தினத்தந்தி : :கள்ளக்குறிச்சியில் இரு தனியார் பேருந்துகள் மோதி கொண்டதில் 30 பேர் காயம் அடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சியில் உளுந்தூர்பேட்டை பகுதியில் சுங்க சாவடி அருகே இரு தனியார் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டன. இந்த விபத்தில் பேருந்துகளில் பயணம் செய்த 30 பேர் காயம் அடைந்துள்ளனர்.
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக, விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்திற்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. பேருந்துகளில் இருந்து மீட்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக