ஜே. ஆர் ஜெயவத்தனா, ஆர். பிரேமதாசா, சந்திரிக்கா அம்மையார் ,மகிந்த ராஜபட்ச , மைத்திரிபால, கோட்டாபாய ஆகியோரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை.... ரணிலிடம் கேட்கலாமா என்ற Home work கூட சரியாக செய்யாத நிருபர்.... ஏன் தற்போதைய ஜனாதிபதி அநூரா குமாரவிடம் கூட இந்த கேள்விகளை தாராளமாக கேட்டு பதிலை பெறலாம். ... யாரிடம் எதை கேட்க வேண்டும் என்ற Home work சரியாக செய்யவில்லையே...
Selvarajah Kalmunai : அன்மையில் முன்னால் ஜனாதிபதி கௌரவ ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அல்ஜசீரா நிருபர் மெஹந்தி ஹசனுக்கும் இடையிலான சர்வதேச நேர்காணல் பற்றி பலரும் பேசுகிறார்கள்.
பலரும் பேசலாம். இலங்கை அரசியல் அறிவு.... யதார்த்தம் தெரிந்தவர்களாகிய நாம் என்ன பேசலாம்....
Computer என்ற இயந்திரத்திற்கு கொடுக்க படும் தரவுகளை உள்வாங்கி கொண்டு செயற்படும்.
பிழையான தரவுகள் கொடுக்கபட்டால் , முழுமையான தரவுகள் கொடுக்க படா விட்டால் , பக்க சார்பான தரவுகள் கொடுக்க பட்டால் , முடிவுகளும் அதற்க்கு ஏற்ப தான் வரும்.
சனி, 8 மார்ச், 2025
மகிந்த - கோத்தபாயவிடம் கேட்க வேண்டிய கேள்விகளை.... ரணிலிடம் கேட்ட Al Jazeera TV
நடிகர் கமல் ஹசன் : “ஜனநாயகம், கூட்டாட்சிக்காக தெற்கிலிருந்து ஓங்கி ஒலிக்கும் குரல்” - ஸ்டாலினுக்கு புகழாரம்
hindutamil.in :சென்னை: “முதல்வர் ஸ்டாலின் தமிழகத்துக்கு மட்டுமா நல்லது செய்கிறார்? மத்திய அரசு மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்க முயலும்போது, இந்துத்துவ கொள்கைகளையும் இந்தியையும் தேசமெங்கும் திணிக்க முற்படும்போது, ஜனநாயகத்தையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் கேள்விக்குள்ளாக்கும்போதும் தெற்கிலிருந்து ஓங்கி ஒலிக்கும் உறுதியான குரல்களில் ஒன்றாக முதல்வர் ஸ்டாலின் திகழ்கிறார்” என்று மநீம தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை கொளத்தூரில் ‘முதல்வரின் கலைக்களம்’ எனும் பெயரில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில், கலைத் திருவிழா மற்றும் உணவுத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதனை மநீம தலைவர் கமல்ஹாசன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சென்னையில் 128 மெட்ரோ நிலையங்கள் - தமிழக அரசு அதிரடி- பணி தீவிரம்!
மாலை மலர் : சென்னையில் 128 மெட்ரோ நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சிஎம்ஆர்எல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் கட்டம் I மற்றும் கட்டம் I நீட்டிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததை தொடந்து, மெட்ரோ ரெயில் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக இரண்டாம் கட்டத்தில் 118.9 கி.மீ நீளத்திற்கு மேலும் மூன்று வழித்தடங்களில் 128 மெட்ரோ நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
உலக மகளிர் நாள் வாழ்த்துக்கள்! பாக்கியத்தம்மாள் ஒரு நட்சத்திரம்!
![]() |
ராதா மனோகர் : உலக மகளிர் நாளுக்கு வாழ்த்து கூறக்கூடிய தகுதி எனக்கு இருக்கிறதா என்ற கேள்வியை எனக்கு நானே கேட்டுப்பார்த்தேன்.
இந்த கேள்விக்கு நான் கண்டுகொண்ட பதில்தான் பாக்கியத்தம்மாள்!
வரலாற்று இலக்கியங்களில் உண்மையான பெண்களை,
அதாவது சாதாரண மனித இயல்புகளை வெளிக்காட்டும் பெண் கதாபாத்திரங்களை எவ்வளவு தூரம் உலாவ விட்டுள்ளார்கள்?
பெண்களை உயர்வாக காட்டுவதாக படைக்கப்படும் பெண் கதாபாத்திரங்களில் கூட ஆணாதிக்கத்துக்கு ஊக்கம் கொடுக்கும் செயல்களைதான் பெரிதும் காண்கிறோம்.
ஒரு பெண் ஆண்களை விட அறிவுள்ளவளாக மேன்மையான தகுதிகள் உள்ளவளாக தப்பி தவறியும் காட்டினால் எங்கே ஆண்களின் மனம் புண்படுமோ என்று ஏராளமான இலக்கிய மூர்த்திகள் பயப்பட்டு இருக்கிறார்கள் போலும்?
ரணில் விக்கிரமசிங்கவை பார்த்து அவரின் எதிரிகள் ஏன் இப்போதும் பயப்படுகிறார்கள்?
ராதா மனோகர் : ரணில் விக்கிரமசிங்கவை லண்டன் வாழ் மெஹ்தி ஹசன் என்ற ஊடக வியாபாரி வறுத்தெடுத்தார் என்று,
ஒட்டு மொத்த புலி ரசிகர்களும் அவர்களின் லேட்டஸ்ட் கூட்டாளிகளான ஜேவிபி ஆதரவாளர்களும் ஏக ஆர்கஸத்தில் திளைத்துள்ளார்கள்.
ஜேவிபியை கண்டு அஞ்சும் புலி ரசிகர்களின் ஜேவிபி காதல் புரிந்து கொள்ள முடிகிறது
இது ஒரு நாள்பட்ட ஸ்டார்க்ஹோம் சின்ரோம் நோய் .
இவர்களின் லண்டன் அடியாள் ராஜபக்ஸவிடமும் புலிகளிடமும் கேட்கவேண்டிய எக்கச்சக்கமான கேள்விகளை ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டு அதற்கு கூட அவரை பதில் சொல்ல விடாமல் அடுத்தடுத்து கேள்விகளை அடுக்கிய விதம் அப்படியே ஊடக நாய் அர்னாப் கொசுவாமியை நினைவு படுகிறது
புலிகளின் இஸ்லாமிய இனச்சுத்திகரிப்பு பற்றி Al jazeeraa மெஹ்தி ஹசன் என்றாவது வாயை திறந்திருக்கிறார்ரா? நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு!
ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அரசியலில் இருந்து ஒய்வு பெற்று விட்டதாகதான் நேற்று வரை நான் கருதி இருந்தேன்.
அவர் மீதான லண்டன் தாக்குதல் வேறு ஒரு முக்கிய செய்தியை கூறுகிறது
அதாவது ரணில் விக்கிரமசிங்கவை பார்த்து அவரின் எதிரிகள் இப்போதும் பயப்படுகிறார்கள்!
வெள்ளி, 7 மார்ச், 2025
நடிகை ரன்யா ராவி தங்கம் கடத்துவதற்காகவே பிரத்தியேக ஆடை.. ஓராண்டில் 30 முறை பயணம்… எப்படி சிக்கினார்?
tamil.goodreturns.in : பெங்களூரு: துபாயில் இருந்து தங்கம் கடத்திய வழக்கில் நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் எப்படி அவர் இந்த வழக்கில் சிக்கினார் என்ற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்தவர் ரன்யா ராவ். 32 வயதான இவர் கர்நாடக போலீஸ் டிஜிபி ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகள். கன்னடம் ,தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களிலும் ரன்யா ராவ் நடித்துள்ளார். தமிழில் இவர் வாகா என்ற திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
Madagascar மின்சார வசதியில்லாத மடகாஸ்கர் கிராமத்திற்கு வெளிச்சம் தந்த சோலார் பாட்டிகள்
bbc.com : மின்சார வசதியில்லாத மடகாஸ்கர் கிராமத்திற்கு வெளிச்சம் தந்த சோலார் பாட்டிகள்
மடகாஸ்கரின் மின்சார விநியோக கட்டமைப்பில் இருந்து தொலைதூரத்தில் உள்ளது கிவாலோ எனும் கிராமம். ஆனால் இப்போது அந்தி சாயும்போது, இந்தக் கிராமமும் வெளிச்சத்தைப் பெறுகிறது.
இதற்கு காரணம் இந்த கிராமத்தின் பாட்டிகள். இவர்களை 'சோலார் பாட்டிகள்' என அழைக்கிறார்கள். இவர்கள் கிராமத்தின் பல வீடுகளில் சோலார் பேனல்களை நிறுவியுள்ளார்கள்.
இவர்கள் சோலார் பொறியாளர்களாக மாற பயிற்சி எடுத்துக்கொண்டவர்கள். பேர்ஃபுட் காலேஜ் என்ற தொண்டு நிறுவனம் இந்த பயிற்சியை அளித்தது.
வியாழன், 6 மார்ச், 2025
'நான் சங்கியா?' கலங்கியபடி கேட்ட இளையராஜா; உருகிய ஸ்டாலின்
![]() |
minnambalam.com - Kumaresan M : இளையராஜா எந்தளவுக்கு பிரபலமானவரோ அந்த அளவுக்கு இவர் பேசும் வார்த்தைகள் அடிக்கடி பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி தலைப்பு செய்தியாக மாறிவிடும். இளையராஜா பேச்சு பற்றி பலருக்கும் பலவிதமாக கருத்துகள் இருந்தாலும், அவருடைய இசை மனதின் வலிகளை குறைக்கும் தன்மை கொண்டது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
அத்தகைய இசைஞானி இளையராஜா வரும் 8ஆம் தேதி லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றவுள்ளார். லண்டனில் ஈவன்டிம் அப்பல்லோ அரங்கத்தில் அவரின் சிம்பொனி இசைக்கப்படுகிறது. 35 நாட்களில் இந்த சிம்பொனியை இளையராஜா உருவாக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா மற்றும் மும்பையின் மொழி மராத்தி தான்! மஹாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு
மாலை மலர் : மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வாழ்வதற்கு மராத்தி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பையாஜி ஜோஷி, "மும்பையில் ஒரு மொழி பேசுபவர்கள் மட்டும் கிடையாது. இங்கு ஒவ்வொரு பகுதிகளிலும் வெவ்வேறு மொழிகளை பேசுபவர்கள் இருக்கிறார்கள். காட்கோபர் பகுதி மக்கள் குஜராத்தி பேசுகிறார்கள். ஆதலால் நீங்கள் மும்பையில் வசித்தால் மராத்தி மொழி கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை" என்று தெரிவித்தார்.
யாழ்பணம் – திருச்சி நேரடி விமானங்கள் தினசரி சேவை 30ஆம் திகதி ஆரம்பம்
![]() |
.ilakkiyainfo.காம் : சென்னை யாழ்ப்பாணம் தினசரி விமான சேவை ஏற்கனவே ஏலியன்ஸ் ஏர் நிறுவனத்தால் நடத்த படுகிறது!
தற்போது புதிதாக யாழ்பணம் – திருச்சி விமான சேவை 30ஆம் திகதி ஆரம்பம்
யாழ்ப்பாணத்திற்கும் திருச்சிக்கும் இடையிலான விமான சேவை ஒன்று எதிர்வரும் 30ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
பாடகி கல்பனா குணமடைகிறார் “தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை..தூக்கம் வராததால் அதிக மாத்திரை எடுத்தேன்”..
tamil.oneindia.com - Vignesh Selvaraj : ஹைதராபாத்: தூக்கம் சரியாக வராததால் தான் அதிக மாத்திரைகளை எடுத்துக் கொண்டதாகவும், தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை என்றும் பிரபல பின்னணிப் பாடகி கல்பனா, போலீசாரிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல பின்னணி பாடகி கல்பனா, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நிஜாம்பேட்டையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவருடைய வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த குடியிருப்பு வாசிகள் நேற்று முன்தினம் மாலை அவரது வீட்டின் கதவைத் தட்டியுள்ளனர். ஆனால் வீட்டின் உள்ளே இருந்து யாரும் கதவைத் திறக்கவில்லை.
நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிரான அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானங்கள்!
Kalaignar Seithigal -Chennamani : சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிராக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தி.மு.க, திராவிடர் கழகம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ(எம்), வி.சி.க, அ.தி.மு.க உள்ளிட்ட 56 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டதிற்கு தலைமை தாங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் சார்பில் 56 கட்சிகளின் முன்னிலையில் தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றினார். அவை பின்வருமாறு,
உத்தர பிரதேச சட்ட மன்றத்தில் குட்கா பயன்படுத்த தடை
மாலை மலர் : லக்னோ உத்தர பிரதேச சட்டசபையில் சில எம்.எல்.ஏ.க்கள் பான் மசாலாவை மென்று எச்சில் துப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சட்டசபையில் நுழைந்தநாயகர் சதீஷ் மஹானா எச்சில் கறைகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, எச்சில் கறைகளை சுத்தம் செய்யவேண்டும் என்றும், இதுபோன்ற செயல்களில் மற்றவர்கள் ஈடுபடுவதை எம்.எல்.ஏ.க்கள் தடுக்கவேண்டும் என்றும் சபாநாயகர் அறிவுறுத்தினார்.
புதன், 5 மார்ச், 2025
பாடகி கல்பனாவின் மகளுக்குப் பாலியல் கொடுமை .. பாதிரியார் இன்னும் கைதுசெய்ப்படவில்லை ஏன்? flash back
Priya Perumal : பிரபல பாடகி கல்பனா திடீரென்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து விலக்கப்பட்டார் அல்லது விலகிக்கொண்டார்.
கல்பனாவிற்கு கணவர் கிடையாது. அதனால் தான் தங்கச்சியிடம் தான்... தன் மகளை ஒப்படைத்திருந்தார். ஏனென்றால் கல்பனா வாழ்வது ஹைதராபாத்தில்.
கல்பனாவின் குடும்பம் பிராமண பின்னணியில் இருந்தாலும் இவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பே கிறிஸ்தவ மதத்திற்கு மாறி விட்டனர்.
அவரின் தங்கச்சியின் பெயர் பிரசன்னா. இவரும் கிறிஸ்துவ மதத்துக்கு மாறி கிறிஸ்தவரை திருமணம் செய்திருந்தார். ஆனால் அவருக்கு குழந்தை கிடையாது. இவரும் பாடகி தான் ஆனால் வேறு பெயரில் பாடுகிறார்.
குடிபோதையில் விஜய்..செம கோபத்தில் சங்கீதா! மகனுக்கு உதவிய உதயநிதி! திருச்சி சூர்யா பேட்டி
tamil.oneindia.com -Rajkumar R : : சென்னை: விஜய் பல நட்சத்திர ஹோட்டல்களில் குடித்து விட்டு கலாட்டா செய்ததை நானே பார்த்திருக்கிறேன் எனவும், விஜய் மீது அவரது மனைவி சங்கீதா கடுமையான கோபத்தில் இருப்பதாகவும், விரைவில் அவர் விஜய்க்கு எதிராகவே திரும்புவார் என கடுமையாக விமர்சித்துள்ளார் திருச்சி சூர்யா.
ஒன்இந்தியா தமிழ் அரசியல் சேனலுக்கு பேட்டியளித்த அவரது கருத்துகள் தான் அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது. அதில், பேசியுள்ள அவர்," மக்களுக்கு நல்லது செய்வேன் என சொல்லும் விஜய் தனது மனைவிக்கே நல்லது செய்யவில்லை தனது மகனுக்கும் நல்லது செய்யவில்லை.
செவ்வாய், 4 மார்ச், 2025
பாடகி கல்பனா தற்கொலை முயற்சி.. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்!
tamil.oneindia.com - Vigneshkumar : ஹைதராபாத்: பிரபல திரைப்பட பின்னணி பாடகி கல்பனா ஹைதராபாத்தில் உள்ள இல்லத்தில் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முக்கிய பின்னணி பாடகிகளில் ஒருவர் கல்பனா. ராசாவின் மனசுல படம் தொடங்கி இவர் பல பல பாடங்களைப் பாடியிருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் முக்கிய பாடகியாக வலம் வந்தார்.
இதற்கிடையே இவர் ஹைதராபாத்தில் உள்ள இல்லத்தில் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. வீட்டில் சுயநினைவின்றி கிடந்த அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்
சிங்கள சிறுவர்களின் குண்டலகேசி நாடகம்
ராதா மனோகர் : குண்டலகேசியை தமிழர்கள் கூட மறந்து விட்டார்கள் என்று கருத வேண்டி இருக்கிறது.
கலைஞரின் மந்திரிகுமாரி திரைப்படம் குண்டலகேசி கதையை தழுவியதாக கருதப்படுகிறது.
குண்டலகேசி தமிழ் காப்பியம் உ வே சாமிநாதையர் அவர்களிடம் இருந்ததாகவும் அது எங்கோ காணாமல் போய்விட்டதாகவும் கூறப்பட்டது
இது பற்றி ஆறுமுக நாவலரும் குறிப்பிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
குண்டலகேசியின் கதை சிங்கள மொழியில் இன்றும் உயிர்துடிப்போடு இருப்பது
வியக்க வைக்கிறது.
சிங்கள மொழியில் பல திராவிட இலக்கிய கருவூலங்கள் இன்றும் பாதுகாக்க படுகிறது.
பெரியாரை எதிர்க்கும் ஈழத்தமிழர்களின் குறுக்கு வெட்டு முகம் இதுவே!
இந்த யாழ்ப்பாண பெண் வழக்கறிஞர் ஹிட்லரின் மனித குல விரோத கொலைகளை நியாயப்படுத்தி பேசியுள்ளார்
இவருக்கு anti semitic laws ஆன்டி செமிட்டிக் சட்டம் பற்றி தெரியவில்லை.
இவர் ஏதாவது ஒரு மேற்கு நாட்டிற்கு பயணமானால் இந்த ஹிட்லர் புகழ் பாடும் காணொளி அந்த மேற்கு நாட்டவர்களின் கண்களில் படாமல் இருக்க வேண்டுமே பிள்ளையாரப்பா!
" காணொளியில் இவர் பேசிய பாசிச காதல் வசனங்கள் இதுதான்:
நாங்கள் ஏற்கனவே கதைச்சிருக்கிறம் ஹிட்லரை பற்றி.
தன்னுடைய சொந்த இனத்திற்காக போராட்டம் என்ற ஒரு விடயத்திற்காக,
அந்த போராட்டத்தில் பல கொலைகள் நடைபெறும்
பல உயிர்ச்சாவுகள் இடம்பெறும்
அதெல்லாவற்ரையும் வைத்து நாங்கள் ஒரு தலைமைத்துவத்தை பிழையாக கூற முடியாது"
சிவாஜியின் அன்னை இல்லம் வீடு மீது நீதிமன்ற கையகப்படுத்தல் உத்தரவு -
மின்னம்பலம் - Aara : நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்ந்த வீடான, அவரது நினைவுச் சின்னமாக இருக்கும் சென்னை. தி.நகர் அன்னை இல்லத்தை ஜப்தி செய்திட நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது, சிவாஜி ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்தின் ஈசன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ‘ஜகஜால கில்லாடி’ படத் தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் ரூ. 3.74 கோடி கடன் பெற்றிருந்தார்.
கடன் திருப்பி செலுத்தவில்லை.
இது வழக்கு விவகாரமானதையடுத்து, மத்தியஸ்தராக உயர் நீதிமன்ற நீதிபதி டி.ரவீந்திரன் நியமிக்கப்பட்டார். Sivaji Family Property Issue stalin
ஒரு யாழ்ப்பாணத்து பெண் வழக்கறிஞர் பெரியார் மீது பொழியும் வன்மம்!
தேசம் அருள்மொழிவர்மன் : யாழ் நுனிப் புல் மேயும் சட்டத்தரணிகள் வைஷ்ணவிக்கு உமாகரனுக்கு தளபதி கேர்ணல் கிட்டு அன்றே வழங்கிய பதில் !
மார்ச் முதலாம் திகதி லண்டன் மெய்வழி ஊடகத்தின் சாம் பிரதீபனுக்கு வழங்கிய நேர்காணலில் பாலியல் குற்றவாளியான பெண்களை அவமதிக்கும் நாம் தமிழர் கட்சி சீமானின் வழிநின்று பெரியாரை அரசியல் நீக்கம் செய்ய வேண்டும் என்று கோருகின்றார். ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தின் அறவழி கூடத் தெரியாதவர் போல் நேர்காணலில் பதிலளிக்கும் சட்டத்தரணி வைஷ்ணவி பெயரளவில் தமிழ் தேசியம் பற்றி கதைத்த போதும் சாதிய ஒடுக்குமுறைக்கு பெண் அடிமைத்தனத்தை மேற்கொள்பவர்களோடு தன்னை இனம்காட்டி வருகின்றார்.
திங்கள், 3 மார்ச், 2025
வேலூர் சிறையில் சீமானை சந்தித்த ஆர் எஸ் எஸ் குண்டர்கள் அன்றே விலை போன சீமான் ..
Sibichander Dhanaraj : பாலியல் அக்யூஸ்ட் சீமானுக்கு ஆதரவாக நின்றதும் அப்பா அப்பா என்று அழுததும் ஏன் ? நடந்தது என்ன ? நடக்கபோவது என்ன ?
2009 நான் சீமானோடு பயணித்த காலம் அவன் பேசிய உரைக்காக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டான் சிறையில் அவனை சந்தித்த நபர்களின் பட்டியல் எனக்கு கிடைத்தபோது அதில் எட்டு ஆர் எஸ் எஸ் நபர்களை அடையாளம் கண்டேன் ..
பேராபத்தான ஒரு வலையில் சீமான் சிக்கிக்கொண்டான் என்பதை உணர்ந்த நான் 2010 பிப்ரவரி மாதம் 24 ஆம் நாள் அவனோடு எனக்கிருந்த அனைத்து நட்பையும் உறவையும் துண்டித்துக்கொண்டேன்
நான் விலகிய அந்த தருணத்தில் திரு ராஜீவ் காந்தி
திரு பேராசிரியர் கல்யாணசுந்தரம் பேராவூரணி திலிபன் சென்னை அதியமான் சேலம் அருண்
வத்திராய்ப்பு யாழினி மதுரை வெற்றிக்குமரன் தூத்துக்குடி பிரபு வடசென்னை ஆன்ந்த்ராஜ் திருவள்ளூர் ஊமையன் அண்ணண் நல்லதுரை புதுக்கோட்டை முத்துக்குமார் கவிஞர் ஆரா மற்றும்
இயக்குனர்கள் ஐ கோ பாலமுரளிவர்மன் போன்ற ஏராளமான தோழர்கள் ...
சீமான் மேல்முறையீடு : உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை... அடுத்து ரத்து தான்’ : சீமான்
மின்னம்பலம் - சீமான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இன்று (மார்ச் 3) இடைக்கால தடை விதித்துள்ளது. SC stays High Court order in seeman case
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பாக சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
பர்மாவில் பெரியார்.. பர்மா திராவிட முன்னேற்ற கழகம் .. வரலாறு
![]() |
![]() |
பாவலர் நாரா நாசியப்பம் : பர்மாவில் பெரியார் ! இரங்கூன் வருகை!
1954 அனைத்துலக புத்த சமய மாநாடு, பர்மாவின் தலைநகரான இரங்கூனில் நடக்கவிருந்தது. இம்மாநாட்டை பர்மிய அரசே முன்னின்று நடத்தியது, அப்போது பர்மாவின் தலைமை அமைச்சராக இருந்த ஊநூ, புத்தமதத்தில் ஆழ்ந்த பற்றுக்கொண்டவர், உண்மையான சமய நம்பிக்கை உடையவர், சமய நெறிப்படி வாழ்க்கை நடத்தியவர். அவருடைய ஆர்வமும், பெருமுயற்சியும் தான் அனைத்துலக புத்த சமய மாநாட்டின் சிறப்புக்குக் காரணமாய் அமைந்தன.
புதிதாக புத்தசமயத்தில் சேர்ந்த டாக்டர் அம்பேத்காரின் தலைமையில் இந்த மாநாடு நடந்தது.
டாக்டர் அம்பேத்கார் புத்த சமயத்தில் புதிதாகச் சேர்ந்ததால், அதற்குப் புது வலிவும் பொலிவும் கூடியிருந்தது, எனவே மாநாட்டைக் கூட்டியவர்கள் பெருமைக்குரிய டாக்டர் அம்பேத்கார் தலைமையில் அதனைக் கூட்டுவதே சிறப்பென்று முடிவு செய்தார்கள்.
தலைமை அமைச்சர் ஊநூவின் பேரார்வத்தின் காரணமாக மாநாடு மிகச் சிறப்பாக நடந்தது. இரங்கூனை அடுத்த கபா ஏ என்ற இடத்தில் அமைதிக் கோபுரம் ஒன்று கட்டி அதன் அருகில் மாநாடு நடைபெறுவதற்காக மலைக்குகை போன்ற அமைப்புடைய ஒரு பெரிய கூடம் கட்டப்பட்டது.
நான் பாலியல் தொழிலாளியாடா சீமான்? நடிகை விஜயலட்சுமியின் கண்ணீர்!
Hindu Tamil : என்னை பாலியல் குற்றவாளி என எப்படி கூறலாம்? - கனிமொழியின் விமர்சனத்துக்கு பதிலளித்து சீமான் கேள்வி
சென்னை: வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது என்னை பாலியல் குற்றவாளி என எப்படி கூறலாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் சீமான் தெரிவித்த கருத்துகளை விமர்சித்த திமுக எம்.பி. கனிமொழி “பெண்களை இதைவிட கேவலமாக பேச முடியாது. இதைக்கேட்டுக் கொண்டு அவரது வீட்டிலும், அக்கட்சியிலும் பெண்கள் எப்படி சகித்துக் கொண்டு இருக்கிறார்கள்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
ஞாயிறு, 2 மார்ச், 2025
போஜ்புரி மைதிலி சந்தாலி ஹரியான்வி - சமஸ்கிருதம் ஆங்கிலம் கலந்து பேசுவது தமிழை சிறுமை படுத்தும் கேவல முயற்சி.
ராதா மனோகர் : இந்தியாவின் உண்மையான தாய் மொழிகள்!
இன்றும் போஜ்புரி மைதிலி சந்தாலி ஹரியான்வி போன்ற மொழிகளை அந்தந்த மொழி பேசும் மக்கள் தங்கள் வீடுகளில் பேசுகிறார்கள்
தங்களின் தாய் இந்த மொழிகளை பேசினால் தங்களை படிப்பறிவு அற்றவர்கள் என்று பிறர் கருதி விடுவார்கள் என்று எண்ணுகிறார்கள்
இவர்களின் மனதில் இந்த பழமையான மொழிகளை பற்றிய தாழ்வு மனப்பான்மையை விதைப்பதில் இந்தி பிரச்சாரகர்கள் வெற்றி பெற்று விட்டார்கள்
நம் தலைவர்கள் ஏன் மீண்டும் மீண்டும் தமிழ் தமிழ் என்று தமிழின் பெருமையை பேசினார்கள் என்று இப்போது புரிகிறது!
தாய்மொழி பற்றிய பெருமை ஒவ்வொருவருக்கும் இல்லையெனில் அவர்கள் தங்கள் தாய்மொழியில் பேசுவதையே ஒரு கண்ணிய குறைவாக கருதி விடுவார்கள்.
இதனால்தான் போலும் பார்ப்பனர்கள் பேசும் போது அதிகமான ஆங்கில சொற்களையும் வசனங்களையும் தமிழோடு கலந்து பேசுகிறார்கள்.
15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு இனி பெட்ரோல், டீசல் வழங்கப்படாது! டெல்லி பாஜக அரசு அறிவிப்பு
tamil.samayam.com - பவித்ரன் : டெல்லியில் காற்று மாசுவை குறைக்க பழைய வாகனங்களுக்கு எரிபொருள் கட்டுப்பாட்டை அம்மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா அறிவித்துள்ளார்.
Samayam Tamilவாகனங்களுக்கு இனி பெட்ரோல், டீசல் வழங்கப்படாது! பாஜக அரசின் அதிரடி உத்தரவால் ஆடிப்போன வாகன ஓட்டிகள்
டெல்லியில் புதிதாக பாஜக ஆட்சி அமைத்து உள்ளது. பாஜக தனது வாக்குறுதிகளில் ஒன்றாக மாசற்ற டெல்லியை உருவாக்குவோம் என கூறி இருந்தது. அதன் ஒரு பகுதியாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது இனி டெல்லியில் 15 ஆண்டுகள் முடிந்த வாகனங்களுக்கு எரிபொருள் கட்டுப்பாடு விதித்துள்ளது.