tamil.oneindia.com - hemavandhana :
செங்கல்பட்டு:
"நீயெல்லாம் எதுக்கு உயிரோட இருக்கே.. செத்து போ" என்று ஆவேசமாக கூறி..
பெற்ற தகப்பனை டிராக்டர் ஏற்றியே கொன்றுள்ளார் மகன்.. எல்லாம் சொத்து
பிரச்சனைக்காகத்தான்!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே முருக்கம்பாக்கம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. 75 வயதாகிறது.. இவருக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர்.. ஒரு மகனை தவிர மற்ற அனைவருக்கும் அண்ணாமலை கல்யாணம் செய்து வைத்துவிட்டார். அந்த மகனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இவருக்கு சொந்தமாக 15 ஏக்கர் நிலம் இருக்கிறது.. தனக்கு வயதாகி கொண்டே போவதால், இந்த சொத்தை மகள்களுக்கும், மகன்களுக்கும் சரி சமமாக அதாவது தலா 3 ஏக்கர் ஒருவருக்கு என்று பிரித்தார். மேலும் இன்னொரு மகன் மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளதால், தன்னுடைய இறப்புக்கு பிறகு அவருடைய சொத்துக்களையும் ஏழுமலைதான் பராமரிக்க வேண்டும் என்று அண்ணாமலை உயிலை எழுதினார்.
ஆனால், இப்படி சமமாக பிரித்து உயில் எழுதியது மகன் ஏழுமலைக்கு பிடிக்கவில்லை.. "பெண்களுக்கு எப்படி சமமா சொத்தை தரலாம்.. நாங்கள் ஆம்பிள பிள்ளைங்க.. கூடுதலா சொத்து வேண்டும்" என்று கேட்டு தகராறு செய்துள்ளார். இது சம்பந்தமான வாக்குவாதம் தந்தை - மகனுக்கும் கடந்த சில தினங்களாக நடந்து வந்துள்ளது.
"என் பாட்டன் சொத்தை, இந்த பொம்பளை பிள்ளைங்களுக்கு எல்லாம் என் அப்பா எழுதி வைத்துவிட்டார்" என்று ஊரெல்லாம் புலம்பி வந்தார் ஏழுமலை. எவ்வளவு தகராறு செய்தும், அப்பா தன் மகளுக்கு சரிசமமாக சொத்தை எழுதியதில் உறுதியாகவே இருந்தார். அதை மாற்றி எழுத மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஏழுமலை, அப்பாவை கொல்ல துணிந்தார்.. வழக்கம்போல் வயலில் வேலை செய்து கொண்டிருந்த அண்ணாமலை மீது டிராக்டரை எடுத்து கொண்டு வேகமாக வந்தார்.. இதை பார்த்து அண்ணாமலை பயந்து நின்றநிலையில், அப்படியே டிராக்டரை கொண்டு மோதிவிட்டார்..
இதில் அண்ணாமலை உடல்நசுங்கி உயிரிழந்தார்.
தந்தையை டிராக்டர் ஏற்றி கொன்ற ஏழுமலை அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.. தகவலறிந்து விரைந்து வந்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.. 3 மகள்களும் தந்தையின் சடலத்தை பார்த்து துடிதுடித்து அழுதது அனைவரையுமே கலங்க வைத்துவிட்டது. இது சம்பந்தமாக அணைக்கட்டு போலீசார் வழக்கு பதிவு செய்தநிலையில், ஏழுமலை போலீசில் சரணடைந்துள்ளார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக