சனி, 21 மே, 2022

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு- மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

மாலைமலர் : பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50ம், டீசல் லிட்டருக்கு ரூ.7ம் விலை குறையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறைத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
பெட்ரோல் மீதான மத்தியகலால் வரி லிட்டருக்கு ரூ.8ம், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6ம் குறைக்கப்படுகிறது. இதன் எதிரொலியால், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50ம், டீசல் லிட்டருக்கு ரூ.7ம் விலை குறையும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

ராஜீவ் காந்தி கொலை வழக்கு ..ஆறு பேர் விடுதலை- .. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

 நக்கீரன் செய்திப்பிரிவு  : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக சிறையில் இருந்த பேரறிவாளனின் விடுதலையை தொடர்ந்து, மற்ற ஆறு பேர் விடுதலைத் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (21/05/2022) நீலகிரி மாவட்டம், உதகையிலிருந்து, காணொலிக் காட்சி வாயிலாக பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து, மற்ற ஆறு பேர் விடுதலை தொடர்பாக சட்டத்துறை வல்லுநர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வெள்ளி, 20 மே, 2022

ஹைதராபாத் என்கவுன்டர் 'போலி': உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ஆணையம் அறிக்கை - முழு விவரம் BBC Tamil

தெலங்கானா என்கவுன்ட்டர்

BBC Tamil  :  2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடந்த பாலியல் வல்லுறவு சம்பவத்தில் சந்தேக நபர்களாகக் கைது செய்யப்பட்ட நான்கு பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது ஒரு போலியான நடவடிக்கை என்று அது தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆணையத்தின் அறிக்கையை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை பதிவு செய்து கொண்டது. அந்த அறிக்கையை சீலிட்ட கவரிலேயே வைத்திருக்க வேண்டும் என்று தெலங்கான அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. அந்த அறிக்கையை வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் பகிருமாறும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த் ஷர்மா, ஹிமா கோஹ்லி அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

மாநில உரிமைகளை நிலைநாட்டும் தீர்ப்புகள்” : PTR பேட்டி! GST கவுன்சிலின் அடிப்படையே பிழையாக உள்ளது..

கலைஞர் செய்திகள் - பிரேம் குமார் :: ஜி.எஸ்.டி கவுன்சிலின் பரிந்துரைகள் மற்றும் பேரறிவாளன் விடுதலை தீர்ப்பையும் ஒன்றாக பொறுத்தி பார்க்கவேண்டிய கட்டாயம் உள்ளது என நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி. வரிவிதிப்புமுறை கூட்டாட்சி நடைமுறையை பாதிப்பதாகஉள்ளதாகவும், மாநிலங்களை ஜி.எஸ்.டி. குழுவின் பரிந்துரை கட்டுப்படுத்தாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தி விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்றம் பல்வேறு கருத்துகளை முன்வைத்தது.

குஜராத், இமாச்சல் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும்- பிரசாந்த் கிஷோர் பரபரப்பு ட்வீட்

 மாலைமலர் : உதய்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் சிந்தனைக் கூட்டம் அர்த்தமுள்ளதாக எந்த முடிவையும் எட்டவில்லை என பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.
குஜராத், இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடையும் என்று தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார்.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியை மீட்டெடுக்க பிரசாந்த் கிஷோர் சில யுக்திகளை வகுத்து அக்கட்சியின் தலைமையிடம் கொடுத்தார். பின் அவர் காங்கிரஸில் இணையவுள்ளதாகவும் பேசப்பட்டது. இறுதியில் அவர் காங்கிரஸில் இணையவில்லை என்பது உறுதியானது.
பிரசாந்த் கிஷோர் கொடுத்த பரிந்துரைகளை காங்கிரஸ் ஏற்கவிலை என்பதாலும், அவர் காங்கிரஸில் இணைவதில் சில தலைவர்களுக்கு உடன்பாடு இல்லை என்றும் கூறப்பட்டது.

அன்னை சோனியாவுக்கே அற்புதம்மாள் முதலில் நன்றி தெரிவித்திருக்க வேண்டும்

May be an image of 1 person

Elengovan K Dev  :  நன்றி தியாகதலைவி அன்னை சோனியாவே!!!
அற்புதம்மாள் தமிழக அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் அதே வேளையில் அவர் முதலில் நன்றி தெரிவித்திருக்க வேண்டியது அன்னை சோனியா குடும்பத்திற்கே.
காலதாமதமான  கருணைமனு பரிசீலனையே அவர்களின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக காரணம்
சோனியா நினைத்திருந்தால் கருணைமனுவை விரைவில் நிராகரிக்க வற்புறுத்தியிருக்கலாம் .
சோனியா நினைத்திருந்தால் பாஜக அரசுபோல அப்துல்கலாம் இறந்த அன்று  கருணைமனுவை நிராகரித்து நள்ளிரவுவரை உச்சநீதிமன்றத்தை திறந்துவைத்து மேல்முறையீட்டை தள்ளுபடிசெய்து நள்ளிரவே அப்சல்குருவை தூக்கிலிட்டதுபோல் ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்றி இருக்கலாம்..

கார்த்தி சிதம்பரத்தின் விசா மோசடி விவகாரம் சிபிஐ காவலில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர்!

 நக்கீரன் : விசா மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனுக்கு நான்கு நாட்கள் சிபிஐ காவல் விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் நிறுவனங்களில் செவ்வாய்க்கிழமை அன்று சிபிஐ போலீசார் 5 மணிநேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினர். சென்னை மற்றும் மும்பையில் தலா மூன்று இடங்களிலும், கர்நாடகா, பஞ்சாப், ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடங்களிலும் என மொத்தம் 9 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

ராஜீவ் காந்தியுடன் இறந்தோர் குடும்பத்தினர் குமுறல்: "நாங்கள் தமிழர்கள் இல்லையா?"

BBC tamil : முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்.
இந்தத் தீர்ப்பை அரசியல் கட்சிகள் பலவும் வரவேற்றுள்ள சூழலில், '30 ஆண்டுகளாக நாங்கள் அடைந்துவரும் துயரங்களை அரசும் கண்டுகொள்ளவில்லை' என்கின்றனர் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி மனித வெடிகுண்டு தாக்குதலால், ராஜீவகாந்தி கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் அவருடன் சேர்த்து 18 பேர் இறந்தனர்.
இந்த வழக்கில் முருகன் என்கிற ஸ்ரீகரன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். குறிப்பாக, மனித வெடிகுண்டு தாக்குதலுக்குப் பயன்பட்ட 9 வோல்ட் பேட்டரியை பேரறிவாளன் வாங்கிக் கொடுத்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
விடுதலையும் சிறைத்துறை உத்தரவும்

ராகுல் காந்தியையும் கட்டிப்பிடிக்கிறீர்கள். பேரறிவாளனையும் கட்டிப்பிடிக்கிறீர்கள்? காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ராஜினாமா!

கை கொடுத்த பேரறிவாளன்; தோள் கொடுத்த மு.க. ஸ்டாலின்- Dinamani

மின்னம்பலம் : பேரறிவாளன் விடுதலை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை திமுக - காங்கிரஸ் கூட்டணியை பாதிக்காது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கிடையே விவாதங்கள் நடந்து வருகின்றன.
திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், பேரறிவாளனை சந்தித்தபோது கட்டியணைத்துக் கொண்டார். இது காங்கிரஸார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .
'ராகுல் காந்தியையும் கட்டிப்பிடிக்கிறீர்கள். பேரறிவாளனையும் கட்டிப் பிடிக்கிறீர்கள்‌. இதை எப்படி எடுத்துக் கொள்வது' என்று நேற்று மே 19ஆம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் காங்கிரஸார் கேள்வி எழுப்பினர்.
அதே நேரம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளியை கொண்டாடும் திமுக அரசுக்குக் கொடுத்து வரும் ஆதரவை காங்கிரஸ் விலக்கிக்கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

வியாழன், 19 மே, 2022

பேரறிவாளனுக்கு பாரத ரத்னா .. கூடவே நோபல் பரிசையும் வாங்கி கொடுங்க நல்லா இருப்பீங்க

Radha Manohar 
:  பேரறிவாளன் விடுதலையை அளவுக்கு மீறி
கொண்டாடி
 போலி உணர்ச்சி பெருவெள்ளம் புராஜெக்ட் பண்ணுவோர்கள்
 எல்லோரும் உள்ளுக்குள்ளே கடும் குற்ற உணர்ச்சியால் உழல்பவர்கள்தான்
இலங்கை தமிழர்களின் போராட்ட ஆரம்ப காலத்தில் தமிழ் நாட்டில் இருந்து உதவியவர்கள் பலரும் உண்மையிலே உணர்வாளர்கள்தான்  
தமிழ்நாட்டை சேர்ந்த பலரும் இதனால் ஏராளமாக இழந்திருக்கிறார்கள்  .. அவர்களின் பல கதைகள் இன்றுவரை பேசப்படவில்லை
ஆனால் ஈழப்போராட்டத்தின் போக்கிலே ஒரு திருப்பம் அல்லது ஒரு விபத்து ஏற்பட்டிருக்கிறது
விடுதலை போராட்டம் என்பது தனது தகுதியை  ஒரே நாளில் இழந்தது
ஒரே நாளில் இது  வெறும் பயங்கரவாதமாக வெடித்தது என்பதுதான் வரலாறு
அந்த தேதியில்  இருந்து பலரும் ஒதுங்கி விட்டார்கள்  கலைஞர் உட்பட.
அதன் பின்பு தொடர் பயங்கரவாத நடவடிக்கைகள் அசல் மாபியா பாணியில் விரிவடைந்தது

எச்.ராஜா பழனியில் திடீர் கைது... தமிழக பஜகாவின் பிரபல தலைவர் .. என்ன காரணம்? அவரே சொன்ன தகவல்..!

 tamil.asianetnews.com  : பழனியில் இந்து ஆலய பாதுகாப்புக் குழு சார்பில் பழனி இடும்பன் கோயில் குளக்கரையில் மகா சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சிக்குச் சிறப்பு அழைப்பாளராக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, மன்னார்குடி செண்டலங்கர ஜீயர் ஆகியோர் கலந்துகொள்ள இருந்தனர்.
போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டதை மீறி பழனியில் இந்து ஆலய பாதுகாப்புக் குழு சார்பில் பழனி இடும்பன் கோயில் குளக்கரையில் மகா சங்கமம் நிகழ்ச்சியை நடந்த சென்ற எச்.ராஜா கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இந்து ஆலய பாதுகாப்புக் குழு சார்பில் பழனி இடும்பன் கோயில் குளக்கரையில் மகா சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சிக்குச் சிறப்பு அழைப்பாளராக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, மன்னார்குடி செண்டலங்கர ஜீயர் ஆகியோர் கலந்துகொள்ள இருந்தனர்.

ராகுலையும் கட்டிப்பிடித்து பேரறிவாளனையும் கட்டிப்பிடிப்பதா? ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கேள்வி

 மின்னம்பலம் : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் நேற்று மே 18ஆம் தேதி விடுதலை செய்தது.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று மே 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் வாயில் வெள்ளை துணி கட்டிக் கொண்டு போராட்டம் நடைபெறுகிறது.
மாநில காங்கிரஸ் தலைவர் அழகிரி சிதம்பரம் காந்தி சிலை அருகே தன் வாயில் வெள்ளை துணியோடு போராட்டத்தில் கலந்து கொண்டார்.
சென்னையில் சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரறிவாளன் விடுதலை - தி.மு.க அரசு செய்தது என்ன?”: முதல்வர் அறிக்கையில் பட்டியலிட்ட 10 முக்கிய அம்சங்கள்!

கலைஞர் செய்திகள்  : “பேரறிவாளன் விடுதலை - தி.மு.க அரசு செய்தது என்ன?”: முதல்வர் அறிக்கையில் பட்டியலிட்ட 10 முக்கிய அம்சங்கள்!
மனிதாபிமான அடிப்படையில் அரசு அவருக்கு அந்த உரிமையை 10 முறை வழங்கியது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
32 ஆண்டுகளாகச் சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது உச்சநீதிமன்றம். இது நீதி - சட்டம் - அரசியல் - நிர்வாகவியல் வரலாற்றில் இடம்பெறத் தக்க தீர்ப்பு! தமிழ்நாடு அரசின் வாதங்களை முழுமையாக ஏற்று இந்த இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அன்றே கலைஞரின் அறிவுரை : அரசியலமைப்பு சாசனத்தின் 161ஆவது பிரிவின் கீழ் பேரறிவாளன் விடுதலை நிச்சயம்

பேரறிவாளன் விடுதலை: கலைஞர் அறிக்கையும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பும்!

மின்னம்பலம் : முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக தண்டிக்கப்பட்டிருக்க பேரறிவாளன் நேற்று மே 18ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
சிறையில் இருக்கும் கைதிகளின் தண்டனையைக் குறைப்பது தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கா, ஆளுநருக்கா, ஒன்றிய அரசுக்கா, குடியரசுத் தலைவருக்கா என்ற சட்ட ரீதியாக எழுந்த பல கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறது உச்சமன்றத்தின் தீர்ப்பு.
இந்த நிலையில் மறைந்த தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் 2016ஆம் ஆண்டு இந்தச் சட்டப் பிரச்சினை தொடர்பாக வெளியிட்ட கருத்துகள் இப்போதைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் எதிரொலிக்கின்றன.

புதன், 18 மே, 2022

தமிழ்நாட்டில் இருந்து நிவாரண பொருட்களுடன் இலங்கை செல்லும் Tan Binh 99 கப்பல்

டான் பின் 99 கப்பலில் இலங்கை செல்லும் நிவாரண பொருட்கள்!

மின்னம்பலம் : இலங்கை செல்லும் நிவாரண பொருட்கள்!
டான் பின் 99 கப்பலில் இலங்கை செல்லும் நிவாரண பொருட்கள்!
தமிழக அரசு அறிவித்த நிவாரண பொருட்களுடன் சென்னையிலிருந்து இலங்கைக்கு இன்று கப்பல் புறப்படுகிறது.
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வருகிறது. இதையடுத்து இலங்கை மக்களுக்கு உதவுவதற்காகத் தமிழக சட்டப்பேரவையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
80 கோடி ரூபாயில் 40 ஆயிரம் டன் அரிசி, 28 கோடி ரூபாயில் உயிர் காக்கக் கூடிய 137 மருந்து பொருட்கள், 15 கோடி ரூபாய் மதிப்பில் 500 டன் பால் பவுடர் ஆகியவை இலங்கைக்கு அனுப்பத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசிடம் தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை- உச்சநீதிமன்றம் தீர்ப்பு

 மாலைமலர் : ஆளுநர் முடிவு எடுக்காமல் தாமத்தப்படுதியது தவறு என உச்ச நீதிமன்றம்  தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வந்தபோது ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலை படை மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர்.
முருகன், நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. முதலில் இவர்கள் 7 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
இந்த நிலையில் 7 பேரையும் விடுதலை செய்யக் கோரி ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் மத்திய அரசு அனுமதிக்காததால் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறவில்லை.

முதல்வர் ஸ்டாலினுக்கு சக்கர நாற்காலி பயன்படுத்துவோரின் கோரிக்கைகள்

May be an image of 1 person, sitting and indoor

Gnana Sundari Coimbatore :    கோவை பெண்ணின் நியாயமான கோரிக்கை..
*"இந்த 5 வருட சக்கர நாற்காலி பயணத்தில் பல முறை துணிகள் வாங்க, பொள்ளாச்சியில் எனக்கேற்ற வசதி இல்லாத காரணத்தால் கோவை சென்றுள்ளேன்.. ஆனால் குழந்தைகளுடனே செல்வதால் அவை பெரும்பாலும் மால்களை (Mall) நோக்கியே சென்றுவிட்டன..*
*என் விபத்திற்கு பின், வீட்டில் நடக்கும் முதல் நிகழ்ச்சி என்பதால் குடும்பத்துடன் துணிகள் வாங்க சென்ற வாரமும் கோவை சென்றோம்.*
*குடும்பத்தினரின் விருப்பம் Sree Devi textile, The Chennai silks, Pothys, PSR silks ஆக இருந்ததன் காரணமாக காந்திபுரம் சென்றோம்.*
*கார் விட்டு இறங்கிய பின் தான் தெரிந்தது அங்கு எந்த கடைகளின் முக வாயிலில் சரிவு பாதை (Ramp) இல்லை என்றும், ஒரு சில கடைகளில் 10 படிகளுக்கு மேல் இருக்கின்றன என்றும், இருப்பினும் என்னுடன் அண்ணா மற்றும் மாமா வந்ததன் காரணமாக என்னை தூக்கிவிட்டனர்.*  

துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்ட பறக்கும் சாலையின் முக்கியத்துவம்

May be an image of 2 people, road and text that says 'DECADE CHALLENGE 2010 FACT FILE nctioned in 2007 Elevated Expressway tion laid in 2009 Port and ends in starts from Chennai Estimation cost Maduravoyal inter- 0 crore change 2019'
Kandasamy Mariyappan  :  துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்ட பறக்கும் சாலையின் முக்கியத்துவம் என்ன,
அது எப்போது யாரால் தொடங்கி வைக்கப்பட்டது.!
திருப்பெரும்புத்துரில் ஒரு உலர் துறைமுகம் (Dry Port) உருவாக்கி.,
சென்னை துறைமுகத்தில் இறக்கப்படும் பொருட்களை நேராக, வேகமாக திருப்பெரும்புதூருக்கு கொண்டு செல்ல வசதியாக உருவாக்கப்பட்டதே துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்ட பறக்கும் சாலை.!
2008ஆம் ஆண்டு 1,450 கோடி மதிப்பீட்டில், அன்றைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் கலைஞர் தலைமையில் அன்றைய பிரதமர் திரு. மன்மோகன் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட திட்டம்.!

தஞ்சாவூர் நாகநாதன் பிள்ளை என்கின்ற திரு சு நடேசன் இலங்கையின் முன்னாள் அமைச்சர்!

ராதா மனோகர்  21 மே 1895 -  தஞ்சாவூர் சுப்பையா பிள்ளை நாகநாதன் பிள்ளை என்கின்ற திரு சு நடேசன் முன்னாள் அமைச்சர்!  
தமிழ்நாடு, நாகப்பட்டணத்தைச் சேர்ந்த சுப்பையாவுக்கும்  தஞ்சாவூரைச் சேர்ந்த இலக்கணம் இரா : மசாமிப்பிள்ளையின்  மகளுக்கும் தஞ்சாவூரில் பிறந்தார் நாகநாதன் பிள்ளை
இவர் சட்டம் பயின்று மிகவும் இளமையிலேயே நகராண்மைக்கழக உறுப்பினரானார்.
பின்பு  முத்துக்கிருஷ்ண பரமஹம்சர் என்பவரிடம் வடமொழியும் சைவ சித்தாந்தமும் பயின்று தரிசனத்திரயம் என்ற நூலையும் எழுதினார்
வடமொழியில் காளிதாசர் இயற்றிய  சாகுந்தலாவை தமிழில் சாகுந்தலா காப்பியம் என்ற பெயரில் எழுதினார் ..
சேர் பொன்னம்பலம் ராமநாதன் அருணாசலம் சகோதரர்களுக்கு தமிழகத்தில் இருந்த அருள் பரானந்த சுவாமிகளிடம் நெருக்கம் இருந்தது. இவர் மூலம் இலக்கணம் ராமசாமி பிள்ளையின்குடும்பத்தோடு  ராமநாதன் சகோதர்களுக்கு அறிமுகம் கிட்டியது

ஸ், ஷ், ஜ், ஹ், க்ஷ், ஸ்ரீ போன்ற ஒலிகளும் எழுத்துகளும் தமிழில் இருந்த ஒலிகள்தான்

No photo description available.

Ravanan Ambedkar :  ஸ், ஷ், ஜ், ஹ், க்ஷ், ஸ்ரீ போன்ற ஒலிகளும் எழுத்துகளும் தமிழுக்கு உரியன அல்ல என்று தனித் தமிழ் ஆர்வலர்கள் சொல்லி வருகிறார்கள்.
இவர்களுக்கு ஒலியியல் மொழியியல் ஆகியவற்றில் போதிய பயிற்சி இல்லாமையால் இப்படி உளறிக் கொண்டு இருக்கின்றர்.
இந்த ஒலிகளில் ஷகரம், க்ஷகரம் தவிர மற்ற எல்லாமே தமிழிலும் உண்டு. ஆனால் அவற்றுக்கு நாம் முற்காலத்தில் தனி எழுத்துகளை உருவாக்கி வைக்கவில்லை
வெகு பிற்பாடே ஒலி வேறுபாட்டை கான்பிக்க தனி எழுத்துகளை உருவாக்கினார்கள்.
இசை, விசை, தசை, கசை போன்ற சொற்களில் நாம் ஸகரத்தைதான் ஒலிக்கிறோம். இவைகளை முறையே இஸை, விஸை என எழுதினாலும் குடிமுழுகி விடாது.
மஞ்சை, தஞ்சை, பஞ்சம், தஞ்சம் போன்ற சொற்களில் நாம் ஜகரத்தை ஒலிக்கிறோம். இவைகளையும் நாம் மன்ஜம், தன்ஜம் என எழுத முடியும்.

செவ்வாய், 17 மே, 2022

ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் மன்மோகன் சிங்?

ஐ.நாவின் கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்: ரணில் விக்கிரமசிங்க -  | lanka4.com | லங்கா4.கொம்

Nadarajah Kuruparan  : விழுந்து கிடந்த ரணிலை தூக்கி நிறுத்தியது எதிர்கட்சிகளே!
“மயிரைக் கட்டி மலையை இழுத்தால் வந்தால் மலை போனால் மயிர் –  இழுத்தார் ரணில், வந்தது மலை!”
இலங்கையின் அரசியல் யாப்பில் பிரதமராக  நியமிக்கப்பட்டதன் பின் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என எங்கும் சொல்லப்படவில்லை என நினைக்கிறேன் (அவ்வாறு  இருந்தால் சொல்லுங்கள் திருத்திக்கொள்கிறேன்)
நாடாளு மன்றில்  பெரும்பான்மை உள்ளவரையே ஜனாதிபதி பிரதமராக நியமிக்க வேண்டும் என்பது ஜனநாயகம் – அரசியல் யாப்பு விதியும் கூட.
அதற்கு வாய்ப்பு இல்லாவிட்டால் ஜனாதிபதி பிரதமராக நியமித்த ஒருவர் தனது பெரும்பான்மையை நாடாளுமன்றில் நிரூபிக்க வேண்டும். சந்தேகம் இருந்தால் எதிர்கட்சிகள் வாக்கெடுப்புக்கு கோரி வாக்கெடுப்பு நடத்தலாம்.

சரத் பொன்சேகா : மகிந்த ராஜபக்சே மே 9-ல் விதைத்த வன்முறை விதையில் தாமே சிக்கினார்-

TGTE Welcomes Fonseka's Willingness To Face War Crime Trials: Urges Him To  Avail To UN's OISL - Colombo Telegraph
Mathivanan Maran  -   Oneindia Tamil :  கொழும்பு: இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே கடந்த 9-ந் தேதி தாம் விதைத்த வன்முறை விதைக்கு தாமே பலியாகிவிட்டார் என்று இலங்கை நாடாளுமன்றத்தில் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் சரத்பொன்சேகா பேசியதாவது:
நாட்டில் நெருக்கடியான நேரத்தில் அவசர நிலை கொண்டுவரப்பட்டுள்ளது. அவசர நிலையை கொண்டு வருவதன் மூலம் தீர்வு காண முடியாது என நினைக்கிறேன்.
 அதற்குக் காரணம் மக்களின் பாதுகாப்பு, பொதுச் சொத்துக்கள், அரசாங்கத்தின் பாதுகாப்பு, நாட்டின் இறையாண்மை. இந்த அவசரகாலச் சட்டம் கடந்த 6-ந் தேதி கொண்டு வரப்பட்டது.
அப்போது இந்த நாட்டில் இவ்வளவு பெரிய பிரச்சினையை காணவில்லை. அவசரகாலச் சட்டத்தின் மூலம் நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது.

இலங்கை அதிபர் கோத்தபாயாவுக்கு எதிரான தீர்மானம் தோல்வி!

 நக்கீரன் செய்திப்பிரிவு  :  இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பமே காரணம் என அந்நாட்டு மக்கள் குற்றம் சாட்டி வரும் சூழலில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்றத்தில் இன்று (17/05/2022) நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.  தீர்மானத்தை நாடாளுமன்ற சபாநாயகர் ஏற்க மறுத்ததால், வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
69 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானத்தை ஆதரித்த நிலையில், 119 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தனர். இந்த நிலையில், இலங்கை அதிபருக்கு எதிரான தீர்மானம் தோல்வி அடைந்தது.

250 சீனர்களுக்கு விசா வழங்க ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு- ப.சிதம்பரம் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை

மாலைமலர் : சென்னை:  காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரது மகனும், எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீடுகளில் புகுந்து இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி வருகிறார்கள்.
சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ள ப.சிதம்பரத்தின் வீடு, அருகில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் உள்ளிட்ட 3 இடங்களில் இன்று காலை 7.30 மணி அளவில் சி.பி.ஐ. அதிகாரிகள் குழு அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

நூறு நாள் வேலைத் திட்டம் நகர்ப்பகுதிகளிலும் செயல்படுத்தப்படும் - அமைச்சர் ஐ.பெரியசாமி

ஐ.பெரியசாமி

  News18 Tamil  :   திமுக தேனி வடக்கு மாவட்டம் சார்பில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.‌ தேனி அல்லிநகரம் பகுதியில் மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்செல்வன் தலைமையில்  நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் ஆரம்ப காலத்தில் அதிமுக ஆட்சி இருந்தது.‌ ஆனால் மக்கள் நலனில் அக்கறை கொள்ளாமல் அன்றைய அதிமுக அரசு தூங்கிக் கொண்டிருந்தது.‌

சாதி சான்று இல்லாததால் தேர்வுக்கு தடை.. 10ம் வகுப்பு மாணவி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி!

Govindaraji Rj | Samayam Tamil  : கிருஷ்ணகிரியில் சாதி சான்றிதழ் இல்லாததால் மாணவி ஒருவர் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியவில்லை எனக் கூறி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தம்பதியினர் தனது மகள் மற்றும் மகனுடன் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

வேல்முருகனின் முன்னாள் மனைவி பாஜகவில் இணைந்தார்

வேல்முருகனுக்கு வீசிய வலை: பாஜகவில் இணைந்த முன்னாள் மனைவி!

மின்னம்பலம் :  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சமீப நாட்களாக பிற கட்சியின் பிரமுகர்கள் பாஜகவில் சேருவது தொடர்ந்து நடந்து வருகிறது.
அந்தவகையில் நேற்று (மே 16) தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பண்ருட்டி வேல்முருகனின் மனைவியாக இருந்து விவாகரத்து பெற்ற காயத்ரி பாஜகவில் இணைந்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து அவர் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டுள்ளார். முன்னாள் பாஜக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணனையும் சந்தித்துள்ளார் காயத்ரி.
இது குறித்து பொன். ராதாகிருஷ்ணன் தனது சமூக தள பதிவில், "இன்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் திரு. வேல்முருகன் அவர்களின் மனைவி திருமதி.காயத்ரி அவர்கள் பாஜக மாநில தலைவர் அவர்களின் முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டதோடு என்னை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

திங்கள், 16 மே, 2022

பொறுமையாக இருங்கள், கத்தியின் மீது நடப்பதைவிட பயங்கரமானது - ரணிலின் உணர்வு பூர்வமான உரை (தமிழ் இணைப்பு)

 jaffnamuslim.com :  புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களுக்கு இன்றிரவு (16.05.2022) உரையாற்றினார். அவரது உரையின் முழு விபரம்.
கடந்த வியாழக்கிழமை நான் பிரதமர் பதவியை பொறுப்பேற்றேன்.அந்தப் பதவியை நான் கேட்கவில்லை. நாட்டில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு இந்தப் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு  ஜனாதிபதி எனக்கு அழைப்பு விடுத்தார்.
நான் அரசியல் தலைவராக மட்டுமின்றி இலவசக் கல்வியை அனுபவித்து கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டத்துறையில் பட்டம் பெற்று உயர்ந்த தேசியத் தலைவர் என்ற வகையிலே இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்.

ரஷியா ரெனால்ட் நிறுவன சொத்துக்களை தேசியவுடைமையாக அறிவிப்பு

 மாலைமலர் : உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவில் இயங்கி வந்த கார் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது உற்பத்தியை நிறுத்தின.
12.44: உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை விதித்தன. ரஷியாவில் இயங்கி வந்த கார் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது உற்பத்தியை நிறுத்தின. ஃபிரெஞ்ச் கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் ரஷியாவை விட்டு வெளியேறியது. இதையடுத்து ரஷியாவில் இயங்கி வந்த ரெனால்ட் நிறுவனத்தின் சொத்துக்களை தேசியவுடைமை ஆக்குவதாக ரஷியா அறிவித்துள்ளது.

அண்டை மாநிலங்களுக்கு செல்லும் அரசு பேருந்து கட்டண உயர்வு பட்டியல் தயார்- அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

 மாலைமலர் : பெரம்பலூர : பெரம்பலூர் மாவட்டம் துங்கபுரம், வலயப்பாடி, வேப்பூர் பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில், புதிய வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பேருந்து கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு பொய்யான தகவல் பரவி வருகிறது. அதாவது பக்கத்து மாநிலங்களான ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. எனவே அந்த மாநிலத்திற்கும், நமது மாநிலத்திற்கும் இடையே இயக்கப்படும் பேருந்துகளுக்கு கட்டணத்தை உயர்த்தப்பட வேண்டும் என்பது சட்டரீதியான நடவடிக்கைகளில் ஒன்று.

நெல்லை கல்குவாரி விபத்து... ஒருவர் பலி- மூன்று பேரின் நிலை?

 மின்னம்பலம் : 2019ல் திருச்சியில் சிறுவன் சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த போது குழந்தை உயிருடன் மீட்கப்படுமா என்று நாடே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது. அதுபோன்று தற்போது நெல்லையில் கல்குவாரியில் விழுந்த தொழிலாளர்கள் அனைவரும் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்று தமிழக மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் கல்குவாரியில் சிக்கிய 6 தொழிலாளர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நெல்லை மாவட்டம் முன்னீர் பள்ளம் அருகே அடைமதிப்பான் குளம் கிராமத்தில், வெங்கடேஸ்வரா கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு நேற்று முன்தினம் (மே 14) இரவு கற்களை ஏற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அன்றைய தினம் இரவு 12 மணி அளவில் மிகப்பெரிய பாறை ஒன்று உருண்டு விழுந்து இருக்கிறது.

ஞாயிறு, 15 மே, 2022

திமுக ராஜ்யசபாவுக்கு தஞ்சை கல்யாணசுந்தரம், நாமக்கல் கே. ஆர். என். ராஜேஷ்குமார், வடசென்னை கிரிராஜன் .. ஒரு இடம் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது

திமுக ராஜ்யசபா பட்டியல்: தேர்வு, அவசர வெளியீடு பின்னணி!
மின்னம்பலம் திமுக ராஜ்யசபா பட்டியல்: தேர்வு, அவசர வெளியீடு பின்னணி!
தமிழ்நாட்டில் இருந்து ராஜ்யசபா எனப்படும் நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு ஆறு உறுப்பினர்களை தெரிவு செய்ய வரும் ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் சில தினங்களுக்கு முன் அறிவித்தது.
மாநிலங்களவையில் தமிழகம் சார்பில் திமுகவைச் சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், அ.தி.மு.க.வைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய ஆறு எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடைகிறது.
  மாநிலங்களவையில் தமிழகம் சார்பில் திமுகவைச் சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், அ.தி.மு.க.வைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய ஆறு எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடைகிறது.

இலங்கை ஜனாதிபதி அதிபருக்கு எதிரான போராட்டத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆதரவு

 maalaimalar : அதிபரை வெளியேற்றும் போராட்டத்திற்கு ரனில் விக்ரமசிங்கே ஆதரவு கொடுத்துள்ளது அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சீரழிவு காரணமாக ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு இன்னமும் விலகாததால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் மக்களுக்கு உணவு பொருட்கள் கிடைப்பதில் கடும் சிரமம் நிலவுகிறது.
இதையடுத்து மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் வீடு மற்றும் 35 எம்.பிக்களின் வீடுகள் தீ வைத்து கொழுத்தப்பட்டன.

பேருந்தில் பெண்களின் பாதுகாப்பிற்கு ஒரே ஒரு பட்டனை அழுத்தினால் போதும்.போலீசுக்கு நேரடி தொடர்பு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்

 /tamil.asianetnews.com  -  Thanalakshmi V  :  நிர்பயா பாதுகாப்பான நகரத்‌ திட்டத்தின்‌ கீழ்‌, மாநகர்‌ போக்குவரத்துக்‌ கழகத்தில்‌ பயணம்‌ செய்யும்‌ பெண்கள்‌ மற்றும்‌ குழந்தைகளின்‌ பாதுகாப்பிற்காக முதற்கட்டமாக 500 பேருந்துகளில்‌ சிசிடிவி கேமராக்கள்‌ மற்றும்‌ அவசர அழைப்பு பொத்தான்கள்‌ பொருத்தப்பட்டு அதன்‌ செயல்பாட்டினை முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ இன்று தொடங்கி வைத்தார். மேலும் போக்குவரத்துத்‌ துறையில்‌ 136 பணியாளர்களின்‌ வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில்‌ பணிநியமன ஆணைகளை வழங்கினார்‌.

அமெரிக்க சூப்பர் மார்க்கெட் துப்பாக்கிச் சூடு: 10 பேர் உயிரிழப்பு

 தினத்தந்தி : அமெரிக்கா சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நியூயார்க், அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பஃபேலோ நகரில் செயல்பட்டு வரும்  ப்ரெண்ட்லி சூப்பர் மார்க்கெட் கட்டிடத்திற்குள் நுழைந்த மர்மநபர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உடனடியாக அந்த நபரை சுற்றி வளைத்த போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டாப்ஸ் ப்ரெண்ட்லி மார்க்கெட்டில் சுடப்பட்ட கூடுதல் நபர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் நிலைமைகள் பற்றிய விவரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை. பல்பொருள் அங்காடியானது, நகரத்திற்கு வடக்கே சுமார் மூன்று மைல் (ஐந்து கிலோமீட்டர்) தொலைவில், கறுப்பர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ளது.

பங்குச்சந்தை “4 நாளில் ரூ.24 லட்சம் கோடி மாயம்..? : மோடி ஆட்சியில் பின்னடைவில் இந்திய பங்குச் சந்தைகள்!

 கலைஞர் செய்திகள் : பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு காரணமாக சுமார் 24 லட்சம் கோடி காணாமல் போகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் ஏற்பட்ட பாதிப்பு, இந்திய பங்குச்சந்தையிலும் பெரிதாக எதிரொலித்து வருகிறது. இந்தியப் பங்குச் சந்தைகள் கடந்த சில வாரங்களாகவே அடி வாங்கி வருகின்றன. நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு போகிறதே தவிர, ஓரிடத்தில் நின்றபாடில்லை.
இதனிடையே ரஷ்ய - உக்ரைன் போரின் காரணத்தால் கடந்த சில மாதங்களாகவே பங்குச் சந்தைகள் மிகப்பெரிய அளவில் பாதிப்பிற்கு உள்ளாயின. ஏப்ரல் மாத தொடக்கத்தில் பங்குச் சந்தையின் தாக்கம் சற்றுத் தணிந்த நிலையில், மீண்டும் பங்குச் சந்தைகள் சரிய ஆரம்பித்தன.

Hindi was devised by a Scottish linguist of The East India Company – it can never be India’s National Language | The Bengal Story

May be an image of 1 person and text that says '4G 68% 5:50 Hindi was devised by Sc... thebengalstory.com Hindi Was Devised By A Scottish Linguist Of The East India Company-t Can Never Be India's National Language OPINION EDITOR'S CHOICE By Devdan Chaud... Getting a Develoner Inh in Jobs in Ger... Sponsored'
thebengalstory.com :   Hindi was devised by a Scottish linguist of The East India Company – it can never be India’s National Language | The Bengal Story
           My late maternal grandmother – who had studied philosophy and biology in the 1940s Calcutta – had told me once during my boyhood, that Calcutta was the birthplace of the modern Hindi language: it was ‘invented’ by the British in Fort William, Calcutta.
I remembered my grandmother’s words when I read the news reports about the recently concluded ‘Hindi Divas’ day when the Union Home Minister Amit Shah pitched for Hindi as the national language of India.
This prompted me to consider and figure out why my maternal grandmother said what she did.  I wanted to know about the ‘suppressed truths’ and understand the ‘secret history’ of Hindi.
Now I wish to share with you what I found; and have to begin by recalling few essential facts about the languages of India.
Linguistic Diversity of India
Papua New Guinea – with a population of just over seven million – has world’s highest number of languages: 852 (840 are spoken and 12 are extinct). It tops the Linguistic Diversity Index (Source: UNESCO 2009) with 0.990. India comes at #9 with a score of 0.930.

But if we measure linguistic diversity by total population, India with 1.3 billion people (#2 by population) is much ahead of the rest, including China (1), United States of America (3), Indonesia (4) and Brazil (5). And hence, one can say, India is the ‘most populated linguistic diverse country in the world’.  click here for link  thebengalstory

இன்றைய பிரதமர் ரணிலும் புலிகள் காலத்து (2002 – 2005) பிரதமர் ரணிலும்! வரலாறு முக்கியம் அமைச்சரே!

Nadarajah Kuruparan 
:  காலையில் எதிர்வு கூறினேன் - மாலையில் பலித்தது- ரணிலின் ”கோட்டா கோ கம கால அணுகுமுறை” வெளியானது! (Comment பகுதியில் பார்க்கவும்)
ரணிலின் இடைக்கால அணுகுமுறை வெற்றி அளித்தால் -  “கோட்டா கோ கம” – “நோ டீல் கம”வின் நிலை என்னவாகும்?  
 ரணில் விக்கிரமசிங்கவின் *முக்காலத்து* அரசியல் அணுகு முறையை புரிந்து கொள்தன் ஊடாகவே இதற்கான பதிலை கண்டறிய முடியும்!
*புலிகள் காலத்து (2002 – 2005) பிரதமர் ரணில் விக்கிரசிங்க!*
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைக் காலத்தில்  பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க கையாண்ட அரசியல் தந்திரம் தற்போதைய சூழலில் உற்று நோக்க வேண்டியது.
*புலிகளின் கடடுப்பாட்டு பகுதிகளுக்கு ஆயுதம் வெடி மருந்துகள் உள்ளிட்ட யுத்த தளபாடங்களை தவிர அனைத்தையும் தங்கு தடையின்றி அனுப்புமாறு அரச நிர்வாகத்திற்கும்,  அதனை தடுக்க வேண்டாம் என பாதுகாப்பு தரப்பிற்கும் உத்தரவிட்டார்.