டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மிக்காக பணி செய்யும் பிரசாந்த் கிஷோர் - கெஜ்ரிவால் தகவல்
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மிக்காக
பிரசாந்த் கிஷோர் பணியாற்ற உள்ளதாக கட்சியின் தலைவரும், டெல்லி
முதல்-மந்திரியுமான கெஜ்ரிவால் நேற்று உறுதி செய்துள்ளார்.
புதுடெல்லி:
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் உத்திகளை வகுத்து கொடுக்கும் பணிகளில்
முன்னணியில் இருக்கும் நிறுவனம் ஐ-பேக். இந்த நிறுவனத்தின் தலைவரான
பிரசாந்த் கிஷோர், பிரதமர் மோடி, நிதிஷ் குமார் என பல்வேறு தலைவர்களுக்காக
பணியாற்றி உள்ளார்.
அந்த வரிசையில் தற்போது அடுத்த ஆண்டு நடைபெறும் டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மிக்காக பணியாற்ற உள்ளார். இதை கட்சியின் தலைவரும், டெல்லி முதல்-மந்திரியுமான கெஜ்ரிவால் நேற்று உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘ஐ-பேக் நிறுவனம் எங்களுடன் இணைந்திருப்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். வரவேற்கிறேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்பை ஐ-பேக் நிறுவனமும் உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் தனது டுவிட்டரில், ‘நீங்கள் (ஆம் ஆத்மி) ஒரு கடினமான எதிரணி என்பதை பஞ்சாப் தேர்தலுக்கு பிறகு நாங்கள் உணர்ந்து கொண்டோம். கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மியுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்’ என குறிப்பிட்டு உள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக