Mathivanan Maran
tamil.oneindia.com/ :
சென்னை: டெல்லி ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் மீதான கொடூர தாக்குதலைக்
கண்டித்தும் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்தும் சென்னை பல்கலைக் கழக
மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து
அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
டெல்லி ஜாமியா மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து நாடு முழுவதும்
மாணவர்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர். தமிழகத்தில் கல்லூரிகள்,
பல்கலைக் கழக மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் லயோலா, நியூ கல்லூரி, சென்னை பல்கலைக் கழக மாணவர்கள், சட்ட
கல்லூரி மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை பல்கலைக் கழக
மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நெருப்பில் கைவைத்துவிட்டதா பாஜக.. குடியுரிமை சட்டத்துக்கு மட்டும்
இவ்வளவு போராட்டம் ஏன்!
இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர போலீசார் அப்பகுதியில்
குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட 2 மாணவர்களை
போலீசார் கடத்தி வைத்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
மாணவர்கள் போராட்டம் நீடிப்பதால் 6 நாட்களுக்கு சென்னை பல்கலைக்
கழகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கிறிஸ்துமதஸ்,
புத்தாண்டுக்காக டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை பல்கலைக் கழகத்துக்கு
விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக