சனி, 20 ஆகஸ்ட், 2022

59 வயது தாய்க்கு 2வது திருமணம் செய்து வைத்த மகள்கள்.. கேரளாவில் நெகிழ்ச்சி..

 கலைஞர் செய்திகள் - Lenin  :  கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் ரதிமேனன். இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது இரண்டு மகள்களும் திருமணமாகி அவர்களது கணவர் வீட்டில் விசித்து வருகின்றனர்.
இதனால் 59 வயதாகும் ரதிமேனன் தனியாக வசித்து வந்துள்ளார். இவரின் மகள்களால் அடிக்கடி வந்து அவரை பார்த்துக்கொள்ள முடியவில்லை. மேலும் தங்கள் தாயின் தனிமையை மகள் இருவரும் உணர்ந்துள்ளனர்.
59 வயது தாய்க்கு 2வது திருமணம் செய்து வைத்த மகள்கள்.. கேரளாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
இதையடுத்து தாய்க்கு 2வது திருமணம் செய்து வைக்க மகள்கள் முடிவு செய்துள்ளனர். பின்னர் அவருக்கு ஏற்ப மணமகனையும் தேடிவந்தனர். அப்போது அதேபகுதியைச் சேர்ந்த மனைவியை இழந்த திவாகரன் என்பவரிடம் தங்களது தாயை 2வது திருமணம் செய்து கொள்ள முடியுமா என கேட்டுள்ளனர்.

204 இலங்கை விமானங்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்பட்டன

டெய்லி மிரர் : இலங்கையில் இருந்து மேலும் நான்கு சர்வதேச விமானங்கள் வெள்ளிக்கிழமை எரிபொருள் நிரப்புவதற்காக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டன.
அவற்றில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸால் இயக்கப்படும் மூன்று விமானங்கள் முறையே  மெல்போர்ன், சிட்னி மற்றும் பாரிஸுக்குச் சென்றன, நான்காவது  ஏர் அரேபியா விமானம் ஷார்ஜாவிற்குப் புறப்பட்டது.
மே 27 முதல், நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கையில் இருந்து  204 விமானங்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில்  எரிபொருள் நிரப்புவதற்கும் வேறு காரணங்களுக்காகவும் தரையிறங்கியது.
திருவனந்த புரம் விமான நிலையத்தில் வந்திறங்கும் பெரும்பாலான விமானங்கள்  ஸ்ரீலங்கன் விமானங்களாகும்
இதனால்  திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு தரையிறங்கும் கட்டணமாக மட்டும் சுமார் 1.5 கோடி ரூபாய் இலாபமாக கிடைத்துள்ளது

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க பிடிவாதமாக மறுக்கிறார் ...

Vigneshkumar - tamil.oneindia.com  :  பிடிவாதமாக மறுக்கும் ராகுல் காந்தி.. கையை பிசையும் மூத்த தலைகள்.. காங்கிரஸில் என்ன தான் நடக்கிறது!
டெல்லி: மக்களவை தேர்தலுக்கான வேலைகளை பாஜக ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், காங்கிரஸ் என்ன செய்கிறது என்பதே பலரது கேள்வியாக உள்ளது.
நாட்டில் அடுத்து 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்கான பணிகளை பாஜக ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. இந்த முறையும் தனிப்பெரும்பான்மை உடன் வெல்ல வேண்டும் என்பதே அவர்களின் இலக்கு.
பாஜகவை வலுவாக எதிர்க்க வேண்டிய காங்கிரஸ் கட்சியோ இன்னும் தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியாமல் திணறி வருகிறது. பல மாதங்கள் நீட்டிக்கும் இந்த குழப்பம் இப்போதைக்கு முடிவதாகத் தெரியவில்லை.

ஜெயலலிதாவின் ஊழலை விட எம்ஜிஆரின் ஊழல் மிகப்பெரிது! கருத்தியல் ஊழல்(Ideological Corruption) ஜாம்பிகள்(Zombies) போல் மக்களை அலையவிட்ட

  Gowtham Raj  : The Image Trap - MSS Pandian ஒரு அறிமுகம்
"We all are consciously irrational and unconsciously rational" - Bertrand Russell
தமிழ்நாட்டை பொறுத்தவரை பொதுவாகவே சினிமா நடிகர்கள் அரசியல் பிரவேசம் புகுவது வழக்கமாக நடக்கும் நிகழ்வு தான். எம்ஜிஆர், 'சிவாஜி' கணேசன் தொடங்கி சரத்குமார், கருணாஸ் வரை சினிமா பிம்பத்தை வைத்து அரசியலுக்கு வந்தவர்கள் ஏராளம். ஆனால் முன்பிருந்ததை போல் இப்போது அவர்களின் பிம்பம் மக்களிடையே பெரிய அளவில் எடுபடுவதில்லை, அதற்கு முக்கிய காரணம் அரசியல் மற்றும் சினிமாக்களுக்கு இடையே இருக்கும் விரிசல் அதிகரித்து  கொண்டே இருப்பது தான். மேலும் முன்பிருந்ததை போல் பொழுதுபோக்கு என்பது குறுகலாக இல்லை, இப்போது பொழுதுபோக்குக்கு பல வகைகளில் வர தொடங்கிவிட்டன, சினிமா அதில் ஒரு அங்கம்.   சினிமா நடிகர் என்ற பிம்பத்தை வைத்து அரசியலில் பெரியளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியவர்களுள் முக்கியமானவர் எம்ஜிஆர் தான். அந்த பிம்பம் எப்படி கட்டமைக்கப்பட்டது? அது எளிய மக்களில்  தொடங்கி பல எலைட் மக்களின் வரவேற்பை பெற்றது எப்படி? சினிமாவிலும் நிஜத்திலும் அவர் ஒரே நபரா? அந்த பிம்பம் உருவாக காரணியாக இருந்த  விசயங்கள் எவை? அவரின் சினிமா பிம்பம் தமிழ் கலாச்சார சூழலோடு எப்படி ஒன்றி போனது அதற்கு அவர் மேற்கொண்ட மெனக்கெடல்கள் என்னென்ன போன்றவை பற்றி எல்லாம் விரிவாக பேசுகிறது, ஆய்வறிஞர் MSS. Pandian அவர்கள் எழுதிய “Image Trap”.

இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டுக்கு வருகிறது ஆரம்ப பேச்சு வெற்றி Sri Lanka hopes to reach initial agreement with IMF

tamil.goodreturns.in  -  Prasanna Venkatesh  :     தூரத்தில் வெளிச்சம் தெரிகிறது.. இலங்கை மக்கள் குஷி..!
தூரத்தில் வெளிச்சம் தெரிகிறது.. இலங்கை மக்கள் குஷி..!
இலங்கை நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதி நிலைமை மோசமாக இருக்கும் வேளையில் அந்நாட்டு மக்கள் பிழைப்புக்காக வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்ல துவங்கியுள்ளனர்.
இலங்கை போர் காலத்தில் அந்நாட்டு நாட்டு ராணுவ தாக்குதல் காரணமாகப் பிறந்த மண்ணை-ஐ விட்டுக் கண்ணீர் உடன் வெளிநாடுகளுக்கு அகதிகளாகச் சென்றதை தொடர்ந்து தற்போது இலங்கை அரசின் மோசமான நிர்வாகம் மற்றும் நிதி நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் பசியைப் போக்க நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

அரும்பாக்கம் வங்கி கொள்ளை. காவல் நிலைய ஆய்வாளர் கைது - அனைத்து நகைகளும் மீட்கப்பட்டன

hindutamil.in அரும்பாக்கம் வங்கி கொள்ளை | அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் கைது - அனைத்து நகைகளும் மீட்கப்பட்டன |
சென்னை: அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் மேலும் திருப்பமாக அச்சிறுப்பாக்கம் காவல்நிலைய ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளைபோன 481 வாடிக்கையாளர்களின் நகைகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காவல் கூடுதல் ஆணையர் (வடசென்னை) அன்பு, செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
வங்கி கொள்ளை வழக்கில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் பாலாஜி, சந்தோஷ் ஆகிய 2 பேரை முதலில் கைது செய்தோம்.

இலங்கை சீனா ரப்பர் அரிசி பண்டமாற்று 70 ஆண்டு நிறைவு rubber-rice barter agreement with China

 ராதா மனோகர்

: இலங்கை சுதந்திரம் அடைந்த காலக் கட்டத்தில் உணவு உற்பத்தியில் மிகவும் பின்தங்கி இருந்தது
இப்போது இருக்கும் பெரும்பாலான குடியேற்றத்திட்டங்கள் அப்போது இருக்கவில்லை
அரிசி  தட்டுப்பாடு பயங்கரமாக இருந்தது   அன்று இந்தியாவின் உணவு உற்பத்தியும்  மிக மோசமான நிலையிலேயே இருந்தது  இந்த பின்னணியில் இலங்கையின் அரிசி  தேவையில் சீனாவின் பங்களிப்பு என்னவாக இருந்தது என்று தெரிந்து கொள்வது  நல்லது  
அன்று சீனா மாவோ தலைமையில் அமைந்த ஒரு தீவிர கம்யூனிச தேசமாக கருதப்பட்டது  பல நாடுகள் சீனாவை அங்கீகரிக்கவே இல்லை   

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

போலி போலீஸ் நிலையம் கண்டுபிடிப்பு.. பீகார் மாநிலம்

பிகாரில் போலி போலீஸ் நிலையம் கண்டுபிடிப்பு
எட்டு மாதங்களாக மாமூல் வசூல் கட்டை பஞ்சாயத்து போன்ற சகலவிதமான காவல்துறை பணிகளையும் திறம்பட நடத்தி வந்துள்ளார்கள்
ஒரு பெண் உட்பட ஆறுபேர் இந்த காவல் நிலைய சேவையை வழங்கி உள்ளனர்
தற்காலிக போலீஸ் பணியில் இருப்பவர்களுக்கு 500 ரூபா வரை சம்பளம் வழங்கியும் உள்ளார்கள்
சீருடை பாட்ச் மற்றும் துப்பாக்கிகள் உட்பட பதவியின் தரம் பேணப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது
உள்ளூர் பட்டறை ஒன்றில் இரு துப்பாக்கிகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளார்கள்
இதை கண்ட ஒரு அசல் போலீசுக்கு ஏற்பட்ட சந்தேகத்தினால் இவர்கள் சிக்கினார்கள்

ஜிபூதியில் பாரிய கடற்படை தளத்தை சீனா அமைக்கிறது இந்தியாவை கண்காணிக்க...

 மாலை மலர் : உலகம் முழுவதும் சீனா தனது ராணுவ தளத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கான நடவடிக்கையை தொடங்கி உள்ளது.
இதன் முதல் கட்டமாக வடகிழக்கு ஆப்பிரிக்கா நாடான ஜிபூட்டியில் சீனா கடந்த 2016-ம் ஆண்டு சுமார் 4,700 கோடி செலவில் கடற்படை தளத்தை அமைக்கும் பணியை தொடங்கியது. 6 ஆண்டுகளாக நடந்த இந்த பணி தற்போது முடிவடைந்து உள்ளது.
இதையடுத்து இந்த கடற்படை தளம் முழுமையாக செயல்பட தொடங்கி இருக்கிறது. பல அடுக்கு பாதுகாப்பு அம்சங்களுடன் பலமான கட்டமைப்பை இது கொண்டுள்ளது. எந்தவித நேரடி தாக்குதலையும் தாங்கும் வகையில் இந்த கடற்படைதளம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இது சீனாவின் முதல் வெளிநாட்டு ராணுவதளம் ஆகும்.

பாஜக - ஆம் ஆத்மி மோதல்! குறி வைக்கப்பட்ட சிசோடியா! 2024 தேர்தல் போர் ஆரம்பித்து விட்டது?

 Halley Karthik  -  Google Oneindia Tamil :  டெல்லி: டெல்லி முதலமைச்சராக உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் மத்திய அரசுக்குமான தற்போதைய மோதல் போக்கானது ஒன்றும் புதிதல்ல.
சிபிஐ ரெய்டில் சிக்கிய டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா
கடந்த 2013ல் டெல்லியின் முதலமைச்சராக பொறுப்பேற்ற நாளிலிருந்தே அவர் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்துதான் வந்திருக்கிறார்.
முதலமைச்சராக பதவியேற்றவுடன் அவர் சிபிஐ ரெய்டுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனாலும் அவர் மனம் தளராமல் தனது கட்சியை தொடர்ந்து வளர்த்தார்.

நல்லூர் கந்தசாமி கோயில் பொது சொத்தென்று தீர்ப்பு 28 - August 1928 வழக்கு விபரம்


ராதா மனோகர்
  :  28 - August 1928  ஆண்டு யாழ்ப்பாண த்தில் இருந்து வெளிவந்த திராவிடன் பத்திரிகையில்   நல்லூர் கோயில் தொடர்பான ஒரு முக்கிய வழக்கு இடம்பெற்றிருக்கிறது
28 ஆகஸ்ட் 1928  இல் வெளிவந்த "திராவிடன்" பத்திரிகை  செய்தி:  
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு!  :
நல்லூர் கந்தசாமி கோயிலை தரும சொத்து என்று நிர்ணயிக்க வேண்டும் என்று ராமநாதன்கோலிச்சில் தலைமை உபாத்தியாயராக இருக்கும் ஸ்ரீ சி கே சுவாமிநாதன் அவர்களும் இன்னும் ஆறுபேரும் ஸ்ரீ ரகுநாத மாப்பாண முதலியாரும் அவரது தாயார் ஆகிய  இருவர் மீதும் தொடர்ந்த வழக்கு யாழ்ப்பாணம் பெரிய நீதிஸ்தலத்தில் விசாரணை செய்யப்பட்டது.
முன்பு கோயில் அர்ச்சகராக  இருந்து வேலையை விட்டு போய் கோயில் நிலத்திற்கு வழக்கு தொடர்ந்திருக்கும் பிராமணர்களும் இவ்வழக்கில் சாட்சிகளாக சேர்த்து கொள்ளப்பட்டனர்.
முதலாம் பிரதிவாதியான ஸ்ரீ ரகுநாத மாப்பாண முதலியார் சாட்சியம் கூறுகையில்,   for the case details click here

இலங்கை எம்பியை வீட்டிற்கு வெளியே இழுத்து சென்று.... புரட்சியாளர்களா? அமைச்சர் பந்துல குணவர்த்தன!

 தேசம்நெட் : நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை இழுத்துச் சென்று கொலை செய்தது இலங்கையில் மட்டுமே.” அமைச்சர் பந்துல குணவர்த்தன அதிரடி!
தங்களின் கொள்கையை முன்னிலைப்படுத்தி வன்முறையில் ஒரு தரப்பினர் ஈடுபடுவார்களாயின் அந்நாட்டில் என்றும் தேசிய பாதுகாப்பு பலமானதாக இருக்காது என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வவொன்றில் உரையாற்றிய அவர்,
தனது அரசியல் காலத்தில் இதுவரை அமைச்சர்களுக்கான வாசஸ்தலத்தில் நான் வாழ்ந்ததில்லை. வீட்டுக்கான வாடகையைக் கூட அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொண்டதில்லை.

கோபாலபுரத்துக்குச் சென்ற தமிழிசை: தவிக்கும் அண்ணாமலை

tamilisai soundararajan meets kalaignar family

 மின்னம்பலம் : புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் கோபாலபுரம் இல்லத்திற்கு நேற்று (ஆகஸ்டு 18) சென்று கலைஞரின் மனைவி தயாளு அம்மாளின் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி, தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் 2021-ம் ஆண்டு பிப்ரவரி 16-ல், கூடுதலாக புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - விசாரணை அறிக்கையை வெளியிட திமுக கூட்டணி கட்சிகள் அழுத்தம்

 நக்கீரன் : கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 22, 23 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 13 பேர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன்  தூத்துக்குடி கடற்கரைச் சாலையிலுள்ள சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை நடத்தி வந்தார். இந்த ஆணையத்தின் சார்பில் பலருக்குச் சம்மன் அனுப்பப்பட்டு, விசாரிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை ஆணையத்தின் அறிக்கையை ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று சமர்ப்பித்தார். அதில் காவல்துறையினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை அவர் முன்வைத்துள்ளதாகவும், பொதுமக்களைத் தேவையின்றி காவல்துறையினர் சுட்டுகொன்றதாகவும், 17 காவல்துறை அதிகாரிகளே இந்த சம்பவத்திற்குப் பொறுப்பு என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானது.

எடப்பாடி பழனிசாமி சமரசத்தை ஏற்காததால் ஓ. பன்னீர்செல்வம் அணியினர் பொதுக்குழுவை கூட்ட முடிவு

மாலைமலர் : சென்னை: அ.தி.மு.க.வில் கூட்டுத் தலைமையாக செயல்படலாம் என்று ஓ.பன்னீர் செல்வம் விடுத்த கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி நிராகரித்துவிட்டார். ஒற்றை தலைமை என்பது கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் எடுத்த முடிவு. அதன் அடிப்படையில் தான் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்து விட்டார்.
ஆனால் கடந்த மாதம் 11-ந்தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டம் செல்லாது. 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும்.
இதில் பிரச்சினை ஏற்பட்டால் ஒரு ஆணையரை நியமிக்க கோர்ட்டை நாடலாம் என்று ஐகோர்ட்டு தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவு ஏற்பட்டது.

போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் பணிபுரியும் போலீஸ் ஆர்டர்லி முறையை ஒழிக்க நடவடிக்கை!

மாலைமலர் : ஆர்டர்லி முறையை ஒழிக்க நடவடிக்கை! உயர்நீதிமன்றம் பாராட்டு
போலீஸ் உயர் அதிகாரிகளின் வீட்டில் ஆர்டர்லியாக வேலை செய்து வரும் போலீஸ்காரர்களை திரும்பப் பெறும் நடவடிக்கை தொடர்பான வழக்கு நேற்று உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, போலீஸ் தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.குமரேசன் ஆஜராகி, ஆர்டர்லி விவகாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, காவல்துறை பணியை குறைத்து மதிப்பிடவில்லை. ஆர்டர்லியை நல்ல விதமாக சில அதிகாரிகள் பயன்படுத்துவது இல்லை.

வியாழன், 18 ஆகஸ்ட், 2022

கொழும்பு பங்களாக்களில் பாலியல் கொடுமைகளோடும் வேலை பளுவோடும்... மலையக இளையோர்கள்

May be an image of 1 person and indoor

Esther Nathaniel  :  கெட்டித்தட்டிப்பாறையாய் இறுகிக் கிடக்கும் சாதிய மனோ பாவங்களை
கடந்து தோட்டத்தில் மாரியம்மன் திருவிழா நடக்கும்
தோட்டத்தை விட்டு கொழும்பில் வேலை செய்யும் இளைஞர்கள் தீபாவளிக்குத்தான் தோட்டத்துக்கு வருகிறார்கள் கொழும்பில் செட்டியார் தெரு  வெள்ளவத்தை பெட்டா தெஹிவளை பம்பலப்பிட்டியில் சிறு ஹோட்டல்களிலும் துணிகாடைகளிலும் இரவு பகல் பாராது உழைப்பது மலையக பெடியன்மார்தான்.வறுமைவேலையின்மை மீண்டும் தோட்டங்களிலா தேயிலை பறிப்பது இதை விட்டு ஓட வேண்டுமென ஓடி அவர்கள் ஓடிப்போன இடம் கொழும்புதான்
கொழும்பு பங்களாக்களில் நானறிந்த காலம் மலையக பெண்களும் ஆண்களும் மிகக் குறைந்த கூலியில் வேலை செய்கிறார்கள் தங்களுடைய தோட்டங்களில் வேலை செய்து இறுதிக்காலத்தில் கிடைக்கும் பணத்தை மகனிடமோ மருமகனிடமோ கொடுத்துவிட்டு சும்மா இருந்து சோறா என வயதானப்  பெண்கள் ஆண்கள் தஞ்சமடைவது கொழும்பில்தான் வீட்டு வேலைக்கு கொழும்பு மட்டுமல்ல யுத்தத்துக்கு முன்னர்  யாழ்ப்பாணத்திலும் மலையக தமிழர்கள் மிக குறைந்த கூலிக்கும் கூலியின்றியும் வீட்டு வேலைக்குச் செல்வதுண்டு

அரும்பாக்கம் வங்கியில் 32 கிலோ நகைகள் கொள்ளை: போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் 3½ கிலோ நகைகள் சிக்கியது

 Maalaimalar : சென்னை:   அரும்பாக்கம் பெடரல் வங்கி கிளையில் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் 7 பேர் வரை ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த கொள்ளை வழக்கில் செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது. வங்கியில் கொள்யைடிக்கப்பட்ட நகைகளில் 3½ கிலோ நகை இன்ஸ்பெக்டரின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாங்கள் ஏன் கொள்கையை மாற்ற வேண்டும் : வைரலாகும் பிடிஆரின் பேச்சு!

 மின்னம்பலம் - srinivasan   : தமிழ்நாடு அரசின் நிதி மற்றும் மனித வளத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்தியா டுடே தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.
“மானியம் மற்றும் இலவசம் வழங்குவது இந்திய அரசியலின் மோசமான கலாசாரமாக இருக்கிறது. அது நாட்டுக்கு ஆபத்தானது” என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
மேலும் தேர்தலில் அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளை வெளியிடுவதற்கு தடை விதிக்கக் கோரி  பா.ஜ.கவின் வழக்கறிஞர்  அஸ்வினி உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தமிழ்க் கடல் நெல்லை கண்ணன் காலமானார்

tamil.news18.com :    தமிழ் இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் உடல் நலக் குறைவால் இன்று காலமான நிலையில், அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் நெல்லை கண்ணன். தமிழ்க் கடல் என்றழைக்கப்படும் நெல்லை கண்ணன், பல்வேறு இலக்கியங்கள் தொடர்பாக சுவைபட பேசுவதில் வல்லவர்.
காமராஜர், கண்ணதாசன் போன்றோருடன் மிகவும் நெருக்கமாக பழகிய அனுபவம் கொண்டவர். காங்கிரஸ் கட்சியில் பல ஆண்டு காலம் உறுப்பினராக இருந்த நெல்லை கண்ணன், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியை எதிர்த்து சேப்பாக்கம் தொகுதியிலும் போட்டியிட்டுள்ளார்.

மலையக கூட்டணிக்குள் தள்ளுமுள்ளு ! மலையக மக்கள் முன்னணி தனிவழி?

தமிழ் இல்லை ஒருமித்த முற்போக்கு கூட்டணி அமைச்சர் மனோ கணேசன் அறிவிப்பு |  www.theevakam.com

மலையக குருவி  : தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து மலையக மக்கள் முன்னணி வெளியேற வேண்டுமென கட்சி செயற்பாட்டாளர்கள் சிலரால் முன்வைக்கப்பட்ட யோசனையை கட்சி உயர்பீடம் நிராகரித்துள்ளதென தெரியவருகின்றது.
எனினும், மலையக மக்கள் முன்னணியால் முற்போக்கு கூட்டணிக்கு சில யோசனைகள் அனுப்பி வைக்கப்படவுள்ளன எனவும் அறியமுடிகின்றது.
தமிழ் முற்போக்கு கூட்டணியில் மலையக மக்கள் முன்னணி பங்காளியாக அங்கம் வகித்தாலும், அக்கட்சிக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை என்ற விமர்சனம் மேலோங்கியுள்ளது.

தமிழகத்து மரபு தானியங்கள்.. பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய List

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய தமிழகத்து மரபு தானியங்கள் என்ன தெரியுமா?

கலைஞர் செய்திகள்   : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய தமிழகத்து மரபு தானியங்கள் என்ன தெரியுமா?
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்,பிரதமர் நரேந்திர மோடி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17-8-2022) புதுடில்லியில், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோரை சந்தித்த போது, தமிழகத்திலுள்ள மரபு தானியங்களின் தொகுப்பு அடங்கிய பெட்டகத்தை வழங்கினார்.
ஓடி ஓயாது உழைக்கும் விளிம்பு நிலை மனிதனின் வயிற்றுப் பசியையும், மரத்தின் விளிம்பில் நின்று கொண்டு காடு வளர்க்கும் பணி செய்யும் பறவையின் பசியையும் ஆற்றிய நிலம், 100க்கும் மேற்பட்ட அரிசி வகைகளாலும், பல வகை சிறுதானியங்களாலும் நிறைந்தது தமிழ் நிலம்.

நடிகர் ரஜினி கவர்னர் ஆகிறார்? வழமை போல புதுப்பட புரொமோஷன் தந்திரம்?

நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம் - தனி விமானம் மூலம் செல்ல  மத்திய அரசு அனுமதி! - தமிழ்நாடு

மாலைமலர் : நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசிவிட்டு வந்த சூட்டோடு சூடாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசியது பலவிதமான யூகங்களை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தி இருக்கிறது.
கவர்னருடன் அரசியல் பேசினேன் என்று ரஜினி "பளீர்" என கூறியதும் விவாதமாகி இருக்கிறது.
உண்மையில் கவர்னர் ஆர்.என்.ரவி-ரஜினி சந்திப்பில் என்னதான் நடந்திருக்கும் என்ற கேள்விக்குறி எல்லோரது மனதிலும் எழுந்துள்ளது.
2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு தமிழகத்தில் பாரதிய ஜனதாவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதில் பா.ஜ.க. மேலிட தலைவர்கள் மிக, மிக தீவிரமாகி இருக்கிறார்கள்.
அந்த இலக்கின் ஒரு பகுதிதான் கவர்னர் ரவி-ரஜினி சந்திப்பு என்கிறார்கள்.

கோத்தபய ராஜபக்சே நாடு திரும்புகிறார் .. இலங்கையின் முன்னாள் அதிபர் அடுத்தவாரம்..

polimernews.  இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அடுத்த வாரம் நாடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொருளாதார நெருக்கடியால் ராஜபக்சே அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்கள் வலுத்ததை அடுத்து கடந்த மாதம் ராணுவ விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறிய கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு சென்றார்.
அங்கிருந்து சிங்கப்பூருக்கும் பின்னர் தாய்லாந்திற்கும் சென்று தஞ்சமடைந்தார். இந்நிலையில், வரும் 24ம் தேதி கோத்தபய ராஜபக்சே நாடு திரும்ப உள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதரும் ராஜபக்சேவின் உறவினருமான உதயங்க வீரதுங்கா தெரிவித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதன், 17 ஆகஸ்ட், 2022

சீனாவில் பெண் குழந்தை பிறப்பு வீதம் குறைந்தது! பாலின விகிதத்தை அதிகரிக்க குழந்கைகளை பெற்று கொள்ளும் தம்பதிகளுக்கு அதிரடி சலுகைகள் அறிவிப்பு

Giridharan N | Samayam Tamil :  உலகிலேயே மக்கள்தொகை அதிகம் கொண்ட நாடாக சீனா இருந்துவரும் நிலையில்,
அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகளை அறிவித்து அசத்தியுள்ளது அந்நாட்டு அரசு.
உலக அளவில் மக்கள்தொகை அதிகம் கொண்ட நாடுகளில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும தொடர்ந்து இருந்து வருகின்றன.
உலகிவ் உள்ள கிட்டதட்ட 200க்கும் மேற்பட்ட நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் மூன்று ஒரு பங்கு இவ்விரு நாடுகளில் மட்டுமே உள்ளதால், இந்த மக்கள் வளத்தையும், அவர்களை கட்டிக்காப்பதிலும் சீனா மற்றும் இந்திய நாடுகளின் அரசுகள் பெரும் சவாலை சந்தி்த்து வருகின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.

அமெரிக்க IT நிறுவன இந்தியர்கள் - அமெரிக்காவிலும் பரவிய சாதிய கொடுமைகள்” : ஆதாரத்தோடு பேசும் பதிவு !

கலைஞர் செய்திகள் -ராஜசங்கீதன்  :  ஒரு காலம் இருந்தது. ஐடி துறை அறிமுகமாகி இந்தியாவில் நாராயணமூர்த்தி போன்றோர் பெரும் பணக்காரர்களாக ஆன காலம். பலருக்கு ஐடி துறையில் வேலை கிடைத்தது. தடாலென அந்தத் தலைமுறையினர் லட்சங்களில் சம்பளம் பெறத் தொடங்கினர்.
சென்னையில் டைடல் பார்க் பிறந்தது. பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தோன்றின. கார்களிலேயே ஊழியர்களை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லும் பாணிகளை பார்த்து பலரும் அதிசயித்தோம். ஆட்டம், பாட்டம், அவுட்டிங், வெளிநாடு என ஐடி ஊழியர்களின் வாழ்க்கைகளை வண்ணங்கள் நிரப்பின.
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்கும் சென்று பணிபுரியும் வாய்ப்புகள் ஐடி நிறுவன ஊழியர்களுக்கு வாய்த்தன. ஆன் சைட், ஆஃப்சைட் என வெளிநாட்டுக்கும் இந்தியாவுக்குமென பறந்து பறந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அதிமுக பொதுக்குழு.. ஈபிஎஸ் வாதம் அடிப்படையற்றது.. பன்னீர் தரப்பு பட்டாசு கொழுத்தி கொண்டாட்டம் ..தீர்ப்பின் முழு விவரம்..

tamil.oneindia.com- Vignesh Selvaraj  :சென்னை : அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு தீர்ப்பின் முழு விபரங்கள் வெளியானது. பொதுக்குழு தகுதியான நபரால் கூட்டப்படவில்லை, பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைபாளர் அனுமதி இல்லாமல் கூட்ட முடியாது; தற்காலிக அவைத்தலைவரால் கூட்டத்தை கூட்ட முடியாது என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
OPS வசமான அதிமுக
ஒரு கட்சியின் உறுப்பினர் உரிமை பாதிக்கப்படுகிறது என்றால் அதில் தலையிட முடியாது என நீதிமன்றம் மறுக்க முடியாது. என தீர்ப்பில் நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி ஜூன் 23ல் காலவதியாகிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது; கற்பனையானது, அடிப்படை இல்லாதது என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றரை கோடி தொண்டர்களின் மனநிலையை பொதுக்குழு உறுப்பினர்கள் 2500 பேர் பிரதிபலித்தார்களா என்பது கேள்வி என நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

குஜராத்தில் கர்ப்பிணியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த 11 பேர் விடுதலை:

தினகரன் :  குஜராத்தில் கர்ப்பிணியை கூட்டு பாலியல் தொல்லை செய்த கைதிகள் 11 பேரை விடுதலை செய்ததையடுத்து மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளனர்.
குஜராத் கலவரத்தின்போது கர்ப்பிணியை கூட்டு பாலியல் செய்த வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகள் 11 பேர் விடுதலை பெற்றனர்.
 இந்தியாவில் மிக மோசமான கலவரம் 2002-ல் குஜராத்தில் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டதாகும். கலவரத்தின்போது  கர்ப்பிணியை வன்கொடுமை செய்து அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேரை படுகொலை செய்தனர்.

முதல்வர் முக ஸ்டாலின் டெல்லி சென்றார்!.. நாளை பிரதமர் மோடியுடன் சந்திப்பு..

Oneindia Tamil :  சென்னை: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் இன்று இரவு டெல்லி புறப்பட்டு சென்றார். இந்த வேளையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.
தமிழகத்தின் மாமல்லபுரத்தில் வெற்றிகரமாக சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்து முடிந்தது. பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்த இந்த போட்டியானது கடந்த மாதம் 28 ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வரை நடந்தது.
170க்கும் அதிகமான நாடுகளில் இருந்து 3000க்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர். இந்த போட்டி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதன் மூலம் தமிழகத்தின் பெருமை உலகின் பல இடங்களுக்கும் பரவியுள்ளது.

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022

யாழ்ப்பாண பல்கலை கழகம் உருவான வரலாறு! சில முக்கிய செய்திகள்.. 1961 ஈழநாடு யாழ்ப்பாணம்.

 ராதா மனோகர்  :  யாழ்ப்பாண பல்கலை கழகம்   உருவான வரலாறு பற்றி பல செய்திகள் இன்னும்  பொது வெளிக்கு வரவில்லை என்றே கருதுகிறேன்
சேர் பொன்னம்பலம் ராமநாதன் அவர்கள் ராமநாதன் கல்லூரியையும் பரமேஸ்வரா கல்லூரியையும் கட்டும்பொழுதே அவை ஒரு பல்கலை கழகமாக உருவாக்கி வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார்.
இந்த செய்தியை  அவரின் செயலாளராகவும் அன்பு நண்பராகவும் இருந்த மறைந்த திரு சங்கரப்பிள்ளை அய்யா அவர்கள் தனது அந்திம காலங்களில் பலரிடம் கூறியிருக்கிறார்.
அடியேன் சிறுவயதில் அவரின் வீட்டிற்கு செல்வதுண்டு . சங்கரப்பிள்ளை அய்யாவின் மகன்தான் திரு பண்டிதர் ராமச்சந்திரன் அவர்கள்  

RSS மணிகண்ட பூபதி தமிழக அரசு கல்வி தொலைக்காட்சி Kalvi TV CEO ... ட்விட்டரில் Resign AnbilMahesh.. நிறுத்தி வைப்பதாக அரசு அறிவிப்பு

tamil.indianexpress.com : அரசின் கல்வித் தொலைக்காட்சியின் முதன்மை செயல் அலுவலராக மணிகண்ட பூபதி நியமனம்; வலதுசாரி ஆதரவாளரை நியமிப்பதா என ஜவாஹிருல்லா அதிர்ச்சி; நியமன உத்தரவு நிறுத்தி வைத்துள்ளதாக அரசு அறிவிப்பு
கல்வித் தொலைக்காட்சியின் முதன்மை செயல் அலுவலராக மணிகண்ட பூபதி நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு உடனே அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆசையாய் வளர்த்த ஆட்டுக்குட்டிக்காக உயிரைவிட்ட மாணவன்... கடன்காரர் மிரட்டலால் விபரீதம்

salem student suicide

Divakar M | Samayam Tamil : சேலம் அருகே கடனை திருப்பி கொடுக்காததால் ஆசையாய் வளர்த்த ஆட்டை ஓட்டி செல்வதாக கூறியதால் மனமுடைந்த மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகேயுள்ள விருதாசம்பட்டி பழங் கோட்டை பக்கமுள்ள வெள்ளக்கரட்டை சேர்ந்தவர் நிர்மலா. இவரது மகன் நிர்மல்ராஜ் (18). இவர் காளிப்பட்டி பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நிர்மலா அதேபகுதியை சேர்ந்த சுதாகர் (28) என்பவரிடம் 40 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். இதில் 20 ஆயிரத்தை கொடுத்தார். மீதமுள்ள 20 ஆயிரத்தை கொடுக்க வில்லை என கூறப்படுகிறது.

பாதிரியார் ஓரினச்சேர்க்கை! வலி தாங்க முடியாமல் பெற்றோரிடம் கதறிய சிறுவன்.- எப்போ சர்ச்சுக்கு வந்தாலும்...

Ernakulam-Angamaly Archdiocese

tamil.asianetnews.coன் - vinoth kumar  :  எப்போ சர்ச்சுக்கு வந்தாலும் விடாமல் பாதிரியார் ஓரினச்சேர்க்கை! வலி தாங்க முடியாமல் பெற்றோரிடம் கதறிய சிறுவன்.!
சிறுவனை மிரட்டி ஓயாமல் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்த பாதிரியார் ஜோசப் கொடியன் (63) அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுவனை மிரட்டி ஓயாமல் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்த பாதிரியார் ஜோசப் கொடியன் (63) அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள பரவூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் கொடியன் (63). அருகிலுள்ள உள்ள வராப்புழா செயின்ட் தாமஸ் சர்ச்சில் பாதிரியாராக இருந்து வருகிறார். இவர் சர்ச்சுக்கு வரும் அப்பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனை மிரட்டி அடிக்கடி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். நாளுக்கு நாள் பாதிரியார் ஜோசப்பின் தொல்லை அதிகரித்தது.

இலங்கையின் 80 வீத ஏற்றுமதி பொருட்களுக்கு பிரிட்டனில் வரிச்சலுகை!

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+80+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%21

hirunews.lk  : இலங்கையின் 80 வீத ஏற்றுமதி பொருட்களுக்கு பிரித்தானியாவில் வரிச்சலுகை!
பிரிட்டன் அறிமுகப்படுத்திய  புதிய வர்த்தகத் திட்டத்தினால் இலங்கை பயனடையவுள்ளது.
இதனை கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கான பிரிட்டனின் புதிய வர்த்தகத் திட்டம் ((DCTS)) இலங்கைக்கு பயனளிக்கும் என்றும், பித்தானியாவுக்கான வரியில்லா ஏற்றுமதியின் மூலம் இலங்கையும் தொடர்ந்து பயனடையும் என்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் இன்று தெரிவித்துள்ளது.

இந்தியாவின் 13 தங்க சுரங்கங்களை தனியாருக்கு விற்க ஒன்றிய பாஜக அரசு தீர்மானம்

கலைஞர் செய்திகள் - Praveen  : நாட்டில் உள்ள தங்க சுரங்கங்களை தனியாருக்கு விற்பனை செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை பெரு முதலாளிகளுக்கு தாரைவார்க்கும் வகையில், அரசு நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பது, ஒட்டுமொத்தமாக தனியார் வசம் ஒப்படைப்பது என பல்வேறு வகையில் தனியார்மயமாக்கலை ஊக்குவித்து வருகிறது மோடி அரசு.
குறிப்பாக, பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளை விற்பதன் மூலமாக 2.1 லட்சம் கோடி வருவாய் ஈட்டப் போவதாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லி இருக்கிறார்.

இலங்கை வந்த சீன உளவுக்கப்பல்: ஒரு வாரம் துறைமுகத்தில் தங்கும்

தினமலர் : கொழும்பு: சீனாவின், 'யுவான் வாங் 5' என்ற உளவுக் கப்பல்,நம் அண்டை நாடான இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகம் வந்தடைந்தது.
இக்கப்பல் வரும் 22ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட உள்ளது. அப்போது, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள
 'இஸ்ரோ'வின் ராக்கெட் ஏவுதளம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்பாக்கம் அணு மின் நிலையம் மற்றும் நம் நாட்டு பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் அந்த உளவுக் கப்பல் சேகரித்துச் செல்லக் கூடிய அபாயம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்டை நாடான சீன ராணுவத்துக்கு சொந்தமான, 'யுவான் வாங் 5' உளவுக் கப்பலை, ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு பணிகளுக்கான கப்பலாக 2007ல், அந்நாட்டு ராணுவம் பதிவு செய்துள்ளது.

இலங்கை திவால் .. பிரபல கிரெடிட் ஏஜென்சி அறிவிப்பு

 இலங்கை முற்றிலும் திவாலாகி விட்டதாக பிரபல கிரெடிட் ஏஜென்சி அறிவிப்பு
ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்ஸ் இன்டர்நேஷனல் கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சி இலங்கையை முழுமையாக திவாலான நாடாக அறிவித்துள்ளது.
சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களை செலுத்தத் தவறியதன் காரணமாக இலங்கை அரசாங்கம் இந்த நிலைமையை அறிவித்துள்ளதாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Aug 15 (Reuters) - Global ratings agency S&P Global on Monday slashed its rating on Sri Lankan bonds to 'D', representing default, following missed interest and principal payments.
The South Asian nation, which had defaulted on a bond payment earlier this year and has $12 billion in overseas debt with private creditors, has been battling the worst financial crisis in its independent history. read more

நிதி நெருக்கடி: இலவச லேப்டாப் திட்டம் கைவிடப்படுகிறதா!

மின்னம்பலம்  : +2 மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச மடிக்கணினிகள் இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாதது குறித்து பாமக நிறுவனர் டாக்டர்.எஸ். ராமதாஸ் ட்விட்டர் பதிவு செய்துள்ளார்.
தமிழகத்தில் வருடம்தோறும் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 2011-12 கல்வியாண்டு முதல் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.ஆனால் கொரோனா காரணமாக 2020 முதல் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படுவது தடைபட்டுள்ளது.
இலவச மடிக்கணினி திட்டத்தால் ஏராளமான மாணவ மாணவிகள் பயன் அடைந்துள்ளதாக அரசு தெரிவித்திருந்த நிலையில், தற்போதைய சூழலில் மடிக்கணினி வழங்கப்படுமா?, அல்லது திட்டம் கைவிடப்படுமா? என்ற கேள்விகளோடு தான் அரசு பள்ளி மாணவர்கள் இருக்கிறார்கள்

திங்கள், 15 ஆகஸ்ட், 2022

தாலிபான்களால் சுட்டு விரட்டி துரத்தப்பட்ட பெண்கள் ஆப்கானிஸ்தானில் அடாவடி

தினத்தந்தி : ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியில் பெண்கள் பள்ளிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அந்நாட்டில் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றி நாளையுடன் ஒரு ஆண்டு முடிவடைகிறது.
இந்த நிலையில், தலைநகர் காபூலில் உள்ள கல்வி அமைச்சக கட்டிடம் முன்பு பெண்கள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களுக்கு வேலை, அரசியலில் பங்கேற்கும் உரிமை கோரி கோஷங்களை எழுப்பினர்.
 அவர்களை தலிபான்கள் தடுத்து நிறுத்த முயற்சித்தனர்.
ஆனால் பெண்கள் முன்னேறி செல்ல முயன்றதால் தலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் கலைந்து ஓடிய பெண்களை விரட்டி சென்று துப்பாக்கியால் தாக்கினர்.
மேலும் போராட்டத்தை படம் பிடித்த பத்திரிகையாளர்களையும் தலிபான்கள் அடித்து விரட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சுதந்திர போராட்ட வீரர்களை மோதி அரசு தவறாக சித்தரிக்கிறது” – சோனியா காந்தி

BBC Tamil  :  பிரதமர் நரேந்திர மோதியின் சுதந்திர தின பேச்சை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் சாதனைகளை மோதி அரசு தவறாக சித்தரிக்க முயற்சிப்பதாகவும் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, சோனியா காந்தி வெளியிட்டுள்ள சுதந்திர தின செய்தியில், "75 வருடங்களில் நாம் பல சாதனைகளைச் செய்துள்ளோம், ஆனால், நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் மகத்தான தியாகங்களையும், நாட்டின் பெருமைக்குரிய சாதனைகளையும் சிறுமைப்படுத்துவதிலேயே இன்றைய சுயநல அரசு குறியாக உள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது" என தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்த 7 முக்கிய அறிவிப்புகள்!

கலைஞர் செய்திகள் - Prem Kumar  : “உத்திரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டைப் பராமரிக்க அரசு சார்பில் ரூபாய் 18 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு அறிவிப்பில், ”அதனால்தான் தியாகத்தைப் போற்றுவதில் திராவிட முன்னேற்றக் கழக அரசு எப்போதும் முன்னிலையில் இருந்து வருகிறது. நாட்டுப் பற்றில் திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் உறுதியாக இருந்து வந்துள்ளது.
1962-ஆம் ஆண்டு, சீன நாட்டால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டபோது, இந்திய நாட்டின் பாதுகாப்பே முக்கியம் என்று அறிவித்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்!
1971-ஆம் ஆண்டு இந்தியாவைப் பாகிஸ்தான் அச்சுறுத்தியபோது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாகிஸ்தான் படையெடுப்பு கண்டனத் தீர்மானம் போட்டவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்!

6 புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கம் .. திராவிட ஈழமக்கள் பேரவை உட்பட ..

 இலங்கை அரசால் பயங்கரவாத இயக்கங்கள் என்று கண்டறியப்பட்டு தடை செய்யப்பட்டிருந்த  6  தமிழ் அமைப்புகளின் தடை நீக்கப்பட்டது.
உலக தமிழர்  ஒருங்கிணைப்பு குழு
திராவிட ஈழமக்கள் பேரவை
திராவிட ஈழமக்கள் சம்மேளனம்
என்ற இந்த   அமைப்புக்களின் பெயர்களை கவனிக்க வேண்டும்.
தமிழர் என்பதை திராவிடர்  என்றே சிங்கள மக்கள் பெரிதும் அடையாளப்படுத்துகிறார்கள்
ஆனால் சிங்கள மக்கள் திராவிடம் என்று கூறுகையில் அதை தமிழர் என்று மொழிபெயர்க்கும் வேலையைதான் பெரும்பாலான இலங்கை தமிழ் பத்திரிகைகள் செய்கின்றன
சிங்கள மக்களை பொறுத்தவரை தமிழர் என்றால் திராவிடர் என்றுதான் பொருள் கொள்கிறார்கள்  

வங்கிக் கொள்ளை: 3 பேர் கைது, 18 கிலோ தங்கம் மீட்பு!

மின்னம்பலம் - Jegadeesh : சென்னை அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியில் ஃபெடரல் வங்கிக்கு சொந்தமான நகைகடன் பிரிவு செயல்பட்டு வருகிறது.
நேற்று (ஆகஸ்ட் 13 ) பகல் நேரத்தில் இந்த வங்கியில் 16 கோடி மதிப்பிலான 32 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வங்கியின் முன்னாள் ஊழியரான முருகன் என்ற நபரே இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி என தெரிய வந்தது.
இது தொடர்பாக குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், பாலாஜி என்ற நபரை போலீசார் இன்று(ஆகஸ்ட் 14) காலை கைது செய்து விசாரணை நடத்தினர்.

கடலூர் இளைஞர் ராஜேஷ் மரணம்.... காவல்துறையினர் தீவிர விசாரணை!

youth incident cuddalore district police investigation

நக்கீரன் : கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகில் உள்ளது செவ்வேரி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயது விவசாயக் கூலி தொழிலாளி ராஜேஷ். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த 32 வயது பிரேமலதா என்பவருக்கும், கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், கணவன், மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொளார் கிராமத்தைச் சேர்ந்த 30 வயது விஜயலட்சுமி சபிதா, என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் ராஜேஷ்.

பாம்பு ஆமை குரங்கு விமானத்தில் கடத்திவந்த ராமநாதபுரம் இளைஞர்! கதிகலங்கிய சென்னை விமான நிலையம்

"பைக்குள்ள என்ன நெளியுற மாதிரி இருக்கு".. பயணி மீது வந்த சந்தேகம்.. யம்மாடி இவ்வளவையுமா Bag-ல எடுத்துட்டு வந்தாரு?
tamil.behindwoods.com -Madhavan P  :  வெளிநாட்டில் இருந்து பாம்புகள், குரங்குகள் மற்றும் ஆமைகளை கடத்திவர முயன்ற நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர். இதனால் சென்னை விமான நிலையமே பரபரப்புடன் காணப்பட்டது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று தாய் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வந்தது. அதில் பயணித்த மக்களை சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அப்போது, இளைஞர் ஒருவர் வித்தியாசமான கூடை மற்றும் பையுடன் வந்திருக்கிறார். அவரை கண்ட அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது. இதனையடுத்து அவரை பரிசோதிக்க சுங்கத்துறை அதிகாரிகள் முடிவெடுத்திருக்கின்றனர்.

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

"நைட் கிளப்பில் ஆபாச நடனமாட வற்புறுத்தினார்கள்," - துபாய் பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்

பிரமிளா கிருஷ்ணன் -     பிபிசி நியூஸ்  : துபாயில் கலை நிகழ்ச்சிகளில் நடனமாடும் வேலை என கூறி விட்டு, இரவு விடுதிகளில் ஆபாச நடனமாடும் வேலைக்கு தமிழக பெண்கள் பலர் தள்ளப்பட்டுள்ளதாகவும், அவர்களை உடனே மீட்க வேண்டும் என்றும் அங்கிருந்து தப்பி வந்ததாகக் கூறும் இளம் பெண் ஒருவர் காவல்துறையிடம் சமீபத்தில் புகார் அளித்துள்ளார்.
துபாயில் இருந்து தப்பி வந்து விட்டதால், தினமும் ஏஜென்ட்கள் வழியாக மிரட்டப்படுவதால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் அந்த பெண் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் கூறியுளார்.
தமிழ்நாட்டின் திருச்சியைச் சேர்ந்த அந்த பெண்ணின் பெயர் நிஷா. இவரது கணவர், 2018இல் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

Salman Rushdie: சல்மான் ருஷ்டி உடல்நிலையில் முன்னேற்றம் - பேச முடியும் என தகவல்!

tamil.samayam.com/ :  அமெரிக்காவில், கத்தியால் குத்தப்பட்ட எழுத்தாளர் சல்மான் ருஷ்டி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், சல்மான் ருஷ்டி, 75. பிரபலமான எழுத்தாளராகிய இவர் எழுதிய, "சாத்தானின் வேதங்கள்" என்ற நூல், சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதில், இஸ்லாமுக்கு எதிரான விஷயங்கள் இடம் பெற்றிருப்பதாக கூறி, அவருக்கு எதிராக கடும் போராட்டங்கள் நடந்தன.
இதைத் தொடர்ந்து, எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு பல்வேறு தரப்பினர் மிரட்டல் விடுத்து வந்தனர்.

ராஜஸ்தான் பள்ளியில் குடிநீர் பானையை தொட்ட பட்டியலின மாணவனை அடித்து கொன்றார் ஆசிரியர்

Metrovaartha-

தினத்தந்தி  : பள்ளியில் குடிநீர் பானையை தொட்ட மாணவனை அடித்துக்கொன்ற ஆசிரியர் - கொடூரத்தின் உச்சம்
குடிநீர் பானையை தொட்ட பட்டியலின சமூகத்தை சேர்ந்த மாணவனை ஆசிரியர் கடுமையாக தாக்கியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டம் சுரனா கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் இந்திர மேக்வல். பட்டியலின சமூகத்தை சேர்ந்த இந்திர மேக்வல் அந்த கிராமத்தில் உள்ள பள்ளியில் படித்து வருகிறான்.
இதனிடையே, இந்திர மேக்வல் கடந்த மாதம் 20-ம் தேதி வகுப்பறையில் இருந்த குடிநீர் பானையை தொட்டு அதில் இருந்து தண்ணீர் குடிக்க எடுத்துள்ளார்.

சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியவன் லெபனான் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹாதி மதார் என்பவனாகும்

May be an image of 8 people, people standing and outdoors

Rishvin Ismath   :  எழுத்தாளர் சல்மான் ருஷ்டியைக் கத்தியால் குத்திய தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டான்.
நிவ்ஜேர்ஸியின் ஃபேர்வீவ் பகுதியில் வசித்து வந்த 24 வயதான ஹாதி மதார் என்பவனே சல்மான் ருஷ்டி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவன் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
லெபனானைப் பூர்வீகமாகக் கொண்ட ஷியா இஸ்லாமியப் பிரிவைச் சேர்ந்த ஹாதி மதார்
ஈரானிய இஸ்லாமியத் தலைவர்கள் மற்றும் ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தின் தீவிர ஆதரவாளன் என்பது அவனது பேஸ்புக் கணக்கு மூலம் தெரிய வந்துள்ளது.
தற்பொழுது அவனது பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ள நிலையில் நிவ்யோர்க் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தாக்குதலாளி போலியான சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பயன்படுத்தியுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
..கத்திக் குத்திற்கு இலக்கான பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு பல மணிநேர சத்திர சிகிச்சை மேற்கொள்ளப் பட்டுள்ளதுடன் தற்பொழுது அவர் செயற்கைச் சுவாசக் கருவியின் (Vandilator) துணையில் உள்ளார். "சல்மான் ருஷ்டி தற்பொழுது பேசக் கூடிய நிலையில் இல்லை. அவரது ஒரு கண் பார்வை இழக்கப்படும் அபாயம் உள்ளது, கழுத்துப் பகுதியில் மேற்கொள்ளப் பட்ட தாக்குதலால் அவரது ஒரு கைக்கான நரம்புகள் துண்டிக்கப் பட்டிருந்தன, அவரது ஈரலிலும் காயங்கள் உள்ளன" என சல்மான் ருஷ்டிக்காக பேசவல்ல அவரது பிரதிநிதியான அன்ட்ரீவ் வைலி தெரிவித்துள்ளார்.

சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர் யார்? who attack salman rushdie in new york

hindutamil.in  : அமெரிக்காவில் சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர் யார்?
நியூயார்க்: அமெரிக்காவில் கத்தியால் குத்தப்பட்ட இந்திய வம்சாவளி எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு (75) தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மும்பையில் பிறந்த சல்மான் ருஷ்டி அங்கேயே பள்ளிக் கல்வியை முடித்தார். பிரிட்டனில் கல்லூரி கல்வியை நிறைவு செய்தார். பின்னர் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்று அந்த நாட்டிலேயே நிரந்தரமாக தங்கிவிட்டார்.
சாத்தானின் கவிதைகள்
இதுவரை 14 புத்தகங்களை எழுதியுள்ள சல்மான் ருஷ்டி, புக்கர் பரிசு உள்ளிட்ட உயரிய விருதுகளையும் வென்றுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டில் அமெரிக்க அரசு அவருக்கு குடியுரிமை வழங்கியது.

மாட்டிறைச்சி + பன்றியிறைச்சி காவிசங்கி பச்சை சங்கி

May be an image of 1 person and text that says 'JUST IN SUN NEWS அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் "தமிழ்நாடு அரசின் உணவுத் திருவிழாவில் பீ..ப் பிரியாணிக்கு அரங்கு அமைப்பதற்கு யாரும் விருப்பம் தெரிவிக்காததால்தான் பீ..ப் உணவிற்கு அரங்கு அமைக்கப்படவில்லை! உணவு என்பது தனி நபர் விருப்பம் சார்ந்த விஷயம்; நானும் பீ..ப் சாப்பிடுபவன் தான்" SUNNEWSTAMIL SUNNEWS sunnewslive.in 12AUG2022 2022'

Rishvin Ismath  : "கொன்றால் பாவம் தின்றால் போச்சு" என்று கோழி, ஆடு, மீன், வாத்து, இறால்,  என்று கொன்று தின்னக் கூடியவற்றையெல்லாம் கொன்று சமைத்து வைத்துவிட்டு.......
1. "மாட்டிறைச்சி வைக்க மட்டும் யாரும் விரும்பவில்லை" என்று சப்பைக் கட்டுக் கட்டுகின்றீர்கள் என்றால் நீங்கள் காவிச் சங்கிகளுக்கு அடிபணிகின்றீர்கள் என்று அர்த்தம்.
2. "பன்றியிறைச்சி வைக்க மட்டும் யாரும் விரும்பவில்லை" என்று சப்பைக் கட்டுக் கட்டுகின்றீர்கள் என்றால் நீங்கள் பச்ச சங்கிகளுக்கு அடிபணிகின்றீர்கள் என்று அர்த்தம்.
3. மாட்டிறைச்சியும், பன்றியிறைச்சியும் மட்டும் வைக்கவில்லை என்றால் நாட்டில் உள்ள இரு பெரும் சங்கிகளின் காலில் சாஸ்டாங்கமாகவே விழுந்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.
இப்பொழுது எழுந்து பாருங்கள், நீங்கள் விழுந்திருக்கும் கால் யாருடையது என்று.