சனி, 21 டிசம்பர், 2019

இந்தியா கேட் பகுதியில் இரவிலும் தொடரும் போராட்டம் - பிரியங்கா காந்தி பங்கேற்பு


போராட்டக்களத்தில் பிரியங்கா காந்திமாலைமலர்; : திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லி இந்தியா கேட் பகுதியில் இரவிலும் தொடரும் போராட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார். புதுடெல்லி: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மாலை வீடியோ வடிவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அந்த பதிவில் அவர் கூறியதாவது:- குடியுரிமை சட்டம் பாரபட்சமானது, நாடு முழுவதும் மேற்கொள்ளவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பால் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.
அரசின் இதுபோன்ற தவறான முடிவுகள் மற்றும் கொள்கைகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியில் தங்களது கருத்துகளை பதிவு செய்யவும் குரலை உயர்த்தவும் மக்களுக்கு உரிமை உள்ளது. மக்களின் குரல்களுக்கு மதிப்பளிக்காத பாஜக அரசு எதிர்ப்பாளர்களை ஒடுக்குவதற்கு காட்டுமிராண்டித்தனமான பலப்பிரயோகத்தை தேர்ந்தெடுத்துள்ளது.
ஜனநாயகத்தில் இத்தகைய நடவடிக்கை ஏற்புடையதல்ல. மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் நமது அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை தத்துவங்களை உயர்த்தி பிடிக்க காங்கிரஸ் கட்சி முழு உறுதிப்பாட்டுடன் உள்ளது. நீதிக்காக போராடும் மாணவர்களுக்கு நாங்கள் என்றும் துணையாக நிற்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,  டெல்லி  இந்தியா கேட் பகுதியில் இரவிலும் தொடரும் போராட்டத்தில் உத்தரப்பிரதேசம் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார்.

குடியுரிமை சட்டமும் மக்கள்தொகை கணக்கெடுப்பும் ஏழை மக்களுக்கு எதிரானது. இதனால் பாதிக்கப்படும் ஏழைகள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் என்ன செய்வார்கள்? இதற்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்கள் அனைத்தும் அமைதியாக நடைபெற வேண்டும் என போராட்டக்காரர்கள் மத்தியில் பேசிய பிரியங்கா காந்தி குறிப்பிட்டார்

கருத்துகள் இல்லை: