சனி, 26 ஜூன், 2021

கவிஞர் தாமரைக்கு தோழர் தியாகுவின் மக்கள் சுதா காந்தி எழுதி கொள்வது .. ஒரு அரசியல் + சினிமா குடும்ப பஞ்சாயத்து Part 1

டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : கவிஞர் தாமரைக்கு என்ன ஆச்சு?

சுதா காந்தி தி : கவிஞர் தாமரை அவர்களுக்கு,   
  நான் தோழர் தியாகுவின் மூத்த மகள் சுதா காந்தி எழுதுகிறேன். என் அப்பாவை நீங்கள் ஜூவி மூலம் அறிந்து அவரைப் பார்க்க முகவரி பெற்று என் வீட்டிற்கு வந்து என் அம்மாவை சந்தித்தது நினைவுள்ளதா? என் அப்பாவை சந்திக்கும் முன் நீங்கள் சந்தித்தது என் அம்மாவை. என் அம்மா இப்படி  ஒருவர் வந்தார் எனச் சொல்லித்தான் உங்களை என் அப்பாவிற்கு முதன்முதலில் தெரியும் என்பதை நினைவூட்டுகிறேன். அப்போது நீங்களும் உங்கள் திருமண வாழ்வில் இருந்தீர்கள், என் அப்பாவும் என் அம்மாவுடன் திருமண வாழ்வில் எங்களோடு இருந்தார். அன்று எங்கள் வீட்டில் இருந்த உங்களை ஒருமுறை பார்த்தேன். அதன்பின் உங்களை நான் சுவருக்குள் சித்திரங்கள் வெளியீட்டு விழாவில் பார்த்தேன்.
என் அப்பா உங்களை மணமுடிப்பது தொடர்பாக ஒரு பேருந்து பயணத்தில் என் அம்மாவிடம் தெரிவித்தார். பிள்ளைகளான எங்கள் இருவரிடம் கடற்கரையில் வைத்து தனது மணமுடிக்கும் முடிவைச் சொன்னார். அம்மாவும் சரி நாங்களும் சரி முடிவை ஏற்காது மறுத்துவிட்டோம். இதுவெல்லாம் உங்களுக்கே தெரியும். பிறகு நான் கல்லூரி படிக்கும் போது உங்களுக்கும் என் அப்பாவிற்கும் திருமணம் ஆனதை குமுதம் இதழ் மூலம் அறிந்தேன். எங்கள் பார்வையில் என் அப்பா செய்தது தவறுதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் எங்கள் இருவரையும் தொலைவில் இருந்தாலும் அரவணைத்து எங்களுக்குக் கல்வி தந்து எங்களை நல்ல நிலைக்குக் கொண்டு வந்து சேர்த்தார். என்ன இருந்தாலும் பிள்ளைகளுக்கு இது இழப்புதானே என்ற உணர்வோடுதான் அவர் எல்லாமுமாக அப்போதும் இருந்தார்.

திராவிடம் .. சுருக்கமான நூற்றாண்டு சாதனை பட்டியல்

May be an illustration of one or more people and beard
திருவள்ளுவர் - Ravi Palette

கி.முல்லைவேந்தன் எம்.ஏ (சமூகவியல்) : . பொறுமையுடன் படித்து தெரிந்து கொள்ளவேண்டிய நமது வரலாறு*
திராவிடம் என்ன கிழித்தது?*
கொஞ்சம் பெரிய பதிவு பொறுமையாக படியுங்கள்
*இது ஒரு வரலாற்றுப் பதிவு. இளைய தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்க மட்டும். இது யார் மனத்தையும் புண்படுத்த அல்ல.*
*இப்பதிவினை 40 வயதிற்குக் கீழ் உள்ள ஒவ்வொருவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டியது நம் தலையாய கடமை*
ஒரு காலத்தில் உணவு விடுதிகளைப் பெரும்பாலும் பிராமணர்களே நடத்திவந்தனர்.
*பிராமணர் அல்லாதார் உள்ளே சென்று உட்கார்ந்து சாப்பிட முடியாது.*
எடுப்புச் சாப்பாடுதான்
வாங்கிச் சென்று
வெளியே சாப்பிட  வேண்டும்.
சென்னையில்  அன்றைய மவுன்ட் ரோடிலும், ஜார்ஜ் டவுனிலும் இருந்த உணவு விடுதிகளில், *‘பஞ்சமர்களும், நாய்களும், குஷ்டரோகிகளும் உள்ளே நுழையக் கூடாது’* என்று விளம்பரப் பலகைகளை வைத்திருந்தனர்.
*இரயில்வே உணவு விடுதிகளில் பிராமணாள், இதராள்* என்று விளம்பரப் பலகை  வைக்கப்பட்டு இருந்தது.     இது மட்டுமல்ல.  இருப்புப் பாதைகள் போடப்பட்டு, இரயில் பயணம்  தொடங்கிய காலத்தில்,
*நான்கு வகைப் பெட்டிகள் இருந்தன. அவற்றை நான்கு வருணத்தாரும்* தனித்தனியாகப் பயன்படுத்தும்படியாக  உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என
இந்து மத வேதியக் கூட்டம் இரயில்வே நிர்வாகத்தைக் கேட்கும் அளவுக்குப்
பேதங்கள் மோசமாக இருந்தன.

எம்ஜியாரின் ஆயிரத்தில் ஒருவனில்.. ஆர் கே ஷண்முகம் வெற்றிகளை குவித்த கதை வசனகர்த்தா

May be an image of 1 person

நெற்றிக்கண் மனோஹரன் : ஆயிரத்தில் ஒருவன்" கதாசிரியர் , எம்ஜிஆரின் ஆஸ்தான கதை வசனகர்த்தா ஆர்.கே.ஷண்முகம்    .
நாகப்பட்டினத்தைச்  சேர்ந்தவர் ஆர்கே சண்முகம். 10 வயதில் சென்னைக்கு வந்த அவர், திரைப்படங்களில் அடிமட்ட தொழிலாளியாக இருந்து படிப்படியாக இயக்குநர் பிஆர் பந்துலுவின் உதவி இயக்குநராக மாறினார்.
கப்பலோட்டிய தமிழன் உள்ளிட்ட பல சிவாஜி கணேசன் படங்களில் பணியாற்றினார்.
பின்னர் எம்ஜிஆர் படங்களுக்கு ஆஸ்தான வசனகர்த்தாவாகா மாறினார்.
ஆயிரத்தில் ஒருவன், முகராசி, நினைத்ததை முடிப்பவன், சிரித்து வாழ வேண்டும், ரகசிய போலீஸ் 115, பல்லாண்டு வாழ்க, ஊருக்கு உழைப்பவன், தலைவன், தேடி வந்த மாப்பிள்ளை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார்.          
இந்நிலையில் 1965ஆம் ஆண்டில் பந்துலு எம்ஜிஆரை வைத்து முதன் முதலாக உருவாக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு வசனமெழுதும் வாய்ப்பினை பந்துலு இவருக்கு அளித்தபோது எம்ஜிஆர் இவரை புதுயவரென்ற கண்ணோட்டத்தில், இவர் மீது அவ்வளவாக நம்பிக்கை கொள்ளவில்லை.

தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனைகளில் வீணாகும் தடுப்பூசிகள்

கொரோனா தடுப்பூசி

மாலைமலர் :சென்னை:  கொரோனா தடுப்பூசி கிடைக்கவில்லை என்று அலைமோதல் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கான டோஸ் மருந்து வீணாகி வருகிறது.
மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் அளவில் 25 சதவீதம் ஊசியை தனியார் மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கிறது.
அந்த வகையில் கடந்த மே மாதம் 1-ந்தேதி முதல் கடந்த 23-ந்தேதி வரை தமிழகத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு 12 லட்சத்து 51 ஆயிரத்து 740 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியும், 1 லட்சத்து 31 ஆயிரத்து 300 டோஸ் கோவேக்சின் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 5.9 லட்சம் டோஸ் மருந்துகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு வயல் மருந்தை எடுத்தால் 10 பேருக்கு போட வேண்டும். ஒன்றிரண்டு பேருக்கு மட்டுமே போட்டு விட்டு வைத்திருந்தால் பயன்படுத்த முடியாது.

தமிழ்நாடு 11 மாவட்டங்களுக்கு பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆட்சியராக.. BBC

BBC : தமிழ்நாட்டில் கடந்த வாரத்தில் பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். இதில் பலரும் ஆச்சரியத்துடன் பார்க்கும் விஷயம், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்ட ஆட்சித் தலைவர்களில் 11 பேர் இளம் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்திருப்பதுதான்.

இதைத்தவிர, மாநகராட்சி ஆணையர், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் என பத்துக்கும் மேற்பட்ட இளம் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நான்கு செயலாளர்களில் ஒருவராக பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி அணு ஜார்ஜ் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.<தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்ட பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாவட்ட ஆட்சித் தலைவர்களாகப் பதவி ஏற்றிருப்பது இதுவே முதல்முறை என்கின்றனர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் ஸ்ரேயா சிங் பிபிசி தமிழுக்காகப் பேசினார்.

பிளஸ்-2 மதிப்பெண் கணக்கீடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

maalaimalar : 11, 12ம் வகுப்பில் செய்முறை, அகமதிப்பீடு தேர்வுகளில் கலந்து கொள்ளாதவர்கள் தனித்தேர்வர்களாக கருதப்படுவார்கள். சென்னை: கொரோனா நோய்த்தொற்று காரணமாக, மாணவ-மாணவிகள் தேர்வு எழுதக்கூடிய சூழல் இல்லாத காரணத்தினால் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. உயர்கல்வி சேர்க்கைக்கு பிளஸ்-2 மதிப்பெண் மிக அவசியம் என்பதால், அவர்களுக்கான மதிப்பெண் எவ்வாறு வழங்குவது என்பது குறித்து ஆராய்ந்து, அதற்கான வழிமுறைகளை அரசிடம் தெரிவிக்க ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் கல்வித்துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

திமுகவில் இணையும் அதிமுக மாநில நிர்வாகிகள்..!

nakkheeran.in - ஆளுங்கட்சியாக திமுக வந்த பிறகு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுகவின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த நிலையில், திமுக பலவீனமான உள்ள பகுதியாக கருதப்படும் மேற்கு மாவட்டமான கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் கட்சிக் கட்டமைப்பு உடைய தொடங்கிவிட்டது. அதிமுக நிர்வாகிகள் பலரும் திமுகவில் இணையும் சூழல் உருவாகியுள்ளது. அதன் தொடக்கமாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி அடையும் நிகழ்வாக, ஈரோடு மாவட்ட அதிமுக பாதியாக பிளவுபட்டு ஒரு பகுதி திமுகவில் இணைகிறது. ஜீவாதங்கவேல் : ஈரோடு புறநகர் மாவட்டச் செயலாளராகவும் ‘ஜெ’ பேரவை மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றி, அதிமுக ஆட்சிக் காலத்தில் சிட்கோ வாரியத் தலைவராகவும் இருந்தவர் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த சிந்து ரவிச்சந்திரன். இவர், தற்போது அதிமுகவில் மாநில வர்த்தக அணிச் செயலாளராக கட்சி பொறுப்பில் இருந்தார். இந்த சிந்து ரவிச்சந்திரன்தான் இன்று (25.06.2021) மாலை திமுகவில் இணையவுள்ளார். 

டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு மதுரையில் ஒருவர் உயிரிழப்பு

m.dinamalar.com  சென்னை : ''தமிழகத்தில் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்றால் மதுரையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த வைரஸ் பாதிப்பை கண்டறிவதற்கான ஆய்வுக் கூடம் 2.5 கோடி ரூபாய் செலவில் சென்னையில் அமைக்கப்பட்டு வருகிறது'' என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை தலைமை செயலகத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. டெல்டா பிளஸ் வைரசை பொறுத்தவரை நேற்று முன்தினம் வரை ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தார். தற்போது காஞ்சிபுரம் மற்றும் மதுரையை சேர்ந்த இருவருக்கு அந்த தொற்று உறுதியாகி உள்ளது.அதாவது சென்னை கோட்டூரை சேர்ந்த நர்சுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அவர் குணமடைந்துள்ளார். அதேபோல காஞ்சிபுரத்தை சேர்ந்தவரும் குணமடைந்துள்ளார்.

ஊட்டியில் அணை கட்ட வேண்டும்.. தமிழ்நாடுதான் கர்நாடகாவுக்கே தண்ணீர் கொடுக்கிறது!:

May be an image of waterfall and nature
May be an image of outdoors

Kannan Rajan  :   ஊட்டியில் அணை கட்ட வேண்டும்.! தமிழ்நாடுதான் கர்நாடகாவுக்கே தண்ணீர் கொடுக்கிறது!:
அதிர்ச்சியில் உறைந்த கர்நாடகா!
தமிழ்நாடு  மற்றும் கர்நாடகா இடையே நீண்ட நாட்கள் தீர்க்கப்படாமல் உள்ள ஒரு விஷயம் என்றால் அது காவிரி நதிநீர் பிரச்சனைதான்.
இந்த காவிரி விஷயத்தை வைத்துதான் இரு மாநில அரசியல்வாதிகளுமே அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
நாம் இன்று வரை கர்நாடகாவிடம் தண்ணீருக்காக கையேந்திக் கொண்டிருக்கிறோம். அவர்களும் கெத்தாக முடியவே முடியாது என்று மார்தட்டி கொண்டிருக்கிறார்கள். ஆனால் கர்நாடகாவுக்கே நாம்தான் தண்ணீர் தந்து கொண்டிருக்கிறோம் தெரியுமா?
ஆம் ஊட்டியில் உள்ள மோயர் ஆற்றின் ஒரு பகுதி பவானிசாகர் அணைக்கும், மற்றொரு பகுதி கர்நாடகாவிலும் பாய்கிறது.கர்நாடகாவில் பாயும் தண்ணீர் கபினி அணையிலும், நூகு அணையிலும் கலக்கிறது.

வெள்ளி, 25 ஜூன், 2021

கேரளாவை அதிரவைத்த விஸ்வமாயா தற்கொலை! கேரளா பெண்கள் அதிரடி முடிவு .. வரதட்சணை கொடுக்க மாட்டோம்

Kerala women starts no to dowry.. If boys joins with says no to dowry, it should be fine.. Hope it spread..

 tamil.behindwoods.com : பலரது இதயங்களை நொறுக்கிய ஒற்றை புகைப்படம்’… ‘இனிமேல் இந்த கொடுமை நடக்க கூடாது’… கேரள இளம்பெண்கள் எடுத்த அதிரடி முடிவு!
கேரளாவில் வரதட்சணை கொடுமையால் நிகழ்ந்த மரணம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் அடுத்தடுத்து இளம் பெண்கள் வரதட்சணைக் கொடுமை புகாரில் உயிரிழந்த சம்பங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லத்தைச் சேர்ந்த 22 வயது விஸ்மயா வி நாயர் என்ற பெண், சமீபத்தில் தனது கணவர் கிரண்குமார் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
விஸ்மயாவின் மரணம் வரதட்சணை கொடுமையால் நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது.
அவரது மரணம் சமூக ஊடகங்களில் விவாதங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. விஸ்வமயா ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை மாணவி ஆவார்.

85 நாடுகளில் டெல்டா உருமாறிய வைரஸ்; உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தக்கூடும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

 தந்தி டிவி :இந்தியாவில் கொரோனா 2-வது அலையின் ஆவேச தாக்குதலுக்கு காரணமான டெல்டா உருமாறிய வைரஸ், உலகமெங்கும் 85 நாடுகளுக்கு பரவி உள்ளதாக கூறியிருக்கும் உலக சுகாதார அமைப்பு, இந்த வைரஸ் ஆதிக்கம் செலுத்தக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
கவலைக்குரிய உருமாறிய கொரோனா வைரஸ்களான ஆல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டா வைரஸ்களை தீவிரமாக கண்காணிப்பதாக உலக சுகாதார அமைப்பு தனது வாராந்திர அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட ஆல்பா உருமாறிய வைரஸ் 170 நாடுகளிலும்,
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட பீட்டா உருமாறிய வைரஸ் 119 நாடுகளிலும்
பிரேசிலில் காணப்பட்ட காமா உருமாறிய வைரஸ் 71 நாடுகளிலும்
இந்தியாவில் கண்டறியப்பட்ட  டெல்டா வைரஸ் 85  நாடுகளிலும் பரவியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சீட்டுக்கட்டு போல சரிந்த 12 மாடி குடியிருப்பு - இடிபாடுகளில் சிக்கிய 99 பேர் மீட்பு

 Jeyalakshmi C  - ://tamil.oneindia.com :  மியாமி: அமெரிக்காவில் மியாமி கடற்கரை அருகே 12 மாடி குடியிருப்பு ஒன்று திடீரென சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தது.
இடிபாடுகளில் இருந்து 99க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ள நிலையில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விடிய விடிய மீட்புப்பணிகள் நடைபெற்றன.
தகவலறிந்து தீயணைப்பு படை மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர
3வது மாடி ஜன்னலில் இருந்து அலறல்.. மிரண்டு போன மக்கள்.. துணிந்த 3 பேர்..
அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கவே மீட்புப்பணிகளில் சிரமம் ஏற்பட்டது.
முதல் கட்டமாக அவர்கள் 12 வயது சிறுவன் உள்பட 99க்கும் மேற்பட்டோரை மீட்டனர். ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஹாஸ்டலுக்கு வரும் போன்கால்... மாணவியை குளிப்பாட்டி பாபா அறைக்கு அழைத்து செல்லும் வார்டன்

 tamil.samayam.com : சென்னை கேளம்பாக்கம் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் படித்த மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது போக்ஸோ உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து டெல்லியில் வைத்து சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் போலி சாமியார் சிவசங்கர் பாபாவை ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனிடையே திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சிவசங்கர் பாபா ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெசோ மாநாடும் டெலோ அழிவும்! எம்ஜியாரின் போர்க்குற்றங்கள்

தமிழ் பெட்டகம் : இலங்கை - இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு 3 .. (செல்வா ஈட்டிய  செல்வம்)
Opinion: 'Aayirathil Oruvan, MGR was truly a Man of the Millennium' -  DTNext.in

செல்லபுரம் வள்ளியம்மை : கலைஞர் கூட்டிய டெசோ மாநாடுதான் எல்லா அழிவுக்கும் காரணமாக அமைந்துவிட்டது .
டெசோ மாநாட்டை பார்த்து இலங்கை அரசாங்கம் பயணத்தை விட எம்ஜியார் அதிகமாக பயந்தார் .
தமிழ்நாட்டில் மட்டுமல்ல முழு இந்தியாவிலும் கலைஞரின் செல்வாக்கு கொடிகட்டி பறந்தது.
முழு உலகமும் ஈழவிடுதலை என்பது சில மாதங்களுக்கு அருகேதான் உள்ளது என்ற முடிவுக்கு வந்திருந்தன.
முழு உலகமும் ஈழவிடுதலை பற்றி எதிர்பார்த்திருந்த காலக்கட்டத்தில் எம்ஜியார் மட்டும் தனது அரசியல் வாழ்வு ஒரு முடிவை நோக்கி செல்வதாக கருதினார்.
அந்த டெசோ மாநாட்டு உத்வேகத்தை  அந்த சூரிய வெளிச்சத்தை பார்த்து எம்ஜியாரின் இருண்ட உள்ளம் குறுகி போனது..
இதற்கு ஏதாவது செய்தாகவேண்டும் என்று மூர்க்கத்தனமாக பிரபாகரனை தட்டி விட்டார் .
ஏற்கனவே டெலோவை கொஞ்சம் தட்டி வைக்குமாறு உமாவிடம் கேட்டு உமா மறுத்த நிலையில் பிரபா சம்மதித்திருந்தார்.
இந்த காலக்கட்டத்தில் சும்மா தட்டி எல்லாம் வைக்கவேண்டாம் ஒரேயடியாக முடித்து விடும் உத்தரவை பிரபாவுக்கு கொடுத்தார் . கூடவே பிளாட்டின் ஆயுத காண்டெயினரையும் பறித்து கொடுத்திருந்தார்.
ஊரை கொழுத்தும் சாத்தானுக்கு கொள்ளி எடுத்து கொடுத்தார் எம்ஜியார்.
டெசோ மாநாட்டு நிகழ்ச்சிகள் நடந்து முடிவதற்கு உள்ளேயே ஸ்ரீ சபாரத்தினமும் ஏனைய சகோதர போராளிகளும் படுகொலையானார்கள்
அப்போது விடுதலை போராடடம் வெற்றிகளை  மட்டுமே குவித்து கொண்டிருந்த காலக்கட்டம்.

லண்டன் தெருவில் ஒரு கிராமத்து பெண்மணி போல் நடந்து செல்லும் சந்திரிக்கா அம்மையார்

I am chairperson of SLFP, not Sirisena : Chandrika Bandaranaike | Siyatha  News - English

செல்லபுரம் வள்ளியம்மை  :  எனது நண்பர் ஒருவர்  துபாயில் இருக்கிறார்.  ஹோட்டலில் வேலை செய்கிறார் ஒரு நாள் அந்த ஹோட்டல்  முன்பாக  ஒரு அம்மையார் நடக்கவே முடியாமல் ஒரு மாதிரி தனது சூட்கேசையும் தள்ளிக்கொண்டு வந்திறங்கினார் ..
அவர் ஹோட்டல் கவுண்டரில் அறை சாவியை பெற்றுக்கொண்டு இலங்கை தூதரகத்தின் தொலைபேசி இலக்கத்தை தாருங்கள் என்று கேட்டார்
அவரை உற்று நோக்கிய எனது நண்பருக்கு இவரை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறது என்று யோசித்து உடனே ஞாபகம் வந்தது அது இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார்.
மிகவும் நொந்து நொடித்து போனவர் மாதிரி காட்சி அளித்தார் என்று நண்பர் கூறினார்
உலகின் முதல் பெண் பிரதமரின் மகள். தாய் தந்தை இருவருமே பிரதமர்கள்
ஒரு தடவை பிரதமராகவும் இரு தடவைகள் ஜனாதிபதியாகவும் இருந்தவர்
1995 இல் கடுமையாக போரை நடத்தி யாழ்ப்பாணத்தை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்டவர்.

MLA மனுவை .உட்கார்ந்த படியே வாங்கிய அமைச்சர்கள் ..

 புறக்கணிப்பு

tamil.oneindia.com -  Hemavandhana  : சென்னை: திமுக மீது 2வது முறையாக அதே புகார் கிளம்பி உள்ளது.. அதிலும் அமைச்சர்களே இப்படி செய்யலாமா? என்று திருத்துறைப்பூண்டி கம்யூனிஸ்ட் கட்சியினர் இதனால் மீண்டும் அதிருப்திக்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது..!
இந்த முறை திருத்துறைப்பூண்டி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக மாரிமுத்து போட்டியிட்டார்... இவர் எளிமையானவர்.. குடிசை வீட்டில்தான் வசித்து வருகிறார்..ஆனால், மக்கள் பிரச்சனைகளை ஆழமாக கவனிப்பவர்.. தன் தொகுதி மக்கள் நலனுக்கான பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர். அதனால்தான், அதிமுகவை விட, இங்கு மாரிமுத்துவுக்கு எப்போதுமே செல்வாக்கு அதிகம்.

இந்நிலையில், முத்துப்பேட்டை பகுதியை தனி தாலுகாவாக அறிவிக்கக் கோரி, வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனை நேரில் சந்தித்து எம்எல்ஏ மாரிமுத்து மனு அளித்துள்ளார்.. அப்போது அமைச்சர் உட்கார்ந்துகொண்டே அந்த மனுவை வாங்கினாராம்.

இலங்கையில் 16 முன்னாள் புலி போராளிகள் விடுதலை

thaainaadu.com : விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளில் மூவர் கிளிநொச்சியில் சிறைச்சாலை அதிகாரிகளினால் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டனர்.
இன்று(புதன்கிழமை) பிற்பகல் சிறைச்சாலை பேருந்தில் அழைத்துவரப்பட்ட குறித்த மூவரையும் சிறைச்சாலை அதிகாரிகள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
விடுதலைப்புலி உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்த அவர்கள் இன்றைய தினம் தமது உறவினர்களை சந்தித்தது போன்று, நீண்ட காலமாக சிறையில் உள்ள ஏனையவர்களையும் விடுவித்து, அவர்களின் குடும்பத்துடன் இணைக்குமாறு ஜனாதிபதியிடம் தாங்கள் வேண்டுவதாகவும், தம்மை விடுவித்த ஜனாதிபதிக்கும், ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.16 முன்னாள் புலி போராளிகள் விடுதலை செய்யப்பட்டனர்
முன்னாள் போராளிகள் 16 பேர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை. செய்யப்பட்டனர்.

திராவிட முன்னேற்ற கழகமும் .. திராவிட பின்னேற்ற கழகமும் .. புலம்பல் லீக்ஸ்

May be an image of ‎6 people and ‎text that says '‎திராவிடர் பின்னேற்ற கழகம் 666 ទ yogoo Visi சிவ Nithi Chanthuru மதட் ي Vignesh Hasan Prasath ரா Viji Sara பரணீதரன்‎'‎‎

Raja Rajendran Tamilnadu  :  நேற்றிரவு க்ளப்ஹவுசில், புலம்பெயர்ந்த அதிதீவிர புலி ஆதரவாளர்கள் சிலர் இணைந்து கதைத்துக் கொண்டிருந்தனர்.  தலைப்பு என்ன தெரியுமா ?
திராவிடர் பின்னேற்றக் கழகம் !
எரிமலை வெடிப்பாக குழம்பை உமிழ்வது போலத் துவங்கிய அந்தத் தர்க்கம், முடியும் போது சோர்வாகவும், குழம்பாறின் மீது பட்ட கடல்  நீராகவும் புகைத்துப் போனது !  
ஏன் ??
அரக்கர்கள் ஞாயிறன்று நடத்திய ஸ்பேஸ் அரங்கும், நேற்று நடத்திய க்ளப்ஹவுஸ் கூட்டமும், புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்களை பெரிதும் உசுப்பி விட்டிருக்கிறதாம் !
தூங்கிக் கிடந்த எங்களைச் சுரண்டி விட்டுவிட்ட அரக்கர்களை இனி தூங்க விட மாட்டோம் எனச் சபதம் செய்தார்கள் !
அரக்கர்கள் என்ற சொல்லுக்கு எதிராக கரிகாலர்கள் அல்லது கரிகாலன் என்கிற அடையாளத்தோடு களம் காணப்போவதாக உறுதி கூறினர் !
இருந்தாலும் இன்னும் மூன்று நாட்களுக்குள் அரக்கர்கள்,  புலிகளையும், எங்கள் தலைவர் பிரபாகரனையும் பயங்கரவாதிகள் என்று பேசியதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டால், இந்த ஓப்பரேசன் கரிகாலனை
மறுபரிசீலனை செய்வோம் என்றும் உத்திரவாதமளித்திருக்கிறார்கள் !
இல்லையெனில்,

வியாழன், 24 ஜூன், 2021

CAG அ.தி.மு.க ஆட்சியில் TANGEDCOவுக்கு ரூ.424 கோடி இழப்பு: சி.ஏ.ஜி அறிக்கை.. அம்பலமான மின்சார ஊழல்!

 கலைஞர் செய்திகள் - Vignesh Selvaraj :  கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியின்போது, தனியாரிடம் இருந்தும் மிக அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்யப்பட்டதால் தமிழ்நாடு மின்வாரியம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியது.
இதுகுறித்து, கடந்த 21ஆம் தேதி தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தொடரின் ஆளுநர் உரையின்போது சுட்டிக்காட்டப்பட்டது. அதில், தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் தவறான நிர்வாகத்தால் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது
இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசும்போது, “கடந்த ஆட்சியில் தனியார் துறையிடமிருந்து மின்சாரம் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதற்கான நீண்ட கால ஒப்பந்தத்தில் அதிக குளறுபடிகள் இருப்பதால்தான் இழப்பு ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, மின்சார கொள்முதலால் ஏற்பட்ட இழப்பு தொடர்பாக இந்திய கணக்காய்வு தணிக்கை (சிஏஜி) அறிக்கை இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

சட்டமன்றத்தில் மூத்த அமைச்சரை (துரைமுருகன்) அமைச்சர் (ராஜ கண்ணப்பன்) அவமதித்தாக திமுக சலசலப்பு

சீனியர் அமைச்சரை அவமதித்த ஜூனியர் அமைச்சர்?

 மின்னம்பலம்  : தமிழ்நாடு  சட்டமன்றத்தில் சீனியர் அமைச்சரை, ஜூனியர் அமைச்சர் அவமதித்தாக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சலசலப்பு விவாதம் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரிடம் பேசினோம்.

“தமிழ்நாடு க 16வது சட்டமன்றத் கூட்டத்தொடரில் ஜூன் 22ஆம் தேதி முதல் ஆளுநர் உரைமீதான விவாதம் நடைபெற்றது. அன்று, கொரோன வைரஸ் தொற்று சம்பந்தமாக சுகாதாரத் துறையைப் பற்றி எதிர்கட்சித் தலைவர் ஒபிஎஸ் மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதற்கு, பதிலடி கொடுக்கும் வகையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் கண்ணப்பன் பேசினார். அவர் பேசிக் கொண்டிருந்தபோதே அவை முன்னவரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன், எழுந்து பேச்சை நிறுத்துமாறு கண்ணப்பனை நோக்கி கையால் சைகை காட்டியிருக்கிறார்.

அதிமுகவின் ரூ.322 கோடி நில மோசடியை அம்பலப்படுத்திய அமைச்சர் ஐ பெரியசாமி ஆடிப்போன எடப்பாடி ..

 Velmurugan P - tamil.oneindia.com :  சென்னை : அதிமுக ஆட்சிக் காலத்தில் கூட்டுறவு வங்கியில் ரூ.322 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி சட்டசபையில் கூறியுள்ளார். பயிர் கடன் தள்ளுபடிக்கான ரசீது வழங்க வேண்டும் எனற எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு மேற்கண்ட பதிலை அமைச்சர் அளித்தார்.
சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பயிர் கட்ன் தள்ளுபடி குறித்து கேள்வி எழுப்பினார்.
எடப்பாடி பழனிசாமி இதுபற்றி கூறும் போது. 2016ம் ஆண்டு விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் கூட்டுறவு வங்கிகளில் தள்ளுபடி செய்யப்படும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

மீத்தேன், நியூட்ரினோ, எட்டுவழிச் சாலை வழக்குகள் அனைத்தும் வாபஸ் - மு.க.ஸ்டாலின்

 News18 Tamil : ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது மக்களுக்காக குரல் கொடுத்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.
மீத்தேன், நியூட்ரினோ மற்றும் எட்டுவழிச் சாலை திட்டத்தை எதிர்த்து அறவழியில் போராடியவர்கள் மீது போட்டப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
இன்று காலை தமிழக சட்டப்பேரவை கூடியதும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி அவர்களையும் வணங்கி முதலமைச்சர் உரையை தொடங்கினார். தேர்தலில் வாக்களித்து வெற்றிபெறச் செய்த தமிழக மக்களுக்கும் கொளத்தூர் தொகுதி மக்கள், வெற்றிக்கு பணியாற்றிய திமுக நிர்வாகிகள் தொண்டர்கள், கூட்டணி கட்சியினுடைய நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

மேகதாதுவில் அணைகட்ட அனுமதிக்க மாட்டோம்” : அமைச்சர் துரைமுருகன் உறுதி !

 கலைஞர் செய்திகள்  premjourn :  மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை உறுதியாகத் தடுப்போம் என்றும் இந்த விஷயத்தில் அரசியல் செய்யப்படுவதாகவும் அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் பா.ம.க தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்ட முயற்சிப்பதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனப் பேசினார்.
இதற்குப் பதிலளித்து அவை முன்னவரும் நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான துரைமுருகன் கூறியதாவது :-
ஜி.கே. மணி, மேகதாது குறித்துச் சொன்னார். இந்த அரசு, முன்பு இருந்தபோதும் சரி, இப்பொழுதும் சரி, மேகதாது கட்டக் கூடாது என்பதிலே திடமான, உறுதியான நம்பிக்கையோடு இருக்கிறது. முன்பு இருந்த அரசும் அதிலே திடமாகத்தான் இருந்திருக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை.

காமராஜர்! . பீடி தொழிலாளர்களின் கண்ணீரில் அரசியல் நடத்தியவர் .. பொற்கால ஆட்சி எல்லாம் கொடுத்துவிடவில்லை.

 Rajaiah Manuvel  :  இன்னொரு முக்கியமான சட்டப்படியான நிகழ்வினையும் சேர்த்துக் கொள்ளுங்கள்...
அன்றய கால கட்டத்தில், தமிழ்நாடு முழுவதும் பீடித் தொழிலாளர் குறைந்த பட்சக் கூலி அமுல் படுத்தப் பட்ட நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும்
(அன்றைய திருநெல்வேலி மாவட்டம் என்பது, இன்றய திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை உள்ளடக்கியது)
இந்த சட்டம் அமுல் படுத்தப் படவில்லை.
அதற்கு அவர்கள் சொல்லிய சமாதானம் என்பது, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பீடித் தொழிலாளர்கள் முழுவதும் பெண் தொழிலாளர்களாகும்
அவர்கள் வீட்டிலிருந்தபடியே பீடித் தொழில் செய்வதால் கம்பெனி சட்டத்திற்கு உட்பட்டு வராமல் குடிசைத் தொழில் என்ற அங்கிகாரம் கொடுத்தது .
அன்றைய முக்கூடல் வகையறா முதலாளிகளுக்கு பாதுகாவலாக "ஏழைப் பங்காளர்" காமராஜர் அரசு இருந்தது என்பதை அறியவும்.
அதன் மூலம் தொழிலாளர்களுக்கு என்ன பாதிப்பு என்றால்,அரசு அறிவிக்கும் முறையான சம்பளம், முறையான காலங்களில் இவர்களுக்கு கிடைப்பதில்லை.

இலங்கை கடற்கரைகளில் 88 கடலாமைகளும் ஒரு திமிங்கிலமும் 7 டொல்பின்களும் இறந்து கரை ஒதுங்கின

Newsfirst.lk Tamil :இலங்கை கடற்கரையின் சில பகுதிகளில் இன்றும் இறந்த நிலையில் 7 கடலாமைகள் கரையொதுங்கின.
இன்று (23) காலை மொரட்டுவை – லுனாவ பகுதியில் ஒரு கடலாமை கரையொதுங்கியதுடன், பகல் வேளையில் முரவத்த பகுதியில் மற்றுமொரு கடலாமையின் உடல் கரையொதுங்கியது.
களுத்துறை வடக்கு பகுதியிலும் காலி – கொஸ்கொட, நாபே பகுதியிலும் கடலாமைகள் இறந்துள்ளன.
இதேவேளை, ஹிங்கடுவையில் இன்று இறந்த நிலையில் மீன்கள் கரையொதுங்கின.
நாரா நிறுவன அதிகாரிகள் குறித்த பகுதிக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர்.
கல்முனை – பாண்டிருப்பு கடற்கரையில் உயிரிழந்த நிலையில் இன்று டொல்பின் கரையொதுங்கியுள்ளது.
முந்தல் – சின்னப்பாடு கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கடலமை கரையொதுங்கியுள்ளது.

காஷ்மீர் தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை! மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடத்த தீர்மானம்?

nakkeeran : புதுடெல்லி,   கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்நிலையில், காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடத்த மத்திய அரசு விரும்புகிறது. இதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காக, பிரதமர் மோடி தலைமையில் அவரது இல்லத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு உயர்மட்ட கூட்டம் நடைபெறுகிறது. 
இந்த கூட்டத்தில் பங்கேற்க ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகள் அடங்கிய குப்கர் கூட்டமைப்பு, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் சம்மதம் தெரிவித்துள்ளன. இக்கூட்டத்தில் காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்படும் என காஷ்மீரின் முக்கிய கட்சியான தேசிய மாநாட்டு கட்சி தெரிவித்துள்ளது. 

அதிமுக, அமமுக மோதலைத் தீவிரமாக்கிய கார் எரிப்பு – நடந்தது என்ன? சசிகலா ஆடியோ:

     ஆ விஜயானந்த்  -  
    பிபிசி தமிழுக்காக   :    அ.தி.மு.கவில் சசிகலாவின் ஆடியோ பேச்சுக்கள் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. கார் எரிப்பு, உருவ பொம்மை எரிப்பு என அடுத்தகட்டத்தை நோக்கி மோதல் நகர்வதால் தொண்டர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சசிகலாவின் அடுத்தகட்ட திட்டம் என்ன?
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு 66 இடங்களோடு சட்டசபையில் எதிர்க்கட்சி வரிசையில் அ.தி.மு.க அமர்ந்தது. `இந்தத் தேர்தலில் படுதோல்வியடைந்த பிறகு தன்னை நோக்கி வருவார்கள்’ என எதிர்பார்த்திருந்த சசிகலாவின் கனவும் பொய்த்துப் போய்விட்டது.
இந்நிலையில், அண்மைக்காலமாக அதிருப்தியில் இருக்கும் அ.தி.மு.க தொண்டர்களிடம் சசிகலா பேசி வருகிறார். அந்தவகையில் இதுவரையில் அறுபதுக்கும் மேற்பட்ட ஆடியோக்கள் வெளியாகிவிட்டன. இதனால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்படுவதை உணர்ந்த அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, `அ.ம.மு.க தொண்டர்களுடன்தான் அவர் பேசி வருகிறார். இதனால் எந்தவிதக் குழப்பத்தையும் ஏற்படுத்திவிட முடியாது’ என்றார்.
அதிகாலையில் காரை எரித்தது யார்?

இங்குள்ள தமிழர்களுக்கு மட்டுமல்ல; ஈழத் தமிழர்களுக்காகவும் தி.மு.க அரசு குரல் கொடுக்கும்” : முரசொலி !

 முரசொலி - premjourn  : தமிழுக்காகவும், தமிழர் நலத்துக்காகவும் தொடங்கப்பட்ட இயக்கம் ஒன்று ஆட்சிக்கு வந்தால் என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் தி.மு.கழக அரசு செய்யத் தொடங்கி இருக்கிறது என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கு தமிழும், தமிழனும் இருகண்கள் என்பது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் தெளிவுபடுத்தப்பட்டு இருக்கிறது. தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அவர்கள், “தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படும் என்பது ஆளுநர் உரையிலேயே இருக்கிறது. நீங்கள் சொன்னதைப் போல, முதல்வர் அவர்கள் தமிழுக்கு முக்கியத்துவம் தருகிறார். அந்த வகையிலே வேலைவாய்ப்பிலே முன்னுரிமை கொடுக்கப்படும் என்ற வரியும் இருக்கிறது” என்பதை விளக்கினார்.

காவலர் தாக்கி உயிரிழந்த வியாபாரி குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிதியுதவி!

 நக்கீரன் செய்திப்பிரிவு  :  சேலத்தில் காவலர் தாக்கி உயிரிழந்த வியாபாரியின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சேலம் மாவட்டம், இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் நேற்று (22/06/2021) இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், மலையாளப்பட்டி கிராமத்தில் உள்ள வன சோதனைச் சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த ஏத்தாப்பூர் காவல்துறையினர் அவர்களைத் தணிக்கை செய்துள்ளனர்.

’ஒன்றிய அரசு’ என்றுதான் சொல்வோம் : தமிழ்நாடு முதலமைச்சர்

 மின்னம்பலம் : ஒன்றியம் என்ற வார்த்தையில் கூட்டாட்சி தத்துவம் அடங்கியுள்ளதால் ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்தினோம்; பயன்படுத்தி வருகிறோம்; இனியும் பயன்படுத்துவோம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது முதல் ஒன்றிய அரசு, தமிழ்நாடு என்கிற வார்த்தை பயன்பாடு அரசு அறிவிப்புகளிலும், அறிக்கைகளிலும், ஊடகங்களிலும் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த சொல்லாடல் விவாதப்பொருளாகவும் பேசப்பட்டது. இந்த வார்த்தை பயன்பாட்டிற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்தது.
தமிழ்நாட்டில் மத்திய அரசை ’ஒன்றிய அரசு’ என்று அழைத்தால், நாங்கள் ’பாரத பேரரசு’ என்று அழைப்போம் என பாஜக பிரமுகர் குஷ்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் 16ஆவது சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் மூன்றாவது நாளாக, ஆளுநர் உரை மீதான இரண்டாவது நாள் விவாதம் இன்று (ஜூன் 23) நடைபெற்றது.

மதுரை தங்கம் தியேட்டர் ,,, ஆசியாவின் மிகப்பெரும் அரங்கம்

தூங்கா நகரம் மதுரை   :  மதுரையின் தங்கம்....  ஆசியாவிலயே

மிகப்பெரியதாக விளங்கியது, 'தங்கம்' திரையரங்கம்
1952ல் கட்டப்பட்டது. ஒரு காட்சிக்கு 2,563 பேர் அமர்ந்து படம் பார்க்கலாம்.
இந்தத் திரையரங்கில் 25 நாள்கள் படம் ஓடினாலே 100 நாள்கள் ஓடியதுபோல என்று கணக்கிடுவார்கள். 1952ல் திரையரங்கின் முதல் படமாக சிவாஜியின் முதல்படம் பராசக்தி திரையிடப்பட்டது.
அப்போது தியேட்டர் முழுமையாகக் கட்டி முடிக்கப்படவில்லை.
அரைகுறை கட்டிட மண்தரையில் அமர்ந்து, சுற்றிலும் திரை மூடியே அக். 17ல் தீபாவளி தினத்தில் பராசக்தி பார்த்தனர்.
மொத்தம் 112 நாட்கள் பராசக்தி ஹவுஸ்புல்லாக ஓடியது.
அரங்கின் 2 ஆயிரத்த 875 இருக்கைகளில் எங்கிருந்தும் மறைக்காமல் திரையில் படம் பார்க்கலாம். இத்தியேட்டரின் 25ம் ஆண்டில் ஜெய்சங்கரின் துணிவே துணை படம் திரையிட்டபோது ஒரே டிக்கெட்டில் மேலும் இரு படங்கள் காண்பிக்கப்பட்டன.
ஆங்கிலத்தில் ஜாஸ், ஓமன், எக்சார்சிஸ்ட், இந்தியில் யாதோன் கி பாராத் இங்கு ரிலீசானது. புருஸ்லீயின் ரிட்டன் ஆப் த டிராகன் ஒரு நாளைக்கு 7 காட்சி திரையிடப்பட்டது.

புதன், 23 ஜூன், 2021

திராவிடம் பெரியார் ... கிளப் ஹவுஸ் லீக்ஸ்

செல்லபுரம் வள்ளியம்மை  : பெரியாரிய கருத்தினால் ஈர்க்கப்பட்டவர்கள் என்று கூறப்படுவது பற்றிய எனது பார்வை!
பெரியார் திராவிடம் என்ற சொற்களை ஈழப்போராட்டத்தோடு தொடர்பு படுத்தி ஒரு குழப்ப அரசியல் விவாதம் தற்போது நடக்கிறது
இலங்கை பிரச்சனையில் பெரியாரும் இல்லை திராவிடமும் இல்லை . அப்படியாயின் இவர்கள் ஏன் ஈழப்பிரச்சனையோடு இவற்றை தொடர்பு படுத்துகிறார்கள்?
இலங்கையில் பெரியாரின் கருத்துக்கள்  அறியப்படவில்லை. அங்கு உருவான பல பிரச்சனைளுக்கு இதுவும் ஒரு காரணம் என்றெண்ணுகிறேன்  
ஏனெனில் ஈழப்போராட்டம் ஒரு மக்கள் நலம் சார்ந்த விதத்தில் உருவாகாமல் வெறும் ஆயுத விளயாட்டாகவே நடந்து முடிந்துவிட்டது.
தமிழ்நாட்டில்கூட பெரியார் கருத்துக்கள் கொஞ்சம் திரிபடைந்து விட்டது என்று தோன்றுகிறது.
அதற்கு காரணாம் பெரியார்/ திராவிட இயக்கங்களின் சில வரலாற்று தவறுகள் என்றெண்ணுகிறேன்  

பெரியார் பெயரை உச்சரித்தலோ திராவிடம் என்று உச்சரித்தலோ மாத்திரம் போதாது.
இந்த சொற்களின் உள்ளார்ந்த கருத்துக்களை என்ன என்ற புரிதல் வேண்டும்.
மனிதர்களை ஜாதியாக பிரித்து அதன் நீட்சியாக எண்ணற்ற வகையில் மேலும் மேலும் பிரித்து ஒருவரை ஒருவர் அடக்கி மேலாண்மை செலுத்துவதுதான் ஆரிய சமூக கட்டமைப்பின் சாராம்சம்.இதுதான் பார்ப்பனீயம்!

நீர் வளக் கமிட்டி! பொருளாதார குழு போன்று விரைவில்..

 மின்னம்பலம்  : தமிழகத்தின் நீர் வள ஆதாரத்துக்காகத் தனி கமிட்டி அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
முதலில் நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்தது.
அதைத்தொடர்ந்து 16ஆவது சட்டப்பேரவையின் முதல்நாள் கூட்டத்தொடரில், தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்வருக்கு ஆலோசனை அளிக்க முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்று உருவாக்கப்படும்.
அந்த குழுவில் நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்ளோ இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், , ஒன்றிய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், ராஞ்சி பல்கலைக்கழக டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் ஜீன் ட்ரெஸ், ஒன்றிய அரசின் முன்னாள் நிதித்துறைச் செயலர் நாராயணன் ஆகியோர் இடம் பெறுவார்கள் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவித்தார்.

வாகன சோதனையில் முருகேசனை அடித்து கொலை செய்த போலீசார்...! சேலம் மாவட்டம்

 Chinniah Kasi  :  வாகன சோதனையில் முருகேசனை அடித்து கொலை செய்த போலீசார்...!
தந்தையை இழந்த மூன்று குழந்தைகள்..!!
காட்டுமிராண்டிகளாக மாறிய காக்கிகள்..!!!
சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே பாப்பநாய்க்கன்பட்டியில் ஏத்தாப்பூர் காவல் நிலைய போலீசாரின் தற்காலிக சோதனைசாவடி உள்ளது.
நேற்று 22.6.21 மாலையில் SSIபெரியசாமி தலைமையிலான போலீசார் பணியில் இருந்தபோது இடையப்பட்டி பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்தபோது, அவ்வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த சம்பவத்தில் SSIபெரியசாமிக்கும் முருகேசனுக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது.
அதிகார திமிரில் SSIபெரியசாமி தான் வைத்திருந்த லத்தியில் காட்டுமிராண்டித்தனமாக கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். இத்தாக்குதலில் நிலைகுலைந்த முருகேசன் கதறிஅழுது கொண்டே சாலையில் விழுந்தார். மருத்துவ முதலுதவி கிடைக்காததால் சில நிமிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

காமராஜர் ஆட்சிக்கும் நரேந்திர மோடி ஆட்சிக்கும் இடையே உள்ள சில ஒற்றுமைகள் .

 Kandasamy Mariyappan :  பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்கும்...
திரு. நரேந்திர தாமோதரதாஸ் ஆட்சிக்கும்...
இந்துத்துவா கொள்கை தவிர்த்து, பெரிய வித்தியாசம் இல்லை என்றால் எனது நண்பர்கள் என்னை திட்டுகின்றனர்.
1. பெருந்தலைவர் அவர்கள்.....
நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வருவதற்கு முன்பே நிலக்கிழார்களிடம் கூறிவிடுகிறார்.
கோயம்புத்தூர் நாயுடுகளும், கபிஸ்தலம் மூப்பனார்களும், பூண்டி வாண்டையார்களும், உக்கடை தேவர்களும், வடபாதிமங்களம் முதலியார்களும், திருக்காட்டுப்பள்ளி அய்யர்களும், கல்லாக்கோட்டை ஜமீன்களும், நெல்லை ஜமீன்களும் தங்களுடைய ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை தங்களுடைய அடிமைகள், Trust அல்லது கோவில் பெயர்களில் பதிந்து விடுகின்றனர்.
இவர்கள்தான் கட்சிக்கு நிதி அளிப்பவர்கள்!
திரு. நரேந்திர தாமோதரதாஸ் அவர்கள்...
இப்பொழுது, Contractual Farming என்ற முறையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நம்மிடமிருந்து எடுத்து அம்பானி, அதானி போன்றவர்களிடம் தரப்போகிறார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பே தனது கட்சிகாரர்கள் மற்றும் அம்பானி, அதானி போன்றவர்களிடம் அறிவித்து விடுகிறார்.
இவர்கள்தான் கட்சிக்கு நிதி அளிப்பவர்கள்!
2. பெருந்தலைவர் அவர்கள்.....
வங்கிகளை தேசியமயமாக்க எதிர்ப்பு தெரிவித்து கட்சியை உடைத்தவர்.
திரு. நரேந்திர தாமோதரதாஸ் அவர்கள்...

.இலங்கை சிறையில் உள்ள 216 பேரின் மரண தண்டனை ரத்து! மேலும் 17 முன்னாள் புலி போராளிகள் விடுதலை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சா அறிவிப்பு

President to pardon 17 ex-LTTE members on Poson Poya

.thinakaran.lk :.இலங்கை சிறையில் உள்ள 216 பேரின் மரண தண்டனை உத்தரவை ரத்து செய்தார் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சா அவர்கள் .
மேலும் சிறையில் உள்ளவர்களில் 17 முன்னாள் புலி போராளிகளை விடுதலை செய்வதாகவும் அறிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் அமைச்சர் நாமல் ராஜபக்சா அவர்கள் ஆற்றிய உரை:
புலிகளுடன் தொடர்புடையவர்களென்ற சந்தேகத்தின் பேரில் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் நீதி கிடைக்கவேண்டும்.
அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட வேண்டுமென இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோரிடம் பாராளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ இவ்வாறு கூறினார்.

காங்கிரஸ் திமுக அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டம் களையிழந்தது!

மின்னம்பலம் : காங்கிரஸ் திமுக அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டம் களையிழந்தது!
வர இருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான, எதிர்க்கட்சிகளின் அணிதிரட்டலுக்கு முகாந்திரமிட்ட சரத்பவார் தலைமையிலான கூட்டம் நேற்று (ஜூன் 22) டெல்லியில் நடந்தது.
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரான சரத்பவாரின் டெல்லி வீட்டில் நடந்த இந்த கூட்டத்தில் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளவில்லை.
கலந்துகொண்ட கட்சி சார்பிலும் இரண்டாம் கட்ட பிரதிநிதிகளே அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர்.
மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி, சமாஜ்வாடி கட்சி, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட எட்டு கட்சிகள் இடம்பெற்றன. காங்கிரஸ் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

'புதிய துறைமுக சட்ட மசோதா'- கடலோர மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!

 நக்கீரன் செய்திப்பிரிவு    மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் 'புதிய துறைமுக சட்ட மசோதா'வுக்கு ஆட்சேபம் தெரிவிக்க வேண்டுமென கடலோர மாநிலங்களான புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, கோவா, ஆந்திரா, ஒடிஷா, மேற்கு வங்கம் ஆகிய ஒன்பது மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவில் தற்போது நடைமுறையில் இருக்கும் துறைமுகங்கள் சட்டம் 1908-க்கு பதில் இந்திய துறைமுக மசோதா 2021- ஐ கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
இந்த புதிய மசோதா குறித்து விவாதிப்பதற்காக வரும் ஜூன் 24- ஆம் தேதி மாநில அமைச்சர்களின் கூட்டத்திற்கு கடல்சார் மாநில மேம்பாடு கவுன்சில் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த நிலையில் தான் மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடரின்போது வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்” - சட்டப்பேரவையில் முதலமைச்சர் உறுதி!

 கலைஞர் செய்திகள் - Vignesh Selvaraj : ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களையும், குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். இந்நிலையில், இன்று அவை தொடங்கியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அப்பாவு இரங்கல் குறிப்பு வாசித்தார்.

தமிழ்நாட்டில் பிற மாநில பணியாளர்கள் புகுத்தப்பட்டது எப்படி? 10 வருட ஃபைலை கையிலெடுத்த பிடிஆர்

May be an image of 1 person and text that says 'பிற மாநிலத்தவர்க்கு அரசுப் பணி வழங்குவது தவிர்க்கப்படும்- சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பி.டி ஆர்.பழனிவேல் தியாகராஜன் 22-06-2021 ஜனியர் வின் பிற மாநிலத்தவர்க்கு அரசுப் பணியில்லை பிற மாநிலத்தவர்க்குப் தமிழக அரசுப் பணி வழங்குவது தவிர்க்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் எப்படிப் பிற மாநிலத்தவர்க்குப் பணி வழங்கப்பட்டது என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் www.vikatan.com /vikatan /juniorvikatan'

  Veerakumar  -  /tamil.oneindia.com : சென்னை: தமிழ்நாட்டில் எதன் அடிப்படையில் வெளிமாநிலத்தினருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், வருங்காலங்களில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில், இன்று, ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய பண்ருட்டி எம்.எல்.ஏ வேல்முருகன் நீட் தேர்வு காரணமாக அனிதா மட்டுமல்லாமல் மேலும் பல மாணாக்கர்கள் உயிரிழந்திருப்பதாகவும், அதனை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை விடுத்தார்
பிற மாநில தொழிலாளர்கள் குறிப்பாக வட மாநில தொழிலாளர்கள், தமிழகத்திலுள்ள அரசு வேலைகளில் அதிகம் புகுத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
விதிமுறை மாற்றங்கள் இதற்கு பதிலளித்து பேசிய தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கடந்த10 ஆண்டுகளில் எந்த சட்டத்தின் அடிப்படையில், எந்த வழிமுறைகளை மாற்றியமைத்து தமிழர்களை தவிற வேற மாநிலத்தவர்களுக்கு வேலை வழங்கப்ட்டது என ஆய்வு செய்து அதை தவிர்ப்தற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தா

செவ்வாய், 22 ஜூன், 2021

பிட்காயின் ..மூட்டை கட்டப்படும் உற்பத்தி தளங்கள்.. வைரல் வீடியோ..! CRYPTO CRASHING!!! HOW LOW WILL BITCOIN GO?

Image

Prasanna Venkatesh  -  tamil.goodreturns.in  : பல வருடமாகச் சீனாவில் பிட்காயின் மற்றும் இதர கிரிப்டோகரன்சியை மிகவும் பிரம்மாண்டமாக உற்பத்தி செய்து வந்த நிலையில் சீன அரசின் தடை உத்தரவு கிரிப்டோ உற்பத்தியை மொத்தமாக முடங்கியுள்ளது. உலகளவில் பிட்காயின் உற்பத்தி சந்தையில் சுமார் 70 சதவீதம் சீனாவில் தான் உள்ளது.
சீனாவின் முடிவு 2030ஆம் ஆண்டுக்குள் co2 வெளியேற்றத்தை 65 சதவீதம் வரையில் குறைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ள நிலையில் இந்த இலக்கிற்குக் கிரிப்டோ உற்பத்தி நிறுவனங்கள் பெரும் தடையாக இருப்பது மட்டும் அல்லாமல் கிரிப்டோகரன்சி நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்திற்கு ஆபத்தானது எனக் கருதி கிரிப்டோகரன்சி உற்பத்திக்கும், வர்த்தகத்திற்கும் தடை விதித்துள்ளது.
4 முக்கியப் பகுதிகள் முதல் கட்டமாகச் சீன அரசு Xinjiang, Inner Mongolia, Sichuan மற்றும் Yunnan ஆகிய பகுதிகளில் அதிகமாக இருக்கும் கிரிப்டோகரன்சி உற்பத்தி தளங்களைக் குறிவைத்து மூட திட்டமிட்டது. இதில் Sichuan பகுதியில் தான் அதிகளவிலான கிரிப்டோகரன்சி உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் 15 இடங்களில் எண்ணெய் கிணறு அமைக்க ஓஎன்ஜிசிக்கு அனுமதி மறுப்பு- தங்கம் தென்னரசு

 Veerakumar -  tamil.oneindia.com : சென்னை: தமிழகத்தில் மீத்தேன், ஷெல் கேஸ் எடுக்க அனுமதியில்லை, என்றும், 15 இடங்களில் எண்ணெய் கிணறு தோண்ட கோரிய ஓஎன்ஜிசி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
அரியலூரில் 10 இடங்களிலும், கடலூரில் 5 இடங்களிலும் எண்ணெய்கிணறு அமைக்க அரசிடம் அனுமதி கேட்டு இருந்தது ஓஎன்ஜிசி.
15 இடங்களில் எண்ணெய் கிணறு இந்த நிலையில், தமிழ்நாடு சட்டசபையில் தங்கம் தென்னரசு இன்று உரையாற்றியபோது,
15 இடங்களில் எண்ணெய்கிணறு அமைக்க அரசிடம் அனுமதி கேட்ட ஓஎன்ஜிசியின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும், நேற்று மத்திய அமைச்சர் சதானந்த கவுடா இந்த முடிவை எடுத்ததாகவும், அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் இன்று தெரிவித்தார்.

வீதி வீதியாக ஒவ்வொரு இலங்கை அகதி வீட்டுக்கும் நேரில் சென்ற திருமதி.கனிமொழி.. தூத்துக்குடியில்

ஆளுநர் உரையை விமர்சிப்பதைவிட முதல்வரின் செயல்களைப் பாராட்டலாமே: கனிமொழி  எம்.பி | Kanimozhi MP visits Lankan Refugee camp in Yettayapuram -  hindutamil.in

Arsath Kan - tamil.oneindia.com : தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாப்பாத்தி இலங்கை அகதிகள் முகாமிற்கு இதுவரை எந்தவொரு அரசியல்வாதியும் நேரில் செல்லாத நிலையில்,
முதல் அரசியல்வாதியாக அங்கு சென்று அகதிகளின் குறைகளை கேட்டறிந்திருக்கிறார் கனிமொழி எம்.பி. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே உள்ள தாப்பாத்தியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. 
அங்கு சென்ற கனிமொழி எம்.பி.யை தங்கள் வீடுகளுக்கு வர வேண்டும் என்றும் அப்போது தான் தங்களின் குறைகளை முழுமையாக அறிய முடியும் எனவும் அங்கிருந்த பெண்கள் கோரஸ் எழுப்பினர். by  இதையடுத்து அகதிகள் முகாமில் வசிக்கும் பெண்களின் அழைப்பை ஏற்று, வீதி வீதியாக நடக்கத் தொடங்கினார் கனிமொழி எம்.பி.
கழிவறை வசதிகள் குறைவாக இருப்பதாகவும், முகாமில் முறையாக குப்பைகள் அகற்றப்படாததால் நோய்தொற்று ஏற்படும் அச்சம் நிலவுவதாகவும் பெண்கள் முறையிட்டனர்.