வியாழன், 19 டிசம்பர், 2019

சென்னை பல்கலைக்கழக மாணவர்கள்.. இரவோடு இரவாக கைது செய்த போலீஸ்..


போலீஸ் சென்றது
இரண்டு நாள் போராட்டம் இங்கு எப்படி tamil.oneindia.com - shyamsundar : சென்னை: குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராடி வரும் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று இரவோடு இரவாக கைது செய்யப்பட்டனர்.
ஏன் இப்படி குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அசாமில் தொடங்கிய போராட்டம் தற்போது நாடு முழுக்க விஸ்வரூபம் எடுத்துள்ளது. டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டம் நேற்று பெரிய கலவரமாக மாறியது.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டம் காரணமாக நாடு மொத்தமும் போர்க்களமாக மாறியுள்ளது. முக்கியமாக டெல்லியில் இரண்டு நாட்களாக மாபெரும் கலவரமும் போராட்டமும் நடந்து வருகிறது.
சென்னையிலும் இந்த சட்டத்திற்கு எதிராக கடுமையாக போராட்டங்கள் நடந்து வருகிறது. சென்னையில் ஐஐடி, லயோலா பல்கலைக்கழகம், நியூ காலேஜ் உள்ளிட்ட பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். முக்கியமாக சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த போராட்டத்தை கைவிடும் படி போலீசார் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனாலும் மாணவர்கள் இதற்கு செவி சாய்க்கவில்லை.நேற்று முதல் நாள் போலீசார் சென்னை பல்கலைக்கழகம் உள்ளே சென்றனர். அங்கு மாணவர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அது பலன் அளிக்கவில்லை.
n>இரண்டு நாட்களாக அங்கு மாணவர்கள் இருந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 17 மாணவர்களை போலீசார் நள்ளிரவில், கைது செய்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். அமைதியாக போராட்டம் நடந்து வந்த போதும் கூட போலீசார் மொத்தமாக உள்ளே சென்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 17 மாணவர்களும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.இதனால் தற்போது அங்கு பெரிய அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்திற்குள் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். மாணவர்கள் அங்கு பெரிய அளவில் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை: