சனி, 10 மார்ச், 2018

Sciatica கால்களில் ஏற்படும் நரம்பு .. வலி .. Castor oil கைகண்ட மருந்து ..

சியாட்டிக் நரம்பு இழுப்பது போன்ற வலியை ஏற்படுத்தும் கால் நரம்பு பிரச்னைக்கு ஆமணக்கு எண்ணெய் மிகவும் சிறந்த பலனை கொடுக்கும் என்று தற்போது பலரும் உணர்ந்துள்ளார்கள் .தொடர்ந்து வலி மறையும் வரை ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு தடவைகள் வலி உள்ள இடங்களில் மெதுவாக பூசி வரவும் . நிச்சயமாக இலகுவாக குணமாகும்
sciatica2_10301  கால் நரம்பை இழுக்கும் சியாட்டிக்கா பிரச்னை... ஏன், எதற்கு, எப்படி? sciatica2 10301
sciatica3_10554  கால் நரம்பை இழுக்கும் சியாட்டிக்கா பிரச்னை... ஏன், எதற்கு, எப்படி? sciatica3 10554தினமலர் சியாட்டிக்கா’ (Sciatica)… கேட்பதற்கு வேடிக்கையான, புதிதான ஒரு வார்த்தையாகத் தோன்றலாம். ஆனால், இந்தப் பிரச்னை ஏற்படுத்தும் வலி வார்த்தையில் அடக்க முடியாதது. ‘கால் திடீர்னு மரத்துப்போகுது… தொடைப்பகுதியில இருந்து சுளீர்னு ஏதோ ஒண்ணு இழுக்குற மாதிரி வலி, பின்கால் வரைக்கும் நீளுது’ என்பார்கள் பாதிக்கப்பட்டவர்கள். 40 வயதைத் தாண்டிய பெண்கள்தான் இந்த சியாட்டிக்காவால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். “சியாட்டிக்கா என்பது, முதுகில் ஆரம்பித்து, காலின் பின்பகுதியில் குதிகால் வரை நீளும் ஒரு நரம்பின் பெயர். உடலில் உள்ள நரம்புகளிலேயே, மிக நீளமான ஒற்றை நரம்பு சியாட்டிக்காதான். இந்த நரம்பு பாதிக்கப்பட்டால், கால் வலுவிழப்பது, சோர்வு, உணர்வின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

பன்னீர்செல்வம் :மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பட்ஜெட்!

மின்னம்பலம் : மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அரசின் பட்ஜெட் இருக்கும் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். வரும் 15ஆம் தேதி காலை 10.30 மணியளவில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் தொடங்கவுள்ளது. அன்றைய தினம் துணை முதல்வரும், நிதியமைச்சருமான பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று (மார்ச் 10) செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வத்திடம் பட்ஜெட் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
 அதற்கு, "மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அரசின் நிதிநிலை அறிக்கை இருக்கும்" என்று பதிலளித்துள்ளார்.

கனிமொழி : பெண்கள் தமது பாதுகாப்பிற்காக ஆயுதங்கள் எந்த வைத்து விடாதீர் !


மின்னம்பலம் :தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வரும் நிலையில், பாதுகாக்க வேண்டியவர்கள் வேடிக்கை பார்த்தால் பெண்கள் தற்காப்புக்கு ஆயுதம் ஏந்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என திமுக எம்பி கனிமொழி எச்சரித்துள்ளார்.
சமீபகாலமாகப் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பொது இடங்களில் வைத்து பெண்களை தாக்குவது தொடர்கதையாகிவிட்டது. முன்னதாக மதுரையில் ஒருதலைக் காதலால் பள்ளி மாணவி சித்ரா தீயிட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். திருச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் பைக்கை எட்டி உதைத்ததில் கீழே விழுந்து உஷா என்ற கர்ப்பிணிப் பெண் கொடூரமாக உயிரிழந்தார்.
இரு தினங்களுக்கு முன்பு சென்னை மீனாட்சி கல்லூரியைச் சேர்ந்த முதலாமாண்டு பி.காம் மாணவி அஸ்வினி காதல் என்ற பெயரில் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
நவீனா, சுவாதி, வினோதினி, எனப் பெண்கள் மீது தாக்குதல் நடத்திக் கொல்லப்படும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. இந்தச் சம்பவங்களுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சிரியா போர் .. இன்னொரு இராக் , லிபியாவை போன்று ஒரு தேசத்தை ... வெறி .

Ellaam Samam : சிரியாப் போரை தவறான புரிதலோடு விடுதலைபெற மக்கள் அதிபருக்கெதிராகப் போராடுவதாக ஒருவர் ஒர் ஒளிப்பதிவில் சொல்லி இருந்தார். அவர் முழுக்க முழுக்க மேற்கத்திய ஊடகத்தால் தவறான புரிதலுக்குத் தள்ளப்பட்டவர்.
மதவெறியாலும் மற்ற நாடுகளின் தூண்டுதலாலும் கெட்டழிந்த அறிவற்ற இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்கள் (நூற்றுக்கணக்கான குழுக்கள், உலகின் இந்தியா, சீனா, ரசியா, பாகிஸ்தான், அனைத்து அரேபிய நாடுகள் என எல்லா நாடுகளிலிருந்தும் வந்தவர்கள்) ஒருபக்கம். மக்களின் நலம் விரும்பும் லண்டனில் கண் மருத்துவம் படித்த அருமையான டாக்டர் ஆசாத் அவர்களுக்கும் நடக்கும் போரே சிரியா கலவரங்கள். நன்கு படித்தவர், நல்ல அறிவாளி என்பதால் தான் தன் குடும்பம் எப்போதுவேண்டுமானாலும் கொல்லப்படலாம் என்று தெரிந்தே அந்த மத வெறிபிடித்த சன்னி பிரிவு இஸ்லாமியர் (பாகிஸ்தான், சவூதி அரேபியா, ஐக்கிய அரேபிய எமிரேட்) அதிகம் வாழும் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ்ஸிலிலேயே டாக்டர் ஆசாத் அவர்களும் வாழுகிறார்.

அன்புமணி : எம்பி பதவியை ராஜினாமா செய்வேன் ... காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில்

Shyamsundar  Oneindia Tamil சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மக்களவை எம்.பி பதவியை ராஜினாமா செய்வேன் என்று அன்புமணி ராம்தாஸ் பேட்டி அளித்துள்ளார். காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியுள்ளது. 
அதன்படி காவிரி ஆற்றை உரிமை கொண்டாட எந்த மாநிலத்திற்கும் உரிமையில்லை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்திற்கு கர்நாடகா 177.25 டி.எம்.சி நீர் தர உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடுவர் மன்றம் 192 டிஎம்சி வழங்க உத்தரவிட்ட நிலையில் அதனை சுப்ரீம் கோர்ட் குறைத்துள்ளது. கர்நாடகத்துக்கு 280.75 டி.எம்.சி. நீர் வழங்க உத்தரவு. மேலும் 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாக வேண்டும் என்றும் கூறியுள்ளது. ஆனால் கர்நாடகாவில் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் மத்திய பாஜக அரசு இதில் முடிவெடுக்காமல் இருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று மத்திய அரசு கூட்டத்தின் முடிவில் கூறியுள்ளது. 

பெண்களும் அர்ச்சகராக சட்டம் ..விடுதலை சிறுத்தைகள் தீர்மானம்

நக்கீரன் :பெண்களும் அர்ச்சகராகச் சட்டம் இயற்ற வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணியான மகளிர் விடுதலை இயக்கத்தின் மாநில மாநாடு இன்று 10.3.2018 சனிக்கிழமை  சேலம் மாநகரில் நடைபெற்றது. அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒற்றைத் தீர்மானம்.<
தீர்மானம் : இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் மகளிரையும் அர்ச்சகர்களாக நியமிக்கவேண்டும்-
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சுமார் 39 ஆயிரம் கோயில்கள் உள்ளன. அவை ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோயில்கள் ஆகம விதிகளுக்கு உட்படாத கோயில்கள் என இரண்டு வகைப்படும். இந்தக் கோயில்களில் பணி புரிவதற்கான அர்ச்சகர்களை நியமிப்பதற்கான விதிகள் ’இந்து சமய அறநிலைய கொடைகள் சட்டத்தின்படி’ இயற்றப்பட்டுள்ளன.
1971 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது அன்றைய முதல்வர் கலைஞர் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வண்ணம் ’இந்து சமய அறநிலைய கொடைகள் சட்டம் 1959 ல்’ திருத்தம் கொண்டுவந்தார். ஆனால் அதை நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. 2006 ஆம் ஆண்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு ஏதுவாக மீண்டும் சட்டம் ஒன்றை இயற்றினார்.

ராகுல் காந்தி : பணமதிப்பிழப்பு யோசனையை என்னிடம் கூறியிருந்தால் அவர்களை வெளியேற்றி இருப்பேன் ,, குப்பை தொட்டியில் போட்டு இருப்பேன்

tamilthehindu :நான் பிரதமராக இருந்து, அப்போது பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த யோசனைகள் என்னிடம் தெரிவித்து இருந்தால், என்ன செய்திருப்பேன் தெரியுமா என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பார்வையாளர்களிடம் புதிர் போட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 3 நாள் பயணமாக சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்குச் சென்றுள்ளார். மலேசியாவில் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசினார்.
அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து, ராகுல் காந்தியிடம் ஒரு கேள்வி எழுப்பினார். நீங்கள் பிரதமராக இருந்திருந்தார், உங்கள் ஆட்சியில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எப்படி அமல்படுத்தி இருப்பீர்கள்? என்று கேட்டார்.
இதற்கு ராகுல் காந்தி சிரித்துக்கொண்டே பதில் அளித்தார்.
''காங்கிரஸ் ஆட்சி நடந்திருந்து, நான் பிரதமராக இருந்திருந்தால், என்னிடம் பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த யோசனை கொடுக்கப்பட்டால் என்ன செய்திருப்பேன் தெரியுமா?பண மதிப்பிழப்பு குறித்த கோப்புகளை தூக்கி குப்பைத் தொட்டியில் வீசி இருப்பேன்.

இரு சக்கர வாகனனங்களுக்கு இன்சூரன்ஸ்’ கட்டணம் ரூ.1,850 ஆக குறைப்பு

tamilthehindu :கடந்த 2 ஆண்டுகளாக கார், இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்களுக்கு ‘தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ்’ கட்டணம் உயர்த்தப்பட்டு வந்தநிலையில், 2018-19 ஆம்ஆண்டு இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைத்து இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்(ஐஆர்டிஏஐ) உத்தரவிட்டுள்ளது.
இருசக்கர வாகனம், கார் வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு ஆண்டும் எத்தனை பேர் காப்பீடு மூலம் இழப்பீடு கோருகிறார்கள், இழப்பு கொடுக்கப்படும் அளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு இன்சூரன்ஸ் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

தியேட்டரே வேண்டாம் ... தயாரிப்பாளர்கள் அறிவிப்பு ... இனி வெப் சீர்யலை நோக்கி திரைத்துறை

வெப்துனியா :மார்ச் 1 முதல் புதிய படங்கள் வெளியீடு இல்லை என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தம் கியூப் போன்ற டிஜிட்டல் நிறுவனங்களுக்காக என்று கூறப்பட்டாலும் உண்மையில் பிரச்சனை தயாரிப்பாளர் சங்கத்திற்கும் தியேட்டர் அதிபர்களுக்கும் தான் என்று கூறப்படுகிறது. ஒருபக்கம் மார்ச் 1 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை என்ற அறிவிப்பு தயாரிப்பாளர் பக்கமிருந்து வந்ததும், மார்ச் 16 முதல் தியேட்டர்கள் மூடப்படும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கு பதிலடியாக இன்று முதல் போஸ்ட் புரடொக்சன்ஸ் உள்பட எந்த பணியும் கிடையாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதிக கட்டணம், அதிக பார்க்கிங் கட்டணம், கொள்ளை விலையின் தின்பண்டம் ஆகியவை காரணமாக தியேட்டரில் கூட்டம் குறைந்துவிட்டது.
மேலும் ரூ.5 கோடி பட்ஜெட் படத்திற்கும் ரூ.200 டிக்கெட், ரூ.50 கோடி பட்ஜெட் படத்திற்கும் அதே டிக்கெட் என்ற முறையை மாற்றி சின்ன பட்ஜெட் படத்திற்கு கட்டணங்களை குறைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் தரப்பு கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் மறுத்துள்ளது.

ரஜினியின் லைகா ராஜு மகாலிங்கம் .. சட்டவிரோத டெலிபோன் எக்ஸ்சேஞ்ச்..

Shankar A : சிஸ்டம் சரியில்ல சார்.
03.08.2000 அன்று சிபிஐ மற்றும் பிஎஸ்என்எல் அதிகாரிகள், டெலி டேட்டா என்ற சென்னையைச் சேர்ந்த நிறுவனத்தில் திடீர் சோதனை நடத்துகிறார்கள். அந்த சோதனையில், அந்நிறுவனம், சட்டவிரோதமான டெலிபோன் எக்சேஞ்ச் நடத்தி, சர்வதேச அழைப்புகளை உள்ளுர் அழைப்புகள் போல மாற்றி, பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு லட்சக்கணக்கான இழப்பு ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்படுகிறது.
சிபிஐ இது குறித்து RC 35A/2000ல் வழக்கு பதிவு செய்கிறது. அந்த மோசடி நிறுவனத்தில் ஒரு இயக்குநராக இருந்தவர் நடராஜன் மகாலிங்கம். ஒரு நிறுவனம் சட்டவிரோத தொழில் செய்து, அந்த நிறுவனத்தில் இயக்குநராக இருந்து ஒருவர் ஊதியம் பெற்றாலே, அந்த குற்றத்தில் அவர் பங்குதாரர்தான். ஆனால் சிபிஐ அதிகாரிகள் நடராஜன் மகாலிங்கத்தின் பெயரை குற்றப் பத்திரிக்கையில் சேர்க்காமல் விட்டு விடுகிறார்கள். அப்போது சிபிஐ அதிகாரிகளுக்கு 7 லட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்து, தன் பெயரை சேர்க்காமல் நடராஜன் மகாலிங்கம் பார்த்துக் கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.
சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்த இந்த வழக்கு தண்டனையில் முடிகிறது.

இந்த நடராஜன் மகாலிங்கம் வேறு யாருமல்ல. ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கான முக்கிய தூணாக தற்போது, ரஜினி மன்றத்தின் மாநில தலைவராக உள்ள ராஜு மகாலிங்கம்தான் இந்த நடராஜன் மகாலிங்கம்.

காவிரியில் கர்நாடகா கழிவுநீரைக் கலப்பது உண்மை!

காவிரியில் கர்நாடகா கழிவுநீரைக் கலப்பது உண்மை!மின்னம்பலம் :உச்ச நீதிமன்றத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மாசு கலந்த நீரைத்தான் கர்நாடகா தமிழகத்துக்கு வழங்குவதாக மனுத்தாக்கல் செய்துள்ளது.
காவிரி விவகாரத்தில், தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும் இடையே பல மோதல்கள் நிலவிவருகின்றன. கர்நாடக மாநிலத்தின் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு பல கிலோ மீட்டர் தூரம் தாண்டி தமிழகத்திற்குப் பாய்ந்துவருகிறது. இந்நிலையில் கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு வரும் வழியில் இந்த ஆற்றில், பல்வேறு வகையான ஆலைகளிலிருந்து கழிவுகள் கலக்கப்படுகின்றன.
மேலும் காவிரி ஆற்றில் கலந்துவரும் மொத்த கழிவுகளில் சுமார் 15 முதல் 20 சதவீதம் மட்டுமே கர்நாடக அரசால் சுத்திகரிக்கப்படுகிறது. இதனால் காவிரி நீர் பல அபாயகரமான கழிவுகளோடுதான் தமிழகத்தை வந்துசேருகிறது. அந்தக் கழிவு நீரைத்தான் தமிழகத்தில் விவசாயத்திற்கும் குடிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர்.

பாபி சிம்ஹா நடிக்கும் வெப் சீரீஸ்!.. web serial

பாபி சிம்ஹா நடிக்கும் வெப் சீரீஸ்! மின்னம்பலம் :திரைப்படங்களைத் தொடர்ந்து பாபி சிம்ஹா இணையத் தொடரிலும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக எந்தப் படைப்பையும் திரையரங்கில் சென்றுதான் பார்க்கவேண்டும் என்ற நிலை இல்லை. குறும்படம், ஆவணப்படம், திரைப்படம், வீடியோ ஆல்பம் என, தாங்கள் உருவாக்கும் படைப்புகளை இணையத்தில் தாங்களே வெளியிடுவதன் மூலம் குறைந்த செலவில் ஏராளமான ரசிகர்களைப் பெறுகின்றனர். அதில் சமீபகாலமாக இணையத் தொடர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளன.
தமிழில் பாலாஜி மோகன் இயக்கிய ‘அஸ் ஐ அம் சப்பரிங் ஃப்ரம் காதல்’ தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து பல இணைய தொடர்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

கையெடுத்து கும்பிட்ட அத்வானி; கண்டு கொள்ளாத மோடி: திரிபுரா பதவி ஏற்பு விழாவில்


tamilthehndu :திரிபுராவில் இன்று பாஜக புதிய அரசு பதவி ஏற்பு விழா நடந்தது. அப்போது, மேடையில் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கையெடுத்து கும்பிட்டபோது, அதை கண்டுகொள்ளாமல் பிரதமர் மோடி சென்றது மிகப்பெரிய அவமானமாக அமைந்துவிட்டது.
திரிபுராவில் நடந்த சட்டப்பேரவைத்தேர்தலில் பாஜக கூட்டணி கட்சி அமோக வெற்றி பெற்றது. 25ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்து, இன்று திரிபுராவில் புதிய ஆட்சி பதவி ஏற்றது. முதல்வராக பிப்லாப் தேப் பதவிஏற்றார்.
இந்த விழாவுக்கு பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் உள்ளிட்டோர் வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் விழா மேடையில் இருந்தனர்.
அப்போது, பிரதமர் மோடி மேடைக்கு வந்தபோது, முரளி மனோகர் ஜோஷி, அமித் ஷா, ராஜ்நாத் சிங் என ஒவ்வொரு தலைவராக எழுந்து கைகூப்பி வணக்கம் தெரிவித்தனர். பிரதமர் மோடியும் பதிலுக்கு வணக்கம் செலுத்திச் சென்றார்.

ரங்கராஜ் பாண்டேயால் நொறுங்கி போன தந்தி டிவியின் வரலாற்று பெருமை


Shankar A : பாண்டேவின் அரசியல்.
ஒரு இடத்தில் வேலைக்கு சென்றால், தன்னை விட உயர்ந்தவர் யாருமே அங்கே இருக்கக் கூடாது என்பதே பாண்டேவின் உயரிய நோக்கம். பணி புரியும் இடத்தில் முன்னேற வேண்டும் என்பது அனைவரும் விரும்பும் விஷயம்தான். ஆனால் அதற்காக அரசியல் செய்து, ஒருவரை காலி செய்து, அந்தப் பதவியை அடைய வேண்டும் என்பது சரியான அணுகுமுறை அல்ல.
தந்தி டிவி தொடங்கிய சமயத்தில், சீப் எக்சிக்யூட்டிவ் ஆபிசராக இருந்தது ராஜீவ் நம்பியார். சிஓ வாக இருந்தது சந்துரு . ராஜீவ் நம்பியாரை அந்தப் பதவியில் இருந்து காலி செய்தால், அந்தப் பதவிக்கு நாம் வந்து விடலாம் என்பதே பாண்டேவின் திட்டம். பாலசுப்ரமணிய ஆதித்தனிடம் நைச்சியமாக பேசி, ராஜீவ் நம்பியாரை காலி செய்தார் பாண்டே.
சிஓஓவாக இருந்த சந்துரு பாண்டேவை விட சிறந்த அரசியல்வாதி. பாண்டே சிஇஓவாக வந்தால், அடுத்து நமக்குத்தான் வேட்டு வைப்பார் என்பதை உணர்ந்து, பாலசுப்ரமணிய ஆதித்தனிடம் பேசி, பாண்டேவுக்கு அந்தப் பதவி கிடைக்காமல் பார்த்துக் கொண்டார்.
இந்த நிலையில், சிஓஓ சந்துரு, அவராகவே முறைகேட்டில் ஈடுபட்டு, வசமாக சிக்கிக் கொண்டு தந்தி டிவியில் இருந்து வெளியேறினார்.
சிஓஓ பதவிக்கு பாலசுப்ரமணி ஆதித்தனின் உறவினரான விஜயன் ஆதித்தன் நியமிக்கப்படுகிறார். விஜயன் வெளிப்படையாக பேசக் கூடியவர். அதனால், பாண்டேவின் நிகழ்ச்சிகளில் சில விமர்சனங்களை கூறியிருக்கிறார்.

கார்த்திக் சிதம்பரத்தின் சொத்து பட்டியல் ... நம்பவே முடியாத அளவு பிரமாண்டம் ?

விகடன் :ஜோ. ஸ்டாலின் : தன்னைத் ‘தேடப்படும் குற்றவாளி’ என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்ததை ரத்து செய்யக் கோரி, கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேஹ்தா, ‘‘கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளில் என்ன செய்தார் என்பது தொடர்பான விசாரணை அறிக்கை இது’’ என சீலிட்ட ஒரு கவரை நீதிபதிகளிடம் கொடுத்தார். அந்த கவரில் இருந்த ரகசியங்கள் பற்றித்தான், கார்த்தி சிதம்பரத்திடம் இப்போது விசாரணை நடக்கிறது. 

வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிறுவனங்களில் கார்த்தி சிதம்பரமும், அவர் தொடர்புடைய நிறுவனங்களும் செய்துள்ள முதலீடுகள் தொடர்பான விவரங்கள்தான் அந்த கவரில் இருந்தன. கிட்டத்தட்ட சுப்பிரமணியன் சுவாமி அனுப்பிய புகார் ஒன்றில் குறிப்பிட்டிருந்த பட்டியல் போலவே இதுவும் உள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளும், முதலீடுகளும்...
இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பகுதியில் உள்ள 85 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு மாளிகை; இந்த மாளிகை வாங்கியதற்கான பணம், கார்த்தி சிதம்பரத்தின் லண்டன் மெட்ரோ வங்கிக் கணக்கிலிருந்து சென்றுள்ளது.
இங்கிலாந்தின் சோமர்செட் பகுதியில் 88 ஏக்கரில் பண்ணை வீடு.

இங்கிலாந்து, துபாய், தென் ஆப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள், பிரான்ஸ், அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து, கிரீஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் செய்யப்பட்ட 300 கோடி டாலர் மதிப்பிலான ரியல் எஸ்டேட் பரிவர்த்தனை. 

மலேசிய விமானத்தில் நிர்வாணமாக சுய இன்ப முயற்சியில் பங்களாதேச வாலிபர் ... கைது


நிர்வாண கோலத்தில் ஆபாச படம் பார்த்த வாலிபர்: அதிர்ச்சியில் பயணிகள்!!
மாலைமலர் :நிர்வாண கோலத்தில் ஆபாச படம் பார்த்த வாலிபர்: அதிர்ச்சியில் பயணிகள்!! பறக்கும் விமானத்தில் நிர்வாணக் கோலத்தில் ஆபாச படம் பார்த்ததோடு மட்டிமில்லாமல், பணிப்பெண்களை கட்டிப்பிடிக்கப் பாய்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசிய தலைநகர் கோலாம்பூரில் இருந்து வங்காள தேசத்தின் தலைநகர் டாக்காவிற்கு ஒரு பயணிகள் விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது, 20 வயது வாலிபர் ஒருவர் தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்து தனது ஆடைகளை களைந்து நிர்வாணமாகியுள்ளார்.அதன் பின் தனது உடைகளை இருக்கையின் பின்புறம் தலையணை போல் வைத்து சாய்ந்து கொண்டு, தனது லேப்டாப்பை திறந்து ஆபாச படத்தை பார்க்கத் தொடங்கினார். இதைக்கண்ட சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், அந்த வாலிபர் எதையும் கண்டுகொள்ளவில்லை. அவரிடம் பணிப்பெண்கள் சென்று எச்சரித்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறவில்லை .. மத்திய அரசு புதுக்கதை

Gajalakshmi - Oneindia Tamil டெல்லி : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிடவில்லை என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சக செயலாளர் தெரிவித்துள்ளார். டெல்லியில் 4 மாநில அரசுகளின் அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் கூறியதாவது : காவிரி நீர் பங்கிட்டு கொள்வதற்காக அமைக்கப்பட உள்ள அமைப்பு எப்படி இருக்க வேண்டும், அதன் செயல்பாடுகள் என்ன, என்னென்ன விஷயங்களை இந்த அமைப்பு கையாளும் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. 
Centre says Sc not ordered to form cauvery management board 4 மாநில அரசுகளின் அதிகாரிகளிடம் இது குறித்து கருத்துகள் கேட்கப்பட்டது. மாநில அரசுகள் இன்று தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளன, அவர்கள் எழுத்து மூலமாக பரிந்துரைகள் அளித்தால் அவையும் கருத்தில் கொள்ளப்படும். காவிரி நடுவர் மன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற பரிந்துரையை அளித்தது. உச்சநீதிமன்றம் தங்களின் இறுதித் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை, ஒரு திட்டம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மட்டுமே கூறியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியமா அல்லது வேறு குழுவா என்பதை மத்திய அரசு முடிவு செய்யவில்லை. உச்சநீதிமன்றம் காவிரி நீரை பங்கிட்டு கொள்வது குறித்து 6 வாரத்துக்குள் குழு அமைத்து செயல் திட்டம் வகுக்க உத்தரவிட்டது, அதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக அடுத்த கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் உபேந்திரா பிரசாத் சிங் கூறியுள்ளார்.

நாடார் முதுகில் குத்திய பாஜக .. முதுகலை படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இட உரிமை நீக்கம்

அரசியல் அடையாளத்திற்காகவும், எப்படியும் தம் சமூகத்தை அடுத்த நிலைக்கு கொண்டு சென்று விட வேண்டும் என்றும் தமிழ் நாட்டில் பிஜேபியை தூக்கி சுமப்பது நாடார்கள்.
கடினமான, நேரம் காலம் பாராமல் உழைத்ததின் மூலம் பொருளாத்தார தன்னிறைவு அடைந்தப் பின் அரசியல் பங்கு என்பது இயல்பான எண்ணம்தான். குற்றம் இல்லை. ஆனால் அதற்காக சேர்ந்த இடம் தான் சொந்தக் காசில் சுனியம்.
நாடார்கள் பணம் ஈட்டி, தம் பிள்ளைகளை பல மேற்படிப்பு படிக்க வைத்தார்கள். ஆனால் அத்தகைய மேற்படிப்பு இந்திய, தமிழக அரசியல் சுழ்நிலையால்தான் சாத்தியமானாது என்பதை அறியாமல், எல்லாத்திற்கும் கடின உழைப்பு மட்டுமே காரணம் என்று நம்பினர்.
அந்த நம்பிக்கையே அரசியல் களத்தில் தவறான முடிவு எடுத்து பிஜேபிக்கு தோள் தந்தனர். அந்த பிஜேபிதான் தற்பொழுது மருத்துவ முதுகலை படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இட உரிமையை இரத்து செய்துள்ளார்கள். நாடார் பிள்ளைகளின் படிப்பில் மண். பிஜேபி நாடார்களை முதுகில் குத்தி உள்ளது.
சிபிஎஸ்இ பாடப் புத்தகத்தில் நாடார்கள் பற்றிய தவறான தகவலுக்காக நாடார் சங்கங்கள் நாடாளுமன்றம் வரை சென்று போராடி வெற்றிப் பெற்றனர். இப்பொழுது பாடப்புத்தகத்தை கையில் எடுப்பதற்கே தடை. நாடார் சங்கங்கள் போராடுமா? பிஜேபியை கைக் கழுவுமா?
நாடார் சமூகத்தை சேர்ந்த, பிஜேபியில் உள்ள, மாநிலத் தலைவர் டாக்டர். தமிழிசை மற்றும் ஒன்றிய அமைச்சர். பொன்.இராதாகிருஷ்ணன், உடனடியாக இதில் தலையிட்டு தீர்வு காண்பார்களா?
இனியாவது, நாடார்கள், தமக்கும், தம் பிள்ளைகளுக்கும் சரியான அரசியல் எதுவோ, அதை தேர்ந்தெடுப்பார்களா?

வெள்ளி, 9 மார்ச், 2018

தினகரனுக்குக் குக்கர் சின்னம்: நீதிமன்றம் உத்தரவு!

தினகரனுக்குக் குக்கர் சின்னம்: நீதிமன்றம் உத்தரவு!minnambalam :டிடிவி. தினகரன் அணிக்குக் குக்கர் சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதுவாகக் குக்கர் சின்னத்தையும், கட்சிப் பெயரையும் ஒதுக்கக் கோரி டிடிவி. தினகரன் அணி சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், “இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துவருகிறது. ஆகவே, தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் தரப்பு புதிய கட்சி பெயரில் இயங்கவும், குக்கர் சின்னத்தில் போட்டியிடவும் அனுமதிக்கத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது. அனைத்திந்திய அம்மா அண்ணா திராவிடர் முன்னேற்றக் கழகம் அல்லது எம்ஜிஆர் அம்மா திராவிடர் முன்னேற்றக் கழகம் அல்லது எம்ஜிஆர் அம்மா திராவிடர் கழகம் ஆகிய மூன்றில் ஏதாவது ஒரு பெயரை ஒதுக்க வேண்டும் என்றும் தினகரன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

கருணைக் கொலை செய்யலாம்: தீராநோய் உள்ளவர்கள் மரணிக்க அனுமதிக்கலாம்: உச்ச நீதிமன்றம்

tamiltheindu : இந்த உலகில் ஒரு மனிதன் கண்ணியமாக வாழ உரிமை இருக்கும் அளவுக்கு கண்ணியமாக மரணிக்கவும் உரிமை உண்டு, தீராத நோய் உடையவர்கள், செயலற்ற நிலையில் இருக்கும் நோயாளிகளை விதிகளுக்கு உட்பட்டு கருணைக் கொலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
உச்ச நீதிமன்ற வரலாற்றில் கருணைக் கொலைக்கு அனுமதி வழங்கியது மிகப்பெரிய மைல்கல் தீர்ப்பாக பார்க்கப்படுகிறது. இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. ‘காமன்காஸ்’ எனும் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்து இருந்தது. அதில் குறிப்பிடுகையில், ‘‘தீராத நோய் உடையவர்கள், செயலற்ற நிலையில் படுத்தபடுக்கையாக இருக்கும் நோயாளிகள், கோமா நிலையில் இருப்பவர்களை விதிகளுக்கு உட்பட்டு, அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் செயற்கை சுவாசத்தை அகற்றி கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்’’ என்று கோரி இருந்தது.

மதுரை , பிளஸ் 2 மாணவர்கள் மோதல் கத்தி குத்து ...

tamilthehindu :மாணவர்கள் வன்முறை, கத்திக்குத்துப்பட்ட மாணவர் அர்ஜுன்  மதுரை மேலூரில் பிளஸ் 2 மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதில் சக மாணவருக்கு கத்திக்குத்து விழுந்தது. மாணவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம், மேலூர், அருகே உள்ள திருவாதவூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. தற்போது பிளஸ் 2 தேர்வு நடைபெற்று வருவதால் மாணவர்கள் தேர்வு எழுத பள்ளிக்கு வந்திருந்தனர். நேற்று வணிகவியல் தேர்வு நடைபெற்றது. இந்தப் பிரிவில் பயிலும் மாணவர் அர்ஜுன் (18) திருவாதவூரில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்து படித்து வருகிறார்.< அர்ஜுன் நேற்று காலை பிளஸ் 2 தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு வந்தார். தேர்வு ஆரம்பிப்பதற்கு முன்னரே வந்துவிட்ட அர்ஜுன் பள்ளி வளாகத்தில் அமர்ந்து பாடம் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பள்ளியில் பயிலும் சக மாணவர்கள் கார்த்திக் ராஜா, சரவணக்குமார் ஆகியோர் திடீரென அர்ஜுனிடம் வாக்குவாதம் செய்து, தகராறில் ஈடுபட்டனர்.

சென்னை மாணவி அஸ்வினி குத்தி கொலை ... கணவனே குத்தினார் என்கிறது காவல்துறை

மாணவி அஸ்வினியை கத்தியால் குத்திக் கொன்றது அவரது கணவர் என போலீஸ் தகவல்மாலைமலர் :சென்னை கல்லூரி மாணவி அஸ்வினியை கத்தியால் குத்திக் கொன்றது அவரது கணவர் எனவும், கடந்த மாதம் இருவரும் பிரிந்து விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை: சென்னை கே.கே நகர் மீனாட்சி கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்த அஸ்வினி என்ற மாணவி இன்று பிற்பகலில் கல்லூரி வாசலுக்கு எதிரே உள்ள தெருவில் வைத்து அழகேசன் என்ற வாலிபரால் கத்தியால் குத்தப்பட்டார். ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்த அஸ்வினியை அங்குள்ளவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பலியானா அஸ்வினிக்கு தந்தை இல்லை, தாயார் மற்றும் உறவினர் பாதுகாப்பில் அவர் படித்து வந்தார். இதற்கிடையே அஸ்வினியை கத்தியால் குத்திய அழகேசனை அங்குள்ளவர்கள் அடித்து, உடைத்து கட்டி வைத்து போலீசில் ஒப்படைத்தனர். அவர் மதுரவாயலைச் சேர்ந்தவர் என்றும், சுகாதாரத்துறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.

சந்தையூர் தீண்டாமை சுவர் .. எவிடென்ஸ் கதிர் வழக்கு தள்ளுபடி ... உயர் நீதிமன்றம்

Arul Rathinam  : "தீண்டாமைச் சுவரை காக்க எவிடன்ஸ் கதிர் வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி! ஊடகங்கள் சாதி ஆணவத்தை விவாதிக்குமா?"
-----------------------
மதுரை சந்தையூர் தீண்டாமைச் சுவரை நான்கு மாதங்களில் இடிக்க 21.08.2017-ல் உயர்நிதிமன்றம் ஆணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து வின்சென்ட் ராஜ் என்கிற எவிடன்ஸ் கதிர், மேல்முறையீடு செய்தார்.
எவிடென்ஸ் கதிரின் மனுவை ஏற்று 30.01.2018-ல் உயர்நிதிமன்றமும் தீண்டாமைச் சுவரை இடிக்க இடைக்காலத் தடை விதித்தது. இந்தத் தடையை எவிடன்ஸ் கதிர் கொண்டாடினார். கூடவே, சட்டத்தின் துணைக்கொண்டு சந்தையூர் தீண்டாமைச் சுவரை நிரந்தரமாக காப்பாற்றுவோம் என்று சவால் விட்டார்.
இந்நிலையில், எவிடென்ஸ் கதிர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. கூடவே, சந்தையூர் தீண்டாமை சுவரை இடிக்கவேண்டும் என்கிற முந்தைய உத்தரவை சென்னை உயர்நிதிமன்றம் மீண்டும் உறுதிசெய்துள்ளது.

அய்யாக்கண்ணு மீது பாஜக நிர்வாகி தாக்குதல்!

அய்யாக்கண்ணு மீது பாஜக நிர்வாகி தாக்குதல்!மின்னம்பலம் :தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவை நேற்று திருச்செந்தூர் கோயிலில் வைத்து பாஜக பெண் நிர்வாகி ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் அய்யாக்கண்ணு கடந்த 1ஆம் தேதி மக்களுக்கு நஞ்சில்லா உணவு கிடைக்கும் பொருட்டு, மரபணு மாற்றப்பட்ட விதைகளைத் தடை செய்யக் கோரி விழிப்புணர்வு நடைப்பயணத்தைத் தொடங்கினார். இந்த நடைப்பயணத்தின் ஓர் அங்கமாக நேற்று (மார்ச் 8) திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தனது ஆதரவாளர்களுடன் சுவாமி தரிசனம் செய்து விட்டு, மரபணு மாற்று விதைகளைப் பாரத பிரதமர் வழங்கக் கூடாது; அவருக்குக் கடவுள் நல்ல எண்ணத்தைக் கொடுக்க வேண்டும் என்று கோரி துண்டு பிரசுரங்களைக் கோயில் வளாகத்துக்குள் விநியோகித்து வந்தார். அப்போது அங்கு வந்த பாஜகவின் தூத்துக்குடி மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் அவரைத் தடுத்து அவரது கன்னத்தில் பலமாகத் தாக்கியுள்ளார்.

திராவிட கழகங்களின் "சமுக பொறிமுறை " பாஜக அமித் ஷா பொறிகளை உடைத்தெறிகிறது ... ஆழி செந்தில்நாதன்

மின்னம்பலம் ஆழி செந்தில்நாதன் :சிறப்புக் கட்டுரை: அமித் ஷா Vs பெரியார்பெரியார் சிலைகளை உடைக்கக் கிளம்பிய எச்.ராஜா, மறுநாளே பல்டி அடித்தார் என்பதோடு அந்தப் பிரச்சினை முடியவில்லை. தமிழ்நாடே திருப்பி அடித்ததில் நிலைகுலைந்துபோன ராஜா, வருத்தம் தெரிவிக்கும் பாங்கில் முகநூலில் பதிவிட்டபோது, மீண்டும் ஓர் ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார். “தமிழகத்தில் தேசியம், தெய்விகம் காக்கும் பணியில் பெரியவர் முத்துராமலிங்கத் தேவர் காட்டிய வழியில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டிய நேரமிது” என்று ராஜா குறிப்பிட்டிருக்கிறார். இதற்கும் ஒரு பார்வார்டு பிளாக் பிரிவு கண்டனம் தெரிவித்தது என்பது வேறு கதை.
அமித் ஷாவின் அபகரிப்பு வேலைகள்
பாஜக தலைவர் அமித் ஷாவின் சோஷியல் இன்ஜினீயரிங் வியூகத்தின் ஒரு வெளிப்பாடுதான் ராஜா வெளிப்படுத்தும் இந்த தேவர் பாசம் என்பது தெளிவாகத் தெரிகிறது, பாஜகவைப் பார்த்து பலரும் ‘பயப்படும்’ இடம் இதுதான். அமித் ஷா என்கிற பிள்ளை பிடிக்கும் பூச்சாண்டி, ஊர் ஊராக வந்து கொத்துக்கொத்தாக மக்களையும் கட்சிகளையும் வாங்கிவிடுகிறார் என்பது நாடறிந்த உண்மைதான். திரிபுராவில் காங்கிரஸ் கட்சியையே விலைக்கு வாங்கிவிட்டார்கள். வடகிழக்கில் பல முன்னாள் தேசிய விடுதலை அமைப்புகளையும் பழங்குடியினர் நலனுக்கான கட்சிகளையும் பாஜக விழுங்கியிருக்கிறது. அதற்கெல்லாம் முன்னதாக, உத்தரப் பிரதேச தேர்தலில் தலித், பிசி சமூகங்களைப் பிரித்தாண்டு வெற்றிபெற்றார்கள்.
தமிழ்நாட்டிலும் நாடார்கள், தேவேந்திர குல வேளாளர்கள், கொங்கு வேளாளர்கள், முதலியார்கள் மத்தியில் பாஜக வேலை செய்வதை நாம் பார்க்கிறோம். புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி... நாடார், கொங்கு வேளாளர், முதலியார் சமூகங்களைச் சேர்ந்த சில பெருந்தலைகள் பாஜக பக்கம் சரிகிறபோது, தமிழ்நாட்டில் பாஜகவின் வியூகம் வெற்றிபெறுகிறதோ என்கிற ஐயம் உருவாவது தவிர்க்க முடியாதது.

ஹாதியா திருமணம் செல்லும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Supreme Court,உச்ச நீதிமன்றம்தினமலர் :புதுடில்லி : 'முஸ்லிமாக மதம் மாறி திருமணம் செய்த, கேரளாவைச் சேர்ந்த, ஹாதியாவின் திருமணம் செல்லும்' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.<>கேரளாவைச் சேர்ந்த, அகிலா என்ற பெண், மதம் மாறி, ஹாதியா என, பெயர் மாற்றம் செய்து, ஷபின் ஜகான் என்ற இளைஞரை, திருமணம் செய்தார். இந்த திருமணத்தை எதிர்த்து, அந்த பெண்ணின் தந்தை, அசோகன், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 'ஹிந்து பெண்களை காதலித்து, வலுக்கட்டாயமாக, முஸ்லிமாக மதமாற்றம் செய்கின்றனர். ஐ.எஸ்., போன்ற பயங்கரவாத அமைப்புக்கு, இந்தப் பெண்கள், பாலியல் அடிமைகளாகவும், பயங்கரவாதத்தில்< ஈடுபடுத்தவும் அனுப்பப்படுகின்றனர். 'லவ் ஜிகாத் எனப்படும், இந்தத் திருமணம் செல்லாது என, அறிவிக்க வேண்டும்' என, அசோகன் தரப்பில் வாதிடப்பட்டது. இதை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், 'ஷபின் ஜகான் - ஹாதியாவின் திருமணம் செல்லாது' என, தீர்ப்பு அளித்தது. அந்த பெண்ணை, அவரது பெற்றோர் வீட்டில் தங்கியிருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

அதிமுகவுக்கு மத்திய அமைச்சு பதவிகள் ... தெலுங்கு தேசம் விலகல் ஈடு கட்டவாம் ...?

தினமலர் :புதுடில்லி : பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த பின், மத்திய அமைச்சரவையை மாற்றியமைக்க, பிரதமர், நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் விலகியதால், அதை ஈடுகட்டும் வகையிலும், தே.ஜ., கூட்டணியை பலப்படுத்தும் வகையிலும், அ.தி.மு.க.,வை அமைச்சரவையில் சேர்க்க, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளது.
லோக்சபாவுக்கு, 2014ல் நடந்த தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி வெற்றி பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், தே.ஜ., கூட்டணி அரசு பதவியேற்றது. அரசில், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு இடம் அளிக்கப்பட்டது. 'ஆந்திர மாநில மறுசீரமைப்பு மசோதாவின்படி, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்' என, மத்திய அரசை, ஆந்திராவை ஆளும், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் வலியுறுத்தி வந்தது; இதற்கு, மத்திய அரசு சம்மதிக்கவில்லை.
இதையடுத்து, தே.ஜ., கூட்டணியிலிருந்து விலக, தெலுங்கு தேசம் முடிவு செய்தது.மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த, விமான போக்குவரத்து துறை அமைச்சர், அசோக் கஜபதி ராஜு, தகவல் தொழில் நுட்பத்துறை இணை அமைச்சர், ஒய்.எஸ்.சவுத்ரி ஆகியோர், தங்கள் பதவிகளை நேற்று ராஜினாமா செய்தனர்.இதனால், தே.ஜ., கூட்டணியில் திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இது பெரியார் மண் ! போர்க்கோலம் பூணும் தமிழகம் !

வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் பெரியார் சிலையை கோழைத்தனமாக இரவில் கல்லெறிந்து தாக்கியிருக்கிறார்கள் பா.ஜ.க-வினர். கல்லெறிந்தவர்களை அங்கிருந்த பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வினவு :முன்னதாக திரிபுரா தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அங்கிருந்த தோழர் லெனின் சிலை பா.ஜ.க வானர கூட்டதினால் இடித்து சேதப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து திரிபுராவில் லெனின் சிலை போல தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என எச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருந்தார்.
திருப்பத்தூரில் உடைக்கப்பட்ட பெரியார் சிலை
இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. சமூக வலைதளங்களில் பெரியார் என்ற ஹேஷ்டேக் நேற்று முதல் முன்னணியில் இருந்து வருகிறது. இது அனைத்திலும் எச்.ராஜாவை தமிழக மக்கள் கண்டித்து வருகிறார்கள்.
ம.க.இ.க தோழர்கள் பெரியார்-லெனினை உயர்த்திப் பிடிப்போம், பார்ப்பன பாசிஸ்டு கோல்வால்கரை கொளுத்துவோம் என அறிவித்து போராடிவருகிறார்கள். பெருங்களத்தூரில் நேற்று (6/03/2018) இரவு எச்.ராஜா-வின் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

மகளிர் திரும்பி பார்க்க வேண்டிய வரலாற்று பக்கங்கள்

Gopinath Gubendran :இந்த மகளிர் தினத்தன்று, தமிழ்நாட்டு பெண்கள் ஒருவரை பற்றி
அறிந்துகொள்வதும், அவரை நன்றியுடன் நினைவுக் கூறுவதும் மிக அவசியம். ஏனெனில் அவர் பெண்களின் உரிமைக்காகவும், நல்வாழ்விற்காகவும் அத்தகைய அளப்பரிய பணிகளை செய்து முடித்திருக்கிறார்.
• பெண்களுக்கு அரசு பணியில் 30% இட ஒதுக்கீடு வழங்கியவர் அவர்.
• ஏழைப்பெண்களுக்கு முதன்முதலில் திருமண உதவித் திட்டம் தந்தவர் அவர்.
• விதவை பெண்களுக்கு மறுமண உதவி திட்டம் வகுத்தவர் அவர்.
• முதன் முதலில் "கலப்பு திருமணங்கள் ஊக்குவிப்பு நிதி"யினை தந்தவர் அவர்.
• முதன் முதலாக "கர்ப்பிணி பெண்களுக்கு" நிதியுதவி வழங்கியவர் அவர்.
• இலட்ச கணக்கான பெண்கள் பயன்பெற்று முன்னேற்றமடையும் வகையில் "மகளிர் சுய உதவி குழுக்களை" அமைத்தவர் அவர்.
• உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கொண்டுவந்தவர் அவர்; இதன் மூலம் இரண்டு பெண்மணிகளை(ஒருவர் பட்டியல் இனத்தவர் ) மேயராக்கியவர் அவர்.
• பெண்களுக்காக சேமிப்புடன் கூடிய "மகளிர் சிறு வணிக கடன்" திட்டத்தை தந்தவர் அவர்.
• பெண்களின் கஷ்டத்தை போக்கும் வகையில் "இலவச எரிவாயு" அடுப்புகளை தந்தவர் கலைஞர்.
• மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டத்தின் நிதியை 25000 ரூபாயாக உயர்த்தியவர் அவர்.
• தனது கடந்த ஆட்சி காலத்தில் மட்டும் 2011517 ஏழை கர்பிணி பெண்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 6000 நிதி உதவி செய்தவர் அவர்.
• தனது கடந்த ஆட்சி காலத்தில் சுமார் நாலரை இலட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூபாய் 6342 கோடி கடனுதவி வழங்கியவர் அவர்.
• இவற்றோடு கல்வி பயிலும் மாணவிகள் பயன்பெறும் வகையில் "சமச்சீர் கல்வி திட்டம் தந்தும், பொறியியல் நுழைவுத் தேர்வினை ரத்து செய்தும் உதவியவர் அவர்.

ரங்கராஜ் பாண்டேயை நீக்கிய தந்தி டிவிக்கு ... எச்.ராஜா சாபம் ...

ரங்கராஜ் பாண்டேயை தூக்கி எறிந்த தந்தி டிவிக்கு எச்ச ராஜா சாபம் : இந்த டிவி   உரிமையாளர்கள் அழுகி சாவாங்கள்
Venkat Ramanujam : தந்தி டிவி தலைமை செய்தி ஆசிரியர் பணி நீக்கம்.
//தந்தி டிவியின் தலைமை செய்தி ஆசிரியராக இருந்து வந்த ரங்கராஜ் பாண்டேவை வேலையை ராஜினாமா செய்யுமாறு தந்தி டிவி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
லஞ்சப் புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாதங்களுக்கு முன்னதாக, பாண்டே, எடப்பாடி பழனிச்சாமியை அணுகி, அரசு மற்றும் முதல்வர் செய்திகளுக்கு நல்ல கவரேஜ் கொடுப்பதாகவும், மற்ற கட்சிகள் இதே போல மீடியாவை கண்காணிக்க தனித் தனியாக ஆட்களை நியமித்திருப்பதாகவும் பேசியுள்ளார். எடப்பாடி பெரிய அளவில் பிடி கொடுக்கவில்லை.
மதுரையின் முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பாவின் மகன் தலைமையில், ஊடகங்களை கண்காணித்து, எந்த சேனல், அரசுக்கு ஆதரவாக உள்ளது, எதில் செய்திகள் குறைவாக வருகின்றன என்பதை கண்காணித்து, அரசு கேபிளில் இருந்து ஒளிபரப்பை நிறுத்தி விடுவோம் என்ற ஆயுதத்தை வைத்து மிரட்டும் பணியை செய்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.

ஜெயலலிதாவின் கால் விரல்களை நானே கட்டினேன் ,, கால்கள் அகற்றப்படவில்லை .. ஓட்டுனர் அய்யப்பன்

iyyappanதினமணி :முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையின்போது, கால் அகற்றப்படவில்லை. இறுதிச் சடங்கின்போது, தனிப் பாதுகாப்பு அதிகாரியும், நானும் அவரது கை, கால் விரல்களைக் கட்டினோம் என கார் ஓட்டுநர் ஐயப்பன் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா, சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், அரசு மருத்துவர்கள், அவரது வீட்டில் பணியாற்றியவர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

TV விவாதங்களில் வெறும் 3 % மட்டுமே உள்ள பார்ப்பனர்களுக்கு.. 97 % பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு இல்லாத பிரதிநிதித்துவம் இருப்பது எப்படி?

Thagadoor Sampath : ஒரு பகிர்வுப் பதிவு t;பார்ப்பன_ஆதிக்கம்_இன்னுமா_உள்ளது என கேட்கும் அப்-பாவித் தோழர்களுக்கு ஒரு சின்ன பட்டியல்:
*****************
கே.டி.ராகவன்,
எச்.ராஜா,


இல கணேசன்,
எஸ்.வி.சேகர்,
ராமசுப்ரமணியன்,
நரேந்தர்,
நாராயணன்,
ராஜலட்சுமி,
சடகோபன்,
நித்தியானந்தன்,
ஆசீர்வாதம் ஆச்சார்யா,
பத்ரி,
நாராயணன்,
எஸ்.ஆர்.சேகர்,
சியாம் சேகர்,
என்.எஸ்.வெங்கட்,
மாலன்,
வி.சி.சேகர்,
ஆனந்த சீனிவாசன்,
சுமன் சி.ராமன்,
ராதாகிருஷ்ணன்,
வெங்கடேசன்.


அமெரிக்கை நாராயணன்,
மற்றும் பலர்.
இவர்கள், நேரலையில் அடிக்கடி பங்கேற்கும், பார்ப்பனர்கள்!

இத்தனைக்கும், தமிழ் தொலைக்காட்சி ஊடகங்கள் அனைத்தும் பார்ப்பனர் அல்லாதவர்களால் நடத்தப்படுபவை, அவற்றில் வரும் நேரலை விவாதங்களில் பங்கேற்கும் பார்ப்பனர் அல்லாதோரின் எண்ணிக்கைக்கும் பார்ப்பனர்களின் எண்ணிக்கைக்கும் உள்ள விகிதாச்சார வித்தியாசத்தை பார்த்தால் "அவாளின்" ஆதிக்கம் தெள்ளத் தெளிவாக விளங்கும்.
97 % பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு இல்லாத பிரதிநிதித்துவம், வெறும் 3 % மட்டுமே உள்ள பார்ப்பனர்களுக்கு இருப்பது எப்படி?
மற்றவர்களைப் பேசவே விடாமல் நிறைய வரலாற்று பிழையான தகவல்களையும், பொய்களையும், காட்டுக் கத்தல்களையும் கத்தும் இவர்கள், அடிப்படை சபை நாகரீகம் கூட இல்லாமல் பேசினாலும், திரும்ப திரும்ப இவர்களுக்கே வாய்ப்புகள் வழங்கப்படுவது எப்படி?
சமூக நீதி போரட்டங்கள், அரசியல் விழிப்புணர்வு உள்ள இந்த காலத்திலும் இவர்களின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறப்பதைச் சொல்லவும் வேண்டுமா?
நன்றி:- தமிழ்வேங்கை

வியாழன், 8 மார்ச், 2018

பாஜகவை விளம்பரப்படுத்தும் காலரா தொலைக்காட்சிகள் ... ஊடக விபசாரம்...


காலா வந்தாலும் திரையரங்குகள் திறக்கப்படாது!.. திரையரங்க உரிமையாளர்கள் ....

காலா வந்தாலும் திரையரங்குகள் திறக்கப்படாது!மின்னம்பலம்: திரையரங்க உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை 3 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் சங்கப் பொதுசெயலாளர் பன்னீர்செல்வம், திருப்பூர் சுப்பிரமணி மற்றும் அனைத்து மாவட்டங்களில் இருந்து 180க்கும் மேற்பட்ட திரையரங்க உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.
தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், டிஜிட்டல் நிறுவனங்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக புதிய படங்கள் ரிலீஸ் செய்வதில்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்த முடிவு அமுலில் உள்ளது. இது சம்பந்தமாக முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் திரையுலகினர் எதிர்பார்த்த நிலையில், மார்ச் 16 முதல் கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையறையின்றி தியேட்டர்களை மூடுவது என்று இன்றைய கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு எடுத்துள்ளனர் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர்.

மகளிர் தினம்: உழைக்கும் பெண்களின் குரல்!

மகளிர் தினம்: உழைக்கும் பெண்களின் குரல்!மின்னம்பலம் :உழைக்கும் பெண்கள் தங்கள் உரிமைக்காகப் போராட்டம் நடத்தியதன் மூலம் உருவான நாளே மார்ச் 8 உலக மகளிர் தினம். உலக அளவில் பெண்கள் இன்று முன்னேற்றமடைய வழிவகுத்த நாளாகக் கருதப்பட்டாலும், உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களில் பலருக்கு மகளிர் தினம் குறித்த விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை. குறிப்பாக, உடலுழைப்பில் ஈடுபடும் பெண்களுக்கு. சில பெண்களுக்கு மார்ச் 8 மகளிர் தினம் என்பது தெரிந்திருந்தாலும், எதற்காகக் கொண்டாடப்படுகிறது என்பது தெரிவதில்லை.
அவ்வாறு உழைக்கும் பெண்களான வனிதா (40) மற்றும் கீதாவை (32) சந்தித்தோம். அவர்களிடம் மகளிர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது, ஏன் கொண்டாடப்படுகிறது என்னும் கேள்விகளை எழுப்பினோம்.
ஒரே ஒரு சாக்லேட்- வனிதா
நான் மாச சம்பளத்துக்கு டெய்லரா வேலை செஞ்சிட்டு இருக்கேன். மகளிர் தினம் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடுறாங்கனு தெரியும். ஆனால் ஏன் கொண்டாடுறாங்கனு தெரியாது. மகளிர் தினத்துக்கு எங்களோட ஓனர் சாக்லேட் குடுத்து வாழ்த்து சொல்லுவாங்க. அப்புறம் நாங்க மறுபடியும் வேலை செய்ய ஆரம்பிச்சிடுவோம். 20 வருஷமா டெய்லரா வேலை பாக்குறேன். குடும்ப சூழ்நிலை நானும் வீட்டுக்காரரும் வேலைக்கு போனாதான் பசங்கள படிக்க வெக்க முடியும். அப்போதான் அவங்க எங்கள மாதிரி கஷ்டப்பட மாட்டாங்க. என் பொண்ணு நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும்; 100 பேருக்கு அவ வேலை போட்டு தரணும். பெண்கள் எப்பவும் தன்னம்பிக்கையா சொந்த காலுல நிக்கணும். நாலு விஷயம் தெரிஞ்சி வெச்சிக்கணும். ஆண்கள் அவங்களுக்கு உறுதுணையா இருக்கணும். பெண்களுக்கு பாதுகாப்பு இல்ல இப்போ. அவங்க வேலைக்குப் போற நேரம்லாம் மாறிகிட்டே இருக்கு. அதனால அவங்களுக்கு பாதுகாப்பு அதிகமா கிடைக்கணும் அவ்ளோதான்.

தமிழகத்தில் சிறுநீரக செயலிழப்பால் 16000 பேர் பாதிப்பு!

மின்னம்பலம் :தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 16 ஆயிரம் பேர் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படுகின்றார்கள்" என மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.
நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலின் ஆரோக்கியத்தைக் காக்க பல வகைகளில் துணைபுரிவது சிறுநீரகம். இந்தச் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டிருந்தால், நச்சுக்குள் உடலிலேயே தங்கிவிடும். இதனால் உடலுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.
"உடலில் சிறுநீரக நோய் அதிகரிக்கச் சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணம். நீரழிவு நோயின் பாதிப்பால் தமிழகத்தில் 10 சதவீதம் பேருக்கு சிறுநீரக நோய் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் தமிழகத்தில் தான் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உள்ளனர்.
தமிழகம் மற்றும் ஆந்திராவில் நகரங்களில் வசிப்பவர்களுக்கு மட்டும் அல்லாமல் கிராமத்தினருக்கும் சிறுநீரக பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் குடிநீர் மற்றும் நிலத்தடி நீரில் ரசாயன மாசு கலக்காமல் இருப்பதைக் கண்காணிக்க வேண்டும்.

கர்நாடகாவின் தனிக்கொடி உத்தியோக பூர்வமாக அறிவிப்பு

கர்நாடகாவுக்குத் தனிக் கொடி அறிமுகம்!
மின்னம்பலம் :கர்நாடகா மாநிலத்துக்கான தனிக் கொடியை முதல்வர் சித்தராமையா இன்று (மார்ச் 8) அறிமுகம் செய்தார்.
கர்நாடகாவுக்கெனத் தனிக் கொடி வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்துவந்தது. இதற்கிடையே, கர்நாடகாவுக்கான தனிக் கொடி உருவாக்கப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டார். கொடியை வடிவமைப்பதற்காகக் கன்னட அறிஞர் ஹம்பா நாகராஜய்யா தலைமையில் 9 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், கர்நாடகாவுக்கான தனிக் கொடியை முதல்வர் சித்தராமையா இன்று அறிமுகம் செய்தார்.

தெலுங்கு தேசம் மத்திய அமைச்சர்கள் பதவி விலகல் கடிதத்தை பிரதமரிடம் கொடுத்தனர்

tamilthehindu :தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. ஒய்எஸ் சவுத்ரி ஊடகங்களிடம் பேசியகாட்சி .படம் உதவி: ஏஎன்ஐ ஏஎன்ஐ புதுடெல்லி: ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு நிதித்தொகுப்பு, சிறப்பு அந்தஸ்து அளிக்காததைக் கண்டித்து, மத்தியஅமைச்சரவையில் இருந்து தெலங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் ராஜினாமாசெய்து பிரதமர் மோடியிடம் ராஜினாமா கடிதத்தை இன்று மாலை அளித்தனர்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தொலைபேசியில் அழைத்து பிரதமர் மோடி சமாதானம் செய்தும் அது தோல்வியில் முடிந்ததையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.< "டெல்லிக்கு நடையாய் நடந்தேன்; மோடி வேதனையைத்தான் வழங்கினார்": சந்திரபாபு நாயுடு.
இதன் மூலம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் அமைச்சரவையில் கடந்த 4ஆண்டுகளாக அங்கம் வகித்து வந்த தெலுங்கு தேசம் கட்சி தனது அமைச்சரவை ரீதியான உறவை முறித்துக்கொண்டுள்ளது.

உஷா சொல்லி முடிப்பதற்குள் காமராஜ் எட்டி உதைத்துவிட்டார்!’ - மனைவியை இழந்த ராஜா கண்ணீர்

உஷாவிகடன் சி.ய.ஆனந்தகுமார்- என்.ஜி.மணிகண்டன் : ''என் குடும்பத்தை இப்படி அழிச்சிட்டாரே. அவருக்கும் குடும்பம் இருக்கிறது" என்று உஷாவின் கணவர் ராஜா கண்ணீர் மல்க கூறினார்.
உஷா கணவர் ராஜாதஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தை அடுத்த சூலமங்கலம் புதுத்தெருவைச் சேர்ந்த ராஜா, நேற்று மாலை 7 மணியளவில் தன் 3 மாத கர்ப்பிணி மனைவியைத் தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு, தஞ்சாவூரிலிருந்து திருச்சி நோக்கி வந்துகொண்டிருந்தார். அவரது பைக் திருச்சி துவாக்குடி டோல் பிளாசா அருகே வந்துகொண்டிருந்தபோது, அங்கு சோதனைக்கு நின்றுகொண்டிருந்த டிராஃபிக் போலீஸார், அவர்களை மறித்தார்கள். ஓரமாக வண்டியை நிறுத்துவதற்குள், ராஜாவின் சட்டையைப் பிடித்து போலீஸார் இழுத்ததுடன், 7 கிலோ மீட்டர்வரை அவரை துரத்திச் சென்று, திருச்சி  திருவெறும்பூர் கணேஷா ரவுண்டானா பகுதி அருகே அவர்களின் பைக்கை மறித்ததுடன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் காமராஜ், எட்டி உதைத்ததில் ராஜாவும் பைக்கின் பின்புறம் அமர்ந்திருந்த உஷாவும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த உஷா பலியானார். அடுத்து இந்தச் சம்பவம் குறித்த தகவல் அந்தப் பகுதியில் பரவ அப்பகுதியில்
உள்ள பொதுமக்கள் 5,000-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியல் பலமணி நேரம் நீடித்தது.

ரங்கராஜ் பாண்டே இடைநீக்கம் ..தினகரனிடம் லஞ்சம் வாங்கினார் ... .உதவியாளர் பாஸ்கரும் பதவி இடை ..

ஊழல் புகாரில் தந்தி டிவி பீகாரி ரங்கராஜ் பாண்டே நீக்கப்பட்டதாக செய்தி. சில நாட்களுக்கு முன் எடப்பாடி மீது தினகரன் அணியை சேர்ந்த வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன் ஊழல் புகார் வெளியிட்டது. இந்த செய்தியை போடக் கூடாது என தந்திடிவி நிர்வாகத்திடமும், பாண்டேவிடமும் நேரடியாக எடப்பாடி தரப்பிலிருந்து சொல்லியும் அவர்கள் கேட்காமல் ஒளிபரப்பு செய்தனர். இதனால் பாண்டேவை நீக்கவேண்டும் என எடப்பாடி தரப்பிலிருந்து நேரடியாக சொல்லப்பட்டது. ஆனால் நிர்வாகம் கேட்காமல் காலதாமதம் செய்ததால் அரசு கேபிள் டிவியிலிருந்து தந்தி டிவி நீக்கப்பட்டது. நான்கு நாட்களாக தந்திடிவி தெரியவில்லை. இதனால் பதறிப்போனது. இந்நிலையில் பாண்டே மீது ஊழல் புகார்கள் நிர்வாகத்திற்கு அளிக்கப்பட்டுள்ளதாலும்
நிர்வாகம் புல்லட்டின் எடிட்டர் பாஸ்கர் பாபு, ரங்கராஜ் பாண்டே இருவரையும் ராஜினாமா செய்யச் சொன்னது. நிரவாகமும் இதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.

பெரியார் சிலை உடைப்புக்கு சித்தராமையா கண்டனம் .. கர்நாடக முதல்வர் சித்தராமையா ...

siddaramaiah பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், பெரியாரை பார்த்து பாஜகவினர் ஏன் பயப்படுகின்றனர் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக அரசுஇதுவரை எதுவித கண்டனமும் தெரிவிக்கவில்லை , மேலும் பெரியார் விருது பெற்ற வளர்மதி எங்கே போய் ஒழிந்துவிட்டார் என்று சமுகவலையில் அடித்து துவம்சம் செய்கிறார்கள்

தேனீ ..காதல் ஜோடியை கொலை செய்த கூலித் தொழிலாளிக்கு தூக்கு தண்டனை:

tamilthehindu : காதல் ஜோடியைக் கொலை செய்த கூலித்
தொழிலாளிக்கு தூக்கு தண்டனை வழங்கி தேனி மாவட்ட நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
தேனி மாவட்டம், கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கநதி மகன் எழில் முதல்வன் (23). இவர் தேனி அருகே உள்ள தனியார் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
முத்துதேவன்பட்டியைச் சேர்ந்த கணேசனின் மகள் கஸ்தூரி (21). இவர் ராயப்பன்பட்டி ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்து வந்தார். இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு மே 14-ம் தேதி சுருளி அருவிக்கு சென்ற அவர்கள் இருவரும் வீடு திரும்பவில்லை, இதற்கிடையில் கம்பம் வனத்துறையினர் மே 19-ம் தேதி ரோந்து சென்றபோது சுருளி கைலாசநாதர் கோயிலுக்கு செல்லும் வழியில் அழுகிய நிலையில் ஆண், பெண் சடலங்கள் கிடந்ததை கண்டனர். இதையடுத்து ராயப்பன்பட்டி போலீஸார் சடலங்களை மீட்டு வழக்குபதிந்து விசாரித்து வந்தனர்.

ஆதிச்ச நல்லூர் அகழாய்வுக்கு தயார் ,,, உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவிப்பு

ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்யத் தயார்!மின்னம்பலம் :ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகளைத் தொடங்க தயாராக இருப்பதாக மத்திய அரசு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் நான்கு கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுள்ள நிலையில் அதுகுறித்த அறிக்கை வெளியிடப்படவில்லை என்று காமராஜ் என்பவர் பொதுநல மனுவில் தாக்கல் செய்திருந்தார். ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்தி அறிக்கை வெளியிடவும், ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைத்து பழங்கால பொருள்களைக் காட்சிப்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
கடந்த மாதம் நடந்த விசாரணையின்போது, ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள வாய்ப்பு இல்லை என மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து, தமிழக அரசு இப்பணியை மேற்கொள்ளலாம் என மதுரைக் கிளை தெரிவித்தது.