமும் கூட. சந்தைப்பொருளாதாரத்தை ஏற்றுக்கொண்ட இந்தியா/தமிழ்நாட்டில் இதைப்போன்ற தொழிலாளர் தொழில்முனைவோர் இடப்பெயர்வை யாராலும் தடுக்க முடியாது. தடுக்கவும் கூடாது. அது இனவாதத்தில் போய் முடியும்.
தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்கும். அதேசமயம் தமிழ்நாட்டு அரசுப்பணியும் இந்திய அரசுப்பணியும் முழுக்க முழுக்க தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் தரும் பணிகள். சம்பளம் கொடுக்கும் தமிழ்நாட்டு மக்களே இதில் எஜமானர்கள். தாம் சம்பளம் தரும் தம் பணியாளர்களுக்கான தகுதிகளை நிர்ணயிக்க தமிழ்நாட்டவருக்கு முழு உரிமை உண்டு. ஒருவேளை அத்தகைய உரிமை சட்டரீதியில் இதுவரை இல்லாவிட்டால் அதை தமிழக அரசு உடனடியாக உருவாக்கவேண்டும்.

லாட்டரி மார்ட்டினின் உதவியாளர் மர்ம மரணம்.. ஐடிரெய்டு நடந்த நிலையில் குட்டையில் பிணமாக மீட்பு

உதவியாளர் உயிரிழப்பு பழனியிடம் விசாரணை tamil.oneindia.com - VelmuruganP.: கோவை: கோவை காரமடையில் லாட்டரி அதிபர் மாட்டினின் உதவியாளர் பழனி மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் மார்ட்டின். இவர் லாட்டரி தொழில் செய்து வருவதுடன், ரியல் எஸ்டேட் தொழிலும் நாடு முழுவதும் செய்து வருகிறார்.
இந்நிலையில் மார்ட்டின் கணக்கில் காட்டாத பணம் வைத்திருப்பதாக வருமானவரி புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மார்ட்டினுக்கு சொந்தமாக நாடு முழுவதும் 70 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 3 நாட்களாக சோதனை நடத்தினார்கள்

குண்டு வைத்தவர்களுக்கு இந்தியாவில் பயிற்சி: இலங்கை ராணுவம்!

மின்னம்பலம் : குண்டு வைத்தவர்களுக்கு இந்தியாவில் பயிற்சி: இலங்கை ராணுவம்!இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகப்படுகிற நபர்கள் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்திருக்கிறார்கள், அவர்கள் அங்கே பயிற்சி எடுத்திருக்கலாம் என்று நம்புகிறோம் என்று இலங்கை ராணுவத் தலைமைத் தளபதி மகேஷ் சேனநாயகா தெரிவித்துள்ளார்.
இன்று (மே 3) பிபிசி செய்தியாளர் செகுந்தர் கர்மனிக்கு அளித்த பேட்டியில் இலங்கை ராணுவத் தளபதி சொல்லியிருப்பதை இன்று அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
“இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக சந்தேகப்படுவர்களில் சிலர் இந்தியாவின் கேரளா, பெங்களூரு, காஷ்மீர் போன்ற பகுதிகளுக்கு பயணம் செய்திருக்கிறார்கள்.

பஞ்சாப் வங்கி ஊழியர் அழுகிய சடலமாக மீட்பு... புதுக்கோட்டை ..15 கிலோ நகைகளுடன் 6 நாட்களுக்கு முன்பு காணாமல் போன

ppnakkheeran.in - பகத்சிங் : புதுக்கோட்டை மாவட்டம் திருக்கட்டளை கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து கடந்த 29 ந் தேதி முதல் காணவில்லை என்று அவர் மனைவி ராணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த நிலையில் திருவரங்குளம் - வளநாடு இடையே தைலமரக்காட்டில் ஒரு கார் எரிந்துகிடந்தது. அந்த காருக்குள் வளையல்கள் போன்ற கவரிங் நகைகளும், கணினி சம்மந்தப்பட்ட பொருட்களும் எரிந்து கிடந்தது. இந்த கார் காணாமல் போன மாரிமுத்துவின் கார் என்பது அடையாளம் காணப்பட்டது.
ஆனால் அதன் பிறகு பரபரப்பு ஏற்படத் தொடங்கியது.
 மாரிமுத்து புதுக்கோட்டையில் உள்ள பஞ்சாப் நேசனல் வங்கியில் அலுவலக உதவியாளராக வேலை செய்தவர். அவர் காணாமல் போன நிலையில் வங்கியில் ஆய்வுகள் செய்யப்பட்ட போது சுமார் 15 கிலோ அளவிற்கான தங்க நகைகள் காணவில்லை என்று வங்கி நிர்வாகம் வாய்மொழியாக சொன்னாலும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை. இந்த தகவல் பரவியதால் வங்கியில் நகை அடகு வைத்த வாடிக்கையாளர்கள் வங்கியில் குவிந்தனர். பலரின் நகைகள் இல்லை என்றும் பணம் தருவதாகவும் வங்கி நிர்வாகத்தில் பதில் சொன்னார்கள்.

300 பேரில் ஒருவர் கூட தமிழரில்லை .. வெடித்தது போராட்டம் திருச்சி ரயில்வே பணிமனையில்..

தமிழர்களுக்கு வேலை கோரி திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முற்றுகைvikatan.com - tamilnadu :திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில், பணி நியமனம் செய்யப்பட்ட 300 பேரில் ஒருவர்கூடத் தமிழர் இல்லை" என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனையடுத்து, திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையை முற்றுகையிட முயன்ற தமிழ்த் தேசிய பேரியக்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டதால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் சமீபகாலமாகத் தமிழர்களுக்கு வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுவதுடன், வட மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் சேர்க்கப்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, தென்னக ரயில்வே துறையில் சுமார் 300 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர்கூடத் தமிழர்கள் இல்லை என்று குற்றம்சாட்டிவரும் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமையில், தமிழக விவசாயிகள் சங்கம் மாவட்டத் தலைவர் மா.பொ. சின்னதுரை, சமூக நீதிப் பேரவை மாவட்டச் செயலாளர் ரவிக்குமார் மற்றும் விவசாயச் சங்கங்கள் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட இயக்கங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர், “வெளியாரை வெளியேற்று” , “இந்திய அரசே... தமிழர்களுக்கு எதிராக இனப்பாகுபாடு காட்டாதே”,  “தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கே 90 சதவிகிதம் வேலைகொடு” என்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன்,   திருச்சி பொன்மலை பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக முழக்கமிட்டு வந்தவர்கள்,  பொன்மலை ரயில்வே பணிமனையை முற்றுகையிட முயன்றனர்.

மழை யாகம்.. அவாள் துறையாகிறது அறநிலைய துறை .. ஆசிரியர் வீரமணி கடும் கண்டனம்

மழை வேண்டி யாகம்: கி.வீரமணி கண்டனம்!மின்னம்பலம் : மழை வேண்டி யாகம் நடத்த வேண்டும் என்று இந்து அறநிலையத் துறை உத்தரவிட்டதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேற்று (மே 2) கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்குத் தென்மேற்குப் பருவ மழை தமிழகத்துக்கு நீரை அளிக்கவில்லை. இதனால் குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கே கஷ்டப்படும் சூழல் தற்போது நிலவி வருகிறது. பல கிராமப் பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்துள்ளதாகவும், இதனால் குடிநீர் தேவைக்காக பல கிமீ தூரம் சென்று குடிநீர் எடுத்துவரும் நிலை உருவாகியுள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் கடும் வறட்சியைத் தொடர்ந்து தமிழகத்துக்கு மழை வேண்டி இந்து சமய அறநிலையத் துறை கீழ் செயல்பட்டு வரும் முக்கிய கோயில்களில் யாகம் நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

BBC :ராமலிங்கம் கொலை வழக்கு: திருச்சி, கும்பகோணம், காரைக்காலில் என்.ஐ.ஏ. சோதனை


திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் திருச்சியில் உள்ள எஸ்டிபிஐ மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினர். கும்பகோணம், திருச்சி, தஞ்சாவூர், காரைக்கால் ஆகிய நகரங்களில் மொத்தம் 20 இடங்களில் இந்த சோதனை நிகழ்த்தப்பட்டது என்கிறது என்.ஐ.ஏ.வின் செய்தி அறிக்கை. கைப்பற்றப்பட்ட பொருள்கள் :
16 மொபைல் போன்கள்,
21 சிம் கார்டுகள், 3 லேப்டாப்புகள்,
9 ஹார்ட் டிஸ்குகள், 7 மெமரி கார்டுகள்,
118 சிடி/டிவிடிகள், 1 டேப்,
7 டைரிகள், 2 பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா பேனர்கள், 1 டிவிஆர், 1 வாள், 1 கூரிய கத்தி, 2 லட்சம் ரூபாய் ரொக்கம், 100 குற்ற ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன என்கிறது அந்த அறிக்கை.
இது தொடர்பாக எமது சென்னை செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதன் தரும் செய்தி:

சேலத்தில் என்கவுண்ட்டர்: பிரபல ரவுடி சுட்டுக்கொலை

சேலத்தில் என்கவுண்ட்டர்: பிரபல ரவுடி சுட்டுக்கொலைதினத்தந்தி : சேலத்தில் போலீசாரை வெட்டி விட்டு தப்ப முயன்ற பிரபல ரவுடி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். சேலம், சேலம் மாவட்டம் காட்டூரை சேர்ந்தவர் கணேசன் (வயது 35). முறுக்கு வியாபாரி. இவர் மேட்டுப்பட்டி காவலூர் பஸ் நிறுத்தம் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கணேசன் அடித்து கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதியானது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மேட்டுப்பட்டி தாதனூரை சேர்ந்த பிரபல ரவுடி கதிர்வேல் (28) தலைமையிலான கும்பல் கணேசனை கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை வழக்கில் கதிர்வேல் உள்ளிட்டோரை போலீசார் தேடி வந்தனர். குண்டு பாய்ந்து சாவு

திருச்சி பொன்மலை ரயில்வே 300 பேர் .. அனைவருமே வட மாநிலத்வர்கள் .. சென்னை தபாலாபீஸ் வேலை ஆள் எடுப்பிலும் 94% வட நாட்டார்

சாவித்திரி கண்ணன் : நம்பத் தான் முடியவில்லை.திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் 300 பேர் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில் அனைவருமே தமிழரல்லாத வட மாநிலத்தாராம்!
சொந்த மண்ணில் நடக்கும் நிறுவனத்தில் அந்த மண்ணுக்கானவர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதை எப்படி புரிந்து கொள்வது?
சமீபத்தில் சென்னை தபாலாபீஸ் வேலைக்கான
ஆள் எடுப்பிலும் 94% வட நாட்டார் பணியமர்த்தப்பட்டனர்.அதை,’’ ஏன் இப்படி?’’ என்று தட்டிக் கேட்காமல் விட்டதின் விளவு பொன்மலையில் 100% த்தை எட்டிவிட்டது. மத்திய அரசின் பணி நியமனத்தில்இது போன்ற ஒரு வஞ்சகத்தை மும்பையிலோ,கர்நாடகத்திலோ
பா ஜ க அரசால் நினைத்துக் கூடப் பார்க்கமுடியுமா?
அங்கேயெல்லாம் இது போல நடக்காத போது தமிழகத்தில் மட்டும் நடப்பானானேன்?
தமிழர்கள் பெருந்தன்மையானவர்கள் என்பதற்காக அடிப்படை தர்மத்தை கூட கடைபிடிக்க மறுப்பதா?
இந்த அநீதியை எதிர்த்து தமிழ் தேசிய இயக்கத்தினர் மே-3 நாளை காலை பொன்மலையில் போராட்டம் அறிவித்துள்ளனர். ஒரு சில அமைப்பினராவது இப்படியான அநீதியை எதிர்க்க முன்வருவது ஆறுதலளிக்கிறது.

வியாழன், 2 மே, 2019

ஆடிப்போன எஸ்பி-க்கள்; சசிகலாவுக்குக் கண்டம்; அடுத்த தலைமைச் செயலாளர்!?'

அசுதோஷ்
சசிகலாvikatan.com : தமிழக நாடாளுமன்றத் தேர்தல் பாதுகாப்பு டிஜிபி-யாக அசுதோஷ் சுக்லா பதவியேற்றதும், வீடியோ கான்ஃபரன்ஸிங்கில் தமிழகம் முழுக்க உள்ள எஸ்பி, டிஐஜி, ஐஜி உள்ளிட்ட அனைத்து போலீஸ் அதிகாரிகளுடன் தேர்தலை எப்படி நடத்த வேண்டும் என்று பேசினார். ''உங்களில் சில எஸ்பி-கள் பணத்தை போலீஸ் வாகனத்துல கடத்துனதெல்லாம் எனக்குத் தெரியும். இதுவரை எப்படியோ... இதோ, நான் வந்துட்டேன். இனிமேலும் அப்படி நடந்தா, கடுமையான நடவடிக்கை எடுப்பேன்'' என்றாராம்.
ஆடிப்போய்விட்டனர் அந்த சில எஸ்பி-கள். அதேபோல, கடந்த தேர்தலின்போது உளவுத் துறை ஐஜி-யாக இருந்த சத்தியமூர்த்தியை மாற்றினார்கள். அதேபோல, இந்தத் தேர்தலின்போதும் சத்தியமூர்த்தியை மாற்றச் சொல்லி சுக்லா, தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதினாராம். ஆனால், அவரை தேர்தல் கமிஷன் மாற்றவில்லையாம். அ.தி.மு.க அனுதாபிகளான அதிகாரிகள், சுக்லா மீது கடும் எரிச்சலில் இருக்கிறார்கள். 

குஜராத் உருளை கிழங்கு விவசாயிகளுக்கு எதிரான வழக்கு வாபஸ்.. பெப்சி நிறுவனம் அறிவிப்பு

Pepsi withdraws case against 4 potato farmers in Gujarat tamil.oneindia.com - VelmuruganP : அஹமதாபாத்: குஜராத் மாநிலத்தில் 4 விவசாயிகளுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை பெப்சிகோ நிறுவனம் திரும்ப பெற்றுள்ளது.
பெப்சி நிறுவனம் லேஸ் சிப்ஸ் தயாரிக்க சில உருளைக்கிழங்கு விதைகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளது.இந்நிலையில் லேஸ் சிப்ஸ் ரக விதைகளை பெப்சிகோ நிறுவனத்தின் அனுமதியின்றி குஜராத்தின் சபர்கந்தா, ஆரவல்லி மாவட்டத்தைச் சேர்ந்த சில விவசாயிகள் பயிரிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அறிவுசார் சொத்துரிமையின் படி, பெப்சி நிறுவனம் தலா ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு 4 விவசாயிகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த விவகாரம் நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சில இடங்களில் பெப்சி நிறுவனத்தின் செயலை கண்டித்து போராட்டங்களும் நடந்தது.

பாதாள சாக்கடைக்குள் மனிதன் இறங்காமல் தடுக்க வக்கற்ற அரசுகளும் .. மக்களும் !

LR Jagadheesan : பாதாள சாக்கடைதிட்டத்தை நிறைவேற்றுவதில் காட்டும் ெய்த மழையாக எந்த சுரணையும் இன்றி சகித்துக்கொள்ளச் செய்கிறது.
அக்கறை, வேகம், தீவிரத்தை அது அடைத்துக்கொண்டால் அதை மனிதர்கள் இறங்காமல் சீர் செய்யமுடிகிற விதத்தில் வடிவமைத்து திட்டமிட்டு கட்டவேண்டும் என்பதில் ஏன் நாம் காட்டுவதில்லை? ஏனென்றால் நமக்குத்தெரியும் நாம் அதில் ஒருநாளும் இறங்கப்போவதில்லை; காசு கொடுத்தால் அதை செய்ய வேறு யாரோ ஆட்கள் இருக்கிறார்கள்; கிடைப்பார்கள்; அரசாங்கமே அதற்கு உதவும் என்கிற பணத்திமிரும் ஜாதி ஆணவமும் தான் இந்த 21ஆம் நூற்றாண்டிலும் கூட இந்த குரூரத்தை நாம் எருமை மேல் ப
இல்லாவிட்டால் இதெல்லாம் எவ்வளவு பெரிய scandal? கேவலம்? மனிதத்தை கொல்லும் செயல்? இந்த லெட்சணத்தில் எல்லா கிராமப்புறங்களிலும் திறந்தவெளியில் மலம் கழித்தலை தடுக்க அரசுகள் மானியவிலையிலும் இலவசமாகவும் கழிவறைகள் கட்ட கோடிக்கணக்கில் ஆண்டுதோறும் செலவு வேறு செய்கிறது.

தஞ்சாவூர் பாமக கந்துவட்டி கும்பலால் பாலிடெக்னிக் மாணவர் கொலை! 5 லட்சத்துக்கு 30 லட்சம் வட்டி செலுத்தியும் ... பாமக நகர செயலாளர் பாலகுரு ....

மாலைமலர் :குடும்பச் செலவு மற்றும் வியாபாரத்துக்காகவும் பா.ம.க. முன்னாள் நிர்வாகி பாலகுருவிடம் ரூ.7 லட்சம் வரை சிவசுப்பிரமணியன் கடன் வாங்கியிருந்தார். ஆனால் கடன் தொகையை திரும்பி கொடுக்க முடியாமல் வட்டியாக மட்டும் பல லட்சம் கொடுத்துள்ளார். இதற்கிடையே கடன் கொடுத்த பா.ம.க. பாலகுரு  கடன் பணத்தை கேட்டு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். அப்போது ‘கந்து வட்டி போட்டு அசலுக்கு மேலே எங்களிடம் பணத்தை வசூலித்து விட்டீர்கள். இனிமேல் நாங்கள் கடன் தொகையை கொடுக்க மாட்டோம்’ என்று அருண் கூறினார். இதுதொடர்பாக பா.ம.க. பாலகுருவுக்கும்  அருணுக்கும் இடையே காரசாரமாக வாக்குவாதம் நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு மளிகை கடையில் தனது தந்தை சிவசுப்பிரமணியனுடன், அருண் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் அடையாளம் தெரியாத 2 பேர் மளிகை கடைக்குள் புகுந்தனர்.அவர்கள் திடீரென அங்கு நின்ற அருணை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் நிலைகுலைந்து போன அருண், ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

மின்னம்பலம் : கும்பகோணத்தில் கந்துவட்டி கும்பலால் பாலிடெக்னிக் மாணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது அவ்வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள பானாதுறையைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவர் அப்பகுதியில் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு மகள்களும், அருண் என்ற மகனும் உள்ளனர். அருண் பாலிடெக்னிக் ஒன்றில் படித்து வந்தார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பிரமுகரிடம் 3 லட்சம் ரூபாய் வட்டிக்குக் கடன் வாங்கினார் சிவசுப்பிரமணியன். கிட்டத்தட்ட 30 லட்சம் ரூபாய் வரை, அவர் திரும்பச் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அசல் தொகை 3 லட்சத்தைத் தர வேண்டுமென்று கூறி சிவசுப்பிரமணியன் வீட்டில் தகராறு செய்தனர் கந்துவட்டிக் கும்பலைச் சேர்ந்த பாலகுரு, செந்தில் ஆகியோர். சிவசுப்பிரமணியன் மகள்களிடம் தரக்குறைவாகப் பேசியுள்ளனர். இதனால் மனமுடைந்த சிவசுப்பிரமணியம் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ஒகேனக்கல் சிறுமி பலாத்காரத்தை தடுத்த வாலிபர் சுட்டுக்கொலை.. வீடியோ


வெப்துனியா : ஒகேனக்கல் காட்டுப்பகுயில் சிறுமி கற்பழிப்பை தடுத்த வாலிபரை வேட்டைக்காரன் ஒருவன் சுட்டுக்கொலை செய்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம்  ஜருகு என்ற கிராமத்தில் வசித்து வருபவர் பாலு. இவரது மகன் முனிசாமி(25). டிப்ளமொ படித்துவிட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்துவ.இந்நிலையில் கடந்த வாரம் தனது அக்காள் மகளை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு ஒகேனக்கல் சென்றதாகத் தெரிகிறது. அவர்கள் ஒகேனக்கலில் இருந்து 4 கி.மீட்டர் தொலைவில் உள்ள பண்ணப்பட்டியில் ரோட்டோரமாய் இருசக்கரவாகனத்தை நிறுத்தி விட்டு ஆள் அரவமற்ற வனப்பகுதியில் இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர்.
அந்த சமயத்தில் அங்கு வந்த ஒருவர் சிறுமியை பலவந்தமாகக் கையைப்பிடித்து கற்பழிக்க முயற்சிசெய்துள்ளார். இதனால் பதறிய முனிசாமி சிறுமியைக் காப்பாற்ற முயற்சிமேற்கொண்டார். இதனால் ஆவேசம் அடைந்த அந்த ந்பர் தனது துப்பாக்கியால் முனிசாமியை சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே முனிசாமி பறிதாபமாக உயிரிழந்தார்.

லிஃப்ட் கொடுத்து பலாத்காரம், கிணற்றில் கிடக்கும் பிணங்கள்: தெலங்கானாவில் பகீர்

வெப்துனியா : பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்களின் சடலத்தை கிணற்றில் இருந்து எடுத்தது தெலங்கானா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலம் ஹாஜிபூர் என்னும் கிராமத்தில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் சிராவனி என்னும் இன்டர்மீடியட் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி காணாமல் போனார். இது குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.&அப்போது சிராவனியின் பை சீனிவாச ரெட்டிக்கு சொந்தமான பாழடைந்த கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்டது. அதே கிணற்றில் சிராவனின் சடலமும் கண்டெடுக்கப்பட்டது. இதனால், சீனிவாச ரெட்டியிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.விசாரணையில் அவந்தான் அந்த பெண்ணை கற்பழித்து கொலை செய்தி கிணற்றில் வீசியதாக ஒப்புக்கொண்டான்.

பாம்போடு விளையாடியை பிரியங்கா காந்தி .. உபியில் .. விடியோ

உத்தரப் மின்னம்பலம் :பிரதேசத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது கிழக்கு உபி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பாம்பாட்டிகள் வைத்திருந்த பாம்புகளுடன் விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை நான்கு கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் 3 கட்ட வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்,
காங்கிரஸ் கிழக்கு உபி பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி தனது சகோதரர் ராகுல் காந்திக்காகவும், தாய் சோனியா காந்திக்காகவும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். அண்மையில். வயநாட்டில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, ராகுலை நேரில் சந்திக்க விரும்பிய அப்பகுதி சிறுவன் நந்தனை நேரில் சந்தித்துப் பேசினார்.
இதுமட்டுமின்றி பிரியங்கா காந்தி பிரச்சாரத்திற்குப் போகும் இடங்களில் பொதுமக்களுடன் சகஜமாக பேசி வரவேற்பை பெற்று வருகிறார்.

சசிகலாவை மே13ல் நேரில் சமுகமளிக்க பெங்களூரு சிறை நிர்வாகத்திற்கு உத்தரவு

snakkheeran.in - kathiravan : அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவை மே-13ம் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என்று பெங்களூரு சிறை நிர்வாகத்திற்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சசிகலா ஆஜராகும்போது சாட்சிகள் அளித்த சாட்சியங்கள் குறித்து விளக்கம் அளிக்கவும், நீதிபதியின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்காகவும் சசிகலாவை ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா,  சசிகலா இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று, 2017ம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார வளாகத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

BBC : இலங்கை அரசாங்கத்துடன் கரம் கோர்க்கும் விடுதலைப் புலிகள் முன்னாள் போராளிகள்

இலங்கை எதிர்நோக்கியுள்ள பயங்கரவாத அச்சுறுத்தலை, முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில், தமது அனுபவங்களை இலங்கை படையினருடன் பகிர்ந்துக் கொள்ள தயாராக உள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் தெரிவிக்கின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ராடா வான் காப்பு படையணியின் போராளியாக கடமையாற்றிய முன்னாள் போராளியும், ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான க.துளசி பி.பி.சி தமிழுக்கு இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கை பாதுகாப்பு பிரிவினர், உள்நாட்டு யுத்தத்தை தடுத்து நிறுத்துவதற்கான கட்டமைப்புடன் செயற்பட்டு வருகின்றமையே, இந்த தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச ரீதியில் செயற்படுகின்ற பயங்கரவாத அமைப்புக்களின் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையிலான திட்டமொன்று இலங்கை அரசாங்கத்திடம் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.30 வருட கால யுத்தத்தின் போது இலங்கையில் காணப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள், கடந்த 10 வருடங்களில் தளர்த்தப்பட்டமையும் இந்த தாக்குதல் நடத்தப்படுவதற்கான பிரதான காரணமாக அமைந்துள்ளதாக அவர் கூறினார்.
விடுதலைப் புலிகள் வன்னி நிலப்பரப்பை ஆட்சி செய்யும் போது, அங்குள்ளவர்கள் தொடர்பிலும், திடீர் செல்வந்தர்கள் குறித்தும் அதிக கவனம் செலுத்தியதாக குறிப்பிட்ட முன்னாள் போராளி க.துளசி, இலங்கையில் கடந்த காலங்களில் திடீர் செல்வந்தர்களான தரப்பினர் குறித்து அரசாங்கம் அவதானத்துடன் செயற்படவில்லை என குற்றஞ்சாட்டினார்.

இலங்கையிலிருந்து சவுதி பிரஜைகளை வெளியேறுமாறு ஆலோசனை.. 106 பேர் கைது .. Saudi Has Sri Lankan Blood on Its Hands: Document

thinakaran.lk : இலங்கையில் தங்கியுள்ள தனது நாட்டுப் பிரஜைகளை  இலங்கையிலிருந்து வெளியேறுமாறு, சவுதி அரேபிய தூதரகம்  ஆலோசனை வழங்கியுள்ளதாக, சவுதி அரேபிய தொலைக்காட்சி சேவையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பிலுள்ள சவுதி தூதரகமானது, ட்விட்டர் மூலம் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளதாகவும் அத்தொலைக்காட்சிச் சேவை செய்தி வெளியிட்டுள்ளதுதற்போது இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு தனது நாட்டு பிரஜைகளுக்கு குறித்த அறிவித்தலை விடுத்துள்ளதாக சவுதி அரேபியத் தூதரகம் தெரிவித்தது.
உயிர்த்த ஞாயிறு தினமான ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையின் 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில், 42 வெளிநாட்டுப் பிரஜைகள் உட்பட சுமார் 250 பேர் உயிரிழந்ததுடன், 500 இற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.

தினத்தந்தி  ;  இலங்கை தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக இதுவரை 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் வெளிநாட்டவர்கள் மற்றும் சிறார்கள் உட்பட 253 பேர் கொல்லப்பட்டதுடன் 500-க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது ஐநா...

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது ஐநா...zeenews.india.com:  பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்க தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா., அறிவித்தது! பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்க தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா., அறிவித்தது!
புல்வாமா தாக்குதல், பார்லி., தாக்குதல் உள்ளிட்ட, இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன், மசூத் அசார். மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், இந்தியா முறையிட்டது.
ஆனால், இந்தியாவின் முயற்சிக்கு, சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தது.

மழைவேண்டி யாகம் செய்த தமிழக அரசு உத்தரவு .. ஆர் எஸ் எஸ் அதிமுக ஆட்சி ...

மழை வேண்டி இசைக்கருவிகள் வாசிக்க உத்தரவு!மின்னம்பலம் : வரும் நாட்களில் மழை பெய்வதற்காக முக்கிய கோயில்களில் யாகம் நடத்த வேண்டும், இசைக்கருவிகள் இசைக்க வேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது இந்து சமய அறநிலையைத் துறை.
கடந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்குத் தென்மேற்குப் பருவ மழை தமிழகத்துக்கு நீரை அளிக்கவில்லை. இதனால் குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கே கஷ்டப்படும் சூழல் தற்போது நிலவி வருகிறது. நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வழிகளைச் சமூக ஆர்வலர்கள் ஆய்ந்து வருகின்றனர். இந்த நிலையில், மழை வேண்டி சிறப்பு யாகங்களை நடத்த வேண்டுமென்று இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பணீந்திர ரெட்டி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பர்ஜன்ய சாந்தி வருண ஜபம் வேள்வி செய்து சிறப்பு அபிசேகம் செய்ய
வேண்டுமென்றும், நீர் தொட்டி கட்டி நந்தியின் கழுத்து வரை நீர் நிரப்பி வழிபாடு செய்ய வேண்டுமென்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினகரன் எம்.எல்.ஏ.வைக் கடத்திய சி.வி.சண்முகம்

டிஜிட்டல் திண்ணை: தினகரன் எம்.எல்.ஏ.வைக் கடத்திய சி.வி.சண்முகம்மின்னம்பலம : தகுதி நீக்கம் செய்வதற்கான வாய்ப்பிருப்பதாகக் கருதப்படும் மூன்று எம்.எல்.ஏ.க்களான கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகிய மூவரின் புகைப்படங்கள் வாட்ஸ் அப்பில் வந்தன. பின்னாலேயே டெக்ஸ்ட் மெசேஜ் வந்தது.
“விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய மூன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு கொறடா ராஜேந்திரனின் புகாரின் பேரில் சபாநாயகர் தனபால் நேற்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிவிட்டார். ஏப்ரல் 26 ஆம் தேதி டிஜிட்டல் திண்ணையில் இதுபற்றி தெரிவித்திருந்ததை இப்போது நினைவுபடுத்துவது சரியாக இருக்கும்.
’அந்த 3 எம்.எல்.ஏ.க்களையும் அழைத்து சாதாரணமாக பேரம் பேசினால் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். அதனால் சபாநாயகர் மூலம் நோட்டீஸ் அனுப்பப் போவதாக சொன்னால் வழிக்கு வருவார்கள். அப்போது ‘இன்னும் இரு வருடங்களுக்கு எம்.எல்.ஏ.ஆக இருக்கணும்னா ஆட்சியை ஆதரிக்கணும். இல்லேன்னா 18 பேர் மாதிரி ஆயிடுவீங்க’ என்று எச்சரிப்பதற்காகத்தான் இந்த ஆயுதத்தைக் கொறடா மூலமாக கையிலெடுத்துள்ளார் எடப்பாடி என்கிறார்கள். ஒருவேளை அவர்கள் தங்கள் நிலையில் உறுதியாக இருந்தால் மூவரையும் தகுதி நீக்கம் செய்துவிட்டு, சட்டமன்றத்தில் தனக்கு தேவையான மெஜாரிட்டி வரம்பினை கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம் என்பதே எடப்பாடியின் திட்டம்’

ரணில் விக்கிரமசிங்கே :10 ஆயிரம் புலனாய்வாளர்கள், ஒரு இலட்சம் படையினர் களத்தில்

தினகரன் LK :உலக பயங்கரவாதத்தை அழித்தொழிக்க சர்வதேசத்துடன் இலங்கையும் இணையும்..
வெசாக் பண்டிகையை சீர்குலைக்க இடமளியோம் முழு உலகமும்
பயங்கரவாதத்தை வெற்றிகொள்ள ஒன்றிணைந்து முகங்கொடுக்க வேண்டுமென்றும் இதனால், பயங்கரவாதிகளுக்கு எதிராக அனைத்து நாடுகளுடனும் இணைந்து அவற்றின் ஒத்துழைப்புடன் எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உத்தேசித்துள்ளதாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
புலனாய்வுத் தகவல்கள் மற்றும் விசேட அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதே எமது எதிர்பார்ப்பாகும். அதுமட்டும் போதுமானதல்ல, நாடு என்ற வகையில் நாம் ஒன்றிணைந்து செயற்படுவது முக்கியமாகும். எமது பாதுகாப்பு தேசிய மற்றும் சர்வதேச தரப்பினரதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும். எச்சந்தர்ப்பத்திலும் பாதுகாப்பு பலவீனப்பட இடமளிக்க முடியாது.

இந்தியாவில் உள்ள தரமான கல்லூரிகளில் 21% தமிழ்நாட்டில் .. 182 கல்லூரிகள் தரவரிசையில் இடம் பிடித்துள்ளன

Ravishankar Ayyakkannu : இந்தியக் கல்லூரிகளுக்கான தேசிய அளவிலான தர வரிசையில் தமிழகத்தில் இருந்து மட்டும் 182 கல்லூரிகள் இடம்பிடித்துள்ளன.
அதாவது, இந்தியாவில் உள்ள தரமான கல்லூரிகளில் 21% தமிழ்நாடு என்னும் ஒரே மாநிலத்தில் அமைந்துள்ளது.
* பீகார், குஜராத், மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் என்னும் ஆறு பெரிய மாநிலங்களையும் சேர்த்தே 127 கல்லூரிகள் மட்டும் தான். இது தமிழகத்தின் கல்லூரிகளில் மூன்றில் இரண்டு பங்கு மட்டும் தான்.
* இந்தியாவில் Top 200 கல்லூரிகளில் 74 கல்லூரிகளுடன் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. அதற்குப் பிறகு கேரளம் (42), தில்லி (37) உள்ளன. பல பெரிய மாநிலங்களில் இருந்து ஒரு கல்லூரி கூட இந்தப் பட்டியலில் இல்லை.
* இந்த Top 74 கல்லூரிகளில் 17 மட்டும் தான் சென்னையில் உள்ளன. மீதி 57ம் தமிழ்நாட்டின் வெவ்வேறு நகரங்களில் பரந்து விரிந்துள்ளன.
வெறும் கையெழுத்து போட்டுப் படிப்பறிவுக் கணக்கு காட்டுவது அல்ல.
அனைத்து சாதியினருக்கும் நகரங்களுக்கும் பரவலான உயர் கல்வி.
மாவட்டம் தோறும் அரசு கல்லூரிகள். அதே வேளை, தனியார் என்றாலும் தரமான கல்வி.
இது தான் தமிழ்நாடு.
இது தான் திராவிடம்.

புதன், 1 மே, 2019

ஆட்சியை காப்பாற்ற 5 எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவா? அதிமுகவின் அடுத்த பிளான்

வெப்துனியா :  22 தொகுதி இடைத்தேர்தலின் முடிவு ஆட்சிமாற்றம் ஏற்பட வழிவகுக்கும் என எதிர்க்கட்சிகளும், அரசியல் விமர்சகர்களும் கூறி வரும் நிலையில் ஆட்சியை காப்பாற்ற ஐந்து எம்.எல்.ஏக்களை அதிரடியாக ராஜினாமா செய்ய சொல்லும் திட்டம் ஒன்று அதிமுகவிடம் இருப்பதாக டிடிவி தினகரன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
;22 தொகுதி இடைத்தேர்தலில் குறைந்தது 7 எம்.எல்.ஏக்கள் கிடைத்தால் மட்டுமே அதிமுக ஆட்சி நீடிக்கும். இல்லையே மெஜாரிட்டி இல்லாமல் ஆட்சி கவிழ்ந்துவிடும். இந்த நிலையில் மெஜாரிட்டிக்கு தேவையான எண்ணிக்கையை குறைக்க ஐந்து எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய சொல்லும் திட்டம் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர்களிடம் இருப்பதாக இன்று செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.ஆனால் ஐந்து எம்.எல்.ஏக்களுக்கு பதிலாக ஈபிஎஸ், ஓபிஎஸ் ராஜினாமா செய்துவிட்டு ஓடும் காலம் விரைவில் வரும் என்றும், இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும்வரை ஓயமாட்டோம் என்றும் தினகரன் மேலும் கூறியுள்ளார்.

புர்கா தடை: சிவசேனா கோரிக்கை!

புர்கா தடை: சிவசேனா கோரிக்கை!மின்னம்பலம் : இந்தியாவில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணியத் தடை விதிக்க வேண்டுமென்று சிவசேனா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதையடுத்து, அங்கு முஸ்லிம் பெண்கள் புர்கா அணியத் தடை விதிக்கப்பட்டது. அது போன்று இந்தியாவிலும் புர்காவுக்குத் தடை விதிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளது சிவசேனா கட்சி. இது பற்றி, இன்று (மே 1) சிவசேனாவின் கட்சிப் பத்திரிகையான சாம்னாவின் தலையங்கப் பக்கத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
“பாதுகாப்புப் படையினர் மக்களை அடையாளம் காண்பதில் சிரமப்படக் கூடாது என்பதற்காக இந்த கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. முகமூடி அணிவது அல்லது புர்கா அணிவது என்பது தேசியப் பாதுகாப்புக்கு மிரட்டல் விடுப்பதாகும்” என்று சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத ரீதியான நடைமுறை ஒன்று தேசியப் பாதுகாப்புக்கு இடையூறாக இருக்குமென்றால் அதனை முடிவுக்குக் கொண்டுவருவதே நல்லது என்றும், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

மகராஷ்டிரா மாவோயிஸ்ட் தாக்குதல் 16 படையினர் உயிரழப்பு வீடியோ


BBC : மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில், போலிஸ் வாகனத்தின்மீது மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 16 பேர் உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பு படையை சேர்ந்த 15 பேர் அந்த வாகனத்தில் பயணம் செய்தனர் என்று கூறப்படுகிறது.
பாதுகாப்பு படையை சேராத ஓட்டுநர் ஒருவரும் இதில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது சக்தி வாய்ந்த கண்ணிவெடி தாக்குதல் என்றும் கூறப்படுகிறது.
கொல்லப்பட்ட வீரர்கள் அனைவரும் மகாராஷ்டிரா போலீசின் சி 60 கமாண்டோ படையை சேர்ந்தவர்கள்.
சி60 கமாண்டோ படை என்பது என்ன?
மாவோயிஸ்டுகளின் கொரில்லா தாக்குதல் உத்தியை எதிர்கொள்வதற்காக மகாராஷ்டிரா போலீஸ் புதிய சிறப்பு அணியை உருவாக்கியது. இதில் உள்ளூர் பழங்குடிகளைச் சேர்ந்தவர்கள் சேர்க்கப்பட்டனர்.
1992-ல் தொடங்கப்பட்ட இந்த அணியில் 60 பழங்குடிகளைச் சேர்ந்தவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த அணியின் பலம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. மாவோயிஸ்டுகளுக்கு எதிரான இவர்களின் செயல்பாடும் அதிகரித்தது.
இவர்களுக்கு பழங்குடிகளின் பண்பாடு, மொழி, தகவல்கள் தெரியும் என்பது மாவோயிஸ்ட் எதிர்ப்பு செயல்பாடுகளுக்கு உதவியாக அமைந்திருந்த

இலங்கை: இஸ்லாமிய தொலைக்காட்சிக்குத் தடை!

இலங்கை: இஸ்லாமிய தொலைக்காட்சிக்குத் தடை!மின்னம்பலம் : இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு அந்நாட்டிலுள்ள இஸ்லாமிய மத அடிப்படை வாதிகளைக் குறிவைத்து இலங்கை அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு அன்று தேவாலயங்களிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்புகளால் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கொடூரங்களை உள்ளூர் இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புகள் ஐஎஸ் அமைப்போடு இணைந்து நடத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இலங்கையில் இஸ்லாமிய அடிப்படை வாதிகளை ஊக்குவிக்கும் டிவி சேனல்களை தடை செய்வதென முடிவெடுத்த இலங்கை அரசு, இதுபற்றி டயலாக், எஸ்.எல்.டி. ஆகிய நாட்டின் முக்கிய கேபிள் ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து துபாய் நாட்டிலிருந்து ஒளிபரப்பாகும் இஸ்லாமிய அறிஞர் ஜாஹிர் நாயக் நடத்தும், ‘பீஸ் டிவி’ நேற்று நள்ளிரவு முதல் இலங்கையில் ஒளிபரப்புவது நிறுத்தப்பட்டிருக்கிறது.

மோதிக்கு எதிராகப் போட்டியிடுவதாக தெரிவித்த முன்னாள் ராணுவ வீரரின் வேட்பு மனு நிராகரிப்பு

BBC : மோதிக்கு எதிராக வாரணாசியில் போட்டியிடுவதற்காக முன்னாள்
ராணுவ வீரர் தேஜ்பகதூர் யாதவ் தாக்கல் செய்த வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்துள்ளதாகத் தெரிகிறது. பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு மோசமாக இருப்பதாக குற்றம்சாட்டி 2017-ல் மூன்று வீடியோக்களை பகிர்ந்ததால் ராணுவத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர் தேஜ்பகதூர்.
இந்நிலையில் அவர் மோதிக்கு எதிராக உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். சமாஜ்வாதி கட்சி அவரை தமது அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவித்திருந்தது.
இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனோஜ்ராஜ், "தேஜ் பகதூரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது தொடர்பாக வாய்மொழியாக அதிகாரிகள் தெரிவித்தார்கள். எழுத்துபூர்வமான உத்தரவுக்காக காத்திருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

சிரிய நகரை இழந்ததற்கான பதிலடியே சிறிலங்கா தாக்குதல் – ஐஎஸ் தலைவர்

சிரிய நகரை இழந்ததற்கான பதிலடியே சிறிலங்கா தாக்குதல் – ஐஎஸ் தலைவர்வீரகேசரி : ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய காணொளி ஒன்றின் மூலம் தோன்றியுள்ள இஸ்லாமிய தேசம் எனப்படும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்- பக்டாடி, சிரியாவின் கடைசிக் கோட்டையை இழந்ததற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே சிறிலங்காவில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளார்.
 நேற்று ஐஎஸ் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அந்தக் காணொளியில், ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்- பக்டாடி, தனது மூன்று முக்கிய தலைவர்களுடன் பேசுகின்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. சிரியாவின் ஐஎஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரமான பக்கூஸ் கடந்த மாதம், சிரியப் படைகளிடம் வீழ்ச்சியடைந்திருந்தது.
 இதுகுறித்து இந்தக் காணொளியில் பேசியுள்ள, ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்- பக்டாடி, ”பக்கூஸ் நகரத்துக்கான சமர் முடிந்து விட்டது, ஜிகாத் செய்யும்படி கடவுள் கட்டளையிட்டுள்ளார். வெற்றி பெறுமாறு அவர் கட்டளையிடவில்லை. பக்கூஸ் நகரத்திலுள்ள எமது சகோதரர்களுக்கு பழிவாங்கும் வகையிலேயே சிறிலங்காவில் தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்லாமிய அரசின் பதிலடியின் சிறிய பகுதி தான் இது” என்றும் அவர் கூறியுள்ளார்.

விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சேவுக்கு 50 வாரம் சிறை .. லண்டன் நீதிமன்றம் .. ஜாமீன் நிபந்தனை மீறல் ..

ஜாமீன் நிபந்தனை மீறல் - விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு 50 வாரம் சிறை தண்டனைமாலைமலர் :கற்பழிப்பு குற்றச்சாட்டில் நீதிமன்றம் அளித்த ஜாமீன் நிபந்தனைகளை மீறிய வழக்கில் விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு லண்டன் நீதிமன்றம் இன்று 50 வாரங்களுக்கு சிறை தண்டனை விதித்தது. லண்டன்: ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே (வயது 47) கடந்த 2006-ம் ஆண்டு சுவீடனில் ‘விக்கிலீக்ஸ்’ என்கிற நிறுவனத்தை தொடங்கினார். இவர் அமெரிக்க ராணுவம் குறித்த ரகசிய ஆவணங்களை தன் இணையதளத்தில் வெளியிட்டு உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினார். இதன் மூலம் ஜூலியன் அசாஞ்சே சர்வதேச அளவில் பிரபலமான அதேவேளையில், பல நாடுகளின் எதிர்ப்பையும் சம்பாதித்தார்.
அதே சமயம் உலக அளவில் அவருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உருவானது. அவர் அடுத்து எந்த நாடு குறித்த ரகசிய தகவல்களை வெளியிடுவார் என உன்னிப்பாக கவனிக்க தொடங்கினர். ஜூலியன் அசாஞ்சே மீது கடும் கோபம் கொண்டிருந்த அமெரிக்கா அவரை பலமுறை கைது செய்ய முயற்சித்தது. ஆனால் முடியவில்லை.
இதற்கிடையில், சுவீடனில் 2 பெண்களை ஜூலியன் அசாஞ்சே கற்பழித்ததாக 2010-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.