சனி, 21 டிசம்பர், 2019

குழந்தையை வாஷிங் மெஷினுக்குள் கொலை செய்த பெண் - பஞ்சாப் – காதலனை பழிவாங்கவாம்


sathiyam.tv : காதலன் திருமணத்தை நிறுத்த அவரது சகோதரியின்குழந்தையை வாஷிங் மெஷினி போட்டு இளம்பெண் கொலை செய்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் கபூர்தலா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் மன்பிரீத் கவுர் மற்றும் அசோக் என்ற இளைஞரும் சில ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்தனர்.
இந்நிலையில், அசோக்குக்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்தனர். இதனால், அவர் காதலியை விட்டு விலகினார். இதனை அறிந்து ஆத்திரம் அடைந்த மன்பிரீத் திருமணத்தை தடுத்து நிறுத்த திட்டமிடமிருந்தார்.
இந்நிலையில், அசோக்கின் திருமணத்துக்காக அவருடைய அக்கா குடும்பத்தினர் வீட்டுக்கு வந்தனர். திடீரென சிறுவன் ஆதிராஜை காணவில்லை என குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், மன்பிரீத் வீட்டிற்குள் விளையாட சென்ற ஆதிராஜ் திரும்பவில்லை என்பது தெரிந்தது.
பின்னர், மன்பிரீதிடம் நடத்தப்பட்ட விசாரணையில், காதலன் தன்னை கைவிட்டதால் அவருடைய திருமணத்தை நிறுத்த, குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டு கொன்றதாக தெரிவித்தார்.
இதையடுத்து, வாஷிங் மெஷினிலிருந்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு போலீசார் எடுத்து சென்றனர். ஆனால், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, மன்பிரீத்தை போலீசார் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை: