தினகரன ;
ராணிப்பேட்டை: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு
ஆதரவாக மாநிலங்களவையில் வாக்களித்த அதிமுக எம்பி முகமதுஜான், ராணிப்பேட்டை
அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் காப்பாளர் பொறுப்பிலிருந்து நேற்று அதிரடியாக
நீக்கப்பட்டார்.
ராணிப்பேட்டையை சேர்ந்தவர் முஹம்மது ஜான். இவர் ராணிப்பேட்டை அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் காப்பாளராக பல ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார். இந்நிலையில், அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக சில மாதங்களுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தார்.
இதையடுத்து, ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு, மேல்விஷாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா அனைத்து ஜமாத் உறுப்பினர்களின் கோரிக்கையின்படி நேற்று அனைத்து ஜமாத் காப்பாளர் பொறுப்பில் இருந்து எம்பி முகம்மது ஜான் அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக