சனி, 6 அக்டோபர், 2012

ஜெயம்ரவி நீதுசந்திரா நடித்த 'ஆதிபகவன்' படப்பிடிப்பு முடிந்தது

நீண்..........ட நாட்களாக இந்த படத்தின் படபிடிப்பு நடந்து வந்ததும் இதனால் மற்ற படங்களில் ஜெயம் ரவி நடிக்க முடியாமல் காத்துகிடந்ததும் அனைவரும் அறிந்ததே. ஒரு வழியாக பாடல்கள் வெளியீட்டு விழா நடப்பதை நினைத்து பெருமூச்சு விடுகிறார் ஜெயம் ரவி. திரைதுறையில் தற்போது நடந்து வரும் பிரச்சனைகள், இயக்குனர் சங்க பிரச்சனை, ஃபெஃப்சி தேர்தல் என பல விஷயங்களில் அமீர் பிஸியாக இருந்ததால் தான் இந்த தாமதத்திற்கு காரணம் என்று பேசப்படுகிறது.  
நாளை 06.10.2012 அன்று கனடாவில் டொரொண்டோ நகரில் ஆதிபகவன் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இயக்குனர் அமீர், இசையமைபாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஜெயம் ரவி, நீது சந்திரா, தயாரிப்பாளர் ஜெ.அன்பழகன் என அனைவரும் விழாவில் கலந்துகொள்ள கனடா செல்கின்றனர். அமீரின் நண்பர்களான இயக்குனர்கள் கரு.பழனியப்பன், ஜனநாதன் இருவரும் இந்த விழாவில் கலந்துகொள்கின்றனர்.

புரட்சித் தலைவியின் லட்சியம் தொண்டு தியாகம்? தீக்குளிக்க ஆள் தேவைங்கோ

அதிமுகவின் வாய்தா ராணி விடுக்கும்  அரச கட்டளை :ஜெயலலிதாவுக்காக  எத்தகைய தியாகத்திற்கும் தயார், தயார் என உளமாற உறுதி கூறுகிறோம்’’
அ.தி.மு.க. நிரந்தரப் பொதுச்செயலாளர், தமிழ்நாடு அரசின் மாட்சிமை பொருந்திய முதலமைச்சர், லட்சியம், தொண்டு, தியாகம் ஆகியவற்றின் மொத்த உருவமாகத் திகழும் இதய தெய்வம் தங்கத் தாரகை புரட்சித் தலைவி அம்மா அவர்களின் சீரிய சிந்தனையில் உதித்த கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறையில் எங்களை உளப்பூர்வமாக இணைத்துக் கொண்டு, அர்ப்பணிப்பு உணர்வுடனும், அஞ்சாத உறுதியுடனும், ஆளுமைத் திறனோடும் கழகப் பணியாற்றுவோம்.
அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை சார்பில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும், கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைகளைச் சேர்ந்த செயல் வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் கீழ்க்கண்ட உறுதிமொழியை எடுத்துக்கொண்ட பின்னர் நிகழ்ச்சிகளைத் தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  வேறொன்னும் இல்லீங்க சொத்து சேர்த்த வழக்கு பெயிலியரான தீக்குளித்து ஏதாவது பண்ண ஆள் வேணுமுங்கோ 

ஆயிரத்தில் ஒருவன் நிகழ்ச்சியில் நடிகை மந்த்ரா

நடிகை மந்த்ரா நீண்ட நாட்களுக்குப் பின்னர் சின்னத்திரையில் ஆயிரத்தில் ஒருவன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். ரசிகர்களிடையே நேரடி தொடர்பு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது, பங்கேற்பாளர்களின் பொது அறிவு பிரமிக்க வைக்கிறது என்றார் நடிகை மந்த்ரா.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆயிரத்தில் ஒருவன் என்ற கேம்ஷோ ஒளிபரப்பாகிறது. அபர்ணா பிள்ளை இயக்கும் இந்த நிகழ்ச்சியை சுப்பு பஞ்சு தொகுத்து வழங்கினார். தற்போது இதனை நடிகை மந்த்ரா தொகுத்து வழங்குகிறார். இந்தவாரம் சமையல் கலை வல்லுநர் மல்லிகா பத்ரிநாத் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார்.

ராமதாஸ்: 110 தொகுதிகளில் படுத்துக் கொண்டே ஜெயிப்போம் Todays Joke

உளுந்தூர்பேட்டை :வருகிற சட்டமன்ற தேர்தலில் 110 தொகுதிகளில் படுத்துக் கொண்டே ஜெயிப்போம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை மணிகூண்டு திடலில் நேற்று இரவு பாமக பொதுக் கூட்டம் நடந்தது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:
தமிழகத்தில் 7 கோடி மக்களில் இரண்டரை கோடி வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். ஏர் ஓட்டி விவசாயம் செய்து வரும் மக்களுக்கு பிச்சை போடுவது போல் இலவசமாக அரிசி போடுகிறார்கள். தமிழகத்தில் எப்போது மின்சாரம் வரும், போவும் என கடவுளுக்கே தெரியாது. ஆடு, மாடுகளுடன் வாழ்ந்து வரும் எங்கள் இன மக்களுக்கு எதற்காக ஆடு, மாடுகளை வழங்குகிறீர்கள். விவசாயத்துக்கு தடையில்லா மின்சாரம் வழங்கினால் எந்த இலவச பொருளும், யாரும் தரதேவை இல்லை. வருகிற எந்த தேர்தல் ஆனாலும் திமுக, அதிமுக போன்ற திராவிட கட்சிகளிடம் சத்தியமாக கூட்டணி வைத்து கொள்ள மாட்டோம். வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் பாமக ஜெயிக்கும். அதில் 110 தொகுதிகளில் பாமக படுத்துக்கொண்டே ஜெயிப்போம். பாமக ஆட்சிக்கு வரும் போது தமிழகத்தை சொர்க்க பூமியாக மாற்றுவோம். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

S.M.Krishna:தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பதை நிறுத்த வேண்டும்

 Stop Release Cauvery Water Sm Krishna To Pm தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பதை நிறுத்த வேண்டும்: பிரதமருக்கு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கடிதம்

பெங்களூர்: காவிரியில் தமிழகத்துக்கு நீர் திறப்பதை நிறுத்த உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கடிதம் எழுதியுள்ளார்.
அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள எஸ்.எம். கிருஷ்ணா பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,
கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறந்துவிடுவதை நிறுத்துவதற்கான அனைத்து வழிவகைகளையும் ஆராயுமாறு கேட்டுக் கொள்கிறேன். இது தொடர்பாக வல்லுநர் குழுவின் இடைக்கால அறிக்கை உடனே வெளியிடப்பட வேண்டும். கர்நாடகத்தில் தற்போது நிலவும் மோசமான நிலையை தடுக்க வேண்டும். கர்நாடக மாநிலத்தில் நீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது என்று கூறியுள்ளார்.

மதவெறி ஆட்சிக்கு வரவேற்பா? மத்திய அரசுக்கு வீரமணி எச்சரிக்கை!

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில், மத்தியில் உள்ள மன்மோகன்சிங் அரசு, பல்வேறு மக்கள் நலவிரோதத் திட்டங்களை  தனது கொள்கை முடிவுகளாக அறிவித்து வருகிறது.கேளாக்காதாக மத்திய அரசு சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலாளிகளை கைலாகு கொடுத்து வரவேற்கும் முடிவுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அந்நிய மூலதன முதலீடு என்பது பன்னாட்டுத் தொழில் துறை திமிங்கிலங்களின் பச்சாதாபப்படாத சுரண்டல்களுக்குக் கதவு திறந்து விடுவது என்று கூட்டணியில் உள்ள கட்சிகளே சுட்டிக் காட்டியும் அதுபற்றி மத்திய அரசு கேளாக் காதுடன் செயல்படுகிறது. ஓய்வுத் துறையிலுமா?இப்போது ‘ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்’ என்பது போன்று, அதற்கு மேலும் அடுத்த கட்டமாக, இன்ஷூரன்ஸ் - காப்பீட்டுத்துறை, ஓய்வூதியத்துறை - இவை இரண்டிலும் அந்நிய முதலாளிகளை வரவழைக்க ஆயத்தமாவோம் என்று அறிவித்துள்ளது!

பொன்முடி கைது அளவுக்கு அதிகமாக மண் அள்ளிய புகாரில்

விழுப்புரம்: செம்மண் குவாரியில் அனுமதித்த அளவுக்கு அதிகமாக மண் அள்ளிய புகாரில் பல நாட்களாக தலைமறைவாக இருந்த திமுகவின் முன்னாள் அமைச்சர் க. பொன்முடி இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகெ செம்மண் குவாரி நடத்திய பொன்முடி, அனுமதித்த அளவுக்கு அதிகமாக மண் அள்ளியதாக புகார் கூறப்பட்டது. இந்த வழக்கில் க. பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து மகனுடன் பொன்முடி தப்பி ஓடி தலைமறைவானார். தொடர்ந்தும் அவர் தலைமறைவாக இருந்தார். ஆந்திர மாநிலத்தில் உள்ள அவரது மாமியார் ஊரில் பொன்முடி பதுங்கி இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் பொன்முடி, அவரது மகன் கவுதசிகாமணி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனு நேற்று நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து பொன்முடி சரணடைய வேண்டிய நிலை உருவானது.

ஜெயலலிதா, ஜெயகுமார் பதவியை பறித்த பின்னணி இதோ! மலையாள ஜோசியன்

 ஜெயலலிதா, ஜெயகுமார் பதவியை பறித்த பின்னணி இதோ! மலையாள ஜோசியரின் “അടുത്ത മുഖ്യമായ മന്ത്രി”!!
Viruvirupu
தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் இன்று திடீரென ராஜினாமா செய்த காரணம் என்ன? அ.தி.மு.க. வி.ஐ.பி. ஒருவர் மிரட்சியுடன் கூறியது, “எல்லாம் கேரள ஜோதிடம் செய்த வேலைதான். இப்படித்தான் நடக்கும் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். அவர் (ஜெயக்குமார்) எம்.எல்.ஏ.-வாக இருப்பதால் கட்சியில் இருந்து நீக்கப்படுவதில் இருந்து தப்பித்தார்”
என்ன விவகாரம் என்று விசாரித்தபோது, அவர் கூறியது கதை போல இருந்தாலும், சுவாரசியமாக உள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கு கொஞ்சம் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த நாட்களில், ஜெயலலிதா ஒருவேளை முதல்வர் பதவியில் இருந்து இறங்க வேண்டி வரலாம் என்பதாக ஒரு நிலைமை இருந்தது. (அதனால்தான் பின்னர், சசிகலா கார்டனில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்) அப்போது தொடங்கிய கதை இது.
இதில் ஜெயக்குமார் எப்படி சிக்கினார்?

English Vinglish தமிழ்நாட்டில் 170 தியேட்டரில் ரிலீஸ்

ஸ்ரீதேவி நீண்டநாட்களுக்குப்பின்னர் நடித்துள்ள இங்கிலீஸ் விங்கிலீஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் 170 தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளது. இது சல்மான்கான் நடிப்பில் வெளியான ஏக்தா டைகர் படத்தின் சாதனையை முறியடிக்கும் வகையில் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது.
ஏக் தா டைகர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15 ம் தேதி ரிலீஸ் ஆனது. இது தமிழ்நாட்டில் 50 தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. சென்னையில் மட்டும் 20 தியேட்டர்களில் வெளியாகி கணிசமான அளவிற்கு வசூல் செய்தது
தற்போது ஸ்ரீதேவி நடித்துள்ள இங்கிலீஸ் விங்கிலீஸ் திரைப்படம் தமிழில் ‘ஆங்கிலம், வாங்கிலம்' என்ற பெயரில் ரிலீஸ் ஆகிறது. தமிழில் ஸ்ரீதேவியுடன் கவுரவ வேடத்தில் அஜீத் நடித்திருக்கிறார்.

குறவர் சாதியில் பிறந்தவன். அதனால் கட்டாயம் திருடியிருப்பாய்?

vinavu.com நரிக்குறவர் என்றால் இளக்காரமா?
போலீசு“நீ குறவர் சாதியில் பிறந்தவன். அதனால் கட்டாயம் திருடியிருப்பாய்” என அச்சிறுவனை அடித்து, சித்திரவதை செய்து திருட்டை ஒத்துக்கொள்ள வைக்க முயன்றது போலீசு
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் கண்ணகி காலனியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் பத்மபிரியன் (14) கடந்த செப்டம்பர் 24 அன்று காலை தனது நண்பர்களுடன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது கம்மல் திருட்டு பற்றி விசாரிக்க அங்கே வந்த திருத்தங்கல் காவல் துறையினர் அந்த சிறுவர்களிடம் அவர்கள் யார் என்ன விபரம் என்று கேட்டிருக்கிறார்கள். குறிப்பாக அவர்கள் என்ன சாதி என்பதை விசாரித்துள்ளார்கள். சிறுவன் பத்மபிரியன் குறவர் சாதி எனத் தெரிய வரவே மற்றவர்களை அனுப்பி விட்ட காவல் துறையினர் அவனை மாத்திரம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

42 வருடங்களாக மாதம் 15 ரூபாய் சம்பளம்!

15ரூபாய்-சம்பளம்
 
உடுப்பி அரசு பெண்கள் ஆசிரியை பயிற்சி நிறுவனத்தில் துப்புறவுத் தொழிலாளிகளாக பணியாற்றும் அக்கு, லீலா ஆகிய பெண்கள் கடந்த 42 ஆண்டுகளாக வாங்கும் மாதச் சம்பளம் வெறும் 15 ரூபாய் தான்.
பாரதிய ஜனதா ஆளும் கர்நாடக மாநிலத்திலுள்ள உடுப்பி அரசு பெண்கள் ஆசிரியை பயிற்சி நிறுவனத்தில் துப்புறவுத் தொழிலாளிகளாக பணியாற்றும் அக்கு, லீலா ஆகிய பெண்கள் கடந்த 42 ஆண்டுகளாக வாங்கும் மாதச் சம்பளம் வெறும் 15 ரூபாய் தான். 2001 இல் கர்நாடக மாநில நிர்வாக ஆணையத்தை அணுகி தங்களது பணியை வரைமுறை செய்து நிரந்தரமாக்கிட கோரிய காரணத்துக்காக மாநில கல்வித்துறை இவர்களுக்கு கொடுத்து வந்த பதினைந்து ரூபாயையும் தற்போது நிறுத்தி விட்டது.
இவர்களுக்காக போராடி வரும் உடுப்பியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் மனித உரிமைப் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ரவீந்திரநாத் ஷான்பாக்    க‌டந்த செவ்வாயன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

கார்ப்பரேட் ஆன்மீக வியாபாரிகள்:பட்டா இல்லாதவன் சொத்தெல்லாம் என் சொத்து

 
கடவுள்-துகள்
“கடவுள் துகள்” என்ற பெயரில் ஹிக்ஸ் போசோன் அழைக்கப்படும் காரணத்திற்காகவே, “அறிவியலால் கடவுளை வரையறுக்க முடியுமா?” என்ற தலைப்பில் என்.டி.டி.வி ஆங்கிலத் தொலைக்காட்சி ஒரு விவாதத்தை ஒளிபரப்பியது. கடவுள் இருப்பது அங்கீகரிக்கப்பட்ட உண்மை போலவும், அதனை வரையறுக்கும் ஆற்றல் அறிவியலுக்கு இருக்கிறதா இல்லையா என்பது மட்டுமே பிரச்சினை போலவும் காட்டுகின்ற ஒரு பித்தலாட்டத் தலைப்பு!
ஜக்கி வாசுதேவ், டில்லி கத்தோலிக்க திருச்சபையின் டொமினிக் இமானுவேல், விவேகானந்தா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆத்ம பிரியானந்தா – இவர்கள் ஆன்மீகத்தரப்பு. புஷ் பார்கவ், மாலிகுலார் பயாலஜிஸ்ட் மற்றும் பேரா. ராஜாராமன், இயற்பியல் பேராசிரியர் இருவரும் அறிவியல் தரப்பு.
முகத்தில் முட்டாள் திமிரும், அசட்டுத் தற்பெருமையும் பளிச்சிட, மிகை நடிப்புத் தோரணையில், “அறிவியலும் தேடுகிறது, ஆன்மீகமும் தேடுகிறது” என்று கார்ப்பரேட் ஆன்மீக வியாபாரிகளுக்கே உரிய சொல்விளையாட்டை தொடங்கினார் ஜக்கி. நீ தேடுவது வேறு அறிவியல் தேடுவது வேறு, அறிவியல் தேடுகின்ற முறையும் வேறு” என்று நாகரிகமான மொழியில் அதைக் கத்தரித்தார் பார்கவ்.
“பிரபஞ்சத்தின் 4% மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாக அறிவியலாளர்களே கூறியிருக்கிறார்கள். மிச்சமுள்ள 96 விழுக்காடு பிரபஞ்சம் பொருளால் ஆனது அல்ல, அதைத்தான் ஆன்மீகம் என்கிறோம்”
என்றார் ஜக்கி. “  பட்டா இல்லாதவன் சொத்தெல்லாம் என் சொத்து

மதுரையில் 37 கிலோ நகை கொள்ளை

மதுரை: மதுரையில் "முத்தூட் பின்கார்ப் பைனான்ஸ்' நிறுவனத்தின் ஊழியர்களை கடத்தி, அங்கு இருந்து 37 கிலோ நகைகளை கொள்ளையடித்தனர். மதுரை ஆரப்பாளையம் கிராஸ்ரோட்டில் "முத்தூட் பின்கார்ப் பைனான்ஸ்' நிறுவனம் உள்ளது. இதன் மேலாளர் பாலசுப்பிரமணியன், 34, தென்றல் நகரை சேர்ந்தவர். உதவி மேலாளர் சதீஷ்குமார், 27, மஞ்சனக்காரத் தெருவை சேர்ந்தவர். நேற்று முன்தினம், பணிகளை முடித்த பின், மாலையில் இருவரும் நிறுவனத்தை பூட்டிவிட்டு, டூவீலர்களில் வீடு திரும்பினர். ஆரப்பாளையம் தண்ணீர் தொட்டி பகுதியில் பாலசுப்பிரமணியன் வரும் போது இருவர் வழிமறித்தனர். டூவீலர் சாவியை பறித்தும், அவர்கள் வந்த வெள்ளை நிற ஆம்னி வேனில் பாலசுப்பிரமணியனை கடத்தி, நிறுவனத்தின் சாவியை கேட்டனர். "தன்னிடம் நிறுவனத்தின் ஒரு பகுதி சாவி மட்டுமே உள்ளது. மற்றொன்று உதவி மேலாளர் சதீஷ்குமாரிடம் இருக்கிறது' என, தெரிவித்தார். 

கிங்பிஷர் நிறுவனத்திற்கு மனிதநேய? அடிப்படையில் வங்கிகள் உதவி

கிங்பிஷர் நிறுவனத்திற்கு  வங்கிகள் நிதியுதவி!விஜய் மல்லையாவின் கிங்பிஷர் விமான நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 7 மாதமாக சம்பளம்கூட கொடுக்க முடியாத அளவுக்கு கடும் நிதி நெருக்கடியில் உள்ளது.ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தியதால் விமான போக்குவரத்தும் அடியோடு நிறுத்தப்பட்டது. விமான போக்குவரத்து துறை சார்பில் நடந்த பேச்சுவார்த்தையிலும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.இதனால் அந்நிறுவனத்தின் சேவைகள் 7-ம் தேதி வரை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சம்பளம் இல்லாததால் பல ஊழியர்கள் கஷ்டத்தில் இருக்கின்றனர்.டெல்லியில் உள்ள ஒரு ஊழியரின் மனைவி பணக்கஷ்டத்தால் தற்கொலை செய்துகொண்டார். எனவே, சம்பளப் பிரச்சினையை தீர்க்கும் வகையில் மனிதநேய அடிப்படையில் உதவி செய்வதற்கு வங்கிகள் கடன் கொடுக்க முன்வந்துள்ளன.
இத்தகவலை பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் பிரதப் சவுத்ரி மும்பையில் நிருபர்களிடம் தெரிவித்தார்

Kerala புதிதாக தாக்கல் செய்த ஆவணங்களை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

புதுடில்லி: "முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்த நிபுணர் குழு, ஏற்கனவே அறிக்கை தாக்கல் செய்து விட்டது; எனவே, இது தொடர்பாக, வேறு எந்த விதமான புதிய ஆவணங்களையும், யார் தாக்கல் செய்தாலும், அதை ஏற்க மாட்டோம்' என, சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக, தமிழக - கேரள அரசுகளுக்கு இடையே பிரச்னை இருந்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்து விட்டது. இந்நிலையில், இந்த வழக்கு, டி.கே.ஜெயின், ஆர்.எம்.லோத்தா, எச்.எல். டாட்டூ, சி.கே.பிரசாத், ஏ.ஆர்.தாவே ஆகிய, ஐந்து நீதிபதிகள் கொண்ட, அரசியல் சட்ட, "பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

வெள்ளி, 5 அக்டோபர், 2012

அரவிந்த் கெஜரிவால்:பிரியங்காவின் கணவர் வத்ராவுக்கு ரூ.300 கோடி லஞ்சம்

டெல்லி: ராபர்ட் வத்ராவுக்கு டிஎல்எப் ரியல் எஸ்டேட் நிறுவனம் ரூ. 300 கோடி மதிப்புள்ள சொத்துக்களை லஞ்சமாகத் தந்துள்ளதாக சமீபத்தில் அன்னா ஹசாரேவிடமிருந்து பிரிந்த அரவிந்த் கெஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
அக்டோபர் 6ம் தேதி (நாளை) நாட்டின் மிக முக்கியமான இரு நபர்களின் ஊழல்களை வெளியிடப் போவதாக புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள அரவிந்த் கெஜரிவால் தெரிவித்திருந்தார். இந் நிலையில் கெஜரிவாலும் India Against Corruption (IAC) அமைப்பைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர்களான சாந்தி பூஷணும் அவரது மகன் பிரசாந்த் பூஷணும் 5ம் தேதியே (இன்று) இந்த விவரத்தை வெளியிடப் போவதாக அறிவித்தனர்.
அதன்படி இன்று மூவரும் டெல்லியில் நிருபர்களை சந்தித்தனர். அவர்கள் கூறுகையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும் பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வத்ராவுக்கு வட்டி கூட இல்லாமல் ரூ. 65 கோடி பணத்தைத் தந்துள்ளது டிஎல்எப். இதற்காக 6 நிறுவனங்களை சும்மா பெயருக்காக உருவாக்கி, கடனைத் தந்துள்ளனர்.

தங்கர் பச்சான் பிரஸ் மீட்டில் கொட்டித் (திட்டி) தீர்த்தார்.

ஏங்க என்னங்க நடக்குது இங்கே?'Posted by: Shankar<
தங்கர் பச்சான் வரவர தகராறு பச்சான் ஆகிவிட்டார். அவரது புலம்பல்கள் அவர் படத்தை விட அதிகம் விமர்சனங்களுக்குள்ளாகி வருகின்றன.
ஏற்கெனவே தான் எடுத்த களவாடிய பொழுதுகள் வெளிவராத கோபத்தில் உள்ள தங்கர், இப்போது சாந்தனு- இனியா ஜோடியாக நடிக்கும் படம் அம்மாவின் கைப்பேசி படத்தைத் தயாரித்து வருகிறார்.
இந்தப் படம் வியாபாரமாகாத கோபத்தை சமீபத்தில் நடந்த பிரஸ் மீட்டில் கொட்டித் (திட்டி) தீர்த்தார்.
எதற்கெடுத்தாலும், ஏங்க என்னங்க நடக்குது இங்கே என்று அவர் கேட்டுக் கொண்டே இருந்ததில் கடுப்பான நிருபர்கள், "ஏங்க என்னதாங்க ஆச்சி இந்த தங்கருக்கு?" என்று கேட்டபடி கலைந்து சென்றனர்.
தங்கரின் புலம்பலில் ஒரு பகுதி:
ஏங்க...என்னங்க நடக்குதிங்கே.. ஒருத்தனும் சரியில்ல... சினிமாவே சரியில்ல.

அண்ணா, பெரியார் வழியில் மனித சங்கிலி போராட்டம்

  
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சென்னை :அதிமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து ஆயிரம் விளக்கு தொகுதியில் துண்ட றிக்கை வழங்கும் போராட்ட தொடக்க நிகழ்ச்சி கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி இல்லத்தில் இன்று நடந்தது. இதில், ஆயிரம் விளக்கு பகுதி திமுக செயலாளர் அன்புதுரையிடம் 30 ஆயிரம் துண்டு அறிக்கைகளை தந்து தனித்தனி குழுவாக சென்று வீடு வீடாக வினியோகிக்குமாறு கருணாநிதி கூறினார். அப்போது, மு.க.ஸ்டா லின், டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், மா.சுப்பிரமணியன், நடிகை குஷ்பு, அமிர்தம் உள்ளிட்டோர் இருந்தனர்.

ஆவேச Romney-அமைதி Obama

அதிபர் தேர்தல்: முதல் விவாதத்தில் ஒபாமாவுக்கு சறுக்கலா?

டென்வர்(யு.எஸ்): ராம்னியுடன் நேருக்கு நேர் விவாதத்தில் கலந்து கொண்ட ஒபாமாவுக்கு முதல் சுற்று சறுக்கலாகி விட்டதாக பெரும்பான்மையான ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன்.
ஆனாலும் ஒபாமா தேர்தல் பணிக்குழுவினர் பெரிதாக கவலைப்படாமல், அடுத்த சுற்றில் பார்த்துக்கொள்வோம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலின் ஒரு பகுதியாக இரு போட்டியாளர்களும் பங்குபெறும் நேருக்கு நேர் விவாதம், ஜான் கென்னடி - ரிச்சர்ட் நிக்சன் போட்டியிட்ட 1960 தேர்தலில் ஆரம்பமானது. 90 நிமிட விவாத நேரம் முழுவதும், எந்த இடைவேளையும் இல்லாமல் தொலைக்காட்சிகளில் நேரடியாகவும் ஒளிபரப்பப் படுகிறது. எந்த எந்த கட்சியையும் சாராதவர்கள் இந்த மூன்று விவாதங்கள் மூலம் யாருக்கு வாக்களிப்பது என்று முடிவு செய்கிறார்கள் என்றும் நம்பப்படுகிறது.
திருமண நாளில் 'ஒண்டிக்கு ஒண்டி'

Bangalore கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பு ஆட்கள் வந்து குவிகின்றனர்!


Viruvirupu
காவிரி பிரச்சனைக்காக கர்நாடகத்தில் நாளை 6-ம் தேதிதான், மாநிலம் தழுவிய பந்த் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பந்தின்போது, அசம்பாவிதங்கள் ஏதாவது நடக்கலாம் என்ற பதட்டம் உள்ளது.
இந்நிலையில் இன்று, பெங்களூருவில் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் சார்பில் பிரமாண்டப் பேரணி நடக்கவுள்ளது.
இந்தப் பேரணி, பெங்களூருவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குறிப்பாக மாண்டியா, மைசூர், சாம்ராஜ் நகர் போன்ற காவிரி பாசனத்துடன் தொடர்புடைய இடங்களில் இருந்து இந்த அமைப்பினர் இன்று பெங்களூருவில் குவிந்து வருகின்றனர்.
பசவனகுடி நேஷனல் காலேஜ் மைதானத்தில் இருந்து இந்த அமைப்பின் தலைவர் நாராயண கெளடா தலைமையில் பேரணியாகப் புறப்பட்டு ராஜ்பவன் செல்வதாக திட்டமிட்டுள்ளனர்.
இந்தப் பேரணி காரணமாக பெங்களூரில் பதற்றம் நிலவுகிறது. போலீஸார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.

தமிழகத்தின் இழிவு துடைக்கப்படும் வரை கறுப்புச் சட்டையை அணிவேன்

சென்னை: பா.ஜ.கவில் இருக்கும்போது மதவாத சக்திக்கு இடம் தரும் சூழல் ஏற்பட்டபோது உறவை அறுத்துக் கொண்டு வந்த இயக்கம்தான் தி.மு.க. இந்தியாவில், தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு என்றும் இடம் தரமாட்டேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னையில் மணிச்சுடர் நாளிதழின் 25ம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பு மலர் வெளியீட்டு விழா நடந்தது.
விழாவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமை தாங்கினார். அதில் பேசிய கருணாநிதி, 1945ல் ஈரோடு குருகுலத்தில் பெரியார் தொடங்கிய கறுப்புச் சட்டை படையில் நான் சேர்ந்தேன். 1945ல் கறுப்புச் சட்டைக்கு வேலை இருந்தது. இப்போதும் கறுப்புச் சட்டைக்கு வேலை இருக்கிறது என்பதால் கறுப்புச் சட்டை அணிந்திருக்கிறேன். இனி, தினந்தோறும், ஒவ்வொரு நாளும், கறுப்புச் சட்டையை கடைசிவரை அணிவேன். தமிழகத்தின் இழிவு துடைக்கப்படும் வரை, கறுப்புச் சட்டையை அணிவேன்.

மேக்னா ராஜ் சொந்த குரலில் தமிழ் டப்பிங்

நந்தா நந்திதா உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கும் மேக்னா ராஜ் இதுவரை சொந்த குரலில் டப்பிங் பேசியதில்லை. தற்போது மலையாளத்தில் நடித்து வரும் ‘பாப்பின்ஸ்Õ படத்துக்கு முதன்முறையாக டப்பிங் பேசுகிறார். இதில் தமிழ் பேசும் பெண்ணாக நடிக்கிறார்.

மதம் மாற வலியுறுத்துவதும் குற்றமாகும்

      
இந்நிலையில் மதம் மாற்றிச்சொல்லி காஞ்சனாவை திருமணம் செய்துகொண்டதும், தற்போது காஞ்சனாவை மதம் மாற வலியுறுத்துவதும் குற்றமாகும். 100 பவுன் நகை மற்றும் ரூ. 25 லட்சத்துடன் மனைவி மற்றும் மகனை தவிக்கவிட்டு தலைமறைவாக உள்ள கணவரை கண்டுபிடிக்க வேண்டுமென 2 மாதத்துக்கும் முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணைக் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆலங்குடியில் கடந்த 1 வாரமாக இப்ராம்ஷா வீ்ட்டில் காஞ்சனா உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.  அப்போதும் காவல் துறை நடவடிக்கை இல்லை. உடல்நிலை மோசமான சூழ்நிலை ஏற்பட்ட பிறகு அதாவது, சில நாள்களுக்கு முன்பு வழக்குப்பதிவு செய்துவிட்டு,  இங்கிருக்கக்கூடாது என காஞ்சனாவை டிஎஸ்பி ஏ.சி. செல்லபாண்டியன் மிரட்டியுள்ளார்.

கோவை, மதுரை, நெல்லை ஐ.டி., பூங்காக்களில் எதிர்பார்த்த முதலீடு வரவில்லை

கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட நகரங்களில், வெறிச்சோடிக் கிடக்கும், ஐ.டி., பூங்காக்களில், அரசு எதிர்பார்த்த முதலீடு வரவில்லை; ஐ.டி., பூங்காக்களின் வாடகையை கணிசமாகக் குறைத்து, நிறுவனங்களை ஈர்க்க, அரசு முடிவு செய்துள்ளது. கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, ஓசூர், சேலம், வேலூர் ஆகிய நகரங்களில், ஐ.டி., நிறுனங்கள், குடியிருப்புகள், சமூக அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை கொண்ட தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் (ஐ.டி., பார்க்), அரசால் அமைக்கப்பட்டுள்ளன. அரசின், "எல்காட்' மற்றும் தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றிய, இத்திட்டம், 2007-08ம் ஆண்டில் துவங்கப்பட்டது. கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி நகரங்களில், பூங்காவின் கட்டுமானப் பணிகள் முடிந்து, இரண்டாண்டுகளுக்கு மேலாகிறது.

திரையரங்குகளில் அதிக கட்டணம் 1,000 கோடி மோசடி

விசாரிக்க உத்தவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை, அக்.4- தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் அதிக டிக்கெட் கட்டணம் வசூலித்து ரூ.1,000 கோடி அளவுக்கு மோசடி நடப்பதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
.
சென்னை உயர்நீதிமன்றத்தில், ஜி.தேவராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அகில இந்திய நுகர்வோர் மற்றும் லஞ்சம், குற்றம் ஒழிப்பு அமைப்பின் தலைவராக இருக்கிறேன். சென்னையில் உள்ள சினிமா திரையரங்குகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள டிக்கெட் கட்டணம் பற்றி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்து பதில் பெற்றுள்ளேன்.
திரையரங்குகளில் வசூலிக்க வேண்டிய கட்டணம் குறித்து 31.12.2006 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மன்மத அம்பு சினிமாவை பார்ப்பதற்காக கொளத்தூரில் உள்ள ஸ்ரீகங்கா திரையரங்குக்கு சென்றேன். அந்த திரையரங்குக்கு அரசு நிர்ணயித்த அதிகபட்ச கட்டணம் ரூ.85 ஆகும்.

உதயகுமார்: "மீடியா'க்களில் தோன்ற ஆசை. சாலைகளை தோண்டி "சீன்'

திருநெல்வேலி: கூடங்குளம் செயல்பாட்டுக்கு வர உள்ள நிலையில், இதுவரை போராட்டம் என்ற பெயரில், "சீன்' காட்டிக் கொண்டிருந்த, வெளிநாட்டு கைக்கூலி உதயகுமார் மற்றும் ஆதரவாளர்கள், தற்போது, செய்வதறியாமல் திகைக்கின்றனர். மேலும், 8ம் தேதி, பெரிய அளவில் போராட்டம் நடத்தவும், அன்று, வன்முறையில் இறங்கவும் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலமாவது, தங்கள் பெயர் பத்திரிகைகளில் பெரிய அளவில் வெளிவரும் என்ற ஆசையில் உள்ளனர்.
கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு அணு உலைகளில், முதலாவது அணு உலையில், மின் உற்பத்திக்காக, யுரேனியம் நிரப்பும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இன்னும், 45 நாட்களில், மின் உற்பத்தி செய்யத் துவங்கும் நிலையை அணு உலை எட்டி விடும். இந்நிலையில், வரும், 8ம் தேதி, கூடங்குளம் அணு உலையை, கடல் வழியே முற்றுகையிட, போராட்டக்காரர்கள் முடிவு செய்துள்ளனர்.

கலைஞர்: கருப்புச்சட்டையை கழற்ற மாட்டேன்

M. Karunanidhiதமிழ்நாட்டிற்கு சில மாதங்களாக ஏற்பட்டிருக்கின்ற இழிவை எடுத்துக்காட்டவும், அந்த இழிவைப் போக்குவதற்கு எடுக்கின்ற முயற்சிகளுக்கு கருப்புச் சட்டங்களைக் கொண்டு இன்றைய ஆட்சியாளர்கள் அதை அடக்க முனைவதைக் கண்டிப்பதற்கு திமுக தலைவர் கலைஞர் இன்று காலை முதல் கருப்புச் சட்டையை அணிந்துள்ளார்.கலைஞரைத்தொடர்ந்து கழகத்தின் தொண்டர்கள், தோ ழர்கள், உடன்பிறப்புகள் அனைவரும் கருப்புச் சட்டை   அணிந்து வருகின்றனர். இந்நிலையில், மணிச்சுடர் பத்திரிகையின் 25வது  ஆண் டு விழா சென்னையில் நடைபெற்றது.  திமுக  தலைவர் கலைஞர் இவ்விழாவில் பங்கேற்றுப்  பேசினார்.இந்நிலையில், மணிச்சுடர் பத்திரிகையின் 25வது  ஆண் டு விழா சென்னையில் நடைபெற்றது.  திமுக  தலைவர் கலைஞர் இவ்விழாவில் பங்கேற்றுப்  பேசினார்.<அப்போது அவர்,  ‘’பெரியார் எடுத்துக்கொடுத்த கருப்புச் சட்டைக்கு மீண்டும் வேலை வந்துவிட்டது.  தமிழகத்தின் இழிவு நீங்கும் வரை கருப்புச்சட்டையை கழற்ற மாட்டேன்.  மதவாதத்திற்கு திமுக என்றும் துணை  போகாது’’ என்று ஆவேசமாக பேசினார்
DMK president M. Karunanidhi on Thursday said that hereafter he would wear only black shirts in protest against the AIADMK regime.

Kingfisher விமான சேவையை இன்று துவக்குமா?

புதுடில்லி: "கிங் பிஷர் ஏர்லைன்ஸ்' நிறுவனம் விமானச் சேவையை இன்று துவக்குமா என்பதில், நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இன்ஜினியர்கள், விமானிகளுடன் நடத்திய பேச்சில், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
விமானப் போக்குவரத்து ஆணையத்தின், பாதுகாப்பு அம்சங்களை பூர்த்தி செய்தால் மட்டுமே, மீண்டும் விமானச் சேவையை தொடர முடியும் என, மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள, "கிங் பிஷர் ஏர்லைன்ஸ்' நிறுவனம், ஊழியர்களுக்கு, கடந்த மார்ச் மாதம் முதல், சம்பளம் வழங்கவில்லை.

வியாழன், 4 அக்டோபர், 2012

மானாட மயிலாட 7 First Prize பாபி- ஸ்வர்ணா

மானாட மயிலாட சீசன் 7 பட்டத்தை பாபி - சுவர்ணா ஜோடி வென்றுள்ளது. அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசினை சிறப்பு விருந்தினர்கள் டாப்ஸியும், விவேக்கும் வழங்கினார்கள்.
கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட நடன நிகழ்ச்சி ஒளிபரப்பாகிவருகிறது. சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்று நடனமாடும் இந்த ரியாலிட்டி ஷோ 7 சீசன்களை கடந்துள்ளது. சீசன் 7க்கான இறுதிப்போட்டி செப்டம்பர் மாதம் 8ம் மலேசியாவில் நடைபெற்றது. கலா, குஷ்பு, நமீதா நடுவர்களாக பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் இதில் நான்கு ஜோடிகள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இதில் சிறப்பாக நடனமாடி தன்னுடைய திறமையை வெளிப்படுத்திய பாபி - சுவர்ணா ஜோடி முதல்பரிசைத் தட்டிச்சென்றனர். இரண்டாவது இடத்தை சுஜித் - அங்கிதா ஜோடியும் மூன்றாவது இடத்தை புவியரசு - அனுஷா ஜோடி தட்டிச்சென்றனர்.

சினிமா பள்ளி' தொடங்குகிறார் கமல்!

சென்னை: சினிமா கலைஞர்களுக்கென ஒரு பயிற்சிப் பள்ளியைத் தொடங்குகிறார் நடிகர் கமல்ஹாஸன்.
சினிமாவின் அனைத்து துறைகளிலும் தேர்ச்சி பெற்றவர் கமல் ஹாஸன். நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் சிரமங்களை அறிந்தவர் என்பதால், முடிந்தவரை அவர்களின் நலனுக்கு தன்னாலானதைச் செய்து வருகிறார்.
இப்போது சினிமா கலைஞர்களுக்கு பயிற்சி பள்ளி தொடங்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார்.
இளம் தொழில்நுட்ப கலைஞர்களின் திறமையை மேம்படுத்துவதற்காக சென்னையில் பயிற்சி பள்ளி ஒன்றை தொடங்க கமலஹாசன் முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து சமீபத்தில் நடந்த பிக்கி மாநாட்டில் கமல் கூறுகையில், "நான் சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடிகராக வேண்டும் என்று விரும்பினேன். அப்போது நடிப்பு பயிற்சி எடுத்துக்கொள்ள இடங்களோ, வசதிகளோ கிடையாது.
ஆனால் இப்போது அதற்கான வசதிகள் பிரமிக்கத்தக்க வகையில் பெருகிவிட்டன. நடிப்பு பயிற்சிக்காக ஏராளமான பள்ளிகள் உள்ளன.
அதே சமயத்தில் சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள், சண்டை கலைஞர்கள் மற்றும் திரைக்கு பின்னால் கடினமான பணிகளை செய்பவர்கள், இவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க பள்ளிகள் கிடையாது.
எனவே அப்படிப்பட்டவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் ஒரு பள்ளியை தொடங்க முயற்சி எடுத்து வருகிறோம். இதுகுறிப்பாக இளம் தொழில்நுட்ப கலைஞர்களின் திறமையை மேலும் வளர்த்துக் கொள்ள உதவியாக இருக்கும்," என்றார்.

Consumerism பைக்குக்காக கொலை: தொடரும் பயங்கரம்!

புனே நகர மக்களை மட்டும் அல்லாமல் கேள்விப்பட்ட பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி வெளியான அச்செய்தி. 5 வயது நிரம்பிய சிறுவனை பணயக் கைதியாக கடத்திச் சென்று கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர் 2 பதின்ம வயது இளைஞர்கள்.
ஷூப் ராவல் என்ற 5 வயது சிறுவனின் பெற்றோர்கள் விஞ்ஞானிகளாக பணி புரிபவர்கள். அச்சிறுவனை ஹோட்டல் நிர்வாகம் படிக்கும் 19 வயது நிரம்பிய பர்மிந்தர் சிங் என்ற இளைஞனும், பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயதான மாணவனும் சேர்ந்து கடத்தி, பணயக் கைதியாக்கி, அவனுடைய பெற்றோர்களிடம் 5 லட்சம் ரூபாய் வாங்கி அதன் மூலம் மோட்டார் பைக் வாங்குவது என்று திட்டம் வகுத்து உள்ளனர்.

திமுக: கறுப்பு டிரஸ் மட்டுமே! மனித சங்கிலி போராட்டம் ரத்து

 Dmk S Human Chain At Chennai Only போலீஸ் அனுமதி கிடைக்காததால் திமுக மனித சங்கிலி போராட்டம் ரத்து: 'கறுப்பு டிரஸ்' மட்டுமே!

லாக் அப் டெத்,,விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் மரணம்

எஸ்.ஜ. முனுசாமி, ஒரு விசாரணை ஸ்டேஷன் வரை வந்து விட்டுப்போ என கூட்டிச் சென்றிருக்கிறார். ஸ்டேசனில் அவரிடம் 70 பவுன் நகை திருட்டு வழக்கில் உனக்கு சம்பந்தம் உள்ளது ஒத்துக்கொள் என மிரட்டிய பேலீஸார் வெவ்கடேஷனைத் தாக்கி. 
மதுரையைச் சேர்ந்தவர் வெங்கடேசன்.  இவர் கடந்த 2010ல் நடந்த திருட்டு சம்பவத்தில் தொடர்பிருந்த தால் அந்த வழக்கு பரமக்குடி நீதி மன்றத்தில் நடந்து வருகிறது.  அதற்கு ஆஜராகும் பொருட்டு கடந்த 2ந் தேதி மாலை பரமக்குடி வந்திருக்கிறார்.

அப்போது அவரை பரமக்குடி காவல்நிலைய எஸ்.ஜ. முனுசாமி, ஒரு விசாரணை ஸ்டேஷன் வரை வந்து விட்டுப்போ என கூட்டிச் சென்றிருக்கிறார். ஸ்டேசனில் அவரிடம் 70 பவுன் நகை திருட்டு வழக்கில் உனக்கு சம்பந்தம் உள்ளது ஒத்துக்கொள் என மிரட்டிய பேலீஸார் வெவ்கடேஷனைத் தாக்கியதாக தெரிகிறது.

காந்தி ஜெயந்தி..மாமிச உணவு BJP தலைவர் ஈஸ்வரப்பா

 Karnataka Deputy Cm Eshwarappa Draw காந்தி ஜெயந்தி..மாமிச உணவு திருவிழாவில் வகையாய் சாப்பிட்ட கர்நாடக பாஜக தலைவர் ஈஸ்வரப்பா

தீவிர ஆர்எஸ்எஸ்காரரான ஈஸ்வரப்பா கர்நாடக பாஜகவின் மாநிலத் தலைவராவார். முன்னாள் முதல்வர் எதியூரப்பாவுடன் தீவிர மோதலில் இருந்து வருகிறார். இவர் கட்சியின் மத்தியத் தலைமையின் ஆதரவு உண்டு.
இந் நிலையில் காந்தி ஜெயந்தியன்று தனது சொந்த ஊரான ஷிமோகாவில் நடந்த படூதா என்ற மாமிச உணவு விழாவில் கலந்து கொண்ட ஈஸ்வரப்பா வெரைட்டிகளை ஒரு கை பார்த்துள்ளார். இது குறித்து அவரது உறவினர் ஒருவரே வெளியே பெருமையாக சொல்லி, அவரை வம்பில் மாட்டி விட்டுள்ளார்.
இதையடுத்து ஈஸ்வரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி காங்கிரசார் கர்நாடக ஆளுநரிடம் பரத்வாஜிடம் மனு அளித்துள்ளனர்.
ஆனால், இதை ஈஸ்வரப்பா வன்மையாக மறுத்துள்ளார். நான் காந்தி ஜெயந்தியன்று எந்த மாமிச விழாவிலும் கலந்து கொள்ளவில்லை, மாமிசத்தையும் உண்ணவில்லை. இந்தத் தகவல் முழுப் பொய் என்று கூறியுள்ளார்.

Kingfisher ஊழியரின் மனைவி தற்கொலை ஊதியம் வராததால்

 Kingfisher Employee S Wife Commits Suicide ஊதியம் வராததால் குடும்பம் நடத்த வழியில்லாமல் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஊழியரின் மனைவி தற்கொலை

டெல்லி: ஊதியம் இல்லாதததால் பெரும் கஷ்டத்தில் தவித்த கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஊழியரின் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
கணவருக்கு ஊதியம் வராததால் வீட்டில் ஏற்பட்ட கஷ்டம் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாக அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார்.
டெல்லி விமான நிலையத்தில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் கிரவுண்ட் ஸ்டாப் ஆக பணியாற்று வருபவர் மானாஸ் சக்ரபர்த்தி. இவரது மனைவி சுஷ்மிதா (45) இன்று டெல்லியில் மங்கள்புரி பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சக்ரவியூக் படப்பாடலை எதிர்த்து முதலாளிகள் ஆவேசம்!

“பிர்லாவோ அல்லது டாடாவோ
அம்பானியோ அல்லது பேட்டாவோ
எல்லாரும் அவங்கவங்க லாபத்துக்கு
நாட்டை கூறு போடுறாங்க
நம்மோட ரத்தத்திலதான்
அவங்க எஞ்சின் தட தடன்னு ஓடுது!” ஏ எம் துராஸ் என்பவர் எழுதிய இந்த பாடல் வரிகள் பிரகாஷ் ஜா இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் சக்ரவியூஹ் என்ற இந்தி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளன.
‘டாடா, பிர்லா போன்ற வணிக நிறுவனங்கள் தமது லாபத்துக்காக நாட்டை சுரண்டுகின்றன’ என்ற பொருள்படும் இந்த வரிகள் இந்திய முதலாளிகளின் ஏகோபித்த எதிர்ப்பை சந்தித்திருக்கின்றன. ஆதித்ய பிர்லா குழுமத்தின் சட்டத் துறை தலைவர் அசோக் குப்தா, “சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதைப் பற்றி முறையிடுவோம்” என்று சொல்லியிருக்கிறார்.
மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் “இந்தப் பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ள பெயர்கள் எந்த நபரையும் அல்லது பிராண்டையும் குறை சொல்லவில்லை” என்ற விளக்கத்தை சேர்க்கும்படி பிரகாஷ் ஜாவுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. “நக்சலைட்டுகள் பிரச்சனை குறித்த இந்த படத்தில் தொடர்புள்ள காட்சியில் இந்த பாடல் இடம் பெறுகிறது. எந்த ஒரு தனிநபருக்கோ பிராண்டுக்கோ தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் அந்த பாடல் எழுதப்படவில்லை. இந்த விளக்கத்துடன் பாடல் படத்தில் இடம் பெறும்’” என்று ஏற்கனவே சரணடைந்து விட்டிருக்கிறார் பிரகாஷ் ஜா.

கணவனின் செக்ஸ் கொடுமையால் மனைவி தற்கொலை

ஆவடி :பேராசிரியர் செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆவடியில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆவடி பருத்திப்பட்டு அக்ரகாரம் தெருவை சேர்ந்தவர் பத்மபிரியா (24). பிசிஏ பட்டதாரி. இவருக்கும் திருச்சி உத்தமர்கோயில் மங்களம் அப்பார்மென்ட்டில் வசிக்கும் கிஷோர்குமார் என்பவருக்கும் இரண்டரை மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக கிஷோர்குமார் உள்ளார். திருச்சியில் பெற்றோர், மனைவியுடன் கூட்டு குடும்பமாக கிஷோர்குமார் வசிக்கிறார். இந்நிலையில், கடந்த 3 தினங்களுக்கு முன்பு பத்மபிரியாவை அழைத்துக் கொண்டு அவரது மாமியார் கலா, ஆவடிக்கு வந்தார். அங்கு அவரது பெற்றோரிடம், ‘பத்மபிரியாவுக்கு உடல் நலம் சரியில்லை, அதனால்தான் அழைத்து வந்தேன் என கூறி அவரை விட்டு சென்றார். இந்நிலையில், நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பத்மபிரியா, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்ததும் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து கதறினர்.

நாஜி பாரம்பரிய பயிற்சியில் ஊறியவர் நரேந்திர மோடி.. திக்விஜய் கடும் தாக்கு

RSS  கொடுத்த நாஜி பாரம்பரிய


பயிற்சியில் ஊறித் திளைத்தவர் நரேந்திர மோடி. அதனால்தான் கொடும் உள் நோக்கத்துடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருத்துவச் செலவுகள் குறித்து அவதூறாகக் கேள்வி கேட்கிறார் அவர் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து டிவிட்டரில் திக்விஜய் சிங் கூறுகையில்,
நாஜி பாரம்பரிய பயிற்சியை நரேந்திர மோடிக்கு ஆர்எஸ்எஸ் கொடுத்துள்ளது. ஆர்எஸ்எஸ் எப்போதுமே அப்படித்தான். அதற்கு மோடி மட்டும் விதி விலக்காக இருக்க முடியுமா. அவரும் நன்றாகவே பயிற்சி எடுத்துள்ளார்.
நாஜிக்களின் பாரம்பரியமே அவதூறாகப் பேசுவது, உள்நோக்கத்துடன் தவறான குற்றச்சாட்டுக்களை வைப்பதுதான். அதைத்தான் தற்போது மோடியும் செய்து வருகிறார். பொய்யைச் சொல்லுங்கள், அதை உரக்கச் சொல்லுங்கள், உறுதியாககச் சொல்லுங்கள், நூறு முறை சொல்லுங்கள் என்பதுதான் நாஜிக்களின் தத்துவம். அதைத்தான் ஆர்எஸ்எஸ்ஸும் தனது தொண்டர்களுக்குச் சொல்லித் தருகிறது. The violence created a gulf between Hindus and Muslims that, even a decade later, is yet to be bridged. Compensations can hardly undo the damage. Even today, families fear to return to their original villages. Widows continue to struggle to earn their livelihood. Rape victims are still counselled for trauma. The families of the convicted cry foul. Businesses struggle to survive.
குஜராத் முதல்வருக்கும், நாஜிக்களின் பொய்ப் புளுகன் ஜோசப் கோயபல்ஸுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை. மோடியை நினைத்தால் கோயபல்ஸ் தான் நினைவுக்கு வருகிறார்.

ஜெயலலிதா அதிரடி 60க்கும் மேற்பட்ட நமக்கு வாய்த்த நிர்வாகிகள் dismiss

அதிமுகாவின் பொதுக்குழு தீர்மானத்திற்கு அமைய பலரின் பதவிகளை பறிக்க வேண்டி கழகம் முடிவுசெய்துள்ளது . அட நீங்க ஒன்னு ஜனநாயக நாட்டில் சும்மாவேனும் பொதுக்குழு தீர்மானம் புடலங்கைன்னு ,
கடந்த சில தினங்களாக அ.தி.மு.க.வில் அதன் பொது செயலாளர் ஜெயலலிதா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் சபாநாயகர் டி.ஜெயகுமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.நேற்று தென் சென்னை, வட சென்னை மாவட்ட செயலாளர்கள் மற்றப்பட்டனர், மேலும் தமிழக அமைச்சரவையும் மாற்றி அமைக்கபட்டு சி.வி.சண்முகம் நீக்கப்பட்டு அ.தி.மு.க கொறாடா மோகனுக்கு அமைச்சர் பதவி வழங்கபட்டது.இந்த நிலையில் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க பொது செய்லாளருமான ஜெயலலிதா வெளியிட்டு உள்ள அறிக்கையில் சென்னை திருவள்ளுரை சேர்ந்த கவுன்சிலர்கள் உள்பட 60க்கும் மேற்பட்ட நிர்வாகிகளின் பதவிகளை பறித்து உத்தரவிட்டு உள்ளார்.

கொத்தடிமை Cooperate நாமக்கல் பள்ளிகள்


ள்ளிப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் தினசரி செய்தித்தாள்களைக் கவனிக்கும் எவருமே ‘நாமக்கல் பள்ளிகளின்’ விளம்பரங்களை அடிக்கடி காணலாம். நாமக்கல் நகரப் பள்ளிகளின் சார்பாக வெளியாகும் அவ்விளம்பரங்களில் அந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்வுகளில் அவர்களிடம் படித்த மாணவர்கள் எத்தனை பேர் சாதனை படைத்துள்ளார்கள் என்கிற விவரங்கள், புகைப்படங்களோடு வெளிவந்திருக்கும். கூடவே அந்தப் பள்ளிகளின் இமாலய வசதிகள், மாணவர் சேர்க்கை குறித்த விவரங்களும் இடம் பெற்றிருக்கும்

தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடக் கூடாது: கர்நாடக தமிழ்ச் சங்கம்

பெங்களூர்: தமிழ்நாட்டுக்கு காவிரி நதிநீரை திறந்துவிடக் கூடாது என்று கர்நாடக தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பினர் ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டுக்கு காவிரியில் 9 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிட வேண்டும் என்று பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையம் உத்தரவிட்டது. இதனை கர்நாடகம் ஏற்க மறுத்தது. பினன்ர் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. உச்சநீதிமன்றமும் தமிழகத்துக்கு காவிரி நதிநீரை திறந்துவிட உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிடப்பட்டது.
இதற்கு பல்வேறு கன்னட அமைப்புகளும், விவசாயிகளும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கர்நாடகத்தில் உள்ள தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பும் தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

Super Singer Junionr 3 வைல்ட் கார்டு கடுமையான போட்டி

ஓட்டுக்கேட்டு பாட்டு பாடும் குட்டீஸ்கள்!Posted by: Mayura Akilan

சூப்பர் சிங்கர் ஜூனியரில் இப்பொழுது வைல்ட்கார்டு சுற்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இறுதிச்சுற்றுக்கு தங்களைச் தேர்வு செய்யச் சொல்லி ஓட்டுகேட்டு பாட்டு பாடுகின்றனர் 10 குட்டீஸ்கள். இவர்களில் யாழினி, அஜீத் இடையேதான் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கவிஞர் தாமரை சூர்யாவுக்கு ஐசோ ஐஸ்

A still from Maatraan. Photo: Special Arrangementகவிஞர் தாமரை பேசுகையில் ” சூர்யாவிற்கு பாட்டு எழுதுவது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இந்த இசையில் பாடி நடிக்கும் போது சூர்யாவின் முகபாவணை எப்படி இருக்கும் என்பதை மனத்திரையில் கற்பனை செய்துகொண்டே தான் ’யாரோ யாரோ’ பாடலை எழுதினேன். சூர்யா மிகச் சிறந்த நடிகர் என்பதால் பாடல் நன்றாகவே வந்துள்ளது” என்று கூறினார் கவிஞர் தாமரை சூர்யாவுக்கு ஐசோ ஐஸ் 

Kerala வெவ்வேறு மதங்கள் காதலன் எரித்துக்கொலை

காதல் தகராறில் கால்பந்து வீரர் எரித்து கொலை - காதலன் இந்து காதலி இஸ்லாம் கேரளாவில் மதவெறி
Hate Jihad in Kerala: Youth Set Ablaze, Succumbs to Burns A Malayali youth Jithu Mohan, who was doused with petrol and set ablaze for being in love with a girl of the Muslim community succumbed to death today. The boy was invited to the girl’s relative’s house on the pretext of peaceful discussions. But he was allegedly bathed in petrol by an Inspector named Wahab, Police Officer of AR Camp and set ablaze. Jithu succumbed to death at Amrita Hospital, Ernakulam. He is the third victim of Jihadi terrorism in Kerala in short span of time, his death following that of Vishal, Chengannur and Sachin, Kannur.

காதலியின் உறவினர்கள் வெறிச்செயல்கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த சாருமூட்டைச் சேர்ந்தவர் மோகனன். இவரது மகன் ஜித்து மோகன் (வயது 21). ஆலப்புழாவில் உள்ள ஒரு கல்லூரியில் ஜித்துமோகன் படித்து வந்தார் கால்பந்து வீரரான இவர் சமீபத்தில் மிசோராம் மாநிலத்தில் நடந்த தேசிய ஜூனியர் கால்பந்தாட்ட போட்டியில் கேரள அணியின் துணை கேப்டனாக பங்கேற்றார். இவர் சுனக்கரை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார். இருவரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு ஏற்பட்டது.இதனால் அந்த பெண்ணின் பெற்றோர் அவரை கொடுங்கலூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்தனர். அங்கிருந்து அந்தப் பெண் ஜித்துமோகனை தொடர்பு கொண்டு பேசினார். இதனால் வெளியூரில் இருந்தாலும் இருவரின் காதலும் தொடர்ந்தது.
இது உறவினர்களுக்கு தெரிய வந்ததும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர்கள் பெண்ணின் நெருங் கிய உறவினரான போலீஸ்காரர் ஒருவரிடம் இப்பிரச்சினையை பேசி தீர்க்கும்படி கூறினர்.அதன்படி போலீஸ்கார உறவினர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜித்துமோகனை தன் வீட்டிற்கு வரும்படி அழைத்தார்.

Theme parks Chennai 6 மாதங்களில் 3 விபத்துக்கள் அதிகாரிகள் தட்டிகழிப்பு

ஒரு இரும்பு கம்பி மட்டும் தடுப்புக்காக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பிக்கு கீழே அதிகமான இடைவெளி உள்ளது. இதன் வழியாக பருமனான உடல் கொண்டவர்கள் கூட விழ வாய்ப்பு உள்ளது. 
பொழுதுபோக்கு பூங்காக்களில், உபகரணங்கள் உரிய முறையில் பராமரிக்கப்படாததும், பூங்காக்களின் செயல்பாடுகளை அரசு முறையாக கண்காணிக்காததுமே விபத்துக்களுக்கு காரணமாக கூறப்படுகிறது.

சென்னையை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி., பொழுதுபோக்கு பூங்காவில், நாகலாந்து மாநிலத்தைச் சேர்ந்த அபியா மேக், 25 என்ற விமான பணிப்பெண், ஆக்டோபஸ் ராட்டினத்தில் சுற்றிய போது, தவறி விழுந்து இறந்தார். இதே பூங்காவில் கடந்த ஆறு மாதங்களில் தற்போது நடந்தது மூன்றாவது விபத்து. கடந்த ஏப்ரல் மாதம் சின்மயா நகரைச் சேர்ந்த ரிச்சாஷா என்ற இளம்பெண், ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்து கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. கடந்த மாதம் 23ம் தேதி சென்னை, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பிரின்ஸ் என்ற 16 வயது சிறுவன் சறுக்கி விளையாடிய போது, தவறி விழுந்தார். இதில், காயம் ஏதுமின்றி தப்பினார். எச்சரித்தும் அலட்சியம்:

இந்தித் எதிப்பு திராவிடர் கழகமும் திமுகவும் இருமுனைகளில் போராடின.

நிறைவேறிய காந்தி கனவு


மொழிப்போர் / அத்தியாயம் 9
இந்தியாவின் ஆட்சிமொழி எது என்பதில் மத்திய சட்டமன்ற (நாடாளுமன்ற) காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டிருந்தன. அவற்றைக் களைந்து ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும் என்பதற்காகக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. என். கோபாலசாமி அய்யங்கார், டி.டி. கிருஷ்ணமாச்சாரி, அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், கே.எம். முன்ஷி, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், சாதுல்லா, எம்.என்.ராய், அபுல் கலாம் ஆசாத், பண்டித பந்த், புருசோத்தம தாஸ் தாண்டன், பாலகிருஷ்ண சர்மா, சியாமா பிரசாத் முகர்ஜி, கே. சந்தானம் ஆகியோர் இடம்பெற்றனர்.

எதிர்ப்பை கண்டு பயப்பட மாட்டேன்: சோனியா ஆவேசம்

ராஜ்கோட்:""நாட்டு நலனுக்காக சில நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, எதிர்ப்பு எழுவது வழக்கமானது தான்; இது போன்ற எதிர்ப்புகளை கண்டு, இப்போது மட்டுமல்ல, எப்போதும் பயப்பட மாட்டேன்; நாட்டு நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன்,'' என, காங்., தலைவர் சோனியா பேசினார்.
குஜராத்தில் சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அரசியல் கட்சிகள் பிரசாரத்தை துவக்கியுள்ளன. ஆளும் பா.ஜ., சார்பில், முதல்வர் நரேந்திர மோடி, தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன், பிரசாரத்தை துவக்கி விட்டார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியும், பிரசார களத்தில் இறங்கியுள்ளது.
குஜராத்தின் ராஜ்கோட்டில் நேற்று நடந்த விவசாயிகள் மாநாட்டில், காங்., தலைவர் சோனியா பேசியதாவது:காங்கிரஸ் கட்சியினர் ஊழல் செய்வதாக, பா.ஜ., தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பா.ஜ., ஆளும் மாநில அரசுகள், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம், ஆதாரத்துடன் புகார் கூறியுள்ளது; இதுகுறித்து, பா.ஜ., மேலிட தலைவர்கள், வாய் திறக்க மறுப்பது ஏன்?

மேதகு வேண்டாம்; பிரணாப் அறிவுரை

புதுடில்லி :ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, "அழைப்பிதழ்களில், என் பெயருக்கு முன், "மேதகு' மற்றும் "மாண்புமிகு' போன்ற வார்த்தைகளை போட வேண்டாம். "ஸ்ரீ' என்ற வார்த்தையை போட்டால் போதும்' என, தன்னை, நிகழ்ச்சிகளுக்கு அழைப்பவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மரபுகளை தகர்த்தெறிந்து, "மக்களின் ஜனாதிபதி' என, பெயரெடுத்த பெருமை, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை சேரும். இவர், ஜனாதிபதியாக இருந்தபோது, ஆடம்பரங்களை தவிர்த்து, எளிமையை பின்பற்றினார். நாட்டின் முதல் குடிமகனாக இருந்தாலும், சாதாரண மக்களுடன் நெருக்கம் காட்டி வந்தார்.தற்போதைய ஜனாதிபதியான, பிரணாப் முகர்ஜியும், சமீபகாலமாக எளிமையை பின்பற்ற துவங்கியுள்ளார்.

புதன், 3 அக்டோபர், 2012

மோடிக்கு எதிராக திரும்பிய ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் பட்டின் சஸ்பெண்ஷன்-ஒரு வழக்கில் ரத்து

குஜராத் கலவரத்தின்போது குஜராத் மாநில உளவுப் பிரிவின் கூடுதல் துணை ஆணையராக பதவி வகித்து வந்தார் பட். மேலும் நரேந்திர மோடி வீட்டில் கலவரத்திற்கு முன்பு கூடிய கூட்டத்தின்போதும் பட் உடன் இருந்தார். அப்போது குஜராத் கலவரக்காரர்களை கட்டுப்படுத்தாமல் விடுமாறும், இந்துக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்த அனுமதிக்கும்படியும் காவல்துறை உயர் அதிகாரிகளை மோடி அறிவுறுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தார் பட். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த அபிடவிட்டிலும் தெரிவித்திருந்தார்.
அகமதாபாத்: குஜராத் கலவர வழக்கில், முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக திரும்பிய ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் பட்டுக்கு ஒரு வழக்கில் விதிக்கப்பட்ட சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அந்த நடவடிக்கையை மாநில அரசு ரத்து செய்துள்ளது.
இருப்பினும் மேலும் 2 வழக்குகளில் சஞ்சய் பட்டுக்கு எதிரான சஸ்பெண்ட் நடவடிக்கை தொடர்வதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது.
2002ம் ஆண்டு குஜராத்தில் வெடித்த பெரும் இனக்கலவரத்தில் ஆயிரத்திற்கும மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கலவரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சஞ்சய் பட் ஒரு அபிடவிட்டைத் தாக்கல் செய்தார். அதில் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக முக்கியத் தகவலை அளித்திருந்தார். இதையடுத்து பட் மீது மூன்று குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி மோடி அரசு 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி சஸ்பெண்ட் செய்தது.