சனி, 19 செப்டம்பர், 2020

" மனிதரின் வாழ்வியலும் அறிவியலும் கலையும் உறைந்திருக்கும் மூலதனம்தான் மொழி. மொழி அழிந்தால் மொழி வழி சினிமா கூட அழிந்துவிடும்"

 இன்று இந்திய சினிமா என்பது இந்தி தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மட்டுமே பெரிதும் உள்ளது . போஜ்பூரி வங்காளி மராத்தி பஞ்சாபி மொழி ஒரியா படங்களெல்லாம் ஓரளவு காணாமலே போய்விட்டன . 

இந்த மொழி பேசும் மக்கள் எல்லாம் இந்தி மொழியை பின்பற்றயதால் இவர்களின் சினிமா தொழில் அடியோடு காணாமல் போய் விட்டது.  சென்னையை மையமாக கொண்டு தென்னிந்திய சினிமா கருக்கொண்டதால் சகல தென்னிந்திய மொழி சினிமாக்களும் இந்தி ஆதிக்கத்தில் இருந்து தப்பி பிழைத்தது . அதுமட்டுமல்ல இவை இன்று இந்தி சினிமாவை பல வழிகளிலும் முந்துக்கொண்டுதான் செல்கிறது . தென்னிந்திய சினிமாவின் பல துறைகளும் இந்தி சினிமா வியாபாரத்தையும் கவனித்து கொள்கிறது . பல ஆயிரக்கணக்கான கோடிகளில்   வர்த்தகமும் இலட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பும் மாநில மொழி சினிமா துறை வழங்குகிறது. 

இந்தி ஆதிக்கத்தின் பின்னணியில் வெறும் பார்ப்பனர்கள் மட்டுமல்ல வடஇந்திய முதலாளிகளும் உள்ளார்கள்.   

கருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு ! சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் !!

 
vinavu :கருவறைத் தீண்டாமைக்கு முடிவுகட்டு! அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கு ! என்ற முழக்கம் கடந்த 23.08.2020 அன்று டிவிட்டரில் பரவலாக டிரண்ட் செய்யப்பட்டது. அதன் தொகுப்பு உங்களுக்காக. பாருங்கள்... பகிருங்கள்... அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டு 14 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும் இன்றுவரை ஆகம கோவில்களில் தகுதிபடைத்த பார்ப்பனர் அல்லாதா அர்ச்சகர்கள் நியமிக்கப்படவில்லை. தமிழக அரசால் கடந்த 2006 -ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் உரிய முறையில் பயிற்சி பெற்ற 206 மாணவர்கள் இன்றும் பணி நியமனம் வழங்கப்படாமல் உள்ளனர். இதனை எதிர்த்து அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் தொடர்ந்து போராடிவருகிறது. அவர்களுக்கு ஆதரவாக பல ஜனநாயக சக்திகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.    டிரண்டிங் தொகுப்பு

ஸ்டாலின் : நீட் .. சாகும்வரை போராட்டத்தை கைவிட்டு மக்கள் சக்தியை அணி திரட்டும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்

   dinakaran: சென்னை: திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 13 உயிர்களைக் காவு வாங்கிய நீட் தேர்வைத் தமிழகத்தில் ரத்து செய்ய வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், மக்கள் பாதை இயக்கத்தினர் கடந்த 14ம் தேதி முதல் சாகும்வரை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் கையெழுத்து இயக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரி மக்கள் பாதை இயக்கத்தின் தலைமையகமான, சென்னை சின்மயா நகரில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெறும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு எனது தார்மீக ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்-மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பா நீக்கமா? ஜெகதீஷ் ஷெட்டரும் லிங்காயத் சமூகத்தை..

 முதல்-மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பா நீக்கமா?: கர்நாடக அரசியலில் திடீர் பரபரப்பு

maalaimalar :பெங்களூரு :  கர்நாடக முதல்-மந்திரியாக பணியாற்றி வருபவர் எடியூரப்பா. அவருக்கு தற்போது 78 வயதாகிறது. பா.ஜனதாவை பொறுத்தவரையில் 75 வயதை தாண்டியவர்களுக்கு ஓய்வு வழங்கப்படுகிறது. ஆனால் செல்வாக்கு மிகுந்த தலைவராக இருப்பதால் எடியூரப்பாவுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு, அவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. எடியூரப்பாவுக்கு வயதாகிவிட்டதால், 2023-ம் ஆண்டு நடைபெறும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் புதிய தலைவர் ஒருவரை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளது.   அதற்காக எடியூரப்பாவுக்கு மாற்றாக பலம் வாய்ந்த லிங்காயத் சமூகத்தை சேர்ந்த தலைவர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து, அவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க பா.ஜனதா மேலிடம் தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே ஒருவரை முதல்-மந்திரி பதவியில் அமர்த்தி அவரது செல்வாக்கை உயர்த்தினால் தான் வாக்குகளை பெற முடியும் என்று பா.ஜனதா மேலிடம் கணக்கு போடுகிறது. எடியூரப்பாவின் பதவி காலம் இன்னும் 31 மாதங்கள் தான் உள்ளது.

ரெய்டு பயம்! - கஜானாவை மாற்றிய ஏழு அமைச்சர்கள்... மிஸ்டர் கழுகு.. விகடன்

vikatan :முகத்தில் மாஸ்க், கழுத்தில் பச்சை நிற அடையாள அட்டையுடன் என்ட்ரி கொடுத்தார் கழுகார். ‘‘என்ன, சட்டமன்ற விசிட்டா?’’ என்றதும், உற்சாகத்துடன் ஆமோதித்தார். கொண்டுவந்திருந்த சூடான மெதுவடைகளைத் தட்டில் பரப்பியவர், நமது நிருபர் அளித்திருந்த சட்டமன்றச் செய்தித் துணுக்குகளில் பார்வையை ஓடவிட்டார். ‘‘இதில் கூறப்படாத சில தகவல்களைக் கூறுகிறேன்... கேளும்’’ என்றபடி செய்திகளுக்குள் தாவினார் கழுகார்.
‘‘கலைவாணர் அரங்கத்தின் மூன்றாவது தளத்தில் சட்டசபை வளாகத்தை அமைத்திருக்கிறது ஆளும் தரப்பு. எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு தரைத்தளத்தில்தான் அறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஏதாவது அவசரமென்றால், அறைக்கு அவர்கள் வந்து போவதற்குள் சட்டமன்ற விவாதத் தலைப்புகள் மாறிவிடும். ‘இப்படி எக்குத்தப்பாக அறைகள் ஒதுக்கியதே எதிர்க்கட்சிகளை அலைக்கழிக்கத்தான்’ என்று கொதிக்கின்றன எதிர்க்கட்சிகள். ‘ஆளும்கட்சி வி.ஐ.பி-க்களின் உதவியாளர்களை மட்டும் மன்றத்துக்குள் அனுமதித்துவிட்டு, எதிர்க்கட்சிப் பிரமுகர்களின் உதவியாளர்களை அனுமதிக்கவில்லை’ என்கிற புகாரும் எழுப்பப்படுகிறது.’’

தமிழகத்தில் இந்தியை திணித்தே தீருவோம்! தமிழக இரு மொழி கொள்கைக்கு தடை! தமிழச்சி தங்கபாண்டியன் கேள்விக்கு மத்திய அரசு எழுத்துப் பூர்வமாக பதில்

மாலைமலர்:  புதிய கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்று பாராளுமன்றத்தில் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி: மக்களவையில் புதிய கல்விக்கொள்கை தொடர்பாக திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பியிருந்தார். தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே தொடரும் என தமிழக அரசு அறிவித்தது குறித்து அவர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய கல்வி அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது.
அதில், புதிய கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்றும், மூன்றாவது மொழியாக எதை கற்க வேண்டும் என்பது மாநிலங்கள் மற்றும் மாணவர்களின் முடிவு என்றும் கூறப்பட்டுள்ளது.  மூன்றாவது மொழி என்ன என்பது மாநில அரசுகளின் விருப்பம், எந்த மொழியும் திணிக்கப்படாது என்றும் கல்வி அமைச்சம் கூறி உள்ளது.  

BBC : மத்திய பணிகளில் மண்ணின் மைந்தர்களுக்கு 90% ஒதுக்கீடு திமுக எம்.பி திருச்சி சிவா.. Tiruchi Siva Fire Speech at Parliament

மத்திய அரசின் பல்வேறு துறை நியமனங்களில் ஏற்றத்தாழ்வு காணப்படுவதால், அந்தந்த மாநிலங்களில் மண்ணின் மைந்தர்களுக்கே 90 சதவீத ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா வலியுறுத்தினார்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய அவர், சமீபத்தில் வெளிவந்த ஓர் ஆய்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் சொற்ப அளவில் நியமனம் செய்யப்பட்டுள்ளதை பட்டியலிட்டார்.“தமிழ்நாட்டில் 84 லட்சம் பேர் பல்வேறு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலைக்காக பதிவு செய்திருக்கிறார்கள். தேசிய சராசரி வேலைவாய்ப்பின்மை 6.1 சதவீதம் என்ற நிலையில், தமிழ்நாட்டின் அளவு 7.6 சதவீதம் ஆக உள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் அந்த அளவு, தமிழ்நாட்டில் 13.5 சதவீதமாக உள்ளது. யுபிஎஸ்சி தேர்வுகளில் அவர்கள் நல்ல மதிப்பெண்களில் தேர்வு பெறக்கூடியவர்களாக இருக்கிறார்கள். ஆனால், சமீப காலமாக சுகாதார தொழிலாளர் வேலைக்கு வந்த விண்ணப்பங்களில் பல முதுநிலை பட்டதாரிகள், இளங்கலை பட்டதாரிகள், பொறியியல் மற்றும் எம்.பி.ஏ பட்டதாரிகள்.”

INTERLOCKING BRICKS தொழில் நுட்பம் ! வீடு கட்டும் போது நாம் செலவு குறைவாக..

Veeramani Arumugam : வீடு கட்டும் போது நாம் செலவு குறைவாக சுவரின் அமைப்பை கட்டுமானம் செய்ய மிக சிறந்த மற்றும் அனைவாலும் சுலபமாக செய்யக்கூடிய தொழில் நுட்பம் தான் இந்த INTERLOCKING BRICKS
அதாவது இந்த LOCKING சிஸ்டம் கட்டுமான துறையிலேயே பல இடங்களில் பயன்படுகிறது.அதாவது நாம் வீடு கட்ட ஜன்னல்கள் கதவுகள் செய்யும் போது ஆசாரி இந்த locking system கொண்டு தான் மர சட்டங்களை பிணைக்கிறார்.
அதே போல இந்த locking systems பயன்படுத்தி தான் தற்போது மேம்பாலங்களில் தடுப்பு சுவர்கள் மற்றும் retaining walls போன்றவை அமைக்கப்படுகிறது.
நாம் சாதாரன முறையில் வீடு கட்டும் போது செங்கலுக்கும் செங்கல்லுக்கும் இடையில் பிணைப்பை ஏற்படுத்த சிமெண்ட்டும் மணலும் பயன்படுகிறது.
இந்த இண்டர்லோக்கிங் ப்ரிக்சுக்கு தொழிற்சாலைகளில் செய்யும் போதே அதன் அமைப்பில் இந்த பிணைப்பை ஏற்படுத்த locking அமைப்பு கொடுக்கப்படுகிறது.இதன் மூலம் செங்கற்க்கள் ஒன்றுடன் ஒன்று அதில் உள்ள locking அமைப்பு மூலமே பிணைந்து கொள்கிறது.இதற்கு சிமெண்ட் மணல் தேவை இல்லை.. இந்த இண்டர்லோக்கிங் bricks hydraulic compression முறையில் சிமெண்ட், பேபி ஜெல்லி,M sand ,fly ace கொண்டு தயாரிக்கப்படுகிறது.

திமுக வழக்கு: வழக்கிலிருந்து உயர் நீதிமன்ற நீதிபதி விலகல் .. உரிமைக்குழு நோட்டீஸை எதிர்த்து

 case-against-copyright-notice-withdrawal-from-high-court-judge-case .hindutamil.in :பேரவை உரிமைக் குழு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்குகளை விசாரிப்பதிலிருந்து விலகுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரபாபு அறிவித்துள்ளார்.

பேரவைக்குள் குட்கா கொண்டு வந்த விவகாரத்தில் பேரவை உறுப்பினர்கள் உரிமைக் குழு இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட 18 திமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்குகள் நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்னிலையில் இன்று 9-வது வழக்காக விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டிருந்தது.  ஆனால், வழக்குகளை விசாரிக்கத் தொடங்குவதற்கு முன்பாக திமுக தரப்பு வழக்கறிஞரிடம், முதல் முறையாக 2017-ஆம் ஆண்டு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்து தலைமை நீதிபதிக்குப் பரிந்துரைத்துள்ளதால், இரண்டாவது நோட்டீஸை எதிர்த்து தற்போது தொடர்ந்துள்ள வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகுவதாக நீதிபதி ரவிச்சந்திரபாபு தெரிவித்தார்.

திமுக 200-க்கும் அதிகமான தொகுதிகளில் போட்டியிட முடிவு? ... பல கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் சூழ்நிலை?

tamil.oneindia.com -  Mathivanan Maran : சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக 200-க்கும் அதிகமான தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருப்பதால் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் அந்த அணியில் இருந்து வெளியேறும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இன்னொரு பக்கம் காங்கிரஸை கழற்றிவிடுவதன் மூலம் பாஜகவிடம் இருந்து வந்த மறைமுக நெருக்கடிகள் திமுகவுக்கு சற்று தணியவும் வாய்ப்பிருக்கிறது எனவும் கூறப்படுகிறது. 
தேர்தலில் போட்டியிட தயங்கிய துரைமுருகன்... தயாளு அம்மாள் தந்த ரூ10,000... ஸ்டாலின் சொன்ன ப்ளாஷ் பேக் தமிழக சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பான விவாதங்கள் அரசியல் களத்தில் களைகட்டுகின்றன. திமுகவைப் பொறுத்தவரை உதயசூரியன் சின்னத்தில் 200க்கும் அதிகமான இடங்களில் போட்டியிடுவது என முடிவு செய்திருக்கிறது
 
திருமாவளவன் கருத்து ...இதனால் திமுக கூட்டணி கட்சிகள் கடந்த காலங்களைப் போல நினைத்த தொகுதிகளை இம்முறை கேட்டுப் பெற முடியாது என திட்டவட்டமாக தெரிந்துவிட்டது. இதனை சுட்டிகாட்டியிருக்கும் விசிக தலைவர் திருமாவளவன், திமுகவின் இம்முடிவு கூட்டணி கட்சிகளுக்கு நெருக்கடிதான் என ஒப்புக் கொண்டிருக்கிறார். 

இயக்குநர் பாரதிராஜா : “என் முதல் பட ஹீரோயின் ஶ்ரீதேவி இல்ல; ஜெயலலிதா…!

“என் முதல் பட ஹீரோயின் ஶ்ரீதேவி இல்ல; ஜெயலலிதா…?!” – இயக்குநர் பாரதிராஜா

2013-ல் விகடன் வாசகர்களின் கேள்விகளுக்கு பாரதிராஜா அளித்த பதில்கள் இங்கே.. `என் இனிய தமிழ் மக்களே’னு பாசமாப் பேசுறீங்க. ஆனா, தமிழர்களின் கலாசார அடையாளமான வேட்டி, சட்டையைத் தவிர்த்துட்டு எப்பவும் ஜீன்ஸ், டி-ஷர்ட்லயே இருக்கிறீங்களே… ஏன் சார்?”

“அன்னசிங்… 

நம்ம சொஸைட்டில பார்த்தீங்கன்னா எப்பவுமே பிரபலங்கள் பத்தி ஒரு இமேஜ் இருக்கும். தமிழ்நாட்டுல எந்தப் பிரபலத்தின் பேர் சொன்னாலும் டக்குனு நம்ம மனசுல வந்துபோறது அவங்க தோற்றம்தான்.

பெரியார்னா, வெள்ளைத் தாடி, கறுப்புச் சட்டை. எம்.ஜி.ஆர்னா, பஞ்சு போன்ற தொப்பி, கறுப்புக் கண்ணாடி. கலைஞர்னா, தோள் துண்டு, கறுப்புக் கண்ணாடி. மேடம்னா, கோட்டு போல சேலை அணிந்த தோற்றம். அப்படித்தான் பாரதிராஜான்னு சொன்னா… ஜீன்ஸ், டி-ஷர்ட் ஞாபகம் வர்ற அளவுக்கு இமேஜ் உண்டாகிருச்சு. அதே சமயம், ஐ லைக் திஸ் காஸ்ட்யூம்! அதனால இமேஜைத் தொந்தரவு பண்ணாம விட்டுட்டேன்!”

அன்பு மாதவன், சென்னை-14.

நீங்கள் பார்த்துப் பெருமைப்படும், பொறாமைப்படும் இயக்குநர் யார்?”

எதிர்க்கட்சிகள் தவறாக பிரசாரம் செய்கின்றன வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் பாதுகாப்பு கவசம் பிரதமர் மோடி பேச்சு

dailythanthi.com ; புதுடெல்லி, பீகார் மாநிலத்தில், கோசி ஆற்றின் குறுக்கே கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்டமான ரெயில் பாலம் உள்ளிட்ட பல்வேறு ரெயில் திட்டங்களை பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், துணை  முதல்-மந்திரி சுஷில் மோடி ஆகியோர் கலந்து கொண்டனர்.   மறைந்த வாஜ்பாய் பிரதமராகவும், தற்போதைய பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ரெயில்வே மந்திரியாகவும் இருந்த போது 2003-ம் ஆண்டில் கோசி ரெயில் பாலம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. பல
ஆண்டுகளுக்கு பிறகு அந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.வேளாண் மசோதாக்கள்....   இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகிய 3 மசோதாக்கள் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார். அவர் பேசுகையில் கூறியதாவது:-

சென்னை. மோடி பிறந்தநாள் நிகழ்ச்சியில் பலூன் வெடித்து விபத்து

தினகரன்:  ென்னை: சென்னை பாடியில் பிரதமர் மோடி பிறந்தநாள் நிகழ்ச்சியில் பலூன் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. பாஜக விவசாய அணி துணைத் தலைவர் முத்துராமனை வரவேற்று பட்டாசு வெடிக்கப்பட்டது. பட்டாசு வெடித்ததில் நிகழ்ச்சியில் பறக்கவிடப்பட்டிருந்த 2,00 கேஸ் பலூன்கள் மீது தீப்பொறி பட்டு சிதறியது. அதனால் அருகில் நின்று கொண்டிருந்த அனைவருக்கும் லேசான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

காரைக்கிளப்பு சஞ்சீவி என்ற கரகர குரல் திரும்பவும் கேட்காதா.. கலைஞரின் கார் டிரைவர்..!

 விகடன் :   கண்கலங்கும் கலைஞரின் கார் டிரைவர்..! கலைஞரை
சுமந்துகொண்டு, கோட்டைக்கும் அறிவாலயத்துக்கும் கோபாலபுரத்துக்குமாக ஓடிக் களைத்த கார், தற்போது கனத்த மௌனத்துடன் கோபாலபுரம் இல்லத்தின் வாசலோரம் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது. அதிகாலை நான்கு மணிக்கே தொடங்கி விடும் #கலைஞரின்_நாட்கள். நள்ளிரவு வரை விழித்திருந்து

உழைப்பார். அவருக்கு கார் டிரைவராக இருப்பது என்பது, கிட்டத்தட்ட இதேபோல விழித்திருந்து பணியாற்ற வேண்டிய பொறுப்பு. சஞ்சீவி அப்படித்தான் இருந்தார். ஓய்வின்றி உழைத்த கலைஞருக்கு ஓட்டுநராகப் பணிபுரிந்த முதியவர் சஞ்சீவி, கலைஞருடனான கார்ப் பயணங்கள் குறித்த அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்... 

‘‘சிறுவயதிலிருந்தே தி.மு.க-வினருடன் எனக்குப் பழக்கம் உண்டு. என்றாலும், 1975-ம் ஆண்டுக்குப் பிறகுதான் பேராசிரியர் அன்பழகனிடம் கார் ஓட்டுநராகப் பணியில் சேர்ந்தேன். அப்போது மிசா காலம். கட்சியினர் அனைவரும் கைதாகிச் சிறை சென்றுவிட்டனர். கட்சி ஆபீஸில் ஓட்டுநர் பணியைத் தொடர்ந்தேன். மிசா காலத்துக்குப் பிறகு கலைஞருக்கு அறிமுகமாகி, அவரின் பிரத்யேக கார் ஓட்டுநராகப் பணிபுரிய ஆரம்பித்தேன்’’ என்று முன்னுரை கொடுத்தவர், கலைஞருக்கும் கார்களுக்குமான நெருக்கம் குறித்துப் பேசத் தொடங்கினார் ‘அம்பாசிடர் கார்தான் கலைஞருக்கு ரொம்பவும் பிடிக்கும். 1976 தொடங்கி 1996 வரையிலும் அம்பாசிடர் காரில்தான் வலம் வந்தார்.

திலீபன் கொல்லப்பட்டார்? உண்மையில் நடந்தது என்ன ? உண்ணாவிரதத்தின் பின்னணியில் இருந்த சதி?

Kumar Sriskandakumar : உண்ணா விரதம் இருந்தவரை சாகும்வரை பார்த்துக்கொண்டு இருக்கவில்லை! திலீபன் உண்ணாவிரதத்தை கைவிட முடிவு செய்த போது மேடையில் திலீபனை சுற்றி இருந்த காவல் வீரர்களை அகற்றிவிட்டு தன்னுடைய மெய்க்காப்பாளர்களை அங்கு அனுப்பி, திலீபன் கதறக்கதற பட்டினி போட்டு கொல்லப்பட்டார். கடைசி நேரத்தில் திலீபனை சுற்றியிருந்த 2 காவலாளிகள் இன்று கனடா-ரொறன்ரோவில் உள்ளனர்..

Sugan Paris : "சக மனிதன் பட்டினிகிடந்து சாகும்போது இதயமுள்ள ஒருவரால் எப்படிப் பார்த்துக்கொண்டிருக்கமுடியும் "என அப்போது தாம்

கடத்தியதற்கான நியாயத்தை துண்டுப்பிரசுரம் மூலம் சொன்னார்கள்.பின் அதே நியாயத்தை திலீபனுக்குச் சொல்லமுடியவில்லை. அந்தத் துண்டுப்பிரசுரத்தை எழுதியது யாரென இன்றுவரை தேடிவருகிறேன், கடத்தியது ராகவன். எழுதியது ரவி பண்டிதராக இருக்கக்கூடும்.அல்லது நிர்மலா .அது ஒரு பொலமிக் பிரசுரம். 

 Kirshan Raveendra : உண்ணாவிரதம்  இருந்தது பெண்ணாக இருந்தால் தேசிக்காய் தலைவர் பெண்ணை தூக்கி இருப்பார். 

Arul Ratnam : முரண்பாடுகளின் மொத்த குத்தகைக்காரபுலிகள் இப்படி எத்தனையெத்தனை மனித விரோதசெயல்களை செய்து இறுதியில் அதற்கு தாமும் பலியானார்கள்.... 

Ilankainet Ilankai: · இந்திய அமைதிப்படையை வெளியேற்று என பிறேமதாஸ கொடுத்த கொந்தராத்தை நிறைவேற்றி சிங்களத்தீவினை காப்பாற்றிய செயல்வீரன் திலீபன் எமது தேசத்தின் கதாநாயகன் என முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவன் பதிவிட்டுள்ளான். அதன் அர்த்தம் புரியாது சிங்கள இராணுவ வீரனே திலீபனை புகழ்கின்றானாம் என கொடிதூக்கியுள்ள விசிலடிச்சான் குஞ்சுகள் பற்றி என்ன கூறலாம்?

திமுக .. 24 மணி நேரத்தில் 35,000 புதிய உறுப்பினர்கள்!

முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் `எல்லோரும் நம்முடன்’ என்ற புதிய திட்டத்தை தொடக்கி வைத்தார். இத்திட்டத்தின் நோக்கம் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பது. அதன்படி, இயக்கத்தை ஆரம்பித்த 24 மணி நேரத்திற்குள் 35,000 க்கும் மேற்பட்டோர் திமுகவில் சேர்ந்துள்ளனர் என்று தகவல்… 

முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் `எல்லோரும் நம்முடன்’ என்ற புதிய திட்டத்தை தொடக்கி வைத்தார். இத்திட்டத்தின் நோக்கம் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பது. அதன்படி, இயக்கத்தை ஆரம்பித்த 24 மணி நேரத்திற்குள் 35,000 க்கும் மேற்பட்டோர் திமுகவில் சேர்ந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த 45 நாட்களில் குறைந்தது 25 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதை இந்த பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது. உறுப்பினர் கட்டணம் இல்லாமல், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்சியில் உறுப்பினராகும் வகையில் இணையதளத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

ஒரு பூதத்தை உருவாக்குகிறீர்கள். அந்த பூதம் உங்களையே ஒரு நாள் காவு வாங்கும்..மேற்கு வங்க எம்.பி மஹுவா மொய்த்ரா

BBC :மக்களவையில் விவசாயிகள் பண்ணை வர்த்தகம் தொடர்பான மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணா நகர் தொகுதியைச் சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் மஹுவா மொய்த்ரா பேசினார்.

தற்போதுள்ள மாநில சட்டங்களின் கீழ், இந்த சந்தைக் கட்டணம் செலுத்தப்படுகிறது. எனவே, இது மாநில கருவூலத்துக்கும் கணிசமான இழப்பை ஏற்படுத்தப் போகிறது, ஏனெனில் இப்போது அறிவிக்கப்பட்ட பகுதிக்கு, வெளியே உள்ள எந்த பகுதியும் எந்தவொரு மாநில வருவாயையும் உணரமுடியாத ஒரு வர்த்தகப் பகுதியாக கருதப்படும்.        ஒரு விவசாயி அல்லது வர்த்தகர் ஒரு வர்த்தகப் பகுதியில் வர்த்தகம் செய்யும் வேளையில், சாலையின் குறுக்கே மற்றொருவரிடம் அரசு கட்டணம் வசூலிக்கப்படும் நிலை ஏற்படப்போவது கிராமப்புற அளவில் அபத்தமான விளைவுகளை உருவாக்கப் போகிறது.

ரெயில் கட்டணம் உயருகிறது .. 300 முதல் 1000 நிலையங்களில் மட்டும் உபயோக கட்டணம்

 பயணிகளுக்கு அதிர்ச்சி- ரெயில் கட்டணம் உயருகிறது

maalaimalar :சென்னை:  ரெயில்வே துறையில் பல்வேறு மாற்றங்களை மத்திய அரசு செய்து வருகிறது. பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் தரமான உணவு வழங்குவதில் உறுதியாக உள்ளது.  ரெயில் நிலையங்களை சுத்தமாக வைக்கவும், பராமரிக்கவும் தேவையான நடவடிக்கைகளை ரெயில்வே துறை செய்து வருகிறது.   இந்த நிலையில் ரெயில் நிலையங்களை பயணிகள் பயன்படுத்த “உபயோக கட்டணம்” ஒன்றை விதிக்க ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது. மக்கள் அதிகம் கூடுகின்ற முக்கிய ரெயில் நிலையங்களில் இந்த கட்டணம் விரைவில் வசூலிக்கப்பட உள்ளது.    இதனால் ரெயில் டிக்கெட் கட்டணம் சற்று உயருகிறது. ரெயில் நிலையங்களை உபயோகிக்கும் கட்டணம் வசூலிப்பதன் மூலம் ரெயில் நிலையங்களை நவீனப்படுத்தவும், கட்டமைப்பு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதன் மூலம் பயணிகளுக்கு கூடுதலான வசதிகள் செய்து தர திட்டமிடப்பட்டுள்ளது.

பெரியார் எதிர்ப்பாளர்களின் கருத்தும்; உண்மையும்...

.nakkheeran.in - கமல்குமார் : இன்றைய காலகட்டத்தில் இந்து சனாதனத்தை நிறுவ சனநாயகத்தை படுகொலை செய்துகொண்டிருக்கிறார்கள். தனிப்பெரும்பான்மை செருக்கு அவர்களுக்கு துணை போய்க்கொண்டிருக்கிறது.
 
periyar


தமிழ்நாட்டில் இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்தும் அரணாகவும், அவர்களின் நோக்கத்தை சீர்குலைக்கும் தத்துவமாகவும் இருப்பது பெரியார்தான். பெரியார் இருந்த காலத்திலேயே அவரை நேரடியாக தாக்கினர், அவரின் கருத்தை மூர்க்கமாக எதிர்த்தனர், வசை பாடினர். மறைந்த பிறகும் அது தொடர்ந்தது. பெரியார் என்ற தத்துவம் மட்டுமல்ல, பெரியார் என்ற பெயரே இருக்கக்கூடாது என பாஜக, ஆர்.எஸ்.எஸ். போன்ற வெளிப்படையான அமைப்புகளும், நபர்களும் கூடவே நடுநிலை போர்வையிலிருக்கும் வலதுசாரி ஆதரவாளர்களும் நினைக்கின்றனர். அதற்கு தீவிரமாக முயற்சியும் செய்கிறார்கள். 

200 தொகுதிகளில் உதயசூரியன்: காங்கிரஸ் ரியாக்‌ஷன் என்ன?

 200 தொகுதிகளில் உதயசூரியன்:  காங்கிரஸ் ரியாக்‌ஷன் என்ன?

வரும் சட்டமன்றத் தேர்தலில் குறைந்தது 200 தொகுதிகளிலாவது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று பொதுக்குழுவுக்குப் பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டில் நடந்த தலைமை நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.இதுகுறித்து மின்னம்பலத்தில் 200 தொகுதிகளில் உதயசூரியன் - முதல் நிர்வாகிகள் கூட்டத்தில் முக்கிய முடிவு என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.  திமுக தலைமையில் நடைபெற்றுள்ள இந்த ஆலோசனை காங்கிரஸ் வட்டாரங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. திமுக மற்றும் அதன் உதயசூரியன் சின்னத்தில் நிற்கும் கூட்டணிக் கட்சிகள் 200 தொகுதிகள் என்றால் மீதி தொகுதிகள்தான் காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற சுய சின்னங்களில் நிற்பவர்களுக்கா என்ற கேள்வி காங்கிரஸ் தலைமை வரை எதிரொலித்துள்ளது.  இதுபற்றி காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரிக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசியபோது,

முதல்வர் யோகம்? -துரைமுருகனை ஆசிர்வதித்த சித்தர்

minnambalam :திமுக பொதுச் செயலாளரான துரைமுருகனுக்கு திமுகவில் இருந்தும் கூட்டணிக் கட்சிகளிடம் இருந்தும் ஏன் ரஜினியிடம் இருந்தும் கூட வாழ்த்துகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் துரைமுருகன் பொதுச் செயலாளர் ஆனதும் தானே தேடிச் சென்று, வாழ்த்தும் ஆசியும் பெற்றது ஒரு சித்தரிடம்.    வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே குளிப்பதால் பார்ப்பதற்கு வடநாட்டு அகோரி போலவே இருக்கும் அந்த சித்தரைத் தேடி தன் மகன் கதிர் ஆனந்தோடு நேற்று இரவு (செப்டம்பர் 17) சென்றிருக்கிறார் துரைமுருகன். ‘அய்யா... நீங்க சொன்னதைப் போலவே என் பையனும் டெல்லிக்கு ஜெயிச்சு போயிட்டான். நானும் பொதுச் செயலாளர் ஆயிட்டேன்” என்று நிறைந்து பேச துரைமுருகனை ‘நல்லா இருப்படா’என்று சொல்லி வாழ்த்தியிருக்கிறார் சித்தர். அவர் அனைவரயும் வாடா போடா என்றுதான் பேசுவார்.   காட்பாடியிலிருந்து குடியாத்தம் செல்லும் சாலையில் 19 ஆவது கிலோட்டரில் மகாதேவ மலை என்ற சிறு மலையிருக்கிறது. அங்கே இருப்பவர்தான் ஸ்ரீலஸ்ரீ மஹாமஹா ஆனந்த சித்தர். இவருக்கு துரைமுருகன் பல ஆண்டுகளாக பழக்கம். துரைமுருகனையே வாடா போடா என்று அழைக்கும் அளவுக்கு உரிமையானவர் அந்த சித்தர். 

சைனீஸ் இந்தியர்களை உங்களுக்கு தெரியுமா? இந்தியாவில் பல தலைமுறைகளாக .. The Deoliwallahs

 Susairaj Babu : · இனிய காலை வணக்கம் நண்பர்களே,,,, ஆங்கிலோ இந்தியர்களை நமக்குத் தெரியும், ( முதன் முதலில் ஆங்கிலோ-இந்திய இனம் உருவானது கோலார் தங்க வயலில் KGF-ல் ஆங்கிலேயருக்கும் தமிழர்களுக்கும் ஏற்பட்ட கலப்பினால் உருவானது, பிறகு இந்தியா முழுவதும் அங்கிருக்கும் மக்கள் ஆங்கிலேய கலப்பால் பிறகு ஒட்டுமொத்த ஆங்கிலோ-இந்திய இனம் என்று ஒரு உருவானது)
""சைனீஸ் இந்தியர்களை உங்களுக்கு தெரியுமா? ""
திபெத் வழியாகவும் அருணாச்சலப் பிரதேச வழியாகும், பல ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான சீனர்கள் வட இந்தியாவில், குடியேறினார்கள். குறிப்பாக ராஜஸ்தான் மேற்கு வங்காளம் நேபாளத்தை ஒட்டிய பகுதிகளில் வரத் தொடங்கினர், இவர்கள் இங்கு உள்ளவர்களே திருமணம் செய்து கொண்டு பல தலைமுறைகளாக வாழத் தொடங்கினர். இவர்களுக்கு சீன மொழி தெரியாது, இந்தி வங்காளம் நேபாளி மொழிகளையே பேசினர். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் மான எல்லை பிரச்சனையில் போர் மூண்ட பிறகு,

பாஜகவின் ராஜ்யசபா எம்பி அசோக் கஸ்தி கொரோனாவுக்கு பலியானார் BJP Rajya Sabha MP Ashok Gasti succumbs to COVID-19

Bharatiya Janata Party leader Ashok Gasti, who became a Rajya Sabha Member of Parliament in June, passed away on Thursday in Bengaluru, days after he was infected with the coronavirus. He was admitted to Raichur District Hospital on August 31 after he developed a fever. He tested positive and was shifted to Bengaluru two days later. Ashok Gasthi dead

சசிகலா வருவதற்குள் பொதுக்குழு? அதிமுக திடீர் ஆலோசனை!

 சசிகலா வருவதற்குள் பொதுக்குழு?  அதிமுக திடீர் ஆலோசனை!

minnambalam :அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகளுக்கெல்லாம் நேற்று மதியம் போன் செய்யப்பட்டு, செப்டம்பர் 18 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்கிறார்கள்.   இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் தேர்தல் வியூகம் பற்றி விவாதிக்கப் போவதாக தகவல்கள் வந்தாலும், அதற்கெல்லாம் இன்னும் நாட்கள் இருக்கும் நிலையில் திடீரென இந்தக் கூட்டத்தைக் கூட்ட வேண்டியதன் அவசியம் என்ன ?

திருப்பதி எம்பி துர்க்கா பிரசாத் கொரோனாவால் உயிரிழப்பு

 ;Maha Laxmi :; · திருப்பதி பாராளுமன்ற உறுப்பினர் துர்கா பிரசாத் கரோனா
காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இன்று மாலை காலமானார்.. 

ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி எம்பி ஆன துர்கா பிரசாத் மறைவுக்கு அக்கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்ட பலர் அனுதாபம் தெரிவித்து  உள்ளனர்.  

ஒன்றரை லட்சத்துக்கு 8 லட்ச ரூபாய் கந்து வட்டி!-தலைமறைவான சிவகாசி வங்கி ஊழியரின் மோசடி நெட்வொர்க்!

nakkheeran.in  : சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில், கந்துவட்டி கொலை மிரட்டல் வழக்கொன்று பதிவாகியுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு – வட்டியோ வட்டி! வட்டி போடும் குட்டி! சிவகாசியைச் சேர்ந்த தினேஷ் என்பவர், உணவுப் பொருள் நிறுவனம் ஒன்றின் விநியோகஸ்தராக இருந்து, கடைகளுக்கு உணவுப் பொருட்கள் சப்ளை செய்து வந்துள்ளார். சிவகாசி ஈக்விடாஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள அவரிடம், அங்கு உதவி மேலாளராகப் பணிபுரிந்த விளாம்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர், ‘அவசரத் தேவைக்கு நான் பணம் தருகிறேன்’ என்று அறிமுகமாகி, 2019, பிப்ரவரி மாதம், வட்டிக்குப் பணம் கொடுத்துள்ளார். ரூ.50,000 கடன் தொகைக்கு, முதலிலேயே ரூ.13,000 பிடித்துக்கொண்டு ரூ37,000 கொடுத்துள்ளார். அந்தத் தொகையை வாரம் ரூ.5,000 வீதம் 10 வாரங்களில் ரூ.50,000-ஆக, தினேஷ் கொடுத்துள்ளார். இன்னொரு விதமாக பாலமுருகன், ரூ.50,000-க்கு, ரூ.5,000 பிடித்துக்கொண்டு, முதலில் ரூ.45,000 கடன் கொடுத்திருக்கிறார். இதில் அசலையும் சேர்த்துத்தர வேண்டியதில்லை. ஆனால், 15 நாட்களுக்கு ஒருமுறை, வட்டியாக ரூ.5,000 தந்துவிட வேண்டும். அப்படி வட்டி கொடுக்காதபோது, ரூ.5,000 வட்டிக்கு அபராதமாக நாளொன்றுக்கு ரூ500 கொடுத்துவிட வேண்டும்.

டாக்டர் சி. நடேசன் முதலியார் பிறந்த நாள்.. (1875-1937) நீதிக்கட்சியின் நிறுவனர்

Maha Laxmi : டாக்டர் சி. நடேசன் முதலியார் பிறந்த நாள்.
*குறிப்பு இவர் பிறந்த நாள் யாருக்கும் தெரியவில்லை அவருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்ட நாளில் பிறந்த நாளாக எடுத்துக் கொள்ளப்படுகிறது* (1875-1937) நீதிக்கட்சியின் நிறுவனர் ஆவார். சென்னை நகரத்தில் திருவல்லிக்கேணியில் பிறந்த இவர் சென்னை மாநிலக் கல்லூரியிலும், சென்னை மருத்துவக்கல்லூரியிலும் படித்து டாக்டர் பட்டம் பெற்றார்.
இவர் பிராமணரல்லாத வகுப்பினரின் நலனுக்காக குரல் கொடுக்க 1912 இல் ஐக்கிய சென்னை இயக்கம் (ஆங்கிலம்:Madras United League) என்ற அமைப்பை உருவாக்கினார். பின்னர் இவ்வியக்கம் சென்னை திராவிடர் சங்கம் (ஆங்கிலம்:Madras Dravidian Association) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அரசியலில் பங்கேற்காமல் 1914 இல் சென்னையில் பிராமணரல்லாத மாணவர்களுக்காக ஒரு விடுதியை துவக்கினார். முதலியார் 1916 இல் அரசியல் போட்டியாளர்களாக இருந்த தியாகராய செட்டியையும் டாக்டர் டி. எம். நாயரையும் ஒருங்கிணைந்து செயல்பட வைத்தார். இதனால் ”தென்னிந்திய நல வாரியம்” எனப்படும் நீதிக்கட்சி உருவானது; முதலியாரும் அதன் முன்னணி தலைவர்களுள் ஒருவரானார்.

வியாழன், 17 செப்டம்பர், 2020

மதுரை மாணவர் ரமேஷ் போலீசாரால் அடித்து கொலை .. சாத்தான் குளம் பாணியில் கொடூர கொலை

ரமேஷ்

BBC : மதுரை பேரயூர் அருகே போலீஸ் விசாரணைக்கு சென்ற கல்லூரி மாணவரை காவலர்கள் அடித்துக் கொன்றதாகக் கூறி வாழைத்தோப்பு கிராமத்தை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மரத்தில் தூக்கிட்ட நிலையில் கிடந்த வாலிபரின் உடலை காவல்துறையினர் எடுக்க விடாமல் கிராமவாசிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால், சம்பவ பகுதிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் நேரில் வந்து விசாரணை நடத்தினார். 

 இதையடுத்து வாலிபர் மரணம் தொடர்பாக உதவி ஆய்வாளர் ஜெய கண்ணன் உள்பட 4 காவலர்கள் மீது வழக்குபதிவு செய்ய காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அங்கு வாலிபரின் உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டனர். அவர்களிடம் இருந்து வாலிபரின் சடலத்தை மீட்டு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வாழைத்தோப்பு கிராமம் கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பன் - பாண்டியம்மாள் தம்பதிக்கு இதயக்கனி, சந்தோஷ், ரமேஷ் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.

நீட் தேர்வை தடுத்து நிறுத்தியது திமுக அரசுதான் - முதல்வருக்கு முக ஸ்டாலின் பதில்

maalaimalar :சென்னை: தமிழக சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு இவ்வளவு பெரிய பிரச்சினையாக காரணம் தி.மு.க. அரசுதான் என்று குற்றம் சாட்டினார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தான் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், அப்போது காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் தி.மு.க.வும் அங்கம் வகித்தது என முதலமைச்சர் பழனிசாமி ஆவேசத்துடன் தெரிவித்தார். இதனை தொடர்ந்து முதலமைச்சரின் குற்றச்சாட்டிற்கு தி.மு.க. தரப்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இது குறித்து விளக்கம் அறித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்வை கொண்டு வந்தது பா.ஜ.க. அரசு, அதனை ஆதரித்தது அ.தி.மு.க. அரசு. மாணவர்கள் தற்கொலைக்கு அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும்தான் காரணமே தவிர, தி.மு.க. அல்ல.

2010-ல் நீட் தேர்வு வரவில்லை. இந்திய மருத்துவக் கழகம் அப்படியொரு விதிமுறைகளை வகுத்தது. அப்போதைய தி.மு.க. அரசு உயர்நீதிமன்றத்தை நாடி தடையுத்தரவு வாங்கியது. தி.மு.க. அரசுதான் நீட் தேர்வை தடுத்து நிறுத்தியது” என தெரிவித்துள்ளார்.

மத்திய உணவு அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர் பாதல் ராஜிநாமா

ஹர்சிம்ரத் பாதல்BBC :இந்திய பிரதமர் நரேந்திர மோதி அமைச்சரவையில் மத்திய உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழிற்சாலைகள் துறை அமைச்சராக இருந்த ஹர்சிம்ரத் கெளர் பாதல் தனது பதவியில் இருந்து வியாழக்கிழமை மாலை விலகியிருக்கிறார். இது தொடர்பான கடிதத்தை பிரதமர் நரேந்திர மோதியின் நாடாளுமன்ற அலுவலகத்தில் அவர் அளித்துள்ளார். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஹர்சிம்ரத் பாதல் அங்கம் வகிக்கும் ஷிரோமணி அகாலி தளம் கட்சி உள்ளது. 

இந்த நிலையில், விவசாயிகளுக்கு எதிரான அவசர சட்டத்தை நிறைவேற்ற ஆளும் பாரதிய ஜனதா கட்சி முயல்வதாக ஷிரோமணி அகாலி தளம் குற்றம்சாட்டியது. இத்தகைய ஒரு மசோதா தங்களின் கட்சிக்கொள்கைக்கு எதிரானது என்று அக்கட்சியன் சார்பில் மக்களவையில் இன்று பேசிய சுக்பீர் சிங் பாதல் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு 10 கோடி தடுப்பூசி ரஷியா விற்பனை செய்ய சம்மதம்

dailythanthi.com :மாஸ்கோ,   கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை தடுத்து நிறுத்துவதற்காக உலகின் முதலாவது தடுப்பூசியை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த மாதம் அறிவித்தார்.

அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகமும், கமலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனமும் கூட்டாக உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசிக்கு ஸ்புட்னிக்-வி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி, அடினோ வைரல் வெக்டர் தொழில்நுட்ப அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.  
இந்த தடுப்பூசி பாதுகாப்பானது, செயல்திறன் மிக்கது என கண்டறியப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் 10 கோடி டோஸ்களை இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கு, ரஷிய நேரடி முதலீட்டு நிதியமும், இந்தியாவின் ஐதராபாத்தை தலைமையகமாக கொண்டுள்ள பிரபல மருந்து நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிசும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

நி்தின் கட்கரிக்கு கொரோனா: நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்!

 கட்கரிக்கு கொரோனா: நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்!

minnamblam :மத்திய அமைச்சர் நி்தின் கட்கரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் 50 லட்சத்துக்கு அதிகமானோர் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 11 நாட்களில் 10 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுபோலவே அமைச்சர்கள், எம்.பி.க்கள், சட்டமன்ற உறுப்பினர் என மக்கள் பிரதிநிதிகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில், “நேற்று நான் பலவீனமாக உணர்ந்ததைத் தொடர்ந்து மருத்துவரை அணுகினேன். அங்கு சோதனை செய்யப்பட்டதில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அனைவரின் ஆசீர்வாதங்கள், நல்வாழ்த்துக்களுடன் இப்போது நலமாக இருக்கிறேன். என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார். 

அமித் ஷா உடல்நிலையின் தற்போதைய நிலை என்ன?

Shankar A : · அமித் ஷா உடல்நிலையின் தற்போதைய நிலை என்ன?   கடந்த வாரம் மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருவதையொட்டி, முழு உடல் தகுதி பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் சேர்ந்ததாக கூறப்பட்டது.

ஆனால், நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி இரண்டு நாட்கள் ஆனபோதும், அவர் வீடு திரும்பவில்லை. வழக்கமாக, மிக முக்கிய பிரமுகர்கள், மத்திய அமைச்சர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது அவர்களின் உடல்நிலை தொடர்பான தகவலை அவ்வப்போது மருத்துவமனை நிர்வாகம் வெளியிடும்.
ஆனால், அமித் ஷாவின் உடல்நிலை தொடர்பாக தகவல் தெரிவிக்குமாறு மருத்துவமனை நிர்வாகத்திடமும் இந்திய உள்துறை அமைச்சக உயரதிகாரிகளிடமும் தொடர்ச்சியாக புதன்கிழமை இரவுவரை செய்தியாளர்கள் வற்புறுத்தியபோதும், அது பற்றிய தகவல்களை வெளியிடாமல் அதிகாரிகள் தவிர்த்து வருகிறார்கள்.

எவரும் பெண்விடுதலை, சாதியொழிப்பபு, மூட நம்பிக்கை ஒழிப்பு என வெளிகிடத்தேவையில்லை .. ஒரு யாழ்ப்பாண முகநூல் விவாதம்

 Rajh Selvapathi :· இலங்கையிலும் பெரியார், பெண்விடுதலை என்று ஒரு கும்பல் அதுவும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் கிளம்பி வருகின்றது. இந்த விச செடிகளை முளையிலேயே கிள்ளி எறிந்து விடுங்கள். உங்கள் வீடுகளில் யாராவது பெரியார், திராவிடம்,பெண்ணியம் என்று பேசுவதையோ அல்லது புத்தகங்கள் வைத்திருப்பதை கண்டால் அடித்து நொருக்கி கொழுத்தி விடுங்கள். தமிழின விரோதிகளான இந்த கும்பலை கண்டால் உயிருடன் தீயிட்டு கொழுத்துங்கள். "பெரிச்சாளியையும் பெரியாரிஸ்டுகளையும் கண்டால் பெரிச்சாளியை விட்டு பெரியாரிஸ்டுகளை அடி." திருட்டு திராவிடம் ஈழத்தில் வேண்டாம். பி.கு: பெண்விடுதலை, சமூக விடுதலை எல்லாம் பிரபாகரன் செய்து முடித்துவிட்டு போய்விட்டார். உங்கள் பருப்புகளை மூட்டை கட்டி எடுத்து சென்றுவிடுங்கள். ஆட்லரியை கட்டி இழுத்து வந்து ஆண் ஆர்மிகார்களை அடித்து விரட்டியவர்கள்தான் ஈழத்து தமிழ் பெண்கள். நீங்கள் ஒன்றும் பிடுங்க தேவையில்லை. 

Janaki Karthigesan Balakrishnan : இலங்கைத் தமிழ் அரசியலை மிகப்படு பிற்போக்குத்தனமாகவும் , வன்முறையாகவும் கொண்டு செல்ல இலங்கையில் சிலர் மும்முரமாக இருப்பதை இப்பதிவு மிகவும் வெளிப்படையாக காண்பிக்கிறது. இலங்கையில் பெண்கள் மட்டுமல்ல அனைத்து பிரிவினரும் அவதானமாக இருக்க வேண்டும். இப்பதிவிற்கு பல யதார்த்தமாக எதிர்ப்புத் தெரிவித்து கருத்துக்களை ஏற்கனவே பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் நன்றியும், பாராட்டுதல்களும். முகநூல் வட்டம் நண்பர்களுடன் பத்தாம்பசலித் தனத்தையும் இணைத்து விடுவது கவலைக்குரியது, ஆனால் தவிர்க்க முடியாது. KKK ஐ விட மோசமான பதிவு.

Suthar Suthar : எப்பவும் மதம்... கோவில்...விரதம்... இயேசு... prayer... மசூதி... மாஸ் என்று திரியுறவங்களை என்ன செய்யலாம் பாஸ்.... 

தமிழக அரசுக்கு நடிகர் சூரியா பாராட்டு! .. சூர்யாவின் NEET ரோல் இவ்வளவுதான்

அதிமுக அரசு நீட் தேர்வை நியாயப்படுத்தும் விதமாக கொண்டு வந்துள்ள இந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 வீத உள் இட ஒதுக்கீடு என்பது நீட் எதிர்ப்பை மடைமாற்றம் தந்திரம் . அதற்கு நடிகர் சூர்யாவும் துணை போய்விட்டார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நுழைந்த ராகவா லாரன்ஸ் வைகையாறாக்கள் போலவே கருங்காலியாக செயல்பட்டுள்ளார் சூர்யா என்றே கருதவேண்டி உள்ளது
LR Jagadheesan
: வேலிக்கு ஓணான் சாட்சி; ஓணானுக்கு வேலி தான் வக்கீல்” என்பார் எங்க ஊரு ஆதியம்மா. இந்த ஓணான் தான் அந்த வேலிக்கு எதிரான போராளி ஆய் வூய் என்று இரண்டு நாட்களாக கம்புவீசிய கோமாளிகளை நினைத்தால் சிரிப்பைவிட சீற்றம் தான் மிஞ்சுகிறது. நீங்களும் உங்கள் அறிவும் நேர்மையும் அரசியல் மண்ணாந்தைத்தனமும் 

ராஜீவ் கொலையாளிகள் எல்லோருக்கும் தூக்கு கிடைக்க முழுநேரமும் ஓயாமல் உழைத்த “இதயதெய்வம்” தான் தன் மகனை காக்கும் காவல்தெய்வம் என்று அற்புதத்தம்மாள் போய் அவரை கண்டு உருகி புகழ்ந்து எத்தனை ஆண்டுகள் ஆயின? வந்தானா அவர் மகன்? அந்த நயவஞ்சகமான வீம்பான அறிவிப்புக்காக அவரை ஈழத்தாயே என்று போற்றிப்பாடிய வாய்கள் எவையாவது இன்றுவரை ஏனென்று கேட்டதா? போராடியதா? அதிமுக அரசை கண்டித்தனவா? பேச்சு மூச்சில்லையே என்ன காரணம்?
அதேபோல் நீட் நிறுவனப்படுகொலைகளுக்கு முற்று முழுதான முதன்மைக்காரணமான நாசகார கும்பலின் இன்னொரு மோசடி அறிவிப்பு வந்த அடுத்த நொடி அவர்களுக்கு சாமரம் வீசும் இந்த சில்வண்டு தான் உங்களுக்கு போராளியா? நீட் பிரச்சனை வெறும் கிராமப்புற/அரசு பள்ளி மாணவர் பிரச்சனை தானா? இதுவா அதற்குத்தீர்வு? எவ்வளவு சிக்கலான பிரச்சனையை சினிமாத்தனமாக சுருக்கி நாடகம் நடத்துகிறது அரசு; அதற்கு இது பாராட்டு?

புதன், 16 செப்டம்பர், 2020

திமுகவின் கோட்டையாகிறது கொங்கு! - அதியமான் நேர்காணல்

Jeeva Sagapthan : இதுவரை மைய ஊடகத்தில் கவனிக்கப்படாத நபர் ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான். அருந்ததிய மக்களின் பிரச்சினைகளை முதன்மைப்படுத்தி கால் நூற்றாண்டு காலமாக செயல்பட்டு வருகிறார் அதியமான். ஊடகம் தொடங்கும்போதே, விடுபட்ட மனிதர்கள் கவனிக்கப்படாத செய்திகளை உங்களுக்குத் தருவேன் என்று உறுதி கூறி இருந்தேன். அந்த அடிப்படையில் ஒடுக்கப்பட்டோரிலும் ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கும் மக்களுக்காக பாடுபட்டு வரும் தலைவரின் நேர்காணலை பதிவு செய்வதில் பெருமை கொள்கிறேன்....

அழகிரியை சமாதானப்படுத்த துரைமுருகன் முயற்சி?

Mathivanan Maran - tamil.oneindia.com  :  சென்னை: திமுகவுக்கு எதிராக குடைச்சல் கொடுக்கக் கூடியவராக கருதப்பட்ட மு.க. அழகிரியை சமாதானப்படுத்துகிற வகையில் திமுக புதிய பொதுச்செயலாளர் துரைமுருகன் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிப்பதாக கூறப்படுகிறது. உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த மு.க. அழகிரியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தலில் போட்டியிட தயங்கிய துரைமுருகன்... தயாளு அம்மாள் தந்த ரூ10,000... ஸ்டாலின் சொன்ன ப்ளாஷ் பேக் திமுகவின் புதிய பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்ட போதே அக்கட்சியின் சீனியர்கள் சிலர் அவரது அடுத்த கட்ட நகர்வுகள் இப்படித்தான் இருக்கும் என பூடகமாக கூறியிருந்தனர். பாமகவுடன் கூட்டணி, பாஜகவுடன் இணக்கம், மு.க. அழகிரியுடன் சமாதானம் இந்த மூன்றையும் எப்படியும் கனகச்சிதமாக துரைமுருகன் செய்து முடிப்பார் என கூறப்பட்டது.

முதல்வர் எடப்பாடியிடம் பரிசு வாங்கிய மாணவி சுபிக்‌ஷா தற்கொலை!.. ஆன்லைன் வகுப்பு பாடச் சுமை

 ‘ஆன்லைன் வகுப்பு’: முதல்வரிடம் பரிசு வாங்கிய மாணவி தற்கொலை!

minnambalam :ஒரு பக்கம் நீட் தேர்வு, ஒரு பக்கம் ஆன்லைன் வகுப்புகள் என தமிழக மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதும், தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக இந்த ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள செல்போன்கள் இல்லாததாலும், வகுப்புகள் புரியாததாலும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.    இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் ஆன்லைன் வகுப்புகள் புரியாததால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. துபாயில் வேலை பார்த்து வந்த இவர் மீண்டும் சொந்த ஊர் திரும்பி, ஆட்டோ ஓட்டி குடும்பத்தை நடத்தி வருகிறார். இவரது மகள் சுபிக்‌ஷா, மதுரையில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். ஊரடங்கு காரணமாக வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் பயின்று வந்த நிலையில், தொடக்கத்தில் உற்சாகத்துடன் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டிருக்கிறார். அதன் பின் ஆன்லைன் வகுப்புகள் புரியவில்லை எனவும் கூறி வந்திருக்கிறார்.

ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்தை வாங்கும் இந்திய நிறுவனம்.. Russia to sell 100 million COVID vaccine doses to India

dhinamalar : மாஸ்கோ: ரஷ்யா தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தான 'ஸ்புட்னிக் -வி' ஐ, இந்தியாவில் முன்னணி மருந்து நிறுவனமான டாக்டர் ரெட்டி ஆய்வகத்திற்கு 100 மில்லியன் டோஸ் விநியோகிக்க, ரஷ்யா ஒப்பு கொண்டுள்ளது.
இது தொடர்பாக ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதி அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், 'ஸ்புட்னிக் -வி' மருந்தை, 300 மில்லியன் டோஸ் அளவு, இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மேலும் 100 மில்லியன் டோஸ் மருந்து இந்தியாவில் செயல்படும் டாக்டர் ரெட்டி ஆய்வகத்திற்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்கான, இந்தியாவின் ஒப்புதல் பெறப்படும். இந்தியாவில், மருந்து தரக்கட்டுபாட்டு தர ஆணையத்திடம் அனுமதி பெற்ற பின்னர், தடுப்பு மருந்தை செலுத்தி பரிசோதனை செய்யப்படும். விநியோகிக்கும் பணியும் துவங்கும். விநியோகம் இந்த ஆண்டின் இறுதியில் துவங்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.    aljazeera.com-coronavirus

அபராத தொகையை செலுத்த அனுமதிக்க கோரி சசிகலா மனுத்தாக்கல் ..

maalaimalar :சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா தனது அபராதத் தொகையை செலுத்த அனுமதி கோரி பெங்களூரு நகர சிவில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அபராத தொகையை செலுத்த அனுமதிக்க கோரி சசிகலா மனுத்தாக்கல் பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ம் தேதியில் இருந்து அவர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வருகிறார். அவரது தண்டனை காலம் இன்னும் ஒரு சில மாதங்களில் முடிவடைய உள்ள நிலையில் சசிகலா விடுதலை குறித்து செய்திகள் வெளியாகி வந்தன.

பிகாரில் நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா் பிரதமா் மோடி.. சட்டப்பேரவைத் தோ்தல் அக்டோபா் அல்லது நவம்பா் மாதத்தில்

pti15-09-2020_000071b075344 dinamani : பிகாா் மாநிலத்தில் காணொலி முறையில் நலத்திட்டங்களை செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்த பிரதமா் மோடி. உடன் மாநில முதல்வா் நிதீஷ்குமாா். பிகாரின் நகரப்பகுதிகளில் ரூ.541 கோடி செலவில் மேற்கொள்ளப்படவுள்ள 7 கட்டுமானப் பணிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் அக்டோபா் அல்லது நவம்பா் மாதத்தில் நடைபெற உள்ளது. அங்கு மாநில முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து பேரவைத் தோ்தலை பாஜக சந்திக்கிறது.    இந்நிலையில், பிகாரில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு பிரதமா் மோடி காணொலிக் காட்சி வாயிலாக செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினாா். நமாமி கங்கே, நகா்ப்பகுதி மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் கீழ் 4 திட்டங்களை அவா் தொடக்கிவைத்தாா். அப்போது அவா் கூறியதாவது:

டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி. வங்கதேச கரன்சிக்கு எதிராகக் கூட வீழ்ச்சி.

Anwar Ali : BJP ஜால்ராக்கள் சண்டைக்கு வர வேண்டாம். This is forwarded msg

* அமெரிக்காவுக்குப் போகிறீர்கள். செலவுக்கு இந்திய ரூபாய் உங்கள் கையில் உள்ளது. 10,000 ரூபாயை மாற்றுகிறீர்கள். உங்களுக்கு 170 அமெரிக்க டாலர்களைக் கொடுத்திருப்பார்கள். இப்போது சென்றால் அதே 10,000 ரூபாய்க்கு 133 டாலர்களைத் தான் தருவார்கள்.*
அதே 2014 ஆம் ஆண்டு. தாய்லாந்து போகிறீர்கள். 10,000 ரூபாயை மாற்றுகிறீர்கள். 5,400 'தாய் பாட்' கொடுத்திருப்பார்கள். இப்போது போனால் 4,200 'தாய் பாட்' தான் கிடைக்கும்.
அமெரிக்கா தாய்லாந்தை விடுவோம். வங்கதேசத்தைப் பார்ப்போம். 2014 ஆம் ஆண்டு மே மாதம் அந்நாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்தால், 10,000 ரூபாய்க்கு 1,31,00 பங்களாதேஷ் 'டக்கா' கிடைத்திருக்கும். இப்போது போனால் 1,13,00 டக்கா தான் கிடைக்கும்.
காரணம், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ந்து கொண்டிருக்கிறது. சரி; வெளிநாட்டு பணத்துடன் ஒப்பிட வேண்டாம். உள்நாட்டு நிலவரம் என்ன?
காமன்மேனாக - எளிமையாக யோசித்துப் பார்ப்போம். எனக்கும் அவ்ளோ தான் தெரியும்.

அழகிரியிடம் போனில் பேசிய ஸ்டாலின் ..

 டிஜிட்டல் திண்ணை: அழகிரியை அழைத்த ஸ்டாலின்

 minnampalam : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது. லொக்கேஷன் மதுரை காட்டியது.   “அரசியல் வட்டாரத்தில் குறிப்பாக திமுக வட்டாரத்தில் சலசலப்பு ஏற்படுத்துவது ஒன்றே கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக மு.க.அழகிரியின் குறிப்பிடத்தக்க பணியாக இருந்து வருகிறது. கலைஞரின் மூத்த மகனான மு.க.அழகிரி அவர் இருக்கும்போதே ஸ்டாலினுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை எதிர்த்து வெளிப்படையாகப் போர்க்கொடி தூக்கினார். கட்சி தேர்தலை முறைப்படி நடத்த வேண்டும் என்று பகிரங்கமாகத் தலைமையை எச்சரித்தார். ஒருகட்டத்தில் திமுக தலைவரான தனது தந்தைக்கும், தம்பி ஸ்டாலினுக்கும் பெரும் தலைவலி ஆகிப்போய் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார் அழகிரி.

இதையடுத்து அவரைச் சுற்றி கணிசமாக இருந்த தென்மாவட்ட திமுக புள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக விலக தொடங்கினார்கள். கலைஞர் இறந்த பிறகு அவருக்கு அஞ்சலி செலுத்த, அழகிரி ஏற்பாடு செய்த ஊர்வலம் பெரிய அளவில் வெற்றி பெறாததால் அது முதற்கொண்டு விமான நிலைய பேட்டிகளைத் தவிர வேறெந்த வகையிலும் அரசியல் செய்யாதவராக இருந்தார் அழகிரி.

சீனாவின் கட்டுப்பாட்டில் 38,00 Sqkm இந்திய நிலப்பரப்பு . ராஜ்நாத் சிங் ஒப்புதல் .. அதிர்ச்சி தகவல்

BBC : கிழக்கு லடாக் பிராந்தியத்தில் உள்ள அசல் எல்லை கட்டுப்பாட்டு கோடு

(எல்ஏசி) அமைந்த பகுதியில் கடந்த ஜூன் மாதம் இந்திய படையினருடனான மோதலில் சீன ராணுவ தரப்பு பலத்த சேதத்தை எதிர்கொண்டதாக இந்திய நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். எல்ஏசி பகுதியில் நிர்ணயிக்கப்படாத எல்லை கோடு தொடர்பாக இரு தரப்பு வீரர்களும் மோதிய சம்பவத்தில் கடந்த ஜூன் மாதம் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். ஆனால், சீனா தரப்பில் ஏற்பட்ட சேதம் அல்லது பாதிப்பு விவரத்தை இதுவரை அந்நாடு அலுவல்பூர்வமாக வெளியிடவில்லை.

இந்த நிலையில், இந்திய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் முதல் முறையாக சீனாவுடன் ஆன மோதல் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கியிருக்கிறார். சீன ராணுவத்துடன் இதுவரை இல்லாத வகையில் ஜூன் மாதம் 15ஆம் தேதி நடந்த மோதல் இருந்தாக ஒப்புக்கொண்ட ராஜ்நாத் சிங், தற்போதைக்கு எல்ஏசி மட்டுமின்றி மேலும் ஆழமான பகுதிகளில் தனது துருப்புகளை சீனா பெருமளவில் குவித்து வருவதாக தெரிவித்தார்.  

வாங்க ப்ராடு செய்ய பழகுவோம்,,,!

கர்நாடக துணை முதல்வர் புரந்தேந்திரப்பா,, அவர் குடும்பத்தினர் இரண்டு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன! ஒன்று சித்தார்த்தா மருத்துவக் கல்லூரி இன்னொன்று சித்தார்த்தா இன்ஸ்டிட்டியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ்! 

ஒரு ஏஜண்ட் ஒருவரை அமர்த்திக் கொள்கிறார்கள்! அவர் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா செல்கிறார்!       அங்கிருந்து மருத்துவம் முதலாண்டு அல்லது இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்கள் சுமார் 300 பேர்களை அழைத்து வருகிறார்!                    அவர்களை நீட் பரீட்சை எழுத வைக்கிறார்! அவர்களும் ரேங்க் வாங்கி பாஸ் ஆகிறார்கள்! அவர்கள் கௌன்சிலிங்க் எங்கு வேண்டுமென்றால் சித்தார்த்தா காலேஜையே சொல்கிறார்கள்! 

முதல் ரவுண்ட் கௌன்சிலிங் வருகிறார்கள்! அதற்கு ரெக்கார்ட் வெரிபிகேஷன் இல்லை என்பதால் நீட் மார்க்கை கொடுத்து சீட் பெறுகிறார்கள்! பின் சேராமல் விடுகிறார்கள்! இதற்கு அவர்களுக்கு பைன் எதுவும் இல்லை! அடுத்து இரண்டாம் ரவுண்ட் கௌன்ஸின்லிங் வருகிறது! அதிலும் அவர்கள் வருகிறார்கள்! சேராமல் விடுகிறார்கள்! ஆனால் இங்கு 2 லட்சம் ஃபைன் கட்ட வேண்டும்! அதை ஏஜண்ட் கட்டுகிறார்! 

நம்ம குழந்தை நாலு ... தான் சூர்யா மாதிரி ஆட்களுக்கு நாம இத்தனை நாள் கூவி கூவி பேசினது புரியும்

Karthick Ramasamy : இணையத்தில் பல்லாயிரக்கணக்கான திமுக ஆதரவாளர்கள் இருக்கிறார்கள்.
இதில் நடிகர் சூர்யாவின் அறிக்கையை சந்தேகக்கண்ணோடு பார்க்க வேண்டும் என்கிற கருத்தை அதிகபட்சம் நான்கைந்து பேர் மட்டுமே சொல்லியிருப்பார்கள். அது கூட அவர்கள் கருத்து மட்டுமே.
இங்கு ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும்.
உடனே இந்த உபிக்களே இப்படித்தான் அப்படித்தான் என்று அட்வைஸ் மழை பொழிய ஆரம்பித்து விட்டார்கள் நடுநிலை நண்பர்கள்.
2017ல் நீட் எதிர்ப்பு பற்றி மற்ற யாரும் பேசாத போது ஆயிரக்கணக்கான தொடர் பதிவுகள், நீட் எதிர்ப்பு தொடர்பான புத்தகம் என்று இயங்கியவர்கள் திமுக ஆதரவாளர்கள்.
சில கருத்துக்களில் மாறுபாடு வரலாம், அதற்காக அந்த கருத்தை தாராளமாக மறுக்கலாம்.
பலரின் வார்த்தைகளில் இருக்கும் வன்மத்தை பார்க்கும்போது எப்பொழுது திட்ட வாய்ப்பு கிடைக்கும் என்று காத்துக்கிடந்தவர்கள்போல உள்ளது.

 கேப்டன் குமார் : அதுக்கு ஏன் நம்மாளுங்க இடம் கொடுக்கர மாதிரி நடக்கனும் இந்த ரவிசங்கர் தொடர்ந்து திமுகாவ தேர தெருவுல இழுத்துவிட தான் பேசுற மாதிரி தெரியுது. 

Karthick Ramasamy: அவர் பேசுனா அது அவர் கருத்து, அதற்கும் திமுகவிற்கும் என்ன சம்மந்தம்? 

நீட்டுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவாக இருந்தவர்கள், இருப்பவர்கள்


Ravishankar Ayyakkannu Surya is not a victim. He needs to own responsibility as the founder of Agaram Foundation which propagated NEET as an elixir.

A Sivakumar : · சூர்யாவுடன் என்ன பஞ்சாயத்து? பஞ்சாயத்து நடிகர் சூர்யா என்ற தனி மனிதருடன் இல்லை. பஞ்சாயத்து அவரை வைத்து நடந்த நீட் ஆதரவு பிரச்சாரம் குறித்ததே. சூர்யா என்ற தனி மனிதர் நீட் தேர்வை ஆதரிக்கலாம், எதிர்க்கலாம். அது அவரின் சொந்த முடிவு. இன்றும் தமிழ்நாட்டில் பலரும் நீட் தேர்வை ஆதரிக்கவே செய்கிறார்கள். இன்று நடிகர் சூர்யா அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்...ஏற்கிறோம், வரவேற்கிறோம், வாழ்த்துகிறோம்..   ஆனால்

1) 2017ல் இதே நடிகர் சூர்யாவின் புகழ் வெளிச்சத்தில் நீட் ஆதரவு புத்தகங்களை அச்சிட்டு தமிழ்நாடெங்கும் விநியோகித்தார்களே சிலர், அவர்கள் எல்லாம் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்களா?
2) இத்தனை மாணவ செல்வங்களின் உயிர்கள் போனதில் தங்களுக்கும் ஒரு பங்கிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறார்களா?
3) தங்களுடைய அரசியலுக்கு சூர்யாவை பலியாக்கியதற்கு மன்னிப்பு கேட்டார்களா? கேட்பார்களா?
இதையெல்லாம் ஏன் இன்று கேட்க வேண்டும் என்ற கேள்வி உங்களுக்கு எழுவதும் இயல்பே.

செவ்வாய், 15 செப்டம்பர், 2020

தமிழரும் தமிழ்நாடும் பெற்ற வரங்கள் பெரியார், அண்ணா,கலைஞர்.. வாய்த்த சாபங்கள் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும்.

LR Jagadheesan: தமிழர் மற்றும் தமிழ்நாட்டின் சுயமரியாதை; சுயசார்பு; சுயாட்சி ஆகிய மூன்றின் குறியீடு அண்ணா என்கிற மூன்றெழுத்து சொல். அந்த மூன்றையும் துள்ளத்துடிக்க கொன்று புதைத்துவிட்டு அண்ணாவின் பிறந்தநாளுக்கு போற்றி பாடுவதால் தமிழனுக்கோ தமிழ்நாட்டுக்கோ என்ன பயன்? 

காஞ்சியில் பிறந்தவர் என்பதால் அண்ணா என்ன இன்னொரு அத்திவரதரா? பூஜிக்கவும் பஜனை பாடவும்? அவர் தமிழ் அரசியலின் உன்னத உருவகம். தமிழனின் போராட்டகுணத்தை தன் தலைமைத்துவத்தால் பொறுப்புணர்வாக்கி ஆக்கப்பூர்வ அரசியலுக்கு அடிகோலிய மூத்தோன். அவர் போட்டுவிட்டுப்போன வலுவான அடித்தளம் தான் இன்றுவரை நின்றுபிடித்துக்கொண்டிருக்கிறது. தமிழரின் தலை தாழாமல் தடுத்துக்கொண்டிருக்கிறது.       அதற்கு நேர் மாறாக யதார்த்த உலகில் மோடியின் எடுபிடி எடப்பாடிக்கெல்லாம் அல்லக்கையாக செயற்பட்டுக்கொண்டே, அதனால் வரும் பயன்கள் அத்தனையையும் எந்த கூச்சமும் இன்றி அனுபவித்துக்கொண்டே, மெய்நிகர் உலகில் அண்ணா எங்கள் தெய்வமே என்று உருகுவதெல்லாம் சிவாஜியே பார்த்து மிரளும் நவரச நடிப்பு. பாவம் நடித்துக்களைத்து விட்டீர்கள் நடிப்புச்சுதேசிகளே. கொஞ்சம் ஓய்வெடுங்கள். 

நீட் தேர்வை ரத்து செய் ! திருச்சி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

vinavu :ஏழை மாணவர்களின் கல்வியை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய் ! மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய் ! தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்றி நீட் தேர்வை தமிழகத்தில் அனுமதிக்காதே ! நீட் தேர்வின் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். நீட் தேர்வு என்பது நவீன கால மனுநீதியே என்பதை அம்பலப்படுத்தும் வகையில், இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தட்சணையாக ஏகலைவனின் கட்டை விரலை துரோணாச்சாரி வெட்டிக் கேட்டு அவன் திறனை முடக்கியது போல, இன்று கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை வெட்டி எறியவே நீட் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. அப்படி தமது மருத்துவக் கனவு வெட்டியெறியப்பட்டதன் காரணமாகவே பல மாணவர்கள் மனமொடிந்து தற்கொலையை நோக்கிச் செல்கின்றன. நவீன மனுநீதியான இந்த நீட் தேர்வை உடனடியாக தடுத்து நிறுத்தாவிடில் இன்னும் பல உயிர்களை நாம் இழக்க வேண்டிய சூழலே ஏற்படும்.

2ஜி சதியின்போது ஆ ராசாவை கைவிட்ட பலர் இன்று ராசா எங்க ராசா என்று .... ஜாதிப்பாசம்?

  K
aruppu Neelakandan
: சகோதரர் ஆ.ராசா இந்திய பார்ப்பன பொறுக்கி
ஊடகங்களாலும் அவர்தம் அல்லக்கைகளாலும் அவ்வளவு அநீதியான அவதூறுகளுக்கு உள்ளானபோது கலைஞரும், திராவிடர் கழகமும், திராவிடர் இயக்க தமிழர் பேரவையும்தான் அவரை ஆதரித்தது. அவரின் அவதூறு எதிரிகளை தங்களின் இனத்தின் எதிரிகளாய் நின்று சமூககளத்தில் எதிர்கொண்டது திராவிடர் இயக்கம் மட்டும்தான். அவர்களைத் தாண்டி ஆ.ராசா அவர்களை இங்கே ஆதரித்த ஒரே ஒரு அமைப்பு அம்பேத்கரிய-பெரியாரிய புரிதலோடு 25ஆண்டுகளாய் இதழியல் பிரச்சாரத்தை இந்து இழிமதத்ற்கெதிராக போராக தொடுத்துக்கொண்டுவரும் 'தலித்முரசு' இதழ் மட்டும்தான். 
ஆனால் கடந்த இரு வாரங்களாக 'ராசா' ' எங்க சின்ன ராசா 'எனும் ஜாதிப்பாசம் மிகுந்த குரல்கள் கொஞ்சம் போலியாகவும் தூக்கலாகவும் உலா வந்துகொண்டிருக்கின்றன. அதுவும் இன்றைய சூழலிலும் தலித்துகளுக்குள்ளேயே ஒரு ஜாதியை மையங்கொண்டு இன்னொரு சகோதர ஜாதியை புறக்கணித்துக்கொண்டும், அவதூறுப்படுத்திக்கொண்டிருக்கும் ஜாதியை கூர்மைப்படுத்தும் கூர்மை வாய்ந்த குரல்கள் அவை. 
சாதாரண தொண்டர் நிலையிலிருந்தால் கூட அக்குரல்கள் எதிர்காலத்தில் அது தன்னை அம்பேத்கரியத்தில் கரைத்து சரிசெய்து கொள்ளும் என்கிற நம்பிக்கைகளோடு நாம் அவற்றை கடந்துவிடலாம். ஆனால் இப்போது இப்படியான சவடால்களை அடிப்பது

இந்தியை காப்பாற்றுவதை விட இந்திய மக்களை காப்பாற்ற வேண்டும்,,,ர் அமித்ஷாவுக்கு மு.க.ஸ்டாலின்

  dhinakaran :சென்னை: இந்தி மொழியை காப்பாற்றுவதை விட இந்திய மக்களை கொரோனாவில் இருந்து காப்பாற்ற அமித்ஷா கவனம் செலுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: இந்திய நாட்டின் உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷா, இந்தி மொழி இந்நாட்டை ஒருங்கிணைப்பதாகச் சொல்லி இருக்கிறார். பன்முகத் தன்மையுடன் பரந்து விரிந்திருக்கும் இந்நாட்டை, ஒரு சில மாநில மக்கள் மட்டுமே பேசும் மொழி எப்படி ஒருங்கிணைக்க முடியும்?. வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் கெடுக்கும் ஒன்றாகத்தான் இந்தி இருக்கிறது என்பதை அமித்ஷா உணர வேண்டும். இந்தியை காப்பாற்றுவதை விட, கொரோனாவில் இருந்து இந்தியரை காப்பாற்றுவதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

40 லட்சம் வேலையற்றவர்களுக்கு இனி அரை ஊதியம் கிடைக்கும்!!

zeenews.india.com : கொரோனா ஊரடங்கை (Corona Lockdown) அடுத்து வேலையின்மை பிரச்சினைகளை சந்திப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் (Coronavirus) ஒரு மகிழ்ச்சியான செய்தி. அடல் பிமித் நபர் நலத் திட்டத்தின் உறுப்பினரான மாநில காப்பீட்டுக் கழகத்தின் (ESIC) உறுப்பினர்களான வேலையற்ற தொழிலாளர்களுக்கு 50 சதவீத ஊதியம் வழங்குவதற்கான மத்திய தொழிலாளர் அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு வேலை இழந்த 40 லட்சம் தொழிலாளர்களுக்கு பயனளிக்கும்.

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் வேலை இழந்த தொழில்துறை தொழிலாளர்களுக்கான விதிகளை மாற்றுவதன் மூலம் மூன்று மாதங்களுக்கு 50 சதவீத வேலையின்மை கொடுப்பனவை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் 24 முதல் டிசம்பர் 31 வரை வேலை இழந்த தொழிலாளர்களுக்கு இந்த நன்மை வழங்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடல் பிமிட் நபர் நல திட்டம் என்பது ESIC ஆல் நிர்வகிக்கப்படும் ஒரு திட்டமாகும். இதன் மூலம் தொற்றுநோய்களின் போது வேலை இழப்பவர்களுக்கு வேலையின்மை கொடுப்பனவு வழங்கப்படும்.

சென்னை சாலையில் மின்கசிவால் உயிரிழந்த பெண்!

minnambalam :சென்னையில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அலிமா என்ற பெண் மின்சாரம் தாக்கி பலியான விவகாரத்தில் பொறியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அலிமா தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்கவில்லை என்று அவரது சகோதரி வேதனை தெரிவித்துள்ளார்.     சென்னை பெரியார் நகர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் அலிமா (35). இவரது கணவர் ஷேக் முகமது. இவர்களுக்கு அப்துல் ரகுமான்(10) என்ற மகன் உள்ளார். அலிமா கணவர் மற்றும் மகனைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். புளியந்தோப்பு நாராயண சாமி தெருவில் வசிக்கும் ஷாகிரா பேகம் என்பவரது வீட்டில் அலிமா வீட்டு வேலை செய்து வந்துள்ளார். வழக்கம்போல் நேற்றும் (செப்டம்பர் 14) வேலைக்குச் சென்றுள்ளார்.

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்

maalaimalar :மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.  தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலக் கூடிய மாணவர்களுக்கு மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகியவற்றில் இளங்கலை படிப்புகளுக்கு முன்னுரிமை அடிப்படையிலான சேர்க்கை சட்டமுன்வடிவு தாக்கல் செய்யபட்டது.
மருத்துவ படிப்பில் சேருவதற்காக நடத்தப்படும், ‘நீட்’ தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி, தமிழக அரசு சார்பில், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.<>அதைத் தொடர்ந்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ மாணவர் சேர்க்கையில், உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆலோசித்து, அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு கடந்த மார்ச் 21-ம் தேதி அமைக்கப்பட்டது.
 அந்தக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீடு வழங்குவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அமைச்சரவையின் ஒப்புதலை தொடர்ந்து தற்போது சட்டப்பேரவையில் இந்த சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி கலவர வழக்கு: ஜேஎன்யு முன்னாள் மாணவர் உமர் காலித்துக்கு 10 நாள் போலீஸ் காவல்

BBC :ெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கலவரத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித்தை 10 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த வழக்கில் அவரை ஞாயிற்றுக்கிழமை 11 மணி நேர விசாரணை முடிவில் டெல்லி காவல்துறை கைது செய்தது.மேலும், கலவரத்தின் “முக்கிய சதியில் ஈடுபட்டவர்” என உமர் காலித்துக்கு எதிராக டெல்லி காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது. இந்த வழக்கில் உமர் காலித்துடன் சேர்த்து பல முக்கிய செயல்பாட்டாளர்கள் மற்றும் மாணவர் தலைவர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் இந்த விவகாரத்தில், பல செயல்பாட்டாளர்களில் குறிப்பாக முஸ்லிம்கள், நியாயமற்ற முறையில் இலக்கு வைக்கப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன. ஆனால் அதை காவல்துறை மறுத்துள்ளது.

Ex Cm குமாரசாமி : இந்தி பேசாத மாநிலங்களில் மட்டும் மும்மொழி கொள்கை ஏன்?

இந்தி பேசாத மாநிலங்களில் மட்டும் மும்மொழி கொள்கை ஏன்? - குமாரசாமி கேள்வி
dailythanthi.com : இந்தி பேசாத மாநிலங்களில் மட்டும் மும்மொழி கொள்கையை அமல்படுத்துவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள குமாரசாமி, நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்தக் கூடாது என கூறியுள்ளார். பெங்களூரு, 
கர்நாடகா முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
நாட்டில் பல்வேறு மொழிகள், கலாசாரங்களை உள்ளடக்கிய இந்தியாவில் கன்னடம் உள்பட பிற மொழிகள் மீது இந்தியை வலுக்கட்டாயமாக திணிக்கும் முயற்சி நடந்து வருகிறது. இன்று (அதாவது நேற்று) கொண்டாடிய இந்தி தின விழா கூட அத்தகைய நோக்கம் கொண்டது தான். மொழி ஆணவத்துடன் கொண்டாடப்படும் இந்தி தின விழாவுக்கு கன்னடர்களின் எதிர்ப்பு உள்ளது. இந்தி தேசிய மொழி அல்ல. அத்தகைய ஒரு அம்சம் அரசியல் அமைப்பு சட்டத்தில் இல்லை.

காணாமல் போன காசிமேடு மீனவர்கள் மீட்கப்பட்டனர்... மியான்மர் கடல்பகுதியில்..

Kasimedu FIshermen
Mageshbabu Jayaram - Samayam Tamil : காசிமேட்டில் இருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சென்னையில் உள்ள காசிமேடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் கடந்த ஜூலை மாதம் 23ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் ஒருவாரம் கடலில் மீன்பிடித்துவிட்டு கரை திரும்ப திட்டமிட்டிருந்தனர். ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்குள் கரை திரும்பவில்லை. இதனால் அவர்களது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே காணாமல் போன மீனவர்களை மீட்டுத் தருமாறு போலீசாருக்கும், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

சூர்யாவின் அகரம் Foundation நீட்டுக்கு ஆதரவான நூலை வெளியிட்டுள்ளது .. இன்னும் திரும்ப பெறவில்லை?

Umamaheshvaran Panneerselvam : அகரம் Foundation வெளியிட்ட புத்தகத்தில் இப்படி இருக்கும்போது, சூர்யா பற்றிய என் ஐயம் Justified. சூர்யா மேல் வன்மமோ, கடுப்போ எனக்கில்லை. சமூகநீதியின் பக்கம் யார் நின்றாலும் எனக்கென்ன நோகப் போகிறது ?

ஆனால் தனது அமைப்பு வெளியிட்ட புத்தகத்தில் நீட் ஆதரவான அப்பட்டமான வரிகள் இருக்கும்போது அவர் அதை Refute செய்கிறாரா அல்லது அந்த புத்தகம் திரும்பப்பெறப்பட்டதா என்று தெரியாதவரை ஐயம் இருப்பது இயல்பு. ஜல்லிக்கட்டுக்காக மாடு மாடு என்று ஊர் ஓடியபோது , மக்கள் நீட்டுக்காக போராடவேண்டும், என்று வலியுறித்தியதோடு அல்லாமல் அதற்கான பதாகை தாங்கிது நம்மில் சிலர். மெரினாவில் ஸ்டாலின் உள்ளே வந்தபோது, அவரை வெளியேரும்படி செய்து " எங்களுக்கு தலைவர்களே வேண்டாம், தை புரட்சி, மக்களே மக்களைப் பார்த்துக் கொள்வார்கள் " என்றபோது அடுத்து வரப்போகும் ஆபத்தை, முறையான அரசியல் இயக்கம் அல்லாத தனி குரல் மடைமாற்றப்படும் சிக்கலை சொன்னதும் நம்மில் சிலர்.

கார்த்திக் சிதம்பரம் தன் நீட் ஆதரவு நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்... இல்லையேல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ..

                    Bilal Aliyar : சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் கார்த்திக் சிதம்பரம் அவர்களின் பழைய வீடியோ ஒன்றில், தான் நீட் தேர்விற்கு ஆதரவானவர் என வெளிப்படையாக பேசுகிறார். தமிழ்நாட்டில் நீட் தேர்வு குறித்தும், அதன் பாதகங்கள் குறித்தும், திமுக தலையிலான கூட்டணி கட்சிகளில் காங்கிரஸ், மதிமுக, விசிக, மா. கம்யூனிஸ்ட், வலது கம்யூனிஸ்ட், இஸ்லாமிய கட்சிகள் மற்றும் ஏனைய இயக்கங்கள் அனைத்தும் தீவிரமக பேசி, போராடி, நீட்டை ஒழிக்க பாடுபட்டு கொண்டிருக்கின்றன. நீட்டை கொண்டு வந்த அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பாமக, ஆரம்பத்தில் நீட் ஆதரவு நிலைப்பாடு எடுத்து இன்று பல உயிர்களும், மாணவர்களின் கனவும் களவுபோவது கண்டு நடிகர் சூர்யா போன்றோரும் நீட்டை ஒழிக்க வேண்டும் என்று வெளிம்படையாக குரல் கொடுத்திருக்கின்றனர். 

தமிழ்நாட்டு மக்களுக்கு, மாணவர்களுக்கு நேரடியான இழப்பை உருவாக்கி, மாநில சுயாட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் நீட் தேர்வை, விரும்பாத மாநிலங்கள் மீது திணிக்கப்படமாட்டாது என்று தேர்தல் அறிக்கையிலும், பிரச்சாரத்திலும் தெரிவித்தார் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி..

மக்களின் கைத்தட்டலில் மிரண்டு போன பிரபாகரன் .. சுதுமலை கூட்டம்.. 1987

 Sugan Paris : யாழ்ப்பாணத்தில் இரண்டு அரசியல் ஆளுமைகள் மக்கள் மனங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றவர்கள்.
1) இந்திராகாந்தி
2) சந்திரிக்கா குமாரதுங்க
இந்தியா உதவிக்கரம் தந்தபோது வயதானவர்கள் கண்ணீர் சொரிந்து கையெடுத்து வணங்கி வரவேற்றபோது அவர்கள் ராஜீவ் காந்திக்காக உச்சரித்த பெயர் "அன்னை இந்திராகாந்தியின் புதல்வனே ! "
சமாதானத்தினதும் அரசியற்தீர்வு முயற்சிகளினதும் துணிச்சலான நடவடிக்கைகளிலும் மக்கள் நம்பிக்கை வைத்த சந்திரிக்கா அம்மையாரை மக்கள் அழைத்தது" சமாதானத்தின் தேவதையே !'
இரண்டும் மக்களின் சமாதானத்தின்மீதான பெரு வேட்கையைக் காட்டிநின்றன.
இரண்டிலும் அரண்டுபோன புலிகள் தொடர்ந்த யுத்தமே அவர்களை சர்வதேச பயங்கரவாதப்பட்டியலில் சேர்த்தது.
சுதுமலையில் "இந்தியாவை நம்பி நமது ஆயுதங்களை ஒப்படைக்கிறோம் !" என பிரபாகரன் சொன்னபோது மக்கள் எழுப்பிய கரகோசம் கண்டு பிரபாகரன் மிரண்டது நடந்தது.        அமைதிப்படை யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் பரசூட் தரையிறங்கும்போது சர்வதேச விதிகளுக்கு மாறாக அவர்களைச் சுட்டது தொடங்கி தொட்டது சனியன்.

இந்தி திணிப்புக்கு எதிராக கர்நாடகாவில் வெடித்த போராட்டம் .. "கன்னடா சாக்கு.. இந்தி திவாஸ் யாக்கே?"

Veerakumar - /tamil.oneindia.com :  பெங்களூர்: 'ஹிந்தி திவாஸ்' என்ற பெயரில் இந்தி தினம் கொண்டாடப்படுவதற்கு கர்நாடகாவில் உள்ள கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கியுள்ளன. சமீபகாலமாக மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் இந்தியை திணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

தமிழகத்தில் திமுக எம்பி கனிமொழி முன்னெடுப்பின் பேரில், ஹிந்தி திணிப்புக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய டி சட்டைகளை அணிந்து பல திரைப்பட பிரபலங்கள் புகைப்படம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தனர்.  இதையடுத்து தமிழகம் முழுக்கவே இளைஞர்கள் மத்தியில் இது போன்ற டி ஷர்ட்டுக்குள் வாங்குவதற்கான ஆர்வம் அதிகரித்துக் காணப்படுகிறது.      இது ஒரு பக்கம் என்றால், கர்நாடகாவிலும் இந்தித் திணிப்புக்கு எதிராக சமீபகாலமாக போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக இந்தி திவாஸ் என்ற பெயரில் இந்தி தினம் இன்று கொண்டாடப்படுவதை எதிர்த்து கன்னட ரக்ஷன வேதிகே என்ற அமைப்பினர் பெங்களூர் உட்பட மாநிலம் முழுவதும் இன்று போராட்டங்கள் நடத்தினர். 

திங்கள், 14 செப்டம்பர், 2020

நீட் தற்கொலைக்கு நிவாரணம் தருவதா? – சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி

BBC : நீட் தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்யும் மாணவர்களின்

குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவதும், அரசு வேலை கொடுப்பதும் தற்கொலையை ஊக்குவிப்பது போல் உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் விமர்சித்துள்ளது. நீட் விவகாரத்தில் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்வதை தடுக்க தமிழக அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனக் கோரி வழக்கறிஞர் சூரியபிராகாசம் தொடர்ந்த வழக்கில், தற்கொலைகளை ஊக்குவிக்கும் செயல்களில் அரசியல் கட்சிகள் ஈடுபடக்கூடாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், ஊடகங்கள் தற்கொலை செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது, தற்கொலையை மகிமைப்படுத்துவது போலாகிறது என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தற்கொலை செய்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி அளிப்பது போன்ற செயல்கள் இத்துடன் நிறுத்தப்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.

சூர்யாவுக்கு ஆதரவாக களமிறங்கிய முன்னாள் நீதிபதிகள்!

minnambalam : சூர்யாவுக்கு ஆதரவாக முன்னாள் நீதிபதிகள் 6 பேர் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். தமிழகத்தில் நேற்று முன்தினம் நீட் தேர்வு பயத்தால் மதுரை ஜோதிஸ்ரீ துர்கா நாமக்கல் மோதிலால், தருமபுரி ஆதித்யா என 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்குவதாக நடிகர் சூர்யா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டா அதில், “கொரோனா அச்சத்தால்‌ உயிருக்குப் பயந்து ‘வீடியோ கான்பிரன்சிங்‌’ மூலம்‌ நீதி வழங்கும்‌ நீதிமன்றம்‌, மாணவர்களை அச்சமில்லாமல்‌ போய்‌ தேர்வு எழுத வேண்டும்‌ என்று உத்தரவிடுகிறது” என்று விமர்சித்திருந்தார். நீட் தேர்வுக்கு எதிரான சூர்யாவின் அறிக்கை தேசிய அளவில் கவனம் பெற்றது. எனினும், சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் கடிதம் எழுதினார்.

துப்பாக்கி கலாச்சாரத்தை உருவாக்கும் பா.ஜ.க.! தமிழகத்தில் உ.பி. ஃபார்முலா!

nakkheeran.in - அண்ணல் : இதுவரை பார்த்திராத அளவுக்கு மதுரை நகரெங்கும் பா.ஜ.க.வினர் இந்தியில் போஸ்டர் ஒட்டியிருந்தனர்.   செப்டம்பர் 5 -ஆம் தேதி, மதுரை சிறுதூர் கோபாலகிருஷ்ணன் அரசு உதவிபெறும் பள்ளியில் பா.ஜ.க இளைஞரணி அறிமுகக் கூட்டமும், இளம் ராணுவத் தாமரை அறிமுகக் கூட்டம் என்ற பெயரில், காவிச் சீருடையுடன் உருவாக்கப்பட்ட

படையையும் பா.ஜ.க. இளைஞரணி மாலத் தலைவர் வினோஜ் செல்வம்

தொடங்கிவைத்தார். இந்த விழாவுக்குத்தான் இந்த அலப்பறை என்றார்கள் சொந்தக் கட்சியின் சீனியர்களே.விழா மேடையில் தனிமனித இடைவெளியின்றி, மாஸ்க் அணியாமல் கூடியவர்கள், வினோஜ் செல்வத்தின் கையில் வேல், கதாயுதம், வாள் போன்றவற்றைக் கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 

அப்போது திடீரென 'பாரத் மாதா கீ ஜே', 'ஜெய்ஸ்ரீ ராம்' என்று கத்தியபடியே மேடையேறிய சிலர், வினோஜ் செல்வத்தின் கையில் துப்பாக்கியொன்றைக் கொடுக்க, அவரும் அதை உயர்த்திக்காட்டி உற்சாக போஸ் கொடுத்தார்.

NEET - DMK நீட் தேர்வால் 12 மாணவர்கள் தற்கொலை... மக்களவையில் பிரச்சனை எழுப்பியது திமுக

   malaiamalar :டெல்லி: பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 9 மணிக்கு சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியதும், எம்பிக்கள் மற்றும் முன்னாள் எம்பிக்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஒரு மணி நேரம் அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியபோது, நீட் தேர்வு தொடர்பான பிரச்சனையை திமுக எழுப்பியது. திமுக எம்பி டி.ஆர்.பாலு பேசும்போது, நீட் தேர்வினால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக 12 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தார்.

‘நீட் தேர்வின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட 12 மாணவர்கள் அனைவரும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்பதை இந்த அவை மற்றும் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். அவர்கள் பிளஸ் 2-ல் மாநில பாடத்தில் படித்து தேர்ச்சி பெற்றனர். ஆனால், நீட் தேர்வானது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மட்டுமே நடத்தப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான ஒரு மாதத்திற்குள் நீட் தேர்வு வருகிறது. எனவே, அவர்களால் தங்களை தயார்படுத்த முடியவில்லை.

4 மடங்கு பணம் தருவதாக கூறி ரூ. 4700 கோடி மோசடி செய்த வாலிபர் கைது .. கோவை பீளமேடு பி.ஆர். புரத்தை சேர்ந்தவ

maalaimalar.com  : சேலம்: கோவை பீளமேடு பி.ஆர். புரத்தை சேர்ந்தவர் கவுதம் ரமேஷ் (வயது 40).இவர் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் 3 நிதி நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்த நிறுவனங்களில் ரூ. 1 லட்சம் முதலீடு செய்தால் ஒரே ஆண்டில் ரூ. 4 லட்சமாக திருப்பி தரப்படும் என கவர்ச்சியாக விளம்பரங்கள் செய்தார். இதை நம்பி ஆயிரக்கணக்கானோர் பணத்தை முதலீடு செய்தனர். கேரளாவில் மட்டும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இவரது நிறுவனத்தில் கோடிக் கணக்கில் முதலீடு செய்தனர். தமிழ்நாட்டிலும் ஏராளமானோர் முதலீடு செய்தார்கள். சேலத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இந்த நிறுவனத்தில் பணம் செலுத்தி இருந்தனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிதி நிறுவனங்களை மூடிவிட்டு கவுதம் ரமேஷ் தலைமறைவானார். இதுபற்றி கேரள போலீசார் வழக்கு பதிவு செய்து கவுதம் ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் 13 பேரை தேடி வந்தனர்,

தமிழ்நாட்டில் சேலம், கோவை மாநகர போலீஸ் நிலையங்களிலும் கவுதம் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சேலத்தில் 70 பேர் கொடுத்த புகாரின் பேரில் ரூ. 4½ கோடி வரை மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

அமித் ஷா டெல்லி எய்ம்ஸில் அனுமதி!’ – எப்படி இருக்கிறார்?

vikatan.com - தினேஷ் ராமையா : நாடு முழுவதும் ரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேசிய அளவில் தினசரி பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 94,372 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 47,54,356 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமித் ஷா

இந்தநிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரண்டாவது முறையாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.       55 வயதான அமித் ஷாவுக்கு கொரோனா பாதிப்பு கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, குர்காவுனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.          கொரோனாவில் இருந்து அவர் மீண்டுவிட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், இதுதொடர்பாக கடந்த ஆகஸ்ட் 14-ல் ட்விட்டரில் பதிவிட்டார். அந்தப் பதிவில், மருத்துவமனையில் இருந்து தாம் வீடு திரும்பி விட்டதாகவும், மருத்துவர்களின் அறிவுரைப்படி மேலும் சில நாள்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் அமித் ஷா தெரிவித்திருந்தார். 

மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா கொலை: அகிலேஷ் ஆவேசம்!

 மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா கொலை: அகிலேஷ் ஆவேசம்!

minnamblam :தமிழ்நாட்டில் நீட் தேர்வு தோல்வி பயத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவி ஜோதி ஸ்ரீ துர்காவுக்கு, நாட்டின் வட பகுதியைச் சேர்ந்த உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்திருப்பது, இந்த விவகாரத்தை தேசிய அரங்கில் கவனப்படுத்தியுள்ளது.   

 தமிழகம் நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும் நிலையில், செப்டம்பர் 12ஆம் தேதி நள்ளிரவு மதுரையைச் சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா தற்கொலை செய்துகொண்டார். மதுரை ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த முருகசுந்தரம் என்பவர் காவல் சார்பு ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது மகள் ஜோதி ஸ்ரீ துர்கா கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்குத் தயாராகி வந்துள்ளார்.

சூர்யா: "நீட் தேர்வுக்கு எதிராக நாம் அனைவரும் சமூகமாக ஒன்றிணைவோம்"

 'நீட் எனும் மனுநீதி தேர்வு மாணவர்களின் உயிரை பறிக்கிறது' - நடிகர் சூர்யா  BBC :”நீட் போன்ற ’மனுநீதி’ தேர்வுகள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். தொடர்ந்து நீட் தேர்வுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்து வரும் நடிகர் சூர்யா, தற்போது தமிழகத்தில் நீட் அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது.அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம் ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையை சட்டமாக கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள்.

தேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை என்ற செய்தி அதிகபட்சம் ஊடகங்களில் அன்றைக்கான விவாத பொருளாக மாறுகிறது. இறந்துபோன மாணவர்களின் மரண வாக்குமூலத்தில்கூட எழுத்துப் பிழைகளை கண்டுபிடிக்கும் சாணக்கியர்கள், அனல் பறக்க விவாதிப்பார்கள்.

விகடன் அறிவுரையால் மனம் திருந்திய பில் கேட்ஸ் ... நாட்டு மாடு கத்திரிக்காய் விவசாயம்...

Devi Somasundaram : அன்புள்ள விகடன்.. !   நீங்க பசுமை விகடன்ல எழுதும் கட்டுரைலாம் படிச்சு , பில் கேட்ஸ் தன் பிஸ்னஸ் விட கத்திரிக்காய் வளர்ப்பது லாபம் தரும் பிஸ்னஸ் என்பதை அறிந்து ,அவர் பிஸ்னஸ விட்டு செவத்தம்பட்டில 50 ஏக்கர் வாங்கலாம்னு விலை பேசறாராம் .
நானும் ஒரு ஏக்கருக்கு 2 லட்சத்து 62 ஆயிரம் லாபம் கிடைப்பதால் இத்தனை ஆண்டுகளாக விவசாயம் செய்த செவத்தம்பட்டி ஆட்கள் எல்லாரும் மல்ட்டி மில்லியனரா இருப்பார்கள்

,அவர்கள் மைக்ரோ சாப்ட வாங்கிக் கொள்வார்கள் என்ற ஆசையில் செவத்தம் பட்டி மல்ட்டி மில்லியனிரடம் விலை பேச போனேன்..
கம்மாய்ல கோவ்ணத்தோட குளிச்சுகிட்டு இருந்த கோவிந்தசாமி அய்யா ' விகடன்ல வருமானம் இல்லன்னு எல்லா புத்தகத்தையும் நிறுத்திட்டு இருக்கானுகளாமே? நிறைய பேர வேலை விட்டு வேற அனுப்பறானுகளாம் . பேசாம விகடன் ஆபிஸ இழுத்து பூட்டிட்டு செவத்தம் பட்டில நிலம் வாங்கி விவசாயம் பண்ண் வரச் சொல்லு ,     அதான் ஏக்கருக்கு 2 லட்சம் கிடைக்கிதுல்ல ,     அவன் எதுக்கு பத்திரிக்கை நடத்திட்டு , மூடிட்டு வந்து விவசாயம் பண்ணச் சொல்லுன்னு சொன்னார்...     நானும் நல்ல ஐடியா வா இருக்கேன்னு விகடன் ஆபிஸ மூட பூட்டு வாங்கிட்டேன்..   .எப்ப வரலாம்னு சொன்னிங்கன்னா பூட்டிட்டு கத்திரிக்காய் புடுங்க ச்சேய் .பறிக்க போகலாம்.....