சனி, 21 டிசம்பர், 2019

மராட்டியத்தில் விவசாயிகளின்கடன் ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி புதிய கூட்டணி அரசு அறிவிப்பு

தினகரன் : மும்பை: விவசாயிகளின் பயிர்க்கடன் ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி செய்யப்படும் என்று மராட்டிய மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மராட்டிய சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி தொகை வங்கிகளில் நேரடியாக செலுத்தப்படும் என்று முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜ-சிவசேனா கூட்டணிக்கு முறையே 105 மற்றும் 56 இடங்கள் என பெரும்பான்மை பலம் கிடைத்தது. ஆனால், முதல்வர் பதவி தொடர்பான மோதல் காரணமாக இந்த கூட்டணி முறிந்தது.
54 இடங்களில் வெற்றி பெற்ற தேசியவாத காங்கிரஸ் மற்றும் 44 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியமைக்க சிவசேனா முடிவு செய்தது. இதன்பின்னர் மகாராஷ்டிராவின் 29வது முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்றுக் கொண்டார்

கருத்துகள் இல்லை: