vikatan.com :
யோகா
ஆசிரியர், நித்யானந்தாவின் சமூக வலைதளங்களின் பொறுப்பாளர் என 'பவர்ஃபுல்'
பதவிகளோடு வலம்வந்த பக்தி பிரியானந்தாவை வைத்துதான் பல வி.ஐ.பி-களிடம்
வசூல்வேட்டை நடத்தியுள்ளார்
சர்ச்சை
நாயகன் நித்யானந்தாவை குஜராத் காவல்துறையினர் வலைவீசி தேடிவரும் நிலையில்,
வீடியோ வழியாக சத்சங்கில் பேசி தன் பராக்கிரமங்களைப்
பறைச்சாற்றிக்கொண்டிருக்கிறார் நித்தி. இன்னொரு பக்கம், நித்யானந்தாவின்
குஜராத் ஆசிரமத்தில் கைப்பற்றப்பட்ட நித்தியின் லேப்டாப்பில் இருக்கும்
புகைப்படங்கள் குறித்த தகவல்களால், அந்த மாநில வி.ஐ.பி-கள் பீதியில்
இருக்கின்றனர்.
நாளொரு சேதியும் பொழுதொரு பீதியுமாக நித்தி பற்றி தகவல்கள் பரவும் நிலையில், கார்த்திகை தீபம் அன்று வீடியோவில் தோன்றினார் நித்யானந்தா. ''இந்து சனாதன தர்மங்களை மீட்டெடுக்கவே கைலாசா அமைக்கப்படுகிறது. நான் இதற்காக பல ஆண்டுகள் உழைத்திருக்கிறேன்; பல இன்னல்களையும் அனுபவித்துள்ளேன். இறைவன் அருளால் எனக்குத் தேவையான பொருளைச் சேர்த்துவிட்டேன். எனக்கு இப்போது இந்தியாவில் மட்டும் 1,200 இடங்களில் சொத்துகள் உள்ளன. ஆனால், அவற்றின் விவரத்தை இப்போது சொல்ல மாட்டேன்'' என்று பேசியிருக்கிறார்.
``உண்மையில்
நித்திக்கு இவ்வளவு சொத்துகள் இருக்கின்றனவா?'' என்று அவருடைய முன்னாள்
தனிச்செயலாளர் ஜனார்த்தன சர்மாவிடம் கேட்டால், ''எனக்குத் தெரிந்து
அவருக்கு 400-க்கும் அதிகமான இடங்களில் சொத்துகள் இருக்கின்றன. அவரின்
தொழிலே அடுத்தவர் பணத்தைப் பறிப்பதும், சொத்துகளை அபகரிப்பதும்தான். ஆனால்,
1,200 இடங்களில் சொத்துகள் இருக்கின்றனவா என்று எனக்குத் தெரியவில்லை''
என்றார்.நாளொரு சேதியும் பொழுதொரு பீதியுமாக நித்தி பற்றி தகவல்கள் பரவும் நிலையில், கார்த்திகை தீபம் அன்று வீடியோவில் தோன்றினார் நித்யானந்தா. ''இந்து சனாதன தர்மங்களை மீட்டெடுக்கவே கைலாசா அமைக்கப்படுகிறது. நான் இதற்காக பல ஆண்டுகள் உழைத்திருக்கிறேன்; பல இன்னல்களையும் அனுபவித்துள்ளேன். இறைவன் அருளால் எனக்குத் தேவையான பொருளைச் சேர்த்துவிட்டேன். எனக்கு இப்போது இந்தியாவில் மட்டும் 1,200 இடங்களில் சொத்துகள் உள்ளன. ஆனால், அவற்றின் விவரத்தை இப்போது சொல்ல மாட்டேன்'' என்று பேசியிருக்கிறார்.
நித்யானந்தாவின் ஆஸ்தான பெண் சீடர்களில் முக்கியமானவர், மா பக்தி பிரியானந்தா. மாடலிங் துறையிலிருந்து சந்நியாசியாக மாறியவர். பெண் சந்நியாசியாக இவர் இருந்தாலும், அதிலும் மாடலிங்கைப் புகுத்தி நித்தியின் பல்வேறு லீலைகளுக்கு உடந்தையாக இருந்துள்ளார்.
யோகா ஆசிரியர், நித்யானந்தாவின் சமூக வலைதளங்களின் பொறுப்பாளர் என 'பவர்ஃபுல்' பதவிகளோடு வலம்வந்த பக்தி பிரியானந்தாவை வைத்துதான் பல வி.ஐ.பி-களிடம் வசூல்வேட்டை நடத்தியுள்ளார் நித்யானந்தா என்கிறார்கள்.
''நித்யானந்தா ஆசிரமத்துக்கு வரும் வி.ஐ.பி-கள், அங்கு சொல்லித்தரும் பயிற்சிகளை சில நாள்களில் கற்றுக்கொள்வார்கள்.
அவர்களிடம் நித்யானந்தா, 'தொடர்ந்து இந்தப் பயிற்சியை உங்கள் வீட்டுக்கே
வந்து நமது சந்நியாசிகள் சொல்லித் தருவார்கள்' என்று நயமாகப் பேசுவார்.
வி.ஐ.பி-கள் வீட்டுக்கு மாடலிங் அழகியான பக்தி பிரியானந்தாவோடு மேலும் சில பெண் சீடர்களையும் அனுப்பி, யோகக் கலையைக் கற்றுத்தரச் சொல்வார். அப்படி கற்றும்தரும்போது தங்கள் வலையில் விழும் நபர்களைவைத்து, பல கோடி ரூபாய் மடத்துக்கு நன்கொடையாகப் பெற்று வந்துவிடுவார்கள்'' என்கிறார்கள் ஆசிரமத்துக்கு நெருக்கமானவர்கள்.

குஜராத்
மாநிலத்தில் இருக்கும் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் கடந்த மாதம் குஜராத்
காவல்துறை அதிரடி சோதனை நடத்தியது. அப்போது குழந்தைகளை அனுமதியின்றி
ஆசிரமத்தில் வைத்திருந்ததாக ஆசிரம நிர்வாகிகளான சாத்வி பிரன்பிரிய நந்தா,
பிரியதத்வ ரித்தி கிரண் ஆகிய இருவரை கைதுசெய்தது குஜராத் காவல்துறை.
அத்துடன் அந்த ஆசிரமத்திலிருந்து லேப்டாப், டேப், செல்போன் உள்ளிட்டவற்றை அள்ளிச் சென்றுள்ளனர் குஜராத் காவல்துறையினர். அந்த லேப்டாப்பில் பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளனவாம். குறிப்பாக, குஜராத் மாநிலத்தில் புகழ்பெற்ற பல தொழிலதிபர்கள் நித்யானந்தாவின் பெண் சீடர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் அதில் இருந்துள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக