வெள்ளி, 20 டிசம்பர், 2019

ஜார்க்கண்ட்:- எக்சிட் போல் : காங்.-ஜேஎம்எம்- ஆர்ஜேடி ஆட்சியை பிடிக்கிறது? -- 38 முதல் 50 இடங்களை கைப்பற்றும்-


Jharkhand Assembly Election 2019 Live Updates: Exit Polls Give Edge To Congress-JMM Alliance
tamil.oneindia.com - mathivanan-maran : டெல்லி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், ஜே.எம்.எம்.- ஆர்.ஜே.டி. கூட்டணி 38 முதல் 50 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று இந்தியா டுடேவின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கு 5 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இன்று இறுதி கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று முடிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான முடிவுகள், காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என தெரிவித்துள்ளன.
ஜார்க்கண்ட் தேர்தல் குறித்து இந்தியா டுடே வெளியிட்டுள்ள கருத்து கணிப்பு முடிவுகள் விவரம்: காங்கிரஸ் ஜே.எம்.எம். மற்றும் ஆர்ஜேடி இணைந்த கூட்டணி கட்சிகளுக்கு 38 முதல் 50 இடங்கள் கிடைக்கும். இந்த கூட்டணி மொத்தம் 37% வாக்குகளைப் பெறும்.

ஏஜேஎஸ்யூவுக்கு 3- 5 இடங்கள் ஏஜேஎஸ்யூவுக்கு 3 முதல் 5 இடங்களும் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சாவுக்கு 2 முதல் 4 இடங்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஏஜேஎஸ்யூ 9% வாக்குகளையும், ஜேவிஎம் 6% வாக்குகளையும் பெறும்.
இதர கட்சிகளுக்கு 4 முதல் 7 இடங்களில் வெற்றி வாய்ப்பு உள்ளது. இவ்வாறு இந்தியா டுடே எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: