ஞாயிறு, 15 டிசம்பர், 2019

யேசுதாஸ் : பெண்கள் சபரிமலைக்குச் செல்ல கூடாது .. பக்தர்களின் மனதில் சபலம் ஏற்பட்டு விடும் .. ( வெளங்கிடும்)

பெண்கள் அணியும் உடை ஐயப்ப பக்தர்களின் மனதில் தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடக் கூடாதாம் .
பெண்கள் சபரிமலைக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: யேசுதாஸ்மின்னம்பலம் : சபரிமலைக்குப் பெண்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று பாடகர் யேசுதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து சபரிமலையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. தீர்ப்பைத் தொடர்ந்து ஐயப்பனை தரிசிக்கப் பெண்களும் கோயிலுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். பாதுகாப்பு வழங்க கோரி பெண்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று நீதிமன்றம் நேற்று முன்தினம் தெரிவித்தது.

அவரது மகள் அமயா பாடிய ஷியாமாரகம் என்ற மலையாள படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை தி.நகரில் நடைபெற்றது. இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த யேசுதாஸ் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “41 நாட்கள் விரதம் எடுத்து இருமுடியோடு சென்று படி ஏறலாம். சபரிமலைக்கு ஐயப்பனைக் காண அனைவரும் செல்லலாம். ஆனால் மனதில் கெட்ட எண்ணங்கள் இருக்கக் கூடாது. கட்டுப்பாடு வேண்டும். முன்பெல்லாம் சபரிமலைக்கு மாலை அணிந்திருக்கும் பக்தர்களை அவர்களது வீட்டில் உள்ள பெண்கள்கூட பார்க்க மாட்டார்கள். ஆனால், தற்போது காலம் மாறிவிட்ட நிலையில், பெண்கள் அணியும் உடை ஐயப்ப பக்தர்களின் மனதில் தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடக் கூடாது. எனவே சபரிமலைக்குப் பெண்கள் செல்ல வேண்டாம்” எனக் கேட்டுக்கொண்டார்.
“சபரிமலையைத் தவிரப் பல கோயில்கள் உள்ளன. அங்கு பெண்கள் செல்லலாம்” என்றும் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: