என்ஜீனியரிங் மாணவி தற்கொலை- மாணவர் மீது ஈவ் டீசிங் வழக்குவெள்ளிக்கிழமை
சென்னை சென்னையில் என்ஜீனியரிங் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவருடன் படித்து வரும் மாணவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை அருகே வண்டலூரில் உள்ள கிரசென்ட் என்ஜினீயரிங் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் 2ம் ஆண்டு படித்து வந்தவர் மாணவி பிரேமலதா (19).கடந்த 5-ந்தேதி இவர் கல்லூரி ஆய்வகத்தில் ஆசிட் குடித்து விட்டார்.
இதையடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பிரேமலதா உயிரிழந்தார்.
அதே கல்லூரியில் 4-வது ஆண்டு படிக்கும் ஒரு மாணவர் ஈவ்டீசிங் செய்ததால்தான் மாணவி பிரேமலதா தற்கொலை செய்து கொண்டதாக பிரேமலதாவின் அண்ணன் சசிகுமார் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து, அந்த மாணவரை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் மாணவி பிரேமலதாவிடம், கடும் மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டது தெரிய வந்தது.
இதையடுத்து வில்லிவாக்கத்தைச் சேர்ந்த அந்த மாணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களை கேலி செய்தல், தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளி, 12 பிப்ரவரி, 2010
பழங்குடியினரை ஏமாற்றும் கல்வித் திட்டம்!
வியாழன், 11 பிப்ரவரி 2010( 18:06 IST )
நமது நாட்டின் பழங்குடியின மக்களுக்கு கல்வி புகட்டி, அவர்களின் கற்றோர் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பள்ளிக் கல்வியைக்கூடத் தொடராமல் பாதியிலேயே நின்றுவிடும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் வரும் நிதியாண்டில் ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
FILEநமது நாட்டின் மக்கள் தொகையில் 8 விழுக்காடு மட்டுமே உள்ள பழங்குடியின மக்கள், இந்தியா முழுவதும் பெரும் அளவிற்கு பரவி வாழ்ந்துவரும் 187 மாவட்டங்களில்தான், நமது நாட்டின் வனச் செல்வத்தில் 68 விழுக்காடு உள்ளது. இந்த வனப் பகுதிகளில்தான் இயற்கை வளங்கள் மட்டுமின்றி, கனிம வளங்களும் ஏராளமாக உள்ளன.
நமது நாடு விடுதலைப் பெற்று 62 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில்தான், பழங்குடியினரின் நலன், அவர்களின் கல்வியறிவு, அவர்களுக்கு கல்வி வசதியை ஏற்படுத்தித்தருதல் ஆகியவற்றில் சமீப காலமாக்கத்தான் மத்திய அரசு மிகுந்த சிரத்தையுடன் கவனம் செலுத்தி வருகிறது.
அந்த விசேட சிரத்தையின் ஒரு அங்கமாகத்தான், பழங்குடியின பிள்ளைகள் கற்கும் வாய்ப்பை அதிகரிக்க, அவர்கள் தங்கிப் படிக்க வசதியாக மாணவர் விடுதிகளை கட்டித்தர 2010-11 நிதியாண்டில் ரூ.1,000 கோடி ஒதுக்கப்படும் என்று பழங்குடியினர் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் காந்தி லால் பூரியா கூறியுள்ளார்.
ஒரிசா மாநிலம், புவனேஸ்வரில் நடந்த ‘நாமும் நமது பழங்குடியினரும்: பண்பாட்டுப் பாதுகாப்பும் சிந்தனைப் பகிர்வும்’ என்றத் தலைப்பில் நடந்த கருத்தரங்கில் இந்த அறிவிப்பை மத்திய அமைச்சர் காந்தி லால் பூரியா வெளியிட்டுள்ளார்.
வனப் பகுதிகளில் ஒடுக்கப்படும் பழங்குடியினர்!
வனப் பகுதிகளில் பழங்குடியினர் வாழ்ந்துவரும் பகுதிகளிலேயே கல்விக் கூடங்கள் திறப்பதும், அப்படிப்பட்ட பள்ளிகளுக்கு நீண்ட தொலைவில் இருந்து வரும் பிள்ளைகளுக்கு தங்குமிட வசதி செய்துத் தரும் திட்டத்திற்காகவே ரூ.1,000 கோடி ஒதுக்கப்படுவதாக அமைச்சர் காந்தி லால் பூரியா கூறியுள்ளார்.
மேலெழுந்தவாரியாக இந்த அறிவிப்பை படிக்கும் எவரும் இதனை வரவேற்பர். ஆனால், மத்திய அரசுக்கு - இத்தனையாண்டுக் காலம் கடந்த பிறகு - பழங்குடியினர் கல்வி மீது திடீர் அக்கறை பிறந்துள்ளதேன் என்ற கேள்விக்கும் நாம் பதில் தேடியாக வேண்டு்ம்.
FILEஇந்தியாவின் மற்ற எந்த மாநிலத்தையும் விட ஒரிசா மாநிலத்தில்தான் மிக அதிக அளவிற்கு வனப் பகுதியும், பழங்குடியினர் மக்கள் தொகையும் உள்ளது. அம்மாநில மொத்த மக்கள் தொகையில் பழங்குடியினர் 30 விழுக்காடுகளுக்கு மேல் உள்ளனர். இது திடீரென்று பெருகிய மக்கள் தொகையல்ல, ஆண்டாண்டுக் காலமாக இருந்துவரும் நிலைதான். ஆனால் இதுநாள் வரை அவர்களின் கல்வி மேம்பாடு குறித்து மத்திய நிதி நிலை அறிக்கையில் நிதியேதும் ஒதுக்காத மத்திய அரசிற்கு இப்போது கரிசனம் பிறந்திருப்பதற்கு என்ன காரணம்?
ஒரிசா மாநிலத்தில் எந்தெந்த மாவட்டங்களிலெல்லாம் பழங்குடியினர் அதிகம் வாழ்ந்துவருகின்றனரோ அந்த பகுதிகளில்தான் இரும்புத் தாது உள்ளிட்ட கனிம வளங்கள் ஏராளமாக உள்ளன. இந்த கனிம வளத்தை - மிகக் குறைந்த விலை கொடுத்து - கைபற்ற திட்டமிட்டு வந்த தனியார் நிறுவனங்களை அப்பகுதியில் வாழும் பழங்குடியினர் எதிர்த்து வருகின்றனர்.
thanks to . Webdunia.com
தினமணி - இந்திய நாடாளுமன்றத்தின் மொழிப் பிரச்னை!
உலகில் எந்த நாட்டிலும் உள்ள மக்களுக்கும் தம்முடைய விருப்பங்களையும், கருத்துகளையும் எளிதாக உணர்வுடன் வெளியிட அவர்களின் தாய்மொழி தான் முதன்மையான சாதனமாகும். அதிலும், குறிப்பாகத் தமிழ் மக்களுக்குத் தனிப்பட்ட முறையில் வளமையும், தொன்மையும் மிக்க தாய்த்தமிழைப் போற்றிடும் ஆர்வமும், பண்பாடும் ஆழ்ந்து அமைந்துள்ளன.
தமிழர்களின் தாய்மொழிப் பற்று இலக்கிய அளவுடன், வரலாற்று நாகரிகப் பெருமையுடன் நிற்கவில்லை.
1937ல் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் முதல்வராக இருந்த இராஜாஜியால் பள்ளிக்கூடங்களில் இந்தி கட்டாயமாகப் புகுத்தப்பட்டபொழுது, தாய்த் தமிழைக் காத்திட தமிழர்களின் போராட்டம் நாட்டு அரசியல் வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்றது. இராஜாஜி அமைச்சரவை நீங்கியதும், 1939ல் கட்டாய இந்தி கைவிடப்பட்டது.
ஆயினும்,அதற்குப் பின்னரும் தமிழகத்தின் மொழிப் போராட்டம் விரிவடைந்து தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளிலும் பரவியது. 1950ல் இந்தி மட்டுமே ஆட்சி மொழியாகும் என்பதற்கான கோரிக்கை அரசியல் நிர்ணய சபையில் இந்தி பேசாத பகுதிகளைச் சேர்ந்த உறுப்பினர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பை உண்டாக்கியது. இறுதியில்,இந்தி,ஆங்கிலம் - இரண்டும் ஆட்சி மொழிகளாக ஏற்கப்பட்டு பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முடிவெடுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.
பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்,1965 ஜனவரி 26 முதல் இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி என்று மத்திய உள்துறை அமைச்சர் குல்சாரிலால் நந்தா அறிவித்ததும், தமிழக மக்களின் மொழிப் போராட்டம் உச்ச நிலையை அடைந்தது.
தென் மாநிலங்களுக்கும் அப்பால், மேற்கு வங்காளம், வடமேற்கு மாநிலங்கள், பஞ்சாப்
காஷ்மீர் ஆகிய பல்வேறு திசைகளிலும் அது பரவியது.
1937ல் இந்தியைக் கட்டாயப் பாடமாக்க முனைந்த இராஜாஜியே, 1965ல் ஆங்கிலத்தை அகற்றிவிட்டு இந்தியை ஆட்சி மொழியாக்கினால் இந்திய ஒற்றுமை சிதறுண்டுபோகும் என்று எச்சரித்தார்.
1957ல் அறிஞர் அண்ணாவின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாகப் பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற மக்களவைக்கு இரு உறுப்பினர்களும்,மாநிலச் சட்டசபைக்கு 15 உறுப்பினர்களும் வெற்றி பெற்றனர். 1962 தேர்தலுக்குப் பிறகு சட்டசபையில் 50 உறுப்பினர்களும், நாடாளுமன்றத்தில் 8 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்பொழுது அண்ணா மாநிலங்களவை உறுப்பினராக ஆனார். 1967ல் அண்ணா முதலமைச்சராகும் வகையில் கழகத்துக்குப் பெரும் வெற்றி கிடைத்தது. ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் அண்ணா தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே ஆட்சி மொழிகளாக இருக்கும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்.
நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தின் 120ம் பிரிவு கூறுகிறது.
அத்துடன், இந்தி அல்லது ஆங்கிலத்தில் போதுமான அளவில் நன்கு பேச முடியாத உறுப்பினர்கள் அவைத்தலைவரின் அனுமதி பெற்றுத் தம் தாய்மொழியில் பேசலாம் என்று அந்தப் பிரிவில் மேலும் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பிரிவின்படி இந்தி அல்லது ஆங்கில மொழிகளில் தெளிவாகப் பேச முடியாதவர்கள் மட்டுமே அவைத் தலைவரின் அனுமதியுடன் தம் தாய்மொழியில் பேசலாம் என்பதை மாற்றி, அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது பட்டியலில் உள்ள தேசிய மொழிகளில் ஒன்றில் பேச உறுப்பினர்களுக்கு அடிப்படை உரிமை இருக்க வேண்டும் என்றும், அதற்கான வகையில் இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்றும் ஒரு மசோதா மூலம் நான் (இரா. செழியன்) வலியுறுத்தினேன்.
அப்பொழுது அவையில் வீற்றிருந்த துணைத் தலைவர் ஆர்.கே. கடில்கர் என்னுடைய பேச்சின் தொடக்கத்திலேயே குறுக்கிட்டு, அவைத் தலைவர்களாகிய நாங்கள் இப்பொழுது உறுப்பினர்கள் தம் மொழியில் பேச வாய்ப்புத் தருகிறோமே, எதற்கு இந்த மசோதா என்றார்.
அதற்கு நான் (இரா. செழியன்) அளித்த பதில்:-
இந்தி அல்லது ஆங்கிலத்தில் பேச முடியாதவர்கள் மட்டுமே தாய்மொழியில் பேசலாம் என்றும், அதற்கும், அவைத் தலைவரின் அனுமதியைப் பெற வேண்டும் என்றும் இப்பொழுது 120வது பிரிவில் ஒரு கட்டாயம் இருக்கிறது. இதை மாற்ற வேண்டும். இந்தியிலும், ஆங்கிலத்திலும் பேச முடியும் என்றாலும், தம் தாய்மொழியில் பேசும் அடிப்படை உரிமை எங்களுக்கும் வேண்டும். அதற்கு யாருடைய அனுமதியும் எங்களுக்குத் தேவை என்று இருக்கக் கூடாது.
மேலும் சில ஆதாரங்களை நான் முன்வைத்தேன்:-
இந்தியாவில் பதினைந்து தேசிய மொழிகள் உள்ளன. அவை ஒவ்வொன்றுக்கும் வாய்ப்பளிக்க இயலாது என்று சிலர் கூறலாம்.
சோவியத் கூட்டமைப்பில் இருக்கும் உயர்மட்ட சட்டசபையில் பதின்மூன்று மொழியினர் தம் மொழியில் பேசுவதற்கும், அவை உடனடியாக மற்றவர்களுக்கு மொழிபெயர்த்துத் தருவதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் ஆங்கிலம் (முதலிடம்), மலாய், சீனம், தமிழ் ஆகிய நான்கு மொழிகளுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.
பதினோரு இலட்சம் மக்களையுடைய சுவிட்சர்லாந்தில் - ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலி, ரொமான்ஷ் ஆகிய நான்கும் தேசிய ஆட்சிமொழிகளாக இருக்கின்றன. சின்னஞ்சிறு நாடுகளில்கூட நான்கு மொழிகளுக்குத் தரப்படுகிற உரிமை, ஒரு துணைக் கண்டமாக ஐம்பது கோடி மக்களையுடைய இந்தியாவில் பதினான்கு மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு வசதிகளைத் தர ஏன் முடியாது? என்று கேட்டேன்.
அன்றைய தினம் நேரம் போதாமல் என் பேச்சுடன் விவாதம் ஒத்திவைக்கப்பட்டது. இரண்டு வாரங்கள் கழித்து என் மசோதாவை ஆதரித்து 16 உறுப்பினர்கள் பேசினர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷியோ நாராயண் ஒருவர் மட்டும்தான் எனது மசோதாவுக்கு எதிராகப் பேசினார்.
விவாதத்துக்குப் பதிலளித்த உள்துறை இணையமைச்சர் வி.சி.சுக்லா இந்த மசோதாவின் உணர்வை நாங்கள் வரவேற்றாலும், அதனையொட்டி பதினைந்து மொழிகளையும் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தத் தயங்க மாட்டோம் என்றாலும், ஒரு முக்கியமான பிரச்னை இப்பொழுது ஆட்சி மொழிகளாக இரு மொழிகள் இருக்கின்றன என்றாலும், கடைசியில் ஒரு மொழி மட்டுமே ஆட்சி மொழியாக நிலைபெறும் என்ற சூழ்நிலையில் பதினைந்து ஆட்சி மொழிகளாகச் சேர்க்கப்படுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்றார்.
விவாதத்தின் முடிவுரையில் நான் முதலில் சிறிது நேரம் தமிழில் பேசிவிட்டு, பிறகு ஆங்கிலத்தில் மசோதாவுக்கு ஆதரவு தந்த உறுப்பினர்களுக்கும், மற்ற தலைவர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொண்டதுடன், என்னுடைய மசோதாவின் முக்கிய நோக்கம் 1967 பொதுத் தேர்தலுக்குப் பிறகு இந்தி பேசாத பகுதியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெருவாரியாக இந்த அவைக்கு வந்துள்ளார்கள். அவர்களுக்கும் பேசுவதற்கு நல்ல வாய்ப்பைக் கொடுத்தால்தான் ஜனநாயக முறையில் மக்கள் விருப்பு, வெறுப்புகளுக்கு மதிப்பளிப்பதாக ஆகும் என்று வலியுறுத்தினேன்.
கடைசியில், வாக்கெடுப்பில் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. அது காங்கிரஸ் பெரும்பான்மை பலமுடைய அரசாங்கத்தின் போக்கு என்பது முன்கூட்டியே எங்களுக்குத் தெரிந்த ஒன்றாகும்.
1968ல் நான் கொடுத்த மசோதா நிறைவேறியிருந்தால் நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள் இந்தி, ஆங்கிலம் மட்டுமல்லாமல் ஏனைய தேசிய மொழிகளிலும் உறுப்பினர்கள் பேசுவதற்கான உரிமை சட்டப்படி கிடைத்திருக்கும். ஆனால், அப்பொழுது 520 உறுப்பினர்களையுடைய மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு 283 உறுப்பினர்களைக் கொண்ட பெரும்பான்மை பலம் இருந்ததால் எதைப்பற்றியும் கவலைப்படாமல், இந்தி மொழி மட்டுமே ஆட்சி மொழியாக நிலைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் வரவேற்கத்தக்க உணர்வுடைய என் மசோதாவை அப்பொழுது காங்கிரஸ் ஆட்சி தோற்கடித்துவிட்டது.
இப்பொழுது நிலைமை மாறி இருக்கிறது.
மத்தியிலும், மாநிலங்கள் பலவற்றிலும் காங்கிரஸ் கட்சி காலப்போக்கில் பலவீனமடைந்து 2009 தேர்தலுக்குப் பிறகு 545 உறுப்பினர்களைக்கொண்ட மக்களவையில் 206 இடங்களை மட்டுமே பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி மற்றும் பல கட்சிகளின்பெரும்பாலான மாநிலக் கட்சிகளின்ஆதரவுடன் ஆட்சி அமைத்திருக்கிறது. 1968ல் காங்கிரஸ் கட்சி காட்டிய ஆணவப்போக்கு இப்பொழுது செல்லுபடியாகாது.
120வது பிரிவை மாற்றியமைக்க முன்பு நான் எடுத்த முயற்சி பற்றி இங்கு கூறுவதற்குக் காரணம், இப்பொழுது நாடாளுமன்றத்தில் தாய்மொழியில் பேச உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவதைப்போல, அமைச்சர்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இரசாயன உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரி எழுப்பியுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. அமைச்சரும் ஓர் உறுப்பினர் என்ற அடிப்படையில் இது பற்றி அவைத் தலைவர் எத்தகைய முடிவை எடுத்திருக்கிறார் என்பது தெரியவில்லை.
நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடர் வருகிற 22-2-2010 அன்று தொடங்குகிறது. அதற்கு முன்னதாக, இந்த மொழிப் பிரச்னை பற்றி அவைத் தலைவரின் முடிவு வெளியானால் நல்லது.
நாடாளுமன்றத்தில் இப்பொழுதுள்ள கட்சிகளின் பலத்தைக் கணக்கிட்டால், தேசிய மொழிகள் அனைத்தும் ஆங்கிலத்துடன் இணைந்து நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளுக்குப் பயன்படும் விதத்தில் அமைய திராவிட முன்னேற்றக் கழகம் உள்பட்ட மற்ற கட்சிகள் அனைத்தும் முயற்சி செய்தால் சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற முடியும்.
இரா. செழியன்
நன்றி:- தினமணி
11.feb.2010

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)