Subashini Thf :
இன்று நாம் எழுதும் அல்லது வாசிக்கும் தமிழ் எழுத்துக்கள்
பல்வேறு படிநிலைகளில் மாற்றமும் வளர்ச்சியும் கொண்டு வளர்ந்தவை.
ஆரம்பகால தமிழ் எழுத்துக்களை தமிழி என பெயரிட்டு அழைக்கிறோம். இந்தத் தமிழி எழுத்துருக்களின் படிப்படியான வளர்ச்சியாக வட்டெழுத்துக்கள் உருவாக்கம் அமைந்தது. அதிலிருந்து இன்று நாம் பயன்படுத்தும் தமிழ் எழுத்துக்களின் வடிவம் படிப்படியான மாற்றங்களை கொண்டு வளர்ந்துள்ளது.
தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சியை அறிந்து கொள்வது மிக அவசியம். இந்த நோக்கத்தைக் கருத்தில் கொண்டு தமிழ் மரபு அறக்கட்டளை இரண்டு நாள் வட்டெழுத்து பயிற்சியை ஏற்பாடு செய்திருக்கின்றோம்.
வருகின்ற 28 29 இரண்டு நாட்கள் இந்த பயிற்சியில் கலந்து கொண்டு வட்டெழுத்து என்பது யாது? அதை எப்படி அறிந்து கொள்வது? எப்படி வாசிப்பது? எப்படி எழுதுவது? கல்வெட்டுக்களில் உள்ள எழுத்துக்களை எவ்வகையில் வாசித்து அறிந்து கொள்வது? ஆகிய பயிற்சிகளைத் தேர்ந்த கல்வெட்டியல் துறை அறிஞர்கள் வாயிலாக நீங்கள் பெறலாம்.
இப்பயிற்சி மதுரையில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் நடைபெற உள்ளது.
விரைந்து பகிர்ந்து கொள்க.
மேலதிக விபரங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக