tamil.oneindia.com :
குவஹாத்தி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான
போராட்டத்தில் அஸ்ஸாமில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
குடியுரிமை மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்து பற்றி எரிகின்றன. மத்திய, மாநில அரசுகள் வாக்குறுதிகள் அளித்த போதும் மக்கள் அதனை நிராகரித்துவிட்டனர்.
அஸ்ஸாமின் பூர்வகுடிமக்கள் தங்களது தாய்நிலம் அகதிகளால் ஆக்கிரமிக்கப்படும் அபாயத்தை குடியுரிமை மசோதா உருவாக்கிட்டதாக கூறி கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்தில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மட்டும் 5 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் 2 பேர் போராட்ட களத்தில் உயிரிழந்தனர்.
மேலும் 3 பேர் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் சிகிச்சை பெற்ற நிலையில் மரணமடைந்தனர். மேலும் போராட்டக்காரர்கள் பெட்ரோல் டேங்கர் லாரி ஒன்றையும் தீயிட்டு எரித்தனர். இதில் லாரி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். தற்போது மேற்கு வங்கத்திலும் உக்கிரமான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இம்மாநிலத்தில் ரயில்கள், ரயில்நிலையங்கள் குறிவைத்து தீக்கிரையாக்கப்படுகின்றன. மாநில அரசுக்கு சொந்தமான 22 பேருந்துகளும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக