வெள்ளி, 20 டிசம்பர், 2019

அமெரிக்கா : இந்தியாவில் நடப்பதை நாங்கள் கண்காணித்து வருகிறோம்.. நாடெங்கும் கலவரம் . வீடியோ


tamil.oneindia.com - VelmuruganP. : வாஷிங்டன்: இந்தியாவில் நடந்து வரும் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் குறித்து நாங்கள் கண்காணித்து வருகிறோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்தியாவில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த போராட்டங்களை உலக நாடுகள் பல உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் மூத்த வெளியுறவுத்துறை அதிகாரி கூறுகையில், குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து இந்தியாவில் வெளிப்படையாகவே நடந்துவரும் அரசியல் விவாதங்கள் மற்றும் பாராளுமன்றத்தில் கலந்துரையாடல்கள் மற்றும் நீதித்துறை செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் முழுமையாக அறிவோம். குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் குறித்து நாங்கள் கண்காணித்து வருகிறோம்.
இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள் மற்றும் நடைமுறைகளை நாங்கள் மதிக்கிறோம், சிறுபான்மை உரிமைகள், மத சுதந்திரம், மனித உரிமைகள் போன்றவை ஜனநாயக நாட்டின் முக்கியமான தூண்கள் என்ற உண்மையைப் பற்றியும் இந்தியாவுடன் பேச வேண்டும் என்றார்.

முன்னதாக நேற்று அமெரிக்கா சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க அரசின் பிரதிநிதிகளை சந்தித்து குடியுரிமை சட்டம் குறித்து விளக்கினார். இதுவரை அமெரிக்கா இந்தியாவில் நடந்து வரும் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை கண்டித்து வெளிப்படையாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. மாறாக இந்திய அரசு சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது

கருத்துகள் இல்லை: