சனி, 15 ஏப்ரல், 2023

ராமர் எங்கடா இருக்காரு?" கன்னட நடிகர் சேத்தன் குமார் . கொதிக்கும் இந்துத்துவ அமைப்புகள்!

 Susairaj Babu : வட மாநில அரசுகளுக்கெல்லாம் வழிவிட்ட, மைசூர் சமஸ்தானம்,  
வட மாநில சித்தாந்தங்களுக்கெல்லாம் வழிவிட்ட  மைசூர் சமஸ்தானம்,
இவை அனைத்தையும் எதிர்த்து,
மண்ணில் மக்களுக்காகவும் சாதி  பாகுபாடுகளை எதிர்த்தும், தேவையற்ற யாகங்கள் பூஜைகளை எதிர்த்து, மகான் பசவவன்னர் ஏற்படுத்தியதுதான் லிங்காயத்து மதம்.
அந்த லிங்காயத்து ( சாதி மத பாகுபாடற்ற, ஆகம வழிமுறை வழிப்பாட  அற்ற  மதம்) லிங்காயத்   மக்களின் பேராதவு   பெற்ற எடியூரப்பா  அவர்களின் துணை கொண்டு பிஜேபி கர்நாடகத்தில் ஆட்சியை அமைத்தது.

சித்தாந்தத்தோடு கேள்வி கேட்க யாருமே இல்லை.
ஒருவன் தோன்றினான்,
திரு. சேத்தன் அவர்கள், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவர்.

சாதி ஆணவக் கொலை: - தாயை வெட்டிக் கொன்ற கொடூரம் - மருமகள் படுகாயம்.. கிருஷ்ணகிரி அருகே மகன்,

மகனையும், தாயையும் ஆணவக் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள தண்டபாணி
கிருஷ்ணகிரி அருகே ஆணவக்கொலை

bbc.com   சாதி ஆணவக் கொலை: கிருஷ்ணகிரி அருகே மகன், தாயை வெட்டிக் கொன்ற கொடூரம் - மருமகள் படுகாயம் - BBC News தமிழ்
கிருஷ்ணகிரி அருகே தந்தையால் ஆணவக்கொலை செய்யப்பட்ட சுபாஷ்.
கிருஷ்ணகிரி அருகே சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட மகனை அவரது தந்தையே வெட்டிக் கொன்றதாகவும் தடுக்க முயன்ற தனது தாயையும் அவர் கொலை செய்ததாகவும் அவரது தாக்குதலில் படுகாயமடைந்த மருமகள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள அருணபதி கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் சுபாஷ், திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது உடன் பணிபுரிந்த, வேறு சாதியைச் சேர்ந்த அனுசுயா என்ற பெண்ணை அவர் காதலித்துள்ளார்.

கர்நாடக அரசிலை தீர்மானிக்கும் ஜேடிஎஸ்! காரணம் சாதி வாக்கு? மீண்டும் கிங் மேக்கர்.. புது சர்வே

 tamil.oneindia.com  - Vigneshkumar :  பெங்களூர்: கர்நாடகாவில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், இன்று புதியதொரு கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் கர்நாடக அரசிலையைத் தீர்மானிக்கும் சக்தி ஜேடிஎஸ் கட்சிக்குச் செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இப்போது பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அங்கே இன்னும் சில வாரங்களில் தேர்தல் நடக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தீவிரமா செய்து வருகிறது.
ஏற்கனவே அங்கே பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துத் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. தேர்தல் நெருங்க நெருங்க அங்கே சூறாவளி பிரசாரம் நிச்சயம் இருக்கும்.

வெள்ளி, 14 ஏப்ரல், 2023

ஆர்.எஸ்.பாரதி : ஆருத்ரா ஊழலை திசை திருப்பவே அண்ணாமலை நாடகம்"

கலைஞர் செய்திகள்  -Lenin  : தமிழ்நாடு  தி.மு.க மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகளை அண்ணாமலையால் 15 நாட்களுக்குள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியமா? என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சவால் விடுத்துள்ளார்.
இது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, "1972ல் எம்.ஜிஆர் ஊழல் குற்றச்சாட்டுகளை ஆளுநரிடம் கொடுத்தபோது கலைஞர் அவர்கள் பார்தேன், படித்தேன், ரசின்தேன் என்று சொன்னார
அதுபோன்று இன்றைக்கு அண்ணாமலை குறியுள்ளதைப் பார்க்கும் போது வேடிக்கையாக உள்ளது. அவர் எப்படிதான் ஐ.பி.எஸ் தேர்வு எழுதி பாஸ் ஆனோரோ?. உண்மையைச் சொல்லி அண்ணாமலைக்குப் பழக்கமில்லை. ஆற்காடு வீராசாமி இறந்துவிட்டார் என கூறினார், அவர் உயிரோடு இருக்கிறார். அதுபோலத்தான் குற்றச்சாட்டுகளும்.

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை!

 hindutamil.in : சென்னை: திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி என்று பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
திமுக ஆட்சி அமைந்த பிறகு பாஜக - திமுக இடையேயான கருத்து மோதல் அதிகரித்துள்ளது. தமிழக அரசின் பல துறைகள் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை அண்ணாமலை முன்வைத்து வந்தார். இந்நிலையில், அண்ணாமலையின் வாட்ச் விவகாரம் சூடு பிடிக்க தொடங்கியது.
அண்ணாமலை கையில் கட்டியிருப்பது வெளிநாட்டு வாட்ச் என்றும், அது பல லட்சம் மதிப்புடையது என்றும் திமுகவினர் விமர்சித்தனர்.
ஆனால், அது வெளிநாட்டு வாட்ச் அல்ல, ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் தயாரிக்கப்பட்ட வாட்ச் என அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

அண்ணாமலைக்கு பணம் செலுத்தும் ஆருத்ரா; காயத்ரி ரகுராம் பரபரப்பு ட்வீட்

நக்கீரன் அம்பேத்கரின் 132வது பிறந்தநாளையொட்டி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு காயத்ரி ரகுராம் மரியாதை செலுத்தினார்
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “புதிதாக எதையோ ஒன்றை பேசுவது போல் அண்ணாமலை பேசுகிறார். மக்களுக்கு எல்லாமே தெரிந்த ஒரு விஷயம்.
இவை அனைத்தும் நீதிமன்றங்களில் உள்ள விஷயம்.
குற்றச்சாட்டுகளை மட்டுமே எடுத்து வைப்பது சரியென்று படவில்லை.
திமுக ஃபைல்ஸ் என்று போட்ட வீடியோவில் திமுகவின் குடும்ப உறுப்பினர்களின் படங்களை போடுவேன் எனக் கூறினார்.
எம்எல்ஏ, எம்பியாக பொறுப்பில் இல்லாதவர்களின் படங்களையும் போடுவது தவறாகப்படுகிறது.

இந்தோனேசியாவில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

maalaimalar : ஜாவா: இந்தோனேசியாவில் இன்று மதியம் 3.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேஷியாவின் வடக்கு பகுதியில் டூபன் என்ற இடத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவானது. வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
சுனாமிக்கான எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளும், சேதங்களும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

அபிராமியை சாடிய லட்சுமி ராமகிருஷ்னன்.. எவ்வளவு முட்டாள்தனமான விஷயம்?:

 மின்னம்பலம் -christopher : கலாத்ரா பாலியல் புகார் விவகாரத்தில் அபிராமி பேசியது முட்டாள்தனமானது என்று நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் இன்று(ஏப்ரல் 13) பேசியுள்ளார்.
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் மீது பாலியல் புகார் எழுந்தது.
குற்றஞ்சாட்டப்பட்ட 4 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கல்லூரி மாணவிகள் இரண்டு நாட்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
அதனைத்தொடர்ந்து அங்கு பயின்ற முன்னாள் மாணவி ஒருவர் அளித்த பாலியல் புகாரின் பேரில் கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் மீது மகளிர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஓமானில் இலங்கை பெண்கள் (பாலியலுக்காக?) ஏலம் .. ஐ நா விசாரணைகளை ஆரம்பித்தது!

 தேசம்நெட் - அருண்மொழி : ஓமானில் இலங்கை பெண்கள் பாலியல் தொழிலாளர்களாக ஏலத்தில் விடப்பட்ட சம்பவம் குறித்து ஐநா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அடிமைத்தனத்தின் தற்போதைய வடிவங்கள் தொடர்பிலான ஐநாவின் விசேட அறிக்கையாளர் டொமொயோ ஒபக்கட்டா மூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பில் பெப்ரவரி ஏழாம் திகதி அவர் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
மனித உரிமைகள் மீறல்கள் குறித்து அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு! கலைஞர் நூற்றாண்டு முனையம் என பெயர் வைப்பு

tamil.oneindia.com  - Noorul Ahamed Jahaber : சென்னை: சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையத்தின் பணிகள் முடிவடைந்து இருக்கும் நிலையில், ஜூன் மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இந்த பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டசபையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்து இருக்கிறார். கலைஞர் நூற்றாண்டு முனையம் என்ற பெயரில் அது பயன்பாட்டுக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் வீட்டு வசதித்துறை மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் சேகர் பாபு பதளித்து பேசினார். அப்போது அவர், ரூ.393.74 கோடி மதிப்பில் கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து முனையம் ஜூன் மாதம் திறக்கப்படும். கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என்ற பெயரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைப்பார்.

வியாழன், 13 ஏப்ரல், 2023

Lingusamy – லிங்குசாமிக்கு சிறை தண்டனை.. திரையுலகில் பரபரப்பு

tamil.samayam.con  : சென்னை: Lingusamy (லிங்குசாமி) இயக்குநர் லிங்குசாமிக்கு காசோலை மோசடி வழக்கில் ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனந்தம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் லிங்குசாமி. மம்மூட்டி, முரளி, அப்பாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படத்தை குடும்பங்கள் கொண்டாடும் படமாக எடுத்து அதில் வெற்றியும் பெற்றார்.
அதனையடுத்து அவர் இயக்கிய ரன், சண்டக்கோழி, பையா உள்ளிட்ட படங்கள் பக்கா கமர்ஷியல் ஹிட்டாகின. குறிப்பாக ரன் படம் சாக்லேட் பாய் என்ற இமேஜிலிருந்து மாதவனை வெளியே கொண்டு வந்தது.

45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி- போலீசார் அனுமதி .. தமிழகத்தில் வருகிற 16-ந்தேதி

மாலைமலர் : சென்னை: தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த போலீசார் அனுமதி அளிக்காததை தொடர்ந்து அந்த அமைப்பின் நிர்வாகிகள் ஐகோர்ட்டை நாடினர்.
இதையடுத்து ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு ஐகோர்ட்டு அனுமதி அளித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணியை நடத்த அனுமதி அளித்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
இதைதொடர்ந்து தமிழகத்தில் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணியை நடத்த போலீசார் இன்று அனுமதி அளித்துள்ளனர்.
இதையடுத்து வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தப்படுகிறது.

பஞ்சாப் ராணுவ முகாமில் துப்பாக்கிச்சூடு: தமிழகத்தை சேர்ந்த வீரரும் உயிரிழப்பு

தினத்தந்தி  :  பஞ்சாப் ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கிச்சூடு: தமிழகத்தை சேர்ந்த வீரரும் உயிரிழப்பு
பஞ்சாப் ராணுவ முகாமில் அதிகாலையில் நடந்த துப்பாக்கி சூட்டில் சேலம் மாவட்டம் நங்கவள்ளியை சேர்ந்த ராணுவவீரரும் ஒரு இறந்துள்ளது தெரியவந்துள்ளது
அமிர்தசரஸ்,
பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் ராணுவ முகாம் உள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் தங்கி உள்ளனர். அந்த முகாமுக்குள் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் துப்பாக்கிகளால் சரமாரியாக சுடும் சத்தம் கேட்டது. உள்ளே பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்துகிறார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. உடனே, ராணுவத்தின் அதிவிரைவுப்படை முடுக்கி விடப்பட்டது.

BBC இலங்கை தமிழ் ஊடகத்துறையில் ஒரு ஜாம்பவான்" பொன்னையா மாணிக்கவாசகம்

மானிக்ஸ்
மாணிக்கவாசகத்துடன் எத்திராஜன் அன்பரசன்
பொன்னையா மாணிக்கவாசகம்

  அன்பரசன் எத்திராஜன்  -  பிபிசி தெற்காசிய ஆசிரியர்  : மூத்த பத்திரிகையாளர் மாணிக்கவாசகம் அவர்களின் மறைவு ஈடு செய்ய இயலாத இழப்பு. அவருடன் பல காலம் பணி புரிந்த எங்களுக்கு நம்மிடையே அவர் இன்று இல்லை என்பது மிக துயரமான நிகழ்வு. அவருக்கு வயது 77.
இலங்கையின் இனப் போர் நடைபெற்ற போது, வவுனியா மற்றும் பிற தமிழ் பகுதிகளில் அச்சுறுத்தல், மிரட்டல், சிறைவாசம், இவற்றை கடந்து, உண்மையை பிபிசி வாயிலாக வெளிக்கொண்டு வர வேண்டும் என்று அவர் காட்டிய முனைப்பு போற்றத்தக்கது.
தமிழ் பொதுமக்கள் மீது நடைபெற்ற தாக்குதல்கள், ஆட்கடத்தல், திட்டமிட்ட கொலைகள், மனித உரிமை மீறல்கள் போன்ற நிகழ்வுகளை நடுநிலையோடு அவர் செய்திகளாக தந்த விதம், ஊடக உலகில் பணிபுரிய விரும்பும் இளம் வயதினருக்கு ஒரு பாடமாக இருக்கும்.

பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநில முதல் மந்திரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் .. ஆளுநர் விவகாரம் -

 மாலை மலர்  :   சென்னை: தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே நிர்வாக ரீதியில் பிரச்சினை இருந்து வருகிறது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார்.
இதற்கிடையே, ஆளுநரின் நடவடிக்கையைக் கண்டிக்கும் வகையில் தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநருக்கு எதிராக நேற்று முன் தினம் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு ஆளுநருக்கு உரிய அறிவுரை வழங்க மத்திய அரசு, ஜனாதிபதியை வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கையில் இருந்து சீனாவுக்கு ஒரு லட்சம் குரங்குகள் ஏற்றுமதி .. மிருகக்காட்சி சாலைகளுக்க்காம்

 BBC Tamil  : இலங்கையிலுள்ள குரங்குகளை சீனாவிற்கு அனுப்புவதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக இலங்கை விவசாயத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
சீனாவிலுள்ள சுமார் 1000 மிருககாட்சிசாலைகளுக்கு இலங்கை குரங்குகளை கொண்டு செல்வதற்கான கோரிக்கை சீன அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சீன பிரதிநிதிகள் இலங்கை அதிகாரிகளுடன் மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிக்கின்றார்.
சீனாவினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த கோரிக்கை தொடர்பிலான யோசனையை தாம் அமைச்சரவைக்கு முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

புதன், 12 ஏப்ரல், 2023

பி பி சி செய்தியாளர் திரு பொன் .மாணிக்கவாசகம் காலமானார்! இலங்கை போர் செய்திகளை தந்த முதன்மை செய்தியாளர்

May be an image of 1 person, smiling and eyeglasses

வட இலங்கையைச் சேர்ந்த மிகச்சிறந்த தமிழ் ஊடகவியலாளர்களில் ஒருவரான இவர்,
இலங்கை இனப்பிரச்சனையை, குறிப்பாக ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பம் முதல் அதன் கொடூரமான முடிவு வரை பதிவு செய்தார்..
முக்கியமாக கடும் போர் நடந்த பகுதிகளில் இருந்து. இலங்கை இராணுவம் மற்றும் தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு இடையில் இருந்து இந்த பணியை திறம்பட செய்தார்   இலங்கை ராணுவமும் போராளிகள் குழுக்களும் அவர்களை பற்றிய சிறு விமர்சனங்களை கூட சகித்து கொள்ளமுடியாதவர்கள்
இந்த நிலையில் திரு மாணிக்கவாசகம் அவர்கள் கத்தி முனையில் நடந்தார்.

இவரது ஊடக பணி ஒரு சில நாட்களோ வாரங்களோ மாதங்களோ வருடங்களோ அல்ல,
மாறாக 30  நீண்ட ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்தது
 பல நேரங்களில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.
இருந்தாலும்  அவர் தனது பணியை கைவிடவில்லை.
தன்னால் முடிந்த  அளவு சிறந்த ஊடகப்பணியை அவர் தொடர்ந்தார்.

சோனியா காந்தி : ஒருமித்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன் கை கோர்ப்போம்:

மாலை மலர் :   எதிர்க்கட்சியினர் மீதுதான் 95 சதவீத வழக்குகள் போடப்பட்டுள்ளன.
வெறுப்புணர்வு, வன்முறை பெருகி வருவதை பிரதமர் கண்டு கொள்வதில்லை.
புதுடெல்லி : காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ஆங்கில பத்திரிகை ஒன்றில் கட்டுரை எழுதி உள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:- கடந்த மாதங்களில் பிரதமர் மோடியும், அவரது அரசும் இந்திய ஜனநாயகத்தின் 3 தூண்களை (பாராளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை) முறையாக அகற்றி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

BURQA 105 வருட தமிழ்ச் சினிமா வரலாற்றில் யாருமே தொடத் தயாராக இருக்காத மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட.. ------

 Rishvin Ismath  :    'புர்கா'   அது பெண்களை மூடிவைக்கும் ஆடையின் பெயர் மட்டுமல்ல, மூன்று நாட்களுக்கு முன் வெளியாகிய ஒரு புரட்சித் தமிழ்த் திரைப்படத்தின் பெயர் கூட அது தான்.
'புர்கா' திரைப்படம் AHA OTT யில் கிடைக்கின்றது. ( https://www.aha.video/player/movie/burqa )
..105 வருடகால தமிழ்ச் சினிமா வரலாற்றில் இதுவரை யாருமே தொடக் கூடத் தயாராக இருக்காத மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட ஒரு பெரும் பரப்பிற்கான வாயிலை மிக அழகாகவும், அமைதியாகவும், நிதானமாகவும் திறந்து விட்டிருக்கின்றது 'புர்கா'. 'புர்கா' தமிழ்த் திரையுலக வரலாற்றில் ஒரு புரட்சி என்று சந்தேகமே இல்லாமல் சொல்லலாம்.
. 'புர்கா' என்று ஒரு திரைப்படம் வெளியாகியுள்ளது என்று திரைப்படத்தின் பெயரைக் குறிப்பிட்டு எழுதிவிடக் கூடாது என்பதில் எல்லா விதமான இஸ்லாமியவாதிகளும் ஒற்றுமைப் பட்டிருப்பது போலத் தோன்றுகின்றது. போஸ்ட்டரையும், ட்ரெய்லரையும் பார்த்துவிட்டு படத்தின் உள்ளடக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் தான் முஸ்லிம் சமூகத்தை "படத்தைப் பார்த்துவிடாதே" என்று எச்சரித்துப் பதிவு எழுதுகின்றார்களே தவிர இவர்கள் யாரும் இதுவரை படத்தைப் பார்க்கவில்லை. யாரோ சொல்லிக் கொடுத்தது போல படத்தின் பெயரைக் குறிப்பிடாமல் இருக்க வேண்டும் என்பதில் இஸ்லாமியவாதிகள் படு கவனமாக இருக்கின்றார்கள்.

செவ்வாய், 11 ஏப்ரல், 2023

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அமலுக்கு வந்தது- மீறி விளையாடினால் ரூ.5 ஆயிரம் அபராதம்

 மாலை மலர்  :  சென்னை:  ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களால் தமிழ்நாட்டில் பலர் பணத்தை பறிகொடுத்த நிலையில் தற்கொலைக்கு தள்ளப்படும் நிலை அதிகரித்து வந்தது.
இதனால் இந்த சூதாட்டத்துக்கு தடை விதிக்க தமிழக அரசு சார்பில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 21-ந்தேதி முதன் முறையாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் போது அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.
இதைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க கூடிய சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
இதை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இலங்கைத் தமிழர்களுக்கான வீடுகளை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு!

  hirunews.lk  இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகம் வேலூரில் அமைக்கப்பட்டு வரும் கொன்கிரீட் வீடுகளை, மாநிலத்தின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு செய்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 106 முகாம்களில் வசிக்கும் 19 ஆயிரத்து 46 இலங்கைத் தமிழர்களுக்கான இந்த முயற்சியை 2021 நவம்பரில் வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆரம்பித்து வைத்தார்.
தற்போது வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலையில் 18 முகாம்களில் 2 ஆயிரத்து 239 இலங்கை தமிழர் குடும்பங்கள் வசித்து வருகின்றன.

“ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இன்றே அமலுக்கு வரும்..”: சட்ட மன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

  Kalaignar Seithigal -  Prem Kumar  :  தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :-
பேரவைத் தலைவர் அவர்களே, இன்று காலை நாம் நிறைவேற்றி அனுப்பிய அரசினர் தனித் தீர்மானத்தில், ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடைச் சட்டம் குறித்த மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் ஆளுநரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டு, நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டி,
இதனால் தமிழ்நாட்டின் நிருவாக நலனும், இளைஞர்களின் எதிர்காலமும் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் எடுத்துக்காட்டியிருந்தோம்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய கட்சி தகுதி இழப்பு! மம்தா பானர்ஜியின் வாக்குவங்கி சரிவு?

 மாலைமலர் : புதுடெல்லி மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டிருந்த தேசிய கட்சி என்ற அந்தஸ்தை தலைமை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றுள்ளது.
இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தேசிய அந்தஸ்தும் திரும்ப பெறப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் ராஷ்டிரிய லோக் தளம், ஆந்திராவில் பாரத் ராஷ்டிர சமிதி, மணிப்பூரில் பிடிஏ கட்சி, புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கடசி, மேற்கு வங்காளத்தில் ஆர்எஸ்பி, மிசோரமில் எம்பிசி ஆகிய கட்சிகளுக்கு வழங்கப்பட்ட மாநிலக் கட்சி அந்தஸ்தையும் தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.

திங்கள், 10 ஏப்ரல், 2023

மலையகத்தில் பல்கலைக்கழகம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு!

May be an image of 3 people, newsroom and text that says 'மலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று (10) நடை பெற்றது. இதன்போது மலையக பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் நான் விடுத்த கோரிக்கையை ஏற்றே, ஜனாதிபதி மேற்படி உத்தரவை பிறப்பித்தார். @JeevanThondaman jthondaman f Jeevan Thondaman'

தேசம் நெட் - அருண்மொழி  : மலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டார்.
நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று (10) நடைபெற்றது.
இதன்போது மலையக பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் விடுத்த கோரிக்கையை ஏற்றே, ஜனாதிபதி மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.

இடைஞ்சல் தர நினைத்தால் கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம்..”: சட்டபேரவையில் ஆளுநரை எச்சரித்த முதலமைச்சர்!

 Kalaignar Seithigal -  Prem Kumar  :  “தமிழ்நாடு மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுவதைத் தவிர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு
உரிய காலத்திற்குள் ஒப்புதல் அளித்திட வேண்டும்” - என தமிழ்நாடு ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை ஒன்றிய அரசும், குடியரசுத் தலைவரும் உடனடியாக வழங்கிட வேண்டும்
என்று வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (10-4-2023) அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அதானி நிறுவனத்துக்கு கைமாறும் காரைக்கால் துறைமுகம்- கூடுதல் வருவாய் கிடைக்க அரசு நடவடிக்கை

 மாலைமலர் : காரைக்கால் துறைமுகம் மூலம் ஆண்டுக்கு சராசரியாக ரூ.9.5 கோடி வீதம் 14 ஆண்டுகளில் மொத்தம் ரூ.133.45 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
புதிய ஒப்பந்தத்தில் புதுவை அரசுக்கு 10 சதவீத ஈவுத்தொகை வழங்க வேண்டும்.
புதுச்சேரி: புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் 2006-ம் ஆண்டு துறைமுகம் அமைக்க தனியார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.
காரைக்கால் துறைமுகத்திற்காக 600 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கி தந்தது.
துறைமுகத்தின் வருவாயில் ரூ.100-க்கு ரூ.2.6 சதவீதம் அரசுக்கு வழங்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது.

தலாய் லாமா 8 வயது சிறுவனிடம் பொது இடத்தில் சிறுவனிடம் சில்மிஷம்

 பிபிசி : தர்மசாலா: தலாய்லாமா சிறுவனுக்கு முத்தம் தந்த விவகாரம் மிகப்பெரிய விஸ்வரூபமெடுத்துள்ளது..
இதற்கு உலகம் முழுவதிலுமிருந்து கண்டனங்கள் வலுத்து வருகின்றன.. இதனிடையே, சிறுவனின் உதட்டில் முத்தமிட்டதற்கு மன்னிப்பு கேட்பதாக திபெத்திய புத்த மத தலைவர் தலாய்லாமா அறிவித்துள்ளார்.
சிறுவனின் உதட்டில் திபெத்திய ஆன்மிக தலைவரான தலாய்லாமா முத்தம் கொடுத்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அண்டை நாடான திபெத்தில் ஒரு பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.. இங்கு வசித்து வருபவர் தலாய்லாமா… இவர் ஒரு ஆன்மீக தலைவர் ஆவார்..

ஜப்பானில் உயிரிழந்த இலங்கை மாணவி.. ஜப்பானிய சிறை அதிகாரிகளின் அலட்சியம் கார

 ceylonmirror.net  - jeevan  : கடந்த மார்ச் 06, 2021 அன்று ஜப்பானின் நகோயா தடுப்பு மையத்தில் விஷ்மா சந்தமாலி ரத்நாயக்க (33) முறையான சிகிச்சை கொடுக்கப்படாமல் இறந்த விதத்தைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் முதன்முறையாக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
அதே சமயம் இதுகூட தணிக்கை செய்யப்பட்டது என பிந்திய தகவல்கள் வழி தெரிவிக்கப்படுகிறது.
சந்தமாலி, தன்னால் சுவாசிக்க சிரமமாக இருப்பதாக தெரிவித்த போதும், தடுப்பு மைய அதிகாரிகள் அதை பெரிதுபடுத்தவில்லை என காட்சிகள் மூலம் தெரிகிறது.
இரண்டு வருடங்களுக்கு முன் சந்தமாலி இறந்து போனார். அப்போது அவருக்கு வயது 33 .

அம்பாசமுத்ரம் ஏ எஸ் பி பல்பீர் சிங் பல் பிடுங்கிய விவகாரம்! செயலில் இறங்கிய அமுதா ஐ.ஏ.எஸ் !

A gnashing of teeth affair; Amutha IAS, who had come into action a day earlier

நக்கீரன் : திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் குற்ற வழக்கில்,
 தொடர்புடைய நபர்களின் பற்களைப் பிடுங்கிய உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர்சிங் மற்றும் காவல் துறையினர் துன்புறுத்தியதாக சமூக ஊடகங்களில் வெளியான புகார்கள் தொடர்பாக,
சேரன்மகாதேவி உட்கோட்ட நடுவர் / சார் ஆட்சியர் விசாரணை மேற்கொள்ள 26.03.2023 அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரால் உத்தரவிடப்பட்டது.
மேலும், இந்நிகழ்வில், பல்வீர் சிங் கடந்த 29.03.2023 அன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மேற்படி புகார்கள் தொடர்பாக சார் ஆட்சியரின் முதற்கட்ட விசாரணை அறிக்கை கடந்த 3 ஆம் தேதி ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஞாயிறு, 9 ஏப்ரல், 2023

இந்தியா வரும் உக்ரைன் வெளியுறவு அமைச்சர்: காரணம் என்ன?

 மின்னம்பலம் -monisha  : உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் எமின் தபரோவா, நான்கு நாட்கள் பயணமாக இன்று (ஏப்ரல் 9) இந்தியா வருகிறார்.
அவரது இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவில், வெளியுறவுத் துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகியையும், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் விக்ரம் மிஸ்ரியையும் எமின் தபரோவா சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், இந்தப் பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியை உக்ரைனுக்கு வருமாறு அவர் அழைப்பு விடுப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

நைஜீரியாவில் மர்ம கும்பல் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு- 50 பேர் பலி

நைஜீரியாவில் மர்ம கும்பல் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு- 50 பேர் பலி

மாலை மலர் :  ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் பெனு மாகாணம் உமோகிடி என்ற கிராமத்துக்குள் நேற்று மர்ம கும்பல் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்தது. அவர்கள் அங்கு கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவது போல சுட்டு தள்ளினர்.
இதனால் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு அங்கும், இங்குமாக ஓட ஆரம்பித்தனர்.
சிலர் பயத்தில் புதர்களுக்குள் ஒளிந்து கொண்டனர். இந்த கொடூர சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கும், கால்நடை மேய்ப்பவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

சம்மாந்துறை பள்ளிவாசலில் மோதல்! ஒருவர் பலி:- விசாரணை தீவிரம் (Video)

.tamilmirror. : சம்மாந்துறையில் பதற்றம்; ஒருவர் பலி – மூவர் கைது
பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாக தெரிவுக்கான ஆலோசனைக் கூட்டம் ஒன்றின் பின் இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலியானதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (7) மாலை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராமம் -2 பகுதியில் அமைந்துள்ள மஜ்ஜிதுல் முனீர் பள்ளிவாசல் முன்றலில் இடம்பெற்றுள்ளது.
சம்மாந்துறை பிரதேச எல்லைக்குட்பட்ட பள்ளிவாசல்களுக்கு புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதற்காக இடம்பெற்ற நிர்வாக தெரிவு கூட்டம் ஒன்றில், சிலர் எதிர்வரும் நோன்பு பெரு நாள் முடிந்தவுடன் நிர்வாகத்தை தெரிவு செய்யுமாறு கோரியதுடன் மற்றுமொரு குழுவினர் சில தினங்களில் புதிய நிர்வாகம் தெரிவு செய்ய பட வேண்டுமென தெரிவித்திருந்தனர்.