சனி, 25 மார்ச், 2017

சிவசேனா எம்.பி.,க்கு விமானங்களில் பயணம் செய்வதற்கான அனுமதி கிடையாது

vikatan ஏர் இந்தியா விமான ஊழியரை சிவசேனா எம்.பி.,யான ரவீந்திர கெயிக்வாட் இந்திய விமானங்களிலும் பயணம் மேற்கொள்ளக்கூடாது என இந்தியன் ஏர்லைன்ஸ் கூட்டமைப்பு அதிரடியாகத் தடை விதித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது மேலும் இரண்டு விமான சேவை நிறுவனங்கள் ரவீந்திர கெயிக்வாட்-க்கு விமானங்களில் பயணம் செய்வதற்கான அனுமதியை மறுத்துள்ளது. கடந்த வியாக்கிழமையன்று சிவசேனா எம்.பி.,யான ரவீந்திர கெயிக்வாட் புனேவில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தார். அப்போது ரவீந்திர கெயிக்வாட்-க்கு முதல் வகுப்பு இருக்கை தராமல் இரண்டாம் வகுப்பு இருக்கை தரப்பட்டது. அதனால் கோபமடைந்த ரவீந்திர கெயிக்வாட் விமான ஊழியரை கடுமையாக தாக்கியதோடு மட்டுமல்லாமல் செருப்பாலும் பலமுறை அடித்திருக்கிறார். ஆனால் அந்த விமானத்தில் முதல் வகுப்பு இருக்கையே கிடையாது. நடந்த இந்த பிரச்னையில் என் தவறு எதுவும் கிடையாது. எனவே என்னால் மன்னிப்பு கேட்க முடியாது. அந்த விமான ஊழியரை முதலில் மன்னிப்பு கேட்க சொலுங்கள் என்று ரவீந்திர கெயிக்வாட் பதிலளித்துள்ளார்.

ஆயா நான் செத்துருவனா ? சிறுமி சர்மிளா கொல்லப்பட்ட கதை !

ஏண்டா பாவிகளா…முதலுதவி பண்ண வேண்டாமா?…என்ன பண்ணா காப்பத்தலாமுனு சொல்லியிருக்கலாமே…பாம்பு விஷம் எம்பொண்ண சாவடிக்கலடா…உங்களோட அலட்சியம்தான் சாவடிச்சிருக்குடானு கத்திட்டு வந்துட்டேன்.
காஞ்சிபுரத்திலிருந்து ஒரு நகரப் பேருந்து.  பக்கத்தில்,  ஒரு பெண் அசதியாக உட்கார்ந்தார்.  உடல் நலமில்லை என்பது பார்த்ததுமே தெரிந்தது. சிறிது நேரம் கழித்து,  “உடம்புக்கு என்னாச்சு” என்றேன்.  “நாலு நாளா, பச்ச தண்ணி பல்லுல படல, மனசே ரொம்ப கஷ்டமாயிருக்கு… சாப்புட நினைச்சாலும், வாந்தி மயக்கமா இருக்கு… அதான் டாக்டரான்ட போய்ட்டு வரேன்” என்றவாறு தன்னுடைய பழைய செல்போனில் வீடியோ ஒன்றை எனக்கும் காட்டினார். அதில், இரண்டு பெண் குழந்தைகள் பள்ளி விழாவில் ஆடுவதற்காக வீட்டில் பயிற்சி செய்துக் கொண்டிருப்பது ஓடியது.  முடிந்ததும் போனை உள்ளே வைத்துவிட்டு  பேசத் தொடங்கினார்.
“சர்மிளா… எங்க பக்கத்துவீட்டுப் பொண்ணு, என் பொண்ணு மாதிரித்தான் இரண்டு பேரும் ஏகனாம் பேட்டை ஸ்கூல 7 வது  படிக்கறாங்க… போன வாரம் இன் நேரம் நினைச்சிக்கூட பார்திருக்கமாட்டோம்…சர்மிளாவ…  வெள்ள துணியில சுத்தி சுடுகாட்டுல புதைப்போம்னு…” சொல்லிக்கொண்டே அழுதார்.

பொறுத்ததால் 400 உயிர் பறிபோனது. இன்னும் பொறுத்திருந்தால் 4 லட்சம் உயிர் பறிபோய் விடும்: அய்யாக்கண்ணு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தென்னிந்திய நதிகள் இணைப்புக் குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 84 விவசாயிகள் கடந்த 11 நாட்களாக தலைநகர் டெல்லியில் போராடி வருகிறார்கள். இதுகுறித்து அய்யாக்கண்ணு கூறியதாவது:– தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டு, நெற் பயிர்கள் கருகியதை கண்டு 400 விவசாயிகள் துயரத்திலும், மனவேதனையிலும் மாண்டு போய் உள்ளனர். ஆனால் தமிழகத்தில் போராடினால் மத்திய அரசு கண்டுகொள்வதில்லை என்பதால், தலைநகர் டெல்லியில் கடந்த 11 நாட்களாக போராடி வருகிறோம். நிதி மந்திரி அருண் ஜெட்லி கடந்த ஆண்டு கூறியதை போன்று, தற்போதும் பொறுத்திருங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று கூறுகிறார். ஓராண்டு பொறுத்து இருந்ததால் 400 விவசாயிகளுடைய உயிர் பறிபோய் இருக்கிறது. இன்னும் பொறுத்து இருந்தால் அடுத்த ஆண்டுக்குள் 4 லட்சம் விவசாயிகளுடைய உயிர் பறிபோய் விடும். மத்திய அரசு எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை இங்கிருந்து (டெல்லி) நகர மாட்டோம். மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியாது என்று பிடிவாதம் பிடித்தால், நாங்கள் ஒவ்வொரு விவசாயியும் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொள்வோம். இதை தவிர வேறு வழி இல்லை.  nakkeeran

நீட் தேர்வு: மத்திய மாநில அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வை கொண்டுவந்தால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறி, தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை.
இந்நிலையில் நேற்று நீட் தேர்வு தமிழகத்தில் மூன்று இடங்களில் நடைபெறும் என மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

கங்கை அமரனை எதிர்க்கும் யுவன் ஷங்கர் ராஜா!


‘கங்கை அமரனுக்குத் தெரிந்து இதெல்லாம் நடக்கிறதா? இல்லை... நடைபெறும் சம்பவங்களை கங்கை அமரன், தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறாரா?’ என்று தெரியவில்லை.
பா.ஜ.க-வின் சார்பாக ஆர்.கே.நகர் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளராக கங்கை அமரன் அறிவிக்கப்பட்ட சமயம், இளையராஜா - எஸ்.பி.பி பிரச்னையும் விஸ்வரூபமெடுத்தது. அப்போது, தேர்தல் தொடர்பாக கொடுத்த பேட்டிகளின்போது இளையராஜா பேராசைப் பிடித்தவர் என்று பேசியிருந்தார். அந்த செய்தி சுவாரஸ்யம் இழந்த சமயம் இப்போது ஆர்.கே.நகர் தேர்தலுக்கான வாக்கு வேட்டையில் இறங்கியிருக்கிறார்.

வெள்ளி, 24 மார்ச், 2017

கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் ஆறுகளை மீட்டெடுக்க நீதிமன்றம் உத்தரவு!

இன்று சென்னையில் கழிவுநீர் ஓடும் கால்வாய்களாக உள்ள கூவம் ஆறு, அடையாறு ஆறு, பக்கிங்ஹாம் கால்வாய். இவை ஒரு காலத்தில் நல்ல தண்ணீர் ஓடும் ஆறாகவும், அதில் சென்னை மக்கள் படகு போக்குவரத்தையும் மேற்கொண்டார்கள் என்ற தகவல் இன்றைய தலைமுறையினரால் நம்பமுடியாததாக இருக்கலாம். இப்படி தூய்மையாக இருந்த சென்னையின் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் சென்னை மாநகரத்தின் மக்கள் பெருக்கம், பன்னாட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றின் கழிவுகளால் இன்று துர்நாற்றம் விசும் கழிவுநீர் கால்வாய்களாக மாறிவிட்டன. கூவம் ஆற்றை தூய்மையாக்க திமுக ஆட்சிக் காலத்தில் மு.க.ஸ்டாலின் சென்னையின் மேயராக இருந்தபோது அதை சுத்தமாக்கும் திட்டங்கள் தொடங்கப்பட்டாலும், பெரிய அளவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.

ரஜினி இலங்கை செல்லும் பின்னணியின் வரலாறு!

ரஜினி இலங்கை செல்லும் காரணம் என்னவென்று முழுவதுமாக வெளியிடப்படவில்லை. லைகா சார்பில் கட்டப்பட்ட 150 வீடுகளை திறக்கச் செல்லும் தகவல் மட்டுமே தற்போது வெளியாகியிருக்க, அந்த 150 வீடுகளை லைகா நிறுவனம் கட்டுவதற்கான காரணமென்ன என்பதை நோக்கிப் பயணித்தபோது கிடைத்த தகவல்களை இங்கே தொகுத்திருக்கிறோம்.

ஈழப்போருக்குப் பிறகான மீள் குடியேற்ற நிதி பகிர்ந்தளிக்கப்பட்டதில் பாரபட்சம் பார்க்கப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து சுபாஷ்கரன் அல்லிராஜாவின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் லைகா கிராமம் உருவாக்கும் திட்டம் 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இலங்கையிலுள்ள பூந்தோட்ட முகாமில் வசிக்கும் 104 குடும்பங்கள் கூரை இல்லாத வீடுகளிலும், சுவர் இல்லாத மறைவிடங்களிலும் வாழ்ந்துவந்த நிலையில் இந்த லைகா கிராமம் என்ற திட்டம் தொடங்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு இல்லை!minn


minnambalam :தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கு, மாணவர்கள் பிளஸ்-டூ பொதுத்தேர்வில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையிலேயே சேர்க்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு மத்திய அரசு நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்று கூறியது. இதனால், தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் விலக்களிக்க வேண்டும் என்று தமிழக அரசு, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. இதையடுத்து, நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்கும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. அந்த அவசரச் சட்டம் ஓராண்டில் முடிவடைந்ததையடுத்து, தமிழக மாணவர்கள் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதவேண்டிய சூழல் ஏற்பட்டது. நீட் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் அமைந்தவை. அந்தப் பாடத் திட்டமும் தமிழக அரசின் பாடத் திட்டமும் வேறுவேறானவை. அதனால், தமிழக மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்படுவார்கள் என்பதால், தமிழக சட்டசபையில் நீட் தேர்வு விலக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில், நாடு முழுவதும் மே 7ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்துக்கு நீட் தேர்வு விலக்களிப்பது குறித்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மக்களவை சபாநாயகர் தம்பிதுரை இருவரும் இன்று மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்துப் பேசினார்கள்.

கீழடி அகழாய்வு : பழந்தமிழர் நாகரிகத்தின் கருவூலம் !


கீழடியில் இதுவரை கிடைத்துள்ள பொருட்களை ஆய்வுசெய்கையில் ஒன்றில்கூட மதம் தொடர்பான அடையாளங்கள் இல்லை என்பது. “தமிழ் மொழியைச் சமயச்சார்பற்ற மொழி” என்று மதிப்பீடு செய்த அறிஞர் கால்டுவெல்லின் கருத்தை உறுதி செய்கின்றன.
ந்தியா வேதங்களின் நாடு என்றும், வேத கலாச்சாரம்தான் இந்தியக் கலாச்சாரம் என்றும் கூறிக்கொண்டு  இன்றைக்கு ஆட்சியில் உள்ள இந்து மதவெறிக் கும்பல் ஆரியப் பார்ப்பனியக் கலாச்சாரத்தை நம்மீது திணித்து வருகிறது. ஆனால், ஆரியர்களுக்கு முன்பே, அவர்களைவிடச் சமூக அமைப்பிலும், கலாச்சாரத்திலும், கலை இலக்கியங்களிலும் முன்னேறிய சமூகமாக, திராவிட சமூகம் விளங்கியது என்பது கால்டுவெல் போன்றவர்களின் மொழி ஆய்வுகள் மூலமாகவும், சங்க இலக்கிய ஆய்வுகள் மூலமாகவும், சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சியின் மூலமாகவும் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஆரிய கலாச்சாரத்திற்கு முந்தைய, அதற்குச் சற்றும் தொடர்பில்லாத, சங்க இலக்கியங்கள் சுட்டிக்காட்டும் வகையில் அமைந்த ஒரு நகர சமூக அமைப்பு தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது என்பதை உறுதி செய்யும் வரலாற்றுச் சான்றுகள் கீழடி அகழ்வாய்வின் மூலம் தற்போது கிடைத்துள்ளது. இந்து மதவெறிக் கும்பலின் ஆரிய பித்தலாட்டங்களுக்கு எதிரான மிக முக்கியமான இந்தக் கண்டுபிடிப்பை இருட்டடிப்பு செய்வதுடன், கீழடி ஆய்வைத் தொடரவிடாமல் முட்டுக்கட்டை போடும் வேலையிலும் மத்திய அரசு இறங்கியது. பா.ஜ.க.  அரசின் இந்த அயோக்கியத்தனத்திற்கு எதிராகத் தமிழகத்தின் அறிவுத்துறையினர்,  அரசியல் கட்சிகள், ஜனநாயக சக்திகள் எனப் பலரும் கண்டனங்கள் எழுப்பிய பிறகு, கீழடி ஆய்வுகள் தொடரும் என அறிவித்துத் தற்காலிகமாகப் பின்வாங்கியிருக்கிறது, இந்து மதவெறிக் கும்பல்.

சிவசேனா எம்.பி. ஏர் இந்தியா ஊழியரை 25 தடவை அறைந்தார் .


மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட். இவர் பெயரில், மத்திய பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமானத்தில் டெல்லிக்கு எந்த தேதியில் வேண்டுமானாலும் ‘பிசினஸ்’ வகுப்பில் பயணிப்பதற்கு டிக்கெட் எடுக்கப்பட்டு இருந்தது.;திடீரென அவர், நேற்று காலை 7.35 மணிக்கு மராட்டிய மாநிலம் புனேவில் இருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தில்தான் சென்றாக வேண்டும் என்று அடம்பிடித்தார். அதில், எல்லா இருக்கைகளுமே ‘எகனாமி’ வகுப்பை சேர்ந்தவை. இருப்பினும், வேறு வழியின்றி அதில் பயணம் செய்தார். டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கிய பிறகும், விமானத்தை விட்டு இறங்காமல் அமர்ந்திருந்தார்

சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி செல்லாது: அதிரடி காட்டும் தேர்தல் ஆணையம்!

அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணி, ஓபிஎஸ் அணி இரண்டுக்கும் வழங்காமல் முடக்கியது தேர்தல் ஆணையம். இதனையடுத்து அடுத்ததாக சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவியும் பறிக்கப்படும் என தகவல்கள் வருகின்றன. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது நேற்று தேர்தல் ஆணையத்தில் பொதுச்செயலாளர் நியமனம் குறித்து இப்போது வாதிட வேண்டாம் என கண்டிப்புடன் கூறிய தேர்தல் ஆணைய அதிகாரிகள், தொடர்ந்து ஓபிஎஸ் அணி வழக்கறிஞர் வைத்த வாதத்தை கேட்டு அதிர்ந்து போய் பதில் ஏதும் சொல்லாமல் இருந்துள்ளார்.<>ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன் வாதாடியபோது, சசிகலா உச்ச நீதிமன்றத்தால் குற்றாவளி என தீர்ப்பிடப்பட்டு, தண்டனை உறுதி செய்யப்பட்ட குற்றவாளி. அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் பெயரை அதிமுகவினரால் உச்சரிக்க முடியவில்லை.. துரைமுருகன்

சென்னை: அதிமுக தொண்டர்களால் தங்கள் கட்சியின் பெயரை கூட உச்சரிக்கக் முடியவில்லை என்று திமுக முதன்மை செயலாளரும், சட்டசபை எதிர்கட்சி துணைத்தலைவருமான துரைமுருகன் தெரிவித்தார். முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவடைந்ததை அடுத்து காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுகவின் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி, திமுக, தேமுதிக, பாஜக, நாம் தமிழர், மார்க்சிஸ்ட் என 7 முக்கிய கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.  சசிகலாவுக்கு எதிர்ப்பு..00:50 சசிகலாவுக்கு எதிர்ப்பு.. 
 இந்தத் தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தைக் கைப்பற்ற அதிமுகவின் இரு அணிகளும் முட்டி மோதின. ஆனால் அதிமுக பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் அதிரடியாக புதன்கிழமை முடக்கி உத்தரவிட்டது.

அசோகமித்திரன் ... minnambalam : அசோகமித்திரன் இறந்துவிட்டார் என்ற செய்தி ‘புதிய தலைமுறை’யில் பார்த்தபோது என்னால் நம்ப முடியவில்லை. போன வாரம்தான் அவருடைய பேத்தியின் திருமண வைபவத்தின்போது அவரைச் சந்தித்தேன். நான் எப்போதும் வாரம் ஒருமுறையாவது அவரைச் சந்திப்பது வழக்கம். அவருக்குத் தேவையான உதவிகளை செய்துகொண்டிருப்பேன். எங்காவது அவரை அழைத்துக்கொண்டு போவதற்கு நானும் கூட நின்று ஒத்தாசை செய்வேன். சமீபத்தில் நற்றிணை அலுவலகத்துக்கு அவரை அழைத்துக்கொண்டு போனேன். குறுகலான அந்த இடத்துக்கு அவரை அழைத்துக்கொண்டு போனபோது அவர் வாசல்படியில் தடுமாறி விழத் தெரிந்தார். உடனே அவர் கீழே விழாமல் பிடித்துக்கொண்டேன். ஒவ்வொரு முறையும் அவர் ஏதாவது கூட்டத்துக்கோ அல்லது ஏதாவது திருமணத்துக்கோ செல்லும்போது நான்தான் துணையாகச் செல்வேன்.

பள்ளி மேம்பாட்டு நிதியை தமிழகம் திரும்பக்கொடுத்தது.

minnambalam : தமிழக அரசு கடுமையான கடன் சுமையில் தத்தளிக்கும் இந்தச் சூழலில் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே கடந்த மார்ச் 16-ம் தேதியன்று தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் 2017-18 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையின்போது நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ‘ராஷ்ட்ரிய சிக்க்ஷா அபியான்’திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு வழங்கவேண்டிய ரூ.1,266 கோடி நிதியை ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு தாமதிப்பதாகக் குற்றஞ்சாட்டினார். தமிழகத்துக்கு இந்தத் திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு தாமதிப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ள அதே சூழலில் தமிழக மேல்நிலைப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்காக ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.400 கோடியை மத்திய அரசிடம் தமிழக அரசு திரும்பி ஒப்படைத்துள்ளது. மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்த ரூ.400 கோடியைத் தமிழக அரசு ஏன் திரும்ப ஒப்படைத்தது? இதற்கான காரணம் என்ன?

வியாழன், 23 மார்ச், 2017

தொப்பி' சின்னத்துக்கு எப்படி ஓட்டு கேட்க முடியும் ? பதறும் சசிகலா அணியினர்

பன்னீர்செல்வம்சசிகலா அணிக்கு தேர்தல் ஆணையம் 'தொப்பி' சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தச் சின்னத்தை மக்கள் மத்தியில் எப்படி பிரபலப்படுத்த முடியும் என்ற கவலையில் அந்த அணியைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.
சசிகலா அணிக்கும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கும் இடையே நடந்த மோதல், அ.தி.மு.க.வின் 'இரட்டை இலை' சின்னத்தை முடக்க வைத்துவிட்டது. கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை இரண்டு அணிகளும் பயன்படுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் சசிகலா அணியில் களமிறங்கும் டி.டி.வி.தினகரன், பன்னீர்செல்வம் அணியில் போட்டியிடும் மதுசூதனன் ஆகிய இருவரும் சுயேச்சை வேட்பாளராகவே இந்த இடைத்தேர்தலில் கருதப்படுவர்.

62 ஆயிரம் கோடி கேட்ட தமிழகத்திற்கு வெறும் 2,014 கோடி ஒதுக்கீடு!

தமிழகத்திற்கு வறட்சி மற்றும் வெள்ள நிவாரணத்திற்கு 2,014 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த நிவாரணத்தொகை முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு 62 ஆயிரம் கோடி கோரியதற்கு மத்திய அரசு வெறும் 2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. வறட்சி நிவாரணமாக 39,566 கோடியும், வெள்ள நிவாரணமாக 22, 573 ஆயிரம் கோடியும் கோரியிருந்த நிலையில் வெறும் 2,014 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

இரட்டை இலை விசாரணை: 10 அம்சங்கள்

புதுடில்லி: இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான சசிகலா மற்றும் ஓ.பி.எஸ்., தரப்பு விவாதம் தேர்தல் ஆணையத்தில் இன்று(மார்ச் 22) நடந்தது. தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தலைமையில் நடந்த இந்த விவாதத்தின் போது நடந்த 10 முக்கிய அம்சங்கள்:
01.
தேர்தல் கமிஷனில் இன்று(22-ம் தேதி) காலை இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து வாதம் நடந்தது. இதில் சசிகலா தரப்பில் சல்மான் குர்ஷித், அரிமா சுந்தரம் , மோகன் பராசரன் ஆகியோர் வாதாடினர். ஓ.பி.எஸ்., தரப்பில் சி.எஸ்.வைத்தியநாதன், குரு கிருஷ்ணகுமார், மனோஜ் பாண்டியன் ஆகியோர் வாதாடினர். ஏற்கனவே ஆஜரான ஹாரீஸ் சால்வே ஆஜராகவில்லை.
02.
இந்த விவாதத்தில், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது பற்றி மட்டுமே விசாரணை நடந்தது. பொது செயலாளர் பற்றி பின்னர் விசாரிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது.   கட்சியில் மற்ற தலைவர்களை சுயமாக நடக்க விடாமல் , இரண்டாம் கட்ட தலைவர்களை வளர்க்காமல் . கொள்கை பிடிப்பு இல்லாத கட்சியாக மாறியதில் விளைவு.

இளையராஜா எஸ்.பி.பி விவகாரம்: உரிமையை நிலை நாட்ட முயல்வது ‘பேராசையா’?

வினோ ஜாசன்
இளையராஜா – எஸ்பிபி நட்பு, மோதல் பற்றியெல்லாம் நாம் பேசத் தேவையில்லை.
இந்த காப்பிரைட் நோட்டீஸ் விவகாரத்தில் முழு தவறு எஸ்பிபி பக்கம் இருக்கிறது. இளையராஜாவின் இசை காப்புரிமையை கவனித்துக் கொள்ள இப்போது தனி குழு இருக்கிறது. அவர்கள் அனுப்பியதுதான் இந்த நோட்டீஸ் (நிச்சயம் ராஜாவுக்குத் தெரியாமல் அனுப்பப்பட்டிருக்காது). அதுகூட எஸ்பிபிக்கு அனுப்பப்பட்டதல்ல. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் ஈவன்ட் கம்பெனிக்கு அனுப்பப்பட்டது. இப்படி ஒரு நோட்டீஸ் வந்ததும் அதைப் பற்றி ராஜாவிடமே தனிப்பட்ட முறையில் கேட்டிருக்கலாம் எஸ்பிபி. அல்லது அந்த கம்பெனி நிர்வாகிகளை அனுப்பி பேச வைத்திருக்கலாம். காப்புரிமை சட்டப்படி ராஜாவுக்கு சேர வேண்டியதைத் தரச்சொல்லி இருக்கலாம்.

பொன் ராதா மீது செருப்பு வீச்சு..: ஜேஎன்யூ மாணவர் முத்துகிருஷ்ணன் இறுதி சடங்கில்

ஜேஎன்யூ பல்கலையில் ஆய்வுப் படிப்பு படித்து வந்த மாணவர் முத்துகிருஷ்ணன் கடந்த திங்கள் அவரது நண்பரின் அறையில் தூக்கில் தொங்கியது கண்டுபிடிக்க்பபட்டது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டதையடுத்து நேற்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது உடலில் காயங்கள் ஏதும் இல்லை என்று கூறிய மருத்துவர்கள் முத்துக்கிருஷ்ணன் மரணம் தற்கொலைதான் என அறிவித்தனர்.
இதையடுத்து நேற்றிரவு அவரது உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு அங்கிருந்து அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சாமிநாதபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முத்துக்கிருஷ்ணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுவதற்காக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நின்று கொண்டிருந்தார்.

ரஜினிகாந்த் யாழ்ப்பாணம் செல்கிறார் . லைகா ஆதரவில் 150 வீடுகள்..

லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையின் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 150 புதிய வீடுகளை தமிழ் மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, வீடுகளை மக்களிடம் வழங்குகிறார். வவுனியாவின் சின்ன டம்பன் கிராமம் மற்றும் புளியங்குளம் ஆகிய இடங்களில் 150 வீடுகளை, அப்பகுதியில் உள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இலவசமாகக் கட்டித் தருகிறது ஞானம் அறக்கட்டளை. லைகா அதிபர் சுபாஸ்கரன் அல்லிராஜாவின் தாயார் ஞானாம்பிகையின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை இது. இந்த வீடுகளை மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் மாதம் 9-ம் தேதி இலங்கையில் யாழ்ப்பாணம் நகரில் நடைபெறவுள்ளது. விழாவில் தனது கரங்களால், தமிழ் மக்களுக்கு இந்த புதிய வீடுகளை வழங்குகிறார் ரஜினிகாந்த். இலவச வீடுகள் வழங்கும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவேண்டும் என்று ரஜினியிடம் கேட்டபோது, இலங்கைத் தமிழர்களுக்கான நிகழ்ச்சி என்ற காரணத்தினால் உடனே மகிழ்ச்சியுடன் வரச் சம்மதித்தாராம்.தமிழ் இந்து

இரட்டை இலை முடக்கம்: பின்னணியில் நடந்தது என்ன?


minnambalam:‘இரட்டை இலை சின்னம் யாருக்கு?’ என்று டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தலைமையில், நடந்த பேச்சுவார்த்தையில் இரட்டை இலை சின்னம் பன்னீர்செல்வம் தரப்புக்கும், சசிகலா தரப்புக்கும் கிடையாது. இப்போதைக்குச் சின்னம் முடக்கப்படுவதாகவும், தேர்தலில் அதிமுக என்ற பெயரை யாரும் பயன்படுத்தக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் தற்காலிக உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் அனுப்பிய ஒன்பது பக்க உத்தரவில் '20 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணத்தை இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தில் அளித்திருக்கிறார்கள். குறுகிய கால கட்டத்தில் அந்த ஆவணங்களைப் படித்துப் பார்க்க முடியாது. ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்த ஆவணங்களைப் படித்துப் பார்க்க நேரமில்லாத நிலையில் தேர்தல் ஆணையம் இருக்கிறது.