திங்கள், 16 டிசம்பர், 2019

மண்ணின் மைந்தர்களின் உரிமைப் போர்

Devi Somasundaram :  இஸ்லாமியர்கள் வேணும்னே அமைதியை குலைக்க
போராட்டம் செய்கிறார்கள் - ஒரு நட்பு .
இந்த நாடு அவர்களுடைய நாடு .இதன் அமைதி மீது அவர்களுக்கும் அக்கறை இருக்கின்றது ..இந்த நாட்டின் அமைதியை கெடுக்க நினைத்திருந்தால்
முத்தலாக் தடை சட்டம் கொண்டு வந்த போது போராட்டம் செய்திருக்கலாம்... அப்படி எதுவும்செய்ய வில்லை
மசூதி இருந்த இடம் நம்முடையது என்று தீர்ப்பு வந்த போது இந்த நாட்டின் நீதிமன்றத்தின் மீதுவைத்த நம்பிக்கையால் தீர்ப்பை எந்த சிறு எதிர்ப்பும் இல்லாமல் ஏற்றுக் கொண்டனர் .. அப்பொழுதும் போராட்டம் செய்யவில்லை..
இந்திய அரசியலமைப்பை மதிக்காமல் காஷ்மீரில் 370 வை நீக்கி சக இஸ்லாமியர்களை கிட்ட தட்ட 3 மாதமா வீட்டுச் சிறையில் வைத்த போது கூட போராட்டம் செய்ய வில்லை ..அதை ஒரு மானில பிரச்சனை யாக கருதி அமைதி காத்தனர் ..
பிரச்சனை செய்ய நினைத்திருந்தால் இந்த காரணங்களை காட்டி செய்திருக்க முடியாதா ? .ஏன் செய்யல .
அவை எல்லாம் அந்தந்த பிரச்சனை சார்ந்தவை என்பதால் அமைதி காத்தனர் ..ஆனால் caa அப்படி பிரச்சனை சார்ந்தது இல்லை ..அது அவர்களின் வாழ்வுரிமையை அர்த்தமில்லாமல் ஆக்குவது ...இஸ்லாம் என்பது அவர்கள் ஏற்றுக் கொண்ட மதம் தானே தவிர அவர்கள் சவுதியிலோ , ஈரானிலோ பிறந்து இங்கு வந்தவர்கள் இல்லை .
இந்த மண்ணின் மைந்தர்கள் ..அவர்கள் மதம் இஸ்லாம்...அவர்கள் நாடு இந்தியா தான் ..
அதயே இல்லை என்று சொல்லும் நிலையில் கூட போராட வில்லை என்றால் அவர்களின் வாழ்வுரிமை கேள்விக்குரியதாகும் ..
உன் சொந்த ஊர்ல இனி உனக்கு இருக்க உரிமை இல்லைன்னு சொன்னா எப்டி இருக்கும் .அப்ப சும்மா இருப்பியா ...கேள்வி கேப்பல்ல .
அது மாதிரி தான் .

கருத்துகள் இல்லை: