சனி, 22 பிப்ரவரி, 2014

ஜெயலலிதா பிறந்த நாள் பேனர்: அகற்றக்கோரி நடுரோட்டில் படுத்த டிராபிக் ராமசாமி Photos


ஜெயலலிதா வெள்ளிக்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதையொட்டி கடற்கரை சாலை முழுவதும் அதிமுகவினர் பெரிய பெரிய பேனர்களை வைத்திருந்தனர். சனிக்கிழமை காலை திடீரென்று கடற்கரை சாலை காந்தி சிலை அருகே வந்த சமூக சேவகர் டிராபிக் ராமசாமி, பேனர்களை அகற்ற கோரி திடீரென சாலையின் நடுவே படுத்து மறியல் செய்தார்.
இதனால் காமராஜர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் அவரை எழுந்து செல்லும்படி கேட்டுக்கொண்டனர். பேனரை அகற்றினால்தான் போவேன் என்று டிராபிக் ராமசாமி கூறினார்.

ஆந்திராவின் புதிய தலைநகர் எது? அரசுக்கு துவங்கியது அடுத்த நெருக்கடி


ஐதராபாத்: தெலுங்கானா தனி மாநிலம் உதயமாவது, உறுதியாகி விட்டதை அடுத்து, ஆந்திராவின் புதிய தலைநகர் எது என்ற பிரச்னை எழுந்து உள்ளது. 'தெலுங்கானா மாநிலம் உருவான, 45 நாட்களுக்குள், புதிய தலைநகர் எது என, அடையாளம் காணப்படும்' என, ஏற்கனவே அறிவித்துள்ளதால், மத்திய அரசின் கவனம், அதை நோக்கி திரும்பியுள்ளது.
ஆந்திராவை இரண்டாகப் பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கான, அனைத்து நடவடிக்கைகளும் முடிவடைந்து விட்டன. ஆந்திராவின், ராயலசீமா, கடலோர ஆந்திரா பகுதிகளைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, பார்லிமென்டின் இரு சபைகளிலும், இந்த மசோதா

மன்றல் 2014 ! பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்

“மன்றல் 2014” என்னும் தமிழகத்தின் மாபெரும் ஜாதிமறுப்பு இணைதேடல் பெருவிழாவினை பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் சென்னை பெரியார் திடலில் எதிர்வரும் 23.2.2014 ஞாயிறு அன்று நடத்திடவுள்ளது.
இதுதொடர்பாக பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் இயக்குநர் திருமகள் கூறியிருப்பதாவது,
பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் 1974-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, சென்னையில் உள்ள பெரியார் திடலைத் தலைமையிடமாகக் கொண்டு தொடர்ந்து 40 ஆம் ஆண்டில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதுவரை ஆயிரக்கணக்கான திருமணங்களை இத்திருமண நிலையம் நடத்திவைத்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கானோர் இத்திருமண நிலையத்தின் மூலமான தங்களுக்கேற்ற வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்து மணம் முடித்துள்ளனர். முற்றிலும் வணிக நோக்கின்றி சமூக மாற்றத்தை நோக்கிய பயணத்தின் வெற்றியையே கருத்தில் கொண்டு பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் நடைபெற்று வருகிறது.

ஜாதி தின்ற சரித்திரம் ! முதல் மலையாள திரைப்படத்தை உருவாகிய தமிழர் J.C,Daniel


சமா.இளவரசன் காலம் 20-ஆம் நூற்றாண்டுக்குள் புகும்போதே திரைப்படம் என்னும் ஊடகத்தின் தாக்கம் உலகிற்குத் தெரிந்திருந்தது. இந்தியாவில் முதல் படம் எடுக்கப்பட்டது 1912-இல் தாதா சாகேப் டார்னே என்பவரால். அதற்குப் பிறகு இந்தியாவின் முதல் படம் என்று இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ள படமான ராஜா ஹரிச்சந்திரா வெளிவந்தது 1913 மே மாதத்தில். படத்தை உருவாக்கியவர் டி.ஜி.பால்கே. பின்னர் மும்பை, கொல்கத்தா, சென்னை என பட உருவாக்கப் பணிகள் பல இடங்களிலும் தொடங்கின.
வெளிநாட்டிலிருந்து வந்த பேசாத் திரைப்படங்களை தமிழகத்தின் ஊர் ஊராகச் சென்று காட்டினார் வின்சென்ட் சாமிக்கண்ணு. தமிழ்நாட்டின் முதல் படத்தை கீசகவதம் என்ற பெயரில் உருவாக்கினார் நடராஜ முதலியார். தமிழ் பேசாவிட்டாலும் அதுதானே முதல் தமிழ்ப் படம். இத்தகைய சாதனைகளின் தொடர்ச்சியாக 1920-களின் பிற்பகுதியில் இன்றைய தென் தமிழகமும் கேரளாவும் இணைந்த அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும் இத்தகைய முயற்சிகளை ஒருவர் தொடங்கினார்.

முதல்நாள் முதல் ஷோவுக்கு ரெண்டுபேர்தான் வந்திருக்காங்க.. படத்தை தூக்கிடவா?'

சென்னை: புதிய படங்கள் பலவற்றுக்கு தியேட்டர்களில் கூட்டமே இல்லை. முதல் நாள் முதல் காட்சிக்கு இரண்டு பேர்தான் வந்திருக்கிறார்கள், படத்தை தூக்கிடவா என்று தியேட்டர்காரர்கள் கேட்கும் அளவுக்கு மோசமாகிவிட்டது நிலைமை, என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் கூறினார். வேதநாயகி பிலிம்ஸ் தயாரித்துள்ள புதிய படம் 'அலையே அலையே'. புதுமுக இயக்குநர் ஜி.மணிகண்டகுமார் இயக்கியுள்ளார். நாயகனாக 'மானாட மயிலாட'புகழ் ரஞ்சித்தும், நாயகியாக அங்கீதா நயனாவும் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடந்தது. 'சார்.. முதல்நாள் முதல் ஷோவுக்கு ரெண்டுபேர்தான் வந்திருக்காங்க.. படத்தை தூக்கிடவா?'

EVKS.இளங்கோவன்: பேரறிவாளனை மட்டும் விடுவிப்பதில் நியாயம் இருக்கிறது !


சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு ரத்து செய்யப்பட்ட பேரறிவாளனை மட்டும் விடுவிப்பதில் நியாயம் இருக்கிறது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார். ராஜிவ் வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கை ஆயுள் தண்டனையாக்கியது உச்சநீதிமன்றம். இதைத் தொடர்ந்து ராஜிவ் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் இந்த மூவர் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. பேரறிவாளனை மட்டும் விடுவிப்பதில் நியாயம் இருக்கிறது- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆனால் இதற்கு மத்திய அரசும் காங்கிரஸ் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதே நேரத்தில் பேரறிவாளனை மட்டும் விடுதலை செய்யலாம் என மூத்த காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், மூவரையும் விடுதலை செய்த 'உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மிகவும் மோசமான தீர்ப்பு. பேரறிவாளன் மட்டும் பேட்டரி வாங்கிக் கொடுத்தார்; மற்றபடி அவருக்கு எதுவும் தெரியாது என்கிறார்கள். அதனை விசாரித்த அதிகாரியே அதைத்தான் இப்போது சொல்லியிருக்கிறார். அதனால், பேரறிவாளனை மட்டும் தண்டனை இல்லாமல் செய்தால், அதில் ஓரளவு நியாயம் இருக்கிறது. அதனை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், முருகன், சாந்தன் இருவரும் ராஜீவ் காந்தி கொலை செயல் நடக்கும் அந்த ஸ்பாட்டில் இருந்தவர்கள். இவர்களை விடுதலை செய்யப்போகிறார்கள் என்று சொல்வது, நீதித் துறை மீதே நம்பிக்கை இல்லாமல் செய்யக்கூடிய செயல். அவர்களுக்குத் தூக்குத் தண்டனை கொடுத்தால்தான் நீதி நிலைக்கும் என்று கூறியுள்ளார்
tamil.oneindia.in

ஒரு வழியாக வல்லினம் வெளியாகிறது


 நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த 'வல்லினம்' திரைப்படம், பிப்ரவரி 28ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள்.
நகுல், மிருதுளா, அதுல் குல்கர்னி உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாரான படம் 'வல்லினம்'. 'ஈரம்' இயக்குநர் அறிவழகன் இயக்கியிருக்கிறார். தமன் இசையமைத்து இருக்கிறார். ஆஸ்கர் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
2011ல் தொடங்கப்பட்ட இப்படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வந்தது. 'ஈரம்' படத்தில் தண்ணீரை பின்னணியாக கொண்டு ஒரு பேய் கதையை இயக்கியிருந்த அறிவழகன், கூடைப்பந்து விளையாட்டினை பின்னணியாகக் கொண்டு 'வல்லினம்' இயக்கியிருக்கிறார். நகுல் இப்படத்தில் கூடைப்பந்து விளையாட்டு வீரராக நடித்திருக்கிறார்.
2013ம் ஆண்டு டிசம்பரில் இப்படம் சென்சார் செய்யப்பட்டு 'U' சான்றிதழ் பெற்றது. அதனைத் தொடர்ந்து 'இம்மாத வெளியீடு' என்று விளம்பரப்படுத்தப்பட்டு நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து எப்போது வெளியீடு என்று தகவல் வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில் தற்போது 'வல்லினம்' திரைப்படம் பிப்ரவரி 28ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. tamil.thehindu.com/
ஒரு வழியாக வல்லினம் வெளியாகிறது 

என்னோடு இருந்தால் பதவி கிடைக்காது- மு.க.அழகிரி பேச்சு


 என்னோடு இருந்தால் கட்சியில் பதவி கிடைக்காது என்று தி.மு.க. பிரமுகர் இல்ல விழாவில் மு.க.அழகிரி பேசினார்.
தென் மண்டல தி.மு.க. அமைப்புச் செயலாளராக இருந்த மு.க.அழகிரிக்கு பொதுவாக மேடைப் பேச்சில் ஆர்வம் கிடையாது. இதனாலேயே, கட்சிப் பொதுக்கூட்டங்களிலும், போராட்டங்களிலும் தேர்தல் பிரசாரத்திலும் அவர் அதிகம் பங்கேற்பதில்லை. ஆனால், தி.மு.க.வில் இருந்து தற்காலிக மாக நீக்கப்பட்ட பிறகு கட்சிப் பிரமுகர்கள் இல்ல விழாவில் கூட கலந்துகொண்டு பேசி வருகிறார் அழகிரி. 

“நிர்வாகிகளை எல்லாம் கட்சியில் இருந்து நீக்கிவிட்டால் எப்படி தேர்தலை எதிர்கொள்ள முடியும்?” என்று ஏற்கெனவே ஒரு திருமண விழாவில் பேசி பரபரப்பை ஏற்படுத்திய அவர், தற்போது கட்சிப் பதவி குறித்து கருத்தை வெளியிட்டுள்ளார்.

தில்லியை நோக்கி ராணுவப் படைகள் நகர்ந்த விவகாரத்தில் புதிய சர்ச்சை

தலைநகர் தில்லியை நோக்கி கடந்த 2012ஆம் ஆண்டு ராணுவப் படைகள் நகர்ந்ததற்கு, "இந்திய அரசின் மீது ராணுவத்துக்கு ஏற்பட்ட அவநம்பிக்கையும் ஒரு காரணமாக இருக்கலாம்' என்று ராணுவ நடவடிக்கைகளின் அப்போதைய தலைமை இயக்குநர் ஏ.கே. சௌத்ரி தற்போது தெரிவித்துள்ள குற்றச்சாட்டால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அவரது இந்தக் குற்றச்சாட்டை பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி, தேசிய பாதுகாப்புச் செயலர் சிவசங்கர் மேனன் ஆகியோர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
"தில்லியை நோக்கி ராணுவப் படைகள் நகர்ந்து வருவது அரசுக்கு வருதமளிப்பதால் அதை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்' என்று அப்போதைய பாதுகாப்புத்துறை செயலர் சசி காந்த் சர்மா, தலைமை இயக்குநர் ஜெனரல் ஏ.கே. சௌத்ரியிடம் கேட்டுக் கொண்டதாக தற்போது செய்திகள் வெளியாகின. இது குறித்து ஓய்வு பெற்ற ஏ.கே. சௌத்ரி பாட்னாவில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

WhatsApp க்கு Facebook கொடுத்த தொகை Too much பேஸ்புக் பங்குகள் சரிந்தது? கோடீஸ்வரர்களான பங்குதாரர்கள்.

வாஷிங்டன் : நிலையான தொலைபேசி பயன்படுத்தப்பட்ட காலத்தை விட, பேஜர், மொபைல் போன் என அடுத்தடுத்து அறிமுகப்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு சாதனங்கள், உள்ளங்கையில் உலகத்தை சுருங்கச்செய்தது. அதிலும் மொபைல் போன்களில் இன்டர்நெட் பயன்பாடு வந்த பிறகும், 3ஜி மொபைல்கள் வரத்தொடங்கிய பிறகும் தகவல் தொடர்பு அசுர வளர்ச்சி பெற்றது. இதையடுத்து வந்த ஸ்மார்ட் போன்களில் பிரதான அப்களாக இடம்பெற்றவை வாட்ஸ் அப், பேஸ்புக்தான். இதைப்போன்றே வி சாட் போன் அப்கள் அறிமுகமானாலும் அவை இந்த அளவுக்கு பிரபலம் ஆகவில்லை.இந்த நிலையில்தான், பேஸ் புக் நிறுவனம் வாட்ஸ்&அப் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய தகவல் பேஸ் புக் நிறுவனர் மார்க் ஜூகர்பர்க்கால் அறிவிக்கப்பட்டதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பேஸ்&புக், வாட்ஸ்&அப் பயன்படுத்துவோர் பரிமாறிக்கொண்ட, லைக் போட்ட அன்றைய ‘ஹாட் டாபிக்’ அதுவாகத்தான் இருந்தது. வாங்கியதும் அடிமா ட்டு விலைக்கு அல்ல... 19 பில்லியனுக்கு!. அதாவது 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி!.
இதைகேட்டதும் மலைத்துப்போன பொருளியல் நிபுணர்கள் பலர் ‘பேஸ் புக் கொடுத்த தொகை ரொம்பவும் அதிகம். இவ்வளவு கொட்டிக்கொடுக்கிற அளவுக்கு வாட்&அப் ஒன்றும் உச்சாணி கொம்பில் இல்லை’ என்று கமென்ட் அடித்தார்கள்.

பா.ம.க., அலம்பலால் பா.ஜ., அலறல் ?அன்புமணி, பா.ஜ., தலைவர்களிடம் சவால் !

'ஒற்றை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்கினால், கூட்டணிக்கு வர மாட்டோம்; தனித்து நின்று ஆறு தொகுதிகளில், எங்களால் வெற்றி பெற முடியும்; நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கும், தே.மு.தி.க.,வால், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது' என, பா.ம.க., நிறுவனர், ராமதாசின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான, அன்புமணி, பா.ஜ., தலைவர்களிடம் சவால் விட்டுள்ளார்.
அன்புமணியின் இந்த ஆவேசப் பேச்சால், பா.ஜ., கூட்டணியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பா.ம.க.,வின் இந்த கோபத்துக்கு, தே.மு.தி.க.,வுடன் நடந்த பேச்சுவார்த்தையும், அக்கட்சிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதுமே காரணம் என, கூறப்படுகிறது. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், இப்போது பா.ஜ.,வுடன் கூட்டு சேரும் முடிவில் இருக்கிறார். இதையடுத்து, பா.ஜ., தலைவர்களுடன், அவர் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இந்த விஷயம் தெரிந்ததும், பா.ம.க., தலைமை கடும் அதிருப்தி அடைந்துள்ளது. பா.ம.க., தரப்பில் இருந்து தொடர்ந்து அழைப்பு விடுக்கப்பட்டும், பா.ஜ., தலைவர்கள், தே.மு.தி.க., முடிவுக்காக காத்திருந்தனர். இதுக்கு தான் நான் அப்பவே சொன்னேன், தமிழ்நாட்டுல தொகுதி எண்ணிகையை அதிகரிக்க வேண்டும் என்று.

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி? 2 நாளில் அறிவிப்பு

ஐதராபாத்:தெலங்கானா தனி மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி நேற்று முன் தினம் ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து, ஆந்திர நிலைமை குறித்து மத்திய அரசுக்கு கவர்னர் நரசிம்மன் நேற்று அறிக்கை அனுப்பினார். அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்துவது குறித்து 2 நாளில் மத்திய அரசு அறிவிப்பு வெளியிடும் என தெரிகிறது.

ஆந்திராவை பிரித்து தெலங்கானா புதிய மாநிலம் உருவாக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலங்களவையிலும் இந்த மசோதா கடும் அமளிக்கிடையே நிறைவேறியுள்ளது. இன்று அல்லது நாளை இந்த மசோதா, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பின்னர், மத்திய அரசின் கெஜட்டில் இந்த மசோதா வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து, புதிய தெலங்கானா மாநிலம் உதயமாகும்.

இன்டர்நெட் மூலம் திருட்டு கார் விற்பனை : MBA பட்டதாரி வாலிபர்கள் 2 பேர் கைது

திருச்சியில் திருட்டு காரை ஓட்டிவந்த பட்டதாரி வாலிபர்கள் 2 பேர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து 5 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவான தொழிலதிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் அருகே ஆத்தூர், பிலிமிசை கிராமத்தை சேர்ந்தவர் நீலமேகம் (31). டிராவல்ஸ் அதிபர். இவர் கடந்த 11ம் தேதி காரில் குடும்பத்துடன் திருச்சி வெக்காளியம்மன் கோயிலுக்கு சாமி கும்பிட வந்தார். காரை கோயில் அருகே நிறுத்தி வைத்து விட்டு சாமிதரிசனம் செய்ய சென்றார். பின்னர் தரிசனம் முடிந்து வந்த போது நிறுத்தி இருந்த கார் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் உறையூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து காரை தேடிவந்தனர். மேலும் இது தொடர் பாக உதவி கமிஷனர் விஜயகுமார் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் கென்னடி தலைமையில் எஸ்ஐக்கள் கமலநாதன், செபாஸ்டின், அந்தோணி, தமிழரசன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து கார் திருடர்களை தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று காலை தனிப்படை போலீ சார் வயலூர் மெயின் ரோடு, ராமலிங்கநகர் பிரிவு ரோட்டில் வாகன சோத னை செய்தனர். அப்போது அந்த வழியே வந்த சொகுசு காரை மறித்து சோதனையிட்டபோது, அது திருட்டு கார் என்பதும், போலி ஆவணங்கள் தயாரித்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து காரை பறிமுதல் செய்த போலீசார், அதை ஓட்டி வந்த 2 பேரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரனை நடத்தினர். அதில் இருவரும் திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (24). பிஇ பட்டதாரி, அருண்குமார் (23) எம்பிஏ பட்டதாரி என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந் துள்ளது.

பெண்களை இழிவுபடுத்தினால் தண்டனை கொடுக்க முடியும்


பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை கண்டித்து சென்ற ஆண்டு புரட்சிகர அமைப்புகளின் சார்பில் இயக்கம் எடுக்கப்பட்டிருந்தது. அதற்கான வேன் பிரச்சாரத்திற்கு காவல்துறை ஆணையரிடம் அனுமதி வாங்க பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள் 4 பேர் தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். தனியார் பேருந்துகளின் கொள்ளை லாபத்திற்கு துணை போகும் வகையில் பேருந்து ஓட்டுனர், நடத்துனர்கள் மக்களை ஆடு, மாடுகளை போல நடத்துவது தொடர்கதையாகி விட்டது.
தோழர்கள் சென்ற தனியார் பேருந்தில் மக்களை அளவுக்கு அதிகமாக ஏற்றிக்கொண்டே, “உள்ளே போ, சோத்த தானே திங்கிற, என்ன அறிவில்லையா?” என மரியாதை குறைவாக நடத்துனர் பேசி கொண்டிருந்தார். அதை தோழர்கள் கண்டித்தனர். பலருக்கு முன்னிலையில் பெண்கள் தங்களை கண்டித்ததை அவமானமாக கருதிய நடத்துனரும். ஓட்டுனரும் ஆபாசமான வார்த்தைகளா, பாலியல் ரீதியில் பெண்களை இழிவுபடுத்தி பேசியும், தோழர்களை திட்டியும், செருப்பால் அடிப்பேன் என செருப்பை கழற்றினான்.

மீண்டும் கோர்ட்டாரின் குட்டு. மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்துக்கு தமிழக அரசு போட்ட தடை ரத்து


சென்னை : மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்துக்கு தமிழக அரசு விதித்த தடை உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திட்டத்திற்கு பொதுமக்கள், நாட்டின் முன்னேற்றத்திற்காக நீதிபதிகள் அனுமதி வழங்குவதாக கூறினர்.சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் சென்னை துறைமுகத்துக்கு சரக்குகளை எளிதாக லாரிகளில் கொண்டு செல்லும் வகையிலும் மதுரவாயல் - துறைமுகம் இடையே பறக்கும் சாலை அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. கடந்த 2008ம் ஆண்டு இந்த திட்டம் ரூ.1800 கோடியில் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது, கடந்த 2012ம் ஆண்டு  இந்த திட்டத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது.இந்த தடையை நீக்கக்கோரி, தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீண்ட நாட்களாக விசாரணைக்கு வரவில்லை. இதனால் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.வில்சன் ஆஜராகி, ‘‘பல கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட பறக்கும் சாலை திட்டம் கடந்த ஓராண்டாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசுதான் காரணம்.

வாழ்க்கை முழுதும் கட்சிகள் மாறிய பண்ருட்டி ! எந்தக் கட்சியில் பதவி கிடைக்கிறதோ அதை அனுபவித்துவிட்டு அடுத்த கட்சிக்கு


உடல்நிலை காரணமாக 2 மாதங்களுக்கு முன் அரசியலிலிருந்து முற்றிலுமாக ஓய்வுபெறப்போவதாக அறிவித்து தே.மு.தி.க.வின் அனைத்துப் பொறுப்புகளிலும் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், நேற்று (வியாழக்கிழமை) ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
76 வயதில் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு உழைக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
தமிழக அரசியல்வாதிகளில் சிலர் கடைசி வரை ஒரே கட்சியில் இருப்பதுண்டு. சிலரோ எந்தக் கட்சியில் பதவி கிடைக்கிறதோ அதை அனுபவித்துவிட்டு அடுத்த கட்சிக்கு தாவுவதுமுண்டு. இதிலே இரண்டாவது ரகம்தான் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன்.

குற்றங்கள் நிகழாத நாடோ, ஊரோ கிடையாது!': தே.மு.தி.க., புகாருக்கு முதல்வர் பதில் ! போர் என்றால் பொதுமக்களும் சாகத்தான் நேரிடும்.. சரித்திர வாக்குகள்...


சென்னை: ''தமிழகத்தில், கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது,'' என, சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் மோகன்ராஜ், குற்றம் சாட்டினார். அதற்கு, முதல்வர் ஜெயலலிதா, ''குற்றங்கள் நிகழாத, நாடோ, ஊரோ கிடையாது,'' என்றார்.
பட்ஜெட் மீது, சட்டசபை எதிர்க் கட்சி துணைத் தலைவரான, தே.மு.தி.க.,வை சேர்ந்த மோகன்ராஜ் பேசினார். அவ்வப்போது, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறுக்கிட்டு, பதில் அளித்தனர்.
விவாத விவரம்: மோகன்ராஜ்: சொத்து வழிகாட்டி மதிப்பை குறைக்க வேண்டும். தமிழகத்தில், கொலை, கொள்ளை, போன்றவை அதிகரித்துள்ளன. சட்டம் - ஒழுங்கை, முறையாக பராமரிக்க வேண்டும்.

ஏழு பேரையும் எம் பி வேட்பாளரா அறிவித்தாலும் ஆச்சரியமில்லை புரட்சி அம்மா ? எதிர்க்கட்சி கூட்டணியை கலைக்க ஜெ., அஸ்திரம்

தி.மு.க., - தே.மு.தி.க.,- காங்., கூட்டணி உருவானால், அ.தி.மு.க.,வின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்பதால், அத்தகைய கூட்டணி உருவாவதை தடுக்க, ராஜிவ் கொலையாளிகள் விடுதலை அஸ்திரத்தை, முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்தி உள்ளார்.
சட்டம் - ஒழுங்கை பராமரிப்பதில், முதல்வர் ஜெயலலிதா, உறுதியாக இருப்பார் என்பது, அனைவருடைய நம்பிக்கை. கடந்த காலங்களில், தமிழகத்தில், பெரும்பாலான கட்சிகள், விடுதலைப் புலிகளை ஆதரித்தபோது, அவர்களை ஜெயலலிதா, உறுதியாக எதிர்த்தார். இந்தியாவில், விடுதலைப் புலிகள் மீதான தடையை, நீட்டிக்க வேண்டும் என, வலியுறுத்தினார். எண்ணத்தில் மாற்றம்: இலங்கையில் நடந்த போரில், விடுதலைப் புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்ட பின், ஜெயலலிதாவின் எண்ணங்களில், மாற்றம் ஏற்பட்டது.

தர்மபுரி பஸ் எரிப்பு தூக்கு கைதிகளை (ADMK) விடுவிக்க ஜெயலலிதா இப்படி செய்கிறார்- விஜயதாரணி


சென்னை: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அதிமுகவினரை விடுவிப்பதற்காகவே இப்படி உள்நோக்கத்துடன் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க முதல்வர் ஜெயலலிதா முயலுகிறார் என்று சட்டசபை காங்கிரஸ் தலைவர் விஜயதாரணி கூறியுள்ளார். சென்னையில் நேற்று சட்டசபை வளாகத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த அரசாங்கம் உள்நோக்கத்தோடு எடுத்த முடிவுதான் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரையும் விடுவிப்பது என்பது. தர்மபுரி தூக்குத் தண்டனை கைதிகளை விடுவிப்பதற்காக ஜெ. இப்படி செய்கிறார்- விஜயதாரணி தர்மபுரி தூக்கு தண்டனை கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இது ஒரு முன் உதாரணமாக ஒரு டிரையல் கேஸ் நடத்த முயற்சி எடுத்தார்கள். இதுபோல பல்வேறு உள்நோக்கங்கள் இதில் மறைந்திருப்பதை பார்க்கிறோம். அந்த விதத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது, வரவேற்கத்தக்கது. விரைவில் இது தவறான ஒரு செயல், தவறான முன் உதாரணம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என்று நான் கருதுகிறேன் என்றார் இவர். tamil.oneindia.in

வியாழன், 20 பிப்ரவரி, 2014

கட்டிப்பிடி சாமியார் அமிர்தானந்தமயியின் தகிடுதத்தங்கள் ! நியாயம் கேட்பவர்க்கு இரும்பு கம்பிகளால் அடி !



கேரளாவைச் சேர்ந்த கட்டிப்பிடி சாமியார் அமிர் தானந்தமயியிடம் உதவியாள ராக இருந்த கெயில் ட்ரெட் வெல் என்ற காயத்ரி, ஹோலி ஹெல் (Holy Hell) என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளி யிட்டுள்ளார்.
அந்த புத்தகத் தில் அமிர்தானந்தமயியின் தகிடுதத்தங்கள் பலவற்றை யும் அம்ப லப்படுத்தி யுள்ளார். அமிர்தானந்தமயி ஆசிரமத்தில் பணத்தை தங்க மாக மாற்றி அவரது உற வினர்கள் எப்படியெல்லாம் செல் வச் செழிப்புடன் இருக்கின்றனர் என்றும், ஏதேனும் தவறு செய்தால் அமிர்தானந்தமயி அடிப்பது, கடிப்பது போன்ற தண்டனைகள் கொடுப்பார் என்றும் காயத்ரி குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன் அமிர்தானந்தமயியின் ஆண் சீடர்களால், தான் பாலியல் வன்கலவிக்கு உள்ளான தாகவும் கெயில் ட்ரெட் வெல் என்ற காயத்ரி தனது புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். 
viduthalai.in/
Swathanam Singh, 24, the Bihari youth who made an abortive attempt to attack Mata Amritanandamayi at her ashram in Vallikavu, a coastal village in Kerala's Kollam district, was found dead in mysterious circumstances late on Saturday night in his cell at the government mental hospital in Thiruvananthapuram.

பாலுமகேந்திரா என்கிற மகத்தான மனிதரைப் பற்றி அர்ச்சனா என்கிற நடிகைக்குள் இருக்கிற சுதா

IMG-20140219-WA0001அண்மையில் மறைந்த தமிழின் முக்கியமான திரை இயக்குநர்களில் ஒருவரான திரு.பாலு மகேந்திரா குறித்து சுகா எழுதியிருக்கும் கட்டுரை இது. சொல்வனத்தின் நூறாவது இதழ் வரும் வார இறுதியில் வெளியாகும்.
கைபேசியில் அவரது எண்ணுடன் கம்பீரமான அவரது பழைய கருப்பு வெள்ளை புகைப்படத்தை வைத்திருப்பேன். அவர் அழைக்கும்போது ‘மூன்றாம் பிறை’யின் ‘பூங்காற்று புதிதானது’ பாடலின் துவக்க இசை ஒலிக்கும். அதை முழுமையாக ஒலிக்க ஒருமுறையும் விட்டதில்லை. ’ஸார்’ என்பேன். நிதானமான குரலில் ‘நான் பாலு பேசறேன். உன்னால ஒரு பத்து நிமிஷம் வந்துட்டு போக முடியுமா? என்பார். ‘கிளம்பி வாடா’ என்று சொல்வதற்கான முழு உரிமையும் கொண்ட அந்த மனிதரின் அடிப்படையான பண்பு, இது. அழைத்த சில நிமிடங்களில் அவர் முன் போய் நிற்பேன். படித்துக் கொண்டோ, எழுதிக் கொண்டோ இருப்பவர் சட்டென்று அதை ஏறக்கட்டிவிட்டு, ‘உக்காரு. ப்ளாக் டீ சாப்பிடலாமா?’ என்பார். ‘ஏதும் முக்கியமான விஷயமா, ஸார்?’ என்று கேட்டால், ‘உன்னப் பாக்கணும் போல இருந்துச்சு. அதான்’ என்பார்.
இருபத்தோரு ஆண்டுகளாக அவரது வீடு, அலுவலகம் இருக்கும் பகுதியிலேயே வசித்து வருகிறேன். எந்த நேரமும் அவர் அழைத்தால் ஓடிப் போய் நிற்க வேண்டும் என்கிற ஒரே காரணத்தைத் தவிர வேறில்லை.

தெலங்கானா தனி மாநில மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது

தெலங்கானா தனி மாநில மசோதா ராஜ்யசபாவில் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. ஓட்டெடுப்புக்கு முன்பாக பேசிய பா.ஜ., மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, சீமாந்திரா பகுதிக்கு 10 ஆண்டுகள் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும், சீமாந்திரா பகுதியின் புதிய தலைநகரம் குறித்து அறிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இதில், சீமாந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது தொடர்பான திருத்தத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. இதன்படி, சீமாந்திரா பகுதிக்கு 5 ஆண்டுகள் சிறப்பு அந்தஸ்து அளிக்க மத்திய அரசு முன்வந்தது. பின்னர் மசோதா குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேறியது.
சீமாந்திரா பகுதிக்கு 5 வருடங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறினார். இரு மாநிலங்களுக்கும் 6 அம்ச திட்டங்களை அறிவித்த பிரதமர் மன்மோகன் சிங், விரைவாக தெலங்கானா அமைக்கவும், சீமாந்திரா வளர்ச்சிக்கும் திட்டம் உதவும் என்றார். குறிப்பாக ராயலசீமா, வடகடலோர ஆந்திர மாவட்டங்களுக்கு சிறப்புத் திட்டம் என்றும், போலாவரம் பாசனத் திட்டம் திட்டமிட்டபடி செயல்படுத்தப்படும் என்றும் கூறினார். nakkheeran.in/

கலைஞருக்கு பாரத ரத்னா!- நாடாளுமன்றத்தில் திமுக (ஸ்டாலின் தரப்பு ?) கோரிக்கை !


சென்னை: திமுக தலைவர் மு கருணாநிதிக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என மக்களவையில் திமுக எம்பி கோரிக்கை வைத்துள்ளார். திமுகவின் தர்மபுரி தொகுதி எம்.பி ஆர்.தாமரைசெல்வன், 377 விதியின் கீழ் இந்தக் கோரிக்கையை எழுப்பினார். இது குறித்து அவர் தாக்கல் செய்த எழுத்துப்பூர்வமான அறிக்கையில், "கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்பது உலகம் முழுவதும் இருக்கும் பத்து கோடி தமிழர்களின் கோரிக்கை. கருணாநிதிக்கு பாரத ரத்னா!- நாடாளுமன்றத்தில் திமுக கோரிக்கை டாக்டர் கலைஞர் என அன்புடன் அழைக்கப்படும் கருணாநிதி தம் 14 வயதில் பொதுமக்களுக்கு தொண்டு செய்ய அரசியலுக்கு வந்தவர். ஸ்டாலின் பொறுமை இழந்துவிட்டார் ,அடுத்த முறை திமுக ஆட்சிக்கு வரும்போது நிச்சயமாக கலைஞர் அரசியலில் ஒய்வு பெற்று வாஜ்பாயி மாதிரி ஒதுங்கி இருக்கவேண்டும் என்று காய் நகர்த்துகிறார்.அழகிரியின் கோபத்தில் நியாயம் இருக்கிறது!

சுப்ரமணியன் சுவாமி:ஜெயலலிதா ஒரு சினிமா நடிகை. அவருக்கு சட்டங்கள் தெரியாது.


ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிப்பது என்ற தமிழக அரசின் முடிவை, பாஜக தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக வதோதராவில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறும்போது,  "ஜெயலலிதா ஒரு சினிமா நடிகை. அவருக்கு சட்டங்கள் தெரியாது. சட்டம் என்ன சொல்கிறது என்பது பற்றி கவலைப்படாமல், அவர் இப்படி முடிவெடுத்திருக்கிறார்.
ஜெயலலிதா இத்தகைய முடிவை எடுப்பதைத் தடுப்பதற்கு, மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தேவை எனில், அவர் மீது நடவடிக்கையும் மேற்கொள்ளலாம்" என்றார் சுப்பிரமணியன் சுவாமி.
இதனிடையே, பாஜகவின் மற்றொரு தலைவரான ஷானவாஸ் ஹுசைன் கூறும்போது, "தமிழக அரசு இந்த விவகாரத்தில் பல்வெறு தவறுகளைச் செய்துவிட்டது. இது மிகவும் முக்கியமான விவகாரம் என்பதுடன், இது தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. மக்களுக்கு நீதித் துறை மீது நம்பிக்கை உள்ளது. அனைவருக்குமே சமமான நீதி கிடைக்க வேண்டும்" என்றார்.

கேயார் : வீரம், ஜில்லா ரெண்டுமே மகா நஷ்டம்... பத்துப் பைசா தேறல!- உண்மையை அம்பலப்படுத்திய கேயார்

பெரிய நடிகர்கள் படம்.. வசூல் முன்னே பின்னே இருந்தாலும் ஓஹோன்னு பாராட்டிப் பேசிடலாம்.. எதுக்கு தொல்லை..." -இந்த எண்ணம் சினிமாக்காரர்களுக்கு இருப்பது புரிந்து கொள்ளக்கூடியதே. பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் இருப்பதை என்னவென்பது? சினிமாக்காரர்கள் பெரிய நடிகர்கள் பற்றி என்ன சொன்னாலும் அதை இன்னும் மிகைப்படுத்தி எழுதுவது சிலருக்கு வாடிக்கையாகிவிட்டது.
விஜய் படம் நண்பன் தொடங்கி, ஜில்லா வரை நூறு கோடி வசூலித்துவிட்டன என கூசாமல் தயாரிப்பு அல்லது நடிகர் தரப்பு சொல்வதை நம்பி அப்படியே எழுதியும் வருகிறார்கள். அதில் உண்மை இருக்கிறதா என குறைந்தபட்சம் யாரும் ஆராயக்கூட முனைவதில்லை.
அஜீத் படத்துக்கும் அப்படித்தான். உலகம் முழுக்க வெறும் 800 அரங்குகளில் வெளியான ஆரம்பம் படம் 132 கோடியை வசூலித்துக் கொட்டிவிட்டதென புள்ளிவிவரம் போட்டிருந்தார்கள்கள் சிலர்.
இப்போது பொங்கலுக்கு வெளியான ஜில்லா, வீரம் படங்கள் விஷயத்திலும் இதுதான் நடந்தது.

சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை! ராஜிவ் வழக்கு: 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவு தடை !


டெல்லி: ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரை தமிழக அரசு விடுதலை செய்யும் முடிவுக்கு உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது. 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இருப்பினும் இதில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததோடு, ஆயுள் தண்டனையாக குறைத்தது. மேலும், அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது. இந்நிலையில் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இந்த முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும்

WhatsApp பை 16 பில்லியன் டாலர்களுக்கு ‘ஃபேஸ்புக்’ நிறுவனம் வாங்குகிறது

காலத்தின் நவீனமயத்துக்கு ஏற்ப இந்த பரந்த உலகின் தகவல் தொடர்பு சாதனங்கள் மிகவும் குறுகிப்போய் கைபேசியின் துணையால் உள்ளங்கையில் உலகம் என்ற அளவுக்கு சுருங்கி விட்டது. ’பேஜர்’, ’செல்போன்’, எதிர் முனையில் இருப்பவரின்  முகத்தை பார்த்தபடியே பேசும் திறன் கொண்ட ‘3-ஜி செல்போன்’ ஆகியவற்றின் மூலம் ‘இ-மெயில்’, ’ஃபேஸ்புக்’, ’ட்விட்டர்’ போன்ற இணையங்களின் வாயிலாக உலகின் கடைக்கோடியில் உள்ள செய்திகளையும் நாம் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிறது. இந்த நவீனமயத்தின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியாக 'வாட்ஸேஎஅப்’ என்ற உபகரனம் இன்றைய இளைஞர்களுக்கு வாய்த்த வரப்பிரசாதமாக கருதப்படுகிறது. இதன் மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை எவ்வித செலவுமின்றி, உலகின் எந்த மூலையில் உள்ள நபருக்கும் அரை நொடிக்குள் அனுப்பி விடலாம் என்பதால், இன்றைய இளைய தலைமுறையினரில் பெரும்பாலானோர் தங்களது செல்போன்களில் 'வாட்ஸேஎஅப்’ உபகரணத்தை பதிவிறக்கம் (டவுன்லோட்) செய்து வைத்துள்ளனர்.

14 சீட் ? விஜயகாந்த் கூட்டணி நாடகம் நடத்தி திமுகவிடம் அதிக சீட் பெற முயற்சி ?

'எங்களுக்கு, 14 தொகுதிகளை ஒதுக்க வேண்டும்; இல்லையெனில், பா.ஜ., கூட்டணிக்கு சென்று விடுவோம்' என, தி.மு.க.,வுக்கு, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் நிபந்தனை விதித்துள்ளார். திரைமறைவு: உள்ளாட்சித் தேர்தலில், 10 சதவீத ஓட்டுகளைப் பெற்றதால், விஜயகாந்தின், தே.மு.தி.க.,விற்கு, இந்த தேர்தலில், மவுசு உருவாகியுள்ளது. அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்க, தி.மு.க., - பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இது தொடர்பாக, திரைமறைவு பேச்சுவார்த்தைகளையும் நடத்தி வருகின்றன. பா.ஜ., கூட்டணியில், ஏற்கனவே, ம.தி.மு.க., - -ஐ.ஜே.கே., -புதிய நீதிக்கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, கொங்குநாடு முன்னேற்ற கழகம் போன்றவை உள்ளன. பா.ம.க., மற்றும் என்.ஆர்., காங்., கட்சியை கூட்டணியில் சேர்க்க பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. அத்துடன், தே.மு.தி.க.,வையும், கூட்டணிக்கு இழுக்க முயற்சித்தன. ஆனால், இதற்கு, விஜயகாந்த் தரப்பில், சரியான பதில் தரப்படாததால், 'வந்தால் வரட்டும்... போனால் போகட்டும்...' என்ற, ரீதியில், பா.ஜ.,வினர் வெறுப்பில் உள்ளனர். பா.ஜ., கூட்டணியில் சேர்ந்தால், அதில், ஏற்கனவே இடம் பெற்றுள்ள, ம.தி.மு.க., மற்றும் இனி இடம் பெற உள்ள, பா.ம.க.,வின் ஓட்டுகள், தங்கள் கட்சி வேட்பாளருக்கு, முழுமையாகக் கிடைக்காது என, விஜயகாந்த் நம்புகிறார்.   கேட்ட சீட் கொடுத்தி்டடா பிரேமலதா அம்மையாருக்கு கலைஞர் உத்தமராகவும் கனிமொழி கண்ணியமிக்கராகவும் தளபதி் தன்னிகரில்லா தலைவராகவும் மாறிடுவாங்க

ராஜீவ் கொலை கைதிகளுக்கு தூக்கு ரத்து: ப.சிதம்பரம் கருத்து

புதுடெல்லி,
ராஜீவ் காந்தி கொலை கைதிகளுக்கு தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது பற்றி எனக்கு மகிழ்ச்சியா? இல்லையா? என்பது பற்றி கூற வேண்டியது இல்லை என்று ப.சிதம்பரம் கூறினார். துக்கம் நீடிக்கும்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை கைதிகளுக்கு தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியதாவது:–
ராஜீவ் காந்தியை இழந்த துக்கம் எனக்கு எப்போதும் இருக்கும். சுப்ரீம் கோர்ட்டு 3 பேரையும் நிரபராதிகள் என்று கூறவில்லை. அது ஒரு முக்கிய அம்சம். அவர்கள் விடுதலை செய்யப்பட்டால், 20, 25 ஆண்டுகள் சுதந்திரமாக நடமாடுவார்கள்.
அதுதான் அவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை என்று சுப்ரீம் கோர்ட்டு கருதினால், அப்படியே ஆகட்டும். இதில் எனக்கு மகிழ்ச்சியா? மகிழ்ச்சி இல்லையா? என்று நான் கூற வேண்டியது இல்லை.

சோவியத் யூனியன் போன்று எல்லா தொழில்களையும் தமிழ்நாடு அரசே ஏற்று நடத்தும்? தா பா மகிழ்ச்சி ?

நேற்று வெளியான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில், அரசே நடத்தும், 'அம்மா' திரையரங்குகள் துவங்கப்படும் என்ற, அறிவிப்பு, கம்யூனிஸ்ட் நாடாக இருந்த, சோவியத் யூனியனைப் போல் தமிழகம் மாறி வருகிறதோ என்ற, சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது மட்டுமில்லாமல், 'அம்மா' பயணியர் தங்கும் விடுதிகள், 'அம்மா' 20 லிட்டர் கேன் குடிநீர் என்ற, திட்டங்களையும் அறிவித்து, சென்னை மாநகராட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சிகள் அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள தாக்கமோ, என்னவோ, இந்த ஆட்சியில், 'அம்மா' உணவகம், 'அம்மா' மருந்தகம், 'அம்மா' குடிநீர், 'அம்மா' காய்கறி கடை என, புதிய தொழில்களை துவங்குவதில் ஜெயலலிதா முனைப்பு காட்டி வருகிறார். கம்யூனிஸ்ட் நாடாக இருந்த சோவியத் யூனியனில், இதே போல், பெரும்பாலான தொழில்களை அரசே நடத்தி வந்தது. அந்த நாட்டு மக்களுக்கு உணவு முதல், மது வரை, அனைத்து பொருட்களும் கட்டுப்பாட்டு விலையில், அரசு வழங்கி வந்தது. இறுதியில் பொருளாதார கொள்கை தோல்வியால், கடந்த 1991ல், அந்த நாடே சின்னாபின்னமானது. அம்மா இலவச செய்திப் பத்திரிக்கையும் வரப் போகுதாம் ...அப்படியே வரலாற்றுல பின் நோக்கி போய் சோவியத் யுனியன்ல்ல இருந்து ஹிட்லர் காலத்துக்கு போயிரப்போகுது தமிழ்நாடு இல்ல ஏற்க்கனவே போயிருச்சா ?

புதன், 19 பிப்ரவரி, 2014

Traffic ராமசாமிக்கு இருக்கிற வீரம் இதர தமிழனுக்கு இல்லையா ? கலைஞர் கேள்வி


  

அம்மா மெஸ், அம்மா தண்ணீர், அம்மா காய்கறிகடை, அம்மா ஐஸ்க்ரீம்ஸ்'' அம்மா சுண்டல் !

அம்மா மெஸ், அம்மா தண்ணீர், அம்மா காய்கறிகடை, அம்மா கேபிள், அம்மா மெடிக்கல்ஸை தொடர்ந்து அம்மா தியேட்டர் கூட வரப்போவதாக கிசுகிசுக்கிறார்கள்.
மாண்புமிகு அம்மாவின் பொற்கால ஆட்சியில் இதுபோல வேறு என்னென்ன கொண்டுவரலாம்.
*அழகு மங்கையர் வாழ்வில் அல்லல்கள் நீக்கும் ''அம்மா ப்யூட்டி பார்லர்''
*வறுமையோடு மல்லுக்கட்டும் ஏழை எழுத்தாளர்கள் வாழ்வில் ஒளியேற்றும் ''அம்மா பதிப்பகம்''
*சரக்குக்கு சைட் டிஷ் வாங்க முடியாமல் தவிக்கும் ஏழைக்குடிமகன்கள் நலம் பெற ''அம்மா சுண்டல் மற்றும் மிச்சர் கடை'
*வெயில்காலமென்பதால் ஜில்லுனு குளிக்க ஆண்பெண் இருபாலருக்குமான ஜிலுஜிலு ''அம்மா நீச்சல் குளம்''
*நாளைய வாக்களர்களான இன்றைய குழந்தைகளை கவரும் வகையில் ''அம்மா ஐஸ்க்ரீம்ஸ்'
*அழகழகான கம்மல்கள், ஜோரான வளையல்கள் மினுமினுக்கும் மூக்குத்திகள் வாங்க ''அம்மா ஃபேன்ஸி ஸ்டோர்ஸ்'
வாலிப வயோதிப அன்பர்களின் ஏக்கம் போக்கும் அம்மா லேகியம் என்று   சொல்லாதவரைக்கும் சரிதான் 

கபில்சிபல் : உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு ஏற்கும்:ராஜீவ் கொலை வழக்கு,


இதுபோன்ற தீர்ப்புகள் தீவிரவாதிகளுக்கு சாதகமாகி விடக்கூடாது. நான் இதை யாருக்கும் எதிராக சொல்லவில்லை. அப்சல் குரு தூக்கிலிடப்பட வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வந்த பா.ஜ.க.வினர், ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவர் மீதான தூக்கு தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது தொடர்பாக மத்திய மந்திரி கபில் சிபல் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வருமாறு:-
ராஜீவ் காந்தி கொலையில் ஈடுபட்டவர்களுக்கு எவ்வித சலுகையும் அளிக்கப்படக் கூடாது என்பதே அட்டர்னி ஜெனரலின் வாதமாக இருந்தது. ஆனால் தற்போது நீதிமன்றம் ஒரு முடிவை எடுத்து தீர்ப்பை அறிவித்துள்ளது. விருப்பம் இருக்கிறதோ இல்லையோ நீதிமன்ற தீர்ப்பை மதித்து நடந்தாக வேண்டும். எனவே மத்திய அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று நடக்கும்.

IBM போன்ற IT துறை ஊழியர்கள் தாம் எத்தகைய அபாயத்தில் இருக்கிறோம் என்பதை ......


ஐ.பி.எம் ஆட்குறைப்பு
பிப்ரவரி 12-ம் தேதி, புதன் கிழமை காலை. பெங்களுரு ஐ.பி.எம் நிறுவனம் கிட்டத்தட்ட துக்க மாளிகையாகவே மாறி விட்டது. அந்நிறுவனத்தின் கணினி தொழில்நுட்ப பிரிவில்  பணிபுரிந்து வந்த சுமார் 40  ஊழியர்கள் இரண்டே மணி நேரத்தில் வீட்டுக்கு அனுப்பட்டார்கள். மனிதவள நடவடிக்கை (Resource Action) எனப்படும் இந்த பெரும் வேலை நீக்க நடவடிக்கை வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து, ஐ.பி.எம் இந்தியாவின் பல்வேறு கிளைகளிலிருந்து நூற்றுக் கணக்கான பேர் வேலையில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர்.
ஐ.பி.எம் ஆட்குறைப்பு
காலையில் பல கனவுகளுடனும், அடுத்த மாத கடன் தவணைகளை பற்றிய கவலைகளுடனும், அன்றைய வேலைக்கான திட்டங்களுடனும், நிறுவனத்தினுள் நுழைந்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. இரண்டு மணி நேரத்துக்குள், அவர்கள் வைத்திருக்கும் அலுவலகம் சார்ந்த மடிக்கணிணி, அடையாள அட்டை இன்ன பிறவற்றை பிடுங்கி கொண்டு மூன்று மாத அடிப்படை மாத ஊதியத்தை (6 வார முழு சம்பளம்) வங்கி காசோலையாக கொடுத்து அவர்கள் வெளியே அனுப்பி வைக்கப்பட்டனர்.  இத்தனை நாள் நிறுவனத்திற்காக தூக்கம் துறந்து, உணவை மறந்து, குடும்ப பொறுப்புகளை மறுத்து அல்லும் பகலும் செய்த பணிகள் மதிப்பின்றி குப்பை தொட்டியில் வீசப்பட்டு விட்டன.

தீண்டாமை! புத்த மதத்திற்கு மாறும் தாழ்த்தப்பட்டோர் ! சேரிக்குள் நுழையாத தேர் : அரசு – ஆதிக்க சாதிவெறியர்கள் கூட்டு !

மதம் மாறும் முடிவு
மதம் மாறும் முடிவை பத்திரிகையாளர்களுக்கு அறிவிக்கும் சேஷசமுத்திரம் தாழ்த்தப்பட்டோர்
மிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் சங்கராபுரத்திற்கு அருகே அமைந்துள்ள அகரம் சேஷசமுத்திரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டாமைக் கொடுமையின் காரணமாகப் புத்த மதத்திற்கு மாறப் போவதாக அறிவித்துள்ளனர். இக்கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதிவெறியர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது இழைத்து வரும் தீண்டாமைக் கொடுமைகளுள் முக்கியமானது அவர்களின் வழிபாட்டு உரிமையை மறுப்பதாகும். “பொதுக் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டோர் நுழைந்து வழிபடுவதற்கு உரிமை கிடையாது. அக்கோவிலின் தேர் சேரிக்குள் நுழையாது” என அக்கிராமத்தில் இன்று வரையிலும் தீண்டாமை பச்சையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தமிழக போலீசின் அட்டூழியம் : சமூகத்திற்கு விடப்படும் சவால்!!


தமீம் அன்சாரிஅச்சிறுவனை அடித்து உதைத்து, அவனது வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டி சக போலீசார் முன்னிலையிலேயே அவனது தொண்டைக் குழியில் சுட்டுள்ளான்.சென்னை மாநகர போலீசு எல்லைக்குட்பட்ட நீலாங்கரை (ஜெ-8) போலீசு நிலையத்தின் குற்றப்பிரிவு ஆய்வாளரான புஷ்பராஜ், வெட்டுவாங்கேணி மகாத்மா காந்தி நகரில் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டதற்காக, சந்தேகத்தின் பேரில் தமீம் அன்சாரி என்ற 14வயது சிறுவனை சனவரி 7-ஆம் தேதியன்று இரவில் பிடித்துவந்து நீலாங்கரை போலீசு நிலையத்தில் மிருகத்தனமாக வதைத்துள்ளான். தந்தையை இழந்து படிக்க வசதியற்ற நிலையில் விதவைத்தாயுடன் ஒரு உணவகத்தில் பணியாற்றிவந்த அந்த ஏழைச் சிறுவன், தனக்கும் திருட்டுக்கும் சம்பந்தமில்லை என்று கெஞ்சியும்கூட அவனைச் சட்டவிரோதமாக கொட்டடியில் அடைத்து வைத்துள்ளான். பின்னர் 8-ஆம் தேதியன்று பிற்பகலில் அச்சிறுவனை அடித்து உதைத்து, அவனது வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டி சக போலீசார் முன்னிலையிலேயே அவனது தொண்டைக் குழியில் சுட்டுள்ளான். இரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த அச்சிறுவன், பின்னர் போலீசாரால் பெரும்பாக்கத்திலுள்ள குளோபல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுத் தீவிர சிகிச்சைப் பிரிவில் கிடத்தப்பட்டுள்ளான்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமீம் அன்சாரி.

நளினி, பேரறிவாளன், முருகன், சாந்தன் விடுதலை : ஜெயலலிதா அறிவிப்பு

இன்று தமிழக சட்டப்பேரவை கூடியதும்,  முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோர் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
சிறையில் உள்ள ஜெயக்குமார், ஜெயச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய மூவரும் விடுதலை செய்யப்படுவார்கள் 
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.  இந்நிலையில்  நளினிக்கு தூக்கு ரத்து ஆகி ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.    நேற்று, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கும் தூக்கு ரத்து ஆனது.  
மத்திய, மாநில அரசுகள் முடிவெடுத்தால் இவர்களை விடுதலை செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடியதும்,  பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரையும் விடுதலை செய்வது குறித்து முடிவு செய்து,  வேலூர் சிறையில் உள்ள மூவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா.

தங்கம் பயன்பாட்டில் இந்தியாவை விஞ்சியது சீனா


மும்பை: 'சென்ற, 2013ம் ஆண்டில், தங்கம் பயன்பாட்டில், முதன்முறையாக, இந்தியாவை விஞ்சி, சீனா சாதனை படைத்துள்ளது' என, உலக தங்க கவுன்சில் (டபிள்யூ.ஜி.சி.,) தெரிவித்துள்ளது.
மதிப்பீட்டு ஆண்டில், இந்தியாவில், தங்கத்திற்கான தேவை, 2012ம் ஆண்டை காட்டிலும், 13 சதவீதம் அதிகரித்து, 864 டன்னிலிருந்து, 975 டன்னாக உயர்ந்துள்ளது. அதேசமயம், சீனாவில், இதன் பயன்பாடு, 1,065.8 டன்னாக அதிகரித்துள்ளது. 2012ல், சீனாவில் ஒட்டு மொத்த தங்கத்திற்கான தேவை, 806.8 டன் என்ற அளவிலேயே இருந்தது. நாட்டின், நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதன் ஒரு பகுதியாக, தங்கம் மற்றும் ஆபரணங்கள் இறக்குமதிக்கு, சுங்க வரி அதிகரிப்பு மற்றும் தங்க பதக்கங்கள் மற்றும் தங்க காசுகள் இறக்குமதிக்கு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.ன் மீது ஆசை அதிகம்தான். அதனால்தான், தங்கத்தின் பயன்பாடும் அங்கு அதிகம். இந்தியாவை விட சீனாவின் ஜனத்தொகை அதிகம்  இதில் வியப்படைய எதுவும் கிடையாது. தங்கத்தின் மீது (உலக) மக்களுக்கு எப்போது மோகம் குறைகிறதோ அப்போதுதான் உலகின்  பொருளாதாரம் சீரடையும்

கருணாநிதியை சந்திக்கிறார் அந்தோணி: தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி மீண்டும் மலருமா?

'வேண்டாம்... வேண்டாம்... உங்கள் உறவு' என, காங்கிரசை, தி.மு.க., ஓரம் கட்டி வந்தாலும், '10 வருட பந்தத்தை, பாசத்தை எளிதில் விட்டுவிட முடியுமா' என, அந்தக் கட்சியுடன், லோக்சபா தேர்தலில், கூட்டணி சேர துடிக்கிறது காங்கிரஸ்.
அதனால், தி.மு.க., 'நோ என்ட்ரி' போர்டு போட்டாலும் பரவாயில்லை என, அதை ஒதுக்கி தள்ளி விட்டு, அக்கட்சித் தலைவர், கருணாநிதியை சந்திக்க, 22ம் தேதி, சென்னை வருகிறார், காங்கிரஸ் மேலிட தலைவரும், மத்திய அமைச்சருமான, ஏ.கே.அந்தோணி. அப்போது, கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேசப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மதகஜராஜா ஒருவழியாக வெளிவருகிறது Better late than never

விஷாலின் 'மதகஜராஜா' படம் சர்ச்சைகளில் சிக்கி நீண்டகாலமாக வெளிவராமல் முடங்கி கிடக்கிறது. விஷால் கதாநாயகனாகவும் அஞ்சலி, வரலட்சுமி நாயகிகளாகவும் நடித்துள்ளனர். சுந்தர்.சி இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பிறகு அதில் இருந்து பொங்கலுக்கு வெளிவர இருந்தது. விஷாலே இப்படத்தை வாங்கி வெளியிட முன்வந்தார். ஆனால் மீண்டும் பிரச்சினைகள் முளைத்தன. இதனால் விரக்தியான விஷால் அப்படத்தை ரிலீஸ் செய்யும் முடிவை கைவிட்டார். இந்த படத்தை வெளிக்கொண்டுவர தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தைகள் நடந்தன. தற்போது இப்பிரச்சினையில் தீர்வு ஏற்பட்டுள்ளது. வருகிற 7–ந்தேதி தமிழகம் முழுவதும் இப்படம் ரிலீசாகிறது.  மதகஜராஜா ஒருவழியாக வெளிவருகிறது 

பதிப்பாளர் பத்ரிக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் அச்சுறுத்தல் ? புத்தகங்களை பார்த்து பயப்படும் மதவாதிகள்


தஸ்லிமா நஸ்ரினின் லஜ்ஜா குறித்து...

கிழக்கு பதிப்பகம், வங்கதேசப் பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் எழுதியுள்ள லஜ்ஜா என்ற நாவலைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.

16-02-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று என் செல்பேசியில் ஒருவர் தொடர்புகொண்டு பேச முயற்சி செய்துள்ளார். ஆனால் நான் அப்போது தில்லி புத்தகக் கண்காட்சியில் ஒரு கருத்தரங்கில் இருந்தேன். அதனால் தொலைப்பேசியை எடுக்கவில்லை. அதே நபர் பின்னர் டயல் ஃபார் புக்ஸ் எண்ணான 94459-01234-ஐத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அதன் சுருக்கம் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டது:
இன்று தமிழ்நாடு முஸ்லிம் கழகம் (sic) என்ற அமைப்பிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது. எக்மோரிலிருந்து பேசுவதாக சொன்னார்கள்.

“லஜ்ஜா புத்தகத்தை நீங்கள் போட்டிருக்கக்கூடாது. அது இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது. அதில் உள்ளவை எல்லாமே பொய். இதன் பின்விளைவுகள் கடுமையாக இருக்கும். எனவே அந்த லஜ்ஜா புத்தகத்தை இனி நீங்கள் பதிப்பிக்கக்கூடாது” என்றார்கள்.

தெலுங்கானா மசோதா: தி.மு.க. வெளிநடப்பு

தெலுங்கானா மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாராளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர், 15 நிமிடங்கள் கழித்து, அவைக்கு திரும்பினர். அப்போது, குரல் ஓட்டெடுப்பு மூலம் மசோதா நிறைவேறிக் கொண்டிருந்தது.இதுகுறித்து தி.மு.க. பாராளுமன்றக் குழுத்தலைவர் டி.ஆர்.பாலு கூறுகையில், ‘தெலுங்கானா என்பது எங்கள் தலைவர் கலைஞர் உருவாக்கிய மாநில சுயாட்சிக் கொள்கைக்கு எதிரானது. மசோதா நிறைவேற்றப்பட்ட விதம் குறித்து சபாநாயகரிடம் எங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தோம். இந்த நடைமுறை பற்றி விவாதிக்க வேண்டும் என்று அனுமதி கேட்டோம். அவர் எங்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளவில்லை’ என்றா nakkheeran.in

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

ஞானதேசிகன்: ராஜீவ் காந்திக்காகவும் பலியான 18 தமிழர்களுக்காகவும் கண்ணீர் !


 தமிழக காங். தலைவர் ஞானதேசிகன்
ராஜீவ் கொலையாளிகள் மூவரும் குற்றமற்றவர்கள் என்ற ரீதியில் சில அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் பிரச்சாரத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "ராஜீவ் கொலையாளிகளான சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு வழங்கிய தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
11 ஆண்டுகாலம் கருணை மனுவை பரிசீலிப்பதற்கு இந்திய ஜனாதிபதி எடுத்துக் கொண்ட அந்த காலம் மிக அதிகம் என கருத்தில் கொண்டு இந்தத் தீர்ப்பு வந்துள்ளது.
மூன்று பேரும் குற்றவாளிகள் அல்ல என்று எவரும் சொல்லவில்லை.

பேரறிவாளன் தந்தை குயில்தாசன் கோரிக்கை : விரைவில் விடுதலை செய்ய வேண்டும்


கிருஷ்ணகிரி: தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்ட பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோரை தமிழக அரசு விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் கோரிக்கை விடுத்துள்ளார். கிருஷ்ணகிரியில் தமது மகள் வீட்டில் வசித்து வரும் 73 வயதான குயில்தாசன் என்ற ஞானசேகரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த தீர்ப்பு மூலம் வாய்மையே வெல்லும் என்பதை நாங்கள் உணர்கிறோம் எனினும் இது காலம் கடந்த பலன். எங்களுக்கு நீதிமன்றத்தின் மீதும் சட்டத்தின் மீதும் நம்பிக்கை இருந்தது. பெரியார் கொள்கையில் பற்று கொண்ட நாங்கள் விடுதலை ஆதரவாளவர் ஆக இருந்ததால் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விசாரணை செய்ய வேண்டும் என கூறி பேரறிவாளனை அழைத்து சென்று பேட்டரி வைத்திருந்ததாக பொய் வழக்கில் சிக்க வைத்தனர்.

குற்றவாளியே நீதிபதியை நியமிக்கும் சிதம்பரம் தில்லை கோவில் வழக்கு

தில்லைக் கோயிலை தீட்சிதர்களின் தனிச்சொத்தாக ஒப்படைத்துள்ள உச்சநீதிமன்றத்தின் பார்ப்பனத் தீர்ப்பை எதிர்த்து 6.1.2014 அன்று சென்னை அண்ணா சாலையிலுள்ள பெரியார் சிலை முன்பாக மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
சென்னை உயர் நீதிமன்ற அமர்வின் இறுதி தீர்ப்பின்படி 2009 -ஆம் ஆண்டில் இந்து அறநிலையத்துறையின் மேற்பார்வையின் கீழ் கொண்டு வரப்பட்ட சிதம்பரம் நடராசர் கோவிலை மீண்டும் தீட்சிதர்களின் வசமே ஒப்படைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. 40 ஏக்கர் பரப்பளவுள்ள கோயிலும், சுமார் 2,700 ஏக்கர் நிலமும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளும் கோயிலின் அர்ச்சகர்களான தீட்சிதர்களின் கட்டுப்பாட்டுக்குப் போவிட்டது.
பெங்களூரு நீதிமன்றத்தில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கில், “குற்றம் சாட்டப்பட்டவரான ஜெயலலிதா விரும்புகின்ற நீதிபதிதான் அவரது வழக்கை விசாரிக்க வேண்டும்” என்றவாறு தீர்ப்பளித்த உத்தமர்களான சவுகான், பாப்டே ஆகியோர்தான் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள். குற்றவாளியே நீதிபதியை நியமிக்கும் இந்தப் புதிய நீதிநெறியின்படி, “அக்யூஸ்டு”களான திருட்டு தீட்சிதர்களால், வேண்டி விரும்பித் தெரிவு செயப்பட்டவர்களே இந்நீதிபதிகள் என்பது வழக்கு விசாரணை தொடங்கியவுடனேயே தெரிந்து விட்டது.

அதிமுக அரசு ஒடுக்கிய பால் விவசாயிகள் போராட்டம் ! ஆவின் பால் மட்டும் தான் நூறு சதவிகிதம் கலப்படமற்ற பால்

ஆவின் பால்பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்
இந்தப் போராட்டம் பாலில் தனியார் எனும் விசத்தை கலக்கவிடாமல் தடுக்கும் போராட்டம், ஆவினைக் காப்பாற்றும் போராட்டம், இது நம் அனைவருக்குமான போராட்டம். பிப்ரவரி 4-ம் தேதி துவங்கிய தமிழக பால் உற்பத்தியாளர்களின் போராட்டம், ஆளுங்கட்சியாலும், அதிகாரிகளின் மிரட்டலாலும் பிப்ரவரி 7-ம் தேதி வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம், இந்தப் போராட்டம் துவங்குவதற்கு முன்பே பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசுக்கு வைத்திருந்தது. இது தொடர்பாக பிப்ரவரி 3-ம் தேதிக்குள் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும், இல்லாவிட்டால் 4-ம் தேதி போராட்டம் துவங்கப்படும் என்றும் எச்சரித்திருந்தனர். ஆனால் அரசு அவர்களின் கோரிக்கைகளை துளியும் சட்டை செய்யவில்லை,

தங்கர் பச்சான் : காசு வாங்கிட்டு நடிக்கிற கமலுக்கு பத்மபூஷணா? இங்கு எல்லா துறைகளிலும் ஏராளமானவங்க இருக்காங்க. !


சென்னை: காசு வாங்கிக் கொண்டு நடிக்கும் கமல் ஹாஸனுக்கு எதற்கு பத்மபூஷண் பட்டம் என்று கேள்வி எழுப்பியுள்ளார் தங்கர் பச்சான். பரபர பேச்சுக்கு பெயர் 'போனவர்' இயக்குநர் தங்கர் பச்சான். கொஞ்சநாள் மவுன விரதம் மாதிரி இருப்பார். அப்புறம் 'என்னங்க நடக்குது இந்த நாட்ல?' என்று பேச ஆரம்பித்துவிடுவார். சகட்டு மேனிக்கு அத்தனை பேரையும் காய்ச்சி எடுப்பார். இப்போது கமல் ஹாஸன் மீது பாய்ந்திருக்கிறார்.. அவருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்காக. காசு வாங்கிட்டு நடிக்கிற கமலுக்கு பத்மபூஷணா? - கமல் ரசிகர்களைக் கடுப்பேற்றும் தங்கர் பச்சான் அவர் கூறுகையில், "கமல் திறமையான நடிகர்தான். அவருக்கு கொடுக்கட்டும். வேணாங்கல. ஆனால் அவர் ஒண்ணும் சேவை செய்யலையே. காசு வாங்கிட்டுதானே நடிக்கிறார். அவருக்கு இருக்கிற வசதிக்கு உலகம் முழுக்க கூட சுத்தலாம். ஆனால் நம்ம தமிழ்நாட்டில் இருக்கிற எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு அப்படியொரு விருதை கொடுக்கலாமே? 92 வயசிலேயும் மக்களுக்காக மொழிக்காக எழுதிகிட்டு இருக்கிற அவருக்கு கலைமாமணி விருது கூட கொடுக்கலையே?

வில்லியாக விரும்பும் தமன்னா


வாழ்நாளில் ஒரு முறையாவது வில்லி வேடத்தில் நடிக்க வேண்டும் என்றார் தமன்னா.தமன்னாவுக்கு இது மந்த காலம்தான். தமிழில் நீண்ட இடைவெளிக்குபிறகு ‘வீரம் படத்தில் நடித்தார். வேறு தமிழ்படம் எதுவும் கைவசம் இல்லை. படுபிஸியாக இருந்த டோலிவுட்டிலும் தற்போது ‘ஆகடு‘ என்ற படத்தில் மட்டுமே ஹீரோயினாக நடிக்கிறார். அனுஷ்கா நடிக்கும் ‘பாஹுபாலி‘ படத்தில் கெஸ்ட் ரோலில்தான் நடிக்கிறார். இந்தியில் சாஜித் கான் இயக்கும் ‘ஹம்ஷகல்‘ என்ற காமெடி படத்திலும், அக்ஷய் குமார் நடிக்க ஃபராத் சாஜித் இயக்கும் மற்றொரு காமெடி படத்திலும் நடித்து வருகிறார்.
ஹீரோக்களுடன் மரத்தை சுற்றி டூயட் பாடி தமன்னாவுக்கு அலுத்துவிட்டதாம். இனிமேல் மாறுபட்ட வேடங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம். இதுபற்றி அவர் கூறும்போது,‘ஹீரோயினாக பலவித கதாபாத்திரங்களில் நடித்துவிட்டேன். வாழ்நாளில் ஒரு படத்திலாவது வில்லியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அந்த வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் என்றார். - tamilmurasu.org

தந்தத்தால் செய்யப்பட்ட 1,200 பொருட்களை அழிக்க இளவரசர் வில்லியம் உத்தரவு !இந்திய சிம்மாசனம் உள்பட

லண்டன்:இங்கிலாந்து அரண்மனையில் உள்ள யானை தந்தத்தால் அலங்காரம் செய்யப்பட்ட இந்திய சிம்மாசனம் உள்பட 1,200 பொருட்களை அழிக்க இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உத்தரவிட்டுள்ளார்.இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் அரண்மனையில் ராணி இரண்டாம் எலிசபெத் காலத்தில் ஏராளமான வன விலங்குகளின் தோல், தந்தம், கொம்பு உள்ளிட்ட பொருட்களும், அவற்றால் செய்யப்பட்ட பொருட்களும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட யானை தந்தத்தால் செய்யப்பட்ட விலையுயர்ந்த சிம்மாசனம் உள்பட பல்வேறு தந்த வேலைப்பாடுகள் மிக்க பொருட்களும் உள்ளன. தற்போது இவற்றை அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Saudi ஆங்கில நாளேட்டின் ஆசிரியராக பெண் நியமனம் ! பெண்ணுரிமை முற்றிலுமாக பறிக்கப்பட்டசவுதி அரேபியாவின் சொமய்யா ஜபர்தி

For the first time ever in the Kingdom of Saudi Arabia a woman will be the editor-in-chief of a major newspaper, as Somayya Jabarti has been appointed the editor of the Saudi Gazette, an English-language newspaper.பெண்ணுரிமை முற்றிலுமாக பறிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக பழமைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் சவுதி அரேபியா விளங்கி வருகிறது. இங்கு வாழும் பெண்கள் தனியாக கடைவீதிக்கு செல்ல கூடாது. தலை முதல் கால் வரை மறைக்கும் ஆடைகளை அணிந்து, ஆண் துணையுடன் தான் வெளியே செல்ல வேண்டும். வாகனங்களை ஓட்டும் உரிமம் மறுப்பு என அடுக்கடுக்காய் பெண்ணுரிமைக்கு எதிராக மதக் கட்டுப்பாடு என்ற பெயரில் பல்வேறு அடக்குமுறை சட்டங்கள் ஏவி விடப்பட்டுள்ளன. சவுதியின் கடற்கரை நகரமான ஜெட்டாவில் இருந்து வெளியாகும் பிரபல ஆங்கில நாளேடான ‘சவுதி கெஸட்’ பத்திரிகையின் ஆசிரியராக காலெத் அல்மயீனா பொறுப்பு வகித்து வருகிறார். விரைவில் ஓய்வு பெறுவுள்ள இவர், சொமய்யா ஜபர்தி என்ற பெண்ணை அந்த நாளேட்டின் அடுத்த ஆசிரியராக நியமித்துள்ளார்.

பா.ஜ.,விடம் ராமதாஸ் அடம் ! சமுதாய கூட்டணிக்கும் 'சீட்'

தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., உடன் இனி கூட்டணி சேர்வதில்லை' என்பதில், பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் உறுதியாக இருப்பதால், லோக்சபா தேர்தலுக்கு, பா.ஜ., உடன் கூட்டணி அமைப்பதில், அந்தக் கட்சியின், இளைஞர் அணி செயலர், அன்புமணி ஆர்வம் காட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, வன்னியர் சங்க தலைவரும், பா.ம.க., - எம்.எல்.ஏ.,வுமான, குரு, 'சமீபத்தில் உருவாக்கப்பட்ட, சமுதாய கூட்டணியுடன் தான் தேர்தலை சந்திக்க வேண்டும்' என, குரல் எழுப்பினார். ஆனாலும், பா.ஜ., தலைவர்கள் விளக்கியதன் அடிப்படையில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், கூட்டணிக்கு ரகசிய ஒப்புதல் அளித்தார்.அதேநேரத்தில், பா.ஜ., கூட்டணியில், தே.மு.தி.க., இடம் பெறுவது சந்தேகமாகி வருவதால், பா.ம.க.,வும் திடீர் பந்தா காட்ட துவங்கியுள்ளது.பா.ஜ., கூட்டணியில், பா.ம.க., சேர வேண்டும் எனில், தங்கள் கட்சி சார்பில், ஏற்கனவே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட, 10 தொகுதிகளையும், தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என, கேட்டனர். அதை பரிசீலிப்பதாக, பா.ஜ., தலைவர்கள் உறுதியளித்தனர்.அதேநேரத்தில், சமுதாய கூட்டணி சார்பில் தான், போட்டியிட வேண்டும் என்பதில் குரு உறுதியாக இருக்கிறார். தொலைகாட்சிகளில் பிஜேபிக்கு தமிழகத்தில் 35-40% வாக்குகள் இப்போது மோடி அலை காரணமாக உள்ளது என கூறுகிறார்களே....அப்படியானால் 40 தொகுதிகளிலும் பிஜேபியே தனித்து போட்டியிட்டு அள்ளி செல்ல வேண்டியதுதானே? எதற்கு கூட்டணி?

கிரண்குமார்: இன்று ராஜினாமா- புதுகட்சி துவங்க ஆயத்தம் ! பிரிவோம் சந்திப்போம் விளையாட்டு ?

ஐதராபாத்: தெலுங்கானா மசோதாவை நிறைவேற்றிட மத்தியில் ஆளும் காங். அரசு உறுதியுடன் இருப்பதால், இதற்கு எதிர்ப்பு தெரிவி்த்து வந்த ஆந்திரா முதல்வர் கிரண்குமார் ரெட்டி தனது முதல்வர் பதவியை இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து காங்.கட்சியில் இருந்தும் விலகி புதிய கட்சியை துவக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடும் எதிர்ப்பிற்கிடையே ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா தனிமாநிலம் அமைக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணிஅரசு உறுதியாக உள்ளது.இதற்கான சட்ட நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தி வருகிறது. ஆந்திராவை பிரிக்க சீமந்திரா உள்ளிட்டபகுதியைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

திங்கள், 17 பிப்ரவரி, 2014

வைகோ ஒரு உதிரிப்பூக்கள் விஜயன் !


ஈழத் தமிழர் பிரச்சினையில் கலைஞர் துரோகம் செய்தார் என்று அவரை கடுமையாக இப்போதும் விமர்சிக்கிற பெரியார் இயக்கங்கள்;
இன்று வைகோ பா.ஜ.க வோடு கூட்டணி வைத்ததை கண்டிக்காமல் இருப்பது ஏன்? கலைஞர் பா.ஜ.க வோடு கூட்டணி வைத்திருந்தால் இப்படித்தான் மவுனம் காப்பார்களா?
ஈழப் பிரச்சினைக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை இந்து மத எதிர்ப்புக்கு கொடுக்காமல் தொடர்ந்து வைகோ விவகாரத்தில் மவுனம் காத்தால், வரும் காலங்களில் எச். ராஜா இல்ல.. வைகோ வே பெரியாரை இழிவாதான் பேசுவார்.
பெரியார் இயக்கங்களின் இந்த மவுனம் தொடர்ந்து நீடிப்பதை பார்த்தால், ‘பா.ஜ.க நிற்கிற இடங்களில் பா.ஜ.க வை எதிர்ப்பது, ம.தி.மு.க நிற்கிற இடங்களில் ம.தி.மு.க வை ஆதரிப்பது’ என்று முடிவு செய்து விடுவார்களோ என்று ‘கலக்கமாக’ இருக்கிறது.
அப்படி செய்தால்..?
என்ன சொல்றது.. இயக்குநர் மகேந்திரனின் ‘உதிரிப்பூக்கள்’ படத்தின் இறுதிக் காட்சியில் நடிகர் விஜயன் தன் வாழ்க்கையின் கடைசி நேரத்தில் பேசிய வசனம்தான் நினைவுக்கு வருகிறது:
“நீங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்களா இருந்தீங்க… ஆனா இன்னிக்கி உங்க எல்லாரையும் நான் என்னப் போல மாத்திட்டேன்” 

தேவருக்கு தங்கம் – அதிமுக மீது நடவடிக்கை எடுக்குமா அரசு ?

தேவர் சிலைக்கு தங்கக் கவசம்
ஜெயலலிதா முதலமைச்சர் என்ற முறையில் அந்த அதிகாரிகளின் மாநாட்டில் பேசியது உண்மையென்றால் அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற பதவியின் பொருட்டு தன் மீதே நடவடிக்கை எடுக்க வேண்டும். சும்பொன் முத்துராமலிங்கத்தின் சிலைக்கு 13 கிலோ தங்கத்தில் கவசம் அணிவித்து வந்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் மதுரை பறந்து, அங்கிருந்து பசும்பொன்னுக்கு ஹெலிகாப்டரில் சென்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். தங்கக் கவசத்தின் மதிப்பு 4.70 கோடி ரூபாய் .
இது அ.தி.மு.க சார்பில் செலவழிக்கப்பட்டாலும், ஜெயலலிதா அன்றைக்கு சென்று வந்த செலவு, பாதுகாப்பு ஏற்பாடுகள், கூட்டத்தினருக்கான குவார்ட்டர்&பிரியாணி செலவு மற்றும் இன்னபிற செலவீனங்களையும் சேர்த்தால் நிறைய வரும். கேட்டால் இது முதலமைச்சரின் புரோட்டோகால் அடிப்படையில் தவிர்க்க முடியாமல் செய்யப்படும் செலவு என்று ‘ஜனநாயகத்தை’ ஆராதிக்கும் அறிஞர்கள் மல்லுக் கட்டுவார்கள். சரி, புரோட்டோகாலுக்கு இருக்கும் மரியாதை அரசின் மதச்சார்பின்மைக்கும், சாதி சார்பின்மைக்கும் கிடையாதா?

ஆம் ஆத்மி 49 நாள் ஆட்சி ! கேஜ்ரிவால் தலைப்புகளில் அடிபட்டதைத் தவிர மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை

கேஜ்ரிவால்

டவுளே, நாங்கள் சாதாரணமானவர்கள், எங்களுக்கு கருணை காட்டுங்கள், வழி நடத்துங்கள் என வேண்டிக் கொள்கிறேன். இந்த நாட்டுக்காக எங்கள் உயிர்களை தியாகம் செய்வதற்கான வலிமையை எங்களுக்கு அருளுங்கள் என வேண்டிக் கொள்கிறேன்.”
முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கேஜ்ரிவால்
பதவியை ராஜினாமா செய்த சமயத்தில் கேஜ்ரிவால் தனது ஆதரவாளர்களிடையே ஆற்றிய உரையின் ”பினிசிங் டச்சப்” தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. கேஜ்ரிவாலின் ராஜினாமாவும் அவரது சத்யாவேசம் பொங்கும் உரையும், அதன் இறுதியில் சென்டிமென்டலாக ஒரே போடாக போட்டுத் தாக்கியிருப்பதும் அவரது டி.ஆர்.பி ரேட்டிங்கை கணிசமாக உயர்த்தியிருக்கிறது. சமூக வலைத்தளங்ளிலும் முதலாளித்துவ ஊடகங்களிலும் நடந்த விவகாரங்கள் குறித்த விவாதங்களில் கேஜ்ரிவாலின் மேல் பகுத்தறிவற்ற ஒரு பச்சாதாப உணர்ச்சி மேலோங்கி வருகிறது.
தில்லி தேர்தலில் 28 இடங்களை வென்று காங்கிரசின் தயவோடு ஆட்சியில் அமர்ந்த கேஜ்ரிவால், துவக்கத்திலிருந்தே தில்லி மக்களின் அன்றாட சவால்களைத் தீர்க்க முடியாது என்பதை தெளிவாக உணர்ந்திருந்தார்.  அதனால்தான் இந்த 49 நாட்களில் தனது டி.ஆர்.பி ரேட்டிங்கை எப்படியெல்லாம் ஏற்றுவது என்பதில் தான் அவரது கவனம் இருந்தது. இலவச குடி நீர் மற்றும் மின் கட்டண அறிவிப்பை நெருக்கமாக அலசிப் பார்த்தாலே அவரது நோக்கத்தை புரிந்து கொள்ள முடியும்.

மத்திய இடைக்கால பட்ஜெட் 2014-15: முக்கிய அம்சங்கள்


 மக்களவையில் 2014-15-ம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று (திங்கள்கிழமை) தாக்கல் செய்தார்.
புதிய வரிவிதிப்புகள் இல்லாத இந்த பட்ஜெட்டில், உற்பத்தி வரிகள் குறைக்கப்பட்டதன் காரணமாக, கார்கள், இரு சக்கர வாகனங்கள், மொபைல் போன்கள், டிவி, ஃபிரிட்ஜ் உள்ளிட்ட பொருள்களின் விலை குறையும்.
நாட்டின் பொருளாதார நிலை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது சிறப்பாக உள்ளது என்று குறிப்பிட்ட மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அடுத்த 30 ஆண்டுகளில் அமெரிக்கா, சீனாவுக்குப் பின், உலகின் 3-வது பெரிய பொருளாதார வளர்ச்சி மிக்க நாடாக இந்தியா திகழும் என்று பட்ஜெட் உரையில் நம்பிக்கை தெரிவித்தார்.

விமர்சனங்களை தவிடுபொடியாக்கிய திமுக ! முகத்தில் அறைந்தது போல் எதிரிகளை அசர வைத்த திருச்சி மாநாடு


சென்னை: இனி அவ்வளவுதான்.. முடிவுரை எழுதப்படுகிறது என்றெல்லாம் திமுகவை நோக்கி முன்வைக்கப்பட்ட அத்தனை விமர்சனங்களையும் தவிடுபொடியாக்கி தமிழக அரசியல் களத்தை தகிக்கவும் இதர கட்சிகளை தவிக்கவும் வைத்திருக்கிறது அந்தக் கட்சியின் திருச்சி மாநாடு. ஸ்பெக்ட்ரம் ஊழல், காங்கிரஸுடன் ஊசலாட்டமான உறவு, உட்கட்சி பூசல், பலமற்ற கூட்டணி ஆகியவற்றால் லோக்சபா தேர்தலில் பலத்த தோல்வியைத் தான் திமுக சந்திக்கும் என்பது கருத்து கணிப்பு வெளியிட்ட ஊடகங்களின் முடிந்த முடிவாக இருந்தது. இந்த நிலையில்தான் திருச்சியில் திமுகவின் "திருப்புமுனை" மாநாடு கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆண்களுக்கு ரூ.50, பெண்களுக்கு ரூ.30 என தனிக் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டும் இருந்தது. இந்த கட்டண அறிவிப்பை கண்டுகொள்ளாமல் பல லட்சக்கணக்கானோர் 2 நாள் மாநாட்டில் வெள்ளமென திரண்டு "யாருக்கு முடிவுரை?" என முகத்தில் அறைந்தார்போல் அரசியல் எதிரிகளை அசர வைத்திருக்கின்றனர் திமுக தொண்டர்கள்

ராதிகா தேர்தலில் போட்டியிடுகிறார் ? ஜெயா பஜனை கோஷ்டி ஜோதியில் ஐக்கியம் ஆகிறார்

ராதிகா சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளராக நியமிக்கப்படுவதாகத் சரத்குமார்  தெரிவித் தார்.
கூட்டணிக்காக பேரம் பேசுகிறார் விஜயகாந்த்” என்று, திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் 2-வது மாநில மாநாட்டில் கட்சியின் நிறுவனர் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
மாநாட்டில் அவர் பேசியதாவது:
விஜயகாந்த் இறைவனுடனும், மக்களுடனும்தான் கூட்டணி என்றார். ஏற்காட்டில் இடைத்தேர்தல் நடக்கும் போது, டெல்லியில் சென்று போட்டியிடுகிறார். இவர் வித்தியாசமான அரசியல்வாதி.
இப்போது டெல்லியிலிருந்து ஏமாற்றத்துடன் திரும்புவதாக செய்திகள் வந்திருக்கின்றன. யாரும் அவரைச் சீண்டமாட்டார்கள். சீண்டுவதாக நினைத்துக் கொண்டி ருக்கிறார். அதிமுக ஆதரவுடன் வெற்றிபெற்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராகியிருக்கிறார் விஜயகாந்த். அவருக்குத் தேவை பணம். 20 சீட்டுக்கு எவ்வளவு என்று பேரம் பேசுகிறார். அம்மணீ நீண்ட காலமாகவே இன்டலெக்சுவல் வேஷம் போட்டு தற்போது வெளிறி வெளியே வந்துள்ளார் 

சென்னை IIT ஐஐடியில் இந்துமத வெறியர்களின் ரவுடிக் கூச்சல் !

ஐ.ஐ.டி ஃபார் சொசைட்டி ஐ.ஐ.டி ஃபார் சொசைட்டி (IIT for Society) என்ற மாணவர்களது கூட்டமைப்பானது ‘மனித உரிமைகள் மற்றும் சமூக நல்லிணக்கத்’திற்கான கருத்தரங்கு ஒன்றை கடந்த பிப்ரவரி 10-ம் தேதியன்று சென்னை இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி, சென்னை) நடத்தியது. குடிமக்களுக்கான நீதி மற்றும் அமைதி என்ற மனித உரிமை அமைப்பின் செயலர் தீஸ்தா சேதல்வாத் இதில் கலந்து கொண்டு ‘மனித உரிமைகளும், சமூக அமைதியும்’ என்ற தலைப்பில்  சென்னை ஐஐடியில் உள்ள மைய விரிவுரை அரங்கில் உரையாற்றினார். 2002 குஜராத் கலவரத்திற்கு காரணமான இந்துமதவெறியர்களை நீதிமன்ற வழக்குகள் மூலம் வெளியுலக கவனத்திற்கு கொண்டு வந்ததில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. இதனால் இவர் மீது ஆர்.எஸ்.எஸ் கும்பல் பெரும் வெறுப்புடனும், சினத்துடனும் இருந்து வந்தது.

ஐ.ஐ.டி ஃபார் சொசைட்டி – தீஸ்தா

இரண்டு படகுகளுக்கும் இடையில் சுருக்குமடி, இரட்டைமடி போன்ற வலைகளைக் கட்டி அவர்கள் இழுத்துச்செல்லும்போது அதில் தப்பிக்காத மீனே இருக்கமுடியாது.

கடல் வளம் அழிக்கும் தரகு முதலாளிகள்! கைக்கூலிகளாக நிற்கும் அரசு அதிகாரிகள்!
இழந்துகொண்டிருக்கும் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற, தொடங்கியிருக்கிறது நாட்டுப்படகு மீனவர் போராட்டம்!
மனிதனின் முதல் உணவு மீன் என்று பல ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். மனிதனின் பரிணாம வளர்ச்சியில் பெரும்பாலும் அவ்வளவாக மாறாத ஒரு உணவு வகை உள்ளதென்றால் அது மீனுணவாகத்தான் இருக்க முடியும். விதவிதமான மீன்களை விதவிதமாகச் சமையல் செய்து ருசித்து உண்ணும் மக்களில் பெரும்பாலோர் மீனவரின் வாழ்நிலை குறித்து சாதாரணமாகக் கூடச் சிந்திப்பதில்லை. எல்லாத் தொழிலாளிகளின் நிலையினைப் போலவேதான் மீன்பிடித்தொழிலாளர்களின் அவலநிலையும் உள்ளது.
மீன்பிடித்தொழில் செய்பவர்களில் இரண்டு வகையினர் உள்ளனர். ஒன்று, சிறிய அளவுகளிலான நாட்டுப்படகுகளைக் கொண்டு மீன்பிடிப்பவர்கள். இரண்டு, பெரிய அளவிலான மோட்டார்களைக் கொண்டு இயக்கப்படும் விசைப்படகுகளைக் கொண்டு மீன்பிடிப்பவர்கள். தொடக்க காலங்களில் கட்டுமரங்கள் மூலமாகவே மீனவர்கள் மீன்பிடித்து வந்தனர். அதன் பின்னர் கட்டுமரமானது சிறிய படகுகளானது. இதைத்தான் நாட்டுப்படகுகள் அல்லது வல்லம் என்று அழைக்கிறார்கள்; அதன் பின்னர் இப்படகுகளில் சிறிய மோட்டார் பொருத்தப்பட்டது.