மீரட் கலவரம்த்திரப் பிரதேச மாநிலம், ஹாஷிம்புராவில் 1987-ம் ஆண்டு முசுலீம் மக்கள் 42 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 16 பேரை தில்லி நீதிமன்றம் விடுதலை செய்து சனிக்கிழமை 21-03-2015 அன்று உத்திரவிட்டது. உத்திரப்பிரதேச மாநில ஆயுதப் படை பிரிவைச் சேர்ந்த போலீஸ் கயவாளிகள்தான் மேற்கண்ட படுகொலையைச் செய்த குற்றவாளிகள்.
1987 மீரட் கலவரத்தின் போது உத்தர பிரதேச சிறப்பு ஆயுதப் படையினர். (படம் : நன்றி frontline)
இந்த படுகொலை வரலாற்றை சுருக்கமாக பார்க்கலாம்.
இந்தியாவின் படுகொலைகளில் முக்கியமான ஒன்றான ஹாஷிம்புரா படுகொலை 1987-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடந்தது. உத்திர பிரதேச மாநிலத்தின் மீரட் நகரில் இந்துமதவெறியர்கள் நடத்திய கலவரத்தின் போது உ.பி மாநில சிறப்பு ஆயுதப்படையைச் சேர்ந்தவர்கள் ஹாஷிம்புரா பகுதியைச்சேர்ந்த முசுலீம் இளைஞர்கள் 65 பேரை லாரியில் ஏற்றிச் சென்றனர். அவர்களை காசியாபாத் மாவட்டத்தின் முராத் நகருக்கு அருகில் சுட்டுக் கொன்ற போலீஸ் கயவர்கள், உடல்களை அருகாமையில் உள்ள கால்வாய்களில் வீசிச் சென்றனர்.