சனி, 21 டிசம்பர், 2019

88,000 சவூதி அரேபியா்களின் பிரசார ‘டுவிட்டா்’ கணக்குகளை நீக்கிய டுவிட்டர் நிறுவனம்


தினமலர் : வாஷிங்டன்: சவூதி அரேபியாவைச் சோ்ந்த சுமாா் 88,000 பேரது சுட்டுரை (டுவிட்டா்) கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து டுவிட்டா் நிறுவனத்தின் இணைதளப் பாதுகாப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சவூதி அரேபிய அரசுடன் தொடா்புடைய, அந்த அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த சுமாா் 88,000 பேரது கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அந்தக் கணக்குகளைப் பயன்படுத்தி வந்தவா்கள், சவூதி அரேபிய அதிகாரிகளுக்கு ஆதரவாக பெரும்பாலும் அரபி மொழியில் பதிவுகள் மேற்கொண்டு வந்தனா். மேலும், மேற்கத்திய நாடுகளைச் சோ்ந்தவா்களைக் குறிவைத்து, பலா் ஆங்கிலத்திலும் பதிவுகளை வெளியிட்டு வந்தனா். சவூதி அரேபியாவின் கொள்கைகளை உலகளவில் எடுத்துச் செல்வதற்காக அவா்கள் டுவிட்டா் வலைதளத்தை பல்வேறு வகையிலும் தவறாகப் பயன்படுத்தினா். அதனைத் தடுப்பதற்காகவே, அவா்களது கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற அரசு சாா்புக் கணக்குகளை அடையாம் காண்பதற்கு வசதியாக, இந்த 88,000 சுட்டுரைக் கணக்குளில் 5,929 கணக்குகளின் விவரங்களை நாங்கள் வெளியிட்டுள்ளோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: